Everything posted by ஏராளன்
-
கூகுள் நிறுவனத்திற்கு வரலாறு காணாத அபராத தொகையை விதித்த ரஷ்யா
ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அமெரிக்க டொலர் இதற்கிணங்க அபராதத் தொகையாக 20 டெசிலியன் அமெரிக்க டொலர் ($20,000,000,000,000,000,000,000,000,000,000,000) விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அபராதத் தொகையின் மதிப்பு 110 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமாகும். அத்துடன், இது சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்ட உலகின் மொத்த உலக நாடுகளின் உற்பத்தியை விட அதிகமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த அபராதத் தொகையானது உலகின் மிகப்பெரும் செல்வந்த நிறுவனமான கூகுளின் மதிப்பை விட 2 டிரில்லியன் டொலருக்கு அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் எனினும், இந்த அபராதத்துடன், ஒன்பது மாதங்களுக்குள் இந்த ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கூடுதல் உத்தரவும் உள்ளது. அவ்வாறு இணங்கத் தவறும் பட்சத்தில் தண்டனை தினமும் இரட்டிப்பாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கூகுள் நிறுவனம் இந்த தீர்ப்பு குறித்து எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/russia-google-fine-20-decillion-1730542867#google_vignette
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார். வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இன்று சனிக்கிழமை (02) சென்றிருந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நான் மக்கள் நலனில் இருந்தே செயற்பட்டு வருகின்றேன். ஆனால் அன்று எமது தமிழ் அரசியல் முன்னோர்கள் சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைத்து மேடைகளில் முழங்கி தேர்தல் வெற்றிகளை பெற்று நாடாளுமன்றை அலங்கரித்தினர். ஆனால் அவர்கள் தாம் முன்வைத்த விடயத்த்தின் இலக்கை அடையச் செய்வதற்கான பொறிமுறையை துளியளவும் கொண்டிருக்கவில்லை. அதேபோன்றுதான் அவர்கள் வழி வந்து போலித் தேசியம் பேசும் இன்றைய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் கூறிக்கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் பொறிமுறையற்றதாக இருக்கின்றது. நான் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரை போன்று நாடாளுமன்றை அலங்கரிக்க 23 ஆசனங்களை கேட்கவில்லை. குறைந்தது 4 முதல் 5 ஆசனங்களையே எனக்க தாருங்கள் என கோருகின்றேன் அதுமட்டுமல்லாது நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல, தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். எனது மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது அதுமட்டுமல்லாது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இதுவே இன்று வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் எமது கொள்கை வலுவானது. நடைமுறை சாத்தியமான வழிநடத்தல் எமது கொள்கை இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலுவாக்கப்பட்டுவிட்டது. இதேநேரம் நான் அரசியல் பயத்தால் அல்லது தோற்கடிக்கப்பட்டு விடுவேன் என்ற பயத்தால் ஒருபோதும் ஒதுங்கவும் போவதில்லை. எமது கொள்கையின் மீது எமக்கிருக்கின்ற பற்றே, எமது கொள்கை மீது எமது அதீத நம்பிக்கைக்கு காரணம். எமது இந்த வலுவான கொள்கையை இன்று எல்லோரும் உணர்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் எமது கருத்துக்கள் ஒருசிலரது சுயநலன்களுக்காக திட்டமிட்டு சேறுபூசல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதேநேரம் நாம் கூறிய பாதையும் வழிமுறையும் தான் சரியானது என்று இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அந்த வகையில் கார்த்திகை 14 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எமது வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி கொடுப்பீர்கள் என நம்புவதுடன் அதனூடாக எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197738
-
யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் (Jaffna) பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட இராணுவ தலைமையகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது இன்று (02.11.2024) நடைபெற்றுள்ளது. இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் இக்கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் விரிவான தகவல்களை இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் ஆளுநரால் மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது. பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி - அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். https://tamilwin.com/article/discussion-palali-jaffna-high-security-zone-1730538371
-
சாதி, வேதம், ஆரியர் வருகை, தொல் திராவிட மொழி - 'சிந்து நாகரிகம்' பற்றிய புதிய ஆய்வு நூல் கூறுவது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த சமீபத்திய புத்தகமான அஹிம்சா (Ahimsa), அந்த நாகரிகம் வணிகத்தை மையப்படுத்திய, வன்முறையை நாடாத ஒரு சமூகமாக இருக்கலாம் என்கிறது. வேறு பல சுவாரஸ்யமான தகவல்களையும் கருத்தாக்கங்களையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. அது 4,500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம். அவர்கள் 'லாபிஸ் லாஸுலி' எனப்படும் நீல நிற கற்களை வாங்கிக் குவித்தார்கள். இந்தக் கற்கள், அந்த காலகட்டத்தில் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் மட்டுமே கிடைத்தன. அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஐயாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பெர்ஷிய வளைகுடா வழியாக, எகிப்தையும் மெசபடோமியாவின் கோவில்களையும் சென்றடைந்ததற்கு ஒரே காரணம்தான் இருந்தது. அது ஹரப்பா நாகரிகம். பல்வேறு சிறு சிறு நகரங்களை உள்ளடக்கியிருந்த ஹரப்பா நாகரிகத்தால் இதை எப்படி சாதிக்க முடிந்தது? அதற்குக் காரணம், அந்த நாகரிகம் போர்ப் படை தளபதிகளாலோ, மன்னர்களாலோ வழிநடத்தப்பட்ட ஒரு சமூகமல்ல; மாறாக செல்வச் செழிப்பை வெளிக்காட்டாத, கட்டுப்பாடான வர்த்தகர்களால் வழிநடத்தப்பட்ட ஒரு சமூகம் என்கிறது சமீபத்தில் வெளிவந்த ‘Ahimsa: 100 Reflections on the Harappan Civilization புத்தகம்.’ இந்த நூலை எழுதியவர் தேவ்தத் பட்நாயக். இந்தியாவில் புராணங்களில் ஆர்வமுடைய வாசகர்கள் அனைவருக்கும் ஏற்கனவே நன்கு அறிமுகமான எழுத்தாளரான தேவ்தத் இதற்கு முன்பாக இந்துத் தொன்மங்கள் குறித்த பல நூல்களை எழுதியவர். தேவ்தத் பட்நாயக்கைப் பொருத்தவரை, ஹரப்பா நாகரிகம் என்பது தனித்துவமிக்க, தொழில்சார்ந்த, வன்முறையை நாடாத ஒரு சமூகம். அதன் காரணமாகவே இந்தப் புத்தகத்திற்கு Ahimsa எனப் பெயர் சூட்டியிருக்கிறார் அவர். பட மூலாதாரம்,DEVDUTT PATTANAIK படக்குறிப்பு, தேவ்தத் பட்நாயக்கைப் பொறுத்தவரை, ஹரப்பா நாகரிகம்என்பது தனித்துவமிக்க, தொழில்சார்ந்த, வன்முறையை நாடாத ஒரு சமூகம் ஹரப்பா நாகரிகம்: இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட கண்டுபிடிப்பு ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது இந்திய வரலாற்றின் துவக்கத்தை மாற்றிப்போட்டது எப்படி? என சுவாரஸ்யமாக சொல்வதிலிருந்து புத்தகம் துவங்குகிறது. பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பாக, "பாரதம் அல்லது ஜம்புதீபம் என்ற இந்த நாட்டில் ஏழு நதிகள் ஓடின. மனு வழியில் வந்த முனிவர்களும் அரசர்களும்தான் இந்த நாட்டை காலம்காலமாக ஆட்சி செய்தனர். அவர்கள் சமஸ்கிருதம் பேசியதோடு, சனாதனத்தையும் வேதங்களில் கூறப்பட்ட வர்ணாசிரமத்தையும் பின்பற்றினர். இந்தியா மீது படையெடுத்த யவனர்கள் (வெளிநாட்டவர்கள்), இஸ்லாத்தை இங்கே பரப்பியதோடு கோவில்களை இடித்து, மசூதிகளைக் கட்டினர். சமஸ்கிருதத்திற்குப் பதிலாக பாரசீக மொழியைப் பரப்பினர்" என்று நம்பப்பட்டது. பிரிட்டிஷாரின் வருகையில் இந்த வரலாற்றுப் பார்வை சற்று மாறியது. ஏசியாட்டிக் சொசைட்டியும் இந்தியத் தொல்லியல் கழகமும் (ASI) நிறுவப்பட்டன. ஏசியாடிக் சொசைட்டி பழங்கால இந்திய எழுத்துகளை மொழிபெயர்க்க ஆரம்பித்தது. இந்தியத் தொல்லியல் கழகம், அகழ்வாராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தது. இந்தியாவின் வரலாறு மெல்லமெல்ல ஆழத்திலிருந்து மேலெழ ஆரம்பித்தது என்கிறார் தேவ்தத் பட்நாயக். அதே நேரத்தில் மொழியியலில் நடந்த ஆய்வுகளில், சமஸ்கிருதத்திற்கும் லத்தீன் மொழிக்கும் இருக்கும் தொடர்பு கண்டறியப்பட்டு இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்ற புரிதல் உண்டானது. மேலும், விந்திய மலைகளுக்குத் தெற்கே, திராவிட மொழிக் குடும்பம் போன்ற புதிய மொழிக் குடும்பங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டதால், சமஸ்கிருதம் ஒன்றும் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளின் தாய் அல்ல என்பதும் புரிந்தது. பாலி மொழியில் இருந்த எழுத்துகளை மொழிபெயர்த்தபோது, புத்தர், அசோகர் போன்றோர் வாழ்ந்தது தெரியவந்தது. பௌத்த ஸ்தூபிகள், மௌரிய கல்வெட்டுகள் வெளிவந்தன. இந்தக் கட்டத்தில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பாக அலெக்ஸாண்டர் படையெடுத்ததில் இருந்துதான் நவீன இந்திய வரலாறு துவங்குகிறது என்ற புரிதல் உருவானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1924ல் சிந்துச் சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்து அறிவித்தார் ஜான் மார்ஷல் இந்த காலகட்டத்தில், அதாவது 1924-இல் சிந்துச் சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்து அறிவித்தார் ஜான் மார்ஷல். சுமேரிய நாகரிகத்தோடு இருந்த சில ஒற்றுமைகள் காரணமாக, இதன் காலகட்டம் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று முடிவானது. ஆகவே, இந்தியாவின் வரலாறு 4,500 அல்லது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு துவங்குகிறது என்பது உறுதியானது. இந்த நிலையில், வேதங்களையும் ஹரப்பா சிதைவுகளையும் வைத்து பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஒரு கருத்தை முன்வைத்தனர். அதாவது "சமஸ்கிருதம் பேசிய வேத கால மக்கள், திராவிட மொழி பேசக்கூடிய ஹரப்பர்களை ஒடுக்கினார்கள். அப்படித்தான் ஜாதி உருவானது" என்றார்கள். இது ஒரு மிக பிரபலமான கருதுகோள். ஆனால், இதில் ஒரு பிரச்னை இருந்தது. அதாவது வேத காலத்திற்கும் ஹரப்பா நாகரிகம் முடிவுக்கு வந்ததற்கும் இடையில் சுமார் 500 வருட இடைவெளி இருந்தது. ஆகவே, தாமிர காலத்தைச் சேர்ந்த ஹரப்பா நாகரிகம் கி.மு. 2500லிருந்து 2000வது ஆண்டுவரை செழித்திருந்தது என்பதும் சுமேரியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தது என்பதும் உறுதி. அந்த நாகரிகம் அழிந்து போனதற்கு காலநிலை மாற்றம், ஆறுகள் இடம் மாறியது, பருவமழையில் ஏற்பட்ட மாற்றம், புதிய வணிகப் பாதைகள் கண்டறியப்பட்டது, சுமேரியாவில் தேவை குறைந்தது போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஆகவே ஆரியர்கள் படையெடுப்பால் ஹரப்பா நாகரிகம் அழியவில்லை. ஹரப்பா நாகரிகத்தின் அழிவிற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகே, ஆரியர் வருகை நிகழ்ந்தது. இவர்கள் குறுக்குக் கம்பிகளுடன் கூடிய சக்கரங்களையும் குதிரைகளையும் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஆகவே, பிரிட்டிஷாரைப் போலவே, முகலாயர்களைப் போலவே, வேதங்களை இயற்றிய ஆரியர்களும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்கிறார் தேவ்தத் பட்நாயக். இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டவுடனேயே, "இது இந்து நாகரிகத்தை மறைக்கும் சதி" என கூச்சல் எழுந்தது. "ஆரியர்கள் இந்தியர்கள். அவர்கள்தான் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கினார்கள். அதன் வேத அடித்தளத்தை நிறுவும் வகையில் அதனை சரஸ்வதி நாகரிகம் என்றே அழைக்க வேண்டும். இந்த நாகரிகம் முஸ்லிம்களின் பாகிஸ்தானில் உள்ள மெஹ்ர்கரில் தோற்றம்பெறவில்லை. மாறாக, இந்தியாவில் உள்ள ராக்கிகடியில்தான் தோற்றம்பெற்றது. சித்திர எழுத்துகள் என்பவை உண்மையில் யந்திரங்கள். ஹரப்பர்கள் சைவ உணவையே உண்டனர்" என்பது இவர்களது கருத்து. மொழிகளை அறிவியல் ரீதியாகப் படிப்பது, பொருட்களின் பழமையை ஆய்வு செய்வது போன்றவற்றில் ஐரோப்பியர்கள் முதலில் ஈடுபட்டதற்குக் காரணம், "பைபிளை உண்மை என்று நிறுவுவதற்காகத்தான். உலகம் கி.மு. 4004ல்தான் தோன்றியது என நிரூபிப்பதற்காகத்தான்." ஆனால், விரைவிலேயே வேதங்கள் அதைவிடப் பழமையானவை எனத் தெரிந்தது. ஹரப்பா நாகரிகம் இவை இரண்டையும்விட பழமையானது, ஹரப்பாவைவிட பழமையானது சுமேரிய நாகரிகம். பட மூலாதாரம்,DEVDUTT PATTANAIK படக்குறிப்பு, ஹரப்பா நாகரிகம் என்பது தனித்த ஒன்றல்ல. கி.மு. 3000லிருந்து கி.மு. 1200 வரை நிலவிய மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையின் ஒரு பகுதி. ஹரப்பா: துறவிகள் - வர்த்தகர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நாகரிகம் பிரிட்டிஷ் அகழ்வாராய்ச்சியாளர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் கடந்த காலத்தை படையெடுப்புகளின் பார்வையிலேயே பார்த்தார்கள். ஹரப்பா நாகரிகத்தை துறவிகளால் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாகரிகமாக பார்க்க இயலவில்லை. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து, கோவில்களை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் உருவாவதற்கு முன்பாக, இந்தியாவின் வளம் என்பது வர்த்தகத்திலிருந்துதான் வந்தது என்கிறார் தேவ்தத் பட்நாயக். ஹரப்பா நாகரிகம் என்பது தனித்த ஒன்றல்ல. கி.மு. 3000லிருந்து கி.மு. 1200 வரை நிலவிய மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையின் ஒரு பகுதி. கி.மு. 2500லிருந்து கி.மு. 2000வரை சுமார் 500 ஆண்டுகள் இந்த நாகரிகம் உச்சத்தில் இருந்தது. இந்த காலகட்டத்தில், லாபிஸ் லாஸுலி எனப்படும் அரிய நீலக்கற்களும் வெள்ளீயமும் இங்கே மட்டுமே கிடைத்தன. இந்த பொருட்கள் தற்போதைய ஆஃப்கானிஸ்தான் பகுதியில் எடுக்கப்பட்டு, சிந்து நதிக் கரையில் மேம்படுத்தப்பட்டன. இவை குஜராத்திலிருந்து படகு மூலம் மக்ரானுக்கும் (பலூசிஸ்தான்) பிறகு அங்கிருந்து தில்மன் (பஹ்ரைன்), சுமேரியா (ஈராக்), பிறகு எகிப்திற்கும் கொண்டுசெல்லப்பட்டன. இந்தப் பொருட்களுக்குப் பதிலாக வெள்ளியும் தங்கமும் பெற்றுக்கொள்ளப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் தங்கத்தைப் போலவே லாபிஸ் லாஸுலிக்கும் மதிப்பிருந்தது. அந்தக் கற்கள் புனிதமானவையாகக் கருதப்பட்டு மெஸபடோமியா, எகிப்து, அனடோலியாவில் இருந்த கோவில்களில் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பனிகள் செய்ததுபோல, சந்தைகளை வசப்படுத்த ஹரப்பா வர்த்தகர்கள் ஒருபோதும் படைபலத்தைப் பயன்படுத்தவில்லை. வன்முறைக்கு எதிரான முதல் கலைப்படைப்பை இவர்களே உருவாக்கியவர்களாக இருக்கலாம் என்று கூறும் தேவ்தத் பட்நாயக், அதற்குச் சில உதாரணங்களைச் சொல்கிறார். சிந்துவில் உள்ள மொஹஞ்சதாரோவில் கிடைத்த, 478 B என இலக்கமிடப்பட்ட முத்திரை ஒன்று இருக்கிறது. அதில் மரத்தை வைத்துக்கொண்டு சண்டையிடும் இரண்டு ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் நிற்பதைப் போல வரையப்பட்டிருக்கிறது. அந்த இரு ஆண்களையும் அந்தப் பெண் பிரிப்பதைப் போல அந்த சித்திரம் இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள காலிபங்கனில் உருளை வடிவ முத்திரை ஒன்று கிடைத்தது. அதில் வேல்களால் ஒருவரை ஒருவர் குத்திச்சாய்க்க முயலும் இரு ஆண்கள் ஒரு பெண்ணை பிடித்திருக்கிறார்கள். இந்த இரண்டையும் பார்த்த தொல்லியலாளர்கள், ஒரு பெண்ணுக்காக இரு ஆண்கள் சண்டையிடுகிறார்கள் என்ற முடிவுக்கே வந்தார்கள். ஆனால், இதற்கு வேறு விதமான விளக்கங்கள் இருக்கக்கூடும் என்கிறார் தேவ்தத் பட்நாயக். இந்தச் சித்திரங்களில் உள்ள பெண், இரு ஆண்களின் சண்டையை விலக்கும் பெண்ணாக, யோசிக்கச் சொல்லும் பெண்ணாக நமக்கு ஏன் தோன்றுவதில்லை எனக் கேள்வியெழுப்புகிறார் தேவ்தத். பட மூலாதாரம்,DEVDUTT PATTANAIK படக்குறிப்பு, இரு ஆண்களை ஒரு பெண் பிரிப்பதைப்போல இருக்கும் சித்திரம் ஹரப்பா நகரங்களுக்குள் யுத்தம் நடந்ததாக எவ்வித ஆதாரமும் கிடைக்காத நிலையிலும், ஒப்பீட்டு அளவில் அந்த நாகரிகம், ஒரு அமைதியான நாகரிகமாக இருந்திருக்கலாம் என்பதில் தொல்லியலாளர்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. சில அரசியல் கட்டுப்பாடுகளுக்காகவும் தங்களுடைய விலை மதிக்க முடியாத பொருட்களை காக்கவும் சிறிய அளவில் வன்முறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், எகிப்திலோ, மெஸபடோமியாவிலோ இருந்த வன்முறையோடு ஒப்பிட்டால், இங்கிருந்த வன்முறை ஒன்றுமேயில்லை என்றது இந்தப் புத்தகம். வன்முறை இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய பரப்பில் இத்தனை ஆண்டுகாலமாக ஒரு நாகரிகம் நிலைத்திருந்தது எப்படி? அது எப்படி நடந்திருக்கலாம் என ஒரு யூகத்தை முன்வைக்கிறார் தேவ்தத். அதாவது, "ஹரப்பாவில் இருந்த சமூகம், வர்த்தகமும் துறவும் இணைந்த ஒரு சமூகமாக இருந்திருக்கலாம். வர்த்தக வெற்றி, செல்வம் இவற்றின் மூலம் அதிகாரம் கிடைக்கும் அதே நேரத்தில், அவற்றைத் துறப்பதன் மூலமாக தார்மீக அதிகாரம் அந்த சமூகத்தில் கிடைத்திருக்கலாம். ஒட்டுமொத்த நாகரிகமும் துறவிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். இந்தத் துறவிகள், வர்த்தகப் பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். இவர்கள் வன்முறையை நாடாத, சமூக ரீதியான கட்டுப்பாடுகளில் சிக்காதவர்களாக இருந்திருக்கலாம்" என்கிறார் தேவ்தத். சுமேரிய நாகரிகத்திலும் எகிப்திய நாகரிகத்திலும் செல்வத்தைக் குவிப்பதன் மூலமாக அதிகாரம் கிடைத்தது. ஹரப்பாவில், அவற்றைத் துறப்பதன் மூலம் ஒரு அதிகாரம் கிடைத்திருக்கலாம். இதன் காரணமாகவே மற்ற நாகரிகங்களில் இருந்ததைப் போன்ற அச்சுறுத்தும் வகையிலான மிகப் பெரிய கட்டடங்கள், அரண்மனைகள், கல்லறைகள் ஹரப்பாவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் தேவ்தத். இங்கு அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்த துறவிகளை, ஒற்றைக் கொம்புள்ள ஒரு மிருகத்தின் மூலம் குறித்திருக்கலாம். அதன் காரணமாகவே, ஹரப்பா நகரங்களில் கிடைத்த 2,000 முத்திரைகளில் 80 சதவீத முத்திரைகளில் இந்த மிருகங்கள் இருக்கின்றன. ஹரப்பாவில் பல பிரிவினர் இருந்தாலும், அவர்கள் யாரையும் குறிக்காத, அந்த நாகரிகத்தைக் கட்டுப்படுத்திய பொதுவான துறவிகளின் முத்திரையாக இது இருக்கலாம் என்கிறார் தேவ்தத் பட்நாயக். ஆனால், தான் சொல்வதை முழு உண்மையாகக் கருத முடியாது என்றும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கிரேக்கத்தின் வன்முறைமிக்க கதாநாயகர்கள், பைபிளில் சொல்லப்படுவது போன்ற இறைதூதர்களை மனதில் வைத்து வரலாற்றைப் படிக்கும் நிலையில், ஜைன, பௌத்த, இந்து மரபிலிருந்து தான் இந்தச் சின்னங்களைப் படித்ததாகக் குறிப்பிடுகிறார் தேவ்தத். பட மூலாதாரம்,DEVDUTT PATTANAIK படக்குறிப்பு, ஹரப்பா நகரங்களில் கிடைத்த 2,000 முத்திரைகளில் 80 சதவீத முத்திரைகளில் இந்த மிருகங்கள் இருக்கின்றன ஹரப்பாவில் உள்ள ஸ்வஸ்திகா முத்திரை சொல்வது என்ன? ஹரப்பாவில் காதல் சார்ந்த சித்திரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஹரப்பா மக்கள் வண்ணமயமான ஆடைகளை, நகைகளை விரும்பினார்கள். வாசனை திரவியங்களையும் பயன்படுத்தினார்கள். விளையாட்டு, இசை போன்றவை அவர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தபோதும் பாலியல், காதல் போன்றவற்றை தங்கள் கலைகளில் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. பல பழைய கலாசாரங்களில், ஆகாயத்தின் வடபகுதியில் தெரியும் பிரபலமான ஏழு நட்சத்திரத் தொகுப்பின் சுழற்சியை அறிந்திருந்தனர். ஹரப்பர்களும் அதனை அறிந்திருந்தனர். இந்த நட்சத்திரங்கள் சப்தரிஷி மண்டலமாகவும் இதன் சுழற்சியின் வடிவம், ஸ்வஸ்திகாவாகவும் வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. ஹரப்பா முத்திரைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் காணப்படுகிறது. ஆனால், இதன் பொருள் இன்னமும் புரியவில்லை. வானத்தை 27 பகுதிகளாக பிரிப்பது வேதங்களில் இருக்கிறது. பௌர்ணமிக்கு அருகில் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ, அந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இந்து மாதங்களுக்குச் சூட்டப்பட்டன. இப்படி மாதங்களுக்கு பெயர் சூட்டும் வகையிலான நட்சத்திர அமைப்பு கி.மு. 3,000வாக்கில் இருந்திருக்கலாம் என்கிறார்கள் வானியலாளர்கள். அந்த காலகட்டத்தில் வேதங்கள் உருவாகவில்லை. ஆகவே ஹரப்பர்கள்தான், பிற்காலத்தில் இங்கு வந்த ஆரியர்களுக்கு வானத்தை நட்சத்திரங்களின் அடிப்படையில் பிரிக்கும் முறையைச் சொல்லியிருக்க வேண்டும் என்கிறார் தேவ்தத் பட்நாயக். பட மூலாதாரம்,DEVDUTT PATTANAIK படக்குறிப்பு, திராவிட மொழிகளில் மீன் என்பது மீனையும் விண்மீனையும் குறிப்பதைப்போலவே ஹரப்பாவில் பேசப்பட்ட மொழியிலும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் சில அறிஞர்கள் மீன்கள்: ஹரப்பாவுக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமை மொழி ரீதியான மற்றொரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார் தேவ்தத். ஹரப்பாவில் கிடைத்த பானைகளில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கின்றன. மீன்களின் உடல்களிலும் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. திராவிட மொழிகளில் மீன் என்பது மீனையும் விண்மீனையும் குறிப்பதைப் போலவே ஹரப்பாவில் பேசப்பட்ட மொழியிலும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் சில அறிஞர்கள். ஆகவே ஹரப்பாவின் சித்திரங்களில் மீன்களாகக் குறிக்கப்பட்டிருப்பவை விண்மீன்களையே குறிப்பிடலாம் என்கிறார் தேவ்தத். ஹரப்பா நாகரிகத்தை சிந்து - சரஸ்வதி நாகரிகம் என பலர் அழைக்கின்றனர். இவர்களைப் பொருத்தவரை தற்போது பாகிஸ்தானிலும் இந்தியாவின் ஹரியானாவிலும் பாயும் கக்கர் - ஹக்ரா நதியே, ஹரப்பா நாகரிக காலத்தில் சரஸ்வதி நதியாக ஓடியது என்கிறார்கள். ரிக் வேதத்தில் சரஸ்வதி என்ற நதி ஐம்பது இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இப்போதும் தரைக்கு அடியில் இந்த சரஸ்வதி நதி ஓடுவதாகவும், திரிவேணி சங்கமத்தில் கங்கை - யமுனையுடன் சங்கமிப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே, ஹரப்பா நாகரிகத்தை வேதகால நாகரிகம் என குறிப்பிட வேண்டும் என்கிறார்கள் இவர்கள். ஆனால், காலவரிசை இந்தக் கருத்துக்குப் பொருத்தமாக இல்லை. ஹரப்பா நாகரிகம் கி.மு. 2,000வது ஆண்டுக்கு முன்பு செழிப்பாக இருந்த நாகரிகம். வேதப் பாடல்கள் கி.மு. 1,000வது ஆண்டில்தான் இயற்றப்பட்டன. பட மூலாதாரம்,DEVDUTT PATTANAIK படக்குறிப்பு, வெண்ணையை நெய்யாக மாற்றும் உத்தி இங்கேதான் உருவாகியிருக்க வேண்டும் என்கிறார் தேவ்தத் ஹரப்பாவாசிகளுக்கு பால் பிடிக்காதா? ஹரப்பா நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் பல விஷயங்களைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகிறார் தேவ்தத். பருத்தி ஆடைகள், நல்லெண்ணெய், தைப்பதற்கான ஊசி, செங்கல் செய்வதற்கான அச்சு, மழை நீர் சேகரிப்பு, பொதுவான குளியல் இடங்கள், மையப்படுத்தப்பட்ட வடிகால் வசதிகள், பொது இடத்தில் குப்பைத் தொட்டிகள், திறந்தவெளி அரங்குகள், தங்கத்திற்கான உரைகல், சிலைகளைச் செய்வதற்கான மெழுகு அச்சு, மசாலா பொருட்கள், தந்தத்தால் ஆன பொருட்கள், சேவல் சண்டை, தாயம் போன்றவை ஹரப்பா நாகரிக காலத்தில்தான் உருவாயின என்கிறார் அவர். மற்றொரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்கிறார் தேவ்தத். ஆரியர்களின் மரபணுக்களைக் கொண்டவர்களைத் தவிர, உலகின் பெரும்பான்மையானவர்கள் மாட்டின் பாலை, பாலாகவே அருந்த இயலாதவர்கள் (lactose intolerant). ஹரப்பாவில் வாழ்ந்தவர்களும் அப்படித்தான். ஆகவே, அவர்களை பாலை உறையூற்றி, தயிர், மோர், வெண்ணெய், நெய் என்ற வடிவிலேயே பயன்படுத்தினார்கள் என்கிறார் அவர். வெண்ணையை நெய்யாக மாற்றும் உத்தி இங்கேதான் உருவாகியிருக்க வேண்டும் என்கிறார் அவர். மெஸபடோமியாவில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால், பரந்த சிந்துவெளி பகுதியில் மெஸபடோமிய முத்திரைகளோ, பொருட்களோ கிடைக்கவில்லை. ஹரப்பா நாகரிகத்திற்கு உள்ளேயே தேவையான பொருட்கள் கிடைத்ததால், அப்பகுதியில் கிடைக்காத பொருட்களை மட்டுமே அவர்கள் இறக்குமதி செய்தனர். சுமேரியாவுடன் நீண்ட காலத் தொடர்பு இருந்தாலும், அதன் தாக்கம் தம் மீது ஏற்படாமல் அவர்கள் பார்த்துக்கொண்டனர். சுமேரியாவில் இருந்த க்யூனிஃபார்ம் (ஆப்பெழுத்து) எழுத்தை அவர்கள் பின்பற்றவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு எகிப்திய நாகரிகத்தின் பரப்பைப்போல இருபது மடங்கு பெரியது ஹரப்பா நாகரிகம் அழிந்தது ஏன்? ஹரப்பாவின் வாழ்வாதாரமே சுமேரியாவுடனான வர்த்தகத்தைத்தான் சார்ந்திருந்தது. சுமேரியக் கோவில்களுக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்து அளிப்பதற்காகத்தான் சிந்து நதிக்கரையில் தொழிற்சாலைகள் இயங்கின. அக்கேடிய சாம்ராஜ்யம் கி.மு. 2300 வாக்கில் சுமேரியாவைக் கைப்பற்றிய போதும் ஹரப்பாவில் இருந்து ஏற்றுமதி தொடர்ந்தது. ஆனால், அக்கேடிய சாம்ராஜ்ஜியம் கி.மு. 2,000ல் வீழ்ந்த போது, சுமேரிய நகரங்களால் தனித்துச் செயல்பட முடியவில்லை. இதனால் ஹரப்பாவின் பொருட்களுக்கான தேவை குறைந்து, அந்த நாகரிகம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு எகிப்திய நாகரிகத்தின் பரப்பைப்போல இருபது மடங்கு பெரியது. சுமேரிய நாகரிகத்தைப் போல பத்து மடங்கு பெரியது. இதில் சிறிதும் பெரிதுமான பல குடியிருப்புகள் அடங்கியிருந்தன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான தரப்படுத்துதலை சுமார் 20 தலைமுறைகளுக்குப் பின்பற்றின. அதாவது ஒரே மாதிரியான நகர வடிவமைப்பு, வீடு வடிவமைப்பு, முத்திரைகள், தயாரிப்பு முறைகள், பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய உற்பத்தியாளர்கள், விநியோகிஸ்தர்கள், பொருட்களை எடுத்துச் செல்பவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய குறியீடுகள், புதைக்கும் முறைகள், பானைகள் ஆகியவற்றை இவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால், சுமேரிய நாகரிகம் வீழ்ந்தபோது, இவை எதற்கும் தேவையில்லாமல் போனது. ஹரப்பா நாகரிகத்தின் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய பகுதி, இங்கு கிடைத்த எழுத்துகள். இவை எதனைக் குறிக்கின்றன என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்துவரும் நிலையில், இவை குறித்து சில சுவாரஸ்யமான கருத்துகளை முன்வைக்கிறார் தேவ்தத். மொத்தம் 400 - 600 தனித்துவமிக்க எழுத்து வடிவங்கள் இருந்தாலும், சுமார் 50 எழுத்துகளே திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஒரு வரியில் ஐந்து முதல் 20 வார்த்தைகளே இருக்கின்றன. இந்த எழுத்துகளோ, சின்னங்களோ விருப்பப்படி பதிக்கப்படவில்லை. அவற்றில் ஒரு ஒழுங்கு (இலக்கணம்?) இருந்தது. வர்த்தகம், மதம் தொடர்பாகவே இவை எழுதப்பட்டிருந்தன. ஆனால், ஈமக் குழிகளில் எழுத்துகள் இல்லை. ஹரப்பாவில் வாழ்ந்தவர்கள் என்ன மொழியைப் பேசினர்? ஹரப்பாவில் வாழ்ந்த மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் யார் என்பது குறித்து சில கருதுகோள்களை முன்வைக்கிறார் தேவ்தத். டிஎன்ஏ ஆதாரங்களின்படி, ஹரப்பர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கங்கை நதி சமவெளியிலிருந்து தென்பகுதிவரை பரவி வாழ்ந்தனர். இவர்களில் சிலர் தொல் திராவிட மொழியைப் பேசியிருக்கலாம். 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரியர்களின் மரபணுக்கள் வந்து சேர்ந்தன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஜாதிக்குள் திருமணம் செய்யும் வழக்கம் துவங்குகிறது. ராக்கிடியில் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் இருந்து கிடைத்த டிஎன்ஏ, தமிழ்நாட்டின் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர்களின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது. மொழிகளைப் பொறுத்தவரை, இந்த நாகரிகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழியைப் பேசியிருக்கலாம். வட பகுதியில் வசித்தவர்கள் திபெத்திய மொழியையும் மத்தியப் பகுதியில் வசிப்பவர்கள் முண்டாவை ஒத்த ஒரு மொழியையும் தென் பகுதியில் வசித்தவர்கள் தொல் திராவிட மொழியைப் பேசியிருக்கலாம். பலூசிஸ்தானில் ஆடு, மாடு மேய்க்கும் இனத்தவரின் ப்ராஹுயி மொழியில் இப்போதும் தனித்த திராவிட மொழி அடையாளங்கள் உண்டு. மெஸபடோமியாவில் எள், தந்தம் ஆகியவற்றுக்கு தொல் திராவிட மொழி வார்த்தைகளே புழங்கின என்கிறார் தேவ்தத் பட்நாயக். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3rxn7gj02qo
-
படுகுழியில் இருந்து வெளியேறி பிரிக்ஸிற்குள் நுழைதல்
எழுதியவர் - ஷிரான் இளன்பெருமா ஒக்டோபர் 22 முதல் 24 வரை 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரதான குழு உறுப்பினர்களுடன், இந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை முறையாக சேர்க்கப்பட்டன. உச்சிமாநாட்டின் போது, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், நைஜீரியா, உகாண்டா, கியூபா மற்றும் பொலிவியா உட்பட மேலும் 13 நாடுகள் பங்குதாரர் உறுப்பினர்களாக ஆகின. இந்த ஆண்டு, பிரிக்ஸில் அங்கத்துவம் பெற விண்ணப்பித்த உலகளாவிய தெற்கில் இருந்தான வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைகிறது. கசான் உச்சிமாநாட்டிற்கு சென்ற இலங்கை தூதுக்குழுவினருக்கு வெளியுறவு செயலாளரான அருணி விஜேவர்தன தலைமை தாங்கினார். அதேநேரத்தில், வெளிவிவகார அமைச்சரான விஜித ஹேரத் பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து கொள்வதற்கு ஆதரவளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை நிகழ்வு, உக்ரேனில் நேட்டோ தலைமையிலான பினாமி யுத்தம் மற்றும் சீனா மீதான அமெரிக்கா தலைமையிலான புதிய பனிப்போர் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்ற, அதிகரித்து வரும் பதட்டமான உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில் கசான் உச்சிமாநாடு நிகழ்கின்றது. உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உரை, ஓர் உலகானது ‘சீர்குலைவு மற்றும் குழப்பத்தின் படுகுழியில்’ இறங்குவதை விவரிக்கிறது. ரஷ்ய நாவலான என்ன செய்ய வேண்டும்? இனை குறிப்பிட்டு (அத்துடன் விளாடிமிர் லெனின் ஒரு முக்கிய உரையின் தலைப்பு), ஜி பிரிக்ஸின் உணர்வை சுருக்கமாகக் கூறினார்: “நம் காலம் எவ்வளவு கொந்தளிப்பாக மாறுகிறதோ, அவ்வளவு அதிகமாக நாம் முன்னரங்கில் உறுதியாக நிற்க வேண்டியதுடன், விடாமுயற்சியை வெளிப்படுத்த வேண்டும், முன்னோடியாக இருப்பதற்கான துணிச்சலை வெளிக்காட்ட வேண்டும், மாற்றியமைப்பதற்கான புத்திக்கூர்மையை வெளிப்படுத்த வேண்டும். உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஓர் முதன்மையான வழிமுறையாக பிரிக்ஸினை உருவாக்குவதற்கும், உலகளாவிய ஆளுகை சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்கான முன்னணிப் படையாகவும் உருவாக்குவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” செய்தி தெளிவாக உள்ளது. பிரிக்ஸ் என்பது அமெரிக்கா தலைமையிலான இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கை வகைப்படுத்திய அரசியல் ஆதிக்கம் மற்றும் ஒருதலைப்பட்சவாதத்திற்கு எதிரான அமைதியான அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கின்றது. உலகம் குழப்பத்தில் முரண்பாடாக, பிரிக்ஸ் என்ற சுருக்கமானது 2001 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சாக்ஸ் ஆவணத்தின் அறிக்கையிலிருந்து உருவானதுடன், அது பொருளாதார சக்தியின் மாற்றத்தையும் அதற்கு G7 உலகளாவிய தெற்கில் இருந்து அதிகமான உறுப்பினர்களை உள்ளடக்க வேண்டும் என்றும் முன்னறிவித்தது. எவ்வாறாயினும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகள் மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களின் மிக நீண்ட வரலாற்று சுழற்சியின் விளைவாக பிரிக்ஸ் அமைப்பிற்கு ஓர் சம்பவம் உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் விழிப்புணர்விலிருந்து அரபு கிளர்ச்சி, இந்திய சுதந்திர இயக்கம், ஆப்பிரிக்க விடுதலைப் போராட்ட அலைகள் மற்றும் அணிசேரா இயக்கம் வரை தற்போதைய பல்முனை யுக்தி வரை ஒரு கோடு வரையப்படலாம். பிரிக்ஸ் என்பது இந்த நீண்ட வரலாற்றின் சமீபத்திய வெளிப்பாடு மட்டுமேயாகும். ஆயினும்கூட, இந்த அமைப்பு முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. இந்தியா QUAD இன் உறுப்பினராகவும், அமெரிக்கா தலைமையிலான இந்திய-பசிபிக் வியூகத்தின் முக்கிய முடிச்சாகவும் உள்ளது. நிறவெறிக்குப் பிந்தைய தென்னாப்பிரிக்கா நவதாராளவாதத்தால் முற்றிலும் செயற்பாடற்றதாகும். குழுவில் இணைவதற்கான வெனிசுலாவின் விண்ணப்பத்தை பிரேசில் தடுத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்க நிதியியல் மற்றும் இராணுவக் கட்டமைப்பில் ஆழமாகப் பொதிந்துள்ளதுடன், இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை நிறுவிய முதல் அரபு நாடாகும். சீனாவும் ரஷ்யாவும் குழுவின் போர்க்குணமிக்க மையமாக உள்ளதுடன் உலகளாவிய ஒழுங்கை மீள்வடிவமைக்க அதிகமான வளங்கள் மற்றும் சக்தி கொண்ட நாடுகளாக உள்ளன. ஆயினும் பலதரப்பட்ட மற்றும் சில சமயங்களில் முரண்பாடான அரசியல் செயற்திட்டங்களைக் கொண்ட நாடுகளை ஒத்துழைப்பிற்கான பொதுவான தளத்தில் ஒன்றிணைக்க கட்டாயப்படுத்தும் புறநிலை பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் காரணிகள் உள்ளன. அமெரிக்கா பாதுகாப்புவாதம், மேம்பட்ட போர்களை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துதல், உலகளாவிய நிதியியல் அமைப்பின் மீதான அதன் கட்டுப்பாட்டை ஆயுதமாக்குதல் மற்றும் உலகின் இருப்பு நாணயத்தை அச்சிடுவதில் அதனது ஏகபோகம் ஆகியவற்றின் மூலமாக அதிகரித்த முறையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கிடையில், பெரும்பான்மையான உலக நாடுகள் இன்னும் போர், வறுமை மற்றும் அபிவிருத்தி குறைவு ஆகியவற்றுடன் போராடுகின்றது. இந்த உலகளாவிய பெரும்பான்மையினரின் சமானத்திற்கான கோரிக்கை, உற்பத்தித்திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டிற்கான நிதியுதவி ஆகியவைதான் பிரிக்ஸ் அமைப்பிற்கான அடிப்படையாகும். BRICS மற்றும் இலங்கையின் கைத்தொழில்மயமாக்கலின் எதிர்காலம் சர்வதேச ஒழுங்கின் சீர்குலைவு மற்றும் குழப்பத்திற்கு இலங்கை ஒரு உதாரணமாக இருக்கலாம். பல வழிகளில், நாட்டின் உள்ளக உறுதியற்ற தன்மைகள் வெளிப்புற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. முதலாவதாக, உக்ரைனில் நடந்த போரைத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை பணவீக்கம் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியன ஏற்கனவே கொவிட்-19 மற்றும் சுற்றுலா மற்றும் பணம் அனுப்புகையின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு நாட்டைத் தாக்கியது. மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் பிராந்திய மோதலைத் தூண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், நீண்டுள்ள பொருட்களின் விலைப் பணவீக்கமானது இலங்கைப் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும். இரண்டாவதாக, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மறுசீரமைப்பு செயன்முறையானது உலகளாவிய நிதியியல் கட்டமைப்பு மற்றும் பிரெட்டன் வூட்ஸ் நிறுவனங்களின் மோசடியான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. உபரிகளை மீள்சுழற்சி செய்வதற்கும், உற்பத்தி உட்கட்டமைப்பு மற்றும் தொழிற்துறைக்கு சலுகை நிதி வழங்குவதற்குமான உலகளாவிய அமைப்பு இல்லாமை இலங்கை போன்ற நாடுகளால் வலுவாக உணரப்படுகிறது. IMF மற்றும் உலக வங்கியால் விதிக்கப்பட்ட பணவழங்கல் குறைப்புக் கொள்கைகள் கைத்தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவையாகும். நாடு பற்றிய அதன் முதல் அறிக்கையிலிருந்து, உலக வங்கியானது உள்ளூர் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை பெரிய அளவிலான கைத்தொழிற்துறையிலிருந்து விலக்கி, விவசாயிகள் காலனித்துவம், சேவைகள் மற்றும் நுண்தொழில் முயற்சியாண்மை உள்ளிட்ட பல்வேறு ஒரு வழிப்பாதைகளை நோக்கித் திருப்ப முயன்றது. இந்த வழியில் எந்தவொரு நாடும் அபிவிருத்தியடைய முடிந்தது போலாகும். இதற்கு நேர்மாறாக, விருத்தியடைந்து வரும் புதிய அபிவிருத்தி வங்கி டொலரைத் தவிர மற்ற நாணயங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவிக்கான புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது. பெரிய அளவிலான தொழிற்துறையின் அடித்தளத்தில் மட்டுமே இறையாண்மை கட்டமைக்கப்பட முடியும் என்பதை ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் நன்கு அறிவர். பிரிக்ஸ் மூலமாக, புதிய நிதியளிப்பு பொறிமுறைகள் மற்றும் உலகளாவிய தெற்கில் இருந்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து இலங்கையில் கைத்தொழில்மயமாக்கலை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கைத்தொழிற்துறை புரட்சிக்கான பிரிக்ஸ் பங்காண்மை (PartNIR) உட்பட இலங்கை நன்மை பெறக்கூடிய பல தொழிற்துறை முன்முயற்சிகளை பிரிக்ஸ் கொண்டுள்ளது. PartNIR ஆலோசனைக் குழுவானது இரசாயனங்கள், சுரங்கம் மற்றும் உலோகங்கள், மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளது என்று கசான் பிரகடனம் தெரிவிக்கிறது. இவை அனைத்தும் 21 ஆம் நூற்றாண்டில் கைத்தொழில்மயமாக்கலை நோக்கிய உந்துதலில் இலங்கை கருத வேண்டிய பெறுமதி சேர்க்கப்பட்ட தொழிற்துறைகளாகும். இறுதியாக, கசானில் ஜனாதிபதி ஜியின் உரையானது, பசுமை தொழிற்துறை சங்கிலிகளில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது. சீனா தற்போது பசுமை ஆற்றல் துறையில் ஆதிக்கம் செலுத்துவதுடன், இதில் அரிய பூமி கனிமங்கள் மற்றும் மின்கலங்கள் மற்றும் சூரியப்படல்களின் உற்பத்தி ஆகியவை உள்ளடங்கும். பிரிக்ஸின் ஓர் உறுப்பினராக, இலங்கையானது கிரப்பீன் போன்ற உள்நாட்டு வளங்களின் பெறுமதி சேர்ப்பை மேம்படுத்துவதற்கும் பசுமை எரிசக்தி தொழிற்துறை சங்கிலியில் இணைவதற்கும் இந்தத் துறையில் சீன நிபுணத்துவத்தைப் பயன்படுத்த முடியும். BRICS முன்னேற்றம் தொடர்பில் இன்னும் அதிகமாக பணியாற்றவேண்டியுள்ளது. அதன் விளைவானது கல்லில் எழுதப்படவில்லை. பாண்டுங்கின் உணர்வில், பிரிக்ஸின் விளைவினை வடிவமைப்பதிலும், உலக வரலாற்றில் அதன் சரியான இடத்தைப் பெறுவதிலும் இலங்கை முனைப்பான வகிபங்கினை வகிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/197361
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கேப்டனை கைவிட்ட 5 அணிகள், இளம் வீரருக்கு 70 மடங்கு கூடுதல் ஊதியம் - ஐ.பி.எல்.லில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி தக்கவைக்கவில்லை. எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2025ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் அளித்துள்ளன. இதில் இந்திய வீரர்கள், பேட்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், குறைந்த அளவு வெளிநாட்டு வீரர்கள், பந்துவீச்சாளர்கள், அன்கேப்டு வீரர்கள்(சர்வதேச போட்டியில் பங்கேற்காதவர்கள்) மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசனைவிட இந்த சீசனில் ஒவ்வொரு அணியின் பர்ஸ் தொகையும் ரூ.20 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடாத கேப்டு வீரர் அன்கேப்டு வீரராக தேர்ந்தெடுக்கலாம் உள்ளிட்ட புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஐபிஎல் டி20 தொடர் என்பது பேட்டர்கள் ஆதிக்கம் செய்யும் தொடர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் பேட்டர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ளன. வெளிநாட்டு பேட்டர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட உள்நாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த தக்கவைப்பில் அணி நிர்வாகங்கள் வழங்கியுள்ளன. சில வீரர்கள் கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் ஊதியத்தைக் குறைத்தும் அணியில் நீடிக்கிறார்கள். ஏனென்றால், ஏலத்துக்கு அனுப்பப்படாமல் தக்கவைப்பில் இருப்பதால் அணி நிர்வாகத்துக்காக இதனை அவர்கள் செய்துள்ளனர். அதேபோல, கடந்த ஐபிஎல் ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட கேப்டு வீரர்கள், அன்கேப்டு வீரர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் ஊதியம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான ஏலம் குறித்த உறுதியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வீரர்கள் ஏலத்தில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் நடந்தேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் 2025 ஐபிஎல் சீசனுக்காக வீரர்கள் தக்கவைப்பில் ஒவ்வொரு அணியும் உள்நாட்டு வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. 46 வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் இருந்தாலும் அதில் 10 வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகள் மட்டுமே 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துள்ளன. சன்ரைசர்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்களையும், கொல்கத்தா அணி 2 வீரர்களையும் தக்கவைத்துள்ளன. ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இந்திய வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளன. பேட்டர்கள் ஆதிக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை அணி வீரர் பும்ரா அதிகமான அளவு பேட்டர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளன. இந்த தக்கவைப்பில் 28 பேட்டர்கள், 11 பந்துவீச்சாளர்கள்(இதில் 8 வேகப்பந்துவீச்சாளர்கள்), 7 ஆல்ரவுண்டர்கள் அடங்குவர். பந்துவீச்சாளர்களைத் தக்கவைப்பதில் வெளிநாட்டு வீரர்களுக்கே அணிகள் முக்கியத்துவம் அளித்துள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தீப் சர்மாவை தக்கவைத்துள்ளது. இவர் அன்கேப்டு இந்திய வீரர் ஆவார், ராஜஸ்தான் அணி 6 வீரர்களைத் தக்கவைத்ததில் இவரும் ஒருவர். சன்ரைசர்ஸ் அணி கம்மின்ஸ்(வெளிநாட்டு வீரர்), மும்பை அணி பும்ரா, சிஎஸ்கே அணி மதிஷா பதிராணா என தலா ஒரு பந்துவீச்சாளருக்கே முக்கியத்துவம் அளித்துள்ளன. லக்னெள அணி பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மயங்க் யாதவ், ரவி பிஸ்னோய், மோசின் கான் ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. கொல்கத்தா அணி ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஆந்த்ரே ரஸல், சுனில் நரைனைத் தக்கவைத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அன்கேப்டு வீரர்கள் பக்கம் சாய்ந்த 8 அணிகள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத அன்கேப்டு வீரர்களுக்கு 8 அணிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டும் அன்கேப்டு வீரர்களை தக்கவைக்கவில்லை. இதில் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடாத வீரரும் அன்கேப்டு வரிசையில் வருகிறார். அதன்படி எம்எஸ் தோனி அன்கேப்டு வீரராக சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், லக்னெள அணிகள் தலா 2 உள்நாட்டு வீரர்களை தக்கவைத்துள்ளன. டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் ஒரு அன்கேப்டு வீரரை மட்டும் தக்கவைத்துள்ளன. இதன்படி 12 அன்கேப்டு வீரர்கள் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொல்கத்தா அணி வீரர் வருண் சக்ரவர்த்தி சுழற்பந்துவீச்சாளர்களின் நிலை என்ன? ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பில் ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய் ஆகிய 3 பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். சாஹல், அஸ்வின், தீக்சனா, ராகுல் சஹர் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை. சுனில் நரைன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரஷித் கான் ஆகியோர் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வருவார்கள் என்பதால் ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சார்கள் பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். அந்த வகையில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களை தக்கவைப்பது குறைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லக்னெள அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல் தக்கவைப்பில் 5 கேப்டன்கள் இல்லை அதிர்ச்சிக்குரிய வகையில் 5 அணிகளின் நிர்வாகங்கள் தங்களின் கேப்டன்களையே தக்கவைப்பு பட்டியலில் இருந்து நீக்கிவிட்டன. லக்னெள, டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ஆகியவை கேப்டன்களையே நீக்கிவிட்டன. ஆர்சிபி அணி மீண்டும் விராட் கோலியை கேப்டனாக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப் அணிகள் ஏலம் முடிந்தபின் புதிய கேப்டன்களை அறிவிக்க உள்ளன. ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், டூப்பிளசிஸ், எய்டன் மார்க்ரம், ஸ்டீப் ஸ்மித், நிதிஷ் ராணா ஆகியோர் ஏலத்தில் மூலம் எடுக்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டால் அவர்களின் மதிப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு ஏற்கெனவே கேப்டன் அனுபவம் இருப்பது கூடுதல் மதிப்பாகும். இவர்கள்தவிர ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஏலத்தில் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தோனி, ரோகித் ஊதியம் குறைப்பு கடந்த ஐபிஎல் சீசனில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, தக்கவைப்பு மூலம் சில வீரர்கள் ஊதியக் குறைப்பைச் சந்தித்துள்ளனர். கொல்கத்தா அணியில் கடந்த சீசனில் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட ரஸலுக்கு ஊதியம் ரூ.12 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ராகுல் திவேட்டியாவுக்கு ரூ.9 கோடியிலிருந்து ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஷாருக்கானுக்கு ரூ.7.40 கோடி ஊதியத்திலிருந்து ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ரூ.12 கோடி ஊதியம் பெற்ற தோனி அன்கேப்டு வீரர் ஆக்கப்பட்டதால் அவரது ஊதியம் ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, ரோகித் சர்மா, சுனில் நரேன், அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஊதியக் குறைப்பை சந்தித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் துருவ் ஜூரெல் ஜாக்பாட் அடித்த வீரர்கள் தக்கவைப்பில் சில அன்கேப்டு வீரர்கள் மற்றும் கேப்டு வீரர்களின் ஊதியம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக துருவ் ஜூரெல் கடந்த சீசன் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டிருந்தார். அவரது ஊதியம் தக்கவைப்பில் ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளது. அவரது ஊதியம் ஏறக்குறைய 7000 சதவீதம் அதாவது 70 மடங்கு அதிகரித்துள்ளது. சிஎஸ்கே வீரர் பதிரணாவின் ஊதியம் ரூ.20 லட்சத்தில் இருந்து, தக்க வைப்பின் மூலமாக ரூ.13 கோடியாக உயர்ந்துள்ளது. இது 65 மடங்கு அதிகம் ஆகும். ரஜத் பட்டிதர், மயங்க் யாதவ் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டநிலையில் அவர்களின் ஊதியம் தக்கவைப்பில் ரூ.11 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக வீரர் சாய் சுதர்சன், சஷாங்க் சிங் ஆகியோர் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு கடந்த சீசனில் வாங்கப்பட்ட நிலையில் தக்கவைப்பு மூலம் சுதர்சனுக்கு ரூ.8.50 கோடியும், சஷாங்க் சிங்கிற்கு ரூ.5.50 கோடியும் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyg2edj3lqo
-
அரச சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். இந்நிலையில், இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் அதிகாரிகளினால் இடம்பெறும் மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றங்களையும் முறையிட முடியும். மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்கள், மோசடிகள் மற்றும் தொந்தரவுகள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்த முடியும். போதைப்பொருள் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் பாதாள உலக கும்பலின் செயற்பாடுகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் கடந்த ஜூலை மாதம் அறிமுகம்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற்து. தகவல் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/197713
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல் நிறுவனங்களில் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்களை செய்வதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைவர் அல்லது பணிப்பாளரை நியமிப்பதற்குத் தேவை ஏற்பட்டால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும், தேர்தல் நடவடிக்கையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்கள் தேர்தல் சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197703
-
இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்த பாலத்தீனர் கூட்டத்தில் இருந்த 3 வயது சிறுமி என்ன ஆனார்?
எழுதியவர் ,ஃபெர்கல் கியானே பதவி,சிறப்புச் செய்தியாளர் அந்த குழந்தையை ஆண்கள் அதிகமாக நிரம்பியிருக்கும் கூட்டத்தில் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. மிகவும் சின்னஞ்சிறிய பெண் குழந்தை, அந்த கூட்டத்தின் கடைசியில் அமர்ந்திருந்தார். இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அங்கே இருந்த ஆண்களின் உடைகளையெல்லாம் பரிசோதனைக்காக நீக்க உத்தரவு பிறப்பித்திருந்தனர். வயதானவர்களும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. கேமராக்களின் பக்கம் அவர்களின் பார்வை திரும்பின. இந்த புகைப்படத்தை இஸ்ரேல் ராணுவ வீரரைத் தவிர வேறு யார் எடுத்திருக்கக் கூடும் . இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் டெலிகிராம் பக்கத்தில் தான் முதன் முதலாக இந்த புகைப்படம் பதியப்பட்டது. ஆண்கள் அனைவரும் வருத்தத்தில் சோர்ந்திருந்தனர். அதில் சின்னஞ்சிறியப் பெண் குழந்தை அந்த கூட்டத்தில் இருந்து தன்னுடைய பார்வையை விலக்கி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தார் ஒரு பிபிசி செய்தியாளர். கேமராவைத் தாண்டி ஏதோ ஒன்று அந்த குழந்தையின் கவனத்தை ஈர்த்திருருக்கலாம். இல்லையென்றால் அந்த குழந்தை இஸ்ரேல் ராணுவத்தினர் வைத்திருந்த துப்பாக்கிகளையோ, இஸ்ரேல் ராணுவத்தினரையோ பார்க்க விரும்பாமல் இருந்திருக்கலாம். வெவ்வேறு பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கே நிறுத்தியிருந்தனர். தாக்குதலில் நாசமடைந்த கட்டங்களுக்கு முன்பே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். ராணுவத்தினர், அந்த இடத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆண்களை பரிசோதனை செய்தனர். அவர்களின் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. ஹமாஸிற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் வகையில் ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும், ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா என்றும் பரிசோதனை செய்தனர். போரின் கோரத்தால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை தனி மனிதர்களின் வாழ்வில் மிக நுட்பமாக காண முடியும். அந்த கூட்டத்தின் நடுவே அமர்ந்திருக்கும் அந்த குழந்தை, எங்கோ திரும்பியிருக்கும் அவர் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சி இந்த போர் குறித்த நிறைய கேள்விகளை எழுப்புகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் அந்த குழந்தை யார்? அவருக்கு என்ன ஆனது? ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். நிறைய நபர்கள் காயம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். தொடர் வான்வழி தாக்குதல் காரணமாக குழந்தைகள் இடர்பாடுகளில் சிக்கி இறந்திருக்கின்றனர். மருத்துவ வசதி, மருத்துவர்கள் பற்றாக்குறைக் காரணமாக குழந்தைகள் இறந்திருக்கின்றனர். இந்த சூழலில்தான் மனதை வருத்திக் கொண்டிருந்தது இந்த குழந்தையின் புகைப்படம். படக்குறிப்பு, தொடர் வான்வழி தாக்குதல் மட்டுமின்றி, மருத்துவ வசதி, மருத்துவர்கள் பற்றாக்குறைக் காரணமாக குழந்தைகள் இறந்திருக்கின்றனர். குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்ட பிபிசி காஸா டுடேவுடன் இணைந்து எங்களின் பிபிசி அரபிக் சேவை, இந்த குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டது. பிபிசியையோ அல்லது இதர சர்வதேச ஊடகத்தினரையோ இஸ்ரேல் ராணுவம் காஸாவில் செய்தி சேகரிப்பதை அனுமதிப்பதில்லை. இந்த காரணத்தால் பிபிசி நம்பத்தகுந்த 'ஃப்ரீலேன்ஸ்' ஊடகவியலாளர்களின் குழுக்களை அதிகமாக சார்ந்திருக்கிறது. எங்களுடன் இணைந்து பணியாற்றும் ஊடகவியலாளர்கள் குழு வடக்கில் உதவிப் பணிகளை மேற்கோண்டு வரும் நபர்களை தொடர்பு கொண்டு, அந்த புகைப்படத்தை மக்கள் புலம் பெயர்ந்த இடங்களில் காட்டி அந்த குழந்தையை தேடத் துவங்கினார்கள். இரண்டு நாள் வரை எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. 48 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஒரு குறுஞ்செய்தி எங்களின் அலைபேசிக்கு வர, மனம் நிம்மதி அடைந்தது. அந்த செய்தி, "நாங்கள் அந்தக் குழந்தையை கண்டுபிடித்துவிட்டோம்." மூன்று வயதான ஜூலியா அபு வர்தா உயிருடன் இருக்கிறார். ஜபாலியாவில் இருந்து தப்பித்து வந்து தஞ்சம் புகுந்திருக்கும் காஸா நகரில் ஜூலியாவின் வீட்டைக் கண்டுபிடித்தார் எங்கள் பத்திரிகையாளர். ஜூலியா தன்னுடைய அம்மா, அப்பா, மற்றும் தாத்தாவுடன் அவருடைய வீட்டில் இருந்தார். இஸ்ரேல் ராணுவத்தினரின் ஆளில்லா விமானங்கள் தலைக்கு மேலே எப்போதும் இரைச்சலுடன் பறந்து கொண்டிருக்க, ஜூலியா பாட்டுப்பாடும் கோழிகளின் கார்ட்டூன் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார். முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு நபர் தன் மீது கவனம் செலுத்துவதை உணர்ந்த ஜூலியா ஆச்சரியம் அடைந்தார். அவருடைய அப்பா, அந்த குழந்தையிடம், "யாரு நீங்கன்னு சொல்லுங்க," என்று விளையாட்டாக கேட்டார். அவரோ, "ஜ்ஜூலிய்ய்யா" என்று தன்னுடைய பெயரை அழுத்தமாக மழலை மொழியில் பதில் கூறினார். ஜூலியாவுக்கு எந்த காயமும் இல்லை. ஜம்பரும் ஜீன்ஸ் கால்சட்டையும் அணிந்திருந்தார். இரட்டை ஜடையில் அழகான பூ வேலைப்பாடு கொண்டிருந்த 'பேண்டை' அணிந்திருந்தார். குழந்தைகளுக்கே உரித்தான குறும்புத்தனம் அங்கே இல்லை. அவர் மிகுந்த எச்சரிக்கையுடம் இருந்தார். அவருடைய அப்பா முகமது, இந்த புகைப்படத்தின் கதையை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். படக்குறிப்பு, தன் தந்தை முகமதுவுடன் ஜூலியா 21 நாட்களில் ஐந்து முறை இடம் பெயர்ந்த ஜூலியாவின் குடும்பம் கடந்த 21 நாட்களில் ஐந்து முறை இடம் பெயர்ந்திருக்கிறது அவருடைய குடும்பம். துப்பாக்கிச் சூடுகளுக்கும், வான்வழி தாக்குதல்களுக்கும் இடையே அவர்கள் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தனர். நான்காவது முறையாக இடம் பெயர்ந்து தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் ஆளில்லா விமானத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்த நாளில் தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹமாஸுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகின்ற அல் கலுஃபா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது. முகமதுவின் குடும்பம் கொஞ்சம் துணிகளையும், டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளையும், சில பொருட்களையும் எடுத்துக் கொண்டு வேறொரு இடத்திற்கு செல்ல தயாரானார்கள். ஜூலியாவின் அம்மா அமல், அப்பா முகமது, ஜூலியாவின் 15 மாத தம்பி ஹம்ஸா, தாத்தா, இரண்டு மாமாக்கள் மற்றும் அவரின் ஒரு உறவினர் அனைவரும் அல் கலுஃபா மாவட்டத்தில் இருந்து வெளியேறும் போது ஒன்றாகத்தான் இருந்தனர். பதற்றம் மற்றும் குழப்பத்தில் ஜூலியாவும் அவருடைய அப்பாவும் அவர்களின் குடும்பத்தில் இருந்து பிரிந்துவிட்டனர். "கூட்டம் மற்றும் நாங்கள் எடுத்து வந்த பொருட்களின் காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டோம். என்னுடைய மனைவியால் இங்கிருந்து வெளியேறிவிட முடிந்தது. ஆனால் நான் இங்கேயே தங்கிவிட்டேன்," என்கிறார் முகமது. அங்கிருந்து வெளியேறும் மக்களுடன் அப்பாவும் மகளும் நடக்கத் துவங்கினார்கள். வீதிகள் எங்கும் மரணம். "இறந்தவர்களின் உடல்களையும் கட்டங்களின் சேதங்களையும் நாங்கள் பார்க்க நேரிட்டது," என்கிறார் முகமது. அந்த கோரக் காட்சிகளை ஜூலியா பார்த்துவிடாமல் தடுக்க ஒரு வழியும் இல்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில், குழந்தைகள் வன்முறையில் இறந்து போனவர்களை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. அப்பாவும் மகளும் அவர்களுடன் சேர்ந்து வந்த குழுவும் இஸ்ரேலின் சோதனை மையத்தை அடைந்தனர். "அங்கே ராணுவத்தினர் இருந்தனர். எங்களை நோக்கி வந்த அவர்கள் எங்களின் தலைக்கு மேலே துப்பாக்கியால் சுடத் துவங்கினார்கள். துப்பாக்கிச்சூட்டின் போது ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நகர்ந்தோம்." உள்ளாடைகளுடன் நிற்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிட்டனர். தற்கொலைப்படையினர், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை கண்டறிய இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தும் சோதனை தான் இது. அந்த சோதனை மையத்தில் 7 மணி நேரம் வரை தாங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் முகமது. அந்த புகைப்படத்தில் ஜூலியா அமைதியாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு நேரிட்டதை விவரிக்கிறார் அவருடைய அப்பா. "திடீரென கத்த ஆரம்பித்துவிட்டாள். அம்மாவிடம் போக வேண்டும் என்று என்னிடம் கூறினாள்." என்றார் அவர். தற்போது அந்த குடும்பம் மீண்டும் இணைந்துவிட்டது. குடிபெயர்ந்தவர்கள் குழுக்களாக ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் இணக்கம் இங்கே இறுக்கமானது. ஜபாலியாவில் இருந்து தூரத்து சொந்தங்கள் வரும் செய்தி உடனுக்குடன் காஸா நகரம் முழுவதும் வேகமாக பரவுகிறது. ஜூலியாவின் மீது அக்கறை கொண்ட அவரது உறவினர்கள் ஜூலியாவுக்கு ஆறுதலாக இருந்தனர். இனிப்புகளும், உருளைக்கிழங்கு சிப்ஸ்களும் அவருக்காக அங்கே எடுத்து வைக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுனிசெஃப் அறிக்கையின் படி இந்த போரில் இதுவரை 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். 14 ஆயிரம் குழந்தைகள் இறப்பு ஜபாலியாவில் இருந்து காஸா நகரத்திற்கு அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பு நடந்த நிகழ்வு ஜூலியாவின் மன நிம்மதியை எவ்வாறு பாதித்தது என்று எங்களுடன் பணியாற்றும் பத்திரிகையாளரிடம் முகமது கூறினார். ஜூலியாவின் நெருங்கிய உறவினர் தான் யாஹ்யா. அவருக்கு வயது 7. ஜூலியாவின் விளையாட்டுக் கூட்டாளி யாஹ்யா. தெருக்களில் விளையாடச் சென்றால் இவர்கள் இருவரும் தான் செல்வார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலின் போது யாஹ்யா தெருவில் நின்று கொண்டிருந்தார். இஸ்ரேலின் அந்த தாக்குதலில் யாஹ்யா கொல்லப்பட்டார். "வாழ்க்கை மிகவும் இயல்பாக இருந்தது. ஜூலியா ஓடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தாள். ஆனால் இன்று, வான்வழி தாக்குதல் நடக்கும் போதெல்லாம் அதனைச் சுட்டிக்காட்டி அது விமானம் என்கிறாள். இடர்பாடுகளில் சிக்கிக் கொண்ட போது எங்களின் தலைக்கு மேலே பறக்கும் ஆளில்லா விமானங்களை அவள் சுட்டிக்காட்டுகிறாள்," என்று கூறுகிறார் முகமது. யுனிசெஃப் அறிக்கையின் படி இந்த போரில் இதுவரை 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். "குழந்தைகளால் ஆரம்பிக்கப்படாத இந்த போருக்கான விலையை தினம் தினம் அவர்கள் தான் கொடுக்க வேண்டியதாய் உள்ளது," என்று யுனிசெஃப் செய்தித்தொடர்பாளர் ஜோனதன் கிரிக்ஸ். "நான் பார்த்த பெரும்பாலான குழந்தைகள் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களை இத்தகைய சூழலில் இழந்திருக்கின்றனர்," என்றும் அவர் கூறினார். காஸா பகுதியில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும், கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகளுக்கு மன நல உதவிகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை அனுமானிக்கிறது. அவள் இழந்தது என்ன? அவள் பார்த்தது என்ன? அவள் எங்கெல்லாம் சிக்கியிருந்தாள் என்று யோசிக்கும் போது ஜூலியா போன்ற குழந்தைகளுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்று கூற இயலாது. வருங்காலங்களில் அவர்களின் கனவுகளில் என்ன வரும் என்றும், அவர்களின் நினைவில் என்ன பதிவாகி இருக்கும் என்று யாருக்குத்தான் தெரியும். ஆனால் வாழ்க்கை மிகவும் சோகத்துடன் முடிவடையக்கூடும் என்று தற்போது ஜூலியாவுக்குத் தெரியும். வான்வழி தாக்குதலின் போது, துப்பாக்கிச்சூட்டின் போது, பசி மற்றும் நோய் காலங்களில் ஜூலியாவை எப்படியும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய குடும்பம் ஒன்று அவருக்கு இருக்கிறது என்பது மட்டும் தான் ஆறுதல். கூடுதல் செய்திகளுக்காக ஹனீன் அப்தீன், ஆலிஸ் டோயார்டு, மூஸ் கேம்பெல் மற்றும் ருதாபா அப்பாஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c704wpn44rpo
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா - நியூஸிலாந்து கடைசி டெஸ்ட்: இரண்டு அணிகளும் சமஅளவில் மோதல் (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டு இரண்டு அணிகளும் சம அளவில் இருக்கின்றன. மும்பை ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படவேண்டும் எனவும் முதல் நாளிலிருந்து சுழற்சி இருக்கவேண்டும் எனவும் மும்பை மைதான பராமரிப்பாளரை இந்திய அணி முகாமைத்துவம் கோரியிருந்தது. அப்படி இருந்தும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்களை வீழ்ந்தி இந்தியாவை துவம்சம் செய்த மிச்செல் சென்ட்னரை இந்தப் போட்டியில் நியூஸிலாந்து இணைத்துக்கொள்ளாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாளன்று வீழ்த்தப்பட்ட 14 விக்கெட்களில் 11 விக்கெட்கள் சுழல்பந்துவீச்சாளர்களால் கைப்பற்றப்பட்டது. 2 விக்கெட்களை வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியதுடன் விராத் கோஹ்லி அநாவசியமாக ரன் அவுட் ஆனார். முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. வில் யங் 71 ஓட்டங்களையும் டெறில் மிச்செல் 82 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட அணித் தலைவர் டொம் லெதம் அதிகபட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிந்த்ர ஜடேஜா இன்னிங்ஸில் ஒன்றில் 14 தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஷுப்மான் கில் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். யஷஸ்வி ஜய்ஸ்வால் 30 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/197683
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நுகேகொடை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197698
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
தமிழரசுக் கட்சி தே.ம. சக்தியுடன் கைகோர்க்கும் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க இணக்கம் - உதய கம்மன்பில (இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணையும். தமிழ் தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிக்குமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைவது அவர்களின் அரசியல் உரிமை. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை ஆராய வேண்டும். ஒற்றையாட்சி முறைமையிலான அரசியலமைப்பை நீக்கி, சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30 .1 தீர்மானத்தை மீளமுல்படுத்த வேண்டும் என்ற இரண்டு பிரதான நிபந்தனைகளை இலங்கை தமிழரசுக் கட்சி விதித்துள்ளது. இவ்விரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குவதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த பிரேரணையில் இருந்து விலகியது. 30.1 தீர்மானத்தை மீண்டும் அமுல்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சி நிபந்தனை விதித்துள்ள நிலையில் இராணுவத்தினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக சாட்சியம் திரட்டுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டுக்கு எதிரான இச்செயற்பாடுகளுக்கு எவ்வாறு இடமளிப்பது என்றார். https://www.virakesari.lk/article/197692
-
சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக கவனம்
இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண விநியோகத் திட்டம் மற்றும் உர மானியத் திட்டம் என்பவற்றை டிஜிட்டல் மயமாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. டயலொக் ஆசியாடா தனியார் நிறுவனத்தின் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, மிலேனியம் IT நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் விஜேநாயக்க உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/197689
-
யாழில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் செவிப்புலனற்றவர் ஆவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/197695
-
மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜனநாயக ஆடை இன்னும் பொருந்தவில்லை - ரணில்
(எம்.ஆர்.எம்.வசீம்) அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக ஆடையை அணிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக ஆடை அணிந்தாலும் அந்த ஆடை இன்னும் அவர்களின் உடலுக்கு பொருத்தம் இல்லாமல் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அதேநேரம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை தயாரித்த உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை பொய் என பிரதமர் ஹரிணி உறுதிப்படுத்த தவறினால் சம்பிரதாய பிரகாரம் பிரதமர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ரணில் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்து நாட்டின் சவால்களை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் அந்த சவால்களை வெற்றிகொள்ள உதவியாக இருந்தவர்களே இன்று காஸ் சிலிண்டரில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாட்டில் இந்த பிரச்சினை ஏற்பட்டிருப்பது அரசாங்கத்தினால் அல்ல, ஊடகங்களால் ஆகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். பழைய அடிமைத்துவத்தை கைவிட முடியாத சில ஊடகங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக ஆடையை அணிந்துகொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார். இந்த கதையை சொல்வது யார்? அழுக்கான ஆடையை கைவிட்டு ஜனநாயகத்துக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி ஆகும். ஆரம்பமாக பணம் அச்சிட்டதாக தெரிவித்து, பின்னர் பணம் அச்சிடவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார். பணம் அச்சிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும்போது பணம் அச்சிடவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். திரவத்தன்மையை பாதுகாத்துக்கொள்வதற்காக பணம் அச்சிட்டதாக மத்திய வங்கி தெரிவிக்கிறது. வங்கி திரவத்தன்மை தொடர்பில் அவர்களுக்கு தெரியாது என்பதற்கு ஊடகங்களுக்கு எவ்வாறு குற்றம் தெரிவிக்க முடியும். பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கூட இந்த திரவத்தன்மை தொடர்பில் பேசியிருந்தார். அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் 3 பேருக்கும் அது தெரியாது. இவர்கள் அனுபவமில்லாதவர்கள். அதனால்தான் அனுபவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கிறேன். இவர்கள் ஜனநாயக ஆடை அணிந்தாலும் இன்னும் அது அவர்களுக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. அதேபோன்று பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதாக அச்சுறுத்துகின்றனர். அவர்களால் எப்படி பாராளுமன்றத்தை துப்புரவுபடுத்த முடியும்? பாராளுமன்றம் ஊழல் நிறைந்தது என நீங்கள் தெரிவித்ததற்கு நாட்டு மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். யாருக்காவது ஊழல் குற்றச்சாட்டு இருக்குமானால் மக்கள் அவர்களை தேர்தலில் நிராகரிப்பார்கள். அத்துடன் மின்சார கட்டணம், எரிபொருள் கட்டணத்தை குறைத்ததாக தெரிவிக்கிறார்கள். நாங்கள் அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த வருடம் இறுதி வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணம் குறையவேண்டும். ஆனால், அவர்கள் தெரிவித்த பிரகாரம் தற்போது இந்த விலைகள் குறைந்திருக்கிறதா? அதேபோன்று நாட்டின் அரச நிர்வாகத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருப்பவர் பிரதமராகும். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை ஒன்று இல்லை என அவர் தெரிவிக்கிறார். பல அதிகாரிகள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். அவர்களின் கையெழுத்தை திருட்டுத்தனமாக வைத்ததா என அந்த அதிகாரிகளிடம் பிரதமர் கேட்கவேண்டும். பிரதமர் அல்லது அமைச்சர் பொய் சொன்னால் பதவியை இராஜினாமா செய்யும் சம்பிரதாயம் இருக்கிறது. அவ்வாறு என்றால் பிரதமர் உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டு, அவர் தெரிவித்தது பொய் என்றால் பதவி விலகவேண்டும். இவர்கள் என்னதான் சத்தம் போட்டாலும் அரசியல் அமைப்பு தொடர்பில் இவர்களுக்கு தெரியாது. அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கும்போது அது போதாது 20ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என ஆரம்பத்தில் தெரிவித்தது திசைகாட்டியாகும். அதன் பிரகாரம் உதய செனவிரத்ன குழுவை நியமித்து இரண்டு சந்தர்ப்பங்களில் 20ஆயிரம் அடிப்படையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதற்காக நாங்கள் நிதி ஒதிக்கி இருக்கிறோம். ஆனால் அந்த பணத்தை வழங்குவதற்கு அவர்கள் இன்னும் இணங்கவில்லை. அரச ஊழிர்களுக்கு இந்த அதிகரிக்கப்பட்ட பணத்தை வழங்க முடியுமா முடியாதா என அரசாங்கம் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அதனால் அரசாங்கம் இந்த அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கும் வரை இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197652
-
தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்கவேண்டும் - பியெர் பொலிவ்ர்
ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் அவசியம் - கனேடிய கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலியுறுத்தல் நா.தனுஜா தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராகத் தாம் குரலெழுப்பவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர், ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் ஊடாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே பியெர் பொலிவ்ர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். 'தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்கவேண்டும். நாம் ராஜபக்ஷாக்களை சர்வதேச அரங்கில் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு கொன்சவேட்டிவ் கட்சியின் ப்ரியன் மல்ரொனியே முதன்முறையாக தமிழர்களுக்கு கனடாவுக்குள் இடமளித்ததாகவும், தமது கட்சியைச் சேர்ந்த ஜோன் பெய்ர்ட் மற்றும் ஸ்டீவன் ஹார்பர் ஆகியோர் கடந்தகால அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள பியெர் பொலிவ்ர், எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் கொன்சவேட்டிவ் கட்சி நீண்டகாலமாக நேர்மறையான விதத்தில் செயற்பட்டுவந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி தமிழினப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/197645
-
மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறை மேம்பாடு டிஜிட்டல் மயமாக்கல்; இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி
இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது விரிவான மீளாய்வு செய்யப்பட்டதுடன், அந்தத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இருநாட்டு மீனவ சமூகங்களின் தேவைகளைப் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம் நீண்டகால தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடமாகாண கடல் பிரதேசத்தில் நிலவும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கை மீனவ சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதில் தான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார். இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவும் கலந்துக் கொண்டார். https://www.virakesari.lk/article/197691
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
அநுரகுமார திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கமும் பாகம் 4 டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்வை பற்றிய எனது கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம் இதுவாகும். முதலாவது பாகத்தில் நிகழ்வுகள் நிறைந்த அவரது ஆரம்ப வாழ்க்கையையும் இரண்டாவது பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே வி.பி.) வுக்குள் அவரின் படிப்படியான சீரான வளர்ச்சி பற்றியும் மூன்றாவது பாகத்தில் ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்துக்கு அவரின் உயர்வு பற்றியும் எழுதியிருந்தேன். இந்த நான்காவது பாகத்தில் திசாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி. எவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலையைத்துவ கட்சியாக மாற்றம் பெற்றது என்பதை விளக்குகிறேன். அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வில் 2014 பெப்ரவரி 2 ஆம் திகதி ஒரு முக்கியமான தினமாகும். அந்த தினத்தில் தான் ஜே.வி.பி.யின் 17 வது தேசிய மகாநாடு நடைபெற்றது. கட்சியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றமே அந்த மகாநாட்டின் சிறப்பாக அமைந்தது. 24 வருடங்களாக ஜே.வி.பி.யின் தலைவராக இருந்து வந்த சோமவன்ச அமரசிங்க பதவியில் இருந்து இறங்கினார். அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபலமாக அறியப்பட்ட அநுரா குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் புதிய தலைவராக வந்தார். சோமவன்ச தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறப் போகின்றார் என்பது மகாநாட்டுக்கு முன்னதாகவே பொதுவாக தெரிய வந்தது. எதிர்காலத் தலைவர் யார் என்பதே தெரியாமல் இருந்தது. புதிய தலைவராக வரக்கூடியவர்கள் என்று கே.டி.லால்காந்த, ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்னெத்தி, பிமால் இரத்நாயக்க மற்றும் அநுரா குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரவலாக அடிபட்டன. இவர்களில் ரில்வின் சில்வாவே பெரும்பாலும் புதிய தலைவராக தெரிவாவார் என்று நம்பப்பட்டது. ஜே.வி.பி.யின் தலைவர் என்ற வகையில் தனது ஓய்வை அறிவித்த சோமவன்ச அமரசிங்க புதிய தலைவராக அநுரா குமார திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார். ரில்வின் சில்வாவே அவரை வழிமொழிந்தார். பிரேரணை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. ரில்வின் சில்வாவும் விஜித ஹேரத்தும் முறையே பொதுச் செயலாளராகவும் பிரசாரச் செயலாளராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய அயைப்பாளராக பிமால் இரத்நாயக்க தெரிவான அதேவேளை ஓய்வை அறிவித்த தலைவர் சோமவன்ச அமரசிங்க சர்வதேச விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைமைத்துவ மாற்றம் முரண்பாடு எதுவும் இல்லாததாக சுமுகமாக இடம்பெற்றதே முக்கியமாக குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது. இலங்கையில் பெரும்பாலான கட்சிகளில் நிலவும் உட்பூசலையும் குழுவாதத்தையும் அங்கு காணமுடியவில்லை. பல வருடங்களாக ஜே.வி.பி.யின் பெரும்பாலான உறுப்பினர்களின் நேசத்துக்குரியவராக அநுரா விளங்கி வந்ததால் எல்லோருக்கும் ஏற்புடையவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் விமல் வீரவன்ச குழுவினரதும் 2012 ஆம் ஆண்டில் குமார் குணரத்தினம் குழுவினரதும் பிளவுகளை அடுத்து கட்சி ஓரளவுக்கு பலவீனப்பட்டு உறுப்பினர்கள் மத்தியில் உறுதி குன்றிப் போயிருந்தது. புதிய ஒரு தலைவரின் கீழ் புதிய ஒரு செல்நெறி ஜே.வி.பி.க்கு அவசியமாக தேவைப்பட்டது. அநுரா குமார திசாநாயக்க அதற்கு மிகவும் பொருத்தமானவராக தெரிந்தார். இரு முக்கியமான தேர்தல்கள் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அநுரா குமார திசாநாயக்க 2015 ஆம் ஆண்டில் இரு முக்கியமான தேர்தல்களுக்கு முகங்கொடுத்தார். ஒன்று 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல். மற்றையது 2015 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தல். அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் முட்டை அப்ப இரவு விருந்தில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து வெளியேறிய அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திராபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடாடார். 2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். அவர் தோல்லியடைந்தார். மற்றைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஜே.வி.பி. பொன்சேகாவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தது. 2010 பாராளுமன்ற தேர்தலில் ஜே வி.பி. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் அங்கமாக போட்டியிட்டது. அந்த கூட்டணிக்கு கிடைத்த ஏழு ஆசனங்களில் நான்கு ஆசனங்களை ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது. அநுரா தேசிய பட்டியல் மூலமாகவே பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2015 ஆண்டில் ஜே.வி.பி.யின் புதிய தலைவர் அநுரா ஜனாதிபதி தேர்தலில் வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 2010 ஆண்டில் செய்தததைப் போன்று கூட்டு எதிரணியின் தேர்தல் பிரசாரங்களில் ஜே வி.பி. இணைந்து கொள்ளவில்லை. அதேவேளை, மூன்றாவது பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக வருவதற்கான மகிந்த ராஜபக்சவின் முயற்சியை ஜே வி.பி. மிகவும் உறுதியாக எதிர்த்தது. எதிக்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனவை நேரடியாக ஆதரிக்காத அதேவேளை ராஜபக்சவுக்கு எதிராக தீவிரமான ஒரு பிரசாரத்தை தனியாக முன்னெடுத்ததன் மூலமாக ஜே.வி.பி. முறைமுகமான ஆதரவை வழங்கியது. ஜே.வி.பி. நடத்திய கூட்டங்களில் பேச்சாளர்கள் ராஜபக்சவை மிகவும் கடுமையாக தாக்கினார்கள். சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு மக்களை ஜே.வி.பி. கேட்கவில்லை.ஆனால் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டது. அந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றார். 2015 ஆகஸ்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது ஜே.வி.பி. 2010 ஆண்டில் கடைப்பிடித்த நிலைப்பாட்டில் இருந்து மீண்டும் விலகியது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றில் இணைந்து கொள்வதற்கு பதிலாக தனியாகப் போட்டியிட்டது. 2000 ஆண்டிலும் 2001 ஆம் ஆண்டிலும் பாராளுமன்ற தேர்தல்களில் தனியாகப் போட்டியிட்ட கடந்த காலத்துக்கு ஜே.வி.பி. திரும்பியது. 2004 ஆம் ஆண்டிலும் 2010 ஆண்டிலும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களிலேயே கூட்டணி ஒன்றின் அங்கமாக ஜே வி.பி. போட்டியிட்டது. 2015 பாராளுமன்ற தேர்தலே அநுராவின் தலைமையின் கீழ் ஜே.வி.பி. முகங்கொடுத்த முதல் பாராளுமன்ற தேர்தலாகும். சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட ஜே.வி.பி.543, 944 வாக்குகளை ( 4.8 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றது. அதற்கு கிடைத்த ஆறு ஆசனங்களில் நான்கு ஆசனங்கள் மக்கள் தெரிவுசெய்தவை, மற்றைய இரண்டும் தேசியப்பட்டியல் ஆசனங்கள். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுரா 65,966 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். ஐக்கிய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜே.வி.பி.யும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருந்தது. நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் இருந்த ஏற்பாடு ஒன்று காரணமாக மைத்திரிபால சிறிசேன அந்த கட்சியின் தலைவராக வரக்கூடியதாக இருந்தது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வந்து விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட " ஐக்கிய அரசாங்கம் " (Unity Government ) ஒன்று அமைக்கப்பட்டது. சுதந்திர கட்சி பெயரளவில் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவுக்கு விசுவாசமான ஐம்பதுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு எதிர்க்கட்சியாகவே இயங்கினார்கள். ஆனால் அவர்களை அன்றைய சபாநாயகர் கரு ஜெயசூரிய உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கவில்லை. அதனால் ஒரு விசித்திரமான திருப்பமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பி.யுமே பிரதான எதிர்க்கட்சிகளாக கருதப்பட்டன. கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக வந்தார். ஜே.வி.பி.யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டார். இந்த வழமைக்கு மாறான நிலைவரம் ரணிலை பதவி நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி சிறிசேன நியமித்த 2018 அக்டோபர் 26 பாராளுமன்ற சதிமுயற்சிக்கு பிறகு மாறியது. ஆனால் இந்த நாடகபாணியிலான அரசியல் நிகழ்வு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் திசாநாயக்கவின் எதிர்க்கட்சி பிரதம கொறடா பதவியும் இல்லாமல் போனது. சிறிசேன விக்கிரமசிக்க நிருவாகத்தின் காலத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. ஒன்று, புதிய அரசியலமைப்பை வரைவதற்காக அரசியலமைப்பு சபை ஒன்று ( Constitutional Assembly ) அமைக்கப்பட்டது. அதன் நடவடிக்கைகளில் ஜே.வி.பி. பங்கேற்று இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரிப்பதில் முழுமையாக ஒத்துழைத்தது. இந்த செயற்பாடுகளின்போது அநுரா தலைமையின் கீழ் ஜே.வி.பி. அதிகாரப்பரவலாக்கம் மற்றும் மாகாணசபைகள் தொடர்பிலான அதன் முன்னைய நிலைப்பாட்டை தளர்த்திக்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது ஜே.வி.பி. அதன் ஆட்சியில் அந்த முன்னைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுப்பதாக கூறியிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தோற்றமும் 2018 உள்ளூராட்சி தேர்தல்களில் அதன் மகத்தான வெற்றியுமே இரண்டாவது முக்கிய நிகழ்வாகும். மகிந்தவும் அவரது விசுவாசிகளும் சுதந்திர கட்சியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் சூழ்நிலையில் பசில் ராஜபக்ச தாமரை மொட்டு சின்னத்துடன் புதிய கட்சியை ( 2016 டிசம்பர் ) அமைத்தார். 2018 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன 4,941, 952 (44.65 சதவீதம் ) வாக்குகளை பெற்றது. 231 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய பொதுஜன பெரமுனவில் இருந்து 3369 உறுப்பினர்கள் தெரிவாகினர். ஐக்கிய தேசிய கட்சியையும் சுதந்திர கட்சியையும் புதிய கட்சி தோற்கடித்ததை அடுத்து நாட்டின் அரசியல் அதிகாரச் சமநிலை மாறிவிட்டது என்பது வெளிப்படையானது. ஜே.வி.பி.யை பொறுத்தவரை, அந்த உள்ளூராட்சி தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு செயற்பாட்டை வெளிக்காட்ட முடியவில்லை. 693, 875 (6.27 சதவீதம் ) வாக்குகளை பெற்ற ஜே.வி.பி. யின் 431 உறுப்பினர்கள் பல்வேறு உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவானார்கள். ஒரு உள்ளூராட்சி சபையை தானும் அதனால் கைப்பற்ற முடியவில்லை. ஜே.வி.பி.க்குள் சுயபரிசோதனை 2015 பாராளுமன்ற தேர்தலிலும் 2018 உள்ளூராட்சி தேர்தல்களிலும் ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் பலவீனமானதாக இருந்ததால் கட்சிக்குள் ஒரு சுயபரிசோதனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஜே.வி.பி.யின் கூட்டங்களிலும் பேரணிகளிலும் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள். மக்கள் கூட்டம் மிகுந்த ஆதரவானதாகவும் காணப்பட்டது. என்றாலும் வாக்களிப்பு நேரத்தில் ஜே.வி.பி. மூன்றாவது இடத்துக்கே வந்தது. இறுதியில் அது ஒரு விளிம்புநிலைக் கட்சியாகி இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தி என்று ஊடகங்களினால் வர்ணிக்கப்படுவதனால் ஆறுதலடையவேண்டியதைப் போன்று இருந்தது. 2015 , 2018 தேர்தல்களில் பலவீனமான செயன்பாட்டையடுத்து ஜே.வி.பி.யும் அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் பெருமளவில் சுயபரிசோதனையில் ஈடுபட்டனர். ஜே.வி.பி. தலைவர்கள் குறிப்பாக திசாநாயக்க ஏனைய கட்சிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்தில் உள்ள ஆதரவாளர்களுடன் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்தனர். முதலில் 1971 ஆம் ஆண்டிலும் பிறகு 1988 - 90 காலப்பகுதியிலும் முன்னெடுத்த ஆயுதக்கிளர்ச்சியின் பயங்கரமான அனுபவங்களுக்கு பிறகு புரட்சிகர வன்முறையில் நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது அந்த பாதையைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டதாகவோ ஜே.வி.பி. இப்போது இல்லை. அது துப்பாக்கி குண்டை கைவிட்டு வாக்குச்சீட்டைக் கையில் எடுத்தது. சட்டபூர்வமான ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக அரசியல் அதிகாரத்தைப் பெறுவதையே ஜே.வி.பி. விரும்பியது. வாக்குகள் மூலமான வெற்றியிலேயே அது நாட்டம் காட்டியது. ஆனால், இலங்கை மக்கள் அந்த கட்சிக்கு பெருமளவில் திரண்டு வாக்களிக்கப் போவதில்லை. இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் அடுத்ததாக எப்போதுமே ஒரு மூன்றாவது இடத்தில் இருந்து கொண்டு மூன்றாவது அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்தப்படுவதே ஜே.வி.பி.யின் விதியாகிப் போனதா? இந்த நிலைவரத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும்? முற்போக்கு கட்சியொன்றின் தலைமையிலான கட்டணியில் ஜே.வி.பி. ஒரு அங்கமாக வேண்டும் என்று பலரும் யோசனை கூறினர். இடதுசாரிப் போக்குடைய கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி ஒன்றை ஜே.வி.பி. அமைக்க வேண்டும் என்று வேறு சிலர் யோசனை கூறினார். ஆனால், அந்த யோசனைகளை ஜே.வி.பி.யில் உள்ள பலர் விரும்பவில்லை. அவர்களில் அநுரா குமார திசாநாயக்க முக்கியமானவர். ஜே.வி.பி. மற்றைய கட்சிகளுடன் கூட்டணியையோ அல்லது ஐக்கிய முன்னணியையோ அவர் விரும்பவில்லை. ஜே.வி.பி. பிரதான பாத்திரத்தை வகிக்கவேண்டுமே தவிர் கீழ்நிலைப்பட்ட பாத்திரத்தை வகிப்பதை திசாநாயக்க விரும்பவில்லை. வெளிச்சக்திகளுடனான நீண்ட கலந்தாலோசனைகள் மற்றும் உட்கட்சி பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பரந்தளவிலான ஒரு கூட்டணியை அல்லது முன்னணியை அமைப்பது என்று ஜே.வி.பி. தீர்மானித்தது. அத்தகைய கூட்டணியிலோ, முன் ணியிலோ ஜே.வி.பி. தனிமேம்பாடுடையதாகவும் மைய அதிகாரத்தைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு. புதிய கட்டமைப்பில் சமத்துவமான பங்காளிகள் மத்தியில் முதலாவதாக தாங்கள் இருக்கவேண்டும் என்பதே அவர்களின் வெளிப்படையான விரும்பம். ஜே.வி.பி. அதன் அரசியல் கோட்பாட்டுக்கு விசுவாசமானதாக இருக்கும் அதேவேளை மையக் கொள்கையிலும் உறுதியானதாக இருக்கும். புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதே அதன் அர்த்தம். ஜாதிக ஜன பலவேகய அவ்வாறாக ஜாதிக ஜன பலவேகய ( தேசிய மக்கள் சக்தி ) பிறந்தது. 2019 ஜூலை 19 ஆம் திகதி அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்விமான்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் கூடினார்கள். அநுரா குமார திசாநாயக்க பிரேரணையை முன்மொழிந்தார். அதை ரில்வின் சில்வா வழிமொழிந்ததை தொடர்ந்து தேசிய மக்கள் முறைப்படி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அநுரா குமார திசாநாயக்கவே தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் தெரிவானார். அதன் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க. கலாநாதி ஹரிணி அமரசூரியவும் லால் விஜேநாயக்கவும் பிரதிச் செயலாளர்கள். பொருளாளர் எறங்க குணசேகர. "அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வகைப்பட்ட 21 குழுக்களை உள்ளடக்கிய செயலூக்கமிக்க ஒரு அரசியல் இயக்கமே தேசிய மக்கள் சக்தியாகும். 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி முற்போக்கான ஒரு இலங்கையை உருவாக்கும் பொதுவான நோக்கு ஒன்றைக் கொண்டது. "ஊழலற்ற, சேவை நோக்கம்கொண்ட, பொறுப்புக்கூறும் கடப்பாடுடைய ஒளிவுமறைவற்ற அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதையும் நேர்மையான செல்வவளப் பகிர்வுக்கான பொருளாதார ஜனநாயகத்தை மேம்படுத்துவதையும் சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு ஜனநாயக இலங்கை அடையாளத்துக்காக குரல் கொடுப்பதையும் தழுவியதே எமது மையக் குறிக்கோள்கள். "எமது வழிகாட்டில் குழு தொடக்கம் மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள் வரை எமது அமைப்புமுறைக் கட்டமைப்பு சகல மட்டங்களிலும் மக்கள் குரல்களை வலுவூட்டி தேசத்தில் நேர்மறையான மாற்றத்துக்கான ஒரு சக்தியாக தேசிய மக்கள் சக்தியை கட்டிவளர்க்கும்" என்று தேசிய மக்கள் சக்தியைப் பற்றி அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் விபரிக்கப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தீர்மானங்களை எடுக்கும் பிரதம அமைப்பு தேசிய நிறைவேற்றுக்குழுவேயாகும். ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட அந்த தேசிய நிறைவேற்றுக்குழுவின் தலைவரும் அநுரா குமார திசாநாயக்கவே. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் ஞானஸ்நானம் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் ஞானஸ்நானத்தை 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொண்டது. முதல் தடவையாக அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தேசிய மக்கள் சக்தியின் சின்னம் திசைகாட்டி கருவி. அதன் வேட்பாளருக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐக்கிய இடதுசாரி முனானணியும் ஆதரித்தன. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அசல் ஜே.வி.பி. கூட்டங்களைப் போன்றே இருந்தன. அநுராவை பார்க்கவும் அவரின் பேச்சைக் கேட்கவும் மக்கள் பெருமளவில் கூடினார்கள். என்றாலும் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையே தந்தன. வெறுமனே 418, 563 வாக்குகளை ( 3.15 சதவீதம் ) பெற்று அநுரா மூன்றாவதாக வந்தார். பத்து மாதங்கள் கழித்து 2020 பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேசிய மக்கள் சக்தி சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டது. அந்த தேர்தல் முடிவுகளும் அதற்கு பெரும் பாதிப்பாகப் போய்விட்டது. திசைகாட்டியினால் 445, 958 வாக்குகளை ( 3.84 சதவீதம்) வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இது 2015 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. பெற்ற 543, 944 வாக்குகளையும் ( 4.84 சதவீதம் ) விட குறைவானதாகும். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அரைவாசியானது. 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.க்கு ஆறு ஆசனங்கள் கிடைத்தன. அதில் நான்கு ஆசனங்கள் மக்களால் தெரிலானவை. மற்றைய இரண்டும் தேசியப்பட்டியல் ஆசனங்கள். 2020 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. இரு ஆசனங்கள் மக்களால் தெரிவானவை. மற்றையது தேசியப்பட்டியல் ஆசனம். கொழும்பு மாவட்டத்தில் அநுரா குமார திசாநாயக்கவுக்கு 49,814 விருப்பு வாக்குகள் கிடைத்தன. (2015 ஆம் ஆண்டில் அவருக்கு 65, 066 விருப்பு வாக்குகள் கிடைத்தன.) கம்பஹாவில் வெற்றிபெற்ற விஜித ஹேரத்துக்கு 37, 008 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். மூன்றாவது அரசியல் சக்தி அந்தஸ்து 2019 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் 2020 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் தேசிய மக்கள் சக்தியாக தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலமான சிறப்பான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பயன்களை தரவில்லை என்பதை வெளிக்காட்டின. எத்தகைய தேர்தல் தந்திரோபயத்தை கடைப்பிடித்தாலும், ஜே.வி.பி.யினால் அதன் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை என்று தோன்றியது. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக போட்டியிட்டால் என்ன, போட்டியிடாவிட்டால் என்ன அதனால் மூன்றாவது அரசியல் சக்தி என்ற அந்தஸ்தை ஒருபோதும் கடந்து செல்லமுடியாது என்று தோன்றியது. அநுரா குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்துக்கு அது உண்மையில் ஒரு சோதனைக்காலம். பாதகமான நெருக்குதல்களின் கீழ் வேறு ஆள் என்றால் தளர்ந்துபோயிருப்பார். ஆனால், நுவரவேவ வாவியின் முழுத் தூரத்தையும் நீந்திக்கடந்து திரும்பி வரக்கூடிய ஆற்றல் கொண்ட ரஜரட்டை பொடியன் மிகுந்த நெஞ்சுரம் கொண்டவன். நீரோட்டத்துக்கு எதிராக நீந்துவதற்கு அநுரா தயாரானார். அவர் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அணுகுமுறையை மாற்றியமைத்ததுடன் தனது அரசியல் படிமத்தையும் மீள மெருகேற்றினார். வரலாறு படைப்பு இந்த மாற்றங்கள் மக்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. இது இலங்கையின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இடதுசாரி அரசியல்வாதி என்று அநுரா குமார திசாநாயக்க வரலாறு படைப்பதற்கு வழிவகுத்தது. இந்த வெற்றிக் கதையை ஐந்தாவதும் இறுதியானதுமான பாகத்தில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/197579
-
அரசாங்கத்தின் பயணத்தை பார்க்கும்போது மீண்டும் ரணில் பிரதமராகும் சாத்தியம் - ராஜித சேனாரத்ன
(எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் கடன்களை மீள செலுத்துவது பெரிய விடயமல்ல என தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தற்போது 98ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார். அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டிவரும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கலாம். அதிகாரத்துக்கு வந்தால் செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் தேர்தல் மேடைகளில் வாய்சவடால் அரசாங்கம் செய்ய முடியாது. அது மிகவும் கஷ்டமானதாகும். மக்கள் விடுதலை முன்னணி இவ்வளவு காலமும் அரசாங்கத்தை விமர்சித்து வந்து. தற்போது மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் செய்வதை மக்களுக்கு தற்போது கண்டுகொள்ளலாம். அரசாங்கத்தின் வெளிநாட்டு கடனான 42 பில்லியன் டொலரை செலுத்துவது பாரிய விடயமா என அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தற்போது 98ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அது மாத்திரமல்லாது பணம் அச்சிட்டுள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க பணம் அச்சிடாமலே மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். அதேபோன்று ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு இந்தளவு வாகனம் எதற்கு என அவர் கேட்டிருந்தார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார வரும்போது அவருக்கு பாதுகாப்புக்காக 6 வாகனங்கள் வருகின்றன. தேர்தல் பிரசார கூட்டத்துக்குள் வரும்போது 5 வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வானத்திலே வருகிறார். மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறு செயற்படுகிறார்கள். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்து ஒரு தாதம் கடந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டை முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை. அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தற்போது கடவுச்சீட்டு இல்லாமையால் திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் இயலாமையை மக்கள் தற்போது கண்கிறார்கள். அதனால் அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டி வரும் என்றார். https://www.virakesari.lk/article/197682
-
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கைக்கு ராசியான மைதானம் என நம்பப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்த பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்ட பின்னர் அவுஸ்திரேலிய அணியினர் ஜனவரி 20ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். https://www.virakesari.lk/article/197669
-
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் தெளிவுபடுத்தல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் பலன்களை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013 ஆகிய 03 வாகனங்கள் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்காக மூன்று சாரதிகள் வழங்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக 180 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 29 பொலிஸ் சாரதிகளும் கடமையில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மதிப்பிடுவதற்கு தற்போது அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இது தொடர்பில் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/197684
-
ஜனாதிபதியின் திட்டத்தை முறியடிக்க 10 பிரதிநிதிகளை பெற மக்கள் ஆணை வழங்க வேண்டும் - பொன்னம்பலம் கஜேந்திரகுமார்
ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதான அறிவிப்பு சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். எனவே, இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை எமது கட்சி 10 பேரை நாடாளுமன்றம் அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அரசடி தெய்வநாயகம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (31) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், இந்த தேர்தல் விசேடமாக தமிழ் மக்களுடைய தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு தேர்தலாக சமகால அரசியல் ஆக்கிவிட்டது என்ற கருத்து மேலோங்கியுள்ளது. ஆனால், ஒரு தேர்தல் எம்முடைய தலைவிதியை முற்றுமுழுதாக மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெறுவது என்பது மிகவும் குறைவு. அப்படிப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இன்று ஜனாதிபதியாக இருக்கும் ஜே.வி.பி கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை நிறுவுவதன் ஊடாகவும் 2015 மைத்திரி - ரணில் நல்லாட்சி காலத்திலே புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முன்னெடுக்கப்பட்டு 2017 செட்டெம்பர் 19 ஒரு இடைக்கால அறிகையை வெளியிட்டது. அந்த அறிக்கையை தேர்தலுக்கு பின்னர் அதனை நிறைவேற்றி தீர்வு வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். எனவே, அந்த இடைக்கால அறிக்கையில் இருப்பது என்ன? அந்த அறிக்கையின் விடயங்களை சரியாக பார்க்க வேண்டும். அந்த அறிகை தயாரித்தபோது வட கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று அந்த அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏக மனதாக ஆதரவு வழங்கினர். அந்த நம்பிக்கையில் தான் அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச மட்டத்துக்கு ஒரு செய்தியை அனுப்பக்கூடிய வகையிலே அந்த இடைக்கால அறிக்கையை தான் நிறைவேற்றப் போவதாக துணிந்து அறிவித்துள்ளார். அந்த இடைக்கால அறிக்கையில் இன்றைக்கு இருக்கும் ஒற்றையாட்சியை விட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி முறைமையை கொண்ட பண்பாக அமைந்துள்ளதுடன் அதன் முன்னுரையில் மைத்திரியின் பேச்சின் சாரம்சமே முன்னுரையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றையாட்சி முறைமையை உலகத்துக்கு முதலில் அறிமுகப்படுத்தியது பிரித்தானியா. அங்கும் இன்று வரையும் ஒற்றையாட்சி நடைமுறையில் இருக்கிறது. அங்கு இருக்கின்ற ஒற்றையாட்சி அங்கு இருக்கக்கூடிய நான்கு இனங்களுக்கு தேச அங்கீகாரத்தை வழங்குகிறது. அது மட்டுமல்ல, அதையும் தாண்டி ஸ்கொட்லாந்து பிரிந்து போவதற்கு கூட அனுமதி வழங்கியுள்ளனர். ஆகவே, மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்குரிய ஒற்றையாட்சி அப்படிப்பட்ட பண்புகளை கொண்டதாக இருக்க முடியாது; எனவே இலங்கைக்கு என ஒரு ஒற்றையாட்சி முறைமையை தேடிப்பிடிக்க வேண்டும் என்றார். ஒரு முற்போக்குவாத சிந்தனையில் உலகத்திலே ஏனைய நாடுகளில் இருக்கக்கூடிய ஒற்றையாட்சி முறைமைகளை மாற்றி அமைத்து பல இனங்கள், தேசங்கள் கொண்ட நாடுகளில் அங்கு இருக்கக்கூடிய தேசங்களுக்கு ஒரு அங்கத்துவத்தை சமத்துவத்தை வழங்கி ஒற்றையாட்சியை அமர்த்தி வாசித்து அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை கொண்டாடி அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் போக்கு இலங்கைக்கு பொருந்தாது என இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஒற்றையாட்சியா? சமஸ்டி ஆட்சியா என தீர்மானிப்பது ஒரு நாட்டின் இறைமையே. அந்த இறைமை எந்த வகையில் அமைந்துள்ளது என்பதை வைத்துதான் ஒற்றையாட்சியா, சமஸ்டி ஆட்சியா என நீதிமன்றங்கள் தீர்மானிக்கும். இலங்கைக்கு 13ஆவது திருத்தமாக கொண்டுவரப்பட்ட மாகாண சபையை நிறைவேற்ற ஆராய்ந்தபோது இலங்கையில் இருப்பது ஒற்றையாட்சி. எனவே இந்த மாகாண சபை முறைமை கூட இந்த ஒற்றையாட்சிக்குள் இருப்பதாகவும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கையில் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. மாறாக ஜனாதிபதி நியமிக்கும் ஆளுநரின் கையில்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். அதனால் இலங்கையின் மாகாண சபை முறைமை ஒரு ஒற்றையாட்சி முறைமையை மீறவில்லை என பிரகடனப்படுத்தியுள்ளனர். அந்த தீர்ப்பு 1987 வழங்கியதன் பின்னர் அதை ஆமோதிப்பதற்கு 32 வருடத்துக்கு மேலாக உச்ச நீதிமன்றம் வழங்கி இன்று இருக்கின்ற ஓற்றையாட்சியை மிக வலிமையாக உறுதிப்படுத்த கூட அது போதாது என்று இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றுவதற்கு அன்றை அரசாங்கம் முயற்சித்தது. எனவே எங்களுக்கு இருக்கும் சவால்... இந்த ஆட்சியில் இருக்கும் அனுர தலைமையிலான ஜே.வி.பி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தாங்கள் ஆட்சியை பிடிப்பதாக அவர்கள் 30 வருடங்களாக அரசியல் செய்துகொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டனர். அதில் 3 தொடக்கம் 5 வீதமான வாக்கை பெற்ற இவர்கள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வேலை செய்து கட்டமைப்பு ரீதியாக தெற்கிலே ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு, 4 பேருக்கு மேல் பிரதிநிதியை எடுக்கமுடியாத சூழலை வைத்துக்கொண்டு அதிசயமாக ஜனாதிபதி தேர்தலில் 43 வீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த 43 வீதம் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டே இவர்களுடைய செயற்பாட்டையும் திட்டங்களையும் முற்று முழுதாக உள்வாங்கிக்கொண்டு வாக்களிக்கவில்லை என அவர்களுக்கு நன்றாக தெரியும். மற்றவர்கள் இந்த நாட்டை கொள்ளையடித்து மாறி மாறி இந்த நாட்டை வங்குரோத்து நிலமைக்கு கொண்டு போயுள்ள கோபத்திலே மற்ற தரப்புக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்திருந்த சூழ்நிலையில் தான் அவர்களுக்கு வாக்களிக்காமல் இன்னொரு தரப்பான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கலாம் என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி தேர்தலில் இந்த 43 வீத வாக்கு பெற்றனர். ஒரு அதிசயமாக கிடைத்த அந்த 43 வீத வாக்கை, தங்களது இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வாக்குகள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? மற்றவர்களை போல தெற்கில் இருக்கும் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதுடன் தேர்தலுக்கு முன்பாக வைக்கும் கருத்தை தேர்தலுக்கு பின்னால் அதனை உறுதிப்படுத்துவதன் மூலமும், தான், வாக்களித்த மக்களை கவர்ந்து, நம்பிக்கையை தங்கள் மீது ஏற்படுத்தி, அவர்களை நிரந்தரமாக தங்களுடைய ஒரு வாக்கு வங்கியாக மாற்றி அமைக்கலாம். அந்த சூழலிலேதான் ஜனாதிபதி அனுர மிகவும் மோசமான பிற்போக்குவாதமாக உருவாக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு நன்றாக தெரியும் வட கிழக்கில் தமக்கு செல்வாக்கு கிடையாது என. ஆனால் அந்த இடைக்கால அறிக்கை கொண்டுவரும் பொழுது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அதை ஆதரிப்பார்கள் என. அது தான் அவர்களுக்கு முக்கியமான தேவை. 2015 வடகிழக்கில் தெரிவு செய்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர் என்றால் எதிர்வரும் தேர்தலிலே வரும் பிரதிநிதிகள் குறைந்தது 10 பேராவது ஆதரிப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் துணிந்து தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த இடைக்கால அறிக்கையின் நிறைவின் ஊடாக அமையும் என தெரிவித்தார். எனவே அனுரவுக்கு நம்பிக்கையான தரப்பு யார்? அன்று அந்த 18 பேரும் யார்? அதில் 16 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அவர்கள் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும்போது சமஸ்டிக்கான தீர்வினை பெற ஆனையை வழங்குமாறு கேட்டனர். அதனை மக்கள் நம்பி அமோக வெற்றியை கொடுத்தார்கள். அதில் மட்டக்களப்பு மண் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. அவர்கள் வென்று நாடாளுமன்றம் சென்ற அடுத்த நிமிடம் இந்த ஒற்றையாட்சிக்கு இணங்கினார்கள். இவர்கள் தற்போது பிரிந்து கேட்டாலும் நாடாளுமன்றத்துக்கு 10 பேர் சென்று அறுதி பெரும்பான்மை காண்பிப்பார்கள் என்பதே அனுரவின் நம்பிக்கை. எனவே சரித்திரத்தில் முதல் தடவையாக தமிழரே ஒற்றையாட்சியை விரும்பி ஏற்றுக் கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கான ஒரு முயற்சியாக 14ஆம் திகதி தேர்தல் அமையக்கூடும். அந்த வரலாற்று மாற்றத்தை தடுக்கக்கூடிய ஒரே ஒரு தரப்பு எம்முடைய மக்கள். அதனால்தான் நாங்கள் இந்த தேர்தல் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என எச்சரிக்கை விட்டுக்கொண்டு வருகின்றோம். தமிழினம் ஓர் இனவாத இனமல்ல. சிங்களவருக்கு பௌத்தத்துக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. எங்களுக்கு இருப்பு பாரம்பரியம் இருப்பதை மற்றவர்கள் மதிக்கவேண்டும். அதேவேளை எங்களுடைய அடையாளங்களை அங்கீகரித்து கொண்டாடவேண்டும். நீங்கள் வேறுபாடுகள் அற்ற கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதை செய்யாமல் பெரும்பான்மையாக இருக்கின்ற நீங்கள் எங்களின் இருப்பை அழிக்கின்ற வகையில், செய்வதை ஜனநாயகம் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் ஒற்றையாட்சி முறைமை ஒரு நாளும் ஒரு பாதுகாப்பை கொடுக்காது என இலங்கையில் ஏற்படுத்திய 3 அரசியல் அமைப்புக்களை தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளோம். அதனால்தான் சர்வதேசம் கூறுகிறது... போர் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இங்கு ஒரு பயங்கரவாத பிரச்சினை மட்டும்தான் இருப்பதாக சொல்லியும் சர்வதேசம், இல்லை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் அமைப்பை ஆதரவோடு எப்போது நிறைவேற்றுகின்றீர்களோ. அன்றுதான் இந்த இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கருதுவோம் என்றனர். எனவே, இந்த அனுரவின் சதித் திட்டத்தை முறியடிக்கும் ஒரே ஒரு தரப்பு நாங்கள்தான். எனவே, 10 பேரை பிரதிநிதிகளாக அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197681
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
ஜடேஜா, வாஷிங்டன் சுழலில் சுருண்ட நியூசிலாந்து; இந்தியா 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார் எழுதியவர், போத்திராஜ் . க பதவி, பிபிசி தமிழுக்காக மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 1) துவங்கிய இந்தியா நியூசிலாந்து அணிக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி விரைவாகவே முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் வில் யங் (71), டேரல் மிட்செல் (82) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சம். இருவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்களுக்குள்தான் இருந்திருக்கும். முதல் இன்னிங்ஸை சீராகத் தொடங்கிய இந்திய அணி வழக்கம்போல் ரோகித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக இழந்தது. அதன்பின் முதல்நாள் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது, திடீரென அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. 78 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இருவர் நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என வலுவாக இருந்தது. ஆனால், கடைசி 48 ரன்களுக்கு மட்டும் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் சரிவுக்கு வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா இருவரின் பங்களிப்பு பிரதானமாகும். ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 65 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், சுந்தர் 18.4 ஓவர்கள் வீசி 81 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டெஸ்ட் போட்டியில் 14-வது முறையாக ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜாகீர்கான், இஷாந்தை முந்திய ஜடேஜா டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, இருவரையும் இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா பின்னுக்குத் தள்ளி 5-ஆவது இடத்துக்கு முன்னேறினார். ரவீந்திர ஜடேஜா தற்போது டெஸ்ட் போட்டியல் 314 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி அளவில் 5வது இடத்தில் உள்ளார். ஜாகீர்கான், இஷாந்த் சர்மா இருவரும் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அடுத்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 3-ஆவது முறையாக இந்திய அணி தகுதி பெறுவதற்கு 6 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 4 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும். 6 ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றால், எந்தவிதமான தடையும் இன்றி, இறுதிப்போட்டிக்குச் செல்லலாம். நியூசிலாந்துடன் மும்பையில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதலால் இன்று கட்டுக்கோப்பான பீல்டிங், பந்துவீச்சை வெளிப்படுத்தி 235 ரன்களுக்குள் நியூசிலாந்தைச் சுருட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா அஸ்வினுக்கு சாதாரண நாள் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு புனே டெஸ்ட் போட்டியிலிருந்து எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை. மும்பை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் அஸ்வினுக்கு சாதாரண நாளாக அமைந்துவிட்டது. வழக்கமாக பந்துவீச்சில் பல்வேறு உத்திகங்களைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அஸ்வினின் பந்துவீச்சு நியூசிலாந்து பேட்ஸ்மேன்களிடம் எடுபடவில்லை. டெஸ்ட் போட்டியில் ஃபார்முக்கு வராத நிலையிலும் ஆஸ்திரேலியாவுக்கு அஸ்வின் பயணிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மும்பையில் கொளுத்திய வெயில் மும்பையில் இன்று வெயில் 37 டிகிரி செல்சியஸாக சுட்டெரித்து, நண்பகலில் 41 டிகிரி வரை சென்றது. இதனால் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யவும், நியூசிலாந்து பேட் செய்யவும் மிகுந்த சிரமப்பட்டனர். ஒவ்வொரு 3 ஓவர்களுக்கும் இடையே நீர், குளிர்பானங்கள் வீரர்களுக்கு வழங்கப்பட்டன, ஐஸ் பேக், ஐஸ் துண்டு ஆகியவற்றை வைத்து வீரர்கள் முகத்தையும், வியர்வையையும் துடைத்தவாறு இருந்தனர். காலை நேரத்தில் கடும் வெயிலும், காற்று குறைவாகவும், காற்றில் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்து காணப்பட்டதால் வீரர்கள் வியர்வை மழையில் நனைந்து, சிறிது நேரத்தில் சோர்வடைந்தனர். இதுபோன்ற கடும் வெயிலை அனுபவித்திராத நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் டேரல் மிட்செல், வில் யங் மிகுந்த சிரமப்பட்டனர். பும்ராவுக்கு ஓய்வு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை மனதில் வைத்தும், வைரஸ் தொற்று காரணமாகவும் பும்ராவுக்கு இந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். சிராஜின் பந்துவீச்சு சாரசரிக்கும் கீழாகவே இருந்தது, பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் அவர் வீசிய பந்து ஸ்விங் ஆகவில்லை, லென் லென்த்தும் (line length) கிடைக்கவில்லை. நியூசிலாந்து திணறல் ஆனால், ஆகாஷ் தீப், அரவுண்ட் ஸ்டெம்ப் பக்கம் வந்து பந்துவீசியதால், தொடக்கத்திலிருந்தே டேவன் கான்வே, லாதம் திணறினர். அதற்கு ஏற்றார்போல் கான்வே கால்காப்பில் வாங்கி, ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 15 ரன்களுக்கு முதல் விக்கெட்டை நியூசிலாந்து பறிகொடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் லாதமுடன், வில் யங் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். சுந்தர், ஜடேஜா பந்துவீச வந்தபின் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 44 ரன்கள் சேர்த்தநிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டாம் லாதம் (28) க்ளீன் போல்டாகி வெளியேறினார். கடந்த டெஸ்டில் இந்திய அணிக்கு சிம்மசொப்னமாக இருந்த ரச்சின் ரவீந்திரா இந்த முறை நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திரா போல்டாகி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். புனே டெஸ்டில் இருந்து மூன்றாவது முறையாக சுந்தர் பந்துவீச்சில் ரவீந்திரா விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு இடைவேளைக்கு செல்லும்போது நியூசிலாந்து அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆடுகளம் தொடக்கத்திலிருந்தே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. இதனால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் பந்து நன்கு டர்ன் ஆகியது, சிறிது பவுன்ஸும் ஆகியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டாம் லாதம் (28) க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். வலுவான பார்ட்னர்ஷிப் நான்காவது விக்கெட்டுக்கு வில் யங் - டேரல் மிட்செல் கூட்டணி சிறப்பாக விளையாடினர். ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சை சமாளித்து ஆடி ரன்களைச் சேர்த்தனர். வில் யங் 94 பந்துகளிலும், மிட்ஷெல் 90 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். வில் யங் இந்த டெஸ்ட் தொடரிலேயே முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்திருந்த நிலையில் இந்த பார்ட்னர்ஷிப்பை ஜடேஜா பிரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டேரல் மிட்செல் ஆட்டத்தில் திருப்புமுனை ஜடேஜா பந்துவீச்சில் வில் யங்க் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தருணம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும், அடுத்து களமிறங்கிய டாம் பிளென்டல் இதே ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். ஜடேஜா வீசிய 45-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை நியூசிலாந்து அடுத்தடுத்து இழந்தது. அதன்பின் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களைக் கடக்கவில்லை. இஷ் சோதி (7), மாட் ஹென்றி (0), அஜாஸ் படேல் (7), கிளென் பிலிப்ஸ் (17) என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசி 48 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. டேரல் மிட்செல் 82 ரன்கள் சேர்த்தநிலையில் சுந்தர் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு டேரல் மிட்செல் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடங்கினர். ரோகித் மீண்டும் ஏமாற்றம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடங்கினர். அதிரடியாக பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா கடந்த டெஸ்டைப் போல் நீடிக்கவில்லை. ஹென்றி பந்துவீச்சில் அவுட்சைட் ஆப்சைடு சென்றபந்தைரோஹித் சர்மா தேவையின்றி தட்டிவிட ஸ்லிப்பில் நின்றிருந்த லாதம் கேட்ச் பிடித்தார். ரோகித் சர்மா 18 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சுப்மான் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் விரைவாக ரன்களைச் சேர்த்தனர். நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்தால் ரன்ரேட் வேகமெடுத்தது. 13 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 58 பந்துகளில் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தொட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார் கடைசி நேரத்தில் திணறல் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்பட்டு ஜெய்ஸ்வால் 30 ரன்கள் சேர்த்தநிலையில் க்ளீன் போல்டாகினார். முதல் நாள் ஆட்டம் முடிய சில ஓவர்கள் இருக்கையில் களமிறங்கிய முகமது சிராஜ் கால்காப்பில் வாங்கி அஜாஸ் படேலின் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் மட்டும் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார். முதல்நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும், கில் 31 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சை வெற்றிகரமாகத் தொடங்கி, ரோஹித் சர்மா, கோலி என பெரிய விக்கெட்டுகளை குறைந்த ஓவர்களில் வீழ்த்தி நிம்மதி அடைந்துள்ளது. ஆடுகளம் நாளை சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், நாளை இரு அணிகளிலும் விக்கெட் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62jz9484ydo
-
படையினரின் சம்பளங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை
முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் கோரியுள்ளார். முப்படையினருக்கு வழங்கப்பட்ட உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு தமது அரசாங்க ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்க்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் படையினர் கோரி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். படையினரின் சம்பளங்கள் அதிகரிப்பு எனவே தற்போதைய அரசாங்கம் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார். படையினரின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/tri-forces-salary-must-increase-1730430548
-
யாழில் தனியார் காணி ஒன்றை கைப்பற்றும் கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்த பொதுமக்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - மண்டைதீவு பெரியகுளம், கலங்கரை விளக்க கடற்படை முகாமை விஸ்தரிப்பதற்காக தனியார் காணி ஒன்றை அளவீடு செய்யும் நடவடிக்கையை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அண்மையில், கடற்கரையை அண்மித்த தனியார் காணியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்தபோது, காணி உரிமையாளருடன் இடத்திற்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்டோர் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர். காணி உரிமையாளருக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு, காணியை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம், தொடர்ந்து பலனளிக்காத இந்த முயற்சியை கைவிடுமாறு குறிப்பிட்டுள்ளனர். உரிமையாளரின் அனுமதி நில அளவைத் திணைக்களமும், பிரதேச செயலகமும், பொதுமக்களும், உரிமையாளரும் விரும்பாத காணி அளவீட்டுக்காக எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அது கைகூடாத நிலையில், காணி அளவீட்டை மேற்கொள்ளும் செற்பாட்டை கைவிடுவது பொருத்தமான செயல் என அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுநலனுக்காக என்றாலும், உரிமையாளரின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் காணி அளவீடு சட்டவிரோதமான செயல் என சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். உரிமையாளர் விரும்பாத இடத்தில் பொது நலனுக்காக காணியை அளவீடு செய்வது சட்டத்திற்கு முரணான செயல். இது, பொது நலனுக்காக எடுக்கப்படலாம், ஆனால் உரிமையாளரும், பொது மக்களும் எதிர்ப்பது பொது நலனாக இருக்க முடியாது.” தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை கடற்படையினருக்காக கையகப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியின் கீழும் எவ்வித மாற்றமும் இன்றி இந்த முயற்சி தொடர்வதாக வடமாகாண ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். https://tamilwin.com/article/land-issue-jaffna-people-stoped-navy-s-activities-1730466968