Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் 25 SEP, 2024 | 12:53 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194753
  2. வடக்குக்கு ரயில் சேவை எப்போது? வெளியானது அறிவிப்பு வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் மார்க்க பகுதி நவீனமயமாக்கல் காரணமாக மூடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் காரணமாக தேர்தல் கடமைகளுக்காக வரும் உத்தியோகத்தர்களுக்கும் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்படி கடந்த 19, 20, 21, 22 ஆகிய தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை பல விசேட ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த மார்க்கத்தில் வழமையாக ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் மார்க்கத்தின் சமிக்சை அமைப்பை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படாததே இதற்குக் காரணம் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மஹவயில் இருந்து அனுராதபுரம் வரை 47 ரயில்வே கடவைகள் உள்ளதுடன், 15 ரயில்வே கடவைகள் பிரதான வீதிகளுக்கு குறுக்கே அமைந்துள்ளன. அவற்றில் 09 ரயில்வே கடவைகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உள்ள பிரதான வீதிகளை கடக்கின்றன. பிரதான வீதிகளின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கடவுப்பாதைகளில் ரயில் அந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கினால் பாதுகாப்பு கடவைகளை இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய ரயில்வே கடவைகளுக்கு எச்சரிக்கை பலகைகளை நிறுவ வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக ரயில்வே சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான 22 தினசரி ரயில் சேவைகளையும் முன்னெடுக்க முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சமிக்சை அமைப்பு நவீனமயப்படுத்தி மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309918
  3. Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 12:27 PM இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை. அதன் இறைமையை மதிப்பது என்ற கொள்கையை பின்பற்றியவாறு இலங்கையின் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அவர், இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடு என்ற அடிப்படையில் சீனாவும் இலங்கையும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கௌரவத்துடன் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநயாக்கவிற்கு சீனா தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது, சீன ஜனாதிபதி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் கடன்களை திருப்பி செலுத்துவது குறித்த இலங்கையின் உறுதிப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இலங்கையும் சீனாவும் நீண்டகால நட்புறவை பகிர்ந்துகொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். அமைதியான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளின் உணர்வை நிலைநிறுத்துவதற்கும், இரு நாடுகளிற்கு இடையிலான பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்து செல்வதற்கும், எமது அபிவிருத்தி உத்திகளிற்கு இடையில் அதிக பட்ச ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும், உயர்தர புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், ஜனாதிபதி திசநாயக்க மற்றும் அவரது நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194754
  4. இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும்; இந்தியாவிலிருந்து அனுரவுக்கு வந்த கடிதம் தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நல்லெண்ண மற்றும் நேச சமிக்ஞையாக இலங்கை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அவர்களின் அனைத்து படகுகளையும் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்கும் அவரது நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியை சேர்ந்த 37 மீனவர்களையும் விடுதலை செய்வதன் மூலம் சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்80 மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்தியா பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல்எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது ஆனால் எந்த நாடும் இலங்கையை போல தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொள்வதில்லை ,கைதுசெய்வதில்லை,அபராதம் விதிப்பதில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தரப்பின் சீற்றம் கொள்ளவைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன,பிராந்தியத்தின் பொறுமையும் அமைதியும் சோதனை செய்யப்படுகின்றது,வங்களா விரிகுடா போன்ற பொதுக்கடலில் மீனவர்களை குற்றவாளிகள் போல நடத்த முடியாது என இலங்கை ஜனாதிபதிக்கான கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அது கடந்தகாலத்தில் இடம்பெற்றது தற்போது நீங்கள் ஆட்சிபொறுப்பில் இருக்கின்றீர்கள் புதிய ஆரம்பம் குறித்து வாக்களித்துள்ளீர்கள்,உங்கள் அதிகாரத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309912
  5. மொசாட் தலைமையகத்தை நோக்கி ராக்கெட் வீசிய ஹெஸ்பொலா - இஸ்ரேல் என்ன செய்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி முதன் முறையாக ஹெஸ்பொலா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை, ஹெஸ்பொலா அமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. டெல் அவிவ் நகரை நோக்கி காலை வேளையில் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக ஹெஸ்பொலா அந்த அறிக்கையில் கூறியிருந்தது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை குறிவைத்ததாக ஹெஸ்பொலா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறினார். லெபனானில் அண்மையில் நடந்த பேஜர் மற்றும் வாக்கிடாக்கி தொடர் வெடிப்புகளின் பின்னணியில் மொசாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு இஸ்ரேலே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டாலும், இஸ்ரேல் அதற்கு பொறுப்பேற்கவில்லை. டெல்அவிவ் மெட்ரோபாலிட்டன் பகுதியை ஹெஸ்பொலா குறிவைத்தது இதுவே முதன் முறை என்று இஸ்ரேலிய ஊடகமான ஹாரெட்ஸ் ஒய்நெட் கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தகவல் டெல் அவிவ் நகரைச் சுற்றியும், மத்திய இஸ்ரேலிலும் வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. எனினும், அந்த ஏவுகணை இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், இதில் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹெஸ்பொலா செலுத்திய ராக்கெட் ஒன்று டெல் அவிவ் பகுதியை வந்தடைந்தது இதுவே முதன் முறை என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். டெல் அவிவ் நகரும், அதன் சுற்றுப்புறமுமே இஸ்ரேலில் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியாகும். அத்துடன், சிரியாவில் இருந்து வந்த டிரோன் ஒன்றையும் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. கலீலி கடல் பகுதியில் அந்த டிரோனை தங்களது போர் விமானங்கள் அழித்தாக இஸ்ரேல் ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான். 2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர். அதேநேரத்தில், ஹெஸ்பொலா 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர். முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் சூழலில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இஸ்ரேல் தாக்குதலில் பலியான 492 பேரில் 35 பேர் குழந்தைகள், 58 பேர் பெண்கள் என்றும், 1,645 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது குறித்து எந்த விவரத்தையும் அது வெளியிடவில்லை. படக்குறிப்பு, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் கரும்புகை எழுந்த காட்சி ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்" என்றார். "இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறினார். ஹெஸ்பொலா நினைத்துப் பார்க்க முடியாத பல தாக்குதல்களை அதன் மீது இஸ்ரேல் நடத்தியிருப்பதாக அவர் கூறினார். ஹெஸ்பொலா குழுவின் துணைத் தலைவர் நைம் காசிம், "அச்சுறுத்தல்கள் எங்களைத் தடுக்காது. அனைத்து சாத்தியமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட மூத்த தளபதியின் இறுதிச் சடங்கில் ஹெஸ்பொலா துணைத் தலைவர் ஷேக் நைம் காசிம். கொல்லப்பட்ட இப்ராஹிம் அகில் யார்? இப்ராஹிம் அகில் இறுதிச் சடங்கின் போது, பெரியளவில் திரண்ட மக்கள் சவப்பெட்டியை ஏற்றி சென்ற டிரக்கை பின் தொடர்ந்தார்கள். இறுதிச் சடங்கில் துக்கம் மற்றும் கோபத்திற்கு மத்தியில், அமெரிக்கா எதிர்ப்பு உள்ளிட்ட முழக்கங்களை ஹெஸ்பொலா ஆதரவாளர்கள் எழுப்பினர். பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் ஒரு சதுக்கத்தில் இறுதி சடங்கு நடந்தது. இப்ராஹிம் அகில் மற்றும் அவருக்கு கீழ் இயங்கிய 15 பேர் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்ராஹிம் அகில் தலைக்கு சுமார் 58 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. 1980 களில் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்கள் மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. லெபனானை போருக்குள் இழுக்கும் இஸ்ரேல்? வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குடும்பங்கள் உட்பட சுமார் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது சம்பவம் நடந்த இடத்தில், உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பி ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்பில் இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர். ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய லெபனான் பொதுப்பணித்துறை அமைச்சர் அலி ஹாமி - இஸ்ரேல் எங்கள் பிராந்தியத்தை போருக்குள் இழுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர் "லெபனான் போரை நாடவில்லை," என்றார். “லெபனான் மக்களும் கூட போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் போருக்கு வாருங்கள் என்று எங்களை அழைக்கிறது” என்றார். போர் மூளும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது. பார்ப்போம்" என்று பதிலளித்தார். ஹெஸ்பொலா லெபனானில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் ராணுவ அமைப்பு ஆகும். இந்த ஷியா முஸ்லீம் அமைப்பு சிறந்த ஆயுத பலம் கொண்டது. இது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் 2023-ஆம் ஆண்டு 8 அக்டோபர் 8-ஆம் தேதி அதிகரித்தது. காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய மறுநாள், ஹெஸ்பொலா இஸ்ரேலிய நிலைகளை தாக்கியது. தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் 60,000 பேர் ஹெஸ்பொலாவின் தினசரி ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹைஃபாவின் பிரதான மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர் சர்வதேச தலைவர்கள் எச்சரிக்கை சமீபத்திய எல்லை தாண்டிய தாக்குதல்கள் சர்வதேச அளவில் புதிய கலக்கத்தை தூண்டியுள்ளது. சிஎன்என் ஊடகத்திடம் பேசிய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில்’ இருப்பதாக பதிவிட்டுள்ளார். "இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும்" என்றார். ஐரோப்பிய ஒன்றியம் இது "மிகவும் கவலைக்குரியது" என்று கூறியது. பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதிகரித்து வரும் மோதல் இராக்கில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் உட்பட பல எறிகணைகள் சனிக்கிழமை ஒரே இரவில் இஸ்ரேல் மீது ஏவப்பட்டவை என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு மருத்துவமனைகள் நோயாளிகளை நிலத்தடி தளங்களுக்கு நகர்த்தி வருகின்றனர். வடக்கு இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. பத்து நபர்களுக்கு மேல் வெளியில் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்த உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹைஃபாவின் புறநகரில் உள்ள கிராய்ட் பியாலிக்கில் வசிக்கும் ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், "சுமார் 06:30 மணியளவில் ஒரு அலாரம் கேட்டது, பின்னர் உடனடியாக ஒரு மிகப் பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. இங்கிருந்து மூன்று அல்லது நான்கு வீடுகள் தள்ளி இது நிகழ்ந்தது. எங்கள் வீட்டில் பிரதான அறையில் ஜன்னல்கள் முற்றிலும் நாசமாயின" என்றார். இந்த வார தொடக்கத்தில், லெபனான் முழுவதும் இரண்டு நாட்களில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். வியாழன் அன்று, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தாக்குதல்களுக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டினார், இஸ்ரேல் "எல்லா சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாகக் கூறி இனி அவர்களுக்கு தண்டனை மட்டுமே பதில் சொல்லும்" என்றும் அவர் கூறினார். ஆனால் இஸ்ரேல் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது லெபனானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய பயண ஆலோசனையை வழங்கியது. பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், "வணிக விமான சேவைகள் இருக்கும் போதே லெபனானை விட்டு வெளியேற வேண்டும்" என்று தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. அண்டை நாடான ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் அதன் குடிமக்களுக்கு இதேபோன்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. லெபனானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் வெளியேறுமாறு அது வலியுறுத்தியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4g5944vxz7o
  6. Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 02:48 PM By SHIHAR ANEEZ ECONOMYNEXT – இலங்கையின் திறந்த பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும்போது மார்க்சிச ஜேவிபியின் செயற்பாட்டாளர் போன்று சமூக அநீதிகளிற்கு எதிராக கருத்து தெரிவித்தவேளை அவர் கேலி செய்யப்பட்டார். எனினும் இலங்கையின் பிரதமராவேன் என ஹரிணி ஒருபோதும் எண்ணவில்லை. கொழும்பின் உயர்குழாமை சேர்ந்த குடும்பத்தின் இளையவரான 55 வயதான ஹரிணி இலங்கையின் 16 வது பிரதமராக பதவிபிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் அவர். பிஷப் கல்லூரியின் பழைய மாணவியான அவர் இளவயதிலேயே அநீதிக்கு எதிராக குரல்கொடுத்தவர். அது தனது தந்தையிடமிருந்து சுவீகரித்துக்கொண்ட விடயம் என அவர் கருதுகின்றார். 1990 இல் சமூக சுகாதார உத்தியோகத்தராக பணியாற்ற ஆரம்பித்தவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட - எயிட்சினால் பாதிக்கப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் அவர் பணியாற்றினார். இது அவர் சமூகத்தின் பலதரப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளும் நிலையை ஏற்படுத்தியது, தொழில்சார் வல்லுனர்கள் முதல் கல்வியறிவற்றவர்கள் வரை, வறியவர்கள் முதல் செல்வந்தர்கள் வரை, உயர் குழாத்தினர் முதல் மிகவும் வறுமையில் உள்ளவர்கள் என பலதரப்பட்டவர்களை எதிர்கொண்டார். எனக்கு குழந்தையில்லாத போதிலும் நான் முழு சமூகத்திற்குமான தாய், என அவர் சமீபத்தில் ஹரி தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு சீர்திருத்தவாதியாக, உரிமை செயற்பாட்டாளராக, புத்திஜீவியாக செயற்பட்டு வந்துள்ளார். 1960 இல் தனது முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த உலகின் பழமையான ஜனநாயகத்தின் மூன்றாவது பெண் பிரதமர் இவர். இலங்கையின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முதல் பிரதமர் எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மனைவி, இரண்டாவது பிரதமர் அவரின் மகள். 2020 இல் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க்கும் வரை ஹரிணிக்கு அரசியல் பின்னணி எதுவும் இருக்கவில்லை. அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர் ஹரிணி அமரசூரிய தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பின்னர் அரசசார்பற்ற அமைப்பொன்றில் சமூக சுகாதார பணியாளராக பணிபுரிந்தார் அதன் பின்னர் ஒருவருடம் கெயர் அமைப்பில் பணியாற்றினார். அதன் பின்னர் அவர் சுயாதீன ஆராய்ச்சியாளராக மாறினார், சமூக மானுடவியலில் ஆர்வம்கொண்டிருந்த அவர் பின்னர் எடின்பேர்க் பல்கலைகழகத்தில் தனது கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்தார். எனக்கு வர்த்தகத்தில் ஈடுபடும் திறமையில்லை என்னிடம் வர்த்தகம் இல்லை என அவர் தெரிவிக்கின்றார். தனது அரசியல் வாழ்க்கை காரணமாக உறங்குவதற்கான நேரத்தை இழந்தது குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தது குறித்தும் கவலைப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார். நான் தனிமையில் அதிக நேரத்தை செலவிட விரும்பும் ஒருவர் எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்கின்றார் அவர். இலங்கையின் தொழில்சார் வல்லுனர்கள் மத்திய தரவர்க்கத்தினரின் ஆதரவு ஜேவிபிக்கு கிடைப்பதற்கான முக்கிய திருப்பு முறை ஹரிணி என்கின்றனர் ஆய்வாளர்கள். 1971- 88- 89 இரத்தக்களறி மிக்க கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ஜேவிபியை விட தேசிய மக்கள் சக்தியை அதிகளவு நம்பத்தொடங்கினார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜேவிபிக்கான மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர் என பலர் கருதுகின்றனர். ஜேவிபியின் தோற்றத்தை இடதுசாரி மார்க்சிச கட்சி என்பதிலிருந்து சீர்திருத்த முற்போக்கு குழுவாக மாற்றினார். அவரது ஆங்கில சிங்கள புலமை இதற்கு உதவியது . சிறந்த விதத்தில் உரையாற்றும் திறன் கொண்ட ஹரிணி ஜேவிபியின் நிர்வாக திறன் குறித்து வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவேளை இவ்வாறு பதிலளித்தார் 'நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளும் அனுபவம் எங்களிற்கு இல்லை, நாட்டை கட்டியெழுப்புவதில் அனுபவத்தை பெறுவோம்' என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194766
  7. Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 11:56 AM எரிக்சொல்ஹெய்ம் இடதுசாரி அனுரகுமார திசநாயக்க வார இறுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய உயர்குழாமிற்கு வெளியே ஒருவரை இலங்கை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வது சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் இதுவே முதல் தடவை. ஏகேடி என அழைக்கப்படும் திசநாயக்க அனுராதபுரத்தில் மிகவும் சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர். அவரது கட்சியோ அல்லது கூட்டணியோ கடந்த காலத்தில் ஆட்சிக்கு அருகில் இருந்ததில்லை. பொருளாதார நெருக்கடியின் போது வறிய ஏழ்மையான நிலையில் உள்ள இலங்கையர்கள் அனுபவித்த வலிக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு சான்று. ஊழலிற்கு எதிரான ஏகேடியின் போராட்டத்திற்கும,; மக்களிற்கு அதிகளவு நலன்புரிசேவைகளை வழங்கவேண்டும் என்ற அவரது வேண்டுகோள்களிற்கும் பரந்துபட்ட ஆதரவுள்ளது. தேர்தல் வெற்றியாளரின் பலவீனம் என்னவென்றால் அவரது கூட்டணிக்கு இலங்கை போன்ற ஒரு சிக்கலான அரசாங்கத்தை நிர்வகித்த அனுபவம் மிகவும் குறைவு. மிகவும் சவாலான பொருளாதார சூழலில் தங்களின் பல வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது அவர்களிற்கு மிகவும் சவாலான விடயமாக காணப்படலாம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது அவர்களிற்கு மிகவும் கடினமான விடயமாக அமையலாம். இந்த தேர்தல் முடிவுகள் வெளிநாடுகளின் தலைநகரங்கள் பலவற்றில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இராஜதந்திரிகள் இரண்டு முறை சிந்திக்கவேண்டும். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏகேடி இந்தியா சீனா மேற்குலகை நோக்கி தனது நேசக்கரங்களை நீட்டினார். நாங்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு அவர் வெற்றிகரமான தலைவராக மாறுவதற்கு உதவவேண்டும். அதிகசெழிப்புமிக்க அமைதியான இலங்கையே அனைவரினதும் நன்மைக்கு உகந்த விடயம். இந்த பயணத்தில் ஏகேடிக்கு உதவவேண்டும். இலங்கையின் தேர்தல் பிரச்சாரத்தில் பேரினவாதமும் இனதீவிரவாதமும் நீண்டகாலத்தின் பின்னர் எந்த முக்கியத்துவத்தையும் பெறாத தேர்தல் இது. இந்த தேர்தலின் அமைதியிலிருந்தும் தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசவும் ரணில் விக்கிரமசிங்கவும் வெற்றிபெற்றவர் குறித்து வெளிப்படுத்திய நாகரீகத்திலிருந்தும் பல மேற்குலக நாடுகள் பாடங்களை கற்றுக்கொள்ளலாம். இலங்கை பொருளாதாரரீதியாக மிக மோசமான நெருக்கடியிலிருந்தவேளை அதிலிருந்து நாட்டை மீட்டவர் என ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் பதிவு செய்யப்படுவார். சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியமைக்காக உலக வரலாற்றில் எந்த தலைவரும் தெரிவு செய்யப்பட்டதில்லை. https://www.virakesari.lk/article/194591
  8. 24 SEP, 2024 | 04:28 PM செனெகலின் கரையோர பகுதியில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக தகவல் கிடைத்தாக தெரிவித்துள்ள செனெகல் கடற்படை இதனை தொடர்ந்து மரப்படகினை கரைக்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது. உடல்கள் மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதால் மீட்பு அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக செனெகல் கடற்படை தெரிவித்துள்ளது. செனெகலில் இருந்து ஸ்பெயினின் கனரி தீவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணி;க்கை அதிகரித்துள்ள நிலையிலேN இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. உடல்கள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்கும்போது குடியேற்றவாசிகள் பல நாட்களாக அட்லண்டிக் சமுத்திரத்தில் மிதந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்;ளனர். குறிப்பிட்ட படகு எப்போது எங்கிருந்து புறப்பட்டது என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன. நாங்கள் இவ்வாறான பயணங்களை தவிர்க்கவேண்டும் இது தற்கொலை என படகு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194707
  9. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 1972-இல் சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "ராக்கெட் உள்பட எவ்வளவு அதிநவீன தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் எதிரொலிக்கவில்லை என்றால், அந்த தொழில்நுட்பத்தால் எந்தப் பயனும் இல்லை எனக் கருதியவர் சதிஷ் தவன்” என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 1972-இல் சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அது மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டம் என்று தான் சொல்லவேண்டும். காரணம், இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை எனக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய், 1971 டிசம்பரில் காலமானார். விண்வெளித் துறையில் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதற்கான செயல்திட்ட அறிக்கையை 1970ஆம் ஆண்டு ஜூலையில் மத்திய அரசிடம் அளித்திருந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். அவரது திட்டங்களை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் சதீஷ் தவன். அந்த வகையில், இந்திய விண்வெளி திட்டம் தொடர்பாக கனவு கண்டவர் விக்ரம் சாராபாய் என்றாலும் அதனை நடத்திக் காட்டியவர் சதீஷ் தவன். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) இயக்குநர் என்ற பொறுப்புடன், கூடுதலாக இஸ்ரோவின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். இஸ்ரோ தலைவர் பதவிக்கு அவர் பெற்ற மாதச் சம்பளம் வெறும் 1 ரூபாய். ‘ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி’- நம்பி நாராயணன் பட மூலாதாரம்,NAMBI NARAYANAN/FACEBOOK படக்குறிப்பு, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், சதீஷ் தவனுடன் பணியாற்றியவருமான நம்பி நாராயணன் சதீஷ் தவனின் கல்வி குறித்த விவரம் நிச்சயமாக ஒருவரை ஆச்சரியப்படுத்தும். கணிதம் மற்றும் இயற்பியலில் பிஏ (BA), ஆங்கில இலக்கியத்தில் எம்ஏ (MA), பிஇ (BE) மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்எஸ் (MS) ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங். அதுமட்டுமல்லாது ஏரோநாட்டிக்ஸ் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் இரு முனைவர் பட்டங்கள். “புத்திசாலி, பல துறைகளில் அபார அறிவு கொண்டவர் என்பதைத் தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் மற்றும் வழிகாட்டி”, என்று கூறுகிறார் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், சதீஷ் தவனுடன் பணியாற்றியவருமான நம்பி நாராயணன். சதீஷ் தவனுடனான ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார். “இஸ்ரோவின் தலைவராக சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்ட காலகட்டத்தில் நான் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா மையத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். அது இஸ்ரோவின் ஆரம்ப காலகட்டம். அப்போது ஒரு இன்ஜின் மட்டுமே கொண்ட ராக்கெட் பரிசோதனைகளை செய்துவந்தோம். அதற்கு மாற்றாக நான்கு இன்ஜின்கள் கொண்டு பரிசோதிக்க நான் யோசனை கூறினேன். அதற்கான கூடுதல் செலவு என்பது ஒரு கோடி. அப்போது அது மிகப்பெரிய தொகை. அதை முன்னெடுக்க நான் நினைத்தபோது, சதீஷ் தவன் வேண்டாம் என்று தடுத்துவிட்டார். காரணம் அப்போது இருந்த சூழ்நிலைகள் அப்படி.” என்றார் நம்பி நாராயணன். “இது நடந்து 10-12 வருடங்களுக்கு பிறகு சதீஷ் தவன் இஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும் கூட இஸ்ரோவின் பணிகளை தினமும் பார்வையிட்டு வந்தார். அப்போது இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான ஒரு கூட்டத்தில், நான்கு இன்ஜின்கள் கொண்டு ராக்கெட் சோதனை குறித்து விவாதிக்கப்பட்டது. “‘நாம் ஏன் முன்பே இந்த சோதனையைச் செய்யவில்லை. இப்போது அதற்கான செலவு பலமடங்கு அதிகரித்துவிட்டது அல்லவா’ என்ற கேள்வி சில விஞ்ஞானிகளால் எழுப்பப்பட்டது. நான் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அப்போது கையை உயர்த்திய சதீஷ் தவன், ‘நம்பி நாராயணன் முன்பே இதை முன்னெடுக்க முயற்சி செய்தார். நான்தான் தடுத்து விட்டேன், அதற்காக வருந்துகிறேன்’ என வெளிப்படையாக கூறினார். அவ்வளவு பெரிய மனிதர் இப்படி எல்லோர் முன்னிலையிலும் கூறியிருக்க தேவையில்லை. அவர் எனக்கு மட்டுமல்ல பல இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கடவுளுக்கு நிகரானவர்” என்று கூறுகிறார் நம்பி நாராயணன். பட மூலாதாரம்,@INCINDIA படக்குறிப்பு, 1972 முதல் 1984 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்தார் சதீஷ் தவன் (புகைப்படத்தில் அப்துல் கலாம், பிரதமர் இந்திரா காந்தியுடன் சதீஷ் தவன்) ஆர்யபட்டா, இந்தியா முதல் முறையாக, தானே சொந்தமாகத் தயாரித்த செயற்கைக்கோள். 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி சோவியத் யூனியனிலிருந்து காஸ்மோஸ் 3 எம் ராக்கெட்டைப் பயன்படுத்தி இது விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்த திட்டம் குறித்த அனுபவங்களை தனது கட்டுரையில் விவரிக்கிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன். “‘ஆர்யபட்டா’ திட்டத்தின் தலைவராக சதீஷ் தவன் இருந்தார். அப்போது அவருடன் நானும் பணியாற்றினேன். ‘விண்வெளித் துறையில் இந்தியாவுக்கான முதல் வாய்ப்பு இது. இதில் நாம் தோல்வியடைந்தால், இந்தியாவின் மீதான உலகின் நம்பகத்தன்மை போய்விடும்’ என எங்கள் குழுவிடம் தொடர்ந்து கூறுவார். ஆர்யபட்டா திட்டம் வெற்றியடைந்தபிறகு, அவர் வேறு எந்த இஸ்ரோ திட்டத்திற்கும் தலைமை தாங்கவில்லை. பொறுப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பல இளம் தலைவர்கள் உருவாக காரணமாகவும் இருந்தார்” என்கிறார் கஸ்தூரி ரங்கன். 1972 முதல் 1984 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்தார் சதீஷ் தவன். இந்த காலகட்டத்தில் இஸ்ரோவின் நிர்வாக அமைப்பும் மாறியது. மையப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்குப் பதிலாக, ராக்கெட்டை உருவாக்குதல், ஏவுதல், செயற்கைக்கோள்களை உருவாக்குதல் என பல பிரிவுகள் உருவாக்கப்பட்டு இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒவ்வொரு பிரிவும் தனித்துவத்துடன் விரைவாக இயங்க முடிந்தது. அதேபோல சதீஷ் தவனின் தலைமையில் தான் விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா ஒரு முக்கியமான நாடாக மாறத் துவங்கியது. இஸ்ரோவில் அதிக ஆண்டுகள் தலைவராக இருந்தவரும் சதீஷ் தவன் தான். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சதீஷ் தவன் ‘சாமானிய மக்களுக்காக யோசித்தவர்’ விண்வெளித் துறை என்பதை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஒரு துறையாக மட்டும் பார்க்காமல், அதன் மூலம் சாமானிய மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் சதீஷ் தவன் அதிக ஆர்வம் செலுத்தினார் எனக் குறிப்பிடுகிறார் கஸ்தூரி ரங்கன். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பின்வருமாறு விவரிக்கிறார். “1976ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் ஒரு புதிய திட்டம் குறித்து உரையாற்றினார் சதீஷ் தவன். தொழில்நுட்பம் தொடர்புடைய ஒரு திட்டம் எப்படி லட்சக்கணக்கான பாமர மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பயன்படும் என்பதை அவர் விளக்கினார்.” “இலுப்பை, ஆமணக்கு, வேம்பு போன்றவற்றின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து, பாலியோல் (Polyol) எனப்படும் கரிமச் சேர்மத்தை உற்பத்தி செய்து, அதை பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்திக்கு பயன்படுத்துவது. மேலும் இதன் மூலம் சுமார் 40 லட்சம் டன் நச்சுத்தன்மையற்ற, மக்கும் உரம் உபரிபொருளாக கிடைக்கும் என கணக்கிடப்பட்டது. அதனால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி துறை மிகப்பெரிய அளவில் பயனடையும்.” “இப்படிப்பட்ட திட்டம் நிறைவேறினால் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும், இயற்கையும் பாதுகாக்கப்படும் என அவர் நம்பினார். ஆனால் பொருளாதார காரணங்களுக்காக இத்திட்டம் கைவிடப்பட்டது” “அதற்காக மிகவும் கோபப்பட்டார் சதீஷ் தவன். இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு என்பது பொருளாதாரம் சார்ந்து தான் இருந்தது, இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. அதனால் தான் இத்திட்டம் அரசால் கைவிடப்பட்டது என அவர் வருத்தப்பட்டார்.” இவ்வாறு தனது கட்டுரையில் விவரிக்கிறார் கஸ்தூரி ரங்கன். மேலும், “தனது எந்த உணர்ச்சிகளையும் எளிதாக அவர் வெளிப்படுத்த மாட்டார். எஸ்.எல்.வி. 3 (SLV 3) தோல்வியடைந்த போது தனது கவலையை வெளிகாட்டிக்கொள்ளாமல், நாம் சற்று தடுமாறிவிட்டோம் ஆனால் வீழவில்லை என்று கூறினார். அவர் கொடுத்த உற்சாகம் மற்றும் வழிகாட்டுதலால் தான் அடுத்த ஒரே வருடத்தில் எஸ்.எல்.வி. 3 மீண்டும் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.” என்கிறார் கஸ்தூரி ரங்கன். செப்டம்பர் 25, 1920ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் சதீஷ் தவன் பிறந்தார். இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) 1951இல் பேராசிரியராக இணைந்து, பின்னர் 1962இல் அதன் இயக்குநராக உயர்ந்தார். பின்னர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில் 1972இல் இஸ்ரோ தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய, சீன விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வரிசையில் இஸ்ரோவும் இடம் பெற்றிருப்பதில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy89e5192r1o
  10. Published By: VISHNU 25 SEP, 2024 | 03:27 AM மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். எனினும் கணவன் மனைவி இருவருக்கும் இடையிடையே தகராறுகள் இடம்பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவித்தனர். குறித்த குடும்பப் பெண் தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். சம்பவதினமான செவ்வாய்க்கிழமை தனது மகள் வேலைக்குச் சென்றுள்ளார் என நினைத்துக் கொண்டு அவரது தாயார் உயிரிழந்த மகளின் தொலைபேசிக்கு பலதடவை அழைப்பெடுத்துள்ளார். எனினும் அவரது தொலைபேசி இயங்கவில்லை. உயிரிழந்த பெண்ணின் சகோதரன் தனது அக்காவின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் அக்காவின் செருப்பு வீட்டின் முன்னால் கிடந்துள்ளன. சந்தேகம் கொண்ட சகோதரன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்ததற்கு இணங்க வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கையிலே இரத்தத்தில் தோய்ந்த நிலையில் தனது அக்கா இறந்த நிலையில் கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த களூவாஞ்சிகுடி பொலிசார், மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர், கைரேகை தடயவியல் பிரிவினர், உள்ளிட்ட பலரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பின்னர் சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.றஞ்ஜித்குமார் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் அவரது கணவரையும் தேடி வருகின்றனர். https://www.virakesari.lk/article/194735
  11. Published By: DIGITAL DESK 7 24 SEP, 2024 | 06:47 PM (நா.தனுஜா) மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவருவதற்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய வகையில் கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனும், அவரது அணியினருடனும் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்தது. இத்தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒருமாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாக பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன. அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் வொஷிங்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், நாட்டின் பொருளாதார நிலைவரம் வெகுவாக முன்னேற்றமடைந்திருப்பினும் இன்னமும் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை எனவும், ஆகையினால் மிகக்கடின முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளைப் பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தியிருந்தார். அது மாத்திரமன்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாகத் தெரிவாகும் புதிய அரசாங்கத்துடன் நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வு குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகியிருக்கும் பின்னணியில், 'கடந்த 2022 ஆம் ஆண்டு முகங்கொடுக்க நேர்ந்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு உதவிய, மிகக்கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்லும் நோக்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனும், அவரது அணியினருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்' என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி 'இலங்கைக்கும், சர்வதேச பிணைமுறிதாரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டமையை வரவேற்கிறோம். இது இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நிதியச் செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நாம் வெகுவிரைவில் கலந்துரையாடுவோம்' என்ற அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194716
  12. வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். https://thinakkural.lk/article/309881
  13. வெளியானது நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி – நவம்பர் 14 பொதுத்தேர்தல் 24 SEP, 2024 | 11:39 PM நாடாளுமன்றத்தை இன்றிரவு முதல் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி ஜனாதிபதி இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பிரகடனத்தை வெளியிட்டுள்ளதுடன் புதிய நாடாளுமன்றத்தை நவம்பர் 21ம் திகதி கூட்டுகின்றார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான திகதியாக நவம்பர் 14ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 11ம் திகதி பகல் 12 மணிவரை தேர்தல் வேட்புமனு கோரப்படும் காலம் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இக்காலப்பகுதியில் தேர்தல் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலும், நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194730
  14. சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்; அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்றையதினம்(25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் கடந்த கால அரசியல், பொருளாதார, அபிவிருத்தி, சமூக நல பொது சேவைகள் அது தொடர்பான கொள்கைகள், கட்டமைப்புகள் என்பவற்றோடு அரசியல் கலாச்சாரத்தையும் அரசியல் அரச இயந்திரத்தையும் “சுத்த கரண்ன ஓனே” (தூய்மைப்படுத்த வேண்டும்” எனும் மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுர குமார அவர்களின் குரலைக் கேட்டு பெருந்தொகையான வாக்குகளால் மக்கள் அவரை நாட்டில் தலைவராக்கி கௌரவப்படுத்தியுள்ளனர். நாட்டின் அனைத்து மக்களின் ஜனாதிபதியான அவரை வாழ்த்துவதோடு; கடந்த 75 வருட காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு பல இன கலவரங்களுக்கும், இன அழிப்பிற்கும், இனப்படுகொலைக்கும் உள்ளாகி தொடர்ந்தும் இன அழிப்பினை அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழர்களாகிய நாங்களும் கூறுகின்றோம் “தூய்மைப்படுத்த வேண்டும்” அதனையும் செவிமடுத்தால் ஒரே நாட்டில் இரு தேச மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சிக்கண்டு ஒரே மக்கள் சக்தியாக எம்மை அடிமைப்படுத்த நினைக்கும் வல்லரசுகளுக்கும் இணைந்தே முகம் கொடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணி வடகிழக்கு தமிழர்களுக்கு எதிராகவும், மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும் மேற்கொண்ட அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். யுத்த கொடூரத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் மட்டுமல்ல இன்று முழு நாடாக மக்கள் அனுபவிக்கும் பொருளாதார துன்பங்களுக்கும் உங்கள் அமைப்பும் காரணமாகும். அதனால் உங்கள் மீதுள்ள நம்பிக்கையீனத்திற்கும் காரணமானவைகளை தூய்மைப்படுத்தி எமது நம்பிக்கைக்கும் பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டில் தமிழர்களாகிய எம் மீது பெரும்பான்மை சமூகம் கொண்டிருக்கும் அரசியல் கலாச்சாரம் தொடர்ந்து தற்போதைய நிலையிலேயே இருக்குமானால் நாடு பிளவு படுவது மட்டுமல்ல தங்களுடைய காலத்திலும் அந்நிய சக்திகளின் ஆதிக்கம் அதிகரிப்பதோடு தங்களை பதவியில் அமர்த்தியவர்களே தங்களுக்கு எதிராக கிளர்ந்தெழலாம். இதனை சுத்தப்படுத்தி இனங்களின் அடையாளங்களை பாதுகாத்து முன்னோக்குமாறு வலியுறுத்துகின்றோம். ஆதலால் எமது பார்வையில் இந்நாட்டில் நீண்ட கால வரலாற்றையும் கலாச்சார பாரம்பரியங்களை கொண்ட தமிழ் மக்களாகிய நாம் பொருளாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டுமானங்களுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பங்களித்துள்ள மக்களாக நாம் முன்வைக்கும் எமது அரசியல் அபிலாசைகளுக்கு அரசியல் தெளிவோடு, புரிதலோடு, நம்பிக்கையோடு, பயமின்றி செவிமடுத்து அதனை நடைமுறைபடுத்தி எம்மோடு இணைந்து பயணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். எனவே, நீங்கள் பிரித்த வடக்கையும் கிழக்கையும் மீள இணைத்து அதனை தமிழர் தாயகமாக ஏற்று அதன் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கு வழி வகுப்போம். இதற்கு முன்னர் நாம் சிங்கள பௌத்த திணைக்களங்களாக அடையாளப்படுத்தும் தொல்லியல் திணைக்களம், வனவளங்கள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை என்பவற்றின் சிங்கள பௌத்த ஆதிக்க ஆக்கிரமிப்பு மற்றும் இன அழிப்பு செயற்பாடுகளை தடுத்து அவ் அரச கட்டமைப்புகளை தூய்மைப்படுத்தி எமது சமய, மொழி, கலை,கலாச்சார பாரம்பரியங்களை காக்குமாறும் எமது தாயக பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ வழி விடுமாறும் கேட்கின்றோம். சிங்கள பௌத்த ஆதிக்க மனப்பான்மையோடு எமது விருப்பிற்கு நேர் மாறாகவும், பலவந்தமாகவும் அரசு காணிகளிலும், தனியார் காணிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பௌத்த சின்னங்களை எமது மண்ணிலிருந்து அகற்றி தூய்மை படுத்துங்கள். அத்தோடு எமது இன பரம்பலையும் இருப்பையும் சிதைக்கவும், சிங்கள பௌத்த அரசியல் அதிகாரத்தை விரிவு படுத்தவுமென கடந்த 75 வருட காலமாக முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த குடியேற்றங்களை தடுத்து நிறுத்துமாறும் கூறுகின்றோம். அவ்வாறான குடியேற்றங்கள் தனி சிங்கள குடியேற்றங்கள் தமிழர் வாழ்வு பிரதேசங்களுக்குள்ளும் எல்லைகளிலும் எம் கிராமங்களை ஊடறுத்தும் சிங்கள பெயர்களால் உருவாக்கப்பட்டிருப்பது எமக்கு வேதனையளிக்கின்றது.இது தொடர்பாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உரைகளில் சுட்டிக் காட்டியுள்ளனர். அவை தொடர்பாக அலசி ஆராய்ந்து அகற்றி விடுங்கள். இதற்கு உங்கள் கட்சியும் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு வழங்கியதையும் நாம் அறிவோம். மேலும் நாம் முன்வைக்கும் இக் குற்றங்கள் காணமலாக்கப்பட்ட விடயத்தில் உங்கள் படையினர் மீது நம்பிக்கை இருந்தால் நாம் கூறும் சர்வதேச ஒருமுறைக்கு இடமளித்து உங்கள் நியாய தன்மையை சர்வதேசத்துக்கு தெளிவு படுத்துங்கள் அது யுத்தக் குற்றங்களில் இருந்து உங்கள் தூய்மைப்படுத்தும். இவை எல்லாவற்றிற்கும் முன் மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள். அடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்துக்கு தம் இன்னுயிரை ஈந்து உழைத்து நாட்டின் வளர்ச்சியோடு சங்கமமாகியுள்ள மலையக மக்கள் இனமாக வாழ்வதையும் வளர்வதையும் திட்டமிட்ட பல்வேறு வகையில் தடுக்கப்படுவதாகவும் நாம் உணர்கின்றோம். இந்நிலையில் இம் மக்களின் பிரஜா உரிமை சம்பந்தமாக உங்கள் அமைப்பு எடுத்த ஆக்கபூர்வமான செயல்பட்டினை நினைவு கூர்ந்து நன்றி கூறுவதோடு; மலையக மக்களை இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களுக்கான காணி உரிமையினை முழுமையாக்கி, சுய பொருளாதரத்தில் வளரவும் அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவுமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கோருவதோடு அதற்கு தடையாக இருக்கும் இனவாத காரணிகளை அகற்றி தூய்மைப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். புதிய இலங்கைக்கான மனநிலையில் மக்கள் உங்களை ஜனாதிபதியாக தெரிந்து இருக்கும் சூழ்நிலையில் நாடு இன்னுமொரு தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றது. இத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு உங்களோடு இருப்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இக்காலகட்டத்தில் நாம் விரும்பும் விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு எமது பார்வையில் சுத்தமாக்கப்பட வேண்டியவைகளை சுத்தமாக்குவதற்கான செயற்பாட்டு திட்டங்களை நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீங்கள் சார்ந்த அமைப்பு மற்றும் கட்சி முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி நாட்டை நேர்த்திசையில் கொண்டு செல்ல திடசங்க கூட்டம் கொள்ளுமாறு கேட்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309896
  15. Published By: VISHNU 25 SEP, 2024 | 02:50 AM பொதுக்கட்டமைப்பின் அழைப்பை ஏற்று மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் எந்தவிதமான முன்னாயத்தங்களும் இல்லாமல் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும், தமிழ் தேசியத்தை நேசித்து அதனை பலப்படுத்தும் வகையில் அரியநேத்திரனுக்கு வாக்களித்த அத்தனை தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தமிழ்மக்கள் சார்பாகவும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். எந்தவிதமான சுயநலனும் இல்லாமல் தமிழ் தேசிய எழுச்சியின்பால் கொண்ட பற்றுறுதியின் காரணமாக அரியநேத்திரன் இந்தத் தேர்தலில் போட்டியிட முன்வந்தமை தமிழ் மக்களின் மத்தியில் அரசியல் ரீதியான ஒரு விழிப்புணர்வினையும் அணிதிரட்டலையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பொதுக்கட்டமைப்பின் அழைப்பை ஏற்று மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் எந்தவிதமான முன்னாயத்தங்களும் இல்லாமல் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவர் எந்தவிதமான சலிப்பையோ, தயக்கத்தையோ அல்லது சோர்வினையோ வெளிக்காட்டாமல் ஒரு இளைஞர் போன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் பயணம் செய்து தமிழ் மக்களை அணிதிரட்டுவதற்குப் பாடுபட்டிருந்தார். அவரின் இந்த அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. நியமன தினத்தன்று நான் மருத்துவமனையில் இருந்து வந்து அவருடன் கூடியிருந்ததை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன். அவரின் கட்டுப் பணத்தை எமது கட்சியின் சிற்பரனே உரிய இடத்தில் கையளித்தார். தனது சொந்தக் கட்சிக்குள் இருந்த எதிர்ப்புக்கள், குத்து வெட்டுக்கள் மற்றும் தனது அரசியல் எதிர்காலத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இந்த தேர்தலில் மிகவும் துணிச்சலாகப் போட்டியிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒற்றுமை ஒன்றிணைவின் குறியீடாக அவர் மிளிர்ந்ததை நான் வரவேற்றுப் பாராட்டுகின்றேன். அரியநேத்திரனின் தமிழ் மக்களுக்கான அரசியல் சேவை தொடரவேண்டும் என்றும் அது தமிழ் மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அவசியம் என்பதையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடவிரும்புகின்றேன். அதேபோல தமிழ் தேசியத்தை நேசித்து அதனை பலப்படுத்தும் வகையில் அரியநேத்திரனுக்கு வாக்களித்த அத்தனை தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194732
  16. அண்ணை இந்தக் கதையை வாசித்தவுடன் நம்மட புலம்பெயர்ந்த உறவுகளோட இது பொருந்திப் போவதாக எண்ணினேன். அவர்களை ஆற்றுப்படுத்தும் என எண்ணிப் பகிர்ந்தேன்.
  17. அநுர எடுத்தது 56லட்சம் அண்ணை. அவையள் எப்பிடி ஓமெண்டுவினம் அண்ணை?! மக்கள் தான் இளைஞர்களை வெற்றிபெற வைக்கவேணும்.
  18. அதோட உங்கட தோழருக்கு சொல்லி புதிய யாப்பு உருவாக்கும்போது 2 தடவைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது எனவும் ஓய்வூதியம், பா.உ வாக இருக்கும்போது கொடுக்கும் சலுகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுங்க அண்ணை. தானாகவே பல தொல்லைகள் நீங்கிவிடும்.
  19. இந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!
  20. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கி ஊழல் விடயத்தில் அர்ஜுன் மகேந்திரன் (Arjun Mahendran) தொடர்பில் வெடித்த பாரிய போராட்டங்களை தடுத்து நிறுத்தியவர் ரணில். கைது நடவடிக்கைகள் ரணிலிற்கு எதிராக அநுர செயற்படுவாரா என நோக்கும் போது, முன்னாள் அதிபர் என்ற பதுங்கள் கூட காணப்பட்டு அடுத்தடுத்தவர்கள் கைது செய்யப்படலாம். அத்தோடு, தவறான முறையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் தவறான ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டவர்கள் என்பவர்களை அச்சம் சூழ்ந்துள்ளது. நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு முன்பாக ஏகப்பட்ட கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற முன்னெடுப்புக்களும் இடம்பெறவுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நியமிக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதியின் அடுத்தக்கட்ட நகர்வு மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு, சுற்றி வளைக்கப்பட்ட விமான நிலையம்! குவிக்கப்படும் விசேட அதிரடிப்படை https://ibctamil.com/article/katunayake-airport-cordoned-off-by-new-president-1727186053#google_vignette
  21. ஹரிணி அமரசூரிய: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரான இவரது பின்னணி என்ன? பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA கட்டுரை தகவல் எழுதியவர், அமந்திகா குரே பதவி, பிபிசி சிங்கள மொழிச் சேவை 16 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதற்குமுன் பிரதமர்களாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குப் பிறகு, அரசியல் குடும்பப் பின்னணி இல்லாமல் பிரதமரான ஹரிணி அமரசூரிய யார்? இளமைக்காலம் மற்றும் கல்வி 1970-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி கொழும்பில் பிறந்தார் ஹரிணி. அவருக்கு இரண்டு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். கொழும்பு பிஷப் கல்லூரியில் அடிப்படைக் கல்வியை முடித்த அவர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் பட்டம் முடித்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானுடவியல் மற்றும் மேம்பாட்டுப் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2011-இல், எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் சமூக மானுடவியல், சர்வதேசச் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார். பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA படக்குறிப்பு, ஹரிணி, லா & சொசைட்டி டிரஸ்டின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார் சமூகப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளால, ஹரிணி அமரசூரிய இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றினார். பல்கலைக்கழக நிர்வாகத்திலும் ஈடுபட்ட அவர், 2016 முதல் பல்கலைக்கழக மானியக் குழுவின் பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவம் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சமூக நலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளிலும் ஆர்வலராக இருந்துள்ளார். மேலும், அவர் இலங்கையில் உள்ள சமூக சுகாதார அமைப்பான Nest-இன் இயக்குநராகவும், தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலங்கையில் பெண்கள் மற்றும் பாலினம் குறித்த ஆராய்ச்சி நிறுவனமான CENWOR-இல் பதவி வகித்துள்ளார். ஹரிணி, லா & சொசைட்டி டிரஸ்டின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA படக்குறிப்பு, ஹரிணி, 2011-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் ஆசிரியர் சங்கங்களில் ஈடுபாடு ஹரிணி, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும், 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உதவிச் செயலாளராகவும், 2016-இல் அச்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர், 2011-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதுமட்டுமின்றி, சமீபகாலமாக இலவசக் கல்வி தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் தலைமையில் பல போராட்டங்களிலும் ஈடுபட்டார். அரசியலில் வாழ்க்கை ஹரிணி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும், 2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றிபெற்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அன்று முதல் அந்தப் பதவியில் பணியாற்றி வருகிறார். அந்த நேரத்தில், அவர் 389 நாட்களில் 269 நாட்கள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் வகித்த பதவிகள் பின்வருமாறு: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகளிர் மன்றம் இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவத்தை ஆராய்வதற்கும் அதன் பரிந்துரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கும் பாராளுமன்ற சிறப்புக் குழு சர்வதேச உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு இலங்கையில் சிறார் போஷாக்குக் குறைபாடு அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற விசேஷ குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ள குறுகிய கால, நடுத்தர கால, மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, விரைவாக நடைமுறைப் படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் குழந்தைகள், பெண்கள், மற்றும் பாலினம் மீதான துறைசார் கண்காணிப்புக் குழு விலங்குகள் நலம் தொடர்பான நாடாளுமன்றக் கணக்குக் குழு நெறிமுறைகள் மற்றும் சலுகைகளுக்கான குழு கல்விக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு ‘manthri.lk’ என்ற இணையதளம் வெளியிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையின்படி, அவர் 225 எம்.பி-க்களில் 65-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 14 தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவற்றில், அவர் பெரும்பாலும் கல்வி, உரிமைகள், பிரதிநிதித்துவம், சுகாதாரம், பொருளாதாரம், மற்றும் நிதி தொடர்பான தலைப்புகளில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA தேர்தல் பரப்புரைக்காக 21,500 கி.மீ பயணம் அநுர குமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரையின் போது முனைவர் ஹரிணி அமரசூரியவின் பங்கு தனித்து தெரிந்தது. தேர்தலுக்கு முன்பு அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் ஹரிணி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் 21500 கி.மீ பயணத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். "எங்கள் தேர்தல் பரப்புரையின் போது, நான் 21,500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்தேன். நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசியிருப்பேன். ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்திருப்பேன். என்னுடைய வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான அதே நேரத்தில் அதிகம் சோர்வடைய வைத்த காலகட்டம் அது," என்று முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அரசியல் பின்னணியை சாராத முதல் பிரதமர் உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையில் தேர்வு செய்யப்பட்டவரே. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கே கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கே பிரதமராக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து அவரின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கே குமாரதுங்கா 1994ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாறு காணாத வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஏற்கனவே பிரதமர் பொறுப்பு வகித்து வந்த தங்களின் கணவர்கள், தந்தைகள் இறந்த பின்னரே அந்த பொறுப்பிற்கு வந்தனர். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என்று தெற்காசியா முழுவதும் இது போன்ற நிகழ்வுகளை காண இயலும். இந்த நாடுகளில் உருவான பெண் தலைமைகள் அனைவரும் அரசியல் பின்னணியை கொண்ட குடும்பங்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால் ஹரிணியை பொறுத்தமட்டில் இவர் ஒருவர் தெற்காசியாவிலேயே எந்த ஒரு அரசியல் குடும்ப பின்னணி ஏதுமின்றி பிரதமர் ஆன முதல் பெண்ணாவார். https://www.bbc.com/tamil/articles/c62rg8q5v2po
  22. ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்; அறிவிப்பு வெளியானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோ மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309869
  23. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமலுக்கு வந்தால் மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் சாதக பாதகங்கள் என்ன? 27 நிமிடங்களுக்கு முன்னர் 'ஒரு நாடு, ஒரே தேர்தல்' மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவை, இந்த சட்டம் தொடர்பான உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்க, எதிர்க்கட்சியினர் இதில் உள்ள சிக்கல்களை மேற்கோள்காட்டி வருகின்றனர். இதில் உள்ள சாதக பாதங்கள் குறித்து விவாதங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைக்கின்றனர். 1) இது உண்மையிலேயெ தேர்தல் செலவுகளைக் குறைக்க உதவுமா? 2) ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலுமா? 3) இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு இதனால் பாதிக்கப்படுமா? 4) சிறிய கட்சிகள் இந்தச் சட்டத்தால் பாதிப்பைச் சந்திக்குமா? என பல்வேறு சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. பிபிசி ஹிந்தியின் தி லென்ஸ் என்ற வாராந்திர நிகழ்வில் இந்த சந்தேகங்கள் குறித்து நிபுணர்களுடன் விவாதம் ஒன்றை நடத்தினார் கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடவியல் இயக்குநர் முகேஷ் ஷர்மா. நன்மையும் தீமையும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பல விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது தேர்தல் செலவுகவுகள். ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை நடத்தும் போது நாட்டின் மேம்பாட்டு திட்டங்கள் சீராக தொடரும் என்றும், அரசுப் பணியாளர்கள் தொடர் தேர்தல் பணிகளை மேற்கொள்வதால் ஏற்படும் உளைச்சலில் இருந்து தப்பிப்பார்கள் என்றும் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. பிபிசி-யின் விவாத நிகழ்வின் துவக்கத்தில் பேசிய ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான உபேந்திர குஷ்வாஹா ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பட்டியலிட்டார். பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது இவரது கட்சி. "வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படும் தேர்தல் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். முதலில் தேர்தலுக்கான செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டாவதாக மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. எங்கேயும் எப்போதும் தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. விளைவாக தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துகின்றனர். இதனால் அங்கே வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன," என்று கூறுகிறார். இருப்பினும் இந்த ஒரே நாடு ஒரே திட்டத்தில் சில பிரச்னைகள் இருக்கிறது என்றும் அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மசோதா அறிமுகம் செய்யப்படும் போது இது தொடர்பாக மேலும் பல தெளிவு கிடைக்கும். "மசோதா வரும் போது, சட்டரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ பிரச்னைகள் ஏற்படும் போது தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும். அதன் பிறகு முழுமையான ஒரு சட்டம் இருக்கும். அதனை வைத்து இன்னும் சிறப்பாக விவாதிக்க இயலும்," என்று குஷ்வாஹா கூறுகிறார். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கட்சி இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை ஒரு ஏமாற்று வேலை என்று கூறுகிறது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தொடர்பு தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியா ஸ்ரீநெத், "வருங்காலங்களில் பாஜக நிறைய தேர்தல் தோல்விகளை சந்திக்க உள்ளது. மக்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படியான திட்டத்தை அறிமுகம் செய்வதில் அக்கட்சி கவனம் செலுத்துகிறது," என்று குற்றம்சாட்டினார். பாஜக-வின் கூட்டணி கட்சியினரே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று சுப்ரியா நம்புகிறார். "இது ஏமாற்று வேலை. மோதிக்கே தெரியும் இந்த சட்டத்தை அமல்படுத்த இயலாது என்று. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர பாஜகவுக்கு 362 உறுப்பினர்களின் ஆதரவு மக்களவையில் தேவை. "ஆனால் மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே 293 தான். மாநிலங்களவையிலும் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். மேலும் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்காது என்றும் அவர்கள் அறிவார்கள்," என்றும் கூறினார். சமாஜ்வாதி கட்சியினரின் கருத்து என்ன? சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மிஸ்ரா சுப்ரியாவின் கருத்துகளை ஏற்றுக் கொண்டார். பாஜக-வின் திசை திருப்பும் நடவடிக்கையே இது என்று அவரும் கூறினார். "பாஜக-விடம் உண்மையான பிரச்னைகள் என்று ஏதும் இல்லை. பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒன்றும் இல்லை. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பாஜக பரப்பியுள்ள வெறுப்பு அரசியலால் சோர்வடைந்துவிட்டனர். அதனால் தான் தற்போது புதிய பிரச்னையை கிளப்பியுள்ளனர். உண்மையில் இவர்களால் இதில் வெற்றி பெற இயலாது," என்று கூறினார். பட மூலாதாரம்,SUPRIYASHRINATE/X படக்குறிப்பு, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை தாக்கும் திட்டம் இது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா கூறுகிறார் கேள்வி எழுப்பும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் இதில் உள்ள சாதக பாதகங்களை கேட்டு பிறகு தன்னுடைய கருத்தை முன்வைத்தார் தேசிய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ஒய். குரேஷி. ஒரே நாடு ஒரே திட்டம் என்பது திணிக்கப்படுவதாக குரேஷி கருதுகிறார். இதற்காக உருவாக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அதன் பரிந்துரை குறித்து கேள்வி எழுப்பிய அவர் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறினார். "2014-ஆம் ஆண்டு மோதி இது குறித்து பேசும் போது, தேசிய அளவில் விவாதம் ஏற்படும். பிறகு ஒருமித்த கருத்து ஏற்படும் என்றார். விவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருமித்த கருத்து ஏதும் ஏற்படவில்லை. ஒருமித்த கருத்து இல்லாத போது, தார்மீக முடிவாக இந்த திட்டம் கைவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் இதனை திணிக்கப்பார்க்கிறது," என்று கூறினார் குரேஷி. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அரசியல் சார்ந்த எந்த ஒரு குழுவுக்கும் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவரை நியமிப்பது நியாயமற்றது என்று குரேஷி தெரிவித்தார். "அவர்களின் பரிந்துரைகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவர்களின் பரிந்துரைகள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக்காட்டாக இரண்டு மூன்று பரிந்துரைகளை இங்கே முன்வைக்கின்றேன்," என்று கூறினார் குரேஷி. "முதலில் நாம் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் குறித்து பேசுகிறோம். பஞ்சாயத்து, உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசவில்லை. எந்த தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்படுகிறது? இந்த மூன்று தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்," "இரண்டாவதாக, நூறு நாட்களுக்கு பிறகு பஞ்சாயத்து தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி நடத்தினால் அது எப்படி ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தலாக கருதப்படும்? இது முற்றிலுமாக புதிய தேர்தல். அனைத்து செயல்முறைகளையும் மீண்டும் தொடர வேண்டும். "மூன்றாவதாக ஒரு சட்டமன்றம் கலைக்கப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். பின்பு நாம் இதனை எப்படி ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் என்று கூற முடியும்?" என்று மூன்று முக்கிய அம்சங்களை குரேஷி முன்வைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் குரேஷி மூன்று முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் இது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று விமர்சிக்கிறார் சுப்ரியா. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை கலைப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? 2029-ஆம் ஆண்டில் 17 மாநில அரசுகள் ஆட்சி செய்ய 2 அல்லது 3 ஆண்டுகள் மீதம் இருக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை கலைக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? இது மக்கள் வழங்கிய தீர்ப்பை அவமதிப்பது போன்று இருக்காதா? போன்று தொடர் கேள்விகளை அடுக்கின்றார் சுப்ரியா. உபேந்திரா இதற்கு மறுப்பு தெரிவித்தார். கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று அவர் கூறினார். "நம்முடைய அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகள் காரணமாகவே நீங்கள் இன்று கூட்டாட்சி குறித்து இன்று பேசுகின்றீர்கள். அரசியலமைப்பு சட்டத்தின் படியே, அதில் ஏதேனும் திருத்தங்கள் தேவை என்றால் அதனை நிறைவேற்ற வேண்டும்," என்று உபேந்திரா கூறுகிறார். "கூட்டாட்சி அமைப்பை யாரும் தாக்கவில்லை. அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளும் கட்சி நல்லதே செய்தாலும் அதனை நாம் எதிர்க்க வேண்டும். இந்த மன நிலையோடு இதனை நாம் எதிர்க்க கூடாது," என்றும் அவர் கூறினார். "இந்த சட்டத்தில் எதையேனும் மாற்ற வேண்டும், நீக்க வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி உங்களின் கருத்துகளை கேட்க கோரிக்கை வைக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார். கமிட்டியின் முன்மொழிதல் படி இந்த திட்டத்தை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 83 மற்றும் 172ல் இந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். சமாஜ்வாதி கட்சியின் அபிஷேக் மிஸ்ரே இந்த திட்டம் பிராந்திய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுகிறார். "தேர்தல் ஒரே நாளில் நடக்கலாம். 7 நாட்களிலோ, 70 நாட்களிலோ, 700 நாட்களிலோ கூட நடக்கலாம். பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் நல்லுறவை வைத்திருக்கும் பிராந்திய கட்சிக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது," என்று தெரிவித்தார். இருப்பினும் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கு தான் அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகிறார். திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்தினால் பிறகு அரசியலமைப்பு சட்டமே முழுமையாக மாற்றப்பட்டுவிடும் என்று அவர் இந்த பிரச்னையை அணுகும் விதம் குறித்து கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த உபேந்திரா, புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் என்று கூறுவது தவறானது என்று கூறினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அரசியல் சார்ந்த எந்த ஒரு குழுவுக்கும் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவரை நியமிப்பது நியாயமற்றது தேர்தல் செலவுகள் குறையுமா? உபேந்திரா போன்ற பலரும் இந்த திட்டம் தேர்தல் செலவுகளை குறைக்கும் என்று நம்புகின்றனர். தேர்தல் செலவுகளைக் குறைக்க அரசு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். "கடந்த தேர்தலுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. இந்த நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு செலவு செய்வதற்கான நிதி உச்ச வரம்பு என்று ஏதும் இல்லை. ஆனால் வேட்பாளருக்கு அது உண்டு. பிரிட்டனின் அரசியலை நாம் பின்பற்றுகிறோம். அங்கே அரசியல் கட்சிகளுக்கும் உச்ச வரம்பு இருக்கிறது. அரசாங்கம் அந்த வரம்பை நிர்ணயிக்கலாம். உண்மையில் செலவுகளை குறைப்பதே இந்த சட்டத்தின் இலக்கு என்றால் அரசு உச்ச வரம்பை ரூ.60 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக அரசால் குறைத்து நிர்ணயிக்க இயலும்," என்று விளக்கினார். இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட உபேந்திரா இது தொடர்பான பணிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று விவாதத்தின் போது குறிப்பிட்டார். சுப்ரியா இது எப்படி செலவீனங்களைக் குறைக்கும் என்ற கேள்வியை எழுப்பினார். உங்களுக்கு விவிபேட்களும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மூன்று மடங்கு அதிகமாக தேவைப்படும். இதற்கான சுமையை எங்கள் மக்கள் தான் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது திட்டங்கள் தொய்வடைவது பற்றியும் புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாமல் போவது குறித்தும் பேசிய குரேஷி இதனை மறுக்கிறார். நான்கரை ஆண்டுகளாக பதவியில் இருந்தாலும் கூட, தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படி சிறப்பான திட்ட அறிவிப்புகள் வருவது எப்படி என்ற கேள்வியை எழுப்பினார். தேச நலனை கருத்தில் கொண்டு ஏதேனும் திட்டம் அறிவிக்கப்படும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு கொண்டு வரப்பட்டு பிறகு ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று மேற்கோள்காட்டினார். படக்குறிப்பு, தேர்தல் செலவீனங்களைக் குறைக்க அரசு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்யவில்லை வாக்காளர்கள் இதனை எப்படி பார்க்கின்றனர்? நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் போது அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் அதனை பாதிக்குமா? ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் ஒரே நாளில் யாருக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடலாம் என்று நம்புகிறார் உபேந்திரா. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதால் இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார். சுப்ரியாவும் அபிஷேக்கும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து பேசவும், குறைகள் பற்றி பேசவும் வெவ்வேறு காலங்களில் நடத்தப்படும் தேர்தல்கள் வாய்ப்பளிக்கிறது என்று கூறினார் அபிஷேக். "பஞ்சாயத்து தேர்தலோ, மேயர் தேர்தலோ வெவ்வேறு நேரங்களில் நடைபெறூம் தேர்தலின் போது மக்கள் தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கின்றனர். இது நடக்கிறதோ இல்லையோ, இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களின் அதிகாரத்தை குறைக்கிறது," என அபிஷேக் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் போது அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது மக்களுக்கு என்ன நன்மை? வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றிய மேலும் ஒரு கருத்தை குரேஷி முன்வைத்தார். "பாஜக எம்.பி. ஒருவர் மக்களிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பதை நான் கேட்டேன். பொதுமக்களுக்கு அதிகாரம் ஏதும் இல்லை என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து தேர்தல் நடப்பது மகிழ்ச்சியே அளிக்கிறது. அவர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது. அவர்களிடம் அந்த அதிகாரம் இருக்கும் வரை தலைவர்கள் மீண்டும் மீண்டும் மக்கள் முன்பு வந்து கைக்கட்டி நிற்பார்கள். இல்லையென்றால் அந்த எம்.பி-யை எத்தனை முறை மக்களால் பார்க்க முடியும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வந்து செல்லும் அந்த எம்.பி-யின் புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஒட்டி அவரை காணவில்லை என்று மக்கள் தேட ஆரம்பித்துவிடுவார்கள்," என்று கூறினார். தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறும் பட்சத்தில் பொதுமக்களின் நலன் பற்றிய பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு வருகிறது என்று நம்புகிறார் குரேஷி. புனேவில் இளைஞர்களுக்கான பாராளுமன்றமத்தில் பேசிய போது, பெண் ஒருவர் கூறிய கோஷம், "தேர்தல் வரும்போது தான் ஏழைகளுக்கு புலாவ் கிடைக்கிறது," அவருக்கு பிடித்தது என்று விவாதத்தின் போது குரேஷி கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1d5rrp4qqqo
  24. மக்களும் தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியும் வாக்களித்துள்ளார்கள் அண்ணை. நண்பர் ஒருவரைக் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்துள்ளார், தனக்கு பணி நிரந்தரமாக்கினவர் என சொன்னார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.