Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் - முன்னாள் எம்.பி. சந்திரகுமார் 28 JUL, 2024 | 10:06 AM குளங்களை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை குறைத்து வருகின்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (27) கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பொது அமைப்புக்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் முறைப்பாட்டுக்கு அமைவாக, தனி நபர் ஒருவரால் குளம் ஆக்கிரமிக்கப்படுவதனை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உலகம் மிகப்பெரும் பருவநிலை மாற்றத்துக்கு முகங்கொடுத்துள்ளது. நீருக்காக மக்கள் அலைந்து திரிகின்றார்கள். வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் வேகமாக வற்றுகிறது. இதனால் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எங்கள் மத்தியில் இருக்கின்ற குளங்களையும் நாம் பாதுகாத்து பேணுவதை விடுத்து அதனை தனிநபர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவது என்பது ஒரு ஆபத்தான நிலைமையை உருவாக்கும். எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட குளங்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் அனைவரினதும் மிகப்பெரிய பொறுப்பு. முன்னோர்கள் குளங்களை உருவாக்கி அதனை பாதுகாத்து எங்களிடம் கையளித்ததன் காரணமாகவே நாம் அதன் பயனை அனுபவித்து வருகிறோம். எனவே நாமும் இவற்றை அவ்வாறே பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும். 10 அடி கொள்ளளவு கொண்ட கனக்காம்பிகை குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் உள்ளன. அந்த பிரதேசத்தின் நிலத்தடி நீரும் இக்குளம் காரணமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இக்குளத்தினை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். குளத்தின் பின்பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டது. தற்போது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு குளத்துக்குள் மண் நிரப்பப்பட்டு வருகிறது. ஆகவே, குளத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189569
  2. 27 JUL, 2024 | 08:35 PM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்குத் தாமும் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நிறைவேற்றதிகாரமுடைய 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறுத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. அதன்பிரகாரம் பொதுவேட்பாளராக யாரைக் களமிறக்குவது என ஆராயப்பட்டாலும், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பிரதான வேட்பாளர்களுடன் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், அதற்கமைய அவர்களை ஆதரிப்பதற்கும் தயாராக இருக்கின்றீர்களா? என வினவியபோதே தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு பதிலளித்தனர். அதற்கமைய ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்குவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அதன் முதற்கட்டமாக மாகாணசபை முறைமை உள்ளடங்கலாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இருப்பினும் கடந்தகாலங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதில் எவ்வித பயனும் கிட்டாததன் காரணமாகவே தற்போது தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ரெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், எனவே அதற்குரிய நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுத்துவருவதாகக் குறிப்பிட்டார். 'தமிழ்மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்துப் பேசுவதற்கு வேட்பாளர்கள் முன்வருவார்கள் எனில், நாம் அதற்கு இடமளிப்போம். இருப்பினும் இப்பேச்சுவார்த்தைகள் வெறுமனே வாய்வழி வழங்கப்படும் உத்தரவாதங்களாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாறாக முன்மொழியும் தீர்வு எழுத்துமூல உடன்படிக்கையாக அமையவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். அதேவேளை இதுகுறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், 'ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் பேசுவதாக இருந்தால், எப்படியும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தே பேசுவார்கள். இருப்பினும் 13 ஆவது திருத்தத்தினால் எவ்வித பயனுமில்லை' எனக் கூறினார். ஆனால் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால்சென்று, சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவது குறித்து அவர்கள் பேசத்தயாராக இருந்தால் தாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் எனவும், அன்றேல் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதை முன்னிறுத்தி நடவடிக்கை எடுப்போம் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் விளக்கமளித்தார். மேலும் பொதுவேட்பாளர் தொடர்பான இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடாத போதிலும், பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இணைந்த வட, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளர்களுடன் பேசத்தயார் என்றார். https://www.virakesari.lk/article/189546
  3. IND vs SL: அதிரடியாகத் தொடங்கிய இலங்கைக்கு டெத் ஓவரில் முடிவு கட்டிய ரியான் பராக் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 28 ஜூலை 2024, 02:35 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் புதிய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர், புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வெற்றியுடன் இலங்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இளம் வீரர்களைக் கொண்டு 2026 டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட புதிய இந்திய அணிக்கு இந்த வெற்றி தார்மீகரீதியாக மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும். பல்லேகேலே நகரில் நேற்றிரவு நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இலங்கை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இது இலங்கை மண்ணில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர். 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று நடக்கும் 2வது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி வென்றால் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிடும். புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதம்(58), ஜெய்ஸ்வால்(40), கில்(34) ஆகியோர் அமைத்துக் கொடுத்த அடித்தளம், சூர்யகுமாருக்கு ஒத்துழைத்து ஆடிய ரிஷப் பந்தின்(49) ஆட்டம் ஆகியவைதான் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை பெற்றுக் கொடுத்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட நினைத்த ரியான் பராக்(7), ஹர்திக் பாண்டியா(9), ரிங்கு சிங்(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 22 பந்துகளில் அரைசதம் அடித்து 26 பந்துகளில் 58 ரன்கள்(2 சிக்ஸர்கள், 8 பவுண்டரி) சேர்த்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 'இந்திய அணியின் இஞ்சின் மட்டுமே மாறியுள்ளது' பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், ரோஹித், கோலி இல்லாத டி20 அணியின் முதல் வெற்றி குறித்துக் கேட்டபோது, “அதே ரயில்தான் பயணிக்கிறது, எந்த மாற்றமும் இல்லை. இஞ்சின் மட்டுமே மாறியுள்ளது, பெட்டிகள் மாறவில்லை” என்று தெரிவித்தார். புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீருடன் சேர்ந்து பணியாற்றுவது குறித்து சூர்யகுமார் கூறுகையில், “நான் கம்பீருடன் 10 ஆண்டுகளாகச் சேர்ந்து பணியாற்றுகிறேன். நான் கொல்கத்தா அணியில் இருந்தபோதே அவருடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அதன்பின் 2018இல் மும்பை அணிக்குச் சென்ற பிறகும் கிரிக்கெட் குறித்து இருவரும் ஏராளமாக ஆலோசித்துள்ளோம். நான் அவருடன் கடந்த 6 ஆண்டுகளாக இல்லை என்றாலும் அவரிடம் இருந்து அதிகமாகக் கற்றுள்ளேன்" என்று தெரிவித்தார். மேலும், இந்த டி20 தொடர் குறித்து "இருவரும் பேசியுள்ளோமே தவிர பெரிதாக ஆலோசிக்கவில்லை. ஏனென்றால், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துள்ளோம், எங்கள் இருவரின் உடல்மொழியையும் இருவரும் அறிவோம். சில விஷயங்களை அவர் வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும் நான் புரிந்து கொண்டு செயல்படுவேன்" என்றார். தனக்கும், பயிற்சியாளருக்கும் இடையே சிறப்பான பிணைப்பு இருப்பதாகவும், இந்த பயணத்தை உற்சாகமாக அனுபவிப்பதாகவும் விவரித்தார் சூர்யகுமார். அதோடு, கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் தனது பேட்டிங்கில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறிய ஸ்கை, தனது வழக்கமான ஸ்டைலில் தொடர்ந்து விளையாடுவதாகவும் உறுதியளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மந்தமான பந்துவீச்சு பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை 9 ஓவர்களாக பிரிக்க முடியாமல் சிரமப்பட்டனர். 2வது விக்கெட்டை வீழ்த்த முடியாமலும் திணறினர். முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்திய நிலையில் அக்ஸர் படேல் 15வது ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சரிவுக்கு தொடக்கவுரை எழுதினார். அதன் பிறகு இலங்கை பேட்டர்கள் வரிசையாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியில் சிக்கினர். பவர்ப்ளே ஓவர்களுக்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் எதிரணி மீது அழுத்தத்தைத் திணிக்க முடியும். ஆனால், நேற்று எந்த பந்துவீச்சாளர்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் பந்து வீசவில்லை என்பதுதான் நிதர்சனம். டெத் ஓவர்களில் ரியான் பராக் சிறப்பாகப் பந்துவீசி 1.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் சிறந்த பந்துவீச்சாகப் பார்க்கப்பட்டது. மற்ற வகையில் முதல் இரு ஓவர்களிலும் ரன்களை வாரி வழங்கிய சிராஜ் 3வது ஓவரில்தான் கட்டுக்கோப்பாக வீசினார். அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு குறையாமல் வாரி வழங்கினர். 30 ரன்களில் 9 விக்கெட் இழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அணியைப் பொருத்தவரை பதுன் நிசங்கா(79), குஷால் மென்டிஸ்(45), குஷால் பெரேரா(20), கமிந்து மென்டிஸ்(12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 84 ரன்கள்வரை விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி இலக்கைத் துரத்தியது. 140 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவாக இருந்து ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 30 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை மளமளவென இழந்து தோல்வி அடைந்தது மோசமான பேட்டிங்கின் வெளிப்பாடாக அமைந்தது. இலங்கை அணியின் நடுவரிசை முதல் கடைசி வரிசை வரை 6 பேட்டர்களும் டக்-அவுட்டிலும், ஒற்றை ரன்னிலும் ஆட்டமிழந்து அணியை தோல்விக் குழியில் தள்ளினர். அடித்தளம் அமைத்த ஜெய்ஸ்வால், கில் ஜெய்ஸ்வால், கில் இருவருமே டி20 போட்டிக்கு புதிய தொடக்க வீரர்களாக இந்தப் போட்டியில் அறிமுகமாகினர். ஐபிஎல் போட்டியில் இருவரும் வெவ்வேறு அணிகளுக்காக ஆடியிருந்தாலும் இருவரும் சேர்ந்து ஆடுவது இது முதல்முறை. இருப்பினும் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தைப் போன்று கில்லால் அதிரடியான தொடக்கத்தை அளிக்க முடியவில்லை. இன்னும் ஒருநாள் போட்டியைப் போன்றே நிதானமான ஆட்டத்தையே கில் கையில் எடுத்தார். இருப்பினும் ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைத்து அவ்வப்போது கட்ஷார்ட், ஃபுல் ஷாட்களில் பவுண்டரி அடித்து கில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். ஆட்டத்தின் முடிவில் பேசிய கில் “டி20 ஆட்டத்துக்கு ஏற்றார்போல் தன்னுடைய பேட்டிங்கை மாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாக” ஒப்புக்கொண்டார். இருவரும் சேர்ந்து அதிரடியாக ரன்களை சேர்த்ததால் 4 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை தொட்டது. இருவரின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த இலங்கை அணி விரைவாகவே சுழற்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், மகேஷ் தீக்சனா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசியும், ஸ்லாக் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்தும் ஜெய்ஸ்வால் வரவேற்பு கொடுத்தார். பவர்ப்ளே முடிவில் கில் 16 பந்துகளில் 34 ரன்களில் மதுசங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவர் முடிவில் இந்திய அணி 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தது. சுப்மான் கில் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வாலும் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்களுடன் ஆடி வந்த நிலையில் ஹசரங்காவின் கூக்ளி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேட்சுகளை தவறவிட்டதற்கு விலை பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் சூர்யகுமார், ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். தான் சந்தித்த 2வது பந்திலேயே சூர்யகுமார் பிளிக் ஷாட்டில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். சூர்யகுமார் 15 ரன்னில் இருந்தபோது, மதுசங்கா வீசிய பந்தில் கிடைத்த கேட்சை ஃபைன் லெக்கில் நின்றிருந்த பெர்னான்டோ பிடிக்கத் தவறினார். அதேபோன்று ரிஷப் பந்த்தை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த கேட்சை பிடிக்க அசிதா தவறவிட்டார். இரு கேட்சுகளையும் தவறவிட்டதற்கான விலையை இலங்கை அணி கடைசியில் கொடுத்தது. இலங்கை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் தனது 360 டிகிரி ஷாட்களில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் தனது 2வது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். 3வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தபோது ரிஷப் பந்த் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். பதிரணா பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்றபோது கால்காப்பில் வாங்கி 58 ரன்களில் சூர்யகுமார் விக்கெட்டை இழந்தார். ரிஷப் பந்த் அதிரடி ரிஷப் பந்த் நிதானமாக ஆடத் தொடங்கி 15 பந்துகளுக்குப் பின்புதான் முதல் பவுண்டரியை அடித்தார். 16வது ஓவரில் தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்டில் ரிஷப் பந்த் சிக்ஸர் விளாசினார். சூர்யகுமார் ஆட்டமிழந்தபின் இந்திய அணி பவுண்டரி அடிக்க 14 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் ரிஷப் பந்த் அதிரடியைக் கையாண்டு அடுத்த 10 பந்துகளில் 29 ரன்களை சேர்த்தார். பதிராணா பந்துவீச்சில் பவுண்டரி அடிக்க முயன்று ரிஷப்பந்த் 49 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏமாற்றம் அளித்த ஹர்திக், ரிங்கு அடுத்து களமிறங்கிய ஹர்திக் ஏமாற்றம் அளித்து பதிராணா பந்துவீச்சில் போல்டானார். ஸ்கை ஆட்டமிழந்த அதே பாணியில் ரியான் பராக் கால்காப்பில் வாங்கி பதிராணா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் ஒரு ரன்னில் பெர்னான்டோ பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் என வலுவாக இருந்தநிலையில் அடுத்த 8 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 250 ரன்களை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்திக், ரியான் பராக், ரிங்கு சிங் ஆகியோர் ஜொலிக்காத காரணத்தால் இந்திய அணியால் 250 ரன்களை எட்டமுடியாமல் போனது. இலங்கை தரப்பில் பதிராணா 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற வகையில் அந்த அணியில் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கு குறைவில்லாமல் விட்டுக் கொடுத்தனர். அதிரடியாகத் தொடங்கி, வீழ்ந்த இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா, குஷால் மென்டில் அதிரடியாகத் தொடங்கினர். சிராஜ் வீசிய 4வது ஓவரில் நிசாங்கா 2 சிக்ஸர்களை விளாசி அதிர்ச்சியளித்தார். 31 பந்துகளில் இலங்கை அணி 50 ரன்களை தொட்டு இந்திய பந்துவீச்சுக்கு சவால் விட்டது. இந்திய பந்துவீச்சாளர்களும் இருவரையும் பிரிக்க கடுமையாகப் போராடியும் பவர்ப்ளே ஓவர்கள் வரை பிரிக்க முடியவில்லை, விக்கெட் இழப்பின்றி இலங்கை 55 ரன்களை பவர்ப்ளேல் சேர்த்தது. நிசங்கா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். அர்ஷ்தீப் வீசிய 9வது ஓவரில் மென்டிஸ் 45 ரன்களில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குஷால் பெரேரா, நிசங்காவுடன் சேர்ந்து அணியை வலுவாக எடுத்துச் சென்றார். 10.2 ஓவர்களில் இலங்கை 100 ரன்களை எட்டி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தது. 140 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இலங்கை வலுவாக இருந்தது. அக்ஸர் படேல் வீசிய 15வது ஓவரில்தான் திருப்புமுனை ஏற்பட்டது. ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. செட்டில் பேட்டர் நிசங்கா 79 ரன்களில் அஸ்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், அதே ஓவரின் கடைசிப் பந்தில் குஷால் பெரேராவும்(20) விக்கெட்டை பறிகொடுத்தார். இலங்கையின் சரிவு 15வது ஓவரிலிருந்து தொடங்கியது. ரியான் பராக் வீசிய 16வது ஓவரில் குஷால்மென்டிஸ்(12) போல்டானார். கேப்டன் அசலங்கா டக்-அவுட்டில் பிஸ்னோய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஹசரங்காவை 2 ரன்னில் அர்ஷ்தீப் வெளியேற்றினார். முதல் இரு ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய சிராஜ், 3வது ஓவரில் பதிரானா விக்கெட்டை வீழ்த்தினார். அதிலும் ரன்அவுட் செய்கிறேன் என்று சிராஜ் பந்தை வீச, அது ஓவர் த்ரோவில் தேவையின்றி பவுண்டரி சென்றது. ரியான் பராக் வீசிய கடைசி ஓவரில் தீக்சனா(2), மதுசங்கா இருவரும் ஆட்டமிழக்க இலங்கையின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஒரு கட்டத்தில் வலுவான ஸ்கோருடன் வெற்றியை நோக்கி நகர்ந்த இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்த பிறகு பெரிய சரிவில் சிக்கியது. https://www.bbc.com/tamil/articles/c3g04d2n3dlo
  4. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம் 28 JUL, 2024 | 10:12 AM (நா.தனுஜா) ஐரோப்பிய ஒன்றியத்தினால் அடுத்த 6 மாத காலத்துக்கென புதுப்பிக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் உள்ளடங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதத்தை ஒழித்தல் எனும் கொள்கையின் பிரகாரம் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. அதற்கமைய வெள்ளிக்கிழமை (26) ஐரோப்பிய ஒன்றியப் பேரவையில் தடைசெய்யப்பட்ட நபர்கள், அமைப்புக்கள் மற்றும் சொத்துக்கள் பதொடர்பான ட்டியல் அடுத்த 6 மாதகாலத்துக்கு நடைமுறையாகும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் உள்ளடங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/189573
  5. யாழில் அதிகரித்துள்ள வங்கி மோசடிகள்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை யாழ்ப்பாணத்தில் (Jaffna) தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும்,பொதுமக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென யாழ். வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக யாழ். வணிகர் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "யாழ்.நகர வணிகர்கள் மற்றும் பொது மக்களின் தொலைபேசிக்கு அநாவசியமாக அழைப்புக்கள் மூலம் (ரெலிகொம்) வங்கி இலக்கத்திற்கு பரிசு அனுப்புவதாக கூறி வங்கி இலக்கத்தையும் கைத்தொலைபேசிக்கு வரும் OTP (one time password -ஒரு தடவை மட்டும் பாவிக்கும் கடவுச்சொல்) கேட்கிறார்கள். தொலைபேசி அழைப்பு அதனை (6 இலக்கங்கள் கொண்டது) வழங்கியதுடன் வங்கிக்கணக்கிலுள்ள பணம் கள்வர்களால் களவாடப்படுகிறது. நம்பும்படி பேசி இந்த மோசடி செய்யப்படுகிறது. குறுகிய காலப்பகுதிக்குள் அதிகளவிலான மோசடிகள் நடைபெற்றுள்ளதாக வங்கி முகாமையாளர்களால் எமக்கு அறியத்தரப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/jaffna-merchants-association-1722081866
  6. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது. இதற்கு கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு மற்றும் அதன் தாக்கங்களை ஒப்புக் கொண்டு இன்று (27) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள் இந்நிலையில், பட்டியலிடப்பட்ட பிற நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் விடுதலைப் புலிகளும் தொடர்ந்து நிதித் தடைகளை எதிர்கொள்வதையே இந்த புதுப்பித்தல் அர்த்தப்படுத்துகிறது. இந்த தடைகளில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள் அல்லது பொருளாதார ஆதாரங்கள் முடக்கம் ஆகியவை உள்ளடங்கும். மேலும், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதாரங்களை வழங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/ban-on-the-ltte-continues-1722074674?itm_source=parsely-api
  7. மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விசாரணை பொது போக்குவரத்தில் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் லொறிகளில் 30 சதவீதம் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புகைப்பரிசோதனையின் போது மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண முடியாது எனவும், வாசனையை வைத்தே வாகனங்களை அடையாளம் காண முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பயணிகள் போக்குவரத்து குறிப்பாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் உரிமையாளர்கள் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு இரண்டு எண்ணெய் தாங்கிகளை தயார் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதுள்ள சட்ட அபராதங்களும் சிறியதாக இருப்பதால், இது கட்டுப்படுத்த முடியாத சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/kerosene-instead-of-diesel-1722092426
  8. Published By: RAJEEBAN 27 JUL, 2024 | 05:52 PM கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி அவரது இல்லத்தில் சந்தித்த இருவரும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189545
  9. LIVE 1st T20I (N), Pallekele, July 27, 2024, India tour of Sri Lanka India 213/7 Sri Lanka (3/20 ov, T:214) 26/0 Sri Lanka need 188 runs in 102 balls. Current RR: 8.66 • Required RR: 11.05 Win Probability:SL 15.63% • IND 84.37%
  10. இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 30க்கும் அதிகமானவர்கள் பலி Published By: RAJEEBAN 27 JUL, 2024 | 08:14 PM காசாவின் மத்தியில் உள்ள டெய்ர் அல் பலா நகரின் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் என்பது வெளியாகும் படங்கள் வீடியோக்கள் மூலம் தெரியவருவதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் காணப்படுவது ஆராயப்பட்ட வீடியோக்கள் மூலம் உறுதியாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலையே தாக்கப்பட்டது என காசாவின் சிவில் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் நோயாளிகள் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அனேகமானவர்கள் சிறுவர்கள் பெண்கள் என தெரிவித்துள்ள ஹமாஸ் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது. குழப்பநிலை நிலவுவதையும்,இடிபாடுகளுடன் காணப்படும் பகுதியில் மக்கள் ஒடிக்கொண்டிருப்பதையும், இரத்தக்காயங்களுடன் இரண்டு பிள்ளைகளை ஆண்கள் தூக்கிவருவதையும்,பெண் ஒருவர் பிள்ளயை கட்டியணைப்பதையும், காயமடைந்த நபர் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்படுவதையும், துணியால்போர்த்தப்பட்ட உடலையும் உறுதிப்படுத்தக்கூடிய வீடியோக்கள் காண்பிப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/189560
  11. எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களை இராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் விடுவித்துள்ளது. குறித்த 7 இலங்கை மீனவர்களும் கடந்த 18 ஆம் திகதி இந்திய கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 7 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசு கோரியதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஏழு பேரும் சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/306899
  12. 27 JUL, 2024 | 06:00 PM கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பிரதேச கமக்கார அமைப்பு போன்ற பொது அமைப்புக்கள், நீர்ப்பாசன பொறியியலாளர் போன்ற அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இருப்பினும், இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு உள்ள பகுதி மண் நிரப்பப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது. 10 கொள்ளளவு கொண்ட இக்குளத்தினை நம்பி சுமார் 300 வரையான சிறுதானிய பயிர்ச்செய்கையாளர்கள் வாழ்கின்றனர். எனவே குளம் ஆக்கிரமிக்கப்படும் நிலைமையானது எதிர்காலத்தில் இக்குளத்தினை நம்பியுள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும். ஏற்கனவே இக்குளத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான நிலம் பொது மக்களால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்துக்குச் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக குளத்தின் பல பகுதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தற்போது இடம்பெற்றுள்ள குளத்தின் முக்கிய பகுதி ஆக்கிரமிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி கை.பிரகாஸ் கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இக்குளத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு கடிதங்களை எழுதியுள்ளார். எனவே, இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய போது, இவ்விடயம் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் ஆக்கிரமிப்பு பற்றி உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189543
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1990 களின் நடுப்பகுதியில், இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 50 மில்லியனில் இருந்து கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் சரிந்தது கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி 26 ஜூலை 2024 ஒரு காலத்தில், பாறு கழுகு இந்தியாவில் எங்கும் காணக் கூடிய ஒரு பறவை இனமாக இருந்தது. ஏராளமான பாறு கழுகுகள் இங்கும் அங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. அழுகுண்ணி (scavengers - (இறந்த விலங்குகளின் சடலங்களின் எச்சங்களை உண்ணும் உயிரினம்) பறவை இனமான பாறு கழுகுகள், பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் சுற்றித் திரிந்து, கால்நடைகளின் சடலங்களைத் தேடின. சில சமயங்களில் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களின் ஜெட் என்ஜின்களில் சிக்கிக் கொண்டு, விமானிகளுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பவும் செய்யும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர், நோய்வாய்ப்பட்ட பசுக்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தின் காரணமாக இந்தியாவில் பாறு கழுகுகள் இறக்கத் துவங்கின, அவற்றின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. மனிதர்களின் முதல் மூதாதையான பாலூட்டி இனம் டைனோசர் காலத்தில் எப்படி வாழ்ந்தது தெரியுமா?25 ஜூலை 2024 பாறு கழுகுகளுக்கு எமனான கால்நடை வலி நிவாரணி மருந்து 1990-களின் நடுப்பகுதியில், கால்நடைகளுக்க்கான வலி நிவாரணியான டிக்ளோஃபெனாக் (diclofenac) பயன்படுத்தப்பட்டது. கால்நடை சடலங்களை உண்ணும் கழுகளுக்கு இந்த மருந்து ஆபத்தான விளைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 5 கோடியிலிருந்து கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் சரிந்தது. இந்த மருந்து செலுத்தப்பட்டக் கால்நடைகளின் சடலங்களை உண்ணும் பறவைகள் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இறந்தன. 2006-ஆம் ஆண்டு 'டிக்ளோஃபெனாக்’ கால்நடை மருத்துவப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது. சில பகுதிகளில் பாறு கழுகுகள் இறப்பது குறைந்துள்ளது. ஆனால் குறைந்தபட்சம் மூன்று பாறு கழுகு இனங்களின் எண்ணிக்கை 91% முதல் 98% வரை இழப்பைச் சந்தித்துள்ளன என்று இந்தியாவின் சமீபத்திய மாநில பறவைகள் அறிக்கை (State of India's Birds) கூறுகிறது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,அழுகுண்ணி (scavengers) பறவை இனமான பாறு கழுகுகள். இது மனிதர்களை எப்படி பாதிக்கிறது? பாறு கழுகு இனத்தின் வீழ்ச்சி இதோடு முடியவில்லை. இந்த வலிமையான, அழுகுண்ணி பறவைகளின் தற்செயலான அழிவு, கொடிய பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் பெருக வழிவகுத்தது. ஐந்து ஆண்டுகளில் சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) பேரின் இறப்புக்கு இது காரணமானதாக அமெரிக்கப் பொருளாதாரச் சங்க இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது. "பாறு கழுகுகள் விலங்குகளின் சடலங்களையும் அழுகிய பொருட்களையும் உட்கொண்டு இயற்கையின் துப்புரவு செய்யும் பறவைகளாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை நமது சுற்றுச்சூழலில் இருந்து பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகள் கொண்ட இறந்த விலங்குகளை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது நிகழவில்லை எனில் நோய் பரவக்கூடும்," என்று ஆய்வின் இணை ஆசிரியர், சிகாகோவின் 'ஹாரிஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசி’ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் இயல் பிராங்க் கூறுகிறார். "மனித ஆரோக்கியத்தில் பாறு கழுகுகள் வகிக்கும் பங்கைப் புரிந்துகொண்டால் போதும். வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வீர்கள். விலங்கினங்கள் அனைத்தும் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பணிகளை மேற்கொள்கின்றன. அவை நம் வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றுகின்றன,” என்று அவர் கூறுகிறார். அதிகரிக்கும் மனித இறப்பு விகிதம் ஃபிராங்க், மற்றும் ஆய்வின் இணை ஆசிரியரான அனந்த் சுதர்ஷன் இந்திய மாவட்டங்களில் ஒரு காலத்தில் பாறு கழுகு செழித்து வளர்ந்த போது இருந்த மனித இறப்பு விகிதங்களை, வரலாற்று ரீதியாக கழுகு எண்ணிக்கை குறைந்த பின்பு இருக்கும் மனித இறப்பு விகிதங்களுடன் ஒப்பிட்டனர். கூடவே, ரேபிஸ் தடுப்பூசி விற்பனை, காட்டு நாய்களின் எண்ணிக்கை, மற்றும் நீர் விநியோகத்தில் இருக்கும் நோய்க்கிருமிகளின் அளவு ஆகியவற்றையும் அவர்கள் ஆய்வு செய்தனர். பாறு கழுகு இனம் முன்னர் செழித்து வளர்ந்த மாவட்டங்களில், கால்நடைகளுக்குக் கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளால் கழுகின் எண்ணிகையில் சரிவு ஏற்பட்ட பிறகு அங்கு மனித இறப்பு விகிதம் 4%-க்கும் மேல் அதிகரித்துள்ளதை அவர்கள் கண்டறிந்தனர். பெரிய கால்நடை விலங்குகள் அதிகம் இருக்கும் நகர்ப்புறங்களில் அவற்றின் சடலக் கழிவுகளும் அதிகம் காணப்படுகின்றன. அதன் விளைவாக மனிதர்கள் மத்தியில் நோய் தொற்றுகள் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,டெல்லியில் குடியரசு மாளிகையில் உள்ள நீரூற்றில் அமர்ந்திருக்கும் பாறு கழுகு கூட்டம் (தேதி குறிப்பிடப்படாத படம்) தண்ணீரில் மல பாக்டீரியாக்கள் 2000 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பாறு கழுகுகளின் இறப்பு, ஆண்டுதோறும் 1 லட்சம் கூடுதல் மனித இறப்புகளை ஏற்படுத்தியது என்று ஆசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக வருடத்திற்கு இறப்பு சேதங்கள் அல்லது அகால மரணங்கள் தொடர்புடைய பொருளாதார செலவுகள் 5.8 லட்சம் கோடி ரூபாய் (69 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலில் அகற்றப்படாத அழுகிய கழிவுகளால் ஏற்பட்ட நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் பரவல் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக, பாறு கழுகுகள் இல்லாமல், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, மனிதர்களுக்கு ரேபிஸைப் பரப்புகிறது. ரேபிஸ் தடுப்பூசி விற்பனை அதிகரித்த போதிலும், அது போதுமானதாக இல்லை. பாறு கழுகுகளைப் போலல்லாமல், அழுகிய எச்சங்களை சுத்தம் செய்வதில் நாய்கள் பயனற்றவையாக இருக்கின்றன. இது பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகள் குடிநீரில் பரவுவதற்கு வழிவகுத்தது. அதே சமயம், இவற்றை அகற்றப் போதுமான செயல்முறைகள் ஏதும் இல்லை. தண்ணீரில் மல பாக்டீரியாக்கள் (Faecal bacteria) இரட்டிப்பாகி வருகின்றன. "இந்தியாவில் பாறு கழுகு இனத்தின் சரிவு, மனிதர்களுக்குக் கடினமான, கணிக்க முடியாத இழப்பை கொண்டு வந்துள்ளது,” என்கிறார் வார்விக் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான சுதர்சன். "பாறு கழுகு இனத்தின் அழிவுக்கு, புதிய ரசாயனங்கள் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட போதிலும், பிற மனித நடவடிக்கைகளும் முக்கியக் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன. வாழ்விட இழப்பு, வனவிலங்கு வர்த்தகம், மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய காரணங்கள் விலங்குகள் மீதும், அதையொட்டி, நம் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,” என்கிறார் அவர். குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் 'செயற்கை கருப்பை' - மருத்துவ துறையில் என்ன நடக்கிறது?21 ஜூலை 2024 அதிவேகமாக அழிந்த பறவையினம் மேலும் பேசிய சுதர்சன், "குறிப்பாக இந்த அதி முக்கிய இனங்களைப் (keystone species) பாதுகாப்பதற்கான செலவுகள் மற்றும் இலக்கு ஆதாரங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்," என்று விவரித்தார். இந்தியாவில் உள்ள பாறு கழுகு இனங்களில், வெள்ளைக் கழுகு, இந்தியக் கழுகு மற்றும் சிவப்பு தலை கழுகு ஆகியவை 2000-களின் முற்பகுதியில் இருந்து மிகவும் குறிப்பிடத்தக்க நீண்ட கால வீழ்ச்சியை சந்தித்துள்ளன, இவற்றின் எண்ணிக்கை முறையே 98%, 95%, மற்றும் 91% குறைந்துள்ளது. எகிப்திய கழுகு மற்றும் புலம்பெயர்ந்த கிரிஃபோன் கழுகு ஆகியவற்றின் எண்ணிக்கைகளும் கணிசமாகக் குறைந்துள்ளன, ஆனால் பேரழிவு என்று சொல்லும் அளவுக்கு எண்ணிக்கை குறையவில்லை. இந்தியாவில் 2019-ஆம் ஆண்டின் கால்நடை கணக்கெடுப்பில் 50 கோடிக்கும் அதிகமான விலங்குகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளன, இது உலகிலேயே அதிகம். பாறு கழுகுகள், மிகவும் திறமையான அழுகுண்ணிகள். கால்நடைகளின் சடலங்களை விரைவாக அகற்றுவதற்கு விவசாயிகள் வரலாற்று ரீதியாக நம்பியிருந்தது இந்தப் பறவை இனத்தை தான். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தியாவில் பாறு கழுகு இனத்தின் வீழ்ச்சி, ஒரு பறவை இனத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத மிக வேகமான அழிவாகப் பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் பாசஞ்சர் புறா இனத்தின் அதிவேக வீழ்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய அழிவைச் சந்தித்தது பாறு கழுகு இனம் தான். இந்தியப் பறவைகள் மாநில அறிக்கையின்படி, இந்தியாவின் மீதமுள்ள பாறு கழுகுகள் இப்போது பாதுகாக்கப்பட்டச் பகுதிகளைச் சுற்றி காணப்படுகின்றன. இங்கு மிகவும் அழுகிய நிலையில் இருக்கும் கால்நடைகளை விட இறந்த வனவிலங்குகளை அதிகம் சாப்பிடுகின்றன. கால்நடைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் பாறு கழுகுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கால்நடைகள் புதைக்கப்படும் முறை அதிகரிப்பதாலும், காட்டு நாய்களின் போட்டி காரணமாகவும் எஞ்சி இருக்கும் கழுகுகள் உண்பதற்குச் சடலங்கள் கிடைப்பது குறைந்து வருவது பிரச்னையை அதிகப்படுத்துகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய வெள்ளைக் கழுகு இனத்தை பார்ப்பது அரிதாகிவிட்டது. தற்போதைய நிலைமை என்ன? குவாரி மற்றும் சுரங்கம் சார்ந்த செயல்பாடுகள் சில கழுகு இனங்கள் கூடு கட்டும் வாழ்விடங்களைச் சீர்குலைக்கின்றன. இந்தப் பிரச்னைகளில் இருந்து பாறு கழுகுகள் மீண்டு வருமா? சில நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் இருந்தாலும் உறுதியாகப் சொல்வது கடினம். கடந்த ஆண்டு மேற்கு வங்க புலிகள் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட இருபது பாறு கழுகுகள் பிடிக்கப்பட்டு, செயற்கைக்கோள் டேக்குகள் (satellite tags) பொருத்தப்பட்டு, அவற்றின் இயற்கையான வாழ்விடத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டன. தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட மிக சமீபத்திய ஆய்வில், கிட்டத்தட்ட 300 கழுகுகள் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது. இருப்பினும், இன்னும் கூடுதல் நடவடிக்கை தேவை. https://www.bbc.com/tamil/articles/czd9l5n0qvwo
  14. விளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.... பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.
  15. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல் 27 JUL, 2024 | 01:01 PM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக தங்களது வாக்கெடுப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாதவர்கள் பிறிதொரு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெரிவத்தாட்சி அலுவலர், பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சரண மாவத்தை, இராஜகிரிய எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானவை என விண்ணப்பதாரர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இந்த விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது www.election .gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/189510
  16. பொலிஸ்மா அதிபரின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியும் - மஹிந்த தேசப்பிரிய 27 JUL, 2024 | 04:10 PM (எம்.மனோசித்ரா) பொலிஸ்மா அதிபரின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரொருவரை பொலிஸ் ஆணைக்குழு அல்லது அரச சேவை ஆணைக்குழுவால் நியமிக்க முடியும். தற்போது தேர்தலுக்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் நடத்தப்படும்போது அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டாலும், தேர்தலுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரையே அந்த அறிவித்தல் சென்றடையும். தற்போது அவ்வாறானதொரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அடிப்படை செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எவ்வித தடையும் ஏற்படாது. தற்போது பொலிஸ்மா அதிபர் தன் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிக்க முடியாது என்பது அரசாங்கத்தின் வாதமாக உள்ளது. ஆனால், தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அதற்கான அதிகாரியொருவரை நியமிக்க முடியும். அந்த நியமனத்தை பொலிஸ் ஆணைக்குழுவுக்கோ, அரச சேவை ஆணைக்குழுவுக்கோ வழங்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தேவையேற்படின் தேர்தல் கடமைகளை செய்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியும். அவ்வாறில்லை என்றால் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக தேவையான ஆலோசனைகளை வழங்க முடியும். விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பணிக்கமர்த்தப்பட்டால் மாத்திரமே சிக்கல் ஏற்படும். எவ்வாறிருப்பினும் செயலாளர்கள் ஊடாக பணிகளை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடியும். எனவே பொலிஸ்மா அதிபர் விவகாரம் தேர்தலுக்கு தடையாகாது. இதனால் தடை ஏற்படும் என்று காண்பிக்க முயற்சிப்பவர்களும், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எண்ணுபவர்களும் மக்களின் உரிமையை முடக்கவே முயற்சிக்கின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/189530
  17. ஒரு பந்து மீதமிருக்க பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட இலங்கை தகுதிபெற்றது Published By: VISHNU 26 JUL, 2024 | 11:00 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் ரி20 ஆசிய கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது. இந்த வெற்றியை அடுத்து இந்தியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (28) இதே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது. பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. விஷ்மி குணரட்ன (0), ஹர்ஷிதா சமரவிக்ரம (19) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (19 - 2 விக்.) எனினும் அணித் தலைவி சமரி அத்தபத்துவும் கவிஷா டில்ஹாரியும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். டில்ஹாரி 17 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையே அத்தபத்துவின் பின்னங்கால் அந்தரத்தில் இருந்தபோது விக்கெட் காப்பாளர் முனீபா ஸ்டம்ப் செய்தார். என்னே விசித்திரம், முனீபா கேள்வி எழுப்பாததால் அத்தபத்து தப்பித்துக்கொண்டார். முனீபாவின் கவனக்குறைவான அந்த செயல் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலக்ஷிகா சில்வா வந்த வேகத்திலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (78 - 4 விக்.) எனினும் சமரி அத்தபத்துவும் அனுஷ்கா சஞ்சீவனியும் 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சமரி அத்தபத்து அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் அடிக்க முயற்சித்து விக்கெட்டைத் தாரை வார்த்தார். அவர் 48 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஹசினி பெரேரா (3), சுகந்திகா குமாரி (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டது. எனினும், நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய அனுபவசாலி அனுஷ்கா சஞ்சீவனி ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிபெறச் செய்தார். பந்துவீச்சில் சாடியா இக்பால் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. குல் பெரோஸா, முனீபா அலி ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். குல் பேரோஸா 25 ஓட்டங்களையும் முனீபா அலி 37 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து சித்ரா ஆமின் (10), அணித் தலைவி நிதா தார் (23) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (99 - 4 விக்.) எனினும் ஆலியா ரியாஸ் (16 ஆ.இ.), பாத்திமா சானா (23 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 140 ஓட்டங்களாக உயர்த்தினர். பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: சமரி அத்தபத்து. https://www.virakesari.lk/article/189484
  18. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: நீங்கள் கவனிக்க வேண்டிய 11 நட்சத்திர வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சோனியா ஆக்ஸ்லே பதவி, பிபிசி விளையாட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸில் நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் உலகமெங்கிலும் உள்ள சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் 32 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திர வீரர்கள், அவர்களின் கதைகள், முந்தைய சாதனைகள் உலகப் பார்வையுடன் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் 2024- இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தமிழக வீரர்கள் யார் யார்? முழு தகவல்26 ஜூலை 2024 பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரம்25 ஜூலை 2024 லியோன் மார்ச்சண்ட் (பிரான்ஸ்) - நீச்சல் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐந்து முறை உலக சாம்பியனான இவர், ஒலிம்பிக் போட்டிகளின் முகமாக இருந்துள்ளார். இம்முறை நீச்சல் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வெல்வதற்கான முயற்சியில் உள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கும் 22 வயதான இவர், படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் வேடிக்கையாகப் பல சாதனைகளை முறியடித்து வந்தார். அதில் மைக்கேல் ஃபெல்ப்ஸ் தம் வசம் 15 ஆண்டுகளாக வைத்திருந்த 400 மீட்டர் தனிநபர் மெட்லி உலக சாதனையை 2023இல் முறியடித்ததும் ஒன்று. இரு ஒலிம்பிக் நீச்சல் வீரர்களின் மகனான மார்ச்சண்ட், 200 மீட்டர் தனிநபர் மெட்லி (நான்கு வித நீச்சல் போட்டிகளை உள்ளடக்கியது), 400 மீட்டர் தனிநபர் மெட்லி மற்றும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை போட்டிகளில் உலக சாம்பியன் ஆவார். இவர், 200 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை டபுள் போட்டிகளில் வெல்லும் முதல் நீச்சல் வீரராக முயன்று வருகிறார். அதற்காக, ஒரே நாளில் நடைபெறும் இரு போட்டிகளில் அவர் போட்டியிட வேண்டும். மைக்கேல் ஃபெல்ப்ஸின் முன்னாள் பயிற்சியாளர் தான் மார்ச்சண்ட்க்கு பயிற்சி அளித்துள்ளார். நான்கு தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை தங்கள் நாட்டு ரசிகர்கள் முன்பு வெல்வதற்கான வாய்ப்பு மார்ச்சண்ட்க்கு உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டின் அளவு என்ன?26 ஜூலை 2024 சிமோன் பைல்ஸ் (அமெரிக்கா) - ஜிம்னாஸ்டிக் பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிடுவதைக் கடைசியாக ஒருமுறை பார்த்ததாகப் பலரும் நினைத்திருந்தனர். தன்னிடம் உள்ள நான்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடன் மேலும் சில பதக்கங்களைச் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிம்னாஸ்டிக்கில் காற்றில் சுழலும்போது ஏற்படும் மனத்தடை (twisting moves) காரணமாக டோக்கியோ போட்டிகளில் இருந்து விலகினார் சிமோன் பைல்ஸ். மீண்டும் உணர்ச்சிபூர்வமாக போட்டிகளுக்குத் திரும்பிய அவர், ஏழாவது ஒலிம்பிக் பதக்கமாக வெண்கல பதக்கத்தை வென்றார். பின்னர் விளையாட்டில் இருந்து விலகியிருந்த அவர், ஜூன் 2023 முதல் மீண்டும் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார். அப்போதிருந்து பைல்ஸ் நான்கு தங்கப் பதக்கங்கள் உட்பட ஐந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றார். அவர் தன்னுடைய சிகிச்சையாளரைத் (therapist) தொடர்ந்து சந்தித்து வருகிறார். “மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நான் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன். இதற்காக மிகவும் உழைத்திருப்பதால், டோக்கியோவில் நடந்தது மீண்டும் நடக்காது” என இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கூறியிருந்தார். நோவக் ஜோகோவிச் (செர்பியா) - டென்னிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES கிராண்ட் ஸ்லாம் எனும் டென்னிஸ் விளையாட்டின் பெரு வெற்றித் தொடர் போட்டிகளில் 24 முறை வென்றுள்ள ஜோகோவிச்சின் பதக்கங்களில் ஒலிம்பிக் தங்க பதக்கம் மட்டும்தான் இன்னும் சேரவில்லை. அவருடைய முக்கிய இலக்காக பாரிஸ் 2024 இருக்கிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. நான்கு முக்கியமான தொடர் போட்டிகளில் வெற்றியுடன், டோக்கியோ 2020 போட்டிகளில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான இலக்குடன் இருந்த ஜோகோவிச், அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவிடம் தோற்றார், மேலும் வெண்கல பதக்கத்தையும் அவரால் வெல்ல முடியவில்லை. கடந்த காலங்களில் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றியுடன் திரும்பி வந்த ஜோகோவிச், இப்போதும் பெரும் ஏமாற்றம், தடைகளைக் கடந்து வலுவுடன் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 37 வயதான அவருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையல்லை, எந்த வெற்றியையும் அவர் பெறவில்லை, உலக தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தில் இல்லை. காலிறுதிச் சுற்றுக்கு முன்னதாகவே முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவர் பங்கெடுப்பது முடிவுக்கு வந்தது. பிரேஸ் எனும் முழங்கால் பட்டையை அணிந்துகொண்டு விம்பிள்டன் இறுதிச்சுற்று வரை வந்த ஜோகோவிச், கார்லஸ் அல்கராஸால் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதியுடன் இருந்தால் பெய்ஜிங்கில் 2008இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதைவிட இந்த முறை முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். கேட்டி லெடெக்கி (அமெரிக்கா) - நீச்சல் பட மூலாதாரம்,GETTY IMAGES ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை யாராவது நிறுத்த முடியுமா? நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கும் 27 வயதான லெடெக்கி, தனது நாட்டைச் சேர்ந்த சக போட்டியாளர் ஜென்னி தாம்ப்சனின் சாதனையை முறியடித்து, மிகச் சிறந்த நீச்சல் வீரர் என்ற பெயரைப் பெறுவதற்கு இன்னும் ஒரு பதக்கத்தை வெல்ல வேண்டியுள்ளது. அவர், 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் மற்றும் 4*200 மீட்டர் ரிலே ஆகிய நான்கு போட்டிகளில் பங்கெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது ஜென்னி தாம்ப்சனின் 12 பதக்கங்களை வென்ற அமெரிக்க வீராங்கனை என்ற சாதனையையும் 10 பதக்கங்களைக் கொண்டுள்ள லெடெக்கி முறியடிக்கலாம். லெடெக்கி 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டிகளில், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் கனடிய இளம் வீராங்கனை சம்மர் மெக்கின்டோஷிடம் தோற்றதுதான் கடந்த 13 ஆண்டுகளில் லெடெக்கியின் முதல் தோல்வியாக இருக்கும் நிலையில், இதனால் அவருடைய போட்டியாளர்களுக்குச் சிறு நம்பிக்கையும் தென்படுகிறது. கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா?25 ஜூலை 2024 நோவா லைல்ஸ் (அமெரிக்கா) - தடகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க தடகள வீரரான இவர், இம்முறை சில பெரிய இலக்குகளை நிர்ணயித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் தொடர் ஓட்டம், 4*400 மீட்டர் தொடர் ஓட்டம் என நான்கு தங்க பதக்கங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெயரைப் பெறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளார். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவற்றில் முதல் மூன்று போட்டிகளில் அவர் தங்கப் பதக்கங்களை வென்றார். உலக தடகள உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதன்முறையாகப் பங்கேற்ற இவர், 4*400 மீட்டருக்கான போட்டியில் தனக்கான இடத்தைப் பெற முயன்று வருகிறார். இதுவும் போதவில்லையெனில், ஜமைக்காவின் சிறந்த வீரரான உசைன் போல்ட்டின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் உலக சாதனைகளை முறியடிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2020இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017ஆம் ஆண்டில் உசைன் போல்ட் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 'எங்க வீட்டுப் பெண்' - தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் என்ன நடக்கிறது?24 ஜூலை 2024 ஃபெயித் கிபிகோன் - தடகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES இருமுறை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் உலக சாதனையைத் தன்வசம் வைத்துள்ள கிபிகோன், “பிரகாசமான கோடைக்காலத்தை எதிர்நோக்கியுள்ளதாக” ஒலிம்பிக் போட்டிகள் குறித்துக் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 1500 மீட்டர் - 5,000 மீட்டருக்கான போட்டிகளில் தான் வென்றதைப் போன்று, இம்முறையும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு தங்கப் பதக்கங்களை வெல்ல 30 வயதான இவர் முயன்று வருகிறார். அவர், 5,000 மீட்டருக்கான உலக சாதனையை முன்பு படைத்தார். கடந்த ஆண்டு பாரிஸில் எட்டு ஆண்டுகளில் தனது முதல் போட்டியில் முத்திரையைப் பதித்தார். அதன் பின்னர் இச்சாதனை எத்தியோப்பியாவின் குடாஃப் செகேயால் தோற்கடிக்கப்பட்டது. தனது தடகள வாழ்க்கையை 16 வயதில் ஆரம்பித்த கிபிகோன், 2011இல் நடைபெற்ற உலக ஜூனியர் நாடு கடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றுக் காலில் ஓடித் தன்னுடைய முதல் தனிநபர் உலக சாதனையைப் படைத்தார். கடந்த 2018ஆம் ஆண்டில் தாயானபோது அது எப்படித் தனது மனநிலையை மாற்றியது என்பது குறித்து அவர் பேசியுள்ளார். நான்கு உலக சாம்பியன்ஷிப் பட்டங்களில் மூன்று பட்டங்களை அவர் தாயானதற்குப் பின்பே பெற்றார். அன்டோயின் டுபோன்ட் (பிரான்ஸ்) - ரக்பி செவன்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஆண்டு சொந்த நாட்டு ஒலிம்பிக்கில் போட்டியிடும் தனது கனவைத் தொடர XVகளில் இருந்து செவன்ஸுக்கு மாறுவதாக டுபோன்ட் (Dupont) அறிவித்தபோது, அது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. XV-a-சைடில் உலகின் சிறந்த வீரராகப் பலரால் கருதப்படும் பிரான்ஸ் கேப்டன் மற்றும் ஸ்க்ரம்-ஹாஃப் டுபோன்ட் (scrum-half), உலக ரக்பி செவன்ஸ் சர்க்யூட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சிக்ஸ் நேஷன் போட்டிகளைத் தவிர்த்துவிட்டார். கனடாவின் வான்கூவரில் நடந்த தனது தொடக்கப் போட்டியில் அந்த அணிக்கு வெண்கலப் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தார். அதன் பின்னர், மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண்கள் செவன்ஸ் பட்டத்தை வெல்ல பிரான்ஸ் அணியை ஊக்கப்படுத்தினார். கடந்த 19 ஆண்டுகளில் அவர்கள் பெறும் முதல் பட்டம் இது. "நாங்கள் மிகவும் லட்சியம் கொண்ட அணி, தங்கப் பதக்கத்தை வெல்ல விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் அதற்காகப் பாடுபடுகிறோம்" என்று 27 வயதான அவர் கூறினார். மற்ற அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றன. 2016ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் செவன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஃபிஜி (Fiji) இரண்டு ஆண்களுக்கான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. ரியோ 2016இல் நடந்த காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் ஜப்பானிடம் தோற்கடிக்கப்பட்டு டோக்கியோ 2020க்கு தகுதி பெறவில்லை. ஆனால் புதன்கிழமை தொடங்கும் பாரிஸில் நடக்கும் காலிறுதியில் பிரான்ஸ் ஏற்கெனவே தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் டுபோன்ட் ஓர் அற்புதமான தனி முயற்சி மூலம் இந்த விளையாட்டுகளின் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். நீரஜ் சோப்ரா (இந்தியா) - தடகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES நீரஜ் சோப்ராவுக்கு இந்தியாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவரை 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஒலிம்பிக்கில் `டிராக் மற்றும் ஃபீல்ட்’ தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரரான சோப்ரா, பாரிஸில் தனது ஈட்டி எறிதல் போட்டியின் பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளார். டோக்கியோவில் அபார வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய தடகள வீரர் என்னும் பெருமையைப் பெற்றார். இந்தியாவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் தலைசிறந்த விளையாட்டு வீரரான பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் என்பவர்தான் நீரஜ் சோப்ராவின் வலிமையான எதிரி. டோக்கியோ 2020இல் ஒலிம்பிக் டிராக் அண்ட் ஃபீல்ட் பைனலுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தானின் முதல் தடகள வீரர் ஆன பிறகு நதீம் தனது சொந்த நாட்டு வரலாற்றைப் பெருமைப்படுத்தி உள்ளார். அவர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ராவுக்கு அடுத்த இடத்தில், வெள்ளி வென்றார். அதோடு தடகளத்தில் தனது பாகிஸ்தானில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் நபர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார். ஓல்ஹா கர்லன் (யுக்ரேன்) - வாள்வீச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு முறை உலக சாம்பியனான ஓல்ஹா கர்லன், ரஷ்ய எதிராளியுடன் கைகுலுக்க மறுத்ததற்காக விதிக்கப்பட்ட தடையின் காரணமாக இம்முறை போட்டிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அன்னா ஸ்மிர்னோவாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கைகுலுக்குவதற்குப் பதிலாகக் கத்திகளை தட்டிக் கொள்ளும் நோக்கத்தில் தன் கத்தியை வழங்கியதால் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து கர்லன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், கர்லானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடைய "தனித்துவமான சூழ்நிலை" காரணமாக அவர் தகுதிபெற முடியாவிட்டால், அவரது அணி "கூடுதல் இடத்தை ஒதுக்கீடு செய்யும்" என்று அவர் கூறினார். நான்கு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து நிலவி வரும் போர் சூழல்களுக்கு மத்தியில் யுக்ரேனியர்களுக்கு "நம்பிக்கையை" கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார். பாரிஸில் நடுநிலை விளையாட்டு வீரர்களாகப் பங்கேற்க எந்த ரஷ்ய அல்லது பெலாரஷ்ய வாள்வீச்சு வீரர்களும் அழைக்கப்படவில்லை, 33 வயதான கார்லன் இதை "வெற்றி" என்று விவரித்தார். ஸ்டீபன் கறி (அமெரிக்கா) - கூடைப்பந்து பட மூலாதாரம்,GETTY IMAGES என்பிஏ-வின் தலைசிறந்த வீரரான ஸ்டீபன் கரி பாரிஸில் ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறார். கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியின் `பாயின்ட் கார்டு’ என்று அழைக்கப்படும் ஸ்டீபன் நட்சத்திர ஆட்டக்காரர்கள் நிறைந்த அமெரிக்க ஆண்கள் அணியின் ஒரு பகுதியாக விளையாடுகிறார். இந்த அணியினர், கடந்த 2004 முதல் ஒவ்வொரு முறையும் தங்கத்தை வென்றுள்ளனர். அந்த அணியின் 16 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடன் மற்றொரு தங்கத்தையும் சேர்ப்பதை அவர் இலக்காகக் கொண்டுள்ளார். இரண்டு முறை `மிகவும் மதிப்புமிக்க வீரர்’ ( MVP ) பட்டம் உட்பட 4 என்பிஏ விருதுகள், இரண்டு உலகக் கோப்பைகள் என வென்று குவித்த கரியின் பதக்க சேகரிப்பில் இல்லாத ஒரே விஷயம் ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே. என்பிஏ அணியின் அதிக மதிப்பெண் பெற்றவரான லெப்ரான் ஜேம்ஸ், லண்டன் 2012க்குப் பிறகு முதன்முறையாக விளையாட உள்ளார். மேலும் கெவின் டுரான்ட் கூடைப்பந்தாட்டத்தில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் ஆண் தடகள வீரர் என்ற சாதனையைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் (ஜமைக்கா) - தடகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றி தோல்வி என எல்லா சூழலையும் 37 வயதான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் சந்தித்திருந்தாலும், அவரது ஐந்தாவது மற்றும் இறுதி ஒலிம்பிக்கில் சிறந்த திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "எப்போதும் முடிவென்பதே கிடையாது" என்று மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஹெல்லி இந்த மாதத் தொடக்கத்தில் கூறினார். ஐந்து முறை 100 மீட்டர் உலக சாம்பியனான ஃப்ரேசர்-பிரைஸ் இந்த சீசனில் காயங்களுடன் போராடினார். ஆனால் தனது முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்காக விளையாடும் சக வீராங்கனை ஷெரிக்கா ஜாக்சனுடன் இணைந்து பாரிஸில் போட்டியிடுவார். அவர்கள் 4x100 மீ தொடர் ஓட்டக் குழுவில் இடம் பிடித்திருப்பதால், ஜமைக்கா தங்கள் பட்டத்தைக் காக்க முயல்கிறது. கவனிக்க வேண்டிய மற்ற வீரர்கள் ஜெர்மன் குதிரையேற்ற வீராங்கனையான இசபெல் வெர்த், தான் பங்கேற்ற எந்த ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்லத் தவறியதில்லை. அவருக்கு இப்போது 55 வயதாகிறது. தனது ஏழாவது போட்டியில் பங்குபெறும் அவர், தனது ஏழு தங்கம் மற்றும் ஐந்து வெள்ளிப் பதக்கங்களைச் சேர்த்து, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் பெறும் வீராங்கனை என்ற சாதனையைத் தக்க வைப்பார் என்று நம்புகிறார். ஜார்ஜியாவை சேர்ந்த 55 வயதான பிஸ்டல் ஷூட்டர் நினோ சலுக்வாட்ஸே தனது 10வது ஒலிம்பிக்கில் பங்கேற்று, கனடிய குதிரையேற்ற தடகள வீரர் இயன் மில்லரின் சாதனையைச் சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிகழ்ந்தால் சலுக்வாட்ஸே இதை முதன்முதலில் சாதித்தவராக இருப்பார். கியூபாவின் மிஜைன் லோபஸ், கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் தொடர்ச்சியாக ஐந்து தனிநபர் தங்கம் வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஜெஸ் ஃபாக்ஸ் கேனோ ஸ்லாலோமில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மேலும் கயாக் கிராஸின் புதிய ஒழுக்கத்துடன், ஒரே விளையாட்டுப் போட்டிகளில் மூன்று கேனோ தங்கங்களை வென்ற முதல் நபராக இருக்க வாய்ப்புள்ளது. டேபிள் டென்னிஸில், பிரேசிலின் புருனா அலெக்ஸாண்ட்ரே, ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலியா பார்ட்டிகாவுக்கு பிறகு, பாராலிம்பிக்ஸில் போட்டியிடும் இரண்டாவது தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். https://www.bbc.com/tamil/articles/ce78kz9r3wyo
  19. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 26 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் தமிழர் உணவு மரபில் ‘பழைய சோற்றுக்கு’ எப்போதும் தனித்த இடம் உண்டு. சர்வதேச அளவில் பழைய சோறு விளைவிக்கும் நன்மைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளதை அண்மைக் காலமாகக் காண முடிகிறது. பழைய சோறு உள்ளிட்ட நொதித்த உணவுகள் நம் உடலுக்கு வழங்கும் நன்மைகள் என்ன? அவை எப்படி நம் உடலுக்குள் செயலாற்றுகின்றன? நொதித்த உணவுகள் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை போன்ற கார்போஹைட்ரேட்டுகளின் முறிவு மூலம் நொதித்த உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நொதித்தல் செயல்முறையானது பயன்படுத்தப்படும் பாக்டீரியாக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் போன்ற பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, பழைய சோற்றில் சுற்றுச்சூழலில் இருந்தே பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய உணவுகளின் நன்மைகள் குறித்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் குடல் இரப்பை இயல் நிபுணர் ஜஸ்வந்த் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். சர்க்கரை, செயற்கை இனிப்பு, செல்போன் கதிர்வீச்சு ஆகிய மூன்றும் புற்றுநோயை உண்டாக்குமா?20 ஜூலை 2024 குடல் நலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நம் உடலின் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு மிக முக்கியமானவை. நம் உடலின் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு மிக முக்கியமானவை. நமது உடலின் குடல் நாளத்தில் பல லட்சம் கோடி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஆர்க்கியா மற்றும் புரோட்டோசோவா உள்ளிட்ட ஒற்றை செல் உயிரினங்கள் அடங்கியுள்ளன. நமது உணவிலிருந்து நார்ச்சத்தை நொதிக்க உதவுதல், வைட்டமின்களை ஒருங்கிணைத்தல், வளர்சிதை மாற்றத்தை ஒருங்கமைத்தல் உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளை இவை செய்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குடலுக்கு நல்ல பாக்டீரியாக்களை வழங்கும் வேலையை பழைய சோறு போன்ற நொதிக்க வைத்த உணவுகள் வழங்குவதாக கூறுகிறார் மருத்துவர் ஜஸ்வந்த். “குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால், கசிவு குடல் நோய்க்குறி (leaky gut), ஐபிஎஸ் எனப்படும் குடல் அழற்சி நோய், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இதில், கசிவு குடல் நோய்க்குறி இருந்தால், குடல் பாதுகாப்பற்றதாக மாறிவிடும், விஷத்தன்மையுள்ள பொருட்கள் அனைத்தும் குடலில் சுற்றிக்கொண்டே இருக்கும். அவை எல்லா இடங்களுக்கும் பரவுவதால், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம், ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். கல்லீரலில் கொழுப்பு (fatty liver) தேங்கும். இவையெல்லாம் ஏற்படாமல் இருக்க புரோபயோடிக் பாக்டீரியாக்கள் உதவுகின்றன” என்கிறார் ஜஸ்வந்த். பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை13 ஜூலை 2024 படக்குறிப்பு,நொதிக்க வைத்த மாவில் செய்யப்படும் இட்லி போன்ற உணவுகளும் குடல் நலத்திற்கு நலன் பயக்கும் உணவாகும். குடலை சமநிலையாக வைத்திருக்கும் வேலையை இந்த பாக்டீரியாக்கள்தான் உறுதிப்படுத்துகின்றன. பெருங்குடல் ஆரோக்கியத்தையும் இந்த பாக்டீரியாக்கள்தான் பாதுகாக்கின்றன. “பழைய சோறு போன்ற நொதிக்க வைத்த உணவுகள், புரோ பயோட்டிக் பாக்டீரியாக்களை வழங்குகின்றன. பழைய சோறு ப்ரீபயோட்டிக்காகவும் செயல்படுகிறது. இந்த புரோபயோட்டிக் மற்றும் ப்ரீபயோட்டிக் இரண்டும் உடலுக்குள் வேதிவினை புரிந்து, போஸ்ட்-பயோடிக்குகளையும் வழங்குகின்றன. அதில் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு எதிராக செயல்படும் ஏஜென்ட்டுகள் உள்ளன. இதுபோன்று சுமார் 2,000 ஏஜென்ட்டுகள் இதில் உள்ளன” என்கிறார் அவர். நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை ஊறவைக்கும் போதும் இத்தகைய பலன் கிடைத்தாலும் அவை அதிகமாக பழைய சோற்றிலிருந்து கிடைப்பதாக அவர் தெரிவித்தார். “கலப்பட உணவுகள், பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, குடலில் ஏற்கெனவே உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்” என அவர் கூறுகிறார். சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்3 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,“குடல் நலமாக இருக்கும்போது பெரிதளவில் எவ்வித நோயும் பாதிக்காது” நோயெதிர்ப்பு சக்தி குடல் ஆரோக்கியமாக இருந்தால் பலவித நோய்கள் தடுக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நொதித்த உணவுகள் வழங்கும் நுண்ணுயிரிகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஜஸ்வந்த் கூறுகிறார். “குடல் நலமாக இருக்கும்போது பெரிதளவில் எவ்வித நோயும் பாதிக்காது” என அழுத்தமாக கூறுகிறார் அவர். மன அழுத்தம், பதற்றத்தை குறைக்குமா? இது கொஞ்சம் சுவாரஸ்யமானது. மருத்துவ உலகில் குடல் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகிறது. ஏனெனில், குடலுக்கு மூளைக்கான அணுகல் உள்ளது. “அதனால், இந்த பாக்டீரியாக்கள் நம்முடைய முதல் மூளையில் உள்ள செல்களுக்கு வலுகொடுக்கும். எனவே, மன அழுத்தம், பதற்றத்தை இத்தகைய உணவுகள் தணிக்கும். அதனால், இந்த பாக்டீரியாக்களை நம் உடலின் ஒரு உறுப்பாக பாவிக்க வேண்டியுள்ளது” என்கிறார் ஜஸ்வந்த். பழைய சோறு சாப்பிட்டால் உடல்பருமன் ஏற்படும், நீரிழிவு நோயாளர்கள் அதை சாப்பிட கூடாது என கூறப்படுவது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்தார். “உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் நன்றாக கிரகிக்கப்படும்போது, உடல்பருமன் ஏற்படாது. நொதித்த உணவுகளை சாப்பிடும்போது ஊட்டச்சத்துகள் நன்றாக கிரகிக்கப்படுகின்றன. அதனால் இந்த கூற்று தவறானது” என்கிறார் ஜஸ்வந்த். கம்பு, மாப்பிள்ளை சம்பா, கவுனி ஆகிய பாரம்பரிய அரிசி வகைகளில் பழைய சோற்றை நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டால் ஆபத்தல்ல என கூறுகிறார், சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். இதுதவிர, பெருங்குடலில் அல்சரை கட்டுப்படுத்த இத்தகைய நொதிக்க வைத்த உணவுகள் பயனளிப்பதாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c0352y18j02o
  20. 27 JUL, 2024 | 10:12 AM யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களின் தொலைபேசிக்கு இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில் (ரெலிக்கொம்) இருந்து கதைப்பதாகவும், நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாகவும் அதற்கு உங்கள் அடையாள அட்டை இல, வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோரியுள்ளனர். இத்தரவுகள் வர்த்தகர்களினால் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் ஓர் OTP இலக்கம் வங்கியின் பெயரிலேயே அனுப்பப்படுவதாகும் சிலருக்கு வங்கிக்கு பணம் அனுப்பியது போன்று வங்கியின் பிரத்தியேக செயலிக்கே தரவுகள் அனுப்பப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின் மீள் அழைப்பெடுக்கும் மர்மநபர்கள் அவ் குறித்த இலக்கங்களினை கோருவதாக சுட்டிக்காட்டிய வர்த்தகர்கள் தாம் சந்தேகமடைந்து அந்த இலக்கத்தை மீளத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். எனவே இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டிருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தையோ அல்லது கணனி குற்றப்பிரிவின் துரித இலக்கங்களினையோ நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/189496
  21. அஞ்சல் மூல வாக்களிப்பு : சுற்றறிக்கை இன்று வெளியாகும்! ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று முதல் 10 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்லுக்கான அஞ்சல் மூல வாக்குகளுக்கு அரச ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/306844

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.