Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணி ஆரம்பம் Published By: VISHNU 05 JUL, 2024 | 02:21 AM முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது வியாழக்கிழமை (04) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (04) பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மனித உரிமைகள் சட்டத்தரணிகளான எஸ்.ரட்ணவேல், ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இன்றைய அகழ்வு நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக நாளை காலை 8.30 மணியளவில் இடம்பெற இருக்கின்ற அகழ்வு பணிகளுக்கு முன்னாயத்தமான நடவடிக்கைகளே இன்று இடம்பெற்றிருந்தது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, நிதி ஒதுக்கீடு காலம் தாழ்த்தப்பட்டதன் காரணமாக தாமதம் ஏற்பட்டிருந்தது. இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய மனித எலும்புக்கூடு இருக்கும் பகுதி என அடையாளம் காணப்பட்ட இடங்கள் துப்பரவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது. இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மூன்றாம் கட்டத்திற்கான நிதி கிடைக்கபெற்றுள்ள நிலையில் வியாழக்கிழமை (04) ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/187706
  2. யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய வைத்தியருக்கு பெரும் நெருக்கடி! நள்ளிரவில் பரபரப்பு காணொளி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார். குறித்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரின் தன்னிலை விளக்கமும், சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் காணொளி பதிவுகள் முகநூலில் பதிவேற்றப்பட்டத முன்னதாக இவர் இந்த விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மற்றுமொரு காணொளி வெளியிட்டு மேலதிக தகவல்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். https://www.facebook.com/100091790105032/videos/1970952496695103/?ref=embed_video&t=62 https://tamilwin.com/article/corruption-in-government-hospitals-jaffna-1720137729
  3. ஊடகத்திற்கு ஊடக தர்மம் அவசியல் இல்லையா? எந்தவொரு ஊடகத்திற்கும் ஊடக தர்மம் என்ற ஒன்று முக்கியம். தனி நபரின் பெயரை செய்தியில் போடுவது முறையன்று. ஒரு குற்றவாளியாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரது பெயரை வெளியிடாமல் இருப்பது ஊடக தர்மம். ஏன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் பெயர்களைக்கூட வெளியிட்தாக இல்லை. நிலமை இவ்வாறிருக்க, தமிழர்கள் மத்தில் சிறந்த ஆன்மீகவாதியாக, தமிழர்களின் மரபுரிமைகளையும், தமிழ்த் தேசியத்தையும் பாதுகாக்கின்ற ஒருவராக இருக்கக்கூடிய ஆறு திருமுருகன் ஐயா அவர்களின் அற நிலையம் ஒன்றை எந்தவித விசாரணையும் இன்றி மூடுவதற்கு ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை பொருத்தமானதல்ல. அந்தச் செய்தியை பிரதான தலைப்புச் செய்தியாக, தனி ஒருவரது பெயரை பிரதான தலைப்பில் போடுவது ஊடகத்திற்கு இழுக்கு. ஈ.பி.டி.பி ஸ்ரீதர் தியேட்டரை அபகரிக்க அதை ஆக்கிரமித்திருப்பதைப் போன்று யாழ்.உதயன் பத்திரிகையும் தனி ஒருவரின் காணியை அபகரிக்க அதை ஆக்கிரமித்திருக்கின்றது. உதயன் பத்திரிகை நிறுவனம் இயங்கும் காணியை காணி உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கி அதற்கான எழுத்துமூல உடன்பாட்டையும் ஆறு.திருமுருகன் ஐயாவிற்கு வழங்கியுள்ளார் என அறியவருகின்றது. இது உதயன் தலைவர் சரவணபவனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது. காணியை ஆக்கிரிமிக்க கனவு கண்டவருக்கு இந்த காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டமை பொறுக்க முடியாது உள்ளது. இதனால் தனது ஊடக பலத்தைப் பயன்படுத்தி, ஊடக தர்மத்தை மீறி ஆறு.திருமுருகன் ஐயாவைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றனர். இச்செய்திக்கு எதிராக ஆறு.திருமுருகன் ஐயா மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதை செய்யவேண்டும். போரில் பாதிக்கப்பட்டுள்ள அநாதைப் பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிக்கும் உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதரை இவ்வாறு பாதிக்கப்பட வைப்பதும் அவரது செயற்பாட்டைக் குழப்புவதற்கு முனைவதும் மிகக் கேவலமான செயல் ஆகும். வட்சப்பில் வந்தது.
  4. பிரிட்டன் தேர்தல் முடிவுகள்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த தொழிலாளர் கட்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 5 ஜூலை 2024, 02:38 GMT புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டார்மர். தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தனது பதவியை இழக்கிறார். தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சூனக் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 330-க்கும் அதிகமான இடங்களை வென்றுவிட்டது. மேலும் 160-க்கும் அதிகமான இடங்களுக்கான முடிவுகள் வரவேண்டியுள்ளன. கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 72 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 2019 தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 364 இடங்களைக் கைப்பற்றியதால், போரிஸ் ஜான்சன் பிரதமரானார். ஆனால் இம்முறை நிலைமை முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. பிரிட்டனில் ஆட்சி அமைக்க 326 இடங்களைப் பெற வேண்டும். இதுவரை வெளியான முடிவுகள்: தொழிலாளர் கட்சி - 338 கன்சர்வேடிவ் - 72 லிபரல் டெமாக்ரடிக் - 46 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரிஷி சூனக் 2019 தேர்தலில், எதிர்க்கட்சியான லேபர் கட்சி 203 இடங்களை மட்டுமே பெற்றது. பாரம்பரியமாக வெல்லக்கூடிய பல இடங்களிலும் தோற்றுப் போனது. கருத்துக் கணிப்புகளின்படியே எல்லாம் நடந்தால், 1997-இல் டோனி பிளேர் பெற்ற வெற்றிக்கு சற்றே நிகரானதாக தற்போதைய தொழிலாளர் கட்சியின் வெற்றி இருக்கும். 56 இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் லிபரல் டெமாக்ராட் கட்சி இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கக்கூடும். கருத்துக் கணிப்புகளின்படி, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறையக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வழக்கறிஞரான ஸ்டார்மர், 2015ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யானா பெரும்பாலான தொகுதிகளில் வென்றாலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் தொழிலாளர் கட்சிக்கு அதிக ஆதரவு இல்லை. அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இடங்களில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு குறைவாக இருப்பது இதுவரையிலான முடிவுகளில் தெரியவந்திருக்கிறது. 10% க்கும் அதிகமான மக்கள் முஸ்லீம்களாக அடையாளம் காணும் இடங்களில் தொழிலாளர்களின் வாக்குகள் சராசரியாக 10 புள்ளிகள் குறைந்துள்ளன என்று பிபிசி தலைமை அரசியல் செய்தியாளர் ஹென்றி ஷெப்மன் குறிப்பிட்டுள்ளார். லெஸ்டர் கிழக்கு தொகுதியை இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம். நிழல் கேபினட்டில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜொனாதன் அஷ்வொர்த் லெஸ்டர் தெற்குத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் இழந்திருக்கிறார். கீர் ஸ்டார்மர் யார்? ஏப்ரல் 2020 இல், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக கீர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டார்மருக்கு 61 வயது. வழக்கறிஞரான ஸ்டார்மர், 2015ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யானார். தொழிலாளர் கட்சியின் தலைவருக்கான தேர்தலின்போது, முதல் சுற்றிலேயே ஸ்டார்மர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். கட்சியின் தலைவரான பிறகு, "இந்த மாபெரும் கட்சியை புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே தனது நோக்கம்" என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cpwdx7zj1peo
  5. 03 JUL, 2024 | 05:08 PM இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோவொரு திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. குறிப்பாக, மனதை ஒருநிலைப்படுத்தி செயற்படுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியும் என இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல உளநல ஆலோசகரான கையி ரெகேவ் ரோசன்பெர்க் (Guy Regev Rosenberg) தெரிவித்தார். அண்மையில் இலங்கை வந்த அவரை கொழும்பில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இஸ்ரேலில் பிறந்த கத்தோலிக்கரான கையி ரெகேவ் ரோசன்பெர்க்கிற்கும் இலங்கைக்கும் இடையில் பல தலைமுறைகளாக தொடர்புகள் காணப்படுவதாகவும், அந்த வகையில் இலங்கையையும் இலங்கை மக்களையும் தான் மிகவும் விரும்புவதாகவும் விசேடமாக இந்து மற்றும் பௌத்த மதங்களின் தியான வழிமுறைகளை தான் பின்பற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் எம்மோடு பகிர்ந்து கொண்ட விடயங்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்தன. "தியானமும் தியான பயிற்சிகளும் உடற்பயிற்சியும் மனிதனின் பழக்கவழக்கங்களை சிறந்தனவாக மாற்றுகின்றன. தியானங்களில் ஈடுபடும் யோகிகளிடமிருந்தும் சித்தர்களிடமிருந்தும் அதேபோன்று பௌத்த துறவிகளிடமிருந்தும் தியானம் மற்றும் தியானங்களை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டேன். நான் இதில் பட்டம் பெற்றவன் அல்ல" என்கிறார். "கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தியானத்தில் ஈடுபடுவதற்கான நுணுக்கங்களை அறிந்துகொண்டுள்ளேன். பரபரப்பான இந்த உலகில் பொதுவாக மக்கள் மிகுந்த வேலைப்பளுவுடன் நேரத்தைப் போக்குகின்றனர். அதனால் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்கள் மிகுந்த பதற்றத்துடன் இருப்பதனால் மன அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர். இது போன்ற சமயங்களில் தியானம் போன்ற செயன்முறைகளை நாம் அன்றாட வாழ்வில் முன்னெடுப்பதன் மூலம் பதற்றத்திலிருந்து விடுதலையை பெற முடியும்" என்கிறார் கையி. "நமது எல்லா செயற்பாடுகளுக்கும் மனம்தான் காரணம். அதனால்தான் மனதை ஒருநிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இதற்கு தனியான பயிற்சிகள் உள்ளன. அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் பதற்றமில்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது எனது கருத்து. இது எந்த துறையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு மன அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் இருப்பவர்களுக்கு ஆலேசனைகளையும் பயிற்சிகளையும் கொடுக்கும் பணியினைதான் நான் செய்து வருகின்றேன். மன அழுத்தத்துடன் இருக்கும் விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நான் ஆலோசனைகளை வழங்கி வருகின்றேன். எனது நாட்டில் மாத்திரம் அல்லாது ஏனைய பல நாடுகளுக்கும் சென்று, இதனை நான் செய்து வருகின்றேன். அதன் அடிப்படையிலேயே இலங்கை பயணமும் அமைந்துள்ளது. இலங்கையுடன் எனக்கு நீண்டகால தொடர்பு இருக்கிறது. பல தடவைகள் இலங்கை வந்துள்ளேன். இலங்கை எனக்கு மிகவும் பிடித்த நாடு" என்றார் கையி. "இந்து மதமும் பௌத்த தர்மமும் மிகவும் பிடித்தமானது. பல தடவைகள் சித்தர்கள் மற்றும் யோகிகளை சந்தித்துள்ளதுடன் அவர்களிடமிருந்து தியானம் குறித்த பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்" எனவும் கூறுகிறார் கையி. "மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை தீர்ப்பதற்கு இந்து மதத்தில் தியானம் உட்பட பல்‍வேறு விடயங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வதில்லை. இலங்கையில் எப்போதும் இல்லாதவாறு தற்போது பல சோதனைகள் காணப்படுகின்றன. இந்த நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள அனைவரும் மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் இஸ்ரேலில் பிறந்தாலும் இலங்கையையே எனது வீடாக உணர்கின்றேன். சிரிப்பு என்பது இலங்கையர்களுடன் ஒட்டிப் பிறந்ததொரு கொடையாகும். அதை சிறந்ததாக மாற்றியமைக்க வேண்டும்" என்றார் கையி. "ஒவ்வொரு 10 விநாடிகளுக்கும் ஒரு முறை எமது கைத்தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் பல்வேறு புதிய தகவல்கள் வருகின்றன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக்கில் யார் தகவல்களை பகிர்கிறார்கள் என பார்க்கின்றோம். தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்கனவே நம் வாழ்க்கையைப் பாதித்துவிட்டன. அவை நம்மை அடிமையாக்குவதற்காக காத்திருக்கின்றன. ஆனால், நாம் அவற்றுக்கு அடிமையாக வேண்டுமா, இல்லையா என்பதை நம் மனம்தான் தீர்மானிக்கும். புத்த பகவான் கூறியது போன்று எமக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. முதலாவது, உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவது... மற்றையது, உங்கள் மனது உங்களை கட்டுப்படுத்த அனுமதிப்பது... எந்த வகையான தொழில்நுட்ப சாதனங்களால் நாம் திசைதிருப்பப்பட்டாலும், நம் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு பயிற்றுவிக்க முடியும். நமக்குத் தேவையானதை வடிகட்டவும், மீதமுள்ளவற்றை நிராகரிக்கவும் மனதின் மூலம் தான் முடியும்" என்கிறார் கையி. நம்மில் பலரை தொழில்நுட்ப யுகம் ஆக்கிரமித்து முற்றுகையிட்டுள்ளது. நமக்கான வரம்புகளையும் வரையறைகளையும் முடிவுகளையும் நாம் எடுக்காத வரை, தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை ஆக்கிரமித்துவிடும்" என எச்சரிக்கிறார் கையி. "உங்களுக்கு சிறிது காலம்தான் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கும் வரை மக்கள் தங்களை பாதிக்கும் விடயங்களை புறக்கணிக்கின்றனர். இது உங்கள் மனதுக்கும் பொருந்தும். நீங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை உங்கள் மனதுக்கும் விதிக்க வேண்டும்" என்றும் கூறுகிறார் கையி. "நான் காலையில் எழுந்தவுடன் எனது தொலைபேசியை பார்க்கப் போவதில்லை அல்லது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எனது குறுஞ்செய்திகளையோ, சட்களையோ அல்லது செய்திகளையோ பார்க்கப் போவதில்லை போன்ற கட்டுப்பாடுகளை நீங்கள் உங்கள் மனதுக்கு விதிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் மனம் மென்பொருளை பதிவேற்றம் செய்ய முடியாத பழைய கணினியைப் போலாகிவிடும்" என்றார் கையி. முக்கியமாக, "இந்து மற்றும் பௌத்த மத போதனைகளை நடைமுறைப்படுத்த இலங்கையர்களுக்கு இந்த சவாலான காலகட்டம் மிகவும் பொருத்தமானது" என்றும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/187609
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒருவர் பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டுரை தகவல் எழுதியவர், ரேடாக்சியான் பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 9 மணி நேரங்களுக்கு முன்னர் நார்னியாவின் இலக்கியப் பிரபஞ்சத்தை உருவாக்கிய, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சி.எஸ். லூயி, 'பிரார்த்தனை என்றால் என்ன’ என்பதை நன்கு விவரிக்கும் ஒரு சொற்றொடரையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. “எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செய்ய வேண்டிய அவசிய உணர்வு என்னிடமிருந்து பாய்வதால் நான் பிரார்த்தனை செய்கிறேன். அது (பிரார்த்தனை) கடவுளை எந்த வகையிலும் மாற்றாது. ஆனால் என்னை மாற்றுகிறது," என்று அவர் ஒரு முறை கூறினார். பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான Crowdscience-இன் ரசிகையான ஹிலரி, பிரார்த்தனை செய்யும்போதும் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதும் இதேபோன்ற ஒன்றை உணர்வதாகக் கூறுகிறார். "நான் பிரார்த்தனை செய்யும்போது, கடவுளுடன் ஒரு தொடர்பை உணர்கிறேன். ஆனால் பிரார்த்தனையில் பல வகைகள் உள்ளன. அது ஒரு கணத்தின் அமைதியில் நிகழலாம், அது வார்த்தைகளற்றதாக இருக்கலாம். சில சமயங்களில் அது தேவாலயத்தில் ஒரு குழு பிரார்த்தனையாக இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பிரார்த்தனை செய்ய உட்காரும்போது ஒரு கேள்வி அவர் மனதில் எழுகிறது: “பிரார்த்தனை, மூளை மற்றும் மனநலம் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?” பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பிரார்த்தனை செய்பவர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்களுடன் ஆலோசனை செய்யும் பணியை க்ரவுட்சயின்ஸ் குழு மேற்கொண்டது. இந்த வழிமுறை மத நம்பிக்கைகளுடன் தொடர்புடையதா அல்லது ஒருவேளை அது தியானம் செய்பவர்களிடமோ அல்லது ஆக்கப்பூர்வமான வாழ்க்கையை நடத்துபவர்களிடமோ உள்ளதா என்பதை கண்டறியவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது பிரார்த்தனையின் போது மூளையில் நடப்பது என்ன? நாம் பிரார்த்தனை செய்யத் தொடங்கும்போது மூளையின் முன்மடல் (ஃப்ரண்டல் லோப்) ஒளிர்கிறது. ஆனால் ஆழ்ந்த பிரார்த்தனையில் அதன் செயல்பாடு மீண்டும் குறைகிறது. நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க், அமெரிக்காவில் உள்ள தாமஸ் ஜெஃபர்சன் பல்கலைக்கழகத்தில் உள்ள மார்கஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டகிரேடிவ் மெடிசனின் ஆராய்ச்சி இயக்குநர் ஆவார். தனது நோயாளிகளின் மனநலனில், பிரார்த்தனை மற்றும் பிற மத நடைமுறைகளின் விளைவுகளை ஆய்வு செய்வதில் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். பிரார்த்தனை செய்யும் நபரின் மூளையின் பகுதிகள் செயல்பட துவங்குவதை எம்ஆர்ஐ மூலம் அவரது குழுவால் பார்க்க முடிந்தது. "பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பொதுவான வழி ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜெப வரிகளை மீண்டும் மீண்டும் சொல்வதாகும். மேலும் இதுபோன்ற செயலை ஒருவர் மேற்கொள்ளும்போது மூளையின் முன்பகுதி அதாவது ஃப்ரண்டல் லோப் செயல்பட ஆரம்பிக்கிறது," என்று ஆண்ட்ரூ நியூபெர்க் பிபிசியிடம் விளக்கினார். இது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஏனென்றால் நாம் ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது. மக்கள் 'ஆழமான பிரார்த்தனை' என்று உணரும்போது என்ன நடக்கிறது என்பதே நியூபெர்க்கை ஆச்சரியப்படுத்தும் விஷயம். "பிரார்த்தனையின் ஆழம் அதிகரிப்பதாக ஒரு நபர் உணரும்போது முன் மடலின் செயல்பாடு உண்மையில் குறைகிறது. இந்த அனுபவத்தை தாங்கள் உருவாக்கவில்லை, வெளியில் இருந்து இந்த அனுபவம் தங்களுக்குள் நிகழ்கிறது என்று தனிநபர்கள் உணரும்போது இது ஏற்படுகிறது,” என்று ஆராய்ச்சியாளர் கூறினார். ஆழ்ந்த பிரார்த்தனை, மூளையின் பின்பகுதியில் உள்ள பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கிறது என்று நியூபெர்க் கண்டறிந்துள்ளார். இந்த பகுதி உடலில் இருந்து உணர்ச்சித் தகவலைப் பெறுகிறது மற்றும் அதன் காட்சி பிரதிநிதித்துவத்தை உருவாக்குகிறது. பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவது, ஆழ்ந்த பிரார்த்தனை செய்பவர்களால் வெளிப்படுத்தப்படும் 'ஆழ்நிலை உணர்வுகளை’ விளக்குகிறது என்கிறார் நியூபெர்க். "இந்த பகுதியில் செயல்பாடு குறையும்போது, நாம் தனிப்பட்ட சுய உணர்வை இழக்கிறோம். மேலும் அந்த ஒற்றுமை, இணைப்பு உணர்வைப் பெறுகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார். 'மத நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES பிரார்த்தனை செய்யும்போது தங்களைத் தாண்டிய ஏதோ ஒன்றின் அங்கமாக தாங்கள் இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். தியானம் செய்பவர்களும் இதையே உணர்கின்றனர். ஹிலரிக்கு நியூபெர்க் அளிக்கும் விளக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. தான் பிரார்த்தனை செய்யும்போது என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதுடன் அவர் அதை தொடர்புபடுத்துகிறார். ”நான் ஆழமான பிரார்த்தனையில் இருக்கும்போது, தனிப்பட்ட சுய உணர்வை இழப்பது அல்லது அந்த உணர்வை, கடவுளுடனான தொடர்பு என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் விளக்கினார். ஆனால் பிரார்த்தனை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். ஹிலரிக்கு அது ஏதேனும் அமைதியான இடத்தில் உட்காரும்போது அல்லது இயற்கை சூழலில் நடக்கும்போது அது ஏற்படுமானால், மற்றவர்களுக்கு அது கடவுளுடன் உரத்த உரையாடலாக இருக்கலாம். முழுமையான மௌனம் அல்லது ஜெப வரிகளை மீண்டும் மீண்டும் சொல்வதால் இது நிகழலாம். எந்த மத அடிப்படையும் இல்லாமல் செய்யப்படும் பிரார்த்தனை போன்ற நடைமுறைகள், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் உணரும் அதே விளைவுகளை ஏற்படுத்த முடியுமா? நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்துள்ள, தியானம் மற்றும் ஒருமுகப்படுத்தல் நடைமுறைகளில் நிபுணரான டெஸ்ஸா வாட், ’நிகழ்காலம் மற்றும் நாம் அனுபவிக்கும் உணர்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நிலையை அடைய முடியும்’ என்று குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "பிரார்த்தனை மற்றும் ஒருமுகப்படுத்தல் ஆகிய இரண்டும் ஒரு நபரை அமைதிப்படுத்த உதவுகின்றன என்று நான் நினைக்கிறேன். இதன் காரணமாக அவர்களுக்கு தங்களுக்கென அதிக நேரம் கிடைக்கும் மற்றும் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தையும் அவர்கள் செயல்படுத்துகிறார்கள்" என்று வாட் விளக்குகிறார். நரம்பு மண்டலம் இரண்டு தனித்துவமான தன்னியக்க அமைப்புகளால் ஆனது. அவை உடலின் பெரும்பாலான தானியங்கி பதில்வினைகளை கட்டுப்படுத்துகின்றன. ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உடலில் இருந்து விரைவான எதிர்வினைகள் தேவைப்படுகின்றன. அதை ஓர் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. மறுபுறம், உடலின் 'ஓய்வு மற்றும் செரிமானம்' தொடர்பான பணிகள் பாராசிம்பேடிக் அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன. "இதன் பொருள் என்னவென்றால், ஆழ்ந்து பயிற்சி செய்வதன் மூலம் பதில் வினைகளை அமைதிப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் திறமையுள்ளவர்களாக ஆகிறீர்கள்" என்று வாட் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'கடவுளுடனான உறவு' நமது பராமரிப்பாளர்களுடனான உறவு, கடவுளுடன் நாம் வைத்திருக்கும் (அல்லது இல்லாத) உறவுகள் உட்பட பிற உறவுகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். வலுவான மதச் சூழலில் வளரும் சிலருக்கு கடவுளுடனான உறவு, அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் அவர்கள் வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான உறவுகளைப் பிரதிபலிக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள வெஸ்ட்மாண்ட் கல்லூரியின் சமூகவியலாளர் பிளேக் விக்டர் கென்ட் பிபிசியிடம் கூறினார். "பிரார்த்தனை பலனளிக்கும். ஆனால் நீங்கள் வெவ்வேறு காரணிகளை குறிப்பாக நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக கடவுளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்." என்கிறார். பிளேக் முன்பு ஒரு போதகராக இருந்தார். மக்களின் வாழ்க்கையில் மதம் ஏற்படுத்தும் தாக்கத்தை இப்போது அவர் ஆய்வு செய்து வருகிறார். "மற்றவர்களை நம்புவதில் சிரமம் உள்ள சூழலில் இருந்து நீங்கள் வந்திருந்தால் பிரார்த்தனை செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். பிளேக் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள, உளவியலில் உள்ள இணைப்புக் கோட்பாட்டைப் பற்றி நாம் பேச வேண்டும்: மனிதர்கள் தங்கள் ஆரம்பகால பராமரிப்பாளர்களுடன் (பெற்றோர் உள்பட) வைத்திருக்கும் உறவு எதிர்காலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளின் வகையை வரையறுக்கிறது. நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கும் போது நம்பகமான, நல்ல கவனிப்பை அளிக்கும் பராமரிப்பாளர் இருந்திருந்தால், நீங்கள் வயது வந்தவராக ஆகும்போது 'உறுதியான' உறவுப் பிணைப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சீரற்ற முறையிலான பராமரிப்பாளர் இருந்திருந்தால், நீங்கள் வளரும்போது நம்பிக்கையை வளர்ப்பது கடினம். நம்பிக்கை என்பது நிச்சயமாக மதநம்பிக்கைக்கு முக்கியமானது. எனவே கடவுளுடன் நெருக்கமான உறவை உருவாக்குவது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும் அவர்கள் மிகவும் அதிகமான மதச்சூழலில் வாழ்ந்திருந்தால், அதை வளர்த்துக் கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியை அவர்கள் உணரலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னைப் பொறுத்தவரை பிரார்த்தனை என்பது வெறுமையாகவும், ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருப்பதாக உணர்கிறேன்" என்று பிளேக் கூறுகிறார். பிளேக் தன்னை 'கவலையுடன் கூடிய உறவுகளை’ ஏற்படுத்திக்கொண்ட நபராக விவரிக்கிறார். தான் பிரார்த்தனை செய்யும் போது ஏதோ சரியாகச் செய்யவில்லை என்ற உணர்வு போதகராக இருந்தபோது அவருக்கு ஏற்பட்டது. "மதச்சபைகளில் உள்ள பலருக்கு இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். அது அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் அல்லது கடவுள் அவர்கள் மீது வருத்தமாக இருப்பதாக உணர வைக்கிறது. அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் வருத்தமடைகிறார்கள்.” என்கிறார் பிளேக். கடவுளுடன் உறுதியற்ற உறவை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் என்றாலும் அந்த பாதுகாப்பின்மை எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்வது அதை கடந்துவர உதவும் என்று பிளேக் கூறுகிறார். கூடுதலாக உளவியல் சிகிச்சை மூலம் உறவுகளின் நிலையை மாற்றியமைக்க முடியும். இது ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 'படைப்பாற்றல், பலருக்கு ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியாக இருக்கலாம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன. இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன. ஆழமான பிரார்த்தனையைப் போலவே நம்பமுடியாத அளவிற்கு ஒத்ததாக இருக்கும் வேறு வகையான தருணங்கள் இருப்பதை எம்ஆர்ஐ ஸ்கேன்களில் உள்ள மூளையின் படங்கள் வெளிப்படுத்தியதாக நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க் பிபிசியிடம் கூறினார். "மிகவும் பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள் இசையின் ஆழத்திற்குள் செல்லும்போது தங்கள் மூளையின் முன் மடல்களின் செயல்பாட்டை மெதுவாக்குகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் மிகவும் சுவாரசியமான ஆய்வுகள் உள்ளன. மேலும் சிலர் கடவுள் தன்னிடம் வருகிறார் என்று நினைக்கும் அதே வழியில் இசை அவர்களிடம் வருகிறது,” என்றார் அவர். "தெய்வ நம்பிக்கை உள்ள வாழ்க்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், படைப்பாற்றல் என்பது பலருக்கு ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியாக இருக்கலாம். மேலும் அவை தொடர்புடையவை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் மூளையில் மதத்திற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட பகுதி இல்லை.” என்றும் அவர் கூறுகிறார். கடவுளுடன் பேசுவது அல்லது பீத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபனியைக் கேட்பது போன்ற ஆழ்நிலை அனுபவங்கள் மூலம் நமது மூளையின் உணர்ச்சி மையங்கள் தூண்டப்படுகின்றன என்று நியூபெர்க் விளக்குகிறார். "மத மற்றும் ஆன்மீக நடைமுறைகளுடன் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் காலம் காலமாக அவற்றை பின்பற்றுவதையும், அரசியல் மாற்றங்கள் அல்லது கலாச்சார மரபுகளுக்கு அப்பால் அவை எவ்வாறு தொடர்கின்றன என்பதையும் நீங்கள் கருத்தில் கொண்டால் இதை புரிந்துகொள்ள முடியும்.” தனது அனுபவங்களையும், அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புள்ளதாக இருக்கிறது என்பதையும் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டபின் தன்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது என்று ஹிலரி பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த வெவ்வேறு செயல்பாடுகள் மூலம் எனக்கு ஒரே மாதிரியான ஆனால் வித்தியாசமான அனுபவம் இருப்பதை என்னால் அடையாளம் காண முடிகிறது. நான் பிரார்த்தனை செய்யும்போது எனக்கு கடவுளுடன் தொடர்பு இருக்கிறது. ஆனால் நான் பாடுகையில் அதே போன்ற உணர்வை அனுபவிக்கும்போது அது இசையுடனான தொடர்பு என்பதை புரிந்துகொண்டேன்.” "நான் கடவுளிடம் பேசும்போதும், குழுவாகச் சேர்ந்து பாடும்போதும் அது ஒரு ஆன்மீக உணர்வாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்," என்கிறார் ஹிலரி. https://www.bbc.com/tamil/articles/cpv3ze49w25o
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கென புதிய கல்விக் கொள்கையை வகுக்க உருவாக்கப்பட்ட குழு, தனது பரிந்துரையை மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் என்ன சொல்கின்றன? கல்வியாளர்கள் என்ன கருதுகிறார்கள்? கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையைத் தற்போது மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்ட பின்னணி, அதில் ஏற்பட்ட சர்ச்சைகள், தற்போது அளிக்கப்பட்ட முக்கியமான பரிந்துரைகள், கல்வியாளர்களின் கருத்துகள் ஆகியவற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கேள்வி: தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கையை வகுக்க குழு அமைக்கப்பட்டது எப்படி? பதில்: மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை 2020ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்தக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், 2021இல் தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மாநிலத்திற்கு என புதிய கல்விக் கொள்கையை உருவாக்கப் போவதாகத் தனது முதல் பட்ஜெட்டில் அறிவித்தது. "தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்" என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. இதற்கு எட்டு மாதங்களுக்குப் பிறகு 2022இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய கல்விக் கொள்கை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது? பட மூலாதாரம்,ANBIL MAHESH கேள்வி: இந்தக் குழு சந்தித்த சர்ச்சை என்ன? பதில்: புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கான குழுவில் உறுப்பினராக இருந்த ஜவஹர் நேசன், 2023ஆம் ஆண்டு மே மாதம் குழுவின் செயல்பாடுகள் குறித்துப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். தேசியக் கல்விக் கொள்கையைப் பல அதிகாரிகள் இந்தக் குழுவின் மூலமாகத் திணிக்க முற்படுவதாக அவர் கூறினார். ஆனால், அவரது குற்றச்சாட்டுகளை குழுவின் தலைவரான நீதிபதி த. முருகேசன் மறுத்தார். குழுவின் மற்ற உறுப்பினர்களும் இதை மறுத்தனர். இதன் பிறகு அந்தக் குழுவிலிருந்து ஜவஹர் நேசன் வெளியேறினார். கேள்வி: புதிய கல்விக் கொள்கை எவ்விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது? பதில்: புதிய கல்விக் கொள்கைக்கான குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழு தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஜூலை 1ஆம் தேதி அளித்தது. இந்தக் குழுவின் முழுமையான பரிந்துரைகள் வெளியிடப்படவில்லை. முக்கிய அம்சங்கள் மட்டும் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி, பள்ளிக் கல்வியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், பள்ளிக்கூடங்களின் கட்டமைப்புகளில் செய்யப்பட வேண்டிய மேம்பாடுகள், நுழைவுத் தேர்வுகள், கற்பிக்கும் மொழி, கல்லூரிக் கல்வியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக் கல்வி தொடர்பான பரிந்துரைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: பள்ளிக் கல்வி தொடர்பாக கல்விக் கொள்கைக் குழு அளித்திருக்கும் பரிந்துரைகள் என்ன? கல்வியை மீண்டும் மாநிலப் பட்டிலுக்குக் கொண்டுவர தேவையான முயற்சிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வியில் தமிழே முதல் மொழியாக இருப்பது அவசியமானது. ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக் கழக மட்டம்வரை தமிழே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். தமிழ் பல்கலைக் கழகத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதோடு, தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்படும் கல்லூரியை மேம்படுத்த வேண்டும். முறைப்படியான பள்ளிக்கூடங்களுக்கு முந்தைய 'விளையாட்டுப் பள்ளிகளில்' (Play Schools) சேர்க்க ஒரே மாதிரியான வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும். மூன்று வயது நிரம்பிய குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதை வரம்பாக நிர்ணயிக்கலாம். ஜூலை 31ஆம் தேதி 5 வயது நிரம்பிய குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம். ஒன்றாம் வகுப்பே முறைப்படியான கல்வியின் ஆரம்பக்கட்டமாகக் கருதப்படும். சாதியை ஒழிப்பதை சமூக இலக்காகக் கொண்டு, சமத்துவத்தை நோக்கி நகரச் செய்வதாக பாடத்திட்டம் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறையை நீக்கிவிட்டு, தம் அறிவைப் பயன்படுத்தி, யோசித்து தேர்வெழுதும் முறையை ஊக்குவிக்க வேண்டும். தரவரிசைப்படுத்தி, ஒப்பீடு செய்வதற்குப் பதிலாக எல்லா மாணவர்களும் சிறந்து விளங்க ஊக்கப்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு வரை தேர்வுகள் பள்ளிக்கூட மட்டத்திலேயே நடத்தப்பட வேண்டும். முந்தைய வகுப்புகள் எதிலும் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் கூடவே கூடாது. மொழி ரீதியான, மதரீதியான சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழிகளை அதாவது உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைத் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் படிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கேயே பிறந்து, முப்பது ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பு மாநிலத்தைச் சார்ந்தது. அவர்களுக்கு கல்வி வாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு, குறிப்பாக உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கலாம். தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, அவர்களது குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் குழந்தைகளின் சமூகப் பின்னணி, மொழி ஆகியவற்றைப் புரிந்துகொள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களை அரசுப் பள்ளிகளுக்கு இணையாகக் கருத வேண்டும். ஆனால், அந்தப் பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர்களைச் சேர்ப்பது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற புகார்கள் குறித்து அறிய சிறப்பு ஆய்வு நடத்த வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு அரசு போதிய அளவில் நிதி ஒதுக்காததால்தான் மக்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். பொதுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு இணையாக தனியார் நடத்தும் கோச்சிங் வகுப்புகளைத் தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இவர்கள் கல்வியை ஒரு பொருளைப் போல விளம்பரமும் செய்கின்றனர். இது தொடர்ந்தால் பள்ளி, கல்லூரிகள் தேவையற்றுப் போய்விடும் நிலை ஏற்படலாம். பள்ளிக் கூடங்களில் சேர்வதற்கு எவ்விதமான நுழைவுத் தேர்வையும் நடத்தக்கூடாது. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை 11ஆம் வகுப்பில் செயல்படுத்தப்படுவதற்குப் பதிலாக, 9ஆம் வகுப்பில் செயல்படுத்தலாம். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளில் கூடுதல் முதலீடுகளை அரசு செய்ய வேண்டும். கல்லூரிக் கல்வி தொடர்பான பரிந்துரைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: கல்லூரிக் கல்வி தொடர்பாக புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன? கல்லூரிச் சேர்க்கையைப் பொறுத்தவரை 11வது, 12வது வகுப்பு மதிப்பெண்களை வைத்தே உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். எவ்வித நுழைவுத் தேர்வுகளும் கூடாது. கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் 3 ஆண்டு, முதுகலை படிப்புகளில் 2 ஆண்டு என்ற நிலையே தொடரும். ஆனால், யுசிஜியின் பாடத்திட்ட விதிகள் சிக்கலானவையாக இருப்பதால், மாணவர்கள் விரும்பினால் நான்கு ஆண்டு ஹானர்ஸ் படிப்பையும் தேர்வு செய்து படிக்கலாம். ஒரு படிப்பில் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து, எப்போது வேண்டுமானாலும் விலகும் முறை பல்கலைக்கழகப் படிப்பிற்கே எதிரானது என்பதால் அந்த முறை நடைமுறைப் படுத்தப்படமாட்டாது. பல்கலைக்கழக பட்டத்தைப் பெற 3 ஆண்டுப் படிப்பை முடிக்க வேண்டும். பாதியில் விட்டுச் சென்றுவிட்டு, டிப்ளமோ சான்றிதழ் கேட்டால் அந்தக் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது. உயர்கல்வியில் அரசின் பங்களிப்பு குறைந்து தனியாரின் பங்களிப்பு அதிகரிக்கிறது. இது எல்லாப் பிரிவினரும் குறிப்பாக சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பைக் குறைக்கும். உயர் கல்வியில் அரசு கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். தனியார் கல்வி நிலையங்கள் பாரம்பரியமான படிப்புகளுக்குப் பதிலாக சந்தைக்குத் தேவைப்படும் படிப்புகளை வழங்குகின்றன. இதனால், பல தருணங்களில் மாணவர்கள் சரியாகத் தயார் செய்யப்படாமல் வெளியில் அனுப்பப்படுகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைப்பதும் கடினமாகிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரவேற்பவர்களும் விமர்சிப்பவர்களும் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: இந்த அறிக்கையை வரவேற்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? பதில்: சமமான கற்றல் வாய்ப்பை எல்லோருக்கும் தர இந்த அறிக்கை பயன்படும் என்பதால் இதை வரவேற்பதாகச் சொல்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பிரின்ஸ் கஜேந்திரபாபு. "தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்க முக்கியக் காரணம், அந்தக் கொள்கை பொதுக் கல்வி நிலையங்களை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வலுவான பொதுக் கல்வி அமைப்புகள் இருக்கின்றன. அவை பலவீனமாகும் என்ற அச்சத்தில்தான் அவை எதிர்க்கப்பட்டன. மேலும் தேசிய கல்விக் கொள்கை, அரசின் கல்வி நிலையங்களைப் பற்றியும் தனியார் கல்வி நிலையங்களைப் பற்றியுமே பேசியது. அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் பற்றி எதையும் சொல்லவில்லை. இந்தக் கொள்கை அது குறித்தும் பேசுகிறது." மேலும், "தேசிய கல்விக் கொள்கை பள்ளிக் கல்விக்கும் உயர் கல்விக்கும் தொடர்பே இல்லாமல் செய்தது. பள்ளிக் கல்வியை முடித்த பிறகு தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்றார்கள். மாநில கல்விக் கொள்கை அதை எதிர்க்கிறது. தமிழ்நாட்டிற்கு என்னவிதமான தேவை இருக்கும் என்பதை மனதில் வைத்து இந்தக் கொள்கையை உருவாக்கியிருக்கிறார்கள். சமமான கற்றல் வாய்ப்பைத் தர இது பயன்படலாம். அந்த வகையில் இது வரவேற்கத்தக்கது" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. படக்குறிப்பு,பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி: இந்தப் புதிய கல்விக் கொள்கை வரைவில் போதாமை இருப்பதாகச் சொல்பவர்களின் வாதம் என்ன? பதில்: இந்தப் புதிய கல்விக் கொள்கை பரிந்தரையில் பல விஷயங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பல போதாமைகள் இருப்பதாகச் சொல்கிறார் குழந்தைகள் நலன் தொடர்பாகச் செயல்படும் தோழமை அமைப்பின் தேவநேயன். "பொதுவாக மிகச்சிறிய குழந்தைகளின் நலன் குறித்துப் பேசும்போது, பராமரிப்பு பற்றி மட்டும்தான் பேசுவார்கள். இந்தக் கல்விக் கொள்கை ஆரம்பக்கால குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது. இதில் வளர்ச்சி என்பது கல்வியைக் குறிக்கும். அந்த வகையில் இது கவனிக்கத்தக்கது. மேலும், தற்போதுள்ள 10 + 2+ 3 என்ற நிலையைத் தொடர வேண்டும் என்றே இது கூறுகிறது. அதுவும் வரவேற்கத்தக்கது," என்கிறார் தேவநேயன். இவைதவிர, "தாய்மொழிக் கல்வி, நிலவியல் ரீதியாகவும் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கக்கூடிய குழந்தைகள் என விரிவாகப் பார்த்து கொள்கைகளை வகுத்திருப்பதும் நகர்ப்புற வறுமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்துப் பேசுவதும் கவனிக்கத்தக்கது," என்று கூறும் தேவநேயன், ஆனால் வேறு சில பிரச்சனைகள் இந்தப் புதிய கல்விக் கொள்கையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார். "உதாரணமாக, அருகமைப் பள்ளி குறித்தும், மாநில நிதி நிலை அறிக்கையில் கல்விக்கென எத்தனை சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த அறிக்கை எதுவும் சொல்லவில்லை. மேலும், பள்ளிக் கூடங்களில் குழந்தைநேய பள்ளிச் சூழல் எந்த அளவுக்கு இருக்கிறது. அதை எப்படி இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பேசியிருக்க வேண்டும்." "ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்போது உயர்கல்வித் துறையின்கீழ் இருக்கிறது. ஆனால், அது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருக்க வேண்டும். அதைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். இவையெல்லாம் தவிர, ஒரு கொள்கையை வகுக்கும்போது ஓர் இலக்கை முன்வைக்க வேண்டும். அப்படி எந்த இலக்கையும் இந்தக் கொள்கை முன்வைக்கவில்லை" என்கிறார் தேவநேயன். புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகள் பற்றி கல்வியாளர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: பிரபல கல்வியாளர்கள் இந்தப் பரிந்துரைகள் குறித்து என்ன சொல்கிறார்கள்? பதில்: புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார் பிரபல கல்வியாளரான வசந்தி தேவி. ஆனால், முக்கியமான ஓர் அம்சம் கவனிக்கப்படாமல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் மிகச் சிறப்பாக உள்ளன. ஒடுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கான பரிந்துரைகள், கல்விக்கான மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது ஆகியவை குறித்துப் பேசியிருப்பது மிக முக்கியமானது," எனக் கூறுகிறார் வசந்தி தேவி. மேலும், அரசின் நிதி ஒதுக்கீடு குறைவதால் தனியார் கல்வி நிலையங்கள் எப்படி வளர்கின்றன என்பதைச் சொல்லியிருப்பதைக் குறிப்பிடும் அவர், பொதுவாகவே கல்வியில் தனியார் மயம், வணிகமயம் நிலவுவது குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் நிறைய பேசியிருப்பதாகக் கூறினார். குறிப்பாக, "கோச்சிங் மையங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்தக் கொள்கை குறிப்பிடுவது முக்கியமானது. பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி, தமிழுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது, தேசிய கல்விக் கொள்கைக்கு மாறாக, பத்தாம் வகுப்பு வரை மையப்படுத்தப்பட்ட தேர்வு தேவையில்லை எனச் சொல்லியிருப்பதெல்லாம் வரவேற்கத்தக்கது." ஆனால், "தற்போதைய கல்வியில் மிகப் பெரிய பிரச்சனை, அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் ஒரு வகுப்பில் பெற்றிருக்க வேண்டிய கற்றல் திறனைப் பெறாமல் இருக்கிறார்கள். தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு அரசு சலுகைகளை அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது. ஆனால், கற்றல் திறன் பற்றிய அறிக்கைகளைப் பார்த்தால், தமிழகம் மிகவும் பின்னால் இருக்கிறது. இப்படிப் பின்தங்கியவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருக்கலாம்," என்கிறார் வசந்தி தேவி. மேலும், "அறிக்கை எந்த அடித்தட்டுக் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அந்தக் குழந்தைகள் முழுக் கற்றல் திறன்களைப் பெற, பள்ளிகளில்தான் கூடுதல் கற்பித்தல் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவர்களுக்குக் கூடுதல் கற்பித்தல் குடும்பங்களில் இயலாது. அடித்தட்டுப் பெற்றோர்கள் மிகவும் குறைந்த கல்வி கற்றவர்களே. தனிப் பயிற்சி (tuition) பெறுவதற்கு அந்தக் குழந்தைகளுக்குச் செலவிட இயலாது. மனிதனை மனிதன் விழுங்கும் போட்டியுள்ள உலகில் இவர்கள் தலை எடுக்க முடியாது," எனவும் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/cd10e98pld3o
  8. Published By: DIGITAL DESK 7 04 JUL, 2024 | 02:45 PM ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தேர்தலை சந்திக்க முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பேசினாலும் அரசாங்கம் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தும் என அமைச்சர் வலியுறுத்தினார். கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (4) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியதாவது: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே பாரிஸ் மாநாட்டில் நாட்டின் கடனை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் நாடும் மக்களும் எதிர்பார்க்கும் பொருளாதார, அரசியல், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை தற்போதைய ஜனாதிபதியால் மட்டுமே மேற்கொள்ள முடியும். எனவே, அவரை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள், உலகின் பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்க முடியும். இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் நாடு எப்படி இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். எரிபொருள் இல்லை, மருந்து இல்லை, எரிவாயு இல்லை, சிறு குழந்தைக்கு பால் பவுடர் இல்லை, அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்பட்டன. கட்டுமானத் தொழில்கள் அனைத்தும் சரிவடைந்தன. முழு நாடும் விரக்தியில் இருந்தது. ஜனாதிபதி சிக்கலில் இருந்து நாட்டைப் பொறுப்பேற்கும் போது ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மறு பக்கம் பாரிய மக்கள் எதிர்ப்புமாக இருந்தது. அப்போது மொட்டுக் கட்சியாகிய நாம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். ரணில் விக்கிரமசிங்கவுடன் எங்களுக்கு நிறைய அரசியல் பாக்கிகள் இருந்தன. ஆனால் நாட்டுக்காக அதனை மறந்துவிட்டோம். இரண்டு வருடங்கள் கழித்து இன்று நாடு எங்கே இருக்கிறது என்று பார்க்கும் போது அன்று நாம் எடுத்த முடிவு 100 சதவீதம் சரியானது என்று மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு கதை வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கோ அல்லது எமக்கோ விருப்பமோ தேவையோ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அது நிரந்தரமானது. தேர்தலை சந்திக்க முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பேசுகின்றன. நாட்டுக்கு ஒரு சவால் வந்தபோது அதனை எதிர்கொள்ளும் பலமான முதுகெலும்பு ஜனாதிபதிக்கு மட்டுமே இருந்தது. ஐ.ம.சக்தியும் திசைகாட்டியும் விசித்திரக் கதைகளைச் சொல்கின்றன. அதற்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணி, திசைகாட்டி என்ற பெயரில் மாறுவேடத்தில் வந்துள்ளது. ஆனால் அவர்களின் இரத்த வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவரும் அனுரகுமார அவர்களும் மரண வீடுகளில் தனிமையைப் போக்குவதற்குத்தான் பொருத்தமானவர்கள். அதனால் அந்த இருவரையும் அந்த வேலைக்கு வைத்துக் கொள்வோம். நாட்டைக் கட்டியெழுப்பிய ரணிலிடம் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலையை ஒப்படையுங்கள். மொட்டுக் கட்சி ஒரு ஜனரஞ்சகக் கட்சி. நாட்டை ஒருங்கிணைத்த ஜனரஞ்சகத் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை சரியான நேரத்தில் நாட்டுக்கு தெரிவிப்பார். எங்களிடம் ஒரு வெற்றி வேட்பாளர் இருக்கிறார். நாங்கள் வெற்றிப் பக்கம் இருக்கிறோம். அதனால் தான், சந்திகளிலும், வீதியோரங்களிலும் “நான்தான் மொட்டின் வேட்பாளர்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைக் கணக்கெடுக்காதீர்கள். உண்மையான மொட்டுவாதிகள் இன்னும் கட்சியில் உள்ளனர். நாங்கள் இன்னும் மஹிந்தவை நேசிக்கிறோம். போரை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியவர்கள் தற்போது கிளைக்கு கிளை தாவும் பறவைகளாக மாறியுள்ளனர். அவர்கள் அங்கே இருக்கிறார்கள். இங்கே இருக்கிறார்கள். அவர்களால் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அவர்களால் நீண்ட நாளைக்கு ஒரே சாப்பாட்டை சாப்பிட முடியாது. யார் வெளியேறினாலும் அது பொதுஜன பெரமுனவுக்கு பிரச்சினையாக இருக்காது. நாம் முன்னெப்போதையும் விட பலமாக முன்னேறி வருகிறோம். வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக பல சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எமது நாட்டு மக்களும் பாரிய அரசியல் சீர்திருத்த நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர். தன்னால் தனக்கான காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நாட்டுக்கு உழைத்து நிரூபித்த ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அதனால் தான் இப்போது ரணில்தான் ஆள் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள். https://www.virakesari.lk/article/187668
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பானில் கட்டாயக் கருத்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக 2018இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் 1950கள் மற்றும் 1990களுக்கு இடைப்பட்ட காலத்தில் 16,500 மாற்றுத் திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் அப்போது ஜப்பானில் அமலில் இருந்த யூஜெனிக்ஸ் (Eugenics) சட்டம். இந்தச் சட்டமும், அதன் மூலம் நடத்தப்பட்ட கட்டாயக் கருத்தடைகளும் அரசமைப்பிற்கு எதிரானது என்று ஜப்பான் உச்சநீதிமன்றம் புதன்கிழமையன்று (03.07.2024) தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீட்டில் விசாரிக்கப்பட்ட 5 வழக்குகளில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட 11 பேருக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், முறையான நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்கள் கோரி வந்தனர். அவர்களின் நீதிக்கான போராட்டம் இந்த முக்கிய தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வழக்கின் பின்னணி என்ன? பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே உயிரோடு இருந்தனர். அவர்களில் சிலர் அதிக இழப்பீட்டுக்காகத் தொடர்ந்து போராடினர். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நான்கு வழக்குகளில், கீழ் நீதிமன்றங்களின் இழப்பீடு உத்தரவுகளை எதிர்த்து ஜப்பானின் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. ஐந்தாவது வழக்கில், இரண்டு பெண் வாதிகள் தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சட்டத்தின் கீழ் (1948ஆம் ஆண்டு இயற்றப்பட்டது), சுமார் 25,000 பேருக்கு கருத்தடை செய்யப்பட்டது. அவர்களில் பலருக்கு பரம்பரை குறைபாடுகள் இருந்தன. அவர்கள் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைத் தடுக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 16,500 கருத்தடை அறுவை சிகிச்சைகள், வலுக்கட்டாயமாக செய்யப்பட்டதாக ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. மற்ற 8,500 பேர் இந்த நடைமுறைகளுக்கு சம்மதித்ததாக அதிகாரிகள் கூறினாலும், அந்த நேரத்தில் அவர்கள் எதிர்கொண்ட அழுத்தத்தின் காரணமாக அவர்கள் அறுவை சிகிச்சைக்கு 'உண்மையிலேயே கட்டாயப்படுத்தப்பட்டதாக' வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஜப்பான் நாடாளுமன்ற அறிக்கையின்படி, ஒன்பது வயதுடையவர்கள்கூட யூஜெனிக்ஸ் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சட்டம் 1996இல் ரத்து செய்யப்பட்டது. நிதி இழப்பீடு என்பது மட்டுமே போதுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கட்டாயக் கருத்தடையால் பாதிக்கப்பட்டவர்கள் புதன்கிழமையன்று, கட்டாயக் கருத்தடை வழக்குகளில் இழப்பீடு கோரிக்கைகளுக்கு 20 ஆண்டு வரம்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. வரம்புச் சட்டம் (Statute of limitations) என்பது சட்டமன்ற அமைப்பால் நிறுவப்பட்ட ஒரு சட்டம். இது ஒரு நிகழ்வுக்குப் பிறகு சட்ட நடைமுறைகள் தொடங்கப்படக்கூடிய அதிகபட்ச நேரத்தைக் குறிப்பிடுகிறது. சிவில் சட்ட அமைப்புகளில், இந்த ஒழுங்குமுறை ஒரு பரிந்துரைக்கப்பட்ட காலம் எனக் குறிப்பிடப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர், குறிப்பாக என்ன நடந்தது என்பதே தெரியாதவர்கள், தங்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைதான் செய்யப்பட்டது என்பதைப் பின்னர் அறிந்துகொண்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியதால் கால தாமதம் ஆகிவிட்டதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். கட்டாயக் கருத்தடைகள், 1960கள் மற்றும் 1970களில் மிகவும் பரவலாக இருந்தது. போருக்குப் பிந்தைய காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்தபோது, வலுக்கட்டாயமாக கருத்தடைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு கட்டாயக் கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் பலருக்கு உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள், மனநலப் பிரச்னைகள் அல்லது தொழுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் இருந்தன. அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால், அந்தக் குழந்தைகளுக்கும் அவர்களைப் போன்றே குறைபாடுகள் இருக்கும் எனச் சொல்லப்பட்டதால் இந்தக் கட்டாயக் கருத்தடைக்கு மேற்கொள்ளப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஜப்பான் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் (ஜூலை 3, 2024) கடந்த 1953ஆம் ஆண்டு ஜப்பான் அரசாங்க அறிவிப்பின்படி, இந்த கட்டாயக் கருத்தடை நடவடிக்கைகளுக்கு ஒருவரை உடல்ரீதியாகக் கட்டுப்படுத்தவும், மயக்க மருந்து பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஒருவரை ஏமாற்றிக்கூட கருத்தடை செய்வதற்கு அனுமதி இருந்தது. "இந்தத் தருணத்திலிருந்து, அரசாங்கம் முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் மற்றும் முழு அளவிலான தீர்மானத்தை நோக்கி முழு வேகத்தில் முன்னேற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்," என்று இரண்டு வாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யுடகா யோஷியாமா கூறினார். ஜப்பான் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பயங்கரமான விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதாகவும், அரசின் கண்கள் அவர்களின் கஷ்டத்தைப் பார்க்க மறுப்பதாகவும் அவர் கூறினார். அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்டவர்களில் பலர் உரிய இழப்பீடு கிடைக்காமலே உயிரிழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரச்னையுடன் தொடர்புடைய வழக்கு ஒன்றில், 2019இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், உயிரோடு இருந்த பாதிக்கப்பட்டவர்களில் ஒவ்வொருவரும் 3.2 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 16.52 லட்சம்) பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. சுமார் 1,300 பேர் இந்த இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், இதுவரை 1,100 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, நிதி இழப்பீடு என்பது மட்டுமே போதுமானது இல்லை. 'நாங்களும் மனிதர்கள்தான்' பட மூலாதாரம்,GETTY IMAGES "நான் ஒருபோதும் தாயாக முடியாது என்பதை உணர்ந்தபோது, என் இதயம் நொறுங்கிப் போனது," என்கிறார் யூமி சுஸுகி. இவருக்கு பிறப்பிலேயே பெருமூளை வாதம் இருந்தது. 12 வயதில் தனக்கு வலுக்கட்டாயமாகக் கருத்தடை செய்யப்பட்டதாக, 2021இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் யூமி சுஸுகி கூறியிருந்தார். இப்போது யூமி சுஸுகிக்கு 68 வயதாகிறது. புதன்கிழமை ஜப்பான் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் 11 வாதிகளில் யூமி சுஸுகியும் ஒருவர். "சிறு வயதில் இருந்தே பல பாகுபாடுகளை நான் எதிர்கொண்டுள்ளேன். ஆனால் இந்தக் கட்டாயக் கருத்தடை என்பது மிகவும் பயங்கரமானது. என் இதயமே அப்போது நொறுங்கிவிட்டது." "எனக்கு நீங்கள் கொடுக்கும் பணம் வேண்டாம். எங்களுக்கு நடத்தப்பட்ட இந்த அநீதி குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோல மீண்டும் யாருக்கும், எப்போதும் நடக்கக்கூடாது. மாற்றுத் திறனாளிகளையும் சமமாக நடத்த வேண்டும். நாங்கள் ஒன்றும் ஆடு, மாடுகளோ அல்லது பொருட்களோ அல்ல. நாங்களும் மனிதர்கள்தான்" என்கிறார் யூமி சுஸுகி. https://www.bbc.com/tamil/articles/c3g6egx863do
  10. பிரிட்டனில் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர் - கென்சவேர்ட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவிற்கு வரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பு Published By: RAJEEBAN 04 JUL, 2024 | 05:45 PM பிரதமர் ரிசி சுனாக்கின் கென்சவேர்ட்டிவ் கட்சியை 14 வருடங்களிற்கு பின்னர் அதிகாரத்திலிருந்து அகற்றும் தொழிற்கட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில் ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். கெய்ர் ஸ்டார்மெரின் தொழில்கட்சி பெரும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. எட்டு வருடங்களில் ஐந்து பிரதமர்கள் ஆட்சி புரிந்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் உள்கட்சி மோதல் குழப்பநிலை முடிவிற்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று பிரிட்டன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கலாம் என தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் வியாழக்கிழமை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐந்து வருடங்கள் கென்சவேர்ட்டிவ் ஆட்சியை தாங்க முடியாது என தெரிவித்துள்ள அவர் நீங்கள் தொழில்கட்சிக்கு வாக்களித்தால் மாத்திரமே மாற்றம் நிகழும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டின் 40000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது. பிரதமர் ரிசி சுனாக் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்துள்ளனர். வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் அவர் தனது மனைவியுடன் வாக்களித்துள்ளார். எதிர்பாராத விதத்தில் முன்கூட்டியே தேர்தலிற்கு அழைப்பு விடுத்த ரிசி சுனாக் கடந்த சில வாரங்களாக தொழில்கட்சி ஐந்தாவது தடவையாக ஆட்சியை கைப்பற்றுவது குறித்து கருத்து தெரிவிப்பதை கைவிட்டுள்ளார். மாறாக தொழில்கட்சிக்கு மிகப்பெரும் பெரும்பான்மையை வழங்குவது குறித்து அவர் வாக்காளர்களை எச்சரித்து வந்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு தினமான இன்று தொழில்கட்சி குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்த ரிசி சுனாக் தொழில்கட்சியினர் வரிகளை அதிகரிப்பார்கள் புவிசார் அரசியல் பதற்றம் காணப்படும் சூழலில் பிரிட்டனை பலவீனப்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187698
  11. Published By: DIGITAL DESK 3 04 JUL, 2024 | 03:03 PM இந்தியாவில் ஒருவருக்கு மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயக்குற்றி 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சர் சுந்தர்லால் வைத்தியசாலையில் கடந்த வாரம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள், மூச்சுக்குழாயில் 25 சதம் நாணயக்குற்றி ஒன்று சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 2ம் திகதி, கார்டியோ - தொராசிக் அறுவை சிகிச்சை மூலம், மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நாணயத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது 32வது வயதில் நாணயத்தை வாயில் வைத்து உறங்கியபோது அதை விழுங்கி உள்ளார். அதன் காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மூச்சுத்திணறல் அதிகரிக்கவே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். நாணயத்தை அகற்றிய பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சித்தார்த் லகோடியா மற்றும் எஸ்.கே.மாத்தூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/187672
  12. வைத்தியர் கேதீஸ்வரன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் நியமனம் தொடர்பில் பெரும் சர்ச்சைநிலை ஏற்பட்டிருந்தது. இதற்கு பதிலடி வழங்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவானது யாழில், இடம்பெறும் அரச வைத்தியதுறையின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தெற்கிலிருக்கும் சிங்கள அரசாங்கம் வடக்கு மக்களுக்கு ஒழுங்கற்ற விதத்தில் மருத்துவ வசதிகளை வழங்குகிறது என்ற பொய்யை நிரப்புவதற்காகவே யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் பகடைக்காயாக செயற்படுவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி, மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளில் மரணிக்கும் ஒருவரின் உடலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி இழுத்தடிப்பு செய்வதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் பணத்தை வழங்கியே உடலை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார். ஆபத்தான மருந்துவகைகளை கடத்தியும், அவற்றை வடக்கில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியும் மனநோயை ஏற்படுத்து விதமாக ஆ.கேதீஸ்வரன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்பில் அவர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தும் மேலும் சில அதிர்ச்சி சம்பவங்களை தொகுத்து வருகிறது இந்த காணொளி, https://tamilwin.com/article/ramanathan-archuna-medical-scandals-in-the-north-1720077313
  13. 04 JUL, 2024 | 12:57 PM மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு மிகக் குறைவான மட்டத்திலேயே காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42 வீத பங்களிப்பை வழங்கி வருகிறது. மீதமுள்ள 58 வீத பங்களிப்பை ஏனைய 8 மாகாணங்களும் வழங்கி வருகின்றன. கிழக்கு மாகாணம் 5 வீதத்துக்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உலகில் பல நாடுகள் யுத்தம் முடிவடைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாடுகளை நடத்திய போதிலும், எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்று வரையில் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அன்று தொடக்கம் இன்று வரையுள்ள எந்தத் தலைவராலும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்ட முடியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் மையப்படுத்தி நாடு தழுவிய சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நாம் நடத்துவோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 281ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு, கல்குடா, ஏறாவூர் அல்-முனீரா மகளிர் கல்லூரி வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது. இதன்போது, பாடசாலை நூலகத்துக்குத் தேவையான ஆங்கில நூல்களை கொள்வனவு செய்துகொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், இந்த 2 மாகாணங்களிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் போர்வீரர்கள் என சமூகத்தில் பல தரப்பினர் வாழ்ந்து வருகின்றனர். போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையர்களாக நாம் இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். பிரிவினையை தொடர்ந்தால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. மத அடிப்படையில் இனங்கள் ஒன்றிணைய வேண்டும். இந்த பிரபஞ்சம் செயற்றிட்டத்தின் மூலம் இன, மத, சாதி, வர்க்க, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவை அனைத்தும் வாய்மொழியாகச் சொல்லப்படுவது போலவே செயல்படுத்துவேன். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் என்ற வகையில் வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடாத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் கிராமங்களிலும் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவேன். ஜனாதிபதி என்ற வகையில் e governance ஊடாக இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்து வினைதிறனான நிர்வாகத்தை முன்னெடுப்பேன் என்றார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் புதல்வர் அம்ஜாட் மௌலானா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://www.virakesari.lk/article/187658
  14. https://www.vikatan.com/gender/equality/lgbtq-pride-walk-how-the-perspective-towards-the-community-changed-over-a-period-of-time#:~:text=ஆணும் பெண்ணும் இணை சேர்வது போல,கொள்ளும் இணை தேடலே என்கிறது அறிவியல்.&text=வானவில் சுயமரியாதை பேரணி-,நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு!,அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே! மூல இணைப்பை இணைத்துள்ளேன்.
  15. தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் விடுதியை மூட உத்தரவு! யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் விடுதியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அந்த விடுதியின் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கேமரா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. தெல்லிப்பளை பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த நிலையம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் மற்றும் நன்னடத்தை பிரிவிற்கும், வடமாகாண ஆளுநருக்கும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உடனடியாக அவ்விடுதியை மூடிவிட்டு, அதன் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/305243
  16. 04 JUL, 2024 | 12:31 PM நாட்டில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பதற்காக இடம்பெற்ற கூட்டத்தின் போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் 5,979 பேரில் இதுவரை 5,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 1,975 மில்லியன் ரூபா ஆகும். யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பில் இதுவரை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 5,448 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/187653
  17. கல்விப் பணிப்பாளர் வெளியேறக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் புதிதாகக் கடமையேற்ற யாழ்ப்பாண வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக சிவசேனை அமைப்பினரால் இன்று ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளராக கடந்த வாரம் பொறுப்பேற்று, பொறுப்பேற்ற முதற் தினத்திலேயே வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீ அவர்களை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்து அமைப்புக்கள் சேர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. "இந்து பாரம்பரிய மரபுகளை அழித்து சிவபூமியை கிறிஸ்துவ பூமியாக்காதே, தமிழர் கல்விப் பண்பாட்டினை அழிக்காதே, வலயப் பணிப்பாளரின் மதவெறி செயற் பாட்டினை கண்டிக்கின்றோம், உடலின் உயிரான சைவத்தினை அழிப்பது தமிழன அழிப்பே, தமிழ் மண்ணின் தமிழ் கடவுளை அகற்றும் துணிவின் பின்புலம் யார்? எதிர்ப்பு போராட்டம் தமிழன விரோதியே வலயத்தினை விட்டுபோ" என்ற வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://tamilwin.com/article/vigilance-in-jaffna-1719926758
  18. யாழ். கொண்டுசெல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி Published By: DIGITAL DESK 3 04 JUL, 2024 | 01:02 PM மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று வியாழக்கிழமை (04) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல், யாழில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று வியாழக்கிழமை (04) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187649
  19. கட்டுரை தகவல் எழுதியவர், குர்மிந்தர் கிரேவால் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவுக்கு அருகில் உள்ள ராம்கர் சர்தாரன் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்ஷோ தேவி. பக்ஷோ தேவியின் சகோதரர் அஜய்குமார் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஜனவரி 2024இல், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி வெடித்ததில் இறந்து போனார் அஜய்குமார். இந்திய ராணுவத்தின் இணையதளத்தின்படி, அக்னிவீர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும். அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களின் ஆண்டுச் சம்பளம் ரூபாய் 4.76 லட்சத்தில் இருந்து தொடங்கி, சேவை முடிவடையும் வரை ஆண்டுக்கு ரூபாய் 6.92 லட்சம் வரை வழங்கப்படும். பணியிலிருந்து ஓய்வு பெறும்போது ரூபாய் 10.01 லட்சம் வழங்கப்படுகிறது. பணியில் இருக்கும் காலத்தில் அவர்களுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. பணியின் போது இறந்தால் ரூபாய் 44 லட்சம் கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது. பட மூலாதாரம்,YT/RAHUL GANDHI படக்குறிப்பு,ராகுல் காந்தி தனது வீட்டிற்கு வந்தபோது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்வதாக கூறியதாக சரண்ஜித் சிங் கூறுகிறார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அக்னிவீர் திட்டத்தை எதிர்க்கின்றன. மக்களவை பொதுத் தேர்தல்களிலும், சபையின் முதல் அமர்விலும் தங்கள் அரசாங்கம் அமைந்தவுடன் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கூறப்பட்டது. இது இந்திய ராணுவத்தின் திறன்களை மேம்படுத்துவதாக மத்திய அரசாங்கம் விவரித்தாலும், பல பாதுகாப்பு நிபுணர்களும் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர். கடந்த திங்கட்கிழமை, 18வது மக்களவையின் முதல் அமர்வில் அக்னிவீர் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது குறித்து அஜய் குமாரின் குடும்பத்தினர் கூறுவது என்ன? அவர்களுக்கு அரசின் நிதியுதவி முறையாக கிடைத்ததா? அஜய்குமாரின் குடும்பத்தினர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GURMINDER GREWAL/BBC படக்குறிப்பு,அஜய்குமாரின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார் அஜய்குமாரின் தந்தை சரண்ஜித் சிங், ஜனவரி 18 அன்று மாலை தனது மகன் இறந்த செய்தியை அறிந்த தருணத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். மகனின் மரணம் அந்த வயதான தந்தைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "அன்று மாலை ஒரு கண்ணிவெடி வெடித்ததாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் மூன்று பேர் காயமடைந்தனர் என்றும், அவர்களில் ஒருவர் உங்கள் மகன் என்றும் கூறினார்கள்" என்கிறார் சரண்ஜித் சிங். சரண்ஜித் சிங்கிற்கு ஆறு பிள்ளைகள், அவர்களில் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. அதில் இளையவர் அஜய்குமார். அஜய்குமாரின் மரணத்திற்காக தங்கள் குடும்பம் பெற்ற நிதியுதவி குறித்து சரண்ஜித் சிங் பேசுகையில், பஞ்சாப் அரசிடமிருந்து தனது குடும்பம் ரூபாய் 1 கோடி பெற்றுள்ளதாகவும், இதனுடன் சமீபத்தில் இந்திய ராணுவத்திடம் இருந்து ரூபாய் 48 லட்சம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அஜய்குமாரின் குடும்பத்தாருக்கு மத்திய அரசு மீது கோபம் உள்ளது. ''எல்லையில் பணியாற்றச் சென்ற எங்கள் மகன் இறந்ததற்கு, மத்திய அரசு எங்களுக்கு இரங்கல் கடிதம் கூட அனுப்பவில்லை'' என்கிறார்கள். அக்னிவீர் யோஜனா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. “தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் பொய்யான கூற்றை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 48 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர்." “எங்கள் மகன் வீரமரணம் அடைந்த பிறகு அவருக்கான ஓய்வூதிய நிதி மற்றும் எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை. எங்கள் மகன் இறந்ததற்கு மத்திய அரசு எங்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை." என்கிறார் சரண்ஜித் சிங். மக்களவையில் எதிரொலித்த அக்னிவீர் சர்ச்சை பட மூலாதாரம்,ANI கடந்த திங்கள்கிழமை மக்களவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். "ஒரு அக்னிவீரர் கண்ணிவெடியால் வீரமரணம் அடைந்தால் நான் அவரை தியாகி என்று சொல்கிறேன். ஆனால் இந்திய அரசும், நரேந்திர மோதியும் அவரைத் தியாகி என்று அழைக்கவில்லை. அவரை ‘அக்னிவீர்’ என்று அழைக்கிறார்கள். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அந்த வீட்டிற்கு இழப்பீடு கிடைக்காது. தியாகி அந்தஸ்து கிடைக்காது," என்று அவர் குறிப்பிட்டார். "இந்தியாவின் ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் அக்னிவீரரை சிப்பாய் என்று அழைக்க முடியாது. அக்னிவீர் ஒரு ‘யூஸ் அண்ட் த்ரோ’ தொழிலாளி. அவருக்கு ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்து, ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற்ற சீன வீரர்களுக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள்,” என்றார் ராகுல் காந்தி. "ஒரு ராணுவ வீரனுக்கும் மற்றொரு வீரனுக்கும் இடையே பிளவை உருவாக்குகிறீர்கள். ஒருவருக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து கிடைக்கிறது. மற்றவருக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து கிடைக்காது. பிறகு உங்களை நீங்களே தேசபக்தர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இது எந்தவிதமான தேசபக்தி,” என்று அவர் வினவினார். “நாட்டின் ராணுவத்துக்கு தெரியும், முழு நாட்டிற்கும் தெரியும், அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் திட்டம் அல்ல, பிரதமர் அலுவலகத்தின் திட்டம். அந்த திட்டம் பிரதமரின் யோசனை, ராணுவத்தின் யோசனை அல்ல என்பது ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் தெரியும்,” என்று அவர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் பேச்சை இடைமறித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “தவறான கருத்துகளை கூறி சபையை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது,” என்றார். ”போரின் போது அல்லது எல்லைப் பாதுகாப்பு பணியின் போது அக்னிவீரர் மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர். செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதியும் ராகுலின் அறிக்கை தவறானது என்று விவரித்தார். இதன் மூலம் ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கப்படுகிறது என்றார் மோதி. அஜய்குமார் குடும்பத்தினருடனான ராகுலின் சந்திப்பு பட மூலாதாரம்,ANI கடந்த மே 29ஆம் தேதி, மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, மறைந்த அஜய்குமாரின் குடும்பத்தினரை சந்தித்தார். குடும்ப உறுப்பினர்களுடன் பேசிய அவர், அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். ராகுல் காந்தி தனது வீட்டிற்கு வந்தபோது, அக்னிவீர் யோஜனா திட்டத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், தனக்கு ஆறுதல் கூறியதாகவும் சரண்ஜித் சிங் கூறுகிறார். தங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உள்ளூர் எம்பி அமர்சிங்கிடம் தெரிவித்ததாகவும் சரண்ஜித் சிங் கூறினார். "ராஜ்நாத் சிங்கின் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார். ஏனைய இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற பலன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், அதனை பெற்றுத் தருமாறும் அஜய்குமாரின் குடும்பத்தினர் கோருகின்றனர். அஜய் குமாரின் சகோதரி பக்ஷோ தேவி, தனது சகோதரர் வழக்கமான முறையில் தான் ராணுவத்தில் சேர முயன்றதாகவும், ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றும், அதனால் தான் அவர் அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்தார் என்றும் கூறுகிறார். சுமார் 6-7 மாத ராணுவ பயிற்சிக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் அஜய் குமார் வீட்டுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டார். அக்னிவீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீடு பட மூலாதாரம்,GETTY IMAGES இறந்த அக்னிவீர் வீரர்களின் இழப்பீடு தொடர்பாக அரசின் அக்னிபத் யோஜனா திட்டத்தில் என்னென்ன பரிந்துரைகள் உள்ளன என்பதை இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிக்கலாம். இதன்படி, அக்னிவீர் திட்டத்தில் சேரும் வீரருக்கு அவரது பதவிக்காலம் முடியும் வரை 48 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அக்னிவீர் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்கள் இறந்தால், அவர்களுக்கான இழப்பீடுகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளுக்கு (X), (Y), (Z) என்று பெயரிடப்பட்டுள்ளது. ராணுவ சேவையின் போது ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் (Y) வகையில் சேரும். அத்தகைய சூழ்நிலையில், இறந்த ராணுவ வீரருக்கு 48 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு, 44 லட்சம் இழப்பீடு, அவரது வேலையின் மீதமுள்ள சம்பளம் மற்றும் பிற நிதி உதவிகள் கிடைக்கின்றன. அக்டோபர் 2023இல் பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள கோட்லி கலான் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான அம்ரித்பால் சிங், அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ராணுவம் கூறியது. அம்ரித்பாலின் குடும்பத்தினர் தங்கள் மகனுக்கு ராணுவத்தின் இறுதி மரியாதை கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தினர். ராணுவம் கூறுவது என்ன? பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு ராணுவம் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், "அக்னிவீர் அஜய் குமாரின் உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் தலை வணங்குகிறது. முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. அக்னிவீர் அஜய் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகையில், 98.39 லட்சம் ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. " என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ''அக்னிவீர் திட்டத்தின் விதிகளின்படி, காவல்துறை சரிபார்த்த பிறகு உடனடியாக 67 லட்சம் ரூபாய் கருணைத்தொகை மற்றும் இதர பலன்கள் இறுதி கணக்கு தீர்வு மூலம் வழங்கப்படும். மொத்த தொகை சுமார் ரூ.1.65 கோடியாக இருக்கும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை உடனடியாக வழங்கப்படுகிறது, அதில் அக்னிவீரர்களும் அடங்குவார்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டம் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னிவீரர்கள் என்ற பெயரில் இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியில் இளைஞர்கள் இணைகின்றனர். அவர்களுக்கு இந்த நான்கு வருடங்களில் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்திர பணியில் சேர முடியும். இந்த இளைஞர்களின் வயது 17.5 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். எனவே, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால் ஒரு இளைஞர் 10ஆம் வகுப்பு படித்திருந்தால், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற முயற்சிக்க பரிந்துரைக்கப்படுகிறது. அக்னிவீர் இளைஞர்கள் அரசாங்கத்திடமிருந்து தொடக்கத்தில் ரூபாய் 30,000 சம்பளம் பெறுகிறார்கள். பணியின் போது ஒருவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளியாக மாறினால், அவருக்கு ரூ.44 லட்சமும், 75 சதவீத மாற்றுத்திறனாளியாக மாறினால் ரூ.25 லட்சமும், 50 சதவீத மாற்றுத்திறனாளியாக மாறினால் ரூ.15 லட்சமும் வழங்கப்படும். பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் இளைஞருக்கு அரசிடம் இருந்து ரூ.44 லட்சமும், மீதமுள்ள பணிக்கான ஊதியமும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பயணத்தின் போது வழங்கப்படும் கொடுப்பனவுகள், ரேஷன்கள், சீருடைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் என அனைத்து சலுகைகளும் இவர்களுக்கும் வழங்கப்படும். ஜூன் 2022இல் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிவித்த பிறகு, ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தினர். ஜூன் 14ஆம் தேதி இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, ஜூன் 20ஆம் தேதி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையில், நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் ரயில்களும் நிறுத்தப்பட்டன. உண்மையில், இந்த திட்டத்தின் விதிகள் மற்றும் அதன் கீழ் வழங்கப்படும் வசதிகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cydv3vg2rgzo
  20. 03 JUL, 2024 | 03:23 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி போட்டி நிகழ்வின் நடப்பு ஒலிம்பிக் சம்பியனாக திகழும் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின் லெவ்ரோன், தனது சொந்த உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார். அத்துடன் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதியையும் அவர் பெற்றுக்கொண்டார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அமெரிக்க தடகள தகுதிகாணில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 24 வயதான சிட்னி மெக்லாலின் லெவ்ரோன் போட்டித் தூரத்தை 50.65 செக்கன்களில் நிறைவு செய்து, 50.68 செக்கன்கள் என்ற தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார். இதன் மூலம் 5ஆவது தடவையாகவும் உலக சாதனையை முறியடித்தார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அமெரிக்க தடகள தகுதிகாணில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் 52.64 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாமிடத்தை பிடித்த அன்னா கொக்ரல், 52.77 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாமிடத்தை பிடித்த ஜெஸ்மின் ஜோன்ஸ் ஆகியோரும் மெக்லானினுடன் பாரிஸ் ஒலிம்பிக்குக்கான தகுதியை பெற்றுக்கொண்டனர். https://www.virakesari.lk/article/187600

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.