Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மகிந்த ராஜபக்ஸ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மண்ணில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது. ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 வருட கால அரசியல் வாழ்க்கையில், சொந்த மண்ணில் அவர்கள் தேர்தலை சந்திக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையில் 3 தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இலங்கையின் தவிர்க்க முடியாத ஆட்சியாளர்களாக ராஜபக்ஸவின் குடும்பத்தினர் விளங்கிய போதிலும், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மக்களால் தோற்கடிக்கப்பட்டார். எனினும், 2019-ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஸ குடும்பம் ஆட்சி அமைத்த நிலையில், அப்போது தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், ராஜபக்ஸ குடும்பத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்தனர். இதையடுத்து, 2022ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய போராட்டத்திற்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். ராஜபக்ஸ குடும்பத்தின் பிடியில் இருந்து ஆட்சி, அதிகாரம் மீண்டும் நழுவியது. அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் வாரிசாக நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் போட்டியில் வெற்றியடையவில்லை. இந்த நிலையில், தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அவர்களது சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் போட்டியிடவில்லை. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ஸ குடும்பம் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ள முதலாவது சந்தர்ப்பமாக இது காணப்படுகின்றது. எனினும், ராஜபக்ஸ குடும்பத்திலுள்ள ஷஷிந்திர ராஜபக்ஸ மாத்திரம் இம்முறை தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வி அடைந்தார். அத்தோல்வி ராஜபக்ஸ குடும்ப அரசியலின் வீழ்ச்சியின் முதல்படியாக காணப்பட்டது. ராஜபக்ஸ குடும்ப அரசியலின் ஆரம்பம் இலங்கையில் நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்க சபை (இலங்கை அரசு சபை) செயல்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், 1931-ஆம் ஆண்டு இந்த அரசாங்க சபை உருவாக்கப்பட்டது. இந்த சபையில் இருந்தே, ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது. 61 உறுப்பினர்களை கொண்ட அரசாங்க சபையின் உறுப்பினராக, ராஜபக்ஸ குடும்பத்தின் முதலாவது அரசியல்வாதியாக கருதப்படும் டி.எம்.ராஜபக்ஸ அங்கம் வகித்தார். அன்று முதல் ராஜபக்ஸவின் குடும்பம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய அரசியலில் முக்கிய இடம் வகித்து வந்துள்ளது. டொன் மெத்திவ்ஸ் ராஜபக்ஸ என அழைக்கப்பட்ட டி.எம்.ராஜபக்ஸவின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்பட்ட டி.ஏ.ராஜபக்ஸ, டி.எம்.ராஜபக்ஸவின் மறைவுக்கு பின்னர் தனது செயற்பாடுகளை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்திருந்தார். டி.ஏ.ராஜபக்ஸ அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். 1947-ஆம் ஆண்டு நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் டி.ஏ.ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து. ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து 1951-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டு, அரசியலை தொடர டி.ஏ.ராஜபக்ஸ தீர்மானித்தார். அவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் தொடர ஆரம்பித்தது. சமல் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோர் டி.ஏ.ராஜபக்ஸவின் மகன்கள். 1967-ஆம் ஆண்டு டி.ஏ.ராஜபக்ஸவின் மறைவுக்கு பின்னர், அவரது புதல்வரான மஹிந்த ராஜபக்ஸ 1970-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நேரடி அரசியலில் நுழைந்தார். அன்று முதல் மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். அவரை தொடர்ந்து, சமல் ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அரசியலுக்குள் பிரவேசித்தனர். நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ, உள்நாட்டு போரிலும் வெற்றி கண்டார். அதன் பின்னர், மஹிந்த, கோட்டாபயவை உள்ளடக்கிய ராஜபக்ஸ குடும்பம் அசைக்க முடியாத ஒரு அரசியல் குடும்பம் என்ற நிலையை எட்டியது. அந்த பின்னணியில், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வி அடைந்தார். அந்த தோல்வி ராஜபக்ஸ குடும்பத்தின் வீழ்ச்சியின் முதல்படியாக கருதப்பட்டது. பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து ராஜபக்ஸ குடும்பம் வெளியேறியது. பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பம் ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ராஜபக்ஸ குடும்பம், பின்னர் சுதந்திர கட்சியுடன் பல தசாப்தங்கள் தொடர்ந்தது. 2015 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான உறவை முடிவுக்கு கொண்டு வந்தது ராஜபக்ஸ குடும்பம். 2016-ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறிய ராஜபக்ஸ குடும்பம், இதர உறுப்பினர்களின் அங்கத்துவத்துடன் இந்த கட்சியை ஆரம்பித்தது. தாமரை மொட்டு சின்னத்தை தேர்வு செய்த இந்த கட்சி, ஓரிரு வருடங்களிலேயே பாரிய வளர்ச்சியை எட்டியது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பம் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் தடவையாக போட்டியிட்டு, மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ களமிறக்கப்பட்டு, மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார். அத்துடன், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றது. இலங்கையில் ஆட்சியை ஒரு குடும்பம் வசப்படுத்திய பின்னணியில், இலங்கை மாபெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸ குடும்பமே காரணம் என தெரிவித்து, மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடாத்த ஆரம்பித்தனர். இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகிய நிலையில், நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டு, பொருளாதார நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்திருந்தனர். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு, இதுவரை ஆட்சி பீடத்தை கைப்பற்றாத மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை மக்கள் தேர்வு செய்தனர். இந்த நிலையிலேயே, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, இலங்கையில் ஆட்சியை ஒரு குடும்பம் வசப்படுத்திய பின்னணியில், இலங்கை மாபெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத ராஜபக்ஸ குடும்பம் நாடாளுமன்றத் தேர்தலில் சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷிந்திர ராஜபக்ஸவை தவிர வேறு எந்தவொரு ராஜபக்ஸ குடும்ப அங்கத்தவர்களும் போட்டியிடவில்லை. குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ஸ குடும்பத்திலிருந்து எந்தவொரு வேட்பாளரும் களமிறக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் இம்முறை நாடாளுமன்ற பிரவேசத்தை தவிர்க்க முடிவெடுத்துள்ளதுடன், நாமல் ராஜபக்ஸவின் பெயர் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நாமல் ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடாத தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முயற்சித்து வருகின்றார். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு வெகுவாக அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பம் போட்டியிட்டால் பாரிய தோல்வியை சந்திக்கும் என்ற அச்சமே போட்டியிடாததற்கு காரணம் என்று இலங்கை அரசியல் அரங்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி தமிழ், நாமல் ராஜபக்ஸவிடம் வினவினோம். தமது குடும்பத்திலுள்ள மூத்த பரம்பரையினர் தற்போது அரசியலில் இருந்து சற்று ஓய்வு பெற எண்ணியுள்ளமையினாலேயே இம்முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்ததாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் நோக்கிலேயே தாம் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் வருவதற்கு கட்சி தலைமை தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுகின்றார். ''எனது முந்தைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டார்கள். ஒருவர் தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, ஏனையோர் பிரதேச அரசியலை முன்னெடுத்து வந்தார்கள். எமது பரம்பரையில் நான் மாத்திரமே அரசியலில் ஈடுபடுகின்றேன். இந்த கேள்வியை மறுபுறத்தில் கேட்க முடியும். அதாவது, எனது தந்தை, பெரியப்பா போன்றோர் இம்முறை தேர்தலில் போட்டியிட்டிருந்தால், ஏன் வயதாகியும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என கேள்வி எழுப்புவார்கள். எனினும், யதார்த்தமான ஒரு விடயம் காணப்படுகின்றது. மூத்தவர்கள் வயதிற்கு செல்கின்றார்கள். இளைய சமூகம் அரசியலில் முன்னோக்கி வருகைத் தர வேண்டும். என்னை எடுத்துக்கொண்டால், தேசிய அரசியலை முன்னோக்கி நகர்த்துவதற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தமது இறுதித் தேர்தல் என்பதை சமல் ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கடந்த தேர்தலிலேயே அறிவித்து விட்டார்கள்." என நாமல் ராஜபக்ஸ கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdje124ey77o
  2. நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என்றார். அத்துடன், இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். வேலணை மற்றும் வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது. இதன்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில், நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. குறிப்பாக, எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. இதை ஏற்றுள்ள மக்கள் இம்முறை மத்தியில் உருவாகியுள்ள மாற்றம் போன்று வடக்கிலும் ஈபிடிபியிடம் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். மேலும் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் மத்திய அரசுடன் மட்டுமல்லாது ஏனைய இன மக்கள் மத்தியிலும் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது. அதனால்தான் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலத்தின் அடிப்படையிலேயே மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கும், பேரம் பேசலுக்கும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிகரித்த ஆசனங்களை வழங்குங்கள் எனவும் கோரிவருகின்றேன். அதனடிப்படையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யதார்த்த அரசியலையும் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொண்டு உங்களது ஆதரவு பலத்தையும் வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அந்த வகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/196707
  3. நியூசிலாந்திடம் தோற்றதால் இந்தியாவின் உலக சாதனை பயணத்தில் சிக்கல் - சிஎஸ்கேவுக்கு ரச்சின் நன்றி பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்தின் அபார ஆட்டத்தால் வலுவாக மீண்டு வந்தது. ஆனாலும், நியூசிலாந்துக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு அது வெற்றி பெற போதுமானதாக இருக்கவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த ரன்களில் சுருண்டது ஒட்டுமொத்தமாக இந்த போட்டியையே தாரை வார்த்துவிட்டது. இந்த தோல்விக்கு இந்திய அணி மேற்கொண்ட தவறான முடிவுகளே காரணமாகிவிட்டன. இதனை கேப்டன் ரோகித் சர்மாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய அணி கோட்டை விட்டது எங்கே? ஆட்ட நாயகன் விருது பெற்ற ரச்சின் ரவீந்திரா, ஐ.பி.எல். தொடரில் தான் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் என்ன சொன்னார்? இந்த தோல்விக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணியின் நிலை என்ன? கடைசி நாளில் என்ன நடந்தது? பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா சிறிது நேரத்திலேயே அந்த முடிவு தவறானது என்று உணர்ந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா வெறும் 46 ரன்களில் ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் அபார ஆட்டத்தால் 402 ரன்களைக் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் ஆகியோரின் அபார ஆட்டத்தால் வலுவாக மீண்டு வந்த இந்திய அணி 462 ரன்களைக் குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. அத்துடன் நான்காவது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் 107 என்ற எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணியை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிரட்டினார். இரண்டாவது பந்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். ஒரு முனையில் பும்ரா மிரட்டலாக பந்துவீச, மறுமனையில் முகமது சிராஜூம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால், நியூசிலாந்து அணி தொடக்கத்தில் ரன்களை சேர்க்கவே சிரமப்பட்டது. குறிப்பாக, நியூசிலாந்து வீரர்கள் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ளவே மிகவும் சிரமப்பட்டனர். பும்ரா வீசிய 8 ஓவர்களில், அதாவது 48 பந்துகளில் 22 பந்துகளை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாமல் தவறான ஷாட் ஆடினர். தனது இரண்டாவது பந்தில் டாம் லாதமை வீழ்த்திய பும்ரா, அடுத்த சிறிது நேரத்தில் டெவோன் கான்வேயையும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அவர் 17 ரன்களை எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES எளிதாக ரன்களை சேர்க்க முடியாவிட்டாலும் கூட, குறைவான இலக்கு என்பதால் நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடியின்றி களத்தில் இருந்தனர். அதேநேரத்தில், முதல் இன்னிங்ஸைப் போலவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறையை இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா உணர்ந்தது. இதனால், வேகப்பந்துவீச்சைக் கொண்டு நியூசிலாந்து வீரர்களுக்கு தொடக்கத்தில் அளித்த நெருக்கடியை இந்திய அணியால் தொடர முடியவில்லை. அடுத்து வந்த சுழற்பந்து வீச்சாளர்களை நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடியின்றி எதிர்கொண்டனர். ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரின் பந்துகளில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன் சேர்த்தனர். குறிப்பாக, முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் ரச்சின் ரவீந்திரா அச்சமின்றி ஆடினார். அவரும் வில் யங்கும் சேர்ந்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ரவீந்திரா 39 ரன்களும், வில் யங் 48 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மண்ணில் 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES "டாஸில் தோற்றது நல்லதாகி விட்டது" முதல் டெஸ்டில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், "நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். டாஸில் தோற்றது ஒரு வகையில் நல்லதாகிவிட்டது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் பந்துவீசினர். அதற்கான பரிசும் கிடைத்தது. இந்தியா வலுவாக மீண்டும் வரும் என்பது தெரியும். அவர்கள் அதனை செய்தார்கள். ஆனால், இரண்டாவது புதிய பந்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஓ ரூர்கி இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசினார். டிம் சவுத்தி, ஹென்றி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸில் ரச்சினுடன் சவுத்தி அமைத்த பார்ட்னர்ஷிப் முக்கியமானது. சில போட்டிகளே ஆடியுள்ள ரச்சின் கடந்த ஓராண்டாக அவரது பணியை மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறார். " என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ஃபராஸ், ரிஷப் பற்றி ரோகித் கூறியது என்ன? இந்திய அணியின் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, "முதல் இன்னிங்சில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இது ஒரு நல்ல முயற்சி. 350 ரன்கள் பின்தங்கியிருக்கும் போது, அதிகம் யோசிக்க முடியாது. ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரின் பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. சற்று ரிஸ்க் எடுத்தாலும் கூட ரிஷப் பந்த் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்." என்று கூறினார். மேலும் தொடர்ந்த அவர், "நல்ல பந்துகளை தடுத்தாடியும், சில பந்துகளை விட்டும் ஆடிய பந்த், அவரது இயல்பான ஷாட்களையும் ஆடினார். சர்பராஸின் ஆட்டத்தை மறக்க முடியாது. நான்காவது போட்டியில் ஆடும் அவர் சிறந்த, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருக்கிறது. நீங்கள் மனதளவில் தெளிவாக இருந்துவிட்டால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தடையேதும் இருக்காது" என்று கூறினார். "முதல் போட்டியில் தோற்ற பிறகு பல முறை நாங்கள் மீண்டு வந்திருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற பிறகு அடுத்து வந்த 4 போட்டிகளையும் வென்றோம். இது நடக்கவே செய்யும். இன்னும் 2 போட்டிகள் இருக்கின்றன. நாங்கள் வலுவாக மீண்டு வருவோம்" என்று ரோகித் சர்மா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "சி.எஸ்.கே.வுக்கு நன்றி " முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற உதவிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய அவர், "பெங்களூருவில் பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. என்னுடைய சிறப்பான ஃபார்மும், சரியான முன்தயாரிப்புமே இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம். என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும் வரை அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். இந்த தொடருக்காக நான் கருப்பு மண், செம்மண் போன்ற வித்தியாசமான பிட்ச்களில் வித்தியாசமான பவுலர்களுக்கு எதிராக பயிற்சி எடுக்க முயற்சித்தேன்." என்று கூறினார். "(சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய போது) ஒவ்வொரு நாளும் வலைப் பயிற்சியின் போது பல வகையான வலைப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டேன். அது விலை மதிப்பில்லாத சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்த வசதிகளை செய்து தந்த சென்னைக்கு நன்றியுடையவனாக இருப்பேன். பெங்களூருவில் எங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது." என்றும் ரச்சின் ரவீந்திரா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி கோட்டை விட்டது எங்கே? இந்த டெஸ்ட் தொடங்கும் முன்பே இந்திய அணி நிர்வாகம் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டது என்பதை ஆட்டத்தின் முடிவு காட்டுகிறது. நியூசிலாந்து அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க, பெங்களூரு ஆடுகளத்தின் தன்மையை சரிவர கணிக்காமல் இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது தவறான முடிவாகிவிட்டது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் நியூசிலாந்து பேட்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதேபோல், பெங்களூருவில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் தடைபட, இரண்டாவது நாளில் டாஸ் வென்றதும் பேட்டிங்கை இந்தியா தேர்வு செய்தது தவறாகிப்போனது. ஆடுகளத்தை சரியாக கணித்து திட்டமிட்டு பந்துவீசிய நியூசிலாந்து அணி, ஓரிரு செஷன்களிலேயே இந்த டெஸ்டின் முடிவை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் இந்தியா மிகக் குறைந்த ரன்களில் சுருண்டதே மீண்டு வர முடியாத நெருக்கடியில் அணியை தள்ளிவிட்டது. இந்தியா உலக சாதனையை தொடர்வதில் சிக்கல் இந்திய அணி 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனை படைத்துள்ளது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து பெற்ற வெற்றியால், இந்த சாதனையை இந்திய அணி நீட்டிப்பது இப்போது சவாலாக மாறியுள்ளது. அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை வென்று தனது உலக சாதனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்ற நிலையில் இருக்கிறது. இந்த வகையில், ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - அணிகளின் நிலை பட மூலாதாரம்,X/ICC இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்ற பின் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (44.44 சதவீதம்) 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து (43.06 சதவீதம்) 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (34.38 சதவீதம்), பாகிஸ்தான் (25.93 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkdglnredpo
  4. வாங்கோ வாங்கோ வில்லவன்.
  5. சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில் இயலாமையுடன் கூடிய நபர்களின் சமூக உள்ளடக்கம் எனும் வேலைத்திட்டத்தினை ஆதரித்து பரிந்துரையாடல் எனும் நிகழ்வு இயக்கச்சி றீ(ச்)ஷா இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு, நேற்றையதினம் (19.10.2024) இயக்கச்சி றீ(ச்)ஷா பண்ணையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றுள்ளது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் இயலாமையுடன் கூடிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இயலாமை உள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி முன்மொழியப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பான முன்வைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கலந்து கொண்டோர் குறித்த பரிந்துரையாடலில் இயலாமையுடன் கூடிய நபர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தல், உரிமைகள், கல்வி சுகாதாரம், வாழ்வாதாரம் , மருத்துவம், சம்பந்தமாக அவர்கள் அடைய வேண்டிய தேவை, அவற்றை பூர்த்தி செய்ய தேவையான விடயங்கள், செய்ய இயலாமையாக, சவாலாக இருக்கும் விடயங்களை எவ்வாறு தீர்ப்பது தொடர்பான பரிந்துரையாடல் விழிப்புணர்வு செயற்பாடு நடைபெற்றுள்ளது. மேலும் இதன்போது, சிறப்பு விருந்தினராக றீ(ச்)ஷா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன், பிரதம விருந்தினராக வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் வாகீசன், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/seminar-for-special-needed-people-in-reecha-1729425003
  6. நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் (2024) தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருக்கும் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை நாட்டு மக்களாகிய நாம் மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இப்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டம் மற்றும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என இரண்டிலும் சேர்த்து குறித்தொதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 45 அரசியல் கட்சிகளும் 46 சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து வருகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தலானது இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதியாகிய தமிழர் தாயகப் பகுதியில் பலத்த எதிர்பார்ப்புகள் நிறைந்த தேர்தலாக அமைந்துள்ளது. உரிமை மறுப்புக்கு இலக்கான சிறுபான்மை மக்களாகிய நாம் நமது அனைத்து வகையான உரிமைகளையும் பெறுவதற்குரிய ஆகக்கூடிய வழிமுறை அரசியல் தான். இந்த அரசியல் பிரதிநிதிகளாக போட்டியிடுகின்ற அனைவரும் அதன் கனதியை உணர்ந்தவர்களா? என்பது கேள்விக்குறியே. தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலின்போது தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மற்றும் வடக்கு, கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. அதேவேளை என்றுமில்லாதவாறு அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தல் பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது, என்பதையும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் வாக்காளர்கள் தமது கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 30 வருட அகிம்சை போராட்டமும் 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. இந்நிலையில் நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களாகிய நாம் நமது சுயநிர்ணய உரிமை உட்பட கால காலமாக நாம் வலியுறுத்தி வருகின்ற தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து முன்னகர்த்தி செல்லக்கூடியவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். உறவினர், நண்பர் போன்ற வட்டங்களை கடந்து செயற்படக்கூடிய தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய இலஞ்ச ஊழலற்ற செயல்திறன் வாய்ந்த சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்திசைவுள்ள நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். மாறிவரும் அரசியல் பொருளாதார சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் தொடர்பான சமகால அரசியல் தொடர்பான நமது பார்வையிலும் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஒளிமயமானதொரு எதிர்காலத்தை நமக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு தீர்மானமிக்க தேர்தலாக இது அமைவதற்கு நாம் எல்லோரும் நமது வாக்குரிமையை பயன்படுத்துவோம். நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படுவோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/196714
  7. ஹமாஸை இயக்கிய இந்த 6 தலைவர்களும் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு என்ன ஆனார்கள்? படக்குறிப்பு, ஹமாஸின் முக்கிய தலைவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அக்டோபர் 7 2023. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தினம். அந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் போரை அறிவித்தது. சுமார் ஒரு வருடக் காலமாக இன்னும் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில், காஸாவின் பல பகுதிகள் அழிக்கப்பட்டன. 40,000க்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். சில முக்கிய ஹமாஸ் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட யாஹ்யா சின்வார் மற்றும் இஸ்மாயில் ஹனியே போன்ற முக்கிய ஹமாஸ் தலைவர்களின் பெயரும் அடக்கம். ஹமாஸின் முக்கிய தலைவர்கள் யார்? இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? யாஹ்யா சின்வார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். இந்த தாக்குதலில் சுமார் 1200 பேர் பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் சின்வாரை குறிவைத்தது. சின்வார் காஸாவில் ஹமாஸின் முக்கிய தலைவராக இருந்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்மாயில் ஹனியே இறந்த பிறகு, அவர் ஹமாஸின் தலைவரானார். 1962 ஆம் ஆண்டு காஸாவில் பிறந்த யாஹ்யா சின்வார், சிறு வயதிலேயே காஸா போரில் கலந்து கொண்டார். சின்வார், ஹமாஸின் அல்-மஜ்த் (al-Majd) என்னும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். இது உள் பாதுகாப்பு விஷயங்களை நிர்வகிக்கிறது. இந்த சேவை இஸ்ரேலுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிப்பவர்களை விசாரிக்கிறது. இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளையும் கண்காணிக்கிறது. சின்வார் மூன்று முறை இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். 1988-இல் அவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டிருந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரருக்கு ஈடாக 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரபு கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. அவர்களில் சின்வாரும் ஒருவர். சின்வார் பின்னர் ஹமாஸில் ஒரு முக்கிய தலைவராக தனது பதவியை மீண்டும் பெற்றார். 2015ல் சின்வாரை "சர்வதேச பயங்கரவாதிகள்" பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி ரஃபாவில் இஸ்ரேலியப் படைகளால் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இஸ்மாயில் ஹனியே பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் மிகப்பெரிய தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியேவின் மரணம் 31 ஜூலை 2024 அன்று இரானில் உறுதி செய்யப்பட்டது. இவர் பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இஸ்ரேல் 1989 இல் அவரை சிறையில் அடைத்து, மூன்று வருடங்கள் வரை வைத்திருந்தது. பின்னர் அவர் பல ஹமாஸ் தலைவர்களுடன் சேர்த்து, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் ஆள் நடமாட்டம் இல்லாத மார்ஜ் அல்-ஜுஹூர் என்னும் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். ஹனியே அங்கே ஒரு வருடம் தங்கியிருந்தார். அதன் பிறகு அவர் காஸா திரும்பினார். 1997-இல், அவர் ஹமாஸ் இயக்கத்தின் ஆன்மீகத் தலைவரான ஷேக் அகமது யாசின் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அவரது அந்தஸ்து உயர்ந்தது. பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006-ஆம் ஆண்டில் வகித்தார். ஒராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பாலத்தீன அதிகார சபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ஹனியேவை பதவியில் இருந்து நீக்கினார். தனது பதவி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என ஹனியே நிராகரித்தார். தனது அரசாங்கம் தனது கடமைகளைத் தொடரும் என்றும் பாலத்தீன மக்கள் மீதான தனது பொறுப்புகளை கைவிடாது என்றும் அவர் கூறினார். அவர் 2017-இல் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது. இஸ்மாயில் ஹனியே பல வருடங்களாக கத்தாரில் வசித்து வந்தார். முகமது டெய்ஃப் பட மூலாதாரம்,MEDIA SOURCES படக்குறிப்பு, முகமது டெய்ஃப் (Mohammed Deif) ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் (Izzedine al-Qassam Brigades) தலைவராக முகமது டெய்ஃப் இருந்தார். அவர் 1965 இல் காஸாவில் பிறந்தார். பாலத்தீனர்கள் அவரை ஹமாஸின் முக்கிய தலைவராக கருதினார். பல தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மூளையாக இவர் செயல்பட்டார். இஸ்ரேலியர்கள் அவரை 'மரணத்தின் மனிதன்' என்று அழைத்தார்கள். ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையும் சுரங்கப் பாதைகளை நிர்மாணிக்க முகமது டெய்ஃப் திட்டமிட்டார். அவரது உண்மையான பெயர் முகமது தீப் அல்-மஸ்ரி, ஆனால் அவர் அபு கலீத் மற்றும் `அல் டெயிஃப்’ என்றும் அறியப்பட்டார். முகமது டெய்ஃப் காஸா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் உயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். பல்கலைக் கழகத்தில், அவர் நடிப்பு மற்றும் நாடகத்தின் மீதான அவரது ஆர்வத்திற்காக பிரபலமாக அறியப்பட்டார். அங்கு கலைஞர்கள் குழுவை உருவாக்கினார். ஹமாஸ் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட போது தயக்கமின்றி அதில் இணைந்தார். இஸ்ரேலிய அதிகாரிகள் அவரை 1989 இல் கைது செய்தனர். அவர் 16 மாதங்கள் காவலில் இருந்தார். சிறையில் இருந்த போது, ஜகாரியா அல்-ஷோர்பாகி மற்றும் சலா ஷெஹாதே ஆகியோருடன் பேசி, ஹமாஸிலிருந்து ஒரு தனி இயக்கத்தை நிறுவ திட்டமிட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, டெய்ஃப் திட்டமிட்டப்படி இஸ்ரேலிய வீரர்களை சிறைபிடிக்கும் நோக்கில் அல்-காசிம் படையணியை சிலருடன் சேர்ந்து உருவாக்கினார். படைப்பிரிவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையப் பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளை கட்டிய பொறியாளர் இவர்தான். அதிக எண்ணிக்கையிலான ராக்கெட்டுகளை ஏவுவதற்கான உத்தியை ஊக்குவித்தவர்களில் அவரும் ஒருவர். கடந்த 1996இல் பல இஸ்ரேலியர்களைக் கொன்ற பேருந்து குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு மேற்பார்வையிட்டதாக இஸ்ரேல் அவர் மீது குற்றம் சாட்டியது, மேலும் 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய வீரர்களைச் சிறைபிடித்துக் கொன்றதில் அவருக்கு பங்கு இருந்ததாகக் கூறப்பட்டது. இஸ்ரேலால் தேடப்படும் நபர்களில் ஒருவராக டெய்ஃப் இருந்தார். இஸ்ரேல் அவரை 2000-இல் சிறையில் அடைத்தது. ஆனால் இரண்டாவது பாலத்தீன எழுச்சி அல்லது `இன்டிஃபதா’ என்று அழைக்கப்பட்ட காலக்கட்டத்தின் போது அவர் சிறையில் இருந்து தப்பினார். பல படுகொலை முயற்சிகளில் இருந்து அவர் உயிர் பிழைத்துள்ளார். 2002இல் நடந்த அத்தகைய ஒரு முயற்சியில் அவர் ஒரு கண்ணை இழந்தார். அப்போது அவர் ஒரு கால் மற்றும் கையை இழந்துவிட்டதாகவும், பேசுவதில் சிரமம் இருப்பதாகவும் இஸ்ரேல் கூறியது. 2014 ஆம் ஆண்டு காஸா மீதான தாக்குதலின் போது, இஸ்ரேலிய ராணுவம் மீண்டும் டெய்ஃப்பை கொல்ல குறிவைத்தது. ஆனால் அவர் தப்பிவிட்டார். ஆனால் அவர்கள் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் கான் யூனிஸில் வான்வழித் தாக்குதலில் டெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. மர்வான் இசா பட மூலாதாரம்,MEDIA SOURCES படக்குறிப்பு, மர்வான் இசா ஹமாஸ் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாமின் துணைத் தலைவராக இருந்த மர்வான் இசா, அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் பல ஆண்டுகளாக இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்தார். 2006 இல் ஒரு படுகொலை முயற்சியில் காயமடைந்தார். சிறுவயதிலேயே ஹமாஸுடன் இணைந்து செயல்பட்டதன் காரணமாக, "முதல் இன்டிஃபதா" என அழைக்கப்பட்ட காலகட்டத்தின் போது, இஸ்ரேலிய ராணுவத்தினர் இவரை ஐந்து ஆண்டுகள் சிறை வைத்திருந்தனர். அதன் பிறகு அவர் 1997 இல் பாலத்தீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், ஆனால் 2000 ஆம் ஆண்டில் இரண்டாவது இன்டிஃபதா காலக்கட்டத்தின் தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார். பாலத்தீன நிர்வாக சபையால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளில் ராணுவ பிரிவை மேம்படுத்துவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். ஹமாஸ் இயக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றியதால், இவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றார். அவரது சகோதரிகள் 2014 மற்றும் 2021 இல் காஸா மீதான இஸ்ரேலிய படையெடுப்பின் போது உயிரிழந்தனர். இஸ்ரேலிய போர் விமானங்கள் அவரது வீட்டை இரண்டு முறை தாக்கியுள்ளன. 2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித் என்பவர் விடுதலை செய்யப்பட்ட போது அதற்கு ஈடாக இஸ்ரேலின் பிடியில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதில் மர்வான் இசாவும் ஒருவர். 2011 வரை இவருடைய முகத்தை யாரும் பார்த்ததில்லை. கிலாத் ஷாலித் விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதிகளின் வரவேற்பு விழாவின் போது ஒரு குரூப் போட்டோ வெளியானது. அதில் இசாவும் இருந்தார். மார்ச் 2024 இல் காஸாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு கீழே நிலத்தடியில் இருந்த சுரங்கப்பாதையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இசா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. கலீத் மஷால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலீத் மஷால் மேற்குக் கரையில் 1965 ஆம் ஆண்டு பிறந்த கலீத் மஷால், ஹமாஸின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1997 இல், இஸ்ரேலிய பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஜோர்டானில் மஷால் வாழ்ந்த போது அவரைக் கொல்ல முயன்றது. மொசாட் முகவர்கள் போலி கனேடிய பாஸ்போர்டுடன் ஜோர்டானுக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் ஜோர்டானிய குடியுரிமை பெற்ற கலீத் மஷால், தலைநகர் அம்மானில் ஒரு தெருவில் நடந்து சென்றபோது மொசாட் முகவர்கள் அவர் மீது விஷ ஊசியை செலுத்தினர். கலீத் மஷால் மீதான படுகொலை முயற்சியைக் கண்டுபிடித்த ஜோர்டானிய அதிகாரிகள் இரண்டு மொசாட் உறுப்பினர்களைக் கைது செய்தனர். ஜோர்டானின் மறைந்த மன்னர் ஹுசைன் இஸ்ரேலிய பிரதமரிடம் மஷாலுக்கு கொடுக்கப்பட்ட விஷ ஊசிக்கு மாற்று மருந்தைக் கேட்டிருந்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் அழுத்தத்தை எதிர்கொண்ட நெதன்யாகு, முதலில் கோரிக்கையை நிராகரித்த பிறகு, அதன் பிறகு மாற்று மருந்தை வழங்கினார். கத்தாரில் வசித்த மஷால், 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக காஸாவிற்குள் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது, அவரை பாலத்தீன அதிகாரிகள் வரவேற்றனர். அவரை வரவேற்க பாலத்தீனர்கள் திரண்டிருந்தனர். ஹமாஸ் 2017 இல் அதன் அரசியல் பணியகத்தின் தலைவராக மஷாலுக்குப் பதிலாக இஸ்மாயில் ஹனியேவைத் தேர்ந்தெடுத்தது. மஷால் அரசியல் பணியகத்தின் வெளிநாட்டு பிரிவுத் தலைவரானார். மஹ்மூத் ஜஹர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹ்மூத் ஜஹர் ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மஹ்மூத் ஜஹர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். ஜஹர் 1945 இல் காஸாவில் பிறந்தார். அவரது தந்தை பாலத்தீனர் மற்றும் அவரது தாயார் எகிப்தியர். அவர் தனது குழந்தைப் பருவத்தை எகிப்திய நகரமான இஸ்மாலியாவில் கழித்தார். அவர் தனது ஆரம்ப, இடைநிலை கல்வியை காஸாவில் பெற்றார். கெய்ரோவில் உள்ள ஐன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் 1971 இல் பொது மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1976 இல் பொது அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்றார். காஸா மற்றும் கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். அவரது அரசியல் செயல்பாடுகள் காரணமாக இஸ்ரேல் வெளியேற்றும் வரை அவர் அங்கு பணியாற்றினார். ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜஹர் கருதப்படுகிறார். அவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைமையின் உறுப்பினராகக் கருதப்படுகிறார். 1988 இல், ஹமாஸ் நிறுவப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, மஹ்மூத் ஜஹார் ஆறு மாதங்கள் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டார். 1992-இல் மற்ற தலைவர்களுடன் இஸ்ரேல் அவரை நாடு கடத்தியது. அவர் ஒரு வருடம் அங்கேயே இருந்தார். 2005 இல் நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மையைப் பெற்றது. பிரதமர் இஸ்மாயில் ஹனியேவின் அரசாங்கத்தில் ஜஹர் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார். இதையடுத்து, பாலத்தீன அதிகார சபை தலைவராக இருந்த மஹ்மூத் அப்பாஸ், இந்த அரசை கவிழ்த்தார். இது பாலத்தீனர்களிடையே பிளவை ஏற்படுத்தியது. இஸ்ரேல் 2003 ஆம் ஆண்டு ஜஹரை படுகொலை செய்ய முயற்சித்தது. காஸா நகருக்கு அருகில் ரிமாலில் உள்ள ஜஹரின் வீட்டின் மீது F-16 விமானம் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு ஐந்து குவிண்டால் எடை கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் அவரது மூத்த மகன் காலித் இறந்துவிட்டார். கடந்த 2008 ஜனவரி 15 அன்று காஸாவின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையில் அவரது மற்றொரு மகன் ஹொசாம் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் ஹொசாம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். ஹொசாம் காசிம் படைப்பிரிவின் உறுப்பினராகவும் இருந்தார். ஜாஹர் அறிவுசார், அரசியல் மற்றும் இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார். 'நமது சமகால சமூகத்தின் பிரச்னை... ஒரு குர்ஆனிய ஆய்வு', 'சூரியனுக்குக் கீழே இடம் இல்லை' போன்றவை இதில் அடங்கும். இந்த புத்தகங்கள் பெஞ்சமின் நெதன்யாகுவின் புத்தகத்திற்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. இதுதவிர 'On the Pavement' என்ற நாவலையும் எழுதியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpw5gl19071o
  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் - நாளை காலைக்குள் ஜனாதிபதி வெளியிடவேண்டும் - உதய கம்மன்பில ஜனாதிபதி நாளைக்குள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில காலக்கெடுவிதித்துள்ளார். ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான இரண்டு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த தயங்குகின்றார், அந்த அறிக்கைகளை வெளியிடுவதற்காக நான் ஜனாதிபதிக்கு வழங்கிய காலக்கெடு நாளை காலை பத்துமணியுடன் முடிவடைகின்றது என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். நாளைகாலைக்குள் ஜனாதிபதி அறிக்கைகளை வெளியிட்டு அரசமைப்பின்படி தனக்குள்ள கடமைகளை நிறைவேற்றலாம் ஆனால் அவர் அவ்வாறு செய்ய தவறினால் அரசியல் குற்றவியல் பிரேரணையை எதிர்கொள்ளவேண்டிவரும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். அரசமைப்பின் சில பிரிவுகளை ஜனாதிபதி மீறினால் அறிக்கைகளை வெளியிட தவறினால் நான் அவற்றை பகிரங்கப்படுத்துவேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196688
  9. இந்திய மண்ணில் 36 வருடங்களுக்குப் பின்னர் நியூஸிலாந்துக்கு டெஸ்ட் வெற்றி (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது. இன்றைய வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என நியூஸிலாந்து முன்னிலை அடைந்துள்ளது. இந்திய மண்ணில் 36 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது இதுவே முதல் தடவையாகும். மும்பை வான்கடே விளையாட்டரங்கில் 1988இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து கடைசியாக வெற்றி பெற்றிருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டி மழையினால் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிடம் 0 - 2 ஆட்டங்கள் கணக்கில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து இந்தியாவுடனான டெஸ்டில் வெற்றிபெறக்கூடிய அனுகூலமான அணியாக ஆரம்பத்தில் கருதப்படவில்லை. ஆனால், மெட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூக், டிம் சௌதீ ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சகளுடன் இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, ரச்சின் ரவிந்த்ராவின் அபார சதத்தின் உதவியுடன் 402 ஓட்டங்களைக் குவித்தது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 356 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் சர்பராஸ் கான் குவித்த சதம் சதம், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட் ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் பலனாக 462 ஓட்டங்களைப் பெற்றது. சர்பராஸ் கானும் ரிஷாப் பான்ட்டும் 4ஆவது விக்கெட்டில் 177 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மத்திய வரிசையில் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் இந்தியா தோல்வி அடைவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் நியூஸிலாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், நான்காம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்தினால் இரண்டாவது புதிய பந்து எடுக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் கடைசி 7 விக்கெட்கள் 54 ஓட்டங்களுக்கு சரிந்தது. 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்தப் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் மழையினால் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் 2ஆம் நாள் ஆரம்பமான இப் போட்டி 5ஆம் நாளான இன்று முற்பகல் முடிவுக்கு வந்தது. எண்ணிக்கை சுருக்கம் இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 46 (ரிஷாப் பான்ட் 20, யஷஸ்வி ஜய்ஸ்வால் 13, மெட் ஹென்றி 13.2 - 3 - 15 - 5 விக்., வில்லியம் ஓ'ரூக் 12 - 6 - 22 - 4 விக்., டிம் சௌதீ 6 - 4 - 8 - 1 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 402 (ரச்சின் ரவிந்த்ரா 134, டெவன் கொன்வே 91. டிம் சௌதீ 65, வில் யங் 33, ரவிந்த்ர ஜடேஜா 72 - 3 விக்., குல்தீப் யாதவ் 99 - 3 விக்., மொஹமத் சிராஜ் 84 - 2 விக்.) இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 462 (சர்பராஸ் கான் 150, ரிஷாப் பான்ட் 99, விராத் கோஹ்லி 70, ரோஹித் ஷர்மா 52, யஷஸ்வி ஜய்ஸ்வால் 35, வில்லியம் ஓ'ரூக் 92 - 3 விக்., மெட் ஹென்றி 102 - 3 விக்., அஜாஸ் பட்டேல் 100 - 2 விக்.) நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 107) 2ஆவது இன்: 110 - 2 விக். (வில் யங் 48 ஆ.இ., ரச்சின் ரவிந்த்ரா 39 ஆ.இ., ஜஸ்ப்ரிட் பும்ரா 29 - 2 விக்.) ஆட்டநாயகன்: ரச்சின் ரவிந்த்ரா https://www.virakesari.lk/article/196695
  10. யுவான் சுவாங்: அரசின் தடையை மீறி 4,500கி.மீ பயணித்து இந்தியாவுக்கு வந்த சீன பயணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் யுவான் சுவாங் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபைசல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் கி.பி. 629இன் குளிர்காலத்தில் சீன நகரம் சங்கானில் (Chang'an) இருந்து உயரமான, உறுதியான 29 வயது நபர், இந்தியாவை அடையும் நோக்கில் நடைபயணமாகப் புறப்பட்டார். அந்தப் பயணியின் பெயர் யுவான் சுவாங். அது சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயம். எனவே, பயணம் செய்வதற்குச் சரியான நேரமாகக் கருதப்படவில்லை. ஏனெனில், வழிப்பறிக் கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருக்கலாம். மேலும், நாட்டைவிட்டு வெளியேறும் சீன குடிமக்கள் மீது தடையும் இருந்தது. ‘தி கோல்டன் ரோட், ஹௌ ஏன்சியண்ட் இந்தியா டிரான்ஸ்ஃபார்ம்ட் தி வார்ல்ட்’ (The Golden Road, How Ancient India Transformed the World) எனும் புத்தகத்தில், வில்லியம் டால்ரிம்பிள் இவ்வாறு எழுதியுள்ளார். “நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு படிக்க வேண்டும் என்பதுதான் யுவான் சுவாங்கின் நோக்கமாக இருந்தது. அந்த நேரத்தில், நாளந்தாவில் உலகிலேயே மிகப்பெரிய பௌத்த நூலகம் இருந்தது. சங்கானுக்கும் நாளந்தாவுக்கும் இடையே 4,500 கி.மீக்கும் அதிகமான தொலைவு இருந்தது.” அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட சூழலில் நாளந்தாவை அடைவதென்பது எளிதான காரியமல்ல; நாளந்தா செல்வதற்கான சுவாங்கின் விண்ணப்பத்தை சீன நிர்வாகம் நிராகரித்தது. “அந்த ஆண்டு சீனாவில் கடும் வறட்சி ஏற்பட்டது. சீன நிர்வாகத்திடம் இருந்தும் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்தும் யுவான் சுவாங் தப்பினாலும், அங்கு நிலவிய பசிக் கொடுமையும் அவரது பயணத்தைத் தடை செய்தது. ஆனால், யுவான் சுவாங் அபாயங்களைச் சந்திக்கப் பழகியவர்," என்று டால்ரிம்பிள் எழுதுகிறார். அம்புகள் மூலம் தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள் சுமார் 150 கி.மீ. நடந்தபின், யுவான் சுவாங் லியன்ஜோ (Lianzhou) நகரை அடைந்தார். அங்கு அவர் குதிரை ஒன்றை வாங்கினார். சந்தையில் குதிரையை வாங்குவதற்கு பேரம் பேசியபோது, பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பார்த்துவிட்டனர். இதையடுத்து, பயணத்தைக் கைவிட்டு திரும்புமாறு உள்ளூர் ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை பின்பற்றாமல், யாருக்கும் தெரியாமல் விடியலுக்கு முன்பாகவே நகரைக் கடந்தார் சுவாங். மேற்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார். தன்னை யாரும் பிடித்துவிடக் கூடாது என்பதற்காகப் பகல் பொழுதில் தலைமறைவாக இருந்துவிட்டு, இரவில் பயணத்தைத் தொடர்வார். ஸ்ரம்னா ஹிலாய் (Sramna Huilai) மற்றும் ஷி யன்கோங் (Shi Yankong) தங்களின், “எ பயோகிராஃபி ஆஃப் தி டிரிபிடாகா மாஸ்டர் ஆஃப் தி கிரேட் சியன் மோனாஸ்டரி’ (A Biography of the Tripitaka Master of the Great Cien Monastery) எனும் புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளனர். “கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து பாதுகாவலர்கள் தன்னைப் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில், மணற்குழிகளில் இரவு வரை மறைந்திருப்பார். ஒருமுறை, இரவு நேரத்தில் குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது, அம்பு ஒன்று கிட்டத்தட்ட அவர் மீது உரசிச் சென்றது. சிறிது நேரத்திலேயே மற்றொரு அம்பு அவரை நோக்கி வந்தது. தன்னை குறிவைக்கிறார்கள் என்பதை உணர்ந்த அவர், ‘நான் தலைநகரில் இருந்து வந்த துறவி, என்னைக் கொல்லாதீர்கள்’ என உறக்கக் கத்தினார்” என்று எழுதியுள்ளனர். கண்காணிப்பு கோபரத்தில் இருந்த தலைமை காவலர் புத்த மதத்தைச் சேர்ந்தவர். யுவான் சுவாங்கை கைது செய்யுமாறு அவருக்கு ஏற்கெனவே உத்தரவுகள் வந்திருந்தன. ஆனால், அவர் யுவான் சுவாங்குக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். சுவாங்குக்கு அவர் உணவளித்து, பிடிபடாமல் இருக்க எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் கூறினார். சில தொலைவு வரை சுவாங்குடன் அந்தப் பாதுகாவலரும் உடன் சென்றார். சுவாங்கை சூழ்ந்த கொள்ளையர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல தடைகளை மீறி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் யுவான் சுவாங் இதையடுத்து, மொஹேயன் பாலைவனம், பமீர் மலைத்தொடர், சமார்கண்ட் மற்றும் பாமியான் வழியாக ஜலதாபாத் அருகே இந்தியாவை அடைந்தார். சமவெளிப் பகுதியை அடைந்த பின்னர், கங்கையாற்றில் படகு மூலம் பயணிக்க ஆரம்பித்தார். அவருடன் சுமார் 80 பயணிகள் இருந்தனர். சுமார் 100 மைல்கள் கடந்த பின்னர், கரையின் இருபுறமும் அசோகா மரங்கள் நிரம்பிய ஓரிடத்தை அடைந்தார். திடீரென அந்த மரங்களுக்குப் பின்னால் இருந்து கொள்ளையர்கள் அவர்களை நோக்கி வந்தனர். இதனால் படகை எதிர்புறமாக திருப்பிச் செலுத்த தொடங்கினார். அப்படகில் இருந்தவர்கள் மிகவும் பயந்து, ஆற்றில் குதிக்க ஆரம்பித்தனர். கொள்ளையர்கள் படகை கரைக்கு செலுத்துமாறு கட்டாயப்படுத்தினர். கரையை அடைந்தவுடன், நகைகள், ரத்தினங்கள் இருக்கிறதா என்பதைச் சோதிக்க படகில் இருந்தவர்களின் ஆடைகளை அகற்றுமாறு வற்புறுத்தினர். ஸ்ரம்னா ஹிலாய், ஷி யன்கோங் இருவரும், “அந்த கொள்ளையர்கள் பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள். அத்தெய்வத்திற்கு இலையுதிர் காலத்தில் வலுவான, வசீகரமான ஆண்களை பலியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் யுவான் சுவாங்கை பார்த்தவுடன், பூஜைக்கான காலம் நெருங்குகிறது, நாம் ஏன் அவரை பலியிடக் கூடாது எனத் தங்கள் கண்களாலேயே பேசிக்கொண்டனர்” என்று எழுதியுள்ளனர். கரும்புயலால் காப்பாற்றப்பட்ட சுவாங் பட மூலாதாரம்,GETTY IMAGES அவரை பலியிடுவதற்காக கூடாரம் ஒன்று தயார் செய்யப்பட்டது. யுவான் சுவாங் தான் அச்சத்தில் இருப்பதைச் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. கடைசியாக பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி கேட்டார் சுவாங். அதன்பின், அவர் தியான நிலைக்குச் சென்றார். “படகில் இருந்த அனைத்துப் பயணிகளும் அழுதனர், அலறினர். பின்னர், எல்லா திசையிலிருந்தும் தூசி நிறைந்த கரும்புயல் வீசியது. ஆறு திடீரென கொந்தளித்தது. படகு கிட்டத்தட்ட கவிழ்ந்துவிட்டது. பயந்துபோன கொள்ளையர்கள், இந்தத் துறவி எங்கிருந்து வருகிறார், அவருடைய பெயர் என்னவென்று பயணிகளிடம் கேட்டனர்” என ஸ்ரம்னா ஹிலாய், ஷி யன்கோங் எழுதியுள்ளனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது குறித்த விவரிப்பு சுவாரஸ்யமானது. “சீனாவில் இருந்து மதத்தைத் தேடி இந்த துறவி வருவதாக பயணிகள் பதிலளித்தனர். உங்கள் மீது தெய்வம் கோபமாக இருப்பதைத்தான் இந்தப் புயல் காட்டுகிறது. உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள், இல்லையென்றால் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். கொள்ளையர்கள் ஒவ்வொருவராக சுவாங்கிடம் மன்னிப்பு கேட்டனர். அவர் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பு கேட்டனர். ஆனால், தன் கண்களை மூடியவாறே யுவான் சுவாங் அமர்ந்திருந்தார். கொள்ளையர்கள் அவரைத் தொட்டபோது தனது கண்களைத் திறந்தார்” என்று அவர்கள் எழுதியுள்ளனர். நாளந்தாவில் பெரும் வரவேற்பு ஆறு ஆண்டுகள் தொடர் நடைபயணத்தின் மூலம், கௌதம புத்தர் நடந்த அதே நிலத்தை யுவான் சுவாங்கும் அடைந்தார். முதலில் அவர் ஷ்ராவஸ்தியை (Shravasti) அடைந்தார். பின்னர், புத்தர் தன் முதல் போதனையை போதித்த சார்நாத்தை (Sarnath) அடைந்தார். அங்கிருந்து, அசோகர் பௌத்தத்தைத் தழுவிய பாடலிபுத்திராவுக்கு (Pataliputra) சென்றார். பிறகு, புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து (Kapilavastu) வாயிலாக புத்த கயாவை (Bodh Gaya) அடைந்தார். ஆனால், புத்தர் அமர்ந்து தியானம் செய்த மரம் அங்கு இல்லாததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். புத்த கயாவை அடைந்து பத்து நாட்கள் கழித்து நான்கு புத்த துறவிகள் அவரைச் சந்திக்க வந்தனர். “நாளந்தாவில் அவருக்காகக் காத்திருக்கும் புத்த குரு ஷைலபத்ராவிடம் (Shilabhadra) அவரை அழைத்துச் செல்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். யுவான் சுவாங் நாளந்தாவை அடைந்தவுடன் அங்கு அவரை சுமார் 200 துறவிகள் மற்றும் 1,000 பேர் அவரை வரவேற்றனர். தங்கள் கைகளில் கொடிகள் மற்றும் நறுமணமிக்க ஊதுபத்திகளை வைத்திருந்தனர். அச்சமயத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவது மிகவும் கடினம். அதில் சேருவதற்கு கடினமான தேர்வு வைக்கப்படும்" என்று ஸ்ரம்னா ஹிலாய், ஷி யன்கோங் குறிப்பிட்டுள்ளனர். நாளந்தா பல்கலைக்கழகத்தின் பிரமாண்ட கட்டடம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாளந்தா பல்கலைக்கழக கட்டடம் மிக பிரமாண்டமானதாக இருந்தது நாளந்தாவுக்கு சென்றது குறித்து யுவான் சுவாங் விவரிக்கையில், “உள்ளூர் விதிகளைப் பின்பற்றி, மண்டியிட்டுக் கொண்டே நான் நாளந்தாவுக்குள் நுழைந்தேன். ஷைலபத்ராவுக்கு என் மரியாதையைத் தெரிவிக்கும் பொருட்டு மண்டியிட்டுச் சென்றேன். அவரைப் பார்த்தவுடன், அவரின் பாதத்தில் முத்தமிட்டு வணங்கினேன்” என எழுதியுள்ளார். நாளந்தா பல்கலைக்கழக வளாகம் ஆறு மன்னர்களால் உருவாக்கப்பட்டது. நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. ஆனால், அதன் உள்ளே சதுர வடிவிலான கட்டடங்களாகப் பிரிந்து, அவற்றில் எட்டு துறைகள் உள்ளன. “பல்கலைக்கழகத்தின் நடுவே உள்ள குளத்தின் தெளிந்த நீரில் நீலநிற தாமரைகள் பூத்திருக்கும். அதன் முற்றத்தில் சந்தன மரங்கள் இருக்கும். மேலும், அதன் வெளியே உள்ள பகுதியில் அடர்ந்த மாந்தோப்பு இருக்கும். ஒவ்வொரு துறையின் கட்டடத்திலும் நான்கு தளங்கள் இருக்கும். இந்தியாவில் அந்தச் சமயத்தில் ஆயிரக்கணக்கான மடங்கள் இருந்தன. ஆனால், இந்தக் கட்டடம் வித்தியாசமானதாகவும் பிரமாண்டமாகவும் இருந்தது” என, ஸ்ரம்னா ஹிலாய் மற்றும் ஷி யன்கோங் எழுதியுள்ளனர். உயர்தர கல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES யுவான் சுவாங் அதன் வகுப்பறைகள், ஸ்தூபிகள், மடங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துறவிகள் மற்றும் மாணவர்கள் தங்குவதற்கான சுமார் 300 அறைகளையும் சென்று பார்த்தார். பல்கலைக்கழகத்தில் மகாயானம், நிகாயா பௌத்தம், வேதங்கள், தர்க்க சாஸ்திரங்கள், இலக்கணம், தத்துவம், மருத்துவம், கணிதம், வானியல், இலக்கியம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. “நாளந்தா மாணவர்களின் திறமையும் திறனும் உயர்ந்த அளவில் இருந்தன. அங்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன. அவற்றை மாணவர்கள் பின்பற்ற வேன்டும். காலையிலிருந்து மாலை வரை அங்கு விவாதங்கள் நடக்கும். அதில், மூத்தவர்களும் இளைய மாணவர்களும் சமமான அளவில் பங்கேற்பார்கள். 100 வெவ்வேறு அறைகளில் தினந்தோறும் வகுப்புகள் நடக்கும். எந்தவொரு தருணத்தையும் தவிர்க்காமல், அங்கிருந்த மாணவர்கள் கடுமையாகப் படித்தனர்” என யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார். யுவான் சுவாங்குக்கு ஆதரவளித்த அரசர் ஹர்ஷவர்த்தனர் பட மூலாதாரம்,NUMATA CENTER FOR BUDDHIST TRANSLATION படக்குறிப்பு, நாளந்தா பல்கலைக்கழகத்தின் திறமைகள் மற்றும் திறன்கள் குறித்து யுவான் சுவாங் எழுதினார் யுவான் சுவாங் இந்தியா வந்தபோது, அரசர் ஹர்ஷவர்த்தனர் வட இந்தியாவை ஆண்டார். மிகுந்த அறிவார்ந்தவராகவும் ஆர்வம் கொண்டவராகவும் எளிமையானவராகவும் அவர் அறியப்பட்டார். அவருடைய தந்தை ஹூணர்களை தோற்கடித்ததன் மூலம், அவர்களின் பேரரசு வங்காளத்திலிருந்து சிந்து நதி வரை பரவியிருந்தது. குப்தா பேரரசு வீழ்ந்ததிலிருந்து முதன்முறையாக, அப்பிராந்தியத்தில் அமைதியும் வளமும் ஏற்பட்டது. இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தபோதிலும், ஹர்ஷவர்த்தனர் புத்த மதத்திற்கும் ஆதரவாக இருந்தார். நாளந்தா பல்கலைக்கழகம் வளர்ச்சிக்கும் அவர் முக்கிய பங்கு வகித்தார். அங்கு படிக்கும் மாணவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற தன்னுடைய 100 கிராமங்களையும் அந்த கிராம தலைவர்களையும் வழங்கினார். பல்கலைக்கழகத்திற்கு நாள்தோறும் மாட்டு வண்டிகளில் அரிசி, பால், வெண்ணெய் போன்றவற்றை கொண்டு சேர்ப்பதற்கு அக்கிராமங்களி சேர்ந்த 200 குடும்பங்கள் பொறுப்பானவர்கள். “சிறப்பு அந்தஸ்து கொண்ட மாணவரான தனக்கு தினந்தோறும் 20 வெற்றிலைகள், வெற்றிலை பாக்கு, ஜாதிக்காய், ஊதுபத்திகள், அரை கிலோ அரிசி மற்றும் அளவே இல்லாமல் பால் மற்றும் வெண்ணெய் போன்றவை வழங்கப்பட்டன. அதற்காக எந்த பணமும் வாங்கப்படவில்லை. நான் அங்கு இருந்தபோது, நேபாளம், திபெத், இலங்கை, சுமத்ரா மற்றும் கொரியாவிலிருந்தும் கூட துறவிகள் இங்கு படிக்க வந்தனர்” என யுவான் சுவாங் எழுதுகிறார். உலகிலேயே பெரிய நூலகம் பட மூலாதாரம்,FACEBOOK நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகம் அனைவரையும் அதிகளவில் ஈர்த்தது. அலெக்சாண்ட்ரியா நூலகம் அழிக்கப்பட்ட பிறகு, இந்த நூலகம் அச்சமயத்தில் உலகிலேயே பெரிய நூலகமாகக் கருதப்பட்டது. வாங் ஸியாங் தனது ‘ஃப்ரம் நாளந்தா டூ சங்கான்’ எனும் புத்தகத்தில், “அந்த நூலகம் ஒன்பது தளங்கள், மூன்று பகுதிகளை உடையது. முதல் பகுதி ‘ரத்னதாதி’ (Ratnadadhi) . இரண்டாவது பகுதி ‘ரத்னசாகர்’ (Ratnasagar), மூன்றாவது பகுதி ‘ரத்னரஞ்சக்’ (Ratnaranjak) என்று அழைக்கப்பட்டன. அங்கிருந்து எந்த ஓலைச்சுவடியை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். ஆனால் பல்கலைக்கழகத்தைத் தாண்டி அவற்றை எடுத்துச் செல்ல அனுமதியில்லை” என எழுதியுள்ளார். சிறப்பு வாய்ந்த புத்த அறிஞர் ஷைலபத்ராவின் கண்காணிப்பில் யுவான் சுவாங் அங்கு படித்தார். அங்கு மூன்று ஆண்டுகள் படித்தபோது அவருக்கு யோகா, தத்துவம் ஆகியவற்றை ஷைலபத்ரா கற்றுக் கொடுத்தார். நாளந்தாவில் ஆசிரியர்களுக்கு மசாஜ் செய்வது, அவர்களின் துணியை மடித்து வைப்பது, அவர்களின் அறைகளைச் சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் மாணவர்கள்தான் செய்ய வேண்டும். ‘யுவான்சுவாங், சைனாஸ் லெஜெண்டரி பில்கிரிம் அண்ட் டிரான்ஸ்லேட்டர்’ (Hwensang, China's Legendary Pilgrim and Translator) எனும் புத்தகத்தில் பெஞ்சமின் புரோஸ், “தன்னுடைய 10க்கு 10 அடி அறையில் மேளச் சத்தத்தின் ஒலியைக் கேட்டு தினமும் யுவான் சுவாங் காலையில் எழுவார். அதன்பின், வகுப்புகளைக் கவனிப்பார், சில நேரங்களில் அவரே விரிவுரை ஆற்றுவார். ஒவ்வொரு நாள் மாலையிலும், நூலகத்தில் தான் சீனாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை பிரதியெடுப்பார். ஐந்து ஆண்டுகள் கழித்து, அவரிடம் அரிய இந்திய ஓலைச் சுவடிகளின் நூலகமே இருந்தது. அவற்றை அவர் சீனாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்” என எழுதியுள்ளார். குதிரைகளில் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நூல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கி.பி. 643இல் இந்தியாவில் பத்து ஆண்டுகளைக் கழித்த பின்னர், இறுதியாக வங்கத்தில் உள்ள மடங்களுக்குச் சென்றார். பின்னர், சீனாவுக்கு திரும்பி செல்லத் தயாரானார். அவர் புறப்படுவதற்கு முன் மன்னர் ஹர்ஷவர்த்தனர் தன் அரசவையில் சுவாங்கை விவாதத்திற்கு அழைத்தார். இருவரும் இதற்கு முன்பே சந்தித்திருந்தனர். முதல் சந்திப்பின்போது சீனா மற்றும் அதன் மன்னர்கள் குறித்து அவர் சுவாங்கிடம் விசாரித்தார். சுவாங்கின் வாயிலாக சீன அரசர் தைஸூனுக்கு (Taizun) சில புத்த இலக்கியம் குறித்த ஓலைச்சுவடிகளை ஹர்ஷவர்த்தனர் அனுப்பினார். ஹர்ஷவர்த்தனர் முன்பு பகுத்தறிவு தத்துவவாதிகளுடன் யுவான் சுவாங் விவாதத்தில் ஈடுபட்டார். தன்னுடைய வாதங்கள் மூலம் அவர்களை யுவான் சுவாங் அமைதியாக்கியதாக ஸ்ரம்னா ஹிலாய் குறிப்பிடுகிறார். “சீனாவுக்கு திரும்பத் தயாரானபோது அவரிடம் 657 புத்தகங்களும் பல சிலைகளும் இருந்தன. மேலும் அவர் தன்னுடன் பல செடிகள் மற்றும் விதைகளை எடுத்துச் சென்றார். அவருடைய உடைமைகள் அனைத்தும் 72 குதிரைகள், 100 சுமை தூக்குபவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஹர்ஷவர்த்தனர் பரிசாக வழங்கிய யானை மீது அவர் இம்முறை சவாரி செய்தார். அவர் யுவானுக்கு பணமும் வழங்கினார். அதோடு, யுவான் சுவாங் செல்லும் வழியில் உள்ள அரசர்களுக்கு வழங்க வேண்டிய கடிதங்களையும் ஹர்ஷவர்த்தனர் வழங்கியிருந்தார். புயலில் அழிந்த ஓலைச் சுவடிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுவான் சுவாங் சீனாவுக்கு திரும்ப தயாரானபோது அவரிடம் 657 புத்தகங்களும் பல சிலைகளும் இருந்தன. சீனா திரும்பும் வழியில் யுவான் சுவாங் விபத்தை சந்தித்தார். அட்டாக் (Attock) எனும் பகுதியில் சிந்து நதியைக் கடக்கும்போது ஏற்பட்ட பெரும்புயலில் மதிப்புமிக்க ஓலைச்சுவடிகள் சில நாசமாகின. “யானை மீது சவாரி செய்த யுவான் சுவாங் ஒருவழியாக ஆற்றைச் சமாளித்துக் கடந்தார். ஆனால், ஓலைச்சுவடிகள் ஏற்றப்பட்டிருந்த சில படகுகள் புயலில் கவிழ்ந்தன. படகோட்டிகள் காப்பாற்றப்பட்டனர். ஐம்பது ஓலைச் சுவடிகளும், விதைகள் அடங்கிய சில பெட்டிகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சீனாவை அடைவதற்கு முன்பாக அவர் அரசர் தைஸூனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், சீனாவில் இருந்து சட்ட விரோதமாக வெளியேறியதற்கு மன்னிப்பு கோரினார். மேலும், இந்தியாவில் இருந்து தான் எடுத்து வந்தவை குறித்தும், அவை எவ்வாறு அரசுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்தும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்,” எனக் குறிப்பிடுகிறார் பெஞ்சமின் புரோஸ். அவருடைய கடிதத்திற்கு பதிலளித்த அரசர், “ஞானம் பெற்ற பின்னர் நீங்கள் நாட்டுக்குத் திரும்புவதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னை உடனடியாகச் சந்தியுங்கள். சமஸ்கிருத மொழியைப் புரிந்துகொள்ளும் துறவிகளையும் உங்களுடன் அழைத்து வாருங்கள். பொருட்களை எடுத்து வருவதற்கு குதிரைகள் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம்,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீன அரசர் தைஸூன் கி.பி. 645, பிப்ரவரி 8 அன்று, யுவான் சுவாங்கை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் சாங்கான் தெருக்களில் திரண்டனர். இந்த இடத்தில் இருந்துதான் 16 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்தியாவுக்கான பயணத்தைத் தொடங்கினார். அங்கு அவர் முதலில் ஹோங்ஃபூ (Hongfu) மடத்திற்குச் சென்றார். 15 நாட்கள் கழித்து பிப்ரவரி 23 அன்று, அரசர் தைஸூன் லோயாங்கில் (Luoyang) உள்ள தன் அரண்மனையில் யுவான் சுவாங்கை சந்தித்தார். அந்தச் சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. அச்சந்திப்புகளில் இந்தியாவில் அவருடைய அனுபவம், வானிலை, சடங்குகள் குறித்து அரசர் சுவாங்கிடம் கேட்டார். ‘புத்திசம் அண்டர் தி டாங்’ (Buddhism Under the Tang) எனும் புத்தகத்தில் ஸ்டான்லி வெயின்ஸ்டெயின், “தன்னுடைய அரசில் இணையுமாறும் அரசர் சுவாங்கை அழைத்தார். ஆனால், அரசு அதிகாரியாக இருப்பதற்கான பயிற்சி தனக்கு இல்லை எனக் கூறி சுவாங் அதை மறுத்துவிட்டார். பின்னர் சுவாங் சங்கானில் பிரமாண்டமான மடத்தில் வசித்தார். இந்தியாவில் தன்னுடைய பயண அனுபவங்கள் குறித்து அவர் எழுதினார். பின்னர், அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா குறித்து சீனாவில் மேற்கொள்ளப்பட்ட நம்பத்தகுந்த, முக்கியமான ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது. அரசர் ஹர்ஷவர்த்தன் காலம் குறித்து அறிந்துகொள்ள யுவான் சுவான் குறிப்பிட்டுள்ளவை இன்றைக்கும் உதவியாக உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgd69zn65yo
  11. பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக யாழில் உத்தியோகபூர்வ செயலமர்வு! நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் குறித்த முறைப்பாடுகளுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ செயலமர்வு நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இச்செயலமர்வில் விசேடமாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்துகொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார். இச்செயலமர்வில் சிரேஷ்ட வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரி.சி.ஏ. தனபால, பிரதிப் பொலிஸ்மா அதிபர் றுவான் குணசேகர, பிரதிப் பொலிஸ்மா அதிபர் (கிளிநொச்சி) சமந்த டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறிமோகனன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. எல்.ஏ. சூர்யபண்டார, பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம். சந்தன ஹமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள். இக்கலந்துரையாடல் ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன. https://www.virakesari.lk/article/196685
  12. தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து உருவாகிய கருதான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். அவரது தேர்தல் அலுவலகமொன்று நேற்று சனிக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களிலே நான் ஒருபோதும் தேசிய கட்சிகளிலும், தேர்தல்களிலும் களமிறங்கவில்லை. அம்பாறை மாவட்டத்திலும் நான் தனி தமிழ் கட்சியிலே தான் தேர்தலில் களமிறங்கி இருந்தேன். இம்முறையும் நான் மட்டக்களப்பில் தேசிய ஜனநாயக முன்னணி எனும் தமிழ் கட்சியிலேதான் போட்டியிடுகிறேன். தேசிய கட்சியில் நாங்கள் தேர்தலில் களமிறங்கினால் நிச்சயமாக அதில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவார்கள். எம்முடைய வாக்குகள் அவர்களைத்தான் வெற்றிபெற வைக்கும். அதனால்தான் நாங்கள் தேசியக் கட்சிகளில் தேர்தலில் களமிறங்கவில்லை. அதனால்தான் இம்முறையும் நாங்கள் எட்டு தமிழ் வேட்பாளர்களோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கி இருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து உருவான கரு தான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதனை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார். அக்காலத்தில் யுத்தம் நடைபெற்றபோது எமது மக்களின் இழப்புக்கள், யுத்த அழிவுகள் உலக அரங்குக்கு தெரிய வர வேண்டும். அது பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும். தமிழர்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது. அவர் மரணித்ததன் பின்னர் அவர்கள் சிதறுண்டு போய்விட்டார்கள். காலப்போக்கில் அவர்கள் பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போயுள்ளார்கள். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறாகும். வட கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக வேண்டி நான் இந்த தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறேன். அதனை ஏற்படுத்துவதற்கு என்னால் முடியும். அதற்காகவேதான் நான் வந்திருக்கின்றேன். இதனை விட்டுக்கொடுக்க முடியாது. பணத்துக்கும் இலஞ்சத்துக்கும் இடம்வழங்கக் கூடாது. இரண்டு தடவைகள் நான் பாராளுமன்றத்தில் அங்கம் வைத்துள்ளேன். அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வரப் போகின்றார் என்ற போது அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மாத்திரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் என்னில் சுமத்த முடியாது. ஒரு மதுபான கடைகுரிய அனுமதிப்பத்திரம் என்னிடம் இல்லை. மணல் ஏற்றுவதற்கு உரிய அனுமதிப்பத்திரமில்லை. நான் இருந்தபடியே தான் இப்போதும் இருக்கிறேன். களவு செய்தவர்கள் அனைவரும் பயத்திலே திரிகின்றார்கள, பழைய அமைச்சர்கள் கொழும்பிலே ஒளித்துவிட்டார்கள், நானும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்குத்தான் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டிருந்தேன். ஊழலை நிறுத்த வேண்டும், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும், என்பதற்காகவே தான் நான் அவ்வாறு கூறியிருந்தேன். ஏனெனில் ஜனாதிபதியாக சிங்கள நபர் ஒருவர்தான் இந்த நாட்டிலே வரமுடியும் தமிழர் ஒருவரோ இஸ்லாமியர் ஒருவரோ வரமுடியாது. ஆனால் பொதுத்தேர்தல் என்பது வேறாகும் இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதிலே ஜேவிபி எனும் கட்சிக்குப் பின்னால் யாரும் போகக்கூடாது. அவர்கள் இனத் துவேஷம் பிடித்த ஒரு கட்சியாகும் தமிழர்களுக்கு முதலாவது துரோகம் செய்த கட்சி ஜே.வி.பி. ஆகும். நீதிமன்றம் சென்று வடகிழக்கை சட்ட ரீதியாக அவர்கள் பிரித்தார்கள். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, மஹிந்த ராஜபக்ஷவோ, ரணில் விக்கிரமசிங்கவோ பிரிக்கவில்லை. பிரித்தவர்கள் ஜே.வி.பியினர். இதனை நாம் மறந்துவிட முடியாது. சிலர் திசைகாட்டி திசைகாட்டி என வருவார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே திசைகாட்டி சின்னத்திலேயே மூன்று தீவிரமான முஸ்லிம்களும், ஒரு சிங்களவரும், ஏனையவர்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்களையும் மட்டக்களப்பிலே களமிறக்கியுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் சங்கு ஒரு பக்கம், மற்றவர்கள் ஒரு பக்கம் உள்ளார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அல்லது ஒரு முடிவு எடுத்தார்கள். நானும் அதோடு சத்தமிடாமல் இருந்தேன். அவர் ஜனாதிபதியாக வரமுடியாவிட்டாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்காக அவர்கள் வந்தார்கள். ஆனால் சுமந்திரனும் சாணக்கியனும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டார்கள். ரணிலிடம் 60 கோடியை சாணக்கியன் வாங்கிவிட்டு சஜித் பிரேமதாசவுக்கு வேலை செய்துள்ளார். சாணக்கியனும் சுமந்திரனும் எப்போது கட்சிக்குள் வந்தார்களோ அப்போது அந்த கட்சி அழிந்து போய்விட்டது. இதில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். தேசியம் தேசியம் என கதைத்து உசுப்பேத்துகின்றார்கள். இம்முறை தேசியம் கதைப்பதற்கு வந்தால் கணக்கறிக்கையை மக்கள் கேட்க வேண்டும். கொள்ளையடித்த பணத்துக்கு கணக்கை தெரிவித்துவிட்டு தேசியத்தைக் கதையுங்கள் என மக்கள் கூற வேண்டும். இதனை நான் கூறவில்லை. ஜனா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூறுகின்றார். 60 கோடியை சாணக்கியன் பெற்றதாக சாணக்கியன் கூறுகின்றார். ஜனாவை பார்த்து நீ அதிக அளவு சொத்துக்கள் குவித்து வைத்திருக்கிறாய் அந்த சொத்து எங்கிருந்து வந்தது உமக்கு என கேட்கின்றார். இன்னும் ஒருவருக்கு 588 கோடி ரூபாய்க்கு உரிய விசாரணை வரவிருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து அனைத்து இடங்களிலும் வீடு வாங்கியுள்ளார். அதனை மக்கள் பத்திரிகைகளில் பார்த்திருப்பார்கள். இவ்வாறு கொள்ளை அடித்திருந்தால் எவ்வாறு மக்களுக்கு அவர்கள் சேவை செய்வது இந்த நிலையில் மக்கள் நன்றாக முடிவெடுக்க வேண்டும். எனது கண்ணுக்கு முன்னரே பல போராளிகள் மடிந்தார்கள். அதனை நான் மறக்கவில்லை. பல போராளிகள் அங்கவீனமாக இருக்கின்றார்கள். அதை நீ நான் மறக்கவில்லை. பல தாய்மார்கள் தற்போதும் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு எல்லாம் நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். இதற்காக வேண்டி அனைத்து போராளிகளும் அணி திருளுங்கள். ஒருவொருவரும், மாற்றுத் திசைகளுக்கு செல்ல வேண்டாம். எனக்கு தான் போராளிகளின் அருமை தெரியும். யாருக்கும் அது பற்றி கதைப்பதற்கு உரிமை இல்லை. மாவீரர் நாள் அனுஷ்டிப்பது என்றால் அதனை நாங்கள் தான் அனுஷ்டிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஒளிந்திருந்துவிட்டு வந்தவர்களுக்கு எந்த உணர்வுமில்லை. இனிமேல் அதற்கு அனுமதிக்க முடியாது. எனவே தமிழர்களின் இருப்பை காப்பாற்றுவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வளர்த்துவிட வேண்டும். படித்தவர்கள் எதனையும் சாதிப்பதில்லை. இலங்கையிலே முதலாவது படிப்பு படித்தவர் தான் மதுபான கடை நடத்துகின்றார். நான் மதுபான கடைகளுக்குரிய அனுமதிப்பத்திரம் பெறுவது என்றால் நூற்றுக்கு மேற்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்றிருக்கலாம். அதெல்லாம் வேண்டாத விடயம். தமிழரசு கட்சியில் வைத்தியர் உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கின்ற சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர்கள் போட்டியிடவில்லை. அவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையை பற்றி தெரியாது. நான் 22 வருடங்கள் போராடி இருக்கிறேன். எனது சொந்த அண்ணனை கூட நான் இழந்திருக்கின்றேன். அனைவருக்கும் இழப்புக்கள் உள்ளன. தேசியப் பட்டியலில்தான் நான் இரண்டு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். அதனூடாக அதிகளவு வேலைகளை மக்கள் மத்தியில் நான் செய்திருக்கின்றேன். இந்த முறை பாராளுமன்றத்திற்கு மக்களின் ஆணையுடன்தான் செல்ல வேண்டும். அவ்வாறெனில் தான் எதையும் வாதிட்டு பெற்றுக்கொள்ளலாம். நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று எதிரே உள்ள உறுப்பினர்களை குற்றம் சுமத்துவதுதான் அவர்களுடைய வேலை. மாறாக இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு இடையே யாரையும் குற்றம் சுமத்தி பாராளுமன்றத்தில் பேசவில்லை. கடந்த முறை அம்பாறையிலே போட்டியிட்டு 35000 வாக்குகளை அந்த மக்கள் எனக்கு அளித்திருந்தார்கள். மக்களுக்காக நாங்கள் உயிரையும் தருவதற்கு காத்திருக்கின்றோம். அது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை. கூட்டமைப்புக்கும் சங்கு குழுவுக்கும் மக்கள் முடிவு கட்ட வேண்டும். இலஞ்ச ஊழலை நிறுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் தலா 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றாராம், இன்னும் ஒரு வேட்பாளர் மதுபானம் வழங்கியதாக பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். களவு செய்த காசுகளை அவர்கள் அள்ளி வழங்குகிறார்கள். தேசப்பற்றுடன் சேவை செய்யக்கூடிய தலைவர்களை நாங்கள் வளர்த்துவிட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/196681
  13. முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என திறைசேரியின் பிரதிசெயலாளர் ஆர்எம்பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை மாற்றீடு செய்வதற்காக புதிய யோசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் யோசனையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த மதிப்பாய்வில் சமர்ப்பிப்பதற்காக அரசாங்கம் பல மாற்றுயோசனைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்திற்கு பதில் திறைசேரி அதிகாரிகள் பல மாற்றுயோசனைகளை ஆராய்ந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் எதிhர்பாப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த- மூன்றாவது மதிப்பாய்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196675
  14. காசாவின் பெய்ட் லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என அங்குள்ள மருத்துவபணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் குறித்த விபரங்களை ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் ஹமாசின் தற்போதைய புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 73 உயிரிழந்தனர் எனஹமாசின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வபா எனப்படும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது என பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/196677
  15. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்கள் உட்பட பல சலுகைகளை கோரினார். அவற்றை நிராகரித்துவிட்டேன் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்கள், 16 சமையல்காரர்கள் உட்பட பல சலுகைகளை கோரினார் என அனுர குமார திசாநாயக்க தங்காலையில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வாகனங்களே வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசநிதியை முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்,என தெரிவித்துள்ள அனுர குமார திசநாயக்க ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச வீடுகளில் இரண்டு அம்புலன்ஸ்கள் எந்நேரமும் தயாரான நிலையில் உள்ளன இவற்றை தனிப்பட்ட சொத்தாக பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196672
  16. (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்படும் ஐந்து பண்டங்களுக்கு வரி விதித்து 2023.10.13ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வர்த்தமானி எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கு புதிதாக விசேட வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் பிரகாரம் 2024.10.14ஆம் திகதியன்று 2406\02 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 5 பண்டங்களுக்காக வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தல் அவசியமானதாகும். 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் 2ஆவது பிரிவின் பிரகாரம் வரி விதிப்பதற்கான பணிப்பில் பிரதானமாக உரிய பண்டங்கள் குறிப்பாக சுங்க செயற்பாடுகளுடன் தொடர்புடைய வரி வீதங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த பணிப்பு அமுல்படுத்தப்படும் உரிய காலப்பரப்பு, உரிய பணிப்புக்காக 3 பிரதான சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த சட்டங்களின் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் ஐந்து பண்டங்களுக்காக விசேட பண்ட வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டிருந்த 2023 ஒக்டோபர் 14 ஆம் திகதியன்று இலக்க 2353/77 என்ற வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் 2024.10.13ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. ஆகவே அந்த வர்த்தமானியின் செல்லுபடி காலத்தை 2024.12.31ஆம் திகதி வரை நீட்டிப்பதற்காக 2024.10.14ஆம் திகதியன்று இலக்கம் 2406/02 என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஆகவே இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கு விசேட வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இறக்குமதி செய்யப்படும் பருப்புக்காக விதிக்கப்பட்டிருந்த 25 சதம் வரி தொடர்ந்து அமுலில் இருக்கும். தேசிய கடற்றொழில் கைத்தொழில் மற்றும் பழவகைகள் உற்பத்தியை பாதுகாக்கும் நோக்கில் மற்றும் வெளிநாட்டு கையிறுப்பினை கருத்திற் கொண்டு ஏனைய 4 பண்டங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரி வீதம் தொடர்ந்து பேணப்படும். பொதுவாக இந்த சட்டத்தின் பிரகாரம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல் ஒரு வருடகாலத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வரி தொடர்பில் முறையாக அவதானம் செலுத்தப்பட்டு வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் மாத்திரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196667
  17. 19 OCT, 2024 | 03:52 PM (நா.தனுஜா) ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதற்கு இயலுமான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவேண்டும் எனவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் தேர்தல் முறைமைகள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீதான வெளியகத் தலையீடுகள் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி நடத்தப்பட்ட பகிரங்க நேர்காணலில் கலந்துகொண்டு பதிலளித்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழர் உரிமைகள் குழுவின் உறுப்பினர் கற்பனா நாகேந்திராவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கனடாவின் ப்ரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி ப்ரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுனுக்கு டொரன்டோவில் உள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோவினால் கடந்த மேமாதம் எழுதப்பட்ட கடிதம், கடந்த ஓகஸ்ட் மாதம் ஆங்கில ஊடகமொன்றினால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்நினைவுத்தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட வேளையிலும், அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி அங்கு வாழும் புலம்பெயர் சிங்களவர்களால் கவனயீர்ப்புப்போராட்டமொன்று நடத்தப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட பகிரங்க நேர்காணலின்போது கனடாவில் வாழும் தமிழர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் அண்மையகாலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தலையீடுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கற்பனா நாகேந்திரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரதமர் ட்ரூடோ, இக்குறித்த சம்பவம் தனக்கு மேலதிக தகவல்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், எனவே புலம்பெயர் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/196654
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா முழுவதும், 2017 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரையிலான 5 ஆண்டுகளில், 655 என்கவுன்டர் மரணங்கள் நடந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிலும் சத்தீஸ்கர், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அசாம், ஜார்க்கண்ட், ஒடிஷா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தரவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், உத்தர பிரதேச அரசு, அம்மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில், 2017இல் இருந்து 2023 வரை, 10,713 என்கவுன்டர்கள் நடந்திருப்பதாகவும், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 164 பேர் அதில் கொல்லப்பட்டதாகவும் புள்ளிவிவரம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை மட்டும் வெவ்வேறு வழக்குகளில் 5 என்கவுன்டர்களில் 5 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், என்கவுன்டர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த 16 வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்களிடம் இருக்கும் அச்சத்தைப் போக்கவும் என்கவுன்டர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக காவல்துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர். என்கவுன்டர் குறித்த மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் விளக்கத்தை அறிய, டிஜிபி சங்கர் ஜிவாலை தொடர்புகொள்ள பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு காவல்துறையில் என்ன நடக்கிறது? என்கவுன்டர்கள் நடப்பது ஏன்? இந்தச் சம்பவங்களில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? தமிழகத்தில் சமீபத்தில் நடந்த என்கவுன்டர்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, மாநில அளவிலும், தேசிய அளவிலும் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உடனடியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் அருணை அமர்த்தியது தமிழக அரசு. உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சட்டம்-ஒழுங்கு பொறுப்புக்கு மாற்றியது. புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற அருண், “குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவதே முதன்மைப் பணி. அவர்களுக்கு எந்த மொழி புரியுமோ அதில் புரிய வைக்கப்படும்,” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கில், அருண் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொந்த மொழியில் பேசுவதையே அவ்வாறு சென்னை ஆணையர் குறிப்பிட்டதாகத் தெரிவித்ததாக, ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, ஜூலை 14ஆம் தேதி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருவேங்கடம், போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அடுத்து, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட காக்கா தோப்பு பாலாஜி, செப்டெம்பர் 18ஆம் தேதியன்று, என்கவுன்டரில் உயிரிழந்தார். கடந்த செப்டெம்பர் 23ஆம் தேதியன்று, 8 கொலை வழக்குகள் உள்பட 40 வழக்குகள் கொண்ட தென் சென்னையைச் சேர்ந்த 'சீசிங்' ராஜாவும், என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இதற்கெல்லாம் முன்பே, ஜூலை 11ஆம் தேதியன்று, திருச்சியைச் சேர்ந்த, தொடர் குற்றங்களில் ஈடுபட்ட துரை, புதுக்கோட்டையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறுதியாக, செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் அருகே வெப்படை பகுதியில், ஹரியாணாவை சேர்ந்த ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் நடந்த மோதலில், ஜூமான் என்பவர் போலீசார் சுட்டதில் உயிரிழந்தார். சிறு குற்றங்களுக்கும் என்கவுன்டரா? பட மூலாதாரம்,HENRI TIPHAGNE படக்குறிப்பு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தானாக சரணடைந்த திருவேங்கடம் எதற்காகத் தப்பிச் செல்ல வேண்டும் என கேள்வி எழுப்புகிறார், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் தமிழ்நாடு முழுவதும் சமீபகாலமாக, ‘சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கை, கால்களை உடைப்பது, என்கவுன்டர் செய்வது போன்ற செயல்கள் அரங்கேறுவதாக’ கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 210 வழக்கறிஞர்கள் இணைந்து, மாவட்ட நீதிபதியிடம், கடந்த மாதத்தில் ஒரு புகார் மனுவைச் சமர்ப்பித்தார்கள். காவல் நிலைய சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம், தமிழ்நாட்டில் நடக்கும் என்கவுன்டர்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென்று, மாநில மனித உரிமை ஆணையத்திடம் செப்டெம்பர் 27 அன்று மனு கொடுத்தது. பல்வேறு அமைப்புகளும் இதைப் பற்றி மனு கொடுப்பதும், பொது வெளியில் பேசுவதும், தமிழ்நாட்டில் நடக்கும் என்கவுன்டர்கள் மற்றும் காவல் நிலைய சித்ரவதைகளை, சமூக ஊடகங்களில் பேசுபொருளாக்கியுள்ளது. இந்தச் சம்பவங்கள் அனைத்திலுமே தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், கடந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்த பாரதிய நியாய சம்ஹிதாவின் புதிய குற்றவியல் சட்டப் பிரிவுகளின்படி, குற்றவாளிக்கு கைவிலங்கு, சங்கிலி போட்டு அழைத்துச் செல்ல அனுமதியிருக்கும்போது, ஒவ்வொரு என்கவுன்டரிலும், ‘தப்பிக்கப் பார்த்தார், துப்பாக்கியை எடுத்து எங்களைச் சுட்டார்’ என்று போலீசார் சொல்வது புரியாத புதிராக இருப்பதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தானாக சரணடைந்த திருவேங்கடம் எதற்காகத் தப்பிச் செல்ல வேண்டும்? எதற்காக போலீசாரை சுட வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், அதெல்லாம் சூழ்நிலையைப் பொறுத்தது என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி. “குற்றங்கள் அதிகமாவதைக் கணக்கில் எடுக்காமல், இதை மட்டும் கணக்கில் கொண்டால், போலீசாரின் உரிமைகள் பாதிக்கப்படும். அவர்கள் முடியாத பட்சத்தில்தான் இப்படிச் செய்கிறார்கள். இதைப் பெரிதாகப் பேச ஆரம்பித்தால், அதன் பிறகு போலீசார் நடவடிக்கை எடுக்கவே தயங்குவார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் ஒன்றிரண்டு நடந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்,” என்று கூறினார் கருணாநிதி. இதுபற்றி தமிழ்நாடு காவல்துறை சட்டம்–ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், அப்படி ஓர் அனுமதி இருப்பதாகவே தெரிகிறது. காவல்துறையினருக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்குவது பற்றி சட்டத்துறையிடம் கலந்து பேசுகிறேன்," என்று தெரிவித்தார். இருவேறு கருத்துகள் பட மூலாதாரம்,KARUNANIDHI படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி தமிழகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சியானாலும், ஆண்டுக்கு ஒன்றிரண்டு என்கவுன்டர்கள் நடப்பதும், ஓரிருவர் கொல்லப்படுவதும் வழக்கமாகிவிட்டது, என்கிறார் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன். அதேவேளையில், சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கும்போது, சராசரி அளவைவிடக் கூடுதலாக என்கவுன்டர்கள் நடப்பதாகத் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது கூற்றை ஆமோதிக்கும் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் நிர்வாகியான வழக்கறிஞர் புகழேந்தி, "தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு என்கவுன்டர் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக" குற்றம் சாட்டுகிறார். காவல்துறையினர் மேற்கொள்ளும் என்கவுன்டர்கள் அனைத்துமே நீதிமன்றங்களின் மீது நடத்தப்படும் மறைமுகத் தாக்குதல்களே என்கிறார், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளரும் எழுத்தாளருமான ச.பாலமுருகன். “நீதிமன்றத்திற்குச் சென்றால் நீதி கிடைக்கத் தாமதமாகும் என்று மக்களை நம்ப வைத்து, என்கவுன்டர்களை நியாயப்படுத்துவதன் மூலம் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை குலைக்கப்படுவதாக,” அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்களிடம் இருக்கும் அச்சத்தைப் போக்கவும் என்கவுன்டர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு போலீசார் தள்ளப்படுவதாக, சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான லோகநாதன் கூறுகிறார். உச்சநீதிமன்ற நடைமுறைகள் பட மூலாதாரம்,BALAMURUGAN படக்குறிப்பு, தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் என்கவுன்டர்கள் பெரும்பாலும் திட்டமிட்ட போலி என்கவுன்டர்கள் எனக் குற்றம் சாட்டுகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளாருமான ச. பாலமுருகன் ‘தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் என்கவுன்டர்கள் பெரும்பாலும் திட்டமிட்ட போலி என்கவுன்டர்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன். இந்திய தண்டனைச் சட்டத்தின் 96 முதல் 106 வரையிலான பிரிவுகளின்படி, இந்தியாவில் போலீஸ் என்கவுன்டரில் மரணம் நிகழ்வது ஒரு குற்றமாகக் கருதப்படாத சில சூழ்நிலைகள் இருப்பதைக் காட்டி, பி.யு.சி.எல் தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதிமன்றம் தெரிவித்த 16 வழிகாட்டுதல் நெறிமுறைகளை போலீசார் கடைபிடிப்பதே இல்லை என்று பாலமுருகன் குற்றம் சாட்டுகிறார். உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் நெறிமுறைகளில் கீழ்வருவன முக்கியமானவையாக இருக்கின்றன. குற்றவியல் விசாரணை தொடர்பான உளவுத்துறை மற்றும் அவை சார்ந்த குறிப்புகள், ஏதாவது ஒரு மின்னணு வடிவத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்கவுன்டர் மரணம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் உளவுப்பிரிவு விசாரணை, தடயவியல் குழு ஆய்வு, இறந்தவர் குறித்த ரசாயன ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் இரு மருத்துவர்களால் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அது வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என்கவுன்டர் குறித்து பிரிவு 176இன் கீழ் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும் மாநில, தேசிய மனித உரிமை ஆணையத்திற்குத் தகவல் அனுப்ப வேண்டும் இறந்தவரின் உறவினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் இறந்தவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது பற்றி குற்றவியல் நடைமுறையின் பகுதி 357-Aஐ ஆலோசித்து முடிவு செய்யப்பட வேண்டும் பட மூலாதாரம்,PUGAZHENDHI படக்குறிப்பு, நீதிமன்றங்கள் இந்த என்கவுன்டர்கள் குறித்து, தானாக முன் வந்து வழக்குகளைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறார், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் நிர்வாகி வழக்கறிஞர் புகழேந்தி இவற்றில், மிக முக்கியமாக என்கவுன்டர் சம்பவத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைவான பதவி உயர்வு அல்லது உடனடி வெகுமதி எதுவும் வழங்கப்படக்கூடாது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அறிய வரும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் செஷன்ஸ் நீதிபதியிடம் புகார் செய்யலாம் என்றும் கூறியிருந்தது. இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே, 1997ஆம் ஆண்டில், இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையம், என்கவுன்டர் தொடர்பான சில வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கூறியுள்ளது. அதிலும் ஏறத்தாழ இதே நெறிமுறைகள் வெவ்வேறு விதங்களில், வேறு சில வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. நடைமுறைகள் என்னவாயின? ஆனால் இந்த நடைமுறைகள் எவையுமே இப்போது நடக்கும் என்கவுன்டர்களில் பின்பற்றப்படுவதில்லை, எனக் குற்றம் சாட்டுகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளார் சுரேஷ். இந்த நெறிமுறைகள் மதிக்கப்படாமல், மனித உரிமைகள் மறுக்கப்படும்போது, நீதிமன்றங்கள் இந்த என்கவுன்டர்கள் குறித்து, தானாக முன் வந்து வழக்குகளைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. ஹைதராபாத்தில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பெண் கால்நடை மருத்துவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், நான்கு குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிர்புர்கர் கமிட்டி, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அது திட்டமிட்ட போலி என்கவுன்டர் என்று கூறிய கமிட்டி, அதில் தொடர்புடைய 10 போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யுமாறு பரிந்துரைத்தது. அதன்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மற்ற மாநிலங்களில் உள்ள போலீசாருக்கு அது எச்சரிக்கையாக இருக்கும் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். போலீசாருக்கு எதிரான வழக்குகளில் தாமதமா? அதேவேளையில், போலீசார் மீதான புகாரை விசாரிப்பதில் தாமதம் நிலவுவதாக வழக்கறிஞர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். "காவல்துறை போடும் வழக்குகளை விசாரிக்க நுாற்றுக்கணக்கான மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் காவல்துறையினர் மீதான புகாரை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய மாநில மனித உரிமை ஆணையம் மட்டுமே உள்ளது," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. என்கவுண்டர் வழக்குகளில் தண்டனை கிடைக்காமல் போவது பற்றிப் பேசும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன், “என்கவுன்டர்களுக்கு எதிரான வழக்குகள் மிகவும் தாமதமாவதால்தான் இது தொடர்வதாக,” கூறுகிறார். எடுத்துக்காட்டாக, 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி, போலீஸ் அதிகாரி வெள்ளைத்துரையால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். “சம்பவம் நடந்து இரண்டு நாட்களிலேயே நாங்கள் வழக்கு தாக்கல் செய்தோம். அந்த வழக்கின் விசாரணை, 2024இல் தான் வந்தது. வாதாடி முடித்துவிட்டுத் தீர்ப்புக்குக் காத்திருக்கிறோம். அதற்குள் அவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வுக்கு முன் அவரைப் பணியிடை நீக்கம் செய்த உத்தரவும் அரசால் உடனே திருப்பிக்கொள்ளப்பட்டது. இப்படி நடக்கும்போது, என்கவுன்டரில் ஈடுபடும் எந்த போலீஸ் அதிகாரிக்கு அச்சம் ஏற்படும்?” என்று கேள்வி எழுப்புகிறார். இதுவரை என்கவுன்டர் தொடர்பாகத் தங்களின் அமைப்பு தாக்கல் செய்த வழக்குகளில் காவல்துறைக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வந்துள்ளதாக புகழேந்தி கூறுகிறார். ‘போலீசார் தண்டனை பெற்றதே இல்லை’ படக்குறிப்பு, தனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் எந்தவொரு போலீஸ் அதிகாரி மீதும் வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டதில்லை என்கிறார், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவி. என்கவுன்டர் வழக்குகளின் நிலை என்னவாகிறது, காவல்துறை அதை எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி பிபிசி தமிழிடம் பேசினார் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரவி. “இதுபோன்ற வழக்குகளில் முன்பு, ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இப்போது, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் மாவட்ட நீதிபதிக்கு இதுகுறித்து அறிக்கை அனுப்புவார். முன்பு இருந்த இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-க்கு இணையான இன்றைய பி.என்.எஸ் சட்டப்படி, என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். வழக்கு முறைப்படி நடத்தப்பட வேண்டும்,” என்றார். ஆனால், “தனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் எந்தவொரு போலீஸ் அதிகாரி மீதும் இப்படி வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டதில்லை,” என்றும் அவர் கூறுகிறார். 'நீதித்துறையை குறை கூறுவது சரியல்ல’ பட மூலாதாரம்,FACEBOOK/HARI PARANTHAMAN படக்குறிப்பு, நீதித்துறையை மட்டும் குறை சொல்லக்கூடாது என்கிறார், முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் என்கவுன்டர்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் உள்ள இரு தரப்பினருமே, நீதித்துறை மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நீதித்துறையை மட்டும் குறை சொல்லக்கூடாது,” என்கிறார். சமூகத்தின் மனநிலையிலேயே சிக்கல் இருப்பதாகக் கூறும் அவர், தமிழ்நாட்டில் என்கவுன்டருக்கு எதிராக எப்போதுமே பெரிதாக எதிர்ப்புக் குரல் எழுந்ததில்லை என்று கூறுகிறார். "சமூக மனநிலையே அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது. அடிப்படையில் சமூகத்திற்கு இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார். மேலும், இதைத் தடுப்பதில் நீதித்துறைக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு இருப்பதாகக் கூறும் அவர், இருப்பினும் நீதித்துறை மட்டுமே அதைச் செய்ய முடியாது என்கிறார். மேலும், “இது சமூகத்தின் எல்லா தரப்பும் இணைந்து செய்ய வேண்டிய விஷயம். எல்லாவற்றுக்கும் நீதித்துறை மருந்தாக முடியாது,” என்றார். காவல்துறை பதில் இந்தியாவில் கடந்த ஆண்டில் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (Bharatiya Nyaya Sanhita), காவல் துறையினரால் கைது செய்யப்படும் குற்றவாளிகளை விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளியில் அழைத்துச் செல்லும்போது, கைவிலங்குகள், சங்கிலி போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதேவேளையில், என்கவுன்டர் என்ற பெயரில் பல போலி என்கவுன்டர்கள் நடப்பதாகவும், என்கவுன்டர்களை அரங்கேற்ற தப்பிக்கப் பார்த்தார், தாக்க முயன்றார் என்று காரணங்கள் கூறுவதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு விளக்கத்தை அறிய, தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டிஜிபி) சங்கர் ஜிவாலை தொடர்புகொள்ள முயன்றோம். அவருக்கு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. ஆனால் அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg38znz5l1o
  19. கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டாரா யகியா சின்வார்? எந்த ஒரு செய்தியானாலும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கின்ற விடயத்தைக் கடந்து, அந்தச் செய்திக்கு ஏதாவது பின்னணி இருக்கின்றதா என்று தேடுவது அவசியம். யகிகா சின்வார் கொலை தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளைக் கடந்து அந்தச் செய்திகளின் பின்னணியில் வெளியே சொல்லப்படாத பக்கங்கள் என்று ஏதாவது இருக்கின்றனவா? 'connect the dots' என்று கூறுவார்களே, அப்படி இணைத்துப் பார்க்கக்கூடிய புள்ளிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக யகிகா சின்வாரின் மரண விடயத்தில் ஏதாவது இருக்கின்றனவா? https://tamilwin.com/article/yakima-sinvar-assainartion-1729328170#google_vignette
  20. பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் ஒரு காட்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது. விமல் மீண்டும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், வாகை சூடவா படத்தைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதா? படத்தின் கதை என்ன? அரசு உதவி பெறும் பள்ளிக்கு வரும் புதிய ஆசிரியர் அங்குள்ள பிரச்னைகளை எவ்வாறு கையாளுகிறார் என்பது தான் படத்தின் கதை. "வறுமையில் இருந்து வெளியேற கல்வி மட்டுமே உதவும்," என்பது தான் படத்தின் ஒன்லைன் என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. புதுக்கோட்டையில் உள்ள மாங்கொல்லை பகுதியில் உள்ள தனது தந்தைக்குச் சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக மாற்றும் முனைப்பில் இருக்கிறார் விமல். "அப்பா பின்பற்றும் வழி நிராகரிக்கப்பட்டு பிறகு ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு வழக்கமான அப்பா - மகன் கதை தான் இது," என்றும் படம் குறித்து குறிப்பிடுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. "காலம் மாறி தலைமுறைகள் கடந்தாலும் சாதியும் கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் அந்த ஊர் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவே நிற்கிறது. இதை எதிர்த்து அந்த ஊர் மக்கள் எப்படி முன்னேறுகிறார்கள்? அவர்களுக்கு எப்படி கல்வி கிடைக்கிறது என்பதுதான் ‘சார்’ படத்தின் கதை," என்று கூறுகிறது தி இந்து தமிழ் திசையின் காமதேனு. பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி படம் விறுவிறுப்பாக நகர்கிறதா? கல்வி கற்க விரும்பும் பட்டியல் பிரிவை சார்ந்த மக்களை ஒடுக்க நினைக்கின்றனர் ஆதிக்க சாதியினர். "சாதி, மதம், கல்வி என மிகவும் பழமையான திரைக்கதையை தன்னுடைய பாணியில் அழகாக இயக்கியுள்ளார் போஸ் வெங்கட்," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. "கல்வி பெற்றால் ஒரு சமூகம் முன்னேறும் என்ற விஷயத்திற்கு சாதி பெருமையும், கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் எப்படி தடையாக இருக்கின்றன என்பதையே படத்தில் சொல்ல வருகிறார்கள். ஆனால், அது திரைக்கதையில் இருந்து படமாகி இருக்கும் விதம் பயங்கரமான சறுக்கலை சந்தித்திருக்கிறது. சீரியஸான கதைக்களம் எடுத்திருப்பதால் ஆடல், பாடல், காதல் என முதல் பாதியில் ரசிகர்களை எண்டர்டெயின் செய்வோம் என எடுத்திருக்கும் விஷயம்தான் சொதப்பல். இடைவேளை வரையிலுமே கதைக்கரு நேர் கோட்டில் பயணிக்காமல் எங்கெங்கேயோ பயணிப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது," என படத்தின் குறைகளை பட்டியலிடுகிறது காமதேனு. பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, இடைவேளை வரையிலுமே கதைக்கரு நேர் கோட்டில் பயணிக்காமல் எங்கெங்கேயோ பயணிப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது இதர கலைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? "படத்தில் ஞானம் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விமல். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சரவணன், சாயாதேவி, ரமா, ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இனியன் ஹாரிஸூடைய ஒளிப்பதிவும், சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்," என்கிறது காமதேனு. "விமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எளிமையான, தீவிரமான காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகையாக சாயா தேவி போட்டிபோட்டு நடித்துள்ளார்," என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. படத்தில் கதாநாயகியாக வரும் சாயாதேவியின் கதாபாத்திரம் வழக்கமான சினிமா நாயகியாக அணுகப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறது, என்கிறது காமதேனு. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் விமர்சனம், படத்தின் முரண்களைப் பற்றி குறிப்பிடும் போது, "விமல், படத்தில் நாயகியாக வரும் சாயா தேவியை பார்வை மோக நடத்தையுடன் (voyeuristic) அணுகுகிறார். இருப்பினும் அந்த பெண் இவரை விரும்புவது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காட்சிகளில் தன்னுடைய நடிப்பின் மூலம் கவரும் விமல், சாயாவை அணுகும் முறையை ஒரு குறும்புத்தனமாக காட்டியிருப்பது பிரச்னையாக இருக்கிறது," என்று கூறியுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். "80களில் அமைந்த கதைக்களத்தை ஒளிப்பதிவு நேர்த்தியாக செய்திருந்தாலும், எடிட்டிங் தொடர்பற்றதாக இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு பாடல்களை படத்தில் இருந்து நீக்கியிருக்கலாம்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. . இனியன் ஜே ஹரிஸின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. கிராமப்புறத்தின் நிலப்பகுதிகளை அழகாக படமாக்கியுள்ளார், என்று விமர்சனம் செய்துள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly60rygvylo
  21. கலாநிதி ஜெகான் பெரேரா முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும் அதன் இறுக்கமான நிபந்தனைகளையும் பின்பற்றுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய கடுமையாக கண்டனத்துக்குள்ளான முக்கியமான அதிகாரிகளே பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு பதவிகளில் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனீவாவில் தீர்மானத்துக்காக முடிவெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தின் வடிவில் வந்த மிகவும் உடனடியான சர்வதேச சவாலை எதிர்கொண்டதிலும் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த எச்சரிக்கையுடனான அதே அணுகுமுறையையே அரசாங்கம் கடைப்பிடித்தது. ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே கொள்கையையே அரசாங்கமும் கடைப்பிடித்த போதிலும் தீர்மானத்தை நிராகரிப்பதில் பெருமளவுக்கு இணக்கப்போக்கான மொழியைப் பயன்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. முன்னைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய கொள்கைகளின் பயன்களை இந்த அரசாங்கம் அறுவடை செய்கிறது என்று அதை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்ட முனைகிறார்கள். அதே கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவே முன்னைய அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. ஆனால் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் வரை எச்சரிக்கை தொடரும் சாத்தியம் இருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் சமூக உறுதிப்பாட்டுக்கும் பயனுடையதாக அமைந்திருக்கிறது. அது குறித்து குதர்க்கம் செய்வது முறையல்ல. பொருளாதாரம் கத்திமுனையில் இருந்தது என்றும் அரசாங்க மாற்றம் ஒன்று பொருளாதாரத்தை ஒரு எதிர்மறையான நிலைக்குள் மூழ்கடித்து விடக்கூடும் என்றும் நாட்டின் வர்த்தகத் தலைவர்களினாலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகத்தினாலும் கணிசமான அக்கறை வெளிப்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு பிறகு வன்முறை எதுவும் மூளாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் மிகவும் நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்ததற்கு அதுவே காரணம். பாற்சோறு சமைத்து பரிமாறி பட்டாசுகளும் கொளுத்தி பாரம்பரியமாக வெற்றியைக் கொண்டாடுவதைப் போன்று தனது வெற்றையைக் கொண்டாட வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க மக்களிடம் விடுத்த வேண்டுகோளும் அந்த நேர்மறையான நடவடிக்கைகளில் அடங்கும். கடந்த காலத்தில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் வன்முறைக்கும் அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்ததுடன் நாட்டின் பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியது. ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியையும் அதை தொடர்ந்து சம்பாதித்த நற்பெயரையும் அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான தந்திரோபாயத்தை அரசாங்கம் வகுக்கிறது. அதிகாரத்தில் இருந்த முதல் இரு மாதங்களிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு நேர்மறையான ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரும். ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த 42 சதவீதமான வாக்காளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் ஒரு எதிர்ப்பு வாக்கை பதிவு செய்வதற்கே அவரை ஆதரித்தார்கள். பாரம்பரிய வழியில் வாக்களிப்பதில் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். அபிவிருத்திக் கொள்கை அல்லது ஊழல் ஒழிப்பு தொடர்பில் புதிதாக எந்த திட்டத்தையும் முன்வைக்காதவர்கள் என்று தாங்கள் கண்டுகொண்ட மற்றைய வேட்பாளர்களை வேட்பாளர்களை மக்கள் நிராகரித்தார்கள். இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் மக்கள் நேர்மறையான வாக்கொன்றை அளிப்பார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. மனங்கள் சந்தித்தல் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஜனாதிபதி பெரும்பான்மையான வாக்குகளைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜே வி.பி. ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாசைகளை ஆதரிக்கவில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கைகளின் விளைவாக இலங்கையின் ஐக்கியத்துக்கும் சுயாதிபத்தியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்ற பெரும்பான்மைச் சமூகத்தின் பொதுவான கருத்தையே ஜே வி.பி.யும் கொண்டிருந்தது. இந்த பழைய மனப்போக்கு செய்த பாதகத்தை ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி திசாநாயக்க ஏற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதை தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் வகையிலான உரைகளை அவர் நிகழ்த்தினார். சிறுபானமைச் சமூகங்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டவராக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு உண்மையான முயற்சிகளை எடுக்கப்போவதாக அவர் சூளுரைத்தார். புதிய அரசாங்கம் முதல் மூன்று வாரங்களிலும் முன்னெடுத்த நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தி தாங்கள் முன்னர் அறிந்திருந்த ஜே வி.பி. அல்ல என்ற என்ற ஒரு நம்பிக்கையை சிறுபான்மைச் சமூகங்களுக்கு கொடுத்திருக்கிறது போன்று தெரிகிறது. அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தமிழ், முஸ்லிம் சிவில் சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் கல்விமான்களுடன் நடத்திய சந்திப்புகள் நாடு முழுவதையும் தழுவியதாக மனங்களின் சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகிறது என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தின. ஒரு மாற்றத்துக்கும் புதிய முகங்களுக்குமான விருப்பம் சகல பிரிவினரிடமும் காணப்படுகிறது. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பாரம்பரிய கட்சிகள் மீது மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தாங்கள் தெரிவுசெய்த அரசியல்வாதிகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தேவையான சேவையைச் செய்யவில்லை என்று அந்த மக்கள் பெரும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்கு நேர்நிகரான அரசியல் சக்தி தற்போது இல்லை. அதனால் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்வதைப் போன்று சிறுபானமைச் சமூகங்களைச் சேர்ந்த பலரும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க விரும்பக்கூடிய சாத்தியம் இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களில் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியதாகவோ அல்லது பிரச்சினைகளை தோற்றுவிக்கக்கூடியதாகவோ சர்ச்சைக்குரிய எதுவும் இடம்பெறவில்லை என்பது புதிய கட்சியையும் புதிய தலைவர்களையும் தெரிவுசெய்வதற்கான அவர்களின் விருப்பத்தை வலுப்படுத்தும் எனலாம். கடந்த ஏழு தசாப்தங்களாக மக்களுக்கு பயனுடைய சேவைகளைச் செய்யாதவர்களை நிராகரித்து புதியவர்களை வரவேற்கும் மனநிலை மக்களுக்கு ஏற்படிருக்கிறது. ஆனால், வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தேசிய மக்கள் சக்தி பெருளவுக்கு யதார்த்தபூர்வமாக செயற்பட்டிருக்க முடியும். கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்ற அதேவேளை, வாக்காளர்களுக்கு நன்கு தெரியாதவர்கள் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று கருதமுடியாது. மட்டுப்பட்டுத்தப்பட்ட கலந்தாலோசனை கிழக்கில் வெளிப்படுத்தப்பட்ட இந்த அக்கறைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் மடடுப்படுத்தப்பட்ட அளவில் கலந்தாலோசனைகள் இடம்பெற்றிருந்தன என்று தெரிகிறது. சகல தரப்பினரையும் உள்வாங்கியதாக இல்லாமல் ஒரு பிரத்தியேகமான முறையில் கட்சியின் உயர்மட்டத்தினால் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் போன்று தோன்றுகிறது. பாரம்பரியமாக ஜே.வி.பி. வாக்குகளைப் பெறுகின்ற - உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற பகுதிகளில் இது ஒரு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். அந்த உறுப்பினர்கள் அந்த பகுதிகளின் மக்கள் அறிவார்கள். ஆனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஜே.வி.பி. உறுப்பினர்களை பெரிதாக தெரியாது. அதனால் மக்களுக்கு நன்கு சேவை செய்து அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு பரந்தளவில் சிவில் சமூகத்துடன் தீவிரமான கலந்தாலோசனைச் செயன்முறை தேவைப்பட்டிருக்கலாம். மேற்கூறப்பட்டது அரசாங்கம் அவசியமாக கையாளவேண்டிய முதலாவது பிரச்சினை என்றால், இன, மத சிறுபான்மைச் சமூகங்களினதும் சர்வதேச சமூகத்தினதும் உறுதியான நம்பிக்கையாக இருந்துவரும் அதிகாரப் பரவலாக்கம் மீதான பற்றுறுதியை வெளிக்காட்ட வேண்டியது இரண்டாவது பிரச்சினையாகும். அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும், உரைகளிலும் உறுதியளித்தார். எந்தவொரு ஜனநாயகத்திலும் பெரும்பான்மையே ஆட்சி செய்கிறது. இன, மத அடையாளங்கள் என்று வருகின்றபோது அங்கு தேர்தல் முறைமையினால் சமத்துவமானதாக்க முடியாத நிரந்தரமான பெரும்பான்மையினரும் நிரந்தரமான சிறுபான்மையினரும் இருப்பார்கள். உள்ளூர் பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்படுகின்ற மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலமாக மாத்திரமே தங்களது அபிலாசைகள் மதிக்கப்பட்டு அரவணைக்கப்படுவதாக சிறுபான்மையினரை உணரச்செய்யமுடியும். இது விடயத்தில் மூன்று கட்டச் செயற்றிட்டம் ஒன்று கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினால் சிபாரிசு செய்யப்படுகிறது. முதலாவதாக, மாகாணங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் என்றாலும், மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி நடத்துவதன் மூலமாக 13வது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது. இரண்டாவதாக, அரசியலமைப்பில் இருக்கின்ற போதிலும் கூட இன்னமும் பரவலாக்கம் செய்யப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களையும் திட்டமிட்ட முறையில் அல்லது புறக்கணிப்பு மனப்பான்மையுடன் மாகாணங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களையும் மீளக்கையளிப்பது. மூன்றாவதாக, முன்னெடுக்கப் போவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கும் விரிவான அரசியலமைப்புச் சீர்திருத்த செயற்திட்டத்தில் அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை மேம்படுத்துவது. வேறுபட்ட பிராந்தியங்கள் வேறுபட்ட பொருளாதாரத் தேவைகளையும் வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன என்பதை அங்கீகரித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புறம்பாக அதிகாரப் பரவலாக்க கோட்பாட்டை பொறுத்தவரை நோர்வேயின் பிரபலமான சமாதான கல்விமான் பேராசிரியர் ஜோஹான் கல்ருங் கூறிய அறிவார்ந்த வார்த்தைகளை கருத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும். "எமக்கு சொந்தமானவர்கள் சற்று இரக்கமில்லாதவர்களாக இருந்தாலும் கூட அவர்களால் ஆளப்படுவதையே நாம் விரும்புகிறோம்" என்று அவர் விடுதலைப் புலிகளுடனான போர்க்காலத்தில் இலங்கையில் கூறினார். https://www.virakesari.lk/article/196580
  22. படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 22 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். 1970களின் மத்திய காலம் அது. வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்ய உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதின்வயது சிறுவனான ரஞ்சித்தின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர். பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி, புதிய வீட்டில் வைக்கும் வேலை பரபரப்பாக நடந்தது. பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சித். அப்போது பழைய வீட்டில் இருந்த ஒரு தலையணையைப் புரட்டியபோது, அதற்கு அடியில் ஒரு சிறு தொகை இருந்தது. அந்த தொகை அவருடைய வாழ்க்கையை மாற்றும் என்று அன்று அவர் எதிர்பார்க்கவில்லை. தலையணையின் அடியில் மொத்தமாக ரூ. 37.50 இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் இருந்த ரஞ்சித், அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டார். வீடு மாறும் மும்முரத்தில் இருந்த எழுவாய்க்கு தலையணைக்கு அடியில் பணம் வைத்திருந்தது வெகு நேரத்திற்குப் பிறகே நினைவுக்கு வந்தது. வீடு மாறிய பிறகு, பணத்தைத் தேடியவர், தயக்கத்துடன் ரஞ்சித்திடம் அந்தப் பணத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். ஆனால், அப்படி பணம் எதையும் தான் பார்க்கவில்லையென ரஞ்சித் மறுத்துவிட்டார். அந்த காலகட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் வறுமைச் சூழலில் 37 ரூபாய் என்பது சற்றுப் பெரிய தொகைதான். இதையடுத்து, கோவிலுக்குப் போய் சாமியிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார் எழுவாய். இதைக் கேட்டு சற்று அதிர்ந்து போனாலும், இவரும் எழுவாயுடன் கோவிலுக்கு சென்றுள்ளார் ரஞ்சித். எழுவாய், கடவுளிடம் முறையிட்டுவிட்டுச் சென்றவுடன் இவரும் கடவுள் சிலை முன்பு நின்று, "அந்தப் பணத்தை நான்தான் எடுத்தேன் என்னை ஒன்றும் செய்துவிடாதே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார். படக்குறிப்பு, சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியர் மலையகத்தில், தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்த்துவந்தனர். வீட்டில் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழகம் வந்த ரஞ்சித் ரஞ்சித்தின் தாய் மாரியம்மாள், தந்தை பழனிச்சாமி ஆகிய இருவருமே இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்கள். ரஞ்சித்திற்கு மூன்று அண்ணன்கள், இரண்டு மூத்த சகோதரிகள் என பெரிய குடும்பம். வறுமை காரணமாக, அவரால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. 1977ஆம் ஆண்டில், ரஞ்சித்திற்கு 17 வயதான போது தமிழ்நாட்டிற்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். இதையடுத்து வீட்டிலிருந்து கொஞ்சம் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு புறப்பட்டு விட்டார். தமிழ்நாட்டிற்கு சென்ற பிறகு ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் போகப்போக நிலைமை மாறியது என்று நினைவுகூர்கிறார் ரஞ்சித். "வீட்டில் திருடிக் கொண்டு வந்த நகையை விற்று, ஒரு பெட்டிக் கடையை வைத்தேன். அதில் திவாலாகி தெருவுக்கு வந்து விட்டேன். அதன்பின் உணவகங்களில் டேபிள் துடைக்கும் வேலை, ரூம் பாய் வேலைகளைப் பார்த்தேன். பிறகு, பேருந்து நிலையத்தில் முறுக்கு விற்பது, மூட்டை தூக்குவது போன்ற வேலைகளையும் செய்தேன். நான் செய்யாத வேலையே கிடையாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனக்குச் சீக்கிரமே அது கைவந்த கலையாகிவிட்டது. பிறகு சிறிய அளவில் ஒரு கேட்டரிங் நிறுவனத்தை துவங்கினேன். தற்போது அந்த நிறுவனம் 125 பேர் பணியாற்றக் கூடிய பெரிய அளவிலான நிறுவனமாகியிருக்கிறது" என்கிறார் ரஞ்சித். படக்குறிப்பு, நுவரேலியாவுக்கு அருகில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த அலகொல பகுதி எஸ்டேட் கடன்களை திருப்பி அளிக்க முடிவு செய்த ரஞ்சித் ஒரு முறை உடல்நலம் சரியில்லாமல் போன போது ரஞ்சித் பைபிளைப் படித்துள்ளார் . பைபிளில் இருந்த 'துன்மார்க்கர்கன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் போகிறான். நீதிமான் இறங்கிச் சென்று திரும்பக் கொடுக்கிறான்’ என்ற வாசகம் அவரை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. "இதற்குப் பிறகு, எங்கெங்கு யார் யாரிடமெல்லாம் சின்னச் சின்னக் கடன்களை வாங்கினேனோ, அவற்றையெல்லாம் தேடித்தேடிப் போய்த் திரும்பக் கொடுத்தேன். வங்கியில் செலுத்தாமல் இருந்த 1500 ரூபாயையும் கூட, பல ஆண்டுகள் கழித்துப்போய்ச் செலுத்திவிட்டேன். ஆனால் அந்த எழுவாய் பாட்டியிடம் திருடிய 37 ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவில்லையே என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது." என்கிறார் ரஞ்சித். மேலும் தொடர்ந்த அவர், "அந்த பாட்டி இறந்திருப்பார் என்று தெரியும். ஆனால், அவருடைய வாரிசுகளைத் தேடிக் கண்டு பிடித்தாவது, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். இலங்கையிலுள்ள என்னுடைய நண்பர்கள் மூலமாக அவர்களைத் தேட ஆரம்பித்தேன். நீண்ட காலத் தேடுதல்களுக்குப் பின், அந்தப் பாட்டியின் மகன்கள் வசிக்கும் இடத்தை கடந்த ஆண்டில் வாங்கி விட்டேன். அந்தப் பாட்டிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மகன்களில் ஒருவர் இறந்து விட்டார். மகள், தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதாகத் தகவல் கூறினார்கள்" என்று விவரித்தார். படக்குறிப்பு, மலையகத்தில் தனது பெற்றோரின் வீடு இருந்த இடத்தில் கிருஷ்ணன். இந்த இடத்தில் இருந்து வீட்டை மாற்றும் போதுதான் ரஞ்சித் பணத்தை எடுத்தார். ரூ.37.50-ஐ பன்மடங்காக திருப்பி அளித்த ரஞ்சித் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதிக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் என மூன்று ஆண் குழந்தைகளும் வீரம்மாள், அழகம்மாள், செல்லம்மாள் என மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இதில் முருகையா இறந்துவிட்டார். அவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் இருந்தனர். பழனியாண்டி கொழும்பு நகரத்திற்கு அருகிலும் கிருஷ்ணன் நுவரேலியாவுக்கு அருகில் உள்ள தலவாக்கலையிலும் வசித்துவந்தனர். இவர்களைத் தொடர்புகொண்ட ரஞ்சித், சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியின் குழந்தைகளுக்கான தனது கடனைத் தீர்க்க விரும்புவதாகக் கூறினார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று கொழும்பு நகருக்கு சென்ற ரஞ்சித், சுப்பிரமணியன் குடும்பத்தாரை உணவகம் ஒன்றில் சந்தித்தார். அவர்களிடம் 1970களில் நடந்த சம்பவத்தை விவரித்த ரஞ்சித், அவர்களுக்கென எடுத்துவந்த புதிய ஆடைகளைப் பரிசளித்தார். அதற்குப் பிறகு, தான் திருடிய ரூ.37.50-க்குப் பதிலாக முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் ஆகியோரின் குடும்பத்திற்கு இலங்கை மதிப்பில் தலா 70,000 ரூபாயை பரிசளித்தார். இந்த நிகழ்வு, சுப்பிரமணியன் - எழுவாய் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்தத் தம்பதியின் இரு மகன்களான பழனியாண்டியும் கிருஷ்ணனும் இன்னமும் ஆச்சரியம் விலகாமல் இருக்கின்றனர். படக்குறிப்பு, ரஞ்சித் பணத்துடன் சேர்த்து பரிசளித்த பேனாவை மகிழ்ச்சியுடன் காட்டும் பழனியாண்டி. ஆச்சர்யத்தில் ஆழ்ந்த எழுவாய் - சுப்ரமணியம் தம்பதியின் மகன்கள் தற்போது கொழும்பு நகரில் வசிக்கும் பழனியாண்டி, "ரஞ்சித் செய்த காரியம் எங்களை நெகிழ வைத்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா என்று தோன்றியது. அறியாப் பருவத்தில் செய்த செயலுக்காக திரும்பவும் வந்து பணத்தைக் கொடுத்தது, சந்தோஷத்தை அளித்தது. இந்த நேரத்தில் இந்தக் காசு வந்தது எல்லோருக்குமே உதவியாகத்தான் இருந்தது. குறிப்பாக என்னுடைய தம்பிக்கும் அண்ணனின் மனைவிக்கும் மிகுந்த உதவியாக இருந்தது. அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்" என்கிறார். பழனியாண்டிக்கு இப்படி பணம் திருடுபோனது தெரியாது. "நான் 12 - 13 வயதிலேயே கொழும்பு நகருக்கு வந்துவிட்டேன். அம்மாவும் அப்பாவும் ஊரில் இருந்தார்கள். அந்த நேரத்தில் என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. அம்மாவுக்கும் இவர்தான் எடுத்தார் என உறுதியாகத் தெரியாது. இப்போது இவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இதைப் பற்றித் தெரிந்திருக்காது" என்கிறார் பழனியாண்டி. எழுவாயின் இரண்டாவது மகன் பழனியாண்டியின் மகள் பவானி, கொழும்புக்கு அருகில் உள்ள வத்தலையில் வசிக்கிறார். "எங்கள் பாட்டியை நான் பார்த்ததுகூட கிடையாது. இத்தனை வருடங்கள் கழித்து, எனது பாட்டி வழியில் இப்படியொரு தொகை எங்களுக்கு வரும் என்று துளியும்கூட நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை. இந்தக் காலத்தில் இவ்வளவு நன்றியுடன் இருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, நேர்மையும், மனிதநேயமும் இன்னும் மரணிக்கவில்லை என்று தெரிகிறது. இலங்கையில் இப்போது விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருக்கிறது. இந்த நேரத்தில் கிடைத்த இந்தத் தொகை எங்களுக்கு பெரிய உதவிதான்" என பிபிசியிடம் தெரிவித்தார் பவானி. படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட பவானி மற்றும் குடும்பத்தினர். தற்போது இவர்களது குடும்பத்தினர் யாருமே, பழைய ஊரில் வசிக்கவில்லை. கிருஷ்ணனின் குடும்பத்தினர் நுவரேலியா தலவாக்கலை அருகில் உள்ள செயின்ட் கோம்ஸ் என்ற இடத்தில் வசிக்கின்றனர். அலகொல பகுதியில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த வீடு இருந்த பகுதி தற்போது தரைமட்டமாகக் காட்சியளிக்கிறது. அந்த இடத்தில் நின்றபடி பிபிசியிடம் பேசிய கிருஷ்ணன், "எனக்குக் கொடுத்த பணத்தை என் பிள்ளைகள் நான்கு பேருக்கும் பத்தாயிரம், பத்தாயிரம் என கொடுத்துவிட்டேன். சரியான சந்தோஷம். அவ்வளவு கஷ்டத்தில் இருந்தோம். இப்போது அம்மா இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்கள்" என நெகிழ்ந்துபோய் பேசுகிறார். எழுவாயின் ஒரு மகளான செல்லம்மாளின் குடும்பம், திருச்சிக்கு அருகில் இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில்அந்த குடும்பத்தினருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க முயற்சி செய்து வருவதாக கூறுகிறார் ரஞ்சித். "இந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது" என்கிறார் ரஞ்சித். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0e103g5925o
  23. வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை; என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியவாறு கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு - வியாழேந்திரன் எனது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை தொடர்பில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அங்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 17ஆம் திகதி மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மற்றும் முற்றுமுழுதான பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கொலை தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடைபெற்றுள்ளன. எனது அனைத்து தகவலும் பெறப்பட்டன. எனது கையடக்க தொலைபேசி மற்றும் மெய்க்காவலர் என அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இச்சம்பவம் நடைபெற்றபோது நான் இருந்த இடம் தொடர்பிலான அனைத்து தகவல்களும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டன. ஆனால், இவையெல்லாம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளேன். அதேபோன்று கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் என்பவர் முகப்புத்தகம் ஊடாக நேரலை செய்து எனது பெயருக்கும் எனது முற்போக்கு கழகத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். முன்பு ஒரு தடவை அவருக்கு எதிராக இவ்வாறு கருத்துகளை தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்தபோது, தான் இனி அவ்வாறு செயற்படமாட்டேன் என எங்களிடம் வந்து தெரிவித்ததையடுத்து அந்த வழக்கினை வாபஸ் செய்தேன். ஆனால், அவர் மீண்டும் எனது பெயருக்கும் முற்போக்கு தமிழர் கழகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தகாத வார்த்தைகள் மூலமாகவும் முகப்புத்தகத்தில் நேரலை செய்துள்ளார். அவருக்கு எதிராகவும் முறைப்பாட்டினை இன்று பொலிஸ் தலைமையகத்தில் செய்துள்ளேன் என்றார். https://www.virakesari.lk/article/196659
  24. (எம்.மனோசித்ரா) ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச நிதி முகாமைத்துவ சட்டத்தை எதிர்த்த ஜே.வி.பி. இன்று அந்த சட்டத்துக்கமையவே செயற்பட்டு வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக அன்று குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும், அதனை விட அதிகக் கடனைப் பெற வேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார். பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக வாரத்துக்கொரு முறை புதிய கடனை பெற வேண்டும் என்ற யதார்த்தத்தை தற்போது ஜே.வி.பி. உணர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட கலாநிதி ஹர்ஷ, வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதை அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தொடர்ச்சியாக கடன் பெற்றுக்கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பால் இதற்கான காரணிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருக்கிறது. நிதி தொடர்பான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. அரசியலமைப்பின் 148ஆம் உறுப்புரைக்கமைய பாராளுமன்றத்துக்கே அந்த அதிகாரம் காணப்படுகிறது. பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரதான மூலம் கோப் குழுவாகும். அதன் முன்னாள் தலைவர் என்ற ரீதியிலேயே இவ்விடயங்களை நான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு அன்றாட பணிகளுக்கு நிதி தேவைப்பாடு காணப்படுகிறது. அதனை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? அதற்கு இரு பிரதான வழிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று வரி உள்ளிட்ட அரச வருமானத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் திறைசேரி கணக்கில் காணப்படும் நிதியாகும். இரண்டாவது கடன் பெற்றுக்கொள்ளலாகும். திறைசேரியில் மேலதிக அல்லது மிகையான நிதி காணப்படுமானால், கடனை மீள செலுத்துவதற்காக அதனைப் பயன்படுத்த முடியும். மிகை நிதி என்பது அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் செலவுகளைக் கழித்த பின்னர், எஞ்சும் தொகையில் வட்டியையும் குறைத்த பின்னர் மீதப்படும் தொகையாகும். மிகை நிதியானது தேசிய உற்பத்தி வருமானத்துக்கு சமாந்தரமாக 2.3 சதவீதமாக பேணப்படும் என்று கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியது. எனவே, இந்த மிகை நிதியானது கடந்த ஆண்டும் இவ்வாண்டும் அதிகாரிகளால் முகாமை செய்யப்பட்டு வருகிறது. எனவே, பெற்ற கடனை மீள செலுத்தும்போது அந்த மிகை நிதியில் ஒரு தொகை பயன்படுத்தப்படும். இது நீண்ட காணப்படாத இல்லாத ஒன்றாகும். கடுமையான அரச நிதி ஒழுக்கத்தினால் தற்போது மிகை நிதி காணப்படுகிறது. இதற்காக அரச நிதி முகாமைத்துவ சட்டம் கடந்த அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று எதிர்க்கட்சி என்ற ரீதியில் அந்த சட்டத்துக்கு நாம் ஒத்துழைப்பை வழங்கினோம். ஆனால், அன்று அதனை எதிர்த்த ஜே.வி.பி., இன்று அந்த சட்டத்துக்கமையவே மிகை நிதியைப் பேணி வருகிறது. எவ்வாறிருப்பினும் மிகை நிதி போதவில்லை எனில் வாரத்துக்கொரு முறை கடன் பெற வேண்டியுள்ளது. ஏற்கனவே பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக புதிதாகக் கடன் பெற வேண்டும். அவ்வாறில்லையெனில் பணத்தை அச்சிட வேண்டும். எனினும், நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய மத்திய வங்கியால் பணத்தை அச்சிட முடியாது. மத்திய வங்கி சுயாதீனப்படுத்தல் சட்டத்துக்கமைய பணத்தை அச்சிட்டு அரசாங்கத்துக்கு வழங்கவும் முடியாது. மத்திய வங்கி சுயாதீனமயப்படுத்தல் சட்டத்துக்கும் அன்று ஜே.வி.பி. ஆதரவளிக்கவில்லை. இந்த சட்டத்தை மாற்றுவதாக அன்று ஜே.வி.பி. கூறினாலும், அவ்வாறு எதனையும் கூறாமல் இவ்வாறு சென்றுகொண்டிருக்கின்றனர். எனவே, மத்திய வங்கியிடம் கடன் பெற முடியாது என்பதால், அரசாங்கம் வர்த்தக சந்தையில் கடன் பெற்றுக் கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக ஜே.வி.பி. அன்று குற்றஞ்சுமத்தியது. எமது ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த கடனில் 89.9 சதவீதமானவை 2015க்கு முன்னர் பெற்றுக் கொண்ட கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காகவே பெறப்பட்டது. எனினும் அதில் நம்பிக்கை கொள்ளாமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவ்வாறு கடன் பெற வேண்டுமா என்று கேட்டனர். ஆனால், இன்று என்ன நடக்கிறது? இவ்வாறு தொடர்ச்சியாக சென்றால் கடந்த அரசாங்கத்தை விட 2024இல் தெரிவான அரசாங்கம் அதிகக் கடனைப் பெறும் நிலைமையே காணப்படுகிறது. எமக்கு இவ்வாறு கடன் பெறவேண்டிய தேவையில்லை. கடன் பெறுவதால் என்ன அர்த்தமுள்ளது, கடந்த அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுள்ளது என அரசியல் தளங்களில் கூறினாலும் இதுவே யதார்த்தமாகும். அவற்றை தெரிந்துகொள்ளாமல் கூறினார்களா? அவ்வாறில்லை எனில் மக்களை ஏமாற்றுவதற்காக கூறினார்களா என்பது எமக்குத் தெரியாது. பழைய கடனை மீள செலுத்துவதற்கு வாரத்துக்கொரு முறை புதிய கடனைப் பெற வேண்டும் என்பதே யதார்த்தமாகும். மிகை நிதியை மேலும் அதிகரித்துக்கொண்டால் மாத்திரமே புதிதாகப் பெற்றுக்கொள்ளும் கடன் தொகையையும் குறைத்துக்கொள்ள முடியும். மிகை நிதியை பலப்படுத்த வேண்டுமெனில் அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். செலவுகள் குறைக்கப்பட வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கான பிரதான வழிமுறை வரியைப் பெற்றுக் கொள்வதாகும். வரியைக் குறைப்பதாகக் கூறினாலும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் எந்தப் பேச்சும் இல்லை. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வரியை அதிகரிப்பதாக முன்னர் கூறப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வரியில் விலக்களிப்பை வழங்கினால் பிரிதொரு வரி அறவிடப்பட வேண்டும். வீடுகளை வாடகைக்கு வழங்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானத்துக்கு வரியை அறவிடுவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் பிரிதொரு வரியை அறிமுகப்படுத்த வேண்டும். அதே போன்று வட் வரி நீக்கப்பட்டாலும், அதற்கு பதிலாகவும் வேறு வரி அறவிடப்பட வேண்டும். எனவே இந்த அரசாங்கம் கூறிய மாற்றங்களை எவ்வாறு செய்யப் போகிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/196653
  25. ஹமாஸ் தலைவரின் மரணம் காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 55 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. . சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு விழுந்த பெரிய அடி. ஹமாஸை அவர் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றினார், அதன் விளைவாக இஸ்ரேல் அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சின்வார் இஸ்ரேல் சிறப்புப் படைகளின் திட்டமிட்ட நடவடிக்கையில் கொல்லப்படவில்லை, மாறாக காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் தற்செயலாக ரோந்து மேற்கொண்ட இஸ்ரேலியப் படைகள் நடத்திய ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், போர் உடை அணிந்திருந்த சின்வார் ஷெல் குண்டு வீச்சு தாக்குதலில் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இறந்து கிடந்ததைக் காட்டுகிறது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ வீரர்களைப் பாராட்டிய அதே சமயத்தில், எவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், அது போரை முடிவுக்குக் கொண்டு வராது என்றார். நெதன்யாகு மேலும் கூறுகையில், "நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். தீமையை `நன்மை’ வீழ்த்தியதை இன்று மீண்டும் ஒருமுறை உலகிற்குக் காட்டியுள்ளோம். ஆனால் போர் இன்னும் முடிவடையவில்லை. இது கடினமான நேரம். நாம் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது” என்றார். "நமக்கு முன்னால் இன்னும் பெரிய சவால்கள் உள்ளன. நமக்கு சகிப்புத்தன்மை, ஒற்றுமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு தேவை. நாம் ஒன்றாகப் போராட வேண்டும், கடவுளின் உதவியால், நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பணயக்கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். காஸா போரை ஆதரிக்கும் நெதன்யாகு மற்றும் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் வெற்றிக்காக காத்திருக்கின்றனர். நெதன்யாகு தனது போர் இலக்குகளை பலமுறை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார். "ஹமாஸின் அரசியல் மற்றும் ராணுவ பலத்தை அழித்து இஸ்ரேல் பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்." என்பதே அவரின் இலக்கு. ஒரு வருடமாக தொடரும் போரில் குறைந்தது 42,000 பாலத்தீனர்களைக் கொன்று, காஸாவின் பெரும் பகுதிகளை தரைமட்டம் ஆக்கிய போதிலும், இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்று இஸ்ரேல் கருதுகிறது. மீதமுள்ள பணயக்கைதிகளின் விடுதலை, இஸ்ரேலிய படைகள் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பதே இஸ்ரேலின் நோக்கம். சின்வாரைக் கொன்றது இஸ்ரேல் விரும்பிய வெற்றி என்ற போதிலும் போரின் மற்ற இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு கூறுகிறார். யாஹ்யா சின்வார் யார்? சின்வார் 1962 ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருக்கும் கான் யூனிஸ் நகரில் அகதிகள் முகாமில் பிறந்தார். 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல், காஸா முனையைக் கைப்பற்றிய போது அவருக்கு ஐந்து வயது தான் ஆகியிருந்தது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலியப் படைகளால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட அல்லது தப்பியோடிய 700,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களில் சின்வாரின் குடும்பமும் ஒன்று. அவரது குடும்பத்தினர் காஸா பகுதியின் வடக்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அஷ்கெலோன் நகரத்தை சேர்ந்தவர்கள். இஸ்ரேல் சிறையில் 22 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொண்டார். சின்வார் இஸ்ரேல் சிறையில் இருந்ததால், அவரது பல் மாதிரிகள் மற்றும் அவரது டிஎன்ஏ மாதிரிகள் இஸ்ரேலிடம் உள்ளன. அவையே காஸாவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவருடையதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவின. 2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித் என்பவரை விடுவிக்க, இஸ்ரேலின் பிடியில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சின்வாரும் ஒருவர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று, கவனமாக திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் சின்வாரும் அவரது ஆட்களும் சேர்ந்து இஸ்ரேலுக்கு மிக மோசமான தோல்வியை கொடுத்தார்கள். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சின்வாரின் மரணத்தைக் கொண்டாடும் விதமாக மக்கள் இஸ்ரேலிய தேசியக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர் பணயக்கைதிகளை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லையா? காஸாவில் எஞ்சியிருக்கும் 101 இஸ்ரேல் பணயக்கைதிகளில் பாதி பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது. பணயக் கைதிகள் பிடித்துச் செல்லப்பட்ட அதே இடத்தில் அவர்களின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, அவர்களை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பணயக்கைதியான மதன் ஜாங்கவுக்கரின் தாயார், “நெதன்யாகு, பணயக்கைதிகளை புதைத்து விடாதீர்கள். மத்தியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அணுகி, புதிய முயற்சியை முன்வையுங்கள். பணயக்கைதிகளை மீட்பது உங்களால் மட்டுமே முடியும்” என்றார். அவர் மேலும் கூறுகையில் "நெதன்யாகு இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ஒரு புதிய இஸ்ரேலிய ஒப்பந்தத்தை முன்வைக்க முன்வரவில்லை என்றால் அவர் பணயக்கைதிகளாக இருக்கும் எங்கள் குடும்பங்களை கைவிட்டுவிட்டார் என்று தான் அர்த்தம்.” "அவர்களுக்காக போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. மாறாக நெதன்யாகு போரை இன்னும் அதிகப்படுத்தி வருகிறார். அனைவரும் திரும்பும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ” என்றார். "சின்வாரும் அவரது ஆட்களும் இஸ்ரேலைத் தாக்கும் அளவுக்கு அதன் பாதுகாப்பு பலவீனமாக இருந்துள்ளது. நெதன்யாகு, இந்த பாதுகாப்புத் தோல்விகளில் தனது பங்கை மறைக்கவும், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை காலவரையின்றி ஒத்திவைக்கவும் காஸா போர் சூழலை ஆதரிக்கிறார்." என்று அவர் குற்றம்சாட்டினார். நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். காஸாவில் ஹமாஸை வீழ்த்தி "முழுமையான வெற்றி" கண்டால் மட்டுமே இஸ்ரேலிய பாதுகாப்பை மீட்டெடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார். இஸ்ரேல் காஸாவுக்குள் செய்தி நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. ராணுவ மேற்பார்வையின் கீழ் அரிதான பயணங்களை மட்டுமே அனுமதிக்கிறது. பிபிசிக்கும் இதே நிலைதான். சின்வாரின் சொந்த ஊர் மக்களின் நிலைப்பாடு சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸில், பிபிசிக்காக சில நம்பகமான உள்ளூர் பத்திரிகையாளர்கள் பாலத்தீனர்களை பேட்டி கண்டனர். அவர்களும் போர் தொடரும் என்றே கூறினார்கள். டாக்டர் ரமலான் ஃபாரிஸ் கூறுகையில் “இந்தப் போர் சின்வார், ஹனியே அல்லது மிஷால் அல்லது எந்தத் தலைவரையோ அல்லது அதிகாரியையோ சார்ந்தது அல்ல, இது பாலத்தீன மக்களுக்கு எதிரான அழிவுகரமானப் போர். இது நாங்கள் அனைவரும் அறிந்து கொண்ட உண்மை. சின்வார் உள்ளிட்டவர்களை தாண்டி இது மிகப்பெரிய பிரச்னை” என்றார். சிலர் சின்வாரின் மரணத்தால் சோகமாக இருப்பதாகவும், மற்றவர்கள் அலட்சியமாக இருப்பதாகவும் அட்னான் அஷூர் கூறினார். அஷூர் மேலும் கூறுகையில், "அவர்களுக்கு நாங்கள் மட்டுமல்ல, முழு மத்திய கிழக்கும் வேண்டும். அவர்கள் லெபனான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடனும் சண்டையிடுகிறார்கள். இது 1919 முதல், அதாவது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான போர்" என்று கூறினார். சின்வாரின் மரணம் ஹமாஸை பாதிக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. "இல்லை என்று நம்புகிறேன், ஹமாஸ் என்பது வெறும் சின்வார் என்ற தனி நபரை சார்ந்தது அல்ல" என்றார் அவர். 'ஹமாஸை அழிக்க முடியாது’ காஸாவில் போர் தொடர்கிறது. 25 பாலத்தீனர்கள் வடக்கு காஸாவில் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் மூலமாக ஹமாஸ் கட்டளை மையத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது. உள்ளூர் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பதை உறுதிப்படுத்தினர். இஸ்ரேல் அதிக உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தியதை அடுத்து பாராசூட் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. 1990களில் இருந்து ஒவ்வொரு ஹமாஸ் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் அடுத்தடுத்து ஒரு வாரிசு வந்து விடுகிறார். சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் கொண்டாடும் அதே வேளையில், ஹமாஸ் பணயக்கைதிகளை இன்னும் வைத்திருக்கிறது, இன்னும் சண்டையிட்டு கொண்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy97j0985go

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.