Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 26 SEP, 2024 | 12:10 AM வலுவான ஜனநாயக ஆட்சியின் அடித்தளம் அடக்குமுறைக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடக இயக்கம், புதிய ஜனாதிபதி கௌரவ அநுரகுமார திஸாநாயக்கவை அதற்காக அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. "மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கௌரவ திசாநாயக்க அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அவர் உள்ளிட்ட அரசாங்கம் எவ்வாறு செயற்படுகிறது என்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என சுதந்திர ஊடக இயக்கம் கருத்து தெரிவிக்கின்றது. கடந்த காலங்களில், மக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தின் உயிர்மூச்சை நசுக்கும் வகையில், பல கட்டளைச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. 'அவற்றில் ஆன்லைன் கணினி பாதுகாப்புச் சட்டம், முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மேலும் வரைவு செய்யப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் ஆகியவை அடங்கும். சுதந்திர ஊடக இயக்கம் உட்பட பிற ஊடக மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள், பல சந்தர்ப்பங்களில் இத்தகைய அடக்குமுறை கட்டளை சட்டங்கள் - இதில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அடங்கும் - அரசியலமைப்பு ரீதியான ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடியாகும் என்பதை சுட்டிக்காட்டி, இத்தகைய அடக்குமுறை கட்டளைச் சட்டங்களை இரத்து செய்ய கோரிக்கை விடுத்தன, நீதித்துறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. மேலும் பல சந்தர்ப்பங்களில் அவற்றை ரத்து செய்ய வேண்டிய கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டது. இந்த பின்னணியில், அனைத்து அடக்குமுறை கட்டளைச் சட்டங்களையும் இரத்துச் செய்ய கிடைத்திருக்கும் சந்தர்பமானது புதிய ஜனாதிபதிக்கு ஜனநாயகத்திற்கான தனது உண்மையான அர்ப்பணிப்பை நிரூபிக்க கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழு / உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்கவும் சுதந்திர ஊடக இயக்கம் முன்மொழிந்தந்தை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம். அரச ஊடகங்களை பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான பிரஜை ஊடகமாக மாற்றியமைப்பதும் சமூக பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட ஊடகவியலில் ஈடுபடுவதற்கு அனைத்து ஊடகங்களுக்கும் தேவையான சீர்திருத்தங்களை முன்மொழிவதற்கு சுயாதீனமான பொறிமுறையொன்றை உருவாக்குவதும் அவசரத் தேவையாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், சுதந்திர ஊடக இயக்கம் விரிவான ஊடக சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனினும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படை நிபந்தனை என்னவென்றால் அடக்குமுறை கட்டளைச் சட்டங்களை ஒழித்து ஊடகங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து வடிவிலான குற்றங்களுக்கும் நீதி வழங்குவதும் ஆகும். https://www.virakesari.lk/article/194805
  2. 25 SEP, 2024 | 06:28 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணல், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல் மற்றும் ஆட்சி நிர்வாகம், மனித உரிமைகள், கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் என்பவற்றில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவரது நிர்வாகமும் உடனடிக் கவனம் செலுத்தவேண்டியிருப்பதாக அமெரிக்க செனெட் சபையின் வெளியுறவு குழு தலைவர் பென் கார்டின் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்று முடிந்த இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அமெரிக்க செனெட் சபையின் வெளியுறவுக்குழு தலைவர் பென் கார்டின், அதில் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல மில்லியன் மக்கள் அமைதியான முறையில் தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இது அவர்களது நாட்டின் வருங்காலப் பாதையை வடிவமைப்பதில் அவர்கள் கொண்டிருக்கும் ஆழமானதும், அர்த்தமுள்ளதுமான அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றது. தற்போது தேர்தலின் மூலம் தெரிவாகி ஜனாதிபதியாகக் கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவும், அவரது நிர்வாகமும் முகங்கொடுக்கவேண்டிய சில உடனடி சவால்கள் உள்ளன. குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணல், ஆட்சி நிர்வாகம், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல், மனித உரிமைகள், கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் என்பனவே அவையாகும். இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார ரீதியில் ஸ்திரமான எதிர்காலத்தையும், அனைவரையும் உள்ளடக்கியதுமான ஜனநாயகத்தையும் அடைந்துகொள்வதற்கான இலங்கை மக்களின் முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194789
  3. இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதற்காக பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார். மன்னாரில் (Mannar)இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் என்னை சந்தித்து கதைத்த போது இனவாதமற்ற இலங்கையையும், இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையையும் உருவாக்குவதற்காக தான் பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார். தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அந்த வகையில், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்க தனது உறுதி மொழியை தொடர்ச்சியாக இனவாதம் அற்ற நாடாக இலங்கை மாறுவதற்கும் இலஞ்ச ஊழல் அற்ற நாடாக இலங்கையை கொண்டு வருவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் நினைவில்வைத்து தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதை நான் அவரிடம் கோரிக்கையாக முன்வைக்கிறேன். ஜனாதிபதி தேர்தலின் போது நான் யாருக்காகவும், யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. மக்கள் யாரை விரும்பி வாக்களிக்கிறார்களோ அது மக்களின் விருப்பம் என்பது எனது கருத்தாக இருந்தது. பல்வேறுபட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இந்த ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) கதைத்து மன்னார் மாவட்டத்தில் இருந்த சில பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைத்தேன். ரணிலின் வருகை முல்லைத்தீவிலும் சில பிரச்சனைகளுக்கு ரணில் விக்ரமசிங்க ஊடாக தீர்வை பெற்றுக் கொடுத்தேன். மக்களின் பிரச்சினைகளை நான் அவரிடம் முன்வைத்த போது சில விடயங்களை சுமுகமான முறையில் தீர்த்து வைத்தார். அண்மையில் ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அதேபோல் அண்மையில் மன்னாருக்கு வருகின்ற போது எனது வீட்டிற்கு வரவுள்ளதாக கூறியிருந்தார். அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடங்கலாக பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதிலை தந்ததன் அடிப்படையில் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கலந்தாலோசிக்கும் வகையில் அவரது வருகை அமைந்திருந்தது. அதன் அடிப்படையில் அவர் இங்கு வந்து சென்றிருந்தார். இந்தநிலையில் அண்மைக்காலமாக என் மீது சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்“ என தெரிவித்தார். https://ibctamil.com/article/anura-promised-to-create-a-non-racial-sri-lanka-1727260460#google_vignette
  4. தென்லெபனான் மீது மீண்டும் கடும் தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல் - 15 பேர் பலி 25 SEP, 2024 | 04:57 PM தென்லெபனான் மற்றும் பெக்காவின் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தென்லெபானின் நெபட்டியா நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்லெபானை சுற்றியுள்ள நகரங்களிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/194785
  5. தீபச்செல்வன் தியாக தீபம் திலீபன் பற்றிய பாடல் ஒன்றை பெருமளவான சிங்கள மக்களும் இளைஞர்களும் கேட்டு வருகிறார்கள். 2009 இனப்படுகொலைப் போர் முடிந்த தருணத்திலேயே திலீபனுக்காக சில சிங்களக் கவிஞர்கள் கவிதைகளை எழுதியிருந்தார்கள். திலீபன் தமக்காகவும் தியாக நோன்பிருந்தார் என்ற பார்வை பெருமளவான சிங்கள உறவுகளிடையே இருக்கிறது உண்மையில் ஈழ விடுதலைப் போராளிகள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல, அவர்கள் ஒட்டுமொத்த இலங்கைத் தீவுக்கும் காவலாக இருந்தார்கள். இதனை கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் பல சிங்கள மக்களே ஒப்புக் கொண்டதையும் நாம் கண்டிருக்கிறோம். திலீபனின் நினைவேந்தல் ஊர்தி இன்று தியாக தீபம் திலீபனின் வீரவணக்கப் படத்தை தாங்கியபடி ஊர்தி பவனி ஒன்று தமிழர் தேசத்தை வலம் வருகிறது கண்ணீருடன் பூக்களை மக்கள் காணிக்கை ஆக்குகிறார்கள். ஆற்றாமையுடன் பெரு மூச்சையும் அஞ்சலியாக செலுத்துகின்றனர் குறிப்பாக பெருந் திரளான இளையவர்கள், பள்ளி மாணவர்கள் எம் தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்களைத் தூவி அஞ்சலிக்கின்றனர். திலீபன் எந்த தலைமுறைகளாலும் மறக்க முடியாத போராளி. திலீபன் எந்த தலைமுறையும் மறந்து விடக்கூடாத மகத்துவமான தியாகி. தியாக தீபம் திலீபன் தலைமுறைகள் கடந்து நின்று போராடுகிற ஒரு போராளி இன்றைக்கும் திலீபனை பற்றி மிகச் சில வருடங்களின் முன்னர் பிறந்த குழந்தைகள் கூட திலீபனைப் பற்றி விசாரணை செய்யத் துவங்கியுள்ளனர். என் பள்ளி மாணவர்கள் திலீபனின் நினைவு நாட்கள் வந்தாளே அவரைப் பற்றியே கேட்டுக் கொண்டிருப்பார்கள் ஈழம் இனப்படுகொலைக்குப் பிந்தைய சூழ்ச்சியில் சிக்கியுள்ள நிலம். இங்கே கட்டமைக்கப்பட்டுள்ள வாழ்வும் கையில் தரப்பட்டுள்ள கருவிகளும் எதற்காக என்பது நமக்குத் தெரிந்ததுதான். நம் கையில் உள்ள புத்தகங்களில் இல்லாத கதைகளை மாணவர்கள் தேடுகிறார்கள் நம் காலம் மிகுந்த சூழ்ச்சிகளால் ஆனது என்ற போதும் நம் குழந்தைகள் அதனைக் கடந்து வரலாற்றையும் பெருமாந்தர்களையும் தேடுகிறார்கள். யார் இந்தப் பார்த்தீபன் ? இராசைய்யா பார்த்திபன் எனப்படும் லெப்டினன் கேணல் திலீபன், நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஊரெழுவில் பிறந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த திலீபனின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். அவர் கருத்தியல் ரீதியாக ஆழமான புரிதல் கொண்ட ஒரு போராளியாக இருந்தார் பால்நிலை மற்றும் சமூக சமத்துவக் கண்ணோட்டம், பிற்போக்குத்தனங்களை உடைக்கும் முற்போக்குத் தன்மை கொண்ட திலீபன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஜனநாயக முகமாகும். திலீபனின் முகம் மாத்திரம் ஈர்ப்பானதல்ல. அவர் ஆற்றிய உரைகளும் ஈழ மக்களை இன்றும் நம்பிக்கையும் எழுச்சியையையும் கொள்ளச் செய்பவை. ஆயுதப்போராட்டத்தில் இணைந்த திலீபன் அகிம்சையைக் கையில் எடுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உன்னதமான ஜனநாயகப் போக்கினை இவ் உலகிற்கு வெளிப்படுத்தினார். செப்டம்பர் 15, 1987. இந்திய அரசிற்கு எதிராக தனது உண்ணா நோன்புப் போரை ஆரம்பித்த அவர் வலியுறுத்திய ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தின் கோரிக்கைகளாக இருக்கின்றன. உயிர்த்திருக்கும் கோரிக்கைகள் மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பனவே அக்கோரிக்கைகளாகும். திலீபன் அன்றைக்கு முன்வைத்த கோரிக்கைகள் என்பது இன்றும் உயிர்ப்போடுதான் இருக்கின்றது. தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்பு என்பது எந்த சூழலிலும் நிறுத்தப்படாமல் தொடர்கின்றது. இன்றைக்கு பொருளாதாரத்தின் பெயரில் அவசரகாலச் சட்டமும் நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழ் அரசியல் கைதகளின் விடுதலை என்ற கோரிக்கைக்கு 37 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க காரணங்களின்றி சிறைகளில் அடைத்து வைக்கின்ற கொடுமை, ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கை இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. உயிர்நீத்த கணங்கள் திலீபன் முன்வைத்த, ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல், சிங்கள அரசுக்கு துணை செய்தது, அதன் இன நில அழிப்புச் செயல்களுக்கு ஒத்தாசை புரிந்தது. தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை தொடங்கிய போது, ஒட்டு மொத்த ஈழமும் பசியிருந்தது. நல்ல முடிவு வரும், திலீபன் மீண்டு வருவார் என்று காத்திருந்தது. தன்னை உருக்கி உருக்கி தமிழர்களின் கோரிக்கையை வலுப்படுத்தினார் திலீபன். மெலிந்த தேகம், ஈர்க்கும் புன்னகை, புரட்சிக் குரல், இந்திய அரசின் துரோகத்தால் ஈழ மண்ணில் சாய்ந்தது. உண்ணா நோன்பின் 12ஆவது நாள், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு ஈழ மண் பெற்றெடுத்த ஒப்பற்ற விடுதலைப் போராளி திலீபன், தன்னுடைய 23 ஆவது வயதில் வீர மரணம் எய்தினார். திலீபன் அவர்களின் இன்னொரு அடையாளம் அவர் மாணவர் என்பது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர். 23 வயதில் ஒரு மாணவன் எத்துனை ஆழமான அறிவுடன் அரசியல் விழிப்புணர்வுடன், போராட்ட எழுச்சியுடன் தன்னை ஆகுதி ஆக்கியுள்ளார் என்பதை இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் சிந்திக்க வேண்டும். திலீபனின் வாழ்வும் போராட்டமும் எந்த புத்தகத்திலும் படிக்க முடியாத அறிவையும் நம்பிக்கையையும் எழுச்சியையும் தருகிறது. சுயநல வாழ்வு என்பது எல்லாவற்றிலும் புரையோடிப் போயிருக்கும் இன்றைய காலத்தில் திலீபனின் தியாகம் என்பது மகத்துவான காவியமாக நம் தலைமுறைகளின் முன்னால் எப்போதும் நிலைத்திருக்கும். தேவிடுதலையே மெய்யான அஞ்சலி வெறுமனே மெழுகு திரிகளை ஏற்றி, தீபங்களை சுடர விட்டு மாலைகளை அணிவிப்பதை திலீபன் ஒரு போதும் விரும்பார். தன்னையே நெருப்பாக்கி, தன்னையே தீபமாக்கிய திலீபனிற்கு மெய்யான அஞ்சலி என்பது எம் தேச விடுதலையே. தாயக மக்களின் விடியலும் சுதந்திரமும்தான் திலீபன் கனவு. அனைத்து விதமான விடுதலைகளுடன் கூடிய தேசமே தனது கனவு என்று அவர் முழங்கிய இளம்குரல் இன்னமும் எம் மண்ணில் கேட்கிறது. அது திலீபன் அவர்களுக்குத் தீராப் பசியாக இருக்கும் இந்த மண்ணில் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்படுகிற காலத்தை நோக்கியே நம் போராட்டம் நிகழ்கிறது. அதற்காக உழைப்பதும் உண்மையாக இருப்பதுவே திலீபனுக்கு செய்கின்ற மகத்தான அஞ்சலியாக இருக்கும். அந்த அஞ்சலி எனும் விடியலுக்காய் பார்த்தீபன் இன்னும் பசியுடனே இருக்கிறார். சிங்கள மக்கள் திலீபன் போன்ற எம் நிலத்தின் போராளிகளுடன் பேச வேண்டும். ஈழ விடுதலையின் அவசியத்தை அந்த வழியே உணர்த்தி நிற்கும் என்பதும் திண்ணம். https://ibctamil.com/article/martyr-deepam-dileepan-died-on-hunger-strike-1727282279
  6. Published By: VISHNU 25 SEP, 2024 | 08:49 PM (நா.தனுஜா) தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலமானதொரு தரப்பாகப் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது. குறிப்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோருக்கிடையில் செவ்வாய்கிழமை (24) கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் அதன் பெறுபேறுகள் குறித்தும், எதிர்வரவுள்ள பொதுத்தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதுபற்றி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், 'அடுத்த தேர்தலில் அரசாங்கமொன்றை அமைப்பதற்காக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராகி வருகின்றோம். இம்முறை தேசிய மக்கள் சக்தியே ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான முக்கிய சவாலாகக் காணப்பட்டது. ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அப்பால் இருக்கும் ஏனைய கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் மேற்குறிப்பிட்ட சந்திப்பு பற்றி சுமந்திரனிடம் வினவியபோது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்தேர்தல் குறித்தே தாம் கலந்துரையாடியதாகவும், பொதுத்தேர்தல் தொடர்பில் எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194802
  7. புதிய இணைப்பு சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம், சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாகவே நாட்டை மேலும் உயர்த்தி வைக்க முடியாமல் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டு மக்களுக்காக இன்றையதினம் ஆற்றிய முதல் உரையின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நிலையான பொருளாதாரம் நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை (தமிழாக்கம்) இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன். இந்த நாட்டை கட்டி யெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம். அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது. அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம். எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் 'மாற்றம்' ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும். தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது. இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது எமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது. அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம். சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் "நாம் இலங்கைப் பிரஜைகள்" என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம். தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம். பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம். எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பாரிய பங்கு இருக்கிறது என்பதை நம்புகிறோம். பொது மக்களை கண்ணியமாக நடத்தும் அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கிச் செல்லும் அரச சேவையை உருவாக்குவோம். செயற்திறன் மிக்க, நேர்மையான மற்றும் ஜனரஞ்சகமான அரச சேவையை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அதிக வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம். தமது பிள்ளைக்கு நல்ல பாடசாலை மற்றும் சிறந்த கல்வியை வழங்க அந்த ஒவ்வொரு பெற்றோருக்கும் உரிமை உண்டு. அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கவும், அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அறிவு,திறன்,மனப்பாங்கு என்பவற்றை மேம்படுத்தி இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம். எந்த நாட்டிற்கு நாம் சென்றாலும், விமான நிலையத்தின் தன்மையை வைத்து அந்த நாடு குறித்து ஒரு கண்ணோட்டைத்தை உருவாக்க முடியும். அதன் ஒழுங்கு, மக்களின் நடத்தை,செயல்பாடு, போன்றவற்றின் மூலமும் மறைமுகமாக அந்த நாட்டின் இயல்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. அதையும் தாண்டி சுற்றுச்சூழலின் தூய்மை, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாக தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களை தயாரித்து முடித்துள்ளோம். அந்த உருவாக்கத்திற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு, நாம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம். இந்த நாட்டின் பிரஜைகளுக்கு 'நான் இலங்கையர்' என்று பெருமையுடன் கூறக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம். இந்த நாட்டின் பிரஜையாக இருப்பது பெருமை என்று நம் நாட்டு மக்கள் உணரும் வகையில் இந்த நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்கு உங்களின் கூட்டுப் பங்களிப்பு தேவை. அனைத்து பிரஜைகளுக்கும் சமூக நீதியை நிறைவேற்றும் அரசொன்றை உருவாக்க நாம் பொறுப்புடன் பங்களிக்கிறோம். அறிவு, திறன்கள், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர் சந்ததிக்கு நம்பகமான எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவோம். நமது நாட்டின் சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதத்தைத் தாண்டிய பெண்கள் சமூகம், இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகச் செயல்பாட்டிற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் குழுவாகும். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாம் செல்வோம். சகல நிறுவனங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்துவதற்கு நாம் செயற்படுவோம். அதற்கான எமது அர்ப்பணிப்பின் முன்னுதாரணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏற்கெனவே எமது பிரதமர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளோம். எமது சனத்தொகையில் பெருந்தொகையானோர் ஊனமுற்று விசேட சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டியவர்களாகும். அவர்களுக்காக பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை நாம் திட்டமிட்டுள்ளதோடு அதன் குறுங்கால நடவடிக்கையை விரைவாக ஆரம்பிப்போம். நாம் செல்லும் பயணத்தில் சமூக கட்டமைப்பின் எந்தவொரு பகுதியையும் கைவிடப்போவதில்லை என்பதற்கு நாம் பொறுப்பு கூறுகிறோம். ஒவ்வொருவரினதும் தனித்துவத்திற்கு மதிப்பளித்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்துக்காக சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ள எமது பங்களிப்பை வழங்குவோம். மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போம். எம் மீதான சந்தேகம் காரணமாக நிச்சயமற்ற நபர்கள் இருப்பதை நாம் அறிவோம். எனது செயற்பாடுகளின் ஊடாக உங்களின் நம்பிக்கையை வெல்ல எதிர்பார்க்கிறேன். உங்களுடைய விமர்சனங்களை பொறுத்தமான தருணத்தில் ஏற்றுக்கொள்வேன். அதேபோல் நாங்கள் கட்டியெழுப்ப போகும் எதிர்காலத்தின் பங்குதாரர்களாக உங்களை வலுவூட்டுவோம். எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை கலைய முடியுமானால்,நமக்கிடையிலான இலக்கு சமமானவை என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அதன் ஊடாக நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ளவும் அதன் ஊடாக முன்னோக்சிச் செல்வதற்குத் தேவையான மூலோபாயங்களை இணைந்து திட்டமிடவும் முடியும். இந்த நாட்டை கட்டியெழுப்வுதற்காக காத்திரமாகவும் நேர்மையாகவும் இணையும் அனைவருக்கும் எமது கதவுகள் திறந்துள்ளன. மக்களின் ஆணைக்கு அமைவான நாடாளுமன்றம் ஒன்று அவசியப்படுகிறது. இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன். அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது நாடாளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன். அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன. அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்! ஆனாலும், பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதையும் நானும் அறிவேன். சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம்,சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது..! இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். அதன் படி, இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைப்பு இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதேவேளை, நேற்று (24) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் அரசியலமைப்பின் 70 வது பிரிவின்படி 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் பிரிவு விதிகளுக்கு அமைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. https://ibctamil.com/article/special-statement-of-president-anura-today-1727249219
  8. முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள் தொடர்பில் உடனடி விசாரணை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய நபர்களைின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிடப்படும் எனவும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வசந்த சமரசிங்க கூரியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தீர்க்கமான விசாரணை “இந்த வாகனங்கள் தொடர்பாக நாம் தீர்க்கமான விசாரணைகளை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். யார் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தது என்ற விபரங்களை நாம் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்துவோம். அரச அதிகாரிகள் இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், இவர்களுக்குத்தான் இந்த வாகனங்களை யாருடையது, யார் பயன்படுத்தியது என்ற அனைத்து விடயங்களும் தெரியும். ஏன், இவர்கள் இந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு ஒழிய வேண்டும்? அதாவது, உரிமையில்லாதவற்றை பயன்படுத்தினால்தான் பயப்பட்டு, ஒழிந்துச் செல்ல வேண்டும். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்களை வெளியாட்கள் பயன்படுத்துகிறார்கள். ஜனாதிபதி செயலக அதிகாரி இவைதான் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம், வாகனங்களை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்களை கோரியுள்ளோம். இந்த அனைத்து நபர்களுக்கு எதிராகவும் எதிர்க்காலத்தில் சட்டநடவடிக்கை மேற்கொள்வோம். ஜனாதிபதி இது தொடர்பாக உறுதியாகவுள்ளார். இது மக்களுடைய வாகனங்கள். இவை மீளவும் மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். https://tamilwin.com/article/prompt-inquiry-into-illegally-used-govt-vehicles-1727270286?itm_source=parsely-detail#google_vignette புளட் தலைவருடைய பெயரை ஒத்ததாக இருக்கும் அண்ணை.
  9. அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இங்கிலாந்து அணி பதிலளித்தாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 209 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மழை குறுக்கிடுவதற்கு முன்னர் 37.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்து அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் 348 நாட்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது தோல்வியினை சந்தித்துள்ளது. அவுஸ்திரேலிய அணி இறுதியாக விளையாடிய 14 போட்டிகளிலும் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309904
  10. இலங்கை ஜனாதிபதிக்கான ஆதரவை வெளியிட்டார் சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் - இணைந்து பணியாற்ற தயார் என கடிதத்தில் தெரிவிப்பு 25 SEP, 2024 | 03:34 PM ஜனாதிபதி அனுரகுமரவிற்கான ஆதரவை வலியுறுத்தி சர்வதேச நாணயநிதியம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதிக்கான ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி சீர்திருத்தங்களிற்கு உதவ தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கையுடன் காணப்பட்ட காணப்பட்ட ஈடுபாட்டினை சர்வதேச நாணயநிதியத்தில் உள்ள நாங்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த விடயமாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் உறுதியான பங்காளியாகயிருப்பதோடு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான தற்போதைய திட்டம் உட்பட சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு உதவ தயாராகவுள்ளோம் என்ற உத்தரவாதத்தை இந்த தருணத்தில் வழங்கவிரும்புகின்றேன் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194773
  11. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் யாழில் சந்திப்பு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/309932
  12. இஸ்ரேல் - ஹெஸ்பொலா மோதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அமெரிக்கா - திரைமறைவில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, வெளியுறவுத்துறை செய்தியாளர், ஐ.நா. 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் நடைபெறும் போர், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பிற இடங்களுக்கு பரவிடாமல் தடுப்பேன் என்று அமெரிக்க அதிபர் பைடன் உறுதியை அளித்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் முடிவடைகிறது. அமெரிக்க அதிபராக ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆற்றிய கடைசி உரையில், இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல் குறித்து பேசிய போது அதே உறுதியை மீண்டும் அளித்தார். “ராஜிய ரீதியிலான ஒரு தீர்வு இப்போதும் சாத்தியம் தான். சொல்லப்போனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதுதான் ஒரே வழி” என்றார் பைடன். “முழு வீச்சிலான போர் யாருக்கும் நல்லதல்ல” என்று அவர் தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல்-லெபனான் சிக்கல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையே நீடிக்கிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்து, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற பைடனின் கோரிக்கை அரங்குகளில் மட்டுமே ஒலித்தது, களத்தில் கேட்கப்படவே இல்லை. அதே போன்று தான், இந்த கோரிக்கையும் அரங்கில் மட்டுமே கேட்கப்படுகிறது. திங்கட்கிழமை, இஸ்ரேல் லெபனான் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் தாக்குதல்களில் 500 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா, அந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த வாரம் லெபனானில் நடந்த தொடர் பேஜர் வெடிப்புகளால் பலத்த சேதங்களை சந்தித்த ஹெஸ்பொலா, வடக்கு இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி வீடுகளை நொறுக்கி, தெருக்களைப் பற்றி எரியவைத்துள்ளது. அமெரிக்கா, அந்த பிராந்தியத்தில் தனக்கு இருக்கும் முக்கியமான நட்பு நாடான இஸ்ரேலை மீண்டும் கட்டுப்படுத்த நினைக்கிறது. தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டாம் என்றும் ஒரு தூதாண்மை முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வற்புறுத்துகிறது. ஆனால் அப்படி ஒரு முடிவை எடுக்க இரு தரப்பும் விரும்பவில்லை அல்லது எடுப்பதற்கான திறன் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானின் சேதமடைந்த வீடுகள் அமெரிக்கா கூறுவதை இஸ்ரேல் கேட்குமா? ஹெஸ்பொலாவை வீழ்த்தி, தனது நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. காஸாவில் பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்கவே கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலை தாக்கி வருவதாக ஹெஸ்பொலா கூறி வருகிறது. இஸ்ரேல்-ஹெஸ்பொலா விவகாரத்தில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு தீர்மானங்களுக்கு வலுவளிக்கும் வகையில், பல மாதங்களாக அமெரிக்க தூதுவர் அமோஸ் ஹாக்ஸ்டைன் இருதரப்புக்கும் இடையே நடத்திய பேச்சுவார்த்தைகள் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. ஒரு புறம், அமைதி நிலவ வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பைடன் பேசிக் கொண்டிருக்கும் போது மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஹெஸ்பொலாவை தொடர்ந்து தாக்குவோம் என்று தனது எக்ஸ் தளத்தில் வீடியோவை பதிவிடுகிறார். “தனது வீட்டு வரவேற்பறையில் ஏவுகணையும் கொல்லைப்புறத்தில் ராக்கெட்டும் கொண்டுள்ள எவருக்கும் வீடே இருக்காது” என்று அவர் தெரிவித்திருந்தார். ஹெஸ்பொலாவை தாக்குவதற்கான இஸ்ரேலின் உரிமையை வெள்ளை மாளிகை ஆதரிப்பதாக கூறுகிறது. ஆனால், இஸ்ரேல் தலைமையுடன் அரசியல் உறவுகள் சுமூகமாக இல்லை என்பது கடந்த சில வாரங்களில் மீண்டும் வெளிப்படையாகத் தெரிகிறது. பேஜர் வெடிப்பு தாக்குதல்கள், அதன் பின் நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் முழு அளவிலான போருக்கு வழி வகுக்குமோ என்ற கவலை அளிக்கிறது. கடந்த வாரத்தில் சிக்கல் எழுந்த போது கூட, பைடன் மற்றும் நெதன்யாஹு இடையில் எந்தவித தகவல் பரிமாற்றம் குறித்த அறிவிப்புகளும் வெளிவரவில்லை. அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதல்களுக்கு பிறகு, அமெரிக்க செயலர் பிளிங்கன் அந்த பிராந்தியத்துக்கு பத்தாவது முறையாக சென்றார். ஆனால் முதல் முறையாக இஸ்ரேலுக்கு அவர் செல்லவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாகக் கூறி, இஸ்ரேல் மீது தாக்கம் செலுத்த வெள்ளை மாளிகையால் இயலவில்லை என்று நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் விமர்சகர்கள், கூறி வருகின்றனர். ஆனால் இதை மறுக்கும் அமெரிக்கா இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உதவுவது தனது கடமை என்று கூறுகிறது. இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 11 மாதங்களாக நடைபெற்று வரும் எல்லை தாண்டிய தாக்குதலில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படுவதை நோக்கி நகர்வது தான் என்று பைடன் எப்போதுமே நம்பிவந்துள்ளார். ஆனால் போர்நிறுத்தம் மிக கடுமையாக தடுத்து நிறுத்தப்படுகிறது. இரு தரப்பிலும் போர் நிறுத்தத்துக்கான விருப்பம் இருப்பதாக அறிகுறிகள் எதுவும் இல்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இதை எட்டுவதற்கான ‘அரசியல் விருப்பம்’ இல்லை பிளங்கன் சுட்டிக்காட்டியிருந்தார். தான் மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் பலனளிக்கப்போவதில்லை என்பதை அமெரிக்கா மறுக்கிறது. தனது பதவிக்காலம் முடிவடைய நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் பைடன், காஸாவில் போரை நிறுத்த ஒரு முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையை கைவிடவில்லை என்று கூறுகிறது. “இல்லை, அவர் நிச்சயமாக கைவிடவில்லை” என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்ஜேக் சுல்லிவன் கூறுகிறார். “இதில் சிரமங்களும் பின்னடைவுகளும் இருந்தன. (இஸ்ரேல்) பிரதமரை சம்மதிக்க வைப்பதில் சில சவால்கள் இருந்தன. ஹமாஸ் தலைவர் சின்வரை சம்மதிக்க வைப்பதில் சவால்கள் இருந்தன. ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வது என உறுதியாக இருக்கிறோம்” என்று சுல்லிவன் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்தார். “நியூ யார்க் நகரில் இந்த வாரம், பிற தலைவர்களுடன் கலந்து பேசி காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் குறித்த ஒரு ஒப்பந்தம் ஆகியவற்றை ஏற்படுத்த முயற்சி செய்வார். அதை விட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழு வீச்சிலான போரை தடுத்து நிறுத்தவும் முயல்வார்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் திரைமறைவில் என்ன நடக்கிறது? நியூ யார்க்கில் திரைமறைவில், ராஜதந்திர நடவடிக்கைகள் பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு மூத்த அரசு அதிகாரி, அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதலை தீர்ப்பதற்கான திட்டங்களை வழங்கி வருவதாக தெரிவித்தார். “சில தீர்க்கமான யோசனைகள் உள்ளன, அவற்றை நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் இந்த வாரம் ஆலோசித்து, இந்த விவகாரத்தில் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார். அந்த ‘தீர்க்கமான யோசனைகள்’ என்னவென்று கேட்டதற்கு பதிலளிக்காத அவர், அமெரிக்கா ஹெஸ்பொலாவுடன் நேரடியாக பேசாத போதும், நியூ யார்க்கில் கூடியுள்ள அதன் நட்பு நாடுகள் சில பேசுகின்றன என்று சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு, “ஹெஸ்பொலா என்ன நினைக்கிறது என்பது குறித்து மேலும் தெளிவான பார்வை இருக்கலாம். அதன் மூலம் இந்த யோசனைகளை பரிசோதித்துப் பார்க்கலாம்” என்றார். லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை அவர் வலியுறுத்தினார். ஹெஸ்பொலாவுடனான மோதலை தீவிரப்படுத்துவது மூலம், ஹெஸ்பொலாவை ஒரு ராஜ தந்திர ஒப்பந்ததுக்கு கட்டாயப்படுத்தலாம் என்றும், அதன் மூலம் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிலைமை கட்டுக்குள் வரும் என்றும் இஸ்ரேல் நம்புவதாக கூறப்படுகிறது. இந்த உத்திக்கு ‘தீவிரப்படுத்துதல் மூலம் மட்டுப்படுத்துதல்’ என்று பெயர். “எனக்கு தெரிந்தவரையில், குறைந்தபட்சம் சமீபக் காலத்தில், எந்தவொரு தீவிரப்படுத்தும் நடவடிக்கையும் மட்டுப்படுத்துதல் அல்லது நிலைமை சீராகும் நிலைக்கு இட்டுச் சென்றதாக நினைவில்லை” என்று அந்த அதிகாரி தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czd13ep80ddo
  13. பொதுத்தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு முரணானது?; மறுக்கிறது தேர்தல் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 3 25 SEP, 2024 | 04:02 PM பொதுத்தேர்தலை நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசியலமைப்புக்கு முரணானது என சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்களை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார். பொதுத்தேர்தலை நடத்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஏற்ற திகதி அல்ல. ஏனெனில் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் 5 வார கால இடைவெளி இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதற்கு, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலவகாசம் ஒக்டோபர் 11 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. குறித்த திகதியிலிருந்து வேட்மனு தாக்கல் செய்யும் திகதி உட்பட ஐந்துவார இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. எனவே இந்த திகதி சரியானது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194772
  14. ஜனாதிபதி தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இந்த எண்ணிக்கை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 0.85 சதவீதமாகப் பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் எனினும் கடந்த 21ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை, குறித்த ஆய்வின் பின்னர் கண்டறிய முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/rejected-votes-in-sl-presidential-elections-ec-1727241804#google_vignette
  15. காவல்துறை நியமனங்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் தீர்மானம் காவல் நிலைய கட்டளைத் தளபதிகள் நியமனத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தலையிட மாட்டார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (25) காலை பொறுப்பேற்ற பின்னர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கடந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய அரசியல் கலாசாரத்தை அவர்கள் மாற்றுவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். காவல்துறையினரின் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறானதொன்று இல்லை என்பதால் பழைய கலாசாரத்தை மாற்றி புதிய கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியாக நட்பாக உள்ளவர் எவரேனும் தவறாக செயற்பட்டாலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ”இவ்வாறானதொரு மாற்றத்தை இந்நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தனர், நாட்டு மக்கள் கடந்த காலங்களில் காவல்துறை மீது நம்பிக்கை இழந்திருந்தனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறையினரின் பொறுப்பு என்பதால் அதற்கு இடம் கொடுத்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் தவறான வழிமுறைகளை அகற்றி அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை சேவையை உருவாக்க வேண்டும்” எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/anura-govt-s-resolution-on-police-appointments-1727256331
  16. 25 SEP, 2024 | 03:34 PM இலங்கையின் வடக்கு - கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் இருந்தும் சுமார் 100 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத் திட்டத்துக்கான ரூபா 30 இலட்சம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத்தூதுவர் ஶ்ரீ சாய்முரளி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உதவித் தொகைக்கான காசோலையைக் கையளித்தார். இந்தியத் தூதரகத்தின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதித் துணைத் தூதுவர் ஶ்ரீ கே. நாகராஜன் மற்றும் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், அதிகாரிகள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், பயன்பெறும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/194768
  17. சுமந்திரனின் கருத்துக்கு தமிழர் தரப்பலிருந்து எழுந்த கேள்வி தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்றால் தமிழ் மக்கள் பொருட்படுத்தியது யாரை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவு படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்கள் மோதிய நிலையில், சிங்கள பேரின வாதம் கீழ் நிலைக்கு சென்றுள்ள பின்னணியில் பேரம் பேசலுக்கு இந்த அதிகார பகிர்வு போட்டி பயன்படுத்தியிருக்க வேண்டும், அதற்கு மாறாக அரியநேத்திரனை வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக சுமந்திரனின் கருத்து அமைந்துள்ளது. நாங்கள் ஒன்றை கேட்க விரும்புகிறோம், சுமந்திரனும் அவரை சேர்ந்தவர்களும் சஜித் பிரேமதாசவிடம் பேசிய பேரம் பேசலின் இன்றைய நிலவரம் என்ன? தயவு செய்து சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தமிழ் தேசியம் பேசுகிற அனைவரும் விடைகொடுக்க வேண்டும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி விடை கொடுக்க வேண்டும். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்..... https://ibctamil.com/article/tamil-candidate-issue-itak-politics-sumanthiran-1727267179
  18. வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம் புதிய இணைப்பு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவிப் பிரமாணம் தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாம் இணைப்பு வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று (25) ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக இவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாத காலம் இருந்தபோது தனது பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இணைப்பு அநுர தலைமையில் அமைந்த புதிய அரசாங்கத்தின் 09 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake ) இன்று (25) வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனாதிபதி அந்த வகையில், வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு புதிய ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பல அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/new-governors-for-9-provinces-appointed-today-1727217909
  19. Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 04:37 PM பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளின் போது அரசியல் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தவேளை நாங்கள் உதவ முன்வந்தோம். வெளிப்படையாக சொல்வதென்றால் யாரும் உதவ முன்வராதபோது நாங்கள் உதவமுன்வந்தோம் என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இதனை செய்தோம் என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். தக்க தருணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் உதவினோம் 4.5 மில்லியன் டொலர் வலுவான ஆதரவை வழங்கினோம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்(கேள்வி கேட்டவர் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என தெரிவித்தார்) இலங்கையில் அரசியல் மாற்றங்கள் குறித்து இலங்கையே தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல்ரீதியாக என்ன நடைபெறுகின்றது என்பதை அந்த நாட்டின் அரசியலே தீர்மானிக்கவேண்டும். இறுதியில் எங்களின் ஒவ்வொரு அயல்நாட்டிற்கும் அவர்கள் இயங்கும் செயற்படும் வழிமுறையுள்ளது. எங்களிற்கு எந்த இயக்கவியல் சரியானது என நாங்கள் கருதுகின்றோமோ அதனை அவர்கள் பின்பற்றவேண்டும் என நாங்கள் பரிந்துரைப்பது எங்கள் நோக்கமல்ல என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது உண்மையான உலகம், நாடுகள் ஒன்றுக்கொன்று அனுசரித்து செயற்படுவதற்கான வழிகளை கண்டுபிடிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளின் அரசியல் நிலப்பரப்பை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயலவில்லை, ஒவ்வொரு அயல்நாடுகளின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயல்வதில்லை, ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு இயக்கவியலை கொண்டிருக்கும் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அயல்நாடுகளின் இயக்கவியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் இந்த உறவுகளை கையாள்வதற்கான இந்தியாவின் திறன் குறித்து நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் அயலில் ஒன்றுக்கொன்று சார்ந்திருந்தல், பரஸ்பர நன்மைகள் மற்றும் பழகும் திறன் ஆகியவை எங்கள் நலன்களிற்கு உதவும் என்பது குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றேன். இந்த உண்மைகள் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும், இதுவே வரலாறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194782
  20. முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் பயன்படுத்திய பல வாகனங்கள் மீள கையளிப்பு Published By: DIGITAL DESK 3 25 SEP, 2024 | 02:36 PM முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது. அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194764
  21. WWE, அழகிப் போட்டி, ரியல் எஸ்டேட் என பிசியாக இருந்த டிரம்ப் அரசியலில் நுழைந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் பதவிக்கு தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிடுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிகவும் பகட்டான கோடீஸ்வரராக இருந்தார். டிரம்ப் நியூயார்க்கில் ரியல் எஸ்டேட் ஜாம்பவானாக வலம் வந்தார். அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முந்தைய 2015 முதல் 2016 வரையிலான பத்தாண்டுகளில் அவரது வாழ்க்கை பற்றி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரவலாக பகிரப்பட்டது. எனவே அவர் பிரபலமான பிம்பமாக மாறினார். அவரது செல்வாக்கு மற்றும் யதார்த்தமான பிரசார பாணி, அனுபவம் வாய்ந்த பல அரசியல்வாதிகளை தோற்கடிக்க உதவியது. ஆனால் அவரது சர்ச்சை நிறைந்த பதவிக்காலம் அடுத்த தேர்தலில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மிக விரைவில் அவரை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றியது. இப்போது 78 வயதாகும் டிரம்ப், தடைகளை தாண்டி அரசியல் மறுபிரவேசத்தை மேற்கொண்டுள்ளார். இந்த மறுபிரவேசம் அவரை வெள்ளை மாளிகைக்கு மீண்டும் அழைத்து செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபரின் வாரிசு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் 1971-ஆம் ஆண்டில் தன் குடும்ப வணிகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். நியூயார்க் ரியல் எஸ்டேட் அதிபர் பிரெட் டிரம்பின் (ஃபிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப் சீனியர்) நான்காவது மகன் டொனால்ட் டிரம்ப். டிரம்ப் 13 வயதில், பள்ளியில் தவறான நடத்தைகளில் ஈடுபட்டதால் ராணுவ அகாடமிக்கு அனுப்பப்பட்டார். குடும்பத்தில் வசதி இருந்த போதிலும், அவர் தனது தந்தையின் நிறுவனத்தில் அடிமட்டப் பணியாளராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் பட்டம் பெற்றார். அவரது மூத்த சகோதரர் ஃப்ரெட் (ஃபிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப் ஜூனியர்) விமானியாக முடிவு செய்த பிறகு, தந்தையின் தொழிலை பார்த்துக் கொள்ளும் இடத்திற்கு டிரம்ப் வந்தார். டிரம்பின் சகோதரர் ஃப்ரெட் டிரம்ப் குடிப்பழக்கத்தால் 43 வயதில் உயிரிழந்தார். இந்த காரணத்தினால்தான் டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும் மது மற்றும் சிகரெட்டைத் தவிர்த்தார். தந்தையின் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு தனது தந்தையிடமிருந்து சிறிய தொகையை (1 மில்லியன் டாலர்) கடனாக பெற்று ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டதாக கூறுகிறார் டிரம்ப் . நியூயார்க் நகரத்தில் தனது தந்தையின் பரந்த அளவிலான குடியிருப்பு மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிட டிரம்ப் அவருக்கு உதவினார், மேலும் 1971ஆம் ஆண்டில் அவர் வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், அதை `டிரம்ப் அமைப்பு’ என்று மறு பெயரிட்டார். 1999-ஆம் ஆண்டில், அவரது தந்தை காலமானார். டிரம்ப், "தந்தை எனது உத்வேகம்" என்று குறிப்பிடுவது வழக்கம். `டிரம்ப்’ என்னும் பிராண்ட் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தன் நிறுவனத்தின் கவனத்தை புரூக்ளின் மற்றும் குயின்ஸில் இருந்து மன்ஹாட்டனுக்கு மாற்றினார் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், அவரது குடும்ப வணிகம், புரூக்ளின் மற்றும் குயின்ஸில் உள்ள குடியிருப்பு திட்டங்களில் இருந்து முன்னேறி பளபளப்பான மன்ஹாட்டன் திட்டங்களாக மாறியது. புகழ்பெற்ற ஐந்தாவது அவென்யூ, டிரம்ப் டவரின் இல்லமாக மாறியது, இது அவரின் மிகவும் பிரபலமான சொத்து. பல ஆண்டுகளாக இங்குதான் அவர் வசிக்கிறார். `டிரம்ப்’ என்ற பிராண்ட் பெயரைக் கொண்ட பிற சொத்துகள், கேசினோக்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஹோட்டல்கள் - அட்லாண்டிக் சிட்டி, சிகாகோ மற்றும் லாஸ் வேகாஸ் முதல் இந்தியா, துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் வரை அமைக்கப்பட்டன. டிரம்ப் பொழுதுப்போக்கு துறையிலும் கால் பதித்து வெற்றி கண்டார். பொழுதுபோக்கு உலகில் ஒரு நட்சத்திரமாக அவரது எழுச்சி தொடர்ந்தது. அழகுப் போட்டிகள் நடத்தும் உரிமையாளராக, மிஸ் யுனிவர்ஸ், மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் யுஎஸ்ஏ ஆகியவற்றை நடத்துவதில் வெற்றி பெற்றார். பின்னர் என்பிசி சேனலின் ரியாலிட்டி நிகழ்ச்சியான `தி அப்ரெண்டிஸின்’ (The Apprentice) தொகுப்பாளராகவும் இருந்தார். 14 சீசன்களுக்கு மேல், அப்ரண்டிஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அவரது வணிக சாம்ராஜ்யத்தில் நிர்வாக ஒப்பந்தத்திற்காக போட்டியிட்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்திய "You're fired!" என்னும் வரி "டொனால்ட்" என்ற பெயரை பிரபலப்படுத்தியது. டிரம்ப் பல புத்தகங்களை எழுதியுள்ளார், திரைப்படங்கள் மற்றும் மல்யுத்த நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். பானங்கள் முதல் ஆடைகள் வரை பல பொருட்களின் வணிகத்தில் ஈடுபடுள்ளார். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அவரது நிகர சொத்து மதிப்பு குறைந்துள்ளது, ஃபோர்ப்ஸ் கூற்றுபடி, டிரம்பின் நிகர சொத்து மதிப்பு சுமார் $4 பில்லியன். டிரம்ப் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் வணிக திவால் நோட்டீஸ்களை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது பல வணிக முயற்சிகள் சரிவை சந்தித்தன. கூடுதலாக, அவர் தனது வரிப் பதிவுகளைப் பற்றிய விசாரணைகளை தவிர்த்துவிட்டார். டிரம்ப் பல ஆண்டுகளாக வருமான வரி ஏய்ப்பு செய்தார் என்றும், நிதி இழப்புகளை சந்தித்தார் என்றும் 2020-ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் பிரபலமும் மீடியா புகழும் அவரது வணிக சாம்ராஜ்யத்துடன் சேர்ந்தே விரிவடைந்தது டிரம்பின் குடும்பம் டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது வெளியில் விவாதிக்கப்பட்டது, பரவலாகப் பேசப்பட்டது. அவரது முதல் மனைவி இவானா ஜெல்னிகோவா மிகவும் பிரபலமானவர். அவர் விளையாட்டு வீராங்கனையும் மாடலும் ஆவார். டிரம்ப்-இவானா தம்பதிக்கு டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் ஆகிய மூன்று பிள்ளைகள். 1990-ஆம் ஆண்டில் அவர்களுக்கு விவாகரத்தானது. விவாகரத்துக்கான அவர்களின் சர்ச்சைக்குரிய சட்டப் போராட்டம் ஊடகங்களில் கிசுகிசு கட்டுரைகளில் இடம்பிடித்தது. மறைந்த இவானா, டிரம்ப் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அந்த கருத்தில் இருந்து அவர் பின்வாங்கினார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான காட்சிகள், டிரம்பைப் பற்றி வெளியான புதிய திரைப்படத்தில் இடம்பெற்றது. டிரம்ப் 1993-ஆம் ஆண்டில் நடிகை மார்லா மேப்பிள்ஸை மணந்தார். குழந்தை (டிஃப்பனி) பிறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1999-ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் `தி அப்ரெண்டிஸ்’ என்னும் நிகழ்ச்சியின் 14 சீசன்களை தொகுத்து வழங்கினார். டிரம்பின் தற்போதைய மனைவி முன்னாள் ஸ்லோவேனியா மாடலான மெலனியா நாஸ். அவர்கள் 2005-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் மகன் பரோன் வில்லியம் டிரம்ப் சமீபத்தில் 18 வயதை நிறைவு செய்தார். பாலியல் அத்துமீறல் மற்றும் திருமணம் தாண்டிய உறவு தொடர்பான குற்றச்சாட்டுகள் டிரம்பை பல காலமாக பின்தொடர்கின்றன. எழுத்தாளர் ஈ ஜீன் கரோலின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டைப் டிரம்ப் நிராகரித்ததன் மூலம், அவரை அவதூறு செய்ததாக இரண்டு வெவ்வேறு ஜூரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிட்டனர். கரோலினுக்கு $88 மில்லியன் தொகையை டிரம்ப் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர். ஆனால் டிரம்ப் மேல்முறையீடு செய்தார். 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் குற்றம்சாட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இவானா ஜெல்னிகோவா உடனான அவரது திருமணம் மற்றும் விவாகரத்து பொதுவெளியில் பேசுபொருளானது அரசியல் குறித்த பார்வை 1980 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், 34 வயதான டிரம்ப் அரசியலை "மிகவும் சராசரி வாழ்க்கை" என்று விவரித்தார். "மிகவும் திறமையான மக்கள்" அதற்கு பதிலாக வணிக உலகத்தை தேர்வு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். 1987 ஆம் ஆண்டு அவர் அதிபர் பதவிக்கான முயற்சியை கிண்டல் செய்தார். ஆனால் திருப்புமுனையாக, 2000-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் நுழைய நினைத்தார். அடுத்த ஆண்டு தேர்தலில் ரிஃபார்ம் பார்ட்டியின் உறுப்பினராகவும் போட்டியிட நினைத்தார். பின்னர் மீண்டும் 2012-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி பக்கம் சாய்ந்தார். பராக் ஒபாமா அமெரிக்காவில்தான் பிறந்தாரா? என்று அவர் பிறப்பிடத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்திய சதிக் கோட்பாட்டை (Birtherism) மிகவும் வெளிப்படையாக ஆதரித்தவர்களில் டிரம்ப் ஒருவராக இருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை, 2016 வரை அது பொய் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜூன் 2015 இல் அதிபர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை முதன்முதலில் அறிவித்தபோது "அமெரிக்கர்களின் கனவுகளை மீண்டும் பெரிதாகவும் சிறப்பாகவும் கொண்டு வருவேன்" என்று உறுதியளித்தார். அவரது அற்புதமான உரையின் போது, அவர் தனது செல்வம் மற்றும் பொருளாதார வலிமையைப் பற்றி பெருமையாகக் கூறினார், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் அமெரிக்காவிற்கு கடத்துவதாக மெக்சிகோ மீது குற்றம் சாட்டினார். எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு மெக்ஸிகோவை பணம் கொடுக்கச் செய்வதாக உறுதியளித்தார். தீவிர ஆதரவாளர்கள் ஒருபுறம், கடுமையான எதிர்ப்பாளர்கள் மறுபுறம் என விவாத மேடை ஊடக கவனத்தை பெற்றது. விவாத மேடையில் ஆதிக்கம் செலுத்தும் காட்சிகள் மற்றும் சர்ச்சை கிளப்பும் கொள்கைகள் ஆகியவை அபிமான ரசிகர்களையும் கடுமையான விமர்சகர்களையும் சம அளவில் ஈர்த்தது, அத்துடன் பெருமளவில் ஊடக கவனத்தையும் ஈர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015-16 குடியரசுக் கட்சியின் தேர்தலில் டிரம்ப் ஆதிக்கம் செலுத்தினார் 'அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றுவோம்' எனும் பிரசார முழக்கத்தை எழுப்பினார். , ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை எதிர்கொள்வதற்கு குடியரசுக் கட்சியில் இருந்த கடந்த கால போட்டியாளர்களை அவர் எளிதாக ஒன்றிணைத்தார். பாலியல் குற்றம் பற்றி தற்பெருமை பேசும் ஆடியோ பதிவு வெளியானது உட்பட புதிய பிரசாரம் சர்ச்சையில் சிக்கியது. அவர் பொதுத் தேர்தல் முழுவதும் கருத்துக் கணிப்புகளில் பின் தங்கியிருந்தார். ஆனால் டிரம்ப் ஒரு மூத்த அரசியல்வாதிக்கு எதிரான அவரது அற்புதமான வெற்றியின் மூலம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கினார். அவர் 2017-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதியன்று அமெரிக்க 45வது அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் அதிபர் பதவியானது அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நிச்சயமற்ற காலமாக இருந்தது டிரம்ப் பதவியேற்ற முதல் சில மணிநேரங்களில் இருந்தே, அவர் நிகரற்ற நாடகத்தனமான செயல்களை மேற்கொண்டார். வெளிநாட்டு தலைவர்களுடன் வெளிப்படையாக மோதினார். பெரியளவிலான காலநிலை மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்து விலகினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதித்தார். பிற கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். சீனாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கினார். வரிவிதிப்புகளில் மாற்றம் செய்தார். அவர், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகளை மறுவடிவமைத்தார். ஒரு சிறப்பு ஆலோசகர் 2016 இல் ரஷ்யாவிற்கும் டிரம்ப் பிரசாரக் குழுவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கூறுகளை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்தார். கணினி ஹேக்கிங் மற்றும் நிதிக் குற்றங்கள் போன்ற குற்றங்களில் 34 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். ஆனால் டிரம்ப் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. விசாரணையில் ரஷ்யா மற்றும் டிரம்ப் பிரசாரக் குழு இடையே தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் விரைவில், வரலாற்றில் டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட மூன்றாவது அமெரிக்க அதிபராக மாறினார். எதிர்க்கட்சி போட்டியாளரான ஜோ பைடன் மீது அவதூறுகளை கூற வெளிநாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்திய பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் குடியரசுக் கட்சி தலைமையிலான செனட் அவை அவருக்கு ஆதரவாக இருந்தது. 2020 ஆண்டு தேர்தலின் போது கொரோனா தொற்றுநோய் சூழல் உருவானது. தொற்றுநோயால் ஏற்பட்ட இறப்புகள் அதிகளவில் இருந்ததால், அமெரிக்கா நெருக்கடியை சந்தித்தது. இதனால் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். உடலில் கிருமிநாசினியை செலுத்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிக்கப்படுமா என்பது பற்றிய ஆராய்ச்சியை பரிந்துரைப்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அவர் விமர்சிக்கப்பட்டார். டிரம்புக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அக்டோபரில் அவர் பிரசாரப் பணியில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் அவரது தற்போதைய மனைவி மெலனியா டிரம்புக்கு 18 வயதில் ஒரு மகன் இருக்கிறார் (பரோன் டிரம்ப்) அந்த தேர்தலில், அவர் பைடனிடம் 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நவம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 க்கு இடையில் தேர்தல் மோசடி மற்றும் வாக்குகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்; இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் தோல்வியடைந்தன. முடிவுகளை ஏற்க மறுத்து, டிரம்ப் ஜனவரி 6 ஆம் தேதி வாஷிங்டனில் ஆதரவாளர்களைத் திரட்டினார். பைடனின் வெற்றியை காங்கிரஸ் முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் ஆதரவாளர்களை கேபிட்டல் அலுவலகத்தில் ஒன்றிணைய வலியுறுத்தினார். அந்த பேரணி ஒரு கலவரமாக மாறியது. அவரது அரசியல் வரலாற்றின் இரண்டாவது பெரிய குற்றச்சாட்டு எழ அந்த நிகழ்வு வழிவகுத்தது. அரசியல் மறுபிரவேசம் டிரம்பின் அரசியல் வாழ்க்கை கேபிட்டல் நிகழ்வுக்கு (Capitol attack) பிறகு முடிவுக்கு வந்துவிடும் என்று பலர் நினைத்தனர். அவரின் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சபதம் செய்தனர். அவரது நெருங்கிய கூட்டாளிகள் கூட அவரை பகிரங்கமாக ஒதுக்கிவிட்டனர். அவர் அதிபர் பதவியேற்பு விழாவைத் தவிர்த்துவிட்டு, தனது குடும்பத்துடன் ஃபுளோரிடாவிற்கு சென்றார். ஆனால் அவருக்கு ஆதரவாக இருந்த விசுவாசமான ஒரு சிலரால், குடியரசுக் கட்சியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டார். நீதிமன்றத்திற்கு அவர் பரிந்துரைத்த மூன்று வலதுசாரி நீதிபதிகள் கருக்கலைப்பு உரிமை விவகாரத்தில் ஒரு பழமைவாத கருத்தை உறுதிப்படுத்தினர். 2022 இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் மோசமான தோல்விக்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போதிலும், டிரம்ப் அதிபருக்கான போட்டியில் முன்னேறினார். அவரது கட்சியின் முன்னணி வேட்பாளராக ஆனார். அவரது முன்னாள் துணை அதிபர் உட்பட பலர் அவருக்கு எதிராக சவால் விடுத்தனர். ஆனால் டிரம்ப் தடைகளை முறியடித்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார். விவாத மேடையில் பைடனை வெற்றிகரமாக எதிர்கொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் தேர்தலில் போட்டியிடுகையில், நான்கு கிரிமினல் வழக்குகளில் 91 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்த வழக்குகளை தாமதப்படுத்தும் அவரது உத்தி பெரும்பாலும் வெற்றி பெற்றது. ஜூலை 13-ஆம் தேதியன்று, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் ஒரு பிரசார பேரணியின் போது 20 வயது இளைஞர் ஒருவர் டிரம்பை கொல்ல முயன்றார். அதில், டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் வெகுவாக புகழப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அதிகாரப்பூர்வமாக தேர்வானார். அதிபர் வேட்பாளராக டிரம்ப் இம்முறையும் பைடனை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பைடன் வரலாற்று ரீதியாக செல்வாக்கற்ற அதிபர். அவரின் பதவிக் காலம் பல்வேறு பாராட்டுகளையும் சில விமர்சனங்களையும் சந்தித்தது. கொரோனா சூழலுக்கு பிந்தைய பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் அவருக்கு சாதகமாக இருந்தன. ஆனால் அதிக பணவீக்கம், குடியேற்ற கொள்கைகள், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் குழப்பம் நிலவியது. பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்கி தனது துணை அதிபர் கமலா ஹாரிஸை ஆதரிக்க தொடங்கியதில் இருந்து, அரசு நிர்வாகத்தின் தோல்விகளுக்கு கமலா ஹாரிஸை காரணம் காட்டி டிரம்ப் விமர்சித்தார். கமலா ஹாரிஸ் லட்சக்கணக்கான டாலர்களை நன்கொடையாக திரட்டியிருந்தாலும், இருதரப்புக்குமான போட்டி மதில் மேல் பூனை என்ற நிலையில் தான் உள்ளது என்பதை தேசிய கருத்துக்கணிப்புகள் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நவம்பர் 5-ம் தேதி "நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேதி" என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c3wpxn35vxgo
  22. 25 SEP, 2024 | 02:09 PM சட்டமொழுங்கை பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்க்ள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார். பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டினை வழங்குவதே தனது அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினை என தெரிவித்துள்ள அவர் கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டிற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன,ஒக்டோபர் 15 முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்,அந்த காலத்திற்குள் இந்த விடயத்திற்கு தீர்வை காண விரும்புகின்றேன்,என அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் மீதான பொதுமக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்தும்போது செய்த தவறுகளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும், என விஜித ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவேன் எந்த அரசியல் தலையீடும் இருக்ககூடாது அரசாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194762
  23. ”உங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்திய மீனவர்களை விடுதலை செய்யுங்கள்" - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் 25 SEP, 2024 | 01:50 PM இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக்க தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நல்லெண்ண மற்றும் நேச சமிக்ஞையாக இலங்கை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அவர்களின் அனைத்து படகுகளையும் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்கும் அவரது நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியை சேர்ந்த 37 மீனவர்களையும் விடுதலை செய்வதன் மூலம் சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் 80 மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்தியா பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஆனால் எந்த நாடும் இலங்கையை போல தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொள்வதில்லை, கைதுசெய்வதில்லை, அபராதம் விதிப்பதில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தரப்பின் சீற்றம் கொள்ளவைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன, பிராந்தியத்தின் பொறுமையும் அமைதியும் சோதனை செய்யப்படுகின்றது, வங்களா விரிகுடா போன்ற பொதுக்கடலில் மீனவர்களை குற்றவாளிகள் போல நடத்த முடியாது என இலங்கை ஜனாதிபதிக்கான கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அது கடந்தகாலத்தில் இடம்பெற்றது தற்போது நீங்கள் ஆட்சிபொறுப்பில் இருக்கின்றீர்கள் புதிய ஆரம்பம் குறித்து வாக்களித்துள்ளீர்கள், உங்கள் அதிகாரத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194761

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.