Everything posted by ஏராளன்
-
தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Armstrong: Ambedkar மீதான நேசம் முதல் Police Cases வரை; ஆம்ஸ்ட்ராங் BSP மாநில தலைவரானது எப்படி? பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பட்டியலின மக்களுக்கான அரசியலில் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்தான் ஆம்ஸ்ட்ராங்.
-
ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்- இரு பிரதான வேட்பாளர்களிற்கு இடையில் கடும் போட்டி
இரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றி - மக்களின் மனநிலை என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், கஸ்ரா நாஜி, டாம் பென்னட் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் புதிய அதிபராக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலியை தோற்கடித்து அதிபராகி உள்ளார். எண்ணப்பட்ட 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் டாக்டர் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். ஜலிலி 44.3% வாக்குகளைப் பெற்றார். ஜூன் 28 அன்று நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில், எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத நிலையில், 40% என்ற அளவில் வரலாற்றில் மிகக்குறைந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தது. இரானின் முந்தைய அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அதிபருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகள் இரானின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, டாக்டர் பெசெஷ்கியனின் ஆதரவாளர்கள் தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் தெருக்களில் இறங்கி கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் பெரும்பாலும் இளைஞர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் நடனமாடுவதையும், அவரது பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட பச்சைக் கொடியை ஏந்திச் சாலைகளில் நடப்பதையும் பார்க்க முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெசெஷ்கியநை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலி அணுசக்தி நிலைப்பாடு 71 வயதான இதய அறுவை சிகிச்சை நிபுணரும் இரானிய நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பெசெஷ்கியன், இரானின் மோசமான 'அறநெறி போலீஸ்' பிரிவை விமர்சித்து, உலகத்திலிருந்து இரானின் 'தனிமைப்படுத்தலுக்கு' முற்றுப்புள்ளி வைப்பதற்கும் 'ஒற்றுமை மற்றும் ஒத்திசைவு' பண்புகளை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்ததன் மூலம், அவரது பிரசாரம் பரபரப்பை உருவாக்கியது. மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தளர்த்துவதற்கு ஈடாக இரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதாக ஒப்புக்கொண்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் தொடர்பாக மேற்கத்திய சக்திகளுடன் 'ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு' டாக்டர் பெசெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சயீத் ஜலிலி, இரானின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு ஆதரவானவர். முன்னாள் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஜலிலி, இரானின் பெரும்பாலான மத சமூகங்கள் மத்தியில் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளார். ஜலிலி தனது உறுதியான மேற்கத்திய எதிர்ப்புக் கருத்துக்களுக்காகவும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிராகரித்ததற்காகவும் நன்கு அறியப்பட்டவர், அவர் இரானின் 'சிவப்புக் கோடுகளை' உடைத்ததாகக் கூறுகிறார். சமீபத்திய வாக்கெடுப்பில் 50% வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த வாரத்தின் முதல் சுற்று வாக்குப்பதிவை விட அதிகமாக வாக்குகள் பதிவாகி இருந்தன. மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி நிலவியதால் முதல் சுற்றில் மிகக்குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது. 1979-இல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் குறைந்த வாக்குகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை. பரவலான அதிருப்தியால் மில்லியன் கணக்கான மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இரான் தேர்தல்களில் முதன்மை வேட்பாளர்களாக இஸ்லாமிய கடும்போக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் யாரை தேர்வு செய்வது என்று மக்களின் விரக்தி அதிகரித்தது, மேலும் உச்ச தலைவர்கள் கொள்கையை கடுமையாக நெறிப்படுத்தும் வரை அர்த்தமுள்ள சீர்திருத்தம் சாத்தியமற்றதாகவே இருக்கும் என்று மக்கள் கருதினர். தேர்தலில் முதல் சுற்றில் வாக்களிக்காத சிலர், ஜலிலி அதிபராக வருவதைத் தடுக்க இந்த முறை டாக்டர் பெசெஷ்கியனுக்கு வாக்களித்ததாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2022-ஆம் ஆண்டு மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் காவல் மரணத்தைத் தொடர்ந்து, இரானில் ஹிஜாபுக்கு எதிரான பெரும் போராட்டம் வெடித்தது ஜலிலி வெற்றி பெற்றால், இரான் வெளி உலகத்துடன் மேலும் மோதல் நடவடிக்கைகளை நோக்கிச் செல்லும் என்றும், அவர் இரானுக்குக் கூடுதல் தடைகளை கொண்டு வந்து மேலும் நாட்டை தனிமைப்படுத்துவார் என்றும் அவர்கள் அஞ்சினார்கள். இரு வேட்பாளர்களும் இரானில் உள்ள 12 மதகுருமார்கள் மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட செல்வாக்கு மிக்க குழுவான கார்டியன் கவுன்சிலால் (Guardian Council) நிர்வகிக்கப்படும் தேர்வு நடைமுறையில் தேர்ச்சி பெற வேண்டும். அந்தச் செயல்முறையின் போது, கார்டியன் கவுன்சில் பல பெண்கள் உட்பட 74 வேட்பாளர்களை போட்டியில் இருந்து நீக்கியது. அதிகாரத்திற்குப் போதுமான விசுவாசத்தை வெளிப்படுத்தாத வேட்பாளர்களை நீக்கியதற்காக கார்டியன் கவுன்சிலை மனித உரிமை அமைப்புகள் பலமுறை விமர்சித்துள்ளன. 2022-2023-இல் நாட்டை உலுக்கிய ஆட்சி எதிர்ப்புப் பேரணிகள் உச்சக்கட்டத்தை அடைந்த உள்நாட்டு அமைதியின்மையின் போது ஏராளமான நடுத்தர வர்க்க மற்றும் இளம் இரானியர்கள் ஸ்தாபனத்தின் மீது வலுவான பகைமையைக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் வரலாற்று ரீதியாக வாக்களிப்பதில் இருந்து விலகினர். பல ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டு அமைதியின்மைக்குப் பிறகு - 2022-23-இல் நாட்டை உலுக்கிய ஆட்சி எதிர்ப்புப் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தது - பல இளம் மற்றும் நடுத்தர வர்க்க இரானியர்கள் ஸ்தாபனத்தின் மீது ஆழ்ந்த அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர் மற்றும் தேர்தல்களில் வாக்களிக்க மறுத்து வந்தனர். இரானிய சமூக ஊடகங்களில் , 'traitorous minority' என்ற பாரசீக ஹேஷ்டேக் வைரலானது, எந்தவொரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை அந்தஇ பதிவுகள் வலியுறுத்தியன. வாக்களிக்கும் மக்களை 'துரோகிகள்' என்று குறிப்பிட்டன. மறுபுறம், தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவாகியிருப்பது டாக்டர் மசூத் பெசெஷ்கியனின் ஆட்சியை நிராகரிப்பதைக் குறிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளார். "இரான் தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவுக்குப் பின்னால் முக்கியமான காரணங்கள் உள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் சமூகவியலாளர்கள் அவற்றை ஆய்வு செய்வார்கள். ஆனால் வாக்களிக்காதவர்கள் ஸ்தாபனத்திற்கு எதிரானவர்கள் என்று யாராவது நினைத்தால், அது தவறு," என்று அவர் கூறினார். சில இரானியர்கள் தற்போதைய ஆட்சியை ஏற்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "நாங்கள் மக்கள் சொல்வதைக் கேட்போம், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது," என்று கமேனி கூறினார். https://www.bbc.com/tamil/articles/czvxnp0eg0po
-
கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம்
கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 20 இலட்சம் முழுமையான காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி நேற்று குருணாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். குருணாகல் மாவட்டத்தில் நாட்டிற்கு சோறு தரும் விவசாயிகள் வாழும் பகுதியாகும். ஆனால் இன்னும் அவர்களுக்கான நில உரிமை கிடைக்கவில்லை. இன்று இந்நாட்டில் வாழும் இலட்சக்கணக்கானோர் சட்டரீதியான காணி உறுதிகள் இன்றி வாழ்கின்றனர். அவர்களுக்கு உரிமையை வழங்குவதற்காகவே உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். மிகவும் கடினமான காலகட்டதிலேயே என்னால் ஆட்சியமைக்க நேரிட்டது. ஆட்சியைப் பொறுப்பேற்க தலைவர்கள் எவரும் அப்போது முன்வரவில்லை. ஆனாலும் நான் ஏற்றுக்கொண்டேன். பல கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு ஆட்சியமைத்தேன். தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்திருக்கிறோம். இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்த எமக்கு 04 வருட கால அவகாசம் உள்ளது. மேலும், சுமார் 06 வருடங்கள் மிதமான சுமையுடன் கடனை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். செலுத்த வேண்டிய வட்டியில் ஒரு தொகை வெட்டி விடப்பட்டுள்ளது. அதனால் 05 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு எஞ்சும். தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன்படி சுமார் 03 பில்லியன் டொலர்கள் குறைவடையும். எனவே நாம் செலுத்த வேண்டிய பணத்தில் இருந்து மொத்தம் 08 பில்லியன் டொலர்கள் வெட்டிவிடப்படும். மேலும், தளர்வான நிபந்தனைகளின் கீழ் 02 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சீனா , இந்தியாவின் உதவித் தொகைகள் அதற்குள் உள்ளடங்காது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 08 பில்லியன் டொலர்களை சேமித்துள்ளோம். நான் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில், இந்தியா எமக்கு மூன்றரை பில்லியன் டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்கியது. மேலும் பங்களாதேஷும் 200 மில்லியன் டொலர்களை வழங்கியது. பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், நாம் 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியுள்ளோம். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. வற் வரியை அதிகரிப்பது எளிதானது அல்ல. ஆனால் பொருளாதாரத்தை சீரமைக்க அதைச் செய்ய வேண்டியிருந்தது. சில தலைவர்கள் மக்களை வீதிக்கு வந்து வீடுகளை எரிக்கச் சொன்னார்கள். அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது என்றார்கள். விவசாயிகளை மீண்டும் கொழும்புக்கு வருமாறு கூறினர். விவாசாயத்துக்கு தேவையான எரிபொருள் இல்லாமல் கொழும்புக்கு வர முடியாது. மக்களுக்கு எரிபொருள் மற்றும் உரங்களை வழங்கினோம். அப்போதும் கூட விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளுக்கு கொழும்புக்கு வருமாறு கூறினர். விவசாயிகள் 2022-2023 வரையில் பெற்றுத்தந்த அறுவடையின் காரணமாகவே இந்த நாட்டின் உற்பத்தி அதிகரித்தது. அதே நேரத்தில், சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்தது. இவற்றுக்கு மத்தியில் 08 பில்லியன் டொலர் நிவாரணத்தையும் பெற்றுக் கொண்டு கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வழியை உருவாக்கியுள்ளோம். பொருளாதார வீழ்ச்சி சாதாரண மக்களையே பெருளவில் பாதிக்கிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சியின் இலாபத்தை ஒரு தரப்பு மாத்திரம் அனுபவிக்கிறது. அதனாலேயே உறுமய திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கி சாதாரண மக்களுக்கும் அதன் பலன்களை பெற்றுக்கொடுக்க விருப்பினோம். பல தலைமுறைகளாக தாம் வாழ்ந்த காணியின் உரிமை இன்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சாதனையாகும். மற்றவர்கள் சோசலிசம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதுதான் உண்மையான சோசலிசம். இதன் மூலம் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுகிறது. உலகில் இரண்டு நாடுகள் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ஜப்பான் மற்றும் தென் கொரியா. ஆனால் இரு நாடுகளிலும் குறைந்த விலைக்கு காணி வழங்கப்பட்டன. ஆனால் நாங்கள் இதை இலவசமாக வழங்குகிறோம். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இந்நாட்டில் காணி உரிமையாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது. அத்துடன் சமூர்த்தி வேலைத்திட்டத்தின் நன்மைகளை மூன்று மடங்கினால் உயர்த்துவதற்காக அஸ்வசும திட்டத்தை செயற்படுத்தினோம். வங்குரோத்து அடைந்த நாட்டிலேயே இந்த திட்டங்களை செயல்படுத்தினோம். அரசாங்க ஊழியர்களுக்கும் கஷ்டங்களுக்கு மத்தியில் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம். எதிர்வரும் வருடங்களிலும் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தலாம். இத்தோடு தனியார் துறையிலும் சம்பள உயர்வு கிட்டியது. சுற்றுலா துறையின் வருமானம் அதிகரித்தது. இன்று, நாட்டில் ஒரு நவீன சுற்றுலா வணிகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த பொசன் போயாவின் போது நாடு முழுவதும் ஏராளமான தன்சல்கள் நடத்தப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. இன்று உங்களது கடின உழைப்பினால் அறுவடை செய்யப்பட்ட அறுவடையில் இருந்து இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தன்சல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுவே நமது பலமாகும். அதே சமயத்தில் நாம் நாட்டு மக்களுக்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்குகிறோம். நாடும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இன்று இந்த குருநாகல் மாவட்டம் துரிதமாக அபிவிருத்தியடைந்து வருகிறது. கம்பஹா மற்றும் கொழும்பிற்கு அடுத்தபடியாக குருணாகல் மாவட்டத்தில் அதிகளவான மக்கள் வாழ்கின்றனர். இந்த மாகாணத்தை திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். எனவே, பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயமொன்றை உருவாக்குவதற்காக 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இரணவில சுற்றுலா வலயத்துடன் இணைக்க எதிர்பார்த்திருக்கிறோம். அப்போது இந்த பிங்கிரிய, மாதம்பே பகுதிகள் பாரிய முன்னேற்றம் அடையும். மேலும், குளியாபிட்டியவில் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது. மேலும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் விரிவான திட்டமொன்று குருணாகல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், தற்போது உதவித்தொகை கிடைக்கவுள்ளதால், அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய வீதி நிர்மாண பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் இந்த மாகாணத்திற்கு புதிய பல்கலைக்கழகம் ஒன்றும் கிடைக்கும். இதனால் அடுத்த சில வருடங்களில் குருணாகல் பெரும் அபிவிருத்தி அடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://thinakkural.lk/article/305369
-
'கடவுள் மட்டுமே என்னை தேர்தல் போட்டியில் இருந்து தடுக்க முடியும்' - ஜோ பைடன் சொன்னது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மைக் வென்ட்லிங் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது வேட்புமனு மீதான ஜனநாயகக் கட்சியின் கவலையைத் தணிக்கும் முயற்சியாக ஒரு பிரைம் டைம் நேர்காணலில் பங்கு பெற்றிருக்கிறார். அந்த பேட்டியில், "சர்வவல்லமை படைத்த இறைவன்" மட்டுமே அவரை மறுதேர்தலுக்கான வேட்பு மனுவைத் திரும்பப் பெற வற்புறுத்த முடியும் என்று கூறியுள்ளார். பைடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) ஏபிசி நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவர் மற்றொரு பதவிக் காலத்துக்கு பணியாற்றத் தகுதியானவர் என்று மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் அறிவாற்றல் சோதனை செய்து முடிவுகளை வெளியிட மறுத்துவிட்டதையும் குறிப்பிட்டார். "ஒவ்வொரு நாளும் நான் அறிவாற்றல் சோதனையை எதிர்கொண்டு வருகிறேன். நான் அனுதினம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளும் எனக்கு ஒரு சோதனை போன்றது தான்,” என்று அவர் ஜார்ஜ் ஸ்டீபனோபொலோஸிடம் கூறினார். கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் உடனான அவரது மோசமான விவாதத்திற்குப் பிறகு, "81 வயதான பைடன் இந்தத் தேர்தலில் ஒரு இளம் போட்டியாளருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்,” என்ற கருத்து பல ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜார்ஜ் ஸ்டீபனோபொலோசுடன் பைடனின் நேர்காணல் உடல்நலம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் நேர்காணலில், ஜார்ஜ் ஸ்டீபனோபொலோஸ் பைடனிடம் இரண்டாவது பதவிக்காலத்துக்கான அவரின் தகுதி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினார். பைடன் அவரது உடல்நலம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து பொய் சொல்கிறாரா என்றும் பைடனிடம் கேட்டார். "அதிபராக இருக்கவும், இந்த தேர்தலில் வெற்றி பெறவும் என்னை விட அதிக தகுதியுடைய ஒரு வேட்பாளர் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று கூறிய பைடன், கடந்த வாரத்தில் ட்ரம்ப் உடனான நேரடி விவாதத்தில் அவர் மந்தமான செயல்திறனை வெளிப்படுத்தியதற்கு காரணம் சோர்வு மற்றும் "கடுமையான குளிர்" என்று பைடன் கூறினார். அந்த 22 நிமிட நேர்காணலில், அவர் மேலும் கூறியதாவது: விவாதத்தின் போது டொனால்ட் டிரம்ப்பிடம் பைடன் தோற்றுவிட்டார் என்ற ஜனநாயகக் கட்சியினரின் அச்சத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்த நேர்காணலில் தேர்தல் முடிவுகள் பற்றி பேசினார். பைடன் சில கருத்துக்கணிப்பாளர்களிடம் பேசியதாகவும், தேர்தல் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும் என்று அவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் சக தலைவர்கள் அவரை பதவி விலகுமாறு நிர்பந்திப்பார்கள் என்ற கருத்தை பைடன் நிராகரித்தார். "அது நடக்காது," என்று அவர் தெரிவித்தார். அவரை இந்த தேர்தலில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்க என்ன காரணம் என்பது பற்றிய தொடர்ச்சியான கேள்விகளை பைடன் ஏற்றுக் கொள்ளவில்லை. "சர்வவல்லமையுள்ள இறைவன் இறங்கி வந்து, 'ஜோ, இந்த தேர்தல் பந்தையத்தில் இருந்து வெளியேறு' என்று சொன்னால் மட்டுமே நான் தேர்தலில் இருந்து வெளியேறுவேன்," என்று அவர் கூறினார். "சர்வவல்லமையுள்ள இறைவன் கீழே வரப்போவதில்லை. எனவே நான் போட்டியிடுவதும் மாறப்போவதில்லை" என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,REUTERS கடந்த வாரம் விவாத மேடையில் ஒலித்த அவரது சோர்வான குரலை விட இந்த நேர்காணலில் அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் தெளிவாக பதிலளித்தார் பைடன். ஆனால் அடிக்கடி அவரது குரலில் பலவீனம் வெளிப்பட்டது. அவ்வப்போது குரல் கரகரப்பாக ஒலித்தது. வெள்ளியன்று விஸ்கான்சினில் உள்ள மேடிசனில் நடந்த பேரணியில் அவரது செயல்பாட்டிற்கு இது முற்றிலும் மாறுபட்டது. மேலும் அந்த பேரணியில் உற்சாக பேசிய பைடன் கடந்த வார சிஎன்என் விவாதத்தில் தனது மோசமான பங்களிப்பை ஒப்புக்கொண்டார். "விவாதம் முடிந்ததில் இருந்து, நிறைய யூகங்கள் வெளியாகி வருகிறது. ஜோ அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்," என்று அவர் பேரணியில் குறிப்பிட்டார். "அந்த யூகங்களுக்கு இதோ என் பதில். நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன், மீண்டும் வெற்றி பெறப் போகிறேன்,” என்று பைடன் கூறினார். அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த களமாக கருதப்படும் விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவாளர்கள் அவரது பெயரை ஆரவாரம் செய்தனர். பட மூலாதாரம்,REUTERS அனைத்து யூகங்களுக்குமான பதில் பைடனின் பிரசாரம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களும் நன்கொடையாளர்களும் அவரைத் தொடர்ந்து ஆதரிப்பதா வேண்டாமா என்று விவாதித்து கொண்டிருக்கையில், இந்த நேர்காணலும் பேரணியும் தேர்தல் போக்கை மாற்றும் என்று கருதப்படுகிறது. அமெரிக்க ஊடகங்களில் பல்வேறு செய்தி அறிக்கைகளின்படி, சிஎன்என் விவாதத்தைத் தொடர்ந்து தனது எதிர்கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பிடம் விவாதத்தில் வீழ்ச்சி அடைந்ததை சரி செய்ய பைடன் முயல்கிறார். பிரசாரத்தின் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியம் என்பதை பைடன் அறிவார். அவரது இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகும் அல்லது அவரின் முயற்சிகள் முறியடிக்கப்படும். அவர் மேடிசன் பேரணியின் மேடையில் ஏறியபோது, பைடன் ஒரு வாக்காளரைக் கடந்து சென்றார், அவரின் கைகளில் "ஜோ, ஜோ" என்று எழுதப்பட்ட பலகையை வைத்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினார். அதே சமயம் அந்த மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த மற்றொரு வாக்காளர், "உங்கள் மரபைக் காப்பாற்றுங்கள், இந்த தேர்தலில் இருந்து வெளியேறுங்கள்" என்ற பலகையை வைத்திருந்தார். "வெள்ளை மாளிகையில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு முன், எனக்கு மிகவும் வயதாகிவிட்டதாக பலர் கூறும் கதைகள் அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறேன்," என்று பைடன் பேரணியில் கூறினார். "1.5 கோடி வேலைகளை உருவாக்க திட்டமிடும் எனக்கு வயதாகிவிட்டதா?" என்றார். "50 லட்சம் அமெரிக்கர்களுக்கான மாணவர் கடன்களை தள்ளிபடி செய்ய முடியாத அளவுக்கு எனக்கு வயதாகிவிட்டதா?" என்று பைடன் பேசினார். "டொனால்ட் டிரம்பை வெல்ல எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா?" என்றும் அவர் கேட்டதற்கு, கூட்டத்தில் இருந்து "இல்லை" என்று பதில் வந்தது. நியூயார்க்கில் டிரம்பின் கிரிமினல் வழக்கு மற்றும் தனித்தனி வழக்குகளில் அவர் எதிர்கொள்ளும் மற்ற குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு, அவர் தனது எதிர்கட்சி வேட்பாளரை "ஒன் மேன் கிரைம் வேவ்" (one-man crime wave) என்று அழைத்தார். அவரது சிந்தனைப் போக்கு பலவீனமடைந்ததை பிரதிபலித்த விவாதத்தைத் தொடர்ந்து பைடனின் வயது மற்றும் மனநலம் குறித்த கவலைகள் கட்சியினர் மத்தியில் அதிகரித்தது. எனவே, பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. ஜனநாயகக் கட்சியின் சில முக்கிய நன்கொடையாளர்கள் படனை கட்சியின் வேட்பாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். வேட்பாளர் மாற்றப்படாவிட்டால் நிதி அளிப்பதை நிறுத்திவிடுவோம் என்று பகிரங்கமாக எச்சரித்தனர். பைடனின் பிரசாரம் ஆக்ரோஷமாக மாறி அவர் மீதான பிம்பத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது. அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த மாதம் முக்கிய தொகுதிகளுக்கு செல்ல பிரசாரங்களை திட்டமிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பென்சில்வேனியாவில் மற்றொரு பேரணியில் பேசவிருக்கும் பைடன், துணை ஜனாதிபதியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஒருவேளை பைடன் பதவி விலகினால், அவருக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் அதிக வாய்ப்புள்ள வேட்பாளராக அவர் உருவெடுத்துள்ளார். 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தியின்படி, பைடனின் தலைமைக் குழு, அடுத்த வாரத்திற்குள் வேட்பாளரை முடிவு செய்ய ஜனநாயகக் கட்சிக்குள் அழுத்தம் இருப்பதை அறிந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை, சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பைடனின் வேட்புமனுவைப் பற்றி விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேடிசனில் நடந்த பேரணியில், பல பைடன் ஆதரவாளர்கள் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை ஆதரிப்பதாகக் கூறினார் பைடன் பற்றி மக்கள் என்ன சொல்கின்றனர்? "அதிபர் பைடன் நம் நாட்டிற்கு மகத்தான சேவையை செய்துள்ளார், ஆனால் அவர் ஜார்ஜ் வாஷிங்டனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, புதிய தலைவர்கள் உருவாகி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடுவதற்கு ஒதுங்க வேண்டிய நேரம் இது," என்று முக்கிய தலைவரான மோல்டன் வானொலியில் கூறினார். எவ்வாறாயினும், எந்தவொரு மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவரும் அவரை விலகுமாறு அழைப்பு விடுக்கவில்லை என்று அவரது பிரசாரத்தில் குறிப்பிட்டார். சில ஜனநாயகக் கட்சியின் தொண்டர்களும், பைனின் தேர்தலில் போட்டியிடும் திறனில் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கருத்துக் கணிப்பில், 86% ஜனநாயகக் கட்சியினர் பைடனை ஆதரிப்பதாகக் கூறினர், இது பிப்ரவரியில் 93% ஆக இருந்தது. மேடிசனில் நடந்த பேரணியில், பல பைடன் ஆதரவாளர்கள் பிபிசி நியூஸிடம், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை ஆதரிப்பதாகவும், விவாதத்தில் தோல்வி அடைந்ததை பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார். "அவரது உடல்நிலை குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் சூசன் ஷாட்லிஃப்( 56) கூறினார். பைடன் விவாதத்தின் போது வார்த்தைகள் கிடைக்காமல் திணறினார். அவரது எதிர் வேட்பாளரை வீழ்த்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சிலர் கூறினர். "விவாதத்தின் போது, டிரம்ப் பொய்களை கூறினார். அதை எப்படி ஒப்பிட முடியும். பைடன் பேசியதை மோசமானது என்று எப்படி சொல்ல முடியும்?," 67 வயதான கிரெக் ஹோவல் கூறினார். மற்றவர்கள் அதிக கவலை தெரிவித்தனர். "நான் அவரை நெருக்கமாகப் பார்க்க விரும்பினேன், அதனால் அவருடைய ஆளுமை, பழக்கவழக்கங்கள் மற்றும் ஆற்றலைக் காண முடிந்தது," என்று மேடிசனைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் தாமஸ் லெஃப்லர் கூறினார். "டிரம்பை தோற்கடிக்கும் அவரது செயல்திறன் போதுமானதா என்று எண்ணி நான் கவலைப்படுகிறேன்,” என்றார். "அவரின் வயது ஒரு பிரச்னையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எதுவாக இருந்தாலும் நான் நீல நிறத்தில் வாக்களிப்பேன்," என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c1rw040r1vqo
-
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
06 JUL, 2024 | 06:21 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்றைய தினம் (06) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின்விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோகணக்கில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீன்வளம் அழிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோரால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரப்பட்டதற்கு அமைவாக 2024.04.17 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது. கடற்றொழில் திணைக்களத்தினர், கடற்படை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான தொடர்ச்சியான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார். இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கடற்படைத் தளபதி, மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, மாவட்ட இராணுவ அதிகாரி, கடற்படை அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/187851
-
இலங்கை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா? தேர்தல் நடத்துவதில் குழப்பம் ஏன்?
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தலை நடத்துவது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்தும் காலப் பகுதி தொடர்பாக இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கும் வரை, தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 😎 விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எனினும், ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்யுமாறு கோரி பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 5) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,PMD SRI LANKA ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் குழப்பம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் இடைகால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான சி.டி.லெனவவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளான தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சட்ட மாஅதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட திருத்தம் காரணமாக, ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் கால எல்லை குறித்து தெளிவின்மை காணப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். "1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் 3-வது சரத்துக்கு அமைய அரசியலமைப்பின் 30 (2)-ஆவது பிரிவு திருத்தப்பட்டாலும், அதனூடாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைவது 5 வருடங்களா அல்லது 6 வருடங்களாக என்பதில் குளறுபடி நிலவுகின்றது. அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் கீழ் அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் வரை குறைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றாலும், அது நடத்தப்படவில்லை. "இதன்படி, அரசியலமைப்பின் 30 (2) சரத்தானது, சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகின்றது. அதனால், ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்ற குளறுபடி நிலவுகின்றது," என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை இடைநிறுத்தக் கோரி மனு இதனால், உயர்நீதிமன்றம் சரியான தெளிவூட்டலை வழங்கும் வரை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு இடைகால தடை விதிக்கப்பட வேண்டும் என மனுதாரர் மேலும் கோரியுள்ளார். அத்துடன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸ, அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். இதன்படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைந்து ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து அரசியலமைப்பில் குழப்பநிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான குழப்ப நிலை காணப்படும் சந்தர்ப்பத்தில், அது குறித்துத் தெளிவூட்டும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு காணப்படுகின்றது," என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் திகதி தொடர்பில் நீதிமன்றம் தெளிவூட்டலை வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். பட மூலாதாரம்,PMD SRI LANKA ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 😎 ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனுவை விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்துள்ளார். இதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில், நீதியரசர்கான விஜித் மலல்கொட, முதர் பெர்ணான்டோ, பிரித்தீ பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணை செய்யவுள்ளனர். பட மூலாதாரம்,PMD SRI LANKA மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜித்த ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சோசலிஷ இளைஞர் சங்கத்தின் பிரதிநிதி எரங்க குணசேகர ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவினாலும் இடை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் படி 6 வருடங்களாகக் காணப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என இந்த இடை மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசியலமைப்பின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகின்றமையினால், இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பட மூலாதாரம்,PMD SRI LANKA ஜனாதிபதியின் நிலைப்பாடு 2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126-இன் படி அரசியலமைப்பின் 19-ஆவது திருத்தத்தின் 3-ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)-ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என, இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழு அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றத்தினால் இது குறித்த இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், 2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மேலதிகப் பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு குறித்த மனுவில் கோரியுள்ளது. இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு, 2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடாகும் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் ஜனாதிபதி பதவி காலத்தில் குழப்பம் - திருத்த நடவடிக்கை அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தில் காணப்படும் குழப்பங்களை திருத்தம் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார். மதவாச்சி பகுதியில் நேற்று (ஜூலை 5) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, 19-வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒரு இடத்தில் 5 வருடங்கள் எனவும், மற்றொரு இடத்தில் 6 வருடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஏற்பட்ட குழப்ப நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டமூலம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/cgl70yyzglzo
-
கேரளா: மூளையை தின்னும் அமீபாவுக்கு ஏரி, குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் பலி - பரவலை தடுக்கும் வழிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆ.நந்தகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமையன்று ’’Kerala brain-eating amoeba” என்ற தேடல் கூகுளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் தேடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களில் அரிதான மூளையைத் தின்னும் அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ளதுதான் இதற்கு முக்கியக் காரணம். மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட மூவரும் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துபோனது. இந்தத் தொற்று எவ்வளவு அபாயகரமானது என்பதைக் காட்டுகிறது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97%க்கும் அதிகமானோர் இறந்துபோவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (சிடிசி) கூறுகிறது. மேலும் இந்த அமீபாவால் ஏற்படும் தொற்றுகள் மிகவும் அரிதானவை. எனவும், ஆனால் அது மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை எனவும் சிடிசி தெரிவித்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். என்ன நடந்தது? கோழிக்கோட்டைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் மிருதுல் ஒரு குளத்தில் சென்று குளித்தபிறகு அவருக்குத் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. முதலில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் primary amoebic meningoencephalitis எனப்படும் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. கடந்த ஜூன் 24 முதல் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், புதன்கிழமை உயிரிழந்தார் என பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது. "ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, மேல் சிகிச்சைக்காக எங்கள் மருத்துமனையில் அந்தச் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். வரும்போதே அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார். நாங்கள் அவரை வென்டிலேட்டரில் வைத்து, சோதித்தபோது அவருக்கு மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பதைக் கண்டுபிடித்தோம். இதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளான, ஆன்டிபயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைக் கொடுத்தோம். ஆனால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை’’ என்கிறார் இந்தச் சிறுவனுக்கு சிகிச்சையளித்த கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ சிகிச்சை நிபுணர் அப்துல் ராவுப். இதே போல கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தாக்ஷினா, மூளையைத் தின்னும் அமீபா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 12ஆம் தேதி உயிரிழந்தார். தாக்ஷினா மூணாறுக்கு பள்ளி சுற்றுலா சென்று, அங்கு நீச்சல் குளத்தில் குளித்தபோது இந்த அமீபா தொற்று ஏற்பட்டது என தி ஹிந்து செய்தி கூறுகிறது. இதற்கு முன்பு, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா கடந்த மே 1ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள கடலுண்டி ஆற்றில் உறவினர்களுடன் குளித்துள்ளார். மே 10ஆம் தேதி அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை, ஒரு வார மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES மூளையைத் தின்னும் அமீபா என்றால் என்ன? Primary amebic meningoencephalitis எனப்படும் ஒரு தொற்று, மூளையை தின்னும் அமீபா எனப்படும் Naegleria fowleri-ஆல் ஏற்படுகிறது. Naegleria fowleri அமீபா (ஒரு செல் உயிரினத்தின் வகை) வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை என சிடிசி கூறுகிறது. ’’உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரியை அமிபா என அழைக்கிறோம். இதுபோன்ற இடங்களில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கின்றன.'’ ''அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு மரணம் நிகழும்’’ என்கிறார் மருத்துவர் அப்துல் ராவுப். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு நீர் பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று ஏற்படும் என சிடிசி கூறுகிறது. பொதுவாக அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 பேருக்கும் குறைவானவர்களே இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இறந்துவிடுகின்றனர் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (சிடிசி) கூறுகிறது. அறிகுறிகள் என்ன? மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஆகும். அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய 1 முதல் 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகின்றனர். பொதுவாகத் தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது என CDC கூறுகிறது. உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படும் எனவும் அது தெரிவித்துள்ளது. இந்த தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இறந்தபிறகே, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படும் சூழல் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஏன் இந்தத் தொற்று சில இடங்களில் மட்டும் பரவுகிறது? ஏரி, நதி மற்றும் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் கோடைக் காலத்தில் நீண்ட நாட்கள் அதிக வெப்பநிலையில் இருக்கும்போது, இந்த அமீபா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நீர் நீண்ட காலமாக அதிக வெப்பநிலையில் இருப்பது, குறைந்த நீர்மட்டம் போன்றவை இந்த அமீபா தொற்றுக்கு அடிப்படைக் காரணம் என சிடிசி கூறுகிறது. ’’இதுபோன்ற காலங்களில் ஏரி, நதி மற்றும் நீரில் நீச்சல் குளங்களில் குதித்தோ அல்லது டைவிங் செய்தோ குளிக்கும்போது மூக்கு வழியாக மனிதர்களின் உடலுக்குள் இந்த அமீபா செல்கின்றது’’ என்கிறார் மருத்துவர் அப்துல் ராவுப். அமீபா உள்ள தண்ணீரைக் குடிப்ப தொற்று ஏற்படாது எனவும், வேறு ஒருவரிடம் இருந்தோ இந்தத் தொற்று பரவாது எனவும் சிடிசி தெரிவித்துள்ளது. எப்படி பாதுகாத்துக் கொள்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES குளத்திலும், நதியிலும் குளிக்க வேண்டும் எனப் பெரும்பாலோர் விரும்புவார்கள். சிலர் நீச்சல் குளத்திற்குச் செல்ல நினைப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்வது? இந்த அமீபா தொற்று பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளை மருத்துவர் அப்துல ராவுத் அறிவுறுத்துகிறார். அவை, நன்கு பராமரிக்கப்படாத, தண்ணீர் குறைவாக உள்ள நீச்சல் குளங்களுக்குச் செல்லக்கூடாது. குளோரின் எனும் கிருமி நாசினி மூலம் நீச்சல் குளங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதைச் சரிபார்த்துச் செல்ல வேண்டும். மாசடைந்த குளம் மற்றும் ஏரிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். எங்கெல்லாம் சாத்தியம் உள்ளதோ அங்கெல்லாம் குளங்களில் குளோரின் கலக்க வேண்டும். இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்கு செல்கின்றது என்பதால் குதித்து மூழ்குவது, டைவ் அடிப்பது போன்றவற்றைச் செய்யாமல் தலையை மேலே வைத்துக்கொள்ள வேண்டும். கேரள அரசு கூறுவது என்ன? மூளையைத் தின்னும் அமீபாவால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வெள்ளிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், சில அறிவுறுத்தல்களையும் முதல்வர் பினராயி விஜயன் வழங்கியுள்ளார். தூய்மையற்ற நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் எனவும், நீச்சல் குளங்களை நன்கு குளோரினேட் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தொற்றுக்கு குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் நீர்நிலைகளுக்குச் செல்லும்போது, தொற்று ஏற்படாமல் இருக்க 'ஸ்விம்மிங் நோஸ் கிளிப்'-ஐ பயன்படுத்த வேண்டும். நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c8vd4mqz8nzo
-
சம்பந்தர் காலமானார்
ஜனாதிபதி ரணில் பேசும்போது ஆக்ரோசமாக எதிர்ப்பவர்கள் கூட சம்பந்தன் ஐயா பேசியபோது அமைதியாக செவிமடுத்தார்கள் - முன்னாள் எம்.பி. கோடீஸ்வரன் 06 JUL, 2024 | 06:38 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசும்போது ஆக்ரோஷமாக எதிர்ப்பவர்கள்கூட சம்பந்தன் ஐயாவின் பேச்சுக்களை அமைதியாக செவிமடுத்தார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளையால் கடந்த வியாழக்கிழமை (4) இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கண்ணீர் அஞ்சலி நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது. தமிழ் அரசு கட்சியின் காரைதீவு கிளை செயலாளர் கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது : சம்பந்தன் ஐயா தந்தை செல்வநாயகத்தின் பாசறையில் வளர்ந்து 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முதன்முதல் அலங்கரித்தார். அன்று முதல் இன்று வரை கொள்கையிலும் இலட்சியத்திலும் மாறாத தலைவராக விளங்கினார். தமிழ் மக்களுக்காக முழு வாழ்வையும் அர்ப்பணித்தார். தமிழ் மக்களுக்கான தீர்வினை அவருடைய காலத்திலேயே அடைய வேண்டும் என்பதற்காக பற்றுறுதியுடன் செயற்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சம்பந்தன் ஐயா நியமிக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் அகிம்சை வழியில் தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுத்தார். உள்நாட்டு மற்றும் உலக தலைவர்கள் அடங்கலாக அனைத்து தரப்பினர்களுடனும் இராஜதந்திர பேச்சுக்களை நடத்தி தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர இறுதி மூச்சு வரை பகீரத பிரயத்தனங்கள் மேற்கொண்டார். பாராளுமன்றத்தில் நன்மதிப்பு மிக்க பெருந்தலைவராகவும் விளங்கினார். பக்குவமாகவும் ஆணித்தரமாகவும் உரையாற்றுவார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகின்றபோது ஆக்ரோஷமாக எதிர்ப்பவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றுகின்றபோது அவதூறாக ஏசுபவர்கள் உள்ளனர். ஆனால், இனவாதிகள் அடங்கலாக அனைத்து தரப்பினரும் சம்பந்தன் ஐயாவின் உரைகளை நிதானமாகவும் அமைதியாகவும் செவிமடுப்பது வழக்கம் என்றார். https://www.virakesari.lk/article/187836
-
அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் பங்குபற்றும் மெய்வல்லுநர் என்ற சாதனை வில்சன் வசமானது
06 JUL, 2024 | 02:32 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் பங்குபற்றும் மெய்வல்லுநர் (ஆண்கள்) என்ற அரிய சாதனை 16 வயதான குவின்சி வில்சனுக்கு சொந்தமாகிறது. ஒரிகொன், இயூஜினில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், அதீத ஆற்றலை வெளிப்படுத்தி சாதனைமிகு நேரப்பெறுதியைப் பதிவுசெய்ததன் மூலம் பாரிஸ் செல்லும் அமெரிக்க ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆண்களுக்கான 400 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக்கில் தனிநபராக பங்குபற்ற தகுதிபெறவில்லை. ஆனால், இளம் குறுந்தூர ஓட்ட வீரரான குவின்சி வில்சன், அமெரிக்க 4 x 400 மீற்றர் தொடர் அணியில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க மெய்வல்லுநர் குழாத்தில் இளம் வீரர் வில்சன் பெயரிடப்பட்டுள்ளதை அவரது பயிற்றுநர் ஜோ லீ உறுதிசெய்தார். இதனை வில்சனும் உறுதிசெய்துள்ளார். 'ஒலிம்பிக்கிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளேன் என அறியக்கிடைத்ததும் நான் பேரானந்தம் அடைந்தேன்' என சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வில்சன் தெரிவித்தார். 'ஒலிம்பிக் அணியில் பெயரிடப்பட்டுள்ளேன் என அறிந்ததும் நான் பரவசமடைந்தேன். மகிழ்ச்சி வெள்ளத்தில் வீட்டைச் சுற்றி ஓட ஆரம்பித்தேன். இளம் பராயத்தில் ஒவ்வொருவரும் ஒலிம்பிக்கிற்குச் செல்ல வேண்டும் என கனவு காண்கிறார்கள். அந்த வகையில் என்னைப் பொறுத்த மட்டில் இது பொன்னான தருணமாகும்' என்றார் அவர். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ள வீரர் என்ற பெருமையை மேரிலாண்ட், பொட்டோமக் புல்லிஸ் பாடசாலையில் கல்வி பயிலும் கனிஷ்ட மாணவரான குவின்சி வில்சன் பெறுகிறார். ஒலிம்பிக்கில் பங்குபற்றவேண்டும் என்ற ஆர்வம் ரியோ 2016 விளையாட்டுப் போட்டியின் போது வில்சனுக்கு ஏற்பட்டது. மேலும் அவர் தனது 8ஆவது வயதில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 'ஜஸ்டின் கெட்லினும் யுசெய்ன் போல்ட்டும் நேருக்கு நேர் போட்டியிட்டதை நான் பார்த்தபோது நானும் ஒரு நாள் அதில் (ஒலிம்பிக்) பங்குபற்றுவேன் என்று எண்ணியதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்' என வில்சன் கூறினார். 'அதைப்பற்றி நான் எனது அம்மாவிடமும் அப்பாவிடமும் கூறினேன். இப்போது அந்த கனவு நனவாகியுள்ளது' என அவர் குறிப்பிட்டார். கடந்த வாரம் நடைபெற்ற மூன்று வெவ்வேறு 400 மீற்றர் திறன்காண் போட்டிகளை 45 செக்கன்களுக்குள் பதிவுசெய்த குவின்டன் வில்சன், 42 வருடங்கள் நீடித்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான சாதனையை முறியடித்தார். 400 மீற்றர் அரை இறுதிப் போட்டியை 44.59 செக்கன்களில் ஓடி முடித்தன் மூலம் வில்சன் புதிய சாதனையை நிலைநாட்டினார். 1982இல் டெரல் ரொபின்சனால் நிலைநாட்டப்பட்ட சாதனையை முயறிடித்தே புதிய சாதனையை வில்சன் நிலைநாட்டினார். 'நான் எனது மெய்வல்லுநர் வாழ்க்கையில் இந்தளவு மகிழ்ச்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. இதற்காக நான் கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் உழைத்தேன். இந்த சாதனையை முறியடிக்க 42 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. நான் அந்த சாதனையை 3 தினங்களுக்குள் இரண்டு தடவைகள் முறியடித்ததையிட்டு பெருமை அடைகிறேன்' என அவர் மேலும் கூறினார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடர்ச்சியான பயிற்சிகளில் குவின்சி வில்சன் ஈடுபடவுள்ளார். அத்துடன் லண்டனில் அல்லது மியாமியில் நடைபெறவுள்ள 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்ற திட்டமிட்டுள்ளார். 'எனது ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதற்காக நான் கடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன். மைதானத்தில் உள்ள ஒவ்வொரு சுவடுகளிலும் ஓடிப் பழகவுள்ளேன். நான் எந்த சுவட்டில் ஓடுவேன் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது சுவடுகளிலா ஓடுவேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன்' என வில்சன் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். அமெரிக்காவின் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் இடம்பெறுவதன் மூலம் மிகக் குறைந்த வயதில் அமெரிக்க அணியில் இடம்பிடித்த வீரர் என்ற சாதனையை 16 வயதான வில்சன் நிலைநாட்டியுள்ளார். பாரிஸில் 124 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா அத்தியாயத்தில் அமெரிக்க அணியில் தனது 17ஆவது வயதில் பங்குபற்றிய ஆர்த்தர் நியூட்டனை விஞ்சி மிக இளவயதில் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் அமெரிக்க வீரர் என்ற சாதனையை குவின்சி வில்சன் தனதாக்கிக்கொண்டுள்ளார். குவின்சி வில்சன் ரூபத்தில் புதிய போல்ட் வந்துவிட்டாரா என்பதற்கு பாரிஸ் ஒலிம்பிக்தான் பதில் கூறப்போகிறது. ஆனால், அவரது பிரசன்னம் அமெரிக்க மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குவின்சி வில்சன் தனக்கென ஒரு பெயரைப் பொறிப்பார் என நம்புவோமாக! https://www.virakesari.lk/article/187828
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது; உமா குமரனின் வெற்றி குறித்து சீமான் கருத்து – வாழ்த்து தெரிவிப்பு 06 JUL, 2024 | 12:28 PM பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அன்புத்தங்கை உமா குமரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது. இனவழிப்பு தந்த காயங்களோடும் கண்ணீரோடும் ஊரிழந்து உறவிழந்து உரிமையிழந்து உயிர் சுமந்த உடல்களாக அடைக்கலம் தேடி அலைகின்ற நூற்றாண்டுப் பெருந்துயரைக் கண்ட தமிழினத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் இதுபோன்ற சிறுசிறு அதிகாரப்பகிர்வும் அங்கீகார நிமிர்வும் மிகவும் இன்றியமையாததாகும். தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது என்பதால் தங்கை உமா குமரனின் வெற்றி உலகத்தமிழினத்தின் வெற்றியாகும். தம்மைத் தேர்ந்தெடுத்த ஸ்ட்ராட்ஃபோர்ட்ரூபோ தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கும் நல்வாழ்விற்கும் சிறப்புற பணியாற்றவும் உலகத்தமிழர்களின் உரிமைக்குரலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கவும் தங்கை உமா குமரனுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்! அவரைபோன்றே தொழிலாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை கிருஷ்ணி ரிசிகரன் தாராள சனநாயகவாதிகள் கட்சி சார்பில் போட்டியிட்ட அன்புத்தம்பி ஜாகிர் ஹுசேன் ஆகியோர் இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தபோதிலும் அதற்காக எவ்வித தற்சோர்வும் அடைய வேண்டாம்; ‘தோல்வியே வெற்றியின் தாய்’ என்னும் முதுமொழிக்கேற்ப தொடர்ந்து மக்கள் பணியாற்றினால்இ எதிர்காலத்தில் உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள். மக்கள் தொண்டாற்ற வேண்டுமென்ற உங்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்! இங்கிலாந்து நாட்டில் பெருவெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும் பிரதமராக பதவியேற்கும் கெய்ர் ஸ்டார்மர் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அடைந்துள்ள ஆட்சி அதிகாரமானது இங்கிலாந்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்விலும் புதிய மலர்ச்சி ஏற்படவும் ‘ஈழத்தாயக விடுதலை’ எனும் தமிழர்களின் இலட்சிய கனவு வென்றிடவும் உறுதுணையாய் இருக்குமென நம்புகிறேன். https://www.virakesari.lk/article/187818
-
வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
06 JUL, 2024 | 12:46 PM வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான தடை உத்தரவினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர். இது தவிர, இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (5) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்தே, எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைக்கும் நிகழ்வானது இன முரண்பாட்டை, இன வன்முறையினை ஏற்படுத்தும் என கடந்த வழக்கு தவணைகளில் சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு இந்த தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆஜராகியிருந்தனர். இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்தே நீதிவான் வழக்கினை ஒத்திவைத்தார். செய்திப் பின்னணி சம்மாந்துறை பிரதேசத்தில் சட்ட ரீதியாக அனுமதி பெறாமல் வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு எனும் பெயரில் கோபுரமொன்றை அமைப்பதற்கு எதிராக இரண்டு நபர்களால் முறைப்பாடொன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபரால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், கடந்த சனிக்கிழமை (15) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்டதுமான சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரமொன்று அமைப்பதற்கு அடிக்கல் நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வினை நடத்தினால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஏற்பட சாத்தியமுள்ளது என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், சமாதான குலைவு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாலும், இந்த நிகழ்வை நடாத்துவது உசிதமானதல்ல என்பதனால் அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெறாதவாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வீரமுனை கோவில் தலைவர் ராஐ கோபால், கிராம உத்தியோகத்தர் பிரதீபன் உட்பட்டோருக்கு வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த 19ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸாரினால் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பான விசாரணையை மேற்கொண்டபோது எதிர்வரும் 2024.06.27 அன்று வரை தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவை நீடித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதேவேளை இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. https://www.virakesari.lk/article/187820
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்! 06 JUL, 2024 | 12:54 PM கடற்தொழில் அமைச்சரும் - மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இவர் இன்று சனிக்கிழமை (06) விஜயம் செய்துள்ளதுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இதன்போது வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டு நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24மணித்தியாளங்களாக தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்திருந்தார். இதனைவிட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் -ஆளணி காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார் . இதன்போது வைத்தியசாலையில் கூடிய பொதுமக்கள் வைத்தியசாலை இன்று இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அவர்களுக்கு ஆதரவளித்தும் - வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் பொதுமக்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187815
-
சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி
சம்பந்தனின் இறுதிக்கிரியை தினத்தன்று கிழக்கில் வெள்ளைக்கொடி பறக்கவிட்டு துக்கதினமாக பிரகடனப்படுத்த மக்கள் முன்வரவேண்டும் : ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் Published By: DIGITAL DESK 3 06 JUL, 2024 | 11:33 AM தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சட்டத்தரணி இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதில் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இறுதிக்கிரியை நடைபெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் அறிக்கை யொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான உறவின் இணைப்பு பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சினையில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் உச்சபட்ச அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக தனது வாழ்நாள் பூராவும் அயராது பாடுபட்ட அரசியல் ஆளுமையான சம்பந்தனுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்த இலங்கையர்களான நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் பிரிவுத் துயரால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திருகோணமலை மக்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் அவரது மக்கள் பணியயையும், அரசியல் சேவைகளையும் கௌரவிக்கும் விதமாக நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக அவரது இறுதிக்கிரியை இடம்பெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187814
-
மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணம்!
06 JUL, 2024 | 12:00 PM மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பல் துறை ஆளுமை மிக்க 42 வயதுடைய குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இவரை வாகனமொன்று மோதிவிட்டு சென்றுள்ளது . இதன் போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது. ' கம்பிகளின் மொழி பிறேம் ' என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் முன்னாள் போராளியாவார். ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்த இவர் பல் துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187811
-
ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்- இரு பிரதான வேட்பாளர்களிற்கு இடையில் கடும் போட்டி
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் சீர்திருத்தவாதி பெசெஷ்கியன்வெற்றி - பழமைவாத வேட்பாளரை தோற்கடித்தார் Published By: RAJEEBAN 06 JUL, 2024 | 09:43 AM ஈரான் ஜனாதிபதி தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றிபெற்றுள்ளார். தேர்தலின் இரண்டாம் சுற்றின் முடிவில் வாக்குகள் எண்ணபட்டுள்ள நிலையில் மசூத் பெசெஷ்கியானிற்கு 53வீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்து போட்டியிட்ட தீவிர பழமைவாதியான சயீட் ஜலீலிற்கு 44 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. ஜூன் 28 ம் திகதி தேர்தலில் இரு வேட்பாளர்களும் 50 வீத வாக்குகளை பெறாததை தொடர்ந்து இரண்டாம் சுற்று அவசியமாகியது. ஈரான் தலைநகரிலும் ஏனைய நகரங்களிலும் புதிய ஜனாதிபதியின் ஆதரவாளாகள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய பச்சை கொடியுடன் இளைஞர்கள் வெற்றியை கொண்டாடுகின்றனர். இருதய சத்திரசிகிச்சை நிபுணரான புதிய ஜனாதிபதி ஈரானின் ஒழுக்க காவலர்களை கடுமையாக விமர்சித்தவர். ஈரானில் ஒற்றுமையை நிலைநாட்டுவேன். சர்வதேச சமூகத்திலிருந்து ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையை மாற்றுவேன், என அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார். https://www.virakesari.lk/article/187802
-
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் தடுக்கப்பட்ட 7000 குழந்தைத் திருமணங்கள் - நீடிக்கும் சவால்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 6 ஜூலை 2024, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் 2500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக சமூக நலத்துறையிடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் கல்வியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் முன்னேறியிருந்தாலும் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறுவது ஏன்? தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு 6 மாததிற்குப் பிறகே கிடைத்தது. இதுபற்றிய தகவல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மாரியம்மாளுக்கு அளிக்கப்பட்டது. அவர் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரசு அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் கணவர், சிறுமியின் தாய், சித்திகள் ஆகியோர் மீது கடந்த ஜூன் மாத இறுதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் விவாதப் பொருளாகியுள்ளன. தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணத் தடை சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? குழந்தை திருமணம் தொடர்ந்து தடுக்க முடியாமல் இருப்பது ஏன்? அரசு தரப்பு கூறும் விளக்கம் என்ன? இங்கு விரிவாகக் காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 49.5% ஆக இருக்கிறது. இது மாணவர்களைவிட ஒரு சதவீதம் மட்டுமே குறைவு என அகில இந்திய கணக்கீடு சொல்வதாக மாநில அரசு இந்த ஆண்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை' கோப்பில் குறிப்பிட்டிருக்கிறது. மாநில அரசின் இலவசக் கல்வி, பாடப் புத்தகங்கள், சீருடைகள், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை ஆகியவை பெண்கள் உயர் கல்வியைத் தொடர முக்கியக் காரணியாக இருப்பதாக அரசு கூறியுள்ளது. அதே வேளையில் தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 குழந்தைத் திருமணங்களுக்கான முயற்சி நடைபெற்று அது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக சமூக நலத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021- 2024 வரை நடந்த குழந்தைத் திருமணம் படக்குறிப்பு,வழக்கறிஞர் பிராபகரன் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பிரபாகரன் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான தகவலை தமிழ்நாடு சமூக நலத்துறையிடம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதன்படி, 2021ஆம் ஆண்டில் 2,638 குழந்தை திருமணங்கள், 2022இல் 2,401, 2023இல் 1,961 மற்றும் 2024 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 347 என 7,347 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாக இருந்ததை சமூக நலத்துறை குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தடுத்திருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல், சேலம், மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. ‘குழந்தைத் திருமணத்தில் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை’ பொற்றோரிடம் பேசி, எழுதி வாங்கி அனுப்பி வைப்பதால் தொடர்ச்சியாக நடைபெறுகிறது எனக் கூறுகிறார் தோழமை அமைப்பைச் சேர்ந்த குழந்தைகள் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் சி.பிரபாகரன். தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இதில் குழந்தைப் பாதுகாப்பு நல அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே அரசு சமூக நலத்துறையின் வாயிலாக வழங்குகிறது. “எத்தனை குழந்தைத் திருமணங்கள் நடைபெற்ற பின்னர் தகவல் கிடைத்துள்ளது, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்வியைப் பலமுறை தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வியாகக் கேட்டாலும் அதற்கு அரசிடமிருந்து பதில் இல்லை,” என்கிறார் பிரபாகரன். தமிழ்நாடு அரசு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006இன் படி குழந்தைத் திருமணம் நடந்தால் அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தரவேண்டும். ஆனால் பல இடங்களில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் '18 வயது நிரம்பும் வரை திருமணம் செய்து வைக்க மாட்டேன்' என எழுதி வாங்கி அந்தக் குழந்தையைப் பெற்றோருடன் அனுப்பி வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார் அவர். 'குற்றமெனத் தெரிந்தே செய்கிறார்கள்’ பட மூலாதாரம்,EYESWIDEOPEN தேனி மாவட்டம் கம்பம், சின்னமன்னூர், ஆண்டிப்பட்டி பகுதியில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக மாவட்ட சமூக நல அலுவலர் சியாமலா கூறினார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில், ''தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை குறிப்பட்ட பகுதியில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. அது குறித்த தகவல் கிடைத்தவுடன் குழந்தைப் பாதுகாப்பு அலுவலர், காவல்துறை மற்றும் சமூக நல அதிகாரிகள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி குழந்தையின் பெற்றோர், உறவினர்களிடம் விழிப்புணர்வு செய்கிறோம்.’’ “பலர் குழந்தைத் திருமணம் சட்டபடி குற்றம் எனத் தெரிந்தே செய்கின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது காதல்." சிறுமிகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுடன் காதலித்துச் சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலன இடங்களில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக சியாமலா தெரிவிக்கிறார். மேலும், "பெற்றோரின்றி தாத்தா அல்லது பாட்டியின் வளர்ப்பில் வளரும் குழந்தைகளுக்கு பராமரிக்க ஆட்கள் இல்லாமல் இருப்பதாலும் திருமணங்கள் நடக்கின்றன. தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் இடங்களில் அதுகுறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறோம்'' என்றார். இளம் வயது பெண்கள் பிரசவம் அதிகரிப்பு குழந்தைத் திருமணத்தின் பிரதிபலிப்பு எனக் குற்றம் சாட்டுகிறார் வழக்கறிஞர் பிரபாகரன். தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரம் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியிருப்பதாகத் தகவல் அளித்துள்ளது. ஆனால், அது சரியான தகவல் இல்லை என்கிறார் அவர். "கடந்த மூன்று ஆண்டுகளில் 34,497 இளம் பெண்கள் 18 வயதிற்குக் கீழ் கர்ப்பம் தரித்துள்ளனர். இந்த ஆண்டில் முதல் இரண்டு மாதத்தில் மட்டுமே 1,637 பேர் கர்ப்பமாகியுள்ளனர். இதுவே எத்தனை குழந்தைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன என்பதைக் காட்டுகின்றன. அரசு உண்மையான தகவலைப் பொது வெளியில் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தை திருமணங்களைத் தடுக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் எனக் கூறுகிறார் தமிழ்நாடு சமூக நலத்துறையில் இணை இயக்குநர் ரூத் வெண்ணிலா. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவடங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நிகழும் பகுதிகள் கண்டறியப்பட்டு அதைத் தடுப்பதற்காக குழந்தை நல இயக்குநரகம், சமூக நலத்துறை களப் பணியாளர்கள் வாயிலாக அதிகமாக விழிப்புணர்வு செய்து வருகிறோம்'' எனக் கூறினார். ‘குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புது திட்டம்’ “தமிழ்நாட்டில் பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளன. இளம் சிறார், சிறுமியர் காதலால் திருமணம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இதற்கு குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகள் மீது போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதும் ஒரு காரணம்," எனத் தெரிவிக்கிறார் இணை இயக்குநர் ரூத் வெண்ணிலா. எனவே, மாவட்டம் தோறும் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பள்ளிகளுக்குச் சென்று குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு அளிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், அதேபோல் இனி வரும் காலங்களில் குழந்தைத் திருமணம் தொடர்பாக வரும் அனைத்துப் புகார்களுக்கும் வழக்குப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் ரூத் வெண்ணிலா. இதன் வழியாக குழந்தைத் திருமணத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். சுகாதாரத்துறையின் வாயிலாக இளம் பெண்கள் கர்ப்பமாகும் நிகழ்வையும் கண்காணித்து அதில் குழந்தைத் திருமணங்கள் நிகழ்ந்திருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்குமாறு அலுவலர்களுக்குக் கூறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார் அவர். ''அதோடு மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்துப் பள்ளிகளின் வாயிலிலும் விரைவாக குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வு பலகை வைக்கப்படும்'' எனக் கூறினார். குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியாதது ஏன்? இந்தியாவில் வெவ்வேறு கலாசாரத்தைப் பின்பற்றும் மக்கள் வாழ்கின்றனர். இங்கு குழந்தைத் திருமணங்கள் பல்வேறு காரணங்களுக்காக நடக்கின்றன. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கலாசாரமாகவே குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் வறுமை அடிப்படையில் குழந்தைத் திருமணத்தை நடத்துகின்றனர். 'ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கடந்த 1929ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்காக சார்தா(Sarda Act) என்கிற பெயரில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு முறை மாற்றம் செய்யப்பட்டு கடைசியாக இந்திய தண்டனை சட்டம் 2006இன் படி குழந்தைத் திருமணம் குற்றமாகக் கருதப்பட்டது. "இந்தச் சட்டத்தின்படி திருமணத்தில் பங்கேற்ற அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்ப சட்டம் வகை செய்கிறது. ஆனால், அப்படி நிகழ்வது கிடையாது. பல வழக்குகளில் இதைக் குற்றமாகப் பார்க்காமல் குழந்தையின் பெற்றோரிடம் பேசி, எழுதி வாங்கி அனுப்பி வைப்பதால்தான் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டத்தை உருவாக்கி நூறு ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்ற முடியாமல் நாம் போராடி வருகிறோம்'' என்று விளக்குகிறார் குழந்தைத் திருமண தடுப்பு செயல்பாட்டாளர் கீர்த்தி பாரதி. என்ன தீர்வு? குழந்தைத் திருமணத்தை குற்றமாகவும் அதைச் செய்து வைப்பவர்களைக் குற்றவாளியாகவும் பார்க்க வேண்டும் என வலியுறுத்தும் பாரதி, அதே வேளையில் குழந்தைத் திருமணம் நடைபெற்றால் அதை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். "இதுவே ஒரே தீர்வு. குழந்தைத் திருமணம் ரத்து செய்யப்படும் எனத் தெரிந்தால் அதைச் செய்யத் தயங்குவார்கள் இதன் வழியாக இந்தியா போன்ற நாட்டில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க முடியும்’’ என்கிறார் பாரதி. குழந்தைத் திருமண தடைச் சட்டத்தில் தண்டனை என்ன? குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006, இந்தியாவில் நாடு முழுவதும் நடைபெறும் திருமணங்களுக்குப் பொருந்தும். இந்தச் சட்டத்தின்படி 21 வயது நிறைவடைந்த ஆண் 18 வயதிற்குக் குறைவான பெண்ணைத் திருமணம் செய்தால் சட்டப்படி அந்த ஆண் தண்டிக்கப்படுவார். அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் திருமணம் செய்து வைக்கும் நபர்களுக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு குழந்தைத் திருமணம் நடக்கிறது என்றாலும் அல்லது குழந்தைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தாலும் அதை உடனடியாக யார் வேண்டுமானாலும் காவல்துறையிடம் புகார் கூறலாம். 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு அழைத்து தகவலைத் தெரிவிக்கலாம். https://www.bbc.com/tamil/articles/c4ng0xpgygxo
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
யாழ் சாவகச்சேரி வைத்தியர் தாக்கப்பட்டார்! வெளியான புதிய கானொளியால் பரபரப்பு
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணி இடம்பெற்றது Published By: VISHNU 06 JUL, 2024 | 01:32 AM முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணியானது வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை (5) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மனித உரிமைகள் சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். குறித்த பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதியில் காப்பற் இடப்பட்ட குறிப்பிட்ட ஒரு பகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் மனித எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இந்த பகுதிக்கு மேலாக புதிதாக தகர கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது பச்சை நிற ஆடைகள் வெளித் தெரிந்திருந்தது.. நாளைய அழ்வின் போது மிகுதி உடற்பாகங்கள் முழுமையாக எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. நாளை காலை மூன்றாம் நாள் அகழ்வு பணி நடைபெற இருக்கின்றது. கொக்குதொடுவாய் மனித புதைகுழி இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பண பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் வியாழக்கிழமை (04) மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (5) இரண்டாம் நாள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/187793
-
தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித்தேர்தலைப் பிற்போடுவதே சிறந்த தெரிவாக அமையும் - சி.வி.விக்னேஸ்வரன்
Published By: VISHNU 06 JUL, 2024 | 01:15 AM (நா.தனுஜா) நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்துவரும் நிலையில், மீண்டும் ஸ்திரமற்ற நிலை தோன்றுவதற்கு வழிகோலும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும், ஆகவே ஜனாதிபதித்தேர்தல்களைப் பிற்போடுவதே தற்போதைய சூழ்நிலையில் சிறந்த தீர்மானமாக அமையும் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித்தேர்தல் நடத்தப்படவேண்டிய தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியானம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ளவாறு ஜனாதிபதித்தேர்தல் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறக்குமாறுகோரி தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் பின்னணியில், தமிழ்த்தேசிய கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதித்தேர்தலைப் பிற்போடுமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அது நாட்டுக்கு நன்மையளிப்பதாகவே அமையுமெனத் தெரிவித்துள்ளார். 'தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித்தேர்தலை நடத்தினால், எந்தவொரு வேட்பாளரினாலும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது. எனவே கட்சிகள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் செயற்படவேண்டியிருக்கும்' எனச் சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், அது தற்போது நாட்டில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஸ்திரத்தன்மையை மாற்றியமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். 'எமது பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் மீண்டும் ஸ்திரமற்றத்தன்மை தோன்றுவதற்கு வழிகோலுவதானது நாட்டின் நலனுக்குப் பாதகமானதாக அமையும். ஜனாதிபதித்தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயகத்துக்கு முரணானதெனில், அவ்வாறு இருக்கட்டும். தற்போதைய சூழ்நிலையில் நாட்டுமக்களின் நிலை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் பாதுகாப்பு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்ததாகும்' எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி எம்மால் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடமுடியாது எனவும், ஆகவே தேர்தல்களைப் பிற்போடுவதே சிறந்த தீர்மானம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இவ்விடயத்தில் இறுதித்தீர்மானம் உயர்நீதிமன்றத்தின் வசமே இருக்கின்றது எனவும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/187790
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
சட்டவிரோத செயற்பாடுகள் தொடரபில் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் அவதானம் செலுத்தவேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Published By: VISHNU 06 JUL, 2024 | 12:55 AM சட்டவிரோத செயற்பாடுகள் தொடரபில் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் கூடிய அவதானம் செலுத்தவேண்டும் என யாழ்ப்பாண ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதிபன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவரும் வடக்கின் ஆளுனருமான திருமதி சாள்ஸின் தலைமையில் வெள்ளிக்கிழமை (5) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த கூட்ட முன்னேற்ரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட வேளை சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலின் முன்னேற்றம் சுண்ணக்கல் அகழ்வு மற்றும் வெளி இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லல் தொடர்பில் ஆராயபட்ட போது குறித்த விடயத்தை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பானவர்கள் என்ற வகையில் பிரதேச செயலாளர்கள், பிரதேசபை சபை செயலாளர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் 80ஆண்டு காலப்பகுதியில் தோண்டப்பட்டதையும் தற்போது தோண்டப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களை நான் நேரில் சென்று பார்த்தபோது உழவு இயந்திரம் ஒன்று எம்மை கண்டு வேகமாக சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய அக்கறை எடுக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிசார் மூப்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுடனர். https://www.virakesari.lk/article/187789
-
நடுவானில் விமானம் குலுங்க இதுதான் காரணம்..! | Flight Turbulence | Captain Arulmani Retd Pilot
ஓய்வுபெற்ற விமானி அருள்மணியின் விளக்கம்.
-
அடுத்த தேர்தலில் விரலில் மை பூச வேண்டிய தேவையில்லை!
தேர்தல்களின் போது விரலில் மை பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 2010-ம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவு கணினி மயமாக்கப்பட்டு வருவதால், ஒருவர் இரு இடங்களில் வாக்களித்ததாகப் பதிவு செய்தால் அவர் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அதன்படி, விரலில் மை பூச வேண்டிய அவசியம் இல்லை அதற்கான செலவை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுப்பதற்காகவே விரல் வண்ணம் பயன்படுத்தப்பட்டது தனி நபர்களின் பதிவை கணினிமயமாக்கி, இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே மாதிரியான பெயர்கள் கண்டறியப்படும் என்றும், அடையாள அட்டை எண்கள் போன்றவை சரிபார்க்கப்படுவதால், இரு இடங்களில் தனிநபரின் வாக்குகள் பதிவாவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, விரலில் மை பூசுதல் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305296
-
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இரு குழந்தைகளுடன் அகதியாக சென்ற பெண் - விசாரணை
06 JUL, 2024 | 09:16 AM ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற 2 குழந்தைகள் மற்றும் அவரது தாய் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (34) அவரது குழந்தைகள் அனுஜா (08) மிஷால் (05) ஆகிய மூவர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சென்றுள்ளனர் இறங்கி உள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த மெரைன் போலீஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில்இ யோகாவள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும் 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவர் அங்கே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்ததும் தெரிய வந்தது. இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் அவர் தமிழகம் வந்ததாகவும் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் மூவரையும் மெரைன் போலீஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனர். https://www.virakesari.lk/article/187799
-
யாரோடும் தேரோடும்
வெள்ளோட்டம் தேர் செய்த ஆசாரியரை வைத்துத் தானே இழுப்பது வழமை.
-
போதனா சிவானந்தன்: பிரிட்டன் நாட்டுக்காக செஸ் விளையாடப் போகும் 9 வயது சிறுமி
பட மூலாதாரம்,SIMON WALKER ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச அளவில் பிரிட்டன் நாட்டுக்காக விளையாட இருக்கும் இளம் வயது விளையாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் போதனா சிவானந்தன். வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவில் வசிக்கும் போதனா, ஹங்கேரியில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுத் தொடரில் பங்கேற்க இருக்கும் பிரிட்டன் பெண்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்த அணியில் இணைவதற்கு முன்பு அணியில் இருந்த இளம் விளையாட்டு வீரான லான் யாவின் வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பிபிசியிடம் பேசிய போதனா, "நேற்று பள்ளியில் இருந்து திரும்பிய பின், இது பற்றி அப்பா என்னிடம் கூறினார். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஒலிம்பியாடிலும் சிறப்பாக விளையாடி மேலும் ஒரு பட்டத்தை வெல்வேன்," என்று கூறினார். பிரிட்டன் நாட்டில் செஸ்ஸில் சாதித்த இளம் வீரர்களில் போதனா மிகச் சிறந்த சாதனையாளர் என செஸ் அணியின் மேலாளர் மால்கம் பெய்ன் குறிப்பிட்டார். "இது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரிட்டனின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் நிச்சயம் வலம் வருவார்," என்றும் அவர் குறிப்பிட்டார். போதனாவின் அப்பா சிவா, இது குறித்துப் பேசும்போது தன்னுடைய மகளுக்கு செஸ்ஸில் இத்தகைய ஆர்வம் எங்கிருந்து வந்தது என்பது புதிராகவே உள்ளது என்றார். "நானும் என் மனைவியும் பொறியாளர்கள். ஆனால் செஸ்ஸில் பெரிய அளவு நாட்டம் இல்லை," என்று பிபிசியிடம் கூறிய அவர், இதற்கு முன்பு ஒரு சில முறை செஸ் விளையாட்டில் பங்கேற்றதாகவும் அதில் மிகவும் மோசமாக விளையாடியதாகவும் குறிப்பிடுகிறார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கொரானா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில்தான் போதனா முதல்முறையாக செஸ் விளையாட ஆரம்பித்துள்ளார். "என் அப்பாவின் நண்பர் இந்தியாவுக்குத் திரும்பும்போது அவருக்குச் சொந்தமான பொருட்களை எங்களிடம் கொடுத்துச் சென்றார். அதில் செஸ் போர்டும் இருந்தது. அப்போது இருந்துதான் நான் செஸ் விளையாடத் துவங்கினேன்," என்று நினைவுகூர்கிறார் போதனா. செஸ் விளையாடுவது கணிதம் கற்றுக் கொள்வதை எளிமையாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எட்டு வயதுக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான உலக சாம்பியன் போட்டிகளில் இருந்த மூன்று பிரிவுகளிலும் போதனா வெற்றி பெற்றார். சில மணிநேரங்கள் நீடிக்கும் க்ளாசிக் பிரிவு, ஒரு மணிநேரம் நீடிக்கும் ரேபிட் பிரிவு, மூன்று நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் ப்ளிட்ஸ் பிரிவு என மூன்று பிரிவுகளிலும் அவர் பட்டத்தைத் தட்டிச் சென்றார். ஹங்கேரிக்கு செல்லும் போதனா அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பள்ளி முடித்து வீடு திரும்பியதும் தினமும் ஒரு மணிநேரம் இதற்கான பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறும் போதனா, வார இறுதி நாட்களில் செஸ் போட்டிகளில் பங்கேற்பதாகவும், போட்டிகள் நடக்காத நேரத்தில் ஒரு மணிநேரத்திற்கு மேல் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார். பிரிட்டன் அணியில் வயதில் மூத்தவர்கள் அதிகம் இருந்தாலும், போதனா மட்டுமே வளர்ந்து வரும் இளம் வீரர் ஆவார். கொரோனா ஊரடங்கு, செஸ் விளையாட்டில் சாதிக்கும் பெண்ணின் வாழ்க்கையைச் சித்தகரிக்கும் வகையில் 'நெட் ஃப்ளிக்ஸில்' வெளியான 'தி குயின்ஸ் காம்பிட்' திரைப்படம் இது இரண்டும் இளம் தலைமுறையினர் மத்தியில் செஸ் பிரபலமாகியதற்கு காரணம் என்று குறிப்பிடுகிறார் பெய்ன். சர்வதேச செஸ் போட்டியில் மிக உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை போதனா நிச்சயமாக வெல்வார் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகிறார் பெய்ன். கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளியான அபிமன்யூ மிஸ்ரா, அவருடைய 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற சாதனையை நிகழ்த்தினார். தற்போது போதனா, தன்னுடைய 10 வயதில், மிஸ்ராவின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார். இன்னும் ஒரே ஆண்டில், தன்னுடைய ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பு இந்தச் சாதனையை நிகழ்த்த தன்னைத் தயார்படுத்தி வருகிறார் போதனா. https://www.bbc.com/tamil/articles/cgrly60r649o