Everything posted by ஏராளன்
-
நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் அரசாங்கம் - சட்டத்தரணிகள் சீற்றம்
நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் அரசாங்கம்- சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சீற்றம் Published By: RAJEEBAN 27 JUL, 2024 | 08:07 AM உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது- பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோன் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது என சட்டத்தரணிகள் அமைப்பான சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது. தேசபந்துதென்னக்கோனின் பதவி தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பிலும் அதன் பின்னர் ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்துவதற்காக நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் சட்டத்தரணிகள் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் போக்கினை அரசாங்கம் சமீபத்தில் பின்பற்றுவதை சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் அமைப்பு இது அனைத்து அம்சங்களிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையான விடயம் என தெரிவித்துள்ளது. தேசபந்துதென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக தொடர்ந்து பணிபுரிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அந்த பதவிக்கான அதிகாரங்களை பயன்படுத்த முயன்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என சிலர் தெரிவிப்பதை அவர் நிராகரித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை உயர்நீதிமன்றம் சவாலிற்கு உட்படுத்த முடியாது என பிரதமர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளமை தவறான விடயம் என தெரிவித்துள்ள சட்டத்தரணி சாலியபீரிஸ் அரசியலமைப்பு சட்டத்தின் 41ஜே பிரிவின்படி அரசியலமைப்பு சபையின் விவகாரங்களில் கூட உயர்நீதிமன்றம் தனது அடிப்படை உரிமைகள் நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளது என அவர்குறிப்பிட்டுள்ளார். கடந்த 22 வருடங்களாக உயர்நீதிமன்றம் இந்த பிரத்யேக நியாயாதிக்கத்தை பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியின் தீர்மானங்களை அடிப்படை உரிமை மீறல் மனுவின் மூலம் சவாலிற்கு உட்படுத்த முடியும் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி தவறினால், அரசமைப்பின் ஏற்பாட்டின் படி ஜனாதிபதி பொருத்தமான நபருக்கு கடமைகள் பொறுப்புகளை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வலுவற்றதாக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189489
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஒலிம்பிக் போட்டியில் விளையாட தன் விரலை துண்டித்த ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலிய ஹாக்கி அணியை சேர்ந்த மேட் டாவ்சன் கட்டுரை தகவல் எழுதியவர், டிஃபானி டர்ன்புல் பதவி, பிபிசி செய்தியாளர், சிட்னியிலிருந்து இருந்து 26 ஜூலை 2024 பாரிஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காகத் தன்னுடைய விரலின் ஒரு பாதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார் ஹாக்கி வீரர். அவரது இந்தச் செயல் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரரான மேட் டாசன் (Matt Dawson) படுகாயம் அடைந்தார். வலது கை விரல் ஒன்றில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அதனைச் சரி செய்துவிடலாம் என்றாலும் கூட அந்தக் காயத்தில் இருந்து மீண்டு, விரல் இயல்பாகச் செயல்பட சில மாதங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் அந்த வீரரின் ஒலிம்பிக் கனவு கலைந்துவிடும் என்ற அச்சத்தில், தன்னுடைய விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட அவர் முடிவு செய்தது, அவரின் குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரலை இழக்கத் துணிந்த வீரர் 30 வயதான மேட் டாசன், தன்னுடைய ஒரு விரலை இழந்த வெறும் 16 நாட்களில், ஜூலை 27-ஆம் தேதி அன்று அர்ஜெண்டினாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் தன்னுடைய கூக்கபுர்ராஸ் (ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பெயர்) அணியுடன் பங்கேற்க உள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மேட் டாசன் பயிற்சி ஆட்டத்தின் போது தன்னுடைய விரல் உடைந்துவிட்டதாகவும், ஓய்வு அறையில் தன்னுடைய விரலைப் பார்த்து மயக்கம் அடைந்துவிட்டதாகவும் கூறினார். "என்னுடைய ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார். உடனடியாக ப்ளாஸ்டிக் சர்ஜன் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர், உடனடியாக விரலைச் சரி செய்தாலும் கூட அந்தக் காயத்தில் இருந்து மீண்டு வர நிறைய காலம் ஆகும் என்றிருக்கிறார். மேலும் முழுமையாக அந்த விரல் செயல்படுமா என்பதிலும் சந்தேகம் உள்ளது என்று அவர் தெரிவித்ததாகக் கூறினார். ஆனால், அந்த விரலை நீக்கிவிட்டால், 10 நாட்களில் மீண்டும் விளையாடச் சென்றுவிடலாம் என்று மருத்துவர் கூறியதாக மேட் டாசன் அறிவித்தார். அவசரப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம் என்று அவருடைய மனைவி கூறியிருந்த போதும், மேட் டாசன் தன்னுடைய விரலை நீக்கும் முடிவை அன்று மதியமே எடுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள ஆஸ்திரேலிய ஆண்கள் ஹாக்கி அணி 'ஒலிம்பிக்கில் பங்கேற்க நான் கொடுக்கும் விலை இந்த விரல்' மேட் டாசன், "என்னுடைய கரியர் ஆரம்பமாவதற்கு முன்பே முடிவுக்கு வந்ததைப் போல் ஆகிவிட்டது. யாருக்குத் தெரியும், இது என் இறுதி ஒலிம்பிக் போட்டியாகக் கூட இருக்கலாம். நான் இப்போதும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் அதைத்தான் செய்யப் போகிறேன்," என்று 'பார்லே வூ ஹாக்கி' (Parlez Vous Hockey) என்ற போட்காஸ்டில் குறிப்பிட்டார். "ஒலிம்பிக்கில் விளையாட என்னுடைய விரலின் ஒரு பகுதியை இழப்பது தான் நான் தரும் விலை என்றால் அதைத்தான் நான் செய்யப் போகிறேன்," என்றும் அவர் கூறினார். அணியின் தலைவர் அரன் ஜாலுஸ்கி, டாவ்சனின் இந்த முடிவு அணியின் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட அவர்கள் டாவ்சனுக்கு ஆதரவு தருகின்றனர் என்று குறிப்பிட்டார். பாரீஸில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எங்களுக்கு என்ன யோசிப்பது என்றே தெரியவில்லை. அவர் மருத்துவமனைக்குச் சென்றார். தன்னுடைய விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டார் என்று கேள்விப்பட்டோம். ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு மக்கள் கையையும் காலையும் சில நேரங்களில் விரலின் ஒரு பாதியையும் இழக்கத் தயாராக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது," என்று கூறினார் அரன். "உங்களது ஒரு கனவுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து, பல்வேறு தியாகங்களைச் செய்து இங்கே விளையாட வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள் எனில், அவரது முடிவு மிக எளிமையான ஒன்று என்று தான் நான் கூறுவேன்," என்றும் அவர் தெரிவித்தார். இந்த வாரத் துவக்கத்தில் இது தொடர்பாக பேசிய அணியின் பயிற்சியாளர் காலின் பேட்ச், டாசன் தன் அணியினருடன் மீண்டும் பயிற்சிக்கு வந்துவிட்டார் என்று குறிப்பிட்டார். "பாரீஸில் விளையாடத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் மேட் டாசன். இது போன்ற சூழலில் நான் இப்படி விரலை நீக்கியிருப்பேனா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் அதைச் செய்திருக்கிறார்," என்று அவர் ஆஸ்திரேலியாவின் செவன் நியூஸ் நெட்வொர்க் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேட் டாசனுக்கு அடிபடுவது இது முதல் முறையல்ல. 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சில வாரங்களுக்கு முன்பு ஹாக்கி மட்டை பட்டு கிட்டத்தட்ட ஒரு கண்ணையே இழக்கும் நிலைக்கு ஆளானார் அவர். ஆனால், அந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்றார். அவரது அணி தங்கப்பதக்கம் வென்றது. பிறகு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது அந்த அணி. https://www.bbc.com/tamil/articles/c4ngyeexqw5o
-
வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை
Published By: VISHNU 26 JUL, 2024 | 11:54 PM வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார். அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினாவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாட்டின் போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலய பூசகரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189486
-
பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் - ஆளும், எதிர்க்கட்சி கடும் தர்க்கம்
Published By: VISHNU 26 JUL, 2024 | 09:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ள நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கடும் தர்க்கத்தினால் சபையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக அமளி துமளி ஏற்பட்டது. பொலிஸ்மா அதிபர் பதவி விலக்கப்படவோ, பதவி விலகவோ இல்லையென்றும் இதனால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என்று ஆளும் கட்சியினர் கூறியதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க ஜனாதிபதிக்கு முடியாவிடின் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்ட கருத்துக்கு ஆளும் தரப்பு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. பொலிஸ்மா அதிபர் தொடர்பாக உயர்நீதிமன்றதால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவின் நிகழ்த்திய விசேட உரையை தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது. பிரதமர் விசேட உரையாற்றும் போது கூறுகையில்; ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ்மா அதிபர் விடயத்தில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கி தீர்ப்பை வழங்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. ஜனாதிபதி நினைத்தபடி பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கவும் முடியாது. பொலிஸ் மா அதிபர் பதவி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பாராளுமன்றம் தான் அரசியலமைப்பு பேரவைக்கு பொறுப்பு. வேறு யாரும் அதற்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது. அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளை நீதிமன்றத்தாலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. இதனால் பொலிஸ் மா அதிபர் மீதான உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை செல்லுபடியாகாது என்று கூறினார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் கருத்தை எதிர்த்து கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இந்த விடயம் தொடர்பில் சர்ச்சை நிலவியது. பிரதமரின் உரையை தொடர்ந்து அடிப்படை உரிமைகள் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துக்களை முன்வைத்தார். அடிப்படை உரிமைகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திற்கு தீர்மானம் எடுக்க முடியும். இதன்படி உயர்நீதிமன்றம் பொலிஸ்மா அதிபர் விடயத்தில் இடைக்கால தடையுத்தரவை வழங்கியுள்ளது. இதற்கமைய பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்க கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமக்கு பாதிப்பான தீர்ப்புகள் வரும் போது அதனை ஏற்காதிருக்க முடியாது. சபாநாயகர் இந்த விடயத்தில் முறையாக அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி தீர்மானங்களை எடுத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜனாதிபதி நடந்துகொள்ள வேண்டும். அதனை மீறி நடந்துகொள்ள முடியாது. தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறவும் முடியாது. அத்துடன் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று பொலிஸை நிர்வாகம் செய்கின்றார். இதனை சரியென கூற முடியாது. இது முற்றிலும் தவறாகும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக ஆளும் கட்சி தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டு அவர் பேசும் போது கூச்சலிட்டு இடையூறுகளை ஏற்படுத்தினர். இவ்வேளையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் தவறான கருத்தை முன்வைக்கின்றார். பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் பாதுகாப்பு அமைச்சுக்கு சிவில் உடையில் வந்துள்ளார் என்று கூறுவது முற்றிலும் பொய்யாகும் என்றார். இதன்போது தொடர்ந்தும் தனது கருத்தை முன்வைத்த எதிரக்கட்சித் தலைவர், ரோயல் கல்லூரி மாணவர்கள் இப்போது இந்த சபையில் நடப்பவற்றை நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இங்கே பிரதமர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காது கதைப்பது அந்த கல்லூரியின் பழைய மாணவர் என்ற ரீதியில் அவர் வெட்கப்பட வேண்டும் என்றார். இவ்வேளையில் எழுந்த எதிர்க்கட்சியின் சுயாதீன அணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில், இந்த சபையில் அரசியலமைப்பு சபை நிறைவேற்றுத் துறைக்கு சொந்தமானது என்று இந்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூறும் போது பிரதமர் கூறும் போது அது பாராளுமன்றத்திற்கு உரியது என்று கூறுகின்றார். இதில் எது சரியானது. இந்தப் பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமன விடயத்தில் தடையுத்தரவு வழங்கி விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு தொடர்பில் இது தொடர்பில் எதுவும் சபாநாயகர் செய்யவில்லை. இதேவேளை 2018ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படும் போது அதற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவை விதித்த போது அப்போது இதனை ஏற்க மாட்டோம் என்று கூறவில்லை. அப்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அவர் அதனை நிராகரிக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதிக்கு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய செயற்பட கூறுங்கள். இல்லையென்றால் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் அரசியலமைப்பை மீறியதாக அவருக்கு எதிராக வழக்குத் தொடரவும் முடியும் என்றார். இதன்போது சபையில் அமைதின்மை நிலவிய போது சபை முதல்வரான சுசில் பிரேமஜயந்த, 2017ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றுத்துறையின் பகுதியாகவே அரசியலமைப்பு பேரவை உள்ளது. இந்நிலையில் தற்போது பொலிஸ்மா அதிபரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது. பதவி நீக்கப்படவில்லை. இதில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் நியமித்த நிறுவனத்தினாலேயே அதனை மீள மாற்ற முடியும். இதில் பாராளுமன்றத்திற்கும் பணி உள்ளது. பதவி வெற்றிடமாகாத நிலையில் எப்படி பதவிக்கு இன்னுமொருவரை நியமிக்க முடியும். இதன்படி அரசியலமைப்பு பேரவையால் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றார். இவ்வேளையில் எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,சபை முதல்வர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் நான் ஆச்சரியமடைகின்றேன். குறித்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தினால் தீர்மானங்களை எடுக்க முடியும். இதனை நிராகரிக்க முடியாது. அனுர பண்டார நாயக்கவின் வழக்கு தீர்ப்பை இந்த விடயத்துடன் ஒப்பிட முடியாது. குறித்த விடயம் அரசியலமைப்பு பேரவையுடன் தொடர்புடையது. இது தொடர்பில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய முடியும். பேரவையின் உள்ளே தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படவில்லை. கூட்டம் முடிந்த பின்னரே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சி பிரதம கொரடாவின் கருத்தை நிராகரித்ததுடன், நான் அரசியலமைப்பை எங்கேயும் மீறியதில்லை என்றார். இதனை தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில், அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தின் பகுதி என்று ஒரு தரப்பு கூறும் போது,இன்னுமொரு தரப்பு இதனை நிறைவேற்றுத்துறையின் பகுதியாக கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது பாரதூரமான விடயமாகும். சபாநாயகரை பழியாக்கி தனக்கு வேண்டியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு இடமளித்துவிட வேண்டாம். இந்த விடயம் வழக்கும் திருடனுடையதே, பொருளும் திருடனுடையதே என்று கூறினார். இவ்வேளையில் மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த பிரச்சினையில் இருந்து ஜனாதிபதி விலகிச் செயற்பட முடியாது. அவர் வேட்பாளர் என்று கூறி அதில் இருந்து விலகிவிட முடியாது. பதில் பொலிஸ்மா அதிபரை அவர் நியமிக்க வேண்டும். அவரால் செய்ய முடியாவிட்டால் அவரை பதவி விலக கூறுங்கள். அதன்பின்னர் பதில் ஜனாதிபதி ஊடாக பணிகளை முன்னெடுக்கலாம் என்றார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியின் முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட மேலும் சில உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து பொலிஸ்மா அதிபர் விடயத்தில் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்ச்சித்ததுடன், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதனால் சபையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சர்ச்சை நீடித்ததுடன், இது தொடர்பில் தனது பதிலை வழங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, என்னால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நான் அவ்வாறு தவறான தீர்மானங்களை எடுக்கவில்லை. சரியான முடிவையே எடுத்துள்ளேன். மனசாட்சிக்கமைய சரியாக அனைத்து விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தேன் என்றார். https://www.virakesari.lk/article/189482
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை வரவேற்கும் அமெரிக்கா! ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டமையை அமெரிக்கா வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பதிவொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://thinakkural.lk/article/306851
-
அமெரிக்க காங்கிரசில் நெட்டன்யாகு உரை - வோசிங்டனில் உருவப்பொம்மை எரிப்பு - ஆர்ப்பாட்டங்கள்
அதிபர் வேட்பாளராகும் முன்பே இஸ்ரேலிடம் கடுமையான தொனியில் பேசிய கமலா ஹாரிஸ் - காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஜூலை 2024 இஸ்ரேல் பிரதமருடன் ''வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான'' என அவர் அழைக்கும் பேச்சுவார்த்தையை நடத்தியதாக அமெரிக்கத் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கருதப்படுபவருமான கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். இஸ்ரேஸ்- காஸா விவகாரத்தில் பைடனை விட கடுமையான தொனியில் பேசிய கமலா ஹாரிஸ், காஸாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தனது "கவலைகளை" தெளிவுபடுத்தியதாகக் கூறினார். மேலும் நெதன்யாகுவிடம், இஸ்ரேல் தன்னை எவ்வாறு பாதுகாத்தது என்பதும் முக்கியமானது என்று கூறியதாகத் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில், இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகு, "இந்தப் போர் முடிவடையும் நேரம் இது," என்று கமலா ஹாரிஸ் கூறினார். 'இரு நாடுகள் தீர்வு'க்கான அவசியத்தையும் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார். இதற்கு முன்னதாக, அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடனை நெதன்யாகு சந்தித்தார். அமெரிக்கக் காங்கிரஸ் சபையில், நெதன்யாகு உரையை நிகழ்த்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. ஹமாஸுக்கு எதிராக "முழு வெற்றி'க்கு உறுதி பூண்டுள்ளதாக காங்கிரஸ் சபையில் நெதன்யாகு கூறினார். அவர் உரை நிகழ்த்தியபோது ஆயிரக்கணக்கான பாலத்தீனிய ஆதரவாளர்கள் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இஸ்ரேல்- காஸா போர் ஒன்பது மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரை நிறுத்த உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெதன்யாகு அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார். பைடன் இஸ்ரேலுக்கு அளித்த உறுதியான ஆதரவு பல இடதுசாரி ஆர்வலர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் ஜனநாயகக் கட்சியினருக்கு அவர்களின் ஆதரவு தேவைப்படலாம். அதிபர் தேர்தலில் பைடனுக்கு மாற்று வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் கருதப்படும் நிலையில், இஸ்ரேல் குறித்து அவர் எடுக்கும் நிலைப்பாடு பற்றி பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். நெதன்யாகு உடனான சுமார் 40 நிமிடங்கள் சந்திப்புக்குப் பிறகு இஸ்ரேல் மீது தனக்கு "அசையாத அர்ப்பணிப்பு" இருப்பதாகவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் கமலா ஹாரிஸ் கூறினார். பட மூலாதாரம்,BRANDON DRENON/BBC NEWS அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பிறகு மோதல் தொடங்கியதாக கூறிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல் நாட்டின் கணக்கின்படி இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 250க்கும் மேற்பட்டவர்கள் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார். இதற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 39 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ''இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. அது எப்படி தற்காத்துக்கொள்கிறது என்பதும் முக்கியமானது,” என்று ஹாரிஸ் கூறினார். மேலும் காஸாவில் உள்ள "மோசமான மனிதாபிமான நிலைமை" குறித்து கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். "துன்பத்தை பார்த்து உணர்வற்றவர்களாக இருக்க நாம் நம்மை அனுமதிக்க முடியாது. நான் அமைதியாக இருக்க மாட்டேன்," என்று அவர் கூறினார். ''போரை முடிவுக்குக் கொண்டுவரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம். பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவோம். பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தைக் கொண்டு வருவோம்'' என்றார் அவர். குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை, நெதன்யாகு வெள்ளிக்கிழமையன்று சந்திக்க உள்ளார். முன்னதாக பைடனை சந்தித்தபோது, அவரை 40 ஆண்டுகளாகத் தெரியும் என்று பிரதமர் நெதன்யாகு கூறினார். அடுத்த சில மாதங்களில் ''பெரிய பிரச்சனைகள்" குறித்து பைடனுடம் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cpd9lx22ev9o
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
Published By: VISHNU 26 JUL, 2024 | 11:35 PM கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டுக்குப் இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை காலை 11 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர் சற்று முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் ஆலடிப்பகுதியில் வீசப்பட்டிருந்தார். அவரை மீட்ட பொலிசார் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்தான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189485
-
கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது!
Published By: VISHNU 26 JUL, 2024 | 11:59 PM கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னாதிட்டி பகுதியில் 14/07/2024 அன்று சமுர்த்தி அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில் அந்த இடத்தில் நின்றவர் அதனை எடுத்து சென்றுவிட்டார். குறித்த உத்தியோகத்தர் சிறிது தூரம் சென்று பார்த்த பொழுது தொலைபேசியை காணவில்லை. மறுபடியும் அந்த இடத்திற்கு வந்து தேடிய பொழுது தொலைபேசி கிடைக்கவில்லை. பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் cctv கமரா உதவியுடன் குறித்த நபரை இனம் கண்டனர். அந்தவகையில் குறித்த நபர் வீதியில் நடமாடுவதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. இதன்போது அந்த பகுதியில் வைத்து பொலிஸார் அவனை கைது செய்து விசாரித்தனர். அவர் அந்த கைப்பேசியை இன்னொருவருக்கு விற்றதாக கூறியுள்ளார். பின்னர் பொலிஸார் கைப்பேசியை வாங்கியவரையும் கைப்பேசியுடன் கைது செய்தனர். ஒருவர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்தது. குறித்த கைப்பேசி 76000 ரூபா பெறுமதி வாய்ந்ததாகும். யாழ்ப்பாண தலமை பொலிஸ் நிலையத்தில் பாரபடுத்தி மேலதிக விசாரணையின் பின்னர் அவர்களை யாழ் நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/189487
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இலங்கை தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வளவு சாத்தியம்? படக்குறிப்பு,தமிழ் கட்சிகள் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு குழப்பங்களுக்கிடையே இலங்கையின் 2024-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தேதி இன்று (வெள்ளி, ஜூலை 26) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேஷ வர்த்தமானியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழர் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தமிழ் தரப்பிற்கு இடையிலேயே மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதை முன்னிலைப்படுத்தி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையில் உடன்படிக்கையொன்று ஜூலை 22-ஆம் தேதி கைச்சாத்திடப்பட்டது. மொத்தம் 9 புரிந்துணவர்களை ஏற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள், யாழ்ப்பாணத்தில் இந்த உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டிருந்தனர். தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியன இணைந்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன. இந்த உடன்படிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளனர். இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. படக்குறிப்பு,ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் ஸ்ரீகாந்தா 'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு' புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளவை கீழ்வருமாறு: 1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இந்த உடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு 'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு' என அழைக்கப்படும். 2. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் 'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு' எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது. 3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விஷயங்கள், பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும். 4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும். 5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும். படக்குறிப்பு,ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் சி.வி.விக்னேஸ்வரன் 'தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகள்' 6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். 7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும் ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம் இதற்கான காணப்படுகின்றது. 8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து பயணிக்க முன்வரும்போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம் காணப்படுகின்றது. 9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர். பட மூலாதாரம்,RANJAN ARUN PRASADH படக்குறிப்பு,நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் 'தமிழர் நலனுக்கான முன்னெடுப்பு' இதேவேளை, கொள்கை ரீதியாக ஒன்றுப்பட்டு செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புக்களுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே முதன்மை கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிடுகின்றார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கருத்து தெரிவித்தார். ''ஆத்மார்த்தமாக அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் சூழ்நிலைகளை அனுசரித்தவாறு எமது இனத்தின் சமத்துவ வாழ்வுக்கான பயணத்தை நாம் எல்லோரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்ற கால கடமை எம் ஒவ்வொருவருடைய கரங்களிலும் தரப்பட்டுள்ளது,” என்றார். "ஈழத் தமிழீனத்தின் விடுதலைக்கு நீதி வேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களை அபிலாஷை வெளிப்பாடுகளை சிங்கள் தேசம் எப்போது புரிந்துக்கொள்ள முயற்சிக்கின்றதோ? அப்போது தான் அர்த்தம் மிகுந்த இலங்கையை கட்டியெழுப்ப முடியும்,” என்றார். பாலியல் துன்புறுத்தல் சர்ச்சைக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கவனம் செலுத்தும் இந்திய மல்யுத்த வீராங்கனைகள்10 ஜூலை 2024 ‘தமிழர்களின் மூன்று முக்கியப் பிரச்னைகள்’ மேலும் பேசிய அவர், "அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பையும், இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயற்பாடுகளை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை,” என்றார். "அடிப்படை விருப்புக்களை கோருகின்ற எமது அரசியல் உரிமை மீது போர் தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை, தமிழ் தேசியம் என்ற ஒரு குடையின் கீழ் நின்று கூட்டாக எதிர்க்கும் முயற்சியை உருவாக்குவதில் தமிழினம் இன்று பெரும் தோல்வியை சந்தித்திருக்கின்றது. "ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்னைகள் எது என்ற கேள்வியை எங்களது இளைய தலைமுறையை நோக்கி எழுப்பினால், நிலப்பறிப்பு, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்கின்ற மூன்று நிலைகளுமே அவர்களால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. "ஆனால், அந்த மூன்று பிரச்னைகளும் இனவிடுதலைக்கான களத்தை திறக்கவில்லை என்ற பொது புரிதல் எங்களிடத்தில் இல்லை. "கொள்கை ரீதியாக ஒன்றுப்பட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேச கட்டமைப்புக்களுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்போம் என்பதே எங்கள் ஒவ்வொருவருடைய முதன்மை கடமை என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்," என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,RANJAN ARUN PRASADH படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா இலங்கை தமிழரசுக் கட்சி ஏன் கைச்சாத்திடவில்லை? வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் முக்கிய கட்சியாக கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவை தொடர்புக் கொண்டு வினவியது. இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த விஷயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானமொன்று எட்டப்படும் என அவர் குறிப்பிட்டார். "நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. சம்பந்தன் ஐயாவின் மறைவு காரணமாக எமது மத்திய செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முடிவதற்கு முன்னர் கூட வேண்டியிருக்கும். ஒற்றுமையை மையமாக வைத்து நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளேன்," என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். முதல் தடவையாக தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் இலங்கையில் 1978-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக இதுவரை 8 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்படி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் 1982-ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், இந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். 1982-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியிருந்தார். இதன்படி, சுயேட்சை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டியிட்டதுடன், இறுதியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சுப்ரமணியம் குணரத்னம் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். இலங்கையில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் சுயேட்சையாக களமிறங்கியிருந்த நிலையில், பொது வேட்பாளராக இன்று வரை எவரும் களமிறக்கப்படவில்லை. இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அந்த பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை. 'எங்க வீட்டுப் பெண்' - தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் என்ன நடக்கிறது?24 ஜூலை 2024 பட மூலாதாரம்,RANJAN ARUN PRASADH படக்குறிப்பு,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழ் பொது வேட்பாளருக்கு தெற்கில் ஆதரவு உண்டா? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் முயற்சியிலேயே தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுகின்ற நிலையில், தென் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொறுத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஒரு தமிழர் வேட்பாளர் ஜனாதிபதியாவது என்றால், முதலில் வேட்பாளரை நாங்களே நிறுத்த வேண்டும். ஆனாலும், இலங்கையில் தமிழ் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியகூறு இல்லை என்கின்ற பட்சத்தில் அடுத்த கட்டமாக யார் ஜனாதிபதியாக போகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்கி, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தான் காலத்திற்கு பொறுத்தமானது என நான் நம்புகின்றேன்,” என்றார். "எனினும், கட்சியின் நிலைப்பாடு என்று பார்க்கும் போது, நான் கட்சியின் தலைவராக இருந்தாலும், கட்சியின் தேசிய சபையில் எடுக்கும் முடிவை மாத்திரமே அறிவிக்க முடியும். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சியின் தேசிய சபை இதுவரை முடிவெடுக்கவில்லை," என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். ஒலிம்பிக் 2024- இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தமிழக வீரர்கள் யார் யார்? முழு தகவல்26 ஜூலை 2024 பட மூலாதாரம்,PRABHAGANESHAN படக்குறிப்பு,ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தென்னிலங்கை தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார். ''தமிழ் பொது வேட்பாளர் விஷயத்தில் மூன்று விஷயங்கள் காணப்படுகின்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு வராது. வடக்கு, கிழக்கு மக்களுக்கும் பெரும்பாலும் அந்த விடயத்தில் உடன்பாடு இல்லை. சிங்கள வேட்பாளருடன் தான் போக வேண்டும்,” என்றார். "தென்னிலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறங்குவதை நாம் பிழை எனச் சொல்லவில்லை. ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிட் முடியும். தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதன் ஊடாக, தமது பேரம் பேசும் சக்தியை தமிழர்கள் இழக்கின்றார்கள். அதைவிட சிங்கள வேட்பாளர்களிடம் சென்று பேரம் பேசி எதையாவது சாதித்தால் அது நல்லது என நினைக்கின்றேன்," என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார். இந்த நிலையில், தென்னிலங்கையிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிக்கின்றமை காண முடிகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மாத்திரமே தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. ஆனால், இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், தமிழர் ஒருவர் ஜனதிபதியாக தெரிவாவத்றகான சாத்தியம் மிகமிகக் குறைவு என மலையகத் தமிழ்க் கட்சியினர் கருதுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c51y74gjj46o
-
மலிபன் பிஸ்கட்
அண்ணை தொடர்ந்து இரத்தச் சக்கரை அளவுகளை கண்காணிக்கிறனிங்களா? இரவு உணவின் பின் 12 மணித்தியால விரதத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் பகலில் உணவருந்தி 2 மணிநேரத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் கண்காணிப்பது அவசியம்.
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
மறைந்த விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை 26 JUL, 2024 | 05:12 PM மறைந்த சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும் புதிய சம சமாஜ கட்சியின் முன்னாள் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை (27) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (25) அதிகாலை தனது 81ஆவது வயதில் விக்ரமபாகு கருணாரத்ன காலமானார். அதை தொடர்ந்து, இன்று (26) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், நாளை (27) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அன்னாரின் பூதவுடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஏ.எப்.ரேமண்ட் மலர்ச்சாலையில் (A.F.Raymond Parlor) வைக்கப்பட்டுள்ளதாக புதிய சம சமாஜ கட்சி அறிவித்துள்ளது. பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1943ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ஆம் திகதி பதுளையில் பிறந்த விக்ரமபாகு கருணாரத்ன, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து எப்போதும் ஒரே கொள்கையுடன் செயற்பட்டதோடு, அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்தார். சிலோன் பல்கலைக்கழகத்தின் (University of Ceylon) பொறியியல் பட்டதாரியான விக்ரமபாகு கருணாரத்ன, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றார். சுமார் 18 வருடங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் அவர் கடமையாற்றினார். (படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/189463
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
அண்ணை கட்டுப்பணம் 25 இலட்சம் கட்சிக்காறருக்கும் 30 இலட்சம் சுயேட்சைகளிடமும் பெறும் வண்ணம் சட்டத்திருத்தம் மேற்கொள்ளச் சொல்லி யாரோ சொன்னவர்கள்!
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்! 26 JUL, 2024 | 05:37 PM ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு சில மணித்தியாலத்துக்குள் நான்கு வேட்பாளர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனெல் பெரேரா இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்தி ரத்ன சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். அனினவ நிவஹால் பெரமுன என்ற கட்சி சார்பில் போட்டியிடுவற்கு ஓசல லக்மால் அனில் ஹேரத் என்பவரும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எஸ்.ஜி.லியனகே என்பவரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இன்று (26) முதல் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவும் ,சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/189462
-
இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு
26 JUL, 2024 | 05:25 PM இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசின் கீழ் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சன்தோஷ் ஜா நேற்று (25) வியாழக்கிழமை மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட இருந்த நிலையில் இறுதியாக இலங்கை மாணவர்களுடன் உரையாடியுள்ளார். இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் மத உறவுகளை மேம்படுத்துவதில் இந்தி மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டியுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இந்தி மொழி மற்றும் இலக்கியம் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாகத் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்படக் கிட்டத்தட்ட 100 கல்வி நிறுவனங்களில் இந்திய மொழி மற்றும் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/189456
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
சென்னையில் நடந்த கூட்டத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்தே தமிழின படுகொலையை செய்தன என்பதை வெளிப்படுத்தியவர் விக்கிரமபாகு கருணாரட்ன - சீமான் 26 JUL, 2024 | 04:45 PM கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ணவின் மறைவுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் துயரம் வெளியிட்டுள்ளார் தனது அனுதாபசெய்தியில் சீமான் தெரிவித்துள்ளதாவது ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உண்மையான இடதுசாரி தலைவராகத் திகழ்ந்த ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் இலங்கை மக்களிடம் பொதுவுடமை தத்துவத்தை விதைத்த பெருமைக்குரியவர். சிங்கள இனவெறியர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி வாழ்நாள் முழுதும் தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவளித்து துணைநின்றவர். 2009ஆம் ஆண்டு தமிழினப்படுகொலைக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் ஆதரவு நாடகத்தை அரங்கேற்ற சென்னையில் திமுக நடத்திய டெசோ கூட்டத்தில் அழைப்பின் பேரில் கலந்துகொண்ட ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள், அந்த கூட்டத்திலேயே இலங்கையும் இந்தியாவும் இணைந்தே தமிழினப் படுகொலைப்போரைச் செய்தது என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி, அதன் காரணமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களால் இடைமறித்து பேசவிடாமல் தடுக்கப்பட்டார். அத்தகைய தீரமிக்க அரசியல் போராளியின் மறைவு சிங்கள மக்களுக்கு மட்டுமல்லாது; தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். https://www.virakesari.lk/article/189454
-
திருகோணமலை இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக விகாரை அமைக்க காணி துப்புரவு
Published By: DIGITAL DESK 3 26 JUL, 2024 | 03:04 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது. குச்சவெளி - இலந்தைக்குளம் 5 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் பௌத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வயலுக்கு சென்ற மக்களால் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்துவருவதாகவும் இந்நிலையில் தற்போது அப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர். குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மண்வெட்டிக்காக பிடிக்கம்பு வெட்டினாலே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அரச திணைக்களங்கள் பாரிய இயந்திரங்களினாலும், இயந்திர கை வாள்களினாலும் பாரிய பச்சை மரங்களை வெட்டி அழிப்பதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். https://www.virakesari.lk/article/189442
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இந்தியாவை வெற்றி கொள்ள இராணுவத்தின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கெட் அணி : புதிய வியூகம் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு இராணுவ உயர் அதிகாரி, உளவள ஆலோசனை வழங்கியுள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடருக்காக இந்த விசேட உளவள ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. விசேட ஆலோசனை இராணுவத்தின் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி எம்.சீ.பி. விக்ரமசிங்கவினால் இந்த விசேட ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. தேசபற்று மற்றும் அர்ப்பணிப்பு என்பன தொடர்பல் விசேட ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் கோணத்திலிருந்து இந்த உளவள ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. வெற்றி பெறும் மனநிலையை எவ்வாறு தொடர்ச்சியாக பேணுவது என்பது குறித்து ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கின் நிறைவில் கிரிக்கெட் வீரர்கள், இராணுவ அதிகாரியிடம் கேள்வி எழுப்பி தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/jaffna-commander-letcures-to-sl-crickters-1721838754
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்டார் ஒபாமா Published By: RAJEEBAN 26 JUL, 2024 | 03:11 PM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். பராக் ஒபாமாவின் இந்த ஆதரவு காரணமாக கமலா ஹரிஸ் அமெரிக்க அரசியலில் தீவிரமாக செயற்படும் ஜனநாக கட்சியின் தலைவர்களில் அனேகமானவர்களின் ஆதரவை பெற்றுள்ளார். பில் கிளின்டன், ஹிலாரி கிளின்டன் என ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் உடனடியாக கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்ட போதிலும் ஒபாமா ஆதரவை வெளியிடாதது கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். தனது மனைவியுடன் இணைந்து கமலா ஹரிசினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஐபோனில் ஹரிஸ் ஒபாமாவை செவிமடுப்பதை வீடியோவில் காணமுடிகின்றது. நான் கமலா குறித்து பெருமிதம் அடைகின்றேன், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக விளங்கப்போகின்றது என மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார். வாகனமொன்றிற்கு அருகில் நின்றபடி பதிலளிக்கும் கமலா ஹரிஸ் கடவுளே மிச்செல் ஒபாமா இது எனக்கு மிகப்பெரிய விடயம் என தெரிவிக்கின்றார். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தனை வருடங்களாக நீங்கள் பேசிய வார்த்தைகளும், நீங்கள் கொடுத்த நட்பும், என்னால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகம் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எனவே இருவருக்கும் நன்றி என அவர் தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/189444
-
அமெரிக்க காங்கிரசில் நெட்டன்யாகு உரை - வோசிங்டனில் உருவப்பொம்மை எரிப்பு - ஆர்ப்பாட்டங்கள்
அமைதியாக இருக்கப்போவதில்லை’ - காசா பிரச்சினையில் கமலாவின் நிலைப்பாடு என்ன? 26 JUL, 2024 | 01:23 PM இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து காசா பிரச்சினையில் அவரின் மாறுபட்ட நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ் “தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் காசாவில் நிலவும் மனித துயரத்தின் வீச்சு பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன். இதில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை” என்று கூறினார். இஸ்ரேலிற்கு தன்னை பாதுகாப்பதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஹமாஸ் அமைப்பினை ஈவிரக்கமற்ற யுத்தத்தினை தூண்டிய பயங்கரமான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட அமைப்பு என வர்ணித்துள்ளார். எனினும் இஸ்ரேல் எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்கின்றது என்பது முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் காசாவில் இந்த துயரங்கள் நிகழும்போது நாங்கள் அதனை அலட்சியம் செய்ய முடியாது, என குறிப்பிட்டுள்ளார். துன்பங்கள் குறித்து நாம் உணர்ச்சியற்றவர்களாகயிருக்க முடியாது, நான் மௌனமாகயிருக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன தேசத்தை ஏற்படுத்தவேண்டும் என கமலா ஹரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலா இதனைத் தெரிவித்தபோது அவர் குரலில் இருந்த உறுதியும் கெடுபிடியும் இஸ்ரேல் பிரச்சினையில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடு பைடனுடையதிலிருந்து மாறுபட்டதாகவே இருக்கும் என்ற விமர்சனங்களை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் போருக்கு பைடன் அரசு முழு ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேல் பிரச்சினை குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் “இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுகின்றன. இருதரப்புமே சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணம் கவனம் பெற்றுள்ளது. நெதன்யாகு வருகையை ஒட்டி வெள்ளை மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் சந்தித்தார். அப்போது ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள் போர் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பிணைக் கைதிகள் நாடு கொண்டுவரப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/189429
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பாரிஸ் 2024 ஒலிம்பிகிக் (Olympics 2024 - Paris) குழு நிலை போட்டிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது. ஒகஸ்ட் 11 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். முதற்கட்டமாக கால்பந்து, கை பந்து, ரக்பி ஆகிய ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. 10,214ற்கும் அதிகமான வீரர்கள் மொத்தமாக சர்வதேச அளவில் 10,214ற்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டுகளில் 329 பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 206 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களின் அணியின் வெற்றிக்காக காத்திருக்கின்றன. நேற்று நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் கனடா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட நிலையில், கனடா 2 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி அடைந்தது. அதேபோல, குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜப்பான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், ஸ்பெயின் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஒலிம்பிக் போட்டிகள் குரூப் பி பிரிவில் அமெரிக்கா - சிம்பாவே அணிகள் மோதிக்கொண்ட நிலையில், அமெரிக்கா மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. குரூப் ஏ பிரிவில் பிரான்ஸ் - கொலம்பியா அணிகள் மோதிக்கொண்ட நிலையில் பிரான்ஸ் அணி மூன்று கோள்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. பெண்களுக்கான கை பந்து (Handball) பிரிவில் குரூப் ஏ-வில் ஸ்வீடன் - நோர்வே அணிகள் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில், ஸ்வீடன் அணி 32 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. ரக்பி (Rugby Sevens) ஆட்டத்தில் ஜப்பான் - உருகுவே, சோமா - கென்யா ஆகிய நாடுகள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. https://tamilwin.com/article/paris-olympics-1721975294
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
மகளிர் ரி20 ஆசிய கிண்ண அரை இறுதிகள்: இலங்கை - பாகிஸ்தான்; இந்தியா - பங்களாதேஷ் 26 JUL, 2024 | 01:03 PM (நெவில் அன்தனி) ஐந்தாவது மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகளைத் தீர்மானிக்கும் இரண்டு அரை இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) இரவு 7.00 மணிக்கு மின்னொளியில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கையும் பாகிஸ்தானும் விளையாடவுள்ளன. 2008க்கு முன்னர் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நான்கு தடவைகள் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடிய இலங்கை, ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2022இல் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தது. இந் நிலையில் பாகிஸ்தானுடனான இன்றைய அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் குறிக்கோளுடன் இலங்கை களம் இறங்கவுள்ளது. பி குழுவில் இடம்பெற்ற இலங்கை, லீக் சுற்றில் பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது. ஆரம்ப வீராங்கனைகளான அணித் தலைவி சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றிகளை இலகுபடுத்தியதால் ஏனைய வீராங்கனைகளுக்கு துடுப்பெடுத்தாட வேண்டிய அவசியம் அதிகமாகத் தேவைப்படவில்லை. இந்த வருடம் ரி20 போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடி வந்துள்ள இலங்கை மகளிர் அணி 15 போட்டிகளில் 12இல் வெற்றிபெற்றிருந்தது. இவ்வாறாக திறமையை வெளிப்படுத்திவந்துள்ள இலங்கை இம்முறை முதல் தடவை சம்பியன் பட்டத்தை சூட முயற்சிக்கவுள்ளது. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் இதுவரை விளையாடப்பட்டுள்ள 19 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் 10 - 8 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் சில்ஹெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் இலங்கை ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்டிருந்தது. இம்முறை இலங்கை தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் பாகிஸ்தானை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா எதிர் பங்களாதேஷ் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் முன்னாள் சம்பியன் பங்களாதேஷுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த இரண்டு அணிகளில் இந்தியா சகலதுறைகளிலும் பலம்வாய்ந்ததாக காணப்படுவதால் இன்றைய போட்டியில் இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என நம்பப்படுகிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்துள்ள 22 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 19 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறது. எவ்வாறாயினும் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளன. சில்ஹெட்டில் 2022இல் நடைபெற்ற போட்டியில் இந்தியா மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் இந்தியாவை பங்களாதேஷ் 3 விக்கெட்களால் வெற்றிபெற்று சம்பியனாகியிருந்தது. ஆனால், இன்றைய போட்டியில் பங்களாதேஷ் சாதிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. https://www.virakesari.lk/article/189431
-
சளி பிடித்திருக்கும் போது வாய் வழியே சுவாசிக்கலாமா? இப்படி சுவாசிக்கும் போது என்ன நடக்கும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மெட்டில்டா கென்னல்ஸ், மெர்சிடிஸ் ஜிமினெஸ், நூரியா காம்பிலோ பதவி, பிபிசி 24 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 25 ஜூலை 2024 மழைக் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு அடிக்கடி சளி பிரச்னை உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், மூக்கு அடைத்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இதன் பிறகு, மூக்கு மூலம் சுவாசிப்பது கடினமாகி சில சமயம் நாம் வாய் மூலம் மூச்சு விடுவோம். இப்படி வாய் மூலம் சுவாசிப்பது ஆரோக்கியமானதா? இப்படி சுவாசிக்கும் போது உடலுக்கு என்ன நடக்கும்? இதுகுறித்து நிபுணர்கள் கூறுவது என்ன? ஒரு நாளில் சுமார் 10,000 முதல் 12,000 லிட்டர் வரையிலான காற்றை நாம் சுவாசிக்கிறோம். இந்த காற்றில் தூசு, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்றவையும் இருக்கும். இவை, சுவாசக் குழாய் மூலம் நுரையீரலை சென்றடைகின்றன. எனினும், இதுபற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நமது சுவாச அமைப்புக்கு இந்த மாசுக்களை எப்படி சுத்தம் செய்வது என தெரியும். மூன்று மைக்ரானுக்கும் குறைந்த அளவிலான துகள்கள் மட்டுமே சுவாச மண்டலத்தைக் கடந்து நுரையீரலை சென்றடைய முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் சுவாசிக்கும் காற்றுடன் உள்நுழையும் மாசு மற்றும் நுண்ணுயிர்களை எப்படி நமது சுவாச மண்டலம் வடிகட்டுகிறது? இந்த கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன், முதலில் நீங்கள் சிலியா (Cilia) எனும் சூப்பர் ஹீரோ பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். சிலியா என்பவை மயிர்க்கால் போன்ற சன்னமான அமைப்பு கொண்டதாகும். நமது சுவாச குழாயில் இருக்கும் சளியில் (Mucus) ஆயிரக்கணக்கில் இந்த சிலியா இருக்கும். மூக்கின் உள்ளே இருக்கும் சளியின் ஒவ்வொரு செல்லிலும் 25 முதல் 35 என்ற எண்ணிக்கையில் சிலியாக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிலியாவின் நீளம் ஐந்து முதல் ஏழு மைக்ரான் அளவில் இருக்கும். செல் சவ்வுகளில் காணப்படும் இவை ஒரு பிரஷ் போல செயற்படுகின்றன. இவற்றின் வேலையே, 0.5 மி.மி குறைவான தடிமனில் இருக்கும் நுண்ணுயிர்களின் ஊடுருவல்களை தடுப்பது தான். இதன் விளைவாக, வடிகட்டுதல் நடக்கிறது மற்றும் நுண்ணுயிர்கள் மூக்கின் வழியே வெளியேற்றப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES மூக்கில் இருக்கும் வடிகட்டிகள் மறுபுறம், மூக்கில் இருக்கும் திசுக்கள் காற்றின் மூலம் பரவும் நுண்ணுயிர்களை வடிகட்டுவதற்கு ஏற்றவை ஆகும். மூக்கில் இருக்கும் சளி (Mucus) சில நுண்ணுயிர்களை உள்நுழைய அனுமதிக்கிறது. முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தாத நுண்ணுயிர்களை உடலுக்குள் அனுமதிக்கிறது. சளியை கடந்து உள்ளே செல்லும், நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிர்களை தடுப்பதில் டைப்-பி வகை செல்கள் உற்பத்தி செய்யும் ஆன்டிபாடிகள் பெரும்பங்காற்றுகின்றன. வாய் வழியாக சுவாசிக்கும் போது என்ன நடக்கிறது? வாயின் முக்கிய பயன்பாடு உணவு உட்கொள்வது மட்டுமே. வாயில் சிலியா போன்ற காற்றை வடிகட்டும் அமைப்புகள் இல்லை. இந்த சிலியா அமைப்பு உணவில் இருந்து வரும் நுண்ணுயிர்கள் நம் உடலை பாதிக்காமல் தடுக்கிறது. இதனால் தான் நாம் வாய் வழியே சுவாசிக்க கூடாது. பட மூலாதாரம்,GETTY IMAGES நீண்ட நேரம் நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால் என்ன நடக்கும்? ஒருசில மரபியல் மாற்றங்களால் மற்றும் சுவாசக் குழாய் பிரச்னைகள் காரணமாக சிலர் வாய் வழியே சுவாசிக்கும் பழக்கம் கொண்டிருப்பர். உறக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளும் சில சமயம் வாய் வழியே சுவாசிக்க காரணமாக அமையலாம். ஓர் ஆய்வின் மூலம் வாய் வழியாக நீண்ட காலம் சுவாசிக்கும் பழக்கம் கொண்ட சிறார்களுக்கு முகத்தின் எலும்புகளில் பாதிப்பு தென்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சியில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். வாய் வழியாக சுவாசிப்பது பெரியவர்கள் இடையே முகத்தின் தசை மற்றும் கழுத்து வலி, ஏன் தலைவலி ஏற்படவும் காரணமாக அமைகிறது. 2020 ஆம் ஆண்டு வாய் வழியே சுவாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இடையே ஸ்பெயினை சேர்ந்த பல் மருத்துவர்கள் மற்றும் ஸ்டோமாட்டாலஜிஸ்டுகள் (Stomatologists) கல்லூரிகளின் பொது கவுன்சில் ஆய்வு நடத்தியது. அதில், பங்கெடுத்த 12 வயது நிரம்பிய பாதி சிறுவர்களுக்கு பல் சார்ந்த பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதே ஆய்வில், பெரியவர்கள் சுவாசிக்க கழுத்தை சற்றே முன்னோக்கி வளைக்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டது. மூக்கு மூலம் சுவாசிப்பதன் நன்மைகள் என்ன என்பது பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வாய் வழியே சுவாசித்து பாருங்கள். மூக்கின் மூலம் சுவாசிப்பது தான் இயற்கையானது. வாய் வழியே சுவாசிப்பது நம் உடலை நிர்பந்திப்பது போலாகும். எனினும், நிபுணர்கள் அவசர சூழல்களில் வாய் மூலம் சுவாசிக்கலாம் என பரிந்துரை செய்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cg3mpyzj7ljo
-
இலங்கை மக்களிடம் பில்லியன் டொலர் மோசடி செய்த கனடிய நிறுவனம்
கனடாவின் நிதி நிறுவனம் ஒன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடமிருந்து மோசடியாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் குரூப் (Metaverse Foreign Exchange Group Inc) என்ற MTFE நிறுவனத்தின் தலைமையகம் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கனடாவின் நிதிச் சலவை கண்காணிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளையும் சரியான முறையில் மேற்கொண்டுள்ள ஓர் சட்ட ரீதியான நிறுவனம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நிறுவனத்தின் இணையத்தளம் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிதி முதலீட்டு சேவை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த இலங்கையர்கள் குறித்த நிதி முதலீட்டு சேவை செயலிழந்து உள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தனர். எனவே இந்த MTFE நிறுவனம் ஓர் பிரமிடு மோசடி திட்ட நிறுவனம் என இலங்கை மத்திய வங்கி பட்டியலிட்டுள்ளது. பங்களாதேஷிலும் இதே விதமாக சுமார் ஐந்து லட்சம் மக்கள் குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சுமார் ஒரு பில்லியன் டொலர் வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோசடிகள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 900,000 டொலர் பணம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். நிதிச்சலவையில் ஈடுபட்டதாக இந்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இயங்கிய நிறுவனத்தின் 900,000 டொலர் பணம் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிறிப்டோ நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு நாணயக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான முதலீட்டுத் திட்டத்தில் இவ்வாறு இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் பணத்தை முதலீடு செய்திருந்தனர். இந்த கனடிய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடியின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. https://tamilwin.com/article/canadian-company-international-pyramid-scheme-1721893945
-
மலிபன் பிஸ்கட்
அவருக்கு மலிபன் கிறீம்கிறெக்கர் கொடுக்கலாமண்ணா!
-
இலங்கை கடற்படையால் 25தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் - ஜெய்சங்கரிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மனு
26 JUL, 2024 | 10:54 AM இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஐயூஎம்எல் கட்சியின் எம்பி கே.நவாஸ்கனி இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார். அப்போது இதுபோன்ற கைதுகள் இல்லாத வகையில் நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்தினார். இது குறித்து ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி வெளியுறத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வழங்கிய மனுவில் ‘இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாததால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடந்த ஜூலை 1-ம் தேதி மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்களை கைது செய்து அவர்களது நான்கு நாட்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 9 மீனவர்களையும் அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மீனவர்களை கைது செய்து நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும. இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/189407