Everything posted by ஏராளன்
-
கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியாக தனித்து கள மிறங்குவோம் - சுமந்திரன் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7 30 SEP, 2024 | 05:02 PM எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (30) மாலை மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு அழைப்பதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்து இருந்தோம். அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம். ஆகவே நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப் படுத்துவதனால் வெகு விரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் அவற்றை கருத்தில் எடுத்து தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம் என தெரிவித்தார். மேலும், எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள், யுவதிகள், ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195158
-
பெற்றோல், டீசல் விலை குறைப்பு!
Published By: VISHNU 30 SEP, 2024 | 09:44 PM மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும். இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/195178
-
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு
Published By: DIGITAL DESK 3 30 SEP, 2024 | 04:38 PM 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் நடைபெறும் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார். அத்துடன், அடுத்த சாதாரண தர பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கே உத்தேசித்துள்ளோம். பரீட்சைக்கான உரிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும். 2026 ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகள் தாமதமடைவதை குறைத்து உரிய நேர அட்டைவணைக்கு முன்னெடுக்கப்படும். மேலும், தற்போது வெளியாகியுள்ள சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணையாளர் நாயகம் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார். திங்கட்கிழமை காலை முதல் பரீட்சை பெறுபேறு சான்றிதல்கள் வழங்கப்படும். இணையவழி மூலம், ஒரு நாள் சேவைகள் அல்லது வழக்கமான சேவைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெறுபேறு சான்றிதல்கள் பெறலாம். ஒக்டோபர் மாதம் ஆம் திகதிக்குப் பின்னர் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் பெறுபேறுகளில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மீள்பரிசீலனை செயல்முறையை விரைவாக முடித்து பெறுபேறுகளை விரைவாக வழங்குவதை திணைக்களம் நோக்கமாகக் கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/195147
-
'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே' - மன்னாரில் போராட்டம்
மதுபான சாலையை உடனடியாக இடம் மாற்றக் கோரி மன்னாரில் மக்கள் போராட்டம் 30 SEP, 2024 | 03:58 PM மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை உடனடியாக இடம் மாற்றக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று திங்கட்கிழமை (30) காலை மதுபானசாலைக்கு முன் முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், ஆடைதொழிற்சாலை, பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த மாதம் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெமுத்ததோடு, குறித்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் என கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கை அளித்ததாகவும், தாங்கள் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் குறித்த மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பிரேத பெட்டியுடன் குறித்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடினார். எனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார். இதன் போது, மக்கள் தமது பிரச்சினைகளை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குறித்த மதுபானசாலையை பிரதேச செயலாளர் அல்லது அரசாங்க அதிபரின் உடனடியாக மூட முடியாது என்றும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஊடாகவே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், இவ்விடயம் குறித்து உடனடியாக மதுவரி திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குறிப்பாக தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்ற நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள விடையத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். இந்நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அரச அதிபரின் வாக்குறுதிக்கு அமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டுச் சென்றனர். https://www.virakesari.lk/article/195146
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
இஸ்ரேலை தாக்க நடந்த இரகசியத் திட்டம்! Hassan Nasrallah மரணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!! ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நசரல்லாவைத் தாக்கி அழிக்க இஸ்ரேல் எதற்காக இந்தக் காலகட்டத்தைத் தேர்ந்தெடுத்திருந்தது? ஹிஸ்புல்லாக்களுக்கு அருகில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு உள்ளே நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு நினைத்திருந்தால்- Hassan Nasrallahவை முன்னரேயே அகற்றி இருக்க முடியும். அப்படியிருக்க எதற்காக இந்தத் தருனத்தைத் தேர்ந்தெடுத்திருந்தது இஸ்ரேல்?
-
சவூதி கல்வி, மருத்துவத் துறைகளில் AI, ரோபோக்களின் பயன்பாடு : ரியாத் புத்தக கண்காட்சி மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் முன்னோடி கண்டுபிடிப்பு
30 SEP, 2024 | 01:31 PM காலித் ரிஸ்வான் அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம், போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது. அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும் ரோபோக்களின் பயன்பாடு மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் வெற்றிகரமான ரோபோ உதவி மூலமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அண்மைய தொழில்நுட்ப ரீதியான மருத்துவ மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவூதியின் சாதனைகள் மற்றும் ஆர்வம் போன்றவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாண்டு நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சவூதியின் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் AI மூலமான சேவைகளை அறிமுகப்படுத்தி செயற்படுத்தி இருந்தது. அந்த வகையில் பல்வேறு மொழிகளில் தொடர்புகொள்ளும் திறன் கொண்ட AI மூலம் இயங்கும் ரோபோக்கள் கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு விதிவிலக்கான துல்லியத்துடன் வழிகாட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த ரோபோக்கள் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களைக் கண்டறிய உதவுவனவாக இருந்ததோடு, பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு பல மொழிகளிலான உதவிகளை, வழிகாட்டல்களை வழங்கின. மேலும் இந்த ரோபோக்கள் புத்தகங்களுக்கான ஆடியோ (Audio) வடிவிலான சுருக்கங்களை வழங்குகின்றன. முக்கிய கருப்பொருள்கள் மற்றும் காண்பிக்கப்படும் புத்தகங்களின் உள்ளடக்கத்தையும் வழங்குகின்றன. புத்தக ஆர்வலர்களுக்கான சிறந்த ஒரு அனுபவத்தை இந்த திட்டமானது வழங்குகின்றது. இக்கண்காட்சியின் சகல அரங்குகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்ததோடு, ஊடாடும் சாதனங்கள், தேவைக்கேற்ப கதை அச்சிடுவதற்கான அச்சியந்திரங்கள் வைக்கப்படல் மற்றும் தகவல் திரைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் கண்காட்சியின் கவர்ச்சி மேலும் அதிகரிக்கப்பட்டது. சுகாதாரத்துறையை பொருத்தமட்டில், மதீனா நகரில் உள்ள மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மெடிக்கல் சிட்டி, 70 வயதான ஒரு பெண்ணுக்கு முதல் முதலாக ரோபோ உதவியுடன் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்துள்ளது. சிறப்பு எலும்பியல் மற்றும் மூட்டு மாற்றுக் குழுவால் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, மதீனா சுகாதாரத் தொண்டு நிறுவனத்துக்கு (Madina Health Cluster) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் ரோபோ அமைப்புகளின் பயன்பாடானது எலும்பு சீரமைப்பு மற்றும் எழும்பு மாற்று செயற்பாடுகளில் துல்லியத்தை உறுதி செய்கிறது. அத்தோடு இது சிறந்த அறுவை சிகிச்சை விளைவுகளுக்கும் விரைவான குணமடைதலுக்கும் வழிவகுக்கிறது. இந்த புதுமையான செயல்முறையின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணமாக நோயாளி பூரண ஆரோக்கியத்துடன் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலுமான இந்த முன்னேற்றங்கள் தொழில்நுட்பத்தை முக்கிய துறைகளில் ஒருங்கிணைப்பதற்கான சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. அத்தோடு இவ்வாறான முயற்சிகள் பிராந்திய ரீதியாகவும் உலகளவிலும் சவூதியை புதுமை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியிருக்கின்றன. https://www.virakesari.lk/article/195126
-
கொட்டித்தீர்க்கும் மழை; முற்றாக புதையுண்டுபோயுள்ள வீடுகள்; பயணிகளுடன் மண்சரிவில் சிக்குண்ட பஸ்கள் - நேபாளத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பலி
Published By: RAJEEBAN 30 SEP, 2024 | 02:35 PM நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளம் தலைநகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகள பெருக்கெடுத்துள்ளதால் தலைநகரின் பல நகரங்கள் நீரின் கீழ் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் மண்சரிவு காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன, நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன, மின்கோபுரங்கள் வீழ்ந்துள்ளன என நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன. காலநிலை நெருக்கடி காரணமாகவே நேபாளம் மிக அதிகளவான ஆபத்தான மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் காரணமாக தங்களின் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களையும், தொலைதூர பகுதியில் வெள்ளத்தினால் சிக்குண்டுள்ளவர்களையும் தேடிகண்டுபிடித்து மீட்பதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். காத்மண்டுவின் தென்பகுதியில் உள்ள லலித்பூரே மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் ஊடாக இராணுவத்தினரும் மீட்பு பணியாளர்களும் ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நகரில் சேற்றில் அல்லது வெள்ளத்தில் சிக்குண்டிருக்கலாம் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் தங்கள் கரங்களால் அந்த பகுதிகளை தோண்டிவருகின்றனர். கூரைகளின் மேல் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்பதற்கு ஹெலிக்கொப்டர்களையும் படகுகளையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் 192 பேர் உயிரிழந்துள்ளனர் 92 பேர் காயமடைந்துள்ளனர் பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3700 பேரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொலைதூரத்தில் உள்ள துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்பு பணியாளர்கள் சென்றடைந்ததும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர். நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளும் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. காத்மண்டுவின் முக்கிய வீதியொன்றால் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மண்சரிவில் சிக்குண்டன எனதெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட பேருந்திலிருந்த 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளின் பேருந்து மண்ணிற்குள் புதையுண்ட நிலையில் காணாப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. டொலாக்கா மாவட்டத்தின் பிமேஸ்வரில் இடிந்து விழுந்த வீட்டிலிருந்து இரண்டு வயது பையன் உயிருடன் மீட்கப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/195133 கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியாக இருக்கே!!
-
கைத்துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படையுங்கள்; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவு
Published By: DIGITAL DESK 3 30 SEP, 2024 | 12:54 PM முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முன்னாள் எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிப்பதாக முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இந்த சமீபத்திய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, நாட்டில் நிலவும் வன்முறை போக்குவதற்காக முன்னாள் எம்.பி.க்கள் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாக தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/195122
-
மனித சதை உண்ணும் பாக்டீரியாவால் காலை இழந்த சிறுவன் - என்ன நடந்தது?
மனித சதை உண்ணும் பாக்டீரியாவால் காலை இழந்த ஆந்திர சிறுவன் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, காலை இழந்த சிறுவன் கட்டுரை தகவல் எழுதியவர், கரிகிபட்டி உமாகாந்த் பதவி, பிபிசிக்காக 30 செப்டெம்பர் 2024, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குறிப்பு: இந்த கட்டுரையின் விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆந்திர மாநிலம் பெஜவாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகளையும், நூற்றுக்கணக்கான காலனிகளையும் மூழ்கடித்த வெள்ளம் முழுமையாக வடிந்தாலும், அதனால் ஏற்பட்ட சேறு இன்னும் குறையவில்லை. பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் மழை பெய்தாலும் சேறு இன்னும் முழுமையாக அகலவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகள் அனைத்தும் அசுத்தமாக காட்சியளிக்கின்றன. இதனால் நகரின் பல இடங்களில் நோய்கள் பரவி வருகின்றன. பலருக்கும் தொற்று மற்றும் காய்ச்சல் ஏற்படுவது அதிவேகமாக அதிகரித்து வருகிறது. வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் காரணமா? இம்மாதத்தின் முதல் வாரத்தில் விஜயவாடாவை வெள்ளம் சூழ்ந்தபோது, என்டிஆர் மாவட்டத்தின் ஜக்கையாபேட்டை நகரிலும் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. மனித சதையை உண்ணும் பாக்டீரியாவால் இந்த ஊரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் உடலில் காயங்கள் ஏதுமின்றி ஆபத்தான பாக்டீரியாக்கள் நுழைந்தது மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, சிறுவனின் உடலில் இ.கோலி மற்றும் கிளெப்சியெல்லா கிருமிகள் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது ஏழாம் வகுப்பு படிக்கும் பவ்தீப் என்ற 12 வயது சிறுவனின் வீட்டிலும் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளம் வடியும் வரை குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்தார். வீட்டில் உள்ள பொருட்கள் நனையாமல் இருக்க பெற்றோருக்கு உதவினார். “வெள்ளம் வடிந்தபின் ஒருநாள் இரவில் பவ்தீப்பிற்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர் சில ஆன்டிபயாடிக் மாத்திரைகளை வழங்கினார், ஊசியும் செலுத்தினார். ஆனால், பவ்தீப்பிற்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போகவே, பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, இரு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீர் வெளியேறுவது தடைபட்டது. நான் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றேன்” என பிபிசியிடம் சிறுவனின் தந்தை நாகராஜு தெரிவித்தார். படக்குறிப்பு, வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பவ்தீப்பிற்கு இப்பிரச்னை இல்லை என்று நாகராஜு கூறினார் அந்த மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பவ்தீப் விஜயவாடாவில் உள்ள அங்கூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனுக்கு அரிதான 'நெக்ரோடைசிங் ஃபேசிடிஸ்' நோய் தாக்கியுள்ளதாக தெரிவித்தனர். சதை உண்ணும் பாக்டீரியா இந்த நோயின் மற்றொரு பெயர் சதை உண்ணும் நோய். இந்த நோயை ஏற்படுத்திய பாக்டீரியா, பவ்தீப்பின் உடலில் புகுந்து தசைகளை தின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நோய்த்தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்க கடந்த 17-ம் தேதி சிறுவனின் தொடை வரை வலது கால் அகற்றப்பட்டது. இடது முழங்காலுக்கு அடியில் உள்ள திசுக்களில் 30 சதவிகிதத்தை கிருமிகள் உண்டதும் கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் பவ்தீப்பின் உடலில் எந்த வித காயமும் இல்லாமல் ஆபத்தான பாக்டீரியா எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை. சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் குழந்தைகள் நல மருத்துவர்களான வருண் குமார் மற்றும் ரவி ஆகியோர் பிபிசியிடம், பவ்தீப் சாக்கடை நீர் சுற்றியுள்ள பகுதியில் இருந்ததால் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பவ்தீப்பிற்கு இந்தப் பிரச்னை இல்லை என்றும், வெள்ளம் ஏற்பட்ட பின்னர் தான் பிரச்னை தொடங்கியதாகவும் நாகராஜு கூறினார். சிறுவனின் உடலின் பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அவரது உடலில் இ.கோலி (E.coli) மற்றும் கிளெப்சியெல்லா (Klebsiella) கிருமிகள் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. படக்குறிப்பு, மருத்துவர் ஹரிஹரன் இதுகுறித்து மருத்துவர்கள் ரவி, வருண்குமார் கூறுகையில், ‘‘இந்த கிருமிகளில் ஆபத்தான வகைகள் உள்ளன. அவற்றால்தான் கால்கள் வீக்கமடைகின்றன” என்றனர். "வெள்ள நீரில் கழிவுநீர் கலக்கிறது. அப்போது பாக்டீரியாவின் பரவல் அதிகமாகும். அப்போது உடலில் பாக்டீரியாக்கள் நுழைந்திருக்கலாம். மறுபுறம், பவ்தீப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு ஆன்டிபயாடிக் ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்பட்டது. அவ்வாறு செய்வது ஆபத்தானது,'' என, மருத்துவர்கள் தெரிவித்தனர். பவ்தீப்பின் சிகிச்சைக்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் சிறுவனின் தந்தை நாகராஜு தெரிவித்தார். சிறுவன் குணமடைய இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறுவதாகவும், இதற்கிடையில் ஏற்படும் மருத்துவ செலவுக்கு நன்கொடையாளர்களின் உதவியை நாட உள்ளதாகவும் அவர் கூறினார். விஜயவாடாவில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு விஜயவாடா நகரில் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விஜயவாடா நர்சிங் ஹோம் மற்றும் பாலிகிளீனிக்கின் மருத்துவர் ஹரிஹரன் பிபிசியிடம் தெரிவித்தார். "விஜயவாடாவில் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் கனமழையால், நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இயற்கையாகவே ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்ச்சல் அதிகமாகிறது. ஆனால், இம்முறை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள், குறிப்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் மிதமான காய்ச்சல் வந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்” என தெரிவித்தார். விழிப்புணர்வு தேவை விஜயவாடா அரசு மருத்துவமனை இணைப் பேராசிரியர் மருத்துவர் ஜோதிர்மயி, வெள்ள நீரில் நடந்து செல்லும் போதும், வெள்ளம் வடிந்த பின்னரும் மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். படக்குறிப்பு,மருத்துவர் ஜோதிர்மயி நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் வெள்ளம் மற்றும் மழைக்காலங்களில் அதிக ஆபத்துள்ள நோயாளிகளாகக் கருதப்படுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் மற்றும் கழிவுநீரில் நனையாமல் கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கவும். சுத்தமான சூடான உணவை உட்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை அவ்வப்போது எடுத்துக்கொள்ள வேண்டும். தொற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். கொசுக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் மேற்கண்ட முன்னெச்சரிக்கைகளை மருத்துவர் ஜோதிர்மயி பரிந்துரைத்தார். "மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன" "வெள்ளம் வடிந்த பின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கருதி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தயார் செய்துள்ளோம். ஆனால், அரசு மருத்துவ முகாம்கள் நடத்தி மருந்துகள் வழங்கியதால், பொது மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை" என்றார் ஜோதிர்மயி. பட மூலாதாரம்,NATIONAL HEALTH AUTHORITY விஜயவாடா நகருடன் என்டிஆர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இம்மாதம் 2-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 2 லட்சத்து 699 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டதாக பிபிசியிடம் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரியான மருத்துவர் சுஹாசினி தெரிவித்தார். மொத்தம் 253 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். எங்கு, எப்போது யாருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் சுகாதாரத் துறை தயாராக இருப்பதாக அவர் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy80jq88enjo
-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
வேம்படியில் 114 மாணவிகளுக்கு 9A சித்திகள் 30 SEP, 2024 | 12:17 PM வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்றுள்ளனர். அதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் 52 மாணவர்களும், யாழ். இந்து மகளிர் கல்லூரியில் 17 மாணவிகளும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 08 மாணவர்களும், உடுவில் மகளிர் கல்லூரியில் 06 மாணவிகளும், யாழ் . மத்திய கல்லூரியில் 02 மாணவர்களும் 9A தர சித்தி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மேலும் பல பாடசாலைகளிலும் மாணவர்கள் 9A தர சித்திகளை பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/195115
-
இலங்கையின் கடல் மட்டம் உயரவிருக்கிறது; வெளிவந்திருக்கும் எச்சரிக்கை
2050 ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர சமூகங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் இருத்தலியல் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஐ.நா. பொதுச் சபையில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்துகொண்டுப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், வரவிருக்கும் நெருக்கடி குறித்து கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. “எங்கள் உலகம் ஆபத்தான நீரில் உள்ளது,” என்று குட்டெரஸ் தெரிவித்திருந்தார். “கடந்த 3,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலகளாவிய கடல் மட்டம் இப்போது வேகமாக உயர்ந்து வருகிறது. ஏனெனில் பசுமை இல்ல வாயுக்கள் நமது கிரகத்தை வெப்பமாக்குகின்றன, இது கடல் நீரை விரிவுபடுத்துவதுடன், பனிக்கட்டிகளும் வேகமாக உருகுகின்றன. “கடல் மட்ட உயர்வு என்பது துயரத்தின் எழுச்சி அலை என்று பொருள்படும்” என அன்டோனியோ குட்டெரஸ் மேம் தெரிவித்திருந்தார். இதேவேளை, ஐபிசிசி (Intergovernmental Panel on Climate Change) மதிப்பீட்டின்படி, 2050 ஆம் ஆண்டில், உலக கடல் மட்டம் சராசரியாக 15 முதல் 30 சென்டிமீட்டர் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310122
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
சோலார் நீண்டகாலம் பாவிக்காதா?! 🤭| Rj Chandru Report
-
சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு
சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம் 29 SEP, 2024 | 12:21 PM இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் அணித்தலைவர் சனத்ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அவர் சமீபத்தைய வெற்றிகளை தொடர்ந்து தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நியுசிலாந்து அணியுடனான சமீபத்தைய தொடரில் ஆரம்பித்து ஒரு வருடகாலத்திற்கு அவர் தலைமை பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவார். அவரது அணுகுமுறை குறித்து நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம், அவர் வீரர்களின் திறமையை ஆகக்கூடியளவிற்கு பயன்படுத்தியுள்ளார், ஒழுக்கத்தை நிலைநாட்டியுள்ளார், என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டிசில்வா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195040
-
இலங்கை - நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை 29 SEP, 2024 | 06:13 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டி நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் முடிவுடைந்தது. முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதலாவது இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் திறமையாக இருந்தபோதிலும் தோல்வியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை. நியூஸிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் டெவன் கொன்வே, டொம் ப்ளண்டெல், க்லென் பிலிப்ஸ், மைக்கல் சென்டனர் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றனர். போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய தினம் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கடைசி 5 விக்கெட்களில் மேலும் 165 ஓட்டங்களைப் பெற்றது. க்லென் பிலிப்ஸ், டொம் ப்ளண்டெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். டொம் ப்ளண்டெல் 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் டிம் சௌதீயுடன் 7ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்த க்ளென் பிலிப்ஸ் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். டிம் சௌதீ 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். தொடர்ந்து மிச்செல் சென்ட்னர், அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும் இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று. அஜாஸ் பட்டேல் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த மிச்செல் சென்ட்னர் 67 ஓட்டங்களைப் பெற்றார். நேற்றைய தினம் க்ளென் பிலிப்ஸ் 61 ஓட்டஙகளையும் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் அறிமுக வீரர் நிஷான் பீரிஸ் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 139 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது. கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. மிச்செல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (182 ஆ.இ.), தொடர் நாயகன்: ப்ரபாத் ஜயசூரிய (18 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/195065
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ 7.5 லட்சம் வழங்கப்படும் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் பெறுவார். ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக 12.60 கோடி ரூபாயை ஒதுக்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அணிகள் அதிக வருவாயை ஈட்டுவர்” என்று ஜெய்ஷா பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/310058
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாசின் லெபனான் தலைவர் பலி 30 SEP, 2024 | 11:57 AM ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானிற்கான தனது தலைவர் பதா ஷெரீப் அபு அல் அமினே கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. பதா ஷெரீப் அபு அல் அமினே ஹமாஸ் அமைப்பின் வெளிநாடுகளிற்கான தலைவராகவும் அமைப்பின் வெளிநாட்டு தலைமைத்துவ குழுவில் ஒருவராகவும் விளங்கினார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. தென்லெபனானின் அல் பாஸ் முகாமில் அமைந்திருந்த அவரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195123
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்குச் சென்றது - சுனிதா வில்லியம்ஸை எப்போது அழைத்து வரும்? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கட்டுரை தகவல் எழுதியவர், லாரென்ஸ் பீட்டர் பதவி, பிபிசி செய்திகள் 30 செப்டெம்பர் 2024, 03:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப கொண்டு வருவதற்கான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்காக இரண்டு காலி இருக்கைகள் கொண்ட டிராகன் காப்ஸ்யூல், புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து சனிக்கிழமை ஏவப்பட்டது. எட்டே நாளில் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய அவர்கள் இருவரும், தாங்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாமல் ஸ்டார்லைனர் விண்கலம் காலியாக ஏற்கனவே பூமிக்கு திரும்பிவிட்டது. நாசா விண்வெளி வீரரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் புதிய ஆய்வுக் கருவிகள் மற்றும் பொருட்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு செல்கின்றனர். அவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் சுனிதா மற்றும் புட்ச் ஆகியோருடன் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிராகன் விண்கலத்தை வியாழக்கிழமையன்று விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் வீசிய ஹெலேன் சூறாவளி காரணமாக அதன் புறப்பாடு தாமதமானது. இந்த சூறாவளி புளோரிடா, வடக்கு ஜார்ஜியா, டென்னஸி மற்றும் கரோலினா மாகாணங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஈலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களுடன் விண்கலத்தை அனுப்புகிறது. இரண்டு விண்வெளி வீரர்களை மீட்க அனுப்பப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான ஒப்பந்தத்தின் படி, மூன்று இருக்கைகள் கொண்ட ரஷ்ய சோயுஸ் விண்கலத்தின் ஒவ்வொரு விண்வெளி பயணத்தின் போதும் ஒரு நாசா விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். நான்கு இருக்கைகள் கொண்ட டிராகன் விண்கலத்தில் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் இருப்பார். சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் கூறியது என்ன? ஓய்வுபெற்ற கடற்படை ஹெலிகாப்டர் பைலட்டான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். போர் விமானியாக பணியாற்றிய வில்மோர், ஏற்கனவே இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ளார். "நாங்கள் இங்கே மிகவும் பிஸியாக இருக்கிறோம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினருடன் நாங்கள் இணைந்தோம்," என்று சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து சமீபத்திய உரையாடலில் கூறினார். "இது எங்களுக்கு வீடு மாதிரி. இப்படி முன்னும் பின்னுமாக மிதந்தால் நன்றாக இருக்கும். விண்வெளியில் நேரத்தை செலவிடுவது ஒரு அதிசயம்" என்று இருவரும் கூறினர். சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் விண்வெளியில் இருந்து அளித்த பேட்டியில், "எதிர்பாராத விதமாக இவ்வளவு நாட்கள் விண்வெளியில் இருக்க நேரிட்டது மிகவும் நல்லது" என்று கூறியுள்ளனர். இன்னும் சில வாரங்கள் இங்கு தங்கியிருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே இருவரும் கூறினார்கள். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது விண்வெளியில் வீரர்கள் ஏற்கனவே சிக்கியுள்ளார்களா? கடந்த காலத்திலும் விண்வெளி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நாட்கள் விண்வெளியில் தங்க வேண்டியிருந்தது. 1990-ஆம் ஆண்டில், சோவியத் விண்வெளி வீரர் வெல்ட்ரே புலிகோவ் அந்நாட்டின் மிர் விண்வெளி ஆய்வு நிலையத்தில் 437 நாட்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு, ஃபிராங்க் ரூபியோ சர்வதேச விண்வெளி நிலையத்தில் 371 நாட்களை செலவிட்டார். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் இவர்தான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy78yk8p2jno
-
மீனவர்கள் விவகாரம் | இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மீண்டும் கடிதம்!
30 SEP, 2024 | 11:39 AM இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய வெளிவிவகார அமைச்சர்ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது : “ராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து இரண்டு படகுகளில் நேற்று( 28.09.2024 ) தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில் இன்று (29.09.2024) நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும் அவர்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சிக்கலான பிரச்னையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 27ம் தேதி பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளேன். எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும் வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளகிறேன்” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195116
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்றுள்ளார். இவர் ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார். நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா இயக்கத்தில் ஆரம்பம் முதலே இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். இதேவேளை ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிர்வாக சபையின் தலைவராகவும் சஃபிதீன் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310115
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்; பூபாலப்பிள்ளை பிரசாந்தன்!
30 SEP, 2024 | 10:24 AM தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு வந்து தமிழர்களை குழப்புவார்கள். இல்லாவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது வாக்களியுங்கள் என கூறுவார்கள். இவ்வாறாக குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுமார் 62 வருடங்களாக தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக்கட்சியினர் பெறுகின்றார்கள். தற்போது அம்பாறை மாவட்ட தமிழர்கள் படுகின்ற இன்னல்களை உதாரணமாக கூற முடியும். ஆகவே இவ்வாறான விடயங்களை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை சமகால அரசியல் மற்றும் எதிர்கால பொதுத்தெர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் மாத்திரம் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு தான் அவர்கள் செயற்படுகின்றார்கள். ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு வந்து தமிழர்களை குழப்புவார்கள். இல்லாவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது வாக்களியுங்கள் என கூறுவார்கள். இது தவிர அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் கூட நியமித்துவிட்டதாக கூறி இருந்தார்கள். இவ்வாறாக குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுமார் 62 வருடங்களாக தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக்கட்சியினர் பெறுகின்றார்கள். தற்போது அம்பாறை மாவட்ட தமிழர்கள் படுகின்ற இன்னல்களை உதாரணமாக கூற முடியும். ஆகவே இவ்வாறான விடயங்களை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியானது சிதறடிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்தலில் சகலரும் ஒன்றாக கேட்போம் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து கேட்பது ஆசனத்தை பெற்றுக்கொள்வது யாருக்காக என்பதை தெளிவாக கேட்க விரும்புகின்றோம். தாங்கள் சார்ந்த சமூகத்திற்காக இவ்வாறான செயற்பாட்டில் இறங்குகின்றோம். தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு எதுவும் செய்யாமல் அம்பாறை மாவட்ட மக்களை நடுத்தெருவில் விட்டவர்கள். மீண்டும் வந்து பொதுக்கட்டமைப்பில் சேருங்கள். ஒரே சின்னத்தில் கேட்போம் என கூறி எதை செய்யப்போகின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற இடத்தில் ஒரு வளைவுகோபுரத்தை நிர்மாணிக்க முடியாத வகையில் தான் இங்கு மக்கள் பிரதிநிதித்தவம் இருந்திருக்கின்றது. எனவே இவ்வாறு இருந்தால் அம்பாறை மாவட்ட மக்களை அழித்துவிட்டு யாருக்காக அரசியல் செய்ய போகின்றார்கள் என கேட்கின்றோம். எனவே மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். இம்முறை எல்லோரையும் ஒதுக்கிவிட்டு இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கரத்தினை பலப்படுத்துவதன் ஊடாக தான் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பினை பலப்படுத்த முடியும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்த முடியும். ஏனெனில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சி காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. எதிர் வருகின்ற 5 வருடங்கள் தமிழர்களை பொறுத்த வரை முக்கியமானதாகும். இந்த சூழலில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கின்ற காலகட்டம். கண்கெட்ட பிற்பாடு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது. ஆகவே மக்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள். தமிழரசுக்கட்சி உட்பட இதர கட்சிகளை மக்கள் ஏற்கனவே தூக்கி எறிந்திருக்கின்றார்கள். இதற்கு கடந்த கால அரசியல் பாதைகளை சீர்தூக்கி பார்த்தால் அனைவருக்கும் தெரியும். தேர்தல் காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து சகல கட்சிகளும் கதைப்பார்கள். நிஜத்தில் அவர்கள் அவ்வாறு நடப்பதில்லை. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் நிஜத்தில் கொடுத்திருக்கின்றது. எங்களுக்கென்று மகளீர் பிரிவு இருக்கின்றது. இந்த மகளீர் பிரிவினர் தான் பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட உள்ளிட்ட வேட்பார்களை தெரிவு செய்து தருவார்கள். அதன் பிறகு எமது கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார். மேற்குறித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளர் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யோகராஜா சந்திரகுமார் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/195105
-
வருமான வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வரி செலுத்தாதவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு 2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை அனைத்து வருமான வரிகளையும் செலுத்தி முடிக்க திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளதுடன், உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறினால், சட்டப்படி வருமான வரி செலுத்தாமல் அல்லது தாமதமாகச் செலுத்தியதற்காக அபராத வட்டி விதிக்கப்படும் என்றும், அபராதம் அல்லது வட்டி குறைக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தனர். மேலும், நிலுவையில் உள்ள வரிகள் இருப்பின் அவற்றை அடுத்த மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/310113
-
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நாளை மறுதினம் நாட்டுக்கு வருகை
Published By: VISHNU 30 SEP, 2024 | 03:32 AM இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்காக நாளை மறுதினம் புதன்கிழமை (ஒக்டோபர் 2) சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர். நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இத்தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒருமாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாக பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன. அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் வொஷிங்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், நாட்டின் பொருளாதார நிலைவரம் வெகுவாக முன்னேற்றமடைந்திருப்பினும் இன்னமும் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை எனவும், ஆகையினால் மிகக்கடின முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளைப் பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தியிருந்தார். அதுமாத்திரமன்றி 'இலங்கைக்கும், சர்வதேச பிணைமுறிதாரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டமையை வரவேற்கிறோம். இது இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது' எனக் குறிப்பிட்டிருந்த அவர், சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நாம் வெகுவிரைவில் கலந்துரையாடுவோம்' எனவும் அறிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் நாளை மறுதினம் புதன்கிழமை நாட்டுக்கு வருகைதரவிருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன் மூன்றாம் கட்ட மீளாய்வுப்பணிகளிலும் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/195094
-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
யாழ். இந்து கல்லூரியில் 52 மாணவர்களுக்கு 9A 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். தமிழ் மொழி மூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 24 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 62 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். அதேவேளை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 32 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 28 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 26 மாணவிகள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். இந்தப் பாடசாலையில் 19 மாணவிகள் 8 பாடங்களிலும் Aசித்தி பெற்றுள்ளனர். https://thinakkural.lk/article/310094
-
யாழின் வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் வலியுறுத்தல்
யாழின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தல் யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகள் திறப்பது நல்லிணக்கத்தையும் பிராந்திய அபிவிருத்தியையும் பலப்படுத்தும் என இராமநாதன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். “கொழும்பின் சமீபத்திய வீதி அணுகல் சீர்திருத்தங்களுக்கு இணங்க, யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி @அனுரா திசநாயக்கவிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். கொழும்பில் உள்ள முக்கிய வீதிகளை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பரோன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை திறக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310070