Everything posted by ஏராளன்
-
போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட இஸ்ரேல் - ஹமாஸ்: இதுதான் காரணம்
போலியோ முகாம் - காஸா மீதான தாக்குதலை 3 நாட்கள் நிறுத்த ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பென்னெட் பதவி, பிபிசி செய்திகள் 30 ஆகஸ்ட் 2024 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க வேண்டும் என்ற "மனிதநேய காரணத்திற்காக" காஸாவில் நீண்டகாலமாக நடந்து வரும் தொடர் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கும் இந்த முகாமின் மூலம் காஸா பகுதி முழுவதிலும் சுமார் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ரிக் பீபர்கார்ன் தெரிவித்தார். இந்த முகாம் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மூன்று தனித்தனி கட்டமாக நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், உள்ளூர் நேரப்படி 06:00 முதல் 15:00 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தாக்குதல் இடைநிறுத்தப்படும். 25 ஆண்டுகளுக்கு பிறகு காஸாவில் முதல் முறையாக 10 மாத குழந்தை ஒன்று போலியோ நோய்தொற்று பாதிப்புக்கு உள்ளானதை அடுத்து இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய நாடு சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல்: 3,500 ஆண்டுகள் பழைய ஜாடியை உடைத்த 4 வயது சிறுவன் – ஏன்?29 ஆகஸ்ட் 2024 போலியோ சொட்டு மருந்து வகை 2-ன் (nOPV2) சுமார் 6 லட்சம் டோஸ்கள் ஏற்கனவே காஸாவில் இருக்கின்றன. கூடுதலாக 4 லட்சம் டோஸ்கள் கூடிய விரைவில் அங்கு வரயிருக்கிறது. ஐநா ஊழியர்கள் மற்றும் உள்ளூர் சுகாதார பணியாளர்களால் இந்த மருந்து வழங்கப்படும். இதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது இருக்கிறது. போலியோ மருந்து முகாமை பாதுகாப்பாக நடத்துவதற்காக காஸாவில் உள்ள ஐநா செய்தித் தொடர்பாளர் லூயிஸ் வாட்டர்ட்ஜ் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்தார். "வானில் இருந்து குண்டுகள் வீசப்பட்டு தாக்குதலுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இயலாது. மேலும் உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடும்போது குழந்தைகளுக்கு மருந்து வழங்க இயலாது", என்று அவர் வெள்ளிக்கிழமை அன்று வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். "முகாம் நடைபெறும் போது நடக்கும் எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையும், குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கும் எங்கள் செயல்பாட்டை பாதிக்கும்", என்று அவர் தெரிவித்தார். இந்த வாரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தின் முதல் இரண்டு டோஸ்கள் வழங்கப்படும் என்றும், நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அடுத்த டோஸ் வழங்கப்பட வேண்டும் என்று லூயிஸ் வாட்டர்ட்ஜ் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போலியோ வைரஸ் மிகவும் கொடிய நோய் பரப்பும் கிருமி. இந்த முகாமின் மூலம் 90% குழந்தைகளுக்கு மருந்து வழங்கி காஸா பகுதியில் போலியோ வைரஸ் பரவுவதை தடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாக இருக்கிறது. அந்த இலக்கை எட்ட முடியவில்லை என்றால் மேலும் நான்காவது நாளாக தாக்குதல் இடைநிறுத்தப்பட்டு இந்த முகாம் தொடரவும் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. போலியோ வைரஸ் மிகவும் கொடிய நோய் பரப்பும் கிருமி. அது பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் சிதைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும். குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கிறது. இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு, காஸா மற்றும் மேற்குக் கரை பகுதியில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் சரியாக நடந்து வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. சமீபத்திய தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு 99% குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட்டது, ஆனால் இது கடந்த ஆண்டு 89% ஆகக் குறைந்துள்ளது. "இந்த முகாமின் மூலம் காஸா பகுதியில் உள்ள 6.5 லட்சத்திற்கும் அதிகமான பாலத்தீன குழந்தைகளுக்கு மருந்து வழங்க சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்று ஹமாஸ் ஆயுதக்குழு அதிகாரி பாசெம் நயிம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். இந்த மூன்று நாள் இடைநிறுத்தம் என்பது முழு போர் நிறுத்தத்தை உணர்த்துவதில்லை என்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதென்யாகு குறிப்பிட்டு உள்ளார். இந்த திட்டத்தை "வலுவாக" வரவேற்பதாக ஐநாவுக்கான இங்கிலாந்து துணை நிரந்தர பிரதிநிதி ஜேம்ஸ் கரியுகி கூறினார். "நாம் இப்போது இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். 90% குழந்தைகளுக்கும் மருந்து வழங்க இந்த போர் இடைநிறுத்தங்கள் போதுமானதாக இருக்க வேண்டும். இந்த முகாமிற்கு ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வரும்போது அவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும்", என்றும் அவர் கூறினார். பணயக்கைதிகளாக இருப்பவர்களுக்கும் இந்த முகாமின் மூலம் மருந்து வழங்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஹகாய் லேவினே வலியுறுத்தினார். அவர் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்களுக்கான மன்றத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது முன்னறிவிப்பின்றி ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலின்போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். காஸாவில் அக்டோபர் 7 முதல், 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c6230ve4w25o
-
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு
பல தேர்தல்களில் அவருக்கு வாக்கு போட்டு ஆதரிக்க வேண்டிய நாங்களே செய்யவில்லை! அவங்கள் போடமாட்டாங்கள் தானே அண்ணை. இவருக்கும் பொதுவேட்பாளருக்கும் தான் போடவேணும்.
-
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்ற அவ்னி லேகரா, வெண்கலத்தையும் கைப்பற்றிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அவ்னி லேகரா மற்றும் மோனா அகர்வால் 30 ஆகஸ்ட் 2024, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த அவ்னி லேகரா. பாரிஸில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவ்னி லேகரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதிற்காக பரிந்துரை பட்டியலில் அவ்னி இருந்தார். பாராலிம்பிக் போட்டியில் முதலில், கொரிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான யுன்ரி லீயை விட அவ்னி 0.8 புள்ளிகள் பின்தங்கி இருந்தார். கடைசி சுற்றில் கொரிய வீராங்கனையால் 6.8 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் அவ்னி 10.5 புள்ளிகள் எடுத்தார். மொத்தமாக அவ்னி 249.7 புள்ளிகளையும், யுன்ரி லீ 246.8 புள்ளிகளையும் பெற்றனர். இறுதி சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்து அவ்னி முதலிடம் பெற்றார். இதே போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக் வில்வித்தை: இரு கைகளும் இல்லாமலேயே சாதிக்கும் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வாரா?27 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அவ்னி லேகரா (கோப்புக்காட்சி) யார் இந்த அவ்னி லேகரா? அவ்னி ஜெய்பூர் நகரை சேர்ந்தவர், அவர் சட்டப்படிப்பு படித்துள்ளார். 10 வயதில் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவர் சக்கர நாற்காலியில் இருந்து வருகிறார். பாராஷூட்டிங் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுத்தது. விபத்தினால் நடந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர, அவரது தந்தை முக்கிய பங்காற்றினார். உடல் மற்றும் மன வலிமையை மீண்டும் பெற விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டுமாறு அவர் அவ்னியை வழிநடத்தினார். உடலில் பாதிப்புகள் ஏற்பட்ட போதும், அவ்னியின் வலுவான மன தைரியத்தால், துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இந்த விளையாட்டிற்கு துல்லியம், கவனம் ஆகியவை மிகவும் தேவை. இந்தியா துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்த்ராவின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு அவ்னி துப்பாக்கி சுடும் போட்டிக்கு பயிற்சி பெற தொடங்கினார். அவரது விடாமுயற்சி மற்றும் உறுதி கொண்டு அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் விரைவாக வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். இதற்கு முன்னதாக அவர் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/c8ergjzg8gxo
-
போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட இஸ்ரேல் - ஹமாஸ்: இதுதான் காரணம்
காசா (Gaza) பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேலும் (Israel) ஹமாஸும் (Hamas) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவிலுள்ள குழந்தைகளுக்கான போலியோ (Polio) சொட்டு மருந்து வழங்குவதற்காகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தம் இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கான சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் போலியோவுக்கு எதிராக காசா முழுவதும் சுமார் 640,000 குழந்தைகளுக்கு முதல் சுற்று தடுப்பு மருந்து வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான முதற்கட்ட பிரசாரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/three-days-ceasefire-in-gaza-for-polio-vaccination-1725015932
-
பாலியல் அத்துமீறல் - திருச்சி என்ஐடியில் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்; சமாதானம் செய்த எஸ்.பி
30 AUG, 2024 | 02:00 PM திருச்சி: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை கண்டித்தும் விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் திருச்சி என்ஐடி வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவிலிருந்து மாணவ - மாணவியர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு நேரில் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்கள் சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) அமைந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். என்ஐடி வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் இன்டர்நெட் வசதிக்காக கேபிள் வயர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஓவல் விடுதிக்குள் கேபிள் வயர் பொருத்தம் பணியில் ஈடுபட்ட முதுகுளத்தூரைச் சேர்ந்த கதிரேசன்(38) அந்த விடுதியின் ஒரு அறையில் தனியாக படித்துக் கொண்டிருந்த மாணவியை பார்த்ததும் ஆபாச அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கூச்சலிட்டபடியே வெளியே ஓடி வந்து அதுகுறித்து சக மாணவ - மாணவியரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக மாணவிகள் விடுதி வார்டனிடம் முறையிட்ட போது, “நீ ஆடைகளை ஒழுங்காக அணிந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது” என்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கண்ணீர்விட்டு கதறிய அழத் தொடங்கியுள்ளார். இதைக் கண்டு கொதித்துப் போன சக மாணவ - மாணவியர் விடுதி அறைக்குள் மாணவிகள் இருக்கும்போது ஆண் பணியாளர்களை அனுமதித்தது எப்படி என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மாணவ - மாணவியர் வியாழக்கிழமை இரவு விடுதி நிர்வாகத்தையும் என்ஐடி நிர்வாகத்தையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த பணியாளர் கைது: மேலும், பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த மாணவியின் தந்தை இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். விடிய விடிய போராட்டம்:ஆயினும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும், விடுதி வார்டனின் பொறுப்பின்மையையும் கண்டித்தும் மாணவ - மாணவியர் தொடர்ந்து விடுதி முன்பு விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துவாக்குடி போலீஸார், மாணவ - மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து முசிறி டிஎஸ்பி-யான சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவ - மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் சம்பவ இடத்துக்கு ஏடிஎஸ்பி கோபால் சந்திரன் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதையும் ஏற்காத மாணவ - மாணவியர் கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் ஜி.அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகிலா நேரில் வரவேண்டும் எனவும் முழக்கமிட்டனர். என்ஐடி இயக்குநர் பேச்சுவார்த்தை: இந்த நிலையில், “மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் தங்களது பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்வோம்” என போலீஸார் எச்சரித்தனர். ஆனால் அப்படியும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து அதிகாலை 4 மணி அளவில் என்ஐடி இயக்குநர் அகிலா மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து விடுதி வார்டனை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த மாணவர்கள் புறப்பட்டனர். இதையடுத்து என்ஐடி நுழைவு வாயில் கதவு இழுத்து மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கதவருகே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாசம் உள்ளிட்டோர் மாணவ - மாணவியரிட்ம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானம் செய்த எஸ்.பி: தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்பி-யான வீ.வருண்குமார் மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து விடுதி வார்டன் பேபி மன்னிப்புக் கோரியதை அடுத்து மாணவ - மாணவியர் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எஸ்பி-யான வருண்குமார், “விடுதிக்குள் எந்தவிதமான அறிவிப்பும் இன்றி யாரும் உள்ளே வரக்கூடாது என்றும், போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் மாணவிகள் வலியுறுத்தினர். கல்லூரி நிர்வாகம் அதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதை அடுத்து மாணவ - மாணவியர் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.” என்றார். ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஐடி கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்த மாணவி ஒருவர், விடுதி வார்டனுக்கு தெரியாமல் இரண்டு நாட்களாக தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றபொழுது அந்த மாணவி அப்பகுதியில் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192389
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
வலுவான இஸ்ரேல் - தொடர்ந்தும் ஆயுதவிற்பனை - சிஎன்என் பேட்டியில் கமலா ஹரிஸ் 30 AUG, 2024 | 01:24 PM இஸ்ரேலிற்கான ஆயுதவிற்பனையை நிறுத்தமாட்டேன் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜோ பைடன் போன்று இஸ்ரேலிற்கான வலுவான ஆதரவை பேட்டியில் வெளியிட்டுள்ள கமலா ஹரிஸ் காஸாவில் பெருமளவு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதன் காரணமாக அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தவேண்டும் என ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள வேண்டுகோளை நிராகரித்துள்ளார். நான் வலுவான இஸ்ரேலை ஆதரிக்கின்றேன் என தெரிவித்துள்ள எனினும் காசா மோதலில் யுத்த நிறுத்தத்தை சாதகமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலையை சாத்தியமாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192385
-
இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுகின்றன - மனித உரிமை கண்காணிப்பகம்
அரசாங்கம் மீறல்களில் ஈடுபடுகையில் ஐ.நா வும் ஏனைய நாடுகளும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பக்கம் நிற்கவேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் Published By: VISHNU 30 AUG, 2024 | 08:56 PM (நா.தனுஜா) உண்மை மற்றும் நீதிக்கான தமது உரிமையைக்கோரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது. அரசாங்கம் இத்தகைய மீறல்களில் ஈடுபடும்போது மனித உரிமைகள் பேரவையும், ஏனைய நாடுகளின் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பக்கம் நிற்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தமக்கான உரிமையைக்கோரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது. கண்காணிப்பு, ஒடுக்குமுறைகள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், வன்முறைகள் மற்றும் தன்னிச்சையான கைதுகள் என்பவற்றின் ஊடாக பாதுகாப்புத்தரப்பினர் அக்குடும்பங்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்திவருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி (நேற்று) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருக்கும் பேரணிக்குத் தடைவிதிக்குமாறு ஓகஸ்ட் 29 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திடம் பொலிஸார் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நாளாந்தம் பெரும் துன்பத்தை அனுபவித்துவருகின்றனர். பெரும் எண்ணிக்கையான தாய்மார், மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியாமலே உயிரிழந்திருப்பதுடன், மேலும் பலர் தமக்குரிய நீதி நிலைநாட்டப்படுவதைப் பார்க்காமலேயே தாம் உயிரிழந்துவிடுவோம் என அஞ்சுகின்றனர். 1987 - 1989 வரையான காலப்பகுதியில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) எழுச்சியின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் 1983 - 2009 வரையான காலப்பகுதியில் அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக உலகிலேயே அதிக எண்ணிக்கையான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கின்றது. இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதையோ அல்லது அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைத் தண்டிப்பதையோ இலங்கை அரசாங்கம் கடந்த சில தசாப்தங்களாக மறுத்துவந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் இயங்கிவருபவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் நெருங்கிப்பணியாற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரிகள் கடந்த மேமாதம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களை, குறிப்பாக தாய்மார் மற்றும் மனைவிமாரைச் சந்தித்ததனர். அதன்போது அவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் மீறல்கள் பற்றி விளக்கமளித்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்போர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களைத் தண்டித்தல், குற்றஞ்சாட்டப்பட்டிருப்போருக்கு எதிராகத் தடைகளை விதித்தல், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஆணையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கும் ஆணையை மீளப்புதுப்பித்தல் ஆகிய பரிந்துரைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், உறுப்புநாடுகளும், ஐ.நா முகவரமைப்புக்களும் நடைமுறைப்படுத்தவேண்டும். அதேவேளை இலங்கை அரசாங்கம் இத்தகைய மீறல்களில் ஈடுபடும்போது மனித உரிமைகள் பேரவையும், ஏனைய நாடுகளின் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192434
-
யார் வெல்வார்?
ஐயையோ நான் ஆழம் தெரியாமல் காலை விட்டிட்டேன்... மன்னிச்சுடுங்க.... Krithi Shetty Srinidhi Shetty Siddhi Idnani
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவல் நாமல் ராஜபக்ஷவுடன் சந்தித்துப் பேச்சு Published By: VISHNU 30 AUG, 2024 | 09:15 PM இலங்கை வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வெள்ளிக்கிழமை (30) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையில் பல்வேறு தரப்பினரையும் அஜித் டோவல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வெள்ளிக்கிழமை (30) நாமல் ராஜபக்ஷவுடனும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, இரண்டு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192435
-
ஆகஸ்ட் 30 - சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வட, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் Published By: VISHNU 30 AUG, 2024 | 08:54 PM வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வெள்ளிக்கிழமை (30) வடக்கு, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிணைந்தும், குழுக்களாகவும் கவனயீர்ப்புப்போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் அதன்படி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (30) மு.ப 11 மணியளவில் யாழ்ப்பாணம், ஆரிய குளம் சந்தியில் ஆர்மபமான பேரணி பருத்தித்துறை வீதி - ஆஸ்பத்திரி வீதி - கங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்திச் சென்றதுடன், பேரணியின் முடிவில் தமக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டங்களைத் தொடர்வதாக அக்கினி சாட்சியாக உறுதி எடுத்தனர். கிளிநொச்சி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயம் வரை பேரணியாகச்சென்று, காணாமலாக்கப்பட்டவர்கள் மீளத்திரும்பிவரவேண்டும் எனப் பிரார்த்தித்து தேங்காய் உடைத்தனர். வவுனியா அதேபோன்று வவுனியா தபால் திணைக்களத்துக்கு அருகில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகைக்கு முன்பாக நேற்றைய தினமும் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்கக் கொடிகளையும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையும் கைகளில் ஏந்தியவாறு 'எங்கே எமது உறவுகள்?', 'கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?' எனக் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வெள்ளிக்கிழமை (30) திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்தவெளி அரங்கிற்கு அண்மையில் பொலிஸாரின் தடையுத்தரவையும் மீறி கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 'எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்', 'காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?', 'சர்வதேச விசாரணையே வேண்டும்', 'காணாமல்போனோர் பற்றி அலுவலகம் வேண்டாம்' 'மரணச்சான்றிதழ் வேண்டாம்' என்ற கோஷங்களை எழுப்பியும், தமது உறவுகளின் புகைப்படங்கள், பதாதைகள் மற்றும் தீச்சட்டிகளை ஏந்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரட்ரிக் கோட்டை வீதி வழியாக வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்த வெளி அரங்கிற்கு செல்ல முற்பட்டபோது பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவ்விடத்தில் சில மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கடற்கரை ஓரமாக வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு சென்று தீபச்சுடர் ஏற்றி காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட ரஜீவ்காந்த் என்பவரை விடுதலை செய்யக்கோரியும் விடுதலை செய்யும்வரை அவ்விடத்தில் இருந்து நகரமாட்டோம் என அவ்விடத்தில் அமர்ந்தவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ரஜீவ் காந்தை விடுதலை செய்யப்பட்ட பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கங்களின் தலைவிமார்களினால் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட மறைமாவட்ட ஆயரின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்குமாறு அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த அருட்தந்தையர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு அதேவேளை 1980 களில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோர் ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை (30) கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தூதரகங்களிடம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிகோரி மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இவ்வாறு நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மதகுருமார், சிவில் சமூகப்பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192433
-
யார் வெல்வார்?
ஏனண்ணை புதுசா அழகா இருக்கும் நடிகைகளின் பெயர் தெரியலையோ?!
-
'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே' - மன்னாரில் போராட்டம்
Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 05:12 PM மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபானசாலையை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் பதாதைகள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின்போது இவர்கள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில் 'வர்த்தகம் முக்கியத்துவம் கொண்ட மன்னார் தலைமன்னார் சர்வதேச நெடுஞ்சாலையில் மதுக்கடையா?', 'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே', 'மக்கள் வாழ்விடத்தில் மதுபானசாலையா? ஏழை மக்களின் வாழ்க்கையில் விலையாடாதே', 'பாடசாலை மாணவர்களை போதைக்குள் தள்ளாதே', 'அதிகாரிகளே மதுபானக் கடைக்கு அனுமதி வழங்காதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை எந்தியிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தின் கோரிக்கைகள் கொண்ட மகஜர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயலாளரிடமும் நேரில் சென்று கையளிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/192417
-
யாழில் வெதுப்பகம் ஒன்றுக்கு சீல்!
30 AUG, 2024 | 03:47 PM யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு 24 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பகுதியில் உணவு கையாளும் நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன்போது வெதுப்பகமொன்று சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதையடுத்து, உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வெதுப்பகத்தில் காணப்பட்ட சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் வெதுப்பகத்தை சீல் வைக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளையிட்ட நீதிமன்றம் வெதுப்பக உரிமையாளருக்கு 24 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/192398
-
டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பிரான்சில் திடீர் கைது - என்ன காரணம்?
குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்களில் சேர டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்து மறுப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆன்லைனில் குழந்தை வன்கொடுமை உள்ளடக்கத்தை கண்டறிந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச திட்டங்களில் சேர்வதற்கு டெலிகிராம் செயலி தொடர்ந்து மறுக்கிறது என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் சமீபத்தில் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார். அத்தகைய உள்ளடக்கத்தைக் கண்டறியவும் புகாரளிக்கவும் மற்றும் அகற்றவும் செயல்படும், காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம் (NCMEC) மற்றும் இணைய கண்காணிப்பு அறக்கட்டளை (IWF) ஆகியவற்றுடன் டெலிகிராம் ஒத்துழைப்பதில்லை. கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட டெலிகிராம் செயலியில் போதுமான அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்ற குற்றசாட்டின் பேரில் துரோவ் கைது செய்யப்பட்டார். 39 வயதான அவர் மீது போதைப்பொருள் கடத்தல், குழந்தை பாலியல் உள்ளடக்கம் மற்றும் மோசடி ஆகியவற்றில் சட்ட அமலாக்க அமைப்புடன் ஒத்துழைக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "கட்டுப்பாடுகள்,தொழில்துறை தரங்களுக்கு ஏற்ப உள்ளதாகவும், அவை தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும்" டெலிகிராம் வலியுறுத்தி வந்தது. மேலும் "ஒரு தளம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு அந்த தளம் அல்லது அதன் உரிமையாளர்தான் பொறுப்பு என்று கூறுவது அபத்தமானது" என்றும் அது கூறியது. குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களில் சேர மறுப்பது குறித்து கருத்து கேட்பதற்காக டெலிகிராம் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டது. பிற சமூக வலைதளங்களை போல அல்லாமல், காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் ’சைபர் டிப்லைன்’ போன்ற திட்டங்களில் சேர டெலிகிராம் மறுக்கிறது. 1,600 க்கும் மேற்பட்ட இணைய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ளன. அமெரிக்காவில் இருந்து செயல்படும் நிறுவனங்கள் இதில் சட்டப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் பதிவு செய்துள்ள நிறுவனங்களில் 16% அமெரிக்காவை சேராதவை ஆகும். டெலிகிராம் ரஷ்யாவில் நிறுவப்பட்டது. ஆனால் துரோவ் தற்போது வசிக்கும் துபாயில் இருந்து அந்த நிறுவனம் இப்போது செயல்படுகிறது. குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் தொடர்பான புகார்கள், ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம், டிக்டாக், எக்ஸ், ஸ்நாப்சாட் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் பிரச்னையை சமாளிக்க தன்னுடன் சேருமாறு காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம்( NCMEC) பலமுறை டெலிகிராமை கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்தது. இணைய கண்காணிப்பு அறக்கட்டளை(IWF) உடன் பணிபுரியவும் டெலிகிராம் மறுக்கிறது. "கடந்த ஓராண்டாக டெலிகிராமுடன் பேச்சு நடத்த நாங்களே முயற்சித்த போதிலும் அந்த நிறுவனம் இணைய கண்காணிப்பு அறக்கட்டளையில் உறுப்பினராக ஆகவில்லை. மேலும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் படங்கள் பகிர்வை தடுக்க, எங்கள் சேவைகள் எதையும் அது பயன்படுத்துவதில்லை,” என்று இணைய கண்காணிப்பு அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். IWF அல்லது NCMEC உடன் இணைந்து செயல்படாத காரணத்தால், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் என்று இந்த அமைப்புகளால் வரையறுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட பட்டியல்களை முன்கூட்டியே அறியவோ, அகற்றவோ அல்லது தடுக்கவோ டெலிகிராம் செயலியால் முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ’டேக்இட்டவுன்’ திட்டத்தின் ஒரு பகுதியாகவும் டெலிகிராம் இல்லை. வன்முறையுடன் கூடிய பழிவாங்கும் ஆபாச படங்களை அகற்றும் பணியை இந்தத்திட்டம் மேற்கொள்கிறது. ஸ்நாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், டிக்டாக், பார்ன்ஹப், ஒன்லிஃபேன்ஸ் ஆகிய அனைத்துமே, தங்கள் பொது அல்லது குறியீட்டு சொற்களால் மறைக்கப்படாத தளங்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்கேன் செய்ய 'ஹாஷ் பட்டியலை'ப் பயன்படுத்தும் இந்தத்திட்டத்தின் உறுப்பினர்கள். டெலிகிராம் இணங்காத மற்றொரு விதிமுறை ’வெளிப்படைத்தன்மை அறிக்கை’. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமூக வலைதளங்கள் காவல்துறையின் கோரிக்கைக்கு இணங்க, அகற்றப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களின் பட்டியலையும் வெளியிடுகின்றன. மெட்டாவின் செயலிகள், ஸ்நாப்சாட் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்கள் ஆன்லைனில் தங்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றன. முந்தைய ஆண்டுகளின் அறிக்கைகளையும் லைப்ரரியில் பார்க்கமுடியும். டெலிகிராமில் அத்தகைய இணையதளம் எதுவும் இல்லை. ஒரு சேனல் மட்டுமே செயலியில் உள்ளது. ஆனால், அதில் வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் இல்லை. வெளிப்படைத்தன்மை அறிக்கைகளுக்கான தனது அணுகுமுறையை "ஆண்டிற்கு இருமுறை" என்றும் அது விவரிக்கிறது. முந்தைய அறிக்கைகளைப் பார்ப்பதற்கான கோரிக்கைக்கு ’டெலிகிராம் வெளிப்படைத்தன்மை சேனல்’ பதிலளிக்கவில்லை. மேலும் "உங்கள் பிராந்தியத்திற்கு எந்த அறிக்கையும் கிடைப்பதற்கு இல்லை" என்று அது கூறியது. ஊடகங்கள் தொடர்புகொள்வதற்கு டெலிகிராமில் ஒரு அசாதாரண அமைப்பு உள்ளது. தானியங்கி பாட் உடன் தொடர்பு கொள்ளும் முறை செயலியில் உள்ளது. ஆனால் இந்த செய்தியாளர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலைப் பெற பல மாதங்கள் முயற்சி செய்த பிறகும் பலன் ஏதும் இல்லை. ஊடகங்கள் தொடர்புகொண்டு விசாரிக்க விளம்பரப்படுத்தப்படாத மின்னஞ்சல் முகவரி ஒன்று உள்ளது. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பியும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஜூன் மாதத்தில் பவெல் துரோவ், செய்தியாளர் டக்கர் கார்ல்சனிடம், "சுமார் 30 பொறியாளர்களை" மட்டுமே தனது தளத்தை இயக்குவதற்குப் பயன்படுத்துவதாகக் கூறினார். டெலிகிராமை நிறுவிய துரோவ் ரஷ்யாவில் பிறந்தவர். அவர் இப்போது துபாயில் வசிக்கிறார். அவரிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை உள்ளது. டெலிகிராம் குறிப்பாக ரஷ்யா, யுக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் மற்றும் இரானில் பிரபலமாக உள்ளது. https://www.virakesari.lk/article/192398
-
யாழில் மணல், மரக்குற்றிகளை கடத்திச் சென்ற 25 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல் : சாரதிகள் கைது
30 AUG, 2024 | 03:52 PM யாழ்ப்பாணத்தில் மணல் மற்றும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவ்வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக மணல் மற்றும் மரக்குற்றிகள் டிப்பர் வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனையடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்போது, உரிய அனுமதிப் பத்திரங்களின்றி மணல் கடத்திச் சென்ற 24 டிப்பர் வாகனங்களும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற ஒரு டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, அந்த டிப்பர் வாகனங்களின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையங்களில் தரித்துவைத்துள்ள பொலிஸார், அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/192400 மணலுக்குள் மரக்குற்றிகள் கடத்துவது வழமையாமே!!
-
ஆகஸ்ட் 30 - சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு
யாழில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம்! Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 03:55 PM சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி - ஆஸ்பத்திரி வீதி - காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது. பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/192402
-
யாழில் வீடுகளில் திருடும் சந்தேக நபரொருவரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
30 AUG, 2024 | 04:49 PM யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வரும் சந்தேக நபரொருவரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபர் திருட்டில் ஈடுபடுவது தொடர்பிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தென்மராட்சி பகுதிகளில் அண்மைக்காலமாக, வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் , நேற்று வியாழக்கிழமை (29) சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் திருடப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. குறித்த நபர் வீட்டினுள் நுழையும் போது ஒரு சேர்ட்டும் , திருடிய பின்னர் வீட்டிலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு சேர்ட்டும் அணிந்துள்ளமை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. குறித்த நபர் தொடர்பிலான விபரங்கள் அறிந்தவர்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591337 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/192404
-
கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் செயலகத்தினை ஸ்தாபிக்க புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
Published By: DIGITAL DESK 2 30 AUG, 2024 | 07:04 PM கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் உறுப்பு நாடுகள் கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் செயலகத்தினை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சாசனத்தில் 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன. குறித்த கைச்சாத்திடும் நிகழ்வுகள் இலங்கை அரசாங்கத்தால் கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , கே.சி, மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு இப்ராஹிம் லத்தீப் DC (Retd.), Lt. Col (Retd.) மொரீசியஸ் குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஹய்மந்தோயல் திலும் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கா ஆகியோர் குறித்த உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆவணங்களில் கைச்சாத்திட்டிருந்தனர். உறுப்பு நாடுகளின் பொதுவான கவலைகள் குறித்த சவால்கள் மற்றும் நாடுகடந்த அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை முறியடித்து பிராந்திய பாதுகாப்பினை மேம்படுத்துவதே இந்த கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் முக்கிய இலக்காகும். கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் கீழ் ஒத்துழைப்புக்கான ஐந்து முக்கிய காரணிகளாக கடல்சார் பாதுகாவல் மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத ஒழிப்பு, கடத்தல்கள் மற்றும் திட்டமிட்ட பல்தேசிய குற்றங்களுக்கு எதிராக போராடுதல், இணைய பாதுகாப்பு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு, மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. இக்கூட்டுக்குழுமத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இம்மாநாட்டில் கலந்துகொண்ட தூதுக்குழுவினரது தலைவர்கள் மட்டத்திலான கலந்துரையாடல்களுடன் இந்நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன. இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட CSC உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை சந்தித்துள்ளார். மேலும் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். https://www.virakesari.lk/article/192419
-
ஆகஸ்ட் 30 - சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வவுனியாவில் மாபெரும் போராட்டம் Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 02:48 PM சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (30) தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது வவுனியா தபால் திணைக்களத்தின் அருகில் 2,750வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன் போது எங்கே எங்கே உறவுகள் எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று கோஷங்களை எழுப்பியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க கொடிகளை தாங்கியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் படங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/192397
-
ஆகஸ்ட் 30 - சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம் Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 03:37 PM அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்று வெள்ளிக்கிழமை (30) சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் துவாரகன், பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன், கலைப்பீட மாணவர் ஒன்றியம் தலைவர் நெவில்குமார், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விதுசன் மற்றும் மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/192391
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நிறைய செல்லுபடியற்ற வாக்குகள் விழும்போல!
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் வெளியான அறிக்கை 30 AUG, 2024 | 03:38 PM எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, வாக்காளர் வாக்குச்சீட்டில் தான் வாக்களிக்கவுள்ள வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரில் அதற்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 என்ற இலக்கத்தை குறித்து வாக்கைப் பிரயோகித்தல் வேண்டும். அதன் பின்னர், 2 மற்றும் 3 என்ற இலக்கங்களை குறிப்பதன் மூலம் இரண்டு வேட்பாளர்களுக்கு தனது விருப்புத் தெரிவை குறிப்பட முடியும். வாக்காளர் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவுகளை அடையாளமிடவில்லை எனினும் அதில் முறையானவாறு ஒரு வேட்பாளருக்கு அடையாளமிடப்பட்ட வாக்கொன்று காணப்பட்டால் அது செல்லுபடியான வாக்கொன்றாக ஏற்றுக்கொள்ளப்படும். வாக்காளரின் உளக்கருத்து வாக்குச்சீட்டில் ஏதேனும் தெளிவான அடையாளம் ஒன்று (உதாரணமாக; x என்ற அடையாளம் ) காணப்பட்டால் அது வாக்காளருக்கு அளிக்கப்பட்ட வாக்கொன்றாக கருதப்படும். இதேவேளை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் காணப்படும் வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும். 1. எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கு அடையாளமிடப்படாமல் இருத்தல் 2. ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு அடையாளமிடப்பட்டு இருத்தல் 3. ஒரு வேட்பாளருக்கு 1 என்ற இலக்கமும் மற்றைய வேட்பாளருக்கு x என்ற அடையாளமும் காணப்படல் 4. இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டு இருத்தல் 5. வாக்காளரை அடையாளம் காணக்கூடியவாறு ஏதேனும் எழுதப்பட்டிருத்தல் 6. 1 தவிர்த்த வேறு அடையாளமொன்றுடன் 2,3 விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டு இருத்தல் 7. 1,2,3 ஐ விட அதிகமான வாக்கு மற்றும் விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டு இருத்தல் https://www.virakesari.lk/article/192394
-
ஆகஸ்ட் 30 - சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்; யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 02:45 PM சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில், யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் அமைந்துள் ஆரியகுளம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி, முனியப்பர் கோவில் வரையில் இடம்பெற்றது. குறித்த, ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கையளிக்க வலியுறுத்தும் வகையிலான பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். அத்தோடு, ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஐவர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டபேரணியின் முடிவில் 'நீதி?' என எழுதப்பட்ட பாத்திரமொன்றினுள் ஆர்ப்பாட்டக் காரர்களால் தீச்சுடரேற்றப்பட்டு தமக்கான நீதியை வலியுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். மேலும், இவ்வார்ப்பாட்டப்பேரணியில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன், அரசியல் பிரதிநிதிகள், சமூகமட்ட பிரதிநிதிகள், உள்ளிட்ட பெருமளவானோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192387
-
ஆகஸ்ட் 30 - சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் ஆர்ப்பாட்டம் - திருகோணமலையில் ரஜீவ்காந் கைது 30 AUG, 2024 | 12:46 PM திருகோணாமலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரகலய செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/192380
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 02:10 PM இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/192392