Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு - நாமல் 24 SEP, 2024 | 05:36 PM தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கி தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொண்டால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 1994 முதல் ஜனாதிபதிகள் தாங்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவோம் என தெரிவித்துள்ள போதிலும் இன்னமும் அதனை செய்யவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான சிறந்த தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கவிரும்பினால் அதனை தாமதிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194718
  2. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது 23 SEP, 2024 | 01:22 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (23) காலை நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 பருவகாலத்திற்கான அணிகள் நிலையில் 3ஆம் இடத்திறகு முன்னேறியுள்ளது. இதன் மூலம் தற்போது அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியாவுக்கும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் சவால் விடுக்கும் வகையில் இலங்கை முன்னேறியுள்ளது. இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை தனது 26ஆவது வெற்றியை ஈட்டியதுடன் இந்த மைதானத்தில் நியூஸிலாந்து 5ஆவது தொடர்ச்சியான தோல்வியைத் தழுவியது. போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் வெற்றிக்கு மேலும் 68 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களிலிருந்து நியூஸிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. ரச்சின் ரவிந்த்ரா 91 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததால் நியூஸிலாந்துக்கு சிறு நம்பிக்கை இருந்தது. ஆனால், கடைசி நாள் ஆட்டம் இன்று திங்கட்கிழமை (23)காலை தொடர்ந்தபோது 15 நிமிடங்களில் கடைசி 2 விக்கெட்களை ப்ரபாத் ஜயசூரிய வீழ்த்த இலங்கை வெற்றிபெற்றது. ரச்சின் ரவிந்த்ரா மேலதிகமாக ஒரு ஓட்டத்தைப் பெற்று ப்ரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் எல். பி. டபிள்யூ. முறையில் 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் இலங்கை வெற்றிபெறுவது உறுதியாயிற்று. மொத்த எண்ணிக்கை 211 ஓட்டங்களாக இருந்தபோது வில்லியம் ஓ'ரூக் கடைசியாக ஆட்டம் இழந்தார். மிகவும் துல்லியமாக பந்துவீசிய ப்ரபாத் ஜயசூரிய தனது 15ஆவது டெஸ்ட் போட்டியில் 8ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் இந்தப் போட்டியில் 9 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றினார். முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் நான்காம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியிலேயே இலங்கைக்கு சாதகமாக திரும்பியது. இலங்கை சார்பாக கமிந்து மெண்டிஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ப்ரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர். நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம், கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் பிலிப்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் வில்லியம் ஓ'ரூக், அஜாஸ் பட்டேல் ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 305 (கமிந்து மெண்டிஸ் 114, குசல் மெண்டிஸ் 50, ஏஞ்சலோ மெத்யூஸ் 36, தினேஷ் சந்திமால் 30, வில்லியம் ஓ'றூக் 55 - 5 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 340 (டொம் லெதம் 70, டெரில் மிச்செல் 57, கேன் வில்லியம்சன் 55, க்லென் பிலிப்ஸ் 49 ஆ.இ., ப்ரபாத் ஜயசூரிய 136 - 4 விக்., ரமேஷ் மெண்டிஸ் 101 - 3 விக்., தனஞ்சய டி சில்வா 31 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 309 (திமுத் கருணாரட்ன 83, தினேஷ் சந்திமால் 61, ஏஞ்சலோ மெத்யூஸ் 50, தனஞ்சய டி சில்வா 40, அஜாஸ் பட்டேல் 90 - 6 விக்.) நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 275) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (ரச்சின் ரவிந்த்ரா 92, கேன் வில்லியம்சன் 30, டொம் ப்ளண்டெல் 30, ப்ரபாத் ஜயசூரிய 68 - 5 விக்., ரமேஷ் மெண்டிஸ் 83 - 3 விக்.) https://www.virakesari.lk/article/194604
  3. 24 SEP, 2024 | 02:17 PM சென்னை: பயங்கரவாத இயக்கத்துக்கு தடையை மீறி ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (செப்.24) சோதனை மேற்கொண்டனர். ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பேராசிரியர் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சென்னை சைபர் கிரைம் போலீஸார் முதலில் இந்த வழக்கில் துப்பு துலக்கினர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். இந்நிலையில், சென்னையில் 10 இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இடத்திலும், நாகர்கோயிலில் ஒரு இடம் என தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஏழு கிணறில் ரகுமான் என்பவர் வீட்டிலும் நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ், சையது அலி ஆகியோர் வீடுகளிலும், ராயப்பேட்டையில் முகமது அலி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. சித்தாலப்பாக்கம், நன்மங்கலம் பகுதிகளில் சோதனை: பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சித்தாலப்பாக்கம், நன்மங்கலம் ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நன்மங்கலம் பாண்டியன் நகரில் வசித்து வரும் ரமேஷ் அகமது (28) என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதேபோல் சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர், லோட்டஸ் காலனியில் வசிக்கும் முகமது யாசின் என்பவர் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு மற்றும் இந்த அமைப்புக்கு உறுதுணையாக இயங்குவதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நன்மங்கலம் பாண்டியன் நகரில் என்ஐஏ சோதனைக்குள்ளான வீடு இதேபோல் அடையார் பகுதியில் முகமது ரியாஸ் என்பவர் குடியிருக்கும் வீட்டில் இன்று காலை 6.15 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிகாரிகளின் சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/194690
  4. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார Published By: RAJEEBAN 24 SEP, 2024 | 12:22 PM இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினை அனுரகுமாரதிசநாயக்க வெளியிட்டுள்ளார். அவரது தலைமைத்துவத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல்நாடுகளான சீனா இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயலும் என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயலாது என தெரிவித்துள்ளார். புவிசார் அரசியல் மோதலில் நாங்கள் ஒரு பகுதியாக மாறமாட்டோம், எந்த தரப்புடனும் இணைந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் துண்டாடப்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லைஎன குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளும் பெறுமதி மிக்க நணபர்கள், எங்கள் அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அவர்கள் நெருங்கிய சகாக்களாக மாறுவதை விரும்புகின்றோம், என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய மத்திய கிழக்கு ஆபிரிக்காவுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் பிராந்திய பதற்றங்களிற்கு இடையில் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்த நடுநிலை வெளிவிவகார கொள்கை அவசியம் என தெரிவிததுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி பரஸ்பரம் சாதகமான இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கு முயற்சி செய்வார் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194683
  5. 24 SEP, 2024 | 03:00 PM தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இடைக்கால அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/194696
  6. லெபனானில் இஸ்ரேல் உக்கிரமான வான்தாக்குதல் - 500 பேர் பலி 24 SEP, 2024 | 11:32 AM லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதியிலும் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதல்களில் 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1650க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வான்வெளித் தாக்குதல்களால் முற்றாக அழிக்கப்பட்டுள்ள கட்டிடங்களின் சிதைவுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்புபணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், விமான இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்ட தொலைதூர பகுதிகளிற்கு செல்ல முயல்கின்றனர் என தெரிவித்துள்ள லெபான் அதிகாரிகள் இதன் காரணமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பு கடந்த 20 வருடங்களாக கட்டியெழுப்பியிருந்த அதன் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194675
  7. 24 SEP, 2024 | 11:18 AM 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு 1.69% வாக்குகளை பெற்றது குறித்து தனது கருத்தினை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு உதயமான பொழுதிலிருந்தே அதனை மிகக் கடுமையாக நான் எதிர்த்தது அனைவரும் அறிந்ததே. அவ்வெதிர்ப்புக்கான காரணங்கள் பல தருணங்களிலே வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் இச் சமயத்திலே மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது நல்லது என்று நினைக்கின்றேன். 1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. 2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? 3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். 4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. 5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. 6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும். இலங்கை தமிழரசுக்கட்சி எத்தருணத்திலும் தமிழ்ப் போதுவேட்பாளரை நிறுத்துகிற முயற்சியில் பங்கெடுக்கவில்லை. மாறாக பிரதான வேட்பாளர்கள் மூவரோடும் கட்சியின் முடிவின்படி உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். எமது கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரைத் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்திய போது அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்து, அவருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யும் எமதுகட்சி உறுப்பினர்களை எச்சரித்தோம். பிரதான வேட்பாளர்கள் மூவரினதும் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்தவுடனேயே எமது மத்திய செயற்குழு கூடி அவற்றை ஆராய்ந்தது. இந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்த ஐந்தாவது கூட்டம் 01.09.2024 அன்று வவுனியாவில் கூடி பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றினர். 1. தமிழ்ப் பொது வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திரு. பா. அரியநேத்திரனுக்கு நாம் ஆதரவளிப்பதில்லை. 2. தேர்தலிலிருந்து விலகிக் கொள்ளுமாறு திரு. அரியநேத்திரனைக் கோருவது. 3. ஜனாதிபதி தேர்தல் 2024 இல் இலங்கை தமிழரசுக்கட்சி திரு. சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது. எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் திரு. சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருக்கின்றார். வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 80 % இனர் நாம் அடையாளம் கண்ட மூன்றுபிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதுஎமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும் அங்கீகாரம் மாறாக திரு.அரியநேத்திரனுக்கு வடக்குகிழக்கில் 14 % இற்கு குறைவாகவே வாக்குகள் கிடைத்துள்ளன. மிகக் குறைவான அளவு வாக்குகளைப்பெற்றதன் மூலமும், பிரதான தமிழ்க் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு மறுக்கப்பட்ட நிலையிலும், திரு.அரியநேத்திரனின் படுதோல்வி தமிழ் மக்களின் தோல்வியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பியிருக்கின்றது. 1982 ஆம் ஆண்டு திரு.குமார் பொன்னம்பலம் 2.67% வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் 1.69% வாக்குகளையே பெற்றதன் மூலம் திரு. அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது. இந்தத் தடவை மக்களது மதி நுட்பத்தால் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நாம் தப்பித்துக்கொண்டுள்ளோம். இனிமேலும் இவ்விதமான விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194654
  8. படக்குறிப்பு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பற்றிய சுவாரசிய தகவல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் இந்த மலர்கள் பற்றிய தகவல்கள் பலரும் அறியாததாகவே இருக்கின்றன. நீலகிரிக்கு நீலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன? நீலக்குறிஞ்சி மலர்களின் பண்புகள் என்ன? இவை எந்தச் சூழலில் வளர்கின்றன? இந்த மலர் உள்ளூர் கலாசாரத்தில் எத்தகைய முக்கியத்துவம் வகிக்கிறது? நீலகிரி மலைக்குப் பெயர்கொடுத்த மலர் தமிழர்களின் ஐந்திணைகளில் ஒன்றான மலையும் மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சிக்கு, அந்தப் பெயர்க்காரணம் வந்ததற்கு அங்கு பூக்கும் நீலக்குறிஞ்சிதான் காரணம் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் டபிள்யு.பிரான்சிஸ் எழுதிய ‘நீலகிரி அகராதி’ என்ற நூலில், நீலகிரிக்கு நீலமலை என்று பெயர் வந்ததற்கான காரணம், இந்த நீலக்குறிஞ்சி என்று பதிவிடப்பட்டுள்ளது. ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்த்தியானா (Strobilanthes Kunthiana) என்ற தாவரவியல் பெயர் கொண்ட நீலக்குறிஞ்சி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதால் அரிதிலும் அரிதான ஓர் இனமாகக் கருதப்படுகிறது. ஆசியப் பல்லுயிர்ச் சூழலைப் பற்றிய ஆய்வுகளை வெளியிட்டு வரும் இந்தோனேஷியாவின் சூழலியல் இதழான டேப்ரோபணிகா (Taprobanica, The Journal of Asian Biodiversity) இந்த நீலக்குறிஞ்சியின் தன்மைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. பட மூலாதாரம்,XAVIER SELVAKUMAR படக்குறிப்பு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி நீலக்குறிஞ்சி குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? நீலக்குறிஞ்சியைப் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் கேரளாவைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்களான பிரதீப் மற்றும் பின்ஸி ஆகியோர், இதுபற்றி பல அரிய தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டர். “தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரங்களில்தான் நீலக்குறிஞ்சிச் செடிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இதில் பூக்கும் மலர்களே, இதன் தனித்துவமாகக் கருதப்படுகிறது,” என்கின்றனர் அவர்கள். இந்த மலர்களிடம் வசீகரிக்கும் வாசம் இல்லாவிடினும் ஒரு மென்மையான வாசம் இருக்கும். பூக்கும் காலங்களில் இவற்றை 10-க்கும் மேற்பட்ட தேனீ இனங்கள் தேடி வருகின்றன. புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் இந்த செடிகள் குறைந்தபட்சம் அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர் வரை உயரம் கொண்டவை, என்கின்றனர் அவர்கள். பட மூலாதாரம்,XAVIER SELVAKUMAR படக்குறிப்பு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உயர்ந்த சிகரங்களில் மட்டுமே நீலக்குறிஞ்சி பூக்கும் வளர்ச்சி தடைபடக் காரணம் என்ன? "தேனி மாவட்டம் மேகமலையிலுள்ள குறிஞ்சி மலர்ச்செடி, ஒன்றரை மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. இந்தச் செடிகள், பழங்களை விளைவித்து, அதிலிருந்து விதைகளை வெடித்துச் சிதறச் செய்தபின், மடிந்து விடுகின்றன. புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் மட்டுமே இவை வளர்வதால், தாவர உண்ணிகள் மேயும்போது, இந்தச் செடிகளையும் மேய்ந்து விடுகின்றன. அதனால் பூக்கும் முன்னே அழிந்து விடுவதும் அதிகம் நடக்கிறது,” என்கிறார் ஆராய்ச்சியாளர் பிரதீப். மேலும், “வன உயிரினங்களைப் போலவே, மனிதர்களாலும் இவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் இவர்கள். குறிப்பாக, கடும் வெப்பத்தால் இயற்கையாகவோ அல்லது மனிதச் செயல்களாலோ ஏற்படும் காட்டுத்தீயால் நீலக்குறிஞ்சி அழிந்துவிடுகிறது," என்று ஆராய்ச்சியாளர் பிரதீப் தெரிவிக்கிறார். உயரமான புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் இவை வளரும்போது, காற்றின் வேகமும் இதன் வளர்ச்சிக்குத் தடையாகி, அதன் உயரம் குறைந்து போகக் காரணமாக இருப்பதாகச் குறிப்பிடுகிறார் பின்ஸி. படக்குறிப்பு, ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்த்தியானா (Strobilanthes Kunthiana) என்ற தாவரவியல் பெயர் கொண்டது நீலக்குறிஞ்சி சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் பிரச்னைகள் இவர்கள் இருவரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் முழுவதிலும், தங்கள் தாவரவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி வனக்கோட்டத்தில் மட்டுமின்றி, தென்காசியின் குற்றாலம், தேனியின் மேகமலையிலும், வெவ்வேறு வகையான குறிஞ்சி வகைகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர். மேகமலையில் 500 மீட்டரிலிருந்து 900 மீட்டர் வரை உயரமுள்ள மலைப்பகுதிகளில், வேறு விதமான குறிஞ்சி பூப்பதை இவர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த வகைக் குறிஞ்சி, ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதாக அங்குள்ள உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். படக்குறிப்பு, மேகமலையில் 500-900 மீட்டர் வரை உயரமுள்ள மலைப்பகுதிகளில், வேறு விதமான குறிஞ்சிகள் பூப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் நீலகிரி, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பிரதேசம் என்பதால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் போன்ற முக்கிய நகரங்களைத் தவிர்த்து, வேறு பகுதிகளிலும் ரிசார்ட்கள் மற்றும் தனியார் விடுதிகளில் பலரும் தங்குகின்றனர். காப்புக்காட்டுக்குள் உள்ள இந்த நீலக்குறிஞ்சி மலர்களைக் காண்பிப்பதாகக் கூறி, அங்குள்ள வழிகாட்டிகள் பலரும், பல ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, வனத்துறையின் முறையான அனுமதியின்றி மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார், ஊட்டியிலுள்ள மூத்த பத்திரிக்கையாளர்கள். கடந்த வாரத்தில், வனப்பகுதிக்குச் செல்லும் சாலையில் வந்த சுற்றுலா வாகனத்தை வனத்துறையினர் சோதனையிட்டபோது, அந்த காரின் பின்பகுதியில், ஏராளமான நீலக்குறிஞ்சிச் செடிகள், வேரோடு பறிக்கப்பட்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நீலக்குறிஞ்சி எந்தப்பகுதியில் பூத்திருப்பது என்பதைக் கூட, தாங்கள் குறிப்பிட விரும்புவதில்லை என்கின்றனர் அப்பகுதியில் உள்ளவர்கள். இதையே வனத்துறையினரும் வலியுறுத்துகின்றனர். பட மூலாதாரம்,BINCI படக்குறிப்பு, தாவிரவியல் ஆராய்ச்சியாளர் பின்ஸி கண்காணிக்கும் வனத்துறையினர் நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கெளதம் பிபிசி தமிழிடம் கூறுகையில், “நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி மற்றும் கோத்தகிரியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில், 20 ஹெக்டேருக்கும் (50 ஏக்கர்) அதிகமான பரப்பளவில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையோரங்களிலும் பல இடங்களில் பூத்திருப்பதால், ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்தபடி அதை ரசிக்கின்றனர்,” என்றார். மேலும், “சாலையோரம் நின்று இப்பூக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதை நாம் தடுப்பதில்லை. ஆங்காங்கே வனத்துறை ஊழியர்களை நிறுத்தி, செடிகளைப் பறிக்காதவாறும் உள்ளே செல்லாத வகையிலும் கண்காணித்து வருகிறோம். காப்புக்காட்டுப் பகுதிக்குள் செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு யாரும் செல்ல முடியாத வகையில் தீவிரமாகக் கண்காணிக்கிறோம்,” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdx9qkkpx6wo
  9. தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார் Published By: DIGITAL DESK 7 24 SEP, 2024 | 10:19 AM (நா.தனுஜா) தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று, அவர்களைத் தனித்தேசமாக அங்கீகரித்து, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்காமல் தென்னிலங்கை மக்கள் கோருகின்ற மாற்றம் முழுமையடையாது என்ற உண்மையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அம்மக்களுக்குக் கூறவேண்டும். அதேபோன்று தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல், முன்நோக்கிப் பயணிக்கமுடியும் என கருதினால், அது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்றுமுடிந்த நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தை மனதிலிருத்தி தமது விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள். 70 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் பல்வேறு சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் இத்தகைய உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்டிவருவதைப் பாராட்டுவதுடன், அதற்குத் தலைவணங்குகின்றோம். நாம் இம்முறை ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களிடம் வலியுறுத்தியிருந்தோம். அதற்கமைய வட, கிழக்கு மாகாணங்களில் வழமையான சுமார் 80 சதவீதமாகப் பதிவாகும் வாக்களிப்பு இம்முறை கணிசமானளவினால் குறைவடைந்திருக்கின்றது. எனவே வட, கிழக்கில் சுமார் 30 - 35 சதவீதமான மக்கள் தமது எதிர்ப்பை வலுவாகக் காண்பித்திருக்கின்றார்கள். அதேபோன்று இம்முறை தேர்தலில் தமிழ்த்தேசிய கோஷத்தை வலியுறுத்தி களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளருக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கிறபோது, வட, கிழக்கில் பெரும்பான்மை மக்கள் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகவே நின்றிருக்கிறார்கள். அதேபோன்று தமிழ்த்தேசியத்தை முன்னிலைப்படுத்திய தமிழரசுக்கட்சியின் ஆதரவைப்பெற்ற சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளை தென்னிலங்கை சிங்கள வேட்பாளருக்கு அளிக்கப்ப்ட்ட வாக்குகளாகக் கருதமுடியாது. எனவே இவ்வனைத்தையும் சேர்த்தால் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசியத்துக்கான அறுதிப்பெரும்பான்மை காண்பிக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை இந்த ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். கடந்த தேர்தலில் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர், இம்முறை ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார் எனில், இதன்மூலம் தென்னிலங்கை மக்களும் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்கள் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எப்போதும் போல வெறுங்கனவாகத்தான் இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. எனவே இவற்றிலிருந்து வேறுபட்டு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமாயின், தெற்கில் வாழும் மக்களுக்கு அநுரகுமார திஸாநாயக்க உண்மையைக் கூறவேண்டும். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று, அவர்களைத் தனித்தேசமாக அங்கீகரித்து, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்காமல் தென்னிலங்கை மக்கள் கோருகின்ற மாற்றம் முழுமையடையாது என்ற உண்மையை அவர் அம்மக்களுக்குக் கூறவேண்டும். மாறாக தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல், முன்நோக்கிப் பயணிக்கமுடியும் என அவர் கருதினால் அது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விளங்கிக்கொள்ளவேண்டும். அதன்பிரகாரம் அவர் முழுமையான சமஷ்டி தீர்வை நோக்கிய பாதையில் இறங்கவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பாடுமாயின், நாம் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/194659
  10. இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மெஜாரிட்டி - புதிய ஜனாதிபதியால் சட்டமியற்ற முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, நாடாளுமன்றத்தில் மூன்று இடங்கள் மாத்திரமே காணப்படுகின்றன. இந்த மூன்று இடங்களை வைத்துக்கொண்டு அநுர குமார திஸாநாயக்க எவ்வாறு ஆட்சியை தொடர்வார் என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. அநுர குமார திஸாநாயக்க அடுத்து என்ன செய்ய போகின்றார் என்பது குறித்து இந்த தொகுப்பு ஆராய்கின்றது. இலங்கை நாடாளுமன்றமும், தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் சவால்களும் இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆணை ஊடாகவும், 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவது வழமையானது. இந்த நிலையில், ஆட்சியிலுள்ள கட்சியொன்று ஆகக் குறைந்தது 113 உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வேண்டும். ஆனால், தற்போதுள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் முழுமையாக நான்கு மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமே காணப்படுகின்றனர். இந்த நிலையில், சட்டமூலமொன்றை சாதாரணமாக நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை அவசியம் என்ற நிலையில், தேசிய மக்கள் சக்திக்கு அவ்வாறான பெரும்பான்மை இல்லை. அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் வகையில் எந்தவொரு கட்சியும் தற்போது நாடாளுமன்றத்தில் கிடையாது. இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இன்றி ஆட்சியை கொண்டு நடத்துவது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இதுவரை இல்லாதளவு சவால் மிகுந்த ஆட்சியாகவே இந்த ஆட்சி காணப்படுகின்றது என மூத்த நாடாளுமன்ற செய்தியாளர் ஆர்.யசி பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,YASI படக்குறிப்பு, பெரும்பான்மையை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஆட்சி என்கிறார் பத்திரிக்கையாளர் ஆர்.யசி “தேசிய மக்கள் சக்தியில் தற்போது நான்கு பேர் இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேரும் இதற்கு பின்னர் அமைச்சு பதவிகளை பங்கிடப் போகின்றார்கள். அமைச்சின் செயலாளர்கள் ஊடாக தீர்மானங்களை முன்நகர்த்துவார்கள்." “அமைச்சின் செயலாளர்கள் இந்த நான்கு பேருக்கும் பொறுப்பு சொல்பவர்களாக இருப்பார்கள். அதற்கு பின்னர் 45 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பார்கள். இந்த காலப் பகுதியில் சட்டமூலமொன்றைக் கொண்டு வந்தாலும், அதனை நிறைவேற்ற முடியாத நிலைமை காணப்படும். ஏனென்றால், தேசிய மக்கள் சக்திக்கு தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை," என அவர் கூறுகின்றார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி கொள்ள முடியுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். ''வெல்ல வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உண்டு. தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் கூட்டணி சேராதுள்ள ஒரே கட்சி இந்தக் கட்சி மாத்திரம் தான். இனிவரும் காலத்திலும் தாம் யாருடன் இணைந்து கூட்டணியாக போட்டியிட போவதில்லை என இவர்கள் அறிவித்துள்ளார்கள்,” என்கிறார். “என்னவாக இருந்தாலும் 113 ஆசனங்களை இவர்கள் நாடாளுமன்றத்தில் கைப்பற்ற வேண்டும். ஜனாதிபதியொருவர் வெற்றி பெற்றதன் பின்னர் அவரைச் சூழ்ந்த அரசாங்கங்கள் அமைவது தான் வழக்கமாக இருந்தது. 57 லட்சம் வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற்றதைப் போன்று, நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். ஆனால் அந்தளவு வாக்குகளை எடுப்பது நிச்சயமாக சவாலாகவே இருக்கும். அப்படியென்றால், ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் வரும்," என யசி குறிப்பிடுகின்றார். தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை சேர்ந்த மற்றும் சிங்கள அரசியல்வாதிகளை ஒன்றிணைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்ற முயற்சிக்கும் என அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் வகையில் எந்தவொரு கட்சியும் தற்போது நாடாளுமன்றத்தில் கிடையாது பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம் அமைந்தால் என்ன நடக்கும்? தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில், அது எப்போது கலையும் என்பது தெரியாது என ஆர்.யசி தெரிவிக்கின்றார். ''இவர்களது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்படும் பட்சத்தில், ஆட்சி கலைக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.” என்கிறார். மேலும் பேசிய அவர், சட்டப்படி தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு 50% வாக்குகள் கூடக் கிடைக்கவில்லை என்கிறார் அவர். அதனால் இது நிச்சயமற்ற சூழல் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்தார் பதவி விலகினார் பிரதமர் தினேஷ் குணவர்தன ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன, தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதமர் ராஜினாமா செய்ததை அடுத்து, ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் காணப்பட்ட அமைச்சரவை இயல்பாகவே கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்க புதிய அமைச்சரவையொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியாக நியமிக்கப்படும் ஒருவருக்கு நேரடியாகவே பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் காணப்படுகின்றது. எனினும், ஜனாதிபதியை ஆதரிக்காத வேறொரு கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருக்கும் போது சிக்கல் ஏற்படும். இந்தநிலையில், அநுர குமார திஸாநாயக்க தனது கட்சியிலுள்ள ஒருவரை இம்முறை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். இதன்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கை வரலாற்றில் எந்தவொரு கட்சியும் எதிர்கொள்ளாத பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என ஆர்.யசி தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7819y1mpp3o
  11. Published By: DIGITAL DESK 7 24 SEP, 2024 | 09:52 AM (இராஜதுரை ஹஷான்) தடைப்படாத எரிபொருள் மற்றும் மின்சாரத்தை வழங்கக் கூடியவாறான போதிய நிலக்கரி, பெற்றோலிய உற்பத்திகளின் கையிருப்புடன் வலுவான நிதி நிலைமையைக் கொண்ட கட்டமைப்பை கையளித்துச் செல்கிறேன் என முன்னாள் மின் மற்றும் சக்தி வலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். அமைச்சுக்கான வாகனங்களையும் பொறுப்புக்களையும் நேற்று திங்கட்கிழமை (23) கையளித்ததன் பின்னர் எக்ஸ் வலைத்தளத்தில் வருமாறு பதிவேற்றம் செய்துள்ளார். நான் பயன்படுத்திய அரச வாகனங்கள், வலுவான நிதியியல் கட்டமைப்பை கொண்டிருந்த மின் மற்றும் சக்தி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களை போதியளவு பெற்றோலிய உற்பத்தி மற்றும் மின்னுற்பத்திக்கு அவசியமான நிலக்கரி கையிருப்புக்களுடன் நேற்று முன்தினம் கையளித்து விட்டேன். இவ்வனைத்து கட்டமைப்புக்களும் சாதகமான ஐந்தொகை செலவின மீட்டு சேவை வழங்கல், விநியோகஸ்தர்களுக்கான உரிய கால நிதி செலுத்துகை மேலதிக வருமானத்தின் ஊடாக திறைசேரிக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட நேர்மறையான விளைவுகளை வழங்கும் நிலையில் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட கடந்த இரண்டு வருட காலத்தில் எனக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2022 ஆம் ஆண்டு 4-13 மணித்தியால மின் விநியோக துண்டிப்பு, எரிபொருள், நிலக்கரி பற்றாக்குறை, பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் விநியோகஸ்தர்கள் இன்மை, அவற்றுக்கு தேவையான நிதி இன்மை, ஆகிய நிலைமைகளே காணப்பட்டன. இருப்பினும் தற்போது தடைப்படாத எரிபொருள் மற்றும் மின்சாரத்தை வழங்கக் கூடியவாறான போதிய நிலக்கரி, பெற்றோலிய உற்பத்திகளின் கையிருப்புடன் வலுவான நிதி நிலைமையைக் கொண்ட கட்டமைப்புக்களாக இவற்றை கையளித்துச் செல்கிறேன். இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு தேவையான 123, 888 மெற்றிக்தொன் டீசல், 13627 மெற்றிக் தொன் சுபர் டீசல், 92 ரக ஒக்டென் பெற்றோல் 90,972 மெற்றிக் தொன், 18 ,729 மெற்றிக் தொன் 95 ரக ஒக்டென் பெற்றோல்,விமான பயன்பாட்டுக்கு தேவையான ஜெட் எ 1 எரிபொருள் 30,295 மெற்றிக் தொன் எரிபொருள்கள் ஆகியவற்றை 2024.09.20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கையிருப்பில் காணப்பட்டது. https://www.virakesari.lk/article/194657
  12. சட்டத்தால் வடக்குக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே மக்கள் அனைவரும் நாங்கள் ஒன்று பட்டுக் கொண்டிருக்கின்றோம் என தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார். பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரனின் மட்டக்களப்பு, அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய பொது கட்டமைப்பு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளை இன்று பொறுப்பெடுக்கின்ற புதிய அரசும் சர்வதேசமும் நிச்சயமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுகிறோம். இதேவேளை, பொது கூட்டமைப்பினால் நிறுத்தப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் இன்று சிதைந்து கிடந்த தமிழினத்தை, பிரிந்து கிடந்த தமிழ் தேசிய பரப்பிலேயே பணி புரிகின்ற அரசியல் கட்சிகளை, ஒன்றிணைத்த ஒரு பெரும் கைங்கரியத்தை மேற்கொண்டு இருக்கிறார். தமிழ் மக்கள் இன்று இரண்டு இலட்சத்தி 26 ஆயிரம் வாக்குகளை அவருக்கு செலுத்தி வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக இணைத்து இருக்கின்ற ஒரு நிலைமையை கொண்டிருக்கின்றது. சட்டத்தால் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே மக்கள் அனைவரும் நாங்கள் ஒன்றுபட்டுக் கொண்டிருக்கின்றோம், ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பதை நிலைநாட்டி இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் அதனை விரிவுபடுத்துவோம் என்ற தோரணையில் அவர்கள் வாக்களித்து இன்று உலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்கள். இந்த அரசை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும்”என அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309834
  13. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்தால் ரூ.1.25 கோடி வழங்குவதாக குற்றவாளி கடிதம் வாயிலாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் களத்தில் உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு முறை நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி பென்சில்வேனியா மாநாட்டில் மேத்யூவ் என்று இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்த டிரம்ப் மீது கடந்த செப்டம்பர் 15ம் தேதி புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கொலை முயற்சி நடந்தது. டிரம்ப் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாகக் குறிபார்த்துக்கொண்டு இருந்தார். இதை கண்ட டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். எனினும் சற்று நேரத்துக்குள்ளாக போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீதான விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. ரயானின் காரில் டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த கையால் எழுதிட அட்டவணை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது தாக்குதல் குறித்த குறிப்பையும் எழுதி வைத்துள்ளார் ரயான். “Dear World” என்று தலைப்பிடப்பட்ட அந்த குறிப்பைப் பெயர் தெரியாத ஒருவரின் வீட்டு வாசலில் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அந்த பெட்டியைத் திறக்காமல் வீட்டின் உரிமையாளர் தற்போது அதைப் போலீசிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பெட்டியில் துப்பாக்கி குண்டுகளும், இருப்பு பைப் உள்ளிட்ட பிற பொருட்களும் இருந்துள்ளது. மேலும் அதில் இருந்த குறிப்பில், டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி இது. ஆனால் நான் தோற்றுவிட்டேன். என்னால் முடித்தவரை எனது முழு சக்தியைப் பயன்படுத்தி இதை செய்து முடிக்க நான் முயற்சி செய்தேன். இப்போது இந்த வேலையே செய்து முடிக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. இந்த வேலையைச் செய்து முடிபவருக்கு நான் 150,000 டாலர்கள் ( இந்திய மதிப்பின்படி சுமார்1.25 கோடி ருபாய்) தருகிறேன் என்று ரயான் எழுதி வைத்துள்ளார். இந்த பெட்டி இருந்த வீட்டில் வசித்து வந்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது. https://thinakkural.lk/article/309845
  14. பட மூலாதாரம்,RAMESH BABU படக்குறிப்பு, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு அதைத் தக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, குகேஷ் டி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ராவால் ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் தனி நபர் ஆட்டத்துக்கு தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளனர். 2022-ஆம் ஆண்டு சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற போது, இந்திய அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றன. இம்முறை இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்புகின்றன இந்திய அணிகள். இந்திய ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், பெண்கள் அணியில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். செஸ் ஒலிம்பியாட்டில் சாதித்த வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேசிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா,"செஸ் ஒலிம்பியாட்டில் கிடைத்துள்ள வெற்றி மேலும் பலரிடமும் சதுரங்கத்தை கொண்டு செல்லும். குறிப்பாக, இளைஞர்கள், குழந்தைகளிடையே சதுரங்கம் பிரபலமாகும். அது சதுரங்க விளையாட்டிற்கு நல்ல விஷயம். சென்னை ஒலிம்பியாட்டில் எங்களால் தங்கம் வெல்ல முடியவில்லை. மற்ற அணிகளுக்கு கடும் போட்டி கொடுத்தாலும் இரு பிரிவுகளிலும் வெண்கலத்தையே எங்களால் வெல்ல முடிந்தது. அந்த அனுபவத்தை பயன்படுத்தி நாங்கள் இம்முறை இரு பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளோம். என்னுடைய ஆட்டத்தை மெருகேற்றிக் கொள்ள கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வெகுவாக உதவிபுரிந்தார்." என்று கூறினார். பட மூலாதாரம்,FIDE படக்குறிப்பு, சிறப்பாக விளையாடிய குகேஷ் டி தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச செஸ் பெடரேஷனால் (FIDE) நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பொது பிரிவில் 193 அணிகளும் பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றன. 11 சுற்றுகளிலும் வென்ற இந்திய அணி குகேஷ் டி, பிரக்ஞானந்தா ஆர், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராதி, மற்றும் ஹரிகிருஷ்ணா பென்டாலா ஆகியோர் கொண்ட இந்திய ஆண்கள் அணிக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன் கேப்டனாக இருந்தார். போட்டி முழுவதுமே முன்னிலை வகித்த இந்தியா 10 போட்டிகளில் வெற்றி பெற்றது, ஒரு போட்டி டிராவில் முடிந்தது. கடைசி சுற்றுக்கு முன்பு, இந்தியா சீனாவை விட 2 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. இறுதிச் சுற்றில், தங்கப் பதக்கத்தை வெல்ல இந்தியாவுக்கு ஒரு டிரா மட்டுமே தேவைப்பட்டது அல்லது சீனா தனது போட்டியை வெல்லாமல் இருக்க வேண்டும். இருப்பினும் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் ஸ்லோவேனியாவை வீழ்த்தி, பதக்கத்தை வென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் மிக அசத்தலாக விளையாடி 10 ஆட்டங்களில் 9 புள்ளிகளைப் பெற்றார் மற்றும் முதல் போர்டில் தனிநபர் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசியும் சிறப்பாக ஆடி, 11 ஆட்டங்களில் 10 புள்ளிகளைப் பெற்று போர்டு 3-இல் தனிநபர் தங்கத்தை வென்றார். இருவரும் தங்கள் FIDE மதிப்பீடுகளைக் கணிசமாக உயர்த்தியுள்ளனர். இந்த மதிப்பீடுகள் படி, உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளார் அர்ஜுன் எரிகைசி. முதல் இடத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், இரண்டாம் இடத்தில் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா உள்ளனர். சதுரங்கத்தில் FIDE மதிப்பீடுகளில் 2800-க்கும் அதிகமான புள்ளிகள் பெற்றிருந்தால் அவர்கள் உலகின் சிறந்த ஆட்டக்காரர்களாக கருதப்படுவர். அந்த வகையில், அர்ஜுன் 2800 புள்ளிகளை பெறுவதற்கு மிக நெருக்கமாக உள்ளார். குகேஷ் இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். பட மூலாதாரம்,FIDE படக்குறிப்பு, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. விட்டுக்கொடுக்காத பெண்கள் அணி ஹரிகா துரோணவல்லி, வைஷாலி ஆர், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் மற்றும் தானியா சச்தேவ் ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் அணிக்கு, மகாராஷ்ட்ராவை சேர்ந்த அபிஜித் குன்டே கேப்டனாக இருந்தார். இந்திய பெண்கள் அணி மிகவும் வலுவாக தனது ஆட்டத்தைத் தொடங்கியது. ஏழாவது சுற்று வரை தோற்காமல் போட்டியில் முன்னிலை வகித்து வந்தது. எட்டாவது சுற்றில் தடுமாறிய இந்திய அணி, போலந்திடம் தோற்றது. பின்னர் அமெரிக்க அணியுடன் டிரா செய்தது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, கஜகஸ்தானுடன் சமநிலையில் இருந்தது. பின்னர் நிதானமாக விளையாடி, அஜர்பைஜானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3.5 - 0.5 என்ற கணக்கில் வென்றது. அதே நேரத்தில், கஜகஸ்தான் அமெரிக்காவுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது, இது இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 வயது திவ்யா தேஷ்முக், அனைத்து சுற்றுகளிலும் விளையாடி, 9.5 புள்ளிகளைப் பெற்றார். அஜர்பைஜானுக்கு எதிரான போட்டியில் அவரது ஆட்டம் இந்தியா பதக்கத்தை வெல்ல மிகவும் முக்கியமாக இருந்தது. அவர் போர்ட் 3-இல் தனிநபர் தங்கம் பெற்றார். பட மூலாதாரம்,FIDE படக்குறிப்பு, இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் (இடது புறம்) இந்திய அணிக்கு முக்கிய தருணங்களில் வெற்றியை தந்துள்ளார். உலக அரங்கில் முன்னேறி வரும் இந்தியா பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு பிபிசி தமிழிடம் பேசிய போது, சதுரங்க ஆட்டத்தில் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தார். “ஒரு காலத்தில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய சதுரங்கத்தில் தற்போது இந்தியா முன்னேறி வருகிறது. வெகு விரைவில் இந்தியா தான் உலகில் நம்பர் ஒன் என்ற நிலை வரப் போகிறது,” என்றார். குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுக்குள்ளாகவே சதுரங்கப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தால் அடுத்த பத்து வருடங்களில் அவர்கள் சிறந்த வீரர்களாக இருப்பார்கள் என்கிறார் அவர். இந்திய சதுரங்க அணிக்கு 12 ஆண்டுகளாக பயிற்றுநராக இருந்த சென்னையை சேர்ந்த ஆர் பி ரமேஷ், இந்த வெற்றி உலக சதுரங்க அரங்கில் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியம் என்று விளக்கினார். “இந்திய அணியில் நிறைய இளைஞர்கள் உள்ளனர். குகேஷ் மற்றும் எரிகைசி துடிப்பாக ஆடிய போது, பிரக்ஞானந்தா மற்றும் விதித் எந்த ஆட்டத்தையும் இழக்காமல் நிதானமாக ஆடினர். இந்திய அணியினரின் சராசரி வயது 18 முதல் 20 ஆக உள்ளது. ஆனால் பிற அணிகளில் 30-க்கும் அதிகமாக உள்ளது. இளைஞர்களைக் கொண்டுள்ளதால் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணி மேலும் வலுவடையப் போகிறது,” என்றார். மேலும், “இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் உலக சதுரங்க அரங்கில் இந்தியாவுக்கு இடமே இல்லை. விஸ்வநாதன் ஆனந்த் தவிர வேறு யாரையுமே தெரியாது. ஆனால் இப்போது சதுரங்க ஆட்டத்துக்கு நிறைய கவனம் கிடைத்துள்ளது. தற்போது நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன, பயிற்றுநர்களுடன் ஆன்லைன் மூலம் பயிற்சிப் பெறலாம், இவற்றை எல்லாம் இந்திய வீரர்கள் மிக திறமையாக பயன்படுத்திக் கொண்டனர்,” என்றார். வெளிநாட்டு பயிற்றுநர்களிடம் தான் நல்லப் பயிற்சி பெற முடியும் என்பது தவறான கருத்து என்கிறார் அவர். “200 ஆண்டுகளாக வெளிநாட்டவர் ஆட்சியின் கீழ் இருந்த நமக்கு, வெளிநாட்டு பயிற்றுநர்கள் மீது ஒரு கவர்ச்சி உள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இந்திய பயிற்றுநர்களிடம் பயிற்சி பெற விரும்புகின்றனர். வருங்காலத்தில் இது அதிகரிக்கும்,” என்றார். ஆர் பி ரமேஷ், ரோமேனியா மற்றும் நார்வே நாட்டு வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார். பட மூலாதாரம்,R B RAMESH படக்குறிப்பு, இந்திய அணியில் அதிக இளைஞர்கள் இருப்பது இந்தியாவுக்கு சாதகம் என்கிறார் மூத்த பயிற்றுநர் ஆர் பி ரமேஷ். இந்திய வீராங்கனைகள் சாதித்தது என்ன? இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது மிகவும் முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் நந்திதா பிபிசி தமிழிடம் பேசும் போது, “நான் விளையாட தொடங்கியப் போது ஒரு பெண் சதுரங்க ஆட்டத்தில் முழுமையாக கவனம் செலுத்தி ஆடுவது எளிதான விசயம் அல்ல. ஆனால் இப்போது ஆண், பெண் வித்தியாசங்கள் இல்லை, பெற்றோர்களின் மனநிலையும் மாறியுள்ளது,” என்றார். மேலும், “படிப்பு அல்லாமல் மற்றொரு திறனில் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கிறனர். தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சமீபத்தில் தான் ஆண்களுக்கு நிகரான பரிசுத் தொகை பெண்களுக்கு வழங்கப்படுகிறது. சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கான போட்டியை ஒருங்கிணை தொடங்கியுள்ளனர். உலக அளவில் பெண்கள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நேரத்தில், இந்தியப் பெண்கள் அணியின் வெற்றி, இளம் பெண்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும். கிராண்ட் மாஸ்டர்களுடன் பயிற்சி பெறுவது நல்ல வாய்ப்பு என்றாலும் அதற்கான செலவும் அதிகம். அரசு அந்தப் பயிற்சிகளை வழங்கினால் பலருக்கு உதவியாக இருக்கும்,” என்றார். “பெண்கள் சதுரங்க ஆட்டத்தை தங்கள் முக்கிய தொழிலாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை சதுரங்க ஆட்டம் தரக்கூடியது,” என்கிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு. “விளையாட்டு கோட்டாவில் வழங்கப்படும் பணி வாய்ப்புகள் பெண்களுக்கு அதிகமாக வழங்கினால் அது அவர்களை ஊக்கப்படுத்தும்,” என்றார் அவர். 2022-ஆம் ஆண்டு இந்தியப் பெண்கள் அணி ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கத்தை மிக நெருக்கத்தில் தவறவிட்டனர். அப்போது பயிற்றுநராக இருந்த ஆர் பி ரமேஷ், “இந்திய பெண்கள் அணி ஒவ்வொரு முறையும் பலமாகிக் கொண்டே வருகிறது. கொனேரு ஹம்பி, வைஷாலி உள்ளிட்டோர் சதுரங்கத்தில் தேர்ந்தவர்களாகி வருகின்றனர். இந்த முறை 18 வயதான திவ்யா தேஷ்முக் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த ஆட்டக்காரருக்கு விருதையும் பெற்றுள்ளார். குழந்தைகளிடம் முதலீடு செய்தால் தான் அவர்கள் பதின்பருவத்தில் சிறந்த வீரர்களாக மாறுவார்கள்,” என்றார். மேலும், “ஒரு காலத்தில் இந்தியாவில் சதுரங்கம் என்றால் தமிழ்நாட்டில் தான் அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இருந்தனர். ஆனால் இப்போது மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா என வேறு மாநிலங்களிலும் சதுரங்கம் கவனிக்கப்படும் ஆட்டமாக மாறியுள்ளது. ஒடிசாவில் அகாடெமி தொடங்கப்பட்டு சிறார்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0qz19qegzeo
  15. மஜ்மா நகரில் 8 நாட்களாக விழுந்து கிடந்த யானை உயிரிழப்பு! Published By: DIGITAL DESK 3 24 SEP, 2024 | 09:12 AM மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானை ஒன்று நேற்று திங்கட்கிழமை (23) மாலை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.எல்.சமீம் தெரிவித்தார். ஓட்டமாவடி - மஜ்மா நகர் கொவிட் மையவாடியை அண்மித்த பகுதியில் கடந்த 16 ஆம் திகதி யானை ஒன்று திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் எழும்ப முடியாத நிலையில் விழுந்து கிடந்துள்ளது. இந்நிலையில், யானைக்கு சிகிச்சையளிக்க அம்பாறை பகுதியிலிருந்து வனவிலங்கு திணைக்கள வைத்தியர் குழுவினர் வருகை தந்து சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி யானை எட்டு நாட்களின் பின்னர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. யானையை காப்பாற்றுவதற்காக அதற்கு நீர் ஊற்றி உணவு வழங்கும் நடவடிக்கைகளில் பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194655
  16. நேபாள தலைநகரில் கோட்டாபாய ராஜபக்ச – தனிப்பட்ட விஜயம் என தகவல் 24 SEP, 2024 | 06:01 AM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளம் சென்றுள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்து கோட்டாபய ராஜபக்ச நேபாள தலைநகரை திங்கட்கிழமை வந்தடைந்தார் என அந்த நாட்டின் செய்திகள் தெரிவித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச நேபாளத்தில் பௌத்தமதத்துடன் தொடர்புள்ள பகுதிகளிற்கு செல்லதிட்டமிட்டுள்ளார் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் பல முதலீடுகளை செய்துள்ள நேபாளத்தின் சௌதாரி குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு நெருங்கிய தொடர்புள்ளது,அவர்கள் அவரை நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ள. இது தனிப்பட்ட விஜயம் அரசியல் நோக்கம் கொண்டதில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/194651
  17. 23 SEP, 2024 | 05:55 PM (இராஜதுரை ஹஷான்) எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக் கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக் கொள்ள தயாராகுவேன். நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தலில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீதும், என்மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 'உங்களுக்கான சிறந்த நாடு' என்ற இலக்கை அடைவதற்காக முன்வைத்த கொள்கைத் திட்டங்களை ஏற்றுக்கொண்ட ஒரு தரப்பினரை மறக்க முடியாது. எதிர்க்கட்சிகள் அன்று புறக்கணித்த 69 இலட்ச மக்களாணை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்கதாக காணப்படுவதை ஜனாதிபதி தேர்தல் வாக்குகள் ஊடாக அவதானிக்க முடிகிறது. அரசியல் சேறு பூசல்கள் மற்றும் அரசியல் வாக்குறுதிகள் ஏதும் இல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக புதிய அரசியல் கலாச்சாரத்தை தோற்றுவிக்கும் வகையில் இளைஞர் யுவதிகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டேன் என்று நம்புகிறேன். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட என்னை அன்புடன் ஏற்றுக் கொண்டீர்கள். ஒருசிலர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். எமக்கு பாடம் கற்பிப்பது அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக் கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக் கொள்ள தயாராகுவேன். நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/194612
  18. 23 SEP, 2024 | 07:56 PM (நா.தனுஜா) இலங்கையில் நடைபெற்று முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியானதும், நியாயமானதுமான முறையில் நடாத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நச்சோ சன்செஸ் ஆமர், இம்முறை தேர்தல் பிரசார மேடைகளில் இன, மதபேதங்களை முன்னிலைப்படுத்தி பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடியவாறான விடயங்கள் பேசப்படாமல் பொருளாதார மீட்சி, மக்களின் அன்றாடப்பிரச்சினைகள் போன்ற அவசியமான விடயங்கள் எதிரொலித்தமை மிகவும் ஆரோக்கியமான விடயம் எனப் பாராட்டியிருக்கிறார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்தது. இத்தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க இலங்கைக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் தலைமையில் 70 பேரடங்கிய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவினர், நாட்டின் சகல தேர்தல் மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு தேர்தலுக்கு முன்னரான பிரசார காலப்பகுதி, தேர்தல் தினத்தன்று நடைபெறும் செயன்முறைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னரான நிலைவரம் என்பவற்றைப் பரந்துபட்ட ரீதியில் கண்காணித்தனர். அக்கண்காணிப்பு நடவடிக்கைகளின் முடிவில் அவதானிக்கப்பட்ட விடயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் தமது ஆரம்பகட்ட அவதானிப்புக்கள் தொடர்பில் விளக்கமளித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைவர் நச்சோ சன்செஸ் ஆமரிடனால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு: இலங்கையின் பிரபல பத்திரிகையொன்று சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருந்த கப்பலுடன் தொடர்புபடுத்தி, மேற்குலக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்றவாறு செய்தி வெளியிட்டிருந்தது. நாம் இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலைக் கண்காணிக்குமாறு வெளிவிவகார அமைச்சு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாகவே இங்கு வருகைதந்திருக்கிறோம். எமக்கு அழைப்புவிடுக்கப்பட்டபோது, இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்த ஜனாதிபதித்தேர்தல் மிகவும் காத்திரமான தேர்தல் என்பதால் நாம் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டோம். அமைதியான தேர்தல் முதலாவதாக இந்தத் தேர்தல் செயன்முறையைப் பற்றிக் கூறுவதாயின், இது மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. குறிப்பாக இன, மதபேதங்களை அடிப்படையாகக்கொண்டு பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலான கோஷங்கள் இத்தேர்தலில் முன்னிலைப்படுத்தப்படாமை மிகச்சிறந்த விடயமாகும். 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் பின்னர் முதலாவதாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் பிரசார நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்காளர்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளிக்கப்பட்டது. புதிய முன்னேற்றங்கள் அதேபோன்று இலங்கையின் கடந்தகால தேர்தல் செயன்முறைகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டன. தேர்தல் பிரசார நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரயோகம், தனிநபர் தரவுப்பாதுகாப்பு சட்டத்தின் பிரயோகம், புதிய வாக்காளர்கள் உள்வாங்கப்பட்டமை போன்றவற்றை அத்தகைய முன்னேற்றங்களாகக் குறிப்பிடமுடியும். இருப்பினும் புதிதாக நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைப்பாதுகாப்பு சட்டம் இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது எவ்வாறு பயன்படுத்தப்படக்கூடும் என்பது பற்றி சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர். தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பான செயற்பாடு அதேவேளை இந்தத் தேர்தலை நடாத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மையுடனும், செயற்திறன்மிக்கவகையிலும், உரிய நியமங்களுக்கு அமைவாகவும் மிகச்சிறப்பாக செயற்பட்டது. குறிப்பாக ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தருணத்திலும் எவ்வித சந்தேகமும் ஏற்படாதவண்ணம் அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதுமாத்திரமன்றி பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் சிறப்பாக இயங்கியதுடன், ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான சீரான முறையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் தேர்தலைத் திறம்பட நடாத்துவதற்கு அவசியமான வளங்களின் பற்றாக்குறையொன்று நிலவியதை அவதானிக்கமுடிந்ததுடன், எதிர்வருங்காலங்களில் அதனை நிவர்த்தி செய்யக்கூடியவகையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் இயலுமையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். பெண் வேட்பாளர் இல்லை அடுத்ததாக இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்ததுடன், அவர்களின் ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக 38 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் அவர்களில் பெண் வேட்பாளர் ஒருவர் கூட இல்லை. மிகுந்த கரிசனைக்குரிய இவ்விடயம் தொடர்பில் எதிர்வருங்காலங்களில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் அதேபோன்று மேற்குறிப்பிட்ட 38 வேட்பாளர்களில் சிலர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதனால், அவர்களுக்காக அரச நிதி செலவிடப்பட்டிருக்கிறது. குறித்தவொரு வேட்பாளரை வெல்லச் செய்வதற்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ இவ்வாறான வேட்பாளர்கள் களமிறக்கப்படுவது கரிசனைக்குரிய விடயமாகும். எனவே இப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திக்கவேண்டும். வேட்பாளர்கள் செலுத்துவேண்டிய கட்டுப்பணத்தின் தொகையை அதிகரிக்கலாம் என்பதை நான் யோசனையாகக் கூறவில்லை. இருப்பினும் ஒப்பீட்டளவில் நடுத்தர வர்க்க வேட்பாளர்களையும் பாதிக்காதவாறு, அர்த்தமுள்ள வகையில் இதற்குத் தீர்வு காணவேண்டும். இன, மதவாதமற்ற ஆரோக்கியமான பிரசாரங்கள் இம்முறை தேர்தல் பிரசாரக்களத்தில் இன, மதபேதங்களை முன்னிலைப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்கக்கூடியவாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு, மக்களின் அன்றாடப்பிரச்சினைகள் போன்ற மிகவும் அவசியமான விடயங்கள் பிரசார மேடைகளில் எதிரொலித்தமை பெரிதும் வரவேற்கத்தக்க ஆரோக்கியமானதொரு போக்காகும். இதனை ஏனைய நாடுகளுக்கான முன்னுதாரணமாகவும் சுட்டிக்காட்டமுடியும். நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகள் ஆனால் தேர்தல் பிரசாரங்களின்போது அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வட்டி அற்ற கடன்வசதி போன்ற சலுகைகளை மக்களுக்கு வழங்குவோம் எனக்கூறி சில வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர். இருப்பினும் இவ்வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவையாகும். எனவே இவ்வாறான பொருத்தமற்ற வாக்குறுதிகளை வழங்கும் போக்கு ஏற்புடையதன்று. முறைப்பாடுகள் அத்தோடு பிரசார நடவடிக்கைகளின்போது அரச சொத்துக்கள் முறைகேடாக விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் முறைப்படுகள் கிடைக்கப்பெற்றன. குறிப்பாக தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் 5000 முறைப்பாடுகளும், தேர்தல் தினத்தன்று 600 முறைப்பாடுகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. ஊரங்குச் சட்டம் மேலும் இலங்கை வரலாற்றிலேயே இந்த ஜனாதிபதித்தேர்தல் தான் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. ஆனால் அன்றைய தினம் மாலை வேளையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சடுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. எனவே இது ஒரு எடுகோளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்றார். https://www.virakesari.lk/article/194641
  19. 24 SEP, 2024 | 10:53 AM இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டம் குறித்த மறு ஆய்விற்கான திகதி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது. 2022 இல் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட பின்னர் இலங்கையை மீட்சி பாதையை நோக்கி கொண்டு செல்வதில் மிகவும் கடுமையான போராட்டத்தின் மூலம் கிடைத்த பலாபலன்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக இலங்கை ஜனாதிபதியுடனும் அவரது குழுவினரும் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வமாக உள்ளோம் என சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகத்துடன் கூடிய விரைவில் எங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது ஆய்வினை முன்னெடுப்பதற்கான திகதி குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194670
  20. படக்குறிப்பு, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் கரும்புகை எழுந்த காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான். 2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர். அதேநேரத்தில், ஹெஸ்பொலா 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர். முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் சூழலில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இஸ்ரேல் தாக்குதலில் பலியான 492 பேரில் 35 பேர் குழந்தைகள், 58 பேர் பெண்கள் என்றும், 1,645 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது குறித்து எந்த விவரத்தையும் அது வெளியிடவில்லை. ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, "நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்" என்றார். "இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறினார். ஹெஸ்பொலா நினைத்துப் பார்க்க முடியாத பல தாக்குதல்களை அதன் மீது இஸ்ரேல் நடத்தியிருப்பதாக அவர் கூறினார். ஹெஸ்பொலா குழுவின் துணைத் தலைவர் நைம் காசிம், "அச்சுறுத்தல்கள் எங்களைத் தடுக்காது. அனைத்து சாத்தியமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட மூத்த தளபதியின் இறுதிச் சடங்கில் ஹெஸ்பொலா துணைத் தலைவர் ஷேக் நைம் காசிம். கொல்லப்பட்ட இப்ராஹிம் அகில் யார்? லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலாவின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில் என்பவரின் இறுதிச் சடங்கில் அவர் கூறுகையில் : "நாங்கள் ஒரு புதிய கட்டத்தில் இருக்கிறோம். இஸ்ரேல் செய்த எல்லாவற்றிருக்கும் திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் இது” என்றார். ஷேக் நதீம் காசிம் துக்கம் அனுசரிப்பவர்களிடம், "இஸ்ரேல் அதன் நோக்கங்களில் எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த மூன்று நாட்களாக, ஹெஸ்பொலா தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது" என்றார். இஸ்ரேல் குடியிருப்பாளர்கள், நாட்டின் வடக்கில் உள்ள அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிய அவர், ஹெஸ்பொலாவின் எதிர்ப்பையும் காஸாவுடனான தொடர்பையும் உடைக்க இஸ்ரேல் தவறிவிட்டது என்றும் கூறினார். இப்ராஹிம் அகில் இறுதிச் சடங்கின் போது, பெரியளவில் திரண்ட மக்கள் சவப்பெட்டியை ஏற்றி சென்ற டிரக்கை பின் தொடர்ந்தார்கள். இறுதிச் சடங்கில் துக்கம் மற்றும் கோபத்திற்கு மத்தியில், அமெரிக்கா எதிர்ப்பு உள்ளிட்ட முழக்கங்களை ஹெஸ்பொலா ஆதரவாளர்கள் எழுப்பினர். பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் ஒரு சதுக்கத்தில் இறுதி சடங்கு நடந்தது. இப்ராஹிம் அகில் மற்றும் அவருக்கு கீழ் இயங்கிய 15 பேர் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர். அகில் தலைக்கு $7 மில்லியன் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. 1980 களில் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்கள் மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. லெபனானை போருக்குள் இழுக்கும் இஸ்ரேல்? வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குடும்பங்கள் உட்பட சுமார் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது சம்பவம் நடந்த இடத்தில், உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பி ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்பில் இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர். ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய லெபனான் பொதுப்பணித்துறை அமைச்சர் அலி ஹாமி - இஸ்ரேல் எங்கள் பிராந்தியத்தை போருக்குள் இழுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர் "லெபனான் போரை நாடவில்லை," என்றார். “லெபனான் மக்களும் கூட போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் போருக்கு வாருங்கள் என்று எங்களை அழைக்கிறது” என்றார். போர் மூளும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது. பார்ப்போம்" என்று பதிலளித்தார். ஹெஸ்பொலா லெபனானில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் ராணுவ அமைப்பு ஆகும். இந்த ஷியா முஸ்லீம் அமைப்பு சிறந்த ஆயுத பலம் கொண்டது. இது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் 2023-ஆம் ஆண்டு 8 அக்டோபர் 8-ஆம் தேதி அதிகரித்தது. காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய மறுநாள், ஹெஸ்பொலா இஸ்ரேலிய நிலைகளை தாக்கியது. தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் 60,000 பேர் ஹெஸ்பொலாவின் தினசரி ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹைஃபாவின் பிரதான மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர் சர்வதேச தலைவர்கள் எச்சரிக்கை சமீபத்திய எல்லை தாண்டிய தாக்குதல்கள் சர்வதேச அளவில் புதிய கலக்கத்தை தூண்டியுள்ளது. சிஎன்என் ஊடகத்திடம் பேசிய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில்’ இருப்பதாக பதிவிட்டுள்ளார். "இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும்" என்றார். ஐரோப்பிய ஒன்றியம் இது "மிகவும் கவலைக்குரியது" என்று கூறியது. பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதிகரித்து வரும் மோதல் இராக்கில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் உட்பட பல எறிகணைகள் சனிக்கிழமை ஒரே இரவில் இஸ்ரேல் மீது ஏவப்பட்டவை என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது. இரான் ஆதரவு குழுவான இராக் இஸ்லாமிய எதிர்ப்பு குழு, இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதாக கூறியது. பள்ளிகள் மூடப்பட்டு மருத்துவமனைகள் நோயாளிகளை நிலத்தடி தளங்களுக்கு நகர்த்தி வருகின்றனர். வடக்கு இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. பத்து நபர்களுக்கு மேல் வெளியில் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்த உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹைஃபாவின் புறநகரில் உள்ள கிராய்ட் பியாலிக்கில் வசிக்கும் ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், "சுமார் 06:30 மணியளவில் ஒரு அலாரம் கேட்டது, பின்னர் உடனடியாக ஒரு மிகப் பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. இங்கிருந்து மூன்று அல்லது நான்கு வீடுகள் தள்ளி இது நிகழ்ந்தது. எங்கள் வீட்டில் பிரதான அறையில் ஜன்னல்கள் முற்றிலும் நாசமாயின" என்றார். இந்த வார தொடக்கத்தில், லெபனான் முழுவதும் இரண்டு நாட்களில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். வியாழன் அன்று, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தாக்குதல்களுக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டினார், இஸ்ரேல் "எல்லா சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாகக் கூறி இனி அவர்களுக்கு தண்டனை மட்டுமே பதில் சொல்லும்" என்றும் அவர் கூறினார். ஆனால் இஸ்ரேல் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது லெபனானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய பயண ஆலோசனையை வழங்கியது. பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், "வணிக விமான சேவைகள் இருக்கும் போதே லெபனானை விட்டு வெளியேற வேண்டும்" என்று தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. அண்டை நாடான ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் அதன் குடிமக்களுக்கு இதேபோன்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. லெபனானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் வெளியேறுமாறு அது வலியுறுத்தியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4g5944vxz7o
  21. அடுத்து பாராளுமன்ற தேர்தலிலும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக புதியவர்களையே தெரிவுசெய்து அநுரவுக்கு பெரும்பான்மையை கொடுப்பார்கள். அநுர முன்னிறுத்தப் போகும் கல்வியாளர்களே அடுத்த பாராளுமன்றில் பெரும்பான்மையாக இருக்கப் போகிறார்கள். அதேபோல் தமிழர்களும் மாற வேண்டும். இப்போதுள்ள அனைத்து (கவனிக்க :அனைத்து) எம்பிக்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய எம்பிக்களை தெரிவு செய்ய தமிழ் மக்கள் முன்வர வேண்டும். படித்த இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து பிரதேசவாதத்தை மறந்து அடுத்த கட்ட தமிழ் அரசியல் நகர்வை நடத்த வேண்டும். ஆகக்குறைந்தது, பிரதேசவாதம் பேசி மக்களைத் தூண்டிய பிள்ளையான், அமல், ஒட்டுக்குழுக்களான டக்ளஸ், சித்தார்த்தன், அடைக்கலநாதன்...etc , வேலைதாறன் அபிவிருத்தி அரசியல் என்று சனத்தை பேய்க்காட்டிய அங்கஜன், பேரினவாதம் திட்டமிட்டு தமிழ் அரசியலை அழிக்க அனுப்பிய சுத்து மாத்து போன்றோரையாவது நிரந்தரமாக அரசியலை விட்டு நீக்க வேண்டும். இவர்களில் ஒருவராவது மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் தமிழர் விடும் இறுதி வரலாற்றுத் தவறாக அது மாறும். அதற்குப்பிறகு தவறுவிட தமிழர் என்றொரு இனம் இருக்காது. தமிழர்களிடம் இந்த மாற்றம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் இதைப் பகிருங்கள். தமிழர்களிடமும் புதிய அரசியல் கலாச்சாரம் வரட்டும்! வட்சப்பில் வந்தது.
  22. Friend's ஆகி frieds! frieds பொரியல் ஆகி!! பொரியல் குஞ்சாகி!!! குஞ்சு பிள்ளைகளாகி..... ஒரு n போடாத்தால் எப்பிடியெல்லாம் ஹிஹிஹி....
  23. புதிய ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்து! 23 SEP, 2024 | 07:57 PM (எம்.மனோசித்ரா) புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்து செய்தியில், 'சமூக பொருளாதாரம், அரசியல் மற்றும் ஜனநாயக அரசாட்சி உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து இலங்கையை மீட்டு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.' எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில், 'இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்கள். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதிலும் ஐக்கியமான மற்றும் பலமான இலங்கையை உறுதி செய்வதிலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தனது வாழ்த்து செய்தியில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனநாயக மற்றும் அமைதியான தேர்தலுக்கு வாழ்த்துகள்! முக்கியமான பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் அதே வேளையில், புதிய அரசாங்கம் சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான அதன் ஆணையை செயல்படுத்தும் என்று நம்புகின்றோம்.' எனத் தெரிவித்துள்ளார். இதே போன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194639
  24. குஞ்சுகள் என்று அர்த்தப்படுத்தி பிள்ளைகள் என கருதலாம் என நினைக்கிறேன்.
  25. புருஜோத்தமன் தங்கமயில் “…தமிழ்ப் பொது வேட்பாளரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், தமிழர் தாயகத்தில் ஐந்து இலட்சத்துக்கும் குறையாமல் வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அப்போதுதான், அது தமிழ்த் தேசிய அரசியலின் வெற்றியாக பார்க்கப்படும்....” என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் அண்மைய youtube செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். இந்தப் பத்தியாளரோ, சில வானொலிச் செவ்விகளில் 160,000 முதல் 180,000 வரையான வாக்குகளை அரியநேத்திரன் பெறுவார் என்று கூறி வந்திருக்கிறார். ஆனால், இந்தப் பத்தியாளர் எதிர்வுகூறியதைக் காட்டிலும் 46,343 வாக்குகளை அவர் அதிகம் பெற்றிருக்கிறார். அதேவேளை, பொது வேட்பாளருக்காக சொந்தக் கட்சியின் முடிவுக்கு எதிராக நின்று வாக்குச் சேகரித்த சிறீதரனின் ‘ஐந்து இலட்சம் வாக்குகள்’ என்ற எதிர்பார்ப்பில், அரைவாசியைக்கூட, அரியநேத்திரனால் தாண்ட முடியவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் பதிவு செய்திருக்கின்றன. ஏழு கட்சிகளும், எண்பத்து மூன்று அமைப்புக்களும் உள்ளடங்கிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினாலும், தமிழரசுக் கட்சியின் சிறீதரன், அரியநேத்திரன் உள்ளடங்கிய அணியினராலும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்கிற எண்ணக்கரு, இந்த ஜனாதிபதித் தேர்தலில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பரீட்சார்த்த முயற்சிக்குப் பின்னால் பல காரணங்கள் உண்டு. அதில், பிரதானமானது, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலில் ‘சம்பந்தன்- சுமந்திரன்’ அணுகுமுறைக்கு மாற்றான அணியொன்றைக் கட்டுதல் என்பதாகும். கூட்டமைப்பில் இருந்து 2010 பொதுத் தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தோற்றுவித்தார். அன்றுமுதல், சில அரசியல் பத்தியாளர்களும், புலம்பெயர் தரப்பினரும் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அரசியல் சக்தியாக முன்னணியை சித்தரிக்கத் தொடங்கினர். அத்தோடு சம்பந்தனுக்கு மாற்று கஜேந்திரகுமார் என்று நிறுவத் தலைப்பட்டனர். ஆனால், 2015 பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் பெரு வெற்றியும் முன்னணியின் படுதோல்வியும் ‘முன்னணி’ மீதான அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கியது. அதன் பின்னர், அவர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் கொழும்பிலிருந்து அழைத்து வந்து வடக்கில் முதலமைச்சராக்கிய சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுத்தலையாக மாற்றத்தலைப்பட்டனர். அந்த வேலையை தமிழ் மக்கள் பேரவை செய்து வந்தது. அதுவும் பொய்த்துப்போன புள்ளியில், கூட்டமைப்புக்கு, அதாவது சம்பந்தன்- சுமந்திரனின் அரசியலுக்கு மாற்று யார்? என்பது தொடர் தேடல் ஆனது. அந்தத் தேடலுக்கான பதிலை, கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு சந்தித்த பின்னடைவும், தமிழரசுக் கட்சிக்குள் எழுந்த குழப்பங்களும் சேர்ந்து வழங்கின. அதுதான், இன்றைக்கு தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஆரம்பங்களுக்கு காரணமானது. ஆக, சம்பந்தன் - சுமந்திரன் அரசியலுக்கான மாற்றுத் தலைமையை நிறுவுவது தொடர்பிலான நீண்ட தேடலை, பொதுக் கட்டமைப்பினர் இப்போது பொது வேட்பாளருக்கான வாக்குச் சேகரிப்பினூடு சாதித்துக் காட்டத் தலைப்பட்டிருக்கிறனர். ஆனால், அதுவும்கூட தமிழரசுக் கட்சியினால் கழட்டி விடப்பட்ட ரெலோ, புளொட் உள்ளிட்ட கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழரசின் உட்பிளவுகளினால் அலைக்கழியும் மாவை சேனாதிராஜா, சிறீதரன் போன்றவர்களினால் தோன்றியிருக்கின்றது. பொதுக் கட்டமைப்பினர், தமிழ்ப் பொது வேட்பாளர் என்கிற விடயத்தை தூக்கிக் கொண்டு அரங்கிற்கு வந்த போதே, இந்தப் பத்தியாளர் அதனை அவசரக் குடுக்கைத்தனமான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். குறிப்பாக, யாழ்ப்பாணத்துக்குள் இருந்து மாத்திரம் பொது வேட்பாளர் என்கிற எண்ணக்கரு முன்வைக்கப்படுகின்றது. அதனை, வடக்குக் கிழக்கின் அனைத்து மாவட்டங்களின் தனித்துவமான பிரச்சினைகள், சிக்கல்களை உள்வாங்கி முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவை எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஆரம்பத்தில், பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதித் தேர்தலை அணுக வேண்டும், அதன் பொருட்டு தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்கள். அந்த அரசியல் நிலைப்பாட்டுக்குப் பின்னாலுள்ள சிக்கல்களை எடுத்துக்கூறியதும், பொது வாக்கெடுப்பு என்கிற நிலையில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய வாக்குகளை ஒன்றிணைத்தல் என்ற நிலைக்குள் சுருக்கினார்கள். பொது வாக்கெடுப்பு என்கிற நிலையை இறுதி வரையில் பிடித்துக் கொண்டிருந்தால், இன்று அரியநேத்திரன் பெற்றிருக்கின்ற வாக்குகள், தமிழர் தாயகத்தின் மொத்த வாக்குகளில் சுமார் 14 வீதம் மாத்திரமே. அது, தமிழ்த் தேசிய அரசியலின் பெரும் தோல்வியாக பதிவு பெற்றிருக்கும். நல்லவேளையாக அது நடைபெறவில்லை. மாறாக, தமிழ்த் தேசிய வாக்கு ஒருங்கிணைப்பு மற்றும் சம்பந்தன்- சுமந்திரன் அணுகுமுறைக்கு மாற்றான தலைமைத்துவத்தை கண்டடைதல் என்ற நிலைகளில் நின்று கொண்டது. சம்பந்தன் – சுமந்திரன் அரசியல் அணுகுமுறைக்கு மாற்றான தலைமைத்துவத்தை, பொதுக் கட்டமைப்பினர் எதிர்பார்த்தது மாதிரி கண்டடைய முடிந்திருக்கிறதா, அரியநேத்திரன் பெற்றிருக்கும் வாக்குகள் அதனைப் பிரதிபலிக்கின்றதா? என்ற கேள்விகள் முக்கியமானவை. அதனை எந்தவித பூச்சுக்களும் இன்றி நேரடியாக நோக்கினால், அதற்கான பதில் எதிர்மறையானது. ஏனெனில், தமிழர் தாயகம் எங்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு மதிப்பளித்த தேர்தல் முடிவுகளே கிடைத்திருக்கின்றன. அதுவும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை, புதிய தலைவராக தேர்வாகி பதவியேற்க முடியாமல் போன சிறீதரன், பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறீநேசன், யோகேஸ்வரன், பொது வேட்பாளராக நின்ற அரியநேத்திரன் என்று தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பொதுக் கட்டமைப்பினரோடு நின்று, பொது வேட்பாளருக்காக வாக்குச் சேகரித்தார்கள். பொதுக் கட்டமைப்பில் ஏற்கனவே ஏழு கட்சிகள் இருக்கின்றன. அதற்குள் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆக, சுமந்திரன், சாணக்கியன், அவ்வப்போது தலைகாட்டிய கலையரசன் ஆகிய தமிழரசின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் நின்று வாக்குச் சேகரித்தார்கள். ஏழு கட்சிகள் ஒன்றாய் நின்றன. சிவில் அமைப்புக்களும் இணைந்து நின்றன. ஆனால், அவர்களினால், தமிழரசின் சுமந்திரன் -சாணக்கியன் அணியால், பெற முடிந்த வாக்குகளில் பகுதியளவைக் கூட தாண்ட முடியவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால், கிளிநொச்சியின் ஜமீனாக வலம் வரும் சிறீதரனால், கட்சியின் மாவட்டக்கிளையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிந்ததேயன்றி, அவரினால் கிளிநொச்சி வாக்காளர்களை வெற்றிகொள்ள முடியவில்லை. அவரைவிட சுமந்திரனுக்கு பின்னால் திரண்ட தமிழரசு வாக்காளர்கள் சஜித்துக்கு அதிக வாக்குகளை வழங்கினர். அதில், சந்திரகுமாருக்கும் அவரின் சமத்துவக் கட்சிக்கும் கணிசமான பங்குண்டு. யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் சஜித்தின் வாக்குகளைவிட அரியநேத்திரன் ஒரு சில ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். அந்த வாக்குகளை, சித்தார்த்தன், விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை(!), ஐங்கரநேசன், சிறீகாந்தா, மணிவண்ணன் போன்றவர்கள், தங்களுக்கான உரித்தாக கோரி நிற்கிறார்கள். அங்குதான் பொதுக் கட்டமைப்பின் அரசியல் பத்தியாளர்கள் பலரும் இருக்கிறார்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிதான் வென்றிருக்கின்றது. அந்த வெற்றிக்கான உரித்தை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உழைத்த சுமந்திரன் அணியினர் கோருகிறார்கள். ஏனெனில், அவர்களைத் தாண்டி, தமிழரசுக் கட்சிக்குள் வேறு யாரும் சஜித்துக்காக பிரச்சார நடவடிக்கைகளையே முன்னெடுக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், கரையோரத் தேர்தல் தொகுதிகளில் அரியநேத்திரன் வென்றிருந்தார். அது ஏன் நிகழ்ந்தது என்று தேடினால், ‘தமிழ்த் தேசியம் – ஒருங்கிணைவு’ என்ற அடையாளங்களுக்கு அப்பாலான ஒரு விடயம் மேலெழுகின்றது. வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனைத் தீர்ப்பது தொடர்பில் இந்தியா அக்கறையின்றி, மேலும் மேலும் அத்துமீறும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக மீனவ சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அப்படியான நிலையில், சஜித் இந்தியாவின் தெரிவு என்ற உணர்நிலையொன்று தமிழ் அரசியல் பரப்பில் எழுந்தது. இந்தியாவின் தெரிவைத்தான் சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முடிவாக அறிவித்துவிட்டார் என்ற கோபம், மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்களிடம் உண்டு. அந்தக் கோபம், அவர்களை பொதுக் கட்டமைப்பின் பின்னால் திரள வைத்து, சங்குக்கான வாக்குகளாக மாற்றிவிட்டது. இப்படி, யாழ்ப்பாணத்தில் பொதுக் கட்டமைப்பின் வாக்குத் திரட்சிக்குப் பின்னால், பல சமூகக் காரணிகளும் உண்டு. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 116000 வாக்குகளைப் பெற முடிந்த பொது வேட்பாளரினால், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களுக்குள் ஒருவராக கூட வர முடியவில்லை. கிழக்கில் அது இன்னும் மோசம். முதல் மூன்று இடங்களுக்குள் அரியநேத்திரன் இல்லை. குறிப்பாக, அவரின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் அவர், 36000 வாக்குகளுக்குள் சுருங்கிவிட்டார். நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார். வழக்கமாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் சார்பிலான வரைபடத்தில் வடக்கு கிழக்கு – மலையகம் உள்ளடங்கிய தமிழ் பேசும் எண்ணிக்கை சிறுபான்மையினரின் வாக்குகள் சொல்லும் செய்திக்கும் தென் இலங்கையின் செய்திக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருக்கும். இந்தத் தேர்தலிலும் அதுவே, பிரதிபலித்திருக்கின்றது. அந்த தெளிவான வேறுபாட்டிற்கான உரித்தாளர்களாக வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகளை தமிழரசுக் கட்சியும், (சுமந்திரன் – சாணக்கியன் அணியும்), முஸ்லிம் வாக்குகளுக்கான உரித்தை முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், மலையக தமிழ் மக்களின் வாக்குகளுக்கான உரித்தை தமிழர் முற்போக்குக் கூட்டணியும் எடுத்துக் கொள்ள முடியும். இப்போது, வடக்கு – கிழக்கில் பொதுக் கட்டமைப்பினர் பெற்றுக் கொண்டிருக்கின்ற வாக்குகளை வைத்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக எதனை முன்னெடுப்பார்கள் என்ற விடயம் மேலெழுகின்றது. ஏனெனில், சிறீதரன் எதிர்பார்த்தது போல, ஐந்து இலட்சம் வாக்குகளை பொதுக் கட்டமைப்பினரால் பெற முடியவில்லை. அப்படியானால், அதனை தமிழ்த் தேசிய வாக்குகளின் பூரண ஒருங்கிணைவாக கொள்ள முடியாது. தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளில் அரைவாசி அளவை வேண்டுமானால் அவர்கள் பெற்றதாக கொள்ள முடியும். இப்போது, பொதுக் கட்டமைப்பினர் முன்னால் உள்ள சவால், அடுத்து வரும் தேர்தல்களை இந்தக் கட்டமைப்பாக எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான். ஏனெனில், பொது வேட்பாளருக்காக ஆதரவாக களமிறங்கி வேலை செய்த தமிழரசுக் கட்சிக்காரர்களை, அந்தக் கட்சி எவ்வாறு கையாளும் என்று தெரியவில்லை. இப்போது, சிறீதரனே தன்னுடைய கோட்டையான கிளிநொச்சியை, சுமந்திரன் அணியிடம் பறிகொடுத்துவிட்டார். அப்படியான கட்டத்தில், சிறீதரன் எப்படி தன்னை கட்சிக்குள் நிலைப்படுத்துவர்? அவரினால் இனி சுமந்திரன் அணியை கிளிநொச்சிக்குள் கையாள முடியாமல் போகலாம். ஏற்கனவே, அவரினால் கட்சியின் மத்திய குழுவைக் கையாள முடியாமல் இருக்கின்றது. இவையெல்லாம் சேர்ந்து, சிறீதரனை, பொதுக் கட்டமைப்பின் அங்கமாக மாற்றிவிடும் சூழல் உண்டு. பொதுக் கட்டமைப்பிலுள்ள அரசியல் பத்தியாளர்களுக்கு தேர்தல் முடிவுகள் உற்சாகம் ஊட்டியிருப்பதாக தெரிகிறது. அவர்கள், புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக் கட்டமைப்பிலுள்ள முன்னாள் ஆயுத இயக்கங்கள் தவிர்ந்த தரப்புக்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது சார்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தக் கட்சியின் தலைவராக சிலவேளை சிறீதரன் வருவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கு இல்லை. முன்னாள் ஆயுத இயக்கங்களை பங்காளிகளாக இணைந்து பொதுக் கட்டமைப்பு பரந்துபட்ட தேர்தல் கூட்டணியாக நிலைபெறும் நோக்கைக் கொண்டிருக்கின்றது. அப்படி நடைபெற்றால், பொதுக் கட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் குறைந்தது இரண்டு ஆசனங்களை வெற்றிகொள்ள முடியும். அதுபோல, வன்னியில் முயற்சித்தால் ஒரு ஆசனத்தை பெறலாம். அத்தோடு ஒரு தேசியப்பட்டியல் கணக்கும் அவர்களிடத்தில் இருக்கிறது. அப்படியான கட்டத்தில், சம்பந்தன் – சுமந்திரனின் அரசியலுக்கு மாற்றாக தங்களை நிரற்படுத்திக் கொள்ள முடியும் என்று பொதுக் கட்டமைப்பினர் நம்புகிறார்கள். ஆனால், அவர்களினால் கிழக்கில் எப்படியான அடைவுகளைக் காட்ட முடியும் என்பது முக்கிய கேள்வி. ஏனெனில், அவர்களினால் கிழக்கில் ஒரு ஆசனத்தைக்கூட வெற்றிபெறும் அளவுக்கான வாக்குகளை பெற முடியவில்லை. பொதுக் கட்டமைப்பினரின் எதிர்காலப் பயணத்தினால் பாதிக்கப்படப் போகும் தரப்பினர், முன்னணி அடையாளத்தோடு இருக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸினர்தான். தமிழரசு உள்ளடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளை இதுவரை காலமும் குறிவைத்து கவர்ந்து வந்த முன்னணியினர், அதனை பொதுக் கட்டமைப்பினரிடம் இழக்க வேண்டி வரும். அதனால்தான், சங்குக்கு வாக்குச் சேகரித்தவர்களுக்கு எதிராக நின்று முன்னணியின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் களமாடுகிறார்கள். தேர்தல் முடிவுகள் என்ன செய்தியைச் சொல்கின்றன என்பதை அரசியலில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்கள் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தல், தமிழ்த் தேசியப் பரப்பில் தெளிவான சில செய்திகளை சொல்லியிருக்கின்றன. அதனை உள்வாங்கி பிரதிபலிக்க வேண்டும். இனி, தமிழ்த் தேசிய அரசியல் யாழ்ப்பாணத்துக்குள் தமிழரசு (சுமந்திரன் அணி) எதிர் பொதுக் கட்டமைப்பாகவும், யாழ்ப்பாணத்துக்கு வெளியே தமிழரசின் ஏகபோகமாகவும் நிலைபெறலாம். முகப்புப் படம் ஆர்.ராஜேஸ்/ தி ஹிண்டு காலைமுரசு பத்திரிகையில் செப்டம்பர் 23, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/09/blog-post_23.html சம்பந்தன் - சுமந்திரன் அரசியலாம்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.