Everything posted by ஏராளன்
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; ஈரான் அதிகாரிகள் மீது சந்தேகம்! ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது முதல் இஸ்ரேல் உளவுப் படையான மொசாட், ஹமாஸ் முக்கியபுள்ளிகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 31-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஈரான் ராணுவத்தின் உயர் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (ஐஆர்ஜிசி) கட்டுப்பாட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹனியா தங்கினார். அவர் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் ஹனியா உயிரிழந்தார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் படையான மொசாத் இருக்கிறது. மொசாத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஈரானின் ஐஆர்ஜிசி படையின் அதிகாரிகள், வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனின் டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “இஸ்மாயில் ஹனியா அடிக்கடி தங்கும் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையின் 3 அறைகளில் முன்கூட்டியே வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டன. இந்த வெடிகுண்டுகளை ஈரானின் ஐஆர்ஜிசி படையை சேர்ந்த 2 அதிகாரிகள் மறைத்து வைத்தனர். இவர்கள் மொசாட்டின் ஏஜெண்டுகள் ஆவர். குறிப்பிட்ட அறையில் ஹனியா தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன” என தெரிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியா கொலையில் ஐஆர்ஜிசி படையினருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஈரான் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் ஐஆர்ஜிசி படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரான் ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் இஸ்ரேலின் மொசாத் ஏஜெண்டுகள் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/307333
-
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்கான வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை
சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி விகிதத்தை திருத்த தீர்வு அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு - சியம்பலாபிட்டிய 05 AUG, 2024 | 04:35 PM சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானம், அவர்களின் ஓய்வு காலத்தின்போது வழங்கப்படும் பணிக்கொடை அல்லது வங்கி வைப்புத்தொகை போன்றவற்றில் பெறப்படும் நிலையான வட்டியே என்று குறிப்பிட்டார். கடந்த காலங்களில் நாட்டில் வங்கி வட்டி வீதத்தை குறைக்குமாறு கடன் பெற்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதற்கமைய வங்கி வட்டி வீதமும் பொதுவாக கடன் வட்டி வீதத்தை குறைக்கும்போது குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டபோது அரசாங்கம் குறிப்பிட்ட சதவீத வட்டியை சேர்த்து சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, ஒருபுறம், வங்கிகளுக்கு 88 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. மறுபுறம், கிட்டத்தட்ட 15 லட்சம் கணக்கு வைத்திருப்பவர்கள் வட்டி விகிதத்தைக் குறைப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இப்பிரச்சினைக்கு திறைசேரி வழங்கக்கூடிய பதில் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் சாதகமான பதில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/190335
-
விசேட தேவையுடையோருக்கான வாய்ப்புகள் அனைத்துமே சீரழிந்துவிட்டன : சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா!
05 AUG, 2024 | 03:57 PM எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது தானாக இடம்பெற்ற ஒன்றல்ல. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பிறப்பித்த ஒன்றாகும். அதைப்போலவே இந்த நாட்டில் இருக்கின்ற பதினாறு இலட்சம் வலதுகுறைந்தவர்களில் எவருமே இந்த வங்குரோத்துநிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களல்ல என சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா தெரிவித்தார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 03 ஆம் திகதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இன்றளவில் பலர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தாலும் கூருணர்வுமிக்க ஒருவராக ஜனாதிபதி பதவிக்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராக அநுர குமார திசாநாயக்க மாத்திரமே இருக்கிறார். எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது தானாக இடம்பெற்ற ஒன்றல்ல. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பிறப்பித்த ஒன்றாகும். அதைப்போலவே இந்த நாட்டில் இருக்கின்ற பதினாறு இலட்சம் வலதுகுறைந்தவர்களில் எவருமே இந்த வங்குரோத்துநிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களல்ல. எனினும் பொருளாதார சீரழிவினால் மூச்செடுக்க இயலாதநிலைக்கு ஆளாகியவர்கள் வலதுகுறைந்தவர்கள் அனைவருமேயாவர். எமது உழைப்பினை விற்க நாங்கள் தயார். அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். வலதுகுறைந்தவர்கள் அத்தகைய இயலாமைநிலையை வெற்றிகண்டு சமூகமயமாகத் தயார். இற்றைவரை சுயதொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வலதுகுறைந்தோருக்கு நிலவிய வாய்ப்புகள் அனைத்துமே அற்றுப்போய்விட்டன. குறைந்தபட்சம் ஊதுபத்தியைக்கூட தயாரித்து விற்கமுடியவில்லை. இந்த நிலைமையை மாற்றியமைத்துக்கொள்ள இன்று வெளியிடுகின்ற தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமென்ற தீவிர நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/190310
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
பொது வேட்பாளர் யார்?; இன்று முடிவாகும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன், அரியநேத்திரன், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து வவுனியாவில் இன்று கூடி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/307317
-
யாழில் குற்றச் செயலை மேற்கொள்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!
Published By: DIGITAL DESK 7 05 AUG, 2024 | 05:23 PM யாழில் குற்றச்செயலினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன இன்று திங்கட்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/190349
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/307383
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலில் கத்திகுத்து தாக்குதல் - இருவர் பலி Published By: RAJEEBANvvv05 AUG, 2024 | 03:51 PM இஸ்ரேலின் ஹொலொன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குகரையை சேர்ந்த நபர் ஒருவரே இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 66வயது யூத பெண் ஒருவரும் 80 வயது ஆணும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நான் எனது நாயுடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை நபர் ஒருவர் ஒடிவந்து முதுகில் கத்தியால் குத்தினார் என காயமடைந்த 26 வயது நபர் தெரிவித்துள்ளார். நான் பேருந்து தரிப்பிடத்தை நோக்கி தப்பிச்சென்றேன் கத்திக்குத்திற்கு மேலும் பலர் இலக்கானது அதன் பின்னரே எனக்கு தெரியவந்தது என அந்த நபர் தெரிவித்துள்ளார். ஹெலொனில் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை இஸ்ரேலிய பிரதமர் அமைச்சரவை கூட்டத்தில் உறுதி செய்துள்ளார். https://www.virakesari.lk/article/190338
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
பதவியை இராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா 05 AUG, 2024 | 02:58 PM பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/190330
-
இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
எவ்வேளையிலும் இஸ்ரேல் மீது ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா 05 AUG, 2024 | 01:27 PM அடுத்த 24 முதல் 48 மணித்தியாலங்களிற்குள் ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் அந்த அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களிடம் பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை தாக்குதல் இடம்பெறலாம் என பிளிங்கென் தனது சகாக்களிடம் தெரிவித்துள்ளார். ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என பிளிங்கென் வலியுறுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/190319
-
ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே - அனந்தி சசிதரன்
Published By: VISHNU 05 AUG, 2024 | 05:55 PM நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (4) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற வகையில் கடந்த மாதம் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து இருந்தேன். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் கேட்டுக் கொண்டேன். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் நான் சந்தித்திருந்தேன். நான் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துகின்றேன். தற்பொழுது ஈழத் தமிழர் சிவாஜி கழகத்தினுடைய செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகின்றேன். ஒரு மரியாதையின் நிமித்தமே நான் ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்கின்றேன். அந்த சந்திப்பில், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அவருடைய நிலைப்பாடு என்ன? அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான தீர்வுகள் என்ன என்பது தொடர்பாக கேட்டுத் தெரிந்து கொள்கின்ற நிலையில் இந்த சந்திப்பை மேற்கொண்டேன். இந்த சந்திப்பானது இரகசியம் அல்ல. பரகசியமான சந்திப்பு தான். அந்த வகையில் நான், தொடர்ந்தும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களையும் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாடுகள் என்ன என்பதை அறிந்து மக்களுக்கு சொல்வதில் நான் தயாராக இருக்கின்றேன். https://www.virakesari.lk/article/190362
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2024, 09:24 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசீனா எங்கே? வங்கதேச பிரதமர் ராஜினாமா - எங்கே சென்றார்? வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்பதை அங்குள்ள பிபிசி செய்தியாளர் உறுதி செய்துள்ளார். நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாவதை உணர்ந்த அவர், தனது சகோதரியுடன் வங்கதேசத்தை விட்டே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா செய்தி வெளியிட்டிருந்தது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியதாக தகவல் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதரண சூழல் எதிரொலியாக நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் உள்ள ஹிண்டர் விமானப்படை தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. ஹசீனா இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க தீர்மானித்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் நாட்டிற்கு செல்லப் போகிறாரா என்பதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர் லண்டன் செல்லப் போவதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. பிரதமர் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் வங்கதேசத்தையே உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன. சில வீடியோக்களில், பிரதமர் இல்லத்தில் இருந்து நாற்காலிகள், சோஃபா போன்றவற்றை போராட்டக்காரர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் உள்ளன. வங்கதேச வன்முறையில் இருந்து தப்பி வந்த தமிழக மாணவியின் நேரடி அனுபவம் என்ன? வங்கதேசம்: மாணவர் போராட்டத்தில் வன்முறை - புகைப்படங்கள் கூறும் உண்மைகள் வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடையும் மாணவர் போராட்டம் - என்ன நடக்கிறது? வங்கதேசம்: மாணவர் போராட்டத்தின் போது நிகழ்ந்த கொடூரம் -அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் பட மூலாதாரம்,CHANNEL 24 பட மூலாதாரம்,CHANNEL 24 இடைக்கால அரசு - ராணுவ தளபதி வங்கதேசத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையிநிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். குடியரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வங்கதேசத்தில் அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு யார் தலைமையேற்பார் என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை. வங்கதேசத்தின் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்ய ராணுவ தளபதி உறுதியளித்தார். அங்கே, கடந்த சில வாரங்களாக நீடிக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். படக்குறிப்பு,வங்கதேச ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான் ஷேக் ஹசீனா இந்தியா வந்தது ஏன்? வங்கதேசத்தில் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பாதுகாப்பு தேடி இந்தியா செல்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே, வங்கதேசத்திற்கு இந்தியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே பலன் பெற்றுள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசம் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் நட்பான அரசு அமைவது இந்தியாவுக்கு பலன் தரும் ஒன்று. ஷேக் ஹசீனா தனது ஆட்சிக் காலத்தில், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராளிக் குழுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதிகார மட்டத்தில் நட்பை பலப்படுத்தினார். வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து பொருட்களை வங்கதேசம் வழியாக எடுத்துச் செல்ல அவர் அனுமதி கொடுத்தார். பட மூலாதாரம்,EPA ஷேக் ஹசீனா 1996-ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக தேர்வான போதே இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா - வங்கதேசம் இடையே நெருக்கமான உறவு நிலவ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்துள்ளார். 2022-ஆம் அண்டு இந்தியாவுக்கு வருகை தந்த போது, இந்தியா, இந்திய அரசு, இந்திய மக்கள் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றியதை அவர் நினைவுகூர்ந்தார். இந்தியாவுடன் ஷேக் ஹசீனாவுக்கு இருந்த நெருக்கமான உறவு, அவரை இந்தியா ஆதரித்தது ஆகியவை வங்கதேச எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தியா, வங்கதேச மக்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கக் கூடாது என்பது அவர்களது நிலைப்பாடு. போராட்டங்கள் மீண்டும் வெடித்தது எப்படி? வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சியின் தவறான அரசியல் நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கியது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ஹசீனா தற்போதைய ஒதுக்கீட்டு சீர்திருத்த முறையைக் குறிப்பிட்டு, அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பிட்டார். கடந்த காலக்கட்டத்தில் அவரது கட்சி அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திய கதை இது. அவர் கூறுகையில்: "சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றால், ரசாக்கர்களின் பேரப்பிள்ளைகள் (பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்கள்) ஒதுக்கீடு பெற வேண்டுமோ? அதுதான் எனது கேள்வி." என்று பேசினார் அவர் இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில், பல்வேறு வளாகங்களில் மாணவர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத் தொடங்கினர். காவல்துறை மற்றும் உயரடுக்கு பாதுகாப்பு படை, ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (RAB) படையுடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு பதிலடி கொடுத்தது. ஆளும் கட்சியின் மாணவர் பிரிவும் அவர்களின் தாக்குதலில் இணைந்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. அடுத்த 72 மணி நேரத்தில், வங்கதேசத்தின் பல இடங்களில் வன்முறை மோதல்கள் வெடித்தது. தேசிய தொலைக்காட்சி கட்டிடம் எரிக்கப்பட்டது. ஒரு சிறைச்சாலையின் வாயில் உடைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வங்கதேசப் போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை. வங்க தேசத்தின் பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சாதாரண மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணான ஹசீனாவின் வலிமையை அசைத்து பார்த்தனர். பதினாறு ஆண்டுகளாக, பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்தார். அவரின் ஆட்சியில் சர்வாதிகார தலைமை போக்கு இருந்தபோதிலும் தேசத்தில் நிகழ்ந்த பெரிய முன்னேற்றங்களுக்கு அவரே காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். பெரிய பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஆனால் இம்முறை அவரின் சக்தியை மாணவர் சக்தி அசைத்துவிட்டது. பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அமைதியின்மை, கலவரம் மற்றும் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளன. பிரிட்டனில் அதிகரிக்கும் வன்முறை, அவசர கால கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர்- என்ன நடக்கிறது?5 மணி நேரங்களுக்கு முன்னர் இரான்- இஸ்ரேல் போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை என்ன?5 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஜூலை 21, 2024 அன்று டாக்காவில், அரசு வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மோதல்களின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட சேதமடைந்த வாகனங்களை ஒருவர் கடந்து செல்கிறார். 'இது பிரஷர் குக்கர் திடீரென வெடிப்பது போன்ற நிலை' ஆசியாவில் சர்வாதிகாரம் பற்றி விரிவாக ஆய்வு செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் முபாஷர் ஹசன், இது ஒரே இரவில் ஏற்பட்ட போராட்டம் அல்ல, மாறாக கொஞ்சம் கொஞ்சமாக கோவம் அதிகரித்து, "பிரஷர் குக்கர் திடீரென வெடித்தால் எப்படி இருக்கும் அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது" இது என்று விவரித்துள்ளார். டாக்டர் ஹசன் பிபிசி பங்களாவிடம் கூறுகையில் : "நினைவில் கொள்ளுங்கள், பத்திரிகை சுதந்திர குறியீட்டில் ரஷ்யாவிற்கும் கீழே இருக்கும் ஒரு நாட்டைப் பற்றி இங்கே பேசுகிறோம். "ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியினரின் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலாக்குவது, குடிமக்களுக்கு ஆண்டுதோறும் அடிப்படை வாக்குரிமை மறுப்பது மற்றும் அவரது ஆட்சியின் சர்வாதிகாரத் தன்மை ஆகியவை சமூகத்தின் ஒரு பெரிய பிரிவினரை கோபப்படுத்தியுள்ளன.” "துரதிர்ஷ்டவசமாக, அவர் நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரதமராக நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு குழுவுக்கு மட்டுமே தலைவராக இருந்தார்." வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுகளால் டாக்டர் ஹசன் வியப்படையவில்லை. 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த மாதம் சர்ச்சைக்குரிய இந்த ஒதுக்கீட்டு முறையை உயர்நீதிமன்றம் மீண்டும் நடைமுறைப்படுத்திய போது எதிர்ப்புகள் அதிகரித்தன, ஆளும் கட்சியினர், போராட்டக்காரர்களைத் தாக்கியபோது போராட்டம் வன்முறையாக மாறியது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, வங்கதேச உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு முறையை மீண்டும் நிறுவிய மற்றும் மாணவர் போராட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது. உருளைக்கிழங்கால் இரு மாநிலங்களில் அரசியல் சிக்கல் - பின்னணி என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பாஸ்போர்ட்டில் அமெரிக்கா, ஆதாரில் தமிழ்நாடு - மகாராஷ்டிர காட்டில் மீட்கப்பட்ட பெண் யார்? தொடரும் மர்மம்3 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ராணுவ வீரர்கள் ஊரடங்கு உத்தரவின் இரண்டாவது நாளில் பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cp8nne7zxy3o
-
50 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த கடுகளவு சிறிய உயிரினம் விஞ்ஞானிகளை வியக்கவைப்பது ஏன்?
பட மூலாதாரம்,EMMA J LONG கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி 4 ஆகஸ்ட் 2024 52 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, கடுகளவு சிறிதான ஓர் அரிய வகையிலான நுண்ணுயிரனத்தின் உடலின் உட்புற அமைப்பினை மிக நுண்ணிய அளவில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த புதைபடிமத்தை சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்துள்ளனர். பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையான ‘நேச்சர்’-இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில், அந்த உயியினத்தின் மிக நுண்ணிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றிய தெளிவான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த உயிரினம், இன்றைய பூச்சிகள், சிலந்திகள், மற்றும் நண்டுகளின் மூதாதையாக ஆரம்ப காலத்தில் தோன்றிய முதல் உயிரினம். இந்த ஆய்வு அதன் உடலின் உட்பகுதி தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மிக அரிதான கண்டுபிடிப்பு இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளரான டாக்டர் மார்ட்டின் ஸ்மித், இந்தப் புதைபடிவம் மிக அரிதானது என்றார். இது ஏனெனில், அந்த நுண்ணுயிரி முழுமையாக வளராத ல்ஆர்வா பருவத்தில் இருந்தபோது புதைபடிவமாக மாறியிருக்கிறது. “இந்த லர்வா புதைபடிவத்தை ஆராய்வதன் மூலம் இவை எப்படி வளர்ந்து முதிர்ந்த வடிவங்களாக ஆயின என்பதை அறிந்துகொள்ள முடியும். அவை இளமையாக இருந்த போது எப்படி இருந்தன என்பதை காண வேண்டியது மிகவும் முக்கியம். இது, காலப்போக்கில் இவை எப்படி உடல் வடிவத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றன என்பதை அறிய உதவும்,” என்று அவர் கூறினார். “ஆனால், இந்த லார்வாக்கள் அளவில் மிகவும் சிறியவை, எளிதில் உடையக்கூடியவை, புதைபடிவ நிலையில் இவற்றைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிது,” என்கிறார். பட மூலாதாரம்,EMMA J LONG படக்குறிப்பு,இந்த புதைபடிவமானது இயற்கையால் மிகச்சரியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊசி முனையில் வைத்து ஆராய்ச்சி டாக்டர் ஸ்மித் குழுவினர், வட சீனாவில் உள்ள மிகப் பழமையான பாறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது இந்தப் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர். "அந்தப் பாறைகள் சுமார் 50 கோடி (500 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை. அவற்றில் சிறிய புதைபடிவங்கள் இருந்தன. பழைய, கடினமான அழுக்குக் குவியலில் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது,” என்கிறார். "சீனாவில் எங்களோடு பணிபுரிபவர்களிடம் இந்தப் பழைய பாறைப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் அதை அமிலத்தில் கரைத்து இந்த புதைபடிவங்களைப் பிரித்தெடுக்கின்றனர்,” என்கிறார் டாக்டர் ஸ்மித். யுனான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, சிறிய பாறைத் துண்டுகளில் இருந்து புதைபடிவங்களைப் பிரித்து எடுக்க நிறைய ஆண்டுகள் செலவிட்டனர். டாக்டர் ஸ்மித் சீனா சென்றிருந்த போது இந்தக் குறிப்பிட்டப் புதைபடிவத்தை நுண்ணோக்கியின் கீழ் ஆராய்ச்சி செய்தார். அப்போது அது மிகவும் முக்கியமானது என்று அவர் அறிந்தார். அதை இன்னும் உன்னிப்பாக ஆய்வு செய்ய, இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார். விஞ்ஞானிகள் அந்தப் புதைபடிவத்தை ஒரு சிறிய ஊசியின் நுனியில் வைத்து அதன் உள்ளே பார்க்க மிகவும் வலுவான எக்ஸ்-ரேக்களைப் பயன்படுத்தினர். இதற்காக ஆக்ஸ்போர்டில் உள்ள டயமண்ட் லைட் சோர்ஸ் (Diamond Light Source) என்ற சிறப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தினார்கள். அப்போது தான் புதைபடிவத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்று அவர்கள் கண்டறிந்தனர். டாக்டர் ஸ்மித், “புதைபடிவத்தின் உள்ளே இருக்கும் அற்புதமான விஷயங்களைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டோஂ,” என்றார். பிறகு ஆராய்ச்சிக் குழுவினர் அதன் முப்பரிமாணப் புகைப்படங்களை உருவாக்கி, அதனுடைய மிகச்சிறிய மூளைப் பகுதிகள், செரிமானச் சுரப்பிகள், கால்கள், கண்கள் மற்றும் நார்மபுகளின் தடையங்களைக் கண்டனர். விண்வெளிக்குச் செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர் - யார் இவர்?4 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,MARTIN R SMITH/EMMA J LONG படக்குறிப்பு,ஆய்வளார்களால் உயிரினத்தின் உடற்கூறியல் மூலம் செரிமான பாதை, மூளை உட்பட குறிப்பிட்ட பகுதிகளை பிரித்து காண முடிந்தது ஆரம்பகால உயிரினத்தின் மூளை எப்படி இருந்தது? இந்த உயிரினத்தின் மூளை இருக்கும் இடம், பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் மூளையின் ஆரம்பத் தோற்றம் எப்படி இருந்தது என்பதைக் கண்டறிய முடிந்தது. இது இன்றைய பூச்சிகள், சிலந்திகள், மற்றும் நண்டுகளின் தலை எவ்வாறு உருவாகத் தொடங்கியிருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் அறிய இது உதவியது. பின்னாட்களில் இந்த நவீன உயிரினங்களின் உணர்கொம்புகள் (antennae), கண்கள், வாய், போன்ற இணை உறுப்புக்கள் பரிணாம வளர்ச்சி எப்படி நடந்தது என்பதையும் இது விளக்குகிறது. ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வின் இணை-ஆசிரியர் டாக்டர் கேத்தரின் டாப்சன், “இந்தப் புதைபடிவமானது இயற்கையால் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார். நிறைய பாஸ்பரஸ் உள்ள கடல் தண்ணீரில் இந்த உயிரினம் சிறிது காலம் வாழ்ந்து, இறந்திருக்கலாம் என்று டாக்டர் ஸ்மித் கூறினார். இது அதன் உடலை புதைபடிவமாகப் பாதுகாக்க உதவியிருக்கலாம். “புதைபடிவத்தின் மீது நிரம்பியிருந்த பாஸ்பரஸ், இதனைப் படிகம்போலக் கடினமானதாக உருவாக்கியிருக்கலாம்,” என்கிறார் டாக்டர் ஸ்மித். https://www.bbc.com/tamil/articles/c72vvrl07rno
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
வயநாடு மண்சரிவு பலி 350 ஆக அதிகரிப்பு: கடற்படையின் மீட்புப் பணி நிலவரம் என்ன? - அரசு விளக்கம் 04 AUG, 2024 | 02:14 PM புதுடெல்லி / வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டமண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடரும் கடற்படையின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு விவரித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. நிவாரண முயற்சிகளை அதிகரிக்கவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கவும் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 78 கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுக்கள் சூரல்மலா, முண்டக்கை பகுதிகளின் பல இடங்களில் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பேரிடர் நிவாரணப் படையினர், உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் இதர பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்காக ஒரு குழு செயல்படுகிறது. மற்ற குழுக்கள் பிழைத்தவர்களைத் தேடுதல், இடிபாடுகளை அகற்றுதல், உடல்களை மீட்டெடுக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுகின்றது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக சூரல்மலாவில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், 30 மாலுமிகளைக் கொண்ட ஒரு குழு, ஆகஸ்ட் 1 அன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா, முண்டக்கை பகுதிகளை இணைக்கும் ஆற்றின் மீது முக்கியமான பெய்லி பாலத்தை நிர்மாணிப்பதில் இந்திய ராணுவத்துக்கு உதவியது. கனரக இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்களின் இயக்கத்துக்கு உதவும் போக்குவரத்தின் முதுகெலும்பாக இந்தப் பாலம் செயல்படுகிறது. ஆகஸ்ட் 2 அன்று, கோழிக்கோட்டில் இருந்து இயக்கப்படும் ஐஎன்எஸ் கருடாவின் இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழி மீட்புப் பணியை மேற்கொண்டது. சிக்கித் தவிக்கும் மக்களை விரைவாக வெளியேற்றுதல், அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படை உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேடுதல் பணி தீவிரம்: வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், 341 பிரேத பரிசோதனைகள் முடிந்துள்ளதாகவும், அதில் 146 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் குழு ஒன்று வியாழனன்று 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடித்தது. இதன்மூலம், கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல வசதியாக, தேடுதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நிவாரண முகாம்: மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2,597 பேர் தங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 91 முகாம்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பேரிடரின் பின்விளைவுகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்காக மனநலப் பேரிடர் மேலாண்மைக் குழுவை மாநில அரசு உருவாக்கியுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ கூறும்போது, “பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. இப்போது உடல்களைத் தேடும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறோம். எனினும், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தேடி வருகிறோம்” என்றார். அதேவேளையில், நிலச்சரிவு பேரிடரில் இதுவரை 206 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/190240
-
மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்: பிரிட்டனில் கலவரமாக மாறிய போராட்டம் - என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் பின்லி, டான் ஜான்சன் பதவி, பிபிசி செய்தி நிருபர் 4 ஆகஸ்ட் 2024 பிரிட்டன் முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜூலை 29-ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறியதையடுத்து 90-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டது. இங்கு ஏவுகணைகள் வீசப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன, மற்றும் சில இடங்களில் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். மற்ற இடங்களில் நடந்த சிறிய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறவில்லை. ‘வெறுப்புணர்வை விதைக்க’ முயற்சிக்கும் ‘தீவிரப் போராட்டக்காரர்களுக்கு’ (extremists) எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு ஆதரவை வழங்குவதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உறுதியளித்துள்ளார். லிவர்பூல் நகரத்தில், செங்கற்கள், பாட்டில்கள், மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை போலீசார் மீது வீசப்பட்டன. ஒரு அதிகாரி மீது போராட்டக்காரர்கள் நாற்காலி வீசியபோது அவருக்குத் தலையில் பலமாக அடிப்பட்டது. மற்றொரு அதிகாரியை அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து தள்ளித் தாக்கினர். பட மூலாதாரம்,PA என்ன நடந்தது? சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களில் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களைச் சொல்லிக் கூச்சலிட்டனர். அவர்களுக்கு எதிராக மற்றொரு தரப்பு போராட்டத்தில் குதித்தது. இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் லிவர்பூலின் லைம் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் அருகே மதிய உணவு நேரத்தில் கூடி, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மைக்கு அழைப்பு விடுத்து கோஷங்கள் எழுப்பினர். ‘அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ மற்றும் ‘நாஜி கொள்கைகளை, எங்கள் தெருக்களுக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள்’ என்று அவர்கள் கோஷமிட்டனர். இருதரப்பு போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் நாய்களுடன் அங்கு திரண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலை வரை அமைதியின்மை தொடர்ந்தது. பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்த காவல்துறை அதிகாரிகளை நோக்கி வெடிகள் வீசப்பட்டன. நகரின் வால்டன் பகுதியில் ஒரு நூலகத்திற்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்க முயன்றனர் என்று மெர்சிசைட் போலீசார் தெரிவித்தனர். கடைகள் உடைக்கப்பட்டன. இந்தப் போராட்டங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது. இதில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,SHUTTERSTOCK அரசு தரப்பு கூறுவது என்ன? பிரிட்டனின் உதவித் தலைமைக் காவலர் ஜென்னி சிம்ஸ் கூறுகையில், "மெர்சிசைடில் ஒழுங்கின்மை, வன்முறை நடவடிக்கைகளுக்கு இடமில்லை," என்றார். மேலும், "இதுபோன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கும் இந்த நகரத்திற்கும் அவமானத்தைத் தவிர வேறு எதையும் தேடித் தரவில்லை," என்றார். ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 4) போராட்டங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சனிக்கிழமை நடந்த அளவுக்கு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்தைப் பற்றி அதிபர் கியர் ஸ்டாமரின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் வன்முறை நிகழ்வுகள் ஆகிய இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்," என்று பிரதமர் அந்தக் கூட்டத்தில் பேசியதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், "எந்தவிதமான வன்முறைக்கும் மன்னிப்பு இல்லை. நம் நகரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் காவல்துறைக்கு ஆதரவளிக்கிறது," என்று மீண்டும் வலியுறுத்தினார். சனிக்கிழமையன்று, உள்துறைச் செயலாளர் "ஏற்றுக்கொள்ள முடியாத கலவரத்தில் ஈடுபடுவோர் சிறைத்தண்டனை மற்றும் பிற தண்டனைகளுடன் பயணத் தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும்,” என்றும் எச்சரித்தார். மேலும் அனைவரையும் கைது செய்யப் போதுமான சிறைச்சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். பட மூலாதாரம்,PA இரு குழுக்களுக்கு இடையே மோதல் பிரிட்டனின் உள்துறைஸ் செயலாளர் யவெட் கூப்பர், "கிரிமினல் குற்றங்களுக்கும் வன்முறை மற்றும் ஒழுங்கின்மைக்கும் பிரிட்டனின் சாலைகளில் இடமில்லை," என்று கூறினார். கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அரசின் முழு ஆதரவு உள்ளது என்றும் அவர் கூறினார். பிரிஸ்டல் நகரில், போராட்டக்காரர்களும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களும் முற்றுகையில் ஈடுபட்டனர். ஒரு குழு ‘Rule Britannia’ என்ற பிரிட்டனின் தேசபக்திப் பாடலை பாடியது. "நான் இறக்கும் வரை இங்கிலாந்து தான். எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும்," என்று அந்தக் குழு உரத்தக் குரலில் பாடுவதைக் கேட்க முடிந்தது. இனவெறிக்கு எதிரான குழு மீது பீர் கேன்கள் வீசப்பட்டன, மேலும் சில எதிர்ப்பாளர்கள் மீது அதிகாரிகள் தடியடி நடத்தினர். மான்செஸ்டரில், போலிசாருடன் போராட்டக்காரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பிளாக்பூலில், ‘Rebellion Festival’ நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு எதிராக ஒரு குழு போராட்டத்தில் இறங்கியது. இரு குழுக்களிடையே மோதல் வெடித்ததால், பாட்டில்கள் மற்றும் நாற்காலிகள் வீசப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாக லங்காஷயர் போலீசார் தெரிவித்தனர். பெல்ஃபாஸ்டில் ஒரு மசூதிக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை வீசியதால் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான போராட்டங்கள் முதல் பெரிய கலவரங்கள் வரை நடந்தன. சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பிரிட்டன் முழுவதும் நடத்தப்பட்ட அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வன்முறையாக மாறவில்லை. சில இடங்களில் எதிர்ப்பாளர்கள் மாலைக்குள் கலைந்து சென்றனர். சண்டர்லேண்டில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இரவு நடந்த வன்முறையைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று நடந்த போராட்டங்களில் காயமடைந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 'ஹமாஸ் தலைவர் அறையில் மொசாட் உளவாளிகள் குண்டு வைத்தனர்' - இரான் கூறியது என்ன?4 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,LEANNE BROWN / BBC வலதுசாரி ஆர்வலர்களின் திட்டம் நூற்றுக்கணக்கான மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஒரு மசூதிக்கு வெளியே போராட்டத் தடுப்பு போலீஸார் மீது பீர் கேன்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன மற்றும் குடிமக்கள் ஆலோசனை அலுவலகம் எரிக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுத்போர்ட்டில் ஒரு புதிய போராட்டம் உட்பட, வார இறுதியில் பிரிட்டன் முழுவதும் தீவிர வலதுசாரி ஆர்வலர்களால் குறைந்தபட்சம் 30 ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டதாக பிபிசி கண்டறிந்துள்ளது. வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வார இறுதியில் கூடுதலாக 70 வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர். ரகசிய உள்துறை செயலர் ஜேம்ஸ் (Shadow home secretary) பொது ஒழுங்கை மீட்டெடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் மற்றும் கலவரக்காரர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பவும் அதிபர் மற்றும் உள்துறை செயலாளரையும் அழைத்தார். இந்த வாரத் துவக்கத்தில் ஒரு புதிய தேசிய வன்முறைத் தடுப்பு முன்முயற்சியை பிரிட்டன் பிரதமர் வெளியிட்டார். இது வன்முறை அமைப்புகளை எதிர்த்துப் போராடும் முயற்சியில் உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்ற காவல்துறைக்கு உதவுகிறது. https://www.bbc.com/tamil/articles/clmyy9py93yo
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கிரிமியாவில் ரஸ்யாவின் நீர்மூழ்கி அழிப்பு - உக்ரைன் அறிவிப்பு 04 AUG, 2024 | 01:40 PM கிரிமியாவில் ரஸ்யாவின் நீர்மூழ்கியொன்றை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா வளைகுடாவில் நங்கூரமிடப்பட்டிருந்த ரஸ்யாவின் நீர்மூழ்கியை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. செவஸ்டபோல் நகரில் உள்ள துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல் காரணமாக ரஸ்ய நீர் மூழ்கி அழிக்கப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் கருங்கடல் கடற்படைபிரிவினால் பயன்படுத்தப்பட்ட நான்கு நீர்மூழ்கிகளில் ஒன்றையே உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. இந்த நீர்மூழ்கிகளை பயன்படுத்தியே கலிப்ர் குரூஸ் ஏவுகணைகளை ரஸ்யா ஏவிவந்துள்ளது. கிரிமியாவின் பாதுகாப்பிற்கு என ரஸ்யா பயன்படுத்தி வந்த நான்கு எஸ்- 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புமுறையையும் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190238
-
முல்லைத்தீவில் 5 கடைகளையும் கோவில் உண்டியலையும் உடைத்துத் திருடிய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது!
Published By: DIGITAL DESK 7 05 AUG, 2024 | 10:22 AM முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகளையும் கோவிலையும் உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடைகள், ஆலய உண்டியல் உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை , மந்துவில்லில் உள்ள ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என ஐந்து கடைகளும் புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட 46,230 பணமும் , திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. புதுக்குடியிருபு்பு 10 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனும், மந்துவில்லை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவ்வாறான திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனால் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புதுக்குடியிருப்பு பொலிஸார் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190288
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
Postpartum depression is not a character flaw or a weakness. Sometimes it's simply a complication of giving birth. If you have postpartum depression, prompt treatment can help you manage your symptoms and help you bond with your baby. https://www.mayoclinic.org/diseases-conditions/postpartum-depression/symptoms-causes/syc-20376617 What Is Postpartum Depression? Postpartum depression (PPD) is a complex mix of physical, emotional, and behavioral changes that happen in some women after giving birth. According to the DSM-5, a manual used to diagnose mental disorders, PPD is a form of major depression that begins within 4 weeks after delivery. The diagnosis of postpartum depression is based not only on the length of time between delivery and onset but on the severity of the depression. Postpartum depression is linked to chemical, social, and psychological changes that happen when having a baby. The term describes a range of physical and emotional changes that many new mothers experience. PPD can be treated with medication and counseling. The chemical changes involve a rapid drop in hormones after delivery. The actual link between this drop and depression is still not clear. But what is known is that the levels of estrogen and progesterone, the female reproductive hormones, increase tenfold during pregnancy. Then, they drop sharply after delivery. By 3 days after a woman gives birth, the levels of these hormones drop back to what they were before pregnancy. In addition to these chemical changes, the social and psychological changes of having a baby create an increased risk of depression. Most new mothers experience the "baby blues" after delivery. About 1 out of every 10 of these women will develop a more severe and longer-lasting depression after delivery. About 1 in 1,000 women develop a more serious condition called postpartum psychosis. Dads aren’t immune. Research shows that about 1 in 10 new fathers get depression during the year their child is born. https://www.webmd.com/depression/postpartum-depression
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இந்திய அணியில் மீண்டும் அம்பலமான பலவீனம் - ரோகித் சர்மா கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 ஆகஸ்ட் 2024, 02:20 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2021ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ளது. கொழும்பு பிரமதேசா அரங்கில் நேற்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது. 241ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்து 32 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 11 போட்டிகளாக இலங்கைக்கு எதிராக தோல்வி அடையாமல் இருந்து வந்த இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தை இலங்கை சமன் செய்தது. சமன் என்பதே ஏறக்குறைய இலங்கை அணிக்கு கிடைத்த மறைமுக வெற்றிதான். நேற்றைய போட்டியில் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களுடன் தடுமாறிய நிலையில் 240 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்திய அணி 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி வலுவாக இருந்தநிலையில், 208 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. தனி ஒருவனாக மிரட்டிய பந்துவீச்சாளர் இந்திய அணி தடுமாறி விழுந்ததற்கு இலங்கை அணியின் ஒரே சுழற்பந்துவீச்சாளர் வான்டர்சே மட்டும்தான் காரணம். 2015-ஆம் ஆண்டு சர்வதேச தளத்தில் அறிமுகமாகிய வான்டர்சே இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில்தான் விளயைாடியுள்ளார். ஹசரங்கா காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியநிலையில் அவருக்குப் பதிலாக வான்டர்சே நேற்று களமிறங்கினார். இந்திய பேட்டர்களை வாரிசுருட்டிய “லெக் ஸ்பின்னர்” ஜெஃப்ரி வான்டர்சே 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதிலும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை 29 பந்துகள் வித்தியாசத்தில் வான்டர்சே வீழ்த்தி இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை வான்டர்சே பெற்றார். இதற்கு முன் முத்தையா முரளிதரன், அஜெந்தா மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், அகிலா தனஞ்சயா ஆகியோர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் வீழ்ச்சி தொடங்கியது எப்படி? இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா (64) அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, துபே, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், சுப்மான் கில் என பெரிய படையே இருந்தபோதிலும் 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் தனி ஒரு பந்துவீச்சாளரிடம் இந்திய அணி கவிழ்ந்துவிட்டது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே தொடர்ந்து 2வது போட்டியிலும் அரைசதம் அடித்தார். ரோஹித் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காதவரை இந்திய அணி 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது, இந்திய அணியின் வெற்றி 85 சதவீதத்துக்கு மேல் இருந்தது. ஆனால், வான்டர்சே பந்துவீச வந்தபின் இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டு அடுத்த 50 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அக்ஸர்படேல், வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து 38 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அக்ஸர், சுந்தர் விக்கெட்டுகளை அசலங்கா வீழ்த்தியபின் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. தோல்வியால் புரிந்து கொண்டோம் தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “போட்டிகளில் வெல்ல வேண்டுமென்றால், தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை இதில் புரிந்து கொண்டோம், அதனால் இன்று தோல்வி அடைந்தோம். இதுபோன்ற தோல்விகள் வேதனையளிக்கிறது. பேட்டிங் வரிசையில் வலது, இடது பேட்டர்கள் வரிசையில் களமிறங்குவது ஸ்ட்ரைக்கை மாற்ற எளிதாக இருக்கும் என்றாலும், இதற்கு நாம் பழக வேண்டும். ஆனால், இந்த விஷயம் நடக்கவில்லை.'' ''இலங்கை அணியினர் உண்மையில் சிறந்த கிரிக்கெட் விளையாடினர். நான் களத்தில் இருந்தவரை விக்கெட் பற்றி யோசிக்காமல் இருந்ததால்தான் 65ரன்கள் சேர்க்க முடிந்தது. நான் சதம் அடிக்கும் ஆட்டம், அரைசதம் அடிக்கும் ஆட்டம், அல்லது டக்அவுட் ஆகும் ஆட்டத்தில் அடுத்துவரும் வீரர்கள் நிலைத்து ஆட வேண்டும். ஆனால், நான் ஆட்டமிழந்தபின் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விடுவது வேதனையாக இருக்கிறது.'' ''இந்த விக்கெட்டின் தன்மையைப் புரிந்து கொண்டபின் அதற்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்ற வேண்டும். நடுப்பகுதி ஓவர்களில் ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருக்கும். ஆதலால் பவர்ப்ளேயில் ரன்களைக் குவிக்க வேண்டும். அதைதான் நான் செய்தேன். ஆனால், போதுமான அளவு பேட்டர்கள் ரன்களைக் குவிக்கவில்லை. கடந்த காலங்களில் சிறந்த கிரிக்கெட் ஆடியிருக்கிறோம், ஆதால் இதில் எவ்வாறு விளையாடினோம் என்பதை அதிகமாக ஆய்வு செய்ய விரும்பவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் எவ்வாறு மோசமாக பேட் செய்தோம் என்பது குறித்து நிச்சயமாக ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பலவீனம் அம்பலம் சுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே ஆகிய வலிமையான பேட்டர்களை வைத்திருந்தும், தரமான சுழற்பந்துவீச்சுக்கு முன் இந்திய அணியின் பலவீனம் அம்பலப்பட்டுவிட்டது. இந்திய அணியின் பலவீனத்தை அறிந்தவுடன் இலங்கை அணியும் வேகப்பந்துவீச்சாளர்களைக் குறைத்துவிட்டு சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்தது. அதன் பலனாக அசலங்கா 3 விக்கெட்டுகளையும், வான்டர்சே 6 விக்கெட்டுகளையும் என 9 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் இருவருமே கைப்பற்றினர். மற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மென்டிஸ், தனஞ்சயா, வெலாகலே ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும் விக்கெட் கிடைக்கவில்லை. மீளமுடியாத இந்திய அணி கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இதேபோன்று இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் திடீரென சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது அக்ஸர் படேல், ஷிவம் துபே ஆகியோர் சேர்ந்து ஆடி, ஆட்டத்தை சமனில் முடித்தனர். ஆனால், இந்த ஆட்டத்தில் அவ்வாறு எந்த பாட்னர்ஷிப்பும் அமையவில்லை. அக்ஸர், சுந்தர் பார்ட்னர்ஷிப் 38 ரன்கள் சேர்த்தாலும் வெற்றி நோக்கி அணியை நகர்த்த முடியவில்லை. கேப்டன் அசலங்கா தனது அடுத்தடுத்த ஓவர்களில் அக்ஸர், சுந்தரை வீழ்த்தினார். இலங்கை அணியை மீட்ட வீரர்கள் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ், வெலாலகே இருவரும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். வெலாலகே தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் சிறப்பான பேட்டிங்கை கடைசி வரிசையில் வெளிப்படுத்தி அணியை மீட்டார். கமிந்து மென்டிஸ் கடைசி நிலையில் களமிறங்கி 40 ரன்கள் சேர்த்தும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். இருவரின் பேட்டிங்கால்தான் இலங்கை அணி பெரிய சரிவிலிருந்து மீண்டது. இல்லாவிட்டால், இலங்கை அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி சரிந்தது எப்படி இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மட்டும்தான் சிறப்பான தொடக்கத்தை கடந்த இரு போட்டிகளாக அளித்துள்ளார். வருங்காலக் கேப்டன் என்று வர்ணிக்கப்படும் சுப்மான் கில் டி20 போட்டியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். சுப்மான் கில் 44 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், இதில் 3 பவுண்டரிகள் அடங்கும் 79 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்தும் பணியில் ஒத்துழைப்பின்றி செயல்பட்டார். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடியும் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் சேர்த்தது, அதில் ரோஹித் சர்மா அரைசதமும் அடித்திருந்தார். ஆனால், சுப்மான் கில் தொடர்ந்து மந்தமாகவே பேட் செய்தார். ஆனால் வான்டர்சே பந்துவீச வந்தபின் இந்திய அணியின் போக்கு மாறியது. சிறப்பாக பேட் செய்த ரோஹித் சர்மா 64 ரன்கள் சேர்த்திருந்தபோது ஸ்விட்ச் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று வான்டர்சே பந்துவீச்சில் அசலங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின் இந்திய அணியின் ஆட்டத்தை வான்டர்சே தனது லெக்ஸ்பின்னில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்த நிலையில், வான்டர்சே பந்துவீச்சிலும் பந்து நன்கு டர்ன் ஆகியது. இதனால், வான்டர்சே வீசிய 18-வது ஓவரில் கில்(35), துபே ஆகியோர் விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. அதன்பின் வான்டர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். வான்டர்சே வீசிய 20வது ஓவரில் விராட் கோலி கால்காப்பில் வாங்கி வெளியேறினார், 22வது ஓவரில் ஸ்ரேயாஸ் கால்காப்பிலும், 24வது ஓவரில் கே.எல்.ராகுல் க்ளீன் போல்டாகியும் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர். கடந்த 2 போட்டிகளாக ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் இருவரும் பெரிதாக பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. அதிலும் இந்திய அணியின் சென்ட்ரல் கான்ட்ராக்டிலிருந்து நீக்கப்பட்டு வந்தபின் ஸ்ரேயாஸ் ஆட்டம் மந்தமாகவே இருக்கிறது. 14-வது ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 97 ரன்களுடன் இருந்தது. ஆனால், அடுத்த 10 ஓவர்களில் 50 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஷிவம் துபேவை டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணியில் வைத்துள்ளனர். ஆனால், இதுவரை மேட்ச்வின்னிங் ஆட்டத்தை ஒரு போட்டியில்கூட துபே வெளிப்படுத்தவில்லை. ஐபிஎல் தொடரில் மஞ்சள் ஆடையில் இருந்தால் சுழற்பந்துவீச்சை வெளுக்கும் துபே, நீல ஆடைக்கு மாறியதும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இந்திய அணியின் வெற்றிக்கு 93 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அக்ஸர், வாஷிங்டன் இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கும் பணியைத் தொடங்கினர். ஆனால் இருவரும் சேர்ந்து 38 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அசலங்கா பந்துவீச வந்தபின் அக்ஸர் (44), சுந்தர்(15) இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றி இலங்கை அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். சிராஜ் 4 ரன்களில் கால்காப்பில் வாங்கி அசலங்கா பந்துவீச்சில் வெளியேற, அர்ஷ்தீப் ரன் அவுட் ஆகவே இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்த ஆட்டத்தில் மட்டும் இந்திய பேட்டர்கள் 5 பேர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். இதில் வான்டர்சே பந்துவீச்சில் மட்டும் கோலி, துபே, ஸ்ரேயாஸ் ஆகிய 3 முழுநேர பேட்டர்கள் ஆட்டமிழந்தது ஆய்வுக்குரியதாகும். தரமான சுழற்பந்துவீச்சுக்கு முன் காலை நகர்த்தி ஆடாமல் இருந்தது, பந்தை கணிக்காமல் ஆடியதன் பலனாக விக்கெட்டுகளை இழந்துள்ளனர். அதேபோல பின்வரிசையில் சிராஜ், சுந்தர் இருவரும் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் இந்திய பேட்டர்கள் பந்துவீச்சின் தன்மை, பந்தை சரிவர கணிக்காமல் ஆடியது விக்கெட் சரிவில் தெரியவந்துள்ளது. இலங்கையை மீட்ட பேட்டர்கள் இலங்கை அணி சிராஜ் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே நிசங்கா விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அடைந்தது. ஆனால் 2வது விக்கெட்டுக்கு குஷால் மென்டிஸ், பெர்னான்டோ இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டு 74 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அடுத்த 66 ரன்களுக்குள் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 150 ரன்களைக் கடக்குமா என்ற கேள்வி எழுந்தது. 7-வது விக்கெட்டுக்கு வெலாலகே, மென்டிஸ் இணைந்தபின்புதான் இலங்கை அணி மீண்டும் உயிர்மூச்சு பெற்றது. இருவரும் மெல்ல இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இலங்கை அணிக்கு முதல் இரு சிக்ஸர்களையுமே வெலாலகேதான் அடித்தார். சுந்தர், குல்தீப், அக்ஸர் பந்துவீச்சை நன்கு கணித்து ஆடிய இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். குல்தீப் பந்துவீச்சில் 39 ரன்கள் சேர்த்தநிலையில் வெலாலகே விக்கெட்டை இழந்தார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. கடைசி நேரத்தில் மென்டிஸ்(40), தனஞ்செயா(15) கேமியோ ஆடி இலங்கை அணியை கவுரமான ஸ்கோருக்கு கொண்டு வந்தனர். அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் மென்டிஸ், தனஞ்செயா இருவருமே ரன்அவுட் ஆகினர். பட மூலாதாரம்,GETTY IMAGES அரைசதம் இல்லாவிட்டாலும் வெற்றி இலங்கை அணியில் ஒரு பேட்டர் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஆனாலும், சரிவிலிருந்து மீண்டு 240 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா தொடர்ந்து 2-ஆவது அரைசதம் அடித்தபோதிலும், இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு ஆறுதலான அம்சம், குல்தீப், வாஷிங்டன் இருவரின் பந்துவீச்சுதான். இருவரும் 20 ஓவர்கள் வீசி, 2மெய்டன்கள், 63 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 7-வது பந்துவீச்சாளராக ரோஹித் சர்மாவும் நேற்று 2 ஓவர்களை வீசினார். https://www.bbc.com/tamil/articles/cp9vvg2r9vjo
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் போலியானவை - தேர்தல் ஆணைக்குழு 05 AUG, 2024 | 10:31 AM எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்தும் வாக்களிக்க முடியும் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்வதன் மூலமும், தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் தங்களது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் முன்னிலையில் வாக்களிப்பதன் மூலமும் தேர்தல் சட்டத்தின்படி வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் முகவரிக்கு (வாக்காளரின் பெயர், வாக்கெடுப்பு நிலையம், தேர்தல் நடைபெறும் திகதி, நேரம்) என்பன அடங்கிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் விநியோகிக்கப்படும். எனவே, தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வெளியீடு இன்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் போலியானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190290
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஹமாஸ் தலைவரை கொன்றது இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளா? இரான் புதிய குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாட் மர்பி மற்றும் ஜென்னி ஹில் பதவி, பிபிசி செய்திக்காக, லண்டன், டெல்அவிவ் நகரங்களில் இருந்து 4 ஆகஸ்ட் 2024, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே இரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியில் இருந்து "குறுகிய தூர எறிகணை" மூலம் கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை ஏவப்பட்ட அந்த எறிகணை சுமார் 7 கிலோ (16lbs) எடையுடன் "பலமான வெடிப்பை" ஏற்படுத்தியதாகவும், இதனால் ஹனியே மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் கொல்லப்பட்டதாகவும் இரான் துணை ராணுவ அமைப்பு கூறியது. இரானில் புதிய அதிபராக மசூத் பெசெஷ்கியான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க டெஹ்ரானுக்கு இஸ்மாயில் ஹனியே சென்றிருந்திருந்தார். இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செயல்படுத்தியுள்ளதாக இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி குற்றம் சாட்டியது. ஆனால் ஹனியேவின் மரணம் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஐஆர்ஜிசி அமைப்பின் கூற்று மேற்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகளுடன் முரண்படுகிறது. விருந்தினர் மாளிகையில் இஸ்ரேலிய ரகசிய ஏஜென்டுகளால் வெடிபொருட்கள் வைக்கப்பட்டதாக மேற்கத்திய ஊடக செய்திகள் கூறுகின்றன. சீற்றத்தில் இரான் ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள தோல்விகள், குறிப்பாக தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஒரு நாளில் இது நிகழ்ந்திருப்பது இரான் மற்றும் அதன் பாதுகாப்பு அமைப்பான ஐஆர்ஜிசி-க்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹனியே இறந்த சில நாட்களில் பல ஐஆர்ஜிசி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஹனியே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் இருந்த பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களது தொலைபேசிகள் மற்றும் பிற மின் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் தலைவரை கொன்றது மொசாட் உளவாளிகளா? இதற்கிடையில், இரானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு விவரங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி வியாழக் கிழமை ஹனியேவுக்காக பிரார்த்தனைகளை நடத்தினார். அவரது பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் விழா முடிந்தவுடன் அவர் உடனடியாக வெளியேறினார். இரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இஸ்ரேலின் மொசாட் ஏஜெண்டுகளால் (Mossad intelligence agency) இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த அறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார் என்று பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் ஊடகம் கூறியுள்ளது. இரண்டு மொசாட் உளவாளிகள் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்து மூன்று அறைகளில் வெடிமருந்துகளை வைத்ததாக பிரிட்டனி டெய்லி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்ட பிறகு இரானின் புரட்சிகர காவலர் படை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக இருவரும் பின்னர் இரானை விட்டு வெளியேறிவிட்டனர் என்று சிசிடிவி காட்சிகளை பார்த்த இரானிய அதிகாரிகள் கூறியதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது. நியூயார்க் டைம்ஸ், ஹனியேவின் அறையில் வெடிகுண்டுகள் வைத்து, அதனை வெடிக்கச் செய்து அவர் கொல்லப்பட்டதாகவும், அவை இரண்டு மாதங்களுக்கு முன்பே வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியது. பிபிசியால் இந்தக் கூற்றுகளை சரிபார்க்க முடியவில்லை.ஆனால் ஹனியே இதற்கு முன்பு அதே விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததாக இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் பேசிய ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கு பதிலடி தர இரான், ஹமாஸ் உறுதி 2017ல் அரசியல் பணியகத்தின் தலைவராக பதவியேற்றதில் இருந்து இஸ்மாயில் ஹனியே 15 முறை இரானுக்கு பயணம் செய்துள்ளார். இந்த அறிக்கைகள் உண்மையாக இருந்தால் - இரானின் புரட்சிகர காவலர் படைக்கு இன்னும் பெரிய தோல்வியை இந்த சூழல் பிரதிபலிக்கும். காரணம் இந்த அமைப்பு நீண்ட காலமாக நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. இரானில் எந்த அளவிற்கு மொசாட் எளிதாக நுழைந்து செயல்பட முடியும் என்பதை இந்த சூழல் எடுத்துக் காட்டுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். ஹனியேவின் மரணம் எப்படி நிகழ்ந்திருந்தாலும், இரானும் ஹமாஸும் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளன. இரானின் புரட்சிகர காவலர் படை சனிக்கிழமை அன்று இஸ்ரேலுக்கு "தகுந்த நேரம், இடம் மற்றும் முறையில் கடுமையான தண்டனை கிடைக்கும்" என்று கூறியது. இரானிய ஆதரவு ஆயுதக்குழுக்கள் மற்றும் லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலாவும் இஸ்ரேலை பழிவாங்க சூளுரைத்துள்ளன. ஹெஸ்பொலா உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான ஃபுவாட் ஷுக்ர் கடந்த செவ்வாய்கிழமை பெய்ரூட் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டமாஸ்கஸில் இரானின் புரட்சிகர காவலர் படையின் பிரிகேடியர் தளபதி முகமது ரெசா ஜாஹேடி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இரான் 170 ட்ரோன்கள், 30 கப்பல் ஏவுகணைகள் மற்றும் 110 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. https://www.bbc.com/tamil/articles/cldyy7p0rlyo
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
சுமார் 5000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை சீனாவைச் (China) சேர்ந்த வைத்தியர் ஒருவர் ரோபோ இயந்திரம் மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். சீன வைத்தியசாலை ஒன்றின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான லூவோ கிங்குவேன் (Luo Qingquan) என்ற வைத்தியரே தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 13ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ஜி (5G) அறுவை சிகிச்சை ரோபோ இயந்திரத்தை பயன்படுத்தி ரிமோட் மூலம் சிகிச்சை செய்து நுரையீரல் கட்டியை வைத்தியர் அகற்றியுள்ளார். அறுவை சிகிச்சை நோயாளி சீனாவில் உள்ள காஷ்கரில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்தியர் ஷங்காயில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து சிகிச்சை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு சுமார் ஒரு மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டெலிமெடிசின் (Telemedicine) மற்றும் ரோபோடிக் (Robotic) அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குறித்த வைத்தியசாலையில் ரோபோ அறுவை சிகிச்சையை நடத்துவதோடு, ரோபோ தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. https://tamilwin.com/article/doctor-removed-lung-tumor-through-robot-1722715948
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
Sri Lanka 240/9 India (42.2/50 ov, T:241) 208 Sri Lanka won by 32 runs.
-
எதிர்க்கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் அரசியல் மேடைக்கு ஏற்றதாக இருந்தாலும் நாட்டுக்கு ஏற்றதல்ல - திருகோணமலையில் ஜனாதிபதி
Published By: VISHNU 04 AUG, 2024 | 08:09 PM எதிர்க்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் அரசியல் மேடைக்கு ஏற்றதாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதனால் இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அனைவரும் அங்கீகரித்து, வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டில் அரசியல் செய்வதற்கு நல்ல பொருளாதாரம் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலவச சப்பாத்துகளை வழங்குவதால் மட்டும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது எனவும் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாச்சார நிலையத்தில் இன்று (04) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரளவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ''இந்த நாட்டின் அப்போதைய நிலையை நான் நினைவுகூரத் தேவையில்லை. சிலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஊருக்கு வரக்கூடாது என அச்சுறுத்தினர். ஆனால் 2022 ஜூலை மாதத்தில் நாட்டின் மீட்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம். இந்த அமைச்சர்கள், எம்.பிகள் அனைவரும் எங்களுடன் இணைந்து, 2023ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்தது. இப்போது எமக்கு வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடிந்துள்ளது. இதற்கிடையில், மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தினோம். அத்துடன் நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் 'உறுமய' வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 250,000 பேருக்கு அந்த வீடுகளின் உரிமையை வழங்கவும் மலையக கிராமங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு பல கல்விப் புலமைப்பரிசில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாடு வங்குரோத்தான போது முடியாததை, வங்குரோத்தடைந்த நாடாக இருந்தபோது செய்தோம். நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டது தான் அதற்குக் காரணம். அரசாங்கத்தை பாதுகாத்தோம். அரசாங்கத்தை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை காண முடிந்தது. 2042 வரை எங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை மீறினால், அந்த சலுகைகளை இழக்க நேரிடும். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று எதிர்க்கட்சிகள் இப்போது பேசுகின்றன. அவர்கள் சொல்வதைச் செய்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டும். மேலும் இந்த நாட்டை இளைஞர்களுக்காக கட்டியெழுப்ப வேண்டும். இறக்குமதிக்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி போதுமானதாக இல்லாதிருப்பது தான் எமக்குள்ள பிரதான பிரச்சினையாகும். அதனால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு இந்த நிலை தொடர்ந்தால், 15 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். எனவே, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும். அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய திட்டங்களைத் தொடங்கி இந்தப் பணியைச் செய்ய வேண்டும். இலவச சப்பாத்துகள் வழங்கினால்தான் இந்நாட்டின் பிரச்சினைகள் தீரும் என்றாலும், சப்பாத்துகளை வழங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசியல் செய்வதற்கும் நாட்டில் பொருளாதாரம் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் பொதுஜன பெரமுனையிலும் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும் மற்ற வீட்டில் இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தியிலும் இருந்தாலும் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்காவிட்டால் என்ன பயன். அதனால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார்? பிரதமர் பதவிக்கு கையேந்திய வேறு நாடு உலகில் இருக்க முடியுமா? எனது நண்பர் அனுரகுமார திசாநாயக்கவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த சவாலை ஏற்று நாட்டை அபிவிருத்தி செய்தோம். மேற்படி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் திருகோணமலை மாவட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 04 வருடங்களாக இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தொழில் கிடைக்கவில்லை. எனவே, இந்த மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் புதிய திட்டங்களை இப்போது ஆரம்பிக்கிறோம். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை வலுசக்தி மையமாக மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்க சுமார் ஆயிரம் ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாய் பிரதேசத்தில் புதிய பயிற்செய்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிழக்கு மாகாணத்தில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். தற்போது பசு வளர்ப்பு , மீன்பிடித் தொழில் நவீனமயமாக்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவற்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாக அதிகரிக்க திட்டமிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அறுகம்பே தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான பல்வேறு இடங்களில் சுற்றுலா வலயங்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் அழகான கடற்கரை உள்ளது. அதை பயன்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். ஹிங்குரக்கொட விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கு வந்து கூச்சல் போடுவதால் எந்தப் பயனும் இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் பாடுபட வேண்டும். அதை நாம் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியலில் இருந்து கற்றுக்கொண்டோம். 30 வருடங்கள் செல்லும் என்று கூறப்பட்ட மகாவலித் திட்டம் 10 வருடங்களில் நிறைவு செய்யப்பட்டது. பின்னர் இரண்டு வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டன. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் முன்பை விட பல பணிகளை செய்ய முடியும். நாம் புதிய முறையில் முன்னேற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்ததும் சுயாதீனமானதும் புதிய விடயமாகும்" என்று ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள: நாங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டவர்கள். எனவே இது எங்களுக்கு புதிய அனுபவம். அப்போது கட்சி ரீதியில் பணியாற்றிய நாங்கள் இப்போது ஒரே முகாமிற்குள் வந்துள்ளோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு பொருளாதார ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. மீண்டும் அரசியல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.எமது அரசியல் செயற்பாட்டாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சொத்துக்களை அழித்து அபிவிருத்தி செய்யும் முறை என்ன என்று வினவ விரும்புகிறேன். இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார். அன்றைய தினம் கட்சி என்ற அடிப்படையில் அவருக்கு ஆதரவளித்தோம். இன்று அவரால் எமக்கு மீண்டும் அரசியல் செய்ய முடிந்துள்ளது. அவரது சரியான அரசியல் மற்றும் பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று இந்நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்தது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு கட்சிக்காக நடத்தப்படவில்லை. இந்த நாட்டுக்கு மேலும் தலைவர்கள் தேவையில்லை. அவ்வாறு நடந்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். மக்களுக்கு வீதியில் இறங்க நேரிடும். இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் நியமிக்க நாம் அனைவரும் கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டு ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி: ''நாடு நெருக்கடி நிலையை அடைந்த போது மக்களைக் காப்பாற்ற எந்தத் தலைவரும் முன்வரவில்லை. மக்களைக் காப்பாற்ற ரணில் விக்ரமசிங்க நிபந்தனையின்றி முன் வந்தார். இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்துள்ளது. இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் சூழலை நாட்டில் உருவாக்க ஜனாதிபதியால் முடிந்தது. அவருடைய பொருளாதாரப் பார்வை நாட்டுக்கு தொடர்ந்தும் அவசியம். பொருளாதார வேலைத் திட்டத்தை தொடர முடியாத பட்சத்தில் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்றார். மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் மாகாண சபை அமைச்சர் நவரத்ன ராஜா, திருகோணமலை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மன்றத்தின் செயலாளர் சாலிய ரத்நாயக்க, முன்னாள் செயலாளர் சந்துன் ரத்நாயக்க,முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர் கந்தசாமி கோனேஷ்வரன், திருகோணமலை மாவட்ட ஐ.தே.கட்சி தொகுதி அமைப்பாளர் ஏ.பி. அமீன், முன்னாள் உள்ளுராட்சி சபை மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/190276
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
Israel-ஐ நோக்கி சீறிய Rockets; Hezbollah தாக்குதலால் பதற்றம் - Citizens-ஐ Warn செய்த US, UK, Canada ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மறுபுறம், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலைமை "விரைவாக மோசமடையக் கூடும்" என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹமாஸின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனிய, ஹெஸ்பொலா தளபதி ஃபுவாட் ஷுக்கர் ஆகியோர் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்காக இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என இரான் அரசு மற்றும் ஹெஸ்பொலா அமைப்பு கூறியிருந்தன. இந்நிலையில்தான், இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தாக்குதலை நடத்தியிருக்கிறது.
-
1.2 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நீதிமன்றம் ஊடாக நாம் நிறுத்தினோம் - சஜித் பிரேமதாச
Published By: VISHNU 04 AUG, 2024 | 06:35 PM நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்கலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். VFS கொடுக்கல் வாங்கள் மூலம் தமது சொந்த நலனையே இந்த திருடர்கள் முன்னெடுத்தனர். ரவூப் ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க ரணவக்க, அசோக் அபேசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தலைமையிலான ஏனைய சட்டத்தரணிகளின் வலுவான வாதங்களை ஏற்றுக்கொண்டு VFS கொடுக்கல் வாங்கள் மோசடிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரேலியா மாவட்ட விவசாயிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (04) ஹங்குராங்கெத்தையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸ் மா அதிபரை நியமித்த முறையில் காணப்பட்ட குறைபாடுகளைக் கண்டு, உயர் நீதிமன்றம் தடை விதித்தபோது, ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் விமர்சித்தது. VFS கொடுக்கல் வாங்கள் மூலம் 1.2 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் தடை விதித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் என்ன கூறப்போகின்றனர் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். திருடர்களைப் பிடிப்போம் என பெரிதாக கூறிக்கொள்ளும் சிவப்பு சகோதரர்கள் VFS கொடுக்கல் வாங்கள் தொடர்பில் எந்த பேச்சும் இல்லை. VFS கொடுக்கல் வாங்கல் ஒப்ந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நானே முதலில் வெளிக்கொணர்ந்தேன். இன்று பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரர்கள் திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும் திருடர்களுடன் டீல் போட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். ராஜபக்சக்களுடன் கைகோர்த்து அரசியல் செய்தவர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதியுடன் கைகோர்த்து வருகின்றனர். மக்களே இவர்களின் முகங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அடைக்கலம் தேடியே ரணிலோடு இணைகின்றனர். இன்று ராஜபக்ச குலத்தை முத்தமிட்டு நாட்டையே நாசமாக்கி தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியிலும் இந்த திருடர்களுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட நன்கொடையாளர்களின் நிதிப் பங்களிப்பில் எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வந்த “பிரபஞ்சம்” மற்றும் “மூச்சு” திட்டங்களை இடைநிறுத்தியுள்எனர். ஆனால், மக்கள் வரிப்பணத்தால் அரச நிதியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை ஜனாதிபதி திறந்து வைக்கும் வைபவங்களை நடத்துகிறார். சட்டம் யாவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஜனாதிபதியின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது போன்று பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்பட்டு வருகிறது. 23 இலட்சம் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனிசெப் நிறுவனமே தெரிவித்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும். பாடசாலை மாணவர்களின் போசாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆட்சியாளர்களிடம் இதற்கு தீர்வுகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். விவசாயிக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க அரசிடம் பணம் இல்லாவிட்டாலும், ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கியுள்ளனர். நாட்டின் ஜனாதிபதியே நாட்டுக்காக அதிக தியாகம் செய்து, ஆதர்சமான நபராக திகழ வேண்டும். ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். இன்று நாட்டை ஆள்பவர்கள் 7 நட்சத்திர ஹோட்டல்களிலும், மாளிகைகளிலும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருவதனால், சாதாரண மனிதன் படும் துக்கங்களும் வலிகளும் அவர்களுக்குப் புரிவதில்லை. சாதாரண மக்கள் படும் துன்பங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாது இருந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே, இந்த மாளிகை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்த நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளிகள், அரசு ஊழியர், நடுத்தரக் குடும்பங்களின் பிள்ளைகள் சர்வதேச தரத்திலான தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறும் நிறுவனங்களாக மாற்றுவோம். ஐக்கிய மக்கள் சக்தி இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190273