Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர் அட்டைகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடங்கும் என்றும், செப்டம்பர் 8 ஆம் திகதி அதற்கான சிறப்பு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/308378
  2. இஸ்ரேல் மீதான தாக்குதல் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்காவிட்டால் மீண்டும் தாக்குவோம் - ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் Published By: RAJEEBAN 26 AUG, 2024 | 11:35 AM இஸ்ரேல் மீது நாங்கள் மேற்கொண்ட தாக்குதல் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பாதிப்புகள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்வோம், எதிர்பார்த்த சேதங்கள் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார். எங்கள் அமைப்பின் இராணுவநடவடிக்கை திட்டமிட்டபடி துல்லியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலிற்குள் 110 கிலோமீற்றர் உள்ளே உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் அயர்ன் டொமை நோக்கி கெட்டுசா ரொக்கட்களை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் சிரேஸ்ட தளபதியை இஸ்ரேல் கொலை செய்தமைக்கு பழிவாங்குவதற்காக பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்குவைக்க நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் இஸ்ரேலின் உட்கட்டமைப்பை இலக்குவைக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/191996
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பலோச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது (பிரதிநிதித்துவப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி செய்திகள், இஸ்லமாபாத் 27 நிமிடங்களுக்கு முன்னர் தென்மேற்கு பாகிஸ்தானில் ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வாகனங்களில் சென்று கொண்டிருந்த நபர்களை கட்டாயமாக வெளியேற்றி அவர்களின் அடையாள அட்டைகள் சோதனையிடப்பட்ட பிறகு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் இரவு முழுவதும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் வகுப்புவாதம், பிரிவினை மற்றும் இன வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் முயற்சித்து வரும் சூழலில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. வாகனங்களில் பயணித்தவர்களின் அடையாள அட்டைகளை சோதனையிட்ட ஆயுதமேந்திய நபர்கள், பஞ்சாப் மாகாணத்தில் இருந்து வந்தவர்களை மட்டும் வாகனங்களில் இருந்து வெளியேற்றி சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும், அவர்களின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். பலோச் விடுதலைப் படை (BLA) என்ற ஆயுதக்குழு முஸா கேல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மூத்த உள்ளூர் அதிகாரியான நஜிபுல்லா காக்கர், இந்த விவகாரத்தில் 30 முதல் 40 ஆயுதமேந்திய நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். "22 வாகனங்களை அவர்கள் நிறுத்தியிருக்கின்றனர்," என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் அவர் தெரிவித்திருக்கிறார். "பஞ்சாப் மாகாணத்தை நோக்கி செல்லும் வாகனங்களும், அங்கிருந்து வரும் வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அதில் பஞ்சாப் மாகாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்," என்றும் அவர் கூறியுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், "பொதுமக்கள் உடையில் பயணித்த ராணுவத்தினர்தான் தங்களின் இலக்கு" என பலோச் விடுதலைப் படை கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. பலோச் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பலோச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு முன்பு கூறியிருந்தது. மேலும், '' ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக சண்டையிட இருப்பதாக'' கூறியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மற்ற மாகாணங்களைக் காட்டிலும் அதிக வளம் கொண்ட பகுதியாக பலுசிஸ்தான் உள்ளது பலுசிஸ்தானில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், அதனை முழுமையாக முடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது பலோச் விடுதலைப் படை. "இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனங்களையும் வருத்தத்தையும்" தெரிவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள மாகாணங்களில் மிகவும் பெரியது பலுசிஸ்தான். அதிக வளங்களை கொண்ட மாகாணமாக இருக்கின்ற போதும் வளர்ச்சியடையாத ஒரு பிராந்தியமாக அது உள்ளது. பலுசிஸ்தானில் பணியாற்றி வரும் பாகிஸ்தானின் பிற பகுதிகளை சேர்ந்த பஞ்சாபிகள் மற்றும் சிந்திகள் மீது பலோச் விடுதலைப் படை மற்றும் இதர பிரிவினைவாத அமைப்புகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இவர்கள் இங்குள்ள வெளிநாட்டு எரிசக்தி நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்குள்ள வளங்களை பயன்படுத்தி ஆதாயம் காணும் எரிசக்தி நிறுவனங்கள் அதில் இருந்து கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொள்வதில்லை என்று கூறி அந்த நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதமும் இதே போன்ற சம்பவம் பலுசிஸ்தானில் நடைபெற்றது. அங்கே பேருந்தில் பயணித்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு 9 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில், பலோச் விடுதலைப் படை, காவல் நிலையம், பாதுகாப்பு படையினர் முகாம்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலோச் விடுதலைப் படையை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cwy5x61j8p7o
  4. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 01:14 PM இலங்கையில் 97 வயது மூதாட்டி ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் லீலாவதி தர்மரத்ன என்ற மூதாட்டி பௌத்த கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இளந்தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் அவர் பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல” என தெரிவித்துள்ளார். லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாகவும் நோட்டரி அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/192017
  5. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 10:55 AM “வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு வழங்கினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக மாற்று முறைமையை செயற்படுத்தும் திட்டங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/191989
  6. 26 AUG, 2024 | 09:40 AM இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று (26) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. எரிபொருள் மீள் நிரப்பல் மற்றும் ஏனைய கப்பல் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான செயற்பாட்டு விஜயமாகவே இவ்விஜயம் அமைகின்றது. இக்கப்பல் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பமும் இவ்விஜயத்தின்போது கிடைக்கப்பெறுவதுடன், நகரில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கும் அதேபோல கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஐஎன்எஸ் மும்பை கப்பல் 29 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191977
  7. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 09:08 AM மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (24) இரவு மது போதையில், குறிகட்டுவான் பகுதியில் கடமையில் இருந்திருந்தார். இதன்போது, வீதியால் சென்ற பொதுமகனிடம் இலஞ்சம் பெற முயன்றதோடு அவர்மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அந்தவகையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர். இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தலா ஒரு இலட்சம் பெறுமதியிலான இரண்டு ஆள் பிணைகளில் செல்வதற்கு அனுமதியளித்திருந்தார். அத்துடன் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191975
  8. 26 AUG, 2024 | 08:55 AM களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் ஆவர். மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு நீராடச் சென்ற போதே இருவரும் இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/191974
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், லக்ஷ்மி படேல் பதவி, பிபிசி குஜராத்தி 26 ஆகஸ்ட் 2024, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பலரும் பல்வேறு காரணங்களுக்காக விரதம் இருப்பார்கள். சிலர் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் விரதம் இருப்பார்கள். சிலர் தொடர்ந்து மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள். வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து. விரத நாட்களில் வறுத்த மற்றும் இனிப்பான தின்பண்டங்களைச் சாப்பிடுவது, உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, விரதம் இருப்பதன் மூலம் சில நோய்களைக் குணமாக்கலாம். ஆனால் விரத நாட்களில் சிப்ஸ், வடை போன்ற பொரித்த, வறுத்த தின்பண்டங்களையும், இனிப்பு வகைகளையும் உண்டால், குடல் சாதாரண நாட்களைவிடக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எனவே உண்ணாவிரத காலங்களில் வறுத்த உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. வடை, சிப்ஸ் போன்ற பொரித்த உணவுகளை சாப்பிடலாமா? ஒரு ஆரோக்கியமான நபர், விரதம் இருக்கும் போது எதுவும் சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆமதாபாத்தைச் சேர்ந்த கல்லீரல் நோய் நிபுணரான டாக்டர். பாத்திக் பரிக், "உடலை இளைப்பாற வைப்பதே உண்ணாவிரதத்தின் நோக்கம். ‘இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்’ (பகலில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் உண்ணாவிரதம் இருப்பது) அல்லது 24 மணி நேரமும் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சிலரால் உண்ணாவிரதத்தின் போது பசி தாங்க முடியாது," என்று பிபிசியிடம் கூறினார். "விரத காலத்தில் சிலர் வறுத்த, அல்லது எண்ணெய்-நெய் நிறைந்த பண்டங்களை உண்கின்றனர். இந்த உணவுகளில் அதிக கலோரிகள் உள்ளன. இது கல்லீரல் செல்களை சேதப்படுத்துகிறது. இது போன்ற வறுத்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரலில் கொழுப்பு சேர வழிவகுக்கும். இது நோயையும் உண்டாக்கலாம்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொழுப்பு உணவுகளை அதிக அளவில் அல்லது நீண்ட நேரம் சாப்பிட்டால், அவற்றில் உள்ள கொழுப்பு மெதுவாக கல்லீரலில் சேரும் கல்லீரலில் கொழுப்பு சேர்வது எப்படி? எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, நமது உடலில் உள்ள சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கிறது. கல்லீரலில் எவ்வாறு கொழுப்பு சேர்கிறது என்று காஸ்ட்ரோ-என்டாலஜிஸ்ட் டாக்டர். மணீஷ் பட்நாகர் பிபிசி குஜராத்தியிடம் விளக்கம் அளித்தார். "விரதத்தின் போது எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டால், உடலில் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு உணவுகளை அதிக அளவில் அல்லது நீண்ட நேரம் சாப்பிட்டால், அவற்றில் உள்ள கொழுப்பு மெதுவாக கல்லீரலில் சேரும். இந்த நிலை கல்லீரல் வீக்கம் என்று அழைக்கப்படுகிறது. ” என்கிறார். உண்ணாவிரதத்தின் போது கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் ஏற்படும் கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களை முறையாக விரதம் இருப்பதன் தடுத்து கல்லீரலை ஆரோக்கியமாக மீட்டெடுக்க முடியும் என்றும் டாக்டர் பட்நாகர் கூறுகிறார். “உண்ணாவிரதத்தை முறையாகக் கடைபிடித்தால், கொழுப்பில் உள்ள கலோரிகள், கல்லீரல் வீக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் அதிக கலோரி உள்ள உணவுகளைச் சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் வயிறு அல்லது உடல் உறுப்புகளை சேதப்படுத்தும். உணவினால் தூண்டப்படும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இரத்தத்தையும் பாதிக்கலாம்," என்கிறார். உப்பு அதிகமுள்ள உணவுகளால் என்ன பாதிப்பு? சிறுநீரக மாற்று மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பிரஞ்சால் மோதி பிபிசியிடம், ஆரோக்கியமற்ற உணவுகள் சிறுநீரகத்தை எவ்வாறு சேதப்படுத்தும் என்பது பற்றி கூறினார். "எண்ணெய் மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. அதிக உப்பு இருந்தால், சிறுநீரகங்கள் உடலின் உப்பு அளவைப் பராமரிக்கக் கடினமாக உழைக்க வேண்டும்," என்று டாக்டர் மோதி கூறுகிறார். சிறுநீரகப் பாதிப்பைத் தடுப்பது பற்றிப் பேசிய அவர், "உடலில் ஏற்படும் பசியை விடக் குறைவாகச் சாப்பிட வேண்டும். உண்ணாவிரதம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் விரதத்தின் போது எண்ணெய், சர்க்கரை, அல்லது உப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், அது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் இரண்டையும் பாதிக்கும்," என்று டாக்டர் பிரஞ்சால் மோதி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விரதத்தின் போது பழங்கள், பால் போன்ற லேசான உணவுகளை உட்கொள்ள வேண்டும், என்கின்றனர் மருத்துவர்கள் விரத நாட்களில் என்ன சாப்பிடுவது? உண்ணாவிரத காலத்தில் முழுக்கப் பட்டினி இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும், விரதத்தின் பொது சத்தான உணவை சரியான வகையில் எடுத்துக்கொள்வதன் மூலம் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் லிசா ஷா கூறும் போது, "மழைக்காலத்தில் செரிமானம் பலவீனமடைகிறது. எனவே அப்போது விரதம் இருக்காவிட்டாலும், குறைவாகச் சாப்பிட வேண்டும். லேசான உணவை உண்ண வேண்டும். எந்த காலத்திலும் விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்," என்கிறார். விரதத்தின் போது எப்போது சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும்? விரதத்தின் போது எப்போது சாப்பிட வேண்டும் என்று கூறிய லிசா ஷா, "ஒரு நாளைக்கு ஒரு முறை உண்ணும் போது, காலையில் வழக்கமான உணவை அதே நேரத்தில் சாப்பிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை விரதம் இருப்பவர்கள் இரவில் பழங்கள் அல்லது கொழுப்பு அல்லாத உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் பால் குடிக்க வேண்டும்," என்கிறார். மேலும், "மாதம் முழுவதும் விரதம் இருப்பவர்களும் காலை உணவை அதே நேரத்தில் சாப்பிட்டு, இரவில் உணவை குறைவாக சாப்பிட வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட உப்புமா, கொழுப்பு நீக்கப்பட்ட பால், பழங்கள், அல்லது உலர் பழங்கள் சாப்பிட வேண்டும். இது தவிர, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம்," என்கிறார். மேலும், “விரதத்தின் போது மாலையில் உண்பவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள். மாலையில் உண்பவர்கள் பகலில் சிற்றுண்டி என்ற பெயரில் பொரித்த உணவைச் சாப்பிடுகிறார்கள். அதிகளவில் அவற்றைச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் பட்டினி கிடக்கிறார்கள் என்று நினைத்து அப்படிச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்,” என்கிறார். “சந்தையில் கிடைக்கும் வறுத்த உணவுகள் மட்டுமின்றி, வீட்டில் வறுத்த உணவுகளை உண்பதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். விரத நாட்களில், சாதாரண நாட்களை விட, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுகின்றனர்," என்கிறார் அவர். "பொதுவாக, நாம் வறுத்த உணவு அல்லது இனிப்புகளை எப்போதாவது சாப்பிடுகிறோம். ஆனால் விரத நாட்களில், இதுபோன்ற உணவுகளை அடிக்கடி மற்றும் அதிக அளவில் சாப்பிடுகிறோம். குடலைத் தளர்த்துவதற்குப் பதிலாக, இந்த வகை உணவுகள் குடலை அதிக நேரம் வேலை செய்ய வைக்கின்றன," என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விரதம் இருக்கும்போது கொழுப்பு நீக்கப்பட்ட பால், பழங்கள், அல்லது உலர் பழங்கள் சாப்பிட வேண்டும் விரதத்தின் போது நீரிழப்பைத் தடுக்க என்ன செய்யலாம்? விரதத்தின் போது திரவங்களை உட்கொள்ளும் அளவைக் குறைக்கக் கூடாது என்கிறார் டாக்டர் பரிக். "உண்ணாவிரதத்தின் போது மக்கள் சில நேரங்களில் நீரிழப்பை அனுபவிக்கிறார்கள். நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவங்களை உட்கொள்ள வேண்டும்," என்கிறார். டாக்டர். பட்நாகர் "வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தால் சில நோய்களைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, அதன்மூலம் சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளன. ஆனால், விரதம் ஒரு நாள் விரதமா அல்லது தொடர் விரதமா என்பது முக்கியமான கேள்வி," என்கிறார். “விரதத்தின் போது பழங்கள், பால் போன்ற லேசான உணவுகளை உட்கொள்ள வேண்டும்," என்கிறார். இருப்பினும், மக்கள் தங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி விரதம் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். டாக்டர் பட்நாகர் மேலும் கூறுகையில், "நோன்பு துறக்கும் போது ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று நினைத்து மக்கள் தங்கள் வழக்கமான அளவை விட அதிகமாக சாப்பிடும் போது, அதுவும் தீங்கு விளைவிக்கும்," என்கிறார். கலோரிகளைப் பற்றி பேசுகையில், டாக்டர் பட்நாகர், "வழக்கமான நாளில் மக்கள் வழக்கமாக 2,000 கலோரிகளை உட்கொள்கிறார்கள். ஆனால், விரத நாட்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் இது 3,500 கலோரிகள் வரை செல்கிறது. குளிர்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு அதிக கலோரி உணவுகள் தேவை. ஆனால் நமது சுற்றுச்சூழலுக்கு குறைவான கலோரிகளே தேவைப்படுகின்றன," என்கிறார். https://www.bbc.com/tamil/articles/clyl9518ee4o
  10. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 03:13 PM மன்னார் வங்காலையிலுள்ள தேசியப் பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்று திங்கட்கிழமை(26) காலை பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர். பிள்ளைகளின் கல்வியை பாழாக்காதே, ஒழுக்கம் இல்லாத உன்னால் எப்படி ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க முடியும்?. ஒரு குடும்பத்திற்காக ஊரை அழிப்பதா? உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் வங்காலை புனித ஆனாள் தேசியப் பாடசாலை கடந்த பல வருடங்களாக கல்வியிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும், ஏனைய போட்டிகளிலும் சாதனை நிலை நாட்டி வந்த நிலையில் அண்மைக் காலங்களாக பாடசாலை சகல துறைகளிலும் கீழ் மட்டத்தை அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டதோடு, மாணவர்களின் செயற்பாடுகள் சகல துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறித்த அதிபரை மாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் உடனடியாக குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் கை விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192030
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வில் வெர்னோன் பதவி, பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெலிகிராம் நிறுவனம், அவரிடம் மறைத்து வைக்க எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. டெலிகிராம் செயலி மீதான விதிமுறை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு பாரிஸ் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெலிகிராம் செயலி குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவில்லை என்று துரோவ் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல், குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் சார்ந்த தகவல்கள், மோசடி ஆகிய விவகாரங்களில் சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைக்க தவறியதாகவும் டெலிகிராம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் தன்னுடைய அறிக்கையில், "அதன் கட்டுப்பாடு அம்சங்கள் தொழில்துறை தர நிர்ணயத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது என்றும் தொடர்ந்து அதனை மேம்படுத்தி வருவதாகவும்" தெரிவித்துள்ளது. "ஒரு செயலியை தவறாக பயன்படுத்துவதற்கு அந்த செயலியோ அல்லது அதன் உரிமையாளரோ காரணம் என்று கூறுவது அபத்தமானது," என்றும் டெலிகிராம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. துரோவ் அடிக்கடி ஐரோப்பாவுக்கு பயணம் செய்வதாகவும், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணைய சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் சேவைகள் சட்டம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது. செய்தி பரிமாற்றம், தொலைத் தொடர்பு தேவைகளுக்காக டெலிகிராம் செயலியை கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த சூழலுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். டெலிகிராம் உங்களுடன் துணை நிற்கிறது," என்றும் அது கூறியுள்ளது. ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நீதித்துறையை சேர்ந்தவர்கள், துரோவின் தடுப்புக் காவல் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்படும் என்றும் 96 மணி நேரம் வரை இது தொடரலாம் என்றும் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,AOP.PRESS/CORBIS படக்குறிப்பு, டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் பாரிஸில் கைது செய்யப்பட்டார் 38 வயதான பாவெல் துரோவ் ரஷ்யாவில் பிறந்தவர். 2014ம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து வெளியேறிய அவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். டெலிகிராம் நிறுவனமும் துபாயை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அமீரகம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையை அவர் பெற்றுள்ளார். ரஷ்யா, யுக்ரேன், மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் டெலிகிராம் மிகவும் பிரபலமாக உள்ளது. பயனர்களின் தரவுகளை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததன் விளைவாக டெலிகிராம் செயலி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டது. பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், டிக்டாக் மற்றும் வீ-சாட் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக டெலிகிராம் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியாக பட்டியலிடப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு டெலிகிராம் செயலியை துரோவ் உருவாக்கினார். அதற்கு முன்பு அவர் விகோன்டக்டே (VKontakte) என்ற சமூக வலைதள பக்கத்தையும் உருவாக்கினார். அதில் எதிர்க்கட்சியினரின் பயன்பாட்டை முடக்க வேண்டும் என்ற ரஷ்ய அரசின் கோரிக்கையை நிராகரித்த பின்னர் 2014ம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து வெளியேறினார் துரோவ். விகோன்டக்டே சமூக வலைதளத்தை அவர் விற்றுவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெலிகிராம் செயலி ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் பிரபலமாக உள்ளது இன்றளவும் ரஷ்யா, துரோவை தன் நாட்டு பிரஜையாகவே அடையாளப்படுத்துகிறது. "இது போன்ற சூழலை எதிர்கொள்ளும் ரஷ்ய குடிமகனுக்கு தேவையான அனைத்து உதவி நடவடிக்கைகளும் இந்த விவகாரத்தில் பிரான்சுக்கான ரஷ்ய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. துரோவின் பிரதிநிதிகளிடம் இருந்து எந்த விதமான கோரிக்கையும் பெறப்படவில்லை. இருப்பினும், இந்த உதவிகள் வழங்கப்பட்டன," என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த தடுப்புக் காவலுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளவும், துரோவின் உரிமைகளை பாதுகாக்கவும், வழக்கறிஞரை அணுகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகள் ரஷ்யாவுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா, 2018ம் ஆண்டு ரஷ்யாவில் டெலிகிராம் செயல்பாட்டை முடக்க ரஷ்யா முயற்சிப்பதாக விமர்சித்த மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள், தற்போது துரோவ் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அமைதியாக இருப்பது ஏன் என்று தனது டெலிகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் 2 லட்சம் பேர் வரை இணைய முடியும். துறை சார் நிபுணர்கள், இதன் மூலம் எளிமையாக தவறான செய்திகளை பரப்ப இயலும் என்றும், சதி, நவீன நாஜி மற்றும் குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் ரீதியான தகவல்கள் அல்லது பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை பரப்ப முடியும் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் பிரிட்டனில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முக்கிய காரணமான தீவிர வலதுசாரி குழுக்களின் டெலிகிராம் சேனல்களுக்கு இடம் அளித்ததாக டெலிகிராம் செயலி தீவிர ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. டெலிகிராம் சில குழுக்களை அதில் இருந்து நீக்கினாலும், மற்ற சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்ற செயலிகளைக் காட்டிலும் டெலிகிராம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cwy3vp8dyy5o
  12. Published By: VISHNU 25 AUG, 2024 | 11:03 PM இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்தார். வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தென்னிலங்கையைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் காட்டிய அந்த நல்லிணக்க செய்தியை ஆட்சியில் இருந்த எந்த ஜனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை பிரச்சனையோ இதுவரை காலமும் தீர்க்கவில்லை. ஆகவே அந்த அடிப்படையிலே நாங்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளர்நிறுத்தியுள்ளோம். வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே இருக்க கூடிய மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும். இதற்கான தேர்தல் பிரச்சாரம் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டவிருக்கின்றது. வடக்கு கிழக்கிலே 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உள்ளார்கள். அதில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான பணிகளை நாங்கள் ஆரம்பித்து இருக்கின்றோம். நிச்சயமாக இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு மற்றும் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதில் 50 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். உண்மையில் நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது. இதுவரை காலமும் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை தீர்க்கவில்லை என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் சொல்ல முனைகிறோம். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரைக்கும் தெற்கில் இருக்கின்ற எந்த ஒரு சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற செய்தியையும் கூறுகின்றோம். அடுத்து சர்வதேசம் இந்த யுத்தத்தை முடிக்கும் வரையும் பல நாடுகளின் உதவியை பெற்று இந்த யுத்தத்தை முடித்து வைத்தது. யுத்தம் முடிந்த பிற்பாடு தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த சர்வதேச நாடுகள் உறுதியளித்திருந்தன. யுத்தம் முடிந்து 15 ஆண்டு காலமாக இருக்கின்றது. ஆனால் சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் இந்த பிரச்சினை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இன பிரச்சனை ஒன்று இருக்கின்றது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். குறித்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி வர்த்தக பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிவில் அமைப்புகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/191971
  13. அரசியல்வாதிகள், அதிகாரிகள், மற்றும் அரசியல் கையாட்கள் சிலர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இருந்து விசா பெற்றுள்ளதாகவும் சிலர் விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த அரசாங்கங்களின் போது தமது அரசியல் பலத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி எண்ணற்ற பணம் சம்பாதித்த அரசியல்வாதிகள் இலங்கையில் (Sri Lanka) உள்ள தமது சொத்துக்களை இரகசியமாக விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கூட்டுத் தொழில் குறிப்பாக, கூட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வியாபாரங்களின் பங்குகளை பணமாக மாற்றி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதற்கு நேரடியாக பங்களித்த பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் சிலரும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான ஆயத்தங்களை இப்போதே மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இவர்கள் தம்மை ஆட்சியில் அமர்த்த முயலும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படப் போகிறது என்பதை முன்கூட்டியே ஊகித்த காரணத்தினால் நாட்டை விட்டு ஓடுவதற்கு தயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/palestinians-to-flee-abroad-before-election-1724551763?itm_source=parsely-top
  14. Vaazhai நல்லாருக்கா? Mari Selvaraj-க்கு இது சிறந்த படமா? ஊடகங்கள் சொல்வது இதுதான் | Vaazhai Review
  15. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் - தென் லெபனான் மீது தாக்குதல் Published By: RAJEEBAN 25 AUG, 2024 | 11:01 AM ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஹெஸ்புல்லா அமைப்பு தயாராக உள்ளதை நாங்கள் அவதானித்தோம் அதனால் எங்கள் பொதுமக்களிற்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள இஸ்ரேல் தென் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது தனது விமானங்கள் தாக்குதல்களை மேற்கொள்கின்றன என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191911
  16. அதிகரிக்கும் பதற்றம்; தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; ‘இதுதான் முதல் கட்டம்’ – எச்சரித்த Hezbollah
  17. 25 AUG, 2024 | 06:38 PM கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான குளங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிற்கு எல்லை கற்கல் இட்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எல்லை கற்கள் கொள்வனவு செய்யப்பட்டு தயாராக உள்ளபோதும் அவற்றினை கொண்டு குளங்களுக்கு எல்லையிடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் தயாராக இல்லாதிருப்பது கவலையளிக்கிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் சில குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதில் கிளிநொச்சி குளம் அதன் பின்பகுதியில் பெருமளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டு மதில்கள் அமைக்கப்பட்டு கட்டடங்களும் கட்டப்பட்டுவிட்டன. கனகாம்பிகைகுளம் அதன் பின்பகுதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 25 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிது புதிதாக சிலர் மண் நிரப்பி குளங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் உட்பட மிக மோசமான சுற்றுச் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும். அருகிச் செல்லும் நிலத்தடி நீரையும் இல்லாது செய்துவிடும். எனவே இதனை கருத்தில் கொண்டு குளங்களை பாதுகாக்க வேண்டும். அதற்கமைய, குளங்களுக்கு எல்லையிடுதல் அவசியமாகும். வனவள திணைக்களம் தங்களின் காடுகளை பாதுகாக்க எல்லை கற்களை பதித்தது போன்று குளங்களுக்கும் எல்லை கற்களை பதிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கற்கள் தயார் நிலையில் உள்ள போதும் திணைக்களம் நடவடிக்கை எடுக்காதிருப்பது கவலைக்குரியது. எனவே இனியாவது குளங்களை பாதுகாக்கும் அக்கறையுடன் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/191959
  18. சுனிதா வில்லியம்சை அழைத்து வர நாசா புதிய திட்டம் - பூமிக்கு எப்போது, எப்படி திரும்புவார்? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் கட்டுரை தகவல் எழுதியவர், ஹோலி கோல், ரெபேக்கா மோரெல் & கிரேக் போஸ்னன் பதவி, பிபிசி நியூஸ் 25 ஆகஸ்ட் 2024, 05:51 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளனர். விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் "ஆளில்லாமல்" திருப்பிக் கொண்டு வரப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். ஆரம்பத்தில் அவர்கள் 8 நாட்கள் அங்கு இருப்பார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இப்போது விண்வெளி சுற்றுப்பாதையில் 8 மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகில் சென்றபோது அதில் சிக்கல்கள் ஏற்பட்டன. விண்கலத்திற்கு உந்துசக்தியை வழங்கக்கூடிய ஐந்து உந்துகலன்கள் வேலை செய்யாமல் போனது. ஹீலியம் வாயுவும் தீர்ந்துவிட்டதால், அந்த விண்கலம் எரிபொருளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. நாசா தனது விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வணிக விண்கலங்களுக்காக போயிங், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. போயிங் 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஈலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. ஆளில்லாமல் திரும்பும் ஸ்டார்லைனர் விண்கலம் இதுவரை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி வீரர்களுடன் ஒன்பது விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. ஆனால், ஆட்களுடன் போயிங் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவது இதுவே முதன்முறை. போயிங் மற்றும் நாசாவில் உள்ள பொறியாளர்கள் ஸ்டார்லைனர் விண்கலத்தின் தொழில்நுட்ப சிக்கல்களைப் புரிந்துகொள்வதில் அதிக நேரம் செலவிட்டனர். அவர்கள் விண்வெளியிலும் பூமியிலும் பல சோதனைகளை நடத்தி தரவுகளைச் சேகரித்தனர். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து, "விண்வெளி வீரர்களை பூமிக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்கான வழியைக் கண்டுபிடிப்போம்" என்று அவர்கள் நம்பினர். சனிக்கிழமையன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், நாசா நிர்வாகி பில் நெல்சன், இந்த விண்கலத்தைச் சரிசெய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஸ்டார்லைனர் விண்கலம் போயிங் நிறுவனத்தின் சோதனை விண்கலம் "பாதுகாப்பான அல்லது தொடர்ந்து இயக்கப்படும் விண்கலமாக இருந்தாலும் அது ஆபத்தானது. சோதனை வின்கலத்தைப் பொறுத்தவரை பாதுகாப்பானதும் அல்ல, அது தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதும் அல்ல. பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், அதுதான் எங்களை வழிநடத்துகிறது” என்று அவர் தெரிவித்தார். தற்போது இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தில் பிப்ரவரி 2025 வரை இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவர்கள் 'ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்' எனும் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள். இந்தக் கூடுதல் நேரம், ஸ்பேஸ் எக்ஸ் அதன் அடுத்த விண்கலத்தை ஏவுவதற்கான நேரத்தை வழங்கும். அந்த விண்கலம் செப்டம்பர் இறுதியில் விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன், அந்த விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் செல்வதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இருவர் மட்டுமே அதில் செல்லவுள்ளனர். அதன்மூலம், விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அந்த இரு விண்வெளி வீரர்களுடன் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் இணைந்துகொள்வார்கள். பூமிக்கு எப்படி திரும்புவர்? தற்போது விண்வெளியில் இருக்கும் இரு விண்வெளி வீரர்களும் இதற்குமுன் இரண்டு முறை நீண்ட காலத்திற்கு விண்வெளியில் இருந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருப்பது உள்ளிட்ட சோதனை விமானங்கள் தொடர்பான அபாயங்களை அவர்கள் புரிந்து இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது. பூமிக்குத் திரும்பும் திட்டத்தை, 58 வயதான சுனிதா வில்லியம்ஸ், 61 வயதான வில்மோர் ஆகிய இருவரும் முழுமையாக ஆதரித்துள்ளதாகவும் நாசா கூறியது. அதோடு, "அதுவரை அவர்கள் விண்வெளி நிலையத்தில் அறிவியல் சார்ந்த பணிகள், விண்வெளியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர்கள் 'விண்வெளி நடைபயணம்' கூடச் செய்வார்கள்" என்றும் நாசா தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பர் மாதம் இரு விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் விண்கலத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக போயிங்கின் ஸ்டார்லைனர் ஏற்கெனவே பல ஆண்டுகள் தாமதமானது. முந்தைய ஆளில்லா விண்கலங்களும் தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்கொண்டன. “விண்கலத்தில் செல்பவர்களின் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக” போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், "நாசாவின் தீர்மானிக்கப்பட்ட திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். மேலும், அந்த விண்கலம் பாதுகாப்பாக, வெற்றிகரமாக பூமிக்குத் திரும்ப நாங்கள் தயாராகி வருகிறோம்" என்று கூறியுள்ளது. ஸ்டார்லைனரில் என்ன தவறு நடந்தது? ஸ்டார்லைனர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டபோது, சிறியளவில் ஹீலியம் கசிவு ஏற்படத் தொடங்கியது. ஆனால், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும் அதில் மேலும் இரு கசிவுகள் ஏற்பட்டன. முதல்முறை ஏற்பட்ட கசிவு சிறிய ளவிலும், இரண்டாவது முறை ஏற்பட்ட கசிவு ஐந்து மடங்கு பெரியதாகவும் இருந்தது. விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியதும், 28 உந்துகலன்கள் மூடப்பட்டன. அதில், நான்கு உந்துகலன்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின. இதற்குப் பிறகு, உந்துவிசை அமைப்பில் மேலும் இரண்டு ஹீலியம் கசிவுகள் கண்டறியப்பட்டன. போயிங் நிறுவனத்தின் மார்க் நாபி கூறுகையில், மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல சோதனைகளில் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்தார். ஆனால் சில பொறியாளர்கள் இந்தச் சிக்கல் ஆளில்லா சோதனைப் பணிகளின்போது அல்லது விண்கல வடிவமைப்பின் ஆரம்பக் கட்டங்களில் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர். போயிங் விண்கலத்தில் முன்பு ஏற்பட்ட சிக்கல்கள் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டது இது போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட முதல் பிரச்னை அல்ல. கடந்த 2019ஆம் ஆண்டில் அதன் முதல் ஆளில்லா விண்கலத்தில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக, அதை இயக்க முடியாமல் போகவே, அந்த விண்கலம் விண்வெளி நிலையத்தை அடைய முடியவில்லை. கடந்த 2022இல் இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த விண்கலத்தில் மீண்டும் சில உந்துகலன்கள் குளிரூட்டும் அமைப்பில் சிக்கல்களை எதிர்கொண்டன. இதற்கிடையில், போயிங்கின் போட்டியாளரான ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. அதையடுத்து, ஸ்டார்லைனர் விண்கலங்கள் விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளை விண்வெளி நிலையத்திற்குச் சுமந்து செல்கிறது. பூமியில் போயிங் விமானங்களில் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நோக்கம் அதிகரித்து வரும்போது இவை அனைத்தும் நடக்கின்றன. போயிங் ஸ்டார்லைனர் ஒரு ஏவுதளமாக மாறுவதற்கு இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கும் என்பது இப்போது உறுதியாகத் தெரிகிறது. நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருந்தால் உடலில் என்ன நடக்கும்? “விண்வெளிக்குச் செல்லத் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. அதற்குக் காரணம் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை சூழல் என்பது மனித உடலில் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது” என்று பிபிசி தமிழிடம் முன்னர் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்தார். “பூஜ்ஜிய ஈர்ப்புவிசை நிலையில் அதிக நாட்கள் இருக்கும்போது விண்வெளி வீரர்களுக்கு தசை வலிமையும், எலும்பின் அடர்த்தியும் குறையும். அதுமட்டுமல்லாது உடல் எடை குறைவது, பார்வைத் திறனில் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஆகியவையும் பல நாட்களுக்கு விண்வெளியில் தங்குபவர்களுக்கு ஏற்படும்” என்கிறார் அவர். படக்குறிப்பு, "சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே அவர்களை விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க உதவும்" என்கிறார், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர். ஆறு மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர். (அதுவே பூமியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 0.5%-1% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.) இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான காலம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது. பூமிக்குத் திரும்பிய பின்னர் அவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம். அமெரிக்காவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ செப்டம்பர் 21, 2022இல், ஆறு மாத கால பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அவரால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக, 371 நாட்களை விண்வெளியில் கழித்த பிறகுதான் அவரால் பூமிக்குத் திரும்ப முடிந்தது. நீண்ட காலம் விண்வெளியில் தங்கியதால் அவரது உடலில் ஏற்பட்ட விளைவால், கேப்ஸ்யூலில் இருந்து மீட்புக் குழுவினரால் அவர் தூக்கிக்கொண்டு வரப்பட்டார். “சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே விண்வெளியில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும். இதற்காக அவர்களுக்கு அவ்வப்போது உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த சோதனைகள் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என்று சிவன் பிபிசி தமிழிடம் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn0lge5pyngo
  19. Britain Tamil MP: இனி Srilanka Govt மீது புதிய அணுகுமுறை இருக்குமா? Uma Kumaran Interview Uma Kumaran Interview: இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட உமா குமரன் சமீபத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அவர் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பிபிசியின் ஜெயபிரகாஷ் நல்லுசாமி உமா குமாரனுடன் உரையாடியள்ளார்.
  20. 25 AUG, 2024 | 06:09 PM சதாரணமான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை தரப்போகின்றார்களா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல் மட்டக்களப்பு செட்டிபாளையத்தி அமைந்துள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை(24) மாலை நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான விடயம் இப்போது படிப்படியாக சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழர்கள் பலவிதமாக சிந்தித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் பலவிதமான கேள்விகளையும் எங்களை நோக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த காலத்தில் 8 ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து இருக்கின்றோம். அது விருப்பமாக இருக்கலாம், விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், முதல் தடவையாக தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற சிந்தனையை 83 சிவில் சமூக கட்டமைப்புகள் கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை களத்தில் இறக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் இதனோடு தமிழ் தேசியக் கட்சிகள் ஏழு கட்சிகள் பயணிப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். இதேவேளை கட்சி அரசியலுக்கு அப்பால் இப்போது இலங்கை தமிழரசுக் கட்சி இன்னும் முடிவு சொல்லவில்லை. என்றாலும் யாரையும் எதிர்க்கின்ற தன்மையை அவர்கள் ஏற்படுத்தி கொள்ளவில்லை. யாரை ஆதரிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக முடிவெடுக்கவில்லையே தவிர யாரையும் எதிர்க்கச் சொல்லி அவர்கள் முடிவு சொல்லவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் பரப்புரைகள் நடைபெறுகின்றன என்றார். https://www.virakesari.lk/article/191956
  21. 25 AUG, 2024 | 06:02 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட பெரியகுளம் கனகராயனாற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளில் பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்போடு சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகராயன் ஆற்றினை அண்டிய பெரிய குளம் பகுதியிலும் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் சுமார் 25 அடி ஆழத்துக்கும் மேலாக அதிகளவில் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் தொடர்ந்து மணல் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை அளித்து வருகின்றனர். இந்த பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும் இதுவரை மணல் அகழ்வை கட்டுப்படுத்த பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிகளை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் ஆகியோர் இன்றைய தினம் (25) நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191954
  22. பட மூலாதாரம்,UGC AND AKKINENI NAGARJUNA/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா பதவி, பிபிசி செய்தியாளர் 41 நிமிடங்களுக்கு முன்னர் ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) ஹைதராபாத்தில் மடப்பூர் பகுதியில் உள்ள ‘என் கன்வென்ஷன்’ (N Convention Center) மையத்தை இடித்தது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை ஆறு மணியளவில், ஹைட்ரா முகமை, ஹைதராபாத் பெருநகர வளர்ச்சிக் கழகம்- ஜிஹெச்எம்சி, நீர் வடிகால், நகரத் திட்டமிடல், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ‘என் கன்வென்ஷன்’ மையத்தை அடைந்தனர். ‘என் கன்வென்ஷன்’ மையம் குளத்தில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி அதிகாரிகள் அதனை இடித்து அகற்றினர். இந்த பகுதி ஹைதராபாத் ஷில்பரம் எதிரே உள்ள சாலையில் உள்ளது. ‘என் கன்வென்ஷன்’ மையத்துக்கு சொந்தமான வளாகங்கள், விழாக் கூடம் மற்றும் இதர கட்டமைப்புகளும் இடிக்கப்பட்டன. இந்த பணி மதியம் வரை தொடர்ந்தது. இதையொட்டி காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மையத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு யாரும் வராதவாறு தடுத்துள்ளனர். ‘என் கன்வென்ஷன்’ மையம் இடிக்கப்பட்டதன் பின்னணி பட மூலாதாரம்,AKKINENI NAGARJUNA/FACEBOOK படக்குறிப்பு, நடிகர் நாகார்ஜுனா செரிலிங்கம்பள்ளி மண்டலம் கானாமேட் வருவாய் துறைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 29.6 ஏக்கர் பரப்பளவில் தம்மிடிகுண்டா குளம் அமைந்துள்ளது. ஆக்கிரமிப்புகளால் குளத்தின் பரப்பளவு சுருங்கிவிட்டதாக தெலுங்கானா நீர் வடிகால் துறை கூறுகிறது. இந்த குளத்தை ஒட்டி சர்வே எண் 11/2ல் சுமார் மூன்று ஏக்கர் பட்டா நிலத்தில் ‘என் கன்வென்ஷன்’ கட்டப்பட்டுள்ளது. இங்கு நிகழ்ச்சி வளாகம், அலுவலகம், வைர மண்டபம் உள்ளிட்ட சில கட்டமைப்புகள் உள்ளன. `என்’ கன்வென்ஷன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, இது N3 என்னும் நிறுவனத்தால் கட்டப்பட்டது. N3 எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனம் அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் நல்லா ப்ரீதம் ரெட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. இருவரும் கூட்டாக `என்` கன்வென்ஷன் மையத்தை நடத்துகிறார்கள். தம்மிடிகுண்டா குளத்தின் எஃப்டிஎல் (முழு நீர்த்தேக்க மட்டம்) மற்றும் இடையக மண்டலத்திற்குள் (buffer zone), நிரந்தரக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ‘என் கன்வென்ஷன்’ நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த சர்ச்சை நீண்ட நாட்களாக நீடித்தது. இதே விவகாரம் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஹைட்ரா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ‘என் கன்வென்ஷன்’ இடிக்கப்பட்ட காட்சி அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி கடிதம் தெலங்கானா ஒளிப்பதிவு, சாலைகள்-கட்டிடங்கள் துறை அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி ஆகஸ்ட் 21 அன்று ஹைட்ரா கமிஷனர் ஏ.வி.ரங்கநாத்துக்கு கடிதம் எழுதினார். "தம்மிடிகுண்டா குளம் எஃப்.டி.எல் மற்றும் பஃபர் மண்டலத்திற்குள் ‘என் கன்வென்ஷன்’ மையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்மிடிகுண்டாவின் கிழக்குப் பகுதியில் ‘என் கன்வென்ஷன்’ கட்டப்பட்டது. இந்த கட்டமைப்பு முழு நீர்த்தேக்க மட்டத்தின் கீழ் வருகிறது. குளத்தின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது." என்று அவர் கூறியிருந்தார். அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி தன் கடிதத்தில் குளம் மணலால் மூடப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி எஃப்டிஎல் வரைபடம் மற்றும் கூகுள் எர்த் வரைபடத்தை ஹைட்ரா கமிஷனருக்கு அனுப்பினார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஹைட்ரா அதிகாரிகள் சனிக்கிழமை காலை கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ‘என் கன்வென்ஷன்’ மைய அலுவலகம் தவிர மற்ற அனைத்து கட்டடங்களும் இடிக்கப்பட்டன. எஃப்டிஎல் (FTL), இடையக மண்டலம் என்றால் என்ன? படக்குறிப்பு, தெலங்கானா ஒளிப்பதிவு, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி ஆகஸ்ட் 21 அன்று ஹைட்ரா கமிஷனர் ஏவி ரங்கநாத்துக்கு கடிதம் எழுதினார் பொதுவாக ஒரு குளத்திற்கு தண்ணீர் சேமிக்கப்படும் பகுதி அல்லது தண்ணீர் பரவலாக நிற்கும் பகுதி `முழு நீர்த்தேக்க மட்டம்’ (Full Tank Level) எனப்படும். அதே போன்று குளத்தின் அளவைப் பொறுத்து சில மீட்டர்களுக்கு ஒரு இடையக மண்டலம் (buffer zone) அமைந்திருக்கும் . ஹைதராபாத் நகரத்தில் உள்ள சில குளங்களின் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலங்களில் பட்டா நிலங்களும் இருக்கும். தம்மிடிகுண்டா குளம் அருகே சில பட்டா நிலங்கள் உள்ளன. ‘என் கன்வென்ஷன்’ மையமும் அத்தகைய நிலத்தில் தான் அமைந்திருந்தது. இருப்பினும், குத்தகைக்கு விடப்பட்ட நிலமாக இருந்தாலும், நீர் மற்றும் வடிகால் துறை விதிகளின்படி, எப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தில் நிரந்தர கட்டமைப்புகளை கட்டக் கூடாது. குளம் இருக்கும் பகுதியில், தனியார் அல்லது பட்டா நிலமாக இருந்தாலும், விவசாயம் அல்லது நடவு மற்றும் நாற்றங்கால் அமைக்க மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. எந்த ஒரு கட்டமைப்பையும் நிரந்தரமாக அங்கு எழுப்பக் கூடாது. எவ்வாறாயினும், தம்மிடிகுண்டா குளம் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்திற்குள் `என்’ கன்வென்ஷன் என்ற பெயரில் நிரந்தர கட்டுமானங்களை உருவாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஹைட்ரா தற்போது இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த கால சர்ச்சைகள் ‘என் கன்வென்ஷன்’ மையம் தொடர்பான தகராறு பத்து ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2014-ல் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, குருகுல அறக்கட்டளை நிலங்களில் ஐயப்ப சொசைட்டி கட்டப்பட்டதாகக் கூறி அங்குள்ள சில கட்டிடங்களை அரசு இடித்தது. அதே நேரத்தில், "ஏரியின் முழு நீர்த்தேக்க பகுதியில் ‘என் கன்வென்ஷன்’ மையத்தின் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றும் புகார்கள் வந்தன. அதே ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தம்மிடிகுண்டா குளம் சுற்றுவட்டாரத்தில் எச்.எம்.டி.ஏ., நீர் வடிகால் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ‘என் கன்வென்ஷன்’ மையத்தின் சில கட்டமைப்புகள் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தின் கீழ் வரும் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டனர். இது தொடர்பாக அப்போது எல்லைகள் முடிவு செய்யப்பட்டன. எச்எம்டிஏ நடத்திய சர்வே நடவடிக்கை மீது ‘என் கன்வென்ஷன்’ மைய நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை அணுகியது. அதன் பிறகு அப்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹைட்ரா கமிஷனர் ரங்கநாத் கருத்து ஹைட்ரா கமிஷனர் ஏ.வி.ரங்கநாத் தம்மிடிகுண்டாவில் நடந்த இடிப்பு பணிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தம்மிடிகுண்டா எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தின் எல்லைகளுக்குள் ‘என் கன்வென்ஷன்’ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, அவற்றுக்கு அனுமதி இல்லை, என்றார். 2014 இல், எச்.எம்.டி.ஏ தம்மிடிகுண்டா குளம் தொடர்பாக எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தை அடையாளம் காணும் பூர்வாங்க அறிவிப்பை வெளியிட்டது. இறுதி அறிவிப்பு 2016ல் வெளியிடப்பட்டது. "2014 இல் முதற்கட்ட அறிவிப்பு வழங்கப்பட்ட பிறகு, `என்’ கன்வென்ஷன் மைய நிர்வாகம் தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியது. எஃப்டிஎல் நிர்ணயம் என்பது சட்டப்படி பின்பற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. அதன்படி, மீண்டும் ஒருமுறை அந்த ‘என் கன்வென்ஷன்’ மைய நிர்வாகத்தின் முன்னிலையில் குளத்தின் முழு நீர்த்தேக்க மட்டப் பகுதி அளவீடு நடத்தப்பட்டது. அந்த நிர்வாகத்திடம் ஆய்வு அறிக்கையும் கொடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், `என்’ கன்வென்ஷன் மையம் இந்த ஆய்வு அறிக்கை மீது மியாபூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியது. வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எங்கும் தடை ஆணை (ஸ்டே ஆர்டர்) கொடுக்கப்படவில்லை" என்றார் ரங்கநாத். "‘என் கன்வென்ஷன்’ நிர்வாகம் குளத்தின் எப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்திற்குள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், அங்கீகாரமற்ற கட்டுமானங்களை மேற்கொள்வதன் மூலமும் அரசு சட்டத்திட்டங்களை மீறப்பட்டுள்ளன." என்றார். "எஃப்டிஎல்லின் கீழ் 1.12 ஏக்கரிலும், இடையக மண்டலத்தில் 2.18 ஏக்கரிலும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அனுமதி வழங்கவில்லை. அதன் பிறகு, கட்டிட ஒழுங்குமுறை திட்டம்-பிஆர்எஸ் கீழ் `என்’ கன்வென்ஷன் நிர்வாகம் விண்ணப்பித்தது, ஆனால் அதிகாரிகள் அதை நிராகரித்தனர்," என்று ரங்கநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,UGC நாகார்ஜுனா என்ன சொன்னார்? "‘என் கன்வென்ஷன்’ மையத்தை இடிப்பது சட்டவிரோதமானது. இது வருத்தமளிக்கிறது." என்று திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தடை உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கு மாறாக,N-Convention தொடர்பான கட்டுமானங்களை இடிப்பது வேதனை அளிக்கிறது. இது ஒரு பட்டா நிலம். குளத்தின் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. ஒரு தனியார் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடம். இடிப்பதற்கு முன் வழங்கப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதை மீறி கட்டிடத்தை இடித்துள்ளனர். இது சட்டத்திற்கு எதிரானது" என்று நாகார்ஜுனா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். “எங்களுக்கு முன்னதாக எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது இப்படி செய்வது முறையல்ல. சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக, நீதிமன்றம் எனக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தால், நான் அதை ஏற்றிருப்பேன்”என்று நாகார்ஜுனா ட்வீட் செய்துள்ளார். இடிக்கும் பணிகளுக்கு தடை ஆணை ஒருபுறம், ‘என் கன்வென்ஷன்’ மையத்தில் கட்டடம் இடிக்கப்பட்டு வந்த நிலையில் மறுபுறம், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நாகார்ஜுனா சார்பில் ஹவுஸ் மோஷன் (house motion petition) மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி வினோத்குமார் அமர்வு, இடிக்கும் பணிகளை நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், இந்த உத்தரவுகள் வருவதற்குள் `என்’ கன்வென்ஷன் மையத்தில் இருந்த கட்டுமானங்கள் ஹைட்ரா அதிகாரிகளால் இடிக்கப்பட்டுவிட்டன. தம்மிடிகுண்டா கட்டடங்கள் இடிப்பு ஹைட்ரா அதிகாரிகள் தம்மிடிகுண்டாவின் கிழக்குப் பகுதியில் உள்ள என் மாநாட்டு மையத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வேறு சில கட்டுமானங்களையும் இடித்துத் தள்ளினார்கள். அந்த பகுதியில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன. வேறு சில தனியார் கட்டடங்களும் இருந்தன. அவை அத்தனையும் இடிக்கப்பட்டன. அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன? `என்’ கன்வென்ஷன் மையத்தை இடித்தது குறித்து தெலங்கானா துணை முதல்வர் பாட்டி விக்ரமார்கா செய்தியாளர்களிடம் பேசினார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை என்றும், குளங்களை பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார். “அவை முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டன என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் எனக்கு தெரிந்த வரையில் அரசு செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் நோட்டீஸ் கொடுத்து வருகிறார்கள். குளங்களில் நேரடியாக கட்டடங்கள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார். "2014ஆம் ஆண்டுக்கு முன் எத்தனை குளங்கள் இருந்தன, 2014ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி மூலம் வரைபடத்தை எடுத்து வருகிறோம், அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்" என்றார். மறுபுறம், "குளங்களை பாதுகாக்க அரசு ஹைட்ரா முகமை அமைத்துள்ளது என்றால், கடந்த பத்து ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்யப்பட்டு இடிக்கப் பட வேண்டும். அரசு நேர்மையாக செயல்படுகிறது எனில் குளங்களின் பாதுகாப்பு மண்டலங்களில் முந்தைய கணக்கெடுப்பின்படி ஏற்கனவே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருந்தால் இடித்து தள்ளப்பட வேண்டும்' என்றார் ரகுநந்தன ராவ். https://www.bbc.com/tamil/articles/clyn9j59z3jo
  23. முல்லைத்தீவில் பண்டார வன்னியனின் 221வது வெற்றிநாள் நினைவுகூரல் 25 AUG, 2024 | 06:40 PM முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 221ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவுகூரல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இ.ஜெகதீசன், தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஜீவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் மரியாதையும் செலுத்தியுள்ளனர். முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ஆம் ஆண்டு இதே திகதியில் போரிட்டு கைப்பற்றி, இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டாரவன்னியன் கைப்பற்றிய நாளாக இன்றைய நாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவுகூரல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191952

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.