Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சிக்கியது நியுசிலாந்து அணி - முதல் இனிங்சில் 88 ஓட்டங்கள் 28 SEP, 2024 | 11:54 AM இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி தனது முதல் இனிங்சில் ஐந்து விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194977 இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான நிலையில் நியூஸிலாந்து Published By: DIGITAL DESK 3 28 SEP, 2024 | 01:46 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்து நியூஸிலாந்து பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருக்கிறது. போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் மைக்கல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 514 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பலோ ஒன்முறையில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து மதிய போசன இடைவேளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் ஓவரை வீசிய நிஷான் பீரிஸ் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஒட்டங்களைக் குவித்து டிக்ளயா செய்தது. https://www.virakesari.lk/article/194984
  2. அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர். அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும். டீசலின் விலை எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்க்காக, முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். மின்சார விலை திருத்தம் இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி, அதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திடம், தாம், கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/remove-taxes-on-fuel-as-promised-kanchana-urges-1727501122?itm_source=parsely-detail
  3. 28 SEP, 2024 | 12:43 PM (எம்.நியூட்டன்) புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் அவர் தெரிவிக்கையில் நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள். வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள் ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார். எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல செயல்பட வேண்டும் பலர் தேர்தலுக்கு வர முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயல்படுவது இல்லை எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார் சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம். ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந் நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த அனுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194975
  4. மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா - சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள தூது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பையும் அதில் இணைத்து கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச பொதுக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு எதிர்கால நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய கூட்டணி புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத அளவிற்கு அவரை இழுத்துச் செல்வதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றி, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து தலைமைத்துவ சபையாக செயற்படும் வகையில் புதிய கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திரிக்காவின் வருகை அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் நடவடிக்கையில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அபார வளர்ச்சியை அடுத்து, சந்திரிக்கா அம்மையார் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lanka-political-situation-chandrika-unp-join-1727494261#google_vignette
  5. இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெறும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர். 400 புத்தக கூடங்கள் இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற "கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சி" செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி இரவு 9.00 மணி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது. மேலும், பேராதனை பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் உதார திக்கும்புர,பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் இணை நிர்மாணப் பிரிவின் தலைவர் ருவன்திகா சேனநாயக்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். https://tamilwin.com/article/president-visited-the-international-book-fair-1727509202#google_vignette
  6. இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவருக்கும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் விதவைகளுக்கு, அமைச்சரவை அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பதவி வகிக்கும் நபருக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அமைச்சரவைக் கூட்டம் அவர்கள் உத்தியோகபூர்வ போக்குவரத்திற்கும் தகுதியுடையவர்கள் மற்றும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு உள்ளன. எனினும் இந்த சலுகைகள் அனைத்தையும் அரசாங்கம் மீளாய்வு செய்து தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அவற்றைக் குறைப்பதற்கான அளவுகோலை வகுக்கும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான உயர்மட்ட தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://tamilwin.com/article/information-about-benefits-of-former-presidents-1727513505
  7. 28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்) வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194970
  8. கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம் கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/310019
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இலங்கை புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாலத்தீவு அதிபர் முய்சு கட்டுரை தகவல் எழுதியவர், இஷாத்ரிதா லஹரி பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நியூயார்க்கில் ஐநா பேரவை கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே காணப்படும் நட்புறவை சுட்டிக்காட்டியுள்ளது. வங்கதேசத்தின் மறுசீரமைப்புக்கு யூனுஸ் 'அதிக முயற்சிகளை' மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, வங்கதேச பிரதமர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார். அதன் பின்னர் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார். நியூயார்க்கில் யூனுஸ் மற்றும் பைடன் இடையேயான நட்பு மோதி அரசுக்கு கவலையை ஏற்படுத்தக் கூடும். தற்போது மாறிவிட்ட சூழ்நிலையில் வங்கதேசத்தின் புதிய அரசுடன் உறவை ஏற்படுத்த மோதி அரசு முயற்சிக்கிறது. சமீப ஆண்டுகளில் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ள இந்தியாவின் அண்டை நாடுகளில் வங்கதேசமும் ஒன்றாகும். அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மாற்றங்கள் காரணமாக அந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவு சிறிதே ஆட்டம் கண்டுள்ளது. கடந்த வாரம் இலங்கையின் புதிய அதிபராக இடதுசாரித் தலைவரான அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். 2023 இல் நேபாளத்திலும், 2021இல் மியான்மரிலும், 2023 இல் மாலத்தீவுகளிலும் 2021இல் ஆப்கானிஸ்தானிலும் அதிகார மாற்றம் நடந்துள்ளது. மறுபுறம் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவிலும் பதற்றம் காணப்படுகிறது. நரேந்திர மோதி 2014இல் ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அரசு 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood first) கொள்கையைத் தொடங்கியது. அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கம். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்ட சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் இந்தக் கொள்கையின் செயல்திறனை சோதித்துள்ளன. அண்டை நாடுகளுடனான உறவில் பதற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது தேர்தல் பிரசாரத்தில் ‘இந்தியா அவுட்’ என்ற கோஷத்தை முன்வைத்திருந்தார் சமீப காலமாக இந்தியா பல அண்டை நாடுகளுடன் பிரச்னைகளை கொண்டுள்ளது. மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்சு, ‘இந்தியா அவுட்’ என்ற முழக்கத்தை முன்வைத்து வெற்றி பெற்றார். அதன் பிறகு முய்சு பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தை உடைத்தார். இந்த பாரம்பரியத்தின் படி, மாலத்தீவில் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு அதிபரும் முதலில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் முய்சு தனது முதல் சுற்றுப்பயணத்திற்கு துருக்கியைத் தேர்ந்தெடுத்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவுக்குச் சென்ற பிறகு முய்சு மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியாவை கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று இந்தியா தனது படைகளை திரும்பப் பெற்றது. ஆனால் ஜூலையில் முய்சுவின் அணுகுமுறையில் சிறிது மாற்றம் காணப்பட்டது. இந்தியாவை தனது நெருங்கிய நட்பு நாடு என்று வர்ணித்த அவர் பொருளாதார உதவியையும் நாடினார். இதேபோல், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவுகளும் மோசமடைந்தன. நேபாளத்தின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது என்று அப்போது நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி கூறியிருந்தார். 2024 ஆம் ஆண்டில் ஒலி மீண்டும் நேபாளத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ஐநா பேரவை கூட்டத்தின் போது ஒலியும் மோதியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருப்பதாகவும், இந்த உறவுகளுக்கு மேலும் வேகத்தை அளிக்கும் திசையில் தாங்கள் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். தாலிபனை ஆப்கானிஸ்தானின் சட்டபூர்வ அரசாக இந்தியா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தூதாண்மை பணிகளை தொடரும் 15 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்போது இறுதியாக வங்கதேசம் பற்றிப் பேசுவோம். முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா சற்றே பின்வாங்கிய நிலையில் இருந்தது. ஷேக் ஹசீனாவின் அரசுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டிருந்தது. ஆனால் வங்கதேசத்தில் ஹசீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியபோது அங்குள்ள மக்கள் இந்தியாவை சந்தேகக்கண்ணுடன் பார்க்கத் தொடங்கினர். பிரதமர் மோதி மற்றும் யூனுஸ் இருவரும் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆயினும் அதன் திசை என்னவாக இருக்கும் என்பது தற்போது தெளிவாக இல்லை. ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஆர்பாட்டக்காரர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகளுடனான உறவுக்கு அளித்த முன்னுரிமையை அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கவில்லை என பல நிபுணர்கள் கருதுகின்றனர். மூத்த பத்திரிகையாளரும், 'தி இந்து' நாளிதழின் தூதாண்மை விவகாரங்களுக்கான ஆசிரியருமான சுஹாசினி ஹைதர், “அண்டை நாடுகளுடனான உறவுகள் இந்தியாவுக்கு ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அரசு அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்று பேசியது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. எனவே இந்த நாடுகள் தன்னைப்பற்றி ஆக்கபூர்வமாக உணரும் என்று இந்தியா எதிர்பார்க்கக் கூடாது” என்றார். “தனது வெளியுறவுக் கொள்கையை அண்டை நாடுகளின் அரசுகள் எப்போதும் ஏற்றுக் கொள்ளும் என்ற மாயையில் இந்தியா இருக்கக் கூடாது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை அண்டை நாடுகள் மீது திணிக்க முடியாது. தொடர்ந்து மாறிவரும் சூழலில் இருந்து இந்தப் பாடத்தை அரசு கற்றுக்கொண்டு வருகிறது," என்று சுஹாசினி ஹைதர் தெரிவித்தார். ஆனால் அதே நேரம், நாட்டின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய தூதர் வீணா சிக்ரி கூறுகிறார். “இந்தக் கொள்கை மிகவும் பொறுப்பு வாய்ந்தது மற்றும் நெகிழ்வுத்தனமை கொண்டது. நாம் (இந்தியா) எந்த சூழலையும் அனுசரித்துச் செல்ல முடியும். மாலத்தீவில் முய்சுவின் 'இந்தியா அவுட்' கொள்கையை இந்தியா எப்படி எதிர்கொண்டது என்பது இதற்கு சிறந்த உதாரணம். மெல்லமெல்ல எல்லாம் சரியாகிவிட்டது." என்று அவர் குறிப்பிட்டார். "இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது இந்தியா நிதி உதவி வழங்கியது. வங்கதேசத்தின் இடைக்கால அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் இந்தியா கூறியுள்ளது," என்றார் வீணா சிக்ரி. "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை இப்போது விரிவடைந்துள்ளது மற்றும் முதிர்ச்சியடைந்துள்ளது என்பதற்கான ஒரு பெரிய அறிகுறியாகும் இது. இந்தக் கொள்கை கடந்த சில ஆண்டுகளாக சோதிக்கப்பட்டது மற்றும் அந்த சோதனை வெற்றியும் பெற்றுள்ளது," என்று அவர் கூறினார். உள்நாட்டுக் கொள்கை மற்றும் ஜனநாயகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆரம்பக்கட்ட பதற்றத்திற்குப் பிறகு, இந்தியாவுடனான உறவை மேம்படுத்த மாலத்தீவு அரசு முயற்சி எடுத்துள்ளது அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் பல காரணங்களால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு மாற்றங்கள் மற்றும் அவற்றின் ஜனநாயகமயமாக்கல் ஆகியவை இதில் அடங்கும். “இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சவால்களை அதிகப்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை” என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்வரண் சிங். ”ஆனால் இந்த மாற்றங்களுக்குக் காரணம் இந்தியா அல்ல. அண்டை நாடுகளின் உள்நாட்டுக் கொள்கைகள்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார் அவர். ”அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய இரண்டு பெரிய அண்டை நாடுகள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்தியா பாகிஸ்தானைத் தவிர வேறு பல சிறிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது,” என்று ஸ்வரண் சிங் குறிப்பிட்டார். இது ’ஸ்மால் ஸ்டேட் சிண்ட்ரோம்’ என்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. இந்தியா தங்களை அதிகாரம் செய்யப் பார்ப்பதாக அண்டை நாடுகள் கருதுகின்றன. இந்த குட்டி நாடுகளில் ஜனநாயகம் வலுப்பெறும் போது, இந்தியாவின் முன் உறுதியாக நிற்பது இந்த நாடுகளின் அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறும்," என்றார் அவர். உதாரணமாக பூடானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் சிறப்பாகவே உள்ளன. ஆனால் அங்கு தேர்தல் நடத்தப்படும்போது, இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. நேபாளம், வங்கதேசம் மற்றும் மாலத்தீவுகள் போன்ற எல்லா சிறிய நாடுகளும் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் 'சம தூரம்' என்ற கொள்கையை பின்பற்றுகின்றன. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் உறவைப் பேணுவதற்கு இந்த சிறிய நாடுகள் சமச்சீர் நிலையை பராமரிக்கின்றன. இதன் காரணமாக கடன் பிரச்னை, உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை ஆதாரங்களின் பற்றாக்குறை போன்ற கடினமான சூழ்நிலைகளுக்கு அவைகள் தள்ளப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சமச்சீர் நிலையை பேணும் இந்த முயற்சி இந்த சிறிய நாடுகளுக்கு இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசவும் வாய்ப்பளிக்கிறது. அண்டை நாடுகளின் உள்நாட்டு மாற்றங்களை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் வங்கதேசம் போன்ற சில விஷயங்களில் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின்மை தெளிவாகத் தெரிகிறது. ”மோதி அரசால், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிராந்திய புவிசார் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பதை அண்டை நாடுகளில் ஏற்படும் சாதகமற்ற ஆட்சி மாற்றங்கள் காட்டுகின்றன," என்று சுஹாசினி ஹைதர் கூறுகிறார். "அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பேசுகிறது. ஆனால் அது தன் அண்டை நாடுகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.” என்கிறார் அவர். வங்கதேச நிகழ்வு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஏனெனில் இந்திய ஹைகமிஷனுடன் கூடவே அந்த நாட்டில் நான்கு தூதரக அலுவலகங்களும் உள்ளன. இருந்த போதிலும் இந்தியாவால் அங்குள்ள நிலைமையை சரியாக மதிப்பிட முடியவில்லை. “வங்கதேசத்தில், இந்தியா ஒரு தரப்புடன் மட்டுமே தொடர்பில் இருந்தது. நாட்டிற்குள் இருந்த எதிர்ப்பை புறக்கணித்தது. இந்த தவறுக்கான விலையை இந்தியா இப்போது அளிக்கிறது,” என்று சுஹாசினி ஹைதர் குறிப்பிட்டார். மாறாக இலங்கையின் அரசியல் சூழ்நிலையை இந்தியா சிறப்பாகக் கையாண்டது. ஏனெனில் பிரதமர் மோதி, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பே அநுர குமார திஸாநாயக்கவை இந்தியாவுக்கு அழைத்தார் என்று ஹைதர் கூறுகிறார். “இலங்கையில் அதானியின் திட்டம் போல பல அண்டை நாடுகளில் இந்தியர்களின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட திட்டங்களை ஆதரித்தால் அது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார். முன்னோக்கிய வழி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸின் அமெரிக்க பயணம் செய்திகளில் இடம்பெற்றுள்ளது அண்டை நாடுகளுடனான உறவில் இந்தியா மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு சாதகமாக இருப்பதாகவும், நமது வெளியுறவுக் கொள்கை எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் என்றும் வீணா சிக்ரி கூறுகிறார். "உலகம் முழுவதும் அரசுகள் மாறுகின்றன. ஆனால் இந்தியாவின் நற்பெயரைக் காப்பாற்றக் கூடிய அளவுக்கு நாம் செயல்புரிய வேண்டும். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப நமது வெளியுறவுக் கொள்கை அமைய வேண்டும்." என்கிறார் வீணா. இந்தியாவின் உள்நாட்டு கொள்கைகளும் அண்டை நாடுகளுடனான உறவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்தியா உணர வேண்டும் என்கிறார் சுஹாசினி ஹைதர். "இந்தியா அண்டை நாடுகளில் ஒரு தலைவராக பார்க்கப்படுகிறது. கருத்துகள் மற்றும் லட்சியங்களைக் கொண்ட, ஒரு வழிகாட்டி நாடு. எனவே, குடியுரிமைச் சட்டத் திருத்தம் (சிஏஏ) போன்ற இந்தியாவின் கொள்கைகள் அதன் அண்டை நாடுகளையும் பாதிக்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார். "சிஏஏ அறிவிக்கப்பட்டபோது வங்கதேசத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஷேக் ஹசீனாவின் அரசு சிஏஏவை ஏற்றுக்கொண்டாலும் அங்குள்ள மக்கள் அதை எதிர்த்ததால் அது இந்தியாவின் பிம்பத்தை பாதித்தது. அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தால் மட்டும் போதாது. இந்த நாட்டு மக்களின் இதயங்களையும் நாம் வெல்ல வேண்டும்." என்று சுஹாசினி கூறுகிறார். இதற்கு அடிப்படை மந்திரம் பொறுமை என்று பேராசிரியர் ஸ்வரண் சிங் சுட்டிகாட்டினார். “நேபாளத்தில் ஒலி மற்றும் வங்கதேசத்தில் யூனுஸ் விவகாரத்தில் இந்தியா மிகவும் பொறுமையைக் காட்டியது. கொந்தளிப்பான சூழ்நிலையிலும் இந்தியா நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது. அண்டை நாடுகளுடனான மோசமான உறவுகள் தனக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை இந்தியா அறிந்திருக்கிறது. ஏனென்றால் இதுபோன்ற சூழ்நிலையில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனாவுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும்,” என்று அவர் விளக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq64mzzedjpo
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படம் 28 செப்டெம்பர் 2024, 05:20 GMT புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹெஸ்பொலா உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ, வேறு ஏதேனும் கருத்து சொல்லவோ இல்லை. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பைடன் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன? ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது. ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு இந்நிலையில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது. ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், "ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது. Twitter பதிவை கடந்து செல்ல Hassan Nasrallah will no longer be able to terrorize the world. — Israel Defense Forces (@IDF) September 28, 2024 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு ‘இஸ்ரேலை யார் அச்சுறுத்தினாலும் விடமாட்டோம்’ பட மூலாதாரம்,IDF படக்குறிப்பு, ஐடிஎப் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். "நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி" என்று அதில் அவர் கூறியுள்ளார். ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது. "பல்வேறு கட்ட ஆயத்தப்பணிகளுக்கு பிறகு, இஸ்ரேலிய ராணுவம், நஸ்ரல்லா மற்றும் ஹெஸ்பொலாவின் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தியது" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார். "மிகச்சரியான நேரத்தில், மிகவும் துல்லியமான முறையில் அந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் இது முடிவல்ல என்பதில் தெளிவாக இருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும் திறன் எங்களிடம் அதிகமாகவே உள்ளது" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS ‘ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல் தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவின் ஏவுகணைப் பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது உட்பட இஸ்ரேல் மீதான ஏராளமான தாக்குதல்களின் பின்னணியில் அலி இஸ்மாயில் இருந்தார் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது. தாக்குதலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார். ‘எந்த சக்தியாலும் இஸ்ரேலைத் தடுக்க முடியாது’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் ‘தடுக்க முடியாது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். ஜோசப் பொரெல் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் செய்வது போர்நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுப்பது தான். ஆனால் காஸாவில் அல்லது மேற்குக் கரையில் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை யாராலும் தடுக்க முடியாது என்று தான் தெரிகிறது" என்றார். “ஹெஸ்பொலா அழிக்கப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாது” என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியதாக பொரெல் கூறினார். 21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் அழைப்பையும் அவர் ஆதரித்து பேசினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy80g54e8y4o
  11. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முல்லைத்தீவு (Mullaitivu) நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல் போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அந்த அலுவலகத்தின் சட்டத்தரணிகளும், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி V.S.நிரஞ்சன் ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். வழக்கு விசாரணை வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில் ''இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுவரை காலமும் மனித புதைகளில் இருந்தும் எடுக்கப்பட்ட மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களம் இதேவேளை, அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது.'' என தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/kokkudhuduwai-human-burial-case-1727471213#google_vignette
  12. 28 SEP, 2024 | 11:22 AM வரி செலுத்தத் தகுதியான அனைவரும் 2023/2024 ஆண்டுக்கான வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கால அவகாசத்துக்குள் வரி செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி அறவிடப்படுவதோடு, தள்ளுபடி செய்யப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியன்று அல்லது அத்திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 1944 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு சென்று மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். https://www.virakesari.lk/article/194971
  13. எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!
  14. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹெஸ்பொலா மீதான இஸ்ரேல் தாக்குதல் - இரானின் நிலைப்பாடு என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், ஜியர் கோல் பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட கால நண்பனும், அண்டை நாடுமான லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆயுதக் குழு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிராக இரான் எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பது அந்த நாட்டில் உள்ள பழமைவாதிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது. இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் பேசிய போது காஸா மீதான இஸ்ரேல் போரை விமர்சனம் செய்தார். லெபனான் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதில் கிடைக்காமல் போகாது என்று அவர் எச்சரிக்கையும் செய்துள்ளார். ஆனால் ஜூலை மாதம் அதிபராக தேர்வு செய்யப்பட்ட பெசெஷ்கியன், தனக்கு முன்பு ஆட்சி செய்த அதிபர்களைக் காட்டிலும் மிகவும் மென்மையான போக்கை கையாளத் துவங்கினார். இஸ்லாமியக் குடியரசின் எதிராளிகளை அழிப்பது என்பது போன்ற பேச்சுகளை அவர் தவிர்த்து வந்தார். "நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எந்த நாட்டுடனும் சர்ச்சையில் ஈடுபடும் எண்ணம் எங்களுக்கு இல்லை," என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 2015-ஆம் ஆண்டு தடைபட்டுப் போன அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர அவருடைய அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இஸ்ரேல் இரான் மீதும் அதன் முக்கிய கூட்டாளிகளான ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலா மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பழிவாங்குவது தொடர்பாக மூத்த இரானிய தலைவர்களும், இஸ்லாமிய புரட்சிப் படைக் குழுவின் ( Islamic Revolution Guard Corps (IRGC)) தளபதிகளும் வெளிப்படுத்தும் கருத்துகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஹமாஸ், ஹெஸ்பொலா அமைப்புகளுக்கும் இரானுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த இரண்டு குழுக்களுக்கும் ஆயுதம் வழங்கியதோடு மட்டுமின்றி நிதியும் பயிற்சியும் அளித்தது இரான் மட்டுமே. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கும் பெரிய அரணாக ஹெஸ்பொலா அமைப்பை டெஹ்ரானில் உள்ள தலைவர்கள் அதிகமாக நம்பியுள்ளனர். 1980களில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர படைக்குழுவினர் ஹெஸ்பொலா அமைப்பை உருவாக்கினர். ஹெஸ்பொலா லெபனானின் பலமான ஆயுதமேந்திய குழுவாக மாறியதற்கும், அரசியலில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்ததற்கும் இரானின் ஆதரவு முக்கிய பங்காற்றுகிறது. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹெஸ்பொலா பயன்படுத்தும் அதிநவீன ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் விநியோகிப்பது இரான் தான். ஹெஸ்பொலாவுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரான் வழங்கியதாக அமெரிக்கா முன்பே குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வாரம் பெய்ரூட்டில் இரான் தூதரக அலுவலகத்தில் நடந்த பேஜர் குண்டுவெடிப்பில் லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானி பலத்த காயம் அடைந்தார். ஹெஸ்பொலா உறுப்பினர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள், பேஜர்கள் அடுத்தடுத்து நடந்த இரண்டு தொடர் நிகழ்வுகளில் வெடித்து சிதறின. இதில் 39 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேலே காரணம் என்று குற்றம் சாட்டியது இரான். ஆனால் பதில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் இரான் உடனடியாக வெளியிடவில்லை. ஆனால், ஏப்ரல் மாதத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 8 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியது இரான். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கில் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி தாக்குதல் நடத்தியது. டெஹ்ரானில் கடந்த ஜூலையில் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டத்திற்கு எதிர்வினையாற்றிய இரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தும் என்று சூளுரைத்தது. ஆனால் இதுவரை பதில் தாக்குதல் தொடர்பாக எந்த அறிவிப்பையும் இரான் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த வாரம் நடைபெற்ற பேஜர் தாக்குதலில் லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானி காயம் அடைந்தார் அமைதி காக்கும் தலைவர்கள் - காரணம் என்ன? இரானின் இஸ்லாமிய புரட்சிப் படைக் குழுவின் முன்னாள் தளபதி பிபிசியிடம் பேசும் போது, "எந்த விதமான செயல்பாடும் தொடர்ச்சியாக வெறும் எச்சரிக்கை மட்டும் செய்வது, உள் நாட்டு ஆதரவாளர்கள் மத்தியிலும், வெளிநாட்டினர் மத்தியிலும் ராணுவத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்," என்று கூறினார். திங்கள் கிழமை அன்று, அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய பெசெஷ்கியன் இஸ்ரேல் இரானை போருக்குள் இழுத்து வர சரியான தருணத்திற்காக காத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். "இஸ்ரேல் உடனான பதற்றத்தைக் குறைக்க இரான் தயாராக உள்ளது. மேலும் இஸ்ரேல் ஆயுதங்களை கைவிடும் பட்சத்தில் இரானும் அதனை பின்பற்ற தயாராக உள்ளது," என்று கூறினார். அதிபரின் இத்தகைய போக்கு இரானின் பழமைவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி-யின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள பழமைவாதிகள் பலரும் அதிபரின் இந்த கருத்தை விமர்சனம் செய்துள்ளனர். அதிபர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஊடக நேர்காணல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பெசெஷ்கியன் செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தார். அது பின்னர் ரத்து செய்யப்பட்டது. அவர் இதற்கு முன்பு தெரிவித்த கருத்துகளின் காரணமாக பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வற்புறுத்தப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை. ராணுவ வீரர்கள் மத்தியில் காமனெயி செப்டம்பர் 25-ஆம் தேதி நடத்திய உரையின் போது இஸ்ரேலை தாக்குவது தொடர்பாக எந்த விதமான கருத்தையும் அவர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரின் வழக்கத்திற்கு மாறான செயலாகவே கருதப்படுகிறது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இரானின் பாதுகாப்பு வாரத்தையொட்டி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள் இரானுக்கு புதிய சிக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி அன்று பாரக் ரவித் என்ற இஸ்ரேலிய ஊடகவியலாளர் அமெரிக்க செய்தி தளமான அக்ஸியோஸில் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உதவுமாறு இரானுக்கு ஹெஸ்பொலா அழைப்பு விடுத்தது என்று இரண்டு இஸ்ரேலிய தலைவர்களும் மேற்கத்திய ராஜ்ஜிய அதிகாரிகளும் கூறியதாக தெரிவித்திருந்தனர். "இது சரியான தருணமல்ல," என்று இரான் ஹெஸ்பொலாவிடம் கூறியதாகவும் இஸ்ரேலிய தலைவர்கள் கூறியதாக ரவித் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டிருந்தார். கடந்த வாரம், இரானின் இணைய தொலைக்காட்சி நிகழ்வை தொகுத்து வழங்கும் மைதான், இஸ்ரேல் இரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படைக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்ல தாக்குதல் நடத்தியதாகவும், முக்கியமான ஆவணங்களை திருடிச் சென்றிருப்பதாகவும் இரானிய உளவுத்துறை கூறியதாக குறிப்பிட்டிருந்தார். இரானுக்குள் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடுவதற்கு இரானியப் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் அது வெளிவருவதை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். IRGC-யுடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்திக் குழுமம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இரான் இஸ்லாமியக் குடியரசும் கூட ஒரு நிச்சயமற்ற தன்மையில் தான் இருக்கிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது அமெரிக்காவின் ராணுவ பதிலடியை தூண்டி, நாட்டை பெரிய பிரச்னைக்கு இட்டுச்செல்வதாக அமைந்துவிடும் என்று யோசிக்கிறது இரான். அமெரிக்காவின் பொருளாதார தடை மூலமாக பொருளாதார சிக்கலில் இருக்கும் இரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அது அந்த நாட்டை மேலும் வலுவற்றதாக மாற்றும். இதனால் இரானிய எதிராளிகள் மீண்டும் ஒன்றாக எழும் சூழலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. எவ்வாறாயினும், இஸ்ரேலுடனான ஹெஸ்பொலாவின் மோதலில் இரான் நேரடியாக தலையிடுவதைத் தவிர்த்தால், அது பிராந்தியத்தில் உள்ள இதர ஆயுதமேந்திய குழுக்களுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பக் கூடும். நெருக்கடி காலங்களில், இரான் இஸ்லாமிய குடியரசு அதன் சொந்த நாட்டிற்கும் மற்றும் நலன்களுக்குமே முன்னுரிமை அளிக்கும் என்பதே அந்த சமிக்ஞையாகும். இது இரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் செல்வாக்கை இந்த பிராந்தியத்தில் வலுவிழக்கச் செய்துவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77xv4gl055o
  15. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய ஹெலன் சூறாவளி - 43 பேர் பலி Published By: DIGITAL DESK 3 28 SEP, 2024 | 10:02 AM அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை வெள்ளிக்கிழமை ஹெலீன் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 43 பேர் உயழிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புளோரிடா வளை குடாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும். சூறாவளியால் வியாழக்கிழமை இரவு பெய்த மழையினை அடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து ஜோர்ஜியா மற்றும் கரோலினாஸுக்கு வடக்கே சூறாவளி கரையை கடந்துள்ளது. இந்நிலையில், ஹெலன் சூறாவளி வலுவிழந்திருந்தாலும் அதிக காற்று, வெள்ளம் மற்றும் சூறாவளி அச்சுறுத்தல் தொடரும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சில இடங்களில் 50 சென்றி மீட்டர் வரை அதி பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை தாக்கிய சூறாவளிகளில் 14 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இது பதிவாகியுள்ளது. இந்த சூறாவளியால் மணிக்கு 675 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஐடா மற்றும் 1996 ஆம் ஆண்டு ஓபல் ஆகிய சூறாவளிகள் 460 மைல்கள் காற்று வீசியுள்ளது. புளோரிடா, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் கரோலினாஸ் முழுவதும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையின் தாக்கம் பரவலாக உள்ளது. புளோரிடாவில் பினெல்லாஸ் கவுண்டியில் ஐந்து பேர் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/194964
  16. 27 SEP, 2024 | 06:22 PM (நா.தனுஜா) நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்பொதுத்தேர்தலை அணுகவிருக்கும் விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது: எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது. அதனைப் புரிந்துகொண்டு இம்முறை பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க முதிய முகங்களைக் களமிறக்கவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எமது கட்சி உறுப்பினர்கள் பலரும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவே இதுகுறித்துத் தீர்மானிக்கும். இருப்பினும் அந்தத் தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194947
  17. இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் சிக்கினாரா? அமெரிக்க படைக்கு பைடன் புதிய உத்தரவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படம் 28 நிமிடங்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்பொலா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கட்டடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகிவிட்டதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பெய்ரூட்டில் பொதுமக்கள் வாழும் கட்டடத்திற்கு அடியில் ஆயுதங்களை ஹெஸ்பொலா மறைத்து வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அந்த கட்டடத்தில் இஸ்ரேல் கூறுவது போல் எந்த ஆயுதங்களும் பதுக்கி வைக்கப்படவில்லை என்று ஹெஸ்பொலா கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் இருந்து கரும்புகை எழும் காட்சிகள் வெளியாயின. ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறியா? அதேநேரத்தில், வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். ஹெஸ்பொலா தலைமையகத்தை தாக்கியதாக கூறினாலும், ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பெயரையோ, அவர்தான் தாக்குதலின் இலக்காக இருந்தார் என்றோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், இஸ்ரேல் நடத்திய இந்த தாககுதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை. பட மூலாதாரம்,REUTERS ஹஸன் நஸ்ரல்லா என்ன ஆனார்? பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் இலக்காக இருந்ததாகக் கூறப்படும் ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையைல் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy80g54e8y4o
  18. Published By: DIGITAL DESK 2 27 SEP, 2024 | 06:23 PM நா.தனுஜா நாட்டின் சமகால பொருளாதார நிலைவரங்களை கருத்திற்கொண்டு வட்டிவீதங்களை முன்னைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானித்திருக்கும் மத்திய வங்கி, இவ்வாண்டின் முடிவில் பொருளாதார வளர்ச்சி எதிர்வுகூறப்பட்டதை விடவும் உயர்வான மட்டத்தில் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 5ஆவது மீளாய்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் மேற்கூறப்பட்ட பொருளாதார எதிர்வுகூறல்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதன்படி, நாணயச் சபையானது கொள்கை வட்டிவீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் ஆகிய தற்போதைய மட்டங்களிலும், நியதி ஒதுக்கு வீதத்தை 2 சதவீதமாகவும் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அதேபோன்று எதிர்வரும் சில காலாண்டுகளில் பணவீக்கம் 5 சதவீதத்துக்குக் கீழான மட்டத்தில் பேணப்பட்டு, நிர்ணயிக்கப்படும் விலைகள் மற்றும் நிரம்பல் நிலைமைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் எதிர்காலத்தில் பணச்சுருக்கம் பதிவாகும் என மத்திய வங்கியினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இருப்பினும் அண்மையில் மின்சாரத் தீர்வைகள், எரிபொருள் மற்றும் பெற்றோலிய எரிவாயு போன்றவற்றின் விலைகளில் மேற்கொள்ளப்பட்ட கீழ்நோக்கிய திருத்தங்களாலும், உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த வீழ்ச்சியினாலும் முதன்மைப்பணவீக்கம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அதேவேளை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் பிரகாரம், நாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் முதலாம் காலாண்டில் 5.3 சதவீத விரிவாகத்தினையும், இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்திருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோன்று அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், 2024இன் முதலாம் அரையாண்டில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சிப்போக்கு, ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியிலும் தொடரும் எனவும், அது தொடக்கத்தில் எதிர்வுகூறப்பட்டதை விட உயர்ந்த வளர்ச்சியாக அமையும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க, அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது சமகால பொருளாதார நிலைவரங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும், குறுங்காலத்தில் அடைய எதிர்பார்க்கும் அடைவுகள் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் நேற்றைய தினம் தெரிவித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அச்சந்திப்பின்போது விரிவாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் கீழான நிபந்தனைகளுக்கு அமைவாகத் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதா அல்லது அவை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற தீர்மானம் நிதியமைச்சினாலேயே மேற்கொள்ளப்படும் எனவும், இருப்பினும் நாணய நிதியத்துடனான ஒத்துழைப்புக்கள் தொடரும் என ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையில் உத்தரவாதம் அளித்திருக்கிறார் எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194940
  19. புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி வாழ்த்து Published By: VISHNU 27 SEP, 2024 | 11:15 PM வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வடமாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/194955
  20. பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர். அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம். அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம். ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம். அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
  21. ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள். இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது. இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது. அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா… எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை. பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை. எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது. சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை. வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான். வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு. உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது. இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது. எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது. நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன? அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும். சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது. பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன. ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம். தொடர்ந்து பயணிப்போம். பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  22. பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி. இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? மெய்யழகன் படத்தின் கதை என்ன? '96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார். அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள். அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின? இதுதான் இப்படத்தின் கதை. பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT ‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’ இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன. தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது. “படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம். பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி? இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது. “படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம். அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது. மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது. இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது. படத்தின் மிகப்பெரிய குறை இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. அது, இப்படத்தின் நீளம். சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள். இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது. அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,YOUTUBE/THINK MUSIC INDIA சொல்ல வந்ததை விட்டுவிட்டு… படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது. இன்னொரு அன்பே சிவம்? இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம். கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம். https://www.bbc.com/tamil/articles/cwyv6q7yg2eo
  23. நற்பேறு ஜெயம் ரவி சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிகப் பரிதாபமானது. அதுவும் அவர் தன்னிடம் மிச்சமாக இருப்பது வெறும் கார் தான் எனும்போது வருத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு நடிகைக்கு நடந்திருந்தால்? நயந்தாராவோ திரிஷவோ தான் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒரு தயாரிப்பாளர் சுருட்டி தன்னைத் தெருவில் விட்டுவிட்டார் என்று சொன்னால் அவரை ஊரே சேர்ந்து பந்தாடியிருக்கும். ஆணுக்கு நடந்தால் கண்டும்காணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்களால் அழுதுகாட்டவும் முடியாது. ஜெயம் ரவிக்கும் விவாகரத்தாகும் வேறு மத்திய, மேல்மத்திய வர்க்க ஆண்களுக்குமான வித்தியாசம் பின்னவர்களின் பணத்தையும் சொத்தையும் மொத்தமாக செட்டில்மெண்டின் போது பிடுங்கியிருப்பார்கள். ஜெயம் ரவிக்கு அது விவாகரத்தாகு முன்பே நடந்திருக்கிறது. என்ன கொடுமையென்றால் நம் சமூகமே இதுதான் சரியெனும் நம்பிக்கை கொண்டிருப்பது தான் - ஆண்களின் உழைப்பு, பணம், சொத்தெல்லாம் அவர்களுடையது அல்ல, அதை யாராவது பயன்படுத்தவேண்டும், பிடுங்கவேண்டும், அதுவே கடமையாற்றுவது, கண்ணியமாக பாசமாக இருப்பது என சமூகம் நம்புகிறது. அக்கா, தங்கை, அம்மாவுக்காக கொடுப்பது, மனைவி, பிள்ளைக்கு கொடுப்பது என இளமை முதல் வயோதிகம் வரை ஆண்கள் தம் உழைப்பை பணமாகவும் சொத்தாகவும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் எப்போதுமே இதைச் சுரண்டலாகப் பார்ப்பதில்லை - வரதட்சிணையை எடுத்துக்கொள்ளுங்கள். கொடுக்க முடியாததால் துன்பப்பட்ட பெண்ணுக்காக இரக்கப்பட்ட அளவுக்கு நாம் அதைக்கொடுக்க தன் ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவழித்து போண்டியாகும் அப்பாவுக்காக வருந்துவதில்லை. சொத்து, பணம், பண்பாடு, சட்டம், நடைமுறையென்று வந்துவிட்டால் உண்மையில் இது ஒருவிதத்தில் பெண்ணாதிக்க சமூகம்தான். ஆண்களுக்குப் பேசத் தெரியாது, அவர்கள் அடிப்படையில் முட்டாள்கள் என்பதால் இதை உணரவோ, பிறருக்கு உணர்த்தி நியாயம் கேட்கவோ அவர்களுக்குத் தெரியாது. ஓரமாகப் போய் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்கள். நான் கடந்த சில ஆண்டுகளில் நான் இத்தகைய ஆண்களை ஏகத்துக்குப் பார்த்திருக்கிறேன் - என் நண்பர் ஒருவருக்கு விவாகரத்தானபோது அவரது ஊடகவியலாளர் மனைவி அவர் தான் இருபதாண்டுகளாக நிகழ்ச்சித் தயாரிப்பிலும் திரைக்கதை எழுத்திலும் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தால் மட்டுமே குழந்தையைத் தருவதாக பேரம் பேசிப் பெற்றுக்கொண்டார். இதையே அவர் அப்பெண்ணுக்கு செய்திருந்தால் சிறையில் தள்ளியிருப்பார்கள். நம்மூர் சட்டம் சொல்வதென்னவென்றால் குழந்தை பெறுவது, கூட வாழ்வது போன்ற பெண்கள் ஆற்றும் சேவைகளுக்காக ஆண்கள் தம் ஒட்டுமொத்த சொத்தை பணத்தை மொத்தமாகவோ பாதியோ கொடுத்து சரணடைய வேண்டும் என்று. இதுவரையிலும் இது மறைமுகமாக பேரமாக நடக்கிறது. இனிமேல் விரைவில் இது சட்டமாகப் போகிறது என்று சட்டமறிந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். அப்போது உண்மையிலே ஜாலியாக இருக்கும் - இப்போது பெண்ணிய கொடி தூக்கும் பல ஆண்களுக்கு ஆசனத்தில் நெருப்பு வைத்து ஓடவிடுவார்கள். பல மோசடித் திருமணங்கள் இதற்காகவே நிகழும். சரி ஜெயம் ரவி விவகாரத்துக்கு திரும்ப வருவோம் - ஒருவிதத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் உண்டு. அவரது மனைவி நினைத்தால் மாதத்திற்கு சில லட்சங்கள் கேட்டு குடும்பநல நீதிமன்றத்திற்குப் போகலாம். நீதிபதியும் நிச்சயமாக அத்தொகையை அனுமதித்து ஆணையிடுவார். ஆனால் ஜெயம் ரவி தரப்பு தன்னை படத்தயாரிப்பின் பேரில் ஏமாற்றிச் சுரண்டியதாக மனைவி, மாமியார் மீது வழக்குப் போடுவார். இந்த வழக்கு வருடக்கணக்கில் நடக்கும். கடைசியில் சமரசம் பண்ணிக்கொள்வார்கள். ஜெயம் ரவி மீதமிருக்கும் காரையும், குடும்ப சொத்தையும் விற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும். அது நடக்கவில்லை என்பது அவரது நற்பேறு. Posted Yesterday by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/09/blog-post_26.html
  24. பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் - இஸ்ரேல் Published By: RAJEEBAN 27 SEP, 2024 | 09:47 PM லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் மத்தியகட்டளை தலைமையகத்தின் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டை இந்த தாக்குதல் உலுக்கியுள்ளது பாரிய புகைமண்டலத்தை காணமுடிகின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக நான்கு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன பலர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹெஸ்புல்லா அமைப்பின் அல்மனார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வாழும் பகுதிகளிற்குள் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் காணப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாரிய புகைமண்டலம் எழுவதை தொலைக்காட்சி காண்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/194954

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.