Everything posted by ஏராளன்
-
போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இன்மையினால் நாட்டு மக்களின் உடல் பருமன் அதிகரிப்பு
Published By: DIGITAL DESK 3 30 JUL, 2024 | 04:36 PM போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இன்மையினால் நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் சுமார் 48 சதவீதமான பெண்கள் அதிக எடையுடனும், 33.3 சதவீதமான ஆண்கள் தங்கள் ஆரோக்கியமான எடையை விட அதிக எடையுடனும் உள்ளார்கள். சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செயற்பாடு குறைவாக உள்ளது. அத்துடன், அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளல் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் நோய்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், நாட்டின் முதியவர்களில் 42 சதவீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிபிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/189808
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS 30 ஜூலை 2024, 03:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் மருத்துவமனைகள் குறைந்தது 100 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சுமார் 250 பேர் இதுவரை மீட்கப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மேலும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது செவ்வாய்கிழமை அதிகாலை 2-3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி மற்றும் சூரல்மலை அருகே செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதாக ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த நிலச்சரிவால் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றும் ஏறத்தாழ 250-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் தொடர் கதையாகும் நிலச்சரிவு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மலை மாவட்டமான வயநாட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், பழங்குடி மக்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். வடக்கே கர்நாடகாவின் குடகு மற்றும் மைசூர் மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் தமிழகத்தின் நீலகிரி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடமேற்கே கண்ணூர் மாவட்டமும், தெற்கே மலப்புரம் மாவட்டமும், தென்மேற்கே கோழிக்கோடு மாவட்டமும் அமைந்துள்ளது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முண்டக்கை, அட்டமலை, குன்னோம் போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த கிராமங்கள் தனித்துவிடப்பட்டுள்ளன. மழைகாலங்களில் நிலச்சரிவு அதிகம் ஏற்படும் பகுதியாக இந்த மாவட்டம் அறியப்படுகிறது. பட மூலாதாரம்,ANI தாமதமாகும் மீட்புப் பணிகள் சூரமலையில் இருந்து முண்டக்கையை இணைக்கும் பாலமானது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாக கேரள வனத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் சசீந்திரன் பிபிசி இந்தியிடம் கூறினார். "தற்போது இருக்கும் சூழலில் எவ்வளவு பேர் இந்த இடர்பாடுகளில் சிக்கியிருக்கிறார்கள் என்று கூற இயலாது," என்பதையும் அவர் தெரிவித்தார். கேரள முதல்வர் அலுவலகம் இது குறித்து கூறுகையில், தற்காலிகமாக பாலம் அமைக்க ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பாலம் அமைத்த பிறகு, மீட்பு குழுவினர் அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள தேயிலை தோட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், விமானப்படை விமானங்கள், கண்ணூர் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் அனைத்து மீட்புப் பணிகளும் தாமதமாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி மைய எண்கள் அறிவிப்பு மீட்பு உதவிகள் தேவைப்படும் மக்கள் 1077 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு. மேலும் மாவட்ட அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 204151 என்ற எண்ணுக்கும், 9562804151, 8078409770 என்ற அலைபேசி எண்களுக்கும் மக்கள் அழைக்கலாம். சுல்தான் பத்தேரியில் உள்ள தாலுக்கா அளவிலான அவசர செயல்பாட்டு மையத்தை 04936 223355 (அ) 04936 220296 என்ற எண்ணிலும் அழைக்கலாம். மேலும் 6238461385 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். மந்தவாடி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04935 241111, 04935 240231 என்ற எண்களிலும், 9446637748 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். வைத்திரி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 256100 என்ற எண்ணிலும், 8590842965, 9447097705 என்ற அலைபேசி எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். பட மூலாதாரம்,CMO KERALA / X படக்குறிப்பு,கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு நிவாரண நிதியை அறிவித்த மத்திய அரசு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 2 லட்சத்தை நிதி உதவியாக அறிவித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,NARENDRA MODI / X படக்குறிப்பு,நிவாரண நிதியை அறிவித்த மத்திய அரசு நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தீவிர கனமழை இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மற்றும் வடக்கு கேரளாவில் அதிக கன மழைகான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் 204 மிமீ அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் வடக்கு கேரளா பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு (Flash Flood) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் கரையை ஒட்டி தாழ்வு பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர்கள் மேற்பார்வையில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, முழு அரசு இயந்திரமும் மீட்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்றும் கேரள முதல்வர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ''வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்'' என ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - மோதி நம்பிக்கை கேரளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த தகவல் கேட்டு மிகவும் வேதனையுற்றதாக குறிப்பிட்டுள்ளார். "உறவுகளை இழந்த நபர்களைப் பற்றி நினைக்கிறேன். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார் மோதி. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். "கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அலைபேசியில் உரையாடினேன். இந்த தருணத்தில் அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தேன்," என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோதி. பட மூலாதாரம்,NARENDRA MODI / X படக்குறிப்பு,மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - நரேந்திர மோதி அறிவிப்பு உதவிக்கரம் நீட்ட தயார் - தமிழக முதல்வர் அறிவிப்பு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசு கேரளத்திற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய தயார் என்று அறிவித்துள்ளார். "வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் குறித்து வேதனையுற்றேன். இந்த பகுதியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று புரிந்து கொள்கிறேன். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது என்றும் இடர்பாடுகளில் சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்," என்று பதிவிட்டுள்ளார். மேலும் தேவையான தளவாட, மனிதவள உதவிகளையும் இந்த இக்கட்டான தருணத்தில் சகோதர மாநிலமான கேரளத்துக்கு வழங்க தமிழகம் தயாராக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பட மூலாதாரம்,MK STALIN / X படக்குறிப்பு,உதவிக்கரம் நீட்டும் தமிழகம் - முக ஸ்டாலின் அறிவிப்பு https://www.bbc.com/tamil/articles/czq6z0xjvd8o
-
வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் - நிக்கொலஸ் மதுரோ வெற்றி
வெனிசுவேலாவில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுப்பு - வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் - பொலிஸாருடன் மோதல் 30 JUL, 2024 | 12:05 PM வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதி தேர்தலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கரகாசின் மத்திய பகுதியில் திரண்டுள்ளனர். தலைநகரை சூழவுள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் குடிசைகளில் இருந்து மக்கள் பல மைல் தூரம் நடந்து ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரம் சுதந்திரம் என கோசம் எழுப்பிவருகின்றனர். அரசாங்கம் வீழ்ச்சியடைவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். நெடுஞ்சாலைகளில் டயர்கள் எரிவதையும் பெருமளவு பொதுமக்களையும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கண்ணீர் புகைபிரயோகம் இடம்பெறுவதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மதுரோவின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்துள்ளனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் அரசாங்கத்திற்கு ஆதரவான இடதுசாரி ஆயுதக்குழுக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகருக்கான பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. இது மிகமோசமான மோசடி நாங்கள் 70 வீத வாக்குகளால் வெற்றிபெற்றோம்,ஆனால் அவர்கள் தேர்தல்களை எங்களிடமிருந்து பறித்துக்கொண்டனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டிற்கும் எங்கள் இளைஞர்களிற்கும் சிறந்த எதிர்காலம் வேண்டும் என ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189775
-
ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுவீச்சில் உயிர் தப்பியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டதும் காளான் போன்று எழுந்த புகை மண்டலம் கட்டுரை தகவல் எழுதியவர், லூசி வாலிஸ் பதவி, பிபிசி செய்தி 29 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அன்றைய நாள் காலை… ஏற்கனவே வெப்பம் சற்றே அதிகரித்திருந்தது. சியேகோ கிரியாக்கே (Chieko Kiriake) தன் நெற்றியில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை துடைத்தபடி, ஒரு நிழலான பகுதியை தேடித் கொண்டிருந்த போது, தொலைவில் மிகப் பிரகாசமான ஒளி தோன்றியது. 15 வயதே நிரம்பிய சியோகோ அதற்கு முன் அப்படியொரு காட்சியைக் கண்டதில்லை. அப்போது நேரம் 8:15, நாள் ஆகஸ்ட் 6, 1945. ‘சூரியன் கீழே விழுவது போல நான் உணர்ந்தேன், எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது’ என அந்த நிகழ்வை நினைவுகூர்கிறார் சியோகோ. அவர் வசித்து வந்த ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அப்போது தான் அணுகுண்டை வீசியிருந்தது. போர்க்களத்தில் முதல் முறையாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது அப்போது தான். அந்தசமயம் ஜெர்மனி ஐரோப்பியாவில் சரணடைந்து இருந்தது. இரண்டாம் உலகப்போரில் நேசநாட்டுப் படைகள் ஜப்பானுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சியோகோ அப்போது படித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரைப் போன்ற மூத்த மாணவர்கள் போர் காலகட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தனர். குண்டுவீச்சில் காயம்பட்ட சக நண்பரை தனது முதுகில் தூக்கிக்கொண்டு தள்ளாடியபடி பள்ளிக்கு அழைத்து சென்றார். பெரும்பாலான மாணவர்கள் மோசமான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வகுப்பறையில் எண்ணெயைத் தடவி காயங்களுக்கு சிகிச்சை அளித்தார் சியோகோ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் உருக்குலைந்து போன ஹிரோஷிமா நகரம் ‘அச்சமயம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எங்களிடம் இருந்தது அது மட்டுமே. ஒருவரை அடுத்து மற்றொருவர் கண் முன்னே மாண்டனர்’ என கூறுகிறார் சியோகோ. ‘எங்களை போன்ற மூத்த மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் விளையாட்டு மைதானத்தில் குழி தோண்டுமாறு கூறினர். அங்கே, எங்கள் கைகளால் உயிரிழந்த மாணவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்தோம். நான் அதை மிகவும் சோகமாக உணர்ந்தேன்.’ என்கிறார். சியோகோவுக்கு இப்போது 94 வயதாகிறது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு ஏறத்தாழ 80 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜப்பானில் ஹிபாகுஷா (Hibakusha) என்றழைக்கப்படும் உயிர் பிழைத்த இவர்கள், தங்கள் வாழ்நாளின் கடைசிப் பகுதியில் உள்ளனர். அணுகுண்டு தாக்குதல் காரணமாக நிறைய பேர் உடல்நல குறைபாடுகளுடனும், சிலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். இப்போது, இவர்கள் பிபிசி டூ ஆவணப்படத்திற்காக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், எதிர்கால சந்ததியருக்கு எச்சரிக்கையாக அமையும் வகையில் தங்களது கடந்த காலத்தை ஆவணப்படுத்துகிறார்கள். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS/CHIEKO KIRIAKE படக்குறிப்பு,சியேகோ கிரியாக்கே - அணுகுண்டு தாக்குதலுக்கு முந்தைய மற்றும் இன்றைய புகைப்படம். அந்த துயரமான நிகழ்வுக்கு பிறகு, நகரில் ஒரு புதிய வாழ்க்கை துவங்கியது என்கிறார் சியோகோ. புற்கள் வளர 75 ஆண்டுகள் ஆகும் என மக்கள் பேசிக் கொண்டதாக கூறிய சியோகோ, ‘அடுத்த ஆண்டே பறவைகள் ஊருக்கு திரும்பின’ என்றார். தனது வாழ்நாளில் நிறைய முறை மரணத்தின் விளிம்பை அடைந்துள்ளேன் என்று கூறும் சியோகோ, அவரது உயிரை ஏதோ ஒரு பெரிய சக்தி காப்பாற்றுகிறது என நம்புவதாக கூறுகிறார். இன்று உயிருடன் வாழும் பெரும்பாலான ஹிபாகுஷாக்கள், அணுகுண்டு வீச்சு தாக்குதலின் போது குழந்தைகளாக இருந்தவர்கள். ஜப்பானிய மொழியில் ஹிபாகுஷா என்ற வார்த்தைக்கு ‘வெடிகுண்டால் பாதிக்கப்பட்ட மக்கள்’ என பொருள் அறியப்படுகிறது. இப்போது இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர். இப்போது உலகளாவிய மோதல்கள் தீவிரமாகி உள்ளன. முன்னெப்போதையும் விட, இக்காலத்தில் அணுகுண்டு தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இவர்கள் உணர்கின்றனர். ‘யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்ற உலகளாவிய மோதல்களை காண்கையில், என் உடம்பு நடுங்குகிறது, கண்ணீர் வழிகிறது’ என்கிறார் 86 வயதான மிச்சிகோ கொடாமா (Michiko Kodama). ‘மீண்டும் ஒரு அணுகுண்டு தாக்குதல் நடக்க நாம் அனுமதிக்க கூடாது. இப்போது அதற்கான நெருக்கடி உருவாகி இருப்பதாக உணர்கிறேன்’ என்கிறார் அவர். மிச்சிகோ அணு ஆயுதத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருபவர். தனது பிரசாரத்தால் உயிரிழந்தவர்களின் குரல்கள் கேட்கப்படும் என்கிறார். இதுகுறித்த சாட்சியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படும் என்கிறார். ‘நேரடியாக அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹிபாகுஷா-க்களிடம் இருந்து அவர்கள் அனுபவத்தை கேட்டறிய வேண்டியது அவசியம் என நினைக்கிறன்’ என்கிறார் இவர். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS படக்குறிப்பு,'வானில் இருந்து கறுப்பு நிற சேறு போன்ற மழை பொழிந்தது', என்கிறார் மிச்சிகோ ஹிரோஷிமாவில் அணுகுண்டு தாக்குதல் நடந்த போது மிச்சிகோ பள்ளி பயின்று வந்த 7 வயது சிறுமி ஆவார். ‘என் வகுப்பின் ஜன்னல் வழியாக, கடுமையான ஒளி எங்களை நோக்கி வேகமாக நெருங்குவதை கண்டேன். அது மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளி நிறத்தில் இருந்தது.’ என்றார் அவர். ஜன்னல்கள் வெடித்து சிதறியது, வகுப்பறை முழுவதும் பிளவுபட்டது, குப்பை குவியல்கள் எல்லா பக்கமும் தூவலாக பரவியது, சுவர், மேசை மற்றும் நாற்காலிகள் கூர்மையான குத்துவது போல சிதறி கிடந்தன, என்று தனது அனுபவத்தை விவரிக்கிறார் மிச்சிகோ. ‘மேற்கூரை விரிசல் விட்டு கீழே விழுந்தது. நான் எனது மேசைக்கு கீழே மறைந்து கொண்டேன்.’ குண்டு வெடிப்புக்கு பிறகு, முற்றிலும் சேதமடைந்த வகுப்பறையைக் கண்டார். எங்கு பார்த்தாலும், கைகளும், கால்களும் சிக்கிக் கிடப்பதை காண முடிந்தது. ‘நான் வகுப்பறையில் இருந்து தாழ்வாரம் பகுதிக்கு ஊர்ந்து சென்றேன். என் நண்பர்கள் அனைவரும் ‘உதவுமாறு’ கேட்டனர்’ என்று அவர் கூறினார். பிறகு, மிச்சிகோவின் தந்தை வந்து இவரை வீட்டுக்கு தூக்கி சென்றதாக மிச்சிகோ கூறினார். வானில் இருந்து சேறு போன்ற ஒரு கருப்பு மழை பொழிவது போல் காட்சியளித்தது எனும் மிச்சிகோ. ‘அது கதிர்வீச்சு பொருட்கள் மற்றும் அணுகுண்டு வெடிப்பு மிச்சங்களின் கலவை’ என்கிறார். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS/MICHIKO KODAMA படக்குறிப்பு,'தாக்குதலுக்கு பிறகு, வீடு திரும்பிய பயணம் ஒரு நரகம் போன்று இருந்தது', என்கிறார் மிச்சிகோ அன்றைய தினம் வீடு திரும்பிய பயணத்தை மறக்கவே முடியாது என்கிறார் இவர். ‘அது நரகம் போன்ற காட்சி’ என்று கூறும் மிச்சிகோ. ‘எங்களை கடந்து தப்பியோடிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்களின் உடைகள் முழுவதுமாக எரிந்திருந்தன, அவர்களின் சதைகள் உருகிக் கொண்டிருந்தன. அன்று தான் கண்ட ஒரு சிறுமியை பற்றி நினைவுகூர்ந்த மிச்சிகோ, ‘தன் சம வயது நிரம்பிய அந்த சிறுமியின் உடல் மிக மோசமாக எரிந்திருந்தது’ என்கிறார். ‘அந்த சிறுமியின் கண்கள் அகண்டு விரிந்திருந்தன. அந்த கண்கள் இன்றும் என்னை துளைப்பது போல உணர்கிறேன். என்னால் அவளை மறக்க முடியவில்லை. 78 ஆண்டுகள் கழிந்த பிறகும், அந்த சிறுமியின் நினைவு என் உடலையும்,. மனதையும் பாதிக்கிறது.’ என்கிறார் மிச்சிகோ. ஒருவேளை மிச்சிகோவும் அவரது குடும்பத்தாரும், அச்சமயம் அவர்களது பழைய வீட்டில் வசித்திருந்தால், உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். குண்டு வெடித்த இடத்தில் இருந்து அந்த வீடு வெறும் 350 மீட்டர் தொலைவில் தான் அமைந்திருந்தது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் சில கிலோமீட்டர் தூரம் தள்ளி அவர்கள் வேறு வீட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். அது தான் அவர்கள் குடும்பத்தை காப்பாற்றியது. 1945 இன் இறுதியில் ஹிரோஷிமாவில் தோராயமாக 1,40,000 பேர் இச்சம்பவத்தால் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. மூன்று நாளுக்கு பிறகு நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதல் காரணமாக 74,000 பேர் உயிர் இழந்தனர். நாகசாகியில் அணுகுண்டு வெடித்த மையப்பகுதியில் இருந்து வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்தவர் தான் சூய்ச்சி கிடோ (Sueichi Kido). அப்போது இவரது வயது 5. இவர் முகம் முழுக்க தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அணுகுண்டு தாக்குதலின் முழு தாக்கத்தில் இருந்து இவரை பாதுகாத்த, சூய்ச்சியின் தாய் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டார். ‘ஹிபாகுஷாக்களாகிய நாங்கள், எங்களை போல வேறு எந்த ஹிபாகுஷாவும் உருவாகாமல் பாதுகாக்கும் எங்கள் பணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்’ என்கிறார் 83 வயதான சூய்ச்சி. இவர் சமீபத்தில் நியூயார்க் பயணம் மேற்கொண்டு அணு ஆயுதங்களின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்க ஐநா சபையில் உரையாற்றினார் அணுகுண்டு தாக்குதலின் தாக்கத்தில் மயங்கிய இவர், எழுந்து பார்த்த போது, அங்க அருகில் ஒரு சிவப்பு நிற எண்ணெய் கேன் இருந்தது, அது தான் இவ்வளவு பெரிய வெடிப்புக்கும், சுற்றிலும் ஏற்பட்ட நாச செயலுக்கும் காரணம் என சில வருடங்கள் இவர் எண்ணியுள்ளார். அது அணுஆயுத தாக்குதல் என்ற உண்மையில் இருந்து இவரை பாதுகாக்க இவரது பெற்றோரும் இவருக்கு தெளிவான விளக்கம் அளிக்க விரும்பவில்லை. அவர் இதுபற்றி பேசிய போதெல்லாம் கண்ணீர் சிந்தியுள்ளனர். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS படக்குறிப்பு,சூய்ச்சி கிடோ (Sueichi Kido) இந்த வெடிப்பின் மூலம் ஏற்பட்ட எல்லா காயங்களும் உடனே தென்பட்டவை இல்லை. சிலர் வாரங்கள் கழித்தும், மாதங்கள் கழித்தும் கதிர்வீச்சு நச்சு காரணத்தினாலான அறிகுறிகளை கண்டறிய துவங்கினர். இதனால் புற்றுநோய் பாதிப்பு அளவு அதிகரித்தது. நிறைய ஆண்டுகள் தப்பி பிழைத்தவர்கள் சமூகத்தில் பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. குறிப்பாக, இல்லற துணை தேடுகையில் பாகுபாட்டை சந்தித்தனர். ‘நம் குடும்பத்தில் ஹிபாகுஷா இரத்தம் நுழைய விரும்பவில்லை’ என தன்னிடம் கூறப்பட்டதாக மிச்சிகோ கூறுகிறார். பின்னாளில் இவர் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளும் பெற்றார். இவரது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் புற்றுநோயால் இறந்தனர். இவரது மகள் நோய் காரணமாக 2011 இல் இறந்தார். நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் தப்பி பிழைத்த மற்றொரு நபரான கியோமி இகுரோவின் (Kiyomi Iguro) வயது அப்போது 19. தூரத்து உறவினர் ஒருவருடன் திருமணமாகி, கருச்சிதைவு உண்டான போது, அவரது மாமியார் அதற்கு அணுகுண்டு தாக்குதலின் தாக்கம் தான் காரணம் என்று கூறியதாக குறிப்பிடுகிறார். ‘உன் எதிர்காலம் மிக மோசமானது’ என்று அவர் கூறியதாக கியோமி தெரிவிக்கிறார். நீ அணுகுண்டு தாக்குதலை எதிர்கொண்டது பற்றி அண்டை வீட்டாரிடம் பேச வேண்டாம் என்று மாமியார் அறிவுறுத்தியதாக கியோமி கூறுகிறார். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS/KIYOMI IGURO படக்குறிப்பு,கியோமி, அவரது பதின் வயதில், பாரம்பரிய உடையில். நேர்காணல் கண்ட பிறகு கியோமி மரணமடைந்தது பரிதாபத்திற்குரியது. ஆனால், தனது 98வது வயது வரை, நாகசாகியின் அமைதி பூங்கா எனும் இடத்திற்கு சென்று, அணுகுண்டு நகரில் வெடித்த 11:02 மணியளவில் அங்கிருந்த மணியை அடித்து, அமைதிக்காக வேண்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS படக்குறிப்பு,அணு ஆயுதம் மற்றும் போர் இல்லாத அமைதி நிறைந்த உலகை விரும்புகிறேன் என்கிறார் கியோமி. சூய்ச்சி, பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய வரலாற்றைக் கற்பித்து வந்தார். இவர் ஒரு ஹிபாகுஷா என அறிந்ததும் தன் மீது நிழல் போன்ற ஒரு அடையாளம் படியத் துவங்கியது என்கிறார். ஆனால், பின்னர், தான் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதை உணர்ந்து, மனித குலத்தை காப்பாற்றுவது பற்றி பேசுவதை தனது கடமையாக உணர்ந்ததாக கூறினார். ‘நான் ஒரு சிறப்பான நபர் என்ற உணர்வு தனக்குள் பிறந்தது’ என்கிறார் சூய்ச்சி. ஹிபாகுஷாக்கள் அனைவரும் உறுதியோடு கூறுவதில் ஒரு விஷயம் மட்டும் பொதுவாக இருக்கிறது. அது என்னவெனில், கடந்தகாலம், நிகழ்காலம் ஆகிவிட கூடாது என்பது தான். Atomic People எனும் இந்நிகழ்ச்சி வரும் ஜூலை 31 ஆம் தேதி பிபிசி 2 மற்றும் பிபிசி ஐபிளேயர்-இல் ஒளிபரப்பாகும். ஒருவேளை நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் நிகழ்வினால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கான உதவி மற்றும் அறிவுரை BBC Action Line இல் கிடைக்கும். https://www.bbc.com/tamil/articles/cgrlj681xn4o
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
30 JUL, 2024 | 12:28 PM வயநாடு: மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் என்பது தான் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலா மற்றும் முண்டக்கை டவுன் பகுதியின் தற்போதைய நிலை. அங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே கேரளம் அதீத மழைப்பொழிவை சந்திக்கும் போதெல்லாம் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுவது வயநாடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்கள் தான். இந்த ஆண்டும் கனமழை அதிகமாக பெய்துவரும் கேரளத்தில், இன்று (ஜூலை 30) அதிகாலை வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலான நான்கு மணிநேரத்தில் மூன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை டவுன் பகுதியில் இரண்டு முறை நிலச்சரிவு ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், சூரல்மலா கிராமத்தின் ஒரு பகுதி நிலச்சரிவில் சிக்கி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் சேதம்: மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் படையினர், நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தாக்கம் சரியாக தெரியவில்லை என கூறுகின்றனர். அங்குள்ள பாலம் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது காரணமாக சேதங்களை மதிப்பிட முடியவில்லை. சூரல்மலா கிராமத்தை தாண்டி தான் முண்டக்கை டவுனுக்கு செல்ல முடியும். இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலம் கனமழை, நிலச்சரிவால் சிதிலமடைந்துள்ளது. இதனால், முண்டக்கை டவுனுக்கு மீட்புக்குழு செல்வதில் சிரமம் நிலவுகிறது. இதனால், முண்டக்கை டவுன் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. சில நிமிடங்கள் முன் அரசின் இரண்டு ஹெலிகாப்டர்கள் அங்கு தரையிறங்க முயற்சித்தது. ஆனால், காலநிலை மோசமாக இருப்பதால், அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் கோழிகோட்டுக்கு திரும்பியது. முண்டக்கை டவுன் பகுதியில் அதிகாலை 3.15 மணியளவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதில் புனிச்சிரிமட்டம் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருக்கும் யூனுஸ் என்பவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். முண்டக்கை டவுனில் மட்டும் கிட்டத்தட்ட 100 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்கிறது முதல்கட்ட தகவல். முண்டக்கை டவுனுக்கு அடுத்த அட்டமலை கிராமத்தில் ஓடும் ஆற்றில் ஆறு சடலங்களை அக்கிராம மக்கள் மீட்டெடுத்துள்ளனர். இவை, முண்டக்கை டவுனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் என்று கூறப்படுகிறது. எட்டு மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது சீற்றத்துடன் பாய்கிறது என்பதால், முண்டக்கை டவுனில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இந்த ஆற்றில் மேலும் கிடைக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல், பொதுகல்லு ஊராட்சியில் உள்ள சாலியாற்றில் இருந்து 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேப்பாடி பகுதியில் இருந்து உருவாகும் ஆறு தான் இந்த சாலியாறு. மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து வெளியேறும் நீரும் சகதியும் ஆற்றில் கலப்பதால், சாலியாறு பார்ப்பதற்கே அபாயகரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த மற்ற கிராம மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ள வேளையில், கண்ணூரில் இருந்து இந்திய ராணுவம் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளது. இதேபோல், தமிழகத்தின் குன்னூரில் இருந்தும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/189782
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
Published By: DIGITAL DESK 7 30 JUL, 2024 | 11:41 AM மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை (28) இடம் பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் 27 வயதுடையவர் எனவும் இவர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09 ம் திகதி பிறந்துள்ளது. 11 ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள். 7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார். தனது மகளை அவரே மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்துள்ளார். அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (27) தாய்க்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார். குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தெர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் விடிய காலை ஆறு முதல் ஏழு மணி அளவில் சுய நினைவை அவர் இழந்ததாக தாயார் தெரிவித்தார். அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11.மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக செய்தி எமக்கு கிடைத்தது. குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார். இறந்த இளம் தாய் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை. குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனவுகளோடு படித்து திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து உயிரிழந்த இளம் தாய் இனி உயிருடன் மீளப் போவதில்லை. ஆனால் இறுதி நேரத்தில் கூடவே இருந்து பராமரித்து வந்தவரும் இறந்த பெண்ணின் தாயுமானவர் தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவிய போது, பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை நேற்று திங்கட்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது. அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும். எப்படி இருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189757
-
வங்கிக் கணக்குகளைக் குறி வைக்கும் புதிய சைபர் மோசடிகள் - சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பத்தூரை சேர்ந்த 32 வயது முபினாவின் செல்போனுக்கு கடந்த இரு வாரங்கள் முன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு செல்போனை பார்த்த அவருக்கு குறுஞ்செய்தியின் தகவல்கள் புரியாததால், தனது கணவரை அழைத்துள்ளார். முபினா ஃபாசிலுர்ஹ்மானின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அந்த குறுஞ்செய்தி கூறியது. அவர் 4.5 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி செலுத்தாததால், கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருப்பி செலுத்தும் வரை கணக்கை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. “வங்கிக் கணக்கில் சிலிண்டர் மானியம் ரூ.31, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, மற்றும் மகளிர் சுய உதவிக் குழு நிதி ஆகியவை மட்டுமே பரிவர்த்தனை செய்யப்படும். எங்கள் பணம் ரூ.2,300 ஐ தற்போது இழந்துள்ளோம்” என்கிறார் முபினாவின் கணவர் கே நியாஸ் அஹ்மத். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் மாதம் ரூ.15,000 சம்பளத்துக்கு வேலை பார்த்து வருகிறார் நியாஸ் அஹ்மத். மாதம் ரூ.4,500 வாடகைக்கு அவரும், முபினாவும் அவர்களின் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். மூன்று பிள்ளைகளும் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். “2012-ஆம் ஆண்டு என் மனைவிக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அவரது தந்தை சில ஆண்டுகள் முன்பு அவருக்கு பான் அட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். '' ''இந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக எம்.ஆர்.கே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் தொழில் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி வரி பாக்கி குறித்து வங்கியிடம் புகார் தெரிவித்த போதுதான் இந்த தகவல் எங்களுக்கு தெரிந்தது,” என்கிறார் நியாஸ் அஹ்மத். வங்கியிலும் காவல் துறையிலும் புகார் அளித்த பின், விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. “எங்கள் கணக்கில் பாக்கி உள்ள வரியை செலுத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அதே நேரம், கட்ட வேண்டாம் என்று இதுவரை எழுத்துபூர்வமாக கூறவில்லை. வங்கிக் கணக்கு இன்னமும் முடங்கி உள்ளது,” என்றார். இதே போன்ற மற்றொரு சம்பவத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ஆம்பூரில் ஒரு தனியார் காவலாளியின் மனைவிக்கு 6.65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. ஒருவரிடம் கடன் பெறும் போது அவரிடம் ஆதார் அட்டையை அடமானம் வைத்துள்ளார். ஒரு முறை இலவசமாக பான் அட்டை வாங்கி தருவதாக கூறியவரிடம் ஒரு விண்ணப்பத்தில் தகவல்களை வழங்கியுள்ளார். ஆனால் அவருக்கு பான் அட்டை கிடைக்கவில்லை. பின்னரே, அவருக்கு தெரியாமல் பான் அட்டை வாங்கியதும், அவரது பெயரில் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது. முபினாவின் வழக்கிலும் அவரது ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்களை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 'மோசடிகளுக்கு பின்னால் இயங்கும் நெட்வர்க்' இந்த வழக்குகளுக்கு பின்னால் இருப்பவை பெரிய நெட்வர்க் என்கின்றனர் இது போன்ற வழக்குகளை கையாண்டு வரும் சைபர் குற்ற வழக்கறிஞர்கள். இது ஒரு தனிநபரை குறி வைத்து செய்யப்படுவதில்லை, பல கோடி ரூபாய் மோசடியின் ஒரு சிறு பகுதியே இது என்கின்றனர். நூற்றுக்கணக்கான சைபர் குற்ற வழக்குகளை வாதாடியுள்ள வழக்கறிஞர் கார்த்திகேயன் இது போன்ற மோசடி கும்பல் எப்படி இயங்குகிறது என்று விளக்கினார். “சாதாரண நபர்களின் ஆதார் அட்டை விவரங்களைப் பெற்று தருவதற்கு ‘ரன்னர்’ (runner) எனப்படுபவர்கள் களத்தில் இருப்பார்கள். ஆதார் அட்டை விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை ஒருவருக்கு வழங்குவார்கள். நம்மிடம் என்ன இருக்கிறது இழப்பதற்கு என்று நினைத்து சிலர் தங்கள் ஆதார் விவரங்களை அளிப்பார்கள்.'' ''பின் அவர்களையே ‘ரன்னர்’ஆக மாற்றி, அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ஆதார் அட்டை விவரங்களை பெறுவார்கள். பெறப்படும் ஒவ்வொரு ஆதார் அட்டை விவரங்களுக்கும் ஒரு கமிஷன் வழங்கப்படும். இந்த விவரங்களை வைத்து பான் அட்டைக்கு விண்ணப்பித்துக் கொள்வார்கள்,” என்கிறார். "சிம் கார்டுகளை பெறுவதற்கு தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிமுறைகள் படி, சிம் கார்டை பெறுபவர், லைவ் ஆக நின்று புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். சிம் கார்டு ஆக்டிவேட் ஆகி மூன்று நாட்கள் வரை அதற்கு அவகாசம் உண்டு. லைவ் புகைப்படம் பதிவேற்றம் செய்யாவிட்டால், சிம் கார்ட்டு செயலிழந்து விடும். இந்த மூன்று நாட்களுக்குள் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை கொண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும்,” என்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மோசடி கும்பலால் பல அடுக்குகளில் ஆட்களைக் கொண்டு இது திட்டமிட்டு நடைபெறுகிறது என்கிறார் மற்றொரு சைபர் வழக்கறிஞரான ராஜேந்திரன். “இதில் அரசு நடைமுறைகளை தெரிந்த ஒருவர், வங்கி பரிவர்த்தனைகளை நன்கு அறிந்தவர் கண்டிப்பாக இருப்பார்கள். வங்கியில் வேலை செய்பவரும் இதில் சில நேரங்களில் உடந்தையாக இருக்கலாம்,” என்கிறார் அவர். “சமீப நாட்களில் உத்தர பிரதேச மாநிலம் மதுராவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள சிறு நகரத்திலிருந்து இயங்கும் கும்பலால் ஏமாற்றப்படும் புகார்கள் வருகின்றன. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், ஒரு மாநிலத்திலிருந்து உடனே வேறு மாநிலத்துக்கு தப்பி விடுவதற்கு வசதியாக இவர்கள், ராஜஸ்தான், அரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ள நகரத்திலிருந்து இயங்குகின்றனர். மூன்று மாதங்களில் ஆயிரம் ஆதார் அட்டைகளின் பி.டி.எஃப் நகலை கொடுக்க ஒருவருக்கு பெரிய தொகை கமிஷனாக வழங்கப்படும்,” என்றார். வங்கிக் கணக்குகளை தொடங்க ஒருவர் நேரில் செல்ல வேண்டும் என்பது சில வங்கிகளில் குறிப்பாக புதிதாக தொடங்கப்படும் தனியார் வங்கிகளில் கட்டாயம் இல்லை என்பதால், எளிதாக வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன என்கிறார் ராஜேந்திரன். வங்கிக் கணக்குகளைக் கொண்டு, உடனடி கடன் பெற்று அந்த பணம் வேறு கணக்குக்கு மாற்றப்படும். அல்லது, போலி நிறுவனங்கள் நடத்தவும், பிறரை ஏமாற்றி பணம் முதலீடு செய்ய வைக்கவும் இந்த கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பின் கடனை திருப்பி செலுத்துவதும், ஜி.எஸ்.டி வரி செலுத்துவதும் ஆதார் அட்டைக்கு சொந்தக்காரரின் பொறுப்பாகிவிடும். பட்டதாரிகளை ஏமாற்ற மற்றொரு உத்தி பொதுவாக வங்கிக் கணக்குகளை அதிகம் பயன்படுத்தாதவர்கள், பணத்தின் உடனடி தேவை அதிகம் உள்ளவர்களே இந்த வகையான மோசடிகளில் குறிவைக்கப்படுகின்றனர். பட்டதாரிகள், நடுத்தர வர்க்கத்தினரை குறி வைக்க வேறு சில வழிகள் கையாளப்படுகின்றன. “சென்னை அண்ணா நகரில் சமீபத்தில், ஐந்து லட்சம் ரூபாயில் ஒரு அலுவலகத்தை அமைத்தார் ஒருவர். அந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்காக ஆட்களை வேலைக்கு எடுக்க விளம்பரம் வழங்கபட்டது. அதைப் பார்த்து, விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சிலரை நேரில் அலுவலகத்துக்கு அழைத்து தங்கள் ஆதார் அட்டை விவரங்களையும் அதிலுள்ள தொலைபேசி எண்ணுக்கு கிடைக்கும் ஒ.டி.பி-யும் அலுவலக காரணங்களுக்காக தேவை என்று கூறி அதை பெற்றுவிட்டனர். பிறகு அந்த விவரங்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளை தொடங்கி, அதிலிருந்து பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டனர்,” என்று விவரிக்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன். இது போன்ற மோசடிகள் வெளிநாடுகளிலிருந்தும் இயக்கப்படுகின்றன என்கிறார் அவர். பட மூலாதாரம்,வழக்கறிஞர் கார்த்திகேயன் 'வங்கிகளுக்கு பொறுப்பு உண்டு' “ஒரு பரிவர்த்தனை சட்டவிரோதமாக இருக்கலாம் என்று வங்கி கருதுவதற்கான காரணங்கள் இருந்தால், அதை கண்காணித்து, சந்தேகிக்கும் வகையிலான பரிவர்த்தனை அறிக்கை (Suspicious Transaction Report) வழங்க வேண்டும். இது ரிசர்வ் வங்கியின் விதி. ஆனால் சில வங்கிகள் கண்காணிப்பதில்லை. ஒருவரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி, பல ஆண்டுகளாக ஒருவர் தொழில் நடத்தி வந்திருந்தால், அதை கண்காணிக்காதது கண்டிப்பாக வங்கியின் தவறுதான்,” என்கிறார் ராஜேந்திரன். முபினாவின் வழக்கு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், “தங்கள் ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்களை பல ஆண்டுகள் முன்பாக சிலரிடம் பகிர்ந்துள்ளனர். அவர்கள் யார், அவர்களுக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம். கடந்த ஆண்டு இதே போன்ற இரண்டு வழக்குகள் பதிவாகின. ஏமாற்றப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத நபர்கள் என்பது தெரிகிறது. அவர்களிடம் விவரங்களைப் பெற்றவர்கள் தனி நபர்களா, அல்லது ஒரே கும்பலை சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார். சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, துறை சார்ந்த நிபுணர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் சில அறிவுரைகள் : உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி எத்தனை செல்போன் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதை https://tafcop.sancharsaathi.gov.in/ என்ற மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு தெரியாமல் செல்போன் எண் பெறப்பட்டிருந்தால் அந்த இணையதளத்திலேயே புகார் அளிக்கலாம். வங்கிக் கணக்குகளில் என்ன பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை வாடிக்கையாளர் அவ்வபோது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். உங்களை ஏமாற்றி உங்கள் கணக்கிலிருந்து வேறு கணக்குக்கு பணம் மாற்றப்பட்டிருந்தால், உடனே அந்த வங்கிக் கணக்கை முடக்க வங்கிக்கு தெரிவிக்கலாம். அப்படி முடக்கப்பட்டால், அந்த கணக்கிலிருந்து பணத்தை மீண்டும் பெறுவது சட்ட ரீதியாக சாத்தியம். ஆதார், பான் அட்டை விவரங்களை தேவை இல்லாமல் யாரிடமும் வழங்குவதை தவிர்க்கலாம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பியை கவனம் இல்லாமல் யாரிடமும் கூறுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக வங்கிகள் இந்த ஒ டி பிக்களை கேட்க மாட்டார்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். வீட்டில் முதியவர்கள் பெயரில் ஆதார் அட்டை, பான் அட்டை இருந்தால், அவர்களது வங்கிக் கணக்குகளை அவ்வபோது கண்காணித்துக் கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால், உடனடியாக வங்கியை அணுக வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cd108zn795yo
-
'அதீத பணம், குறைவான வேலை நேரம்'- ஆனால்.. நார்வே மக்கள் குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிக்கிறார்களா?
பட மூலாதாரம்,ELISABETH OXFELDT படக்குறிப்பு,திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் நாட்டில் நிலவும் குற்ற உணர்வை தெரிந்துகொள்ளலாம் என்று எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜோர்ன் மாட்ஸ்லியன் பதவி, வணிக நிருபர், ஆஸ்லோ 7 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் வசதியான சூழலில் வாழும் மக்கள் பலர் ஒருவித குற்றவுணர்ச்சி கொண்டிருப்பதாக, எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். ஆஸ்லோ பல்கலைக்கழகத்தின் ஸ்காண்டிநேவியான் இலக்கிய பேராசிரியரான இவர், பணக்கார பின்னணியை கொண்ட நார்வே மக்கள் பலர் தங்கள் வசதியான வாழ்க்கையை, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுடன் குறிப்பாக வெளிநாடுகளில் கஷ்டப்படுபவர்களுடன் ஒப்பிட்டு வருந்துகின்றனர் என்கிறார். "மற்றவர்கள் துன்பமான சூழலில் வாழும் அதே உலகில் வசதியான வாழ்க்கையை அனுபவிப்பது பற்றிய குற்றவுணர்வு வெளிப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்," என்று அவர் விளக்கினார். நார்வே உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும். அதன் குறிப்பிடத்தக்க எண்ணெய் வளம்தான் இதற்கு முக்கிய காரணம். ரஷ்யாவுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய எண்ணெய் இருப்பை கொண்டிருக்கும் நாடு இது. நார்வே மக்கள் தொகையில் ஒரு தனிநபர் அடிப்படையில் அதன் பொருளாதார வலிமை அளவிட்டால், இது பிரிட்டனை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். மேலும் அமெரிக்காவை ஒப்பிடும்போதும் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ளது. நார்வே அரசு, உபரி தொகையுடன் அதன் பட்ஜெட்டை திட்டமிடுகிறது. காரணம், அதன் தேசிய வருமானம் அதன் செலவினத்தை விட அதிகமாக உள்ளது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ள பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நார்வே வேறுபட்டு நிற்கிறது. இஸ்ரேலுடன் மோதும் 'ஹெஸ்பொலா' எவ்வளவு சக்தி வாய்ந்தது?29 ஜூலை 2024 கலைப் படைப்புகளில் பிரதிபலிக்கும் குற்றவுணர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நார்வே 90 க்கும் மேற்பட்ட தனித்தனி எண்ணெய் வயல்களைக் கொண்டுள்ளது ஸ்காண்டிநேவியான் புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் தங்கள் காலத்தின் பரந்த கலாசாரத்தை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட். ''இந்த ஊடகங்கள் நார்வேயின் பணக்கார வாழ்க்கையால் ஏற்படும் குற்றவுணர்ச்சியை பற்றி பேசுவதை நான் அதிகளவு பார்க்கிறேன்’’ என்கிறார் அவர். ''நவீன இலக்கியம், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்ததன் மூலம், துன்பப்படும் மக்களுக்கு மத்தியில், அதிர்ஷ்டசாலிகளாக, மகிழ்ச்சியான அல்லது வசதியான வாழ்வை கொண்டிருப்பது மக்கள் மத்தியில் கவலை, அசௌகரியம், குற்ற உணர்வு அல்லது அவமானம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது என்பதை என்னால் உணர முடிந்தது” என்று விவரித்தார். "நார்வேயில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இந்த குற்றவுணர்ச்சி இல்லை என்றாலும், பலருக்கு இந்த உணர்வு இருக்கிறது." என்று பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். சமீபத்திய நார்வே நாடகங்களில் இடம்பெற்றுள்ள கதைக்களங்களில், சொகுசு வாழ்க்கை வாழும் மக்கள் பிரிவினர், தங்கள் குடியிருப்புகளின் அடித்தளத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழங்கும் சேவைகளை நம்பியுள்ளதாக காட்டப்படுகிறது. மேலும், ஏழை நாடுகளில் இருந்து வந்து குறைந்த ஊதியத்துக்கு தங்களது குழந்தைகளை பார்த்து கொள்ளும் பணியாளர்களை சார்ந்திருப்பதன் மூலம் , தங்கள் பணியிடத்தில் பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டதாக நார்வே பெண்கள் உணர்வது போன்ற கதைக்களமும் நாடகங்களில் இடம்பெற்றுள்ளது என்கிறார் பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட். மனு பாக்கர் ஒலிம்பிக்கில் சாதிக்க உத்வேகம் தந்த 'டாட்டூ' வாசகம் - என்ன தெரியுமா?28 ஜூலை 2024 கலையை பிரதிபளிக்கும் வழக்கம் நிஜ வாழ்க்கைக்கு உள்ளது. குழந்தைகளை பார்த்துக்கொள்ள மற்றும் வீட்டு வேலைகளை செய்ய வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்து பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு வேலை உரிமம் வழங்குவதை நிறுத்தியதாக நார்வே அரசாங்கம் மார்ச் மாதம் அறிவித்தது. விஜே என்ற பத்திரிக்கை, இந்த நடைமுறையை "மேற்குலக அடிமைத்தனம்" என்று அழைக்கிறது நார்வேயின் செல்வம் தார்மீக நடத்தையின் விளைவாக உருவானதா என்ற சந்தேகத்தை எழுப்பும் ஏராளமான தனிநபர்கள் மற்றும் குழுக்களும் நார்வே மக்களின் குற்ற உணர்வுகள் தூண்ட வழி வகுத்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில், தி பைனான்சியல் டைம்ஸ் ஒரு சிறப்பு செய்தியை வெளியிட்டது. இது ஆப்பிரிக்காவின் மொரெட்டேனியா கடற்கரையில் பிடிபட்ட முழு மீன்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மீன் எண்ணெய், நார்வேயின் மீன் பண்ணைகளில் எவ்வாறு தீவனமாக பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது. ஐரோப்பாவில் பெரிய சில்லறை விற்பனையாளர்களால் விற்கப்படும் நார்வே வளர்ப்பு மீன்கள், மேற்குஆப்பிரிக்காவில் உணவுப் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது என்று பத்திரிகை செய்தி கூறியது. சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க அரசு மற்றும் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ஃபீட்பேக் குளோபல்’, "நார்வே மீன் பண்ணை தொழில்துறை அதிகபடியான கடல் மீன்களை பயன்படுத்துவதால், மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது, இது ஒரு புதிய வகை உணவு காலனித்துவத்தை உருவாக்குகிறது" என்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நார்வே நீண்ட காலமாக கடலுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது பசுமை மாற்றத்தை விரும்பும் நார்வே நார்வே அரசாங்கம் இந்த பிரச்னையில் அளித்த பதிலில் " சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத தீவனம்’’ பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புவதாக குறிப்பிட்டது. மேலும் ’’உள்ளூர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மூலப்பொருட்களை’’ அதிகளவு பயன்படுத்துவது குறித்து பணியாற்றி வருவதாக கூறியுள்ளது. உண்மையில், நார்வே பசுமைப் பொருளாதாரத்திற்கான மாற்றத்தை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறது. எனவே இந்த "பசுமை மாற்றத்திற்கு" இடமளிக்கும் வகையில் பெட்ரோலியத் தொழிலுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும்போது மீன் வளர்ப்பு தொழிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஒன்றாக இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது. இதன்மூலம், உணவு மற்றும் மருந்துக்கான கடற்பாசி உற்பத்தி மற்றும் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற எதிர்கால கடல்சார் தொழில்களுக்கு மூலதனம், உழைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஆனால், குறைந்தபட்சம் இப்போதைக்கு, நார்வேயின் லாபகரமான பெட்ரோலியத் தொழில்துறைக்கு எதிராக குரல் எழுப்பும் விமர்சகர்களை அமைதிப்படுத்த இது போதுமானதாக இருக்காது. காலநிலை பிரசாரகர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக தொடர்ந்து துளையிடுவதை எதிர்க்கின்றனர். மற்ற விமர்சகர்கள் நார்வே அதன் எண்ணெய் வருவாயை அதிகம் நம்பியிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஒருபுறம், எண்ணெய் மற்றும் எரிவாயு அடிப்படையிலான செல்வத்தால், நார்வேயின் வேலை நேரம், ஒப்பீட்டளவில் இதே பொருளாதாரத்தை கொண்ட மற்ற நாடுகளை விட குறைவாக உள்ளது, எனவே நார்வேயின் தொழிலாளர் உரிமைகள் வலுவாக உள்ளது. ஆச்சரியப்படத்தக்க வகையில், உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, நார்வே நீண்ட காலமாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், முதலீட்டாளரும் ஓய்வுபெற்ற ஹோட்டல் தொழிலதிபருமான போரே டோஸ்டெர்ட், ''நார்வே எண்ணெய் வருவாயை முழுமையாக நம்பியிருப்பதால், மிக அதிகளவிலான அரசு பட்ஜெட், விரிவாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.'' என்கிறார் "இது நிலையான வளர்ச்சி அல்ல" என்பதை அவர் வலியுறுத்துகிறார். பட மூலாதாரம்,JAN LUDVIG ANDREASSEN படக்குறிப்பு,ஆண்ட்ரியாசென் நார்வே போரில் லாபமீட்டுகிறதா? நீண்ட காலமாக, நார்வே அதிகபடியாக பெருங்கடல்களை நம்பியிருக்கிறது. கடல்கள் பல நூற்றாண்டுகளாக உணவு மற்றும் ஆற்றலின் ஆதாரமாகவும், வேலை செய்யும் இடமாகவும், செல்வத்தை உருவாக்கும் ஆதாரமாகவும் உள்ளன. 1960 களின் பிற்பகுதியில்தான் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து, ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாத நாடாக இருந்த நார்வேயின் அதிர்ஷ்டத்தை மாற்ற உதவியது. அப்போதிலிருந்து, நார்வேயின் பெரும் எண்ணெய் வருமானம், நார்வேயின் மத்திய வங்கியின் ஒரு பகுதியாக இருக்கும் நோர்ஜஸ் வங்கியின் முதலீட்டு நிர்வாகத்தால் சர்வதேச அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. "எண்ணெய் நிதி" என்று அழைக்கப்படும் அதன் முக்கிய முதலீட்டு நிதியான 'அரசாங்க பென்ஷன் ஃபண்ட் குளோபல்', சுமார் 19,000 பில்லியன் குரோனர் ($1,719 பில்லியன்) மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ளது. ரஷ்யாவின் 2022 படையெடுப்பைத் தொடர்ந்து நார்வேயின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் மேலும் அதிகரித்தது. போரினால் நாடு லாபம் ஈட்டுவதாக விமர்சகர்கள் கூறினர். குறைந்தபட்சம் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் திடீர் லாபத்தை போதுமான அளவு பகிர்ந்துக் கொள்ளத் தவறிவிட்டது. பிரதமர் ஜோனாஸ் கஹ்ர் ஸ்டோர் போர் சூழலில் லாபமீட்டும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். நெருக்கடி காலத்தில் ஐரோப்பாவிற்கு தேவையான ஆற்றலை நார்வே வழங்கியது என்று குறிப்பிட்டார். நார்வே யுக்ரேனின் மிகப்பெரிய நிதி ஆதரவாளர்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நார்வே உள்ளூர் வங்கிகளின் கூட்டணியான ஈக்கா குழுமத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஜான் லுட்விக் ஆண்ட்ரியாசென், "நார்வே மக்கள் நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் பணக்காரர்களாகிவிட்டனர்" என்று கூறுகிறார். வெளிநாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் நார்வே உலகில் முன்னணியில் உள்ளது. "நார்வே மக்கள் நல்ல காரணங்களுக்காக தாராளமாக நிதி அளிப்பவர்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். எவ்வாறாயினும், யுக்ரேனில் ஏற்பட்ட மோதலின் விளைவாக ஏற்பட்டுள்ள நார்வேயின் கூடுதல் எண்ணெய் ஏற்றுமதிகளை சுட்டிக்காட்டும் ஆண்ட்ரியாசென், ''நார்வே தொண்டு செய்வதற்காக வழங்கப்படும் நன்கொடைகள் போர் மற்றும் துன்பங்களில் வாயிலாக எழும் கூடுதல் வருமானத்துடன் ஒப்பிடும்போது சிறிய அளவுதான்" என்று கூறுகிறார். பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுவது போல பல நார்வே மக்கள் குற்ற உணர்வுடன் இருக்கிறார்கள் என்ற கருத்துக்கு அவர்கள் உடன்படுகிறார்களா? "சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற சில விஷயங்களை தவிர, உண்மையில் அப்படி குற்றவுணர்ச்சி இருப்பதாக தெரியவில்லை" என்கிறார் ஆண்ட்ரியாசென். போரே டோஸ்டெர்ட் கூறுகையில் "எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை, நார்வேயில் பரவலாக குற்றவுணர்ச்சி இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை." என்றார். https://www.bbc.com/tamil/articles/cn074l0zpejo
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஒலிம்பிக் 2024: இந்தியாவிற்கு இரண்டாம் பதக்கம்- வரலாறு படைத்த மனு பாக்கர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி, கொரிய அணியை வீழ்த்தி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா 16-10 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் மனு பாகர்- சரப்ஜோத் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியான லீ வான்ஹோ - ஒ யே-ஜின்னை வீழ்த்தியது. ஒ யே-ஜின்தான் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில் தங்கம் வென்ற வீரங்கனையாவார். இது 2024 ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள இரண்டாம் பதக்கமாகும். இந்த பதக்கத்தின் மூலம் ஒலிம்பிக்கில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத அரிய சாதனையை மனு பாகர் படைத்துள்ளார். இதன்மூலம், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை மற்றும் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மனு பாகர். இதற்கு முன்பு சனிக்கிழமை நடந்த (ஜூலை 28) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசியின் வளரும் வீராங்கனை-2020 விருது வென்றவர் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர் 2020-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'வளரும் வீராங்கனை'க்கான விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிபிசியின் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருதுகள் பட்டியலில் வளரும் இளம் வீராங்கனை ஒருவர் 'பிபிசி வளரும் வீராங்கனை' விருது வழங்கி கவுரவிக்கப்படுவார். சிறந்த இந்திய வீராங்கனைகளையும் அவர்களது சாதனைகளையும் கௌரவிப்பதே 'பிபிசி சிறந்த இந்திய வீராங்கனை' விருதின் நோக்கம். அத்துடன், வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதிப்பதும், அவர்களது சாதனைப் பயணத்தை உலகிற்கு தெரியப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும். 16 வயதில் 2 தங்கம் வென்ற மனு பாக்கர் ஹரியானா ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு. இவரது தாய் பள்ளி ஆசிரியை, தந்தை மரைன் என்ஜினியர். 2018-இல் மனு மெக்சிகோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பு (ISSF) போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்றார். பிறகு இரண்டாவது தங்கப்பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் (Mixed) வென்றார் மனு. 16 வயதில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் மனு. இந்தச் சாதனையைப் படைத்த இளம் வீராங்கனை மனு ஆவார். அப்போதைய போட்டிக்குப் பிறகு பிபிசியின் நிருபர் சரோஜ் சிங், மனுவின் தந்தை ராம் கிஷன் பாக்கரிடம் பேசினார். இந்தக் கலந்துரையாடலில், தான் ஒரு மரைன் என்ஜினீயர் என்றும், அந்த வேலையில் இருந்து நின்றுவிட்டதாகவும் கூறினார் ராம் கிஷன். மகளுக்காக வேலையை விட்ட தந்தை பள்ளி பயிலும் போது முதல் முறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட மனு, துல்லியமாகக் குறிவைத்து சுட்டதை கண்டு ஆசிரியர்கள் வியந்தனர் என மனுவின் தந்தை ராம் கிஷன் கூறுகிறார். பிறகு, பயிற்சி மேற்கொண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளால் பங்கெடுக்கத் துவங்கினார். ஆனால், மனு உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது பிரச்னையாக இருந்தது. மேலும், அப்போது அவர் வாகனம் ஓட்டும் உரிமத்தைப் பெறுவதற்கான வயதை எட்டவில்லை. ஆகவே, அவர் போட்டி நடக்கும் இடங்களுக்குத் தனியாக வாகனம் ஓட்டிச் செல்ல இயலவில்லை. எனவே, மகளின் கனவை நினைவேற்ற மனுவின் தந்தை ராம் கிஷன் தனது வேலையை விட்டு நின்றுவிட்டார். வேலையை ராஜினாமா செய்த பிறகு, மனு பாக்கரை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார் ராம் கிஷன். "துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்குபெற நிறைய பணம் செலவாகும். ஒரு பிஸ்டலின் விலை 2 லட்சம் ரூபாய். இதுவரை நாங்கள் மனுவுக்காக 3 துப்பாக்கிகள் வாங்கியுள்ளோம். மனுவின் விளையாட்டுக்காக மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தோம்," என்று ராம் கிஷன் பாக்கர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிஸ்டல் உரிமம் பெறப் போராடிய மனு இந்தியாவுக்காக மெக்சிகோவில் 2 தங்கப்பதக்கம் வென்ற போது மனு பாக்கர் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் பெற இரண்டரை மாதங்கள் காத்திருந்துள்ளார். பொதுவாக, வீரர்கள் ஒரே வாரத்தில் இதற்கான உரிமம் பெறுவர். அந்த நிகழ்வினை நினைவுகூர்ந்து பெரிய ராம் கிஷன் பாக்கர், "2017-ஆம் ஆண்டு மே மாதம், வெளிநாட்டில் இருந்து ஒரு பிஸ்டலை இறக்குமதி செய்ய விண்ணப்பித்திருந்தோம். ஆனால், எங்கள் விண்ணப்பத்தை ஜாஜர் மாவட்ட நிர்வாகம் நிராகரித்தது,” என்றார். "பின்னர் இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. அப்போது உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் ‘தற்காப்புக்காக’ என்று காரணம் குறிப்பிடப்பட்டது தெரியவந்தது,” என்றார். இதன் பிறகே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயம் குறித்து விசாரித்து, 7 நாட்களில் உரிமம் வழங்கப்பட்டது. மனு பாக்கரின் வகுப்பு தோழர்கள், இவரை ‘ஆல்-ரவுண்டர்’ என அழைத்து வந்துள்ளனர். ஏனெனில், மனு பாக்கர் குத்துச்சண்டை, தடகளம், ஸ்கேட்டிங், கராத்தே, ஜூடோ என பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து வந்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c0ve3x0wj12o
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஒலிம்பிக் நீச்சல் : நீச்சல் போட்டியின் முதலாம் சுற்றில் இலங்கையின் கங்கா முன்னிலை Published By: DIGITAL DESK 7 29 JUL, 2024 | 04:34 PM (ஆர்.சேதுராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை கங்கா செனவிரத்ன, தனது குழுவில் முதலிடம் பெற்றார். பாரிஸில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் மல்லாக்கு நீச்சல் முதல் சுற்றுப்போட்டியில் கங்கா செனவிரத்ன பங்குபற்றினார். முதலாவது குழுவில் இடம்பெற்ற கங்கா, 1:04.26 எனும் நேரப்பெறுதியுடன் அக்குழுவில் முதலிடம் பெற்றார். எனினும், அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு இந்நேரப் பெறுதி போதுமானதாக அமையவில்லை. 16 பேர் மாத்திரமே அரை இறுதிக்கு தெரிவுசெய்யப்படும் நிலையில் கங்கா 30 ஆவது இடத்தையே பெற்றார். https://www.virakesari.lk/article/189705
-
பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதல் - 9 பேர் காயம்
பிரிட்டன் சௌத்போர்ட் கத்திக்குத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு : 6 சிறுவர்களின் நிலை கவலைக்கிடம்! Published By: DIGITAL DESK 3 30 JUL, 2024 | 09:59 AM பிரிட்டனின் சௌத்போர்ட்டில் நடத்தப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளன. இந்த கத்தி குத்து சம்பவத்தில் மேலும் 09 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேலும் இரு பெரியவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுவர்களின் கலை நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திகுத்தை மேற்கொண்ட 17 வயதான நபரொருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர். எதற்காக இந்த கத்தி குத்து நடத்தப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை என்பதுடன், இது தீவிரவாத தாக்குதல் கிடையாது என அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/189755
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாரிஸ் ஒலிம்பிக் – பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடம்! 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வருகின்றன. இதன்படி இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் 6 தங்கங்களை வென்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. ஜப்பான் இதுவரை 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரான்ஸ் இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது. சீனா 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாமிடத்தில் உள்ளது. நான்காம் இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா 5 தங்கம், 4 வெள்ளி அடங்கலாக 9 பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர தென்கொரியா 5ஆம் இடத்திலும், அமெரிக்கா 6ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307014
-
நாசா கைவிட்ட நிலா ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்குமா? ரூ.3,767 கோடி ரோவர் என்ன ஆகும்?
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,வைபர் ரோவர் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பிறகு நாசா அந்த திட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 29 ஜூலை 2024 நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வைபர் ரோவர் (VIPER) என்ற திட்டத்தின் மூலமாக ஒரு இயந்திர ரோவரை நிலவுக்கு அனுப்பவிருப்பதாக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 2021இல் அறிவித்திருந்தது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நாசாவின் இந்தத் திட்டம் இப்போது கைவிடப்பட்டுள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3,767.51 கோடிகள்) செலவில் வைபர் இயந்திர ரோவர் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பிறகு நாசா இந்த முடிவை எடுத்துள்ளது. முழுமையடைந்த ரோவரை ஆர்வமுள்ள விண்வெளி நிறுவனங்களுக்கு கொடுத்துவிட அல்லது அதன் பாகங்களை நாசாவின் எதிர்கால திட்டங்களுக்கு பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. நிலவு குறித்த சர்வதேச ஆய்வுகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட இந்தத் திட்டம், அதன் இறுதிக் கட்டத்தில் கைவிடப்பட்டது ஏன்? இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இந்தியாவிற்கும் பங்கு உள்ளது, அது என்ன? இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் இந்தத் திட்டத்தை தொடர முடியுமா? நாசாவின் வைபர் ரோவர் திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் தென் துருவத்தின் மேற்கு முனையில் நோபில் க்ரேட்டர் என்கிற பகுதியில் வைபர் ரோவரை தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது. வைபர் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டபோது, அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. நிலவில் தண்ணீர் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அது நிலவு குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கும், நிலவில் மனிதர்களை குடியேற்றுவது தொடர்பான முயற்சிகளுக்கும் பயனளிக்கும் என்பதே அதற்குக் காரணம். "நிலவில் பனி அடுக்குகள் எங்கு இருக்கின்றன? அதில் என்னவெல்லாம் இருக்கின்றன? எத்தனை அடி ஆழத்தில் பனிக்கட்டிகள் இருக்கின்றன? போன்ற கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள வைபர் ரோவர் உதவும்" என நாசா முன்னர் கூறியிருந்தது. நிலவில் தென் துருவத்தின் மேற்கு முனையில் நோபில் க்ரேட்டர் என்கிற பகுதியில் வைபர் ரோவரை தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது. இந்த நோபில் க்ரேட்டர் (Nobile crater) என்பது சுமார் 79.27 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு பள்ளமாகும். இந்தப் பகுதி எப்போதும், சூரிய ஒளி படாமல் நிழலில் தான் இருக்கும். நிலவின் தென் முனையில் இதுபோல மேலும் சில க்ரேட்டர்கள் (பள்ளங்கள்) உள்ளன. இந்தப் பகுதிகளில் பல பில்லியன் டன் பனிக்கட்டிகள் உறைந்து கிடப்பதாகவும், அந்தப் பகுதிகள் சூரிய ஒளியையே பார்த்ததில்லை என்றும், அங்கு -223 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெப்பநிலை இருக்கலாம் என்றும் இதுவரையிலான நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் கிடைத்த ஆதாரங்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவின் தென் முனையில் உள்ள க்ரேட்டர்கள் (பள்ளங்கள்) அப்பகுதிகள் எப்போதுமே நிழலில் இருப்பதால், மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டிகள் பாதுகாக்கப்பட ஏதுவான சூழலும், குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையும் நிலவுகிறது. இத்தகைய பகுதிகளில் ஒரு ரோவரைத் தரையிறக்கி, தொடர்ந்து ஆய்வு செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம். கடுங்குளிரையும், அதேநேரத்தில் வெப்பத்தையும் தாங்கக்கூடிய வகையில் வைபர் ரோவர் வடிவமைக்கப்பட்டது. முகப்பு விளக்குகளோடு (ஹெட் லைட்) உருவாக்கப்பட்ட நாசாவின் முதல் ரோவர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்க அரசால் 433.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 3,625.18 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2021ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால், ரோவர் மற்றும் லேண்டரை (நிலவில் ரோவர் தரையிறங்க உதவும் கருவி) உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திட்டம் 2025, செப்டம்பரில் தான் முழுமையடையும் என்றும், கூடுதலாக 176 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 1,473.52 கோடி) தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் காலதாமதம் மற்றும் அதிக பட்ஜெட் ஆகியவற்றை காரணம் காட்டி இத்திட்டத்தைக் கைவிடுவதாக சில நாட்களுக்கு முன்பாக நாசா அறிவித்தது. "இது மிகவும் கடினமான முடிவாகும், ஒரு நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல் காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுக்கிறோம்" என்று நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் கூறியிருந்தார். ‘இந்தியாவின் சந்திராயன்-1 தான் தொடக்கப்புள்ளி’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சந்திராயன்- 1 அனுப்பிய தரவுகளின் மூலம், நிலவின் மேற்பரப்பில் ஹைட்ராக்சில் வடிவத்தில் நீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியது. வைபர் திட்டத்தை நாசா கைவிட்டது குறித்தும், இத்திட்டத்தில் இந்தியாவிற்கு இருக்கும் தொடர்பு குறித்தும் பிபிசி தமிழிடம் பேசினார், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன். “வழக்கமாக தண்ணீர் என்றால் ஹைட்ரஜன் டை ஆக்சைடு (H2O)தான். ஆனால் ஹைட்ராக்சில் (Hydroxyl- OH) என்று மற்றொரு வகை உள்ளது. நிலவின் மேற்பரப்பில் இந்த ஹைட்ராக்சில் மூலக்கூறுகள் இருப்பதை சந்திராயன் 1 கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு தான் நிலவு குறித்த ஆய்வுகளில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது” என்கிறார். இந்தியாவின் சந்திராயன்-1 அக்டோபர் 2008இல் விண்ணில் ஏவப்பட்டது. இதில் நாசாவின் நிலா கனிமவியல் வரைவி எனும் கருவியும் இணைக்கப்பட்டிருந்தது (Moon Mineralogy Mapper- M3). இந்தக் கருவி அனுப்பிய தரவுகளின் மூலம், சந்திரனின் மேற்பரப்பில் ஹைட்ராக்சில் வடிவத்தில் நீர் இருப்பதை நாசா செப்டம்பர் 25, 2009 அன்று உறுதிப்படுத்தியது. நிலவில் எப்படி நீர் வந்திருக்கக் கூடும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "விண்கற்களில் 50% உறைபனி இருக்கும். நிலவின் மீது இந்த விண்கற்களும் பாறைகளும் மோதிக் கொண்டே இருக்கும். இதனால் நிலவின் பரப்பில் பள்ளங்கள் உருவாகின்றன. இந்தப் பள்ளங்கள் பெரும்பாலும் இருட்டாகவே இருக்கின்றன. அதனால் வெப்பம் படாமல், அவற்றில் இருக்கும் உறைபனி உருகாமல் இருக்கிறது," என்றார். ஆனால், விண்கற்களில் எப்படி உறைபனி வந்தது என்பதற்கு இன்னும் சரியான விளக்கம் இல்லை என்றும் கூறுகிறார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன். வைபர் திட்டம் வெற்றி பெற்றிருந்தால் பூமியில் எப்படி தண்ணீர் வந்தது என்ற கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கும் என்கிறார் அவர். ‘எரிபொருள் ஆதாரமாக நிலவின் நீர்' பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,நிலவின் மேற்பரப்பு நிலவில் கிடைக்கும் ஹைட்ராக்சிலை, ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் என பிரித்துவிட்டால் அதை கிரயோஜெனிக் எரிபொருளாக ராக்கெட்டிற்கு பயன்படுத்தலாம் மற்றும் விண்வெளி வாகனங்களுக்கான எரிபொருளை நிலவில் நிரப்பினால் விண்வெளி பயணத்தின் செலவை கணிசமாக குறைக்கலாம் என்ற நோக்கிலும் நாசா இத்திட்டத்தை முன்னெடுத்தது. இதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன், “நாசா, தன் வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவுக்கு ஒரு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது. நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியே அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ளது.” என்று கூறினார். அமெரிக்க அரசால் இந்த ஆண்டு நாசாவிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 24.875 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2,09,306.26 கோடிகள்). ஆனால் இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2 சதவீதம் குறைவு மற்றும் நாசா கோரிய நிதியை விட இது 8.5 சதவீதம் குறைவு. யுக்ரேன்- ரஷ்யா போர் மற்றும் பாலத்தீனம் - இஸ்ரேல் போரில் அமெரிக்காவின் தலையீடுகளால் ஏற்பட்ட வீண் செலவுகள் தான் நாசாவின் திட்டங்களைப் பாதித்துள்ளன என்கிறார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன். வைபர் திட்டத்தைத் தொடர 'இஸ்ரோ'வால் முடியுமா? படக்குறிப்பு,இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன். தொடர்ந்து பேசிய பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன், “வைபர் ரோவரை பல பாகங்களாக பிரித்து, அதை வேறு ஏதாவது விண்வெளித் திட்டத்திற்கு பயன்படுத்தலாமா என நாசா யோசிக்கிறது, இல்லையென்றால் அதை வேறு ஏதாவது நாடுகளுக்கு விற்றுவிடலாமா என்றும் நினைக்கிறது.” “தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேரவும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த திட்டம் எந்த திசையில் போகும் என்பது இப்போதைக்குச் சொல்ல முடியாது.” என்று கூறினார். இந்தியா விரும்பினால் இஸ்ரோவால் இத்திட்டத்தைத் தொடர முடியுமா என கேட்டபோது, “சந்திராயன் போன்ற வெற்றிகரமான திட்டங்களை குறைந்த செலவில் செயல்படுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது, ஆனால் இந்த வைபர் திட்டத்தின் பட்ஜெட் மிகவும் அதிகம் என்பதால் இஸ்ரோவால் இதில் இணைய முடியாது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், சீனா, ரஷ்யா ஆகிய மூன்று மையங்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.” என்று கூறினார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன். இந்தியாவிடம் இதற்கான ராக்கெட்டோ அல்லது லேண்டரோ கிடையாது என்று கூறிய அவர், ஆனால் நிலவில் நீர் குறித்த இந்தியாவின் ஆய்வுகள் தொடரும் என்றும் சந்திராயன்-4 திட்டத்திலும் நிலவில் நீர் இருப்பது குறித்த ஆய்வுகள் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c4ngvw17zr0o
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
கட்சி அரசியலை ஒதுக்கி ஒன்றுபடுவதன் முக்கியத்தை புரிந்த எம்.பி.க்களுக்கு நன்றி: ஒற்றுமையுடன் எம்மால் சாதிக்க முடியும் : ஜனாதிபதி 30 JUL, 2024 | 06:29 AM (எம்.மனோசித்ரா) நாட்டைக் கட்டியெழுப்பும் கடினமான பயணத்தில் கட்சி அரசியலை விடுத்து தன்னுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செழிப்பான இலங்கையை உருவாக்குவதற்கு ஏனையோரையும் தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆரம்பத்திலிருந்தே என்னுடன் நின்றவர்களின் ஆதரவு நாட்டை மீட்பதற்காகான மு தல் படிகளை சாத்தியமாக்கியது. நாடு நெருக்கடியில் இருந்தபோது, எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் போராடும்போது என்னையும் எனது திட்டத்தையும் நீங்கள் நம்பினீர்கள். சவால்கள் சமாளிக்க முடியாததாகத் தோன்றியபோது உங்களின் அர்ப்பணிப்பு எனக்கு ஊக்கமளித்தது. இந்த பயணத்தில் இடைநடுவில் இணைந்த எம்.பி.க்களுக்கும் முன்னேற்றத்தைக் கண்டு, மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கும் நன்றி. இப்போது எங்களுடன் இணைந்திருப்பவர்களின் ஆதரவு நாங்கள் செல்லும் நேர்மறையான திசையை காட்டுகிறது. கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபடுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஒன்றாக, நாம் இன்னும் சாதிக்க முடியும். இன்னும் எங்களுடன் சேராத எம்.பி.க்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். செழிப்பான, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது பணி தொடர்கிறது. மேலும் அதனை நனவாக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். இந்த பயணம் எளிதானது அல்ல, ஆனால் ஒன்றாகச் சேர்ந்து அதனை இலகுவாக்கலாம். அனைவரும் ஒன்றிணைந்து நம்பிககையான இலங்கையை உருவாக்குவோம். நமது நாட்டின் எதிர்காலத்திற்கான உங்கள் தைரியமான அர்ப்பணிப்புக்கு நன்றி. https://www.virakesari.lk/article/189747
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
11 ஆவது வாய்ப்பாக என்னண்ணை?! என்னவோ lot என்று எழுதியிருக்கு!
-
பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதல் - 9 பேர் காயம்
குருதிவழிந்தோட பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஒடிய பெற்றோர்-சௌத்போர்ட் கத்திக்குத்து தாக்குதலை பார்த்தவர்கள் தகவல் 29 JUL, 2024 | 09:10 PM பிரிட்டனின் சௌத்போர்ட்டில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இரத்தக்காயங்களுடன் நடனவகுப்பிலிருந்து சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். நடனவகுப்பிலிருந்து இரத்தக்காயங்களுடன் காணப்பட்ட பிள்ளைகளை தூக்கியவாறு பெற்றோர் வெளியே ஒடியதையும் அவர்களை காப்பாற்ற முடிந்ததையும் பார்த்ததாக அலைனா ரிலே என்பவர் தெரிவித்துள்ளார். பெற்றோர் செயற்கை சுவாசத்தை வழங்க முற்பட்டதை நான் பார்த்தேன்,அவர்கள் பிள்ளைகளை கரங்களில் பற்றியிருந்தனர் அந்த வகுப்பு முடிவடையும் தருணத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நான் ஒருபோதும் அவ்வாறான அலறல்களை கேட்டதில்லை, எனஅவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189741
-
கோலான்குன்றின் மீது ரொக்கட் தாக்குதல் - 12 சிறுவர்கள் உட்பட பல இஸ்ரேலியர்கள் பலி – பதில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
Israel: கால்பந்து விளையாடிய குழந்தைகள் மீது பாய்ந்த ராக்கெட்; பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
-
பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதல் - 9 பேர் காயம்
29 JUL, 2024 | 08:13 PM பிரிட்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர் சௌத்போட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது என அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. லிவர்பூலில் உள்ள ஆல்டெர் சிறுவர் வைத்தியசாலை உட்பட மூன்று வைத்தியசாலையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது என சிறுவர் மருத்துவமனை அறிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் ஆரம்ப பாடசாலை மாணவர்களிற்கான யோகா நடன நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/189736
-
தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை
தேசபந்து தென்னகோன் பதவியை இராஜினாமா செய்ய கோரி பொலிஸ் தலைமையகத்தில் மகஜர் Published By: VISHNU 29 JUL, 2024 | 07:19 PM தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவுக்கு அமைய பொது மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி தொடர்ந்தும் அவரை பொலிஸ் திணைக்களத்தில் வைத்து போசிப்பதால் எந்த பயனும் கிடையாது எனவும் உடனடியாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சந்துன் எஸ்.ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் திங்கட்கிழமை (29) பொலிஸ் தலைமையகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்தனர். அத்துடன் அப்பகுதியில் அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க முற்பட்ட போது பொலிஸார் அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் அவரிடமிருந்த மகஜரையும் பொலிஸார் பலவந்தமாக பறித்தெடுத்தனர். (படப்பிடிப்பு-ஜே.சுஜீவ குமார்) https://www.virakesari.lk/article/189735
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளியில் 50 நாட்களை கடந்த சுனிதா வில்லியம்ஸ்: பூமிக்கு திரும்புவது எப்போது? சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அவர்களது ஒரு வார கால விண்வெளி பயணம் தற்போது சுமார் 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்தச் சூழலில் அவர்கள் விண்வெளிக்கு பயணித்த போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்றவற்றுக்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் நாசா இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நியூ மெக்சிக்கோவில் பொறியாளர்கள் தீவிர சோதனை (டெஸ்ட்) மேற்கொண்டுள்ளனர். அதில் த்ரஸ்டர்களுக்குள் அதிக வெப்பம் ஏற்படுவது சிக்கலுக்கு காரணம் என அறிந்துள்ளனர். மேலும், பூமிக்கு திரும்பும் போது ஸ்டார்லைனரை மேனுவலாக கன்ட்ரோல் செய்வது தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகளை விஞ்ஞானிகள் எடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது. இருந்தும் ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்ற காரணங்களால் அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், அவர்கள் பூமிக்கு திரும்புவது எப்போது என்றும் தெரியாமல் உள்ளது. அவர்கள் பயணித்த விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்களா அல்லது வேறு விண்கலத்தில் வர உள்ளார்களா என்பதும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் 90 நாட்கள் வரை மட்டுமே விண்வெளியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/306998
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஒலிம்பிக்கில் மற்றுமொரு சம்பவம் – தேசிய கீதத்தை மாற்றி இசைத்ததால் சர்ச்சை! 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்று வருகின்றன. கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியின்போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கூடைப்பந்து போட்டியொன்றின்போது தென் சூடான் தேசிய கீதத்திற்குப் பதிலாக சூடான் தேசிய கீதத்தை இசைத்தமைக்காகவே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின்போது தென்கொரிய அணியைத் தவறுதலாக வட கொரியா என அழைத்தமை தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியிருந்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்று கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. எனினும் இந்நிகழ்வு கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் செய்யப்படவில்லை எனவும் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஒரு செய்தி மாநாட்டில் பாரிஸின் ஒலிம்பிக் செய்தித் தொடர்பாளர் ஆன் டெஸ்காம்ப்ஸ் கூறியிருந்தார். https://thinakkural.lk/article/306983
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
29 JUL, 2024 | 06:22 PM ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெற்றது. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தகவல்களை வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189724
-
நடுக்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து குதித்த 4 பேர் உயிருடன் மீண்டது எப்படி?
பட மூலாதாரம்,TAIWANESE COAST GUARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜாய் சியாங், கெல்லி என்ஜி பதவி, தைபே மற்றும் சிங்கப்பூரிலிருந்து பிபிசி செய்தியாளர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அந்த கப்பல் மூழ்கி கொண்டிருந்தது… உள்ளே இருந்தே 9 பேரும் உயிரைக் காத்துக் கொள்ள கடலில் குதித்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். அதனால், இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடி அவர்கள் கடலில் குதித்தனர். வியாழக்கிழமை மதியம், தைவானின் கடலோரப் படையினர் ஒரு குழுவை சேர்ந்த 4 பேர் மியன்மார் நாட்டு எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தனர். கப்பலின் கேப்டன் வெள்ளிக்கிழமை அன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மீதமுள்ள நான்கு பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் தான்சானியா கொடி தாங்கிய ஃபு ஷுன் (Fu Shun) என்ற சரக்கு கப்பலில் பணியாற்றினர். கெய்மி (Gaemi) சூறாவளி தாக்கியதால் அந்த கப்பல் கவிழ்ந்தது. உயிர் பிழைத்த நால்வரும் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் மொத்தம் 9 பேர் இருந்தோம். 5 மற்றும் 4 பேர் கொண்ட இரு குழுக்களாக பிரிந்து, நாங்கள் கடலில் குதித்தோம்" என்று கூறினர். அனைவரும் உயிர் காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்) அணிந்திருந்தனர். 5 பேர் கொண்ட குழுவில் 3 பேர் அணிந்திருந்த உயிர் காக்கும் உடையை அலைகள் அடித்துச் சென்றுவிட்டன. வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் மீட்பு பணியினர் அந்த குழுவில் இருந்த கப்பல் கேப்டனின் உடலைக் கண்டுபிடித்தனர். அந்த குழுவில் இருந்த மற்ற 4 பேரும் என்ன ஆயினர் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. மற்றொரு குழுவான, 4 பேர் கொண்ட குழுவில் இருவர் தைவானின் கவுஷியாங் (kaohsiung) கடற்கரையில் கரை ஒதுங்கினர். மற்ற 2 பேரை தைவான் கடலோர படையினர் மீட்டனர். உயிர் பிழைத்தவர்களில் ஒருவர், கடலில் குதித்த பிறகு, தனது கடவுச்சீட்டு இருந்து பையை எடுக்க மீண்டும் நீந்தி சென்றதாக கூறியிருந்தார். உயிர் பிழைத்த மற்றொருவர், "கப்பல் மூழ்கிய செய்தியை கடலோர காவல்படை மூலம் அறிந்ததும் நான் இறந்திருப்பேன் என தனது தாயும், மனைவியும் நினைத்திருப்பார்கள்" என கூறினார். அலைகளின் தாக்கம் பெரிதாக இருப்பதால், மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,TAIWANESE COAST GUARD படக்குறிப்பு,உயிர் பிழைத்தவர்களுக்கு முதல் உதவி அளிக்கும் கடலோர காவல்படை பணியாளர்கள் கடலோர காவல்படை பகிர்ந்த புகைப்படங்களில், உயிர் பிழைத்தவர்களை கதகதப்பாக வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெரிந்தது. உயிர் பிழைத்தவர்களின் கை மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களுக்கு கடலோர காவல்படை பணியாளர் மருந்துவ உதவி அளித்தார். வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் 8 சரக்கு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார். தைவான் மற்றும் ஃபிலிப்பைன்ஸில் பேரழிவை ஏற்படுத்திய இந்த சூறாவளியின் தாக்கத்தால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூறாவளி சீனாவின் புஜியான் மாகாணத்தில் கரையை கடந்தது. பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c0jqxen7y9jo
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
அதிக தங்கம் எடுத்த நாட்டைத் தானே முதலாவதாக போடுவார்கள் அண்ணை?! உத்தியோகபூர்வ தளத்தில் அவ்வாறு தான் உள்ளது. https://olympics.com/en/paris-2024/medals
-
நாம் மீட்புப் பெற வேண்டுமெனில் ஊழல் மிக்க ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும் - அநுரகுமார
Published By: DIGITAL DESK 7 29 JUL, 2024 | 04:59 PM நாங்கள் மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும். எல்லாத்துறையிலும் வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும் : அநுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்தின் மாத்தறை மாவட்ட கருத்தரங்கு கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாத்தறை பர்ள் பெலஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு மேலும் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க, நாங்கள் நீண்ட காலமாக வாக்குகளை அளித்திருக்கிறோம். வாக்குகளை அளிக்கும்போது அரசாங்கமொன்றை அமைக்கும்போது பிரஜைகளிடம் நிலவிய எதிர்பார்ப்புகள் ஈடேறியுள்ளனவா? எமது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியை நோக்கினாலும், அரச மற்றும் ஏனைய ஒவ்வொரு துறையிலும் தோன்றியுள்ள சீர்குலைவுகளை நோக்கினாலும் நிகழ்ந்திருப்பது முன்னேற்றமல்ல. பின்னடைவுதான். நாங்கள் இந்த தலைவிதியிலிருந்து மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தது 1970 இல். 54 வருடங்களாக பாராளுமன்றத்தில். ரணில் வந்தது 1977 இல். 47 வருடங்கள் பாராளுமன்றத்தில். தினேஷ் வந்தது 1983 இல். 41 வருடங்கள் பாராளுமன்றத்தில். பாராளுமன்றத்தில் உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்கள். அவர்களை மேலும் பரீட்சித்து பார்க்கவேண்டியதில்லை. நாங்கள் பல தசாப்தங்களாக அந்த மூடைகளை அவிழ்த்துப் பார்த்திருக்கிறோம். நாங்கள் அந்த வழமையான அரசியல் பாசறையிலிருந்து நவீன அரசியல் இயக்கமொன்றின் கையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாகியிருக்கிறது. நாங்கள் இந்த அழிவுகளை எங்கள் கண்ணெதிரே காண்கிறோம். தென்கொரியாவின் வளர்ச்சிகள், வியட்நாமின் வளர்ச்சிகள், இந்தியாவின் வளர்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் 80 ஆம் தசாப்தத்தில் குடை உற்பத்தியும் சவர்க்கார உற்பத்தியும் இருக்கவில்லை. அப்படி இருந்த இந்தியாவையும் இன்று சந்திரனுக்கு செல்கின்ற இந்தியாவையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிராந்தியத்திற்கு மோட்டார் வாகனங்கள், ஔடதங்கள், உணவு, விதையின உற்பத்தியை செய்துவருகின்ற இந்தியாவை இப்போது நாங்கள் காண்கிறோம். இந்த அரசுகள் 20 ஆம் நூற்றாண்டில் உருவாகிய தொழில்நுட்பத்தை நன்றாக உறிஞ்சி எடுத்து திட்டங்களை வகுத்து அமுலாக்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோலவே நாங்கள் அறிந்த காலத்திற்குள் எமது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அதன் ஆரம்ப படிமுறைதான் இந்த ஜனாதிபதி தோ்தலில் தேசிய மக்கள் சக்தியின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்விதமாக எங்கள் பிள்ளைகள் வாழக்கூடாது. உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்கு இலக்காகிய நாடாக மாறக்கூடாது. அனைவரும் ஒன்றுசோ்ந்து புதிய அரசியல் பயணமொன்றில் எமது நாட்டை பிரவேசிக்கச் செய்ய வேண்டும். முதலில் இந்த நாட்டை நாகரிகமான ஒரு நாடாக மாற்றியமைக்க வேண்டும். மானிட கூர்ப்பின் தொடக்க நிலையில் எங்களுடைய மானுடன் மரத்திலிருந்து கீழே இறங்கிய பின்னர் நிர்க்கதியான விலங்காக மாறினான். அந்த நிர்க்கதி நிலைமை எம்மை கூட்டான வாழ்க்கையின் பால் தூண்டியது. ஒரு கூட்டமாகவே வேட்டையாடச் சென்றார்கள். வேட்டையை கூட்டமாகவே அனுபவித்தார்கள். பின்னர் பலம்பொருந்திய ஆள் தலைவனானான். அந்தக் கூட்டத்தில் தலைவனே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தான். நீண்டகாலமாக மனிதனின் போராட்டங்கள் எழுச்சிகள் மூலமாக அவை நிறுவனமென்ற வகையில் கட்டியெழுப்புதல் தொடங்கியது. சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்றமும் சட்டத்தை அமுலாக்குவதற்காக நிறைவேற்றுத்துறையை உள்ளிட்ட அமைச்சரவையையும் சட்டம் அமுலாக்கப்படுவது சரியான முறையிலா என்பதை பார்ப்பதற்காக நீதித்துறையும் உருவாகியது. சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்றம் மக்களாலேயே நியமிக்கப்படுகிறது. நீதிமன்ற முறைமைக்கு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் ஊடாகவே அதிகாரம் கிடைக்கிறது. சமூகம் நாகரிகமடைந்த நிறுவனங்கள் மூலமாக நிறுவகிக்கப்பட ஆரம்பித்தது. எமது நாட்டில் இந்த நிறுவனங்கள் சீர்குலைதலுக்கு இலக்காகின. மக்கள் எதிர்பார்த்த நாகரிகமடைந்த பாராளுமன்றமொன்றாக மாறியுள்ளதா? இன்று இந்த நிறுவனங்கள் அநாகரிகத்தின் பிரதிபிம்பங்களாக மாறியுள்ளன. பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுகின்ற சட்டம் என்னவென்று அறியாதவர்களாவர். அவை அவர்களுக்கு ஏற்புடையதுமல்ல. ஆனால் அதிகாரம் இருப்பது அந்த இடத்தில் தான். மீண்டும் நாகரிகத்தை அழைப்பித்துவர வேண்டுமானால் இந்த பாராளுமன்றம் மாற்றமடைய வேண்டும். 17 வது திருத்தம் மிகவும் ஜனநாயக ரீதியான புதிய திருத்தமாகும். 17 ஐ முழுமையாக அகற்றி மஹிந்த ராஜபக்ஷ 18 ஐ கொண்டு வந்தார். 17 இற்கு கையை உயர்த்தியவர்கள் 18 இற்கும் கையை உயர்த்தினார்கள். 19,20,21 இந்த அனைத்துவிதமான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் அவர்கள் கையை உயர்த்தினார்கள். இத்தகைய அநாகரிகமான நிறுவனத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியுமா? அநாகரிகத்திலிருந்து நாகரிகத்திற்கு கொண்டு வருகின்ற பாராளுமன்றமாக இந்த பாராளுமன்றத்தை மாற்றியமைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்த்த தேவைகள் ஈடேடுகின்ற பாராளுமன்றமொன்றை நியமிக்க வேண்டும். நாங்கள் சட்டவாக்க அதிகாரம் உரியவகையில் பிரதிபலிக்கப்படுகின்ற பாராளுமன்றமாக மாற்றியமைப்போம். நிறைவேற்று அதிகாரம் மாற்றப்படவேண்டும். தனியாள் ஒருவரிடம் மட்டற்ற அதிகாரம் குவிந்திருக்கிறது. இருக்கின்ற சட்டத்திற்கு பொருள்கோடல் வழங்கி தண்டனை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும். ஊழல், மோசடி, விரயத்தை தடுப்பதற்கான பல சட்டங்களை நாங்கள் கொண்டுவருவோம். பாராளுமன்றத்தையும் நிறைவேற்றுத்துறையையும் நீதித்துறையையும் திட்டவட்டமான சமூக தேவைகளுக்கான பணியாற்றி வருகின்ற நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டும். தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தவறானதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நியமன அதிகாரி ஜனாதிபதியாவார். ஒருவரின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கிறார். அரசியலமைப்புச் சபை அதனை அங்கீகரித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறது. ஜனாதிபதி நியமனத்தை செய்கிறார். பாராளுமன்றத்தின் தீர்ப்பின் மீது நீதிமன்றத்தால் கைவைக்க முடியாது என்கின்ற அபிப்பிராயமொன்று இப்போது முன்வைக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபைக்கு அவ்வாறான அதிகாரம் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற செயலாளர் நாயகம், தோ்தல்கள் ஆணைக்குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் ஆகிய பல்வேறு முக்கியமான நிறுவனங்களுக்கு அரசியலமைப்புச் சபையினால் பதவிகள் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு பிரஜையும் மேற்படி நியமன முறையியல் முறைப்படி கடைப்பிடிக்கப்படவில்லை என்றுகூறி அடிப்படை உரிமைகள் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறார். அரசியலமைப்பு சபையில் ஒன்பது போ் இருக்கிறார்கள். பொலிஸ் மா அதிபரின் பதவியை அரசியலமைப்புச் சபையின் ஐந்து போ் அங்கீகரிக்க வேண்டும். ஒன்பது பேரில் சபாநாயகரும் ஒருவராவார். அன்று நான்கு போ் பொலிஸ் மா அதிபருக்கு சார்பாக வாக்குகளை அளித்தார்கள். இருவர் அமைதியாக இருந்ததோடு இரண்டு போ் எதிர்த்தார்கள். அரசிலமைப்பு சபைக்கு வாய்ப்பொன்று இருக்கின்றது. வாக்குகள் சமமான எண்ணிக்கைக் கொண்டதாக இருந்தால் அறுதியிடும் வாக்கினை சபாநாயகரால் பாவிக்க முடியும். சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்புகிறார். 'நான்கு போ் சார்பாக இருக்கிறார்கள். இரண்டு போ் எதிராக இருக்கிறார்கள். மேலும் , இரண்டு போ் மௌனமாக இருக்கிறார்கள். மௌனமாக இருக்கின்ற இருவரும் எதிரானவர்கள் என கருதப்படுமாயின் எனது வாக்கினை சார்பாக வழங்குவேன்' என்று. இதற்கெதிராக சபாநாயகருக்கு ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. உயர்நீதிமன்றம் இங்கு ஒரு சிக்கல் இருக்கிறதெனக் கண்டு பொலிஸ் மா அதிபரின் சேவையை இடைநிறுத்துகிறது. தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கூறுகிறார். "அந்த வழக்குத்தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை" என்று. நான் கூறுகிறேன் "தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கூறிய கதையை இயலுமாயின் வெளியில் வந்து கூறுங்கள்" என்று. ஒரு கடிதத்திற்கு பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் கையொப்பத்தை இடுவதற்காக. அந்த நிறுவனங்களின் நாகரிகத்தையும் கௌரவத்தையும் இந்த ஆட்சியாளர்கள் பாதுகாக்கிறார்களா? ஒட்டுமொத்த சமூகமுமே சீர்குலைவிற்கு இலக்காகியுள்ளது. ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு திணைக்களத்தின் பிரதானிக்காக தோற்றுவதன் மூலம் வெளிக்காட்டப்படுவது என்ன? நிறுவனம் தங்கியிருப்பது ஓர் ஆளிடம் என்றால் அந்த நிறுவனத்தின் வழியுரிமை இல்லாதொழிந்துவிடும். அரசாங்கம் ஏன் அப்படி சிந்திக்கிறது? தமக்கு அவசியமான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதற்காகவே. நாட்டின் பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான பணிகளைச் செய்து கொள்ள வேண்டிய தேவையிருக்குமாயின் வேறொரு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்துக்கொள்ள முடியும். இந்த அநாகரிகத்தை தோற்கடிக்க வேண்டும். எங்கள் அரசியலில் முதலாவதாக நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற பொறுப்புத்தான் இந்த நிறுவனங்களுக்கு முறைப்படி கையளிக்கப்பட்டுள்ள பணிகளையும் பொறுப்புகளையும் ஈடேற்றுவதற்காக அவசியமான ஒத்துழைப்பினையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொடுத்தலாகும். அடுத்ததாக எமது பொருளாதாரத்தில் பாரிய மாற்றமொன்றை அடையவேண்டும். பொருளாதார மாற்றத்திற்காக எமக்கு தொழில்சார் உழைப்பு அவசியமாகும். எங்களுடைய உழைப்புப் படையணியில் 15% மான தொழில்சார் உழைப்புத்தான் இருக்கிறது. 85% பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத, பகுதியளவில் பயிற்றப்பட்டதாகவே இருக்கின்றது. உதாரணமாக வங்கியை நெறிப்படுத்துவதற்காக அந்தத்துறையின் தோ்ச்சி பெற்ற முகாமையாளர் ஒருவர் இல்லாவிட்டால் சாதாரண ஊழியர்களைக் கொண்டு வங்கியை நடாத்திச் செல்ல முடியாது. தொழில்சார் உழைப்பினால் தான் ஏனையவர்களின் சேவை உறிஞ்சப்படுகிறது. மருத்துவர், பொறியியலாளர் போன்ற தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அதனால் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தொழில்சார் உழைப்பு நாட்டை விட்டுச் செல்வதற்காக அழுத்தம் கொடுக்கப்படுகின்ற காரணிகளை நீக்க வேண்டும். நாட்டை நெறிப்படுத்துவது குற்றச் செயல் புரிபவர்கள் என்றால் தொழில்சார் ஊழியரில் பலனில்லை என்ற உணர்வு தோன்றுகிறது. அதனால் "நாங்கள் இந்த நாட்டுக்கு அவசியமான மனிதன்" என்ற மனோபாவத்தை உருவாக்கவேண்டும். நாட்டை விட்டுச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதைச் சோ்ந்தவர்களாவர். தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லாமையினாலே அவர்கள் போகிறார்கள். நாங்கள் அவர்களிடம் கூறுவது "உங்களின் பிள்ளைகளுக்கு இந்த நாட்டை நம்பிக்கையான நாடாக மாற்றுவோம்" என்ற நம்பிக்கையை உருவாக்குவோம். மூன்றாவதாக அந்த தொழில்வாண்மையாளர்கள் தமது அறிவையும், பணியையும், முறைப்படி ஈடேற்றிக் கொள்வதற்கான மதிப்பீடு நிலவவேண்டும். தொழில்வாண்மையாளர்களின் சம்பளத்திலிருந்து 36% வரியும் எஞ்சிய பணத்தொகைக்காக சாமான்களை வாங்கும்போது மீண்டும் 18% வரியும் விதிக்கப்படுகிறது. மாதத்தின் இறுதியில் வேலை செய்திருப்பது எங்களுக்காக அல்ல என எண்ணத்தோன்றுகிறது. அப்படி எடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவ்வாறு எடுக்கின்ற பணத்திற்கு என்ன நடக்கிறது? ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்வதற்காக வரவு செலவில் ஒதுக்கிக் கொண்ட பணத்தொகை போதாதென மேலும் 2000 இலட்சம் ரூபாவை ஒருக்கிக் கொள்கிறார்கள். இந்த இரண்டு மாதங்களுக்காக குறைநிறப்பு மதிப்பீடொன்றினைக் கொண்டு வந்து தோ்தலுக்காக 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொள்கிறார். இளைஞர் சேவைகள் மன்றத்திடமிருந்து 400 மில்லியன் ரூபாவை அமைச்சரவை கேட்டது. இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். தமது சம்பளத்திலிருந்து வெட்டிக்கொள்கின்ற பணத்தை விரயமாக்குகிறார்கள், திருடுகிறார்கள். அமைச்சர்களின் வீடுகளில் லயிற் பில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாகும். டீசல் விலை அதிகரித்த வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் டீசல் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவை அதிகரித்துக்கொண்டார்கள். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அந்த ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளவில்லை. பிரஜைகள் மீது சுமை வருகின்றது. தமது வரிப்பணத்திற்கு என்ன நடக்கின்றதென்பதை பிரஜைகள் கண் கூடாகவே பார்க்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அந்த வரித்தொகையை முறைப்படி செலவிடுதல் பற்றிய வெளிப்படைத்தன்மையை பிரஜைகளுக்கு காட்டுவோம். அதைப்போலவே இந்த வரிகளை கட்டாயமாக குறைப்போம். எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் கொண்டுள்ள சாத்திய வளங்களை கண்டறிய வேண்டும். எங்களிடம் கனிய வளங்கள் இருக்கின்றன. மூலதனம் இல்லாவிட்டால் நாங்கள் மூலதனத்திற்காக அழைப்பு விடுப்போம். தொழில்நுட்பம் இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பிக்க தயார். நாங்கள் இயற்கை வளங்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை திட்டமிட வேண்டும். கிராமிய மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காக கிராமத்தில் இருக்கின்ற சாத்திய வளங்களை இனங்காண வேண்டும். எமது நாட்டின் இடஅமைவின் பேரில் எங்களுக்கு சிறந்ததொரு பொருளாதாரத்திற்கு செல்வதற்கான இயலுமை நிலவுகின்றது. கப்பற்துறை கைத்தொழில் மற்றும் கப்பற் போக்குவரத்து பற்றி கவனம் செலுத்தியிருக்கிறோம். சுற்றுலாத் தொழிற்றுறையில் பாரிய சாத்தியவளம் நிலவுகிறது. அதைப்போலவே எமது மனித பலத்தை முன்னேற்றக்கூடியதாக இருக்கின்றது. 2030 இல் உலகிற்கு 45 மில்லியன் மென்பொருள் பொறியிலாளர்கள் அவசியமாகின்றனர். அந்த உலகில் கேள்வி உருவாகின்ற 45 மில்லியன் ஒரு சதவீதத்தை நாங்கள் கைப்பற்றிக்கொள்வது என்பதன் அடிப்படையிலேயே இந்த மனித வளத்தை முன்னேற்ற வேண்டியுள்ளது. முன்னேற்றமடைந்த மனித உழைப்புச் சந்தையை கைப்பற்றிக் கொள்வது பற்றி கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறோம். உணவு பாதுகாப்பில் விவசாயத்துறை மீது பாரிய கவனம் செலுத்தப்பட முடியும். இந்த பக்கங்கள் பற்றி நன்றாக சிந்தித்து மிகவும் சிறப்பாக முகாமை செய்து நெறிப்படுத்தினால் சிறந்த பொருளாதார நன்மைகளை அடைவதற்கான இயலுமை நிலவுகிறது. எல்லா விதத்திலும் வளம் நிறைந்த நாட்டை, உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டை, சமூக மனோபாவங்களில் வளமான நாட்டை உருவாக்குவது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அதற்காக ஒன்றாக மல்லுக்கட்டினால் ஒன்றாக இடையீடு செய்தால் எம்மால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். எமக்கு மிகச் சிறந்த வாய்ப்பொன்று உருவாகியிருக்கிறது. அதற்கான பாதையை திறந்துகொள்ள வேண்டும். பிற்போக்குவாத பாசறையை தோற்கடிக்க வேண்டும். முற்போக்கான பாசறையை வென்றெடுக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசோ்வோம் என்றார். சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகக்கூறுகின்ற பொருளாதார ஒஸ்தார்கள் அனைவருமே அன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இருந்தார்கள். வங்கி மற்றும் நிதியொன்றியத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தில்ஷான் ஷாமிகர ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்ததாகக்கூறுகின்ற இயலுமையும் அறிவும் 2015 - 2019 காலத்தில் இருந்திருப்பின் நாடு இந்த நிலமைக்கு வீழ்ந்திருக்க மாட்டாது. வெளிநாட்டுக்கடன் பிணைமுறிகளை பாரியளவில் எடுத்தவர் அவரே. தூரநோக்கற்ற வகையில் செயலாற்றி நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டவரும் அவரே. ராஜபக்ஷாக்களும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்று சோ்ந்து அரச நிறுவனங்கள் அனைத்திலும் உறவினர்களை நிரப்பி நட்டம் அடைகின்ற நிறுவனங்களாக மாற்றியவரும் அவர்களே. ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகக்கூறுகின்ற பொருளாதார ஒஸ்தார்கள் அனைவரும் அன்று ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு 2048 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாக இப்போது கூறுகிறார்கள். 2016 இல் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை திவயின செய்திதாளில் பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2020 இல் நாட்டை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கூறுகின்ற கற்பனை கதைகள் இந்த நாட்டின் தொழில்வாண்மையாளர்கள் இனிமேலும் நம்பபோவதில்லை. அவர்களால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. பொதுமக்கள் அவர்களை நிராகரித்துவிட்டார்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரமாக முதலீட்டாளர்களை வரவழைத்துக்கொள்ளக்கூடிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள நாங்கள் அனைவரும் அணிதிரண்டு விட்டோம். அது வேறு எவருமல்ல. செப்டெம்பர் 21 ஆம் திகதி நிச்சயமாக அதிகாரத்திற்கு கொண்டு வருகின்ற அநுர திசாநாயக்காவை முதன்மையாக கொண்ட தேசிய மக்கள் சக்தியாகும். பொருளாதாரத்தின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக திசைகாட்டின் வங்கி மற்றும் நிதி ஒன்றியம் முன்னணி வகித்து செயலாற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதுவரை நிலவிய அரசாங்கங்களின் ஒட்டுமொத்த செயற்பாங்கு காரணமாக இன்றளவில் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளன. அந்த தொழில் முயற்சியாளர்கள் பற்றிய விரிவான புரிந்துணர்வும் வங்கி மற்றும் நிதித்துறையைச் சோ்ந்த உங்கள் அனைவருக்குமே இருக்கிறன்றது. நீங்கள் இதுவரைகாலமும் தொழில் முயற்சியாளர்கள் போன்றே கிராமப்புற வறிய மக்களுடனும் நிதிசார் துறையில் பெற்ற அனுபவங்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தியாவசியமானவையாகும். அமைச்சரின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற வசனத்தை சுற்றறிக்கைகளாக கருதி செயலாற்ற வேண்டிய நிலை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரச வங்கிகளுக்கு ஏற்பட்டது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் அத்தியாவசியமான துறைகளுக்கு முதன்மையான நிதிசார் வசதிகள் வழங்கப்படும். தோழர் லால்காந்த அமைச்சர் என்ற வகையிலும் நான் பிரதியமைச்சர் என்ற வகையிலும் குறுகிய காலத்திற்கு செயலாற்றிய சிறு கைத்தொழில்கள் அமைச்சின் பெருமளவிலான அனுபவங்களை அதற்காக ஈடுபடுத்துவோம். தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குகையில் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை காரணமாக பாரியளவில் உயர்வடைந்த வட்டி வீதம் 2045 வரை நீண்ட கால ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தும். எனினும் அந்த நிலைமையிலிருந்து விடுபட்டு தேசிய திட்டமொன்றின்படி தொழில் முயற்சியாளர்களை நெறிப்படுத்துவதற்காக குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகின்ற அபிவிருத்தி வங்கியொன்றை நாங்கள் நிறுவுவோம். தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக தாபிக்கப்பட்டிருந்த தேசிய அபிவிருத்தி வங்கிக்கு என்ன நோ்ந்தது. அந்த வங்கியை அரசியல் தலையீடுகளுக்கு இரையாக்கி முற்றாகவே சீர்குலைத்தார்கள். கோப் குழுவின் தவிசாளர் என்ற வகையில் நான் செயலாற்றிய காலத்தில் அந்த விசாரணைகளுக்காக அழைப்பித்த உத்தியோகத்தர்கள் இந்த இடத்திலும் இருக்கக்கூடும். அமைச்சரின் பிடியில் அகப்பட்ட உத்தியோகத்தர்களின் அழுத்தம் பற்றி எமக்கு தெரியும். எனினும் எங்களுடைய அரசாங்கமொன்றின் கீழ் இந்த நிதி ஒன்றியத்தில் இருக்கின்ற தொழில்வாண்மையாளர்களிடமிருந்து தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும். நாட்டின் பொருளாதாரத்தின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியம் முதன்மையாக செயலாற்றும். ஏற்கெனவே 21 மாவட்டங்களில் இந்த நிதி ஒன்றியத்தின் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டிருந்தன. அந்தந்த மாவட்டத்திற்கு அவசியமாகின்ற தொழில் முயற்சிகளுக்கு உயிரளிக்கையில் நிதிசார் வசதிகளை வழங்க உங்களின் கருத்துக்கள் அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ளப்படும். மக்கள் மீது கூருணர்வு கொண்டதாக செவிசாய்த்து நாட்டை கட்டியெழுப்புகின்ற மறுமலர்ச்சிப் பயணத்திற்காக அனைவரினதும் பங்கேற்பினை எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற மாயாஜால வித்தை அரசியலே என உலக வங்கி பிரதிநிதிகள் கூட ஏற்றுக்கொண்டார்கள் தேசிய மக்கள் சக்தி பொருளாதார பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த இன்றளவில் எதிரான குழுக்கள் முன்னெடுத்து வருகின்ற பொய் பிரச்சாரங்கள் மத்தியில் முதன்மையாக அமைவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்தால் மக்களின் சேமிப்புக் கணக்குகளிலுள்ள பணத்தை பறிமுதல் செய்யுமென்பதாகும். மாபெரும் மாற்றமொன்றுக்காக மக்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கும்போது எமக்கெதிராக கட்டியெழுப்பப்படுகின்ற பொய்யான பிரச்சாரங்களுக்கும் குறைகூறல்களுக்கும் பதிலளிக்கவும் வேண்டியுள்ளது. ஒரு கால கட்டத்தில் பேராசிரியர் ஒருவர் கூட ஊழல் மோசடிகளால் ஒரு நாடு அபிவிருத்தியடையுமாயின் பரவாயில்லை எனக்கூறினார். அவர்களின் அந்த வழிகாட்டல்களின் அனுசரணையையும் பெற்றுக்கொண்டு சென்ற பயணத்தில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்த பின்னர் ஊழல் மோசடிகள் பற்றிய பாரிய எதிர்ப்பு மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்திலே ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய குழுவும் புள்ளி விபரங்களை எடுத்துக்காட்டி நாட்டை கட்டியெழுப்பியது தாமே எனக்கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முன்னெடுத்து வருகின்ற இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால் நாடு மீண்டும் படுகுழிக்குள் விழுவதாக பாரிய ஒரு பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். பொருளாதார தரவுகள் என்பது அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அமைச்சர்களின் அவசியப்பாட்டுக்கு அமைவாகவன்றி ஜனநாயக ரீதியாக பொருளாதார துறையில் இடையீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதனூடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மாயாஜால வித்தை அரசியலே என்பதை உலக வங்கி பிரதிநிதிகள் கூட ஏற்றுக்கொண்டார்கள். இது பற்றி வலியுறுத்திக்கூறுவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த அலுவல்களை மேற்கொள்வதற்கான இயலுமை நிலவுவது தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே. பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதில் மேலும் பல காரணிகள் தாக்கம் ஏற்படுத்துவதோடு நிதித்துறை தனித்துவமான முக்கியத்துவத்தை வகிக்கின்றது. பணம் குட்டிப்போடுகின்ற இடங்களில் முதலீடு செய்வதை விட தேசிய அவசியப்பாட்டின் பேரில் உற்பத்தித்துறையில் ஈடுபடுத்துவதை ஒரு கொள்கையாக அமுலாக்க வேண்டும். அது ஒரு அரசியல் தேவையாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் தனியார் மற்றும் அரச வங்கிகள் ஒன்று சோ்ந்து ஒத்துழைப்புடன் செயலாற்றும். அரச மற்றும் தனியார் என்ற வகையில் பிரிந்து முரண்பாட்டு நிலைமையுடன் பேணி வரமாட்டாது. நாட்டுக்கு அவசியமான வலிமைமிக்க நிதிசார் தொகுதியொன்றுக்காக பலம்பொருந்திய அரசதுறையின் நிதிசார் முறைமையொன்றின் வழியுரிமை உறுதிப்படுத்தப்படுகின்றது. தொழில் முயற்சியாளர்கள் வசம் உள்ள ஆதனங்களை பிணையாக வைத்துக்கொண்டு அவர்களின் கழுத்தை நெரித்துக்கொண்டு கடன் கொடுப்பதற்கு பதிலாக அரசு இடையீடு செய்து அவசியப்பாட்டிற்கிணங்க நிதி வழங்குதல் மேற்கொள்ளப்படும். நிதிசார் துறை, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்பினர்களும் ஒன்று சோ்ந்து நிதித்துறையின் செயற்பொறுப்பினை மறுமலர்ச்சி யுகமொன்றுவரை அணிதிரட்டும். எதிரி பதற்றமடைந்து மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடவேண்டாம். தொழில்வாண்மையாளர்கள் அனைவரினதும் பொறுப்பு அரசியல் மாற்றத்தின் பங்காளிகளாக மாறவேண்டியதே தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்திற்கு இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பாரிய செயற்பொறுப்பினை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. அதைபோலவே எதிர்வரும் நாட்களுக்குள் ஜனாதிபதி தோ்தலுக்காக பாரிய செயற்பொறுப்பினையும் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த நாட்டை மறுமலர்ச்சி யுகமொன்றுக்கு எடுத்துச் செல்வதிலான அடிப்படை வெற்றியாக தேசிய மக்கள் சக்தியின் அபேட்சகர் தோழர் அநுர குமார திசாநாயக்காவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டியுள்ளது. அதற்காக உங்களை சந்திக்க வருகின்ற வாடிக்கையாளர்களை விழிப்புணர்வூட்டுவதற்கான பொறுப்பு உங்கள் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட மக்களின் பகைவர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்திக் கொண்டு உயர்நீதிமன்றத்தைக்கூட கீழடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியில் அவர்கள் அந்த கதைகளை கூறினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி நேரிடும் என்பதால் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் மறைவிலிருந்து கொண்டு தமது வங்குரோத்து நிலைமையை மறைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். ரணில் அடித்த கேம் எல்லாமே முடிந்து விட்டது. சுயேட்சை வேட்பாளராக முன்வந்து ஏதோ செய்ய முனைகிறார். தோ்தலைக் கண்டு அஞ்சி அவர்கள் அடிக்கின்ற இந்த கேம்களை தோ்தல் நெருங்கும்போது மேலும் உயர்ந்த அடுக்கிற்கு கொண்டு வந்து மக்களை குழப்பியடிக்க முயற்சி செய்கிறார்கள். தொழில்வாண்மையாளர் அனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு இந்த அரசியல் மாற்றத்தின் முனைப்பான பங்காளிகள் என்ற வகையில் பங்களிப்புச் செய்வதாகும். உங்கள் சேவை நிலையத்தில் மாத்திரமல்ல ஊரிலும் மக்களை விழிப்புணர்வூட்டி குழப்பநிலையிலிருந்து மீட்டுக் கொள்வதற்காக பாரிய பணியை ஆற்றவேண்டியுள்ளது. உண்மையான அரசியல் மாற்றமொன்றின் தொடக்க நிலை அடுத்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற வேண்டியுள்ளது. எங்களுடைய செயற்பொறுப்புப் பற்றி விசேட கவனத்துடன் தொழில்வாண்மையாளர்கள் என்ற வகையில் சமூகத்தில் நிலவுகின்ற அங்கீகரிப்பினையும் எதிர்காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக பிரயோகிப்போம். https://www.virakesari.lk/article/189707