Everything posted by ஏராளன்
-
புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸுக்கு அழைப்பு
05 JUL, 2024 | 05:58 PM புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (05) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டபோது, இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடு காரணமாக பாதிக்கப்படும் தங்களுடைய வாழ்வாதாரம் தொடர்பாக போதிய கரிசனை வெளிப்படுத்தப்படுவதில்லை என்ற ஆதங்கத்தினை வெளிப்படுத்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த போது கூட தமிழ் மக்களின் பிரதிநிதிகளினால் கடற்றொழிலாளர் விவகாரம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தனர். இந்நிலையிலேயே தனக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் கடற்றொழிலாளர் விவகாரம் விரிவாக பேசப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் காணப்படும் போதைப் பொருள் பரவல் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தல், வீதி விபத்துக்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதேபோன்று, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களை ஆராய்ந்து சரியானவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. குறிப்பாக, சட்டத்துக்கு முரணான வகையில் சுண்ணக்கல் அகழப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனால் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களில் உண்மை இல்லை என்பதை கள விஜயங்கள் மூலம் உறுதிப்படுத்துவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுண்ணக்கல் அகழ்வு என்பது ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக இருக்கின்ற நிலையில், உரிய நியமங்களின் அடிப்படையில் சுண்ணக்கல் அகழ்வினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். அதேவேளை, அகழப்படுகின்ற சுண்ணக்கல், வர்த்தக நோக்கோடு வெளி மாவட்டங்களுக்கு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுகின்ற பட்சத்தில் அவற்றுக்கான அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதற்கான பொறிமுறையை, சட்ட ஏற்பாடுகளை விரிவாக ஆராய்ந்து, அதற்கேற்ப உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாகாண திணைக்களங்களின் பிரதானிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/187781
-
யாழ். பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
05 JUL, 2024 | 06:55 PM யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார இன்று வெள்ளிக்கிழமை (05) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற நிகழ்வில் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். இதுவரை யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஜகத் விசாந்த பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுச் சென்றமையால் அவருடைய பதவிக்கு சூரிய பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/187778
-
தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB படக்குறிப்பு,ஆர்ம்ஸ்ட்ராங் 48 நிமிடங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, இன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். உடனிருந்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். எடப்பாடி பழனிசாமி விமர்சனம் படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி மொத்தம் ஆறு பேர் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்துள்ள காவல்துறை, தனிப்படை அமைத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க செம்பியம், பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாகக் குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்" என எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,@EPSTAMILNADU சென்னையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவ்ல் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்களுடன் உள்ளன. நம் சமூகத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது." மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைத்து விட்டு, மு.க.ஸ்டாலின் மாநில முதலமைச்சராகத் தொடரும் தார்மீகப் பொறுப்பு அவருக்கு இருக்கிறதா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்," என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சேலத்தில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு கட்சியின் மாநிலத் தலைவரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cq5x0w1ply9o
-
உத்தியோகபூர்வமாக பிரிட்டனின் பிரதமரானார் கெய்ர் ஸ்டர்மெர்
பிரிட்டனின் அடுத்த பிரதமர் கியர் ஸ்டாமர் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,“உழைப்பாளி வர்க்கப் பின்னணி" கொண்டவர் என்று கூறிக் கொள்பவர் கியர் ஸ்டாமர். 5 ஜூலை 2024, 05:24 GMT புதுப்பிக்கப்பட்டது 5 ஜூலை 2024, 06:34 GMT கியர் ஸ்டாமர் பற்றிய முக்கியத் தகவல்கள் வயது : 61 கல்வி : ரெய்கேட் கிராமர் பள்ளி, லீட்ஸ் பல்கலைகழகம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம். குடும்பம் : பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் பணியிட சிக்கல்களுக்கான மனநல ஆலோசகரான விக்டோரியா அலெக்ஸாண்டரை திருமணம் செய்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாடாளுமன்ற தொகுதி : 2015ம் ஆண்டு முதல் ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் கியர் ஸ்டாமர் யார்? தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டாமர் அடிக்கடி தன்னை, “உழைப்பாளி வர்க்கப் பின்னணி" கொண்டவர் என்று கூறிக் கொள்பவர். அவர் வளர்ந்து வந்த ஆக்ஸ்டட், சர்ரே என்ற சிறு நகரத்தில் உள்ள “pebble-dash semi” எனப்படும் சாதாரண வீடுகளை அடிக்கடி குறிப்பிடுவார். அவரது தந்தை தொழிற்சாலைகளுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். அவரது தாய் செவிலியராக பணிபுரிந்தார். அவரது தாய் ‘ஸ்டில்ஸ்’ என்ற உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியே உடலை தாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவரால் பேசவும் நடக்காமலும் போய்விட்டது. கியர் ஸ்டாமர் பயின்று வந்த ரெய்கேட் கிராமர் பள்ளி, அவர் அங்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் நிர்வாகத்துக்கு மாறிவிட்டது. அவருக்கு 16 வயது ஆகும் வரை உள்ளூர் நிர்வாகம்தான் அவரது கல்விக் கட்டணத்தை செலுத்தியது. பள்ளிப்படிப்பு முடித்து பல்கலைக் கழத்துக்கு செல்லும் தனது குடும்பத்தின் முதல் நபரானார் கியர் ஸ்டாமர். லீட்ஸ் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார், பின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மேற்படிப்பு முடித்தார். 1987-இல் அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றார் (வழக்கறிஞர்). மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணராகி வந்தார். கரீபியன், ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளுக்காக வாதாடினார். 1990களின் இரண்டாவது பாதியில், 'மெக் லைபல்' செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக கட்டணமின்றி வாதாடினார். 'மெக் லைபல்' செயற்பாட்டாளர்கள் மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் . 2008-ல் பிரிட்டன் மற்றும் வேல்ஸ்-ல் அரசு வழக்கறிஞர்களுக்கான இயக்குநர் என்ற பொறுப்பை பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பள்ளிப்படிப்பு முடித்து பல்கலைக் கழத்துக்கு சென்ற தனது குடும்பத்தின் முதல் நபர் கியர் ஸ்டாமர். அவர் அதிகாரத்தை நெருங்கியது எப்படி? அவர் 2015-இல் வடக்கு லண்டனில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு நெருக்கமாக இருந்த கியர் ஸ்டாமர், அவரது நிழல் அமைச்சரவையில் பிரெக்சிட் அமைச்சராக இருந்தார். இரண்டாவது முறையாக பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர்களின் கட்சி படுதோல்வி அடைந்தது. அதையடுத்து, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றார். அப்போது உரையாற்றிய அவர், தொழிலாளர் கட்சியை, “நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட புதிய சகாப்தத்துக்கு இட்டுச் செல்வேன்” என்று உறுதி அளித்தார். கியர் ஸ்டாமர் கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் என்ன? கியர் ஸ்டாமர் வழங்கியுள்ள முக்கிய வாக்குறுதிகள்: சுகாதாரம் : ஒவ்வொரு வாரமும் 40 ஆயிரம் கூடுதல் பார்வை நேரங்களை (Appointments) அளித்து தேசிய சுகாதார சேவையின் காத்திருப்பு நேரத்தை குறைப்பது (பிரிட்டனில் மருத்துவரை காண்பதற்கு சில வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்). குடியேற்றம்: எல்லைப் பாதுகாப்புக் கவுன்சில் அமைத்து, சிறிய படகுகள் மூலம் எல்லை தாண்டி மக்களை கடத்தும் குழுக்களை தடுப்பது. வீட்டு வசதி : திட்டமிடல் சட்டங்களை திருத்தி, புதிதாக 15 லட்சம் வீடுகளை கட்டுவது. புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு, சில முன்னுரிமைகள் வழங்குவது. கல்வி : தனியார் பள்ளிகளுக்கு வரி செலுத்தாக் காலத்தை ரத்து செய்து விட்டு, 6500 ஆசிரியர்களை புதிதாக பணியமர்த்துவது. தனது கொள்கை மாற்றத்தின் ஒரு பகுதியாக, பல்கலைகழக கட்டணத்தை ரத்து செய்வது, எரிசக்தி மற்றும் தண்ணீர் நிறுவனங்களை தேசியமாக்குவது என்ற வாக்குறுதிகளை கைவிட்டார். அவரது கட்சியில் இடதுசாரி கருத்துள்ளவர்கள், அவர் துரோகம் செய்து விட்டதாக விமர்சித்தனர். கடைசியாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சிக்கு 205 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் . https://www.bbc.com/tamil/articles/cydv4zpl611o
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் - அங்கஜன் இராமநாதன் 05 JUL, 2024 | 06:52 PM சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், தகுதி நிலை வைத்தியர்கள் தமது பணிகளை இடையூறின்றி செய்ய உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (05) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பதில் வைத்திய அத்தியட்சகராக மத்திய சுகாதார அமைச்சினால் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் நிர்வாக திறமையானவர் நியமிக்கப்பட்டமையால் நிர்வாக தரம் அற்ற ஏனையவர்கள்தான் இந்த குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதையும் ஆராய வேண்டும் என தெரிவித்தார். இதன்போது ஆளுநர் கடந்த காலத்தின் நிர்வாக தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இம்முறை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி விபரங்களை தெரியப்படுத்துவதாக குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/187780
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
பிரித்தானிய தேர்தலில் சாதனை படைத்த ஈழத்தமிழ் பெண்! பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரன், ஸ்ராட்போட் மற்றும் பௌவ் (Stratford and Bow) தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொழிற்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கமைய அவர் 44.1 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவாகியுள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். https://thinakkural.lk/article/305326
-
உத்தியோகபூர்வமாக பிரிட்டனின் பிரதமரானார் கெய்ர் ஸ்டர்மெர்
05 JUL, 2024 | 05:08 PM தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டர்மெர் இங்கிலாந்தின் புதிய பிரதமராகியுள்ளார். மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராகியுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் அவர் டவுனிங் வீதியிலிருந்து பிரிட்டன் மக்களிற்கு உரையாற்றுவார். முன்னதாக மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் ரிசி சுனாக் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். https://www.virakesari.lk/article/187773
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதத்தில் வாக்காளர்களை அணுகுகிறார்கள். ஆனால், களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது? விழுப்புரம் மாவட்டத்தில் விரிந்து பரந்து கிடக்கும் தொகுதிகளில் ஒன்று விக்கிரவாண்டி. இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களும் உள்ளடங்கிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியிருக்கிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் கிராமப்புற பகுதிகளே அதிகம் என்பதால், நகரங்களில் நடக்கும் தேர்தல்களைப் போலன்றி, வீட்டுச் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் சின்னங்கள், ஆங்காங்கே கட்சிக் கொடிகள் என தேர்தலுக்கான எல்லா அம்சங்களுடனும் பரபரப்பாக இருக்கிறது விக்கிரவாண்டி. கடந்த 2007ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக, இந்தத் தொகுதியின் பெரும்பகுதிகள் கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதியாக இருந்தன. இந்தத் தொகுதி உருவான பிறகு இதுவரை இங்கே நான்கு தேர்தல்கள் நடந்திருக்கின்றன. 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2016, 2021 தேர்தல்களில் திமுகவும் 2019இல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவும் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கடந்த 2021இல் வெற்றி பெற்ற திமுகவின் நா. புகழேந்தி, சமீபத்தில் காலமான நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒரு இடைத் தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி. சுமார் 2,35,000 வாக்காளர்களைக் கொண்டிருக்கும் இந்தத் தொகுதியில் கடந்த முறை சுமார் 49 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் திமுக வேட்பாளரான நா. புகழேந்தி. அதற்கு அடுத்ததாக அதிமுகவின் வேட்பாளரான ஆர். முத்தமிழ் செல்வன் சுமார் 44 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால், இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துவிட்டது. அதன் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவும் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. இந்தத் தொகுதியில் பெரும் எண்ணிக்கையில் சமூகரீதியில் வன்னியரும் அதற்கு அடுத்தபடியாக பட்டியலினத்தவரும் அதற்கு அடுத்தபடியாக பிற இடைநிலை சாதியினரும் வசிக்கிறார்கள். இந்த முறை பிரதானமான மூன்று கட்சிகளுமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றன. திமுக சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர்கள் அணியின் செயலாளரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகமும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுயேச்சைகளும் களத்தில் நிற்கிறார்கள். மொத்தமாக 29 பேர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஜூலை 10ஆம் தேதி இங்கே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அடிப்படையில், விவசாயத்தை மையமாகக் கொண்ட தொகுதி விக்கிரவாண்டி. ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் அரிசி வர்த்தகம் நடந்த பகுதி இது. தற்போது அரிசி வர்த்தகம் குறைந்திருந்தாலும் விவசாயம், இங்குள்ள கடைத் தெருவில் நடக்கும் வர்த்தகத்தை மையமாக வைத்தே இந்தப் பகுதியின் பொருளாதாரம் இயங்கி வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியின் தேவைகள் என்ன? இந்தப் பகுதி பெரிதும் கிராமப்புறங்களைக் கொண்ட பகுதி என்பதால், சில இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்கின்றன. "அத்தியூர் திருக்கைக்கு அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றுகூட இல்லை. ஒன்று ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள புதுக்கருவாட்சிக்கு போக வேண்டும். இல்லாவிட்டால், கெடாருக்குச் செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை. வரும் சட்டமன்ற உறுப்பினர் இங்கிருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தையும் மேம்படுத்தித் தர வேண்டும்" என்கிறார் அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த வீரமணி. அதேபோல, இப்பகுதியில் பெரிய தொழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் சிறிய சிப்காட் ஒன்றை உருவாக்கி, தொழிற்சாலைகள் ஏதும் வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் விக்கிரவாண்டி டவுனை சேர்ந்த பிரகாஷ். அதேபோல, இங்கிருக்கும் பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார் அவர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு நகரங்களுக்கும் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது விக்கிரவாண்டி. ஒரு காலத்தில் தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான முக்கிய நிறுத்தமாக இந்தப் பகுதி இருந்தது. ஆனால், நான்கு வழிச்சாலை வந்த பிறகு, தென் தமிழகத்தை நோக்கிச் செல்லும் பேருந்துகளும் அங்கிருந்து சென்னையை நோக்கி வரும் பேருந்துகளும் தங்கள் ஊரில் நின்று செல்வதில்லை என்ற குறையை இப்பகுதியைச் சேர்ந்த எல்லோருமே சொல்கிறார்கள். "சென்னையிலிருந்து வரும் பேருந்துகள் விக்கிரவாண்டிக்கு அருகில் நிற்காமல் ஊரைத் தாண்டிச் சென்று சுங்கச்சாவடியில்தான் நிற்கின்றன. விக்கிரவாண்டிக்கு என டிக்கெட்டும் கொடுப்பதில்லை. விழுப்புரத்திற்குத்தான் டிக்கெட் கொடுக்கிறார்கள். அதேபோல, சென்னையை நோக்கி வரும் பேருந்துகளும் டோல்கேட்டில் ஆட்களை இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றன. முத்தமிழ்ச்செல்வன், ராதாமணி, புகழேந்தி, எம்.பி. ரவிக்குமார் என எல்லோரிடமும் மனு கொடுத்துவிட்டோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. தினமும் சில பேருந்துகளாவது விக்கிரவாண்டியில் நின்று செல்லும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்," என்கிறார் விக்கிரவாண்டி வர்த்தகர் சங்கத்தின் பொருளாளர் சாதிக் பாட்சா. திமுகவின் இடைத்தேர்தல் வியூகம் என்ன? ஆளும்கட்சி என்பதால் இந்தத் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனத் தீவிர முனைப்புடன் களத்தில் இறங்கியிருக்கிறது திமுக. இந்தத் தொகுதியில் பிரசாரம் செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லவில்லையென்றாலும் பொன்முடி, கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, தாமோ அன்பரசன், வி.சி. கணேசன், அன்பில் மகேஷ், எஸ்.எஸ். சிவசங்கர் என ஒன்பது அமைச்சர்கள் இந்தத் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர களப்பணியில் இறங்கியிருக்கின்றனர். பிரசாரம் முடிவடையும் கடைசி இரு நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயத்தின் காரணமாக 65 பேர் உயிரிழந்தது இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், தற்போதைய அரசின் நலத்திட்ட உதவிகளை மையமாக வைத்து தேர்தலைச் சந்திக்கிறது திமுக. அக்கட்சியின் வேட்பாளரான அன்னியூர் சிவாவுக்கு தொகுதிக்குள் நல்ல அறிமுகம் இருப்பது, அந்தக் கட்சிக்குக் கூடுதல் பலமாக இருக்கிறது. இதனால், அமைச்சர்கள் சகிதம், உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் சிவா. "கட்சியினுடைய சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன். இந்தத் தொகுதியின் வாக்காளர்களுக்கு நெருங்கிய உறவினராக இருப்பவன். அதனால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் சிவா. கள்ளச்சாராய விவகாரம் தேர்தலில் எதிரொலிக்காது என நம்புகிறார் அவர். "கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டப் பேரவையிலேயே விளக்கம் கொடுத்துவிட்டார் முதலமைச்சர். அது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான். இனிமேல் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகப் புதிய சட்டங்களையும் சட்டப் பேரவையில் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். ஆகவே அது தேர்தலில் எதிரொலிக்காது" என்கிறார் சிவா. பொதுவாகவே இந்தத் தொகுதியில் திமுக வலுவாக இருப்பதும் அமைச்சர்கள் வரிந்துகட்டி வேலை பார்ப்பதும் திமுகவை கரை சேர்த்துவிடும் என நம்புகிறார்கள் கட்சிக்காரர்கள். கடும் போட்டியைக் கொடுக்க நினைக்கும் பாமக படக்குறிப்பு,பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சி. அன்புமணி ஆனால், தொகுதியில் திமுகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க நினைக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றுகாட்ட நினைக்கிறது. மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்காமல் இருப்பதன் மூலம் திமுக வன்னியர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்தும் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது பாமக. அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் சி. அன்புமணி, ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர். "இரு முறை திமுக வெற்றிபெற்ற தொகுதி இது. ஆனால் தொகுதியின் எந்தப் பகுதியிலும் சாலைகளும் சாக்கடை வசதிகளும் சரியாக இல்லை. நாங்கள் வெற்றி பெற்று வந்தால் போராடி, இதையெல்லாம் தீர்ப்போம். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்," என்கிறார் அன்புமணி. இவருக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகள் இணைந்து பணியாற்றுவது இவருக்குப் பலமாக இருக்கிறது. கூட்டணியின் எல்லாத் தலைவர்களும் இணைந்து மிகப் பெரிய பிரசாரப் பொதுக் கூட்டத்தையும் வியாழக்கிழமையன்று நடத்தி முடித்திருப்பதால் தெம்பாக இருக்கிறார் அன்புமணி. முத்திரையைப் பதிக்க முயலும் நாம் தமிழர் படக்குறிப்பு,நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபிநயா, மிகப்பெரிய தொண்டர் படையுடன் ஒவ்வொரு குக்கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். வாகனத்தில் இருந்தபடியே பேசாமல், இறங்கிச் சென்று மக்களிடம் பேசுகிறார். மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, சுயவேலை வாய்ப்பை வழங்குவதாகச் சொல்லி வாக்கு கேட்கிறார் அபிநயா. நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தியிருக்கும் நாம் தமிழர் கட்சி, விக்கிரவாண்டி தொகுதியில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதிக்க நினைக்கிறது. அதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்கிறது அக்கட்சி. இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் அக்கூட்டணியில் இருந்த தேமுதிகவும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் திமுக கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார். இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக 32,198 வாக்குகளைப் பெற்றது. இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்திருப்பதால் அதிமுக பெற்ற சுமார் 65 ஆயிரம் வாக்குகளை நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய இரண்டுமே குறிவைத்துள்ளன. இந்தச் சூழல் தங்களுக்குச் சாதகமானது என பாமக கருதுகிறது. இந்த முறை திமுகவுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும்தான் நேரடிப் போட்டி என்பதால், திமுக எதிர்ப்பு வாக்குகளான அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கே திரும்பும் என அக்கட்சி கருதுகிறது. படக்குறிப்பு,இங்குள்ள பெரிய ஏரியைத் தூர்வார வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக விக்கிரவாண்டி மக்கள் வைக்கிறார்கள் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாமக, அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டன. அப்போது அந்தக் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். "கடந்த 2019இல் நாங்கள் இணைந்துதான் அதிமுகவின் முத்தமிழ்செல்வனை வெற்றிபெற வைத்தோம். அவர்கள் தேர்தலைப் புறக்கணித்தாலும் நாங்கள் நண்பர்கள்தான். ஆகவே அதிமுகவின் முழு வாக்கும் எங்களுக்குத்தான் கிடைக்கும். ஆகவே நான் வெற்றி பெறுவது சாதாரண விஷயம்" என்கிறார் அன்புமணி. மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சியும் அதே நம்பிக்கையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் வெறும் எட்டாயிரத்து இருநூறு வாக்குகளையே பெற்றிருந்தாலும் இந்த முறை அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என நம்புகிறது அந்தக் கட்சி. "யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை எடப்பாடி கே. பழனிச்சாமி மறைமுகமாகச் சொல்லிவிட்டார். அது எங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதிமுக போட்டியிடாததால் இவர்களுக்குப் போட்டுவிட்டுப் போகலாம் எனப் பலர் நினைக்கிறார்கள். நாங்களும் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாத நிலையில், எங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கேட்கிறோம். அந்தக் கட்சிக்காரர்களே இரட்டை இலை நிற்காததால் மைக்கிற்கு வாக்களிப்போம் என்று சொல்கிறார்கள்" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அபிநயா. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சட்டமன்றத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்றாலும் மூன்று கட்சிகளுமே வெவ்வேறு காரணங்களுக்காக இந்தத் தேர்தலை முக்கியமாகக் கருதுகின்றன. ஆகவே, தொகுதிக்குள் அனல் பறக்கிறது. https://www.bbc.com/tamil/articles/ckrgz2xlr7zo
-
உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு
இறந்த பெண்ணை உயிர்த்தெழ செய்ததாக மோசடி: போலே பாபா மீது தொடரும் சர்ச்சைகள் 05 JUL, 2024 | 12:05 PM லக்னோ: உபி.யின் காஸ்கன்ச் மாவட்டம் பட்டியாலில் கிராமத்தை சேர்ந்த போலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உ.பி. காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்தவர் கடைசியாக உளவுப் பிரிவில் பணியாற்றியுள்ளார். அப்போது, 1997-ல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தகுந்த ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். கைது நடவடிக்கை காரணமாக சூரஜ் பால் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறி வருகிறார். விடுதலைக்கு பிறகு தனது பெயரை சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து காஸ்கன்ச்சில் ஆசிரமம் தொடங்கி பிரசங்க கூட்டங்கள் நடத்தத் தொடங்கினார். தற்போது இவருக்கு வட இந்தியாவில் பல லட்சம்பக்தர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. பாபாவான பிறகு ஆக்ராவில் 2000-ம் ஆண்டில் ஒரு கூட்டம் நடத்தினார். இதில் உடல்நலம் குன்றி இறந்ததாக தனது வளர்ப்புப் பெண்ணை வைத்து கூட்டத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். தன்மகிமையால் அப்பெண் உயிர்ந்தெழுந்ததாக பொதுமக்களை நம்பவைத்துள்ளார். பிறகு இந்தப் பெண்ணை ஆக்ராவில் ஒரு சுடுகாட்டில் எரிக்க முயன்றபோது பிடிபட்டுள்ளார். பாபாவுடன் சேர்த்து 7 பேரை ஆக்ரா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு இந்த வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என பாபா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் சில வருடங்கள் ஆக்ரா பகுதியில் இவர் கூட்டங்களை நடத்தவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் பலர் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக பாபா கூறுவதுண்டு. இவரது பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கடந்த வருடம் ஜனவரி 3-ல் வந்துள்ளார். இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்த அகிலேஷ், “போலே பாபா சர்வதேச சமூகத்தாலும் பாராட்டத் தகுதியானவர்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோதும் பாபாவின் செல்வாக்கு ஓங்கி வளர்ந்துள்ளது. அவரது ஆட்சிக்காலங்களில் பாபா சிவப்பு விளக்கு வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வலம்வந்துள்ளார். பாபாவும் மாயாவதியின் ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவர் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/187734
-
கனடா இராணுவ தளபதியாக பெண் நியமனம்
வரலாற்றில் முதல்முறையாக கனடா இராணுவ தளபதியாக பெண் நியமனம் கனடாவின் இராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய இராணுவ தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக இராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார். 2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கனடா படைகளை வழிநடத்திய ஜென்னி கரிக்னன், 2019 முதல் 2020-ம் ஆண்டு வரை, ‘நேட்டோ மிஷன் ஈராக்’கை வழிநடத்தினார். https://thinakkural.lk/article/305289
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்; முன்னாள் நகர சபை உறுப்பினர் கிஷோர் கைது Published By: DIGITAL DESK 3 05 JUL, 2024 | 05:20 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் இன்று வெள்ளிக்கிழமை (05) சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருவது, அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சில வைத்தியசாலைகளில் நோயாளிகளின் நலன் கருதி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றி இருந்தது. இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிபுரியும் வைத்தியர்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்றைய தினமும் இன்றைய தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லுகின்ற நோயாளிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. இதனால் தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று முற்பகல் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர். இதனையடுத்து அங்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அகற்ற முற்பட்டனர். இதன்போது அமைதியான முறையில் நாங்கள் மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரிக்கை முன்வைக்கவே எந்தவித இடையூறுகளும் செய்யாமல் இருக்கின்றோம். ஆகவே எம்மை கலைந்து செல்லுமாறு கூற முடியாது என்று தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை அங்கிருந்த சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜிக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக விரைந்த மனித உரிமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்தி இணைப்பாளர் பொதுமக்களோடும் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் கலந்துரையாடியதோடு உடனடியாகவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினரையும் பார்வையிட்டார். இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/187772
-
ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்
சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள் பட மூலாதாரம்,SAMANTHA RUTH PRABHU/INSTAGRAM 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுவாசக் குழாய் தொடர்பான நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்க, "நடைமுறையில் உள்ள நவீன மருத்துவ சிகிச்சைகளுக்குப் பதிலாக மாற்று அணுகுமுறையைத் தேர்வு செய்யுங்கள்" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றைப் பதிவு செய்து, நடிகை சமந்தா சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கியமான நடிகையாக அறியப்படும் சமந்தா ரூத்பிரபு, ஜூலை 4ஆம் தேதியன்று, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்டோரியில், "சுவாசத் தொற்றுகளுக்கு நவீன மருந்துகளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக மாற்று அணுகுமுறையைத் தேர்வு செய்யுங்கள்" என்று பரிந்துரை செய்துள்ளார். அது மட்டுமின்றி, "உதாரணமாக ஹைட்ரஜன் பெரோக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீரை நெபுலைசரில் செலுத்திப் பயன்படுத்தலாம். எனக்கு இதுவொரு மாயாஜலம் போலச் செயல்படுகிறது. தேவையற்ற மருந்து பயன்பாட்டைத் தவிர்க்கவும்," எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மாற்று சிகிச்சையைப் பரிந்துரைத்த மருத்துவர் மித்ரா பாசு சில்லாரையும் அந்தப் பதிவில் டேக் செய்திருந்தார். நடிகை சமந்தாவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். அவரது இந்தப் பரிந்துரையைக் கண்டித்தும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிட்டும் வல்லுநர்கள் பதிவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தனது பதிவுக்கு விளக்கமளித்துள்ள சமந்தா மாற்று மருத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு இதை மேலோட்டமாகப் பரிந்துரை மட்டுமே செய்ததாக குறிப்பிட்டுள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சமந்தாவின் இந்தப் பதிவு மருத்துவ நிபுணர்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. மருத்துவர் சிரியக் ஆபி பிலிப்ஸ், சமந்தாவின் இந்தப் பதிவுக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். டிவிட்டரில் பலராலும் 'தி லிவர் டாக்டர்' என அறியப்படும் அவர், "சுகாதாரம் மற்றும் அறிவியல் பற்றிப் போதுமான கல்வியறிவு இல்லாத இந்திய நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடரும் லட்சக்கணக்கான மக்களை, வைரல் தொற்றுகளுக்கு ஹைட்ரஜன் பெரோக்ஸைடை சுவாசிக்க அறிவுறுத்துகிறார்," என்று குறிப்பிட்டு ஹைட்ரஜன் பெராக்ஸைட் வாயுவை சுவாசிப்பது மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிப்பதாகவும் கூறியுள்ளார். பட மூலாதாரம்,SCREEN GRAB/X மேலும், "பகுத்தறிவு மற்றும் அறிவியல் ரீதியாக வளர்ந்த சமூகம் என்றால் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவுக்கும் வகையில் செயல்பட்ட இவர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்திருப்பார்கள் அல்லது சிறையில் அடைத்திருப்பார்கள்," என்றும் காட்டமாகப் பதிவிட்டிருந்த சிரியக், சமந்தாவுக்கு உதவியும், நல்ல ஆலோசகரும் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். "சமூக ஊடகங்களில் இதுபோன்று மருத்துவம் தொடர்பாகப் பதிவிட்டு மக்களின் சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நபர்கள் மீது ஏதேனும் நடவடிக்கையை இந்திய சுகாதாரத்துறை மேற்கொள்ளுமா?" என்ற கேள்வியையும் சிரியக் எழுப்பினார். சமந்தாவின் பதில் பட மூலாதாரம்,SCREEN GRAB/INSTAGRAM படக்குறிப்பு,மருத்துவர் சிரியர்க்கின் பதிவைத் தொடர்ந்து மூன்று பக்கத்தில் சமந்தா தனது பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார் மாற்று மருத்துவத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பதாக சிரியக்கின் விமர்சனத்துக்குப் பதிலளித்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதிலிருந்து கற்றுக்கொண்டு அவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வருவதாகவும் கூறினார். "நவீன மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளைக் காட்டிலும் இத்தகைய மாற்று சிகிச்சைகளுக்குக் குறைவாகவே செலவாகிறது," என்றும் சமந்தா கூறியுள்ளார். இருப்பினும் இதுபோன்ற சிகிச்சை முறைகளுக்கு முழுமையான ஆதரவை அவர் அளிக்கவில்லை என்றும், மக்களுக்குப் பயனளிக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே இதை மேலோட்டமாகப் பரிந்துரை செய்ததாகவும் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். "ஹைட்ரஜன் பெரோக்ஸைடை சுவாசிக்கும் முறையை டி.ஆர்.டி.ஓ.வில் மருத்துவராக 25 ஆண்டுகள் பணியாற்றிய மித்ரா பாசு சில்லார் தான் பரிந்துரைத்தார். நவீன மருத்துவத்தைக் கற்றுக்கொண்ட அவரே, மாற்று சிகிச்சைகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டார்," என்றும் தன்னுடைய பதிலில் சமந்தா விளக்கம் அளித்துள்ளார். "சிகிச்சை தேவை இருக்கும் ஒரு நபராக இதைப் பதிவிட்டேனே தவிர, ஒரு பிரபல நடிகையாக அதைப் பதிவிடவில்லை. மேலும், இத்தகைய பதிவுகளுக்காக யாரிடம் இருந்தும் பணமும் பெறவில்லை. நவீன சிகிச்சைகள் பயனளிக்காமல் மாற்று மருத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக அதை மேலோட்டமாகப் பரிந்துரை மட்டுமே செய்தேன்" என சமந்தா குறிப்பிட்டுள்ளார். ஹைட்ரஜன் பெரோக்ஸைட் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஹைட்ரஜன் பெரோக்ஸைட் என்றால் என்ன? இதைச் சுவாசிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? ஹைட்ரஜன் பெரோக்ஸைட் என்ற ரசாயனப் பொருள் வீட்டைச் சுத்தம் செய்ய உபயோகிக்கும் கிருமி நாசினிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பலர் தொற்றைக் குறைக்கும் பொருட்டு இந்த ரசாயானத்தை, காய்ச்சி வடிகட்டிய நீரில் கலந்து, நெபுலைசரில் செலுத்தி, சுவாசித்து வந்தனர். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடாய் முடியும் என கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்தே ஆஸ்துமா, அலர்ஜி பவுண்டேஷன் ஆஃப் அமெரிக்கா அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நெபுலைசர் என்பது ஆஸ்துமா சிகிச்சையில் மருந்தைச் சுவாசிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை சுவாசக்கருவி. திரவ நிலையில் இருக்கும் மருந்தை வாயு நிலைக்கு மாற்றி சுவாசிக்க நெபுலைசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் நச்சுப் பொருட்கள் மற்றும் நோய் பதிவேட்டு முகமை (Agency for Toxic Substances and Disease Registry) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹைட்ரஜன் பெரோக்ஸைடை உட்கொள்ளுதல், சுவாசித்தல், தோல் அல்லது கண்களில் பயன்படுத்துதல் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,SCREEN GRAB/X கிருமி நாசினிகளில் 3% செறிவைக் கொண்டுள்ள ஹைட்ரஜன் பெரோக்ஸைடை சுவாசித்தால் மூச்சுக்குழலில் எரிச்சல் உண்டாகும் என்றும், தொடர்ச்சியாக அந்தச் சூழலுக்கு மக்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் கண்களில் மிதமான எரிச்சலுக்கு வாய்ப்புகள் உண்டு என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 10%க்கும் மேல் செறிவைக் கொண்டுள்ள ரசாயனத்தை சுவாசிக்கும்போது நுரையீரலில் கடுமையான எரிச்சல் ஏற்படும் எனவும் அதில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் பதிவு குறித்து விமர்சித்துள்ள மருத்துவர் ஜெய்சன் பிலிப், "இப்படி ஹைட்ரஜன் பெரோக்ஸைடை ஒருவர் சுவாசித்தால் மூச்சுக் குழாயில் அழற்சி, நுரையீரல் வீக்கம், வலிப்பு, மூளைச் சிதைவு போன்றவை ஏற்படலாம் என்றும், மரணம் ஏற்படவே வாய்ப்புகள் உள்ளதாகவும்" தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cevw5w9g8z4o
-
ஜப்பானின் உதவிகள் கிட்டினால் கடந்த காலத் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் - அமைச்சர் பந்துல
05 JUL, 2024 | 06:33 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை அடுத்து சர்வதேச நாடுகளோ, அமைப்புக்களோ நிதியுதவி வழங்காததன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை நிர்மாணம் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க இயலவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜப்பானின் உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: கடன்களை மீள்செலுத்த முடியாத நிலை உள்ளடங்கலாக நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான பல தசாப்த காலமாக இலங்கை வரவு -செலவுத்திட்டப் பற்றாக்குறையையும், வர்த்தகப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டுவருகின்றது. அதன் நீட்சியாகக் கடந்த சில வருடங்களாக செலவினங்களை ஈடுசெய்வதற்குப் போதுமான வருமானம் இலங்கையிடம் இருக்கவில்லை. குறிப்பாக அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி, ஏனைய உதவிக் கொடுப்பனவுகள் என்பன உள்ளிட்ட சகல செலவுகளுக்கும் சுமார் 4.4 ட்ரில்லியன் ரூபா செலவிடப்பட்ட அதேவேளை, அப்போது அரசின் வருமானம் 3 ட்ரில்லியன் ரூபாவாகவே காணப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே 69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஜனாதிபதியாகத் தெரிவான கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஆலோசனையை சர்வதேச அங்கீகாரமுடைய கட்டமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை அமைச்சரவையின் ஊடாக முன்னெடுத்தார். அதன் பிரகாரமே க்ளிஃபோர்ட் சான்ஸ் மற்றும் லிஸார்ட் ஆகிய நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய தேவை ஏற்பட்டபோது, அதுகுறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன. அதன் காரணமாக நாணய நிதியத்தை நாடு செயன்முறை தாமதமடைந்தது. அதனையடுத்து நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எழுச்சி தோற்றம் பெற்று, பேரழிவு இடம்பெற்றதன் பின்னர், சவால் மிகுந்ததொரு தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்வந்தார். அவரது தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டியதன் ஊடாக, தற்போது நாடு மீண்டும் மூச்சுவிட ஆரம்பித்திருக்கின்றது. இது இவ்வாறிருக்க நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்த காலப்பகுதியில் சர்வதேச நாடுகளோ அல்லது அமைப்புக்களோ எமக்கு எவ்வித நிதியுதவியையும் வழங்கவில்லை. அதன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க இயலவில்லை. இருப்பினும் தற்போது ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கையில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்டுவதில் விசேட ஒத்துழைப்பை வழங்கிய ஜப்பானின் உதவிகள் கிட்டும் பட்சத்தில், இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இருப்பினும் அதற்கு நாம் தற்போதைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். அவற்றை இடைநிறுத்தும் பட்சத்தில் மீண்டும் பின்னடைவு நிலைக்குச் சென்றுவிடுவோம் என்றார். https://www.virakesari.lk/article/187784
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
TIN வருமான வரி செலுத்தக் கோரி குறுந்தகவல் – இராஜாங்க அமைச்சர் விளக்கம்! மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறுகின்ற எவரும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கமளித்துள்ளார். வருமான வரி அடையாளக் குறியீட்டு எண்ணான ‘டின்’ இலக்கத்தை குறிப்பிட்டு வருமான வரியைச் செலுத்துமாறு பலருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் இறைவரித் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இராஜாங்க அமைச்சர், மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டாதவர்கள், இந்தத் தகவல் குறித்து அவதானம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறுகின்றவர்கள், தங்களது வருமான வரியை உரிய கணக்கிற்குச் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305331
-
'தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் வேண்டும்' - மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது என்ன?
விஜய் கருத்துத் தெரிவித்த தமிழ்நாட்டின் 3 விவகாரங்கள் என்னென்ன? அவரது அரசியல் சார்பு பற்றி என்ன தெரியவந்திருக்கிறது? பட மூலாதாரம்,X/@VIJAYFC கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 5 ஜூலை 2024, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களத்தில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார். ‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ மற்றும் ‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’ ஆகியவற்றை எதிர்த்துத் தனது அரசியல் அமையும் என்று தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், பலரது கவனமும் விஜய் பக்கம் திரும்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தன்னை அறிவித்துள்ள நடிகர் விஜய் இதுவரை முக்கியமான மக்கள் பிரச்னைகளில் நேரடியாகத் தனது கருத்தை தெரிவித்தது வெகு சில நேரங்களில் மட்டுமே. குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி விஜய் கூறியது என்ன? இஸ்லாமிய சமூகத்தினருக்குப் பாதகம் விளைவிக்கும் என்று எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார் விஜய். “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். கள்ளச்சாராய மரணங்கள் பற்றி விஜய் கூறியது என்ன? பட மூலாதாரம்,X/@TVKVIJAYHQ கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து கூலித் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது” இதுவே முதல் முறையாக மாநில அரசு மீது விஜய் கூறிய முதல் விமர்சனம். பட மூலாதாரம்,X/@VIJAYFC நீட் தேர்வு விவகாரத்தில் விஜயின் நிலைப்பாடு என்ன? இந்த வாரம் சென்னையில் நடைபெற்ற, பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் பேசிய விஜய் நீட் தேர்வு குறித்தும் மாநில உரிமைகள் குறித்தும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். “நீட் தேர்வால் கிராமப்புற ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975க்கு முன் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. ஒன்றிய அரசு அதை பொதுப் பட்டியலில் சேர்த்ததே பிரச்னையின் தொடக்கம். ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிராக உள்ளது. பன்முகத்தன்மை நமது பலம், பலவீனம் அல்ல. பல்வேறு குளறுபடிகள் காரணமாக நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” என்றார். தனது உரையை முடிக்கும்போது , “வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படாதீர்கள். கடவுள் உங்களுக்காக மற்றொரு வாய்ப்பை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் என்று அர்த்தம்” என்று மாணவர்களுக்குத் தெரிவித்தார். மாணவர்களுக்கான கல்வி விருது நிகழ்வில் முதல் நாள் பேசிய விஜய் நீட் தேர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, குவைத்தில் உயிரிழந்த இந்திய தொழிலாளர்களுக்கு இரங்கல், புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு வேதனை, அம்பேத்கர் ஜெயந்திக்கும், ரமலான் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதமர் மோதி, அண்டை மாநிலத் தலைவர்கள், திமுக எம்பிக்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு, மாணவர் சந்திப்புகளில் பேசிய விஜய், “அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை விட்டுவிடுங்கள். நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான். புதிய தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நமது விரலை வைத்து நாமே குத்திக் கொள்ளக்கூடாது. 1.5 லட்சம் பேர் கொண்ட ஒரு தொகுதியில் வாக்குக்கு ரூ.1000 கொடுத்து, ஒருவர் 15 கோடி செலவு செய்கிறார் என்றால், அவர் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா?” என்று பேசினார். கடந்த 2022ஆம் ஆண்டு ஹதராபாத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்திருந்தார். அதற்கு முன்னதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜயை சந்தித்திருந்தார். இவை எல்லாம் மரியாதை நிமித்தமான சந்திப்புகள் என்றே கூறப்பட்டன. கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘தலைவா’ படத்தின் போஸ்டரில் டைம் டு லீட் என்ற வாசகம் இருந்தது. தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வாசகம் நீக்கப்பட்ட பிறகு படம் வெளியானது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக, அதிக சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கும் போதே, அதை விடுத்து, அரசியலில் இறங்கப் போகிறேன் என்று விஜய் கூறியவுடனே, அவர் எந்தப் பக்கம் செல்லப் போகிறார் என்பது குறித்த பேச்சுகள் தொடங்கிவிட்டன. பட மூலாதாரம்,PAZHA KARUPPAIAH ‘சீமானுடன் சேர்ந்தால் சர்வ நாசம்’ – பழ கருப்பையா பிபிசி தமிழிடம் பேசிய மூத்த அரசியல்வாதி பழ கருப்பையா, “விஜய் பாஜகவுக்கு எதிராக நிற்கிறார் என்று தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுகவை எதிர்த்துதான் அவர் அரசியலுக்கு வர வேண்டும். இப்போது இருக்கும் ஆட்சி சிறந்தது என்றால், புதிதாக ஒருவர் ஏன் வர வேண்டும்? ஸ்டாலினை எதிர்க்க மாட்டார் என்றால், விஜய் கட்சி தொடங்குவதற்கான தேவையே கிடையாது," என்று கூறினார். மேலும், "யாரோடு சேரக்கூடாது என்று விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். சீமானுடன் சேர்ந்தால் சர்வ நாசம் ஆகிவிடுவார். அது அவருக்குத் தெரியாது, நான் சொல்கிறேன். ரெட்டியார், நாயக்கர், நாயுடு, அருந்ததியர் ஆகியோர் தமிழர்கள் இல்லை என்று கூறி 20% வாக்குகளை ஒதுக்கி வைத்துள்ளார் சீமான். பாஜகவுடன் சேர்ந்தால் 12% இஸ்லாமிய வாக்குகள் கிடைக்காது." "விஜய் கூறியுள்ள ஒன்றிரண்டு விஷயங்களை வைத்து அவரின் முழு உள்ளத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் மென்மையான எதிர்ப்பாளியாக இருக்கிறார். வன்மையாகக் கையாள வேண்டும் என்பது என் கருத்து,” என்று கூறுகிறார் பழ கருப்பையா. 'திமுகவின் வாக்கு வங்கி குறையும்' - தமிழருவி மணியன் விஜய் அரசியலுக்கு வருவதால் உடனடி பாதிப்பு திமுகவுக்கு என்கிறார் ரஜினியின் அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியன். “திமுகவின் வாக்கு வங்கியில் 16% சிறுபான்மையினரின் வாக்குகள். சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்ற திமுகவைவிட, தலித் கிறிஸ்தவரான விஜய் அதைக் கூறினால், மக்களிடம் எடுபடும். தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்தினர். முதல்வரும் உதயநிதியும் மட்டும்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை” என்றார். திமுக கூறும் கருத்துகளையே விஜய் கூறினால், திமுக கூட்டணிக் கட்சிகளை விஜய் பக்கம் இழுக்க வாய்ப்புண்டு என்கிறார் அவர். “திருமாவளவன் திமுகவில் மகிழ்ச்சியாக இல்லை, இறுக்கமாகத்தான் இருக்கிறார். புதுக்கோட்டையில் 300 பேர் வசிக்கும் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் அள்ளிப் போட்டவர்களை இன்னுமா கண்டுபிடிக்கிறார்கள்? இதன் பின்னால் உள்ள நுண் அரசியல் அவருக்குத் தெரியாதா? பாசிச எதிர்ப்பு, என்பதற்காகத்தான் அங்கு இருக்கிறார். அதையே விஜய் கூறினால், அவருடன் சேர வாய்ப்புண்டுதானே! விஜய் ‘ஒன்றிய அரசு’ என்றுதான் கூறுகிறார். இவை எல்லாம் சூசகமாக என்ன கூறுகிறது?” என்றார். பட மூலாதாரம்,FACEBOOK/ தமிழருவி சீமானும் விஜய்யும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உண்டு என்று கூறும் தமிழருவி மணியன், “விஜய்யை வரவேற்க சீமான் தயாராக இருக்கிறார். அவருக்குப் பின்னால் இருப்பது தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் என்றாலும், கூட்டணி அமைக்க ஒத்த கருத்து தேவையில்லை, பொது எதிரி இருந்தால் போதும். அது திமுக. 1967இல் தமிழ்நாட்டில் காமராஜரை வீழ்த்துவதற்காக, முற்றிலும் வெவ்வேறான கொள்கைகள் கொண்ட கருணாநிதி, ராஜாஜி, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைந்தனர். அதேபோன்று 1977இல் மத்தியில் இந்திரா காந்தி என்ற பொது எதிரியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இருப்பினும், விஜய்க்கு அதிகபட்சமாக 8-10% வாக்குகளுக்கு மேல் கிடைக்காது. சீமானுடன் சேர்ந்தாலும் மொத்தமாக 20%க்கு மேல் கிடைக்காது. எனவே இந்தக் கூட்டணி கோட்டையைப் பிடிக்க முடியாது,” என்றார். மேலும், விஜய் தனது நகர்வுகளை மிகவும் திட்டமிட்டு எடுத்து வைப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் தமிழருவி மணியன். “காமராஜர் சாயலில் முதல் அடியைக் கல்வியை நோக்கி எடுத்து வைத்துள்ளார். ஏழை எளியவர்களுக்கு இரவுப் பாடசாலை, ஆண்டுதோறும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருது, ஏழை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் படிக்க நூலகங்கள் அமைக்கக் கூறியுள்ளார். அம்பேத்கர் ஜெயந்தியின்போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அதை விழாவாகக் கொண்டாடச் சொல்லியிருந்தார். ரமலான் பண்டிகையின் போது இஸ்லாமிய மக்களுடன் நோன்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்” என்றார். 'ரஜினியுடன் இருந்த மூன்று ஆண்டுகள் வீணாகிவிட்டது' எனினும் நடிகர்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் அவர் பதிவு செய்கிறார். “நான் மூன்று ஆண்டுகள் ரஜினிகாந்துடன் பயணம் செய்து, ஆயிரம் வியூகங்களை அமைத்து, எனது காலத்தை வீணடித்துவிட்டேன். எனது நம்பகத்தன்மையையும் ஓரளவு இழந்துவிட்டேன். ஆனால் ரஜினி எதையும் இழக்கவில்லை. எனது சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன், நடிகர்களிடம் இருந்தது பெரிதாக எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. 90களில் ரஜினிகாந்துக்கு இருந்தது போல, தற்போது விஜய்க்கு ரசிகர் கூட்டம் உள்ளது. ரஜினி மாதிரி கடைசி நேரத்தில் பின்வாங்குவாரா இல்லையா என்று எப்படி உறுதியாகத் தெரியும்? அரசியல் என்பது பெரும் திமிங்கலங்கள் உள்ள பெருங்கடல், இதில் விஜய் கரை சேர்வது மிகவும் அரிது” என்றார். நல்ல தெளிவான அரசியல் சிந்தனை உள்ளவர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று விஜய் மக்களுக்குக் காட்டவில்லை என்றும், அது அவருக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதைக் காலம் அவருக்கு உணர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார். 'பாஜகவின் பிடியிலிருந்து விஜய் தப்ப முடியாது' டென்வர் பல்கலைகழக பகுதி நேர பேராசிரியரும், சென்னை பல்கலைக்கழக அரசியல் பொது நிர்வாகத் துறையின் முன்னாள் தலைவருமான ராமு மணிவண்ணன், “தனது பலம் என்னவென்று தெரிந்துகொள்ள விஜய் தனியாகப் போட்டியிடுவார். அவரது இளம் ரசிகர்களுக்கு பொதுவெளியில் ஒரு இடம் இருக்கிறது, ஆனால் விஜய் எந்தப் பக்கம் நோக்கித் தனது அரசியலை நடத்துவார் என்று கேட்டால், அது இன்னும் அவருக்கே தெரியாது," என்கிறார். "ரஜினி 90களில், சிறந்த நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி, தானே ஒரு பிராண்டாக உருவான போது அவரது புகைப்படங்களை அட்டைப் படமாகப் போட்டனர் குமுதமும் ஆனந்த விகடனும். ஆனால் அவரால் ஒரு அரசியல்வாதியாக உருவெடுக்க முடியவில்லை. இப்போது ஊடகங்கள் அதைத்தான் விஜய்க்கும் செய்கின்றனர்” என்றார். விஜய்யின் குடியுரிமை திருத்தச் சட்டம், நீட் தேர்வு குறித்த கருத்துகளைக் கொண்டு அவர் பாஜகவுக்கு எதிராக நிற்கிறார் என்று கூறப்பட்டாலும், அப்படிக் கூற முடியாது என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். “தமிழ்நாட்டுக்கு என்று ஒரு நிலைப்பாடு உண்டு, அதைத்தான் விஜய் பேசுகிறார். திமுக, அதிமுக யாராக இருந்தாலும் மாநிலத்துக்கான பொது நிலைப்பாட்டைத்தான் பேசுவார்கள். பாஜகவின் பிடியிலிருந்து வெகுதொலைவில் இருக்க முடியாது. கல்வி விருது நிகழ்ச்சி நடத்த எப்படிப் பணம் கிடைக்கிறது என்பது போன்ற பல கேள்விகள் எழும்,” என்றார். மேலும், “ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று தெரியும்வரை அவரைப் பற்றிய பேச்சு இருந்துகொண்டே இருந்தது. தெரிந்தபிறகு, காணாமல் போய்விட்டார். அதே போன்றுதான், விஜய்யும். விஜய் எல்லாருக்கும் எதிரி, எல்லோருடன் இணங்கிப் போவது என்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளார். அவர் எந்தப் பக்கம் என்று தெரிந்துவிட்டால் அவரது முக்கியத்துவம் குறைந்துவிடும். தமிழகத்தைப் புரட்டிப் போடும் அளவுக்கு அவர் ஏதும் செய்யாத வரை அவர் மீதான நம்பிக்கை குறைவுதான்” என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். https://www.bbc.com/tamil/articles/c4ngxkx0glwo
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
Published By: RAJEEBAN 05 JUL, 2024 | 11:57 AM பிரிட்டன் தேர்தலில் இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் வெற்றிபெற்றுள்ளார். ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் அவர் 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்தொகுதியில் கிறீன்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர் 7 ஆயிரத்து 511 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த வெற்றிமூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பின்னணிகொண்ட பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என உமாகுமரன்தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் - பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/187738
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹெலிய மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துக்களுக்கு இடைக்கால தடை Published By: DIGITAL DESK 3 05 JUL, 2024 | 11:49 AM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் 93.125 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வங்கிக்கணக்குகள் மற்றும் காப்புறுதிப் பத்திரங்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டில் 3 மாதங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை (IVIG) கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில், ஜூன் 19ஆம் திகதி, ரம்புக்வெல்லவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/187735
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இது காலை முரசு போல!
-
அட்லாண்டிக்கில் கவிழ்ந்தது குடியேற்றவாசிகளின் படகு - 89 பேரின் உடல்கள் மீட்பு
Published By: RAJEEBAN 05 JUL, 2024 | 11:26 AM அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து 89 குடியேற்றவாசிகளின் உடல்களை மீட்டுள்ளதாக மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் ஆனால் பலர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். செனெகல் கம்பியா எல்லையிலிருந்து 170 பேருடன் படகொன்று பயணம் புறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மொரெட்டேனியாவின் தென்மேற்கு கடலோரப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான படகுகள் குடியேற்றவாசிகளுடன் இங்கிருந்து புறப்படுவது வழமை. ஆபத்தான இந்த பாதையில் பயணிக்கும் படகுகள் ஸ்பெயினின் கனரி தீவுகளை நோக்கி செல்கின்றன - கடந்த வருடம் இந்த தீவிற்கு 40,000க்கும் அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர் என தெரிவிக்கும் ஸ்பெயின் அரசாங்கம் இது முன்னைய ஆண்டை விட அதிகம் என குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் குடியேற்வாசிகள் அளவுக்கதிகமானவர்கள் ஏற்றப்பட்ட படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். 2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெயினை சென்றடைய முயன்ற 4000க்கும் அதிகமானவர்கள் கடலில் உயிரிழந்துள்ளனர் என ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/187733
-
உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு
ஐந்து நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமம்: பாலியல் வன்கொடுமை வழக்கு - போலே பாபா பற்றிய விவரங்கள் அம்பலம் 05 JUL, 2024 | 10:23 AM உத்தரபிரதேசத்தில் சில நாட்களிற்கு முன்னர் சனநெரிசலில் பெருமளவு மக்கள் உயிரிழப்பதற்கு காரணமானவர் என குற்றச்சாட்டப்பட்டும் போலே பாபா என்ற சாமியாருக்கு சொகுசுஆசிரமமும் பல கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நெரிசலில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது.தற்போது அவர் நிறைய சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். 13 ஏக்கரில் அவர் 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமத்தை கட்டியுள்ளார். அந்த ஆசிரமம் அமைந்துள்ள இடம் மட்டும் ரூ.4 கோடி மதிப்புள்ளது. ஆசிரமத்தில் பல அறைகள் உள்ளன. விலை உயர்ந்த பொருட்கள் மூலம் அறைகள் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. அறைகளில் எல்லாவசதிகளும் உள்ளன. போலே பாபாவின் உண்மையான பெயர்சூரஜ் பால். இதற்கு முன் காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார். அவரது ஆசிரமத்தில் 12 அறைகள் உள்ளன. அவற்றில் 6 அறைகளை போலே பாபா பயன்படுத்தி வந்துள்ளார். மற்ற 6 அறைகளில் தன்னார்வலர்கள்இ கமிட்டி உறுப்பினர்கள்இ விவிஐபி.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரமத்துக்கு தனி சாலை வசதியும் உள்ளது. அத்துடன் கலை நுணுக்கங்களுடன் ஆசிரமம்கட்டப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலத்தை தனக்கு பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கினர் என்று போலே பாபாகூறியுள்ளார். ஆனால்இ ஆவணங்களை ஆய்வு செய்த போது அவருக்கு மேலும் பல சொத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவை கோடிக்கான ரூபாய் மதிப்புள்ளவை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். போலே பாபா மீது ஆக்ரா எடாவா காஸ்கஞ்ச பரூக்காபாத் மற்றும் ராஜஸ்தானில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187724
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
https://postimages.org/ மேலுள்ள இணைப்பில் சென்று அப்லோட் செய்தபின் Direct Link இங்கே இணையுங்கள்.
-
சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி
சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது Published By: DIGITAL DESK 3 05 JUL, 2024 | 09:48 AM இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்து பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது. தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/187719
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
வலது பக்க மேல் மூலைப்பகுதியில் உள்ளதே? தொடர்ச்சி 2ஆம் பக்கம் எனப் போட்டிருக்கிறதே?
-
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/aswesuma-allowance-second-application-form-1720138450
-
ரா. சம்பந்தன் காலமானார்: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்
சம்பந்தன் போன்ற அகிம்சைவழி தலைவரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு; 13 ஆவது திருத்தத்தை அனைத்துக் கட்சிகளும் நடைமுறைப்படுத்தவேண்டும் - கரு ஜயசூரிய Published By: VISHNU 05 JUL, 2024 | 02:30 AM (நா.தனுஜா) தேசிய ஒருமைப்பாட்டுக்கான நமது பொறுப்பைக் கருத்திற்கொள்கையில் சம்பந்தன் போன்ற உன்னத, அகிம்சைவழி தலைவரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். இவ்வேளையில் நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வை எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. மாறாக நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு மதிப்பளித்து, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவையொட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கை உருவாக்கிய தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான இரா.சம்பந்தன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒட்டுமொத்த தேசத்திடமிருந்தும் விடைபெறவுள்ளார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள்மீது அபரிமிதமான அன்புடனும், அனைத்து இனங்களும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பினார். சம்பந்தனின் அரசியல் செயற்பாடுகளை அவதானிக்கையில் நாட்டின் மிகமுக்கிய பல அத்தியாயங்களில் அவர் பங்களிப்பு வழங்கியுள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னரான தொடக்க கால தமிழ்த்தேசிய நடவடிக்கைகளிலும், அதன் பின்னரான வட, கிழக்கு மாகாணங்களை மையமாகக்கொண்டு இடம்பெற்ற யுத்தத்துக்கு சூழல் வகுத்த யுகத்திலும், யுத்தம் முடிவடைந்த தற்போதைய காலப்பகுதியிலும் அவரது வகிபாகம் மாண்புடையதாக அமைந்திருந்தது. வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகமுக்கிய அரசியல் ஓட்டத்துக்குத் தலைமை தாங்கியவரும், இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வகித்தவருமான சம்பந்தன் தேசத்திடமிருந்து விடைபெறும் இந்நேரத்தில் இலங்கையர்களாகிய நாம் கவனம் செலுத்தவேண்டிய பல முக்கிய விடயங்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம். பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் இந்த நாட்டின் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர். ஆனால் சுதந்திரமடைந்த பின்னரான 76 ஆண்டுகளில் நாட்டில் வாழும் இனக்குழுக்களுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையை முழுமையாக உறுதிசெய்யத் தவறிவிட்டோம். தேசிய ஒருமைப்பாட்டுக்கான நமது பொறுப்பைக் கருத்திற்கொள்கையில் சம்பந்தன் போன்ற உன்னத, அகிம்சைவழி தலைவரை இழந்தது நாட்டுக்குப் பேரிழப்பாகும். ஆனால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் காண்பித்த அர்ப்பணிப்பைப் பாராட்டி, ஒன்றுபட்ட தேசம் தொடர்பான எமது அபிலாஷைகளைக் கைவிடாமல் முன்நோக்கிச் செல்வதன் ஊடாக நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது நமது பொறுப்பாகும். அதன்படி இந்நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வை எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு மதிப்பளித்து, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் விசேட கவனம்செலுத்தி ஒற்றுமையுடன் இதனை நிறைவேற்றவேண்டும். ஒரு சகாப்தத்தை அடையாளப்படுத்திய இரா.சம்பந்தன் நம்மைவிட்டு விடைபெற்றிருக்கும் இத்தருணத்தில் அதற்காக ஒட்டுமொத்த தேசமும் உறுதிபூணவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187709