Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இலங்கை வருகிறார் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது. எதிர்வரும் நான்காம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அனுரகுமார திசநாயக்க அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார். https://thinakkural.lk/article/310068
  2. 13,309 பரீட்சார்த்திகள் ஒன்பது ஏ சித்தி; முதல் 10 நிலைகளில் மாணவிகள் முன்னிலையில் - பரீட்சைகள் திணைக்களம் 29 SEP, 2024 | 05:41 PM (இராஜதுரை ஹஷான்) 13,309 பரீட்சார்த்திகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 2.12 சதவீதமானோர் ஒன்பது பாடங்களிலும் சித்திகளை பெறவில்லை. முதல் 10 நிலை பெறுபேற்றில் மாணவிகள் முன்னிலையில் உள்ளனர். ஒக்டோபர் 1 முதல் 14 வரை மீள் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரன தரப் பரீட்சை 2024.05.06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை 3527 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது. பரீட்சை பெறுபேறுகளை நேற்று (28) நள்ளிரவு வெளியிட்டோம். 452,979 பேர் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 415,454 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள். முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றிய 322,537 பரீட்சார்த்திகளில் 244,228 பரீட்சார்த்திகள் உயர்தர கல்விக்கு தகுதிப் பெற்றுள்ளனர். உயர்தர கல்விக்கான சுற்றறிக்கைக்கு அமைய மொத்த பரீட்சார்த்திகளில் உயர்தர கல்வியை தொடர்வதற்கான அடிப்படை தகைமையை 75.72 சதவீதமானோர் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை முன்னேற்றகரமான தன்மை காணப்படுகிறது. 2021ஆம் ஆண்டு உயர்தரத்துக்கான அடிப்படை தகைமையை பெற்றுள்ளவர்களின் வீதம் 74.52 ஆகவும், 2022ஆம் ஆண்டு 74.38 ஆகவும் காணப்பட்டது. முதற் தடவையாக பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 13,309 பேர் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர். 2.12 சதவீதமான பரீட்சார்த்திகள் 9 பாடங்களிலும் சித்திபெறவில்லை. ஆகவே 2022ஆம் ஆண்டை காட்டிலும் 2023ஆம் ஆண்டு பெறுபேறுகளின் வீதம் உயர்வடைந்துள்ளது. மாகாண மட்டத்திலான முன்னேற்றம் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ள 75.72 சதவீதத்தை காட்டிலும் உயர்வான பெறுபேற்றினை 4 மாகாணங்கள் பெற்றுக்கொண்டுள்ளன. தென் மாகாணம் 78.21 சதவீதத்தை பெற்றுக்கொண்டு முன்னிலையில் உள்ளது. கிழக்கு மாகாணம் 77.36 சதவீதத்தையும், மேல் மாகாணம் 77.11 சதவீதத்தையும், சப்ரகமுவ மாகாணம் 76.54 சதவீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன. மாவட்ட மட்டத்திலான முன்னேற்றம் 75.72 சதவீத பெறுபேற்றை காட்டிலும் உயரளவிளவான பெறுபேற்றை 11 மாவட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டம் 81.13 சதவீதத்தையும், மாத்தறை மாவட்டம் 80.57 சதவீதத்தையும், கொழும்பு மாவட்டம் 79.68 சதவீதத்தையும், மட்டக்களப்பு மாவட்டம் 78.86 சதவீதத்தையும், ஹம்பாந்தோட்டை மாவட்டம் 77.92 சதவீதத்தையும், கண்டி மாவட்டம் 76.91 சதவீதத்தையும், கேகாலை மாவட்டம் 76.87 சதவீதத்தையும், காலி மாவட்டம் 76.54 சதவீத்தையும், இரத்தினபுரி மாவட்டம் 76.24 சதவீதத்தையும், மன்னார் மாவட்டம் 76.24 சதவீதத்தையும், கம்பஹா மாவட்டம் 75.81 சதவீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. முதல் 10 நிலைகள் ஒன்பது பாடங்களில் 6 கட்டாய பாடங்களில் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு முதல் 10 நிலைகள் தீர்மானிக்கப்படும். இதற்கமைய இம்முறை முதல் நிலை ஒன்றும், 2 ஆம் நிலைகள் இரண்டும், 4ஆம் நிலைகள் மூன்றும், 7ஆம் நிலைகள் நான்கும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய காலி சங்கமித்தை மகளிர் கல்லூரி மாணவியான ஹிருணி மல்ஷா குமாதுங்க முதல் நிலையை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மியுசியஸ் வித்தியாலத்தின் மாணவி மெத்சலா, குருநாகல் மலியதேவி மகளிர் வித்தியாலய மாணவி விமங்ஸா ஜயநதி ரத்னவீர முறையே இரண்டாம் நிலைகளை பெற்றுக்கொண்டுள்ளனர். நான்காம் நிலையை கொழும்பு விசாகா பாடசாலை மாணவி செஸ்யானி ஜயவர்தன, நுகேகொட அனுலாதேவி வித்தியாலய மாணவி சமோதி பெரேரா, காலி சங்கமித்தை மகளிர் கல்லூரி மாணவி நதுனி பமுதிதா ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர். ஏழாம் நிலையை நுகேகொட அனுலாதேவி பாடசாலை மாணவி நிமநதி வனசரா அதிகாரி, கம்பஹா ரத்னதேவி மகளிர் கல்லூரி மாணவி தக்சரா காவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் கல்லூரி மாணவி தனஞ்சனா விக்கிரமகே ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர். அதேபோல் 7ஆம் நிலையை மாத்தறை ராஹூல வித்தியாலயத்தின் மாணவன் சஷிரான் சமரவிக்கிரம பெற்றுக்கொண்டுள்ளார். முதல் 10 நிலைகளில் 9 நிலைகளை மாணவிகள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வினாத்தாள் மீள்திருத்த விண்ணப்பம் பரீட்சார்த்திகள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க முடியும். https://www.virakesari.lk/article/195080
  3. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி; வெளிவந்த அதிர்ச்சி தகவல் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் பராமரிப்புக்காக மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். இவர்களின் பராமரிப்புக்காக கடந்த 2022ம் ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாய். 2023-ம் ஆண்டு எட்டு கோடிக்கும் அதிகமாகவும், இந்த ஆண்டு 11 கோடிக்கும் அதிகமாக அந்த தொகை வளர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 45 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் பேராசிரியர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இவ்வருடம் ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு தலா இரண்டு கோடியே தொண்ணூற்றொரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவை ஒதுக்கியதாக கூறும் பேராசிரியர், இந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு இருபத்தி எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 273 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகக் கூறும் அத்துகோரள, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஐம்பத்து நான்கு வீதமும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையானது 329 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்கு ஒதுக்கப்பட்ட பணமானது 101 வீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 660 கோடி ரூபாவாகும். 2022 ஆம் ஆண்டில், செலவு 273 கோடியாக பதிவு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 660 கோடியாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையும் 142 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/310064
  4. Published By: VISHNU 30 SEP, 2024 | 03:41 AM மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக தெரிய வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (29) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். பின்னர் குறித்த யுவதி குறித்த பொலிஸ் அதிகாரியிடம் தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார். அதற்கு சார்ஜன்ட் நீங்கள் யார் என்று தமிழில் கேட்க அந்தப் பெண், தன் கையில் இருந்த கடிதம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை பொலிஸ் சார்ஜென்ட்டின் மேசையில் வைத்துவிட்டு மன்னார் பாலம் நோக்கி ஓடியுள்ளார். சம்பவத்தை அவதானித்த பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகரன், குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சந்தேகித்து துரத்திச் சென்றுள்ளார். அப்போது குறித்த பெண் பாலத்தின் பாதுகாப்பு சுவரில் ஏறி கடலில் குதிக்க தயாராகியுள்ளார். அந்தப் பெண் பாலத்தில் குதிக்கத் தயாரான நிலையில் மலலசேகர அந்தப் பெண்ணின் காலைப் பிடித்துக் காப்பாற்றினார். சார்ஜன்டினால் மீட்கப்பட்ட 24 வயதுடைய பெண் மன்னார் பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/195095
  5. சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது - என். சிறீகாந்தா Published By: VISHNU 29 SEP, 2024 | 09:35 PM சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என புன்முறுவலோடு சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார். அவருக்கு நாங்களும் புன்முறுவலோடு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியோடு இணைந்து கூட்டாக செயற்பட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தயாராக உள்ளது. ஆனால் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் கொள்கை ரீதியாகவும், கடந்த கால அனுபவ ரீதியாகவும் பல மனஸ்தாபங்கள் உள்ளன. எதற்காக இணையுமாறு அழைப்பு விடுக்க படுகிறது ? தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியத்துடன் சமரசம் செய்துவைப்பதற்காவா? அல்லது இருக்கின்ற பதவிக் கதிரைகளை பறிபோகவிடாமல் தக்கவைப்பதற்காகவா? அல்லது கடந்தகாலம் போல் ஆட்சியாளர்களுடன் மறைமுக சமரசம் செய்வதற்காக? என்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஒற்றுமை என்பது கொள்கையுடன், குறிக்கோளுடன் இருக்க வேண்டுமானால் நாங்கள் தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, என்பதே தமிழ்த் தேசிய கட்சியின் முடிவு ஆகும். முதலிலே தமிழரசுக் கட்சிக்குள் ஒற்றுமைப்பட முடியாதவர்கள் ஒற்றுமைக்கான அழைப்பை புன்முறுவலோடு விடுப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் செயலாகும். இலங்கை தமிழரசுக் கட்சியோடு இணைந்து வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளோம். அதில் தமிழ்த் தேசிய கட்சியின் முடிவை உறுதியாக தெரிவிப்போம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195089
  6. ஹிஸ்புல்லாவிற்கு தொடரும் பேரிழப்பு : பல முக்கிய தலைவர்கள் பலி : நஸ்ரல்லாவின் உடல் மீட்பு ஹிஸ்புல்லா அமைப்பு தனது மூத்த உறுப்பினர்களில் ஒருவர் சனிக்கிழமை(28) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவின் தடுப்பு பாதுகாப்பு சபையின் தலைவரும் அதன் மத்திய குழுவின் முக்கிய உறுப்பினருமான நபில் கௌக் (Nabil Qaouk)நேற்று தமது விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை முன்னதாக கூறியது. முக்கிய தலைவர்கள் பலி இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தில் ஹசன் நஸ்ரல்லாவைக் கொன்றபோது, பல்வேறு நிலைகளில் உள்ள 20 ஹிஸ்புல்லா தலைவர்களும் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதன்படி அமைப்பின் தெற்கு முன்னணியின் தலைவரான அலி கராக்கியும்(Ali Karaki) கொல்லப்பட்டவர்களில் அடங்குவார். அத்துடன் நஸ்ரல்லாவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவரான இப்ராஹிம் ஹுசைன் ஜாஜினி(Ibrahim Hussein Jazini) மற்றும் "நஸ்ரல்லாவின் நீண்டகால நம்பிக்கைக்குரியவர் மற்றும் ஆலோசகர்" என்று இஸ்ரேல் படைத்துறை விவரிக்கும் சமீர் தவ்பிக் திப்(Samir Tawfiq Dib) ஆகியோரையும் கொன்றதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நஸ்ரல்லாவின் உடல் மீட்பு ஹிஸ்புல்லாவின் தலைமையகம் பொதுமக்களின் கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் வான் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஹசன் நஸ்ரல்லாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆதாரம் மற்றும் பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, அவரது உடலில் "நேரடி காயங்கள்" இல்லை என்று ரொய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. https://ibctamil.com/article/20-other-senior-hezbollah-figures-killed-1727622067
  7. உதயநிதி ஸ்டாலின்: திமுகவின் அடுத்த வாரிசா? சீனியர்களின் நிலை என்ன ஆகும்? பட மூலாதாரம்,FACEBOOK/UDHAYANIDHISTALIN படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் அமைச்சரவையில் புதிதாக நான்கு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். உதயநிதியைச் சுற்றி கடந்த சில மாதங்களாகப் பேசப்பட்டு வந்த துணை முதலமைச்சர் சர்ச்சை ஓய்ந்தாலும் கட்சி மற்றும் ஆட்சியில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்த பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. இதனால் அரசியல்ரீதியாக தி.மு.க-வுக்கு பாதிப்புகள் ஏற்படுமா? 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் உதயநிதியை முன்னிறுத்துவதில் தி.மு.க., தலைமை அவசரம் காட்டுகிறதா? சென்னை ராஜ்பவனில் ஞாயிறு அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கோவி.செழியன், ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ளனர், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். முன்னதாக, 28ஆம் தேதி (சனிக்கிழமை) இரவில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதிய அமைச்சரவையில் நான்கு பேர் சேர்க்கப்படுவது குறித்தும் மூன்று பேர் நீக்கப்படுவது குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாடு அமைச்சரவையில் பொன்முடி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ராஜ கண்ணப்பன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டதைவிட, உதயநிதியின் துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்த விவாதங்களே பேசுபொருளாக மாறியுள்ளன. "உதயநிதியை அதிகார மையமாக முன்னிறுத்துவதன் மூலம் கருணாநிதி காலத்தில் இருந்து தற்போது வரை கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள சீனியர்களின் எதிர்காலம் என்னவாகும்?" என்ற கேள்விகளும் எழுந்தன. இதற்கான விளக்கத்தையும் உதயநிதி கொடுத்திருக்கிறார். ஞாயிறு அன்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன்" எனக் கூறினார். தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை" என்றார். 'ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த வாரிசு' பட மூலாதாரம்,FACEBOOK/UDHAYANIDHISTALIN படக்குறிப்பு, சென்னை ராஜ்பவனில் ஞாயிறு அன்று நடைபெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க-வின் 2006-2011 ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, துணை முதலமைச்சராக ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டார். இதன்மூலம் தி.மு.க-வின் அடுத்த அதிகார மையமாக அவர் அறியப்பட்டார். அதேநேரம், இளைஞரணிச் செயலாளராக தி.,மு.க-வுக்குள் வந்த ஐந்தே ஆண்டுகளில் துணை முதலமைச்சராக உதயநிதி முன்னிறுத்தப்பட்டிருப்பது அரசியல்ரீதியான விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது. "துணை முதலமைச்சர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அதில் பத்து சதவீதம் அளவுக்குக்கூட உதயநிதி மெனக்கெடவில்லை. காலம் அவரை இயல்பாகவே அந்த இடத்தை நோக்கி நகர்த்திச் சென்றது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன். "தி.மு.க என்ற கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்த வாரிசாக உதயநிதியை அறிவித்துவிட்டார்கள். தி,.மு.க., நாளேடான முரசொலியில் அக்கட்சியினர் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தால், ஸ்டாலினுக்கு அடுத்ததாக உதயநிதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சில விஷயங்களைச் சொல்கிறது" என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் எஸ்.பி.லட்சுமணன். அரசியல் வாரிசுகள் வளர்க்கப்படுகிறார்களா? பட மூலாதாரம்,S.P. LAKSHMANAN படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் அதிகார மையத்தை நோக்கி உதயநிதியை சிறிது சிறிதாக தி.மு.க தலைமை நகர்த்தி வருவதாகக் கூறும் லட்சுமணன், "உதயநிதியின் இந்த உயர்வை கட்சிக்குள் ரசிக்காதவர்கள்கூட எதிர்ப்பைக் காட்டுவதற்கு தயங்கும் சூழல்தான் தி.மு.க-வில் இருக்கிறது. யாருக்கும் அவ்வளவு துணிச்சல் இல்லை" என்கிறார். அதேவேளையில், வாரிசு அரசியல் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும், கட்சி மற்றும் ஆட்சிக்குள் உதயநிதியின் "உழைப்பையும் கவனிக்க வேண்டும். கட்சி நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணம் என உரிய பங்களிப்பை அவர் கொடுத்திருப்பதாக" மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணணன் குறிப்பிடுகிறார். வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் கட்சியாக தி.மு.க உள்ளதாகவும் உதயநிதியை துணை முதலமைச்சராக முன்னிறுத்துவதன் மூலம் மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன். தி.மு.க., அமைச்சரவையில் சீனியர்களின் வாரிசுகளாக தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் ஆகியோர் உள்ளதாகக் கூறும் மாலன், "இந்தி எதிர்ப்புப் போராட்டம், மிசா சட்டம் போன்ற நிகழ்வுகளில் துன்பங்களை எதிர்கொண்ட தி.மு.க-வினருக்கு உரிய பதவிகள் கிடைக்கவில்லை" என்கிறார். "துணை முதல்வர் பதவிக்கு அரசமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக தார்மீகரீதியாக உதயநிதியை முன்னிறுத்துவதன் மூலம் அதிகாரத்துக்கும் ஊழலுக்கும் வழிவகுப்பதாகவே முடியும்" எனக் கூறுகிறார் அவர். தி.மு.க சொல்லும் விளக்கம் என்ன? பட மூலாதாரம்,MAALAN படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் மாலன் இதை மறுத்துப் பேசும் தி.மு.க செய்தித்தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், ஜம்மு காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை வாரிசு அரசியல் உள்ளதாகக் கூறுகிறார். "ஓர் இயக்கத்துக்காகப் பாடுபடக்கூடிய அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொடுக்க முடியாது. சட்டமன்றத்தில் உள்ள 234 எம்.எல்.ஏக்களும் அப்பா-மகன் இல்லை. இது முழுக்க முழுக்க மக்கள் தீர்மானிக்கக் கூடிய விஷயம்," என்கிறார் அவர். ஸ்டாலின் மகனாக இருப்பதால் உதயநிதியின் துணை முதல்வர் பதவி விமர்சிக்கப்படுவதாகக் கூறும் கான்ஸ்டன்டைன், "இந்தப் பதவியை இன்னொருவருக்குக் கொடுத்தால் நடக்கும் பணிகளைவிட உதயநிதியிடம் கொடுத்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என நினைக்கிறோம்" என்கிறார். "தி.மு.க தலைமை நினைத்திருந்தால் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தி, தேர்தலை சந்திக்காமலேயே உதயநிதியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும். அவர் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றார். ஓராண்டுக்குப் பிறகே அமைச்சர் ஆனார்" என்கிறார் கான்ஸ்டன்டைன். ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியைத் தருவதற்கு கருணாநிதி காலம் தாழ்த்துவதாகக் கூறி விமர்சித்தவர்கள்தான், இப்போது உதயநிதி முன்னிறுத்திப்படுவதையும் விமர்சிப்பதாகக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன். மேலும், தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, ஃபார்முலா 4 பந்தயம் என மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை உதயநிதி நடத்திக் காட்டியதாகவும், அவருக்குப் போதுமான தகுதிகள் இருப்பதால் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பா? பட மூலாதாரம்,CONSTANTINE படக்குறிப்பு, தி.மு.க செய்தித்தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் அதேநேரம், 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தியே தற்போது தி,மு.க தலைமை செயல்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், "2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தினாலும் அதனால் எந்த பாதிப்பும் தி.மு.க-வுக்கு ஏற்படப் போவதில்லை" என்றார். "மக்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு இடையூறு ஏற்படாதவரை மற்ற பிரச்னைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை." மாலனை பொறுத்தவரை, உதயநிதியை முன்னிறுத்துவது என்பது மக்களை நேரடியாக பாதிக்கக் கூடிய விஷயம் இல்லை. சீமான், விஜய் போட்டியை சமாளிக்க முடியுமா? ஆனால், இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன், 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தி தி.மு.க., தேர்தலை எதிர்கொண்டால் அது தவறாக முடியவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்தார். எஸ்.பி.லட்சுமணனின் கூற்றுப்படி, 2026 தேர்தல் களம், ஸ்டாலினா அல்லது மற்றவர்களா என்பதாகவே இருக்கப் போகிறது. "நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட வரும்போதோ, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக சீமான் களமிறங்கும்போதோ அவர்களுக்கு எதிராக உதயநிதியை மட்டுமே முன்னிறுத்த முடியாது." உதயநிதி அந்த இடத்திற்கு இன்னும் வளரவில்லை எனக் குறிப்பிடும் அவர், "எதிர்காலத்தில் வேண்டுமானால் அப்படியொரு போட்டி வரலாம்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62d0x1r0xko
  8. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள் புதிய இணைப்பு 2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், அதிகஸ்ட பாடசாலையான வவுனியா - சின்னடம்பன் வித்தியாலய மாணவர்கள் இம்முறை வரலாற்றில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறு இதன்படி, குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் செந்தில்குமரன் தமிழருவி என்ற மாணவி 7A, B, C என்ற பெறுபேற்றைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அத்துடன், இந்த பாடசாலையின் ஏனைய மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், நவரத்தினம் அகலியா - 3A, 3B, 2C, S பெறுபேற்றையும், விவேகானந்தராசா பாவரசன் - A, 3B, 3C, 2S பெறுபேற்றினையும், சிவகுமார் சாருஜன் - A, 3B, 4C, S பெறுபேற்றினையும், வசந்தகுமார் கிந்துஷா - B, 4C, 4S பெறுபேற்றையும், திருச்செல்வம் நிலாயினி - 3B, 2C, 3S பெறுபேற்றையும் அன்ரன் செல்வகுமார் சன்சிகா - 2B, 3C, 3S பெறுபேற்றையும் பெற்றுக் கொண்டுள்ளனர். முதலாம் இணைப்பு 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய (Vavuniya Tamil Madhya Maha Vidyalayam) வரலாற்றில் முதல் தடவையாக இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார். சாதனை படைத்த மாணவர்கள் இந்தப் பாடசாலை மாணவர்கள் கடந்த காலங்களிலும் அதிகளவான பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சாதாரண சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிலும் 28 மாணவர்கள் விசேட சித்திகளையும் 18 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் விசேட சித்தியையும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் இம்முறை அதிகளவான மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/o-level-exam-results-2024-in-vavuniya-district-1727588633#google_vignette
  9. சுமந்திரனின் அழைப்பு அமைவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒருபோதும் இணையமாட்டேன் - சி.வி.விக்கினேஸ்வரன் Published By: VISHNU 29 SEP, 2024 | 07:28 PM சுமந்திரனின் அழைப்பு அமைவாக தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், 'அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் அதற்கு அனுசரணை தருவதாக அமைந்திருந்தனவா என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும். சுயநலவாதிகளைக் களைந்து உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒன்றிணைக்க முன்வரவேண்டும். ஆகவே நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்புக்கள் இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் என்றென்றும் ஒன்று சேராது' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'வாரம் ஒரு கேள்வி' பகுதியில், 'சுமந்திரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை திரும்ப அழைத்துள்ளார். நீங்களும் தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலில் நிற்பது அவசியம் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் சேரும் வாய்ப்புக்கள் உள்ளதா?' என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கட்சிகளோ, கூட்டுக்களோ, சின்னங்களோ தமிழ்த் தேசியத்திற்கு முக்கியமல்ல. தமிழ்த்தேசிய சிந்தனை உடையவர்களே முக்கியம். அண்மையில் தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த் தேசிய சிந்தனையுடைய அரியநேத்திரனை 7 தேசியக் கட்சிகளும் 80 சிவில் சமூகத்தினரும் சேர்ந்து ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடுத்தினார்கள். நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் இதற்கென வெளியில் வந்து பலவிதங்களில் அரியநேத்திரனுக்கு உதவினேன். பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை போன்ற இடங்களில் கூட்டங்களில் பேசினேன். கொழும்பில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில் பேசினேன். கட்டமைப்பு பற்றிய பல கேள்விகளுக்குப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும், வெளிநாட்டு ஊடகங்களிலும் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதில் இறுத்தேன். ஆனால் அரியநேத்திரனை முன்னிறுத்திய பின்னர் எமது ஏழு கட்சிகளில் அவர் சார்பாக வெளிப்படையாக வெளியே வந்து தமது ஆதரவைத் தெரிவித்தவர்கள் எத்தனை பேர்? பலர் இக்காலகட்டத்தில் காணாமல்போய்விட்டார்கள். ஒரு வைத்தியசாலையில் இருந்து நவீன பரிசீலனைகளை மேற்கொள்ள என்னை மற்றொரு வைத்தியசாலைக்கு அனுப்பியபோது இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நியமன நாளன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் அரியநேத்திரனுடன் நானும் சிற்பரனும் ஒன்றிணைந்து செயற்பட்டோம். சிரமம் பாராமல் நாம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்குக் காரணம் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் வேட்பாளர் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காகவே ஆகும். இவ்வாறான ஆதரவையும் அனுசரணையையும் குத்து விளக்கை மையமாக வைத்து செயற்பட்டுவரும் கட்சிகளிடையே நாங்கள் காணவில்லை. அவர்களின் மனோநிலையைப் புரிந்துகொண்டதால் தான் நாங்கள் அவர்களின் கூட்டில் இருந்து வெளியேறி வந்தோம். அதேபோல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு அணியின் தலைவர் தமிழ்த் தேசியத்தைப் புறக்கணித்து ஒரு சிங்கள வேட்பாளருடன் சேரவேண்டும் என்றே ஒற்றைக் காலில் நின்றார். அவர் தமிழ்த் தேசிய வேட்பாளரை எதிர்த்தார். தமிழ்த் தேசியப் பற்றாளரான சிறிதரன் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பார்க்கும் இந்நபர் எவ்வாறு எம்மை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சேர அழைக்கலாம்? அழைத்தாலும் அவரின் உள் எண்ணம் பற்றி சந்தேகம் எழுகின்றது. தமிழ்த்தேசியத்தை உதட்டளவில் பாவிக்கப் பார்க்கின்றாரோ நானறியேன். மூன்றாவதாக பகிஷ்கரிப்பு அணியினர் சிங்கள வேட்பாளரை பகிஷ்கரிப்பதாகக்கூறி கடைசியில் தமிழ்த்தேசிய வேட்பாளரையும் பகிஷ்கரித்தனர். இவர்கள் யாவரும் தமிழ்த்தேசியத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட சுயநல காரணங்களே அவர்களை இயக்கி வருவதாக நான் உணர்கின்றேன். எம் தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரையில் முதியவர்கள் நாம் பின்னின்று இளைஞர் யுவதிகளை முன்னிறுத்தித் தமிழ்த்தேசியப் பாதையில் அவர்கள் பயணிக்க வழிவகுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். சிலர் ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி ஒற்றுமை ஏற்படுத்த முனையலாம். ஆனால் அவர்களின் சிந்தனை தமிழ்த்தேசியத்தின் பாற்பட்டதா அல்லது சொந்த சுயநலத்தின் பாற்பட்டதா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறானவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள் என்று கூறுவது தமிழ்த் தேசியத்துக்காக அல்ல. சுயநல காரணங்களுக்காகவே ஆகும். அரியநேத்திரனின் சின்னத்தை சிலர் தமக்குப் பெற்றவுடன் தாமும் அரியநேத்திரனாக உருமாற்றம் பெற்றுவிடப்போவதாகக் கற்பனை செய்து கொள்ளக்கூடாது. உதயசூரியனை சின்னமாக முன்பு எடுத்தவர்கள் தாம் தேர்தலில் வெற்றி பெறப்போவதாகக் கற்பனை செய்தார்கள். ஆனால் எமது தமிழ் வாக்காளர்கள் அந்தச் சின்னத்துக்குப் பதில் குறித்த சின்னத்தில் கேட்டவர்களையே அடையாளம் கண்டு அவர்களைப் புறக்கணித்தார்கள். சின்னம் பெற்றால் சுயநலவாதிகள் பொதுநலவாதிகளாக மற்றும் தமிழ்த்தேசியப் பற்றாளர்களாக உடனே மாறிவிடுவார்கள் என்று நினைப்பது மடமை. ஆகவே ஒற்றுமை வேண்டும்; நாம் ஒன்றுபட வேண்டும். இளைஞர், யுவதிகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும். தமிழ்த்தேசியத்தை முழுமனதுடன் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் எந்தவித முரணான கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் அதற்கு அனுசரணை தருவதாக அமைந்திருந்தனவா என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும். சுயநலவாதிகளைக் களைந்து உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒன்றிணைக்க முன்வரவேண்டும். ஆகவே நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்புக்கள் இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் என்றென்றும் ஒன்று சேராது. வேண்டுமெனில் தமிழ்த் தேசியத்தில் உண்மையில் ஈபட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் பலர் எம் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில் சேர்ந்து பயணிக்க முடியும். https://www.virakesari.lk/article/195083
  10. வச்ச குறி தப்பாமல் நஸ்ரல்லாவை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் ..! கடந்த வெள்ளிக்கிழமை லெபனான்(lebanon) தலைநகர் பெய்ரூட்டிற்கு தெற்கே இஸ்ரேல்(israel) நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இவ்வாறு ஹிஸ்புல்லா தலைவர் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் எப்படி நடத்தியது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஈரான் நாட்டு உளவாளியின் துல்லியமான தகவல் இதன்படி ஈரான்(iran) நாட்டைச் சேர்ந்த தமது உளவாளி அளித்த உறுதியான தகவலை வைத்துக் கொண்டே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. முன்னதாக ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே மீதான தாக்குதலுக்கும் ஈரானிய உளவாளியே காரணமென தகவல்கள் தெரிவித்த நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மீதான தாக்குதலுக்கும் ஈரானிய உளவாளியே தகவலை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. கூட்டமொன்றில் பங்கேற்கவுள்ள நஸ்ரல்லா இதன்படி பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா படைகளின் கட்டளை மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹஸன் நஸ்ரல்லா கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார் என்பதை ஈரானிய உளவாளி இஸ்ரேல் தரப்புக்கு தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்தில் ஹிஸ்புல்லா உட்பட முன்னணி தலைவர்கள் பலர் கலந்துகொள்ள இருப்பதையும் அந்த உளவாளி இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே இஸ்ரேல் இந்த துல்லிய தாக்குதலை நடத்தி நஸ்ரல்லா உட்பட ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை கொன்று குவித்துள்ளது. https://ibctamil.com/article/assassination-of-hezbollah-leader-nasrallah-1727617278#google_vignette
  11. 29 SEP, 2024 | 07:06 PM இலங்கை கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (28) ஊடகங்களை சந்தித்தபோதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சருக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 2016ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை படித்துப் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் இழுவை மடி தொழிலை செய்வதாக நிறுத்துவதா என்ற நிலைக்கு வர முடியும். எமது நாட்டிலே உள்ள கடற்படையையும் அரசாங்கத்தையும் குறை சொல்வதை விட்டுவிட்டு வெளிநாட்டு அமைச்சு இணையதளத்தில் இருக்கின்ற அந்த சட்டத்தை படித்துவிட்டு அதற்கு தகுந்தாற் போல் செயல்பட வேண்டுமே தவிர, தமிழ்நாட்டு மீனவர்களை காலத்திற்கு காலம் ஏமாற்றுவதை போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் ஒரு கவலைக்குரிய விடயம். இதனை அறியாத தமிழ்நாட்டின் மீனவர்களும் உங்களை நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றார்கள் என்றார். https://www.virakesari.lk/article/195067
  12. சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு பரீட்சைக்கு முன்னர் கசிந்ததாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் சித்திகளை வழங்குவதே சிறந்த மாற்றாக முடிவாக எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்க கல்விக்கு பொறுப்பான பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பொருத்தமான தெரிவு அதன்படி, மீண்டும் தேர்வை நடத்துவது, 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மன நிலையில் கடுமையான பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் நீதி வழங்குவது இன்றியமையாதது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவர்களுக்கும் பரீட்சைக்கு முன்னர் கசிந்த மூன்று வினாக்களுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாகக் கருதி மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில், குறித்த பரிந்துரைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு இதன் போது அறிவித்துள்ளது. https://ibctamil.com/article/solution-to-examination-grd-05-scholarship-problem-1727615269
  13. இந்தியா: 48 மருந்துகள் தரமற்றவை என வெளியான அறிக்கை - நீங்கள் அச்சப்பட வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பாராசிடாமல், பேன் டி, க்லைசிமெட் உள்ளிட்ட 48 மருந்துகள் உரிய தரத்தில் இல்லை என்று தனது மாதாந்திர பட்டியலில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உரிய தரத்தில் இல்லாத மருந்துகளின் பட்டியலை வெளியிடும். ஆகஸ்ட் மாதத்துக்கான பட்டியலில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாராசிடாமல், பேன் டி உள்ளிட்ட 48 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் ஃபார்மசிடிக்கல்ஸ் தயாரிக்கும் பாராசிடாமல் ஐபி 500 மிகி, அல்கெம் ஹெல்த் சையின்ஸ் தயாரிக்கும் பேன் டி, ப்யூர் அண்ட் க்யூர் தயாரிக்கும் மாண்ட்யர் எல்.சி.கிட், ஸ்காட்-எடில் ஃபார்மாசியா தயாரிக்கும் க்லைசிமெட் உள்ளிட்ட 48 மருந்துகள் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் உரிய தரத்தில் இல்லை (NSQ – Not of Standard Quality) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. சன் ஃபார்மா, டோரன்ட் உள்ளிட்ட முன்னணி மருந்து நிறுவனங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மருந்துகளை “கள்ளப் பொருட்கள்” என்றும், அவற்றைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளன. ‘உரிய தரத்தில் இல்லை’ என்றால் என்ன? NSQ என்று வகைப்படுத்தப்படும் மருந்துகளைத் தயாரிப்பவர்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் (சட்டத்திருத்தம்) 2008இன் (Drugs and Cosmetics Act Amendment 2008) கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை வழங்கப்படலாம். அதேபோன்று, குறைந்தது பத்து லட்சம் அல்லது, கைப்பற்றப்பட்ட மருந்துகளின் மதிப்பைவிட மூன்று மடங்கு பணம் - இவற்றில் எது அதிகமான தொகையோ அதை அபராதமாக வசூலிக்கலாம். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில், அமாக்சிலின் மற்றும் பொடாசியம் க்லாவுலனேட் மாத்திரைகள் ஐபி (க்லாவம் 625), அமாக்சிலின் மற்றும் பொடாசியம் க்லாவுலனேட் மாத்திரைகள் (மெக்ஸ்க்லாவ் 625), பாண்டப்ரசோல் -டோம்பெரிடோன் காப்ஸ்யூல் ஐபி (பேன் டி) ஆகியவற்றின் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி மருந்துகள் எனப்படுபவை ஒரு தயாரிப்பின் உண்மையான அடையாளத்தை மறைத்து, மற்றொரு மருந்து போல விற்கப்படுபவையாகும். இந்தப் பட்டியலில் உள்ள பிற மருந்துகள் அதன் உள்ளடக்கங்கள், dissolution-அதாவது அந்த மருந்து உடலில் எவ்வாறு கரைந்து உட்கொள்ளப்படுகிறது மற்றும் அதன் தோற்றத்தில் விரிசல் போன்ற புகார்களுக்காக உரிய தரத்தில் இல்லை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படபடம் இந்த மருந்துகளைப் பரிசோதித்தபோது, அவை எந்தத் தொகுப்பில் தயாரிக்கப்பட்டனவோ அந்தக் குறிப்பிட்ட தொகுப்பிலிருந்து விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் சந்தைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் மருந்துகள் உரிய தரத்தில் இல்லை என்ற செய்தி பொதுமக்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “நான் 10 வருடங்களாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடுகிறேன். உரிய தரத்தில் இல்லை என்றால், நான் எப்படி தினமும் உட்கொள்வது என்று தெரியவில்லை” என்கிறார் சென்னை கொளத்தூரில் வசிக்கும் சங்கரன். “பாராசிடாமல் மாத்திரையைப் பல நேரங்களில் மருத்துவர் பரிந்துரை இல்லாமலே எடுத்துக் கொள்கிறோம். அப்படிச் செய்வது தவறு என மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மாத்திரையே பாதுகாப்பானதாக இல்லையென்றால் என்ன செய்வது?” என்று கேட்கிறார் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த உஷாராணி. பதற்றம் வேண்டாம், எச்சரிக்கை தேவை ஆனால் மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககமும் மருந்து வணிகர்களும் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பரிசோதனைகள் வழக்கமான ஒன்று எனக் கூறும் அவர்கள், இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விளைவுகள் ஏதும் இல்லை என்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் ஸ்ரீதர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தப் பட்டியல் குறித்த தகவல் கிடைத்தவுடன், தமிழ்நாட்டில் சில்லைறை, மொத்த மருந்து வியாபாரிகளிடம், மருத்துவமனை மருந்தகங்கள் எனப் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், இந்த மருந்துகள் தமிழ்நாட்டு சந்தைகளில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம்” என்றார். மருந்து தயாரிப்பில் ஏற்படும் சிற்சில தவறுகள் காரணமாக அவை உரிய தரத்தில் இல்லை என்று வகைப்படுத்தப்படுவதாகவும், இது போன்ற கெடுபிடிகள் இந்தியாவின் மருந்துகளை மேலும் தரமானதாக மாற்ற உதவும் என்றும் கூறுகிறார் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் எஸ் ஏ ரமேஷ். “ஐந்து விநாடிகளில் வாயில் கரையும் என்று கூறப்பட்ட மருந்து ஆறு விநாடிகள் எடுத்துக் கொண்டால் அது தரத்தில் குறைபாடாகக் கருதப்படும்” என்கிறார். ஆனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறார் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பொது மருத்துவராக இருக்கும் அஷ்வின். “சில மருந்துக் கடைகள் 80% வரை விலையைக் குறைத்துத் தருகின்றன. ஒரு பொருளின் விலை ரூ.100 என்றால் எப்படி ஒருவரால் ரூ.20க்கு தர முடியும். நிறைய இடங்களில் காலாவதியாவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போது மருந்தைக் குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்கி, விற்கிறார்கள். மருந்துகளை முறையாக பேக்கிங் செய்யாவிட்டால், முறையாக சேமித்து வைக்காவிட்டால், காலாவதி காலத்தை நெருங்கும்போது அதன் செயலாற்றும் திறன் குறைந்துவிடும். சில நேரம் ஐவி மருந்துகளில் பாக்டீரியாக்கள் தங்கிவிடும்,” என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இன்சுலினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும்போது 6 டிகிரி செல்சியஸ்-இல் வைக்க வேண்டும் எனவும், பலரும் அப்படிச் செய்வதில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறார் அஷ்வின். எனவே தனது நோயாளிகளை இன்சுலின் மருந்தை ஆன்லைனில் வாங்க வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 346 மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்கு 38,128 சில்லறை மருந்துக் கடைகள் உள்ளன. மொத்த வியாபாரிகள் 12,158 பேரும், சில்லறையுடன் சேர்த்து மொத்த வியாபாரம் செய்பவர்கள் 4927 பேரும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் எடுக்கப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதில் 20 முதல் 25 மருந்துகள் உரிய தரத்தில் இல்லை எனத் தெரிய வருவதாக தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாடு இணை இயக்குநர் ஸ்ரீதர் கூறுகிறார். “ஒரு மருந்து உரிய தரத்தில் இல்லையென்று தெரிந்தவுடன், அது எங்கிருந்து வந்தது என்று விசாரணை செய்து மருந்தின் மொத்த வியாபாரி மற்றும் உற்பத்தியாளரைக் கண்டறிவோம். அதற்கும் முன்பாக அந்த மருந்துகளைக் கடைகளில் இருந்து அகற்றிட உத்தரவிடப்படும். அனைத்து, மருந்தகங்களில் இருந்தும் அந்த மருந்து நீக்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் உற்பத்தியாளரைக் கண்டறிந்த பின் தவறு தயாரிப்பின் எந்தக் கட்டத்தில் நடைபெற்றது என்பதைக் கண்டறிவோம். பிறகு தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அதற்கான விளக்கம் கேட்கப்படும். ஒரு நிறுவனம் மீண்டும் மீண்டும் தவறு செய்தால், அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும். தரமில்லாத மருந்து கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ள அதிகாரிகள் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் பிரிவு 18-இன் கீழ் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார். ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால் தரமற்ற மருந்துகள் சந்தையில் அதிகரிப்பதாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் நட்ராஜ் கூறுகிறார். “ஆன்லைன் மூலம் விற்கும்போது காஷ்மீரில் இருக்கும் ஒருவர் தமிழ்நாட்டில் மருந்துகளை விற்க முடியும். அவை உரிய தயாரிப்பாளரிடம் இருந்து பெறப்பட்டதா என்பதை யாரும் உறுதிப்படுத்துவதில்லை” என்கிறார் அவர். தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு தற்போது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவிக்கிறது. மாதந்தோறும் எடுக்கப்படும் மருந்து மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. “மாநிலத்தில் 146 மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் மாதத்துக்கு 8 மாதிரிகளை எடுத்து வந்தனர். சில்லறைக் கடைகளில், மொத்த வியாபாரிகளிடம், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் எனப் பல்வேறு இடங்களில் இருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்படும். தற்போது மாதத்துக்கு பத்து மாதிரிகள் எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இணை இயக்குநர் ஸ்ரீதர். தரமான மருந்துகளை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES உரிய தரத்தில் இல்லையென்று வகைப்படுத்தப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுதல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர் சந்திரசேகர் தரமான மருந்துகளைத் தெரிந்துகொள்ளச் சில வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கூறுகிறார். அவை, உரிய உட்பொருட்கள் இல்லாத பாராசிடாமல் எடுத்துக்கொண்டால் அது காய்ச்சலை, உடல் வலியைப் போக்காது. தரமில்லாத மருந்துகளை நீண்டகாலத்துக்கு உட்கொண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். சர்க்கரை , ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு நாள்தோறும் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறை அணுகிக் கொள்வது நல்லது. கடைகளில் மருந்து வாங்கும்போது அதில் ISO (International Organisation for Standardization) அல்லது WHO-GMP (World Health Organisation Good Manufacturing Practices) என்ற அடையாளம் இருந்தால் அது தரத்துக்கான அறிகுறியாகும். காலாவதியாவதற்குச் சில நாட்களே மீதமிருக்கும் நிலையில் மருந்துகளை வாங்க வேண்டாம். ஊசிகள், இன்சுலின் போன்றவற்றை வாங்கும் கடைகளில் உரிய குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்கலாம். மருந்து நிறுவனங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் சன் ஃபார்மா, டோரன்ட் உள்ளிட்ட முன்னணி மருந்து நிறுவனங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மருந்துகளை “கள்ளப் பொருட்கள்” என்றும், அவற்றைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளன. சன் ஃபார்மாவின் செய்தித் தொடர்பாளர், “தங்கள் நிறுவனம் இந்த விஷயத்தை விசாரித்து, புல்மோசில் (சில்டெனாபில் ஊசி), தொகுதி எண் KFA0300; பான்டாசிட் 300 (உர்சோடியோசைகோலிக் அமில மாத்திரைகள் ஐபி), தொகுதி எண் GTE1350A ஆகியவை போலியானவை,” என்று கூறியுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் நிறுவனம் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், “தங்களுடைய சில முன்னணி மருந்து பிராண்டுகள், இப்போது லேபிளில் க்யூ.ஆர் கோட் குறியீடுகள் அச்சிடப்பட்டுள்ளன, நோயாளிகள் அவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களின் நம்பகத்தன்மையை எளிதாகச் சரிபார்க்க முடியும்,” எனவும் சன் ஃபார்மா தெர்வித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் சேகரிக்கப்பட்ட மாதிரியின் உண்மையான தன்மையைச் சரிபார்க்க, ஷெல்கால் 500இன் அதே தொகுப்பை மதிப்பீடு செய்ததாகவும், டோரன்ட் ஃபார்மா நிறுவனம் கூறியிருப்பதாகவும், அவை உண்மையல்லாத போலி மருந்துகள் எனத் தெரிய வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கள்ள மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கையாக, தங்கள் நிறுவனம் ஷெல்காலில் க்யூ.ஆர் குறியீடுகளைச் செயல்படுத்தியுள்ளதாகவும், அதன்மூலம் மருந்திதின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்துக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ள டோரன்ட் ஃபார்மா, அந்தக் குறியீடுகள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் கைப்பற்றப்பட்ட மாதிரியில் இல்லாதது கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஒரு மதிப்பீட்டு அறிக்கையுடன் முறையான பதிலைச் சமர்ப்பித்துள்ளதாகவும் டோரன்ட் ஃபார்மா நிறுவனம் கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9qvy4l7xylo
  14. 29 SEP, 2024 | 05:31 PM நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு யுத்தத்துக்குமான காரணகாரியங்களை கண்டறிந்து, நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்நாட்டின் மீதான இதர தலையீடுகளை இல்லாமற்செய்து, தேசத்தை அபிவிருத்தி நோக்கி கட்டியெழுப்ப முடியும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியிடம் எட்டு கோரிக்கைகளை கடிதம் மூலம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் முன்வைத்துள்ளனர். அந்த கடிதத்திலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவானது, மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களினதும் துணிகரமான தீர்மானம் ஆகும். அந்த வகையில், ஊழலற்ற ஒரு தேசத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துகின்ற முகவரியோடு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கையேற்றிருகின்ற கௌரவ ஜனாதிபதியாகிய தங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றுக் கொள்கின்றோம்! மக்களதிகாரத்தின் ஊடாக ஆணை பெற்று அரச தலைவராக பதவியேற்றிருக்கின்ற தங்களுக்கு, சமூக பொருளாதார ரீதியில் சிதைவடைந்துள்ள இந்நாட்டை துரிதமாக சீரமைக்கும் தலையாய கடமைப் பொறுப்பு இருப்பதை தாங்கள் நன்கறிவீர்கள். இந்த நாடு இந்நிலையை சந்திப்பதற்கு அடிப்படை காரணமாக அமைவது நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையும் அதனுடான யுத்தமும்தான். இவற்றுக்கான காரணகாரியங்களை கண்டறிந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் இந்நாட்டின் மீதான இதர தலையீடுகளை இல்லாது செய்து தேசத்தை அபிவிருத்தி நோக்கி கட்டியெழுப்ப முடியும். அதுவே காலத்தின் தேவையும் கூட. அந்த வகையில், பல்லின கலாசார பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் ஒரு பூர்வீக இனமான தமிழ் மக்கள் தமது தாய் நிலத்தில் சம உரிமையுடனும் சமூக அந்தஸ்துடனும் வாழ்வதற்காக தசாப்தங்கள் பல கடந்தும் இன்று வரை போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது தாங்கள் அறிந்த விடயமே. ஆண்டாண்டு காலங்களாக அதிகாரக் கதிரையேறும் எந்த ஒரு அரச தலைவரும், தமிழ் மக்கள் தமது நியாயமான வாழ்வுரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு வழிவகுத்ததில்லை. மாறாக, எமது கோரிக்கைகளை பிரிவினை வாதமாகவும் பயங்கரவாதமாகவும் சித்திரித்து சகோதர சிங்கள மக்கள் மத்தியில் இனவெறுப்பினை தோற்றுவித்ததுடன், அதிகார பலம் கொண்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி புரிந்து தத்தமது சுயலாபத்தை அனுபவித்துக்கொண்டதே இதுநாள் வரலாறாக இருந்து வருகிறது. இதனால்தான் ஒட்டுமொத்த நாடும் அழிவுப் பாதைக்குள் அமிழ்ந்து போனது. எனினும், தமிழ் மக்கள் மீள் நிரப்ப முடியாத பல்வேறு பேரழிவுகளுக்கு ஆளானவர்களாக இன்று வரை அடையாளப்பட்டு நிற்கிறார்கள். எனவே, மாற்றத்தின் ஊடாக நாட்டை முன்னேற்றும் ஒரு கதாநாயகனாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் ஜனாதிபதியாகிய தாங்கள், தமிழ் மக்களது பிரச்சினைகளை ஆராய்ந்து நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கு வழி வகுப்பீர்கள் என நம்பிக்கை கொள்கின்றோம். அதன் அடிப்படையில், 1. தமக்கென நிலம், மொழி, கலாசாரம், பண்பாடு எனும் தனித்துவ அடையாளங்களுடன் கூடிய ஒரு பூர்வீக இன மக்கள் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் தன்னடையாளங்களுடன் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய ஏதுச் சூழலை உறுதிப்படுத்த வேண்டும். 2. தனிமனித உரிமைகளை தடுத்தாள்கின்ற வகையில் செரிவூட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக அகற்றப்பட வேண்டும். 3. தமிழ் சமூகத்தின் பெயரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், ஏதேனுமொரு பொறிமுறையூடாக காலதாமதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். 4. தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட போரின் பங்காளிகளாக இருந்து புனர்வாழ்வு என்ற பெயரில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் உட்பட சிறைகளிலிருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரம் அவர்களின் உடல், உள மேம்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 5. போரின் பெயரில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் கதி அறியாது பல வருடங்களாக தெருப்போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கின்ற தாய்மார்களின் கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நியாயமான நிரந்தர தீர்வை தர வேண்டும். 6. போரின் பெயரில் உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துகின்ற அடிப்படை மனிதநேய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் ஊடாக மனக்காயங்களுக்கு ஆளாகியிருக்கின்ற மக்களை உள ரீதியாக ஆற்றுப்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 7. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் வாழ் பிரதேசங்களில் மாத்திரம் அளவுக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ள இராணுவப்படைகளின் எண்ணிக்கை தொடரில் மக்களுக்கு எழுந்துள்ள அச்ச நிலையை போக்குவது அவசியமாகிறது. 8. தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாகவும் ஏனைய அரச திணைக்களங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் இனச் செரிவை குன்றச் செய்கின்ற வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காணிஅபகரிப்புகள் மற்றும் தமிழர் பிரதேசங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களில் மாற்றுகின்ற சூட்சும செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும். இதுபோன்ற நிஜ மாற்றங்களால் மாத்திரமே இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பதையும் அதுவே இந்நாட்டை மதிக்கத்தக முன்னேற்றத்திற்கு இட்டுச்செல்லும் என்பதையும் ஒரு சிவில் சமூக அமைப்பாக நினைவுபடுத்த கடமைப்படுகிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195079
  15. நஸ்ரல்லா மரணம்: ஹெஸ்பொலா, இஸ்ரேல், இரான் அடுத்து என்ன செய்யக் கூடும்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், பிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி நிருபர் 29 செப்டெம்பர் 2024, 06:13 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது, லெபனானில் அந்த அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். பேரழிவை ஏற்படுத்தக் கூடிய முழு அளவிலான மோதலுக்கு அருகே இந்தப் பிராந்தியத்தை அது கொண்டுவந்துள்ளது. இந்த மோதலுக்குள் இரானும், அமெரிக்காவும் குதிக்கவும் வாய்ப்பு உள்ளது. லெபனானின் சக்தி வாய்ந்த ஆயுத அமைப்பான 'ஹெஸ்பொலா' வின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா உட்பட பல ஹெஸ்பொலா தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஹெஸ்பொலா இந்த செய்தியை உறுதிப்படுத்தியது. "இந்தப் பிராந்தியத்தின் தெற்கில் நிகழ்ந்த ஒரு துரோக சியோனிச தாக்குதலில் நஸ்ரல்லா இறந்தார்" என்று அது கூறியது. இஸ்ரேலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்பது மூன்று முக்கியமாக அடிப்படைக் கேள்விகளை சார்ந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்கிழக்கு பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகான காட்சியை பார்வையிடும் ஒரு நபர் ஹெஸ்பொலா என்ன செய்யும்? இதில் முதல் கேள்வி ஹெஸ்பொலா தொடர்பானது. இனி அந்த அமைப்பு என்ன செய்யும்? இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலில், ஹெஸ்பொலா ஒன்றன்பின் ஒன்றாக பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட தளபதிகள் கொல்லப்பட்டது அதன் உயர்மட்ட கட்டமைப்பை அழித்துவிட்டது. சமீப நாட்களில் நிகழ்ந்த, பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் அதன் தகவல் தொடர்பு அமைப்பை சேதப்படுத்தியுள்ளன. இது தவிர இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹெஸ்பொலாவின் பெருமளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. "ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது அந்த அமைப்பின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக் கூடும். சிறிது காலத்திற்கு அதன் அரசியல் மற்றும் ராணுவ உத்திகளில் மாற்றம் ஏற்படக்கூடும்,” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மத்திய கிழக்கு பாதுகாப்பு நிபுணர் முகமது அல்-பாஷா கூறுகிறார். ஆனால் இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் இந்த அமைப்பு திடீரென தோல்வியை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலின் நிபந்தனைகளின்படி சமாதானத்திற்காக முன்னேறும் என்று எதிர்பார்ப்பது தவறாக இருக்கலாம். போராட்டத்தை தொடரப் போவதாக ஹெஸ்பொலா ஏற்கனவே சூளுரைத்துள்ளது. இந்த அமைப்பில் இன்னும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்ளனர். அவர்களில் பலருக்கு சமீபத்தில் சிரியாவில் சண்டையிட்ட அனுபவம் உள்ளது. பழிவாங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலை மாதம் தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார் அவர்களிடம் இன்னும் ஏவுகணைகளின் பெரிய கையிருப்பு உள்ளது. டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற முக்கிய நகரங்களை தாக்கக் கூடிய துல்லியமான வழிகாட்டுதல் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளும் இதில் அடங்கும். இஸ்ரேலிய தாக்குதல்களில் அவை அழிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றை விரைவாகப் பயன்படுத்துமாறு அமைப்பிற்குள் இருந்து ஹெஸ்பொலா அழுத்தத்தை எதிர்கொள்ளக் கூடும். ஆனால் அந்த அமைப்பு இஸ்ரேலின் வான் பாதுகாப்பை முறியடித்து பெரிய தாக்குதலை நடத்தி அதில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கொன்றால், அதற்கான இஸ்ரேலின் எதிர்வினை பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். அதன் பிறகு இஸ்ரேல் லெபனானின் உள்கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது. அது இரான் வரை பரவக்கூடும். இரான் சென்ன செய்யும்? ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஹெஸ்பொலாவுக்கு எவ்வளவு பெரிய அடியாக இருக்கிறதோ அதே அளவு அது இரானுக்கும் பெரிய அடியாகும். நஸ்ரல்லாவின் மறைவுக்கு 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இரான் ஏற்கனவே அறிவித்துள்ளது. இரானும் பல அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி ஒரு ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனிக்கிழமையன்று காஸாவில் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு தனது வீட்டை பார்வையிடும் ஒரு பாலத்தீனர் ஜூலை மாதம் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர் இரான் இதுவரை எந்த பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது நஸ்ரல்லாவின் படுகொலைக்குப் பிறகு, இரானில் ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதிகள் சில வகையான எதிர்வினைகளை கருத்தில் கொள்ளலாம். மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளில் பெருமளவு ஆயுத வலு கொண்ட போராளிகளின் முழு அமைப்பும் இரானிடம் உள்ளது. இது ’ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டென்ஸ்' (Axis of Resistance) என்று அழைக்கப்படுகிறது. ஹெஸ்பொலாவைத் தவிர, ஏமனில் ஹூதி, சிரியா மற்றும் இராக்கில் பல அமைப்புகளும் உள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீதான தாக்குதல்களை அதிகரிக்குமாறு இரான் அவைகளிடம் சொல்லலாம். ஆனால் இரான் எந்த விருப்பத்தை தேர்வு செய்தாலும் அது ஒரு பெரிய போரைத் தூண்டிவிடும். அதில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வடக்கு இஸ்ரேலில் நிற்கும் இஸ்ரேலிய ராணுவ பீரங்கிகள் இஸ்ரேல் என்ன செய்யும்? ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலைக்கு முன்னர் இஸ்ரேலின் நோக்கம் குறித்து யாருக்காவது சந்தேகம் இருந்திருந்தால் அது இப்போது முற்றிலுமாக தீர்ந்திருக்கும். தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட 12 நாடுகளால் முன்மொழியப்பட்ட 21 நாள் போர் நிறுத்த யோசனைக்கு இணங்க தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்தும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை. ஹெஸ்பொலா பதில் தாக்குதல் தொடுக்கும் என்று இஸ்ரேலிய ராணுவம் உறுதியாக நம்புகிறது. எனவே ஏவுகணைகளின் அச்சுறுத்தல் அகற்றப்படும் வரை தாக்குதலைத் தொடர அது விரும்புகிறது. இந்த நேரத்தில் ஹெஸ்பொலா சரணடையும் சாத்தியக்கூறும் தென்படவில்லை. எனவே தன் படைகளை அனுப்பாமல் ஹெஸ்பொலாவின் அச்சுறுத்தலை இஸ்ரேல் எவ்வாறு சமாளிக்க முடியும்? ஹெஸ்பொலாவை முழுமையாக அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம். இதற்காக எல்லைக்கு அருகில் தனது தரைப்படைகள் பயிற்சி செய்து கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆனால் ஹெஸ்பொலா அமைப்பு முந்தைய போர் முடிவடைந்த பிறகு கடந்த 18 வருடங்களாக போர் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதன் பொருள் என்னவென்றால் நிலத்தில் போரை நடத்துவது இஸ்ரேலுக்கு அவ்வளவு எளிதானதாகத் தெரியவில்லை. ஹசன் நஸ்ரல்லா தான் இறப்பதற்கு முன் தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய உரையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது ‘ஒரு வரலாற்று வாய்ப்பு’ என்று கூறினார். அதாவது இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் லெபனானுக்குள் நுழைவது எளிதாக இருக்கும். ஆனால் காஸாவைப் போல அல்லாமல், அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8v7vry17jo
  16. நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை 29 SEP, 2024 | 03:21 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டி நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் முடிவுடைந்தது. முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதலாவது இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் திறமையாக இருந்தபோதிலும் தோல்வியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை. நியூஸிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் டெவன் கொன்வே, டொம் ப்ளண்டெல், க்லென் பிலிப்ஸ், மைக்கல் சென்டனர் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றனர். போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய தினம் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கடைசி 5 விக்கெட்களில் மேலும் 165 ஓட்டங்களைப் பெற்றது. க்லென் பிலிப்ஸ், டொம் ப்ளண்டெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். டொம் ப்ளண்டெல் 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் டிம் சௌதீயுடன் 7ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்த க்ளென் பிலிப்ஸ் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். டிம் சௌதீ 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். தொடர்ந்து மிச்செல் சென்ட்னர், அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும் இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று. அஜாஸ் பட்டேல் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த மிச்செல் சென்ட்னர் 67 ஓட்டங்களைப் பெற்றார். நேற்றைய தினம் க்ளென் பிலிப்ஸ் 61 ஓட்டஙகளையும் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் அறிமுக வீரர் நிஷான் பீரிஸ் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 139 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது. கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. மிச்செல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (182 ஆ.இ.), தொடர் நாயகன்: ப்ரபாத் ஜயசூரிய (18 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/195065
  17. பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் 29 SEP, 2024 | 02:42 PM எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான செலவுத்தொகை என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து நேற்று (28) இரு வேறு கலந்துரையாடல்கள் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195061
  18. 29 SEP, 2024 | 03:03 PM (நமது நிருபர்) கல்வித்துறை அரசியலாகிவிட்டது. தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளை சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ, ஒரு அரசாங்கமோ மாத்திரம் அதை செய்ய முடியாது. அதற்கு மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். ஐந்து வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது. இச்செயலமர்வில் பாடசாலை நிதி முகாமைத்துவம் தேசிய பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் தேசிய பாடசாலைகள் மேற்பார்வையின்போது இனங்காணப்பட்ட பொதுவான விடயங்கள் உட்பட தேசிய பாடசாலைக் கிளையினால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மறுமலர்ச்சி யுகம் - வளமான நாடு நம் அனைவருக்கும் அழகான வாழ்க்கை என்ற இந்த தொலைநோக்கை யதார்த்தமாக்குவதற்கு கல்வியின் முக்கியத்துவத்தை இங்குள்ள அதிபர்கள் நன்கு அறிவார்கள். அரசாங்கம் என்ற வகையில் கல்விக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க நாம் தயாராக உள்ளோம். கல்வி என்பதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது அறிவை மட்டும் வழங்குவதன்று. அதையும் தாண்டிய ஒரு விரிந்த தொலைநோக்கு கல்வியில் உள்ளது. தொழிலுக்காக மட்டுமின்றி இந்த நாட்டைப் பொறுப்பேற்கக்கூடிய, இந்த நாட்டை மாற்றக்கூடிய, இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எமது கல்விக் கொள்கையைத் தயாரித்துள்ளோம். ஒரு வளமான நாடு என்பதன் மூலம் எமது அரசாங்கம் நாடுவது பொருளாதார அடிப்படையில் மட்டும் வளமான நாடாக இருப்பதையல்ல. கலாசாரம், ஒழுக்கப் பெறுமானங்கள் மற்றும் மனப்பாங்குகளுடன் அனைத்து அம்சங்களிலும் நாம் வளம் பெற வேண்டும் என்பதாகும். இத்தகைய சமூகத்தில் நாம் அனைவரும் அழகான வாழ்க்கையை வாழ முடியும். நாம் மறுமலர்ச்சி யுகம் என்று கூறுவது, இந்த நாட்டுக்கு ஒரு புதிய ஆரம்பம் தேவை என்பதையே ஆகும். ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் நவீன உலகில் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய பிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும். நாம் முன்மொழிந்துள்ள கல்விக் கொள்கை இந்த அபிலாஷைகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும். தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. விரக்தியான நிலையே காணப்படுகிறது. தற்போதுள்ள கல்வி முறையில் பிள்ளைகள் பெற்றோர்கள் மற்றும் சமூகம் திருப்தி அடைகின்றனரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திட்டமிட்டபடி பரீட்சையை நடத்த முடியுமா? பரீட்சை பெறுபேறுகள் பற்றி நீங்கள் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? கல்வித்துறையில் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் முறையில் சமுதாயம் நம்பிக்கை வைக்க முடியுமா? நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்த செயல்முறை மற்றும் முறைமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலாகிவிட்டது. இங்கு இந்த கல்வி முறைமையில் பணியாற்றும் உங்களிடம் தவறில்லை. காலாகாலமாக கல்வியில் கவனம் செலுத்தாமை கல்வியின் முக்கியத்துவம் ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக அரசு விலகியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கல்வி அரசியல்மயமாகியுள்ள காரணத்தினால் இத்துறையில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உங்கள் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வி முறையை கட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம். உங்களது பொறுப்பை சுதந்திரமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். ஒவ்வொரு அரசாங்கமும் கல்வி சீர்திருத்தங்கள் பற்றி பேசின. அந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலமே கல்வி முறை மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்துள்ளது. கல்வி முறையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் ஒழுங்குபடுத்தல். ஒரே இடத்தில் இல்லாதிருப்பதாகும். கல்வி அமைச்சு ஒன்றை கூறுகிறது. கல்வி ஆணைக்குழு இன்னொன்றை கூறுகிறது. சில நேரங்களில் ஜனாதிபதி அலுவலகம் மேலும் ஒன்றை கூறுகிறது. எந்தக் கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தெளிவின்மை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த தெளிவற்ற நிலையின்றி நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டாகச் செயற்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். எங்கள் அரசியல் இயக்கம் கலந்துரையாடல்களுக்கு எப்போதும் தயாரகவுள்ளது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தயாராகவுள்ளது. இந்த நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளையில் சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இந்த நாட்டை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும். நாட்டுக்குத் தேவையான மதிப்புமிக்க பிரஜைகள் கல்வி முறையின் மூலமே உருவாக்கப்படுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். இது ஒரு எண்ணக்கரு மட்டுமல்ல, அதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பையும் எமது அரசாங்கம் வழங்கும். அதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் போது இதை ஒரேயடியாக செயற்படுத்துவது கடினம் என்றாலும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். எமது வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும். குடும்பத்தின் பொருளாதார நிலை பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் செலவிடும் தொகை மேலும் மேலும் அதிகரித்துள்ளது. இலவசக் கல்வி உள்ள நாட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இலவசக் கல்வி இருந்தாலும் கல்விக்காக பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இலவசக் கல்வி மூலம் நாம் எதிர்பார்த்த முக்கிய விடயம் நடக்கவில்லை. அதாவது பிள்ளைகளின் கல்விக்கு தமது வருமானம் ஒரு காரணியாக இருக்கக் கூடாது என்ற உண்மை இல்லாமல் போய்விட்டது. இலவசக் கல்வி மூலம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள் உருவானார்கள். இதனால் பலர் உலகின் மிக உயர்ந்த இடங்களை அடைய முடிந்தது. ஆனால் மீண்டும் தரமான கல்வியைப் பெறுவதற்கு பணம் ஒரு காரணியாக மாறியுள்ளது. எனவே பாடசாலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மாற்ற வேண்டும். பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்படும் பணத்தின் பெரும் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பிள்ளை கல்விக்காக பாடசாலைக்கு அனுப்பப்பட்டவுடன் பெற்றோர்களின் சுமை குறைக்கப்பட வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.இந்த இலக்குகளுக்கு பங்களிக்கும் கல்வி நிர்வாகம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதிகள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படும். உலகின் தலைசிறந்த கல்விக் கட்டமைப்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது உங்கள் மூலமே செயற்படுத்தப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முடியாத தடைகளை நீக்குவது எங்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ ஒரு அரசாங்கமோ மட்டும் அதை செய்ய முடியாது. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/195060
  19. 29 SEP, 2024 | 01:47 PM யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், மாட்டினை வெட்டிய குற்றத்தின் பேரில் மூவரை கைது செய்தனர். பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள புதர் ஒன்றினுள் கடந்த வெள்ளிக்கிழமை (27) ஐந்து மாத கன்றுத்தாச்சி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய பின்னர், இறைச்சி கழிவுகளை அப்பகுதிகளில் வீசிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195054
  20. 29 SEP, 2024 | 12:08 PM எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் மாகாண சபைத் தேர்தலிலும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட முயற்சி செய்யுங்கள் என திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எமது அபிலாசைகளை வென்றெடுக்க நாம் பாடுபட வேண்டும். ஒரே இனம் ஒரே கொள்கை ஒரே சின்னம் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் கரம் கூப்பி மிகத் தாழ்மையுடன் அழைக்கின்றோம். இந்நிகழ்வானது மிக விரைவில் இடம்பெற வேண்டும் என்றும் தமிழ் மக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195041
  21. ஐபிஎல் புதிய விதிகளால் தோனியின் ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல்.லில் வரும் புதிய விதிகள் சி.எஸ்.கேவைச் சேர்ந்த மூத்த வீரர் தோனிக்கு சாதகமா, பாதகமா? அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடுவாரா? ஐபிஎல் புதிய விதிகள் என்ன? 2025 - 2027 ஐபிஎல் சீசனுக்கான விதிகள் குறித்து முடிவு செய்ய பெங்களூருவில் நேற்று(செப்டம்பர் 28) ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டமும், அணி உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனையும் நடந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் புதிய விதிகள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். 1. ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதனை தக்கவைப்பு அல்லது ஆர்டிஎம் விதியின் மூலம் நடைமுறைப்படுத்தலாம். 2. இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச கிரிக்கெட் ஆடியிராத (அன்கேப்டு) வீரர்கள் இருக்கலாம். 3. ஐபிஎல்-2025 ஏலத்தின் போது அணிகளின் கையிருப்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 2024 சீசனின் போது அணி ஏலத்தொகை மற்றும் ஊக்கத்தொகை என ரூ.110 கோடி இருந்தது. இனிவரும் சீசனில் ஏலத்தொகை, ஊக்கத்தொகை மற்றும் போட்டி ஊதியம் எனச் சேர்க்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் ரூ.146 கோடியும், 2026 சீசனில் ரூ.151 கோடியாகவும், 2027 சீசனில் ரூ.157 கோடியாகவும் உயர்த்தப்படும். 4. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்பாக்ட் ப்ளேயர் உள்பட விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் ரூ.7.50 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொகை ஒப்பந்த தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா 5. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் கட்டாயமாக தங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெளிநாட்டு வீரர் பதிவு செய்யாமல் இருந்தால், அந்த வீரர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாட தகுதியற்றவராக கருதப்படுவார். 6. ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த எந்த வீரரும், ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்டபின், சீசன் தொடங்குவதற்கு முன்பாக தங்களால் விளையாட முடியாத நிலை இருப்பதாக அறிவிக்க நேர்ந்தால், அந்த வீரர் அந்தத் தொடரும் அடுத்து வரும் 2 ஐபிஎல் சீசனிலும் ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். 7. கேப்டு இந்திய வீரர் “அன்கேப்டு வீரராக” மாற முடியும். அதாவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் அவர் “அன்கேப்டு வீரராக” மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும். 8. இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை 2027 ஐபிஎல் சீசன் வரை தொடரும். புதிய விதிகள் தோனிக்கு சாதகமாக அமையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார் கேப்டு வீரர்களை “அன்கேப்டு வீரராக” கருதலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகக் குழு கொண்டுவந்த போது அதை பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது. மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன பின் அவர்களை அன்கேப்டு வீரர்களாகக் கருதுவது அவர்களை அவமதிப்பு செய்வதாகும் என்று சன்ரைசர்ஸ் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. அது மட்டுமல்லாமல் கேப்டு வீரராக இருந்து அதிக ஊதியம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடிய மூத்த வீரர் அன்கேப்டு வீரராக குறைந்த ஊதியம் எவ்வாறு பெறுவார் என்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் இந்த விதியை ஐபிஎல் நிர்வாகக்குழு மீண்டும் கொண்டு வந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது, ஆனால், இதில் எந்த வீரரும் தேர்ந்தெடுக்கப்படாததால் 2021-ஆம் ஆண்டு சீசனில் இந்த விதி நீக்கப்பட்டது. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அன்கேப்டு விதிமுறையால், கடந்த 5 ஆண்டுகளாக எந்த சர்வதேச போட்டியிலும், இந்திய அணியின் எந்தப் பிரிவிலும், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாத மூத்த வீரர் அன்கேப்டு வீரராகக் கருதப்படுவார். இந்த விதிமுறை முக்கியமாக சிஎஸ்கேயின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைக்கவே கொண்டுவரப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். தோனி ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா? பட மூலாதாரம்,SPORTSPICZ படக்குறிப்பு, கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ரூ.12 கோடிக்கு எம்எஸ் தோனியை சிஎஸ்கே அணி தக்கவைத்தது. 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார், வரும் ஜூலை மாதத்தோடு அவருக்கு 43 வயது பிறக்கிறது. தோனி கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாமல் இருப்பதால் “அன்கேப்டு வீரராக” அவரை மாற்ற சிஎஸ்கே அணி முடிவு செய்யலாம். அன்கேப்டு வீரராக தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்தால் அவருக்கான அதிகபட்ச ஊதியம் ரூ.4 கோடியாகக் குறையும். ரூ.12 கோடி ஊதியத்திலிருந்து தோனிக்கு ரூ.8 கோடி குறையும். கடந்த 2023ம் ஆண்டு சீசனுக்கு பின் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த சீசனில் தோனி விளையாடினார். சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். அப்போது தோனி அளித்த பேட்டியில் “என் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறையில் செய்யப்படும் மாற்றத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யும்” எனத் தெரிவித்திருந்தார். இப்போது புதிய விதிகள் வந்துள்ளதால், தோனியை அன்கேப்டு வீரராக களமிறக்க சிஎஸ்கே முடிவு செய்யலாம். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இல்லாத ஓய்வு பெற்ற பல இந்திய வீரர்கள் ஏலத்தில் இடம் பெறவும் வாய்ப்புண்டு. குறிப்பாக யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படலாம். பட மூலாதாரம்,SPORTSPICZ வீரர்கள் காயத்தால் விலகினால் என்ன ஆகும்? ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவர் சார்ந்திருக்கும் அணி மாற்று வீரரை 7-வது போட்டி முடிவதற்குள் அறிவிக்கலாம் என்று கடந்த சீசன் வரை நடைமுறையில் இருந்தது. புதிய விதிமுறையின்படி, 2025 ஐபிஎல் சீசனில் மாற்று வீரரை 12வது போட்டி முடிவதற்குள் அறிவிக்க வேண்டும் என நீட்டிக்கப்பட்டுள்ளது. தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம் (புகைப்படத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா) வீரர்களைத் தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம், அதிகபட்சமாக 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைக்கலாம். இதில் முதல் 3 வீரர்களைத் தக்க வைக்கும்போது அந்த வீரர்களுக்கான தொகை ரூ.18, ரூ.14, ரூ.11 கோடி என ஏலத் தொகை இருப்பிலிருந்து (பர்ஸ்) கழிக்கப்படும். அதன்பின் அடுத்த 2 வீரர்களுக்கு ரூ.18 மற்றும் ரூ.14 என கழிக்கப்படும். அன்கேப்டு வீரர் ஒருவருக்கு ரூ.4 கோடி கழிக்கப்படும், 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைத்தால் ரூ.8 கோடி பர்ஸிலிருந்து கழிக்கப்படும். 2025 சீசனில் ஊதிய முறை ஐபிஎல் வரலாற்றில் வீரர்களுக்கு முதல்முறையாக ஊதிய முறையை ஐபிஎல் நிர்வாகம் 2025 ஐபிஎல் சீசனில் கொண்டு வருகிறது. இதன்படி ஒர் அணியில் உள்ள 12 வீரர்களுக்கும் போட்டி ஒவ்வொன்றுக்கும் ரூ.7.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத் தொகைக்காக ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக ரூ.12.60 கோடி வழங்கப்படும். ஒரு வீரர் சீசனில் உள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினால் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c625w7xdzpeo
  22. சங்கு சின்னம் தேவை - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் 29 SEP, 2024 | 10:54 AM ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கு சின்னத்தை கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தமிழ் பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரியநேத்திரனை தமிழ் பொது வேட்பாளராக களம் இறக்கியிருந்தது. குறித்த சுயேச்சை குழுவுக்கு சங்கு சின்னமாக வழங்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் சட்டங்களின் பிரகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் தமக்கான சின்னத்தை கோரி விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரு விதிமுறையின் கீழ் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார். இதன் பிரகாரம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஏற்கனவே குத்துவிளக்கு சின்னம் பயன்படுத்தியிருந்த போதிலும் அதனை விடுத்து சங்கு சின்னம் தற்போது மக்கள் மத்தியில் அறியப்பட்டுள்ளமையினால் அந்த சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு கூட்டணியில் பலர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195031
  23. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்! நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றவர்களின் விபரம் 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஏனைய இடங்கள் இரண்டாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் குலுனி மெட்சரா மற்றும் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் விமன்சா ஜயனதி ரத்னவீர ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி மூன்று மாணவிகள் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளனர். கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரியின் செஷானி செஹங்சா ஜயவர்தன, நுகேகொட அனுலா கல்லூரியின் மெதுகி சமோதி பெரேரா மற்றும் காலி சங்கமித்த மகளிர் கல்லூரியின் நதுன் பமுதிதா ரணவக்க ஆகியோர் நான்காம் இடத்தை பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏழாவது இடத்திற்கு நான்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நுகேகொட அனுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த நெமதினி வொனாரா அதிகாரி, கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரியின் தத்சரா கவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தமாஷி தனஞ்சனா விக்ரமகே மற்றும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தைச் சேர்ந்த சகுண சதீஷான் சமரவிக்ரம ஆகியோர் ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/gce-ol-results-2024-1727593773
  24. @வாலி அண்ணை இத்திரிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!
  25. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=193711

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.