Everything posted by ஏராளன்
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்! 09 JUL, 2024 | 10:46 AM யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியட்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்று செவ்வாய்க்கிழமை (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து நேற்று திங்கட்கிழமை (08) நண்பகல் வெளியேறினார். பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று திங்கட்கிழமை நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188005
-
புதிய மின் கட்டண விபரத்தை வௌியிட்ட அமைச்சர்!
மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறையும் – காஞ்சன எதிர்வரும் 18ஆம் திகதி அமுலாகும் வகையில் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மாத்தறை தெனியாய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இந்த மின் கட்டண குறைப்பு அமுலாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/305571
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு – ஜூலை மாத இறுதியில் – தேர்தல் ஆணையாளர் ஜூலை மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானால் செப்டம்பர் 17 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்கும் இடையில் தேர்தல்களை நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். 16 முதல் 21நாட்களிற்குள் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் தேர்தல் வாக்களிப்பு நான்கு வாரங்களிற்கு பின்னரும் ஆறு வாரங்களிற்கு முன்னதாகவும் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல்களிற்கு தயாராவதற்காக தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபரை சந்திக்கவுள்ளது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் அரசாங்க அச்சகத்தின் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/305563
-
இந்த வருடம் இனி சம்பள அதிகரிப்பு இல்லை – ஜனாதிபதி!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க வேண்டுமாயின் வெட் வரியை மீண்டும் அதிகரிக்க நேரிடும் - மஹிந்த சிறிவர்தன Published By: VISHNU 09 JUL, 2024 | 02:48 AM வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18% வெட் வரியை 20% - 21% ஆக அதிகரிக்க நேரிடும் எனவும், அரசாங்கத்தினால் அத்தகைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனவும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் திறைசேரி செயலாளர் இதனைக் குறிப்பிட்டார். அரச சேவையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கை தொடர்பில் இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்கும் சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் தற்போது அரசுக்கு இருக்கும் செலவீனத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 140 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இருபதாயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் மேலும் 280 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் திறைசேரி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருமானத்தைப் பெறுவதற்காக தற்போதைய வருமானத்தை அதிகபட்சமாக நிர்வகித்தாலும், வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்க, வெட் வரி 2 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தொழிற்சங்கங்கள் கோரும் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 3%இற்கு மேல் வெட் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், தற்போது அதை செய்ய இயலாது எனவும் ஏற்கனவே வெட் வரி 18 வீத உச்ச அளவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் முன்பு போன்று மத்திய வங்கியினால் பணம் அச்சிட முடியாது என சுட்டிக்காட்டிய திறைசேரி செயலாளர், அவ்வாறு செய்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தை வெற்றிககரமாக முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும் இங்கு கருத்துத் தெரிவித்ததோடு, அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிப்பது கடினமான பணியாக இருந்தாலும், அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீட்டை வழங்குவதாக ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பள முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/187995
-
பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தமா ? - ஒரு போதும் ஏற்கோம் என்கிறது இலங்கைத் தமிழரசுக்கட்சி
08 JUL, 2024 | 06:44 PM (நா.தனுஜா) பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதை முற்றாக நிராகரிப்பதாகவும், அது ஒருபோதும் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் அவருக்குப் பாரிய பின்னடைவையே தேடித்தரும் எனத் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வைக் கோரியதாகவும், தற்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி, மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட வேறு பல அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை (07) இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஜனாதிபதியின் இக்கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி நடைமுறைப்படுத்துவது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக அமையாது எனச் சுட்டிக்காட்டினார். 'சம்பந்தன் பிளவுபடாத, ஒருமித்த இலங்கைக்குள் அரசியல் தீர்வினைக் கோரியதாக ஜனாதிபதி கூறுகின்றார். இருப்பினும் அவர் பிளவுபடாத இலங்கைக்குள் தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்கக்கூடிய, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வையே கோரினார். மாறாக அவர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை. அவ்வாறிருக்கையில் பொலிஸ் அதிகாரங்களின்றி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வாக ஒருபோதும் அமையாது. எனவே உரையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்' எனவும் சிறிதரன் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி ஏற்கனவே மாகாணங்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், எனவே மேலும் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதை கிஞ்சித்தும் ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழ்மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து, சுயநிர்ண உரிமையை உறுதிசெய்யக்கூடிய விதத்தில், சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து இதயசுத்தியுடன் பேசுவதற்கு ஜனாதிபதி எம்மை அழைத்தால், அப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு தமிழரசுக்கட்சி தயாராக இருக்கின்றது எனவும் சிறிதரன் கூறினார். அத்தோடு ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் ஜனாதிபதி ஆற்றிய உரை தமிழ்மக்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் எனவும், அது எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/187971
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
நோயாளிகளை விட்டு ஓடிய வைத்தியர்கள் தமது பிள்ளைக்கு என்றால் செல்வார்களா? - போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கேள்வி Published By: VISHNU 09 JUL, 2024 | 12:16 AM சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை கருத்தில் கொள்ளாது தமது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்ற வைத்தியர்களை எவ்வாறு மக்கள் நம்புவது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். திங்கட்கிழமை (08) சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றக்கூடாது மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தமது சிறிய வயது காலத்தில் இருந்து இந்த வைத்தியசாலையை பயன்படுத்தி வருகிறோம். இங்கு வைத்தியர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தற்போதைய வைத்தியர் அர்சுனா வெளிப்படுத்தியதன் மூலம் நாம் அறிந்து கொண்டோம். நாங்கள் சிகிச்சைக்கு வரும்போது வைத்தியர் இல்லை என பலமுறை திரும்பிச் சென்றிருக்கின்றோம், ஆனால் இங்கு இருபதுக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருக்கும் விடயம் தற்போது தான் எமது மக்களுக்கு தெரியவந்தது. இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் பலர் வைத்தியசாலைக்கு வராது வீடுகளிலும் தனியார் வைத்திய சாலைகளிலும் கடமையாற்றுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் கடவுளுக்கு நிகராக வைத்திய துறையை கருதி சேவை செய்து வரும் நிலையில் சிலர் அவர்களையும் குழப்பி தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக வைத்தியர்கள் குறித்த வைத்திய சாலையை விட்டு வெளியேறச் சென்று இருக்கிறார்கள். அவர்களுடன் வைத்தியசாலையை விட்டுச் செல்ல விருப்பமில்லாத வைத்தியர்களும் நிர்பந்தத்தின் அடிப்படையில் சென்றிருப்பதை நாம் அறிகிறோம். வைத்தியர் ஒருவர் வைத்திய சாலையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்தியதற்காக ஏழை நோயாளிகளை கைவிட்டு விட்டு சென்ற வைத்தியர்கள் தமது பிள்ளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் போராட்டம் என கூறி வெளியேறிச் செல்வீர்களா என குறித்த பெண் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/187993
-
காணாமல்போனோர் பற்றிய அலுவலக செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி செயலாளர் தலைமையில் விசேட செயலணி
Published By: DIGITAL DESK 7 09 JUL, 2024 | 10:40 AM (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தவும், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவுமென ஜனாதிபதி செயலாளர் தலைமையில் விசேட செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இச்செயலணியில் முக்கிய அரச நிறுவனங்களும், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற கட்டமைப்புக்களும் உள்ளடங்குவதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஆணையை இலகுபடுத்தல், அதன் செயற்பாடுகளை விரைவுபடுத்தல் மற்றும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கல் உள்ளிட்ட பணிகளே இச்செயலணியின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார். அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவின் 3 வருட பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அரசியலமைப்புப்பேரவையின் ஊடாக அவர் அடுத்த 3 வருடகாலத்துக்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று எழுவர் அடங்கிய காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபையில் இம்முறை தடயவியல் நிபுணரான அஜித் தென்னக்கோனும் உள்வாங்கப்பட்டுள்ளார். இது இவ்வாறிருக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலையீட்டுடனான நிதியொதுக்கீட்டில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுமார் 10 நாட்கள் அகழ்வுப்பணியை முன்னெடுப்பதற்கு போதுமான நிதி தற்போது இருப்பதாக தற்பரன் குறிப்பிட்டார். அத்தோடு இம்மனிதப்புதைகுழியில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்களுக்கும், காணாமலாக்கப்பட்டோருக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கக்கூடுமோ என்பது பற்றி ஆராயும் நோக்கில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தாரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/305563
-
அரசியல் தீர்வு மற்றும் வட - கிழக்கு இணைப்பின் அவசியம் குறித்து அண்ணாமலையிடம் எடுத்துரைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி!
08 JUL, 2024 | 06:35 PM (நா.தனுஜா) இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.சிறிதரன் தலைமையிலான குழுவினருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு - கிழக்கு இணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் இந்தியாவின் ஆளுந்தரப்பான பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டிருந்தார். அதன்படி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் தலைமையில் தமிழரசுக்கட்சி இளைஞரணி உறுப்பினர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது குறிப்பாக திருகோணமலையில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் காணி அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அண்ணாமலைக்கு விளக்கமளிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி தமிழ்மக்கள் கோரும் அரசியல் தீர்வு மற்றும் அதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், வடக்கு - கிழக்கு இணைப்பின் முக்கியத்துவம் பற்றியும் தமிழரசுக்கட்சி இளைஞர்களால் அண்ணாமலையிடம் எடுத்துரைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/187987
-
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்
பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் குகதாசன் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உடல் நலக் குறைவினால் கடந்த வாரம் காலமானார். இதனையடுத்து அவரது பாராளுமன்ற உறுப்புரிமைக்கான வெற்றிடம் நிலவியது. 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 16,770 விருப்பு வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசு கட்சியின் பட்டியலில் சம்பந்தனுக்கு அடுத்த இடத்தினை சண்முகம் குகதாசன் பெற்றிருந்தார். https://thinakkural.lk/article/305551
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தேர்தல் தொடர்பில் அரச நிறுவன பிரதானிகளுக்கு அழைப்பு! அரச அச்சகமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் சிலர் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதியின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305538
-
முடங்கிய மும்பை: 6 மணி நேரத்தில் 300 மிமீ மழைப் பதிவு!
மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை | ரயில் விமான சேவைகள் பாதிப்பு; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 09 JUL, 2024 | 10:43 AM மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மற்ற பகுதிகளில் கனமழை பொழியும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை தானே, நவி மும்பை மற்றும் ஊரக பகுதிகளான ரத்னகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற இருந்த மும்பை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பதிவான மழை காரணமாக நகர பேருந்து ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று மும்பையில் சில மணி நேரங்களில் சுமார் 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் மரங்கள் வேரோடும் சில இடங்களில் கிளையும் முறிந்து விழுந்துள்ளது. 72 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளன. முதல்வர் விளக்கம்: “சுமார் 5000-க்கும் மேற்பட்ட இடங்களை மும்பை பெருநகர மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறது. அரபிக் கடலில் ஏற்படும் கடல் சீற்றம் மற்றும் உயரமான அலைகளால் கடல் நீர் மித்தி ஆற்றின் வழியே வராத வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் இருந்து நீரை வெளியேற்ற மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. வடிகால் வசதியில் சோதனை முயற்சியாக மைக்ரோ டனலிங் (சுரங்கம்) போன்றவற்றை நாட்டிலேயே முதல் முறையாக மேற்கொண்டு உள்ளோம். மக்களுக்கு உதவும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது” என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188009
-
இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
200 தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை: முடங்கும் அரச சேவை! அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09) சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அஞ்சல், நில அளவையாளர், விவசாய ஒழுங்குமுறை, கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண பொது முகாமைத்துவ சங்கத்தின் தலைவர் என்.எம்.விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக அஞ்சல் ஊழியர்களும் நேற்று (07) மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். அத்துடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று பணிக்கு சமூகமளித்துள்ள போதிலும், நாளை சுகயீன விடுமுறையை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுகாதார துறையுடன் தொடர்பான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் தாதியர் சங்கம், இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளன. அதன்படி, சுகாதார துறை பணிகள் சிக்கல் இன்றி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இன்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் திட்டமிட்டு மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பினால் அரச சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305495
-
பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோதி முதன்முறையாக ரஷ்யா சென்றுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி இந்திக்காக லண்டனிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார். ஐரோப்பியத் தலைவர்கள் பலர் இந்த அதிகாரபூர்வச் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட யுக்ரேனுக்கு ஆயுதங்கள் உட்படப் பல உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிவரும் சூழலில், ஐரோப்பியத் தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்குச் செல்வது இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் செய்யப்படும் துரோகமாகவே கருதப்படுகிறது. ஐரோப்பாவிலேயே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் நாடாக ஹங்கேரி கருதப்படுகிறது. மேலும் விக்டர் ஆர்பானைச் சர்வாதிகாரி என பலரும் வர்ணிக்கின்றனர். இந்தச் சூழலில், ஜூலை 8, 9 தேதிகளில் ரஷ்யாவுக்கு இந்தியப் பிரதமர் மோதி மேற்கொள்ளும் பயணத்தை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பார்க்கின்றன? இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த நாடும் வெளிப்படையாகக் கருத்து கூறவில்லை என்றபோதும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி வியாழக்கிழமை அன்று, ரஷ்யாவைப் போருக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சியில் இந்தியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார். யுக்ரேன் மீது படையெடுத்து, இன்று ஐரோப்பாவில் பதட்டமான சூழலை உருவாக்கிய நபராகக் கருதப்படும் புதினுடன் மோதி நிற்கும் புகைப்படங்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்பது மட்டும் நிச்சயம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் பயணமா? 22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டை நடத்துவதற்கான புதினின் அழைப்பை ஏற்று மோதி ரஷ்யாவுக்குச் செல்கிறார் என்கிறது அதிகாரபூர்வ அறிவிப்பு. 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக இரு நாட்டு உறவு ரீதியான சந்திப்புகள் ஏதும் நடைபெறவில்லை. இந்தச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் குறித்து புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அரசு, இரு நாட்டுத் தலைவர்களும், 'பாரம்பரியமாக நட்பு பாராட்டும் ரஷ்ய-இந்திய நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள்' பற்றி விவாதிப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியா இந்தச் சந்திப்பு தொடர்பாக அதிகமான தகவல்களை வெளியிடவில்லை எனினும் இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று நம்பப்படுகிறது. இந்தச் சந்திப்பு மேற்கத்திய நாடுகளைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இரு நாடுகளின் நட்பைத் தாண்டி இந்தச் சந்திப்பில் ஏதேனும் இருக்கிறதா? தெற்காசிய அரசியல் ஆய்வுகளில் சிறந்த நிபுணராகக் கருதப்படும் கிங்க்ஸ் கல்லூரியின் பேராசிரியர் க்றிஸ்டோஃபர் ஜாஃபர்லாட் மோதியின் மாஸ்கோ பயணம் புவிசார் அரசியல் பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். "ஆயுதங்களுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பது மட்டுமின்றி அனைத்து தரப்பு நாடுகளுடன் நட்பைப் பேணுவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதால் ரஷ்யாவுடனான தொடர்பை இந்தியா தொடர விரும்புகிறது," என்று குறிப்பிடுகிறார் ஜாஃபர்லாட். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"இந்தியா அனைத்து நாடுகளுடன் மேம்பட்ட உறவை தொடர விரும்புகிறது" மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு சீனாவுடன் ரஷ்யா காட்டும் நெருக்கமும் இந்தப் பயணத்திற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. "மாஸ்கோவுடனான உறவை இந்தியா நல்ல முறையில் வைத்துக் கொள்ளும் பட்சத்தில், சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவுக்குச் சவால் விடலாம்," என்றும் அவர் மேற்கோள்காட்டினார். மோதி கடைசியாக மாஸ்கோவுக்கு 2015-ஆம் ஆண்டு தான் பயணித்தார். பிறகு 2019-இல் ரஷ்யா சென்ற அவர் விளாதிவோஸ்தோக்கில் நடைபெற்ற பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்றார். புதின் டெல்லிக்கு 2021-ஆம் ஆண்டு வருகை புரிந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எஸ்.சி.ஒ. மாநாட்டில் மோதியும், புதினும் சந்தித்துக் கொண்டனர். அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய உறவு நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும், உலகளவில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த இந்நாடுகள் முயற்சி செய்து வருகின்ற சூழலில், மோதி மாஸ்கோவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஏற்கனவே இந்நாடுகள் ரஷ்யாவுடனான அதிகாரபூர்வச் சந்திப்புகளைக் கணிசமாக குறைத்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேற்கத்திய நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான போக்கு நிலவி வருகின்ற சூழலில் மோதியின் இந்த பயணம் பரவவிவாதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்குக் கோபமூட்டுமா? மோதியின் இந்தப் பயணத்தை இந்தியா, 'தன்னிச்சையான, தேசிய நலன்களைக் கருத்தில் கொண்ட வெளியுறவுக் கொள்கை அடிப்படையிலான சந்திப்பு' என வர்ணிக்கிறது. ஆனால், ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான போக்கு நிலவி வருகின்ற சூழலில், மோதியின் மாஸ்கோ பயணம், இந்தியாவின் கூட்டாளியான அமெரிக்காவுக்குக் கோபத்தை ஏற்படுத்துமா? அமெரிக்காவின் பால்டிமோரில் அமைந்திருக்கும் 'தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ்' பல்கலைக்கழகத்தில் அப்ளைட் எக்கானமிக்ஸ் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஸ்டீவ் எச். ஹாங்கே, இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு வரலாற்று ரீதியானது என்று குறிப்பிடுகிறார். ஸ்டீவ், அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகனின் பொருளாதார ஆலோசகர் குழுவில் பணியாற்றியவர். "சோவியத் காலத்தில் இருந்தே நல்ல நட்புடன் விளங்கும் ரஷ்யா உட்பட, இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவைத் தொடர விரும்புகிறது என்பது மோதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் வெளியிட்ட அறிக்கையில் வெளிச்சமாகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இருநாட்டு உறவும் தற்போது உச்சத்தில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர் இந்தியா-ரஷ்யா உறவின் வரலாறு 1960களில் இருந்து 1980கள் வரை இந்தியாவில் வளர்ந்த யாரும் சோவியத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்திருக்க முடியாது. இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலைகளை சோவியத் தான் துவங்கியது. இந்தியாவின் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவியது சோவியத் ஒன்றியம். இந்தியா நெருக்கடிகளைச் சந்தித்த காலத்தில் சோவியத் ஒன்றியம் இந்தியாவுடன் துணை நின்றது. 1965-ஆம் ஆண்டு, தாஷ்கெண்டில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மத்தியஸ்தராகச் செயல்பட்டது சோவியத் ஒன்றியம். நீங்கள் ரஷ்யாவுக்குச் சென்றால், அங்கு பாலிவுட் நடிகர் ராஜ் கபூரைப் பற்றி மக்கள் பேசுவதைக் கேட்க முடியும். 2000-களில் புதின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட போது, இரு நாட்டினரும், ‘டிக்ளரஷன் ஆஃப் ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப்’ என்ற பெயரின் கீழ் பாதுகாப்பு, விண்வெளி, மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒப்பந்தமிட்டனர். S-400 ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம், எரிசக்தி தொடர்பான திட்டங்கள் இவ்விரு நாட்டின் உறவுகளுக்கானச் சமீபத்திய எடுத்துக்காட்டுகள். மாறிவரும் உலக அரசியலுக்கு மத்தியில் இவ்விரு நாடுகளும் தங்களின் நட்பை ஆழப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளையே இவை சுட்டிக்காட்டுகின்றன. வலதுசாரிக் கருத்தியலாளரான முனைவர் சுவ்ரோகமல் தத்தா இது குறித்துப் பேசுகையில், இரு நாட்டு உறவும் தற்போது உச்சத்தில் உள்ளது என்கிறார். மோதியின் பயணம், மாறிவரும் புவிசார் அரசியல் தளத்தில் மாற்றங்களையும், புதிய உறவுகளையும் கொண்டுவரும் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீதான போரை இந்தியா கண்டிக்கவில்லை என்பது குறித்தும் மேற்கத்திய நாடுகள் கவலை கொண்டுள்ளன மேற்கத்திய நாடுகளுக்கு அதிருப்தியா? யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் சட்டத்திற்குப் புறம்பான 'சட்டத்திற்குப் புறம்பான போரை' எதிர்த்து வலுவான ஜனநாயக நாடான இந்தியா கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று மேற்கு உலகினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் 'நடுநிலைத்தன்மை' ரஷ்யாவின் 'சார்பு நிலையாகப்' பலமுறை புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், ரஷ்யா குறித்த விவகாரங்களில் மேற்கத்திய ஊடகங்கள் நடுநிலைத் தன்மையை இழந்துவிடுவதாக இந்தியா கருகிறது. "எந்தச் சூழலிலும் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கும் என்ற மேற்கத்திய நாடுகளின் எதிர்பார்ப்பு நிறைவேறப் போவதில்லை. இந்தியாவுக்கு அதன் தேச நலன் மட்டுமே முக்கியமானது," என்கிறார் முனைவர் தத்தா. இருப்பினும், இந்தியா-ரஷ்யா உறவுகள் குறித்தும், யுக்ரேன் மீதான போரை இந்தியா கண்டிக்கவில்லை என்பது குறித்தும் மேற்கத்திய நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்தியாவின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவை ஓரங்கட்டும் முயற்சிகளைச் சிக்கலாக்குவதாகக் கருதுகின்றனர். இந்தியா ரஷ்யாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டுவது, வர்த்தகம் மற்றும் ராணுவ ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, ரஷ்யாவின் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர வற்புறுத்தும் வகையில் சர்வதேச அளவில் அழுத்தம் தருவதற்கான பிரசாரங்களை குறைத்து மதிப்பிடுவது, போன்றவை மேற்கத்திய நாடுகளைக் கவலையடைய வைத்துள்ளது. இந்தியா ரஷ்யாவில் இருந்து அதிக அளவு எரிசக்தியை இறக்குமதி செய்கிறது. ஆனால் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை இந்தியா மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இது ஒரு சிக்கலான விவகாரம் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். மூலோபய நலன் மற்றும் எரிசக்திப் பாதுகாப்புக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்கத் தன்னுடைய திறனை நம்பியுள்ள அதே வேளையில், இந்தியா பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது. 2022-ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கிய பின், இந்தியா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்த கச்சாப்பொருட்களின் மதிப்பானது 13% அதிகரித்துள்ளது என்று, கச்சாப்பொருட்கள் இறக்குமதி தொடர்பாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் CREA (Centre for Research on Energy and Clean Air) வெளியிட்ட மதிப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2023-2024-ஆம் ஆண்டுகளில் இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தகம் சுமார் 5.3 லட்சம் கோடி இந்திய ரூபாயாக (64 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரித்துள்ளது. ஆனால், இதில் இந்தியாவின் பங்கானது வெறும் 33,400 கோடி இந்திய ரூபாய் (4 பில்லியன் டாலர்கள்) தான். யுக்ரேன் மீதான போருக்குப் பின், ரஷ்யா தற்போது பணக்கார நாடாக மாறியுள்ளது. அந்நாட்டின் கச்சாப்பொருட்களை இறக்குமதி செய்த சீனாவும் இந்தியாவும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் பரவலாகச் செய்தி வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் நிலைமை மாறும் என்கிறார் நிபுணர் ஒருவர். பொருளாதாரத் தடை பயனளிக்கிறதா? யுக்ரேன் மீதான போருக்குத் தேவையான நிதியைத் தடுத்து நிறுத்தும் வகையில் மேற்கத்திய நாடுகள் விதித்தப் பொருளாதாரத் தடை பயனளிக்கவில்லையா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கு வலுவான மறுப்பைப் பதிவு செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பொருளாதாரத் தடை இருந்த போதும், இந்தியாவைக் காட்டிலும், மேற்கத்திய நாடுகள் தான் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளன என்று குறிப்பிட்டார். "நீங்கள் ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதியைப் பற்றிப் பேச வேண்டுமெனில், முதலில் ஐரோப்பிய நாடுகளைக் கவனியுங்கள். எரிசக்தி பாதுகாப்பின் தேவையைக் கருதி நாங்கள் எரிசக்தி இறக்குமதி செய்கிறோம். ஆனால், ஐரோப்பிய நாடுகள் ஒருநாள் மதியம் இறக்குமதி செய்யும் கச்சாப் பொருட்களின் மதிப்பு, இந்திய இறக்குமதிகளின் ஒரு மாத இறக்குமதி மதிப்பைவிட அதிகம். இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார். பொருளாதாரத் தடை பயனளிக்காது என்று கருதும் எண்ணற்ற அமெரிக்க நிபுணர்களில் பேராசிரியர் ஸ்டீவும் ஒருவர். "பொருளாதாரத் தடை, வர்த்தகத்தில் இடையூறு போன்றவற்றை நான் எதிர்த்தேன். கொள்கை மற்றும் நடைமுறையில் எந்த இலக்கைக் கருத்தில் கொண்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதோ, அந்த இலக்கு அடையப்படவில்லை. எனவே, இந்தியாவின் கருத்து தான் என்னுடைய கருத்து," ,” என்கிறார். பேராசிரியர் ஜாஃபர்லாட் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார். "மேற்கிலுள்ள பலரும் வேறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர். பொருளாதாரத் தடைகள் செயல்படாததற்குக் காரணம், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான். குறிப்பாக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவியாக இருந்தன. இந்த நடைமுறை சர்ச்சைக்குரிய ஒன்றா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்," என்கிறார். தற்போது சாத்தியமானதாகத் தோன்றும் ஒரு அரசியல் நிகழ்வு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது. அது நடந்தால் என்ன நடக்கும்? ஃப்ரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்தியாவை எச்சரிக்கிறார். "அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்துமே மாறும். யுக்ரேன் மீதான ரஷ்யப் போர் முதல் அனைத்தில் இருந்தும் புதின் தப்பித்துவிடுவார். ஆனால், இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்? இமயமலை பிராந்திய ஒருமைப்பாட்டு விவகாரத்தில், இந்தியாவுக்குப் பாதகமான முடிவை சீனா எடுக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார். புதினின் கீழ் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாஸ்கோவுக்கு மோதியின் வருகை என்பது புதினின் காதுகளுக்கு இசையாக தான் இருக்கும். 2014-ஆம் ஆண்டு க்ரைமியாவைத் தன்னோடு இணைத்துக்கொண்டது, யுக்ரேன் மீது போர் தொடுத்தது, போன்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளால், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பொருளாதாரத் தடை மற்றும் அரசியல்சார் பின்னடைவுகளை ஏற்படுத்த வகை செய்தது. ஆனால் சீனா, இந்தியா, மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை எப்போதும் போல் வலுவாகப் பேணி வந்தது ரஷ்யா. இது மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளின் தாக்கங்களை குறைக்க உதவியது. மோதி உள்ளிட்ட தலைவர்கள் ரஷ்யாவின் தலைநகருக்குச் செல்வது ரஷ்யா, அல்லது புதின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் இல்லை என்கிறார் பேராசிரியர் ஸ்டீவ். "மோதியும் புதினும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது நல்லது. அரசியல் உறவுகள் இப்படித்தான் நடைபெறும்," என்று அவர் கூறினார் பேராசிரியர் ஜாஃபர்லாட், புதின் சர்வாதிகார அரசுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். "சர்வாதிகார ஆட்சியாளர்களிடம் இருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை. மாஸ்கோ, ஆப்பிரிக்க சர்வாதிகார நாடுகள், சீனா, இரான் போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவில் நீடிப்பது இதற்கு ஒரு உதாரணம். ஹங்கேரி மட்டும் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மாஸ்கோவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நாடு. அந்த ஒன்றியத்தில் சுதந்திரமற்ற நாடு அது. ஆனால் இந்தியா?" என்றும் கேள்வி எழுப்பினார் அவர். "ஜனநாயகத்தை நிராகரிப்பது போன்ற செயல்பாடுகளில் ஒருமித்த தொடர்புகளைக் கொண்டிருப்பதால் கூட இந்தியா ரஷ்யாவுடனான உறவை நீட்டிக்கலாம். மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உலகத்தின் தெற்கிலிருக்கும் நாடுகளின் தலைவராகவும், அதன் ஆதிக்கத்தை நிரூபிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியாகவும் இது இருக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா, ஹங்கேரி, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தகளை ஏற்படுத்திக் கொள்வது அமெரிக்கா விதித்த பொருளாதார ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்று பலரும் நம்புகின்றனர். மேலும் இந்நாடுகளின் ஒத்துழைப்பு யுக்ரேனில் போரை நீட்டிப்பதோடு, உலக அதிகார மட்டங்களை மாற்றியமைக்கிறது. மோதியின் ரஷ்யப் பயணம் புதினுக்குப் பெருமகிழ்ச்சியாகத்தான் இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c10lm1me562o
-
தீவிர வலதுசாரிகளின் ஆட்சியை கைப்பற்றும் கனவு கலைந்தது - பிரான்சில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி - எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் முட்டுக்கட்டை நிலை 08 JUL, 2024 | 02:57 PM பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றுள்ள போதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை தொடர்ந்து அங்கு அரசியல் முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி கூட்டணிக்கு 182 ஆசனங்கள் கிடைத்துள்ளன , ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சிக்கு 163 ஆசனங்கள் கிடைத்துள்ள அதேவேளை இம்முறை அதிகாரத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல்லிற்கு 143 ஆசனங்களே கிடைத்துள்ளன. முதல் சுற்று தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.எனினும் அவர்கள் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அச்சம் காரணமாக இடம்பெற்ற மூலோபாயரீதியிலான வாக்களிப்பின் காரணமாக அவர்கள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இடதுசாரிகள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள போதிலும் அவர்களிற்கு பெரும்பான்மை கிடைக்காததன் காரணமாக பிரான்ஸ் தனது எதிர்கால அரசாங்கம் தொடர்பில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கின்றது. இதேவேளை இடதுசாரிகளின் வெற்றியை அதன் ஆதரவாளர்கள் கொண்டாடிவரும் அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் வெளியிட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/187964
-
உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC) நடத்திய 2வது ஆண்டு சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாடு
08 JUL, 2024 | 05:57 PM உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC) 2ஆவது சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டை கடந்த ஜூன் 28ஆம், 29ஆம் திகதிகளில் சென்னையில் வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்மொழியின் தகவல் தொழில்நுட்பத்துறையில் (IT) முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திசைகளை ஆராய்வதற்காக முன்னணி அகாடமியன்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இம்மாநாடு ஒருங்கிணைத்தது. இம்மாநாடு உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவரான J. செல்வகுமாரின் உபசரிப்பு உரையுடன் தொடங்கியது. அவர், தமிழ் கலாசாரத்தை தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒருங்கிணைக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) மற்றும் ஐ.இ.டி-சென்னை செயலாளர் டாக்டர். ஆர். ராஜ்குமார் தொழில்நுட்பத்தின் மாற்றத்தை முன்னிறுத்திய சிறப்புரையை வழங்கினார். மாநாட்டின் முக்கிய விருந்தினர்களாக Dr. G. விஸ்வநாதன், நிறுவனர் VIT பல்கலைக்கழகம், Dr.R. வேல்ராஜ், துணைவேந்தர் - அண்ணா பல்கலைக்கழகம், சஞ்சய் குமார் IPS, ADGP-சைபர் குற்றப்பிரிவு, தமிழ்நாடு, மைக் முரளிதரன் தலைமை இயக்குநர், பஹ்வான் சைபர்டெக், க. சரவணகுமார், கொன்சுல் ஜெனரல் – மலேசியா கொன்சுலேட் ஜெனரல், செர்கி வி. ஆசாரோவ், ரஷ்ய கூட்டாட்சி கோன்சுல் ஜெனரல், டேவிட் எக்ல்ஸ்டன், தென்னிந்திய துணை கொன்சுல் ஜெனரல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிறைவு விழா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர். ஜி.வி. செல்வத்தின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த மாபெரும் விழாவில் பல முக்கிய தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் ஆர்வமூட்டும் பேச்சுக்களை வழங்கினர். • தொழில்நுட்பம் மனித குலத்திற்கு – AIயுடன் சவால்கள் மற்றும் நன்மைகள் : இந்த அமர்வு, களத்திலும் சமூகத்திலும் உள்ள செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை ஆராய்ந்தது. • LLM மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு : கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மெஷின் லெர்னிங் மொடல்களின் எதிர்காலம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். • இன்றைய தலைமுறையின் தொழில்நுட்ப துறையில் பெண்கள் முன்னணி : தொழில்நுட்பத்துறையில் பெண்களின் முக்கிய பங்களிப்புகளை சுட்டிக்காட்டியது. • சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்கும் முறை மற்றும் பாதுகாப்பு : VJ விக்னேஷ்காந்த் மற்றும் ஸ்ரீ ராம் ஆகியோர் பங்கேற்று, சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதின் நன்மைகள் மற்றும் ஆபத்துகளை ஆராய்ந்தனர். இந்நிகழ்வு சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் நவீனம், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கூட்டாக பணியாற்றுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் உறுதியை நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவான உலகத் தமிழ் வர்த்தக சங்கம் வலியுறுத்தியது. https://www.virakesari.lk/article/187979
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இதுவரை நடந்தது என்ன?- 8 முக்கியத் தகவல்கள் பட மூலாதாரம்,X- NAAMTAMILARORG/UDHAYSTALIN படக்குறிப்பு,பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 4 மணி நேரங்களுக்கு முன்னர் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 10) நடைபெற உள்ளது. இதற்காகத் தீவிரமாக நடைபெற்று வரும் பிரசாரம் இன்று (ஜூலை 😎 மாலையுடன் முடிகிறது. அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு, அக்கட்சியின் வாக்குகளைப் பெறப் பா.ம.க - நாம் தமிழர் கட்சி இடையே நிலவும் போட்டி, தேர்தல் சமயத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகப் பிரசாரம் செய்யாதது, அ.தி.மு.க இல்லாமல் மும்முனைப் போட்டி என பல விஷயங்கள் நடந்துள்ளன. எத்தனை வாக்காளர்கள்? கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின் படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007-ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறு சீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இரண்டு எம்.எல்.ஏ-க்களை இழந்த விக்கிரவாண்டி கடந்த 2011 தேர்தலே இத்தொகுதிக்கு முதல் தேர்தலாகும். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி (51.71% வாக்குகள்) அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க-வின் ராதாமணியை (41.93% வாக்குகள்) 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராதாமணி 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வம், தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை விட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டார். இம்முறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வனை விட 9,573 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவைச் சேர்ந்த புகழேந்தி வெற்றி பெற்றார். பட மூலாதாரம்,UDHAYSTALIN இடைத்தேர்தல் ஏன் நடைபெறுகிறது? விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் வேட்பாளர்கள் யார்? பட மூலாதாரம்,X/NAAMTAMILARORG இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியும் ஓமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியுள்ளது. அ.தி.மு.க இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது ஏன்? தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, [...] மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்தார். இந்த தேர்தல் தி.மு.க-வுக்கு ஏன் முக்கியம்? தி.மு.க-பா.ம.க-நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார். இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. 32,198 வாக்குகளைப் பெற்றது. அதிமுக வாக்குகளை பாமகவால் ஈர்க்க முடிந்தால் அது நிச்சயம் திமுகவுக்கு சவாலாக மாறும். ஆளும் தி.மு.க அரசின் நலத்திடங்களுக்கு மக்கள் என்ன மதிப்பெண் வழக்குவார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வலுவான அஸ்திரமாக எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளது. "கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும். ஆனால் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் அமையாது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். பட மூலாதாரம்,X/DRARAMADOSS அ.தி.மு.க வாக்குகள் யாருக்கு? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வாக்குகளை ஈர்க்க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான திமுக கூட முயற்சிகளை மேற்கொண்டது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி தி.மு.க தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்," என்று பேசினார். விக்கிரவாண்டியில் நடந்த பா.ம.க-வின் தேர்தல் பிரசார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மோதியுடன் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்ததும் சர்சையைக் கிளப்பியது. அதேபோல விக்கிரவாண்டியின் சாணிமேடு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார். விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "அ.தி.மு.க-வின் நிறுவனரான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவில் பொருளாளராக பதவி வகித்தவர். திமுக சார்பாக நின்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாங்கள் பாமக போல சாதியவாத, மதவாத கட்சி அல்ல. எனவே திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றும் அ.தி.மு.க தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் எங்களுக்குத் தான் கிடைக்கும்," எனக் கூறினார். இவ்வாறு தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று முதன்மை கட்சிகளும் அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளன. பட மூலாதாரம்,EDAPPADI PALANISWAMI/FACEBOOK பிரசாரத்தில் பங்கேற்காத பிரதான கட்சி தலைவர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாததால் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்யவில்லை. அதேபோல தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் நேரடியாக எவ்வித பிரசாரமும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வீடியோ வெளியிட்டு மட்டுமே ஆதரவு திரட்டினார். தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரு திராவிட கட்சிகளின் தலைவர்களுமே நேரடியாக பிரசாரம் செய்யாத தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cx7261047e9o
-
இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
அரச ஊழியர்களின் வேதனத்தை உயர்த்தினால் வரி அதிகரிக்கும்! தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் வேதன உயர்வை வழங்கினால், தற்போதுள்ள வற் வரியை உயர்த்த நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். தற்போதுள்ள 18% வற் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும், பொதுமக்களை நசுக்கி அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305527
-
கிளிவெட்டி கிணற்றில் யுவதியின் சடலம் : இதுவரை 7 பேர் கைது! ; காதலன் பொலிஸ் தடுப்புக் காவலில்!
08 JUL, 2024 | 04:43 PM மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (8) மூதூர் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நாளை வரை (9) பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (5) ஆறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமை (6) மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை அந்த ஆறு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பிரதான சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் நேற்றைய தினம் (7) மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை யுவதியின் காதலன், காதலனின் தந்தை, சகோதரி, அவரது வீட்டில் வேலை செய்தவர், ஜேசிபி வாகன சாரதிகள் இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற யுவதி காணாமல் போயிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (5) பாழடைந்த கிணறு ஒன்றில் கல்லோடு கட்டி போடப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதன்போது அவருடைய ஆவணங்கள் அடங்கிய கைப்பை, உடைந்த தலைக்கவசம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தன. இந்த சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது தலைப்பகுதி தாக்கப்பட்டு மண்டையோடு உடைந்திருந்ததாகவும், தலையின் பின்பகுதியில் பாரிய துளை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், காதலனின் வீட்டில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரும்புக்குழாய் உட்பட சில சான்றுப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். https://www.virakesari.lk/article/187972
-
ஐந்து பிரதமர்களை கண்ட லெரிக்கு வந்துள்ள புதிய பிரச்சினை!
பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக எண் 10 டவுனிங் தெருவுக்கு குடிபெயர்கிறார் . இங்கு பல ஆண்டுகளாக, பிரதம மந்திரிகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் டவுனிங் தெருவில் எப்போதும் குடியிருப்பாளராக இருக்கிறார் லெரி. அதாவது லெரி என்ற செல்லப் பூனை. ஐந்து பிரிட்டிஷ் பிரதமர்களுடன் வாழ லெரிக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. லெரி சந்திக்கும் ஆறாவது பிரதமர் ஸ்டார்மர் ஆவார். கடந்த 14 ஆண்டுகால அரசியல் எழுச்சியின் போது உறுதியாக இருந்த ஒரே ஒருவராக லெரியை பிரிட்டிஷ் ஊடகங்கள் சித்தரித்துள்ளன. லெரி ஜனவரி 13, 2007 இல் பிறந்தது. லெரிக்கு 17 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. லெரி தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரியுடன் பழகப் போவது இதுவே முதல் முறை. ரிஷி சுனக் பிரதமர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு அவரது அதிகாரபூர்வ செல்லப்பிராணியும் இல்லத்தை விட்டு வெளியேறிது , அச் செல்லப்பிராணி அவரது செல்ல நாய் நோவா, இல்லத்தை விட்டு நோவா வெளியேறியது. லெரிக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஏனெனில் நோவாவுக்கும் லெரிக்கும் ஒத்துப் போவதில்லை . இருப்பினும்,லெரிக்கு தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமருடன் புதிய செல்லப்பிராணியும் வருகிறது. பிரிட்டிஷ் ஊடகங்கள், லெரிக்கு செல்லப்பிராணியால் சவால் விடப்படும் என்றும், லெரியின் போட்டியாளராக மாறக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றன. இந்த செல்லப் பிராணி ஜோ ஜோ. ஜோ ஜோ லெரியைப் போலவே கொழுத்த பூனை. லெரிக்கும் ஜோ ஜோவுக்கும் சண்டை வரலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன . அதற்குக் காரணம், வேறு எந்தப் பூனையும் நம்பர் 10 டவுனிங் தெருவுக்கு அருகில் நடமாடுவதை லெரி விரும்புவதில்லை. ஜோ ஜோ லெரியால் தொந்தரவு செய்யப்பட்டால், ரிஷி போல லெரியும் நம்பர் 10 டவுனிங் தெருவை இழப்பது உறுதி என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/305457
-
இலங்கையின் கல்வி முறைகளில் மாற்றம் : ஜனாதிபதி!
இலங்கையிலுள்ள மத்திய கல்லூரிகள் மற்றும் தேசியப் பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி ஹால் டி கோல் விடுதியில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தற்போது உலகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது அதற்கமைய, இலங்கையின் கல்வி முறையும் நவீனத் தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது. இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சி தேவைப்படும் அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305476
-
வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரினால் பல மில்லியன் டொலர் வருமானம்
இளைஞர் வேளாண் தொழில்முனைவோர் கிராமம் திட்டத்தின் கீழ் வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரை சேகரித்து ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றினை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரின் ஒரு லீற்றரின் கொள்வனவு விலை 18 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு லீற்றர் தேங்காய் நீர் 14 ரூபாவாகக் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், தேங்காய் நீரின் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் கொள்வனவு விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல மில்லியன் டொலர் வருமானம் இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 13,348 மெற்றிக் தொன் தேங்காய் நீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 11.16 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு (2023) இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய் நீரின் அளவு 11,365 மெற்றிக் தொன் ஆகும். இதற்கமைய, ஒரு தேங்காயில் 250 முதல் 300 மில்லி மீற்றர் வரை தண்ணீர் உள்ளதுடன், மிகச்சிறிய தேங்காயில் சுமார் 150 மில்லி மீற்றர் தேங்காய் தண்ணீர் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தேங்காய் நீரின் செறிவு இந்தோனேசியாவில் தென்னையில் காணப்படும் தேங்காய் நீரை விட இலங்கையில் தேங்காய் நீரின் செறிவு அதிகமாக இருப்பதாகவும் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். மழைக்காலத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் எனவும், வறட்சி காலத்தில் உற்பத்தி குறைவதாகவும் அவர் கூறியுள்ளார். https://tamilwin.com/article/multi-million-dollar-income-from-coconut-water-1720401188
-
கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்கு உணவுப் பொருட்கள்!
மலையக பெருந்தோட்டங்களில் உள்ள 3,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப் பொருட்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நேற்று (06) இடம் பெற்ற கூடத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார். சுமார் 1,500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள காலை உணவு வழங்கும் புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஊடாக இவை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305474
-
யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் பொறுப்பற்ற பதிலால் குழப்பம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிந்த போதும் அவர்களை கைது செய்ய முடியவில்லை என யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது. இதன்போது, ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்தி குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் இந்நிலையில், யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், "எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை" என பதிலளித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் முகமாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், ”பொலிஸார் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும்?" இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது. அவர்கள் இங்கே தான் இருக்க வேண்டும். அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? உங்களுக்கு கீழே தான் கணினி குற்ற புலனாய்வு (சைபர் கிரைம்) இயங்குகிறது. அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம செயலாளரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். கைது நடவடிக்கை இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் பொலிஸாரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை? 'ஆப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்' என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில்” என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், "பொலிஸார் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அப்படியாயின் பொலிஸ் திணைக்களம் ஏன் இயங்குகிறது? வாள்வெட்டு கும்பல்கள் தொடர்பில் நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது. சம்பவம் இடம்பெற்று இவ்வளவு நாட்கள் தாண்டியும் ஏன் எவரையும் கைது செய்யவில்லை. ஆட்களை தெரியும் கைது செய்ய முடியாது என்று கூறுவது பொலிஸ் தரப்பின் மீதே சந்தேகத்தை ஏற்படடுத்துகின்றது” என கூறியுள்ளார். https://tamilwin.com/article/sword-incidents-have-increased-in-jaffna-1720416746
-
ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அறிவித்தார் பசில்!
நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் கட்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயற்படும் போதெல்லாம், எவ்வித பயமுமின்றியே ஜனாதிபதிக்கு உதவி செய்தோம். அதேபோன்று எங்களுக்கு அச்சமும் இல்லை, கடனும் இல்லை என்பதை நாங்கள் பெருமிதத்துடன் கூறுகிறோம். எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் அந்த நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றும் திறன் உங்களிடம் உள்ளது என்று முடிவு செய்தோம், நாங்கள் இன்று வரை அந்த ஆதரவை வழங்குகின்றோம். எதிர்காலத்திலும் வழங்குவோம். இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்” என்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், சவால்களை ஏற்றுக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைமைத்துவத்துடன் மக்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/305452
-
இந்த வருடம் இனி சம்பள அதிகரிப்பு இல்லை – ஜனாதிபதி!
அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெல்லவாய பொது மைதானத்தில் (06) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாரு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/305450