Everything posted by ஏராளன்
-
யாழில் எம் பி அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு பாரிய நிதி...! எழுந்துள்ள சர்ச்சை
யாழ். தேர்தல் மாவட்டத்தில் அபிவிருத்தி நிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளமை பேசுபொருளாக மாறி உள்ளது இதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபாயே அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நிதி அனுமதி நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனுக்கான (C. V. Vigneswaran) நிதி இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதேநேரம் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 15 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான அபிவிருத்தி நிதிகளுக்கான நிதியை மாவட்ட செயலகத்திற்கு விடுவித்மையோடு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 19 கோடி ரூபா பெறுமதியிலான திட்டங்களுக்கும் விஜயகலா மகேஸ்வரனின் பரிந்துரை எனக் குறிப்பிட்டு நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/billion-rupees-funds-allocated-mp-ruling-party-1721870925
-
பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம்!
Published By: DIGITAL DESK 7 25 JUL, 2024 | 09:27 AM இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை தமது கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு வழங்க வேண்டும் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு வேண்டுமாயின் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை தமது கட்சிக்கு வழங்க வேண்டும் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189315
-
கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!
உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கை பிடித்துள்ள இடம்! கடவுச்சீட்டு தரவரிசை பட்டியலில் இலங்கைக்கு(Srilanka) 93-வது இடம் கிடைத்துள்ளது. கடவுச்சீட்டு தரவரிசை அமைப்பான Henley & Partners உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேலும், சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசையில் இலங்கையின் 93-வது இடத்தை தெற்கு சூடானும்( South Sudan)பகிர்ந்துகொள்கிறது. இலங்கையின் கடவுச்சீட்டு மூலம் 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கமுடியும். முதலிடம் இந்தப் பட்டியலில் சிங்கப்பூரின் கடவுச்சீட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஜப்பான்(Japan), பிரான்ஸ்(France), இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவர் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இந்தியாவின் இடம் ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 191 நாடுகளில் இலவச விசா நுழைவு கொண்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 82வது இடம் கிடைத்துள்ளது.82வது இடத்தை இந்தியாவுடன் Senegal மற்றும் Tajikistan ஆகிய மேலும் இரண்டு நாடுகள் பகிந்துகொள்கின்றன. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/worlds-most-powerful-passports-2024-srilanka-rank-1721841763
-
அமெரிக்க காங்கிரசில் நெட்டன்யாகு உரை - வோசிங்டனில் உருவப்பொம்மை எரிப்பு - ஆர்ப்பாட்டங்கள்
25 JUL, 2024 | 10:42 AM அமெரிக்க காங்கிரசில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உரையாற்றியுள்ள அதேவேளை வோசிங்டன் டிசியில் கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியையும் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் உருவப்பொம்மையையும் எரித்து தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஹமாஸ் கமிங் என்ற வாசகத்தை எழுதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலம்பசின் சிலைமீது ஏறியுள்ளனர். வோசிங்டனின் பிரதான புகையிரத நிலையத்தின் முன்னால் பாலஸ்தீன கொடிகள் ஏற்றப்பட்டதாகவும்,நெட்டன்யாகுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/189324
-
அரசியலில் குதிக்கும் வைத்தியர் அர்ச்சுனா...! வெளியான அதிரடி அறிவிப்பு
தனி கட்சியில் அரசியலில் குதிக்கும் வைத்தியர் அர்ச்சுனா...! வெளியான அதிரடி அறிவிப்பு இன்றில் இருந்து தனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகி உள்ளதாக யாழ்ப்பாணம் (jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ((Ramanathan Archchuna) அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பம் இருக்கவில்லை என்றும் ஆனால் இன்று தான் நேரடி அரசியலில் குதிக்க உள்ளதாகவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது தனிப்பட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். சொந்த கட்சி அத்துடன் சொந்த கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் ஏனைய அரசியல் கட்சிகள் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பெரும்பான்மையான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல்வாதியாக தான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழுள்ள காணொளியில் காணலாம்............... https://ibctamil.com/article/doctor-ramanathan-archuna-into-politic-1721820988
-
மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் கவிழ்ந்தது குடியேற்றவாசிகளின் படகு - 150க்கும் அதிகமானவர்களை காணவில்லை என தகவல்
25 JUL, 2024 | 10:15 AM மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது. நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களது படகு ஏழு நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளது. கம்பியாவின் பிரோக்கில் 300 பேர் படகில் ஏறினார்கள்,ஜூலை 22ம் திகதி நவாக்சோட் என்ற பகுதியில் படகுகவிழ்ந்துள்ளது என ஐஓஎம் தெரிவித்துள்ளது. 190பேரை தேடும் பணிகள் இன்னமும் இடம்பெறுகின்றன என ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளது. 103 பேர் கரையோர காவல்படையினர் மீட்டுள்ளனர், 25 உடல்களையும் மீட்டுள்ளனர் என கரையோர காவல்படையின் தளபதி தெரிவித்துள்ளார். கரையோர காவல்படையினர் அந்த பகுதிக்கு சென்றவேளை ஏற்கனவே 15 பேர் உயிரிழந்திருந்தனர் என 10 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக உடல்கள் கரையொதுங்கின் என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். கடலோர பகுதியில் 30 உடல்களை சேகரிப்பதை நான் பார்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் மேலும் பல உடல்கள் மீட்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் ஒரு மாதகாலத்தில் இடம்பெற்ற இரண்டாவது துயரசம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதம்ஐந்தாம் திகதி குடியேற்றவாசிகளின் 89 உடல்கள் மீட்கப்பட்டன மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான படகுகள் குடியேற்றவாசிகளுடன் இங்கிருந்து புறப்படுவது வழமை. ஆபத்தான இந்த பாதையில் பயணிக்கும் படகுகள் ஸ்பெயினின் கனரி தீவுகளை நோக்கி செல்கின்றன - கடந்த வருடம் இந்த தீவிற்கு 40இ000க்கும் அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர் என தெரிவிக்கும் ஸ்பெயின் அரசாங்கம் இது முன்னைய ஆண்டை விட அதிகம் என குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் குடியேற்வாசிகள் அளவுக்கதிகமானவர்கள் ஏற்றப்பட்ட படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். 2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெயினை சென்றடைய முயன்ற 4000க்கும் அதிகமானவர்கள் கடலில் உயிரிழந்துள்ளனர் என ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/189310
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
25 JUL, 2024 | 09:37 AM தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம் தடை செய்வது குறித்து ஜூலை 23-ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடையை நீக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய கோரி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஆக.7-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/189316
-
மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைப்பு!
வட்டி வீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி Published By: DIGITAL DESK 3 25 JUL, 2024 | 09:39 AM (நா.தனுஜா) நாட்டின் பொருளாதாரத்தில் சமகாலத்தில் அவதானிக்கப்பட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்களை முறையே 8.25 மற்றும் 9.25 சதவீதமாகக் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 4 ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி கடந்த மாதம் கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சி, அண்மைய வரி மறுசீரமைப்பை அடுத்து பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்தளவிலான தாக்கமே ஏற்பட்டமை, நிலையான பணவீக்க எதிர்பார்க்கைகள், குறைந்தளவிலான வெளிநாட்டுத்துறை அழுத்தங்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் கொள்கை வட்டி வீதங்களை 25 அடிப்படைப்புள்ளிகளால் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 8.25 மற்றும் 9.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதுடன், நியதி ஒதுக்குவீதத்தை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீத மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் கடந்த ஜுனில் முதன்மைப் பணவீக்கமானது 1.7 சதவீதமாகப் பதிவானது. மின்சாரம், எரிபொருள், திரவப் பெற்றோலிய எரிவாயு போன்றவற்றின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சி இதற்குக் காரணமாக அமைந்தது. அதேபோன்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்கள மதிப்பீடுகளின்படி நாட்டின் பொருளாதாரம் 5.3 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை, மேம்பட்ட நிரம்பல் நிலைமைகள், வெளிநாட்டுக்கேள்வி நிலைமையில் படிப்படியான மீளெழுச்சி, சுற்றுலாத்துறை மீட்சி போன்றவற்றின் காரணமாக நடுத்தர காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன மூலமான வருமானம் தொடர்ந்தும் நேர்மறையான மட்டத்தில் பதிவாகியிருக்கும் அதேவேளை, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4 பில்லியன் டொலர்களாகப் பதிவான மொத்த வெளிநாட்டுக்கையிருப்புடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் கடந்த ஜுன்மாத இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 5.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளன. இது இவ்வாறிருக்க சீன அபிவிருத்தி வங்கியுடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும், சர்வதேச பிணைமுறிதாரர்களுடன் இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றகரமான மட்டத்தில் இருப்பதாகவும், இருப்பினும் இதனுடன் தொடர்புடைய தகவல்கள் சந்தையில் உடனடித்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை வெளியிடமுடியாது எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். மேலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கள் மந்தகரமான நிலையில் இருப்பினும், இவ்விடயத்தில் மத்திய வங்கி எவ்வகையிலும் தொடர்புபடவில்லை எனவும், மாறாக அரசாங்கம் இதுகுறித்து அவதானம் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/189317
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன காலமானார் Published By: DIGITAL DESK 3 25 JUL, 2024 | 09:27 AM நவ சமசமாஜ கட்சியின் (Nava Sama Samaja Pakshaya NSSP) தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தனது 81 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கருணாரத்ன 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். அவர் இலங்கை அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். 1977 இல், நவசமசமாஜக் கட்சியை (புதிய சமூக சமத்துவக் கட்சி) ஸ்தாபிப்பதற்காக வாசுதேவ நாணயக்கார உட்பட லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) மற்ற முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டார். இலங்கையின் அரசியலில் அவரது பங்களிப்புகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. https://www.virakesari.lk/article/189311
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
தாய்லாந்தை வீழ்த்தி தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது இலங்கை Published By: VISHNU 24 JUL, 2024 | 10:23 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (24) நடைபெற்ற பி குழுவுக்கான கடைசி மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை 10 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் பி குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற இலங்கை, வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் தாய்லாந்தை 93 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. அணித் தலைவி சமரி அத்தப்பத்து 35 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 49 ஓட்டங்களுடனும் விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தாய்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் நன்னாபட் கோன்ச்சாரோன்காய் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட அணித் தலைவி திப்பட்ச்சா புத்தாவொங் 13 ஓட்டங்களையும் அப்பிசரா சுவன்ச்சோன்ரதி 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகி: சமரி அத்தபத்து. https://www.virakesari.lk/article/189303
-
மொபைல் ரீசார்ஜ் உயர்வு - மக்கள் என்ன சொல்கிறார்கள்? | Public Opinion | Mobile tariff Hike | Chennai
"2025 ஜனவரியில் 5G"..Tariff-அ அநியாயமா ஏத்தி வச்சிருக்காங்க..| NewsTamil24x7 | BSNL 5G Network
-
பலஸ்தீன தேசிய ஒற்றுமை, யுத்தத்தின்பின் காஸா ஆட்சி தொடர்பில் ஃபத்தா, ஹமாஸ் உட்பட 12 பலஸ்தீன அமைப்புகள் சீனாவில் ஒப்பந்தம்
24 JUL, 2024 | 08:48 PM (ஆர். சேதுராமன்) பலஸ்தீனத்தின் தேசிய ஒற்றுமைக்காக இணைந்து செயற்படுவது தொடர்பில் ஃபத்தா உட்பட ஏனைய பலஸ்தீன அமைப்புகளுடன் சீனாவில் தான் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் நேற்று அறிவித்தது. பெய்ஜிங்கில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், யுத்தம் முடிவடைந்த பின்னர் காஸாவை எவ்வாறு ஆட்சி செய்வது என்பது தொடர்பானது என சீனா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்காக, ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான மூசா அபு மர்சூக், பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸின் ஃபத்தா கட்சியின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் அலோல் மற்றும் மேலும் 12 பலஸ்தீன குழுக்களின் பிரதிநிதிகள் சீனாவுக்குச் சென்றிருந்தனர். இந்த ஒப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ கூறுகையில், காஸா யுத்தத்தின் பின்னர் இடைக்கால தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இக்குழுக்கள் இணைங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஹமாஸின் மூசா அபு மர்சூக் இது தொடர்பாக கூறுகையில், “தேசிய ஒற்றுமைக்கான ஒப்பந்தத்தில் இன்று நாம் கையெழுத்திட்டோம். இப்பயணத்தை முழுமையாக்குவதற்கான வழியானது தேசிய ஒற்றுமையாகும் என நாம் கூறுகிறோம். தேசிய ஒற்றுமைக்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். அதற்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்றார். கடந்த ஒக்டோபரில் ஆரம்பமான இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் 9 மாதங்களை கடந்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பலஸ்தீன விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியான ஆதரவு அளித்து வருவதற்காக சீனாவுக்கு நன்றி தெரிவிப்பதாக ஃபத்தா அதிகாரி மஹ்மூத் அல் அலோல் கூறினார். பலஸ்தீன மக்கள் அனைவரினதும் அன்பும் நட்பும் சீனாவுக்கு உள்ளது என அவர் கூறினார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் கருத்துத் தெரிவிக்கையில், நல்லிணக்கமானது பலஸ்தீன அமைப்புகளின் உள்ளக விவகாரம் எனவும், ஆனால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இன்றி, அதை அடைய முடியாது எனவும் கூறினார். https://www.virakesari.lk/article/189300
-
மொபைல் ரீசார்ஜ் உயர்வு - மக்கள் என்ன சொல்கிறார்கள்? | Public Opinion | Mobile tariff Hike | Chennai
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
புதிய கருத்துக்கணிப்பு - டிரம்பை விட கமலா ஹரிஸ் முன்னிலையில் 24 JUL, 2024 | 11:03 AM அமெரிக்க துணைஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகட்சியினர் மத்தியில் வேகமாக தனது ஆதரவை அதிகரித்து வருவதும் தனது புதிய போட்டியாளர் காரணமாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்பதும் ரொய்ட்டரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜூலை 22 முதல் 23ம் திகதிக்குள் ரொய்ட்டர் -இப்சொசின் கருத்துக்கணிப்பில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் கமலாஹரிசிற்கு 44வீத ஆதரவு காணப்படுவதும் டொனால்ட் டிரம்பிற்கு 42 வீத ஆதரவு காணப்படுவதும் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் மூலம் கமலாஹரிஸ் நிலையான முன்னேற்றத்தை காண்பிப்பது தெரியவந்துள்து. இதேவேளை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 84 வீதமானவர்கள் ஜோபைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதை வரவேற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/189238- எத்தியோப்பியாவில் மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் பலி
Published By: DIGITAL DESK 3 24 JUL, 2024 | 11:33 AM எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கட்கிழமை காலை மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மண்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர். கோஃபா என்பது தெற்கு எத்தியோப்பியா என்று அழைக்கப்படும் மாநிலத்தின் ஒரு பகுதியாகும், இது தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு தென்மேற்கே 320 கிமீ (199 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் தெற்கு எத்தியோப்பியாவும் ஒன்று என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தெற்கு எத்தியோப்பியாவில் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189241- இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட 11 அபிவிருத்தித்திட்டங்களை மீள ஆரம்பித்தது ஜப்பான் : திறைசேரியின் செயலாளரிடம் கடிதம் கையளிப்பு
Published By: VISHNU 24 JUL, 2024 | 07:14 PM இலங்கையில் ஜப்பானின் கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவை மீண்டும் தொடங்குவதற்கான அதன் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தது உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் (OCC) இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையொப்பமிடப்பட்டதைத் தொடர்ந்தும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு உடன்படிக்கையை விரைவாக முடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்தும், 2022 ஆம் ஆண்டு இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்தாததிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஜப்பானின் நிதியிலான கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்துள்ளது. ஜூலை 24 அன்று, இலங்கை அரசாங்கம், ஜப்பான் தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (JICA) இலங்கை அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த முடிவை நிதி அமைச்சில் ஆரம்பித்து வைப்பதற்காக கூட்டாக செய்தியாளர் மாநாட்டை நடத்தியது. இலங்கைக்கும் OCC க்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர் மிசுகொஷி (MIZUKOSHI Hideaki), OCC இன் இணைத் தலைவராக பொதுக் கடன் மறுசீரமைப்பை வழிநடத்தி முடிப்பதில் ஜப்பான் அரசாங்கத்தின் இதுவரை இல்லாத முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்பை எடுத்துரைத்தார். நாட்டை மீண்டும் ஒரு நிலையான பாதைக்கு வழிநடத்துவதற்கு அவசியமான விரிவான பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக தூதுவர் மிசுகொஷி பாராட்டினார். இடைநிறுத்தப்பட்ட அனைத்து யென் கடன் திட்டங்களும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியமான உட்கட்டமைப்புகளாகும் என்றும், இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் தொடர்ச்சியான மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தி அவர் கூறினார். JICA இலங்கை அலுவலகத்தின் பிரதம பிரதிநிதி திரு. யமடா டெட்சுயா சார்பாக, சிரேஷ்ட பிரதிநிதி திருமதி. இதெ யூரி இந்த தீர்மானம் தொடர்பாக JICA இன் தலைவர் டாக்டர் தனகா அகிஹிகோவிடமிருந்து கௌரவ. ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு முகவரியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன விடம் கையளித்தார். யென் கடன் திட்டங்களின் மீள ஆரம்பம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், நீண்டகால நிலையான வளர்ச்சியை நோக்கிய வேகத்தைப் பெறுவதற்கும் உதவும் என்று திருமதி ஐடிஇ யூரி நம்பிக்கை தெரிவித்தார். நிதி அமைச்சின் செயலாளர் சிறிவர்தன கடன் மறுசீரமைப்பில் ஜப்பானின் சிறந்த முன்முயற்சி மற்றும் நீண்ட கால அர்ப்பணிப்பை பாராட்டி இந்த தீர்மானத்திற்கு தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்தார். யென் கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவு மீண்டும் தொடங்குவதானது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதுடன், இந்தத் தீவு தேசம் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் திரும்பி இந்தியப் பெருங்கடலில் ஒரு மையமாகச் செயற்பட்டு தன்னைத் தானே முன்கொண்டு வர உதவும் என்று நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/189302- கான்டாக்ட் லென்ஸால் கருவிழி பாதிப்பு - உஷாராக இருப்பது எப்படி?
கான்டாக்ட் லென்ஸால் தமிழ்ப் பட நடிகைக்கு கருவிழி பாதிப்பு - உஷாராக இருப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 24 ஜூலை 2024, 02:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 'கண்ணாடி அணிந்துகொண்டு சூடாக தேநீர் குடிப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா?' 'கண்ணாடி அணிந்திருப்பதால் கிண்டல் செய்கிறார்கள்' 'மாஸ்க்குடன் கண்ணாடி அணிந்து, மூச்சு விட்டு பார்த்தால் எங்கள் கஷ்டம் புரியும்' '3டி படத்திற்கு வர மாட்டேன்' - கண்ணாடி அணிபவர்கள் இப்படி புலம்புவதைக் கேட்டிருக்கலாம். கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) என்பது கண் கண்ணாடிக்கு மாற்றாகவும் அழகுக்காகவும் பலரால் பயன்படுத்தப்படும் ஒன்று. வித விதமான நிறங்களில் அவை கிடைப்பதால், அவற்றை அணியும்போது வித்தியாசமான முகத்தோற்றம் கிடைக்கிறது என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால், அதே சமயத்தில் கண் கண்ணாடி அணிவதை விட கான்டாக்ட் லென்ஸ் அணிவது மற்றும் அதை பராமரிப்பது எளிதா என்றால், நிச்சயம் இல்லை. பலரும் விரும்பி அணியும் இந்த கான்டாக்ட் லென்சுகளை முறையாக கையாளாவிட்டால் பல்வேறு கண் தொடர்பான பிரச்னைகள் உண்டாகும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தமிழ்ப் பட நடிகைக்கு கருவிழி பாதிப்பு பட மூலாதாரம்,JASMINBHASIN2806/INSTAGRAM படக்குறிப்பு,நடிகை ஜாஸ்மின் பஸின் வானம், ஜில் ஜங் ஜக், போன்ற தமிழ் திரைப்படங்களிலும், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்தவர் ஜாஸ்மின் பஸின். இவர் சில தினங்களுக்கு முன் கான்டாக்ட் லென்ஸ் காரணமாக தனக்கு கருவிழி பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதீத வலியின் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "டெல்லியில் ஒரு நிகழ்ச்சிக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கலந்துகொண்டேன். அதை அணிந்த சிறிது நேரத்தில் கண்களில் எரிச்சலும் வலியும் அதிகரித்தது. இருப்பினும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றேன். ஒரு கட்டத்தில் பார்வை மங்கத் தொடங்கியது. எனது குழுதான் மேடையில் நிற்க உதவியது." என்று கூறினார். நிகழ்ச்சி முடிந்து மருத்துவரிடம் சென்றபோது தனக்கு கருவிழி பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும், மீண்டும் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். கருவிழி பாதிப்பு ஏற்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES சுகாதாரமற்ற கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் அல்லது கைகளை முறையாக சுத்தம் செய்யாமல் அதை அணிந்தால் கருவிழி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என எச்சரிக்கிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபல கண் மருத்துவமனையின் மருத்துவர் பத்ம பிரியா. "பலரும் நினைப்பது போல கான்டாக்ட் லென்ஸ் என்பது கண் கண்ணாடிக்கு மாற்று மட்டும் அல்ல. கண் கண்ணாடியில் எவ்வளவு 'பவர்' வைத்தாலும் கூட இயல்பான பார்வைத் திறன் முழுமையாக கிடைக்காது. ஆனால் கான்டாக்ட் லென்ஸ் மூலம் அதைப் பெறலாம். சிலருக்கு இரு கண்களின் பவர் அளவுகள் மாறுபடும். அப்படிப்பட்டச் சூழலில் இருவிதமான பிரத்யேக கான்டாக்ட் லென்ஸ்களை அணியலாம், கண் கண்ணாடியில் இது சாத்தியமில்லை" என்று கூறுகிறார். அழகுக்காக மட்டுமே கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் போக்கு இன்று அதிகரித்திருக்கும் சூழலில், கண் மருத்துவர்களின் முறையான அறிவுறுத்தல்கள் இல்லாமல் அவற்றைப் பயன்படுத்தினால் நிச்சயமாக கண் தொடர்பான பல பிரச்னைகள் உருவாகும் என்கிறார் மருத்துவர் பத்ம பிரியா. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் 'செயற்கை கருப்பை' - மருத்துவ துறையில் என்ன நடக்கிறது?21 ஜூலை 2024 நாகப்பாம்பு விஷத்தை முறிக்கும் மலிவு விலை மருந்து கண்டுபிடிப்பு20 ஜூலை 2024 படக்குறிப்பு,பத்ம பிரியா- கண் மருத்துவர் கான்டாக்ட் லென்ஸ் முறையாக அணிவது எப்படி? கான்டாக்ட் லென்ஸை அதற்கான திரவம் பயன்படுத்தி சுத்தம் செய்து, கைகளையும் சுத்தம் செய்து விட்டு, நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரல் கொண்டு மெதுவாக கண்களில் பொருத்த வேண்டும் என்கிறார் கண் மருத்துவர் சீனிவாசன்.ஜி.ராவ். "கான்டாக்ட் லென்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுக்க வருபவர்களிடம் நாங்கள் தெளிவாக விளக்கம் கொடுத்து அனுப்புவோம். லென்ஸ் அணிந்தவுடன் ஒரு 30 வினாடிகளுக்கு எரிச்சல் இருக்கும். பின் சிறிது நேரத்தில் சரியாகிவிடும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் எரிச்சல் தொடர்ந்தால், லென்ஸை கழற்றிவிட வேண்டும்." என்று கூறுகிறார் கண்டிப்பாக, கான்டாக்ட் லென்ஸ்களுக்குக்கென கொடுக்கப்பட்டிருக்கும் திரவம் கொண்டு சுத்தம் செய்துவிட்டுதான் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் மருத்துவர் சீனிவாசன். "அந்தத் திரவத்தை ஒருமுறை லென்ஸ் கேசில் (Lens case) ஊற்றி, பயன்படுத்திவிட்டு கொட்டிவிடுவது நல்லது. சிலர் மீண்டும் மீண்டும் அதைக் கொண்டே சுத்தம் செய்வார்கள். அது மிகவும் ஆபத்து" என்று எச்சரிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கான்டாக்ட் லென்ஸ் வகைகள் என்ன? சாஃப்ட் (Soft) லென்ஸ், யூனிஃபோக்கல் (Unifocal), மல்டி ஃபோக்கல் (Multifocal), ரிஜிட் (Rigid Gas Permeable) கான்டாக்ட் லென்ஸ், என பல வகைகள் இருப்பதாகத் கூறிய மருத்துவர் பத்ம பிரியா, அதை விளக்கினார். "யூனிஃபோக்கல் வகை லென்ஸ் தூரத்துப் பார்வையை மட்டும்தான் சரி செய்யும். அதுவே மல்டிஃபோக்கல் லென்ஸானது தூரப்பார்வை, கிட்டப்பார்வை, நடுப்பார்வை என எல்லாவற்றையுமே சரிசெய்யும். புள்ளிக்குவியமில்குறை (Astigmatism) எனும் கண் குறைபாட்டிற்கு ரிஜிட் லென்ஸ் பயன்படுத்துவார்கள்." என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "கண்ணில் உள்ள கருவிழிப்படலத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும் கூட ரிஜிட் லென்ஸ் பயன்படுத்தி அதைச் சரிசெய்யலாம். அதேபோல நீண்ட காலம் பயன்படுத்துவதற்கும், மாதக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் பயன்படுத்தவதற்கும் கூட கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன" என்றார். இன்னொரு தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு நிகழ்ந்தால் நாம் என்ன செய்யவேண்டும்?20 ஜூலை 2024 தமிழ்நாட்டிலும் சந்திபுரா வைரஸ் பாதிப்பா? எப்படிப் பரவுகிறது? மருந்து உண்டா? - 10 தகவல்கள்19 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES கான்டாக்ட் லென்ஸ்களை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் என்னவாகும்? குழந்தைகள் அல்லது இளம் பருவத்தினர் கைகளை முறையாகச் சுத்தம் செய்யாமல் லென்ஸ் அணியும்போது கிருமித் தொற்று ஏற்படும் என்று கூறுகிறார் மருத்துவர் பத்ம பிரியா. "அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் சில சமயங்களில், மறந்து அப்படியே தூங்கிவிடுவார்கள். இதனால் கிருமித் தொற்று ஏற்படலாம். அதுபோல, கான்டாக்ட் லென்ஸ் போடுவதற்கு முன்பே கண்களில் மேக்கப் சாதனங்களை உபயோகிப்பதும், கண்களில் கிருமித் தொற்றை ஏற்படுத்தலாம். கான்டாக்ட் லென்ஸில் புரதம் (Protein) சேர்ந்து, கண்களில் எரிச்சல், வலி ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்" என்கிறார் அவர். கான்டாக்ட் லென்ஸ் என்பது கருவிழியின் மேல் பொருத்தப்படுவது என்பதால், அதை முறையாகப் பராமரிக்காவிட்டால் கிருமித் தொற்று ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி பார்வையை பறிக்கும் அளவுக்கு ஆபத்தில் முடியலாம் என்று கூறுகிறார் கண் மருத்துவர் சீனிவாசன்.ஜி.ராவ். கான்டாக்ட் லென்ஸ்களை முறையாக கையாளாதபோது கருவிழியில் புண், அலர்ஜி மற்றும் கண்களில் கடுமையான வறட்சி ஏற்படும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பத்ம பிரியா. படக்குறிப்பு,அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் சீனிவாசன்.ஜி.ராவ். யாரெல்லாம் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம்? "11 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாராளமாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம், ஆனால் சில வரம்புகள் உள்ளன" என்று கூறுகிறார் கண் மருத்துவர் சீனிவாசன்.ஜி.ராவ். "ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இயற்கையாகவே கண்களில் வறட்சி இருக்கும். அவர்கள் குறைவான நேரம் அணிவது அல்லது தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கான்டாக்ட் லென்ஸ் அணிவது கண்களின் வறட்சியை மேலும் அதிகப்படுத்தும்" என்றார். வீட்டில் இருக்கும்போது கண் கண்ணாடியையும், பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகம் செல்லும்போது மட்டும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்ளவும் பலர் விரும்புகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய மருத்துவர் சீனிவாசன், "ஒருவர் அதிகபட்சமாக 8 மணிநேரம் வரை தொடர்ந்து கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்ளலாம்" என்று கூறினார். அமெரிக்க அதிபராகும் முன்பே இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப் - என்ன பேசினார்?22 ஜூலை 2024 கான்டாக்ட் லென்ஸ், செய்யக்கூடாதவை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கான்டாக்ட் லென்ஸ் அணிந்து தூங்குவது, பட்டாசு வெடிப்பது, பிறருடைய கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவது, ஆகியவை கூடாது என்கிறார் கண் மருத்துவர் சீனிவாசன். மெட்ராஸ் ஐ (Madras eye) போன்ற கண் பிரச்னைகள் வந்தால், கண்டிப்பாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தக்கூடாது. ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, குறைந்தது 14 நாட்கள் கழித்து அணிவது நல்லது என்கிறார் அவர். "நாம் கண்களை மிகவும் அலட்சியமாக கையாள்கிறோம். பலர் படிக்கும்போது அல்லது கணினி பார்க்கும்போது கண்களைச் சுருக்கி சுருக்கிப் பார்ப்பார்கள், ஆனால் கண் மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். பின் பிரச்னை பெரிதாகும்போதுதான் எங்களிடம் வருவார்கள். அதேபோல அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களும் அவ்வவ்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் கண் மருத்துவர் சீனிவாசன். https://www.bbc.com/tamil/articles/cjm94lgyg3lo- பழைய செம்மலை நீராவியடி பொங்கல் நிகழ்வில் ஆலய வளாகத்தில் சிவலிங்கம் வைப்பு - வதந்தியை நம்பி நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்!
Published By: VISHNU 24 JUL, 2024 | 06:56 PM முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு புதன்கிழமை (24) இடம்பெற்றுவரும் நிலையில் கொக்குளாய் பொலிஸார் இந்த பொங்கல் நிகழ்வுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றை நாடியுள்ளனர். தொல்லியல் திணைக்களத்துக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று இடம்பெறும் நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வில் ஆலய வளாகத்தில் 17 அடி சிவலிங்கம் ஒன்று நிறுவப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இதனை நிறுத்துமாறு கோரி கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தால் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நீராவியடி பிள்ளையார் ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினருக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்து குறித்த பொங்கல் நிகழ்வில் புதிதாக சிலைகள் வைப்பதை தடை செய்யுமாறும் புதிய கட்டுமானங்களை செய்வதை தடை செய்யுமாறும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்த மன்று இந்த ஆலய விவகாரம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தொடர்ந்தும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பௌத்த விகாரை தரப்பினர் பேணுமாறும் அதனை மீறி யாராவது புதிய கட்டுமானங்கள் புதிய சிலைகளை நிறுவினாலோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கலாம் என சுட்டிக்காட்டியதோடு ஏற்கனவே நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ள படி இரு தரப்பும் அமைதியான முறையில் நீதிமன்ற உத்தரவை மீறாது வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த இரு நாட்களாக தென்பகுதியை சேர்ந்த சில முகநூல் கணக்குகள் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் கொதி நிலையை தோற்றுவிக்கும் வண்ணம் நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு தொடர்பில் பொய் செய்திகள் பரப்பப்பட்டு வந்ததோடு நேற்றையதினம் ஆலய நிர்வாகத்தினரிடம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொல்லியல் திணைக்களத்தினர் இந்த பொய் வதந்தி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பெற்றுள்ளனர். இந்தனை தொடர்ந்து புதன்கிழமை (24) பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுவரும் நிலையில் கொக்கிளாய் பொலிஸார் பொய் செய்தியை நம்பி நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றை நாடியுள்ளனர். இவ்வாறு பொங்கல் நிகழ்வு தொடர்பில் பொய் செய்திகளை சமூகவலைதளங்கள் ஊடக பகிர்ந்து வந்த தென்பகுதியை சேர்ந்த முகநூல் கணக்குகள் இதே போன்று கடந்த வருடம் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வு தொடர்பிலும் பொய் வதந்திகளையும் வெறுப்பு பேச்சுக்களையும் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்த சமூகவலை தள கணக்குகளாகும். இவர்களுக்கு தமிழ் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் விகாரை அமைத்து காணிகளை அபகரித்துள்ள பௌத்த பிக்குகளுக்கும் இராணுவ புலனாய்வு தரப்பினருக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக பிரதேச தமிழ் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/189301- இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்
Budget-ல இந்த ரெண்டுமே இல்லை, எந்த PM-மும் இப்படி பண்ணது இல்ல - Anand Srinivasan Interview 2024-25 நிதியாண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட் நேற்றைய தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய முற்போக்கு கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திரா, பிகாருக்கு மட்டும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த பட்ஜெட் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியை இந்த காணொளியில் பார்க்கலாம்- ஆழ்கடல் அற்புதம்: சூரிய ஒளி புகாத ஆழத்தில் ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி ஆவது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூரிய ஒளி ஊடுருவ முடியாத ஆழ்கடலில் ஆக்ஸிஜன் உற்பத்தியாவதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆழ்கடலில் "இருண்ட ஆக்ஸிஜன்" உற்பத்தி ஆவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடற்பரப்பில் இருக்கும் `உலோக முடிச்சு’ பந்துகளில் இருந்து ஆக்சிஜன் உருவானது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பாதி கடலில் இருந்து கிடைப்பதாகும். இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை, கடல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகிறது என்றும் இந்த செயல்பாட்டுக்கு சூரிய ஒளி தேவைப்படும் என்றும் புரிந்துக் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது சூரிய ஒளி ஊடுருவ முடியாத இடத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியாவதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். ஆம், 5 கிமீ ஆழத்தில், சூரிய ஒளி ஊடுருவ முடியாத இடத்தில், இயற்கையாக உருவாகும் உலோக "முடிச்சுகள்" மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, உலோக முடிச்சுகள் கடல் நீரை (H2O) ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரிக்கின்றன. பல சுரங்க நிறுவனங்கள் இந்த உலோக முடிச்சுகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளன. அப்படி நடந்தால் இயற்கையாக நிகழும் செயல்முறையை சீர்குலைக்கும் என்று கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். சுரங்க நிறுவனங்கள் உலோக முடிச்சுகளை எடுக்க ஆரம்பித்தால் அவை உருவாக்கும் ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். ஆக்ஸிஜன் பற்றிய நம்பிக்கையை மாற்றிய ’உலோக முடிச்சு’ "நான் இதை முதன் முதலில் 2013 இல் கவனித்தேன். கடலில் சூரிய ஒளியே இல்லாத, முழு இருளில் அதிக அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது" என்று ’ஸ்காட்டிஷ் அசோசியேஷன் ஃபார் மரைன் சயின்ஸ்’ அமைப்பின் முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்வீட்மேன் விளக்குகிறார். "அந்த சமயத்தில் நான் அதை புறக்கணித்தேன். காரணம் ஒளிச்சேர்க்கை மூலம் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. நான் அதை நம்பினேன்” என்று விளக்கினார். "இறுதியில், இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பை பல ஆண்டுகளாக நான் புறக்கணித்து வந்ததை என்பதை உணர்ந்தேன்" என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்வீட்மேன் அவரது சக விஞ்ஞானிகளுடன் ஹவாய் மற்றும் மெக்சிகோ இடையே உள்ள ஆழ்கடல் பகுதியில் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர் - இது உலோக முடிச்சுகள் நிறைந்திருக்கும் கடலோரப் பகுதி. பட மூலாதாரம்,NOC/NHM/NERC SMARTEX படக்குறிப்பு,உருளைக்கிழங்கு அளவிலான உலோக முடிச்சுகள் பாறைகள் போல, ஆழமான கடற்பரப்பில் காணப்படுகிறது உலோக முடிச்சுகள் எப்படி உருவாகிறது? கடல் நீரில் கரைந்த உலோகங்கள், ஷெல் துண்டுகள் அல்லது பிற கழிவுகள் ஒன்றிணைந்து சில வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து உலோக முடிச்சுகள் உருவாகின்றன. இந்த செயல்முறை முழுமையாக நிகழ மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகும். இந்த உலோக முடிச்சுகளில் லித்தியம், கோபால்ட் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்கள் இருப்பதால் - இவை அனைத்தும் பேட்டரிகள் தயாரிக்கத் தேவைப்படும். எனவே பல சுரங்க நிறுவனங்கள் அவற்றைச் சேகரித்து மேற்பரப்பில் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. பேராசிரியர் ஸ்வீட்மேன் கூற்றுபடி, உலோக முடிச்சுகள் உருவாக்கும் `இருண்ட ஆக்ஸிஜன்’ கடற்பரப்பில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும். அவரது கண்டுபிடிப்பு, `நேச்சர் ஜியோசயின்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டது. அதே சமயம், முன்மொழியப்பட்ட ஆழ்கடல் சுரங்க முயற்சிகளின் அபாயங்கள் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் புதிய கவலைகளை எழுப்புகிறது. உலோக முடிச்சுகள் பேட்டரிகளைப் போல செயல்படுவதால் துல்லியமாக ஆக்ஸிஜனை உருவாக்க முடிகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். "நீங்கள் ஒரு பேட்டரியை கடல் நீரில் போட்டால், அது நுரைகளை உமிழத் தொடங்குகிறது. அதற்குக் காரணம், மின்சாரம் கடல்நீரை ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனாக [குமிழ்கள்] பிரிக்கிறது" என்று பேராசிரியர் ஸ்வீட்மேன் விளக்கினார். நாகப்பாம்பு விஷத்தை முறிக்கும் மலிவு விலை மருந்து கண்டுபிடிப்பு20 ஜூலை 2024 "இந்த உலோக முடிச்சுகளிலும் இந்த செயல்பாடு தான் நடக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். இது ஒரு டார்ச்சில் உள்ள பேட்டரியை போன்ற தன்மை கொண்டது" என்றார். "நீங்கள் ஒரு பேட்டரியை மட்டும் பயன்படுத்தும்போது, டார்ச் லைட்டை ஒளிர வைக்காது. இரண்டு பேட்டரிகள் பயன்படுத்தும் போது டார்ச்சை ஒளிரச் செய்ய போதுமான மின்னழுத்தம் உருவாகிறது. எனவே கடற்பரப்பில் முடிச்சுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்தும் போது, அவை வேலை செய்கின்றன." ஆராய்ச்சியாளர்கள் இந்த கோட்பாட்டை ஆய்வகத்தில் சோதனை செய்து, உருளைக்கிழங்கு அளவிலான உலோக முடிச்சுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அவர்களின் சோதனைகள் ஒவ்வொரு உலோகக் கட்டியின் மேற்பரப்பில் உள்ள மின்னழுத்தங்களை அளவிட்டன - முக்கியமாக அதில் இருக்கும் மின்சாரத்தின் ஆற்றல் ஆய்வு செய்யப்பட்டது. உலோக முடிச்சுகளில் இருந்த மின் சக்தி, ஒரு பொதுவான AA-அளவிலான பேட்டரியில் உள்ள மின்னழுத்தத்திற்கு கிட்டத்தட்ட சமமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதன்படி, கடலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் முடிச்சுகள் கடல்நீரின் மூலக்கூறுகளை பிளவுபடுத்தும் அல்லது மின்னாற்பகுப்பு (electrolyse) செய்யும் அளவுக்கு பெரிய மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சுரங்க நிறுவனங்களின் அபாயகரமான முயற்சி பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY/NOAA ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, ஒளி மற்றும் உயிரியல் செயல்முறையில் தேவை இல்லாமல், பேட்டரி மூலம் நிகழும் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்முறை, நிலவு மற்றும் வேறு கிரகங்களிலும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்கையில், உயிர்கள் செழிக்கக் கூடிய ஆக்ஸிஜன் நிறைந்த சூழல் அங்கு உருவாகும். `இருண்ட ஆக்ஸிஜன்’ கண்டுபிடிப்பு கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் நிகழ்ந்தது. `கிளாரியன்-கிளிப்பர்டன்’ மண்டலம் (Clarion-Clipperton Zone) என்பது பசிபிக் பெருங்கடலின் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பகுதியாகும். இது சர்வதேச கடற்பரப்பு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த பகுதி ஏற்கனவே பல கடற்பரப்பு சுரங்க நிறுவனங்களால் ஆராயப்பட்டு வரும் ஒரு தளமாக உள்ளது. அந்த நிறுவனங்கள் உலோக முடிச்சுகளை சேகரித்து மேற்பரப்பில் ஒரு கப்பலுக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகம், "கடற்பரப்பு சுரங்கம், இந்த பகுதிகளில் உள்ள உயிர்கள் மற்றும் கடற்பரப்பு வாழ்விடங்களை அழிக்கும்" என எச்சரித்துள்ளது. ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகளுக்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு பட மூலாதாரம்,CAMILLE BRIDGEWATER படக்குறிப்பு,ஆராய்ச்சியாளர்கள் இந்த கோட்பாட்டை ஆய்வகத்தில் சோதனை செய்து, உருளைக்கிழங்கு அளவிலான உலோக முடிச்சுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். 44 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கடல்சார் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். ஆழ்கடலில் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். ஆழ்கடலைப் பற்றி நாம் அறிந்ததை விட சந்திரனின் மேற்பரப்பைப் பற்றி நமக்கு அதிகம் தெரியும் என்கின்றனர் சில விஞ்ஞானிகள். அந்தளவுக்கு ஆழ்கடலில் பல கண்டுப்பிடிக்கப்படாத ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இந்த உலோக முடிச்சுகள் ஆழ்கடலில் இருக்கும் உயிர்கள் வாழ ஆக்ஸிஜனை வழங்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர், பேராசிரியர் முர்ரே ராபர்ட்ஸ், கடலுக்கு அடியில் சுரங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட்ட விஞ்ஞானிகளில் ஒருவர். "ஆழ்கடல் உலோக முடிச்சுகளை அகற்றுவது நம்மால் புரிந்து கொள்ள முடியாத சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்துவிடும் என்பதற்கு ஏற்கனவே ஏராளமான சான்றுகள் உள்ளன" என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். "இந்த கடற்பரப்பு நமது கிரகத்தின் மிகப் பெரிய பகுதிகளை உள்ளடக்கியிருப்பதால், அவை ஆக்ஸிஜன் உற்பத்தியின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கலாம் என்பதை அறிந்தப் பின்னரும் ஆழ்கடல் சுரங்கத்தை முன்னெடுப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்." என்றார். பேராசிரியர் ஸ்வீட்மேன் மேலும் கூறுகையில்: "இந்த ஆய்வை நான் சுரங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒன்றாக பார்க்கவில்லை. நாம் ஆழ்கடலை இன்னும் விரிவாக ஆராய வேண்டும், ஆழ்கடலுக்குச் சென்று மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சுரங்க நடவடிக்கைகள் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்” என்றார். https://www.bbc.com/tamil/articles/c2j39pdzjrdo- அடங்காத அசுரன் தான் பாடல் - தனுசின் ராயன் திரைப்படம்
Dhanush & A.R. Rahman's Adangaatha Asuran Performance 🔥 | Raayan Audio Launch - Best Moments |Sun TV- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணத்தை 30 இலட்சமாக அதிகரிக்க வேண்டும் : டலஸ் அழகப்பெரும Published By: DIGITAL DESK 7 24 JUL, 2024 | 03:56 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருத்தம் செய்ய வேண்டும்.இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரின் கட்டுப்பணத்தை 25 இலட்சமாகவும்,சுயாதீன வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 இலட்சமாகவும் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என எதிரணியின் சுயாதீன உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருத்தம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தது.இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க தேர்தல் சட்டத்துக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா கட்டுப்பணமும்,சுயாதீன வேட்பாளரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமும் அறவிடப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரிடமிருந்து அறவிடும் கட்டுப்பணத்தை 25 இலட்சமாகவும்,சுயாதீன வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 இலட்சமாகவும் திருத்தம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.எவ்விதமான வரையறைகளும் இல்லாமல் வேட்பாளர்கள் முன்னிலையாகுவதால் அரச நிதியே வீண்விரயமாக்கப்படுகிறது. 41 ஆண்டுகளுக்கு பின்னரே கட்டுப்பணம் தொடர்பில் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது.அதேபோல் கட்டுப்பணம் விவகாரத்திலும் கவனம் செலுத்தி திருத்தம் ஒன்றை முன்வைக்குமாறு வலியுறுத்துகிறேன். இதற்கு எழுந்து பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த,அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை அவசரமாக கொண்டு வரவில்லை. சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ விரைவாக கொண்டு வர முடியாது.கட்டுப்பணம் தொடர்பான திருத்தத்தை இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு முன்வைக்க முடியாது.அதற்கான காலவகாசம் போதாது.2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தலாம் என்றார். https://www.virakesari.lk/article/189268- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு கப்பல்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் மைக்கேல் மர்பி Published By: DIGITAL DESK 3 24 JUL, 2024 | 05:10 PM அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி (USS Michael Murphy) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. 155 மீற்றர் நீளமுள்ள, இந்த ஏவுகணை எதிர்ப்பு கப்பல் 323 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. கொழும்புக்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை மரபுக்களுக்கமைய வரவேற்றனர். கப்பலின் கேப்டன் ஜொனாதன் பி. கிரீன்வால்ட் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நேற்றைய தினம் சந்தித்துள்ளார். இந்த கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) நாட்டில் இருந்து புறப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/189282- யாழில் சட்டவிரோத மணல் அகழ்வு; நான்கு டிப்பருடன் மூவர் கைது
Published By: DIGITAL DESK 3 24 JUL, 2024 | 04:58 PM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4 டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். பொலிஸாரை கண்டதும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் மூன்று நபர்கள் பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டனர். அதேவேளை அவ்விடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் மீட்டனர். டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/189286- யாழ். அச்சுவேலி தொண்டைமானாறு வீதி சேதம் : பொதுமக்கள் பயணத்தில் அசெளகரியம்!
24 JUL, 2024 | 04:52 PM யாழ்ப்பாணம், அச்சுவேலி தொண்டைமானாறு வீதி மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ளமையால், அவ்வீதியால் பயணிப்போர் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பருவமழை காலத்தில் தொண்டைமானாறு நீர் அவ்வீதியில் பாய்வதால் அந்த வீதிகளில் மழைக் காலங்களில் பாரிய குழிகள் தோன்றியுள்ளன. இதனால் பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவுக்கு அந்த வீதி மோசமாக சேதமடைந்துள்ளது. மழைக்காலம் முடிந்து, தொண்டைமானாற்றில் நீர் மட்டம் குறைகிறபோது வீதியில் உள்ள குழிகளை தற்காலிகமாக மூடி, வீதியை புனரமைத்து மக்கள் தமது போக்குவரத்தினை தொடர்வார்கள். இம்முறை வீதி பருவமழைக்காலம் முடிவடைந்து சுமார் 07 மாதங்கள் கடந்த நிலையிலும் பழுதடைந்த வீதியினை தற்காலிகமாகவேனும் புனரமைக்கப்படாதிருப்பதால், வீதியில் செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எதிர்வரும் 04ஆம் திகதி செல்வச்சந்நிதி ஆலய வருடாந்திர திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், அதிகளவானோர் இந்த வீதியினூடாக வாகனங்களில் பயணிப்பார்கள் என்பதால் வீதியினை விரைந்து புனரமைத்து தருமாறு கோரப்பட்டுள்ளது. தொண்டைமானாறு நீர் வீதியின் மேலாக ஓடாதவாறு அந்த வீதியானது உயர்த்தப்பட்டு, பொருத்தமான இடங்களில் சிறிய பாலங்கள் அமைத்து, வீதியை நிரந்தரமாக தரமான வீதியாக புனரமைத்து தருமாறு பல வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189283 - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.