Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. "நான் எதுவாக விரும்பினேனோ நான் அதுவாக இருக்கின்றேன்" - "குறை நல்லது" என்ற தலைப்பில் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ். This is from the "நல்லவை கேட்பின் - Chennai Special Peecharangam". Featuring Raja, Bharathi Baskar and many others as Speakers.
  2. வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா கடும் கரிசனை 21 JUN, 2024 | 03:24 PM வடகொரியாவிற்கு ரஸ்யா ஆயுதங்களை வழங்கலாம் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளமை குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. வடகொரிய விஜயத்தின் போது விளாடிமிர் புட்டின் வெளியிட்டுள்ள இந்த கருத்து ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கான ரஸ்ய ஆயுதங்கள் என்பது கொரிய தீபகற்பத்தை பலவீனப்படுத்தும் ஸ்திரமிழக்கச்செய்யும் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் வழங்கும் ஆயுதங்களை பொறுத்து அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை மீறும் நடவடிக்கையாக அமையும் ரஸ்யாவே இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரஸ்யாவும் வடகொரியாவும் கைச்சாத்திட்ட பாதுகாப்பு உடன்படிக்கை கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு அமைதிக்கு மிகவும் அச்சுறுத்தலானது என அமெரிக்க இராஜாங்க செயலாளரும் தென்கொரிய வெளிவிவகார அமைச்சும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186638
  3. Published By: DIGITAL DESK 7 21 JUN, 2024 | 02:09 PM இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இன்று வெள்ளிக்கிழமை (21) சர்வதேச யோகா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை (20) சிறிய ரக ராணுவ விமான மூலம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு வந்த மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய கடற்படை மற்றும் கடலோர கடற்படை காவல் படை முகாம் களை ஆய்வு செய்த பின்னர் ராமேஸ்வரம் கடல் பகுதியை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நடைபெற்ற யோகா தினத்தில் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். அதனை தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வரை சென்று கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள மணல் திட்டில் இறங்கினார். பின்னர் சர்வதேச கடல் எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கண்காணிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தவுடன் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து இந்திய எல்லையில் வைக்கப்பட்டிருந்த இந்தியா என்ற பெயர் பலகைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் மீண்டும் ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் தனுஷ்கோடி வந்து சாலை மார்க்கமாக ஐ என் எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சென்றார். முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவகத்திற்கு சென்று அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஆய்வின் போது அவருடன் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமின் நிலைய கமாண்டர் வினைக்குமார் மற்றும் கடற்படை தளத்தின் நிலையை கமாண்டர் கேப்டன் அஸ்வின் மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர். https://www.virakesari.lk/article/186631
  4. For Narthaki, her love for Bharatanatyam became her life right from her childhood. Besides being a Padma Shri recipient, she has been granted distinctive honors such as the Sangeet Natak Akademi Puraskar Award from the President of India, the title of Nrithya Choodamani, and the Kalaimamani title from the government of Tamil Nadu, among other accolades. This beautiful dancer received the very first award of the evening for Excellence in Performing Arts from the multi-faceted actor Parthiban. நர்த்தகி நடராஜ் பற்றிய காணொளி 5.30 நிமிடங்களில் இருந்து பாருங்கள்.
  5. கனடாவில் வறியவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நினைத்ததை விடவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு வங்கிகளின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 25 வீதமான கனடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வறியவர்களின் எண்ணிக்கை 10 வீதம் என அறிக்கையிட்டிருந்தது. உண்மையில் வறியவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, பாதணிகள், புரதச்சத்து, விசேட வைபவங்கள், பரிசு பொருட்கள், ஆடைகள், பற்சுகாதாரம், எதிர்பாராத செலவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களின் வறுமை நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான காரணிகளின் அடிப்படையில் கனடாவில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை மேலும் ஆறு மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வறுமை நிலையை தீர்மானிக்காது மக்களின் கொள்வனவு இயலுமை அடிப்படையில் வறுமை குறித்த தகவல்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 30 வயதானவர்களில் 30 வீதமானவர்களும் ஒற்றை பெற்றோரைக் கொண்ட குடும்பங்களில் 45 வீதமான குடும்பங்களும், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் 42 வீதமானவர்களும் வறுமையில் வாடுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/304264
  6. 21 JUN, 2024 | 04:38 PM நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அத்தோடு, கடந்த கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது வேறிடங்களுக்கு தப்பித்து ஓடாமல், அந்த சூழ்நிலையை எதிர்கொண்டு நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்துக்கு ஜனாதிபதி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2015 புதிய மருந்துகள் சட்டம் இயற்றப்பட்டதன் பின்னர் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் நிறுவப்பட்டது. நாட்டில் மருந்து விலையை கட்டுப்படுத்தல், மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிபந்தனையற்ற பங்களிப்பை வழங்குதல், அரசின் சிறுநீரக நிதி, சுகாதார நிதியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களுக்கு இந்தச் சங்கம் பங்களித்துள்ளது. அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்தவுக்கும், சிறந்த மாவட்ட சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விருதுகளை வழங்கிவைத்தார். மேலும், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது. அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “கடந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை வழங்கிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்துக்கு அரசின் சார்பில் எனது விசேட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு அரச நிறுவனங்கள் வீழ்ந்து கொண்டிருந்தபோது நீங்கள் முன்வந்து உங்களது பொறுப்பை நிறைவேற்றினீர்கள். தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து உங்களின் சங்கம் அளித்துள்ள அறிவிப்பின்படி, அவை குறித்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இன்று இந்த நாட்டில் பலர் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு உங்கள் முயற்சிதான் காரணம் என்று கூற வேண்டும். கடந்த காலங்களில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளைப் பெற பணம் இருக்கவில்லை. ஆனால், அந்த கடினமான நேரத்தில் நீங்கள் தப்பி ஓடவில்லை. நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள். அதைத்தான் நம் நாட்டில் உள்ள அனைவரிடமும் எதிர்பார்க்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறுவதில்லை. இந்தப் பிரச்சினைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று உங்களுக்கோ எனக்கோ தெரியாது. நாம் அனைவரும் எம்மால் இயன்ற வரை நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நான் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தது. நாட்டில் அந்நிய செலாவணி இல்லை. தேவையான மருந்துகள், எரிபொருள் கொண்டு வர பணம் இல்லை. கிடைக்கும் பணத்தை எரிபொருளுக்கு வழங்குவதா அல்லது உரத்துக்கு வழங்குவதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால், நாம் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை ஆரம்பித்தோம். அதன் ஊடாக உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு மருந்து மற்றும் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அத்தகைய கடினமான சூழ்நிலையை நாங்கள் கடந்து வந்தோம். இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தால், இந்தியாவிலிருந்து மருந்துகளைப் பெற முடிந்தது. மேலும், பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட பணத்தால் உணவுப் பொருட்களைப் பெற முடிந்தது. எவ்வாறாயினும், ஒரு நாடாக நாம் முதல் 6 மாதங்களை மிகவும் சிரமத்துடன் கடந்தோம். அதன் பிறகு நாடு படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மக்கள் உங்களிடம் வந்து பணம் இல்லாமல் மருந்துகளைக் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அவர்களுக்கு மருந்துகளை கொடுக்காமல் சாகச் சொல்வதா, நட்டத்தை அனுபவித்து மருந்து கொடுப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டியேற்பட்டது. நாம் அனைவரும் அந்தக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. நாம் அனைவரும் சிரமப்பட்டு அந்த முடிவுகளை எடுத்ததால்தான் நாம் ஒரு நாடாக முன்னோக்கி வருகிறோம். மேலும், VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இந்த முடிவுகளால் நாட்டின் வருமான மூலங்கள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் பெறுமதி வலுப்பெற்று, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடிந்தது. கடந்த வாரம், IMF பணிப்பாளர்கள் குழுவின் இரண்டாம் சுற்று கலந்துரையாடல்களை நடத்தினோம். இலங்கையை வழிநடத்தும் திட்டம் சரியானது என்று அதன்போது சான்று கிடைத்துள்ளது. அதன்படி கடனைச் செலுத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பணியை நிறைவுசெய்வது குறித்து தற்போது சீனாவுடன் கலந்துரையாடி வருகிறோம். மேலும், பாரிஸ் கிளப்பில் உள்ள நாடுகள் மற்றும் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்கிய தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு உடன்பாட்டை எட்டவும் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாடு விழுந்த பாதாளத்தில் இருந்து இப்போது மீண்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் பயணம் முடிவதில்லை. ஆனால் ஒரு நாடாக நாம் ஏன் படுகுழியில் விழுந்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் ஏற்றுமதித் தொழிலை நாங்கள் உருவாக்கவில்லை. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நாங்கள் அனைத்தையும் தவறவிட்டோம். 1979இல் நான் சீனாவுக்குச் சென்றபோது, சீனா நம்மை விட ஏழ்மையான நாடாக இருந்தது. இப்போது சீனா நமக்குப் பணம் தருகிறது. 1991இல் நான் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் என்னைச் சந்தித்தார். உங்களுக்கு எப்படி முதலீடுகள் வந்தன, எப்படி அன்னியச் செலாவணி கிடைத்தது, வர்த்தக வலயங்களை எப்படி உருவாக்கினீர்கள் என்று என்னிடம் ஆலோசனை கேட்டார். எனது அறிவுரைகளை அவர் கவனித்தார். ஆனால் இப்போது நான் வியட்நாம் சென்றால் அவரிடம் இது பற்றிக் கேட்கவேண்டியுள்ளது. கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டோம். இதைச் சரிசெய்து புதிய பொருளாதாரத்தை நோக்கிச் செல்லாவிட்டால் மீண்டும் ஒரு நாடு என்ற வகையில் பாதாளத்தில் விழுவோம். அந்த இருண்ட யுகத்துக்கு மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டுமா? இப்போது நாட்டுக்கு புதிய செயற்றிட்டத்தை முன்வைத்துள்ளோம். பழைய முறையை விட்டுவிட்டு புதிய அமைப்பைக் கொண்டு முன்னேற வேண்டும். இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் முன்னேற்றத்துடன் நாமும் முன்னேற வேண்டும். போட்டி நிறைந்த பொருளாதாரத்துக்கு நாம் திரும்ப வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அங்கு பயன்படுத்தப்பட வேண்டும். புதிதாக சிந்தித்து புதிய நாட்டை உருவாக்குவோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கை சுகாதாரத்துறையின் தரத்தைப் பேணுவதில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பங்களிப்பை பாராட்டுவதற்கு நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். குறிப்பாக, இந்நாட்டில் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும், மருந்து பற்றாக்குறையின்றி நாட்டைப் பேணுவதற்கும் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதை நான் நினைவுகூருகிறேன். இந்நாட்டு மக்களின் ஆரோக்கியமானது சுகாதாரத்துறையின் அனைத்து அம்சங்களிலும் சார்ந்துள்ளது. உலகத்துடன் ஒப்பிடும்போது, நமது நாடு சிறந்த சுகாதார சேவையை கொண்டுள்ளது. இந்நாட்டில் நோயாளிகளின் நல்வாழ்வுக்காக, நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். மேலும், புனர்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளாவிய போட்டியை எதிர்கொண்டு ஒரு நாடாக முன்னேறுவதற்கான சவாலை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். சுதந்திர இலங்கையில் வைத்தியசாலைகள், வைத்தியர்கள், தாதியர்கள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்துள்ளனர். பௌதீக வசதிகள் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இலவச சுகாதாரத்தை பாதுகாக்க வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உங்கள் ஆதரவுடன் சிறந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்’’ என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறுகையில், "அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் என்பது தாம் நட்டம் அடைந்தேனும் நாட்டுக்கு இலாபம் ஈட்டித் தருவதற்காக செயற்பட்ட சங்கமாகும். கடந்த இக்கட்டான காலகட்டத்தில் இலாபம் பாராமல் சேவை வழங்கினர். அதைத்தான் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்து வருகிறார். இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று நாமும் நினைக்கவில்லை. கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும் முடிந்தவர் என்றால், நம் நாட்டை அவர் இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வங்குரோத்து அடைந்த நாடுகளுக்கு மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக்கொள்கிறது. உலகமே பாராட்டுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டிருப்பது பொருளாதார அதிசயம் என உலக நாடுகள் கூறுகின்றன. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்வளவு சீக்கிரம் மீட்டெடுத்த நாட்டை நாங்கள் பார்த்ததில்லை என்கிறார்கள். எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளின்போது, இலங்கையின் ஜனாதிபதியை பார்க்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால், நம் நாட்டு மக்கள் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். நாட்டின் இந்த உண்மை நிலையை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்த தெரிவிக்கையில், "இரண்டு வருடங்களுக்கு முன் இந்நாட்டின் நிலைமை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அப்போது மருந்தகங்களைத் திறந்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கப் பாடுபட்டோம். அப்போது, மருந்தகங்கள் முன்பு கிலோமீட்டருக்கு மேற்பட்ட நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஆனால் மருந்து வாங்க பணம் இருக்கவில்லை. உயிர்பிழைக்க மருந்து இல்லாத காலம் ஒன்று இருந்தது. இவ்வாறானதொரு காலகட்டத்தில்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். குடும்பத்தில் உறுப்பினர்கள் மூன்று பேர் இருந்தால் மூன்று வரிசைகளில் அவர்கள் இருந்தனர். மருந்துகளை விநியோகிக்க எரிபொருள் இருக்கவில்லை. இவ்வாறானதொரு யுகத்தை முடிவுக்கு கொண்டு வர, அதிஷ்டவசமாக ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றிருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். இல்லை என்றால் பாண் ஒன்றுக்காகக்கூட கொலைகள் இடம்பெறும் யுகத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கும் இவ்வேளையில், இன்று இவ்வாறாக எமது தொழில்துறையைப் பாதுகாக்க ஆதரவு வழங்கியமைக்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசகர், வண. குப்பியாவத்தை போதானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மருந்து இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/186652
  7. Published By: DIGITAL DESK 7 21 JUN, 2024 | 04:25 PM மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்று வெள்ளிக்கிழமை (21) அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பல வருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறும் குறித்த சோதனை சாவடியினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்த துடன்,சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர். இந்த நிலையி, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த சோதனை சாவடியை அகற்றி தருமாறு நேரடி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் குறித்த பாலப் பகுதியில் காணப்பட்ட வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளது டன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பகுதியில் ராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் ராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186643
  8. நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் Published By: VISHNU 21 JUN, 2024 | 08:18 PM நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையின் பின் வியாழக்கிழமை (20) இரவு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (21) இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் நல்லடக்கத்திற்காக சேமக்காலைககு எடுத்துச் செல்லும் போது மக்கள் சடலத்தையும் தோள்களில் சுமந்தவாறு நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை (20) நடைபெற்ற இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஏற்கனவே வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய மூவரையும் விரைவாகக் கைது செய்யுமாறு கோரி நெடுந்தீவு மக்கள் சடலத்துடன் சென்று நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிசாரின் அசமந்த போக்கைச் சுட்டிக்காட்டிய மக்கள் பொலிசாரிடம் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர். அதன் பின்னர் கலைந்து சென்ற மக்கள் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்தனர். https://www.virakesari.lk/article/186661
  9. யாழ்ப்பாணத்தில் எரிகாயங்களுடன் பெண்ணொருவர் மீட்பு! யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று (20) எரிந்த நிலையில் பெண்ணொருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியைச் சேர்ந்த பவானி என்ற 43 வயதான பெண்ணொருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வத்திராயன் பகுதியில் உள்ள வீடொன்றில் தனித்திருந்த குறித்த பெண், நேற்றிரவு தீப்பற்றிய நிலையில் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://thinakkural.lk/article/304267
  10. Published By: RAJEEBAN 21 JUN, 2024 | 01:18 PM ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது என இஸ்ரேல் இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரியே இதனை தெரிவித்துள்ளார். ஹமாசினை அழிக்கலாம் அதனை காணாமல்போகச்செய்யலாம் என்ற எண்ணம் காணப்படுகின்றது, ஆனால் இது மக்களின் கண்ணில் மண்ணை தூவுவது போன்றது என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் சனல் 13க்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஹகாரியின் இந்த கருத்திற்கு இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஹமாசினை எவ்வாறு அழிப்பது என தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டுள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு அலுவகம் காசா யுத்தத்தின் நோக்கமாக இஸ்ரேல் இதனை கருதுவதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என பெஞ்சமின் நெட்டன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை பின்னர் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாங்கள் ஹமாசினை அழிப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பேச்சாளர் ஹமாஸ் என்ற கொள்கை குறித்தே தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளது. இராணுவப்பேச்சாளரின் கருத்தினால் உருவாகியுள்ள சர்ச்சையை தணிக்கும் விதத்தில் இஸ்ரேலிய இராணுவம் கருத்து வெளியிட்டுள்ள போதிலும்,அவரது கருத்து இஸ்ரேலிய பிரதமருக்கும் இராணுவத்திற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தீவிரமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/186637
  11. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் ஆரம்பம்! 21 JUN, 2024 | 03:30 PM தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை (20) ஆரம்பமானது. பொது மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, உரிய அனுமதி பெறப்படாமலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விகாரையை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது. பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விகாரையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக இந்த போராட்டம் இடம்பெறுகிறது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/186641
  12. Published By: DIGITAL DESK 7 21 JUN, 2024 | 02:01 PM பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம், கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில் ஜே/135, ஜே/136 என இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஆனால் மொத்தமாக 88 குடும்பங்கள் தான் வசிக்கின்றன. ஜ/135 கிராம சேவகர் பிரிவில் சுமார் 27 குடும்பங்கள் தான் உள்ளன. ஏனையோர் ஜ/136 கிராம சேவகர் பிரிவில் தான் உள்ளனர். இரண்டு கிராமங்களையும் பிரிப்பதற்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் அனுமதியுடன், ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவரின் நிதியில் கட்டடம் ஒன்று கட்டப்படுகிறது. இந்த கட்டடம் ஜே/135 பகுதியைச் சார்ந்ததாகவே உள்ளது. இதனால் ஜ/136 பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டடம் யாருக்காக, எந்த நோக்கத்திற்காக, எந்த நிர்வாகத்தின் கீழ் கட்டப்படுகின்றது என்ற எதுவும் எமக்கு தெரியாது. இதுகுறித்து கிராம சேவகரை கேட்டபோது, அது சம்பந்தமான எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் தனக்கு வழங்கப்படவில்லை என கூறுகிறார் என்றனர். சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரே இதில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றார். கிராம சேவகரா சமுர்த்தி உத்தியோகத்தரா என்ற குழப்பத்தில் நாங்கள் உள்ளோம். இரண்டு பகுதி மக்களும் சந்தோஷமாக இருந்தோம். ஆனால் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் இரண்டு பிரிவு மக்களையும் பிரித்து பிரச்சனையை உண்டாக்குகின்றார். சமுர்த்தி உத்தியோகத்தர் தனது அலுவலகத்தில் இருக்காமல் ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள சில பெண்களின் வீடுகளுக்குள் இருந்து கதைத்துக்கொண்டு இருக்கின்றார். ஏதாவது தேவைக்கு அலுவலகத்துக்கு சென்றாலும் அங்கு சமுர்த்தி உத்தியோகத்தர் இல்லை. சமுர்த்தி உத்தியோகத்தருக்கு இடமாற்றம் கிடைத்தும் கூட அவர் செல்லாமல் இருக்கின்றார். இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் இணைத்து சந்தோஷமாக செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/186634
  13. Published By: DIGITAL DESK 3 21 JUN, 2024 | 02:03 PM பிறரின் கையடக்க தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த சந்தேக நபரை ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபரான ஹட்டனைச் சேர்ந்தவர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் குற்றவியல் கண்காணிப்புப் பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதவான் திலின கமகே, வழக்கு விசாரணைகளை ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவுடன் ஏ.ஏ.எல். ஜயரத்னராஜா சந்தேக நபருக்காக நீதிமன்றில் ஆஜரானார்கள். https://www.virakesari.lk/article/186630 சிம் எடுக்க பிறருடைய தேசிய அடையாள அட்டையின் பிரதியைப் பயன்படுத்தி இருப்பார் என நினைக்கிறேன்.
  14. Published By: DIGITAL DESK 3 21 JUN, 2024 | 01:54 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (20) இரவு 10:00 மணியளவில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியை சேர்ந்தவரே இவ்வாறு மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படிருந்த நிலையில் அங்கிருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இரவு வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். இந்நிலையில், இரவு பத்து மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186632
  15. உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு Published By: DIGITAL DESK 3 21 JUN, 2024 | 11:48 AM 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மற்றும் உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான 'DoE' இனை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விண்ணப்பதாரிகள் அந்தந்த பாடசாலை தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்ற பின்னரே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186625
  16. அதிகரித்த கள்ளச்சாராய பலி எண்ணிக்கை, அழுகுரலில் மிதக்கும் கள்ளக்குறிச்சி - கள நிலவரம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 20 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய 47 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி முழுவதும் மக்கள் வேதனையில் இருக்கிறார்கள். கள்ளச்சாராய பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதும் மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் கள்ளக்குறிச்சிக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்த 27 நபர்களின் பிரேதங்கள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு வியாழக்கிழமை அதிகாலை முதல் வரத் துவங்கின. பிபிசி அங்கு நேரில் சென்றதன் பதிவு, இக்கட்டுரை. படக்குறிப்பு,கருணாபுரம் பகுதி முக்கிய அலுவலகங்களுக்கு அருகிலேயே இருக்கும் பகுதி கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது கருணாபுரம் பகுதி. கள்ளக்குறிச்சி நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி காவல் நிலையம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய முக்கிய அலுவலகங்கள் இப்பகுதிக்கு 100 மீட்டர் அருகில் தான் உள்ளன. இந்தப் பிரதான அலுவலங்களைத் தாண்டித்தான் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும். வியாழன் (ஜூன் 20) காலை 7:00 மணிக்கு கருணாபுரம் பகுதிக்குள் சென்றோம். நம்மை வரவேற்றவை: தெருவெங்கும் அழுகுரல்கள், அருகருகே போடப்பட்டிருந்த பந்தல்கள், வாசலிலேயே பிரேதபெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இறந்த உடல்கள். அவற்றைச் சுற்றி நின்று அழும் உறவினர்கள் ஒருபுறமும், துக்கம் விசாரிக்க வருபவர்கள் ஒருபுறமும்.சிலர் எந்த வீட்டிற்குச் செல்வது, எத்தனை மாலைகள் வாங்கிச் செல்வது என்று பேசுவது நமது காதில் விழுந்தது. ஒரே தெருவிலேயே பத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். படக்குறிப்பு,இறந்துபோன கந்தனின் தாயார் முலவி இறந்து போன தாய்-தந்தையர் கருணாபுறம் நடுத்தெருப் பகுதிக்குள் நுழைந்தபோது இரண்டு பள்ளி மாணவர்கள் அழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது தாய் வடிவுக்கரசி, தந்தை மாற்றுத்திறனாளியான சுரேஷ் ஆகிய இருவருமே கள்ளச்சாராயம் குடித்ததில் இறந்துவிட்டனர் என்று அழுது கொண்டே கூறினார். “எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஒரு அக்காவும் உள்ளார். அவர் 11-ஆம் வகுப்பு படிக்கின்றார்,” என்று கூறினார். “சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் எனக்கு தெரியவில்லை,” என்று கூறிக் கண்கலங்கினார் அவர். அருகே உள்ள வீட்டிலும் கந்தன் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து இருந்து விட்டிருந்தார். வயதான அவரது அம்மா முலவி கண்ணீருடன் பேசினார். “என் மகனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. நான் என்ன செய்வது? அவ்வப்பொழுது கூலி வேலைக்குச் சென்று தான் கந்தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். நான் இந்த வயதில் என்ன செய்வது?” என்று வேதனையுடன் தெரிவித்தார். இதேபோல் லட்சுமி, மணிகண்டன், சுரேஷ், என இறந்து போனவர்கள் அனைவர் வீட்டின் முன்பும் பந்தல் போடப்பட்டு ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கருணாபுரம் முழுவதும் அழுகுரல் சத்தம் தான் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. சில வீடுகளில் இறந்த உடலை வைக்கும் ஃப்ரீசர் பாக்ஸ் கிடைக்காததால் கட்டிலிலேயே சடலத்தைப் போட்டு வைத்து சடங்கு செய்ய தொடங்கியிருந்தனர். மேளச் சத்தங்களை விட அழுகுரல் சத்தம் அதிகமாக கேட்டது. படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். படக்குறிப்பு,கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை படக்குறிப்பு,அமைச்சர் உதயநிதி நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட நபர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார் மருத்துவமனைக்கு வந்த அரசியல் தலைவர்கள் வியாழன் மதியம் 3.50 மணிக்கு அமைச்சர் உதயநிதி நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட நபர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்று இறந்தவர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வீதம் காசோலைகள் வழங்கினார். அப்பொழுது அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் உடன் இருந்தனர். முன்னதாக செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். படக்குறிப்பு,எடப்பாடி கே. பழனிச்சாமி இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து பேசினார். “கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. நீதிமன்றம் உள்ளது,” என்றார். “அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய கும்பல் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன," எனக் குற்றம்சாட்டினார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். தேமுதிக கட்சித் தலைவர் பிரேமலதா கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது, என்றார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் வந்து ஆறுதல் கூறினார். படக்குறிப்பு,108 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொன்னது என்ன? பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் ஆறுதல் கூறினார். தி.மு.க அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்ட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பா.ஜ.க சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், என்றார். “குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். இந்த விஷச் சாராய உயிரிழப்பு கிராமப் பகுதியில் நடக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது,” என்றார்.. “விஷச் சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷச் சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசைப் பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்,” என்றார் அவர். இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வியாழன் மதியம் 3.50 மணிக்கு அமைச்சர் உதயநிதி நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட நபர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார் அதிகாரிகள் மீது நடவடிக்கை இச்சம்பவம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சியில் கலப்படச் சாராயம் குடித்து மக்கள் பலியாகிய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாயத்தை சீரழிக்கும் இதுபோன்ற குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்,” என்று தெரிவித்தார். இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு குற்றப்பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாடாவத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்பட 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டார். மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். போலீசார் கள்ளச்சாராயம் விற்பனை செய்த கருணாபுரத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்கின்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா சகோதரன் தாமோதரன் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்ததாக, சின்னதுரை என்பவரையும் தற்பொழுது கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி ஏ.டி.எஸ்.பி கோமதி விசாரணை நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சேலம் மருத்துவமனைகளிலும் 108 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cgxxd77j138o
  17. டெல்லியில் வெப்ப அலை தாக்கத்துக்கு வீடு இல்லாதவர்கள் 192 பேர் உயிரிழப்பு 21 JUN, 2024 | 10:33 AM புதுடெல்லி: டெல்லியில் வெப்ப அலையின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடற்ற நிலையில் சாலையில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் கடந்த 9 நாட்களில் உயிரிழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹோலிஸ்டிக் டெலவப்மெண்ட் மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள வீடற்ற குடும்பங்கள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் தங்கி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அதுபோன்றவர்களை இந்த வெப்ப அலையின் தாக்கம் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் கடும் வெயிலுக்கு 192 பேர் பலியானது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த 192 மரணங்கள் ஜூன் 11 முதல் 19-க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை. இறந்தவர்களின் உரிமை கோரப்படாத உடல்களில் 80 சதவீதம் வீடற்றவர்கள் பிரிவை சேர்ந்ததாக உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெப்ப அலை தாக்கத்திலிருந்து தப்பிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் சில ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. அதில், தொடர்ந்து அதிக நீரை பருகுதல், தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்தல், தொப்பி, குடைகளை பயன்படுத்துதல், நீர்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கிய அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/186618
  18. கமின்ஸ் ஹெட்- ட்ரிக், வோர்னர் அரைச் சதம்; டக்வேர்த் லூயிஸ் முறைமையில் பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா 21 JUN, 2024 | 11:21 AM (நெவில் அன்தனி) அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் மழை காரணமாக 32ஆவது ஓவருடன் கைவிடப்பட்ட குழு 1க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது. ஒரே நேரத்தில் ஐசிசியின் 3 சம்பியன் கிண்ணங்களையும் முதலாவது அணியாக தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் அவுஸ்திரேலியா, சுப்பர் 8 சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கிண்ணம் ஆகிவற்றில் அவுஸ்திரேலியா கடந்த வருடம் சம்பியனாகியிருந்தது. பெட் கமின்ஸின் ஹெட்- ட்ரிக், டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட், க்லென் மெக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன. மழை காரணமாக சிறு தாமதத்தின் பின்னர் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாடு மற்றும் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் சார்பாக நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் அவர்களில் இருவர் 40 ஓட்டங்களை எட்டினர். தன்ஸித் ஹசன் (0) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்த பின்னர் லிட்டன் தாஸ் (16), அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததுடன் சிறந்த இணைப்பாட்டம் ஏற்படுத்தப்படவில்லை. நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 41 ஓட்டங்களையும் தௌஹித் ரிதோய் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பின்வரிசையில் தஸ்கின் அஹ்மத் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இதனிடையே பெட் கமின்ஸ் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை சரித்தார். 18ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் மஹ்முதுல்லா, மெஹெதி ஹசன் ஆகியோரையும் 20ஆவது ஓவரின் முதலாவது பந்தில் தௌஹித் ரிதோயையும் பெட் கமின்ஸ் ஆட்டம் இழக்கச் செய்து ஹெட் - ட்ரிக்கைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் பெட் கமின்ஸ், ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் ஹெட்-ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய 7ஆவது வீரரானார். அத்துடன் ரி20 உலகக் கிண்ணத்தில் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்த ப்ரெட் லீயைத் தொடர்ந்து ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது அவுஸ்திரேலியரானார். ப்ரெட் லீயும் பங்களாதேஷுக்கு (2007) எதிராகவே ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 141 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இரண்டாவது தடவையாக மழையினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு கைவிடப்பட்ட போது 11.2 ஓவர்களில் 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 11.2 ஓவர்களில் வெற்றி இலக்கு 78 ஓட்டங்களாக இருந்தது. இந் நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் டக்வேர்த் லூயிஸ் முறைமை அமுலுக்கு வரும் என்பதை அறிந்த அவுஸ்திரேலியா அதிரடியாகத் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. அவுஸ்திரேலியா 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் அவுஸ்திரேலியா 29 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. 25 நிமிடங்களின் பின்னர் மழை ஓய்ந்ததும் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது சீரான இடைவெளியில் ட்ரவிஸ் ஹெட் (21 பந்துகளில் 31), அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (1) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் டேவிட் வோர்னரும் க்லென் மெக்ஸ்வெலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட வேகத்தை அதிகரித்தனர். 11.2 ஓவர்களில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் கடும் மழை தொடர்ந்ததாலும் கட் ஓவ் நேரம் தாண்டியதாலும் போட்டி கைவிடப்பட்டது. டேவிட் வோர்னர் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 53 ஓட்டங்களுடனும் க்லென் மெக்ஸ்வெல் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆட்டநாயகன்: பெட் கமின்ஸ் https://www.virakesari.lk/article/186624
  19. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்.. 21 JUN, 2024 | 10:40 AM கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் 21 பேரின் உடல்கள் கோமுகி ஆற்றங்கரையோரம் ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வத்திப்பெட்டி போல் கட்டைகளை வைத்து வரிசையாக தகனம் செய்ய இடம் அமைக்கப்பட்டது. இறுதி ஊர்வலம் தொடங்கிய போது மழை பெய்ததால், உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இறுதிச்சடங்குக்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள் நனைந்துவிட்டன. இதனால் மீண்டும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொருவரின் உடல்களாக தகனம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி முழுவதுமே சோகத்துடன் காட்சி அளிக்கிறது. https://www.virakesari.lk/article/186621
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஜூன் 2024 நரம்பியல் விஞ்ஞானி ஜிமோ போர்ஜிகினுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. 'இறப்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதி' என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், இறக்கும் தருவாயில் செயலிழக்கும் மூளையைப் பற்றி நமக்கு 'கிட்டத்தட்ட ஒன்றும் தெரியாது' என்பதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்கிறார் அவர். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்து மூலம் தெளிவாகத் தெரிந்தது. “நாங்கள் ஆய்வகத்தில் எலிகளை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவற்றின் நரம்பியல் சுரப்புகளை நாங்கள் ஆய்வு செய்தோம்," என்று அவர் பிபிசி முண்டோ சேவையிடம் விவரித்தார். இதில், இரண்டு எலிகள் திடீரென உயிரிழந்தன. இந்த நிகழ்வு அவற்றின் மூளையின் மரணிக்கும் செயல்முறையை அவதானிக்க அவர்களுக்கு வழிவகுத்தது. “அதில் ஒரு எலிக்கு செரோடோனின் என்ற ரசாயனம் பெருமளவில் சுரந்தது,” என்கிறார். அந்த எலி மாயத்தோற்றத்தில் (hallucinating) இருந்ததா? என்று நினைத்து அவர் ஆச்சரியப்பட்டார். "செரோடோனின் 'ஹேலுசினேஷன்’ உடன் தொடர்புடைய ரசாயனம் ஆகும்," என்று அவர் விளக்கினார். அந்த நரம்பிடைக் கடத்தியின் ( neurotransmitter) அதீதச் சுரப்பு அவரது ஆர்வத்தைத் தூண்டியது. "மூளையின் இந்தச் செயல்முறை பற்றி கண்டிப்பாக ஒரு விளக்கம் இருக்க வேண்டும் என்று நம்பினேன். அந்த வார இறுதியில் இதுதொடர்பாக நான் நிறைய படிக்க ஆரம்பித்தேன். நான் தொடர்ந்து தேடினேன், இறுதியில் இறக்கும் செயல்முறை பற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்தேன்,” என்றார். அப்போதிருந்து, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் மற்றும் மூலக்கூறு மற்றும் ஒருங்கிணைந்த உடலியல் இணைப் பேராசிரியராக இருக்கும் ஜிமோ போர்ஜிகின், இறக்கும் போது மனித மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் ஆய்வு செய்வதற்காக தன்னை அர்ப்பணித்தார். மேலும், அவர் கண்டறிந்தது அனுமானங்களுக்கு முரணானது என்பதை அவர் உணர்ந்தார். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,COURTESY: UNIVERSITY OF MICHIGAN படக்குறிப்பு,ஜிமோ போர்ஜிகின் மரணம் என்றால் என்ன? "யாருக்காவது மாரடைப்பு (cardiac arrest) ஏற்பட்டதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?” என்று அவர் என்னிடம் கேட்டார். “ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது சரிந்து விழுவது வெளிப்படையாக தெரியும் நிகழ்வு,” என்றார். "நீங்கள் அந்த நபரைப் பெயர் சொல்லி அழைக்கும் போது அவர் பதிலளிக்க மாட்டார், நீங்கள் அவரைத் தொட்டால் அசைவில்லாமல் இருப்பார், அவர் இறந்துவிட்டதைப் போலச் செயல்படுவார்,” என்றார். அந்த நோயாளி உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதிபடுத்த மருத்துவ நிபுணர்கள் தேவை. அவர்கள் இறப்பை உறுதிப்படுத்த எலக்ட்ரோ கார்டியோகிராம் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். “ஆனால், நீண்ட காலமாக வழக்கத்தில் இருப்பது என்னவென்றால், யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால், மருத்துவர் அவர்களின் கைகளையோ கழுத்தையோ பரிசோதிப்பர், அவர்களுக்கு நாடித் துடிப்பு இல்லை என்றால், இதயம் ரத்தத்தை 'பம்ப்' செய்யவில்லை என்று அர்த்தம். பின்னர் இது மருத்துவ மரணம் என வரையறுக்கப்படுகிறது," என்று விவரித்தார். "இந்தச் செயல்பாட்டின் போது இதயம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது, எனவே தான் இந்தச் செயல்பாட்டை 'பெருமூளை அடைப்பு’ ( cerebral arrest) என்று சொல்லாமல் 'மாரடைப்பு' (Cardiac arrest) என்று சொல்கின்றனர்,” என்கிறார். "ஒட்டுமொத்த மருத்துவம் மற்றும் விஞ்ஞான அறிவைப் பொருத்தவரை, மூளை செயலிழக்கிறது. ஏனெனில் அந்த நபரிடம் இருந்து எந்த எதிர்வினையும் வருவதில்லை. அந்த நபரால் உட்காரவோ பேசவோ முடியாது,” என்கிறார். மேலும், மூளை செயல்பட பெருமளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதயம் ரத்தத்தை பம்ப் செய்யவில்லை என்றால், ஆக்ஸிஜன் மூளையை அடையாது. போர்ஜிகின் கூற்றுப்படி, "அனைத்து வெளிப்படையான சமிக்ஞைகளும் மூளை செயலிழந்ததை சுட்டிக்காட்டுகின்றன." இருப்பினும், அவரது ஆராய்ச்சிக் குழுவின் கண்டுபிடிப்புகள் வேறு முடிவை பிரதிபலிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எலிகளை வைத்து போர்ஜிகின் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில், மரணத்தின் போது அவற்றின் மூளையில் சில தீவிரமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டது இறக்கும்போது மூளையில் என்ன நடக்கிறது? எலிகளை வைத்து 2013-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விலங்குகளின் இதயம் செயல்படுவது நின்றுபோய், அவற்றின் மூளைகள் ஆக்ஸிஜன் பெறுவதை நிறுத்திய பிறகு, பல நரம்பிடைக்கடத்திகளின் (நியூரோடிரான்ஸ்மிட்டர் - neurotransmitter) தீவிரச் செயல்பாட்டைக் கண்டனர். “செரோடோனின் 60 மடங்கு அதிகரித்தது. நல்ல உணர்வைத் தூண்டும் 'டோபமைன்’ 40 முதல் 60 மடங்கு அதிகரித்தது. விழிப்பூட்டும் திறன் கொண்ட நோர்பைன்ப்ரைன் ரசாயனமும் அதிகரித்தது. நரம்பிடை கடத்திகளின் இத்தகைய உயர் நிலைகளை, அந்த விலங்குகள் உயிருடன் இருக்கும்போது கூட நம்மால் பார்க்க முடியாது," என்று அவர் கூறுகிறார். 2015-இல், இந்த ஆய்வுக்குழு எலிகள் இறக்கும் போது அவற்றின் மூளை செயலிழப்பது குறித்த இரண்டாவது ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். "இரண்டு ஆய்வின் போதும், இறக்கும் தருவாயில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகளில் மூளையின் செயல்பாட்டில் தீவிரத்தன்மை இருந்தது,” என்கிறார். "அவற்றின் மூளை ஒரு அதிவேக செயல் நிலையில் இருந்தது," என்கிறார். அதிவேக மூளை அலைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காமா அலைகள் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிவேக மூளை அலைகள் 2023-ஆம் ஆண்டில், அவர்கள் கோமாவில் இருந்தவர்கள், மற்றும் எலெக்ட்ரோ என்செபலோகிராபி மின்முனைகள் போன்ற உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் உயிர் வாழ்ந்த நான்கு நோயாளிகளை ஆய்வு செய்தனர். "அவர்கள் வெவ்வேறு நோய்களால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தனர்," என்று விஞ்ஞானி கூறுகிறார். 'அவர்கள் பிழைப்பது சாத்தியமற்றது. உதவக்கூடிய எந்த ஒரு மருத்துவ நடைமுறைக்கும் அப்பாற்பட்டவர்கள்' என்று மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முடிவுக்கு வந்தனர். இதன் விளைவாக, அவர்களை இந்த உலகில் இருந்து விடுவிக்க குடும்பத்தினரும் மருத்துவர்களும் முடிவு செய்தனர். உறவினர்களின் அனுமதியுடன், அந்த நோயாளிகளின் இயந்திர வென்டிலேட்டர்கள் அல்லது சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டன. அவ்வாறு செய்யும்போது, அவர்களில் இரண்டு நோயாளிகளில், புலனுணர்வு செயல்பாடுகளுடன் (cognitive functions) தொடர்புடைய அதீத மூளைச் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவர்களின் மூளையில் காமா அலைகளும் கண்டறியப்பட்டன. காமா அலைகள் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிவேக மூளை அலைகள் ஆகும். நரம்பியல் நிபுணரின் கூற்றுப்படி, நோயாளியின் வென்டிலேட்டர் துண்டிக்கப்படும் போது பொதுவான ஹைபோக்ஸியா (hypoxia) நிலை ஏற்படுகிறது. இது ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை (Generalized hypoxia) விவரிக்கப் பயன்படும் சொல். இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத போது ஏற்படும் நிலையில் ஹைபோக்ஸியா ஏற்படுகிறது. இது மாரடைப்புடன் தொடர்புடைய நிலை ஆகும். "மூளையைச் செயல்படுத்துவதில் ஹைபோக்ஸியா என்னும் நிலை பங்கு வகிக்கிறது என்று தோன்றுகிறது. மேலும், வென்டிலேட்டர்கள் அகற்றப்பட்ட சில நொடிகளில் நான்கு நோயாளிகளில் இருவரின் மூளை நொடியில் செயல்படத் தொடங்கியது,” என்கிறார். ஒட்டுமொத்த மூளையும் செயல்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மூளையின் ஃப்ரண்டல் லோப் இளஞ்சிவப்பு நிறத்திலும், பாரிட்டல் லோப் நீல நிறத்திலும், ஆக்ஸிபிடல் லோப் ஆரஞ்சு நிறத்திலும், டெம்போரல் லோப் மஞ்சள் நிறத்திலும் காட்டப்படுள்ளது இந்த ஆய்வைச் செய்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, "இறக்கும் தருவாயில் மனிதர்களின் மூளையின் சில பாகங்கள் மட்டுமே செயல்படுகிறது. ஆனால் எலிகளைப் பொருத்தவரை மூளையில் பெருமளவு செயல்படுகிறது.” அவை மூளையின் விழிப்புணர்வுடன் இருக்கும் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பகுதிகள். அவற்றில் ஒன்று டெம்போரோ பேரியட்டல் ஆக்ஸிபிடல் சந்திப்பு (TPO), இது தற்காலிக, பாரிட்டல் மற்றும் பாரிட்டல் லோப்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் புள்ளியாகும். மேலும், இது 'பின்புற கார்டிகல் வெப்ப மண்டலம்' (posterior cortical hot zone) என்று குறிப்பிடப்படுகிறது. "உங்கள் மூளையின் பின்பகுதி உணர்திறனைக் கட்டுப்படுத்துகிறது," என்று அவர் தெளிவுபடுத்துகிறார். இது கனவுகள், காட்சி மாயைகள் மற்றும் விழிப்புணர்வு (consciousness) ஆகியவற்றுடன் தொடர்புடையது. மொழி, பேசுதல் மற்றும் கேட்பது ஆகியவற்றுடன் தொடர்புடைய வெர்னிக்கே பகுதி (Wernicke area) தூண்டப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர். "இருபுறமும் உள்ள 'டெம்போரல் லோப்' மிகவும் செயல்திறன் கொண்டு இயங்கியது என்பதையும் நாங்கள் கவனித்தோம்,” என்கிறார். நமது காதுகளுக்கு அருகில் இருக்கும் அந்தப் பகுதி நினைவகச் சேமிப்பு மற்றும் பிற அறிவாற்றல் செயல்முறைகளுக்கு முக்கியமானது. மூளையின் வலது பக்கத்தில் உள்ள டெம்போரோபரியட்டல் சந்திப்பு (TPJ) ஒத்துணர்வு (empathy) பண்புடன் தொடர்புடையது என்பதை பேராசிரியர் போர்ஜிகின் சுட்டிக்காட்டுகிறார். "உண்மையில், மரணத் தருவாய் அனுபவங்களை (near-death experience) அனுபவித்தப் பல நோயாளிகள் மற்றும் மாரடைப்பில் இருந்து தப்பியவர்கள் தங்கள் அனுபவங்கள் தங்களை மேம்படுத்தி, அவர்களின் ஒத்துணர்வை (empathy) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்,” என்கிறார். போர்ஜிகின், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒருவரைப் பற்றி பேசுகையில், "அவர் உயிர் பிழைத்திருந்தால், அவர் நிச்சயமாக இதே விஷயங்களைச் சொல்லி இருப்பார்," என்று நம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மரணத்தை நெருங்கிய அனுபவங்கள் புத்துயிர் பெறும் மருத்துவ நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக மருத்துவ மரணம் அல்லது மரணத்தில் இருந்து தப்பிய பலர், மரணத் தருவாய் அனுபவங்களை (near-death experience) அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை எப்படித் தங்கள் கண்முன் விரைவாகக் கடந்து சென்றது, அல்லது சில நிகழ்வுகளை எப்படி நினைவில் நிறுத்தியது என்பதை விவரித்தார்கள். பிரகாசமான ஒளியைப் பார்த்ததாக நிறைய பேர் சொன்னார்கள். இன்னும் சிலர் தங்கள் உடலில் இருந்து தப்பித்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கச் சுற்றித் திரிந்ததாகச் சொல்கின்றனர். இறப்பதற்கு முன்பு சிலர் அனுபவித்த சக்திவாய்ந்த உணர்வுகளை, போர்ஜிகின் தனது ஆய்வுகளில் கண்ட அதிவேக மூளைச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்க முடியுமா? "செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் பதிலளிக்கிறார். அவர்களின் 2023 ஆய்வின்படி, குறைந்தது 20% அல்லது 25% பேர் மாரடைப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்கள் ஒரு ஒளியைக் கண்டதாகக் கூறினர். இது அவர்களின் பார்வை திறனுக்கான மூளைப்பகுதி ( visual cortex ) சுறுசுறுப்பாக இருந்ததைக் குறிக்கிறது. "ஒரு வாகன விபத்தில் சிக்கிய பிறகு, அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்த சில நோயாளிகள் தங்கள் சிகிச்சையின் போது மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்ததாகக் கூறினர். அவர்கள் காப்பாற்றப்படும் போது அவர்களைச் சுற்றி நடந்தவற்றை கேட்டு கொண்டிருந்ததாக கூறினர்,” என்கிறார். "பேச்சு மற்றும் மொழியின் உணர்வுக்குக் காரணமான மூளையின் பகுதி, மற்றும் ஹாட் சோன் (later hot zone) எனப்படும் மண்டலம் ஆகிய இரண்டும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்துள்ளது," என்று இறந்த இரண்டு நோயாளிகளைப் பற்றிப் பேராசிரியர் கூறினார். முரண்பாடான நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நவீன மருத்துவ உபகரணங்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எண்ணற்ற நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, டிஃபிபிரிலேட்டர் மின் அதிர்வுகள் மூலம் இதயத் துடிப்பை மீட்கிறது "மரணம் என்பது இதயத்தை மையமாகக் கொண்டுள்ளதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது. எனவே, ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மூளை செயல்படுவதை நிறுத்துகிறது என்று நம்புகின்றனர்,” என போர்ஜிகின் கூறுகிறார். "இருப்பினும், இந்த நம்பிக்கை மரணத்திற்கு அருகில் சென்று உயிர்பிழைத்தவர்களின் அனுபவங்களுடன் ஒத்துப்போவதில்லை,” என்கிறார். அவரைப் பொறுத்தவரை, மாரடைப்பின் போது மூளை வேலை செய்வதற்கான எந்த வெளிப்படையான அறிகுறியும் இல்லை என்றாலும், அதை நிராகரிக்க முடியாது. "ஒளியைப் பார்ப்பது, குரல்களைக் கேட்பது, உடலை விட்டு வெளியேறுவது, அல்லது நடுவானில் மிதப்பது போன்ற ஆழமான நகரும், தாக்கும் அனுபவங்களை ஒருவர் மனதில் கொண்டிருப்பது எப்படி?" இவை அனைத்தும் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதன் ஒரு பகுதியாகும். "இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் உடலுக்கு வெளியில் இருந்து தோன்றுபவை என்றும், இவை உடல் ரீதியானவை அல்ல என்றும் நினைப்பவர்கள் உள்ளனர், ஏனெனில் மருத்துவ வல்லுநர்கள் பலர் மூளை செயல்படவில்லை என்று நம்புகிறார்கள்,” என்கிறார். "ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை, 2013-இல், விலங்குகளை வைத்து நடத்திய முதல் ஆராய்ச்சியை நாங்கள் வெளியிட்ட போது, இந்த அகநிலை அனுபவங்கள் உடலுக்கு வெளியில் இருந்து வருகின்றன என்ற கருத்தை நிரூபிக்க முடியாது, அது சாத்தியமற்றது என்று நாங்கள் எழுதினோம்,” என்கிறார். இதன் காரணமாக, அவை மூளையில் தோன்றியவை என்று நம்பப்படுவது எதிர்மறையானதாகத் தோன்றினாலும், மூளை செயல்படுகிறது என்று உறுதியாக நம்பியதாகக் கூறுகிறார். "மரணத்திற்கு அருகாமையில் நிகழும் அனுபவங்கள் அனைத்தும் மரணத்துக்குப் பிறகு நடப்பவை அல்ல, ஆனால் இதயம் மற்றும் மூளையின் முக்கிய அறிகுறிகளை நிறுத்துவதற்கு முன்பு மூளையின் செயல்பாட்டிலிருந்து உருவாகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார். ஒரு புதிய புரிதல் மனிதர்களைப் பற்றிய தனது ஆய்வு மிகவும் சிறியது என்றும், நாம் இறக்கும் போது மூளையில் என்ன நடக்கிறது என்பது குறித்து இன்னும் அதிக ஆராய்ச்சி தேவை என்றும் போர்ஜிகின் கருதுகிறார். இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதில் கவனம் செலுத்திய பிறகு, ஒரு விஷயம் தெளிவாகி உள்ளது: "இதயம் நின்றுபோகும் போது, மூளையின் செயல்பாடுகள் மங்கும் (hypoactive) என்பதை விட அதிவேகமாக செயல்படும் (hyperactive) என்பதே சரி,” என்கிறார். "இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டும்,” என்கிறார். "உண்மையில், அவர் தனது ஆய்வில் கண்டறிந்தது மூளையின் உயிர்வாழும் செயல்முறையின் (survival mode) ஒரு பகுதி. அது ஆக்ஸிஜன் இல்லாத சூழல் உருவாகும்போது அதிகமாக செயல்படத் தொடங்குகிறது,” என்கிறார். ஆனால், மூளை தனக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதை உணரும்போது என்ன நடக்கும்? "நாங்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், அதுபற்றி அதிக ஆராய்ச்சிகள் இன்னும் செய்யப்படவில்லை,” என்று அவர் பதிலளித்தார். உறக்க நிலையைப் பற்றி விளக்கிய அவர், "குறைந்த பட்சம் எலிகள் மற்றும் மனிதர்கள் உட்பட விலங்குகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு எண்டோஜெனஸ் பொறிமுறையைக் (endogenous mechanism) கொண்டுள்ளன," என்று தனது கோட்பாட்டை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ”இதயம் செயலிழக்கும் போது மூளை எதுவுமே செய்ய முடியாமல், அதுவும் செயலிழந்துவிடும் என்று இப்போது வரை நம்பப்படுகிறது. ஆனால், இது நமக்கு உறுதியாகத் தெரியாது,” என்று அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். உயிர் பிழைத்தல் மூளை, தனது செயல்பாடுகளை எளிதில் நிறுத்தாது என்று போர்ஜிகின் நம்புகிறார். வழக்கமாக நெருக்கடிகளின் போது அது போராடுகிறது. "ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தக்கவைக்க மூளை உறக்கநிலையை (Hibernation) ஏற்படுத்துகிறது. மூளைக்கு நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் உள்ளது என்று நம்புவதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் தூக்கநிலையும் ஒன்று,” என்கிறார். "என் மூளை என்னிடம், பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெற்றோர்கள் வேலை இல்லாமல், வருமானம் இல்லாத நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கற்பனை செய்து பார்க்கச் சொல்கிறது,” என்கிறார். "அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்? அவர்கள் செலவைக் குறைத்து, தேவையில்லாத பொருட்களைப் பட்டியலில் இருந்து நீக்குகிறார்கள். அவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்,” என்கிறார். இந்தச் சூழலை மூளையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அந்த குடும்பத்துக்குப் பணத்தேவை எப்படியோ அப்படித்தான் மூளைக்கு ஆக்ஸிஜன் தேவை என்று அவர் நினைக்கிறார். "மூளையும் அதையே செய்கிறது என்று நான் நினைக்கிறேன். அதன் மிக முக்கியமான செயல்பாடு என்ன? நடனமாடவோ, பேசவோ, நகரவோ அனுமதிக்கும் ஒன்றல்ல. அந்த செயல்பாடுகள் அத்தியாவசியமானவை அல்ல. இன்றியமையாதது சுவாசிப்பது, இதயத்தை துடிக்க வைப்பது,” என்கிறார். அதனால்தான், " 'வரவிருக்கும் பிரச்னைக்கு நான் ஏதாவது செய்வது நல்லது' என்று மூளை நினைக்கிறது. கூடுதலாக, இது உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவைக் குறைந்துப் பாதுகாக்க வேண்டிய சூழலிலும் உள்ளது,” என்கிறார். ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் போர்ஜிகின் தனது ஆய்வில் கண்டது ஒரு மாபெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே என்று கருதுகிறார். அதன் கீழே ஆய்வு செய்யப்பட வேன்டியவை ஏராளம் உள்ளன என்று நம்புகிறார். "தனது நிதி முன்னுரிமைகளை மறுவரையறை செய்ய வேண்டிய ஒரு குடும்பத்தின் உதாரணத்துடன் எனது கோட்பாட்டை நான் உங்களுக்கு விளக்கியபோது, மூளையும் அதையே செய்கிறது என்று நான் நம்புவதால் தான், நமக்குப் புரியாத ஹைபோக்ஸியாவைச் சமாளிப்பதற்கான உடல்சார்ந்த வழிமுறைகள் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்கிறார். "இது மேற்பரப்பில் தெரியும் பெரிய பனிப்பாறைக்கு அடியில் உள்ள ஏதொ ஒன்றை பற்றியது,” என்கிறார். "மேற்பரப்பில், இந்த நம்பமுடியாத அகநிலை அனுபவத்தைக் எதிர்கொண்ட, இதயம் செயலிழக்கும் தருவாய்க்குச் சென்றுதிரும்பிய நபர்கள் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். மேலும், அந்த அனுபவம் மூளையின் அதீதச் செயல்பாட்டின் காரணமாக நிகழ்ந்தது என்பதை எங்கள் தரவு காட்டுகிறது,” என்கிறார். ஆனால், இறக்கும் தருவாயில் மூளை ஏன் இவ்வளவு தீவிரமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது? "இறப்பைப் பற்றி, அந்த நிகழ்வைப் பற்றி மூளையை மையமாக வைத்து தெரிந்துக் கொள்ள அதிக முயற்சி செய்யவில்லை. நாம் அதைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், கண்டுபிடிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அது நடந்தால், கோடிக்கணக்கான மக்களின் மரணத்தை முன்கூட்டியே கண்டறியலாம்,” என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c977w50jz7do
  21. 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது. ஜூலை 10ஆம் திகதி வரை இணையம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் தங்கள் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும், கைத்தொலைபேசி மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை திணைக்களத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1911 அல்லது பொது தொலைபேசி இலக்கங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304248
  22. நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரில் ஒருவர் கைது! Published By: VISHNU 21 JUN, 2024 | 12:52 AM நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186607
  23. 20 JUN, 2024 | 07:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல ஆரம்ப வகுப்பு பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழி மூல பாடசாலைகள் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. இவ்வாறான நிலைமையில் எப்படி இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என சுயாதீன எதிரணியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) மகளிர் வலுப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, யுனெஸ்கோ பிரகடனத்தில் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளேன். கடந்த 5 வருடங்களை எடுத்துக்கொண்டால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும்போது 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியாகின்றன. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னரும் கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சிங்கள வெட்டுப்புள்ளிகள் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழிமூலம் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் இல்லை என்பதனையே காட்டுகிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே உங்களின் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்... யுத்த காலத்திலும் கூட கொழும்பு ரோயல் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் வகுப்புகள் இடம்பெற்றன. ஆனால், வடக்கு, கிழக்கில் சிங்கள மொழிமூலம் வகுப்புகள் ஏதும் இல்லை. மட்டக்களப்பில் எத்தனையோ சிங்கள கிராமங்கள் உள்ளன. எத்தனையோ சிங்கள பாடசாலைகள் பிரபுக்களால் அமைக்கப்பட்டன. ஆனால், அவை இல்லாது இருக்கின்றன. இப்படி இருக்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/186596
  24. டி20 உலகக் கோப்பை: மிரட்டிய ஆப்கானிஸ்தானை வியூகம் வகுத்துச் சுருட்டிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூன் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் மாறிவிட்டதால் இனிமேல் டி20 போட்டிகளுக்கே உரிய ரன் குவிப்பை பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆடுகளங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், பேட்டர்கள் பந்தைக் கவனித்து ஷாட்களை அடிக்க வேண்டியுள்ளது. இதுதான் நேற்றை இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் தாத்பரியமாக இருந்தது. அனுபவ பேட்டர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் பொறுமையாக, நிதானமாக பேட் செய்யாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் நிதானமாக, அதேநேரம் எந்தப் பந்தை பெரிய ஷாட்டாக மாற்றலாம் எனத் தெரிந்து அடித்து ஹீரோவாக ஜொலித்தார். பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் குருப்- ஏபிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி குரூப்-1 பிரிவில் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 2.350 என்று வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 சர்வதேச போட்டிகளை இந்திய அணி வென்று சாதனையை தக்கவைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மைனஸ் 2.350 என்று குறைவாக இருக்கிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடந்தது என்ன? இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும்தான். அதிலும் புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இந்திய அணியை தாங்கிப்பிடித்து பெரிய ஸ்கோருக்கு கொண்டுவந்தவர் சூர்யகுமார் யாதவ். 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். அணியைச் சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார் ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூர்யகுமார்-ஹர்திக் பாண்டியா கூட்டணி நேற்றைய ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், பெரியஸ்கோருக்கும் வழிவகுத்தது. ஹர்திக் பாண்டியாவும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் பும்ராவின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து பும்ரா பந்துவீச்சில் எக்கானமி 3 ரன்களைக் கடக்கவில்லை. இந்த ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறனை வெளிப்படுத்தினார். அதிலும் புதிய பந்தில் பும்ராவாவின் பந்துவீச்சை சமாளிக்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் கடும் சிரமப்பட்டு விக்கெட்டையும் இழந்தனர். அதேபோல அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், சிராஜுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட குல்தீப் யாதவ் 4 ஓவர்களிலி் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் என அற்புதமாகப் பந்துவீசினர். அக்ஸர் படேலும், ஜடேஜாவும் தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு துணை செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித் சர்மான கூறியது என்ன? வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் “கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இங்கு டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறோம் என்பதால், சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட முடிந்தது. அதனால்தான் 180 ரன்களை எட்ட முடிந்தது.” என்றார். “பேட்டர்களின் பங்கு அசாத்தியமானது. எங்களிடம் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். ஸ்கை, ஹர்திக் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ஆட்டத்தை ஆழமாகக் கொண்டு செல்ல இருவரின் ஆட்டம் அவசியமானதாக இருந்தது. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நமக்குத் தெரியும். அவர் பந்துவீச்சில் என்ன செய்வார் என்பதும் தெரியும். சூழலையும், ஆடுகளத்தையும் சாதகமாக பயன்படுத்தி பந்துவீசக்கூடியவர். பொறுப்பெடுத்து தனது பங்களிப்பை பல ஆண்டுகளா அளித்து வருகிறார் பும்ரா. இந்த ஆடுகளத்தின் தன்மையைப்புரிந்து கொண்டுதான் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அடுத்த ஆட்டத்தில் இருந்தால், அதிகமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் வருவோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித், கோலி 2 ஆண்டுகளாக விளையாடவில்லை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணித்து ரோகித் சர்மா, கோலி பேட் செய்து கையைச் சுட்டுக்கொண்டனர். 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடவில்லை. ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்களுடன் பரூக்கி பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார். இன்றைய டி20 போட்டிகளில் பந்துவீச்சில் ஒவ்வொரு வீரரும் எவ்வாறு வேரியேஷன்களை கொண்டு வருகிறார்கள். 145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒரு பந்துவீச்சாளர் அடுத்த பந்தை அப்படியே வேகத்தைக் குறைத்து 110 கி.மீ வேகத்தில் வீசுகிறார். இதை கவனிக்காமல் விட்டதுதான் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா செய்த தவறாகும். ஐபிஎல் தொடரில் பலமுறை லெக் ஸ்பின்னுக்கு கோலி ஆட்டமிழந்துள்ளார். இதை உணர்ந்த ரஷித் கான் தனது பந்துவீச்சில் கோலியை பெரிய ஷாட்டுக்கு மாற்றும் வகையில், ஆசையைத் தூண்டும் வகையில் பந்துவீசினார். இதை கவனிக்காத கோலி, சிக்ஸருக்கு முயன்று கேட்சாகினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங் சூர்யகுமாரின் பேட்டிங் நேற்றைய ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸாக இருந்தது. சூர்யகுமார் 3வது வீரராக வழக்கமாகக் களமிறங்கிய நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு 4வது இடம் தரப்பட்டது. ஆனாலும், தனக்குரிய பணியை இந்தத் தொடரில் சிறப்பாகவே செய்து வருகிறார். சூர்யகுமார் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான, ஸ்பெஷல் ஷாட்களை ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆப்சைட் சென்ற பந்துகளை ஸ்வீபுக்கு மாற்றியது, ஃபுல்டாஸ் பந்தை ஸ்வீப்புக்கு மாற்றியது என எதிரணி பீல்டர்கள் கணிக்க முடியாத வகையில் ஷாட்களை விளையாடினார். அதாவது இடதுபுறம் பவுண்டரி எல்லை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து பெரும்பாலான ஷாட்களை சூர்யாக இடதுபுறம் அடித்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை ஆடினார். சூர்யகுமார் அடித்த 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸரில் பந்து அரங்கத்தின் மேற்கூரையில் விழுந்தது. ஸ்லோவர் பந்துகளை எவ்வாறு கணித்து ஆட வேண்டும் என்பதற்கு பிரத்யேகப் பயிற்சி எடுத்த சூர்யா, நேற்று ஸ்லோவர் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பந்துவீச்சு வேரியஷன்கள் சூர்யாவிடம் தோல்வி அடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளம் மந்தமாக இருந்தால், பந்து வரும் திசையை பேட்டர்கள் கணிப்பது சிரமம். இதற்கு நீண்டநேரம் களத்தில் இருந்து பந்தை கணித்தால்தான் ஆட முடியும். ஆனால், இதை சூர்யகுமார் வந்தவுடன் புரிந்து கொண்டு ஆடுகளத்துக்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்றிக்கொண்டார். வழக்கமாக ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை அதிகமாக ஆடக்கூடிய சூர்யா நேற்று பெரிதாக ஆடவில்லை.இந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே கீப்பருக்கு பின்னால் அடித்து சூர்யா சேர்த்தார். இதுபோன்று ஆடுவது சூர்யாவின் பேட்டிங்கில் குறைந்த சதவீதம் என்றாலும், ஆடுகளத்தின் மெதுவான தன்மை, பந்தின் வேகக் குறைவால் அதிகமான சக்தியை செலுத்திதான் இந்த ஷாட்களை ஆட முடியும் என்பதால் பெரியாக மெனக்கெடவில்லை. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட சூர்யா, அதை ஹர்திக் பாண்டியாவிடம் கூறி, அவர் அடித்த அதே ஷாட்களுக்கு அடிக்க மாற்றினார். இருவருமே பீல்டர்கள் கணிக்க முடியாத பகுதியில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். ரன் சேர்ப்பதற்கு கோலி, ரோஹித், ரிஷப் பந்த், துபே ஆகியோர் சிரமப்பட்ட நிலையில், சூர்யகுமார் 27 பந்துகளில் அரைசதம் அடித்தது சகவீரர்களுக்கே வியப்பாக இருந்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் பரூக்கி வீசிய ஸ்லோவர் பந்துக்கு சூர்யா இரையாகினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா சிறப்பான பந்துவீச்சு புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு வேகம் அற்புதமானது. புதிய பந்தில் பும்ரா பந்துவீசினாலே 75 சதவீதத்துக்கும் மேல் விக்கெட் வீழ்த்தும் சாதனையை டி20 போட்டியில் வைத்துள்ளார். அதை நேற்றைய ஆட்டத்திலும் பும்ரா நிரூபித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ்(11), ஜசாய்(2) விக்கெட்டுகளை காலி செய்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் அதிகமான ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் குர்பாஸ் விக்கெட்டை அனாசயமாக எடுத்தார் பும்ரா. குர்பாஸ் இறங்கி வந்ததும் பந்தை ஆஃப் சைடில் விலக்கி பும்ரா வீசவே, அதை அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்தார் குர்பாஸ். ஆடுகளத்தன் தன்மையை உடனடியாகக் கணித்து அதற்கு ஏற்றார்போல் பும்ரா பந்துவீசுவதால்தான் அனைத்து ஃபார்மெட்டுகளின் ராஜா என்று புகழப்படுகிறார். இந்த ஆட்டத்தில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் உடனடியாக மாற்றாததன் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் நேற்று விலை கொடுத்தது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வரை பெரிய ஷாட்களுக்குதான் பெரும்பாலும் முயன்றார்களே தவிர, களத்தில் நிலைத்திருக்க முயலவில்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்சாய் தவிர, மற்ற எந்த பேட்டரும் 20 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. பந்துவீச்சிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ரஷித் கான், பரூக்கி இருவர் மட்டுமே பந்துவீசினர். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசவில்லை. அதிலும் குறிப்பாக நவீன் உல் ஹக் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ரஷித் கான் தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். https://www.bbc.com/tamil/articles/cy99zwqqpkno
  25. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.