Everything posted by ஏராளன்
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியாவின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி - நியூசிலாந்து வரலாற்று வெற்றியை பெற்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காட்சி. புனேவில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமிருக்கும் நிலையிலேயே இரண்டாது டெஸ்ட போட்டி முடிவுக்கு வந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் சேர்த்தன. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 359 ரன்கள் இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்கறு நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவுக்கு 359 ரன் இலக்கு நியூசிலாந்து அணி நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என பெரிய முன்னிலை பெற்றிருந்தது. டாம் பிளென்டல் 30 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டாம் பிளென்டன் 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து கடைசிவரிசை பேட்டர்களான சான்ட்னர் (4), சவுத்தி (0), அஜாஸ் படேல் (1), ரூர்கே (0) என வரிசையாக ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். காலை தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டி20 போல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 359 ரன்கள் இலக்கைத் துரத்த இந்திய அணிக்கு 3 நாட்கள் வரை அவகாசம் இருந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் இந்திய அணியின் இன்னிங்சைத் தொடங்கினர். ரோகித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களைச் சேர்த்தார். நிதானமாக ஆட முயன்றாலும் ரோகித் சர்மாவால் நீண்டநேரம் நிலைக்க முடியவில்லை. , 8 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார். இருவரும் களத்தில் இருந்தவரை ரன்கள் வேகமாக வந்தன. டி20 போட்டியைப் போல் இருவரும் அதிரடியாக ஆடியதால் 8.2 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் அரைசதத்தைப் பதிவு செய்தார். கில், ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்து சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். இந்திய அணியை சுருட்டிய சான்ட்னர் நிதானமாக பேட் செய்த கில் 23 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். 15.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை 96 பந்துகளில் எட்டி வேகமாக இலக்கை நோக்கி நகர்ந்தது. அடுத்து கோலி களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன்பின் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. அடுத்துவந்த ரிஷப் பந்த் ரன் அவுட் செய்யப்பட்டு டக்-அவுட் ஆனார். பட மூலாதாரம்,GETTY IMAGES சான்ட்னரின் ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீச்சில் காலை நகர்த்தாமல் ஆடி விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ஃபிராஸ் கான் களத்துக்கு வந்தது முதலே தனது காலை நகர்த்தாமலேயே சான்ட்னரின் பந்துவீச்சை எதிர்கொண்டு பல தவறுகளைச் செய்தார். லேசாக டர்ன் ஆகும் வகையில் சான்ட்னர் வீசிய பந்தைத் தடுத்து ஆட முற்பட்ட போது சர்ஃபிராஸ் கானை ஏமாற்றிய பந்து க்ளீன் போல்டாக்கியது. சர்ஃபிராஸ் கான் 9 ரன்னில் ஏமாற்றமளித்தார். அதன் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக இழந்த வண்ணம் இருந்தது. வாஷிங்டன் சுந்தர் (21), அஸ்வின் (18), ஆகாஷ் தீப் (1) என வரிசையாக விக்கெட்டுகளைக் கோட்டைவிட்டனர். கடைசியில் நம்பிக்கையளித்த ஜடேஜா 42 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன் என்ற வலுவான நிலையில் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால், அடுத்த 149 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி நியூசிலாந்து தொடருக்கு முன்பாக, இந்திய அணி 2013-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனையுடன் வீறுநடை போட்டது. இந்திய மண்ணில் நடைபெறும் தொடர் என்பதால், இதனையும் வெற்று சாதனைப் பயணத்தை மேலும் நீட்டிக்கும் முனைப்பில் இந்திய அணி இருந்தது. ஆனால், அதற்கு நியூசிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போதைய நிலையில், சர்வதேச டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 18 முறை தொடர்களை வென்றதே சாதனையாக இருக்கிறது. ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஒரு காலண்டர் ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இதுதான் முதல்முறை. ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. புதிய வரலாறு இதுவரை, நியூசிலாந்து அணி இந்தியாவில் பல ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருந்தாலும், ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அந்த வரலாறு இம்முறை மாறியுள்ளது. இந்திய மண்ணில் பெங்களூருவில் நடந்த டெஸ்டில் வென்ற நியூசிலாந்து அணி, புனேயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES "ஒட்டுமொத்த அணியின் தோல்வி" டெஸ்ட் தொடரை இழந்தபின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “டெஸ்ட் தொடரை இழந்தது வேதனையளிக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களைவிட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். களத்தில் வந்த சவால்களுக்கு எங்களால் சரியான பதிலடி கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்துவிட்டோம்,” என்றார். மேலும், “சரியாக பேட் செய்தோம் என நான் நினைக்கவில்லை, அதனால்தான் போதுமான ரன்களும் கிடைக்கவில்லை. 20 விக்கெட்டுகளை எடுக்கலாம். அதேசமயம், பேட்டர்களும் ரன்கள் குவிக்க வேண்டும். நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேலாக முன்னிலை பெற வைத்துவிட்டோம். இதற்கு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததுதான் காரணம். நாங்கள் பதிலடி கொடுத்திருக்க வேண்டும், ஆனால், தோற்றுவிட்டோம்,” என்றார். “இது அதிகமான ஆட்டங்கள் நடந்த பிட்ச் அல்ல, நாங்கள்தான் சரியாக பேட் செய்யவில்லை. வான்ஹடே மைதானத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்ல முயல்வோம். இது அணியின் ஒட்டுமொத்த தோல்வி. எங்கள் முன் நின்ற சவால்களை ஏற்பதில் ஓர் அணியாகத் தோற்றுவிட்டோம்,” எனத் தெரிவித்தார். ஆல்ரவுண்டராக கலக்கும் வாஷிங்டன் சுந்தர் - நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி?25 அக்டோபர் 2024 டி20 மகளிர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து சாம்பியன் - ஆடவர் அணியால் முடியாததை சாதித்தது எப்படி?21 அக்டோபர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES கடினமான பாதை, ஒற்றை மனிதரின் சாதனை இந்தியப் பயணத்துக்கு முன்பாக இலங்கை சென்ற நியூசிலாந்து அணி, அந்நாட்டிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அனுபவ கேப்டன் கேன் வில்லியம்ஸன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. சிறந்த டெஸ்ட் பேட்டரான வில்லியம்ஸன் இல்லாமலே நியூசிலாந்து அணி இந்தியத் தொடருக்கு வந்தது. ஆனால், இந்திய அணி தயாரித்து வைத்த ஆயுதத்தை எடுத்தே இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரை வென்று புதிய சகாப்தத்தை நிகழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரை வெல்வதற்கு பிரம்மாஸ்திரமாக இருந்தது மிட்ஷெல் சான்ட்னர் எனும் ஒற்றை மனிதர்தான். முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு 7 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் என ஆட்டத்தையே திருப்பிவிட்டார். 12 ஆண்டுகளுக்குப்பின் முற்றுப்புள்ளி அதேசமயம், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய மண்ணில் எந்த நாட்டு அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்காமல் இருந்து வந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்து, தனது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது. இதுவரை எந்த அணியும் உள்நாட்டில் டெஸ்ட் தொடரை 12 ஆண்டுகளாக இழக்காமல் பயணித்தது இல்லை. ஆனால், இந்திய அணி மட்டுமே அந்தச் சாதனையை செய்திருந்த நிலையில் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 4,332 நாட்களுக்குப்பின் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது. மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மலையேற்றம் செல்லலாம்? என்ன வழிமுறை? முழு விளக்கம்8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம் இந்திய அணிக்கு என்ன ஆச்சு? நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மிட்ஷெல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் இருவருமே டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் இல்லை. அதிலும் சான்ட்னர் இதுவரை டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதே இல்லை. அப்படியிருந்த வீரர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்தார். ஆனால், டெஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்துவீச்சு புனேவில் சுத்தமாக எடுபடவில்லை இருவரின் பந்துவீச்சையும் நியூசிலாந்து பேட்டர்கள் எளிதாகக் கையாண்டனர். இதில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு மட்டும் விதிவிலக்கு. இந்திய பேட்டர்கள் சிறிதுகூட நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறச் செய்யும் வகையில் பேட் செய்யவில்லை. அவர்களை நிலைகுலைய வைக்கும் விதத்தில் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. அவ்வாறு அதிரடி பாணியை எடுத்திருந்தால், நியூசிலாந்து அணியின் திட்டம் சிதறி, என்ன செய்வதென்று தெரியாமல் தவறுக்கு மேல் தவறு செய்திருப்பார்கள். ஆனால், சுழற்பந்துவீச்சைக் கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு கூடுதலாக செலுத்திய கவனம், ரன்வேகத்தையும் குறைத்தது. தவறு செய்யவும் வழிவகுத்தது. இந்திய பேட்டர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதை வாய்ப்பாகப் பயன்படுத்திய சான்ட்னர், ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீசி நெருக்கடியும், அழுத்தத்தையும் அதிகரித்து விக்கெட்டுகளை எளிதாகச் சாய்த்தார். சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம். ஆனால், கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு ஒவ்வொரு பந்துக்கு ஒவ்வொரு விதமாக செயல்பட்டு அவரை ஃபார்முக்கு இட்டுச் சென்றனர். அதேநேரத்தில், நியூசிலாந்து பேட்டர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை நிலைகுலையச் செய்யும் விதத்தில் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். இது அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சு உத்தியை குழப்பிவிட்டது. இலங்கை அணிக்கு எதிராக கல்லே நகரில் நடந்த டெஸ்டிலும் இதே உத்தியைத்தான் நியூசிலாந்து அணி கையாண்டது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்துவீச்சுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்று இந்திய பேட்டர்கள் என அறியப்பட்ட காலம் இருந்தது. அதனால்தான் இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டன. அப்படியிருந்த இந்திய அணியில் சீனியர் பேட்டர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் ஜொலிக்காமல் போனது கேள்வியை எழுப்புகிறது. ஜவஹர்லால் நேருவை சங்கடத்திற்கு உள்ளாக்கிய சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் விவகாரம்26 அக்டோபர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியுமா? இந்திய அணியின் டெஸ்ட் தொடர் தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் அதன் பாதையை கடினமாக்கியுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியும், முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில்தான் இருக்கின்றன. இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் என 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். https://www.bbc.com/tamil/articles/cgqy8q79lp8o
-
தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் - மனோ கணேசன்
தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது குறித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன் வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி கலந்துரையாடலை முன்னேடுப்போம் என்பதாகும். ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்த யோசனையை நாம் வரவேற்கிறோம். அனுர ஆட்சிக்கு வந்த இந்த ஒரே மாதத்திற்கு உள்ளேயே நாட்டின் அனைத்து சவால்களுக்கும் பதில் தரவேண்டும் என்ற குறுகிய அரசியலையும் நாம் செய்யவில்லை. புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்க பட வேண்டும் என நாம் எண்ணுகிறோம். ஆனால், அதேவேளையில் புதிய பாராளுமன்றத்தில், இந்த உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சர்வகட்சி கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வெற்று காசோலை தரவும் நாம் தயார் இல்லை. புதிய பத்தாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்று உத்தேச தேசிய கலந்துரையாடலில் பங்கேற்று, நமது மக்களின் நியாயமான அபிலாசைகளை புதிய அரசியலமைப்பில் இடம் பெற செய்ய வேண்டும். இந்நோக்கில், தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும், வடகிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் பாராளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம். இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நல்லாட்சியின் போது (2015-2018) நடந்த நல்ல பல விடயங்களில் ஒன்று, நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சமபல (Balanced) தீர்வுகளை தேடும் புதிய அரசியலமைப்பு ஒன்றை கலந்துரையாடி உருவாக்கும் பணியாகும். அது ஒரு சர்வ கட்சி பணி. 2015 ஆம் ஆண்டு, சபாநாயகர் பாராளுமன்றத்தில் பெயர் குறிப்பிட்டு நியமித்த வழிகாட்டல் குழு (Steering Committee), புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கில், கலந்துரையாடி, வாத விவாதம் செய்து, குறைந்தபட்ச பொது உடன்பாடுகளில் கருத்தொற்றுமை கண்டு முன்னெடுத்தது. இடைக்கால அறிக்கையையும் சமர்பித்தது. இன்னும் பல துறைசார் உப குழுக்ளையும் தனக்கு உதவியாக நியமித்தது. அந்த வழிகாட்டல் குழுவில் இலங்கையின் தேசிய இனங்களையும், அரசியல் சித்தாந்தங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் சர்வ கட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். வழிகாட்டல் குழுவுக்கு அன்றைய பிரதமர் ரணில் தலைமை தாங்கினார். ஜேவிபி சார்பில் இன்றைய ஜனாதிபதி அனுர, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான், மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மறைந்த இரா. சம்பந்தன், சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிசாத் பதுர்தீன் மற்றும் தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, சம்பிக்க ரணவக்க, டிலான் பெரேரா, ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் உட்பட இன்னும் பலர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். சிங்கள, ஈழத்தமிழ், முஸ்லிம், மலையக இலங்கை மக்கள் சார்பாக விரிவான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கபட்டு, கலந்துரையாடி மிக சிறப்பாக நடந்த இந்த பணியை, அதன் இடைகால அறிக்கை வந்ததும், திட்டமிட்டு அரசியல் நோக்கில், மகிந்த ராஜபக்ச தலைமையியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை குழப்பியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை சார்பில் அன்று வழிகாட்டல் குழுவில் இடம் பெற்றவர்கள், கடந்த மாதம் வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன மற்றும் பிரபல அமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க ஆகியோராகும். வழிகாட்டல் குழுவு செயற்பாட்டை குழப்ப, இந்த இனவாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கும்பல் பயன்படுத்திய கோஷம் “பிரபாகரன் ஆயுத பலத்தால், பெற முடியாததை, சம்பந்தன் பேச்சு வார்த்தையால் பெற முயல்கிறார்” என்பதாகும். இந்த கும்பலுக்கு அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால, இரகசிய ஆதரவு வழங்கி, 52 நாள் திருட்டு அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது வரை அந்த அலங்கோல வரலாறு தொடர்ந்தது. அத்துடன் அந்த புதிய அரசியலமைப்பை எழுதும் “வழிகாட்டல் குழு” (Steering Committee), செயன்முறை இடை நின்றது. இன்று, இனவாதிகள் அரசியல் பரப்பில் கணிசமாக இல்லை. ஆகவே, நாம் அனைவரும் அன்று ஆரம்பித்த, புதிய அரசியலமைப்பை எழுதும் சர்வ கட்சி பணியை தொடர போவதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க அறிவித்துள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும், அரசியல் யாப்பை உருவாக்கும் உரையாடலில் ஆளுமையும், அனுபவமும் உள்ள சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் பங்கு பெற வேண்டுமா? இல்லையா? என்பதை தமிழ் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த நோக்கில், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரேலியா, பதுளை மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியும், யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் பாராளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம். இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197147
-
கிளிநொச்சி அக்கராயன் காட்டுக்குள் எறியப்பட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான விதைப்பந்துகள்!
2024ஆம் ஆண்டுக்கான விதைப்பந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான நிகழ்வாக நேற்று (25) காலை 8.30 மணியளவில் அக்கராயனில் ஒதுக்கப்பட்ட காட்டினுள் விதைப்பந்துகள் வீசுப்பட்டன. ஓராயம் அமைப்பின் அனுசரணையுடன் கிளி/ விவேகானந்த வித்தியாலயத்தினால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்போது விவேகானந்த வித்தியாலய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதைப்பந்துகள் அக்கராயன் காட்டுக்குள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் எறியப்பட்டன. இன்று உலகம் எதிர்கொள்கின்ற மிக ஆபத்தான பிரச்சினையாக காலநிலை மாற்றம் காணப்படுகிறது. காடு அழிப்பு உட்பட எமது சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்களின் விளைவாக காலநிலை மாற்றம் நிலவுகிறது. எனவே, எமது சூழலை பாதுகாத்து, அடுத்த சந்ததியினருக்கு கொடுப்பதற்காகவும் மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்வு நடைபெற்றது. விதைப்பந்து வீசும் செயற்பாட்டில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் சி. லதீஸ்குமார், வன பாதுகாப்பு திணைக்களத்தின் வன விரிவாக்க உத்தியோகத்தர், கிளிநொச்சி மகா வித்தியாலய பிரதி அதிபர் அரவிந்தன், சூழலியலாளரும் இலங்கை வனவிலங்குகள் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் வட மாகாண பிரதிநிதியுமான ம.சசிகரன், ஊடகவியலாளரும் சூழலியலாளருமான மு. தமிழ்ச்செல்வன், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளி/ திருவையாறு மகா வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/197146
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதான 16 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 16 தமிழக மீனவர்களும் கடந்த புதன்கிழமை இரவு நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான மீனவர்கள் விசாரணைகளின் பின்னர் வியாழக்கிழமை (24) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197140
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஈரான் மீதான வான் தாக்குதல்கள் நிறைவு; இஸ்ரேலிய இராணுவம் ஈரான் இராணுவ தளங்கள் மீதான கடும் தாக்குதல் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், சற்று முன்னர் ஈரான் இராணுவ தளங்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் நிறைவடைந்துள்ளது. எங்கள் விமானங்கள் பத்திரமாக திரும்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197135
-
முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்கள் குழுக்களாக மோதல்; ஒருவர் வைத்தியசாலையில்!
முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர். குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஒரு மாணவன் கைதுசெய்துள்ள நிலையில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த பாடசாலையின் பல்வேறுபட்ட நிர்வாக நிதி மோசடிகள் தொடர்பில் ஏற்க்கனவே பல செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197137
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
இலங்கை தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் திருநங்கை இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். “பொதுத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முறையாக தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவரை நிறுத்தியதன் மூலம் சரித்திரம் படைத்தேன்” என, நிமேஷா ஊடகங்களுக்கு தெரிவித்தார். https://thinakkural.lk/article/311174
-
ரஷ்யர்கள், இஸ்ரேலியர்களை தேடுவதற்கு நடவடிக்கை
ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்து தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளைத் தேடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் மாத தொடக்கத்தில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால், தெற்கு கரையோரப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தெற்கு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதிக்கான சுற்றுலாப் பருவம் நவம்பரில் தொடங்கி மார்ச் மற்றும் ஏப்ரல் வரை நீடிக்கும். மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவின் நாட்டின் புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு வருகை தருவார்கள். இது குறித்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, “அவர்கள் வழக்கமாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை மற்றும் மே முதல் செப்டம்பர் வரை முறையே தெற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் சிறப்பு விஜயங்களை மேற்கொள்கின்றனர். “கிறிஸ்மஸ் விடுமுறைக்காக தென்பகுதிக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்துள்ளனர். இலங்கையின் விசா இல்லாத ஆறு நாடுகளில் ரஷ்யவும் உள்ளதாக தெரியவந்தது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் 30 நாட்கள் சுற்றுலா விசாவைப் பெறுவார்கள் அல்லது அவர்கள் ஆன்-அரைவல் விசா அல்லது எலக்ட்ரானிக் டிராவல் அங்கீகாரத்திற்கு (ETA) விண்ணப்பிக்கிறார்கள். “30 நாட்கள் சுற்றுலா விசா காலம் முடிந்தவுடன், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கின்றனர், அதே நேரத்தில் செல்லுபடியாகும் விசா இல்லாமல் கணிசமான தொகை இன்னும் நீண்டதாக இருக்கும். “திணைக்கள அதிகாரிகள் கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் அருகம்பை விரிகுடா உள்ளிட்ட கிழக்கு கரையோரப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால் இஸ்ரேலியர்கள் உட்பட அதிகமான சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்படவில்லை” என்று, அந்த அதிகாரி கூறினார். எவ்வாறாயினும், தென் பருவத்தில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா விசாவில் அதிக காலம் தங்கியிருப்பது மற்றும் வணிகம் செய்வது போன்ற விசா மீறல்களை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அத்தகைய பயணிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. https://thinakkural.lk/article/311172
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
இஸ்ரேல் ஈரான் மீது வான் தாக்குதல் இஸ்ரேல் ஈரான் மீது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பல மாதங்களாக ஈரான் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்குவைக்கவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்காவின் ஒத்துழைப்புடனேயே இந்த தாக்குதல் இடம்பெறுகின்றது வான் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக தொடர்ச்சியாக ஆராய்ந்த பின்னரே ஈரான் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முடிவு செய்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சரவை பல மாதங்களாக இது குறித்து ஆராய்ந்தது தாக்குதல் எவ்வாறானதாக காணப்படவேண்டும் என ஆராய்ந்தது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதியில் இராணுவ இலக்குகளை தாக்க தீர்மானித்தோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஆபத்தான அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இலக்குகளை தாக்க தீர்மானித்தோம் என அந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197131
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகரான தெஹ்ரானில் குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “இரானில் உள்ள ஆட்சி மற்றும் பிராந்தியத்தில் அதன் கூட்டாளி அமைப்புகள், 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடைவிடாமல் இஸ்ரேலை தாக்குவதால், உலகிலுள்ள மற்ற எந்த சுதந்திரமான, சுயாட்சியுள்ள நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் அதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமையும் கடமையும் இருப்பதாக” இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “தங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம்,” என்று தெரிவித்துள்ளார். இரானில் என்ன நடக்கிறது? தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக இரான் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இரானின் வான் பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தியதன் காரணமாக இந்தச் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று இரானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இரான் அரசுத் தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது. இருப்பினும், இரானில் எந்த வகையான ராணுவ தளங்களை இஸ்ரேல் குறிவைத்துள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இரான் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக இரான் சிவில் ஏவியேஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தங்களுக்குத் தெரியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. “அக்டோபர் 1ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தற்காப்புக்காக இரானிலுள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்காவில் பிபிசியின் செய்தி கூட்டாளரான சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளார் டேனியல் ஹகாரி (கோப்புப் படம்) இந்தத் தாக்குதலின் முடிவில் இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், இஸ்ரேல் ராணுவம் தனது இலக்கை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், "இரான் அரசு புதிய தாக்குதல்களை நடத்தி மோதல்களைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைத்தால் இஸ்ரேல் அதற்கு பதிலடி தர நேரிடும். இதில் எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இஸ்ரேல் நாட்டை அச்சுறுத்த நினைக்கும், இந்தப் பிராந்தியத்தில் பெரிய மோதல்களுக்குள் அதை இழுக்க நினைக்கும் அனைவரும் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்," என்றும் அவர் எச்சரித்தார். இஸ்ரேலிடம் திறனும் உள்ளது, தீர்வு காணும் திறமையும் உள்ளது என்பதை இன்று இந்தத் தாக்குதல் மூலம் தாங்கள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் டேனியல் ஹகாரி கூறினார். தெஹ்ரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசியின் மத்தியக் கிழக்கு பிராந்திய ஆசிரியர் செபாஸ்டியன் அஷரின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி என்று நம்பப்படுகிறது. அந்தத் தாக்குதலில் இஸ்ரேல் மீது இரான் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பது இஸ்ரேலின் உரிமை மட்டுமின்றி கடமையும்கூட என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார். இந்நிலையில், இரானிய புரட்சிகர காவலர் படைக்கு நெருக்கமான ஒரு செய்தி நிறுவனம், மேற்கு மற்றும் தென்மேற்கு தெஹ்ரானில் உள்ள சில ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. இருப்பினும், எந்தெந்த இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது இன்னும் தெரியவில்லை. சிரியாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவ தளங்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்பட, அவர் இந்தத் தாக்குதலின்போது ராணுவ தலைமையகத்தின் செயல்பாட்டு மையத்தில் இருப்பதாகக் காட்டுகிறது. இரான் எதிர்த் தாக்குதல் நடத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று, இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. இரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களையோ அதன் எண்ணெய் நிலையங்களையோ இஸ்ரேல் குறிவைப்பதைத் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை குறித்து வாஷிங்டனுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போது இரானிய அரசு ஊடகம் வழக்கம் போல தாக்குதலின் வீரியத்தைக் குறைத்துக் காட்டுவதாக பிபிசி நியூஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அசாடே மோஷிரி கூறியுள்ளார். மேலும், இந்தக் கட்டத்தில் சில முக்கியக் கேள்விகள் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவை, இந்தத் தாக்குதலில் இரானுக்கு உண்மையில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது? ஹமாஸ் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே இரானிய மண்ணில் கொல்லப்பட்டது, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை என இந்த ஆண்டில் தொடர்ச்சியான அவமானங்களைச் சந்தித்திருக்கும் சூழலில், தன்னை ஆதரிக்கும் ஆயுதக்குழுக்கள் வலுவிழந்துள்ள நிலையில், இரான் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறதா? மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கவும் நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதற்கும் வித்திடக்கூடிய மற்றுமொரு தருணமாக இது இருக்குமா? இரானிய அரசு ஊடகம் சொல்வது என்ன? பட மூலாதாரம்,REUTERS “இரானிய ஊடகங்களில் வெளியாகும் படங்களும் வீடியோக்களும் அமைதி நிலவுவது போன்ற செய்தியைச் சித்தரிக்க முயல்கின்றன. ஆனால், அந்நாட்டில் சமூக ஊடகங்களில் நிலை முற்றிலும் வேறாக உள்ளது” என்று ஜனநாயக பாதுகாப்பிற்கான அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் பெஹ்னம் பென் தலேப்லு பிபியிடம் கூறுகிறார். பிபிசி பாரசீக சேவையைச் சேர்ந்த பஹ்மான் கல்பாசி, இரானில் தற்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இரானிய அரசு ஊடகங்கள் தற்போது இந்தத் தாக்குதல்கள் உண்மையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவை தோல்வியுற்றதாகவும் கூறுவதாக அவர் தெரிவித்தார். தாக்குதலுக்கு உள்ளாகும்போது இரான் வழங்கும் பொதுவானதொரு பதில் இது என்றும் கல்பாசி கூறினார். “இந்த அணுகுமுறை, பழி வாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வழியாக இருக்கக்கூடும். ஆனால், சேதத்தின் அளவைக் காட்டக்கூடிய உறுதியான ஆதாரம் இருந்தால், உயிரிழப்புகள் ஏற்பட்டால், இந்த அணுகுமுறை சிதைந்துவிடும்,” என்கிறார் கல்பாசி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c74l8y5ellpo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
குட்டிப் பாப்பாவை தோளில் சுமந்து நடந்த சிறுமி; கலங்கவைத்த காணொளி | Israel Gaza Issue ஆறு வயது கமர் தனது சகோதரியை மருத்துவமனையில் இருந்து தெற்கு காஸாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்துசென்றார். குண்டுவெடிப்புக்குப் பிந்தைய சச்சரவில் அவரது சகோதரி சுமய மீது கார் மோதியது. அல்- புரேஜ் முகாமில் தாயுடன் உடன் அவர்கள் வசிக்கின்றனர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய கடந்த காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது வேண்டியவற்றுள், முன்னுரிமைப்படுத்தப்பட்ட 38 விடயங்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்திப்பு சுமூகமாக நிறைவடைந்தது. இதன்போது, நடைபெவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197128
-
'தராக்கி' சிவராம் : கொடூரமான கடத்தலும் கொலையும் - மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் ஜனாதிபதி
பத்திரிகையாளராக மாறிய போராளி ' தராக்கி ' சிவராம் : கொடூரமான கடத்தலும் கொலையும் - மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் ஜனாதிபதி அநுரா குமாரவின் அரசாங்கம் டி.பி.எஸ் ஜெயராஜ் கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களினால் தடுக்கப்பட்ட அல்லது சீர்குலைக்கப்பட்டு நீதிகிடைக்காமல் போன பாரிய ஊழல் மோசடிகள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தனது தேர்தல் பிரசாரங்களின்போது அடிக்கடி வலியுறுத்திக் கூறினார். அண்மைய நிகழ்வுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் கரிசனையாக இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. இது தொடர்பில் அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த விவகாரங்களில் நீதியை உறுதிசெய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருப்பதை அரசாங்கம் மெய்ப்பித்துக் காட்டுமோயானால் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாய்ப்புகள் பிரகாசமானதாக இருக்கும். சர்ச்சைக்குரிய 2015 திறைசேரி பிணைமுறி விவகாரம், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 2005 ஆம் ஆண்டில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல்போன சம்பவம் மற்றும் பத்திரிகையாளர் தருமரத்தினம் ' தராக்கி ' சிவராம் கடத்திக் கொலைசெய்யப்பட்டமை உட்பட பல்வேறு பிரபலமான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சு இரு வாரங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. விசாரதைகளை தீவிரமாக முன்னெடுப்பதில் குற்றவியல் விசாரணை திணைக்களத்துடனும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளுடனும் ஒருங்கிணைந்து செயற்படுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அமைச்ச பணிப்புரை வழங்கியிருக்கிறது. ' தராக்கி ' என்ற பத்திரிகையாளர் சிவராம் பற்றி குறிப்பிடப்பட்டதால் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவில் வைத்திருக்கும் இலங்கையர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக தராக்கியையும் அவரது மரணத்தையும் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் இளைய தலைமுறையினர் மத்தியிலும் ஆர்வம் பிறந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய தருமரத்தினம் புவிராஜகீர்த்தி சிவராம் 2005, ஏப்பில் 28 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டார். நான்கு மணித்தியாலங்கள் கழித்து அவரது சடலத்தை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்து 500 மீட்டர்கள் தொலைவில் தியவன்ன ஓயா ஆற்றங்கரைக்கு அண்மையாக கிம்புளா - எல சந்தியில் பொலிஸார் கண்டுபிடித்தனர். நள்ளிரவு 12.30 மணிக்கும் ஏப்ரல் 29 அதிகாலை ஒரு மணிக்கும் இடைப்பட்ட நேரத்துக்கு பிறகு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் அவர் மரணமடைந்தார் என்று பிரேதப் பரிசோதனையில் கூறப்பட்டது. தராக்கி சிவராம் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நேத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவர் முதலில் ஆயுதமேந்திய ஒரு தமிழ்த் தீவிரவாதி. பிறகு பேனையை ஆயுதமாகக் கொண்ட பத்திராகையாளராக மாறினார். ஒரு சுயாதீன பத்திரிகையாளராக சிவராம் தனது வாரஇறுதி தராக்கி பத்தியை சண்டே ஐலண்ட், டெயிலி மிறர் மற்றும் சண்டே ரைம்ஸ் உட்பட வேறுபட்ட பத்திராகைகளுக்கு வேறுபட்ட நேரங்களில் எழுதினார். இடைக்கிடை அவர் டி.பி. சிவராம் என்ற பெயரில் வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் தமிழிலும் எழுதினார். பிறகு அவர் நோர்த் ஈஸ்டேர்ண் ஹெரால்ட் மற்றும் தமிழ்நெற் இணையத்தளம் ஆகியவற்றிலும் பணியாற்றினார். அவ்வப்போது சர்ச்சைக்குரியவையாக இருந்தபோதிலும், பெருமளவு தகவல்கள் நிறைந்ததும் ஆய்வுத் தன்மை கொண்டதுமான அவரது அரசியல் பத்திகள்்பரவலாக வாசிக்கப்பட்டன. அதனால் அவரது கடத்தலும் கொலையும் இந்த கட்டுரையாளர் உட்பட பலரிடம் இருந்து பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தின. இந்த கட்டுரையில் நான் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்த கொடூரச் சம்பவம் மீள்பார்வை செய்கிறேன். அதற்கு எனது முன்னைய கட்டுரைகளில் இருந்தும் விடயங்களை தாராளமாக பயன்படுத்துகிறேன். பம்பலப்பிட்டி எஸ். ஆர்.சிவா, ராம் என்று பல்வேறு பெயர்களில் நண்பர்களினால் அறியப்பட்ட சிவராம் கடத்தப்ப்ட அந்த விதிவசமான இரவு தனது இனிய நண்பர்களுடன் மதுபானம் அருந்தினார். சுயாதீன பத்திரிகையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான குசல் பெரேரா, சுகாதாரத்துறை தொழிற்சங்கவாதி ரவி குழுதேஷ் மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவன ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன இரத்நாயக்க ஆகியோரே அன்றைய தினம் அவருடன் இருந்தவர்கள். இரவு 10.25 மணிக்கு நால்வரும் பம்பலப்பிட்டி மதுபான விடுதியில் இருந்து நால்வரும் வெளியே வந்தனர். ரவியும் பிரசன்னவும் மற்றையவர்களுக்கு விடைகொடுத்துவிட்டு பொரளைக்கு போவதற்கு முச்சக்கரவண்டி ஒன்றை பிடிக்கப்போவதாக கூறிக்கொண்டு கொள்ளுப்பிட்டி நோக்கி நடந்தனர். குசலும் சிவாவும் கதைத்துக் கொண்டு வெள்ளவத்தை நோக்கி நடந்து சென்றனர். கதையை முடித்துக்கொண்டு ஒரு பஸ்ஸில் வீட்டுக்கு போவதே அவர்களின் யோசனை. டீ வோஸ் அவனியூவுக்கு அண்மையாக காலி வீதியில் பஸ் தரிப்பிடம் ஒன்றில் சிவராமும் குசலும் நின்று கொண்டிருந்தனர். அப்போது சிவராமுக்கு அவரின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. தமிழில் பேசிக்கொண்டு சற்று முன்னோக்கி அவர் நகர்ந்த அதேவேளை குசல் தரிப்பிடத்திலேயே நின்றுகொண்டு பஸ் வருகிறதா என்று எதிர்த்திசையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் புறக்கோட்டை - பாணந்துறை பஸ் ஒன்று வருவதைக் கண்ட குசல் பஸ்ஸைப் பற்றி சிவராமை உஷா்ப்படுத்துவதற்காக அவர் பக்கமாக திரும்பினர். அப்போது குசல் கண்ட காட்சி அவரை அச்சமடையவைத்தது. சிவராமுக்கு அண்மையாக வீதியில் ஒரு வெள்ளி -- சாம்பல் நிற வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அது ஒரு ரொயோட்டா எஸ்.யூ.வி. வாகனம். அதன் இலக்கம் WP G 11 குசலினால் மற்றைய இலக்கங்களை ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை. இருவர் சிவராமை அந்த வாகனத்திற்குள் நிர்ப்பந்தமாக ஏற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த அதேவேளை மூன்றாவது நபர் வாகனத்தின் திறந்த கதவுக்கு அருகாக நின்றுகொண்டிருந்தார். நான்காவது நபர் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். வாகனம் இயங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று அவர்கள் சிவராமை பின்பக்கத்தினால் பிடித்து வாகனத்திற்குள் தள்ளத் தொடங்கினர்.சிவராம் கடத்தல்காரர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் சிவிலுடைகளில் இருந்தாலும் ' சீருடையின்' சாயல் தெரிந்தது. அந்த அடிபிடியைப் பார்த்ததும் சிவா, சிவராம் என்று சத்தமிட்டுக்கொண்டு அவர்களுக்கு அண்மையாக செல்ல முயற்சித்ததாக குசல் பெரேரா கூறினார். வாகனத்திற்குள் சிவராமை தள்ளுவதில் கடத்தல்க்ரர்கள் வெற்றி கண்டார்கள். அவர்களில் இருவர் குசலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் கையைக் காட்டிவிட்டு வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். வாகனம் விரைந்துசென்றதாக குசல் கூறினார். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு நேரெதிராகவே இந்த கடத்தல் நாடகம் முழுவதும் நடந்தேறியது. குசல் பிறகு வீடு சென்று சம்பவம் குறித்துப் பலருக்கும் அறிவித்தார். நான்கு பேர் இரவு 8.30 மணி தொடக்கம் அந்த மதுபான விடுதிக்கு வெளியே உலாவிக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் மூலம் பிறகு தெரியவந்தது. அவர்களில் இருவர் தங்களுக்குள் தமிழிலும் மற்றைய இருவரும் சிங்களத்திலும் பேசிக்கொண்டார்கள். ஒருவர் கைத்தொலைபேசியில் எவருடனோ தொடர்பு கொண்டு வாகனத்தை அனுப்புமாறு தமிழில் கேட்டதாக நேரில் கண்ட ஒருவர் கூறினார். அவ்வாறே வரவழைக்கப்பட்ட வாகனத்திலேயே சிவராம் கடத்தப்பட்டார் என்பது பிறகு புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. மிகவும் விரைவாக அந்த வாகனம் சம்பவ இடத்துக்கு வந்ததில் இருந்து அது மிகவும் நெருக்கமாக ஒரு இடத்தில் காத்துக் கொண்டு நின்றிருக்க வேண்டும் என்று ஊகிக்கமுடிந்தது. சிவராம் கடத்தப்பட்டதை அறிந்த உடனடியாக அவரது மனைவி யோகரஞ்சினி ( பவானி என்றும் அவரை அழைப்பதுண்டு) மட்டக்குளியில் உள்ள சகோதரனுடன் தொடர்புகொண்டு அவருடன் சேர்ந்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு ஒன்றைச் செய்தார். சிவராமின் பத்திரிகைத்துறை சகாவும் நண்பருமான ராஜ்பால் அபேநாயக்க அன்றைய இராணுவத் தளபதி லெப்டின்ட் ஜெனரல் சாந்த கொட்டேகொட உட்பட பல அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து அறிவித்தார். சகல இராணுவச் சோதனை நிலையங்களையும் உஷார்ப்படுத்த உத்தரவிடுவதாக இராணுவத் தளபதி உறுதியளித்தார். தியவன்ன ஓயா நள்ளிரவுக்கு பின்னர் ஒரு மணித்தியாலம் கழித்து தியவன்ன ஓயா ஆற்றங்கரையில் இலங்கை - ஜப்பான் நட்புறவு வீதியோரமாக சடலம் ஒன்று கிடப்பதாக தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு பின்புறமாக சுமார் 500 மீட்டர்கள் தொலைவில் கிம்புளா - எல சந்திக்கு அண்மையாக சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் பற்றைகளுக்கு நடுவே சடலம் ஒன்று கிடப்பதை கண்டனர். அது சிவராமின் சடலம் என்பதை பிறகு நண்பர்களும் குடும்பத்தவர்களும் அடையாளம் காட்டினர். சிவராமின் வாய் ஒரு புள்ளி கைக்குட்டையினால் கட்டப்பட்டிருந்தது. கைகளும் பின்புறமாகக் கட்டப்பட்டுக் கிடந்தது. அவரின் தலையின் பின்புறம் மொட்டையான ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டிருந்தது. அவர் மல்லுக்கட்டுவதை தடுப்பதற்காக அவ்வாறு செய்ப்பட்டது போன்று தோன்றியது. துணிச்சலான ஒரு போராளியான சிவராம் தன்னைக் கடத்தியவர்களை வீரதீரத்துடன் எதிர்த்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதனால் அவரை அவர்கள் தாக்கி நினைவிழக்கச் செய்திருக்கிறார்கள். சிவராம் 9 எம்.எம். பிறவுணிங் கைத்துப்பாக்கி ஒன்றினால் மிக நெருக்கமாக வைத்து சுடப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. ஒரு சூடு அவரது கழுத்து மற்றும் நெஞ்சினூடாக சென்றிருந்தது. இரண்டாவது சூடு அவரது கையைத் துளைத்துக்கொண்டு உடம்புக்குள் பிரவேசித்திருந்தது. அவர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கவில்லை. 9 எம்.எம். வெற்று ரவைகள் அவரின் சடலத்துக்கு அருகாக காணப்பட்டன. சம்பவ இடத்தில் பெரிதாக இரத்தக்கறையை காணவில்லை. பிரேதப்பரிசோதனை சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பு மருத்துவ பீடத்தில் தடயவியல் மருத்துவ பீடத்தின் தலைவராக்இருந்த டாக்டர் ஜீன் பெரேரா பிரேதப் பரிசோதனையை நடத்தினார். ஊடகங்கள் அவரை தொடர்பு கொணடு கேட்டபோது " சித்திரவதை செய்யப்படவோ அல்லது தாக்குதல் நடத்தப்படவோ இல்லை. அதை உறுதியாகக் கூறுகிறேன்" என்று அவர் கூறினார். "அவரின் ( சிவராம்) தலையின் பின்புறத்தில் ஒரு தடவை தாக்கப்பட்டிருக்கிறார். பிறகு நிலத்தில் கிடந்தவேளையால் தோள் பட்டை மற்றும் கழுத்தில் இரு தடவைகள் சுடப்பட்டிருக்கிறார். சடலம் கிடந்த இடத்தில் வைத்தே கொலை நடந்திருக்கிறது. அவரது ஒரு கண்ணில் காணப்பட்ட வீக்கம் ஒரு தாக்குதலின் விளைவானது அல்ல. உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தபோது ஏற்பட்ட அதிர்வின் காரணமாவே அந்த வீக்கம் ஏற்பட்டது" என்று அவர் கூறினார். நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை ஒரு மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே மரணம் சம்பவித்தது என்றும் அவர் குறிப்பிட்டார். சிவாவின் கொலைக்கு பிறகு பெரும் கண்டனங்கள் கிளம்பின. கொலையைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்ட யூனெஸ்கோ மற்றும் எல்லைகளற்ற நிருபர்கள் போன்ற அமைப்புகள் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கோரின. " கண்டிக்கத்தக்க கோழைத்தனமான கடத்தலும் கொலையும் " என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் சாடியது. முழுமையான விசாரணைக்கும் அரசாங்கம் உத்தரவிட்டது. ஆனால், இலங்கையில் பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்ட, தாக்கப்பட்ட, கொலைசெய்யப்பட்ட ஏனைய சம்பவங்களில் நடந்தததைப் போன்று சிவராம் கொலை தொடர்பிலும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. தேரபுத்தபாய பலகாய கொலை நடந்து பத்து நாட்களுக்கு பிறகு " தேரபுத்தபாய பலகாய " என்ற மர்மமான சிங்கள குழுவொன்று உரிமை கோரியது. சிங்கள பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்ட கடிதம் ஒன்றில் அந்த குழு " இலங்கையின் சர்வதேச பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக " சிவராமை குற்றஞ்சாட்டியது. கடிதத்தின் பிரதிகள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன. " தாய்நாட்டுக்கு ஊறு விழைவிப்பவர்கள் மிகவும் விரைவில் தாய்நாட்டுக்கு பசளையாக மாறுவதற்கு தயாராக இருக்கவேண்டும் " என்று கடிதத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. புளொட் 'பீட்டர் ' சில வாரங்கள் கழித்து சிவராமின் கைத்தொலைபேசியின் சிம் அட்டையை வைத்திருந்தமைக்காக புளொட் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினரான பீட்டர் என்ற ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா கைது செய்யப்பட்டார். சிவராமை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய வாகனம் ஒன்றை கொழும்பு பம்பலப்பிட்டி ஹெய்க் வீதியில் அமைந்திருக்கும் புளொட் அலுவலக வளாகத்தில் கண்டுபிடித்ததாகவும் பொலிசார் கூறினர். சிவராம் கடத்தப்பட்ட இடத்திற்கு அண்மையாகவே புளொட் அலுவலகம் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. பீட்டர் என்ற ஸ்ரீஸ்கந்தராஜா இறுதியில் பிணையில் விடுதலை செய்ப்பட்டார். பிறகு போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறப்பட்டு அவர் வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். தனிப்பட்ட நண்பன் சிவராம் அல்லது சிவா எனது தனிப்பட்ட ஒரு நண்பன். அவரது குடும்பத்தில் சிவராம் நான்காவது பிள்ளையாக 1959 ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறந்தார். மிகவும் எளிமையான வைபவம் ஒன்றில் 1988 செப்டெம்பரில் அவர் திருமணம் செய்துகொண்டார். காலஞ்சென்ற றிச்சர்ட் டி சொய்சாவும் நானும் மாத்திரமே அந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள். சிவராமின் மனைவி யோகரஞ்சினி பூபாலபிள்ளையும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரே. பவானி என்று அவரை அழைப்பதுண்டு. அவர்களுக்கு வைஷ்ணவி, வைதேகி என்ற இரு புதல்விகளும் சேரலாதன் என்ற புதல்வனும் இருக்கிறார்கள். சிவராமின் மறைவுக்கு பிறகு குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்துவிட்டது. மேட்டுக்குடி குடும்பம் சிவராம் கிழக்கில் ஒரு தமிழ் மேட்டுக்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கு கிழக்கில் பெருமளவு நிலங்கள் சொந்தமாக இருக்கின்றன. தருமரத்தினம் வன்னியனார் என்று அறியப்பட்ட அவரின் தந்தைவழி பாட்டன் 1938 செப்டெம்பர் 17 தொடக்கம் 1943 நவம்பர் 20 வரை அன்றைய மட்டக்களப்பு தெற்கு தொகுதியை அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்தார். 1970 களின் காணிச் சீர்திருத்தங்கள் காரணமாக அந்த குடும்பம் ஓரளவுக்கு காணிகளை இழக்க வேண்டிவந்தது. லேடி மன்னிங் ட்ரைவில் அமைந்திருந்த அவர்களின் வீடு சகல நண்பர்களும் சிறுவர்களும் வரவேற்கப்பட்ட ஒரு இடமாக விளங்கியது. சிறுவயதில் இருந்தே சிவா ஒரு தீவிர வாசகர்; தனது அறிவுத்தேடலில் கட்டுப்பாடின்றி பல கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வரவேற்பவர். மார்க்ஸ், பேர்னாட் ஷா, சேக்ஸ்பியர், மாக்கியவெல்லி, கௌடில்யா, சன் சூ, குளோவிற்ஸ், ஜோமினி, ஒமர் கயாம், ஜோன் டோன் ஆகியோரின் நூல்களையும் ஓளவையார் , திருமூலர் மற்றும் பல்வேறு சித்தர் பாடல்கள் என்று பலவற்றையும் ஒப்பீட்டளவில் இளவயதிலேயே பேரார்வத்துடன் படித்து மனதில் இருத்திக் கொண்டவர். வாசிப்பு பழக்கத்துடனான சிவராமின் நெருக்கமே 1980 ஆம் ஆண்டில் மடடக்களப்பு வாசகர் வட்டத்தை அமைப்பதில் அவரை முன்னோடியாகச் செயற்பட வைத்தது. சிவராம் மட்டக்களப்பில் சென். மைக்கேல் கல்லூரியிலும் கொழும்பில் பெம்புரூக் மற்றும் அக்குயினாஸ் கல்லூரிகளிலும் கல்வி பயின்றார். 1982 ஆம் ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த அவர் ஜி.ஏ. கியூ.வுக்காக ஆங்கிலம், தமிழ் மற்றும் தத்துவத்தை கற்றார். ஆனால் பிறகு ஆங்கிலத்தில் கவனம் செலுத்தினார். அவர் தனது பட்டப்படிப்பை ஒருபோதும் பூர்த்தி செய்யவில்லை. 1983 கறுப்பு ஜூலை வன்செயல்களையடுத்து ஒரு பட்டதாரி மாணவனாக யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்த சிவராம் அடுத்த வருடம் படிப்பைக் கைவிட்டு முழுநேர கெரில்லாப் போராட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்தார். பேராதனையில் படித்துக்கொண்டிருந்த வேளையில் கூட தனது ' அரசியல் ' வேலையைச் செய்வதற்காக சிவராம் திடீரென்று விரிவுரைகளில் இருந்து காணாமல் போய்விடுவார். அப்போது அவர் 'எஸ். ஆர். ' என்று அழைக்கப்பட்டார். முதலில் சிவராம் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கே விரும்பினார். ஆனால் அவரைச் சேர்த்துக் கொளவதற்கு விடுதலை புலிகள் விரும்பவில்லை. அதற்கு பிறகு அவர் 1984 ஆம் ஆண்டில் கே. உமாமகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ விடுதலை கழகத்தில் (புளொட் ) இணைந்து கொண்டார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாட்டில் சிவராம் இராணுவப் பயிற்சியைப் பெற்றார். ஆனால் அவர் அரசியலுக்கே பழக்கப்பட்டவர் என்பதால் புளொட் போராளிகளுக்கு அரசியல் மற்றும் இராணுவ தத்துவ வகுப்புக்களை எடுப்பதில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்தியாவிலும் இலங்கையில் வடக்கு, கிழக்கிலும் சிவராம் வகுப்புக்களை நடத்தினார். ஒரு கடடத்தில் மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தின் இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். நாளடைவில் இயக்கத்தின் மத்திய குழுவின் உறுப்பினராக அவர் தரமுயர்த்தப்பட்டார். சிவராம் 1983 --87 காலப்பகுதியில் தெற்கிலும கொழும்பிலும் அரசியல் வேலைக்காக பரந்தளவில் பயணங்களை மேற்கொண்டார். அந்த வரூடங்களில் பெருமளவு தொடர்களை ஏற்படுத்திக் கொண்ட அவருக்கு பெரும் எண்ணிக்கையில் நண்பர்கள். விஜய குமாரதுங்கவும் ஓஸீ அபேகுணசேகரவும் அவர்களில் அடங்குவர். அப்போது ஜே.வி.பி.யுடனும் சிவராம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ஜே.வி.பி.யின் முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்கவும் புளொட் இயக்கத்தின் இராணுவத் தளபதி மாணிக்கம் தாசனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களது தாய்மார் சகோதரிகள். இந்த தொடர்பு அரசியல் நோக்கங்களுக்காக பயனபடுத்தப்பட்டது. ஜே.வி.பி. க்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட மாற்றுக் குழுவான ' விகல்ப கண்டாயம' வுடனும் சிவராமுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நக்சலைட்டுக்கள் என்று அழைக்கப்பட்ட ஆயுதமேந்திய மார்க்சிஸ்ட் -- லெனினிஸ்ட் குழுக்களுடனும் புளொட் தொடர்புகளைப் பேணியது. அந்த முயற்சியிலும் கூட சிவராமுக்கு பங்குண்டு. அவர் பரந்தளவில் பயணங்களை மேற்கொண்டார். ஆந்திரப் பிரதேசத்தின் காடுகளுக்குள் ' மக்கள் போர்க்குழு' வுடனான சந்திப்பை அவர் எப்போதும் நினைத்துப் பெருமைப்படுவார். அங்கு தான் சிவராம் பழம்பெரும் புரட்சிவாதி கொண்டபள்ளி சீத்தாராமய்யாவை சந்தித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 1987 ஜூலை 28 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையை புளொட் சில தயக்கங்களுடன் ஏற்றுக்கொண்டது. புளொட் உத்தியோக பூர்வமாக தெற்கிற்கு நகர்வதற்கும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஜனநாயக அரசியலுக்கு நிலைமாறுவதற்கும் உடன்படிக்கை வழிவகுத்தது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் புளொட் அமைத்த அரசியல் கட்சியின் தலைவராக தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டார். அதேவேளை அந்த புதிய கட்சியின் முதலாவது செயலாளர் வேறு யாருமல்ல தருமரத்தினம் சிவராமே தான். சிவராமின் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம் தொடங்கியது. சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான அரசியலுடனான சிவராமின் சல்லாபம் துப்பாக்கியில் இருந்து பேனைக்கான அவரின் நிலைமாறலுக்கு முன்னோடியாக அமைந்தது. புளொட்டின் தலைவரான " முகுந்தன் " என்ற கதிர்காமர் உமாமகேஸ்வரன் 1989 ஜூலை 15 அவரது இரு மெய்க்காவலர்கள் உட்பட அவரது இயக்க உறுப்பினர்களினால் கொழும்பில் கொல்லப்பட்டார். உமாமகேஸ்வரனின் மரணத்துக்கு பிறகு புளொட் இயக்கத்தில் இருந்து பெருமளவு உறுப்பினர்கள் விலகத் தொடங்கினர். பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள். புளொட்டின் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளராக தொடர்ந்தும் இருந்த சிவராமும் விரக்திக்குள்ளானார். அரசியல் கட்சியின் தலைவரான தருமலிங்கம் சித்தார்த்தன் உமாமகேஸ்வரனின் இடத்துக்கு புளொட்டின் தலைவராக வந்தார். பத்திரிகைத்துறைக்கு நகர்வு மாறிக்கொண்டிருந்த இந்த கோலங்களுக்கு மத்தியில், சித்தார்த்தனுடனான சிவராமின் உறவு அப்படியே தொடர்ந்த போதிலும், புளொட் இயக்கத்திற்குள் பெருமளவுக்கு தான் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் உணர்ந்தார். தமிழர் அரசியலில் புளொட்டுக்கு பெரிய எதிர்காலம் இருக்கப் போவதில்லை என்றும் சிவராம் உணர்ந்து கொண்டார். இன்டர் பிரெஸ் சேர்விஸுக்காக றிச்சர்ட் டி சொய்சாவுக்கு உதவியதன் மூலம் பத்திரிகைத் துறையிலும் சிவராம் சிறியளவில் பரிச்சயத்தைப் பெறத் தொடங்கினார். அரசியலில் இருந்து பத்திரிகைத் துறைக்கு ஒரு நகர்வைச் செய்வதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. ' த ஐலண்ட் ' பத்திரிகையின் வடிவில் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோது சிவராம் அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார். அதையடுத்தே ' தராக்கி ' என்ற பத்திரிகையாளர் அவதாரத்தை அவர் எடுத்து பத்திரிகைத் துறையில் அலைகளை ஏற்படுத்தத் தொடங்கினார். ஒரு போராளி என்ற நிலையில் இருந்து பத்திரிகையாளராக சிவராமின் நிலை மாற்றமும் ' த ஐலண்ட் ' வழியாக ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் அவரது பிரவேசமும் 1989 ஆம் ஆண்டில் இடம்பெற்றன. நான் ' த ஐலண்ட் ' பத்திரிகையில் இருந்து 1988 ஆம் ஆண்டில் விலகி அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடாவுக்கு மாறினேன். எம்மிருவரினதும் நண்பனும் சகாவுமான றிச்சர்ட் டி சொய்சாவே த ஐலண்டில் சிவராம் இணைந்து கொள்வதற்கு அனுசரணையாக இருந்தார். காமினி வீரக்கோன் அந்த நேரத்தில் த ஐலண்ட் தினசரியினதும் சண்டே ஐலண்டினதும் ஆசிரியராக காமினி வீரக்கோன் பணியாற்றாற்றினார். அவர் பொதுவில் " கம்மா " என்று அறியப்பட்டவர். சிவராமின் மறைவுக்கு பிறகு காமினி வீரக்கோன் எழுதிய கட்டுரை ஒன்றில் தான் எவ்வாறு சிவராமை ஆசிரியபீடத்துக்கு எடுத்தார் என்பதையும் ' தராக்கி ' என்ற புனைபெயர் எவ்வாறு வந்தது என்பதையும் விரிவாக கூறியிருந்தார். அதனால் அந்த கதையை அவரின் வார்த்தைகளிலேயே கூறுவதே சிறந்தது. காமினி வீரக்கோனின் கட்டுரையின் பொருத்தமான பந்திகள் வருமாறு ; " 1989 ஆண்டில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் றிச்சர்ட் டி சொய்சாவிடமிருந்து ( அவரும் பிறகு சிவாவைப் போன்றே அவலமான முறையில் மரணத்தைச் சந்தித்தார்) தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. "வடக்கு -- கிழக்கு மோதல்கள் குறித்து உச்ச அளவில் அறிவைக்கொண்ட ஒரு பத்தி எழுத்தாளரை த ஐலண்ட் பத்திரிகையில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்களா" என்று அவர் என்னைக் கேட்டார். " ஒரு சில தினங்களுக்கு பிறகு நாம் ஆர்ட்ஸ் சென்டர் கிளப்பில் சந்தித்தோம். தொழில் ஒன்றைத் தேடுகின்ற உணர்வை பெரிதாக வெளிக்காட்டுகின்ற ஒரு இளைஞனாக சிவா தோன்றவில்லை. மிகவும் அளவாகப் பேசிய சிவா வடக்கு, கிழக்குடன் தொடர்புடைய விவகாரங்களில் சண்டே ஐலண்டுக்கு ஒரு வாரந்த பத்தியை தன்னால் எழுதமுடியும் என்று சொன்னார். அந்த நேரத்தில் வடக்கு, கிழக்கில் நிவவிய சூழ்நிலை குறித்து நாம் பேசினோம். சிவாவின் அறிவும் நிகழ்வுகளை அவர் வியாக்கியானம் செய்த முறையும் என்னைக் கவர்ந்தன. அந்த நேரத்தில் எனது பத்திரிகையில் ஒரு சுயாதீன எழுத்தாளருக்கு வழங்கிய கொடுப்பனவில் மிகவும் கூடுதலான ஒரு தொகையை அவருக்கு நான் வழங்கினேன். தாரகையில் இருந்து தராக்கிக்கு தனக்கு ஒரு புனைபெயரை வைக்கும் பொறுப்பை சிவராம் என்னிடமே விட்டுவிட்டார். அவரது அடையாளம் அந்தரங்கமாக இருக்கவேண்டும் என்று நாம் இருவரும் விரும்பினோம். தாரகை ( Tharakai - Star ) என்ற புனைபெயரை வைக்கலாம் என்று நானாகத் தீர்மானித்தேன். ஆனால், பத்திரிகை ஆசிரியர்கள் நன்கு சிந்தித்து தீட்டுகின்ற திட்டங்கள் தங்களது சொந்த பங்களிப்பைச் செய்ய விரும்புகின்ற உதவி ஆசிரியர்களினால் உயரத் தூக்கி வீசப்படுகின்றன. நான் சிவராமின் கட்டுரையை அச்சில் பார்த்தபோது அதில் பெயர் தராக்கி (Taraki ) என்று இருந்தது. அது பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஆப்கான் சர்வாதிகாரியின்( நூர் முஹமட் தராக்கி ) பெயர். சிவாவுக்கு அது வேடிக்கையாக இருந்தது. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டோம். இறுதியாக தராக்கி ( Taraki) என்று நிலைபெறும் வரை அது பல்வேறு வடிவங்களை எடுத்தது. "அவர் எழுதிய முதல் கட்டுரை ' தமிழ்த் தேசிய இராணுவத்தின் இராணுவ மூலோபாயங்கள்' Military Stretegies of Tamil National Army ) என்று நினைக்கிறேன். அது அரசியல்,இராணுவ, இராஜதந்திர, பத்திரிகைத்துறை மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவன வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவாவின் பத்தியுடன் எனக்கு பிரச்சினை இருக்கவில்லை. அவர் த ஐலண்டில் இருந்த காலம் முழுவதும் எனக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. அவரது பத்தியை கடுமையாக செம்மைமப்படுத்திய ஒரு சந்தர்ப்பத்தைக் கூட என்னால் நினைவுபடுத்த முடியவில்லை." ஆலையடிச்சோலை தருமரத்தினம் புவிராஜகீர்த்தி சிவராமின் பூதவுடல் 2005 மே 2 ஆம் திகதி மட்டக்களப்பில் ஆலையடிச்சோலையில் உள்ள குடும்ப மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிவராம் தனது மட்டக்களப்பையும் சொந்த கிழக்கு மண்ணையும் பெரிதும் நேசித்தார். மட்டக்களப்பு வாவியின் மேலாக புளியந்தீவு பாலத்தில் நின்று இதமான காற்றை வாங்குவதே சிவராமின் வாழ்வில் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. ஆலையடிச்சோலையில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. அதை அவர் 2004 ஆம் ஆண்டிலேயே பகிரங்கமாக எழுதினார். கிழக்கு மண்ணின் இந்த துணிச்சல்மிகு பத்திரிகையாளனுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனுதாபிகள் என்று பெருமளவு மக்கள் கூட்டம் பிரியாவிடை கொடுத்தது. அவர் ஆங்கிலம் வாசிக்கும் உலகிற்கு 'தராக்கி' யாக இருக்கலாம், ஆனால் தனது சொந்த மண்ணில் உறவினர்களுக்கு "குங்கி ", நண்பர்களுக்கு "எஸ்ஸார்" ( SR). சிவராமின் தீவிரவாதமும் இதழியலும் வேறு எங்காவது பெரிய சர்ச்சைகளை உருவாக்கியிருக்கக் கூடும். ஆனால் மட்டக்களப்பில் அவர் எளிமையான "எங்கள் பையன்". தனது 46 வருடகால வாழ்வில் சிவராம் பரந்த உலகில் பெருமளவு சாதனைகளைச் செய்திருக்கிறார். ஆனால், நித்திய துயிலுக்கு அவர் மட்டக்களப்புக்கு வரவேண்டியிருந்தது. https://www.virakesari.lk/article/197057
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
விகாஷ் யாதவிற்கு முன்பு இவர்கள் 'ரா' ஏஜென்டுகளாக வெளிநாடுகளில் செயல்பட்டார்களா? படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக விகாஷ் யாதவ் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய குடிமகன் விகாஷ் யாதவ் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 29 அன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியில், ''வெள்ளை மாளிகையில் மோதியை, அதிபர் பைடன் வரவேற்கும் வேளையில், இந்திய உளவு அமைப்பான 'ரா' அதிகாரி ஒருவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்வதற்காக ஏவிய கூலிபடைக்கு ஆலோசனைகளை வழங்கினார். குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்காவில் மோதியை கடுமையாக விமர்சிப்பவர்.”என குறிப்பிட்டுள்ளது ரகசிய தகவலின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த செய்தியின்படி, இந்திய ஏஜென்ட் விக்ரம் என்ற விகாஷ் யாதவ், பன்னுனின் நியூயார்க் முகவரியை கூலிப்படைக்கு அனுப்பியுள்ளார். மேலும், பன்னுனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அப்போதைய 'ரா’ தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ''யாதவ் ஒரு சிஆர்பிஎஃப் அதிகாரி, எனவே அமெரிக்க உளவுத்துறை வலையமைப்பில் சிக்காமல் இருக்கும் தேவையான பயிற்சியும் திறமையும் அவருக்கு இல்லை” என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னுனைக் கொல்ல ரா அதிகாரியால் அமர்த்தப்பட்ட நிகில் குப்தா, அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளியாக இருக்கும் ஒரு நபரிடம் தெரியாமல் இந்த கொலைக்கான திட்டம் பற்றி கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியை 'ஆதாரமற்றது மற்றும் உண்மையற்றது' என்று விவரித்தார். ''ஆபரேஷன்களை செய்து முடிக்க பல மாதங்கள் ஆகும். சிலவற்றை முடிக்க வருடக்கணக்கு கூட ஆகும். ஆனால், ரா-வின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் ஆப்ரேஷன்களை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பார்கள். ரா அமைப்புக்கு அரசியல் அழுத்தங்கள் இருக்கலாம் என்பதையும் தவிர்க்க முடியாது'' என பெயர் கூற விரும்பாத முன்னாள் ரா சிறப்பு செயலாளர் ஒருவர் கூறுகிறார். ''நிகில் குப்தா இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் ரா ஏஜென்சியின் செயல்பாடுகளில் உதவியவர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் நடந்த ஆபரேஷனில் அவர் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை'' என்கிறார்கள் நிகிலின் பின்னணியை அறிந்தவர்கள். குல்பூஷன் ஜாதவ் வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஜாதவ் இன்னமும் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார் இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்படுவது அல்லது நாடு கடத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, குல்பூஷன் ஜாதவ், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் - இரான் எல்லையில் பிடிபட்டார். இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஜாதவ் இன்னும் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும், 'ரா’ ஏஜென்டுகள் என கூறப்படுபவர்களுக்கும், அந்தநாடுகளின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பினருக்கு இடையே பல மோதல்கள் நடந்துள்ளன. இந்த நாடுகளில், ரா உளவாளிகள் என்று கூறப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். வாஷிங்டன் போஸ்டின் இந்திய செய்தி அலுவலகத்தின் தலைவர் கேரி ஷே, "காலிஸ்தான் இயக்கத்தை இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்திய அரசால் கருதப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய புலனாய்வு அதிகாரிகள் காலிஸ்தான் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்திய அதிகாரிகளின் இந்த செயல்பாடுகளை சில சமயங்களில் அந்த நாடுகளின் அரசுகள் விரும்புவதில்லை'' என 'தி வயர்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்ட 'ரா ஏஜென்டுகள்' பட மூலாதாரம்,GETTY IMAGES “2019-ஆம் ஆண்டில், ஜெர்மனியில் வசிக்கும் சில சீக்கியர்கள் ரா ஏஜென்டுகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களை ஜெர்மன் பாதுகாப்பு ஏஜென்சிகள் கைது செய்து வழக்கு தொடர்ந்தன. காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் செயற்பாட்டாளர்களை உளவு பார்த்ததற்காகவும், ரா அமைப்புக்கு தகவல் தெரிவித்ததற்காகவும் இந்தியத் தம்பதிகளான மன்மோகன் மற்றும் கன்வால்ஜித் ஆகியோருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது” என்றார் பெயர் கூற விரும்பாத முன்னாள் ரா அதிகாரி ஒருவர். ஜெர்மன் ஊடகமான Deutsche Welle ஒரு செய்தியில், "மன்மோகன் 2015 ஜனவரியில் ராவுக்காக உளவு பார்க்கும் பணியைத் தொடங்கினார். ஜூலை 2017 முதல் அவரது மனைவி கன்வால்ஜித்தும் அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். ரா ஏஜென்சி, அவர்களின் சேவைகளுக்கு ஈடாக 7,200 யூரோக்களை வழங்கியது. விசாரணையின் போது, இருவரும் இதனை ஒப்புக்கொண்டனர். அவர்கள் ரா அதிகாரிகளை பலமுறை சந்தித்ததையும் ஒப்புக் கொண்டனர்." என குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு ரா ஏஜென்டுகள் 2020-21-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிலும், 'ரா ஏஜென்டுகள்' என்று கூறப்படும் இரண்டு பேர், அங்குள்ள உளவுத்துறை அமைப்பால் பிடிபட்டனர். அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி ஆஸ்திரேலியா கேட்டுக் கொண்டது. இந்த விவகாரம் நடந்த சமயத்தில் இரண்டு முன்னணி ஆஸ்திரேலிய ஊடகங்களான சிட்னி மார்னிங் ஹெரால்டு மற்றும் ஏபிசி நியூஸ் ஆகியவை ஒரே நாளில் பெரிய கட்டுரையை வெளியிட்டன. அதில், "ஒரு பெரிய உளவு நெட்வொர்க் நாட்டில் இருந்து அகற்றப்பட்டது. உளவாளிகள் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது'' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு ஏபிசி நியூஸ் வெளியிட்ட செய்தியில்,''இந்தியாவின் மோதி அரசாங்கம் ஆஸ்திரேலியாவில் உளவாளிகளின் நெட்வொர்க்கை அமைத்துள்ளது'' என குறிப்பிட்டுள்ளது. ''ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மக்களைக் கண்காணித்ததாகவும், ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் அதன் வணிக உறவுகள் பற்றிய தகவல்களை சேகரித்ததாகவும் அந்த நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது'' என்கிறது அந்த செய்தி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2020-21 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிலும், 'ரா ஏஜென்டுகள்' என்று கூறப்படும் இரண்டு பேர், அங்குள்ள உளவுத்துறை அமைப்பால் பிடிபட்டனர். பிரிட்டனில் காலிஸ்தான் செயற்பாட்டாளர்களை கண்காணித்த குற்றச்சாட்டு “2014-15 இல், சமந்த் கோயல் லண்டனில் ரா ஏஜென்சியின் நிலையத் தலைவராக இருந்தபோது, பிரிட்டனின் உளவுத்துறை பிரிவான MI-5, சமந்த் லண்டனில் நிலையத் தலைவராக இருக்கும் வரம்புகளை மீறுவதாக எச்சரித்தது'' என வாஷிங்டன் போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. ''அந்த சமயத்தில் பிரிட்டன் அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற்றவும் நினைத்தனர். மேலும் இந்திய ஏஜென்டுகள் காலிஸ்தான் தலைவர் அவதார் சிங் கந்தாவை பின்தொடர்ந்ததாகவும் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது'', எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, ''பிரிட்டன் அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோயல் கோபமாக, 'இந்தியப் பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். எனவே அவர்களைக் கையாள்வது எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது' என்று கூறியுள்ளார்''. கோயல் லண்டனில் இருந்து டெல்லி திரும்பினார். ரா பிரிவின் தரவரிசையில் உயர்ந்து, 2019 இல் அதன் தலைவர் பதவியை அடைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அரசு, 'நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கு' எங்களது கொள்கைகளில் இடமில்லை என்று கூறி வருகிறது. பிரிட்டன் ஊடகமான கார்டியனில், ஏப்ரல் 4, 2024 அன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், ''பாகிஸ்தானில் காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையவர்களை குறிவைத்து கொலை செய்யும் முயற்சியில் ரா பிரிவு ஈடுபட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் உடனான நேர்காணல்களின் அடிப்படையில், இந்த செய்தி தயாரிக்கப்பட்டதாக கார்டியன் கூறுகிறது. இந்தியாவில் தேர்தல் பிரசாரத்தின் போது, ''நாங்கள் எதிரிகளின் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்பது, எதிரிகளுக்கும் தெரியும்'' என பிரதமர் நரேந்திர மோதி பேசியது, இந்த குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்த்தது. ஆனால், இந்திய அரசு, 'நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கு' எங்களது கொள்கைகளில் இடமில்லை என்று கூறி வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், பன்னுன் மற்றும் நிஜ்ஜார் போன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 1980ல் காலிஸ்தான் செயற்பாட்டாளர் தல்விந்தர் சிங் பர்மர் மீது இந்தியா புகார் அளித்தும் கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா கனிஷ்கா குண்டுவெடிப்புக்கு பர்மர் மூளையாக செயல்பட்டார். இதில் 329 பேர் கொல்லப்பட்டனர். பாபர் கல்சா என்ற கடும்போக்கு அமைப்பின் முதல் தலைவர் பர்மர் ஆவார். 1992 இல் இந்தியாவில் பஞ்சாப் காவல்துறையினருடன் நடந்த என்கவுன்டரில் பர்மர் கொல்லப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/cp9zrenz8n9o
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
சிஎஸ்கே வீரர் சான்ட்னர் சுழலில் இந்திய அணி வீழ்ந்தது எப்படி?- விறுவிறுப்பான கட்டத்தில் புனே டெஸ்ட் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 34 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனேயில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களில் ஆட்டமிழந்து. தற்போது, 2வது இன்னிங்ஸில் பேட் செய்துவரும் நியூசிலாந்து அணி இன்றைய (அக்டோபர் 25) ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என்ற முன்னிலை பெற்றுள்ளது. டாம் ப்ளன்டெல் 30 ரன்னிலும், க்ளென் பிலிப்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு அரைசதம் கூட இல்லை முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ஜடேஜா(38), கில்(30), ஜெய்ஸ்வால்(30) ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன் அனைவரும் 20 ரன்களுக்குள்ளே ஆட்டமிழந்தனர். கடந்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொற்ப ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றினர். வரலாற்று வெற்றியை நோக்கி நியூசிலாந்து? ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருப்தால், 5 நாட்கள்வரை ஆட்டம் நீடிக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாளில்கூட டெஸ்ட் போட்டி முடிவுக்கு வரக்கூடும் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். இதுவரை இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லாத நியூசிலாந்து அணி முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைக்கும் முயற்சியில் இருக்கிறது. ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று ஒரே நாளில் இரு அணிகளிலும் சேர்த்து 14 விக்கெட்டுகள் வீழ்ந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுப்மான் கில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் ஆட்டம் எப்படி மாறும் புனே ஆடுகளம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். இந்த ஆடுகளத்தில் இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிதான் வென்றுள்ளது. நியூசிலாந்து அணி வசம் இன்னும் 5 விக்கெட்டுகள் இருப்பதால், 350 ரன்களுக்கு மேல் இந்திய அணிக்கு இலக்கு வைக்கலாம். இந்த பிட்ச்சில் சேஸிங் (chasing) செய்வது இந்திய அணிக்கு மிகக் கடினமாக இருக்கும். பிட்சின் தன்மை நாளுக்கு நாள் மாறுகிறது, அதனால் அது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதலாக ஒத்துழைப்பு அளிக்கும். சான்ட்னர், அஜாஸ் படேல், பிலிப்ஸ் ஆகியோரின் பந்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் டர்ன் ஆகிறது. ஆதலால், நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் கணித்து ஆடுவது எளிதானதாக இருக்காது. இந்திய அணி சுழற்பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தால் டெஸ்ட் தொடரையே இழக்க நேரிடலாம். அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தலாம். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறுவதற்கு அந்த அணியின் கேப்டன் டாம் லாதம்(86), டாம் பிளென்டல்(30) பேட்டிங் குறிப்பிடத்தக்க உதவி புரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் குவித்தார் சான்ட்னரின் முதல் 5 விக்கெட் இதுவரை சான்ட்னர் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதில்லை. ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 53 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க காரணம் என்ன? முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் 10 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகளை மிட்செல் சான்ட்னர் மட்டுமே வீழ்த்தியிருந்தார். 2 விக்கெட்டுகளை கிளென் ப்லிப்ஸ், ஒரு விக்கெட்டை சௌதியும் கைப்பற்றினர். ஆனால், சான்ட்னர் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் 7 பேர் ஆட்டமிழந்ததில் சர்ஃப்ராஸ் கான் மட்டுமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்திருந்தார். மற்ற 6 பேட்ஸ்மேன்களுமே கால்காப்பில் வாங்கியும், போல்டாகியும் விக்கெட்டை இழந்திருந்தனர். இதற்கு முக்கியக் காரணம் சான்ட்னர் தனது பந்துவீச்சில் “ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்” என்ற முறையில் பந்துவீசினார். அதாவது தனது பந்துவீச்சின் இலக்கை ஸ்டெம்பை நோக்கியே வைத்திருந்தார். இரண்டாவதாக சான்ட்னர் பந்துவீச்சின் வேகம் மணிக்கு 90 கிலோமீட்டருக்கும் குறைவாகவும், அதேநேரம் பந்தை “டாஸ்” செய்யும் அளவு அதிகமாகவும் இருந்தது. புனே போன்ற மெதுவான ஆடுகளத்தில் வேகம் குறைவாக வீசும் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கணித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் “ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்” வீசும் சான்ட்னர் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும் அவர்கள் விக்கெட்டை இழக்க நேரிடலாம். இந்த உத்தியில்தான் சான்ட்னர் பந்துவீசினார். குறிப்பாக வேகத்தைக் குறைத்து சான்ட்னர் பந்துவீசியதால், பந்து பிட்ச் ஆனபின் நன்கு ட்ர்ன் ஆகி, திடீரென பவுன்ஸ் ஆகியது. இதனால் பந்தை கணித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தது. ஒரே இடத்தில் பந்து பலமுறை பிட்ச் ஆனாலும், ஒவ்வொரு முறை பிட்ச் ஆகும்போது பந்து ஒவ்வொரு விதமாக சென்றது. இதை புரிந்து கொண்ட சான்ட்னர் ஆடுகளத்துக்கு ஏற்ப தனது பந்துவீச்சை மாற்றிக்கொண்டார். ஆனால், பிட்சுக்கு ஏற்ப இந்திய பேட்டர்கள் தங்கள் பேட்டிங்கை மாற்றாததால், இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். முதல் 5 விக்கெட்டுகளை 83 ரன்களுக்கு இழந்த இந்திய அணி, அடுத்த 5 விக்கெட்டுகளை 73 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை மிட்செல் சான்ட்னர் வீழ்த்தியிருந்தார் இந்திய அணியைப் பொருத்தவரை எதிரணி 100 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இருமுறை மட்டுமே வென்றுள்ளது. 2000-01-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும், 1976-ஆம் ஆண்டில் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் மட்டும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த டெஸ்டில் 300 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்படும் இலக்கை இந்திய அணி சேஸ் செய்யுமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை சான்ட்னரின் இன்று 17.3 ஓவர்கள் மட்டுமே வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த 2016-17 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதே புனே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் ஓ கீஃப் பந்துவீச்சில் இந்திய அணி ஆட்டத்தில் சுருண்டது. இந்த பிட்ச்சில் பந்தில் அதிகமான டர்ன் இருக்கிறது, பந்து பல்வேறு விதத்தில் திரும்புகிறது இதற்கு ஏற்றார்போல் இந்திய பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை இருக்க வேண்டும். அதாவது ஒரே இடத்தில் பிட்ச் ஆகும் பந்து ஒருமுறை அதிகமாக டர்ன் ஆகியும், 2வது முறை குறைவாக டர்ன் ஆகியும், 3வது முறை நேராகவும் பேட்டரை நோக்கி வரும்போது பேட்டர்கள் குழப்பமடைகிறார்கள். இந்த பிட்ச்சின் இயல்புத்தன்மைக்கு ஏற்ப பேட்டிங் உத்தியை இந்திய வீரர்கள் மாற்ற வேண்டும். குறிப்பாக விராட் கோலி, ஃபுல்டாஸாக சான்ட்னர் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது பந்து மெதுவாக வந்து க்ளீன் போல்டாகினார். பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் சுழற்பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சர்ஃப்ராஸ்கான் அதே அணுகுமுறையோடு இந்த ஆட்டத்திலும் பேட்டிங் செய்தபோது, ஸ்வீப் ஷாட்டில் விக்கெட்டை இழந்தார். ஆடுகளத்தின் தன்மையையும், சான்ட்னரின் பந்துவீ்ச்சையும் கணித்து ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவர் மட்டுமே ஓரளவுக்கு பேட் செய்தனர். சுந்தர் 18 ரன்களையும் ஜடேஜா 38 ரன்களையும் குவித்தனர். இருவரும் அதிரடியாக சில ஷாட்களை ஆடியதால்தான் இந்திய அணி 150 ரன்களைக் கடந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இழந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வாஷிங்டன் பந்துவீச்சில்தான் இழந்தது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக பேட் செய்தனர். பவுண்டரி அடிக்க வாய்ப்பிருக்கும் எந்தப் பந்தையும் அவர்கள் வீணடிக்கவில்லை. ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களிலும், கால்களை நகர்த்தியும் ஷாட்களை ஆடி, இந்தியப் பந்துவீச்சாளர்களை குழப்பினர். இதனால், அஸ்வின் 6 ஓவர்களை வீசி 33 ரன்களையும், ஜடேஜா 3 ஓவர்களில் 24 ரன்களையும் எடுத்தனர். கேப்டன் டாம் லாதம் 82 பந்துகளில் அரைசதம் அடித்து அதிரடியான பேட்டிங் உத்தியை செயல்படுத்தினார். ஆனால், வாஷிங்டன் சுந்தரின் வேகக்குறைவான சுழற்பந்துவீச்சை கையாளத் தெரியாமல், அதிரடியாக ஷாட்களை அடிக்க முயன்றபோது நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இழந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வாஷிங்டன் பந்துவீச்சில்தான் இழந்தது. வாஷிங்டன் சுந்தரும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் உத்தியைக் கையாண்டு பந்துவீசியதால், கால்காப்பில் வாங்கியும், போல்டாகியும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்துவரும் நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என்ற முன்னிலை பெற்றுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyjlvp0g6po
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
இது ‘சித்தி’ பிரிகேட்: US Election-ல் Kamala Harris-க்காக இவர்கள் களமிறங்கியது ஏன்? அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 'சித்தி பிரிகேட்' என்று அழைக்கப்படும் தமிழ் வம்சாவளி மகளிரணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அவர்களை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.
-
உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு - அமெரிக்கத் தூதர் ஜுலி சங்
(நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற குடும்பங்களுக்கு, அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் வெள்ளிக்கிழமை (25) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து, அவர்களது நிலைப்பாடுகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இச்சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான சந்திப்பை அடுத்து, அவர்களது கதைகளால் தான் மிகுந்த துயருற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை அவர்களது கதைகளைப் போலவே வட, கிழக்கு மாகாணங்களிலும், தெற்கிலும் தான் சந்தித்து, கேட்டறிந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் கதைகள், காணாமல்போன தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் உண்மை மற்றும் நீதிக்காகப் போராடிவருகின்ற தரப்பினரின் பெருந்துயரை வெளிக்காண்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சகல குடும்பங்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/197126
-
மனவலிமை உடையவரா நீங்கள்?
நமது உடல் வலிமைபெற வேண்டுமானால் தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் அவசியம் என்பது நாம் அறிந்ததே. அதுபோலவே மனரீதியாக நம்மை வலுப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?. அதற்கென்று நாம் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத சில பழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக நாம் சிக்கல்களை எதிர்கொள்ளும் கடினமான நேரங்களில் இந்த மனவலிமையே அவற்றை வெற்றிகரமாக கடந்துசெல்ல உதவுகின்றது. இதன்மூலமே வாழ்வின் உண்மையான வெற்றியையும் மகிழ்ச்சியையும் நம்மால் பெறமுடிகின்றது. மனவலிமை அதிகரிக்கும்போது நமது ஒட்டுமொத்த அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதன்மூலம் நமது வாழ்க்கையின் தரத்தினையும் மேம்படுத்திக்கொள்ள முடிகின்றது. இதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது உளவியலாளர் “அமி மோரின்” அவர்களின் படைப்பான இந்தப் புத்தகம். மனவலிமையுடன் இருப்பவர்கள் செய்யாத பதிமூன்று விஷயங்களை இதில் விவரித்துள்ளார் ஆசிரியர். செய்யக்கூடிய விஷயங்களை சொல்வதற்கு மத்தியில் செய்யக்கூடாத விஷயங்களை சொல்லியிருப்பது ஆசிரியரின் மாறுபட்ட பார்வையைக் காட்டுகின்றது. எது மனவலிமை? அனைவருமே அவரவருக்கான குறிப்பிட்ட அளவு மனவலிமையுடனேயே இருக்கிறோம். இதில் மனவலிமை உடையவர்கள் அல்லது மனம் பலகீனமானவர்கள் என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், நாம் கொண்டிருக்கும் மனவலிமையை மேம்படுத்திக் கொள்வதற்கான களம் எப்போதுமே இருக்கவே செய்கின்றது என்ற அடிப்படை உண்மையை நினைவில் வைக்கவேண்டியது அவசியம். நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகள் ஆகியவற்றை சீராக்குவதற்கான திறனை செம்மைப்படுத்துவதே மனவலிமையின் மேம்பாட்டிற்கான வழி. நம்மிடமுள்ள முரண்பாடான எண்ணங்களை சரியாக கண்டறிந்து, அதற்குப் பதிலாக மிகவும் யதார்த்தமான எண்ணங்களை மாற்றியமைக்க வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நமது நடத்தையானது நேர்மறையான முறையில் இருக்கவேண்டும். நமது உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும், அப்போதுதான் உணர்வுகளின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வராமல் இருக்கமுடியும். தேவையற்ற பரிதாபம்! வலிகளும் துன்பங்களும் இல்லாத வாழ்க்கையே இல்லை என்பது நாம் அறிந்ததே. நமக்கு ஏற்படும் துன்பத்திற்காகவோ அல்லது சிக்கலுக்காகவோ நமக்கு நாமே பரிதாபப்பட்டுக் கொள்ளக்கூடாது என்கிறார் ஆசிரியர். மனோதிடம் உள்ளோர் இச்செயலை செய்வதில்லை. இந்த சுய இரக்கமானது உண்மையில் நமக்கு அழிவைத்தரக்கூடிய ஒன்றே. ஆம் நமது பொறுப்புகளை தவிர்ப்பதற்கான காரணங்களை கொடுக்கக்கூடியதாகவும் இது உள்ளது. இதனால் புதிய பிரச்சினைகள் உருவாகிறதே தவிர, இருக்கின்ற பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மேலும், சுய இரக்கமானது அதிகப்படியான எதிர்மறை உணர்வுகளை தோற்றுவித்து, நமது மனோபலத்தை சிதைத்துவிடும் தன்மையுடையது. பயமறியா மாற்றம்! மனவலிமை உடையவர்கள் மாற்றத்தைக்கண்டு விலகிச்செல்வதோ அல்லது பயப்படுவதோ இல்லை. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தவறும்போது நமது தனிப்பட்ட வளர்ச்சி பெருமளவில் பாதிப்படைகின்றது. வித்தியாசமான மாறுபட்ட புதிய செயல்பாடுகள் இல்லாதபோது நமது வாழ்க்கை சலிப்படைகிறது. இதனால் நம்மால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிவதில்லை. இது சரியில்லை, என்னால் முடியாது, இது கடினமானது போன்ற எதிர்மறை எண்ணங்களை அறவே விட்டொழித்து மாற்றத்திற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கவனம்! தனது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைக் குறித்து மனவலிமை உடையவர்கள் கவலைப்படுவதில்லை என்கிறார் ஆசிரியர். அனைத்தையும் நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற முயற்சி கவலையிலேயே முடியும். இம்மாதிரியான விஷயங்களை குறித்து சிந்திப்பதே நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கும் செயல். மேலும் இதனால் மற்றவர்களின் மீதான தவறான மதிப்பீடு மற்றும் உறவுகளில் சேதம் போன்ற விஷயங்களுக்கு அடித்தளமிட்டுவிடும் ஆபத்தும் உள்ளது. உதாரணமாக நமது அலுவலகத்தில் நமக்கான பணியை நம்மால் சிறப்பாக செய்யமுடியுமே தவிர, அதை அங்கீகரிக்குமாறு நிர்வாகத்தையோ அல்லது மேலாளரையோ நம்மால் வற்புறுத்த முடியாது. நமது பணி மட்டுமே நம் கட்டுப்பாட்டில் உள்ள செயல். அதற்கான அங்கீகாரம் என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம். பழையன கழிதல்! நிகழ்கால வாழ்க்கையை நேற்றைய முடிந்துபோன விஷயங்களில் மனவலிமையுடையோர் தொலைத்துவிடுவதில்லை. இன்றைய நமது சூழ்நிலை மகிழ்ச்சியற்றதாக உள்ள நிலையில், தன்னிச்சையாக நமது மனம் முந்தைய மகிழ்ச்சியான நினைவுகளை அசைபோட ஆரம்பித்துவிடுவது வாடிக்கையே. ஆனால் இது பல உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. மாற்றவே முடியாத முடிந்துபோன விஷயங்களினால், மாற்றமுடிந்த நிகழ்கால நிகழ்வுகளை இழந்துவிடுகிறோம். மேலும், நமது திட்டமிடுதல், திறன், அணுகுமுறை போன்றவற்றிலும் பெரும்பாதிப்பினை ஏற்படுத்திவிடுகின்றது. ஆக பழையன கழிதலே, புதியன புகுதலுக்கான வழி என்பதை உணர்ந்து செயல்படுவோம். மீண்டும் மீண்டும்! மனவலிமை உடையோர் தாங்கள் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதில்லை. ஒருமுறை செய்த தவறை தொடர்ந்து செய்வது பலவிதமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது. தவறுகளை கண்காணிப்பதிலேயே தொடர்ந்து இருந்துவிடும் நிலையில், நம்மால் இலக்கினை நோக்கி முன்னேறிச்செல்ல முடியாத சூழல் ஏற்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட எந்தவொரு பிரச்சனைக்கும் நீடித்த தீர்வு என்ற ஒன்று கிடைப்பதில்லை. சரியான திட்டமிடல், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி போன்ற நற்பண்புகளும் தடைப்பட்டுவிடுகின்றன. ஒருமுறை தவறு ஏற்படும்போது அதை சரியாக ஆராய்ந்து, அதற்கான மாறுபட்ட சிறப்பான தீர்வை கண்டறிந்தால் மட்டுமே அதே தவறு மறுமுறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தேவையற்ற பொறாமை! நாம் என்ன செய்கிறோம், நமக்கான இலக்கு என்ன என்பதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, மற்றவர்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி அவர்களது வெற்றியின்பால் பொறாமை கொள்வது என்பது, மனவலிமை உடையவர்களால் செய்யப்படாத முக்கிய செயலாகப் பார்க்கப்படுகிறது. ஆம். இந்த மனநிலையானது, மிக எளிதாக நமது ஒட்டுமொத்த வாழ்வினையும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையது. மேலும் இது நமது தனிப்பட்ட செயல்பாடுகளின் மீதான கவனத்தை தடுத்துநிறுத்தி நமக்கான வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மன அமைதி குறைதல், கவனக்குறைவு, மதிப்பிழப்பு, மனஸ்தாபம் போன்ற எதிர்மறை நிகழ்வுகளும் பொறாமையினால் நமக்கு கிடைக்கும் பரிசுகளே. விடாமுயற்சி! தோல்விக்குப் பிறகான தங்களது முயற்சிகளை மனவலிமையுடையவர்கள் நிறுத்திக்கொள்வதில்லை. தோல்வியானது ஏற்றுக்கொள்ளமுடியாதது, எல்லாமே எனது தவறுகளே, தோல்வியால் மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொள்வதில்லை, வெற்றிக்கான விஷயம் என்னிடமில்லை, ஒருமுறை தோல்வியடைந்தால் பின்னர் வெற்றிபெறமுடியாது போன்ற எண்ணங்களே விடாமுயற்சிக்கான தடைகள் என்பதை கவனத்தில்கொண்டு அவற்றை அறவே நீக்கிவிடவேண்டும். என்னால் தோல்வியை திறம்பட கையாளமுடியும், தோல்வியானது வெற்றிக்கான பயணத்தின் ஒரு பகுதியே, தோல்விகளிலிருந்து என்னால் கற்றுக்கொள்ள முடியும், தோல்வியானது எனது முயற்சிக்கான சவால், தோல்வியை தாண்டிவருவதற்கான ஆற்றல் என்னிடமுள்ளது போன்ற எண்ணங்களே விடாமுயற்சிக்கான விதைகள் என்பதை கவனத்தில் கொண்டு அவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். பயிற்சி முக்கியம்! வெறுமனே புத்தகத்தைப் படிப்பதனால் மட்டுமே நம்மால் எந்த விஷயத்திலும் ஒருபோதும் நிபுணத்துவம் பெறமுடியாது. விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு பற்றிய நுணுக்கங்களை படித்து தெரிந்துக்கொள்வதால் மட்டுமே, அவர்களால் சிறந்த போட்டியாளர்களாக மாறிவிட முடியாது. மற்ற இசைக்கலைஞர்களின் இசையை கேட்பதனால் மட்டுமே, ஒருவரால் தனது இசைத்திறனை அதிகரித்துக்கொள்ள முடியாது. இவற்றையெல்லாம் தாண்டிய பயிற்சியே ஒருவரை அவரவர் துறையில் சிறந்து விளங்கச்செய்கிறது. அதுபோலவே எந்தவொரு விஷயமானாலும் அது செயல்பாட்டிற்கு வரும்போது மட்டுமே நீடித்த வெற்றியைப் பெறமுடியும். p.krishnakumar@jsb.ac.in https://www.hindutamil.in/news/business/232140--5.html
-
மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு; ஒருவர் கைது
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வெள்ளிக்கிழமை (25) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த யானை அண்மைக்காலமாக பரப்புக் கடன் தான் பகுதியில் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாய காணிகளில் சுற்றித்திரிந்த தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த யானை வியாழக்கிழமை (24) இரவு உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யானை இறந்த இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த யானை சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு இறந்திருப்பதாக தெரிவித்தனர். இறப்பு சம்பவம் தொடர்பில் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. https://www.virakesari.lk/article/197127
-
வளர்ப்பு நாய்க்கும் சொத்து எழுதி வைத்துள்ளார் மறைந்த இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா
இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார். இவர் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். வளர்ப்பு நாய்கள்தான் அவருக்கு உயிராகும். அவர் தனது வீட்டில் ஜேர்மன் வகையைச் சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வழக்கம். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள சொத்தில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார். டிட்டோ வளர்ப்பு நாயை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துக்கொண்டார். ரத்தன் டாடாவிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் இறந்ததை தொடர்ந்து புதிதாக தத்து எடுத்த நாய்க்கு அதே பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இந்த டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க சொத்து எழுதி இருக்கிறார். இது தவிர ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம். இது தவிர ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். அத்தோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார். ரத்தன் டாடா தனது வாழ்நாளில் பெற்ற விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 100 பில்லியன் டாலர் கொண்ட டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போதிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் சொத்துகளை பெரிய அளவில் வைத்துக்கொண்டதில்லை. எனவேதான் ரத்தன் டாடா பெயர் ஒருபோதும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வந்ததில்லை. எப்போதும் தொண்டு மற்றும் நன்கொடை வழங்குவதில் ஆர்வம் கொண்ட ரத்தன் டாடாவின் சொத்துகள் அனைத்தும் இனி சேவைக்காக பயன்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/197093
-
இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக பல்வேறு இராணுவ திட்டங்கள் - முழுமையான யுத்தத்திற்கு தயாராகுமாறு ஈரானின் ஆன்மீக தலைவர் உத்தரவு - நியுயோர்க் டைம்ஸ்
இஸ்ரேலின் பதில் தாக்குதலிற்கு தயராகிவரும் ஈரான் தனது படையினரை யுத்தமொன்றிற்கு தயாராயிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நியுயோர்க் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலின் பதில் தாக்குதலிற்கு தயாராகிவரும் ஈரான் தனது படையினரை யுத்தமொன்றிற்கு தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை காசாவிலும் லெபனானிலும் தனது சகாக்கள் அழிக்கப்பட்டதை பார்த்துள்ளதால் யுத்தமொன்றை தவிர்ப்பதற்கு முயல்கின்றது. இஸ்ரேலின் பதில் தாக்குதலை எதிர்கொள்வதற்காக பல இராணுவதிட்டங்களை வகுக்குமாறு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கொமேனி பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் நான்கு அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலின் அளவை பொறுத்தே ஈரானின் பதில் தாக்குதல் காணப்படும். இந்த மாதம் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களிற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அதனால் சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டால் ஈரான் பதிலடி கொடுக்கும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாறாக இஸ்ரேல் ஈரானின் ஆயுதகளஞ்சியங்கள் மற்றும் தளங்கள் மீது சிறிய ஆளில்லா விமானதாக்குதல்கள் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டால் ஈரான் பதில் நடவடிக்கையில் ஈடுபடாது. எனினும் மத்திய கிழக்கிற்கும் பிராந்திய நாடுகளிற்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படலாம், ஈரானிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான முழுமையான யுத்தம் என்பது மேலும் குழப்பநிலையை காசா லெபனானில் யுத்தநிறுத்ததிற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்திவிடும். https://www.virakesari.lk/article/197081
-
கிழக்கு மாகாண ஆளுநர் - திருகோணமலை உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (25) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர். எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கவும், கழிவுகளை பிரித்து சேகரித்து கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் செயளாலர்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். ஒவ்வொரு உள்ளுராட்சி சபையும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/197100
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
தனக்குத் தானே வெட்டின குழியா(ஐ மீன் குழிப் பிட்ச்) இது அண்ணை?!
-
அக்கினிக் கரங்கள்
பகிர்விற்கு நன்றி கவி ஐயா. பாதிக்கப்பட்டவரோடு அங்கேயே இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவனாயிருந்தேன், ஆனாலும் பல சம்பவங்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது. அதனை இந்நாவல் கிளறி விட்டுள்ளது.
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை
ஜோன்ஸ்டனை சந்திக்க சிறைச்சாலை சென்ற மகிந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் (23) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மகிந்த ராஜபக்ச இன்று அவரை சந்திக்க சென்றுள்ளார். https://thinakkural.lk/article/311163