Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்ள்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மத்திய ரஷ்யா, வடக்கு சீனா, வட அமெரிக்கா மற்றும் அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்பநிலை அதிகரிப்பு, அதன் பாதுகாப்பு தன்மையைப் பாதிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயம் மற்றும் பல உற்பத்திகள் பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஒக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர்வாழ முடியாது. இது போன்ற பல்வேறு ஆபத்துக்களை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்பநிலை அதிகரிப்பு, புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். https://thinakkural.lk/article/305867
  2. பட மூலாதாரம்,ANI 12 ஜூலை 2024 இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியல் சாசனப் படுகொலை தினமாக’ அனுசரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தும் என பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தெரிவித்தார். ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ (சம்விதான் ஹத்யா திவாஸ்) அனுசரிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோதி இக்கருத்தை தெரிவித்துள்ளார். “மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது” என காங்கிரஸ் இதை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்தப் பிரதமரின் ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு, அதன் தத்துவங்கள், விழுமியங்கள் மற்றும் நிறுவனங்களின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். இந்தியன் 2: படம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்12 ஜூலை 2024 பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறைஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய அரசின் அறிவிப்பாணை பட மூலாதாரம்,AMIT SHAH ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்புப் படுகொலை தினமாக’ இந்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் அரசிதழில் வெளியாகியுள்ள அறிவிப்பாணையில், “ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் அரசாங்கத்தால் அதிகார அத்துமீறல் மற்றும் இந்திய மக்களுக்கு எதிராக மிகுதியான அட்டூழியங்கள் நிகழ்ந்தன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்திய மக்கள் அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, அவசரநிலை காலகட்டத்தில் அதிகார அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதற்கு எதிராகப் போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்புப் படுகொலை தினமாக’ இந்திய அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எதிர்காலத்தில் இந்திய மக்கள் இத்தகைய அதிகார அத்துமீறலை எந்த வடிவத்திலும் ஆதரிக்கக்கூடாது என உறுதியேற்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிவீர்: முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படைகளில் 10% இட ஒதுக்கீடுஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆயிரம் கோடியை நெருங்கும் உலக மக்கள் தொகை - இந்தியாவின் நிலை என்ன?12 ஜூலை 2024 அமித் ஷா கூறியது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த அறிவிப்பாணையைத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, “ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார்” எனத் தெரிவித்துள்ளார். “எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் ஒடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாகக் கடைபிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.” மேலும், “இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை அனுபவித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு, சர்வாதிகார அரசாங்கத்தின் கைகளில் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களின் ஆன்மாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக” அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அரசியலமைப்புப் படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்தக் கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்” எனத் தெரிவித்தார். ஆடம்பரமாக திருமணத்தை நடத்தும் சராசரி இந்திய குடும்பங்கள் என்ன ஆகின்றன தெரியுமா?12 ஜூலை 2024 மோதியின் ரஷ்ய பயணத்தை உற்றுநோக்கிய அமெரிக்கா - பென்டகன் கூறியது என்ன?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் எதிர்வினை பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அரசின் முடிவு குறித்து அக்கட்சி சார்பாக எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது," என்று விமர்சித்துள்ளார். "கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிறப்பித்தவர் அவர். அதன் காரணமாகவே, இந்தத் தேர்தலில் மக்கள் அவருக்குத் தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கினர். தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4, மோதி விடுதலை நாளாக வரலாற்றில் பதிவாகும்” எனத் தெரிவித்துள்ளார். “இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திய பிரதமர் இவர். இந்திய அரசியலமைப்பு சாசனம் மனுஸ்மிருதியில் இருந்து உத்வேகம் பெறவில்லை என்பதால் அதை நிராகரிக்கிறோம் எனக் கூறியவர்களின் கருத்தியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர்.” “மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமருக்கு, டெமாக்ரசி என்பது டெமோ-குர்சி (பதவி) மட்டுமே" என அவர் தெரிவித்துள்ளார். கல்கி படத்தில் வரும் இந்த கோவில் சோழர் கட்டியதா? மண்ணுக்குள் புதைந்து போனதன் முழு பின்னணி12 ஜூலை 2024 ஒரே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளி - தமிழ்நாடு முழுவதும் கள்ளர் பள்ளிகளின் நிலை என்ன?12 ஜூலை 2024 மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு என்ன அர்த்தம்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி எமர்ஜென்சி தொடர்பாக காங்கிரஸை தாக்கி வருவதால், வெள்ளியன்று மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு முக்கியமானது. அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டுமானால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று மக்களவைத் தேர்தல் முழுவதும் காங்கிரஸ் கூறியது. ராகுல் காந்தி தனது பேரணிகளில் அடிக்கடி அரசியல் சட்டத்தின் நகலைக் காட்டிப் பேசினார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள் என ராகுல் காந்தி தனது கூட்டங்களில் தொடர்ந்து கூறி வந்தார். கடந்த மே மாதம், தனது உரை ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பழங்குடியினருக்கு எது கிடைத்ததோ, பட்டியல் சாதியினருக்கு எது கிடைத்ததோ, பிற்பட்டோருக்கு எது கிடைத்ததோ, உங்கள் தண்ணீர், காடு, நிலம் மீதான உரிமை என அனைத்து உரிமைகளையும் அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது." "ஆனால், இதைப் புறந்தள்ளிவிட்டு, உங்கள் உரிமைகளைப் பறித்துவிட்டு ஆட்சி நடத்த வேண்டுமென்று பாஜக நினைக்கிறது. அவர்களைத் தடுத்து நிறுத்த நாங்கள் முயல்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தப் புத்தகத்தை (அரசியல் சாசனத்தை) மாற்றுவதாக பாஜக தலைவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதனால்தான் அவர்கள் 400 தொகுதிகள் என்ற முழக்கத்தையே முழங்கினார்கள்,” என்றார். புதிய நாடாளுமன்றத்தில்கூட, அவசரநிலையின்போது அரசியலமைப்புச் சட்டத்தைச் சீர்குலைத்த விவகாரத்தை, பாஜக எழுப்பியது. கடந்த 1975 ஜூன் 25 அன்று அவசரநிலை அறிவிக்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை இணைக்குமாறு பழனிசாமிக்கு 6 அமைச்சர்கள் நெருக்கடி - அதிமுகவில் என்ன நடக்கிறது?12 ஜூலை 2024 ஜாம்பவான் பயிற்சியாளர்களின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் நிகழ்ந்த 7 முக்கிய தருணங்கள்11 ஜூலை 2024 குடியரசுத் தலைவர் உரையில் அவசர நிலை பற்றிக் குறிப்பிட்டது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில், “அவசரநிலையை எதிர்த்த மாமனிதர்களுக்கும் பெண்களுக்கும் இன்று அஞ்சலில் செலுத்தும் நாள். அதன் இருண்ட நாட்கள் காங்கிரஸ் எப்படி இருந்தது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. கட்சி அடிப்படை சுதந்திரங்களை மீறியது மட்டுமின்றி, அனைத்து இந்தியர்களும் மதிக்கும் இந்திய அரசியலமைப்பை மிதித்தது,” என்று தெரிவித்தார். மேலும், “எமர்ஜென்சியை விதித்தவர்களுக்கு அரசியல் சாசனத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த உரிமை இல்லை. நாட்டின் பல மாநிலங்களில் 356வது பிரிவை பயன்படுத்தியவர்கள் இவர்கள்தான். பத்திரிகை சுதந்திர மசோதாவை நிறைவேற்றி, கூட்டாட்சிக் கட்டமைப்பைச் சேதப்படுத்தியவர்கள், எல்லா அம்சங்களையும் மீறினார்கள். அவசரநிலையை அறிவித்த கட்சி இன்னும் அதே எமர்ஜென்சி மனநிலையைக் கொண்டுள்ளது,” என்று கூறினார் பிரதமர் நரேந்திர மோதி. ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அவசரநிலைப் பிரச்னை ஆதிக்கம் செலுத்தியது. ராகுல் காந்தி எம்.பி.யாக பதவியேற்கும்போது அரசியல் சாசன நகலைக் கையில் வைத்திருந்தார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதவியேற்ற பிறகு ஜெய் சம்விதான் என்றார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் உரையில், அவசரநிலை குறித்துக் குறிப்பிடப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தனது உரையில், “இன்று ஜூன் 27. ஜூன் 25, 1975 அன்று அவசரநிலையை அமல்படுத்தியது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய மற்றும் இருண்ட அத்தியாயம். இதனால் நாடு முழுவதும் கோபமடைந்தது. ஆனால், அத்தகைய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நாடு வெற்றி பெற்றது. ஏனெனில், ஜனநாயகத்தின் மரபுகள் இந்தியாவின் மையக் கருவாக உள்ளது,” என்று குறிப்பிட்டார். தனது ராணுவத்தில் ஏமாற்றிச் சேர்க்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க உறுதியளித்த ரஷ்ய அரசு10 ஜூலை 2024 பாலியல் துன்புறுத்தல் சர்ச்சைக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கவனம் செலுத்தும் இந்திய மல்யுத்த வீராங்கனைகள்10 ஜூலை 2024 அவசரநிலை குறித்த காங்கிரஸின் நிலைப்பாடு பட மூலாதாரம்,ANI காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2021ஆம் ஆண்டு அவசரநிலை குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டை முன்வைக்கும்போது, அந்த முடிவு தவறானது எனக் கூறினார். பிரபல பொருளாதார நிபுணரான பேராசிரியர் கௌசிக் பாசுவுடனான உரையாடலில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்த முடிவு செய்தது தவறு என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். 1975 மற்றும் 1977 வரையிலான 21 மாத அவசரநிலையின்போது என்ன நடந்ததோ அது தவறு என்றும் ராகுல் கூறியிருந்தார். எமர்ஜென்சியின்போது, அரசியல் சாசன உரிமைகள் மற்றும் குடியுரிமைகள் ரத்து செய்யப்பட்டன, பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன, ஏராளமான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் ராகுல் காந்தி கூறினார். ஆனால், இவையனைத்தும் இன்றைய சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், “அது தவறு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். முற்றிலும் தவறான முடிவு. என் பாட்டியும் (இந்திரா காந்தி) அப்படித்தான் கூறினார். அதற்குப் பிறகு காங்கிரஸ் இந்தியாவின் அரசு நிர்வாக அமைப்பைக் கைப்பற்ற முயலவில்லை. உண்மையைச் சொல்வதானால், அதற்கான திறன் காங்கிரஸிடம் இல்லை. காங்கிரஸின் சித்தாந்தம் எங்களை அவதூறு செய்ய அனுமதிக்கவில்லை” என்றார். “எமர்ஜென்சிக்கும் இன்று நடப்பதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசு நிறுவனங்களை அதன் ஆட்களைக் கொண்டு நிரப்புகிறது. தேர்தலில் பாஜகவை தோற்கடித்தாலும், அரசு நிறுவனங்களில் அவர்களின் ஆட்களை நம்மால் அகற்ற முடியாது.” “நவீன ஜனநாயக அமைப்பு என்பது அரசு நிறுவனங்களின் சமநிலையை அடிப்படையாகக் கொண்டது. அரசு நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்பட வேண்டும். ஆனால், அவற்றின் சுதந்திரத்தை இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தாக்குகிறது. இது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. ஜனநாயகம் பலவீனமடைவதாகச் சொல்ல மாட்டோம். ஆனால், அது அழிக்கப்படுகிறது,” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cq5xg9y0ej1o
  3. 13 JUL, 2024 | 12:25 PM கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு செயற்றிட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்கும் நிகழ்ச்சித் தொடரின் விசேட கூட்டம் வெள்ளிக்கிழமை (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சியின் வரவேற்புரையை தொடர்ந்து இவ்விசேட கூட்டம் ஆரம்பமானது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மூச்செடுக்க முடியாத நாட்டை படிப்படியாக மீட்டெடுப்பதற்கு, செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாகவே அரசாங்கம் சிந்தித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் 2042ஆம் ஆண்டு வரை பணத்தை அச்சடிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து, அரச ஊழியர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். 2019ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக, அவ்வப்போது பணம் அச்சடிக்கப்பட்டது. ஆனால், இன்று அவ்வாறு செய்ய முடியாது. கடனிலிருந்து நாட்டை முதலில் மீட்க வேண்டும். இதற்காக வருமானத்தை அதிகரித்து அரச செலவுகளை குறைக்க வேண்டும். மக்கள் உயிர் வாழ்வதற்கான, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகமான நிதியினை செலவு செய்து வருகின்றோம். இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்காக ஏற்படுகின்ற செலவை ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஈடு செய்ய முடியாதுள்ளது. இதுவே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் வீதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் கிழக்கு மாகாணத்துக்கு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நாளாந்தம் மாணவர்கள் பயன்படுத்தும் பாடசாலைகளை அண்டிய வீதிகள், விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் வீதிகள் என அத்தியாவசிய வீதிகளுக்கு நாம் மிகவும் முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி செய்து வருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் நிலவும் பயணிகளின் பஸ் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். 400 பஸ்களுக்கு 70 எஞ்சின்கள் பெறப்பட்டிருக்கின்றன. இதற்காகவும் கடனை பெறவேண்டிய நிலைக்கே ஆளாகியுள்ளோம் என மேலும் கூறினார். இந்த கூட்டத்தில் கிராமிய வீதிகள், அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரள, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து, மொறவெவ விமானப்படை முகாம் வீதி, ஸ்ரீகருமாரி அம்மன் வீதி (கன்னியா) ஆகியன திறக்கப்பட்டன. அத்தோடு, இலங்கை போக்குவரத்து சபை திருகோணமலை டிப்போவுக்கு அமைச்சர் பந்துல கள விஜயம் செய்தார். https://www.virakesari.lk/article/188348
  4. அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார். வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/305945
  5. வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 600 மில்லியன் ரூபா செலவு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலுக்கும் அரச அச்சகத் திணைக்களம் தயாராக உள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒரு கோடி 70 இலட்சம் வாக்குச் சீட்டுக்களை அச்சிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்புக்கமைய, எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/305942
  6. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி படக்குறிப்பு,அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். 13 ஜூலை 2024, 04:06 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவுக்கு வந்துள்ளது. 20வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,663 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 1,23,689. பாமக வேட்பாளர் அன்புமணி 56,026 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் அபிநயா 9,740 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார். திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். திமுக வேட்பாளர் வெற்றி படக்குறிப்பு,அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். கடந்த 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. 276 வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 1,95,495 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.48. இதில் ஆண்களின் வாக்குகள் 95,536, பெண்களின் வாக்குகள் 99,944, மூன்றாம் பாலினத்தவரின் வாக்குகள் 15. இன்று காலை 8 மணிக்கு, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலாவதாக, தபால் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் இருந்தார். இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவும் இருந்தனர். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 'பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க வெற்றி' விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்" என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின். அதோடு, தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 'இடைத்தேர்தலில் அத்துமீறல்' - பாஜக தலைவர் அண்ணாமலை பட மூலாதாரம்,K.ANNAMALAI / TWITTER படக்குறிப்பு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொரு பகுதியாகக் களமிறங்கி வேலை செய்துள்ளனர். அத்துமீறல்கள், முறைகேடுகள் எல்லாம் சர்வசாதாரணமாக மாறிவிட்டது" என்று கூறினார். இடைத்தேர்தல் முடிவுகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்காது என்றும், கண்டிப்பாக 2026இல் மாற்றம் வரும் என்றும் அவர் தெரிவித்தார். "ஆனால், மக்கள் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். பணபலம், அதிகார பலம் என அனைத்தையும் தாண்டி எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. கூட்டணிக் கட்சியினர் சிறப்பாகப் பணியாற்றினார்கள். முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இதுகுறித்துப் பேசுகிறேன்" என்று அண்ணாமலை கூறினார். படக்குறிப்பு,பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின்படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. களத்தில் உள்ள வேட்பாளர்கள் பட மூலாதாரம்,X- NAAMTAMILARORG/UDHAYSTALIN படக்குறிப்பு,பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராகக் களம் கண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிட்டார். மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி, ஹோமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்திருந்தார். செய்தியாளர் க.மாயகிருஷ்ணன், பிபிசி தமிழுக்காக https://www.bbc.com/tamil/articles/c51yl0lpgl1o
  7. எங்கட ஊர்ல ஒரு அண்ணை இருந்தவர். அவருக்கு பேசி வாற சம்பந்தம் எல்லாம் சந்தையைத் தாண்ட முதலே குழம்பிவிடும். இதெல்லாத்தையும் முறியடிச்சு ஒரு கலியாணம் செய்து பெண் குழந்தையும் பெற்று குழந்தைக்கு 6/7 வயதாக மனைவியைப் போட்டுக் கும்மி அவ குழந்தையையும் கூட்டிக்கொண்டு பிரிந்து போயிற்றா. அந்தக் கவலையில் கூடக் கூடக் குடித்து கோமாவாக்கி அந்தாளும் மேல போயிற்று.
  8. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : துப்பாக்கி, சன்னங்கள் மீட்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின், எட்டாம் நாள் அகழாய்வு செயற்பாடுகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடு ஒன்றும், துப்பாக்கி சன்னங்களும், விடுதலைப் புலிகளின் சீருடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழாய்வின்போது, மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின்போது நேற்றுடன் 45 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரிகளின் கண்காணிப்புகளின் கீழ் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இந்த அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் உத்தியோகத்தர் மத்தீவ் கின்சன் மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த, பணிப்பாளர் ஜெ.தர்பரன் உள்ளிட்டவர்களும் குறித்த அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/305923
  9. 13 JUL, 2024 | 10:56 AM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும், ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். அநுரகுமார, பிராந்தியத்தின் வர்த்தக பிரமுகர்களை வெள்ளிக்கிழமை (12) காரைதீவில் சந்தித்து பேசியபோது மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டு மக்கள் காலம் காலமாக தொடர்ந்து நாட்டையும் மக்களையும் அழித்து வருபவர்களுக்கே வாக்குகளை வழங்கி வந்திருக்கின்றார்கள். இதனால் தான் நாடு அனைத்து விதங்களிலும் கெட்டு குட்டிச்சுவராகி இருக்கிறது. இனவாதிகளும் ஊழல்வாதிகளும் இந்நாட்டை ஆண்டதால்தான் நாட்டில் இனவாதம் மேலோங்கி பொருளாதாரம் சீரழிந்து அனைத்து விதத்திலும் நாடு பின்னடைந்து காணப்படுகிறது. இனவாதத்தை முதலீடாக பயன்படுத்தி ஆட்சி நடத்திய ராஜபக்ஷக்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. வீடமைப்பு அமைச்சின் பணத்தை வீணடித்த சஜித் பிரேமதாசவால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ரணில் அரசாங்கத்திடம் இருந்து மதுபான விற்பனைசாலை அனுமதிப் பத்திரம் பெற்ற எம்.பி.,க்கள் சஜித்துடன் உள்ளனர். இதை சஜித் மறுப்பாரா? சஜித் தரப்பினர் பகலில் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஊடல் கொள்கின்றனர், இரவில் கூடிக்கொள்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க என்ன முடிச்சுகளை போட்டாலும் அடுத்த இரண்டரை மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தே தீரும். இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றியை பெற்று அதன் மூலமாக எமது நாட்டு மக்கள் விரும்புகின்ற மக்கள் ஆட்சி நிச்சயம் மலரும். எமது ஆட்சியில் இனவாதம் இருக்காது. பொருளாதார மாட்சி ஏற்படும். எமது மக்களுக்கு மீட்சி ஏற்படும். தென்னிலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றித்து நிற்கின்றனர். அதே போல தேசிய மக்கள் சக்தி மூலமாக மக்கள் ஆட்சி உருவாக்கப்படுவதில் கிழக்கு மக்களும் பங்காளிகளாக இணைய வேண்டும். மாற்றுத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இலங்கையர்களாக நாம் அனைவரும் வாழ்வோம். புதிய தேசத்தை கட்டியெழுப்புவோம் என்றார். https://www.virakesari.lk/article/188338
  10. 13 JUL, 2024 | 11:01 AM (இராஜதுரை ஹஷான்) படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார் பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் நாட்டுக்காக எதனை செய்துள்ளார்கள். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்களா, அல்லது தங்களின் குடும்ப அபிவிருத்திக்காக அங்கம் வகிக்கிறார்களா? இவர்களால் இனி ஏதும் முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆகவே இவர்கள் கௌரவமான முறையில் ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசாத் தி விஸர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய நூற்றாண்டு முன்னணி காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும். ஒருசில அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை அரச சேவையாக நினைத்துக்கொள்கிறார்கள். இறக்கும் வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறார்கள். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்களா? அல்லது தமது குடும்ப அபிவிருத்திக்காக அங்கம் வகிக்கிறார்களா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 75 வயது. இவர் 42 ஆண்டுகள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில்தான் சிவில் யுத்தம் இடம்பெற்றது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. 42 வருடங்கள் ஒன்றும் செய்யவில்லை. இனியும் இவரால் எதனை சாதிக்க முடியும்? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 78 வயது. இவர் 39 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்ததன் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் முறைமையை இவர் தோற்றுவித்தார். உலகில் வேறெந்த நாடுகளிலும் இவ்வாறான நிலை கிடையாது. நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதை காணக்கூடியதாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 72 வயது. இவர் 39 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் இவர் செயற்பட்ட விதம் 2019ஆம் ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு மூல காரணியாக அமைந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு நாட்டுக்கு செய்யாத சேவையையா இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு செய்யப் போகிறார்? பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் பெரும்பாலான உறுப்பினர்கள் 30 வருடங்களுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கிறார்கள். இவர்களால் இனி ஏதும் செய்ய முடியாது என்பது உறுதியாகியுள்ளது. ஆகவே இவர்கள் நாட்டுக்காகவேனும் கௌரவமான முறையில் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும். அரசியல் கட்சிகள் இவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்க கூடாது. இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/188342
  11. 13 JUL, 2024 | 10:53 AM யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (12) வெள்ளிக்கிழமை பயணித்த பஸ்ஸில், கைதடி பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர். பின்னர், இந்த இளைஞர்கள் இருவரும் அரியாலை பகுதியில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்டுள்ளனர். இதன்போது, சாரதியும் , பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் , அவர்களை சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இதன்போது, இந்த இரு இளைஞர்களும் , திடீரென தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து , அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் சாரதி மற்றும் பயணி ஆகியோர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/188336
  12. வடக்கு உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கல்! 13 JUL, 2024 | 10:19 AM வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் இந்த நிகழ்வில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வட மாகாண ஆளுநர் கூறுகையில், மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க பாரிய பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன. எங்களின் கோரிக்கையை ஏற்று, மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைய, கௌரவ பிரதமர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவர்கள் இருவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். 165 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. நீண்ட கால ஏக்கத்துக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது என தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக பிரதமர் தெரிவிக்கையில், தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் செயற்பாட்டுக்கு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் முதன் முதலில் தனது ஆதரவை தெரிவித்தார். ஆளுநர் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே இன்று 165 பேருக்கான நிரந்தர நியமனங்கள் கிடைத்துள்ளன. நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் தங்களின் கடமைகளை உரியவாறு முன்னெடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/188332
  13. 13 JUL, 2024 | 10:07 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டதுடன், வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு முன்னதாக முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளை சென்று பார்வையிட்டு, அதன் நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் அமைந்துள்ள டாஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/188328
  14. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்: திமுக, பாமக, நாம் தமிழர் வேட்பாளர்கள் நிலை என்ன? படக்குறிப்பு,பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 13 ஜூலை 2024, 04:06 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 276 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, இந்த இடைத்தேர்தலில் மொத்தமாக 1,95,495 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.48. ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 38,564 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 13,754 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். இவர் திமுக வேட்பாளரைவிட 24,810 வாக்குகள் பின்தங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் அபிநயா 849 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் பணியில் 1,195 காவலர்களும், 24 மத்திய துணைக் காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை கடந்த 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. 276 வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 1,95,495 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.48. இதில் ஆண்களின் வாக்குகள் 95,536, பெண்களின் வாக்குகள் 99,944. இன்று காலை 8 மணிக்கு, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலாவதாக, தபால் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவும் உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின்படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. களத்தில் உள்ள வேட்பாளர்கள் பட மூலாதாரம்,X- NAAMTAMILARORG/UDHAYSTALIN படக்குறிப்பு,பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராகக் களம் கண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிட்டார். மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி, ஹோமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/c51yl0lpgl1o
  15. இதுக்கு @தமிழ் சிறி அவரிட்டத் தான் பதில் இருக்கு! அண்ணை ஏதோ கிணறு ஊற்று என்று எழுதின ஞாபகம்!!
  16. வீதிகளில் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கான வேக வரம்பு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். வீதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாவை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ”2023 ஆம் ஆண்டு 2,214 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துக்களில் 2,321 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடமும் கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை 1,103 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளினால் 1,154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த நிலைமையைக் குறைக்க எங்கள் அமைச்சு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.” என தெரிவித்தார். https://thinakkural.lk/article/305848
  17. கொழும்பு குற்றப்பிரிவில் (CCD) பணிபுரிந்த போது இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அறையில் இருந்த மற்றுமொரு கைதி கூரிய ஆயுதத்தால் வாயில் வெட்டியுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரியின் காயங்களுக்கு சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. https://thinakkural.lk/article/305836 கைலஞ்சமும் வாங்கிற்று கண்டபடி வாய்காட்டினாரோ?!
  18. வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், வைத்தியசாலையில் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். யாழ். போதனா வைத்தியசாலை என்பது வட மாகாணத்தில் மிகப்பெரிய போதனா வைத்தியசாலை இங்கு விபத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகும் நிலையில், அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக 16 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். அதிலும் வட மாகாணத்தில் யாழ். மாகாணத்தில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/305833
  19. கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்! 12 JUL, 2024 | 05:46 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (12) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (12) ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188323
  20. 12 JUL, 2024 | 04:43 PM புதிய சட்டமா அதிபராக கே. ஏ. பாரிந்த ரணசிங்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட்டுள்ளார். சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து சட்டமா அதிபரின் பதவி வெற்றிடமாக இருந்தது. இந்நிலையில், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். https://www.virakesari.lk/article/188314
  21. மோதியின் ரஷ்ய பயணத்தை உற்றுநோக்கிய அமெரிக்கா - பென்டகன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஜூலை 2024, 04:49 GMT இந்திய பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய சுற்றுப்பயணம் முடித்து இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் இடையே இந்தியா - ரஷ்யா இடையிலான உறவுக் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. மோதியின் இந்தச் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என இந்தியா கூறியுள்ளது. பிரதமர் மோதி தன் எக்ஸ் இணையதளத்தில் ரஷ்யப் பயணம் குறித்து, ‘ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நேர்மறையானதாக இருந்தது. இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து இந்திய - ரஷ்ய ஒத்துழைப்பை பன்முகப்படுத்துவது குறித்து விவாதித்தோம்’ எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. பென்டகன் இதுகுறித்து, இந்தியா யுக்ரேன் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் என நம்புவதாக கூறியுள்ளது. மோதி இந்திய பிரதமராக மூன்றாவது முறைப் பதவியேற்றப் பிறகு ரஷ்யா செல்வது இதுவே முதல் முறை ஆகும். அமெரிக்க வெளியுறவுத் துறை சொல்வது என்ன? மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்தும், இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், ‘ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுக் குறித்த எங்கள் நிலையில் நாங்கள் தெளிவாக உள்ளோம்’ என கூறியுள்ளார். ‘எங்கள் கவலைக் குறித்து இந்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளோம். இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம், இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று இவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து இவர், ‘ஐக்கிய நாடுகளின் சாசனக் கொள்கைகளின் அடிப்படையில் யுக்ரேன் மற்றும் அதன் பிராந்தியத்தில் அமைதி மற்றும் இறையாண்மையை நிலைநாட்ட நாங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்படி இந்தியாவிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.’ என கூறி இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு. ஆரம்பத்தில், மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி, இந்தியா ரஷ்யாவிடம் இந்தப் போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், ‘இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான நீண்டகால மற்றும் நெருக்கமான உறவு நிலவி வருவதால், ரஷ்யாவை இந்தக் கொடூரமானப் போரை நிறுத்த வலியுறுத்த இந்தியாவிற்கு திறன் இருக்கிறது’ எனக் கூறி இருந்தார். இவரைப் பொறுத்தவரையில், ‘இந்தியா நமது முக்கியமான உத்திசார் கூட்டு நாடு, இதனுடன் நாம் முழுமையான மற்றும் திறந்தப் பேச்சுவார்த்தைக் கொண்டிருக்கிறோம். இதில், இந்தியா - ரஷ்யா இடையேயான உறவும் அடங்கும், இதுகுறித்து நாம் முன்பே பேசி இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். “இதில் முக்கியம் என்னவெனில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் யுக்ரேன் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றன. அதிபர் புதின் தான் இந்தப் போரைத் துவக்கினார். இவரால் மட்டுமே இதை நிறுத்த முடியும்” உண்மையில், ரஷ்யா - யுக்ரேன் இடையேயான போர் பிப்ரவரி 2022 இல் துவங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் இலக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருந்து வருகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தியதற்காக மார்ச் 2023 இல் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது. கடந்த திங்கட்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாஸ்கோ சென்ற போது, ரஷ்ய அதிபர் புதின் அவரை வரவேற்றார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து நட்புப் பாராட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES பென்டகன் கூறியது என்ன? அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சக பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தப் போது, “அதிபர் புதின் இந்தச் சுற்றுப்பயணத்தை வைத்து, தான் உலக நாடுகளில் இருந்துத் தனிமைப்படுத்தப்படவில்லை என வெளிப்படுத்திக் கொண்டால், அதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை” எனக் கூறியிருந்தார். “ஆனால் உண்மை என்னவனில், ரஷ்யா வேண்டுமென்றே நடத்திவரும் இந்த போர் அவரை உலக நாடுகளிடம் இருந்து தனிப்படுத்தியிருக்கிறது. அதற்கு அவர் ஒரு பெரும் விலை கொடுத்துள்ளார். ” இவர் மேலும், “இந்தியா - ரஷ்யா இடையே நீண்டகாலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. மற்றும் இந்தியா, அமெரிக்காவின் முக்கிய உத்திசார் கூட்டாளியாகவும் இருந்து வருகிறது. இவ்வுறவு இந்தியாவுடன் தொடரும்” என்றும் கூறியிருந்தார். ரைடரை பொறுத்தவரையில், “பிரதமர் மோதி யுக்ரேன் அதிபரையும் சமீபத்தில் சந்தித்திருந்தார் மற்றும் யுக்ரேன் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா தனது ஆதரவை உறுதியளித்திருக்கிறது. யுக்ரேனில் அமைதி நிலவ மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இந்தியா நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். புதினிடம், ஐக்கிய நாடுகளின் சாசனக் கொள்கைகள், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை இந்தியா எடுத்துரைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தபல வல்லுநர்கள், மோதி - புதின் கட்டியணைத்து அன்புப் பாராட்டியதைக் குறிப்பிட்டு மோதியை விமர்சித்தும் வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோதியின் ரஷ்ய சுற்றுப்பயணத்தின் மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். செவ்வாய் கிழமை அன்று, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய அதிபரை கட்டியணைத்ததைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோதியை தாக்கிப் பேசி இருந்தார். அதே நாளில், யுக்ரேன் மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. “உலகின் மாபெரும் ஜனநாயக நாடு, உலகின் கொடூரமான குற்றவாளியைக் கட்டித் தழுவுவது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுவும், குழந்தை மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள் அன்று” என ஜெலன்ஸ்கி கூறி இருக்கிறார். எனினும், நிறைய வெளியுறவு வல்லுநர்கள் இந்தியா - ரஷ்யா உடனான உறவு வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் இயற்கையானது, மோதி - புதின் இடையேயான சந்திப்பு பலவகைகளில் முக்கியமானது என கருதுகின்றனர். அமெரிக்காவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன் மோதி - புதின் சந்திப்பு நடைபெற்றது மற்றொரு சிறப்பம்சமாக காணப்பட்டது. மேலும், இந்தியா, அதன் பாதுகாப்பு மற்றும் பிற தேவைகளுக்கு மேற்கத்திய நாடுகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை மற்றும் தனது பழையக் கூட்டாளியான ரஷ்யாவை முற்றிலும் கைவிடாது என மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பும் ஒரு குறியீடாக இதை காண்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். முக்தாதர் கான், மோதி - புதின் சந்திப்புக் குறித்துத் தெளிவாகப் பேசி இருந்தார். காணொளிப் பதிவில் பேசிய ஆவர், “நேட்டோ சந்திப்புக்கு முன் ரஷ்யா உடனான இந்தியாவின் நிலைப்பாடு பல வகைகளில் முக்கியமானதாக இருக்கிறது. வியூக ரீதியாக முடிவெடுப்பதில் இந்தியா தனது சுதந்திர நிலையை இதன்மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/czrjkpxe0x4o
  22. தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் இதனைத் தெரிவித்தார். தற்போதைய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இந்நாட்டின் கல்வித் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் நம்புகின்றோம். குறிப்பாக தொழிற் சந்தையை இலக்காகக் கொண்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த நாட்டில் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்பார்க்கின்றோம். அந்தப் பல்கலைக்கழகங்களில் இருந்து 04 வருடங்களின் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் உருவாகுவார்கள். இதன் மூலம் தற்போது கல்வியியல் கல்லூரிகளில் இணையும் 5,000 மாணவர்களின் எண்ணிக்கையை 7,500 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 7500 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவார்கள். மேலும், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக பாடசாலைகளில் உள்ள வசதிகளை மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு பயிற்றுவிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை வழங்கப்படாத ஆசிரியர் நியமனங்கள், மூன்றாம் தர அதிபர் நியமனங்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் என்பனவும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளில் பணம் அறவிடுவது சட்டவிரோதமானது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பணம் அறவிடுவதைத் தடுக்க பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். ஆசிரியர் சேவை என்பது இந்நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் துறையாகும். மற்றவர்களை விட அவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. எனவே, தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். ஆனால், இந்தப் பணிப்பகிஷ்கரிப்புகள் தொடர்ந்தால் தொழிற்சங்கங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். எனவே, அவர்கள் வெவ்வேறு கதைகளைக் கூறினாலும், அவர்கள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தோல்வியடைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/305896

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.