Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 04 JUL, 2024 | 02:02 AM 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் புதன்கிழமை (03) தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது 67) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றையதினம் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள காணிக்குள் சென்று பனையோலை எடுத்தவேளை அதனுள் இருந்த கருங்குளவி அவர்மீது கொட்டியது. இந்நிலையில் அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/187628
  2. 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனவே உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும். அதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305195
  3. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி அண்ணை.
  4. Published By: VISHNU 04 JUL, 2024 | 02:03 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு ஆளுநர் , நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஆளுநருபழக்கு களவிஜய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களைச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187629
  5. சம்பந்தனின் பூதவுடலுக்கு யாழில் நாளை அஞ்சலி Published By: VISHNU 03 JUL, 2024 | 08:20 PM மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் 04ஆம் திகதி வியாழக்கிழமை யாழில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் காலை ஒன்பது மணி முதல் மாலை 4மணி வரையில் அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதற்காக அன்னாரது பூதவுடல் விமானம் மூலம் கொழும்பில் இருந்து கொண்டு வரப்படவுள்ளதோடு இன்று மலையில் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகளுக்காக மீண்டும் விமானம் ஊடாக கொண்டு செல்லப்படவுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைவராக அடையாளம் காட்டப்பட்ட அரசியல் பெருந்தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தனின் புகழுடலை கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அவரது புகழுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் 04, 05ஆம் திகதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187624
  6. 03 JUL, 2024 | 03:43 PM பொதுத்தேர்தல் வாக்களிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் நோக்கங்கள் குறித்த புதிய ஆய்வினை மேற்கொண்டுள்ள ஐஎச்பி நிறுவனம் Institute for Health Policy’s மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்குமான ஆதரவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் 34 வீதமான மக்களின் ஆதரவு காணப்படுவதாக ஐஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு 13 வீதமானவர்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆறு வீதம் இலங்கை தமிழரசுக்கட்சி நான்கு வீதமும் ஆதரவு காணப்படுவதாக ஐஎச்பி தெரிவித்துள்ளது. மே மாதம் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஐஎச்பி தெரிவித்துள்ளது. மே மாத மதிப்பீடுகள் மற்றும் நான்கு பிரதான கட்சிகளிற்கும் 1-5 வீத தவறுகளிற்கான சாத்தியங்களுடன் தொடர்புபட்டவை என ஐஎச்பி தெரிவித்துள்ளது. இந்த மே அறிக்கை ஒக்டோபர் 2021 முதல் இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட 17751 நேர்காணல்களையும் மே 204 இல் மேற்கொள்ளப்பட்ட 503 நேர்காணால்களையும் அடிப்படையாக கொண்டது என கருத்துக்கணிப்பை மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/187605
  7. யானைத் தந்தத்தில் பவுடர், காண்டாமிருக கொம்புகளில் கூழ் - கடத்தல்காரர்களின் புதிய உத்திகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யானை தந்தங்களை ஆபரணங்களாக மாற்றி கடத்தல்காரர்கள் ஏற்றுமதி செய்கின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் நிருபர், பிபிசி உலக சேவை 6 மணி நேரங்களுக்கு முன்னர் யானையின் தந்தங்கள் பவுடராக மாறுகிறது, காண்டாமிருக கொம்புகள் அரைக்கப்பட்டு கூழாக்கப்படுகிறது, பாம்புகள் உருளைக் கிழங்கு சிப்ஸ் கேன்களில் அடுக்கி வைக்கப்படுகின்றன. காட்டுயிர் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் சில கடத்தல் நுட்பங்கள் இவை. இதை அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் வெளியிட்டனர். காட்டுயிர்களைக் கடத்துவதற்கான இத்தகைய சட்டவிரோத உத்திகள் இதோடு முடிவதில்லை. உயிருள்ள விலங்குகள் அஞ்சல் அல்லது கூரியர் மூலம் வேறு இடத்திற்கு அனுப்பப்படுகின்றன, மேலும் சோதனை ஸ்கேனர்களில் இருந்து தப்பிப்பதற்காக ஈல்கள் எனப்படும் கண்ணாடி மீன் இனங்கள் உருமறைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன. உலகளாவிய சட்டவிரோத காட்டுயிர் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கும்போது, மிகப்பெரிய தடையாக இருப்பது காட்டுயிர் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வித்தியாசமான கடத்தல் நுட்பங்கள்தான் என்று பாதுகாவலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடத்தப்படும் பொருட்களை மறைத்து அல்லது வேறு ஒரு சட்டரீதியான பொருளாக மாற்றிக் கடத்துகின்றனர். மே மாதம் வெளியிடப்பட்ட காட்டுயிர் குற்றங்கள் குறித்த சமீபத்திய ஐ.நா அறிக்கையின்படி, காட்டுயிர்களைக் கடத்துபவர்கள் புதிய சட்டங்கள் மற்றும் மிகவும் கடுமையான விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் இருபது ஆண்டுகளாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், காட்டுயிர் கடத்தல் உலகம் முழுவதும் தொடர்கிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்புக்கு சட்டவிரோத வர்த்தகம் நடப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. "சமீபத்திய காட்டுயிர் கடத்தல்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக அதிநவீன மற்றும் மாறுபட்ட கடத்தல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர்" என்று ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் உலகளாவிய சட்ட அமலாக்க நிபுணரான ஜிகியாங் தாவோ பிபிசியிடம் கூறினார். கடந்த 2022ஆம் ஆண்டில் சுங்கச் சாவடிகளில் 3,428 காட்டுயிர்கள் விலங்கு வர்த்தகத்தின்போது பறிமுதல் செய்யப்பட்டதாக உலக சுங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இது 2021இல் 3,316 ஆக இருந்தது. மாட்டின் கொம்புகள் குவியலில் ‘கருப்பு தந்தங்கள்’ பட மூலாதாரம்,PRESS OFFICE/BOGOTA ENVIRONMENTAL AGENCY படக்குறிப்பு,காட்டுயிர்களை கடத்துபவர்கள் புதிய சட்டங்கள் மற்றும் மிகவும் கடுமையான விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். கடந்த மார்ச் மாதம், வடகிழக்கு வியட்நாமில் உள்ள ஹை போங் நகரில் உள்ள சுங்க அதிகாரிகள், நைஜீரியாவில் இருந்து வந்த வாகனத்தில் ஒரு வித்தியாசமான பொருளைக் கண்டுபிடித்தனர். கன்டெய்னர்கள் முழுவதும் நிரப்பப்பட்டிருந்த மாட்டு கொம்புகளின் குவியலுக்குக் கீழே, கருப்பு தந்தங்கள் போல் ஏதோ இருந்ததைப் பார்த்தனர். அவர்கள் கூர்ந்து கவனித்தபோது, அந்தப் பொருள்கள் உண்மையில் கறுப்பு வர்ணம் பூசப்பட்ட தந்தங்கள் என்பதைக் கண்டுபிடித்தனர். அதில் 550 தந்தங்கள் இருந்தன. அவை ஏறக்குறைய 1,600 கிலோ எடை இருந்தது. சட்டவிரோத காட்டுயிர் வர்த்தகத்தை ஆய்வு செய்யும் வல்லுநர்கள் கருப்பு வர்ணம் பூசப்பட்ட தந்தம், மாட்டின் கொம்புகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது இதுவே முதல் நிகழ்வாக இருக்கலாம் என்றனர். இந்த தந்தக் கடத்தல் விவகாரத்தில் நைஜீரியாவின் சுங்க நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பான காட்டுயிர் நீதி ஆணையம், நைஜீரியாவில் தந்தம் ஏற்றுமதி தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறியது. ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று சட்டவிரோத வர்த்தகம். கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை சுமார் 90% குறைந்துள்ளதால், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) வெளியிடும் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள அழிந்து வரும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. காட்டுயிர்கள் மற்றும் தாவரங்களின் (CITES) அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் கீழ், அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது அந்த இனங்களின் எண்ணிக்கையை மீட்டெடுக்க அனுமதிக்கும். அஞ்சல் மூலம் அனுப்பப்படும் விலங்குகள் பட மூலாதாரம்,AUSTRALIAN DEPARTMENT OF CLIMATE CHANGE, ENERGY, THE ENVIRONMENT AND WATER படக்குறிப்பு,விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தங்கள் சொந்த கழிவுகளோடு அடைத்து வைக்கப்படுகின்றன சட்டவிரோத காட்டுயிர் கடத்தலைக் கண்காணிக்கும் அமைப்புகளின்படி, கடத்தல்காரர்கள் அதிகளவில் அஞ்சல் மற்றும் கூரியர் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024க்கு இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள தபால் நிலையங்களைப் பயன்படுத்திப் பல்வேறு வகையான பல்லிகளைக் கடத்த முயற்சிகள் நடந்தன. ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகத்தின் கூற்றுபடி, ஊர்வன உயிரினங்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், காலுறைகளுக்குள் முடிச்சு போடப்பட்டுக் கிடந்ததாகவுவும், பிளாஸ்டிக் பொம்மைகளுடன் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றது. இதுபோன்ற சூழல்களில் "விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தங்கள் சொந்தக் கழிவுகளோடு அடைத்து வைக்கப்படுகின்றன” என்று அமைச்சகம் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. "சில ஊர்வனங்கள் ரப்பர் பொம்மை விலங்குகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டன." சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கடத்தல்காரர், ஏழு தனித்தனி பார்சல்களில் 43 பல்லிகளை (நீல நாக்கு அரணை, சிங்கிள் பேக் அரணை மற்றும் ஈஸ்டர் வாட்டர் டிராகன்கள் உள்ளிட்ட பல்லி வகைகள்) ஹாங்காங்கிற்கு அனுப்ப முயன்றார். பட மூலாதாரம்,AUSTRALIAN DEPARTMENT OF CLIMATE CHANGE, ENERGY, THE ENVIRONMENT AND WATER படக்குறிப்பு,சமீப வருடங்களில் பல்லி உள்ளிட்ட சிறிய ஊர்வன கடத்தல் அதிகரித்துள்ளது பல்லி போன்ற சிறிய ஊர்வனங்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது, இதனால் அவை அதிகளவில் கடத்தப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகளாவிய அஞ்சல் சேவைகளின் வலையமைப்பான யுனிவர்சல் போஸ்டல் யூனியனின் அஞ்சல் பாதுகாப்புத் திட்ட மேலாளரான டான் வில்க்ஸ் கருத்துப்படி, அஞ்சல் மூலம் கொண்டு செல்லப்படும் காட்டுயிர்கள் பெரும்பாலும் அளவில் சிறியவையாகவும், உயிருள்ள விலங்குகளாகவும் இருக்கின்றன. "குற்றவாளிகள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத கடத்தல்களை மறைக்கின்றனர். குழந்தைகளுக்கான பொம்மைகளைப் பயன்படுத்துவது ஒரு வழக்கமான நுட்பம்” என்று வில்க்ஸ் பிபிசியிடம் கூறினார். உலக சுங்க அமைப்பின் கூற்றுப்படி, சிறிய அஞ்சல் பார்சல்களுக்குள் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பேக்கிங் செய்வது 2022இல் அவற்றைக் கடத்துவதற்கான மிகவும் பிரபலமான வழியாக இருந்தது. அந்த ஆண்டில் பிடிபட்ட கடத்தல் சம்பவங்களில் 43% சிறிய அஞ்சல் மூலமாக நடந்தவை. இந்த அமைப்பின் சட்டவிரோத வர்த்தக அறிக்கை 2022இன் தரவுகளின்படி, 2021 மற்றும் 2022க்கு இடையில் அஞ்சல் பறிமுதல் 17% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உருமாற்றி அனுப்பப்படும் பொருட்களின் அளவு 7% அதிகரித்து மொத்தம் 6,453 ஆக உள்ளது. பிலிம்-ரோல்களில் விஷத் தவளைகள் பட மூலாதாரம்,BOGOTA ENVIRONMENTAL AGENCY படக்குறிப்பு,மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக டார்ட் தவளைகளை அவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகளைத் தயாரிக்க முடியுமா என்று ஆய்வு செய்யப் பயன்படுத்துகின்றனர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் பறிமுதல் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் அதிநவீன உத்திகளைப் பயன்படுத்தி காட்டுயிர் கடத்தல்காரர்கள் கடத்தல் சம்பவங்களை மேற்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கடத்தல் அதிகம் நடக்கும் பகுதிகளைத் தாண்டி பிற பகுதிகளிலும் கடத்தம் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. பொகோடா விமான நிலையத்தில் கொலம்பிய அதிகாரிகளால் ஜனவரி மாதம் ஃபிலிம்-ரோல் கொள்கலன்களில் 130 விஷத் தவளைகள் (dart frogs) மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். டிஜிட்டல் கேமராக்களின் வருகைக்குப் பிறகு ஃபிலிம்-ரோல் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஃபிலிம் ரோல்கள் இருந்த கொள்கலன்களை சோதனை நடத்தி தவளைகளைக் கடத்தும் முயற்சியைக் கண்டுபிடித்தனர். கொலம்பிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுபடி, IUCN அழிந்து வரும் உயிரினங்களுக்கான சிவப்புப் பட்டியலில் இருக்கும் இந்தத் தவளைகள் பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட இருந்தன. "அடைத்து வைக்கப்பட்டிருந்த தவளைகள் ஆபத்தான நிலையில் இருந்தன... அவை முற்றிலும் நீரிழப்பு மற்றும் மன அழுத்தத்துடன் இருந்தன" என்று அதிகாரிகள் ஓஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக டார்ட் தவளைகளை அவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகளைத் தயாரிக்க முடியுமா என்று ஆய்வு செய்ய பயன்படுத்துகின்றனர், இருப்பினும் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தவளைகள் எதற்காக கடத்தப்பட்டது என்னும் சரியான காரணம் தெளிவாக இல்லை. சுறா துடுப்புகள் கடத்தல் பட மூலாதாரம்,@TRAFFIC படக்குறிப்பு,சுறா துடுப்பு சூப் என்னும் உணவு வகை, உலகின் பல பகுதிகளில் மிகவும் விரும்பப்படும் உணவாகும் தரவுகளின்படி 500க்கும் மேற்பட்ட சுறா வகைகள் உள்ளன. இந்த இனங்கள் பலவற்றின் துடுப்புகளின் (shark fins) சர்வதேச வர்த்தகம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அழிந்து உயிரினங்கள் பட்டியலில் இருக்கும் சுமார் 60 சுறா வகைகளின் பாகங்களை விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் கடத்தல்காரர்கள் சுலபமாக இயங்குவதாக காட்டுயிர் வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்ஆபிரிரிக்காவில் ஒரு வழக்கு கண்டறியப்பட்டது, சுங்க அதிகாரிகள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டு வகையான சுறா துடுப்புகளின் கலவையைக் கண்டுப்பிடித்தனர். சட்டப்பூர்வமாக ஏற்றுமதிக்கு அனுமதி இருக்கும் சுறாக்களின் துடுப்புகள் மற்றும் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட சுறா துடுப்புகள் கலவையாக இருந்தன. "அழிந்து வரும் சுறா இனங்களின் துடுப்புகளை சட்டப்பூர்வமாக வர்த்தகம் செய்யப்படும் இனங்களின் துடுப்புகள் என்று குற்றவாளிகள் வாதிடுவார்கள்" என்று காட்டுயிர் குற்றங்களை ஆராய்ந்து சட்ட அமலாக்க மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கும் குழுவான டிராஃபிக் இன்டர்நேஷனலின் நிபுணர் சாரா வின்சென்ட் கூறினார். "எனவே, சுறா ரகங்களின் துடுப்புகளை வித்தியாசப்படுத்திப் பார்ப்பது சட்ட அமலாக்கத் துறைக்குத் தெரிந்திருப்பது மிகவும் முக்கியம்." சுறா துடுப்பு சூப் என்னும் உணவு வகை, உலகின் பல பகுதிகளில் மிகவும் விரும்பப்படும் உணவு. இது பெரும்பாலும் சுறா துடுப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், இதுபோன்று கலவை செய்து சுறாக்கள் மட்டுமின்றி, மற்ற பொருள்களையும் கடத்துகின்றனர் என்று ஐரோப்பிய காட்டுயிர் குற்றவியல் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். "ஐரோப்பாவில் அழிந்து வரும் மரங்கள் (timbers) உள்ளன, ஆனால் கடத்தல்காரர்கள் அவற்றைச் சாதரண மரங்களுடன் கலப்பதில் மிகவும் திறமையானவர்கள். கலப்படம் செய்த பிறகு அவற்றின் வர்த்தகம் அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய சட்டவிரோத பொருட்கள் ஐரோப்பா முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன" என்று யூரோபோலின் (Europol) முன்னாள் புலனாய்வாளர் ஜார்ஜ் ஜீசஸ் கூறினார். ஆர்க்கிட் மலர்களா அல்லது உருளைக் கிழங்கா? பட மூலாதாரம்,BHAKTA BAHADUR RASKOTI படக்குறிப்பு,பல வகையான ஆர்கிட் மலர்களின் வர்த்தகம் தடை செய்யப்பட்டிருப்பதால், கடத்தல்காரர்கள் அவற்றைக் கடத்தப் பல்வேறு வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். மேற்கு நேபாள மாவட்டமான லாம்ஜங் மாவட்டத்தில் 400 கிலோ உருளைக் கிழங்கைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் டிரக்கை டிசம்பர் 23, 2018 அன்று அதிகாரிகள் நிறுத்தினர். அவை முதலில் பார்க்கும்போது, நாட்டின் மத்திய மலைப் பகுதியில் பயிரிடப்படும் உருளைக் கிழங்குகளாகத் தோன்றின. இருப்பினும், கொஞ்சம் உற்று நோக்கும்போது, அவர்கள் சந்தேகமடைந்தனர் மற்றும் தாவர ஆராய்ச்சியாளர் பக்த ரஸ்கோடியிடம் சந்தேகத்தை உறுதிப்படுத்தினர். முனைவர் பட்டம் பெற்ற ஆர்க்கிட் (orchid bulbs) நிபுணரான டாக்டர். ரஸ்கோடி பிபிசியிடம் கூறுகையில், "அது காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் (CITES) பட்டியலிடப்பட்டுள்ள `ஆர்க்கிட்’ மலர் வகை என்பதை நான் அவர்களுக்கு உறுதிப்படுத்தினேன், அதன் வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது" என்று விளக்கினார். “நான் கடத்தல்காரரிடம் கேட்டபோது, அவர் இதுபற்றி எனக்குt தெரியாது, யாரோ ஒருவரின் பொருட்களைக் கொண்டு செல்கிறேன் என்று கூறினார்.” "இந்த ஆர்க்கிட்கள் சீனாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் கூறினார்" என்று விவரித்தார். ஆர்க்கிட்கள் உலகில் அதிகம் கடத்தப்படும் தாவரங்களில் ஒன்று. ஏனெனில் அவற்றுக்கு அதிக தேவை உள்ளது - புதிதாகப் பறிக்கப்பட்ட பூக்கள் மத நோக்கங்களுக்காக, பானங்கள் மற்றும் உணவுகளில் சுவைகளுக்காக (உதாரணமாக, வெண்ணிலா ஐஸ்கிரீமில்), மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆர்க்கிட் இனங்களின் வர்த்தகம் தடை செய்யப்பட்டதாக இருப்பதால், கடத்தல்காரர்கள் தாவரங்களைக் கடத்துவதற்கு அவற்றின் வேர்களைப் பொடி செய்வது போன்ற பிற வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர்" என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் போக்குவரத்து தொடர்பான மூத்த காட்டுயிர் ஆய்வாளர் எலிசபெத் ஜான், "கடத்தல் முறைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன" என்று கூறினார். "அதனால்தான் அமலாக்க முகமைகள் இந்தக் கடத்தல் சம்பவங்கள் எப்படி நடந்தது என்பதை பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது எப்போதும் முக்கியமானது, இதனால் கடத்தல்காரர்களுக்கு எதிரான போராட்டம் ஒன்றுபட்டதாக இருக்கும்" என்றார். காலப்போக்கில், தகவல் பகிர்வு அதிகரித்தது, எனவே அதிக பறிமுதல்களுக்கு வழிவகுத்தது. உலக சுங்க அமைப்பின் 2022 சட்டவிரோத வர்த்தக அறிக்கை காட்டுயிர்கள் மற்றும் மரக்கட்டைகள் கைப்பற்றுவதில் ஒரு மேல்நோக்கிய போக்கை உறுதிப்படுத்தியது. 2022ஆம் ஆண்டில் பறிமுதல் செய்தல் 2020 புள்ளிவிவரங்களைவிட 10% அதிகரிப்பையும், 2021 உடன் ஒப்பிடும்போது 56% அதிகரிப்பையும் காட்டுகிறது. ஆனால் அதிகரித்த பறிமுதல்கள் ஒரு ஆபத்தான போக்கையும் சுட்டிக்காட்டுகின்றன. "சட்டவிரோதமான காட்டுயிர்கள் மற்றும் மரங்களின் வர்த்தகம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, மேலும் இந்த சட்டவிரோத குற்றத்தைத் தடைசெய்யும் சட்டங்களில் இருந்து தப்பிக்க கடத்தல்காரர்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்," என்று அறிக்கை கூறுகிறது. காட்டுயிர் வர்த்தகத்தில் உள்ள நிபுணர்களின் கூற்றுப்படி, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு கடத்தல்காரர்களால் எப்போதும் உருவாகி வரும் புதிய உத்திகளைவிட முன்னேறப் போதுமான ஆதாரங்கள் மற்றும் பயிற்சி இருப்பதை உறுதி செய்வதில் சிரமம் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/ck5gj87gd1ko
  8. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலம் குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல வர்த்தகரான சி.டி லெவனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயர்நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைகால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305181
  9. வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினரின் பெயரில் யாழில் விவாகரத்து : சட்டத்தரணியில் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல்! Published By: DIGITAL DESK 7 03 JUL, 2024 | 03:14 PM வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் திருமணமாகி இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையில், சில வருடங்களுக்கு முன்னர் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் இத்தாலியில் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கணவன், சாவகச்சேரி பகுதியில் வசிக்கும் தனது சகோதரியிடம், தமக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்றமையால், யாழ்ப்பாணத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து, விவாகரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். அதனை அடுத்து சகோதரி, யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவரை நாடி, வெளிநாட்டில் உள்ள தம்பதியினருக்கு யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்று தருமாறு கோரியுள்ளார். அதனை அடுத்து சட்டத்தரணி, தனது கனிஷ்ட சட்டத்தரணிகள் இருவரை கணவனுக்கு ஒருவரையும், மனைவிக்கு ஒருவரையும் நியமித்து சாவகச்சேரி நீதிமன்றில் விவகாரத்திற்கு விண்ணப்பித்து, வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து, நாட்டில் இல்லாத இருவருக்கும் விவாகரத்து பெற்றுக்கொடுத்துள்ளார். விவாகரத்து பெற்று சில காலத்தின் பின்னர், இத்தாலியில் வசித்து வந்த பெண், யாழ்ப்பாணம் வருகை தந்து, பிறிதொரு சட்டத்தரணி ஊடாக தனது விவாகரத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை, அப்பெண்ணிற்கு ஏற்கனவே விவாகரத்து கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் இல்லாத தனக்கு, தன்னுடைய சம்மதம் எதுவும் பெறப்படாத நிலையில் எவ்வாறு விவாகரத்து வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் விவாகரத்து நடவடிக்கையை முன்னெடுத்த சட்டத்தரணியின் அலுவலகத்தை சோதனையிட நீதிமன்ற அனுமதி பெற்ற பொலிஸார் அலுவலகத்தினை சோதனையிட்டதுடன், கணனி உள்ளிட்டவையுடன் அலுவலகத்தில் உள்ள கோப்புக்களையும் சோதனையிட்டனர். https://www.virakesari.lk/article/187567
  10. பியூமி ஹன்சமாலியின் அழகுசாதன பொருள் விற்பனை நிலையம் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை! 03 JUL, 2024 | 04:07 PM சூட்சுமமான குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான அழகுசாதன பொருட்கள் அவரது நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான அழகுசாதன பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், பியூமி ஹன்சமாலியினால் நடத்தப்பட்டு வரும் வியாபாரங்களின் வருமான வரி செலுத்துதல் மற்றும் கணக்கு வழக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/187596
  11. தமிழ்மக்களின் உரிமைகளை ஆதரிப்பது அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியை உறுதி செய்வது குறித்து கென்சவேர்ட்டிவ் கட்சி உறுதி - பிரிட்டன் தேர்தலிற்கு முன்னர் கட்சியின் வேட்பாளர் எலியட் கொல்பேர்ன் Published By: RAJEEBAN 03 JUL, 2024 | 09:09 PM தமிழ்மக்களின் உரிமைகளை ஆதரிப்பது மற்றும் வரலாற்று அநீதிகளிற்கு தீர்வை காண்பது குறித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது என கென்சவேர்ட்டிவ் கட்சியின் கார்சல்டன் மற்றும் வலிங்டன் வேட்பாளர் எலியட் கோல்பேர்ன் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக தமிழ் கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் சமூகத்தின் நீண்டகால சகா என்ற அடிப்படையில் தமிழ் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்தும் பகிர்ந்துகொள்ளப்பட்ட விழுமியங்கள் பரஸ்பர மதிப்பு நீதி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக போராடுவது குறித்தும் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நாங்கள் மிக முக்கியமான தேர்தலை நெருங்கும் இவ்வேளையில் நாங்கள் ஒன்றிணைந்து சாதித்த முன்னேற்றங்கள் குறித்தும் முன்னோக்கி பயணிப்பதற்கான பாதை குறித்தும் தமிழ் சமூகம் சிந்திப்பது அவசியமாகும். தமிழ் மக்களிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிப்படுத்திய கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களிற்கு ஐக்கிய நாடுகளில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்கி வந்துள்ளது. இந்த கொள்கைகளிற்கான எங்கள் அர்ப்பணிப்பு குறையவில்லை தடம் மாறவில்லை. இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவது குறித்த துணிச்சலான வாக்குறுதிகளை தொழில்கட்சி வழங்கியுள்ள அதேவேளை உண்மையான மாற்றத்திற்கு சொல்லாட்சியை விட அதிகம் தேவை என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும் சர்வதேச அரங்கில் நிலையான பயனுள்ள நிலையான நடவடிக்கை அவசியம். இவ்வாறான நடவடிக்களை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. தொடர்ந்தும் முன்னெடுக்கும். உதாரணத்திற்கு எங்களின் 11மில்லியன் யூரோ இலங்கையின் யுத்தத்தின் பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கு உதவும். மேலும் இந்த நிதி உதவி சிவில் சமூகத்திற்கு உதவும் ஜனநாயக செயற்பாடுகளிற்கும் உதவும். தமிழர் நினைவுநாள் என்பது உயிர் இழந்தவர்களின் நினைவுகளை போற்றும் மற்றும் தமிழ் சமூகத்தின் தொடரும் வேதனையை அங்கீகரிக்கும் ஒரு புனிதமான நிகழ்வாகும். எங்களை துயரத்திலும் நீதியை காண்பதற்கான உறுதிப்பாட்டிலும் இணைக்கும் நாள். கன்சவேர்ட்டிவ் கட்சி இந்த நாளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து உங்களுடன் இந்த நாள் குறித்த நினைவிலும் உறுதிப்பாட்டிலும் உங்களுடன் இணைந்துள்ளது. தமிழர்களை உரிமைகளை ஆதரிப்பதிலும் வரலாற்று அநீதிகளிற்கும் எங்களின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து பெருமிதம் கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/187626
  12. Tamils in Britain Election: நாடாளுமன்றத்தில் நுழைய இவர்கள் ஆசைப்படுவது ஏன்? பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் ஜூலை 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பல்வேறு தொகுதிகளில் எம்.பி.க்கள் பதவிக்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்கள் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டது என்ன?
  13. பட மூலாதாரம்,API கட்டுரை தகவல் எழுதியவர், வில் கிராண்ட் பதவி, மத்திய அமெரிக்கா மற்றும் கியூபா செய்தியாளர், பிபிசி நியூஸ், மெக்ஸிகோ 3 ஜூலை 2024, 15:00 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் ’பெரில்’ சூறாவளி தனது மூர்க்கமான முழு சக்தியுடன் யூனியன் தீவை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவின் அளவைக் கண்டு கத்ரீனா காய் அதிர்ச்சியடைந்தார். கரீபியனில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் தீவுக் கூட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தீவில் ஏறக்குறைய எல்லா கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன அல்லது மோசமாகச் சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார். “பெரில் சூறாவளி கரையைக் கடந்த பிறகு யூனியன் தீவு பயங்கரமான நிலையில் உள்ளது. உண்மையில் கிட்டத்தட்ட முழு தீவும் தரைமட்டமாகியுள்ளது," என்று கோய் ஒரு வீடியோ செய்தியில் கூறினார். "ஒரு கட்டடம்கூட இப்போது இல்லை. வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, சாலைகள் தடைப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் தெருக்களில் விழுந்துள்ளன.” மீனவரும், மீன்பிடி வழிகாட்டியுமான செபாஸ்டின் சைலி இதை ஆமோதிக்கிறார். “எல்லாமே போய்விட்டது. நான் இப்போது வாழ்வதற்குக்கூட எந்த இடமும் இல்லை, ”என்று அவர் கூறினார். கடந்த 1985 முதல் யூனியன் தீவில் அவர் வசித்து வருகிறார். 2004இல் இவான் சூறாவளி வீசியபோதும் அவர் அங்கு இருந்தார். ஆனால் "பெரில் சூறாவளியை எதனுடனும் ஒப்பிட முடியாது. அது முற்றிலும் வேறுவிதமாக, மோசமாக இருந்தது" என்று அவர் கூறினார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சூறாவளியின் பயங்கரமான அனுபவம் "ஒரு மாபெரும் சூறைக்காற்று கடந்து சென்றது போல் இருந்தது. யூனியன் தீவின் 90 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது." அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தின் அளவு அவரது குரலில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. "நான் எனது மனைவி மற்றும் மகளுடன் இருந்தேன். உண்மையைச் சொல்வதானால் நாங்கள் தப்பிப் பிழைப்போம் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர். அவரது உறவினர் அலிஸி தனது குடும்பத்துடன் ஒரு ஹோட்டலை நடத்துகிறார். ’பெரில்’ சூறாவளி அவர்களின் நகரத்தைக் கடந்து சென்றபோது ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தை அவர் விவரித்தார். நீடித்த, கொடுங்காற்று தள்ளித் திறக்காமல் இருக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு எதிராக நாற்காலி, மேசைகளைத் தள்ளி வைக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். "காற்றின் அழுத்தம் மிகவும் தீவிரமாக இருந்தது. அதை எங்கள் காதுகளில் உணர முடிந்தது. மேற்கூரை பிய்த்துக்கொண்டு வேறொரு கட்டடத்தில் சென்று மோதுவதை எங்களால் கேட்க முடிந்தது. ஜன்னல்கள் உடைந்து கட்டடம் முழுவதும் வெள்ளம் நிரம்பியது." பட மூலாதாரம்,ALIZEE SAILLY "இது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. எல்லோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்." இயற்கை விவசாயம் செய்பவரும், தேனீ வளர்ப்பவரும், மீனவருமான செபாஸ்டீனின் இரண்டு பண்ணைகள் மற்றும் அவரது தேன் கூடுகளும் முற்றிலுமாக நாசமாகியுள்ளன. இருப்பினும் தீவிலுள்ள மக்கள் சமூகங்களின் உடனடி முன்னுரிமை தங்குமிடம்தான் என்று செபாஸ்டீன் தெரிவித்தார். மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க மரம் மற்றும் பிளாஸ்டிக் தாள்களைச் சேகரிக்க முயல்கின்றனர். "கூடவே தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார். யூனியன் தீவில் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், பால் பொடி, சுகாதாரப் பொருட்கள், முதலுதவிப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் வரை பல பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக அலிஸி சைலி கூறினார். 'வார்த்தைகளில் விவரிக்க முடியாத பேரழிவு' பட மூலாதாரம்,ALIZEE SAILLY மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் தொடங்கப்பட்ட ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இணைவதன் மூலம் செய்திகளை மட்டுமே அவரால் அனுப்ப முடிந்தது. செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் அரசு, அதன் பங்கிற்கு பிரச்னையின் அளவை அங்கீகரிப்பதாகக் கூறுகிறது. ஒரு காலை உரையில், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் பிரதமர் ரால்ஃப் கோன்சால்வ்ஸ் கரீபியன் தேசம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியின் உணர்வைச் சுருக்கமாகக் கூறினார்: "பெரில் சூறாவளி - இந்த ஆபத்தான மற்றும் பேரழிவு சூறாவளி - வந்து போய்விட்டது. அது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழிவை ஏற்படுத்தியுள்ளது. நம் நாடு முழுவதும் வலியையும் துன்பத்தையும் விட்டுச் சென்றுள்ளது,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். சூறாவளிக்குப் பிந்தைய முன்னுரிமைகளின் நீண்ட பட்டியலைச் சமாளிக்கத் தனது நிர்வாகம் முடிந்தவரை விரைவாகச் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார். யூனியன் தீவில் அரசிடம் நிதி, வளங்கள் மற்றும் மனிதவளம் உள்ளதா என்பதில் சில சந்தேகங்கள் உள்ளன. "அவர்கள் எங்களுக்கு உதவ ராணுவத்தையும் கடலோர காவல் படையையும் அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் தீவை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று செபாஸ்டின் கூறினார். "இதற்கு பல கோடிக்கணக்கான டாலர்கள் தேவைப்படும். கட்டியெழுப்ப ஓராண்டு அல்லது அதற்கும் மேல் எடுக்கும் மற்றும் சர்வதேச உதவி தேவைப்படும்," என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,API கரீபியன் புலம்பெயர்ந்தோரை தங்களால் இயன்ற விதத்தில் உதவி செய்யுமாறு யூனியன் ஐலண்ட் சுற்றுச்சூழல் கூட்டணியின் இயக்குநரான கத்ரீனா கோய் கேட்டுக் கொண்டார். “எங்களுக்கு அதிக அளவில் உதவி தேவைப்படுகிறது. எமர்ஜென்சி உபகரணங்கள், உணவு, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, இவை அனைத்தும் இந்த நேரத்தில் தேவை. பல ஆண்டுகளாக, கரீபியனில் உள்ள சிறிய தீவு சமூகங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமான யூனியன் தீவின் நீர் பாதுகாப்பிற்காக கோய் முக்கியமான பணிகளை மேற்கொண்டுள்ளார். பெரில் சூறாவளி காரணமாக அந்தப் பணி முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று அவரது சர்வதேச சகாக்கள் கூறுகிறார்கள். பெரில் சூறாவளி திங்களன்று நான்காவது வகை சூறாவளியாக நிலத்தைத் தாக்கியது. 150mph (மணிக்கு 240 கிமீ) வேகத்தில் காற்று வீசியது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். பலர் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், கிரெனடா மற்றும் செயின்ட் லூசியாவில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர். தீவின் ஒவ்வோவோர் அங்குலத்திலும் குழப்பம் மற்றும் வீடற்ற நிலைமை உள்ள போதிலும் விஷயங்கள் இதைவிட மோசமாகவில்லை என்பதற்கு செபாஸ்டியன் சைலி கடவுளுக்கு நன்றி கூறுகிறார். "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம். பொருள் இழப்பு மட்டுமே நிகழ்ந்துள்ளது," என்றார் அவர். "நாங்கள் எதிர்கொண்டு, கடந்து வந்த அந்த சக்தியைப் பார்த்த பிறகு, இன்று என் அண்டைவீட்டார் இன்னும் இங்கே இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c134063d0dlo
  14. நீட் எனும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது - விஜய்! 03 JUL, 2024 | 03:24 PM 'நீட் எனும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற 'ஓ' லெவல் மற்றும் 'ஏ' லெவல் தேர்வுகளில் அதிக பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்த சென்னை உள்ளிட்ட பத்தொன்பது மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கு பற்றி சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்குகிறார். இதற்கு முன்னதாக அந்நிகழ்வில் நடிகர் விஜய் பேசியதாவது, நீட் தேர்வால் தமிழக கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. நீட் தேர்வில் மூன்று பிரச்சனைகள் உள்ளது. நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. 1975 ஆம் ஆண்டிற்கு முன் கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் மத்திய அரசின் கீழ் வந்தது. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என் சி ஆர் டி எனும் பாடத் திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும். அதுவும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்றால் யோசித்துப் பார்க்க வேண்டும். நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை பற்றி நம் அனைவருக்கும் தெரியும் இதன் மூலம் இந்த தேர்வு மீதான நம்பகத் தன்மை மக்கள் மத்தியில் இழந்து விட்டது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதனை கால தாமதம் செய்யாமல் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நிரந்தர தீர்வாக கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி, மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து சிறப்பு பொதுப் பட்டியல் என்ற ஒன்றை உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை கொண்டு வர வேண்டும். இவ்விடயத்தில் மாநில அரசுக்கு முழு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் கல்லூரிகளுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எனது பரிந்துரை. ஆனால் இது நடக்குமா! நடக்க விடுவார்களா! என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இது தொடர்பான எனது பார்வையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மாணவர்களாகிய நீங்கள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும். இந்த உலகம் மிகப் பெரியது. அதில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஏதேனும் ஒரு விடயத்தில் தோல்வி அடைந்து விட்டால்.. முடங்கி விடாதீர்கள். தோல்வி அடைந்தால் கடவுள் இன்னும் நிறைய வாய்ப்புகளை உங்களுக்காக வைத்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அது என்னவென்பதை கண்டுபிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்'' என்றார். https://www.virakesari.lk/article/187599
  15. யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில், பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன. அந்தப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கை இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து, மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இதையடுத்து, இது தொடர்பில் குறித்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் அனுமதி பெற்றதையடுத்தே இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/police-raid-a-lawyer-s-office-1719990324
  16. 03 JUL, 2024 | 03:10 PM 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187587
  17. தவறான முடிவெடுத்து தன்னை தானே மாய்த்துக்கொண்ட ரோபோ தென் கொரியாவில் அரசாங்க சேவையில் கடமையாற்றி வந்த ரோபோ இயந்திரம் ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவின் கூமி நகர சபையில் ஒரு வருட காலமாக பணியாற்றி வந்த இயந்திரம் இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளது. இந்த இயந்திரத்தின் அங்கங்கள் ஏற்கனவே சேதமடைந்திருந்ததாகவும் இது 2 மீட்டர் உயரம் கொண்ட படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மக்கள் கவலை படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் அது சுழன்று கொண்டிருந்ததாகவும் அதற்கு பின்னர் கீழே விழுந்ததாகவும் நகர சபை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கூமி நகர மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்துக்கான தொழில்நுட்ப காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. https://tamilwin.com/article/robo-took-a-wrong-decision-in-south-korea-1719993939
  18. வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சி அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறுவதற்காக மட்டும் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகளை தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திறந்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட கோப்புகளில் உள்ளவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த குழுவில் ஏற்கனவே சம்பளத்தில் இருந்து வரி செலுத்துபவர்களும், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களும் வேறு எந்த வருமானமும் பெறாதவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. வரிக் கோப்பு வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பதிவு செய்துள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான வரிக் கோப்புகளைத் தங்கள் வரி இலக்குகளை அடைவதற்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் திறந்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது வரி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு வரி செலுத்துவோர் அடையாள எண்ணில் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகள் திறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வரி அடையாள எண் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி செலுத்துவோரை அடையாளம் காண மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் வழங்கப்படும் என இறைவரி திணைக்களம் அறிவித்திருந்தது. மேலும், இந்த இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இலக்கம் பெற்ற அனைவருக்கும் உரிய வரிகளை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடிதங்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/tax-orders-per-million-tin-registered-in-sri-lanka-1719972870
  19. சம்பந்தனின் இறுதிக்கிரியை 7 ஆம் திகதி திருமலையில் : பாராளுமன்றிலும் இன்று பலர் அஞ்சலி! Published By: DIGITAL DESK 3 03 JUL, 2024 | 03:21 PM இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, சம்பந்தனின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (02) காலை முதல் புதன்கிழமை (3) மதியம் வரை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 2.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது பூதவுடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை, சம்பந்தன் படித்த பாடசாலைகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அன்னாரது பூதவுடல் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை (5) முதல் ஞாயிற்றுக்கிழமை (7) வரை அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/187594
  20. ஹாத்ரஸ் சாமியார்: பாலியல் புகாருக்கு உள்ளான போலீஸ் காவலர், 'போலே பாபா'வாக உருவானது எப்படி? பட மூலாதாரம்,FB/ GOVERNMENT VISHWAHAR படக்குறிப்பு,சாமியாரின் இயற்பெயர் சூரஜ்பால் ஜாதவ். காவல்துறையில் காவலராக பணியாற்றிய அவர் பின்னர் ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். கட்டுரை தகவல் எழுதியவர், தினேஷ் ஷக்யா பதவி, பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சி யாரால் ஒருங்கிணைக்கப்பட்டது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது? நாராயண் சாகர் ஹரி என்ற சாமியாரால் நடத்தப்பட்ட சொற்பொழிவுக் கூட்டம் இது. இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு குறித்து ஹாத்ராஸின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மக்கள் இந்த சாமியாரை போலே பாபா என்றும் விஷ்வ ஹரி என்றும் அழைக்கின்றார்கள். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். செவ்வாய் அன்று நடைபெற்ற இந்த ’மானவ் மங்கள் மிலான்’ என்ற வழிபாட்டு நிகழ்ச்சியை ’மானவ் மங்கள் மிலான் சத்பவன சம்மேளன சமிதி’ ஒருங்கிணைத்தது. இது ஆறு நபர்கள் அடங்கிய குழுவாகும். ஆனால் தற்போது அவர்களின் மொபைல் போன்கள் அனைத்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரால் அவர்களை அணுக இயலவில்லை. ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் நாராயண் சாகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலிகார் ஐ.ஜி ஷலாப் மாதூர் தெரிவித்தார். "அவர்களை தேடி வருகின்றோம். மொபைல் போன்கள் அனைத்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை," என அவர் குறிப்பிட்டார் திரைப்படக் கதையை போன்ற வாழ்க்கை நாராயண் சாகரின் ஆன்மீக வாழ்க்கை ஒரு திரைப்படக் கதையை போன்றது. இந்த சாமியாரின் இயற்பெயர் சூரஜ்பால் ஜாதவ். உத்தரப்பிரதேச காவல்துறையில் காவலராக பணியாற்றிய அவர் பின்னர் ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். மிக குறுகிய காலத்தில் அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் பின்தொடர துவங்கினர். பட மூலாதாரம்,X/AKHILESHYADAV படக்குறிப்பு,மிக குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இவரை பின்தொடர துவங்கினர். ஈட்டா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட காஸ்கஞ் மாவட்டம் பதியாலியில் உள்ள பஹதூர்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்தான் இந்த சாமியார். உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் கீழ் செயல்பட்டு வந்த உள்ளூர் உளவுத்துறை பிரிவில் பணியாற்றி வந்த அவர், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற அவர் பணி நீக்கமும் செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முன்பு சூரஜ்பால் ஜாதவ் 18 காவல் நிலையங்களிலும், உள்ளூர் உளவுத்துறை பிரிவிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சூரஜ்பால் நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அவர் மக்கள் முன்னிலையில் தன்னை ஒரு மத தலைவராக முன்னிறுத்திக் கொண்டார் என்று குறிப்பிடுகிறார் ஈட்டாவின் முன்னாள் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார். காவல்துறையில் இருந்து வெளியேறும் முடிவு பணி நீக்கம் செய்யப்பட்ட சூரஜ்பால் நீதிமன்றத்தை நாடி காவல்துறையில் மீண்டும் இணைந்தார். ஆனால் 2002ம் ஆண்டு ஆக்ராவில் பணியாற்றிக் கொண்டிருந்த சூரஜ்பால் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது. ஓய்வு பெற்று அவருடைய கிராமமான பஹதூர்பூரில் தங்கியிருந்த சூரஜ்பால், சில நாட்கள் கழித்துதான் கடவுளிடம் பேச ஆரம்பித்ததாக கூறினார். பின்பு அவர் போலே பாபாவாக தன்னை மாற்றிக் கொண்டார். சில ஆண்டுகளில் அவரை பின் தொடர்ந்த பக்தர்கள் அவரை பல்வேறு பெயர்களில் அழைத்தனர். பெரிய அளவில் மத சொற்பொழிவு நிகழ்ச்சிகளை அவர் நடத்த அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஆரம்பித்தனர். 75 வயதான சூரஜ்பாலுக்கு மூன்று சகோதரர்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார். பட மூலாதாரம்,FB/ GOVERNMENT VISHWAHARI படக்குறிப்பு,அரசுப் பணியில் இருந்து தன்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்தது யார் என தெரியவில்லை என்று சூரஜ்பால் அடிக்கடி கூறியுள்ளார் மூத்தவர் சூரஜ்பால். இரண்டாவது பகவான் தாஸ். அவர் தற்போது உயிருடன் இல்லை. மூன்றாவதாக பிறந்த ராகேஷ் குமார், ஒரு கிராம தலைவராக பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்ததாக சஞ்சய் குமார் தெரிவிக்கிறார். சூரஜ்பால் முன்பு போல் அடிக்கடி அவரின் கிராமத்திற்கு செல்வதில்லை என்றாலும், அவரின் சேவை நடவடிக்கைகள் அந்த கிராமத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அரசுப் பணியில் இருந்து தன்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்தது யார் என தெரியவில்லை என்று அடிக்கடி தன்னுடைய மத சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் சூரஜ்பால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்கொடைகள் இல்லாமல் இயங்கும் ஆசிரமங்கள் சூரஜ்பால் தன்னுடைய பக்தர்கள் உட்பட யாரிடமும் நன்கொடைகள் வாங்குவதில்லை. இருப்பினும் அவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு சொந்தமான நிலத்தில் ஆசிரமங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருடைய மதசொற்பொழிவை காண வரும் பக்தர்களுக்கு அவர் பல்வேறு தருணங்களில் சேவை செய்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற இவர் வேண்டுமென்றே இதனை செய்திருக்கலாம். வெள்ளை நிற உடைகளையே அதிகமாக அணியும் அவர் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு குர்தா, சட்டை மற்றும் மேற்கத்திய ஆடைகளை அணிந்து வருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் அத்தனை பிரபலமான நபராக இவர் இருக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது. சமூக வலைதளங்களில் அவரை பின் தொடரும் நபர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும் நிஜ வாழ்க்கையில் அவரை லட்சக்கணக்கான நபர்கள் பின்பற்றி வருகிறனர். ஒவ்வொரு சொற்பொழிவு நிகழ்ச்சியையும் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். இது போன்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாமாக முன்வந்து சேவை செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த பக்தர்கள் குழுவும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் போதுமான உணவு, நீர் கிடைப்பதை உறுதி செய்வதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். உ.பி. காவல்துறையில் சர்கிள் ஆபிசராக இருந்து ஓய்வு பெற்ற ராம்நாத் சிங் யாதவ், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈட்டாவின் கண்காட்சி மைதானத்தில் ஒரு மாதம் முழுவதும் இவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கே சலசலப்பு ஏற்பட்டது. அந்த மைதானத்திற்கு அருகே வசித்து வந்த மக்கள் மாவட்ட நிர்வாகிகளிடம், இனிமேல் சூரஜ்பாலின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்," என்று கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crgk0v4kyejo
  21. Published By: DIGITAL DESK 3 03 JUL, 2024 | 01:26 PM நாட்டில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகிய இருவரும் இந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். அதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்துள்ளனர். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் ஜூலி சங் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை நானும் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளரும் இந்த வாரம் சந்தித்து கலந்துரையாடினோம். இதன்போது, அவர்களிடம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதை மீண்டும் உறுதியளிக்கிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டை ஆரோக்கியமான மற்றும் நிலையான பாதையில் கொண்டு செல்லவும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்தும் பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187584
  22. அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் களம் காண்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் திகதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார். எனவே இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பைடன் அதன்பின் ஆற்றிய உரையிலும்கூட டெலிபிராம்டரில் END OF THE QUOTE – உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததையும் சேர்த்து வாசித்தது சர்ச்சையாகியுள்ளது. அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பைடன் தேர்தலில் நிற்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். பைடனின் தடுமாற்றம் அமெரிக்க மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சி தற்போது கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர். அதே சமயம் டிரம்பா கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 6 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார். டிரம்பை விட மிட்ச்சல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதாரவு கணிசமாக உள்ளது. எனவே கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாக அதிக வாய்ப்பு உள்ளது என்று இதன்மூலம் தெரியவருகிறது. https://thinakkural.lk/article/305159
  23. கடன் மறுசீரமைப்பைப் பூர்த்தி செய்வதில் இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு ஜப்பான் பாராட்டு Published By: DIGITAL DESK 7 03 JUL, 2024 | 12:26 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதிலும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா பாராட்டியுள்ளார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த திங்கட்கிழமை (1) ஜப்பான் சென்றுள்ளார். அதன்படி ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவுடனான இருதரப்பு சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை (02) டோக்கியோவில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதிலும் இலங்கையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், மனிதவளப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல் உள்ளடங்கலாக பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஏதுவான வாய்ப்புக்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவின் உப தலைமை நாடு என்ற ரீதியில் இருதரப்பு கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்கு ஜப்பானால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய நிதியுதவியின் கீழான செயற்திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும், இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேவேளை சிரேஷ்ட அமைச்சரவை செயலாளர் ஹயாஷி யொஷிமஸாவுடனான சந்திப்பொன்றும் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன், இதன்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் நட்புறவு குறித்தும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/187570

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.