Everything posted by ஏராளன்
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அல்வாவிற்கு பதிலாக பாயாசமா : விஜய் அண்ணனுக்கு ஒரு கடிதம்! த.வெ.க தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு! அன்பு நிறைந்த வணக்கம். வயதாகி அரசியலுக்கு வந்த நடிகர்கள், தன் படங்களின் வெளியீட்டின் போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என பூச்சி காட்டி, தள்ளாத வயதானதும் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த நடிகர், அரசியலுக்கு வந்தும் குழப்பமாய் அலையும் நடிகர்களுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் இளம் வயதில், புகழின் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் கட்சியை துவக்கிய உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்னபோதே நாம் நம் எதிரியை முடிவுசெய்துவிட்டோம். நாட்டைப் பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி, ”திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் அடுத்த எதிரி” என்ற வார்த்தைகளும், ”கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டும் நமது இரண்டு கண்கள், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு” என நீங்கள் விடுத்த அழைப்பும், அதிகாரப் பகிர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவு, சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பது என்று சிறப்பாக பேசினீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் குழப்பம் எங்கு துவங்கியது? “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள்” என்பதில்தான் துவங்கியது. திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம்டா எனும் போதும், போக்கிரி படத்தில் கஞ்சா பிடிக்க போலிஸ் வரும் கைப்பந்தாட்ட காட்சியிலும், பிகில் படத்தில் ”பிகிலு கப்பு முக்கியம் பிகிலு” என அப்பா விஜய் சொல்லும் போது மகனாக நீங்கள் தோன்றும் காட்சியிலும், சர்கார் படத்தில் பழ.கருப்பையாவை மேடையில் வைத்துக்கொண்டு பேசும் காட்சியிலும் இருந்த அந்த அபாரமான நடிப்பாற்றலை விக்கிரவாண்டி மேடையிலும் கண்டு உங்கள் ரசிகர்களை போல நானும் பிரமித்தேன். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள்” என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது. எனெனில் நீங்கள் திமுக மட்டுமே ஊழல் கட்சி என குறிப்பிட்டது, அவரை உற்சாகபடுத்தி இருக்கக்கூடும். நேற்று வரை என் தம்பி விஜய் என் அரசியலைத்தான் பேசுகிறார் என வழக்கம்போல உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ”திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும்” என்று பொரிந்து தள்ளி இருப்பதும் கவனத்தில் கொள்ள தக்கதுதான். அது இருக்கட்டும், மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே நீங்கள் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா, இந்தா கட் அவுட்டுகளுக்கு பின்னால் இருக்கும் சாதிய கணக்கீடு தெரியாத அப்பாவிகள் அல்ல தமிழக மக்கள்! அதுவல்லாமல், ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஆனாலும் சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட் - அவுட் வைத்தது அபத்ததின் உச்சத்தை தொட்டுள்ளீர்கள்! இருக்கட்டும் உங்களுக்கு உள்ள குழப்பத்தை எப்படியும் பேசி தீர்கலாம். ஆனால் உங்கள் மாநாடு உரையில் நீங்கள் திட்டமிட்டு தவிர்த்த மூன்று பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிகாட்ட விரும்புகிறேன். 1. உங்கள் உரையில் எங்கும் இந்திய நாட்டை சுரண்டி கொழுக்கும் கார்ப்ரேட் சக்திகள் குறித்த வார்த்தைகளை தப்பி தவறியும் சொல்லவில்லை. கத்தி படம் முழுக்க முழுக்க விவசாயத்தில் கார்ப்ரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை பற்றி வசனங்களுக்கு வாய் அசைத்தது நீங்கள்தான். ஆனால் உழைப்பாளி மக்களின் சொத்துக்களையெல்லாம் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் அரசியலை நீங்கள் தொடவே இல்லை. நூறு நாள் வேலைக்கு இரண்டு லட்சம் கோடியை வெட்டி சுருக்கிய ஒன்றிய பிஜேபி அரசு, அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பல லட்சம் கோடிகளை வரி சலுகையாக வழகுவது உங்களுக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை போலும். 2. ஊழலுக்கு எதிராக சிலம்பாட்டம் ஆட தயார் என அறிவித்த நீங்கள் ஊழல் வழக்கால் தண்டனை பெற்ற ஒரு கட்சி குறித்து எதுவும் பேசாததும், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாய் வாரி சுருட்டியவர்களையும், கொடுமையான கொரோனா நோய் தொற்று காலத்தில் பி.எம் கேர்ஸ் மூலம் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தவர்கள் குறித்தும் வாய் திறக்காததும் உங்கள் ஊழல் எதிர்ப்பை பல் இளிக்க வைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்களா? 3. இறுதியாக பாசிசம் குறித்த உங்கள் பேச்சு எத்தனை புரிதல் அற்றது என்பதை அறிவீர்களா? பாசிசம் என்பது மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயாரால் அல்லது ஏதோ ஒரு அடையாளத்தின் பெயரால் எதிரிகளை கட்டமைத்து அவர்களை வெறுத்தொதுக்குவது. அரசியல் அதிகாரத்திற்காக படுகொலைகளை செய்வது. சிறுபான்மையினரை குறிவைத்து அழிப்பது. இந்த அம்சங்கள் அனைத்து பொருந்துகிற பாசிச பாஜக குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் உங்களால் ஒரு மாநாடு நடத்த முடியும் என்றால், தமிழக மக்களுக்கு அல்வாவுக்கு பாயாசம் கொடுப்பது நீங்கள் தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை தமிழக மக்களுக்கு பல கட்சிகள் அல்வா கொடுத்தனர், புதிதாக நீங்கள் பயாசம் கொடுக்க கிளம்பி உள்ளீர்கள் என்பதை தவிர வேறென்ன உங்களிடம் வித்தியாசம் உள்ளது. சமதர்மம் என்பது வார்த்தைகளில் இல்லை அண்ணா, அது கொள்கையின் வெளிப்பாடு. உங்கள் கொள்ளை பிரகடனம் வெற்று வார்த்தைகளாய் காற்றில் கரையாமல் இருக்க வேண்டுமெனில் சமூகத்தின் உண்மையாக பிரச்சினைகளை கண் கொண்டு பாருங்கள்! நன்றி! அன்புடன் எஸ்.ஜி.ரமேஷ்பாபு https://natputanramesh.blogspot.com/2024/11/blog-post.html
-
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமை பெறும் - திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன நம்பிக்கை
கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. சீனாவுடன் உயர்தர, முன்னுரிமை திட்டங்களுக்கு புதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்று திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கைக்கான சீனாவின் ஆதரவு, நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவித் துறையில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பல ஆண்டுகளாக, துறைமுகங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் சீனா பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகள் இலங்கையின் தளவாடத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய வர்த்தக மையமாக அதன் நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக நெருக்கடியான காலங்களில் இலங்கையின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சீனா நிதி உதவி மற்றும் கடன்களை வழங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக, சீனாவின் தற்போதைய ஆதரவு பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கான இலங்கையின் அபிலாஷைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வுடன் இணக்கத்தன்மையை உறுதிசெய்தல், பிறகடன் வழங்குநர்களுடன் ஒப்பிடும் தன்மையை உறுதிசெய்தல் ஆகிய விடயங்களும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையும் எவ்வளவு சிக்கலானது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சவாலானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சீன கடன் வழங்குநர்களுடனான பரஸ்பர நம்பிக்கை மற்றும் இரு தரப்பினரும் வெளிப்படுத்திய நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் குறித்த சிக்கல்களைக் கடப்பதற்கு சாத்தியமான நிலைமை ஏற்பட்டது. கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் சீனாவுடன் உயர்தர முன்னுரிமை திட்டங்களுக்குபுதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அத்துடன், கடனை நிலைத்தன்மை, பொருளாதாரச் செழுமையை நோக்கிய இலங்கையின் பயணத்தில் முக்கியமான படியாக இருக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்கிய ஏனைய உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். கற்கைகளையும், பயிற்சிகளையும் நிறைவு செய்து நாடு திரும்பிய ஏராளமான அதிகாரிகள், இங்கு கூடியிருக்கிறார்கள். நீங்கள் பெற்ற அறிவு மற்றும் திறன்கள் மூலம் உங்கள் பங்களிப்புகள் இறுதியில் நம் நாட்டை மேம்படுத்த உதவும் என்பதால், அவ்வாறு செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197594
-
சமஷ்டியே தீர்வெனக்கூறும் தமிழரசுக் கட்சி இருக்கும் போது “நிழல்” கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை - சுமந்திரன்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்திற்கான தேர்தல் என சொல்லப்படுகிறது மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதி தேர்தலை சொல்கின்றனர். ஒரு வகையில் அது சரி தான். காலம் காலமாக இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இருந்து, தற்போது பாரிய மாற்றமாக மூன்றாவது தரப்பு ஆட்சியை பிடித்துள்ளது. அவர்கள் ஆட்சியை பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஊழல் கேடான அரசியலில் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதனால் தான் 69 இலட்ச மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக இருந்தவரை நாட்டை விட்டு துரத்தினர் அப்படி செய்தும் மக்கள் எதிபார்த்த மாற்றம் வராததால் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, தேர்தல்ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள் அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தியின் மட்டுமே இருந்தனர். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தை தேடுகிறோம். அதற்காக பல வழிகளில் போராடி , பல உயிர்களை இழந்துள்ளோம். எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய இந்த அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்கள் பங்கு தாரர்களாக வரவில்லை. தற்போது மாற்றம் என கூறி ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியினரின்,தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது என்ற கோரிக்கையை ஜே.வி.பி யினரும் இணைந்து முன் வைத்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க தேவையில்லை. அதனை துஷ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என சொல்கின்றனர். இதொரு குத்துக்கரணம். பயங்கரவாத தடுப்பு சட்டத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல தான் ஜேவிபி யினரும் பாதிக்கப்பட்டனர். அதனால் அதனை நீக்க வேண்டும் என முதலில் கூறியவர்கள் தற்போது அதனை துஸ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என்கின்றனர். இவ்வாறாக மக்களுக்கு தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக காற்றில் பறக்க விடப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டா பாய ராஜபக்சேவிற்கும் அநுர குமார திசாநாயக்கவிற்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை. என்பது தெளிவாக தெரியும். அதாவது சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை தவிர ஏனைய பகுதியில் அநுராவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை. வடக்கு கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் உள்ளனர். சமஸ்டி கட்டமைப்பாக அது மாற வேண்டும். அந்த நிலைப்பாட்டை நாங்கள் முன் கொண்டு செல்ல நாடாளுமன்றுக்கு மிக பெரும் பலத்துடன் செல்ல வேண்டும். சமஸ்டி என்ற எண்ணத்தையே இழிவாக பேசி அதனை பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட சமஸ்டி தான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவே நாம் முன் வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே அசல் நாங்கள் இருக்கும் போது நிழலுக்கு வாக்கில்ல வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/197603
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி யாழ். பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில், வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தியிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/311421
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி, தயார்நிலையில் நியூசிலாந்து - வெற்றி யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகுந்த அழுத்தம், நெருக்கடிக்கு மத்தியில் இன்று (நவம்பர்1) மும்பை வான்ஹடே மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு அடுத்து வரக்கூடிய 6 டெஸ்ட் போட்டிகளும் முக்கியம். ஆகவே, வெற்றி அவசியம் என்ற நிர்பந்தத்துடன் இன்று களமிறங்குகிறது. இந்திய அணிக்கு நெருக்கடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2 முறை தகுதி பெற்றுள்ள இந்திய அணி 3வது முறையாக முன்னேறிவிடலாம் என்று எண்ணியிருந்தது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது, 12 ஆண்டுகளுக்குப் பின் உள்நாட்டில் டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்தது என அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்த பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு தள்ளிப்போயுள்ளது. இன்று நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டி தவிர்த்து, ஆஸ்திரேலியா சென்று அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த 6 டெஸ்ட் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றால்தான், இந்திய அணி எந்தவித சிக்கலும் இன்றி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைச் சார்ந்திருக்க வேண்டும். இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு டிரா என 98 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், வெற்றி சதவிகிதம் 62 ஆகக் குறைந்துவிட்டது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும், இந்திய அணிக்கும் குறைந்த அளவே வித்தியாசம் இருக்கிறது. ஆதலால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற 4 வெற்றிகள் மட்டுமே தேவை. இந்திய அணிக்கு எதிராக கடைசி டெஸ்டில் ஒருவேளை வெற்றி பெற்றால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால் நியூசிலாந்தும் பைனலுக்கு போட்டியிடும். ஆதலால் இந்திய அணி நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் இந்தியாவுக்குக் கடும் போட்டியாக உள்ளன. ஆதலால், இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்தடுத்து வெற்றி நடை போடுவதற்கு ஊக்கமாக அமையும் என்பதால் மிகுந்த நெருக்கடியில் களமிறங்குகிறது. எதிர்பாராத மோசமான ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பேட்டர்கள், குறிப்பாக சீனியர் பேட்டர்கள் மோசமான ஃபார்மில் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. தேவையான ரன்களை குவிக்காததுதான் புனே டெஸ்டில் தோல்வி அடைய முக்கியக் காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகத் தெரிவித்தார். "பேட்டிங்கில் எதிர்பார்த்த ரன்களை குவிக்கவில்லை, மோசமாக பேட் செய்தோம். பந்துவீச்சாளர்கள் அவர்களின் பணியைச் செய்தாலும் பேட்டர்கள் ரன் குவிப்பது முக்கியம்" என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நெருங்கும் வேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சர்ஃபிராஸ் கான், சுப்மான் கில் போன்ற பேட்டர்கள் சிறப்பாக பேட் செய்வது அவசியமாகிறது. புனே டெஸ்டில் சான்ட்னரின் வேகம் குறைந்த சுழற்பந்துவீச்சு நுட்பத்துக்கு எதிராக இந்திய பேட்டர்களின் திறமை சறுக்கிவிட்டது. சவாலான ஆஸ்திரேலிய ஆடுகளத்தை எதிர்கொள்வதற்கு முன், பெங்களூரு டெஸ்டில் வேகப்பந்துவீச்சுக்கு 46 ரன்களில் சுருண்ட இந்திய அணி, புனே டெஸ்டில் சுழற்பந்துவீச்சுக்கு 156 ரன்களிலும், 245 ரன்களிலும் ஆட்டமிழந்தது அதன் பேட்டிங் ஃபார்மை கவலைக்குரியதாக வைத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது, விராட் கோலி ஃபுல்டாஸ் பந்துவீச்சில் போல்டானது இருவரின் ஃபார்மையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் புனே டெஸ்டில் ஜடேஜா, அஸ்வினின் பந்துவீச்சும் பெரிதாக எடுபடவில்லை. இருவரும் வழக்கமான பந்துவீச்சை மட்டுமே வெளிப்படுத்தினார்களே தவிர ஆடுகளத்திற்கு ஏற்ப தங்கள் பந்துவீச்சின் வேகத்தைக் குறைத்து, பல்வேறு பந்துவீச்சு வடிவங்களை வெளிப்படுத்த தவறவிட்டனர். புனே டெஸ்டில் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர்கள் அதிகமான ரன்கள் குவிக்க ஜடேஜா, அஸ்வின் இருவரும் ரன்களை வாரி வழங்கியது முக்கியக் காரணம். மும்பை வான்ஹடே டெஸ்ட் போட்டி இந்திய அணி அடுத்த கட்டத்திற்குச் செல்ல முக்கியமானது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் கடைசி டெஸ்டுக்கு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம் என விவாதிக்கப்படுகிறது. தயார் நிலையில் நியூசிலாந்து பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்து அணி ஆசிய கண்டத்திற்குப் பயணம் செய்யத் தொடங்கியதில் இருந்து தீவிரமாக, திட்டமிட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் மனம் தளராமல் இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொண்டது. பெங்களூருவில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்டதை அந்த அணியினரே எதிர்பார்க்கவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திய நியூசிலாந்து முதல் டெஸ்டை வென்றது. 2வது டெஸ்டில் சான்ட்னரின் பந்துவீச்சு வெற்றியை எளிதாக்கியது. முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வென்று சாதித்தது. அந்த அணியின் அனுபவ பேட்டரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்ஸன் இல்லாமல் இந்த மாபெரும் வரலாற்று வெற்றியை நியூசிலாந்து பெற்றுள்ளது. இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப பந்துவீசுவது குறித்து பிரத்யேக பயிற்சிகளையும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் ரங்கன்னா ஹிராத் இந்திய ஆடுகளங்கள் குறித்தும், அதன் தன்மை குறித்தும் துல்லியமாகக் கூறி பயிற்சி அளித்து வருகிறார். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு சிறிதும் சளைக்காமல் நியூசிலாந்து அணி இருக்கிறது. நியூசிலாந்து அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. வான்ஹடே மைதானத்தில், வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக டாஸ் அமையும். வான்ஹடே மைதானம் பட மூலாதாரம்,GETTY IMAGES வான்ஹடே மைதானத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 12 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது, 7 போட்டிகளில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் வென்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடந்த 1988ஆம் ஆண்டு ஜான் ரைட் கேப்டன்சியில் பயணம் செய்த நியூசிலாந்து அணி, இதே மும்பை வான்ஹடே மைதானத்தில் 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. ஒருவேளை கடைசி டெஸ்டிலும் நியூசிலாந்து வென்றால், 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மும்பையில் வெற்றியைப் பதிவு செய்யும். கடைசியாக 2021ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. மும்பை வான்ஹடே மைதானத்தில் இதுவரை இந்தியா- நியூசிலாந்து அணிகள் இதுவரை 3 முறை மோதியுள்ளன, அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை வான்ஹடே ஆடுகளம் எப்போதுமே பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இரண்டாவது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். புற்கள் பெரிதாக பிட்ச்சில் இல்லை என்பதால், சுழற்பந்துவீச்சுக்கு பந்து நன்கு டர்ன் ஆகும். வேகப்பந்துவீச்சு, மிதவேகம், சுழற்பந்துவீச்சு எதுவானாலும் பந்து நன்கு பவுன்ஸ் ஆகி பேட்டர்களை நோக்கி வரும் என்பதால் ரன் குவிக்க இரு அணி பேட்டர்களுக்கும் ஏதுவாக இருக்கும். முதல் நாளில் பெரிதாக விக்கெட் வீழ்வது கடினமாக இருக்கும். இரண்டாவது நாளில் இருந்து ஆட்டம் மெதுவாக சுழற்பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லத் தொடங்கும். டாஸ் வெல்லும் அணி யோசிக்காமல் முதலில் பேட் செய்வது உத்தமம். முதல் இரு நாட்கள் பேட்டர்களை நோக்கித்தான் பந்து வரும் என்பதால் பெரிய ஸ்கோரை அடித்துக்கொள்ள முடியும். அதன்பிறகு ஆடுகளத்தில் விரிசல்கள் ஏற்படும்போது, சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் பந்து திரும்பத் தொடங்கும். அப்போது பேட் செய்வது கடினமாக இருக்கும். சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக ஆடுகளம் மாறுவதற்கு பெரிய ஸ்கோரை அடித்துவிடுவது நல்லது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gzm24r4zyo
-
புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி தேவைகளுக்கு ஒத்துழைப்பளிக்க சீனா தயாராகவே உள்ளது - இலங்கைக்கான சீனத்தூதுவர்
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், சீன - இலங்கை மனித வள ஒத்துழைப்பின் நன்மைகளைக் கொண்டாடவும், சீன - இலங்கை நட்புறவு என்றும் நிலைத்திருப்பதை வாழ்த்துவதற்காகவும், சீன உதவிப் பயிற்சி பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வு முதற்தடவையாக நடைபெறுகின்றது. சீன பழமொழி “ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுங்கள் ,நீங்கள் அவருக்கு ஒரு நாள் உணவளிக்கிறீர்கள்; ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள், நீங்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்கிறீர்கள்” என்று கூறுகின்றது. சீனாவின் வெளிநாட்டு உதவி பயிற்சி என்பது ஜனாதிபதி ஷி ஜின்பிங்கால் வரையப்பட்ட உலகளாவிய வளர்ச்சியை செயற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கையாகும். அத்துடன் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். சீனாவின் வெளிநாட்டு உதவிப் பயிற்சியானது, பகிர்தல், ஆலோசனை, இணைக் கட்டுமானம் ஆகிய விடயங்களை கடைப்பிடிக்கிறது, நாடுகளுக்கு நிர்வாக அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை உருவாக்குகிறது. சீன நவீனமயமாக்கலின் வெற்றிகரமான அனுபவத்தை முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறது. 1950 இல் சீனா வெளிநாட்டு உதவிப் பயிற்சித் திட்டங்களைத் ஆரம்பித்ததில் இருந்து, வளரும் நாடுகளுக்கு 510,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரையில் பயிற்சி அளித்துள்ளது. சீன அரசாங்கம் இலங்கையின் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவில் சுமார் 13,000 இலங்கையர்கள் இதுவரையில் பயிற்சிகளிலும், கற்கைகளிலும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் 1,000 இற்கும் மேற்பட்ட இலங்கைப் பங்கேற்பாளர்கள் பயிற்சிக்காக சீனாவுக்குச்சென்றுள்ளனர், பொது முகாமைத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், விவசாயம், வனவியல், உட்பட 17 முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக பயிற்சிகள் மற்றும் கற்கைகள் காணப்படுகின்றது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முதன்மையான உற்பத்தி சக்தியாகவும், திறமையே முதன்மை வளமாகவும், புதுமை முதன்மையான உந்து சக்தியாகவும் இருப்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது இந்த நோக்கமானது கல்வி மற்றும் திறமை வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. சீன அரசாங்கம் வளரும் நாடுகளுடன் மனித வள ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதோடு ‘குளோபல் சவுத்’ வளர்ச்சியடைவதையும் புத்துயிர் பெறுவதை ஊக்குவிப்பதில் உறுதியுடன் இருப்பதோடு உலகளாவிய முன்னேற்றத்திற்கு வலுவான உத்வேகத்தை அளிக்கின்றது. புதிய ஆண்டில், இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதுடன், மேலும் பங்கேற்பாளர்களை சீனாவுக்குச் சென்று கல்வி கற்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், சுமூகமான வேலைச்சூழல்,மகிழ்ச்சியான குடும்பம் நீடிப்பதற்கு வாழ்த்துவதோடு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிரந்தர நட்புறவை நான் விரும்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197596
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைப்பு - புதிய விதிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ். க பதவி, பிபிசி தமிழுக்காக 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது அறிவித்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், அதில் புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்து, மற்ற வீரர்களை விடுவிக்கும் காலக்கெடு இன்று (அக்டோபர் 31) முடிகிறது. இதன்படி, ஐ.பி.எல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் முறைப்படி அறிவித்தன. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடத்தப்படும். அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியிடம் இருக்கும் கையிருப்புத் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் வாங்கும். இந்தத் தக்கவைப்புப் பட்டியல் மற்றும் விடுவிப்பு பட்டியலுக்குப்பின் ஒவ்வொரு அணியிலும் 6 கிரிக்கெட் வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐ.பி.எல் ஏலத்தில் புதிய வீரர்கள் வாங்கப்படுவார்கள். 2025 ஐ.பி.எல் சீசனுக்கு புதிய விதிகள் கடந்த 2024 சீசனைவிட 2025 ஐ.பி.எல் சீசனில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. சர்வதேசக் கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தடை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிகளின்படி ஐ.பி.எல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச போட்டியில் விளையாடாத (uncapped) வீரர்கள் இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய விதியும் சி.எஸ்.கே-வும் கேப்டு (capped) இந்திய வீரர் 'அன்கேப்டு வீரராக' மாற முடியும் என்பதுதான் இந்த விதியின் உச்ச அம்சமாகும். இந்த விதி தோனிக்காகவே உருவாக்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் இந்த விதிகளின்படி அவர் 'அன்கேப்டு வீரராக' மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும். இந்த விதியின் கீழ்தான் சி.எஸ்.கே அணி எம்.எஸ்.தோனியை 2025-ஆம் ஆண்டு சீசனில் அன்கேப்டு வீரராகத் தக்கவைத்துள்ளது. ஆனால், கடந்த சீசனில் வாங்கிய அளவு தோனிக்கு ரூ.12 கோடிக்கும் அதிகமாக ஊதியம் நிர்ணயிக்கப்படாது, அன்கேப்டு வீரருக்கான ரூ.4 கோடி மட்டுமே வழங்கப்படும். இந்த விதியால் தோனியின் ஊதியம் குறைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே சி.எஸ்.கே தக்கவைப்பு, பர்ஸ் விவரம் 2025 -ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளது. இதன்படி, ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரண (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி) எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். சி.எஸ்.கே அணியிடம் தக்கவைப்பு வீரர்கள் தவிர்த்து தற்போது ரூ.55 கோடி கையிருப்பு இருக்கிறது. ஆர்.டி.எம் விதியின்படி ஒரு அன்கேப்டு வீரர் அல்லது கேப்டு வீரரை ஏலத்தில் வாங்கலாம். டேவன் கான்வே, ரச்சின் ரவிந்திரா, தீபக் சஹர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை சிஎஸ்கே அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. ஆர்டிஎம் விதி மூலம் தீபக் சஹர், டேவன் கான்வே இருவரில் ஒருவரை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்ஸர் படேல் தக்கவைக்கப்பட்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் தக்கவைப்பு, பர்ஸ் விவரம் டெல்லி கேபிடல்ஸ் அணி அதன் கேப்டன் ரிஷப் பந்தை விடுவித்துள்ளது. புதிய கேப்டனை ஐ.பி.எல் ஏலத்துக்குப்பின் அறிவிக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் அக்ஸர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.50 கோடி), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரல் (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தற்போது ரூ.73 கோடி கையிருப்பு தொகையாக உள்ளது. இந்த தொகைக்கு ஏற்ப ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கும். கடந்த சீசனின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், டேவிட் வார்னர், ஆன்ரிச் நோர்க்கியா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் யார் தக்கவைக்கப்பட்டுள்ளனர்? மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் மாற்றத்திலிருந்து பெரிய குழப்பத்தில் சிக்கி தவித்து வருகிறது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அணி மாறுவாரா அல்லது தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோஹித் சர்மா(ரூ.16.30 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35கோடி), ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகிய வீரர்களைத் தக்கவைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் தற்போது ரூ.45 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. இதற்கு ஏற்றார்போல் வீரர்களை வாங்கும். ஆர்.டி.எம் கார்டைப் பயன்படுத்தி ஒரு அன்கேப்டு வீரர்களை மட்டும் தக்கவைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலம் இருந்த இஷான் கிஷன், டிம் டேவிட் ஆகியோர் தக்கவைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஷாங் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர் பஞ்சாப் கிங்ஸ் பல வீரர்களுக்கு கல்தா பஞ்சாப் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடங்கிய சீசனில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் கேப்டனை மாற்றுவதும், ஏலத்தில் வீரர்களை புதிதாக விலைக்கு வாங்குவதும் என பெரிய எதிர்பார்ப்புடன் இயங்கும். அந்த வகையில் 2025 சீசனுக்கு 2 வீரர்களை மட்டுமே அந்த அணி தக்கவைத்துள்ளது. கடந்த சீசனில் அதிரடியாக பேட் செய்த சஷாங் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி) ஆகியோர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்திடம் ரூ.110 கோடி கையிருப்பு உள்ளதால், ஏலத்தில் அதிகமான வீரர்களை விலைக்கு வாங்கலாம் பஞ்சாப் அணியில் கடந்த சீசனில் இருந்த ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த சீசனும் ஆர்சிபி அணியில் விளையாடுகிறார் விராட் கோலி ஆர்.சி.பி அணிக்கு மீண்டும் கோலி கேப்டனா? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுகிறது ஆனால், இதுவரை அந்த கனவு நனவாகவி்ல்லை. ஆர்சிபி அணி பல முறை ஏலத்தில் வீரர்களை மாற்றினாலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆர்.சி.பி அணிக்கு இந்த முறை விராட் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பல்வேறு ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதற்கு ஏற்றார்போல் விராட் கோலி (ரூ.21 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதர் (ரூ.11 கோடி), யாஷ் தயால் (ரூ.5 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணியிடம் தற்போது ரூ.83 கோடி கையிருப்பு உள்ளதால், ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கும். ஆர்.டி.எம் வாய்ப்பு மூலம் 3 வீரர்களை எடுக்கவும் முடியும். 3 கேப்டு வீரர்கள், ஒரு அன்கேப்டு,2 கேப்டு வீரர்களை ஆர்டிஎம் மூலம் வாங்கலாம். ஆர்சிபி அணி தங்கள் அணியில் இருந்த மேக்ஸ்வெல், முகமது சிராஜ், கேமரூன் க்ரீன், டூப்பிளசி ஆகியோரை அந்த அணி விடுவித்துள்ளது. இதில் ஆர்டிஎம் மூலம் சிராஜ், டூப்பிளசி,மேக்ஸ்வெல் வரலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜஸ்தான் அணியில் விளையாட இருக்கிறார் சஞ்சு சாம்சன் அஸ்வின், சஹலுக்கே இந்த நிலையா? ராஜஸ்தான் அணியும் பல அதிர்ச்சிக்குரிய முடிவுகளை வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பில் எடுத்துள்ளது. அந்த வகையில் அஸ்வின், சஹல், பட்லர், போல்ட் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை. மாறாக கேப்டன் சஞ்சு சாம்ஸன் (ரூ.18கோடி), ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துருவ் ஜூரெல் (ரூ.14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (ரூ.11 கோடி), சந்தீப் ஷர்மா (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தற்போது ரூ.41 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. ஆர்டிஎம் மூலமும் எந்த வீரரையும் வாங்க முடியாது. இதனால் ஏலத்தில் புதிதாக வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது. 'கருப்பு குதிரைகளை' தக்கவைத்த சன்ரைசர்ஸ் இளம் வீரர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கும் சன்ரைசர்ஸ் அணி, கடந்த சீசனில் கலக்கலாகச் செயல்பட்டது. குறிப்பாக கிளாசன், அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் கூட்டணி ஐ.பி.எல் தொடரில் சாதனைகளைக் குவித்தது. இந்த ஆண்டும் அதன் சாதனைகள் தொடர வேண்டும் என்பதால் அவர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிளாசன் (ரூ.23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் ஷர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி(ரூ.6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் அணியிடம் ரூ.45 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகைக்கு ஏற்றார்போல் வீரர்களை ஏலத்தில் எடுக்கும். ஆர்.டி.எம் கார்டு மூலம் ஒரு அன்கேப்டு வீரரை மட்டும் தக்கவைக்க முடியும் புவனேஷ்வர் குமார் மற்றும் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் அணியில் சுப்மான் கில் குஜராத் அணியில் ஷமி இல்லை கடந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. கேப்டன் சுப்மான் கில் (ரூ.16.50 கோடி), ரஷித் கான் (ரூ.18 கோடி), சாய் சுதர்ஷன் (ரூ.8.50 கோடி), ராகுல் திவேட்டியா (ரூ.4 கோடி), ஷாருக்கான் (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கையிருப்பாக ரூ.69 கோடி இருக்கிறது. ஆர்டிஎம் வாய்ப்பு மூலம் ஒரு அன்கேப்டு வீரரை வாங்கலாம். காயத்தால் கடந்த சீசனில் விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிர்ச்சி நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனையே தக்கவைக்காமல் விடுவித்து அதிர்ச்சியளித்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யரை விடுவித்துள்ளது கொல்கத்தா அணி. கடந்த 2014 சீசனில் இருந்து அணியில் நீடித்துவரும் ஆந்த்ரே ரஸல் விடுவிக்கப்படுவார் எனத் தகவல் வந்தநிலையில் அவர் தக்கவைக்கப்பட்டுள்ளார். மாறாக ரிங்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரேன் (ரூ.12 கோடி), ஆந்த்ரே ரஸல் (ரூ.12 கோடி), ஹர்சித் ராணா (ரூ.4 கோடி), ராமன்தீப் சிங் (ரூ.4 கோடி). கொல்கத்தா அணியிடம் இன்னும் ரூ.51 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகையை வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்கும். அந்த அணியில் இருந்து நட்சத்தி வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், மிட்செல் ஸ்டார்க், பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டார்க் கடந்த சீசனில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை அதனால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பில் சால்ட், வெங்கடேஷ் சிறப்பாக பேட் செய்த நிலையில் அவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் களமிறங்க இருக்கிறார் வருண் சக்ரவர்த்தி லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் நிலவரம் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புதிய கேப்டனை அறிவிக்கும் எனத் தெரிகிறது. அந்த அணியின் கேப்டனாக நீடித்த கே.எல்.ராகுலை விடுவித்துள்ளது. அதேசமயம், நிகோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஸ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மோசின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் பதோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். லக்னெள அணியிடம் கையிருப்பாக ரூ.69 கோடி இருக்கிறது. அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், குயின்டன் டீ காக், க்ருனல் பாண்டியா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9vnmw1r01no
-
ஸ்பெயின்: 'சுனாமி போல வந்தது' - 50 ஆண்டுகளில் மோசமான வெள்ளம், 95 பேர் பலி
“சுனாமி போல வேகமாக வெள்ளநீர் வந்தது” – மழைவெள்ளத்தின் பயங்கரம் குறித்து ஸ்பெயின் மக்கள் - இதுவரை 95 பேர் பலி நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தவேளை அது அலை போல வந்தது என்கின்றார் குயிலெர்மோ செரொனோ பெரெஸ் ( 21) .அது ஒரு சுனாமி என்கின்றார் அவர். ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் பெரும் இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்கிழமை வாகனத்தில் தனது பெற்றோருடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை இவர் வேகமாக அதிகரித்த வெள்ளத்தில் சிக்குண்டார். காரை நீரில் விட்டுவிட்டு பாலத்தில் ஏறி அவர்கள் உயிர்தப்பினார்கள். பல மணித்தியாலங்களாக கடும் மழை பெய்ததால் இவர்களின் குடும்பத்தவர்கள் போல பலர் வெள்ளத்தின் வேகத்தை அறியாமல் சிக்குண்டனர். செவ்வாய்கிழமை காலை ஸ்பெயினின் வானிலை அவதான நிலையம் வலென்சியாவில் மழை வெள்ளம் குறித்து எச்சரித்திருந்தது. மிகவும் அவதானமாகயிருங்கள் கடும் ஆபத்துள்ளது மிகவும் அவசரமான தேவையென்றால் மாத்திரம் போக்குவரத்தை மேற்கொள்ளுங்கள் என சமூக ஊடகத்தில் எச்சரித்திருந்த வானிலை அவதான நிலையம் பின்னர் ஆகக்கூடிய சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது. அன்று முழுவதும் பல தடவைகள் எச்சரிக்கைகள் வெளியாகியிருந்தன, மக்கள் ஆறுகள் காணப்படும் பகுதியை நோக்கி செல்வதை தடுக்கவேண்டும் என உள்ளுர் அதிகாரிகள் எச்சரிகப்பட்டார்கள். 3 மணியளவில் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் லாபுளுன்டே உடில் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளம் காணப்படுவதை காண்பிக்கும் படங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தது. சிறிதுநேரத்தின் பின்னர் அந்த பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரிப்பதாகவும் மக்கள் ஆற்றங்கரையோரங்களில் இருந்து வெளியேறவேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவநிலையம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் பல இடங்களை பொறுத்தவரை அந்த அறிவிப்பு சற்று தாமதமாக வெளியானதாக காணப்பட்டது. 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிவ்வா மழை வெள்ளத்தின் சீற்றத்தை முதலில் எதிர்கொண்டது . கனமழை காரணமாக செவ்வாய்கிழமை முதல் அந்த நகரத்தின் ஊடாக செல்லும் பள்ளத்தாக்கு நீர் நிரம்பியதாக காணப்பட்டது. ஆறு மணியளவில் அந்த நகரத்தின் வீதிகள் ஆறுகளாக மாறிவிட்டன, நீரின் வேகத்தில் கார்களும் வீதிவிளக்குளும் அடித்துச்செல்லப்பட்டன. அந்த பகுதிக்கு உதவியை வழங்குவதற்கு அவசரசேவை பிரிவினர் விரைந்தனர். ஆனால் முன்னொருபோதும் இல்லாத வேகத்தில் வெள்ளம் வீதிகளில் சூழ்ந்துகொண்டது. திடீரென கடும் மழை பொழிந்தது, ஒரு சில நிமிடங்களில் நீர் ஒரு மீற்றர் அளவிற்கு அதிகரித்தது என்கின்றார் நகரமேயர் ரிபா ரோஜா டி துரியா. மழை வெள்ளத்தில் சிக்குண்டு மக்கள் காணாமல்போயுள்ள செய்திகள் அந்த பிராந்தியத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருந்தன. எனினும் வலென்சியாவில் உள்ள மக்களிற்கு சிவில் பாதுகாப்பு பிரிவினர் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என எச்சரிக்கவில்லை - இரண்டு மணிநேரத்தின் பின்னரே இந்த எச்சரிக்கை வெளியானது. ஸ்பெயினின் வானிலை அவதானநிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்து 12 மணித்தியாலங்களின் பின்னரே போக்குவரத்தினை மேற்கொள்ளவேண்டாம் என்ற அறிவிப்பு வெளியானது குறித்து பல பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த எச்சரிக்கை தாமதமாகவே வெளியானது அலுவலகங்களில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் சிக்கினர் என சிலர் தெரிவிக்கின்றனர். வலென்சியாவிலிருந்து பிக்காசென்டிற்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவேளை வீதிகளை விழுங்கிய மிகவேகமான வெள்ளத்தில் பகோ சிக்குண்டார். “வெள்ளநீரின் வேகம் கற்பனை செய்ய முடியாததாக பைத்தியக்காரத்தனமானதாக காணப்பட்டது, அதுகார்களை இழுத்துச்சென்றது” என அவர் எல்முன்டோ செய்திதாளிற்கு தெரிவித்தார். “கடும் அழுத்தம் காணப்பட்டது நான் காரிலிருந்து ஒருவாறு வெளியே வந்தேன் வெள்ளநீர் என்னை வேலியை நோக்கி தள்ளியது நான் அதனை பிடித்துக்கொண்டேன் என்னால் நகரமுடியவில்லை” என அவர் குறிப்பிட்டார். :அது என்னை விடவில்லை எனது ஆடைகளை கிழித்தது” என அவர் குறிப்பிட்டார். பணியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த செடாவியை சேர்ந்த பட்ரிசியா ரொட்டிகேசும் மழை வெள்ளத்தில் சிக்குண்டார். “பைபோட்டாவில் நான் வாகன நெரிசலில் நின்றிருந்தவேளை வெள்ள நீர் மட்டம் அதிகரிக்க தொடங்கியது என அவர் தெரிவித்தார். கார்கள் மிதக்க தொடங்கின” என்றார் அவர். “ஆறுகள் பெருக்கெடுக்கப்போகின்றன என அஞ்சினோம் மற்றுமொரு வாகனச்சாரதியின் உதவியுடன் வாகனத்தை விட்டுவிட்டு நடந்து வந்தேன் புதிதாக பிறந்த குழந்தையை நபர் ஒருவர் பாதுகாப்பாக கொண்டு செல்வதை அச்சத்துடன் பார்த்துக்கொண்டு நின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197558
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
அண்ணை பதவி வெறியா?! தோல்வியின் வலியா?! தெரியலையே!!
-
சீனா: வறுமையில் தவித்த ஏழை நாட்டை உலகின் சக்தி வாய்ந்த வல்லரசாக உயர்த்திய சீர்திருத்தம்
பட மூலாதாரம்,GETTY IMAGES மாவோ சேதுங் 1949இல் ஆட்சிக்கு வந்தபோது, சீனா வறுமையிலும் போரிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இன்று, கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இன்று சீனா ஒரு முன்னணி உலக சக்தியாக உள்ளது, உலகின் முன்னணி பொருளாதாரமாக மாறவும் விரும்புகிறது. வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள, சீனாவின் ‘பொருளாதார அதிசயத்திற்கு’ காரணம் மாவோ சேதுங் அல்ல, மாறாக மற்றொரு கம்யூனிஸ்ட் தலைவரான டெங் ஷியோபிங். அவரால் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தம்தான் இதற்குக் காரணம். அது ‘சீர்திருத்தம் மற்றும் தாராளமயம்’ என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அந்தச் சீர்திருத்தம் மூலமாக 74 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்க முடிந்தது. ‘சீன பண்பியல்புகளுடன் கூடிய சோசலிசம்’ என்ற கருத்தின் கீழ், டெங் அப்போதிருந்த அணுகுமுறையை எதிர்த்தார். விவசாயம், தனியார் துறையை தாராளமயமாக்குதல், தொழில்துறையை நவீனமயமாக்குதல், சீனாவின் கதவுகளை வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் திறந்துவிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களை ஊக்குவித்தார். இந்தப் பாதை சீனாவை மாவோ சேதுங்கின் கம்யூனிசத்தில் இருந்து விலக்கியது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வார்த்தைகளில் சொல்வதானால், கடந்த காலத்தின் ‘சங்கிலிகளை உடைப்பதை’ இது பிரதிநிதித்துவப்படுத்தியது. ‘ஒரு ஏழை நாடு’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அன்றைய காலத்தில், சீனாவின் பொருளாதாரம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது இந்த மாற்றம் 1978இல் தொடங்கியது. சீனாவின் பொருளாதாரம் இன்று அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது. ஆனால் அன்றைய காலத்தில், அதன் பொருளாதாரம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. ஐ.நா. புள்ளிவிவரங்களின்படி, அதன் 800 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 150 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2022இல் சீனாவுக்கு இருந்த 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியை விட மிகவும் குறைவு. சீன மக்கள் குடியரசின் நிறுவனர் மாவோ சேதுங் 1976இல் இறந்தார். அவர் ஒரு சர்ச்சைக்குரிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றார் என்றுதான் கூற வேண்டும். அவரது முக்கிய திட்டங்களில் ஒன்றாக கிரேட் லீப் ஃபார்வர்ட் (1958-1962) இருந்தது. இது நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இது குறைந்தது ஒரு கோடி மக்களைக் (சுயாதீன ஆதாரங்களின்படி, 4.5 கோடி வரை) கொன்ற பஞ்சத்திற்கு வழிவகுத்தது. மேலும், 'முதலாளித்துவத்தின்' ஆதரவாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கலாசாரப் புரட்சி (1966-1976) என்ற மாவோவின் பிரசாரமும் இழப்புகளுக்கு வித்திட்டது. பல்வேறு ஆதாரங்களின்படி, இதனால் பல ஆயிரங்கள் முதல் பல லட்சம் மக்கள் வரை இறந்தனர். இது சீனாவின் பொருளாதாரத்தையும் முடக்கியது. சீனாவில், வறுமையும் பட்டினியும் தாண்டவமாடிய இந்தச் சூழ்நிலையில்தான் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அப்போது இருந்த டெங் ஷியோபிங் ஒரு மாற்றத்தை முன்மொழிந்தார். புதிய சூத்திரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1978இல் சாங்’அன் அவென்யூ சைக்கிள்களால் நிரம்பியிருக்கும் காட்சி, அப்போது பெய்ஜிங்கில் இதுபோன்ற காட்சிகள் பொதுவான ஒன்றாகவே இருந்தது ‘நான்கு நவீனமயமாக்கல்கள்’ என்று அழைக்கப்படுவதையும், வணிகச் சந்தை முக்கிய பாத்திரம் வகிக்கும் ஒரு பொருளாதாரத்தை நோக்கிய பரிணாமத்தையும் டெங் அறிவுறுத்தினார். இந்தத் திட்டம் 1978 டிசம்பர் 18 அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது, அது பொருளாதார நவீனமயமாக்கலை அதன் முக்கிய முன்னுரிமையாக வைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், அந்தச் சமயத்தில் சீனாவின் லட்சியமாகக் கருதப்பட்ட மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுவும் கட்சியின் மிகவும் பழமைவாத பிரிவின் எதிர்ப்பையும் மீறி அவை முன்னெடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, விவசாயத் துறையில், மாவோயிஸ்ட் அமைப்பின் திட்டமிடப்பட்ட கிராமப்புற பொருளாதாரத் திட்டம் படிப்படியாகக் கைவிடப்பட்டது. இதனால் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நாட்டின் பல பகுதிகளை வறுமையிலிருந்து மீட்கவும், நகரங்களுக்கு தொழிலாளர்கள் இடம்பெயர்வதை ஊக்குவிக்கவும் முடிந்தது. தனியார் துறையின் மீதிருந்த ‘தடைகள்’ தளர்த்தப்பட்டன. 1949இல் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக, நாடு அந்நிய முதலீட்டிற்குத் திறக்கப்பட்டது. ஷென்சென் நகரம் போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன, அவை நம்பமுடியாத மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டன. இன்று ஷென்சென் ‘சீனாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று விவரிக்கப்படுகிறது. வெளி உலகத்திற்கான இந்த அணுகல், சீனாவின் உற்பத்தித் திறன் மற்றும் புதிய மேலாண்மை முறைகளை அதிகரிப்பதில் பங்களித்தது. இந்த மாற்றங்கள் 2001ஆம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பில் இணைவதற்கான சீனாவின் நீண்ட செயல்முறைக்கு வழிவகுத்தது. அதன் மூலம் உலகமயமாக்கலுக்கான கதவுகள் திட்டவட்டமாகத் திறக்கப்பட்டன. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. கடந்த 2008இல், உலகளாவிய நிதி நெருக்கடி வெடித்து, மேற்கத்திய நாடுகள் புதிய சந்தைகளைத் தேடத் தொடங்கியபோது, சீனா அவை அனைத்தைக் காட்டிலும் தனித்து நின்றது. ‘உலகின் தொழிற்சாலையாக’ சீனா மாறுவதற்கு அது வழிவகுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் அன்கிங் நகரில் தரவு சேமிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொழில்துறை பூங்கா இருப்பினும், அதன் பொருளாதார ஏற்றத்திற்குப் பின்னர், சீனா இப்போது அந்த அடையாளத்தை உதறித் தள்ளப் போராடுகிறது. உற்பத்தியில் இருந்து விலகி, புதுமைகளுக்கான நாடு என்ற இடத்திற்கு நகர முயல்கிறது. பல காரணிகள் சீனா ஏற்கெனவே அவ்வாறு செய்து வருவதைக் குறிக்கின்றன. போக்குவரத்து பொருளாதார ஆலோசனை நிறுவனமான எம்.டி.எஸ் டிரான்ஸ்மோடலின் கருத்துப்படி, மலேசியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஆடை உற்பத்தியில் பெரும் பங்கை உறிஞ்சியுள்ளன. அதே நேரத்தில் தைவான் உலோக உற்பத்தியில் ஓரளவு உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் நாடு உற்பத்தித் துறை மற்றும் கடல்சார் துறையில் முதலீடு செய்யத் தொடங்கிய பின்னர் வியட்நாம் தனது உற்பத்தி வர்த்தகத்தில் நல்ல பங்கைப் பெற்றுள்ளது. அரசியல் மாற்றம் படக்குறிப்பு, மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த சீனத் தலைவராக ஷி ஜின்பிங் கருதப்படுகிறார் பொருளாதார வெற்றி இருந்தபோதிலும், சீர்திருத்தங்கள் நாட்டிற்கு எதிர்மறையான விளைவுகளையும் கொண்டு வந்தன. அதாவது அதன் பெரும்பாலான நகரங்களில் பிரச்னையாக இருக்கும், கடுமையான காற்று மாசுபாடு மற்றும் சமத்துவமின்மை. முந்தைய பிரச்னை, இப்போது பல நகரங்களில் ஒரு பெரிய விஷயமாக இல்லை. சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்திக் கொள்கை நிறுவனத்தின் (EPIC) அறிக்கைப்படி, 2013 மற்றும் 2020க்கு இடையில் காற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் துகள்களின் அளவை சீனா 40% குறைத்துள்ளது. இதற்கிடையில், 2000களில் மிக உயர்ந்த மட்டத்தை எட்டிய சமத்துவமின்மை, கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பல ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் பல மாற்றங்கள் இருந்தபோதிலும், எஞ்சியுள்ள ஒரு விஷயம், உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி விமர்சிக்கப்படும் ஓர் அரசியல் அமைப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்று சீனா ஒரு முன்னணி உலக சக்தியாக உள்ளது மற்றும் உலகின் முன்னணி பொருளாதாரமாக மாறவும் விரும்புகிறது கடந்த ஆண்டுகளில், சீனாவில் நிலவி வரும் இறுக்கமான, ஒரு கட்சி ஆட்சிமுறையில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. மனித உரிமைகள் ‘அடக்குமுறை’ அதிகரித்து வருவதாகவும், தற்போதைய சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் அதிக அதிகாரங்கள் குவிவதால், மக்களின் சுதந்திரத்தை அவர் அதிகளவில் கட்டுப்படுத்துவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற, குடியரசு நிறுவப்பட்டதன் 74வது ஆண்டு விழாவில், சீனாவின் எதிர்காலம் ‘பிரகாசமாக உள்ளதாக’ ஷி ஜின்பிங் கூறினார். மேலும், நாடு எவ்வாறு வறுமையிலிருந்து செழிப்பை நோக்கி ‘அனைத்து அம்சங்களிலும்’ நகர்ந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். இந்த உரை பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மண்டபத்தில் இருந்து வழங்கப்பட்டது. அங்குதான் ஒரு காலத்தில் சீன ராணுவம் மக்கள் ஆர்ப்பாட்டங்களைப் பலவந்தமாக நசுக்கியது. அதனால் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது. சீன வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயம் குறித்துப் பேசுவதுகூட சீன மக்களுக்குத் தடை செய்யப்பட்டதாகவே உள்ளது. அதுமட்டுமின்றி, அந்நாட்டின் அரசியல் அமைப்பு பற்றிய எந்தவொரு விமர்சனமும்கூட தடைசெய்யப்பட்டதாகவே உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7wq2p31r5o
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
மூன்று நாட்களில் முடிவடைந்த டெஸ்டில் தென் ஆபிரிக்காவுக்கு மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றி (நெவில் அன்தனி) சட்டோக்கரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 273 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா அமோக வெற்றிபெற்றது. மூன்று நாட்களில் நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்தது. புளூம்ஃபொன்டெய்னில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்களால் வெற்றிகொண்டதே தென் ஆபிரிக்காவின் முந்தைய மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றியாக இருந்தது. இன்றைய வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என முழுமையாக தென் ஆபிரிக்கா கைபற்றியது. அத்துடன் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் உபகண்டத்தில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த நான்கில் மூன்றில் வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தென் ஆபிரிக்காவின் வெற்றியில் கன்னிச் சதங்கள் குவித்த டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், பந்துவீச்சில் பிரகாசித்த கெகிசோ ரபாடா, கேஷவ் மஹாராஜ், சேனுரன் முத்துசாமி ஆகியோர் முக்கிய பங்காற்றினர். இந்தப் போட்டி ஆரம்பித்தது முதல் கடைசிவரை தென் ஆபிரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 575 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்ட தென் ஆபிரிக்கா, எதிரணியை முதலாவது இன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் 143 ஓட்டங்களுக்கும் சுருட்டி அமோக வெற்றியீட்டியது. இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்காவின் முதலாவது இன்னிங்ஸ் ஒன்றரை நாட்களுக்கு மேல் நீடித்ததுடன் பங்களாதேஷின் இரண்டு இன்னிங்ஸ்களும் ஒன்றரை நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் பிற்பகல் 1.20 மணியளவில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஃபலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மூன்றரை மணித்தியாலங்களுக்குள் 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: 575 - 6 விக். டிக்ளயார்ட் (டோனி டி ஸோர்ஸி 177, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 106, வியான் முல்டர் 105 ஆ.இ., சேனுரன் முத்துசாமி 68 ஆ.இ., டேவிட் பெடிங்டன் 58, தய்ஜுல் இஸ்லாம் 198 - 5 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 159 (மொனிமுல் ஹக் 82, தய்ஜுல் இஸ்லாம் 30, உதிரிகள் 22, கெகிசோ ரபாடா 37 - 5 விக்., டேன் பெட்டர்சன் 31 - 2 விக்., கேஷவ் மஹாராஜ் 57 - 2 விக்.) பங்களாதேஷ் - ஃபளோ ஒன் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஹசன் மஹ்முத் 38, நஜிமுல் ஹொசெய்ன் ஷன்டோ 36, மஹிதுல் இஸ்லாம் அன்கொன் 29, கேஷவ் மஹாராஜ் 59 - 5 விக்., சேனுரன் முத்துசாமி 45 - 4 விக்.) ஆட்டநாயகன்: டோனி டி ஸோர்ஸி, தொடர் நாயகன்: கெகிசோ ரபாடா (14 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/197607
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
(எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் பாராளுமன்ற முறையை அனுமதித்துள்ள நிலையில் பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே பாராளுமன்ற முறைமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை (30) தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பமாக பாராளுமன்றத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் நூறுவீதம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். நூற்றுக்கு 42வீதம் உள்ளவருக்கு நூற்றுக்கு நூறுவீதம் எவ்வாறு வழங்க முடியும். அநுரகுமார எங்கு கணிதம் கற்றார் என எனக்கு தெரியாது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ் நாடுகள் தேர்தல் நடத்தின. எதிர்க்கட்சியை நீக்கிவிட்டு தங்களின் பங்கை அதிகரித்துக்கொண்டார்கள். அவ்வாறான முறையை எங்களுக்கு செய்ய முடியாது. நூற்றுக்கு 42 வீதம் என்றால் அந்த கணக்குதான் அதனைவிட குறைந்தாலும் அதிகரிக்கப்போவதில்லை. எமது நாட்டின் அரசியலமைப்பின் மூன்றாம் நான்காம் உறுப்புரையின் கீழ் இறையாண்மை இருப்பது மக்களுக்காகும். வாக்கு அதிகாரம் அதில் ஒரு பகுதி. ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்து வாக்குரிமையை பெற்றுக்கொள்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் தான் விரும்பும் கட்சிக்கு வாக்களித்த பின்னர், மூன்று விருப்பு வாக்கு இருக்கிறது. ஐராேப்பிய நாடுகள் பலவற்றில் இந்த முறைமை இருக்கிறது. ஆனால் திசைகாட்டி சொலவது என்ன? கட்சிக்கு வாக்களிக்குமாறு தெரிவிக்கிறார்கள். ஆனால் விருப்பு வாக்கு தொடர்பில் எதுவும் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக தெரிவிப்பது, கட்சியை தெரிவு செய்யும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குகிறோம். வேட்பாளர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தை டில்வின் சில்வாவுக்கும் அரசியல் சபைக்கும் எடுத்துக்கொள்கிறார்கள். இது ஜனநாயகமா? வேட்பாளரை தெரிவு செய்யும் மக்கள் ஆணையை டில்வின் சில்வா எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும். பாராளுமன்றத்துக்கு சென்று தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முடியுமான நபர்கள் தொடர்பில் மக்களுக்கே தெரியும். அத்துடன் பாராளுமன்றம் திருடர்களின் குகை என்கிறார்கள். அவ்வாறு தெரிவிப்பதற்கு அநுரகுமாரவுக்கு உரிமை வழங்கியது யார்.? அவர்களின் வீதம் நூற்றுக்கு 42 வீதமாகும். பாராளுமன்றம் தொடர்பில் நம்பிக்கை இருப்பதாக நூற்றுக்கு 58 வீதமான மக்கள் தெரிவிக்கிறார்கள். பாராளுமன்றத்தில் கை வைப்பதற்கு திசைகாட்டிக்கு இருக்கும் உரிமை என்ன? ஜனாதிபதியை நிர்வகிப்பது பாராளுமன்றமாகும். அவ்வாறான ஒரு இடத்தை திருடர்களின் குகை என ஜனாதிபதி எவ்வாறு தெரிவிக்க முடியும். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவுக்கு எதிராக காவிந்த ஜயவர்த்தன பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் ஓகஸ்ட் 31ஆம் திகதி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்தார். இவர் திருடரா இல்லையா? என்பதை வழக்கு மூலம் முடிவு செய்ய வேண்டும். கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாராளுமன்ற விவாதத்தை நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் எமக்கு தீர்மானமொன்றை எடுக்க முடியும் என்றே நாங்கள் தெரிவித்தோம். உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இந்த விவாதத்தை நடத்தலாம் என்று கூறியிருந்தோம். அது சட்ட ரீதியிலான முறையாகும். ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சென்றால் பாராளுமன்றம் அந்த தீர்ப்புக்கு அமையவே நடவடிக்கை எடுக்கிறது. அதற்கு மத்தியில் சட்டமா அதிபர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். யாருக்கு எதிராக வழக்கு தொடுத்தீர்கள் என எனக்கு கேட்டிருக்கலாம். ஆனால் நான் எதுவும் செய்ய முற்படவில்லை. மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகளை நீக்குவதாக தெரிவிக்கிறார்கள். எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இருப்பது அரச வீட்டில் அல்ல. இவர்கள் தெரிவிப்பது போல் எனது கஜு சாப்பாடு, எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கிய 16 குடைகளை வழங்குவதை நிறுத்துவது போன்ற விடயங்களால் 120 கோடி மீதமாகி இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வீட்டில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் எதற்காக முற்படுகிறார்கள்? அவரின் கனவரை கொலை செய்தது மக்கள் விடுதலை முன்னணியாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் சிறப்புரிமைகளை அவ்வாறே வழங்குங்கள். எனது விடயங்களை நீக்கிவிடுங்கள். பாராளுமன்றத்துக்கு கை வைப்பதற்கு செல்ல வேண்டாம் என்றே நான் தெரிவிக்கிறேன். அவ்வாறு செயவதாக இருந்தால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே இந்த பாராளுமன்ற முறையை பாதுகாக்க முடியும். எமது முறைமையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் அனுபவமுள்ளவர்கள் மற்றும் பழையவர்களும் இருக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197604
-
பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீ - அணுக்கசிவு ஆபத்து இல்லை என அறிவிப்பு
பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிஏஈ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் பகுதியொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று பிஏஈசிஸ்டம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனின் பரோ இன் பேர்னெஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் பிரிட்டனிற்கான நீர்மூழ்கிகள் உருவாக்கப்படுகின்றன. அணுக்கசிவு ஆபத்தில்லை என அறிவித்துள்ள பொலிஸார் எனினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/197481
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஐ.பி.எல். 2025 வீரர்கள் ஏலத்திற்கு முன்பதாக தோனி, மதீஷ, ஜடேஜா, ருத்துராஜ், டுபே ஆகியோரை CSK தக்கவைக்கவுள்ளது -நெவில் அன்தனி ஐபிஎல் 2025 வீரர்களுக்கான மாபெரும் ஏலத்திற்கு முன்பதாக சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியால் தக்கவைக்கப்படும் ஐந்து வீரர்களில் எம்.எஸ். தோனி, இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்தரண ஆகியோர் அடங்குகின்றனர். அவர்களுடன அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், ரவீந்த்ர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோரும் அடங்குகின்றனர். தக்கவைக்கப்பட்ட ஒவ்வொரு வீரருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் செலுத்தும் தொகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவர்களுக்கான மொத்த விலையில் இந்திய ரூபா 120 கோடியில் இருந்து குறைந்தது இந்திய ரூபா 65 கோடியை சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் தேசிய வீரர்கள் அல்லாத வீரராக 43 வயதான தோனி இடம்பெறவுள்ளார். ஐந்து வருடங்களுக்கு மேல் தேசிய அணிகளில் விளையாடாதவர்களை தேசிய வீரர்கள் அல்லாத வீரர்களாக கணிக்கப்படுவர் என்ற விதியை ஐபிஎல் முகாமைத்துவம் மீண்டும் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாகவே தேசிய விரர்கள் அல்லாத பிரிவில் தோனி இடம்பெறுகிறார். ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2019க்குப் பின்னர் இந்தியாவுக்காக தோனி விளையாடவில்லை. மாபெரும் ஏலத்திற்கு முன்பதாக பத்து அணிகளின் உரிமையாளர்களும் தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல்-க்கு சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இம் முறை ஆறு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் அதிகபட்சமாக ஐந்து பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடுபவர்களாக இருக்கவேண்டும். மற்றைய இருவர் தேசிய அணிகளில் இடம்பெறாதவர்களாக இருக்கலாம். கடந்த வருடம் அணித் தலைவர் பதவியிலிருந்து தோனி விலகிக்கொண்டதை அடுத்து அப் பதவி ருத்துராஜ் கய்க்வாடிடம் ஒப்படைக்கப்பட்டது. எவ்வாறாயினும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதான விக்கெட்காப்பாளராக தோனி தொடர்ந்து விளையாடினார். ஆனால், துடுப்பாட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பங்களிப்பையே அவர் வழங்கினார். கடந்த வருடம் முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பெடுத்தாடாமல் இருந்த அவர், 11 போட்டிகளில் 73 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டார். நான்கு போட்டிகளில் 8ஆம், 9ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கினார். அவற்றில் சில போட்டிகளில் சிக்ஸ்களை விளாசி இரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் தனது பணிச் சுமையை தோனி கட்டுப்படுத்திக்கொண்டார். 'என்னால் முடிந்தவரை கடைசி சில வருடங்கள் முடிந்தளவு கிரிக்கெட் விளையாடி அனுபவிக்க விரும்புகிறேன்' என இந்த வார ஆரம்பத்தில் தோனி தெரிவித்திருந்தார். ஐபிஎல் முடிந்தவுடன் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் நடைபெறவிருந்ததால், ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதற்காக சில பந்துகளை மாத்திரம் எதிர்கொள்ள தீர்மானித்ததாக தோனி கூறினார். இது அவரது பெருந்தன்மையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது. https://www.virakesari.lk/article/197588
-
சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்; காரணம் தெரியுமா?
சீனாவுக்கு ஆண்டுதோறும் கழுதைகளை லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்வதற்கு பாகிஸ்தான் சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் வருமானம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி சுமார் 52 லட்சம் கழுதைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மாடுகள் அதிக அளவு இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது கழுதைகள் அவ்வளவாக இறைச்சிக்கு பயன்படுத்தப்படுவது கிடையாது. இந்த நிலையில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் சீனாவுக்கு ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கழுதைகளை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது. சீனாவுக்கு தோல் மற்றும் இறைச்சியை ஏற்றுமதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, சீனாவின் இந்த ஒப்பந்தம் சரிவிலிருந்து மீள ஓரளவு கை கொடுக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில நூறு கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவை பொறுத்த அளவில் அங்கு பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக கழுதையுடைய தோல்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் அந்நாட்டின் தேவைக்கு தகுந்தார் போல் கழுதைகள் எண்ணிக்கை கிடையாது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று உணவுக்காகவும் சீனாவில் கழுதை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. கழுதை இறைச்சியை பயன்படுத்தி வித விதமான உணவுப் பொருட்களை சீனர்கள் தயாரிக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் உடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/311398
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
ஒரே ஒரு பந்தில் 10 ஓட்டங்ளைப் பெற்ற பங்களாதேஷ் அடுத்த 53 பந்துகளில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்ளை இழந்தது; பலாமான நிலையில் தென் ஆபிரிக்கா (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டோக்ரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அப் போட்டியில் பங்களாதேஷ் ஒரே ஒரு பந்தில் பத்து ஓட்டங்களைப் பெற்றுவிட்டது. ஆனால் அந்த ஓட்டங்கள் துடுப்பிலிருந்து பெறப்படவில்லை. தென் ஆபிரிக்காவுக்கு பதிலளித்து முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே 5 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அத்துடன் சட்டபூர்வமான ஒரே ஒரு பந்தில் 10 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுவிட்டது. அப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது சேனுரன் முத்துசாமி ஓட்டங்களைப் பெறுகையில் அடிக்கடி ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் அவர் எச்சரிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவ்வணிக்கு 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த 5 அபராத ஓட்டங்கள்தான் பங்களாதேஷுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு முன்னரே இனாம் ஓட்டங்களாக கிடைத்தது. பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடியபோது கெகிசோ ரபாடா வெளிநோக்கி வீசிய முதலாவது பந்தை பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் ஷாத்மன் இஸ்லாம் வெறுமனே விட்டுவிட்டார். இதனிடையே எண்ணிக்கைப் பலகையில் 5 இனாம் ஓட்டங்கள் சேர்ந்திருந்தது. அடுத்த பந்து நோ போல் ஆனதுடன் அப் பந்து விக்கெட் காப்பாளரைக் கடந்து எல்லைக்கொட்டைத் தாண்டி சென்றுவிட்டது. இதனால் மேலும் 5 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு சேர, ஒரு சட்டபூர்வ பந்து வீசப்பட்ட நிலையில் அதன் மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தது. ஆனால் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் அடுத்த 53 பந்துகளுக்குள் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கையான 38 ஓட்டங்களில் 5 இனாம் ஓட்டங்கள் உட்பட 13 உதிரிகள் அடங்கியிருந்தது. அப் போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் குவித்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர் ஆகிய மூவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்தனர். இந்த மூவரும் இப் போட்டியில் தத்தமது கன்னிச் சதங்களைப் பெற்றது விசேட அம்சமாகும். போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. தனது துடுப்பாட்டத்தை 141 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த டோனி டி ஸோர்ஸி 177 ஓட்டங்களைப் பெற்றார். டேவிட் பெடிங்டன் 59 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் வியான் முல்டர் 105 ஓட்டங்களுடனும் சேனுரன் முத்துசாமி 68 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். போட்டியில் முதல் நாளான நேற்றைய தினம் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்திருந்தார். பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 198 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/197547
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமாட்டோம் - ஜனாதிபதி செயலக அதிகாரி
புதிய நாடாளுமன்றம் கூடியதன் பின்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து அரசு முடிவு செய்யும் புதிய அரசாங்கம் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லது கடந்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான எந்தவொரு முடிவையும் அடுத்த பாராளுமன்றத்திற்குப் பின்னரே பரிசீலிக்கும் என்று உயர்மட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கையாள்வதில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்தமைக்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வாராந்த அமைச்சரவை மாநாட்டில் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத், இது இந்த நேரத்தில் ரத்து செய்யப்படவோ அல்லது திருத்தப்படவோ மாட்டாது என தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான பணிகளை கடந்த அரசாங்கம் ஆரம்பித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகு, அப்போதைய அரசு அசல் வரைவில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால், அது சட்டமாக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை அல்லது கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முழுமையான அமைச்சரவை இல்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாராளுமன்றம் கூடியதும், அரசாங்கம் இந்த சட்டங்களைப் பார்த்து அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யும்” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/311393
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் பதிவு - தேர்தல் ஆணைக்குழு பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை) 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 316 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 788 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/197599
-
பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை
2024 ஆம் ஆண்டில் இதுவரை தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பொருட்கள் பிரிவு தெரிவித்துள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த 71 மருந்துகளில், சுமார் 39 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, பத்து மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை. இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவர் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் தரக் குறைபாடு ஏற்படுவது சாதாரண நிகழ்வு என்றும் கூறினார். “எனினும், தரமற்ற மருந்து எதுவும் சந்தையில் இல்லை என்பதை உறுதி செய்கிறோம்,” என்றும் அவர் உறுதிப்படுத்தினார். தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அல்லது நிறுத்தப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/311396
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
சீனாவிடமிருந்து இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான உதவி இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது. சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது. அந்த நிதி உதவிக்கு மேலதிகமாக இந்த உதவியும் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிடுகிறது. https://thinakkural.lk/article/311408
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!
யாழ். கற்கோவளம் இரட்டைக்கொலை : இரு சந்தேகநபர்கள் கைது யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான தீவிர நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோர் நேற்றைய தினம் புதன்கிழமை வீட்டில் படுகொலை செய்ய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட குடும்ப தலைவர் சலவை தொழிலாளி எனவும், அவர் அச்சுவேலி வைத்தியசாலை துணிகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை அண்மையில் பெற்று இருந்ததாகவும், அதனால் தொழில் ரீதியில் எதிர்ப்புக்கள் சில கிளம்பியிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பொலிஸார் இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேவேளை கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கழுத்தை நெரித்த பின்னர் கொங்கிறீட் கற்களால் தலையில் பலமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படுகொலையானவர்களின் ஒரு மகன் வெளிநாடொன்றில் வசித்து வருவதாகவும், மற்றைய மகன் தாய் தந்தையாருடன், படுகொலை நடைபெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று, தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/197591
-
ஸ்பெயின்: 'சுனாமி போல வந்தது' - 50 ஆண்டுகளில் மோசமான வெள்ளம், 95 பேர் பலி
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பிரான்சிஸ் மாவோ, பெத்தனி பெல் பதவி, பிபிசி நியூஸ் ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை தற்போது சந்தித்து வருகிறது. கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் காணாமல் போய்விட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலங்களும் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பினர். இந்தப் பேரிடருக்காக மூன்று நாட்கள் ஸ்பெயினில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்சேஸ் அறிவித்துள்ளார். "பலர் காணாமல் போயுள்ளனர்" என்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சுவதாக அரசு கூறுகிறது. வலென்சியாவில் குறைந்தது 92 இறப்புகள் பதிவாகியுள்ளன, வலென்சியாவின் மேற்கில் உள்ள காஸ்டில்லா-லா மன்சாவில் மேலும் இரண்டு இறப்புகளும், மலாகாவில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. மலாகாவில் 71 வயதான பிரிட்டிஷ் நபர் தனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இறந்தார். கடந்த 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏற்படும் மிக மோசமான வெள்ள பாதிப்பு இது. ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு பிரதமர் சான்சேஸ் ஆற்றிய உரையில், குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியதுடன், முழுமையாக மீள்வோம் என்றும் உறுதி அளித்துள்ளார். "ஒட்டுமொத்த ஸ்பெயினும் உங்களுடன் சேர்ந்து அழுகிறது... நாங்கள் உங்களைக் கைவிட மாட்டோம்" என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் சான்சேஸ் கூறினார். வலென்சியாவுக்கு அருகிலுள்ள முதல் நகரங்களில் ஒன்றான ஷிவாவில், ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை எட்டு மணிநேரத்தில் பெய்துள்ளதாக தேசிய வானிலை நிறுவனமான ஏமெட் தெரிவித்துள்ளது. 'சுனாமி போல வந்த வெள்ளம்' பட மூலாதாரம்,GETTY IMAGES புதன்கிழமை காலை ஸ்பெயின் ராணுவம் மற்றும் அவசரக்கால குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ள விரைந்தபோது, பால்கனிகள் மற்றும் கார் கூரைகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வலென்சியாவில் தப்பிப் பிழைத்தவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளத்தின் கொடூரத்தை விவரித்தனர். திடீரென ஏற்பட்ட அலை வீதிகள் மற்றும் சாலைகளை ஆறுகளாக மாற்றியது எனவும், பல வாகன ஓட்டிகள் அதில் தெரியாமல் சிக்கிக்கொண்டனர் எனவும் தெரிவித்தனர். வலென்சியாவுக்கு அருகிலுள்ள பைபோர்ட்டாவை சேர்ந்த 21 வயதான கில்லர்மோ செரானோ பெரெஸ், தண்ணீர் "சுனாமி போல" நெடுஞ்சாலையில் தங்களை நோக்கி வந்ததை நினைவு கூர்கிறார். அவரும் அவரது பெற்றோரும் தங்கள் காரைவிட்டு, உயிர் பிழைக்க ஒரு பாலத்தில் ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மற்றொருவர், “வெள்ளம் ஆக்ரோஷமாக நெருங்கி வருவதை உணர்ந்த வாகன ஓட்டிகள், சாலையின் தடுப்புகளுக்கு அருகில் மனித சங்கிலி உருவாக்கி கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு நின்றனர். நல்ல வேளையாக யாரும் கீழே விழவில்லை. விழுந்திருந்தால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள்” என்று 45 வயதான பாட்ரிசியா ரோட்ரிக்ஸ் எல் பைஸ் செய்தித்தாளிடம் கூறினார். லா டோரேவில் வசிக்கும் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், அவரது நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்துவிட்டதாகவும், செவ்வாய்க் கிழமை இரவு "தண்ணீரில் கார்கள் மிதப்பதையும்" அலைகள் "சில சுவர்களை உடைத்துக் கொண்டு செல்வதையும்" பார்த்ததாகக் கூறினார். இதற்கிடையில், வலென்சியாவுக்கு அருகிலுள்ள ஹார்னோ டி அல்செடோ நகரின் மேயர், சில நிமிடங்களில் நீர் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக எவ்வாறு உயர்ந்தது என்று பிபிசி நியூஸ்ஹவரிடம் தெரிவித்தார். "வெள்ளப்பெருக்கு மிக விரைவாக இருந்தது - நாங்கள் அவசர சேவைகளை அழைத்தோம், அவர்கள் கழுத்து வரை தண்ணீருடன் இருந்த சிலரை மீட்கத் தொடங்கினர்" என்று கான்சுவேலோ தாராசோன் கூறினார். உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கப்பட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES அவசரக் காலங்களில், உரிய எச்சரிக்கைகள் இருந்தபோதும், பேரிடர் நிவாரண அதிகாரிகள் மிகவும் தொய்வாகச் செயல்பட்டதாகப் பல நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மக்கள் சாலைகளைப் பயன்படுத்தவோ, உயரமான இடத்திற்குச் செல்லவோ முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. செவ்வாய்க் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 8.15 மணி வரை, தேசிய பேரிடர் காலங்களில் பொறுப்பாக நியமிக்கப்படும், தி சிவில் பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து வெள்ளம் குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாக ஷிவா மற்றும் அதற்கு அருகில் இருந்த சில பகுதிகள் 2 மணிநேரமாக வெள்ளத்தில் தத்தளித்து வந்தன. வெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வலென்சியா அவசரக்கால பிரிவைத் தற்போதுள்ள அரசு நீக்கியிருந்தது. அந்த முடிவை நியாயப்படுத்த வேண்டிய நிர்பந்தமும் தற்போது அரசுக்கு எழுந்துள்ளது. 'முன்னெப்போதும்' இல்லாத மழை பட மூலாதாரம்,GETTY IMAGES புதன்கிழமை மீட்புப் பணிகளில் ஈடுபட ஸ்பெயின் அரசு 1,000க்கும் மேற்பட்ட துருப்புகளை களத்தில் இறக்கியது. ஆனால் பல குழுக்கள் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நகரங்களை நெருங்க முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஸ்பெயினின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைக்க உதவுவதற்காக அதன் கோப்பர்நிக்கஸ் செயற்கைக்கோள் அமைப்பு செயல்படத் தொடங்கியதாகக் கூறினார். மற்ற ஐரோப்பிய அண்டை நாடுகளும் கூடுதல் படைகளை அனுப்ப முன்வந்துள்ளன. ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ், இந்த வெள்ளம் "முன்னெப்போதுமே இல்லாத நிகழ்வு" என்று புதன்கிழமை கூறியிருந்தார். நாட்டின் மத்திய கிழக்கில் புதன்கிழமையன்று மழை தணிந்தது. ஆனால் மழை வடகிழக்கு நோக்கி கட்டலோனியா பிராந்தியத்திற்கு நகர்வதாக வானிலை அதிகாரிகள் எச்சரித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன, வெள்ளத்தை எதிர்கொள்ளவும் தஞ்சமடையவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. வெள்ளம் பல்வேறு காரணங்களால் உருவாகிறது. ஆனால் காலநிலை மாற்றத்தால் வளிமண்டலம் வெப்பமடையும்போது, அது தீவிர மழைப் பொழிவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தீவிர மழைக்கு முக்கியயக் காரணம் "கோட்டா ஃப்ரியா" என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இலையுதிர்க் காலத்திலும் குளிர்காலத்திலும் மத்தியதரைக் கடலில் சூடான நீரில் குளிர்ந்த காற்று இறங்கும்போது ஸ்பெயினை தாக்கும் ஒரு இயற்கை வானிலை நிகழ்வு இது. மழை வெடிப்புகளுக்கு காலநிலை மாற்றம் காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும், புவி வெப்பநிலை அதிகரிப்பது, மேகங்கள் அதிக மழையைக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். "புதைபடிம எரிபொருள் உமிழ்வால் புவி வெப்பமடையும் ஒவ்வொரு முறையும் வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தை வைத்திருக்க முடியும். இது கனமழை வெடிப்புகளுக்கு வழிவகுக்கிறது" என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரெடெரிக் ஓட்டோ கூறினார். "இதில் எந்தச் சந்தேகமும் இல்லை, இந்த மழை வெடிப்புகள் காலநிலை மாற்றத்தால்தான் தீவிரமடைந்தன" என்கிறார் ஓட்டோ. தொழில்புரட்சி தொடங்கியதில் இருந்து உலகம் ஏற்கெனவே சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது. உலக நாடுகள், தங்கள் கரிம வெளியீட்டை விரைந்து குறைக்காவிட்டால், வெப்பநிலை மேலும் உயரும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9jlr9q8jgo
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
டி ஸோர்ஸி, ஸ்டப்ஸ் கன்னிச் சதங்கள்; பலமான நிலையில் தென் ஆபிரிக்கா (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் போட்டியில் டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் குவித்த கன்னிச் சதங்களின் உதவியுடன் தென் ஆபிரிக்கா பலமான நிலையில் இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்திருந்தது. தங்களது எட்டாவது போட்டியிலும் 5ஆவது போட்டியிலும் விளையாடும் டோனி டி ஸோர்ஸியும் ட்ரைஸ்டன் ஸ்டப்பஸும் இரண்டாவது விக்கெட்டில் 201 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் தென் ஆபிரிக்கா பலம்வாய்ந்த நிலையை அடைந்தது. தென் ஆபிரிக்க ஜோடியினரால் ஆசிய மண்ணில் பகிரப்பட்ட 3ஆவது அதிசிறந்த இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் இதுவாகும். பலமான நிலையை அடைந்ததன் மூலம் தென் ஆபிரிக்கா இந்தத் தொடரை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான அத்திவாரத்தை இட்டுக்கொண்டுள்ளது. இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்ததை தென் ஆபிரிக்கா துடுப்பாட்ட வீரர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். ஆரம்ப வீரரான அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், டோனி டி ஸோரி ஆகிய இருவரும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். மார்க்ராம் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் திறமையாக துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 201 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். 198 பந்துகளை எதிர்கொண்ட ட்ரைஸ்டன், 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்றார். டோனி டி ஸோர்ஸி முழுநாளும் துடுப்பெடுத்தாடி 211 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 141 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். டேவிட் பெடிங்ஹாம் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 110 ஓட்டங்களைக் கொடுத்து வீழ்ந்த இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/197456
-
சம்பள உயர்வு குறித்து அறிவிக்க முன் நிதியமைச்சின் அனுமதி தேவையில்லை : பிரதமர் ஹரினி அரசமைப்பு குறித்து எங்கு கற்றார் ? - ரணில்
அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும்; ரணில்! (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்ளுக்கு கை காட்டிவிட்டு சென்றாலும் புதிய ஜனநாயக முன்னணி குழுவினர் அரச ஊழியர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை. அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் மாலை பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பெரும்பான்மை இல்லாத நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் தெரிவாகி உள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த தேர்தல் இடம்பெறுகிறது. அதனால் இந்த தேர்தலில் வெற்றிபெறுவது கஷ்டம் என நாங்கள் நினைக்கக்கூடாது அரசாங்கத்தை பெற்றுக்கொள்ள நாங்கள் முயற்சிப்போம். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்க்கட்சியில் நாங்கள் பலமான இடத்துக்கு வரவேண்டும். சிலவேளைகளில் அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் அது தொடர்பாகவும் மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் முன்னுக்கு வந்திருக்கிறோம். நாடு வீழ்ச்சியடைந்திருந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்னுடன் முன்வந்தவ குழுவே தற்போது சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறது. எமது குழுவின் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு அனைவரும் கலந்து இருந்ததாலே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமாகியது. இந்த வருடம் இறுதிவரைக்கும் பேதுமானளவு நிதி வழங்கிய பின்னரே நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைத்தோம். வெளிநாட்டு கையிருப்பு இருக்கிறது. தற்போது அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மாத்திரமே அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அதனை செய்துகொள்ள முடியுமாகுமா என எனக்கு தெரியாது. அனுபவமுள்ள அணியொன்று இருந்தால் அரசாங்கத்தை சரியான திசைக்கு செலுத்த முடியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அதிகாரிகளின் அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்ததை நான் கண்டேன். மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் காலத்தில் வழங்கி பொய் வாக்குறுதி எனவும் அவர் தெரிவித்திருந்தார். அமைச்சரவை செயற்படுவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவை என பிரதமர் தெரிவிக்கிறார். அரசியலமைப்பு தொடர்பில் இவர் எங்கு கற்றுக்கொண்டார்? அரசியலமைப்பில் 43ஆவது உறுப்புரையை பாருங்கள். நாட்டை நிர்வகிப்பது அமைச்சரவையாகும். பிரதமருக்கு அரசியலமைப்பு தொடர்பில் தெரிந்துகொள்ள தேவை என்றால் சொல்லுங்கள் நான் வருகிறேன். இல்லாவிட்டால் முன்னாள் பிரதமர் வருவார். அமைச்சர்களின் வேலை நடவடிக்கைகளை அதிகாரிகளுக்கு வழங்கப்போகிறார்கள். இவ்வாறான குழுவுக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியுமா? அனுபவமுள்ளவர்கள் இருக்க வேண்டும். நான் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சராகவும் தினேஷ் குணவர்த்தன பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சராகவும் கடந்த மே மாதம் 27ஆம் திகதி நாங்கள் எடுத்த தீர்மானத்துக்கமைய அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக எனது செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடந்த ஜூலை 11ஆம் திகதி விசேட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தார். என்றாலும் அந்த சம்பள அதிகரிப்பை வழங்க பணம் இல்லை என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார். நான் பொய் சொல்லி இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அரச ஊழியர்களின் ஆரம்ப பிரிவின் மாதாந்த அடிப்படைச் சம்பளம் 30ஆயிரம் ரூபாவாகக் கொண்டு, அரச சேவையின் நிவைவேற்று குழு, உயர் சேவை குழு, அமைச்சரவை செயலாளர் ஆகிய பதவிகளுக்கிடையில் 1:6 விகிதாசாரங்களுக்கு அமைவாக ஒட்டுமொத்த அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அளவு திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இருப்பவர்கள் அரச திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஓய்வு பெற்ற அரச சேவை பணிப்பாளர்கள் மற்றும் தற்போதும் சேவையில் இருப்பவர்களாகும். இந்த குழுவில் இருக்கும் ஒருவர் தற்போது ஜனாதிபதியின் ஆலாேசகராக இருக்கிறார். இவர்கள் அனைவரும் சம்பள அதிகரிப்பு அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இது தொடர்பில் பிரதமருக்கு தெரியுமா? அப்படியானால் இந்த விடயத்தை அரசாங்கம் பொய் என எவ்வாறு தெரிவிக்க முடியும். திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருடன் இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம். அதனால் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட பணத்தை அரச அதிகாரிகளுக்கு செலுத்த முடியும். இவர்களுக்கு கண்டுபிடிக்க முடியாத வகையில் பொய் சொல்ல தெரியாது. பணம் இருக்கிறது. தேடிக்கொள்ளவும் முடியும். அதன் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அத்துடன் நான் ஒன்றை சொன்னால் நிச்சயமாக அதனை செய்வேன் திசை காட்டியை போன்று செயற்பட மாட்டேன். அதனால் எமது அணி மீது நம்பிக்கை வையுங்கள். எங்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு அன்று இவர்கள் அரச ஊழியர்களுக்கு கூறினர். அதன்படி அவர்களும் வாக்களித்தனர். இப்போது திசைகாட்டி அரச ஊழியர்களுக்கு டாடா காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்களால் தீர்மானிக்கப்பட்ட இந்த சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் இணங்கும் வரையில் நாங்கள் எதிர்ப்பை முன்னெடுப்போம். இந்த சம்பள அதிகரிப்பை கோரிய தொழிற்சங்கங்கள் எங்கே? இவர்களில் அதிகமானவர்கள் தற்போது அரசாங்கத்துடனே இருக்கின்றனர். இந்த தொழிற்சங்கங்கள் அரச ஊழியர்களை காட்டிக்கொடுத்துள்ளன. அரச ஊழியர்களுக்காக தற்போது குரல்கொடுப்பது சிலிண்டரில் போட்டியிடுபவர்கள் மாத்திரமாகும். ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் கதைத்து பயன் இல்லை. அநுவுடன் மோதப்போவதில்லை என சஜித் தெரிவித்திருக்கிறார். உண்மையான அநுரகுமார இருக்கும் போது எதற்கு கார்ட்போர்ட் அநுரகுமாரவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197503
-
டைனோசரை அழித்ததை விட 200 மடங்கு பெரிய விண்கல் மோதிய பிறகு பூமியில் உயிர்கள் செழித்தது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர் 2014-ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விண்கல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டைனோசரை அழித்த விண்கல்லைக் காட்டிலும் 200 மடங்கு பெரிய விண்கல் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கியது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காக, தென்னாப்பிரிக்காவில் இந்த விண்கல் விழுந்த பகுதிக்கு விஞ்ஞானிகள் சென்றனர். அங்கு அவர்கள் ஸ்லெட்ஜ் சுத்தியல்களை கொண்டு அந்த விண்கல்லின் சில பாறை துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். மிகப்பெரிய இந்த விண்கல் தாக்கியதால் பூமியில் பேரழிவு ஏற்பட்டதையும் தாண்டி, பூமியில் உயிர்கள் செழிக்க உதவியது என்பதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது. "பூமி உருவான கால கட்டத்தில், விண்வெளியில் ஏராளமான சிறிய விண்கல்கள் சுற்றிக்கொண்டிருந்தன. அவற்றில் பலவும் பூமி மீது மோதியிருக்கலாம் என்பதை நாம் அறிவோம்", என்று இந்த புதிய ஆராய்ச்சியை வழிநடத்திய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நட்ஜா டிராபன் கூறுகிறார். "ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய விண்கல் மோதலுக்கு நடுவே, பூமியில் உயிர்கள் தாக்குப்பிடிக்குமா என்ற நெருக்கடியான நிலை இருந்தது என்பதை கண்டறிந்தோம். ஆனால் அதன் பிறகே உயிர்கள் மிகவும் செழிப்பாக உருவாகி வளர்ந்துள்ளன", என்று அவர் கூறுகிறார். நமக்கு இதற்கு முன் தெரிந்த விண்கற்களை விட S2 விண்கல் மிகப் பெரிய ஒன்று. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் அழிவுக்கு வழிவகுத்த விண்கல் சுமார் 10 கிலோமீட்டர் அளவுக்கு அகலமானது. பூமியின் தொடக்க காலகட்டத்தில் S2 விண்கல் பூமியை தாக்கியது. அப்போது பூமி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டு இருந்தது. சில கண்டங்கள் மட்டுமே உருவாகியிருந்தன. அப்போது இருந்த உயிர்களும் ஒற்றை செல் உடைய எளிய உயிர்களாக இருந்தன. இந்த விண்கல் தாக்கிய கிழக்கு பார்பர்டன் கிரீன்பெல்ட் பகுதி பூமியின் பழமையான இடங்களில் ஒன்றாகும். இங்கு விண்கல்லின் எச்சங்கள் இன்னும் உள்ளன. பட மூலாதாரம்,NADJA DRABON பேராசிரியர் டிராபன், தன்னுடன் பணியற்றுபவருடன் இணைந்து மூன்று முறை இந்த பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இந்த மலைப்பகுதிகளில் யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளிடமிருந்தும் மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்தும் அவர்களைப் பாதுகாக்க துப்பாக்கிகளுடன் படைவீரர்கள் உடன் சென்றனர். அவர்கள் இந்த விண்கல்லின் சிறிய துகள்களை தேடிச் சென்றனர். சுத்தியலை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கிலோகிராம் பாறை துண்டுகளை சேகரித்து ஆய்வகங்களுக்கு அவர்கள் கொண்டு சென்றனர். இதில் முக்கியமான மதிப்பு மிக்க விண்கல் துகள்களை பேராசிரியர் டிராபன் தனது பெட்டியில் வைத்திருந்தார். "நான் பயணம் செய்யும் போது பெட்டிகளை சோதனை செய்வதற்காக நிறுத்தப்படுவேன். அப்போது அதிகாரிகளிடம் விஞ்ஞானம் எவ்வளவு அற்புதமானது என்பதைப் பற்றி ஒரு பெரிய விளக்கத்தை கொடுப்பேன். இதை கேட்டு அவர்கள் சலிப்படைந்து என்னை கடந்து செல்ல அனுமதிப்பார்கள்", என்று அவர் கூறுகிறார். S2 விண்கல் பூமியில் விழுந்த போது என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதேபோன்ற மாதிரியை இந்த குழு செயற்கையாக மீண்டும் உருவாக்கி ஆய்வு செய்தது. இந்த விண்கல் பூமியில் விழுந்த போது 500 கிலோமீட்டர் அளவிற்கு பெரிய பள்ளத்தை உருவாக்கியது. அதிலிருந்து சிறு பாறை துண்டுகள் மிக வேகமாக சிதறின. இதனால் உலகம் முழுவதும் புகை மண்டலம் போல உருவானது. "ஒரு மழை மேகத்தை கற்பனை செய்து பாருங்கள். அதிலிருந்து நீர்த்துளிகள் கீழே விழுவதற்கு பதிலாக, வானத்தில் இருந்து உருகிய பாறைத் துகள்கள் பொழிவதை போன்றது அது", என்று பேராசிரியர் டிராபன் கூறினார். பட மூலாதாரம்,NADJA DRABON உலகம் முழுவதும் கடலில் ஒரு பெரிய சுனாமி எழும்பி, கடலோரப் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்திருக்கும். "அந்த சுனாமியுடன் ஒப்பிடுகையில், 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி மிகவும் சாதாரண ஒன்று" என்று பேராசிரியர் டிராபன் கூறுகிறார். அப்போது வெளிப்பட்ட அதிக அளவிலான ஆற்றல், அதிக அளவில் வெப்பத்தை ஏற்படுத்தி கடலை கொதிக்கச் செய்து, பல மீட்டர் ஆழம் அளவிற்கு தண்ணீரை ஆவியாகச் செய்திருக்கிறது. இதனால் காற்றின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கும். வானம் தூசி மற்றும் துகள்களால் நிறைந்து கருப்பாக மாறி இருந்திருக்கும். இந்த கருமையை தாண்டி சூரிய ஒளி ஊடுருவாது என்பதால், ஒளிச்சேர்க்கையை நம்பியிருந்த நிலத்திலும் நீரிலும் இருந்த உயிர்கள் அழிந்திருக்கக் கூடும். இந்த தாக்கங்கள் S2 விண்கல் போன்ற மற்ற பெரிய விண்கல் தாக்கிய இடங்களை போல ஒத்திருந்தது என்று புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் ஆனால் பேராசிரியர் டிராபன் மற்றும் அவரது குழு அடுத்து கண்டுபிடித்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. இந்த பாறை துகள்கள் மாதிரிகளை ஆராய்ந்து பார்த்ததில் உலகில் உள்ள உயிர்களின் உணவான பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் அதில் இருந்தன. பட மூலாதாரம்,NADJA DRABON "பூமியில் இருந்த உயிர்கள் தாக்குப்பிடித்து, விரைவாக மீண்டு வந்து செழித்துள்ளன", என்று அவர் கூறுகிறார். "இது காலையில் பல் துலக்குவது போன்றது. என்னதான் அது 99.9% பாக்டீரியாவைக் கொன்றாலும், மாலைக்குள் அவை அனைத்தும் மறுபடியும் உண்டாகிவிடும் அல்லவா?" என்றார் அவர். S2 விண்கல் மோதியதால் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கம் என்னவென்றால், பாஸ்பரஸ் போன்ற உயிர்கள் செழிக்கத் தேவையான இன்றியமையாத பொருட்களை உலகம் முழுக்கப் பரவச் செய்திருக்கலாம் என்று புதிய கண்டுபிடிப்பு கூறுகிறது. அப்போது ஏற்பட்ட சுனாமி கடலின் அடியாழத்தில் இருந்து இரும்புச்சத்துள்ள நீரை மேலே கொண்டு வந்ததன் மூலம் பூமியின் தொடக்க காலத்தில் இருந்த எளிய உயிர்களுக்கு கூடுதல் ஆற்றல் கிடைத்திருக்கலாம். பூமியின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த விண்கற்களின் அடுத்தடுத்த மோதல்களே ஆரம்ப கால உயிர்கள் தோன்ற வழிவகுத்திருக்கலாம் என்ற விஞ்ஞானிகளின் கருதுகோளுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு வலுசேர்க்கிறது. "பூமியில் இந்த விண்கல் மோதலுக்குப் பிந்தைய சூழல் உயிர்கள் செழிக்க சாதகமான சூழலை உருவாக்கியிருக்கலாம் என்பது போல் தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார். இந்த கண்டுபிடிப்புகள் அறிவியல் இதழான PNAS-இல் வெளியிடப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr5m616e432o