Everything posted by ஏராளன்
-
உத்தேச உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமா? - இடைக்கால செயலகப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்
Published By: VISHNU 28 AUG, 2024 | 02:05 AM (நா.தனுஜா) உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுமா எனவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடு உள்ளதா எனவும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்துள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (26) கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இடைக்கால செயலகத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச மற்றும் கொள்கைப்பிரிவுத்தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா ஆகியோர் உள்ளடங்கலாக அறுவர் கலந்துகொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் அதன் பணிகள் குறித்து இடைக்கால செயலகத்தின் பிரதிநிதிகள் அமெரிக்கத்தூதுவருக்கு எடுத்துரைத்தனர். அதனை செவிமடுத்த தூதுவர் ஜுலி சங், இலங்கையில் கடந்த காலங்களில் நிறுவப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு முற்படல், வட, கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அப்பகுதி மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார். அவற்றுக்குப் பதிலளித்த இடைக்கால செயலகப் பிரதிநிதிகள் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வரையறுக்கப்பட்ட அளவிலான ஆணை குறித்தும், அவை சார்ந்து தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளித்தனர். அதேவேளை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்திருக்கும் காலப்பகுதி மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இடைக்கால செயலக அதிகாரிகள், எவ்வாறெனினும் தேர்தல் முடிவடைந்ததன் பின்னரே அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இருப்பினும் அது நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடு குறித்து தம்மால் உறுதியாக எதனையும் கூறமுடியாது எனவும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/192172
-
தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்!
27 AUG, 2024 | 09:23 PM (இராஜதுரை ஹஷான்) மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குருணாகல் - கல்கமுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கட்சி என்ற ரீதியில் நாங்கள் நாட்டுக்கு அபிவிருத்தி செய்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நகரத்தை அபிவிருத்தி செய்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையை நாங்கள் செயற்படுத்தினோம். மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. பிறிதொரு தரப்பினர் இராணுவத்தையும் கேலிக்கூத்தாக்கினார்கள். விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். இதனை பற்றி எந்த நாடும் பேசுவதில்லை. நாங்கள் மனிதாபிமான கண்காணிப்புக்களை முன்னெடுத்தோம். தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது அரசாங்கத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம். இராணுவத்தினர் இந்த நாட்டுக்கு செய்த சேவையை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர்களுக்கான புதிய நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்போம். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரு தரப்பினரது தவறான ஆலோசனைகளுக்கமைய விவசாயத்துறையில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தால் இரண்டு போக விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய கொள்கையையே நான் செயற்படுத்துவேன். இறக்குமதி செய்து உணவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. தேசிய உற்பத்திகளை சகல வழிகளிலும் மேம்படுத்த விசேட கொள்கை திட்டங்களை செயற்படுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/192152
-
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
உருவக் கேலியை கடந்து உலக அரங்கில் சாதிக்கும் தமிழக வீராங்கனை - பாராலிம்பிக்கில் சாதிப்பாரா? பட மூலாதாரம்,@07NITHYASRE/X படக்குறிப்பு, பாராலிம்பிக் 2024 போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 27 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “உருவத்தில் சிறிதாக இருப்பது குறையல்ல, பெரிய கனவுகள் காணாமல் இருப்பதும், அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் இருப்பதுமே மிகப்பெரிய குறை” என்று கூறுகிறார் 19 வயதான, பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சிவன். தமிழ்நாட்டின் ஓசூரைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவன், பாரிஸில் நடைபெறும் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக களமிறங்கவுள்ளார். ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை, பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் 2024இல், மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள் என 4,400 வீரர்/வீராங்கனைகள், 549 பதக்கங்களுக்காக 22 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். அதில் பாரா பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார் தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ சிவன். ‘11 வயது முதல் பேட்மிண்டனில் ஆர்வம்’ தனது 11வது வயதில் (2016) பேட்மிண்டன் விளையாடத் தொடங்கிய நித்ய ஸ்ரீ, மாற்றுத்திறனாளிகளுக்கென பாரா போட்டிகள் இருப்பதை 2019இல் தான் தெரிந்துகொண்டார். பாரிஸ் நகரில், நாளை (28 ஆகஸ்ட்) தொடங்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளுக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நித்ய ஸ்ரீ தொலைபேசி மூலமாக பிபிசி தமிழிடம் பேசினார். “அப்பாவும், அண்ணனும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்கள். ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டுமென அப்பா என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பார்த்தபோது, எனக்கான விளையாட்டு பேட்மிண்டன்தான் என்பதை முடிவு செய்தேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ. உள்ளூரில் ஒரு பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் இணைந்து விளையாடத் தொடங்கியவர், முதலில் இதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்த்துள்ளார். “அப்பாவின் நண்பர் ஒருவர் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர். அவர் தான் எனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, பாரா போட்டிகள் குறித்து எடுத்துக் கூறினார். அதுவரை பொழுதுபோக்காக மட்டுமே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நான், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, 2019ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் நித்ய ஸ்ரீ தங்கம் வென்றார். “பின்னர் வேறு சில மாநில அளவிலான போட்டிகள், அதைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகள் என கலந்துகொள்ளத் தொடங்கினேன். அப்போது தான் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவின் அறிமுகம் கிடைத்தது” என்கிறார் நித்ய ஸ்ரீ. பட மூலாதாரம்,@07NITHYASRE/X படக்குறிப்பு, தனது பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவுடன் நித்ய ஸ்ரீ ‘அதிகம் பேசாத, திறமையான ஒரு வீராங்கனை’ உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது ‘கௌரவ் கண்ணா பேட்மிண்டன் அகாடெமி’. இதை நடத்துபவர் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா. இந்தியாவில் பாரா பேட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களில் முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். இவருக்கு, 2020இல் துரோணாச்சார்யா விருதும் (விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான விருது), 2024இல் பத்ம ஸ்ரீ விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது. “முதன்முதலில் நித்ய ஸ்ரீ பேட்மிண்டன் விளையாடியதைப் பார்த்தபோது, யாரிடமும் அதிகம் பேசாத, ஆனால் மிகவும் திறமையான ஒரு வீராங்கனை என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது திறமைக்காகத் தான் இங்கு பேட்மிண்டன் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அளித்தோம்” என்று பிபிசியிடம் கூறினார் கௌரவ் கண்ணா. பஹ்ரைனில், 2021இல் நடைபெற்ற ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டி தான் நித்ய ஸ்ரீ கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டி. “அப்போது நித்ய ஸ்ரீ மிகவும் பதற்றமாக இருந்தார். ஆனால் எங்களுக்கு அவர் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. அது வீண் போகவும் இல்லை” என்கிறார் கௌரவ் கண்ணா. பட மூலாதாரம்,@07NITHYASRE/X பஹ்ரைனில் நடைபெற்ற போட்டிகளில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தார் நித்ய ஸ்ரீ. அதன் பிறகு 2022இல் ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ‘உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில்’ பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என் மூன்று பிரிவுகளிலும் வெண்கலப் பதக்கம் வென்றார் நித்ய ஸ்ரீ. “2022 ஆசிய பாரா போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றது, அதே ஆண்டு பெருவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலம் என அவரது வெற்றி தொடர்ந்தது” என்று கூறுகிறார் கௌரவ் கண்ணா. நித்ய ஸ்ரீயின் உயரம் மற்றும் உடலமைப்பு காரணமாக, மற்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளோடு ஒப்பிடுகையில் அவருக்கு சில கூடுதல் சவால்கள் உள்ளன என்கிறார் அவர். “அவர் கடந்த சில மாதங்களாக கடும் முதுகு வலியால் அவதிப்படுகிறார். இருந்தும் ஒருநாள் கூட பயிற்சியைத் தவறவிட்டதில்லை. அவருக்கென பிரத்யேக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.” என்கிறார் கௌரவ் கண்ணா. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு பட மூலாதாரம்,@07NITHYASRE/X படக்குறிப்பு, ஆசிய பாரா போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பிறகு, நித்ய ஸ்ரீயைப் பாராட்டிய பிரதமர் மோதி கடந்த ஜூலை மாதம், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியிருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 7 லட்சம் வீதம், 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார். பிருத்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கி சுடுதல்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்), நித்ய ஸ்ரீ சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் சிவரஞ்சன் சோலைமலை (பாரா பேட்மிண்டன்) ஆகியோரே அந்த 5 பேர். “மத்திய மற்றும் மாநில அரசுகள் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. முதல்முறையாக நித்ய ஸ்ரீ பாராலிம்பிற்கு தகுதி பெற்றுள்ளார். அவர் நிச்சயம் தங்கம் வெல்வார்” என்கிறார் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா. பட மூலாதாரம்,@UDHAYSTALIN படக்குறிப்பு, நித்ய ஸ்ரீக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ‘உருவக் கேலிகளில் இருந்து மீண்டுவர உதவிய விளையாட்டு’ பட மூலாதாரம்,@07NITHYASRE/X “உருவக் கேலிகள் என்பது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. எனது பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துவிட்டார்களே என வருத்தம் இருந்தது. அதிலிருந்து அவர்களைத் திசைதிருப்பதான் விளையாட்டில் கவனம் செலுத்த ஊக்குவித்தேன்” எனக் கூறுகிறார் நித்ய ஸ்ரீயின் தந்தை சிவன். தொடர்ந்து பேசிய அவர், “நித்ய ஸ்ரீ பிறந்த சில மாதங்களில் எனது மனைவி இறந்துவிட்டாள். பாட்டியின் அரவணைப்பில் தான் அவள் வளர்ந்தாள். பேட்மிண்டன் போட்டிகளில் அவளது திறமையைப் பார்த்துவிட்டு பயிற்சியாளர் கௌரவ் கண்ணன் லக்னோ வரச் சொன்னபோது, உறவினர்கள் பலரும் அனுப்ப வேண்டாம் என்று சொன்னார்கள்” என்கிறார் சிவன். அடுத்தடுத்து நித்ய ஸ்ரீ பெற்ற வெற்றிகளால், எதிர்ப்பு தெரிவித்த உறவினர்களே பாராட்டியதாகவும் கூறுகிறார் அவர். உருவக் கேலிகள், அவமானங்கள் மட்டுமல்லாது, உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு உடல்ரீதியாகவும் பல சவால்கள் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான், நித்ய ஸ்ரீ இந்த உயரத்தை அடைந்திருப்பதாகக் கூறுகிறார் சிவன். “பாராலிம்பிக் போட்டிகளில் இப்போது பல நாடுகள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளன. போட்டிகள் கடுமையாக உள்ளன. தங்கம் வெல்ல வேண்டும் என்பதைத் தாண்டி, இறுதிவரை போராட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். சிறுவயது முதலே நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடமும் அதுதான்” என்று கூறிவிட்டு தனது பேட்மிண்டன் பயிற்சியைத் தொடரச் சென்றார் நித்ய ஸ்ரீ சிவன். பாரிஸ் நகரில், ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களில் நித்ய ஸ்ரீ கலந்துகொள்ளும் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெறவுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் மட்டுமல்லாது, கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சிவரஞ்சன் சோலைமலையுடனும் களமிறங்கவுள்ளார் நித்ய ஸ்ரீ. https://www.bbc.com/tamil/articles/c1l5z4z5p2yo
-
யாழ்ப்பாணம் உட்பட இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கப்போகும் சூரியன் : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அதிகரிக்கும் வெப்பநிலை; தோல் நோய்கள் ஏற்படலாம் - வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை Published By: DIGITAL DESK 3 28 AUG, 2024 | 09:17 AM நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளியினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் குழந்தைகளிடையே தோல் நோய் பிரச்சினைகள் மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படுவதோடு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும். எனவே, அதிக சூரிய ஒளி படும் இடங்களில் இருப்பதை தவிர்ப்பதோடு, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். மேலும், செயற்கையான குளிர் பானங்களை அருந்துவதை தவிர்த்து இயற்கையான தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவற்றை பருக வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ப்பாட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வதால் இன்று (28) முதல் செப்டெம்பர் 06 ம் திகதி வரையில் சூரியன் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. அதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவன்கோட்டை மற்றும் சுண்டிக்குளம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும். இந்த நிகழ்வுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களே காரணம் என வளிமண்டலவியல் ஆய்வுத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192189
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
மோகன்லால் ராஜினாமா: மலையாள சினிமாவை உலுக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி ஹிந்திக்காக 27 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரே அறிக்கை ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் உலுக்கியுள்ளது. மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த அறிக்கை எதிரொலியாக, ஆகஸ்ட் 27ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் விலகியுள்ளார். அவர் மட்டுமின்றி, அந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண் கலைஞர்கள் வைத்திருப்பதால், சங்கத்தின் செயற்குழுவை கலைக்க வேண்டும் என்ற முடிவு அன்றைய தினம் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 2024ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், சில மாதங்களிலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2017ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் அடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது 'பல தீவிரமான புகார்கள் எழலாம்' கடந்த 48 மணி நேரத்தில், மலையாள திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பலரும் 2009ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் அதில் ஈடுபட்ட ஆண்கள் பெயர்களையும் பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே காவல்துறையினரிடம், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியுள்ளார். கேரள அரசு சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் நான்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள், பெண் கலைஞர்களிடம் இருந்து புகார்களை பெறுவார்கள். ஆனால் அவர்களால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இயலாது. பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது ஒரு நடிகை குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். அதே நேரத்தில் கேரளா ஃபிலிம் அகாடமியின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி அந்த நடிகை கொச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறையாக புகார் அளித்தார். பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிபிசி ஹிந்தியிடம் பேசிய நடிகை மாலா பார்வதி, "முன் வந்து புகார் அளித்த நபர்கள் குறைவாகவே இருக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான பிரச்னைகள் நிச்சயமாக வெளிவரும். இப்போது பொது வெளியில் பேசியவர்கள் நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணையின் போது ஆஜராகவில்லை," என்று தெரிவித்தார். கேரள அரசு உத்தரவின் பெயரில் நீதிபதி ஹேமா கமிட்டி 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 'வுமென் இன் சினிமா கலெக்டிவ்' என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. பிரபலமான நடிகை ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு இந்த நிகழ்வுகள் அரங்கேறின. இந்த விவகாரத்தில் முதன்மையாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரான நடிகர் திலீப் தற்போது பிணையில் வெளியே உள்ளார். நான்கரை ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கையை வெளியிட்டது கேரளா அரசு. அனைத்து புகார்களும் முறையாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அரசு தானாக விசாரிக்காது என்று கூறிய நிலையில், இரண்டு புகார்கள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்ட பிறகு மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புக்காட்சி புகாரில் இடம் பெற்றிருப்பது என்ன? சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் இடம் பெற்றுள்ள விவகாரங்கள் ஏற்கனவே நீதிபதி ஹேமா கமிட்டியில் இடம் பெற்றுள்ளது. தங்களுக்கு நடந்த பிரச்னைகள் குறித்து புகாரில் குறிப்பிட்டுள்ள பெண்கள், தொடர்ச்சியாக அவர்கள் எவ்வாறு 'சமரசம்' செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் என்று மேற்கோள்காட்டியிருந்தனர். அதற்கு கைமாறாக, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நடிகை பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கழிவறையில் இருந்து வெளியே வந்த என்னை பிரபல நடிகர் ஒருவர் பின்னால் இருந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். என்னுடைய அனுமதி இல்லாமல் இது நடந்தது," என்று குற்றம் சாட்டினார். "அவரை தள்ளிவிட்டு நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். திருவனந்தபுரத்தில் அவருக்கு வீடு ஒன்று இருக்கிறது. அங்கே அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மற்றொரு பிரபல நடிகர் ஒருவர், நான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கதவை திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர் என்னை காண அங்கே வருவார் என்றும் கூறிக் கொண்டிருந்தார்," என கூறினார். "நிச்சயமாக அது முடியவே முடியாது என்று நான் தெளிவாக கூறினேன். ஆனால் அவர், உங்களுக்காக நான் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன் அதனால் இதனை செய்ய வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் படபிடிப்பின் போது தேவையில்லாமல் என்னிடம் கத்திக் கொண்டிருந்தார். இதே போன்று நடிகரும் எம்.எல்.ஏவுமான ஒருவரும் என்னிடம் கூறினார். எனக்கு இந்த கலை பிடிக்கும் என்பதால்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் நான் அவர்களின் பிடியில் மாட்டிக் கொள்ளவில்லை," என்று கூறினார். '''அம்மா' அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதில் உறுப்பினராகவே நான் 'சமரசம்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.'' என அவர் கூறினார். ''தயாரிப்பு மேற்பார்வையாளர் ஒருவர் காரில் வைத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். 2013ம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டிருந்தேன். ஆனால் யார் மீதும் விசாரணை நடத்தப்படவில்லை'' என்றும் அந்த நடிகை தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் புகைப்படம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடு என்ன? புகார்களுக்கு உள்ளான சில நடிகர்கள், இயக்குநர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் இதுவரை வெளியாகவில்லை. அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றினால், இந்த செய்தித் தொகுப்பில் சேர்க்கப்படும். அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார்கள் அனைத்தும் 2008ம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை நடைபெற்றது. கீதா விஜயன், ஶ்ரீதேவிகா போன்ற நடிகைகள் பிரபல இயக்குநர் ஒருவர் நள்ளிரவில் அவர்களின் அறைக் கதைவை தட்டியதாக புகார் அளித்துள்ளனர். ஶ்ரீதேவிகா நான்கு நாட்கள் இந்த தொந்தரவை எதிர்கொள்ள நேரிட்டது. கீதா விஜயன் இது தொடர்பாக புகார் அளிக்க தயாராக உள்ளார். அந்த இயக்குநர் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விதமான பதிலும் இதுவரை வழங்கவில்லை. அவர் இது தொடர்பாக பேசினால் இந்த செய்தி தொகுப்பில் பின்னர் இணைக்கப்படும். பெண் கதை ஆசிரியர் ஒருவர் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். 2022ம் ஆண்டு கொல்லத்தில் ஒரு திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தைக்காக சென்ற போது இயக்குநர் - நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் புகார் அளித்தார். அந்த இயக்குநர் - நடிகர் மன்னிப்பு கேட்டார் எனவும் மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என்பதற்காக உதவியாளர் மூலம் ரூ. 10 ஆயிரம் கொடுக்க முயன்றார் எனவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் பின், அந்த கதை ஆசிரியர் திரைப்படத் துறையை விட்டே வெளியேறினார். ஒரு நடிகை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக நடிகர் சித்திக் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகினார். காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ள சித்திக், அந்த நடிகை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குற்றம் சாட்டினார். 2016ம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவதை சித்திக் மறுத்துள்ளார் "அந்த நடிகை பெற்றோர்களுடன்தான் என்னை சந்தித்தார். எட்டறை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் அவரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை," என்று சித்திக் குறிப்பிட்டார். நடிகர் சங்கம் மற்றும் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர் என்று சித்திக் கூறினார். ஆரம்பத்தில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முரணாக தற்போது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டார் சித்திக். நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் புகைப்படம் சட்டம் கூறுவது என்ன? இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சியினரை விமர்சித்து வருகின்றனர். அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிட்ட காரணத்திற்காக மக்களும் ஆளும் கட்சியை விமர்சிக்கின்றனர். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான நடிகைகள் புகார் அளிக்க முன்வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. வேறு விதமாக கூற வேண்டும் என்றால், மாநில அரசு நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளாது. "பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கவில்லை என்றால், அரசாங்கம் எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஒரு குற்றம் நடந்திருக்கும் பட்சத்தில் அரசு தாமாக நடவடிக்கை எடுக்க இயலுமா? இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் பேசி வருகிறோம்," என்று கேரளாவை சேர்ந்த, பெயர் கூற விரும்பாத, அமைச்சர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். நீதிபதி ஹேமா கமிட்டியிடம் குற்றம் சாட்டியுள்ள நபர்களையும் விசாரிக்க வேண்டும் என்று சிலர் தங்களின் வாதத்தை முன்வைக்கின்றனர். கமிட்டிக்கு முன்பு ஆஜராகும் போது பெண்கள் தங்களுக்கு நடந்த வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அவர்களிடம் வழங்கியுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று மாலா பார்வதி கூறியுள்ளார். கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்தியா ராஜூ, பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "ஒரு குற்றம் நடைபெறும் போது, இது அரசுக்கு எதிரான குற்றமாக இருக்கிறது. விசாரணை முகமைகள் தாமாக முன்வந்து விசாரித்து நீதிமன்ற வழக்கு தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களே வந்து குற்றம் சுமத்தினால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை," என்று குறிப்பிட்டார். ஒரு குற்ற வழக்கு வரும் போது, மாநில அரசு ஒரு முக்கியமான வாதியாக மாறுகிறது. இது போன்ற சூழலில் அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் சந்தியா கூறுகிறார். இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கேரள உயர் நீதிமன்றம் முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய 54 பக்கங்களையும் இணைத்து இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். திரைத்துறை மட்டுமின்றி, கட்டுமான துறை, கார்ப்பரேட் துறை, சட்டத்துறை உள்ளிட்ட இதர துறைகளிலும் இதன் தாக்கத்தை காண இயலும், என்று சந்தியா கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c14zvd4k6e6o
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் புதிய அட்டவணை! 27 AUG, 2024 | 12:19 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 9ஆவது மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடம் மாற்றப்பட்டதை அடுத்து புதிய போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்ற அரசியல் கொந்தளிப்பு காரணமாக அங்கு நடைபெறவிருந்த ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றுவதற்கு ஐசிசி கடந்த 20ஆம் திகதி தீர்மானித்து அதற்கான அறிவிப்பையும் விடுத்திருந்தது. பத்து நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிகள் துபாய சர்வதேச விளையாட்டரங்கிலும் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கிலும் நடைபெறும். ஆறு தடவைகள் உலக சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 2009இல் நடைபெற்ற அங்குராரப்பண ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இங்கிலாந்து, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா, 2016 உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பி குழுவில் இடம்பெறுகின்றன. ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானை ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் அக்டோபர் 3ஆம் திகதி சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும். தொடர்ந்து 5ஆம் திகதி இரவு நடைபெறவுள்ள போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாயை இலங்கை எதிர்த்தாடும். இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் அக்டோபர் 9ஆம் திகதி இரவு நடைபெறும். இலங்கை தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை ஷார்ஜா விளையாட்டரங்கில் சந்திக்கும். இப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். 18 தினங்கள் நீடிக்கும் ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறும். ஏ, பி ஆகிய இரண்டு குழுக்களில் தலா 10 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு அந்த இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். இரண்டு குழுக்களிலும் முதலாம் இடங்களைப் பெறும் அணிகள், இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகளை அரை இறுதுகளில் சந்திக்கும். அக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை லீக் போட்டிகளும் அக்டோபர் 17ஆம், 18ஆம் திகதிகளில் அரை இறுதிப் போட்டிகளும் அக்டோபர் 20ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறும். முதலாவது அரை இறுதிப் போட்டியும் ஐசிசி மகளிர் ரி20 உலக கிண்ண சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியும் துபாய் சர்வதேச விளையாட்டரங்கிலும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கிலும் நடைபெறும். இந்தியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றால் அவ்வணி முதலாவது அரை இறுதியில் விளையாடும். 10 நாடுகள் சம்பந்தப்பட்ட 10 பயிற்சிப் போட்டிகள் செவன்ஸ் விளையாட்டரங்கிலும் ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக மைதானத்திலும் செப்டெம்பர் 28ஆம் திகதியிலிருந்து அக்டோபர் 1ஆம் திகதிவரை நடைபெறும். இப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள போதிலும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையுடன் பங்காளியாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையே ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் உரிமைத்துவத்தைக் கொண்டிருக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/192110
-
யாழ்ப்பாணம் உட்பட இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கப்போகும் சூரியன் : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சூரியன் தெற்கு நோக்கி நகர்வதால் ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரையான பத்து நாட்களுக்கு இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (28). நெடுந்தீவு, பூநகரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் ஆகிய இடங்களில் நண்பகல் 12:11 மணியளவில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும். தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கவும் இந்த சூரிய ஒளியில் தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கவும், வெப்பநிலையின் அதிகரிப்பை ஈடு செய்யும் வகையில் அடிக்கடி ஏராளமான திரவங்களை குடிக்கவும் சுகாதார நிபுணர்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். "சூரிய வெளிச்சம் அதிகமாக வெளிப்படுவது சிலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், எனவே அனைவரும் சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பது நல்லது" என்று நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார். https://ibctamil.com/article/sun-directly-over-sri-lanka-for-10-days-1724768676
-
நாசா விண்வெளி வீரர் பகிர்ந்த அரிய புகைப்படம்
நாசா விண்வெளி வீரர மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பகிரும் புகைப்படங்கள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பசிபிக் மீது நிலவு அமைவதை காட்டுகிறது. இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “ஹவாய் அருகே வெப்பமண்டல புயல் ஹோனை படமெடுக்க குபோலாவுக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் புயலைக் கடந்த உடனேயே சந்திரன் அஸ்தமிக்கத் தொடங்கியது” என்று விளக்கினார்.மேலும், டொமினிக் புகைப்படத்தைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களையும் அளித்தார், “400mm, ISO 500, 1/20000s ஷட்டர் வேகம், f2.8, க்ராப்ட், டெனோயிஸ்டு” என்று குறிப்பிட்டார். இந்த புகைப்படம், பகிரப்பட்டதிலிருந்து 6.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 7,400 லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. பலரும் இந்த இடுகைக்கு பதிலளித்துள்ளனர். சிலர் இந்த படத்தை “நம்பமுடியாதது” என்றனர். எக்ஸ் பயனர் ஒருவர், “இது மனதைக் கவருகிறது” என்றார். மற்றொருவர் “இந்த புகைப்படம் என் இதயத்தை தொட்டது” என்று பதிலளித்தார். https://thinakkural.lk/article/308471
-
ஏ9 வீதியில் கோர விபத்து: இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் பலி
கிளிநொச்சி (Kilinochchi) - A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று (2.8.2024) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது. இதன்போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதி கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். https://ibctamil.com/article/men-death-road-accident-in-a9-road-kilinochchi-1724732956
-
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
பாரிஸ் 2024 பராலிம்பிக்கில் சாதிக்கும் குறிக்கோளுடன் 8 இலங்கை மாற்றுத்திறனாளிகள் Published By: VISHNU 26 AUG, 2024 | 08:17 PM (நெவில் அன்தனி) டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு உட்பட 8 மாற்றுத் திறனாளிகள் இலங்கை தாய்திருநாட்டுக்கு புகழீட்டிக்கொடுக்கும் குறிக்கோளுடன் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளனர். ஜப்பானின் கோபே பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற நுவன் இந்திக்க கமகே, சமித்த துலான் கொடிதுவக்கு, பாலித்த பண்டார பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா புதன்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதி நிறைவடையவுள்ளது. டோக்கியோ 2020 பராலிம்பிக் F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் (65.61 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் ஜப்பானில் இந்த வருடம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் (66.49 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்த சமித்த துலான் கொடிதுவக்கு பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக பங்குபற்றுகிறார். ஜப்பானின் கோபே நகரில் உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக சமித்த துலான் தெரிவித்தார். 'நான்கு வருடங்களுக்கு முன்னர் பராலிம்பிக்கில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் வென்றுகொடுத்தையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது பாரிஸ் பராலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளேன். அதற்காக நான் கடந்த பல மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன். உலக பராமெய்வல்லுநர் போட்டியில் சாதித்தது போன்று பாரிஸிலும் சாதித்து இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுப்பேன்' என்றார் அவர். கோபே நகரில் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவுக்கான குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற பாலித்த பண்டார, ரி44 வகைப்படுத்தல் பிரிவுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திக்க கமகே (11.83 செக்.) ஆகியோரும் இலங்கை பராலிம்பிக் அணியில் இடம்பெறுகின்றனர். இவர்கள் மூவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்றெடுப்பார்கள் என பெரிதும் நம்பப்படுகிறது. பெண்களுக்கான வு44 வகைப்படுத்தல் பிரிவு நீளம் பாய்தலில் ஜனனி தனஞ்சன பங்குபற்றுகிறார். அவர் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 5.08 மீற்றர் தூரம் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரப் பெறுதியைப் பதிவு செய்திருந்தார். இந்த நால்வரைவிட ஆண்களுக்கான வு46 வகைப்படுத்தல் பிரிவு 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் ப்ரதீப் சோமசிறி, வு42ஃ63 வகைப்படுத்தல் பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் ப்ரசன்ன ஜயலத், பெண்களுக்கான ளு9 வகைப்படுத்தல் பிரிவு 400 மீற்றர் சுயாதீன நீச்சல் போட்டியில் நவீத் ரஹீம், ஆண்களுக்கான சக்கர இருக்கை ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் சுரேஷ் தர்மசேன ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். பராலிம்பிக் வரலாற்றில் 2012இலிருந்து 2020வரை இலங்கை ஒரு தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கு46 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனையுடன் தினேஷ் ப்ரியன்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார். ரியோ டி ஜெனெய்ரோ 2026 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இதே நிகழ்ச்சியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு இம்முறை பராலிம்பிக்கில் பங்குபற்ற முடியாமல் போனது. அவருக்கு ஏற்பட்ட காய வடு முற்றாக நீங்கியுள்ளதால் எதிர்காலத்தில் பரா மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற உலக பரா மெய்வல்லுநர் சங்கம் தடைவிதித்துள்ளது. அவரை விட ப்ரதீப் சஞ்சய (வெண்கலம் - லண்டன் 2012 பராலிம்பிக்), சமித்த துலான் கொடிதுவக்கு (வெண்கலம் - டோக்கியோ 2020 பராலிம்பிக்) ஆகியோரே பராலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மற்றைய இரண்டு இலங்கையர்களாவர். https://www.virakesari.lk/article/192073
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
தியாகதீபம் நினைவிடத்தில் தமிழ் பொது வேட்பாளர் அஞ்சலி ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு கட்டமாக இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் இருக்கும் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருத்தார். இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/308459
-
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் : தேர்தல் ஆணையம் நாளை கூடுகிறது Published By: VISHNU 27 AUG, 2024 | 08:09 PM உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு 28ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதித்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/192168
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
மலையாள திரையுலகை ஓர் அறிக்கை உலுக்கியது எப்படி? தொடர்ந்து புகார் கூறும் நடிகைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2017ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் அடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஓர் அறிக்கை மலையாள சினிமா துறையை உலுக்கியுள்ளது. அதற்கு காரணம், மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது. பாலியல் இன்னல்களுக்கு ஆளான பெண்கள் திரையுலகில் இருந்து வெளியேறிய நிகழ்வும் இங்கே அரங்கேறியுள்ளது. தற்போது பெண் நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக புகார்களை முன்வைத்துள்ளனர். இதனையே நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையும் உறுதி செய்திருந்தது. அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, பாதுகாப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களும், அவர்கள் குற்றம் சுமத்திய ஆண்களின் பெயர்களும் அடங்கிய பகுதிகள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. 'பல தீவிரமான புகார்கள் எழலாம்' கடந்த 48 மணி நேரத்தில், மலையாள திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பலரும் 2009ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் அதில் ஈடுபட்ட ஆண்கள் பெயர்களையும் பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே காவல்துறையினரிடம், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியுள்ளார். கேரள அரசு சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் நான்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள், பெண் கலைஞர்களிடம் இருந்து புகார்களை பெறுவார்கள். ஆனால் அவர்களால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இயலாது. பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது ஒரு நடிகை குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். அதே நேரத்தில் கேரளா ஃபிலிம் அகாடமியின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி அந்த நடிகை கொச்சின் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறையாக புகார் அளித்தார். பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிபிசி ஹிந்தியிடம் பேசிய நடிகை மாலா பார்வதி, "முன் வந்து புகார் அளித்த நபர்கள் குறைவாகவே இருக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான பிரச்னைகள் நிச்சயமாக வெளிவரும். இப்போது பொது வெளியில் பேசியவர்கள் நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணையின் போது ஆஜராகவில்லை," என்று தெரிவித்தார். கேரள அரசு உத்தரவின் பெயரில் நீதிபதி ஹேமா கமிட்டி 2017ம் ஆண்டு உருவாக்கபப்ட்டது. 'வுமென் இன் சினிமா கலெக்டிவ்' என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. பிரபலமான நடிகை ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு இந்த நிகழ்வுகள் அரங்கேறின. இந்த விவகாரத்தில் முதன்மையாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரான நடிகர் திலீப் தற்போது பிணையில் வெளியே உள்ளார். நான்கரை ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கையை வெளியிட்டது கேரளா அரசு. அனைத்து புகார்களும் முறையாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அரசு தானாக விசாரிக்காது என்று கூறிய நிலையில், இரண்டு புகார்கள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்ட பிறகு மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புக்காட்சி புகாரில் இடம் பெற்றிருப்பது என்ன? சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் இடம் பெற்றுள்ள விவகாரங்கள் ஏற்கனவே நீதிபதி ஹேமா கமிட்டியில் இடம் பெற்றுள்ளது. தங்களுக்கு நடந்த பிரச்னைகள் குறித்து புகாரில் குறிப்பிட்டுள்ள பெண்கள், தொடர்ச்சியாக அவர்கள் எவ்வாறு 'சமரசம்' செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் என்று மேற்கோள்காட்டியிருந்தனர். அதற்கு கைமாறாக, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நடிகை பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கழிவறையில் இருந்து வெளியே வந்த என்னை பிரபல நடிகர் ஒருவர் பின்னால் இருந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். என்னுடைய அனுமதி இல்லாமல் இது நடந்தது," என்று குற்றம் சாட்டினார். "அவரை தள்ளிவிட்டு நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். திருவனந்தபுரத்தில் அவருக்கு வீடு ஒன்று இருக்கிறது. அங்கே அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மற்றொரு பிரபல நடிகர் ஒருவர், நான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கதவை திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர் என்னை காண அங்கே வருவார் என்றும் கூறிக் கொண்டிருந்தார்," என கூறினார். "நிச்சயமாக அது முடியவே முடியாது என்று நான் தெளிவாக கூறினேன். ஆனால் அவர், உங்களுக்காக நான் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன் அதனால் இதனை செய்ய வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் படபிடிப்பின் போது தேவையில்லாமல் என்னிடம் கத்திக் கொண்டிருந்தார். இதே போன்று நடிகரும் எம்.எல்.ஏவுமான ஒருவரும் என்னிடம் கூறினார். எனக்கு இந்த கலை பிடிக்கும் என்பதால்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் நான் அவர்களின் பிடியில் மாட்டிக் கொள்ளவில்லை," என்று கூறினார். '''அம்மா' அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதில் உறுப்பினராகவே நான் 'சமரசம்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.'' என அவர் கூறினார். தயாரிப்பு மேற்பார்வையாளர் ஒருவர் காரில் வைத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். 2013ம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டிருந்தேன். ஆனால் யார் மீதும் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அந்த நடிகை தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புக்காட்சி குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடு என்ன? அந்த அறிக்கையில் இடம் பெற்ற நடிகர்கள், இயக்குநர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் இதுவரை வெளியாகவில்லை. அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றினால், இந்த செய்தித் தொகுப்பில் சேர்க்கப்படும். அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார்கள் அனைத்தும் 2008ம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை நடைபெற்றது. கீதா விஜயன், ஶ்ரீதேவிகா போன்ற நடிகைகள் பிரபல இயக்குநர் ஒருவர் நள்ளிரவில் அவர்களின் அறைக் கதைவை தட்டியதாக புகார் அளித்துள்ளனர். ஶ்ரீதேவிகா நான்கு நாட்கள் இந்த தொந்தரவை எதிர்கொள்ள நேரிட்டது. கீதா விஜயன் இது தொடர்பாக புகார் அளிக்க தயாராக உள்ளார். அந்த இயக்குநர் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விதமான பதிலும் இதுவரை வழங்கவில்லை. அவர் இது தொடர்பாக பேசினால் இந்த செய்தி தொகுப்பில் பின்னர் இணைக்கப்படும். பெண் கதை ஆசிரியர் ஒருவர் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். 2022ம் ஆண்டு கொல்லத்தில் ஒரு திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தைக்காக சென்ற போது இயக்குநர் - நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் புகார் அளித்தார். அந்த இயக்குநர் - நடிகர் மன்னிப்பு கேட்டார் எனவும் மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என்பதற்காக உதவியாளர் மூலம் ரூ. 10 ஆயிரம் கொடுக்க முயன்றார் எனவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் பின், அந்த கதை ஆசிரியர் திரைப்படத் துறையை விட்டே வெளியேறினார். ஒரு நடிகை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக நடிகர் சித்திக் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளார் பொறுப்பில் இருந்து சித்திக் விலகினார். காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ள சித்திக், அந்த நடிகை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குற்றம் சாட்டினார். 2016ம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவதை சித்திக் மறுத்துள்ளார் "அந்த நடிகை பெற்றோர்களுடன்தான் என்னை சந்தித்தார். எட்டறை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் அவரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை," என்று சித்திக் குறிப்பிட்டார். நடிகர் சங்கம் மற்றும் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர் என்று சித்திக் கூறினார். ஆரம்பத்தில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முரணாக தற்போது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டார் சித்திக். நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புக்காட்சி சட்டம் கூறுவது என்ன? இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சியினரை விமர்சித்து வருகின்றனர். அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிட்ட காரணத்திற்காக மக்களும் ஆளும் கட்சியை விமர்சிக்கின்றனர். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான நடிகைகள் புகார் அளிக்க முன்வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. வேறு விதமாக கூற வேண்டும் என்றால், மாநில அரசு நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளாது. "பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கவில்லை என்றால், அரசாங்கம் எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஒரு குற்றம் நடந்திருக்கும் பட்சத்தில் அரசு தாமாக நடவடிக்கை எடுக்க இயலுமா? இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் பேசி வருகிறோம்," என்று கேரளாவை சேர்ந்த, பெயர் கூற விரும்பாத, அமைச்சர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். நீதிபதி ஹேமா கமிட்டியிடம் குற்றம் சாட்டியுள்ள நபர்களையும் விசாரிக்க வேண்டும் என்று சிலர் தங்களின் வாதத்தை முன்வைக்கின்றனர். கமிட்டிக்கு முன்பு ஆஜராகும் போது இதே பெண்கள் தங்களுக்கு நடந்த வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அவர்களிடம் வழங்கியுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று மாலா பார்வதி கூறியுள்ளார். கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்தியா ராஜூ, பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "ஒரு குற்றம் நடைபெறும் போது, இது அரசுக்கு எதிரான குற்றமாக இருக்கிறது. விசாரணை முகமைகள் தாமாக முன்வந்து விசாரித்து நீதிமன்ற வழக்கு தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களே வந்து குற்றம் சுமத்தினால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை," என்று குறிப்பிட்டார். ஒரு குற்ற வழக்கு வரும் போது, மாநில அரசு ஒரு முக்கியமான வாதியாக மாறுகிறது. இது போன்ற சூழலில் அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் சந்தியா கூறுகிறார். இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கேரள உயர் நீதிமன்றம் முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய 54 பக்கங்களையும் இணைத்து இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். திரைத்துறை மட்டுமின்றி, கட்டுமான துறை, கார்ப்பரேட் துறை, சட்டத்துறை உள்ளிட்ட இதர துறைகளிலும் இதன் தாக்கத்தை காண இயலும், என்று சந்தியா கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c14zvd4k6e6o
-
அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
தேர்தல் வாறதால வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டிப்போட்டாங்களோ?!
-
சென்னை எண்ணூரில் நள்ளிரவில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு; மூச்சுத் திணறலால் தப்பியோடிய மக்கள் - என்ன நடந்தது?
சென்னை: அமோனியா கசிந்த ஆலையை மீண்டும் திறக்க பல கோடி ரூபாய் கைமாறியதா? திமுக எம்.எல்.ஏ. பதில் படக்குறிப்பு, 2023, டிசம்பர் 26 அன்று எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 ஆகஸ்ட் 2024, 07:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் என்று கூறி கடந்த வாரம் எங்கள் கிராமத்தில் ஆளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தனர். 'உயிரின் விலை 10 ஆயிரம் தானா?' எனக் கேட்டு அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன்" என்கிறார் எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரவேல். கடந்த ஆண்டு, டிசம்பர் 26-ஆம் தேதியன்று சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி மக்களைப் போராட்டத்துக்கு திரட்டி, ஒருங்கிணைத்ததில் குமரவேல் முக்கியமானவர். கடந்த மே 21ஆம் தேதி நிபந்தனைகளுடன் கோரமண்டல் ஆலையை திறப்பதற்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆலையை திறக்கும் போது மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு காட்டக் கூடாது என்பதற்காக, கடந்த வாரம் நான்கு மீனவ கிராமங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் பின்னணி என்ன? என்ன நடந்தது? கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக குற்றச்சாட்டு கோரமண்டல் ஆலைக்கு அருகில் உள்ள தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் ஆகிய கிராமங்களில் பணம் வழங்கப்பட்டதாக 'தி நியூஸ் மினிட்' இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆலை நிர்வாகத்துக்கும் மீனவ கிராமங்களுக்கும் இடையே திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ.வான கே.பி.சங்கர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததாகவும் 'தி நியூஸ் மினிட்' இணைய இதழ் கூறுகிறது. "ஆலையை மீண்டும் திறப்பதில் மக்களுக்கு விருப்பம் இல்லை. பணம் வாங்குவதற்கு என்னிடம் கையெழுத்து கேட்டனர். நான் கையொப்பமிட மறுத்துவிட்டேன். திருவொற்றியூர் எம்.எல்.ஏ தரப்பில் இருந்துதான் இந்த வேலைகளைச் செய்கின்றனர்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரவேல். படக்குறிப்பு, குமரவேல், நெட்டுக்குப்பம் மீனவ கிராமம் கடந்த வாரம் ஆலைக்கு அருகில் உள்ள மீனவ கிராமங்களில் கிராம நிர்வாகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் ஒன்று கூடி கைகளில் ஒரு தாளை வைத்துக் கொண்டு அனைவரிடமும் கையெழுத்து வாங்கியதாக குறிப்பிடுகிறார், எண்ணூர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அன்புசெழியன். அந்த தாளில், ‘ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை, தன்னார்வ குழுக்கள் போராட வந்தால் அவர்களை விரட்டியடிப்போம்; காவல்துறையில் புகார் கொடுப்போம்’ என எழுதப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார். "இதன் பின்னர் மீனவ கிராமங்களின் ஒருவருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியுள்ளது. இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மீனவ மக்களில் வெகு சிலரை தவிர பலரும் ஆதாயம் அடைந்துவிட்டதால், ஆலையின் முன்பு இனி போராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்கிறார் அன்புசெழியன். படக்குறிப்பு, அன்புசெழியன், எண்ணூர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரையில் கோரமண்டல் ஆலைக்கு எதிராக மீனவ மக்கள் போராடி வந்தனர். அப்போது, 'நாங்கள் வெற்றி பெற்றால் ஆலையை மூடுவோம்' என தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார், அன்புசெழியன். "போராட்ட நாட்களில் நாங்களே உணவு சமைத்து சாப்பிட்டோம். பின்னர், 'நான் உணவு ஏற்பாடு செய்கிறேன்' என எம்.எல்.ஏ சங்கர் கூறினார். மூன்று நாள்களுக்குப் பிறகு, 'எனக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி வருகிறது. உதவி செய்ய முடியாது' என்றார். பின்னர், எங்களுக்கான தேவைகளை நாங்களே கவனித்துக் கொண்டோம்" என்கிறார் அன்புசெழியன். ஆனால் தற்போது திடீரென ஆலை திறக்கப்பட்டுவிட்டதாகவும் இதன் பின்னணியில் நடக்கும் பண விநியோகத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ சங்கருக்கு தொடர்பிருப்பதாகவும் அன்புசெழியன் குற்றம் சுமத்துகிறார். தி.மு.க எம்.எல்.ஏ கூறுவது என்ன? படக்குறிப்பு, கே.பி.சங்கர், திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ "எனக்கு எதிராக சில அரசியல் கட்சிகள் பரப்பும் அவதூறுகளில் இதுவும் ஒன்று" என்கிறார், திருவொற்றியூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான கே.பி.சங்கர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை நான் செய்து கொடுத்தேன். அதன்பிறகு வணிகர் சங்கங்கள் உதவி செய்தன. மக்களிடம் ஓட்டு தான் கேட்க முடியும். பணம் கிடைத்ததா என்று கேட்க முடியாது" என்கிறார். கோரமண்டல் ஆலை நிர்வாகம் கூறியது என்ன? "இவை அடிப்படை ஆதாரமற்றவை. உண்மைக்குப் புறம்பானவை" என்று கோரமண்டல் நிறுவனம் கூறியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி எங்களது எண்ணூர் ஆலையில் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அந்த பணிகளை தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் முறைப்படி பெறப்பட்டுள்ளன. எங்கள் நிறுவனத்தின் பெயரை தொடர்புபடுத்தி சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றமை, உண்மைக்குப் புறம்பானவை. எங்கள் நிறுவனம் எப்போதுமே மிக உயர்ந்த நிர்வாக தரத்தை பின்பற்றி வருகிறது. தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கோரிக்கை 'இந்த விவகாரத்தில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்த வேண்டும்' என கூட்டு அறிக்கை ஒன்றை ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரி பரந்தாமன், கண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதில், பின்னணி பாடகர் டி.எம்.கிருஷ்ணா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். பின்னணி என்ன? படக்குறிப்பு,கடந்த வருடம், அமோனியா வாயுவைக் கையாள்வதில் ஆலை நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஒவ்வோர் ஆண்டும் சுனாமி நினைவு நாளில் மீனவ மக்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதில்லை. சுனாமியால் உயிரிழந்த தங்களின் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைதியாக பொழுதைக் கழிப்பது வழக்கம். அவ்வாறு அமைதியாக இருந்தவர்களை பெரிதும் துயரப்படுத்திய நிகழ்வாக, கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அமைந்தது. அன்று நள்ளிரவு 1 மணியளவில் எண்ணூரில் கோரமண்டல் உர ஆலையில் அமோனியா வாயுவை கொண்டு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆலையைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அமோனியா வாயுவை கையாள்வதில் ஆலை நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த விவகாரத்தை தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அமோனியா வாயு கசிவு குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.பி.சி.எல் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படுவதாக, தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா வாயுவை எடுத்துச் சென்றதே கசிவுக்கு காரணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. அதேநேரம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரமண்டல் நிறுவனம் எடுக்கத் தவறி விட்டிருந்ததாகவும் குறிப்பிட்டது. ஆலை தரப்பில், 1996ஆம் ஆண்டு முதல் ஆலை இயங்கி வந்தாலும் இதுவரையில் விபத்து ஏற்பட்டதில்லை எனவும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 35 தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மே 21ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நிபுணர் குழு சார்பில் ஆய்வு செய்து உரிய அனுமதி பெற்ற பின்னர் கோரமண்டல் உர தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதாக உத்தரவிட்டனர். https://www.bbc.com/tamil/articles/cjw3y9nvp4wo
-
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைக்க தனியார் நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி
Published By: DIGITAL DESK 3 27 AUG, 2024 | 01:02 PM கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச்செய்வதற்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் அனுசரணையுடன் வீதிக்கட்டமைப்பு அபிவிருத்திக்கருத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் மூலம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி வீதியின் குறிஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச்செய்வதற்கான ஒப்பந்தத்தை தனியாக கட்டம் தனியான கடித உறை முறைமையின் கீழ் விலைமுறிகோரப்பட்டது. அதற்காக, 09 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றன. அதற்கிணங்க,அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந் துரைக்கமைய,விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள விலைமனுதாரரான கன்ஸ்ரக்ஷன் (தனியார்) கம்பனிக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/192116
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
8 இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 27 AUG, 2024 | 02:15 PM மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவ் ஆண்டு இதுவரையான காலத்தில் 46 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 341 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/192120
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடிய @நந்தன் அண்ணைக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
-
அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!
ஓய்வூதியர்களுக்கும் கொஞ்சம் கூட்டலாமே?
-
தமிழர் பகுதியொன்றில் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம்
ஓமண்ணை கொஞ்சம் தெளிவாக சொல்ல சாரதிக்கு சிங்களம் தெரியவில்லையோ?!
-
மோதி திறந்து வைத்த சிவாஜி சிலை ஓராண்டிற்குள்ளாக கீழே விழுந்தது ஏன்?
படக்குறிப்பு, மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலையை மோதி திறந்து வைத்தார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து உடைந்துள்ளது. 2023ம் ஆண்டு இந்திய கடற்படை தினமான டிசம்பர் 4ம் தேதி அன்று இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த சிலையை கடற்படையினர் தான் அமைத்தனர் என்றும், காற்றின் காரணமாக அது கீழே விழுந்தது உடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கூடிய விரைவில் அங்கே புதிய சிலை திறக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். கடற்படை தினத்தில் வீர வணக்கத்தின் நினைவுச் சின்னமாக இந்த சிலை அங்கே அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் விமர்சனம் மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வனில் அமைந்திருக்கும் ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டது. எதனால் இந்த சிலை கீழே விழுந்தது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் தெளிவாகவில்லை. சிலை கீழே விழுந்தவுடன், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி பிரிவு எம்.எல்.ஏ. வைபவ் நாய்க் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் தனது கோபத்தை வைபவ் வெளிப்படுத்தியுள்ளார். ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் படேலோ, அரசு தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். "இது மிகவும் தீவிரமான விவகாரம். சிலையை நிறுவும் போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோதியின் கையால் சிலையை திறக்க வேண்டும் என்பதில் மட்டுமே ஆளும் கட்சியினர் ஆர்வம் செலுத்தினர் ," என்று படேல் குற்றம் சாட்டினார். ஆனால், தரமற்ற பணிக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,X/SUPRIYASULE படக்குறிப்பு, ஒரு வருடத்திற்குள்ளாகவே உடைந்து விழுந்த சிலையால் எதிர்க்கட்சியினர் அதிருப்தி சுப்ரியா சுலே விமர்சனம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராமதி தொகுதி எம்.பி. சுப்ரியா சுலே தனது எக்ஸ் பக்கத்தில் மகாராஷ்டிரா மாநில அரசை விமர்சனம் செய்துள்ளார். "பிரதமர் ஒருவரின் கையால் ஒரு கட்டடத்தையோ, ஒரு நினைவுச் சின்னத்தையோ திறந்து வைக்கும் போது, அதன் தரம் சிறப்பானதாக இருக்கும் என்று மக்கள் நம்புவார்கள். ஆனால் ராஜ்கோட்டில் நிறுவப்பட்ட சிலையானது வெறும் ஓராண்டிற்குள்ளாகவே கீழே விழுந்துள்ளது. இது சத்ரபதி சிவாஜிக்கு நேரிட்ட அவமானம்," என்று சுலே விமர்சித்துள்ளார். சுலே மேலும், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி அன்று இந்த சிலையை சிறந்து வைத்தார். ஆனால் இந்த சிலை ஓராண்டிற்குள் நொறுங்கி விழுந்துள்ளது. இது மக்கள் மீதும், நரேந்திர மோதி மீதும் நடத்தப்பட்ட மோசடி. ஒரு முழுமையான விசாரணை நடத்தி, இந்த சிலையை வடிவமைக்கும் பணி ஏன் இவ்வளவு தரமற்றதாக இருந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும்," என்றும் அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் சிவாஜி மகாராஜாவை ஒரு கடவுளைப் போல் நினைக்கின்றோம். அவர் சிலை விழுந்து நொறுங்கியது துரதிர்ஷ்டவசமானது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/SUPRIYASULE படக்குறிப்பு, சுப்ரியா சுலேவின் எக்ஸ் தள பதிவு மகாராஷ்டிர முதல்வர் விளக்கம் சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியதும், பி.டி.ஐ. செய்தி முகமையிடம் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "நாங்கள் சிவாஜியோடு உணர்வுகளால் பிணைக்கப்பட்டுள்ளோம். கடவுளைப் போன்று அவரை நாங்கள் வணங்கி வருகிறோம். இந்த சிலையை நரேந்திர மோதி திறந்து வைத்தார். ஆனால் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இந்த சிலை கடற்படையினரால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டது. இது கீழே விழுந்தது துரதிர்ஷ்டவசமானது," என்று கூறினார். "நான் அந்த மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினேன். மிக விரைவில் நாங்கள் புதிய சிலையை நிறுவுவோம்," என்றும் அவர் தெரிவித்தார். பொறுப்பு அமைச்சர் ரவிந்திர சவான் அங்கே சென்று நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் ஷிண்டே தெரிவித்தார். "கூடிய விரைவில் கடற்படையை சேர்ந்த அலுவலர்கள் இந்த விவகாரம் தொடர்பாக எங்களை சந்திக்க உள்ளனர். விரைவில் புதிய சிலை எழுப்பப்படும்" என்று அவர் மீண்டும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cd734wvgzz8o
-
அனுரகுமார இலகுவாக வெற்றிபெறுவார் - இராஜதந்திர வட்டாரங்களிற்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தில் தெரிவிப்பு என தகவல் - மறுக்கின்றது இந்திய தூதரகம்
Published By: RAJEEBAN 27 AUG, 2024 | 11:00 AM கொழும்பிலுள்ள தூதரங்களிற்கு இடையிலான தொடர்பாடல்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அமோக வெற்றிபெறுவார் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை இந்திய தூதரகம் அவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. பல வழிமுறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்புகள் அனுரகுமாரதிசநாயக்க இலகுவான வெற்றியை பெறுவார் என தெரிவித்துள்ளமை இராஜதந்திர மட்ட தொடர்பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக ஊடக தகவலொன்று தெரிவித்துள்ளது. தேர்தல் இடம்பெறுவதற்கு 30 நாட்களிற்கு முன்னராக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அனுரகுமாரவின் அதிகரித்து வரும் ஆதரவை வெளிப்படுத்தும் பல குறிகாட்டிகள் காணப்படுவதாகவும் சமூக ஊடக தகவல் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் நிலைமை மாற்றமடைந்துள்ளது அவரே முன்னணியில்காணப்படுகின்றார். கருத்துக்கணிப்பு முடிவுகள் அவர் ஏனைய வேட்பாளரை விட முன்னணியில் காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளன என இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியிலான தொடர்பாடல்கள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்ட சமூக ஊடக தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவர் கணிசமான முன்னிலையில் இருப்பதற்கான முக்கியமான குறிகாட்டியாக இது பார்க்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி இன் ஒட்டுமொத்த ஆதரவுத் தளத்தில் ஒரு நிலையான அதிகரிப்பை கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது. இந்த வளர்ச்சியானது அனுரகுமார திசநாயக்க தலைமை மற்றும் கொள்கைகள் மீதான வலுவான வாக்காளர் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் கட்சியின் வேகத்திற்கு பங்களிக்கிறதுஎன குறிப்பிட்ட சமூக ஊடக தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக ஐக்கிய மக்கள் சக்திக்கான க்கான ஆதரவு குறைவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பல ஐக்கிய மக்கள் சக்திஉறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு விசுவாசத்தை வெளியிட்டுள்ளஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது. இந்த போக்கு ஐக்கிய மக்கள் சக்தி யின் எண்ணிக்கையை பலவீனப்படுத்தியது மற்றும் முக்கிய உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி க்கு திரும்பியது தேர்தல் நிலப்பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் வாய்ப்புகளை குறைப்பது மட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் இயக்கவியலுக்கு மூலோபாய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் எங்களை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் இவ்வாறான தகவல்கள் பரவுவதை நாங்கள் அவதானித்துள்ளோம் எனினும் இது ஆதரமற்றது உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192097
-
தமிழர் பகுதியொன்றில் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம்
தமிழர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா (Vavuniya) - மன்னார் (Mannar) வீதியில் நேற்று (26.08.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வைத்தியர் வண்டியில் இருந்து குதித்த நிலையில், அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் (Nelukkulam) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வண்டியிலிருந்து குதித்த வைத்தியர் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர். குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளர் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியை மறித்து ஏறியுள்ளார். குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார். சாரதி மீது தாக்குதல் இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களும் நோயாளர் காவு வண்டியையும் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை இந்நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு சென்று நோயாளர் காவு வண்டியை விடுவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/female-doctor-jumps-from-moving-ambulance-1724726551
-
இருளில் மூழ்கியது உக்ரைன்: இரு நாடுகள் இடையே மீண்டும் போர் தீவிரம்
ஒரே நாளில் யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் ரஷ்ய போர் விமானங்கள், டிரோன்கள் தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராபர்ட் கிரீனால் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது நாளாக மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை தொடர்கிறது. ரஷ்ய விமானம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது குறித்து செவ்வாய்கிழமை அதிகாலை யுக்ரேனிய அதிகாரிகள் வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளை வெளியிட்டனர். ரஷ்யா போர் விமானங்களைக் கொண்டு மட்டுமின்றி பெரி யஅளவில் டிரோன்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதும் பதிவாகியுள்ளது. இதனால், யுக்ரேனின் வான் பாதுகாப்புப் படைகள், அந்நாடு முழுவதும் ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில், நீண்ட தூர வான் மற்றும் கடலில் இருந்து துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் மூலம் யுக்ரேனில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்புகளை தாக்கியதாக கூறியுள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதல்களால், யுக்ரேனில் ஒரே இரவில் குறைந்தது 6 பேர் இறந்தனர். யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதால் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். யுக்ரேனில் மின்சார உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால் பல நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவின் தாக்குதல்களை "அட்டூழியமானது" என்று விமர்சித்துள்ளார். யுக்ரேனின் எரிசக்தி பாதுகாப்பை அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். "சிவில் உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் கோழைத்தனமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் இது" என்று பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி கண்டனம் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் யுக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள க்ரிவி ரிஹில் நகரத்தில் திங்கள்கிழமை பிற்பகுதியில் ரஷ்ய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலரை காணவில்லை. ஜபோரிஷியா பிராந்திய நிர்வாகத் தலைவர் இவான் ஃபெடரோவ், ஜபோரிஷியா நகரில் ஒரு ஆண் கொல்லப்பட்டதாகவும் 2 பேர் காயமடைந்ததாகவும் கூறினார். இந்த சம்பவத்தில் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார். பல ஹைப்பர்சோனிக் கின்சால் (டாகர்) பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை இடைமறித்து தாக்கி அழிப்பது என்பது யுக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புக்கு கடினமான ஒன்றாக உள்ளது. அந்நாட்டின் கர்ஸ்க் பிராந்தியத்தின் ஒரு பகுதியை யுக்ரேன் சமீபத்தில் கைப்பற்றிய பிறகு, இந்த போர் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சியாகவே இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸெலென்ஸ்கி, யுக்ரேன் அதிபர் அமெரிக்காவுக்கு யுக்ரேன் வேண்டுகோள் பிப்ரவரி 2022 இல் தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பின் ஆரம்பத்தில் இருந்தே யுக்ரேனின் ஆற்றல் உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைத்து வருகிறது. சமீப மாதங்களில், யுக்ரேனிய மின்சார உள் கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா புதுப்பித்துள்ளது, இதனால் யுக்ரேன் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்தப் போரில் யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்யும் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நட்பு நாடுகள், அந்த ஆயுதங்களை பயன்படுத்த விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் உள் பகுதியில் தாக்குவதற்கு அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை. ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க சில மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த யுக்ரேன் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்த மேற்கத்திய நாடுகள் அனுமதிக்கவில்லை. ஐரோப்பிய விமானப்படைகள் யுக்ரேனின் வான் பாதுகாப்புடன் இணைந்து செயல்பட்டால், "உயிர்களைப் பாதுகாக்க நாம் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும்" என்று ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c75nvy2wq37o
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
அண்ணை 27/06/24தற்போதைய நிலை.