Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது. அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், நிலத்தடி நீரைப் பெருக்க என்ன செய்ய வேண்டும், நீர் மூலங்கள் எப்படியான நடத்தைகள் மூலம் எவ்வாறெல்லாம் மாசடைகின்றன, தற்போதுவரை எத்தகைய பாதிப்புகள் மற்றும் மாசுகளை நீர் சந்தித்துள்ளது, இதை ஊதிப்பெருப்பிக்கும் பல்தேசிய கம்பனிகளின் வியாபார உத்திகள். சாமான்ய மக்களின் உளவியல் - பொதுப்புத்தி - தவறான புரிந்துமைகள், தண்ணீர் விற்பனைக்கு வருவதை ஊக்குவித்தால் ஓர் இனத்தின் பண்பாடு வாழ்வியல் தேசஇருப்பில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள், நீர் ஆதாரங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டியதன் அவசியம், நீர் மேலாண்மை மற்றும் தீர்வுகள் என்பன பற்றியெல்லாம் இந்த விவரணப்படம் எடுத்தியம்புகின்றது.
  2. டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் வலிமையை பரிசோதிக்கப்போகும் பாகிஸ்தானின் 'பவர் ஹிட்டர்கள்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 31 மே 2024, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் மோதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும் இப்போதிதிருந்தே சமூக வலைத்தளங்களில் வலம்வரத் தொடங்கிவிட்டன. கடந்த கால வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பெற்ற வெற்றிக்குப்பின் இந்திய அணி வரலாற்றை மீட்டெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பதிலடி கொடுத்தாலும் கடைசிப்பந்தில் மிகுந்த சிரமப்பட்டே வெற்றி பெற முடிந்தது. எனவே, இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா பாகிஸ்தான் போட்டி எங்கு, எப்போது நடக்கிறது? ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 2-ஆம் தேதி அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐசனோவர் பார்க்கில் உள்ள நாசா கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் நடக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை 145 முதல் 400 டாலர் என விற்கப்பட்டாலும், பிளாக்கில் டிக்கெட் விலை 4 ஆயிரம் டாலராக அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டிக்கெட் விலை உயர்விலேயே ஆட்டத்தின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டம் என்பதால், வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு இந்தக் கோப்பை ஏன் முக்கியமானது? இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை வென்றது. அதன்பின் 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இறுதிப்போட்டிவரை பல போட்டிகளுக்கு சென்றும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த முறை நடக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் பல மூத்த வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இது கடைசி உலகக் கோப்பையாகக் கூட அமையலாம். முகமது ஷமி காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் வயது காரணமாக அடுத்த 2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். ஆதலால், இந்த டி20 உலகக் கோப்பை மூத்த வீரர்களுக்கு பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமல்லாமல் கோலி கேப்டன்ஷிப்பில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. அவருக்குப்பின் கேப்டன் பதவி ஏற்ற ரோஹித் சர்மா கடந்த முறை ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிவரை இந்திய அணியைக் கொண்டு சென்றும் கோப்பையைத் தவறவிட்டார். இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, கோப்பையை வெல்லத் தீவிரம் காட்டும். ரோஹித் சர்மாவுக்கும், கோலிக்கும் இது கடைசி வாய்ப்பு என்பதால் இருவரிடம் இருந்தும் முழுமையான பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, அயர்லாந்து அணிகளுடன் இந்திய அணியும் இடம் பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற அணிகளுடன் இந்திய அணிக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று நம்பினாலும், பாகிஸ்தானுடன் ஆட்டம் கடும் சவாலாக இந்திய அணிக்கு அமையக்கூடும். கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருந்த கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், அஸ்வின், முகமது ஷமி, ஹர்சல் படேல், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இந்த முறை இல்லை. அதற்குப் பதிலாக இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்ஸன், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியது பெரிய பலம் என்றாலும் அவருக்குத் துணையாகப் பந்துவீச தரமான அளவில் பந்துவீச்சாளர்கள் இல்லை என்றே பரவலாகக் கருதப்படுகிறது. முகமது சிராஜ், அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே உள்ளனர். சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான கரீபியன் ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு எவ்வாறு எடுபடும் என்பது போட்டி நடக்கும்போதுதான் தெரியவரும். இது தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன. பட மூலாதாரம்,GETTY IMAGES 1000 ரன்களுக்கு மேல் குவித்த 8 இந்திய வீரர்கள் பேட்டிங்கிற்கு வலு சேர்க்க ஜெய்ஸ்வால், ஆல்ரவுண்டருக்காக ஷிவம் துபே, ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சாம்ஸன் ஆகிய வீரர்கள் உள்ளனர். கடந்த உலகக் கோப்பையைவிட அனுபவ வீரர்களுடன், இளம் வீரர்களும் கலந்த கலவையாக இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்டர்களில் 8 பேர் டி20 போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்தவர்கள், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவிக்கும் திறமை படைத்த டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள். குறிப்பாக 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பந்தை விளாசும் திறமையான பேட்டர். கிரிக்விஸ் தளத்தின் ஆய்வுப்படி, டி20 போட்டிகளில் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேட்டர்களில் சூர்யகுமார்தான் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளது. விராட் கோலி நடந்து முடிந்த ஐபிஎல் டி20 தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று இருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் துவக்க ஜோடி எப்படி? கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது டி20 உலகக்கோப்பையை இந்திய அணி எதிர்கொள்கிறது. ரோஹித் சர்மாவுக்கு இந்த சீசன் ஐபிஎல் தொடர் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது, ஒரு சதம் அடித்தபின், பெரும்பாலான போட்டிகளில் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் மிகப்பெரிய பலமாக அணிக்கு அமையும். அதேபோல ஜெய்ஸ்வாலுக்கும் இந்த ஐபிஎல் சீசன் பெரிதாக அமையவில்லை. கடந்த 2023 சீசன் ஜெய்ஸ்வாலுக்கு பொற்காலமாக இருந்தநிலையில் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவு அவரால் ரன்கள் குவிக்க முடியவில்லை. உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியில் இடம் பெற்று ஐபிஎல் முதல்பகுதியில் சிறப்பான ஆட்டத்தை ஷிவம் துபே வெளிப்படுத்தினார். ஆனால், ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் அவரால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. இந்நிலையில் நடுப்பகுதி பேட்டிங்கை வலுப்படுத்த ஷிவம் துபேவை களமிறக்கும்போது அவரின் செயல்பாடு பெரிதாக எதிர்பார்க்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பந்துவீச்சு எப்படி உள்ளது? பந்துவீச்சில் பும்ரா மட்டும் ஐபிஎல் சீசனில் கட்டுக்கோப்பாக பந்துவீசி எக்கானமியை சிறப்பாக வைத்திருந்தார். ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பைக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் அவரின் செயல்பாடு பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் உலகக் கோப்பையில் பாண்டியா எவ்வாறு பந்துவீசப் போகிறார், பேட்டிங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வாகாத ரவீந்திர ஜடேஜா இந்த முறை அணிக்குள் வந்துள்ளது பலமாகும். சுழற்பந்துவீச்சிலும், நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங்கை பலப்படுத்த ரவீந்திர ஜடேஜாவின் பங்கு சிறப்பானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஜடேஜாவின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே சிறப்பாக இருந்து நல்ல ஃபார்மில் உள்ளார். குல்தீப் யாதவ் பந்துவீச்சு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான முறையில் மெருகேறி இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு குல்தீப் பந்துவீச்சு துருப்புச்சீட்டாக இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து குல்தீப் யாதவ் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 14 சராசரி வைத்துள்ளார். இந்தியாவில் எந்த பந்துவீச்சாளரும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி குறைவான சராசரி வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இருவருமே பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இதில் இடதுகை பேட்டர்கள் தேவைப்பட்டால் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் சாம்ஸனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் உறுதி. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷிவம் துபே இருப்பது பேட்டிங்கிலும், பகுதிநேர பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணிக்கு சவாலாக விளங்கும் பாகிஸ்தானின் பவர் ஹிட்டர்கள் பாகிஸ்தானைப் பொறுத்தவரை கடந்த 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது. ஆனால், 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்தது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியதால், கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆஸம் விலகினார். ஆனால் டி20 போட்டிகளில் சிறப்பாக அணியை வழிநடத்திய பெருமை பாபர் ஆஸமிற்கு இருப்பதால் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணியில் பவர் ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். குறிப்பாக ஆசம் கான், பாபர்ஆஸம், பக்கர் ஜமான், முகமது ரிஸ்வான் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கேப்டன் பாபர் ஆஸம் மட்டும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். குறிப்பாக ஒவ்வொரு 5 பந்துக்கு ஒரு பவுண்டரி அடிக்கும் வகையில் சராசரியை பாபர் ஆஸம் வைத்துள்ளது அந்த அணிக்கு பெரிய பலம். 118 டி20 போட்டிகளில் 3,987 ரன்களுடன் பாபர் ஆஸம் சராசரி 41 ரன்களும், 129 ஸ்ட்ரைக் ரேட்டும் என வலுவான பேட்டராகத் திகழ்கிறார். ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இருமுறை பைனலுக்கும், அரையிறுதிக்கும் அழைத்துச் சென்ற அனுபவம் வாய்ந்த கேப்டனாக பாபர் ஆஸம் இருக்கிறார். சமீபத்தில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றிகளில் பாபர் ஆஸம் பங்கு முக்கியமாக இருந்துள்ளது. பாபர் ஆஸம் நங்கூரமிட்டாலே பெரும்பாலான ஆட்டங்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES துருப்புச் சீட்டாக விளங்கும் இமாத் வாசிம் கடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இப்திகார் அகமது அரசைதம் பெரிதாக உதவியது. இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர சயிம் அயூப், முகமது ரிஸ்வான், பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் சதாப் கான், இமாத் வாசிம், அப்ரர் அகமதுவும், வேகப்பந்துவீச்சுக்கு ஷாஹீன்ஷா அப்ரிதி, முகமது அமிர், அப்பாஸ் அப்ரிதி, ஹாரிஸ் ராப், நசீம் ஷா என பெரிய படை உள்ளது. இதில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் இமாத் வாசிம் கரீபியன் மைதானங்களில் மட்டும் 54 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் உடையவர். ஜமைக்கா தலாவாஸ் அணியில் இடம் பெற்று இமாத் வாசிம் பந்துவீசியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். கரீபியன் மைதானங்களில் மட்டும் 58 விக்கெட்டுகளை இமாத் வாசிம் வீழ்த்தி 18 சராசரி வைத்துள்ளார். கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியில் இருந்த ஹைதர் அலி, ஆசிப் அலி, குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், ஷான் மசூத், முகமது நவாஸ், முகமது வாசிம், முகமது ஹஸ்னைன் ஆகியோர் இந்த முறை பாகிஸ்தான் அணியில் இல்லை. இவர்களுக்குப் பதிலாக, அப்ரார் அகமது, ஆசம் கான், இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது அமிர், சயீம் அயூப், உஸ்மான் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அப்ரார் அமகது, ஆசம் கான், அப்பாஸ் அப்ரிதி, சயூம் அயூப், உஸ்மான் கான் ஆகியோருக்கு இது முதல் உலகக் கோப்பைத் தொடராகும். இதில் அப்ரார் அகமது மட்டும் ஸ்பெலிஸ்ட் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது, இதில் ஓய்வு அறிவித்திருந்த இமாத் வாசிம் இந்த தொடருக்காக மீண்டும் வந்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பைத்தொடருக்காக தென் ஆப்பிரிக்க முன்னாள்வீரர் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக பாகிஸ்தான் அமர்த்தியுள்ளது. கிறிஸ்டன் தலைமையில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியது. இது தவிர பீல்டிங் பயிற்சியாளராக சிமன் ஹெல்மட்டையும், உளவியல் பயிற்சியாளராக டேவிட் ரீடையும் பாகிஸ்தான் உலகக் கோப்பைக்காக அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES நேருக்கு நேர் கடந்த 1952ம் ஆண்டில் தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் இன்றுவரை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடங்கிய மோதல், ஒருநாள் போட்டிக்கு படர்ந்து, டி20 வரை நீண்டுள்ளது. ஆனால் அரசியல்காரணங்களுக்காக இரு அணிகளுக்கு இடையே கடந்த 1962 முதல் 1971 வரை எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. ஆனால், 2008-ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை இந்தியா ரத்து செய்தது. இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் மட்டும் பொதுவான நாடுகளில் நடக்கும் ஆட்டத்தில் மோதிக்கொள்ளும். மற்ற வகையில் இருதரப்பு நாடுகளின் பயணங்கள், கிரிக்கெட் தொடர்கள், கடந்த 14 ஆண்டுகளாக நடக்கவில்லை இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 6 முறை வெற்றிபெற்றுள்ளது, பாகிஸ்தான் ஒருமுறை வென்றுள்ளது, ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 12 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 8 வெற்றிகளும், பாகிஸ்தான் 3 வெற்றிகளும் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2012-இல் ஆமதாபாத்தில் நடந்த டி20 போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும். அதேபோல, 2016ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் தாகாவில் நடந்த ஆட்ட்டத்தில் பாகிஸ்தானை 83 ரன்களில் இந்திய அணி வீழ்த்தியதுதான் குறைந்தபட்ச ஸ்கோரில் ஆட்டமிழந்ததாகும். இந்திய அணிக்கு எதிராக 2021 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பேட்டர் முகமது ரிஸ்வான் 79 ரன்கள் சேர்த்ததுதான் தனி ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும். பந்துவீச்சில் இந்திய அணிக்கு எதிராக முகமது ஆசிப் 2007ல் டர்பனில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் 18 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தியதுதான் சிறந்த பந்துவீச்சாகப் பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அணி விவரம் இந்திய அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, யாஸஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் அணி: பாபர் ஆஸம்(கேப்டன்), அப்ரார் அகமது, ஆசம் கான், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ராப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது அமிர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயிம் அயூப், சதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிதி, உஸ்மான் கான் https://www.bbc.com/tamil/articles/cglldnz43m6o
  3. Published By: VISHNU 31 MAY, 2024 | 09:37 PM இன்று 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யத் தீர்மானித்துள்ளது. இந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டின் விலைகளில் மாற்றமில்லை. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோலின் விலை மாற்றமின்றி 420 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபாவாகும். அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதன் விலை 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 202 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/185001
  4. அண்ணை இங்க ஒரு சிலரைத் தவிர எல்லோரும் யானை பார்த்த ____ தான்! கவலையை விடுங்கோ.
  5. பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/BRANT ROBERTSON ET AL கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனத்தன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 24 நிமிடங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக தொலைவில் உள்ள விண்மீன் மண்டலம் (galaxy) ஒன்றைக் கண்டறிந்து, அதன் முந்தைய சாதனையையே முறியடித்துள்ளது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்து வெறும் 29 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு காணப்பட்டதாகக் கருதப்படும் ‘JADES-GS-z14-0’ என்ற நட்சத்திரங்களின் குழு ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், பிரபஞ்சத்தின் வயது 1,380 கோடி ஆண்டுகள் என்றால், அதன் தற்போதைய வயதில் 2% மட்டுமே இருக்கும்போது உருவாகியிருந்த விண்மீன் மண்டலத்தைப் பற்றி இப்போது பேசுகிறோம். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதன் 6.5மீ அகலமுள்ள முதன்மைக் கண்ணாடி மற்றும் உணர்திறன் மிக்க அகச்சிவப்புக் கருவிகளைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இதற்குமுன் பார்க்கப்பட்ட மிகப்பழைய விண்மீன் மண்டலம் பெருவெடிப்பு நடந்து 35 கோடி ஆண்டுகளுக்கு பிறகு உருவானது ஆகும். அசாதாரணமான ஒளி சமீபத்திய கண்டுபிடிப்பான இந்த விண்மீன் மண்டலத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம், இதன் தூரத்தைக் காட்டிலும், அதன் அளவு மற்றும் பிரகாசமுமே என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, இந்த விண்மீன் மண்டலத்தின் அளவு 1,600 ஒளி ஆண்டுகளுக்கும் மேலானதாக இருக்கும் என்றும் அளவீடு செய்துள்ளது. மிகவும் ஒளிரும் விண்மீன் திரள்களில் பெரும்பாலானவை, அவற்றின் ஒளியின் பெரும்பகுதியை அதன் கருந்துளை மையத்தால் உள்ளிழுக்கப்படும் வாயுவின் மூலம் உற்பத்தி செய்கின்றன. ஆனால் JADES-GS-z14-0-இன் அளவைப் பொறுத்தவரை இந்த காரணம் இருக்க வாய்ப்பில்லை. மாறாக அதன் வெளிச்சம் இதன் இளம் நட்சத்திரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "இந்த நட்சத்திரத்தின் ஒளி சூரியனின் நிறையை விடப் பல நூறு கோடி மடங்கு அதிகமாக இருப்பது வேறு ஒரு கேள்வியையும் எழுப்புகிறது: அது எப்படி பெருவடிப்பு நிகழ்ந்து வெறும் 30 கோடி ஆண்டுகளுக்குள் இயற்கையால் இவ்வளவு பிரகாசமான, பிரம்மாண்டமான மற்றும் பெரிய விண்மீனை உருவாக்க முடியும்?" என்று கூறுகின்றனர் வானியலாளர்கள் ஸ்டெபானோ கார்னியானி மற்றும் கெவின் ஹைன்லைன். டாக்டர் கார்னியானி இத்தாலியில் உள்ள பிசா நகரில் உள்ள ஸ்கூலா நார்மலே சுப்பீரியரை சேர்ந்தவர். டாக்டர் ஹைன்லைன் அரிசோனாவின் டியூசானில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். படக்குறிப்பு,சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும். காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் கருவி 2021-ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நிறுவப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) 1,000 கோடி டாலர் மதிப்பிலானது (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,450 கோடி). இதற்கு முந்தைய எந்தவொரு வானியல் கருவியையும் விட, இது பிரபஞ்சத்தை தாண்டியும், காலத்தைப் பின்னோக்கியும் ஆராயும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பிரபஞ்சம் உருவானபோது இருந்த முதல் நட்சத்திரங்களை கண்டுபிடிப்பதாகும். நமது சூரியனை விட பல நூறு மடங்கு நிறை (mass) உடைய இந்த நட்சத்திரங்கள், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவை. இந்த விண்மீன் மண்டலத்தின் இளம் நட்சத்திரங்கள் குறுகிய, அதேசமயம் ஆழமான ஆயுட்காலத்தைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது. அந்த சமயத்தில் இவற்றில் ஏற்பட்ட அணுக்கரு இணைவின் மூலமாக, தற்போது இயற்கையில் காணப்படும் தீவிர இரசாயனக் கூறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொலைநோக்கியின் மூலம் JADES-GS-z14-0-இல் கணிசமான அளவு ஆக்சிஜன் இருப்பதைக் காணமுடிகிறது. இது, இந்த விண்மீன் ஏற்கனவே மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளது என்பதை உணர்த்துகிறது. "இந்த விண்மீன் மண்டலத்தின் ஆயுட்காலத்தின் தொடக்க காலத்திலேயே இவற்றில் ஆக்ஸிஜன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதன் மூலம் நாம் விண்மீன் மண்டலங்களை ஆராய்வதற்கு முன்பே பெரிய அளவிலான விண்மீன் மண்டலங்களின் பல தலைமுறைகள் வாழ்ந்திருப்பதை காட்டுகிறது " என்று டாக்டர் கார்னியானி மற்றும் டாக்டர் ஹைன்லைன் ஆகியோர் கூறுகின்றனர். படக்குறிப்பு,ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பிரபஞ்சம் உருவானபோது இருந்த முதல் நட்சத்திரங்களை கண்டுபிடிப்பதாகும். ‘மங்கலாக இருந்திருந்தாலும் கண்டுபிடித்திருப்போம்’ இந்த விண்மீன் மண்டலத்தின் ‘JADES-GS-z14-0’ என்ற பெயருக்குப் பின் ஒரு அர்த்தம் இருக்கிறது. 'JADES' என்ற பெயர் 'JWST அட்வான்ஸ்டு டீப் எக்ஸ்ட்ராகேலக்டிக் சர்வே' (WST Advanced Deep Extragalactic Survey) என்பதைக் குறிக்கிறது. பிரபஞ்சத்தின் முதல் சில சில கோடி ஆண்டுகளை ஆராய்வதற்காகத் தொலைநோக்கியைப் பயன்படுத்தும் பல ஆய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 'z14' என்பது 'ரெட்ஷிஃப்ட் 14'-ஐக் குறிக்கிறது. ரெட்ஷிஃப்ட் என்பது தூரத்தை விவரிக்க வானியலாளர்கள் பயன்படுத்தும் சொல்லாகும். இது தொலைதூர விண்மீன் மண்டலத்திலிருந்து வரும் ஒளியானது பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தால் நீண்ட அலைநீளங்களுக்கு எவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அடிப்படை அளவீடாகும். எவ்வளவு அதிக தூரம் உள்ளதோ, அதற்கேற்ற அளவிற்கான நீட்சியும் இருக்கும். ஆரம்பகால விண்மீன் திரள்களின் ஒளியானது புற ஊதா மற்றும் புலப்படும் அலைநீளங்களாக வெளியிடப்படும். இவை நம்மை அடையும்போது மின்காந்த நிறமாலையின் அகச்சிவப்பு ஒளிக்கதிர்களாக நீட்டிக்கப்பட்டு வந்தடைகிறது. இத்தகைய ஒளியைக் கண்டறியும் வகையில் தான் தனித்துவமாக ஜேம்ஸ் தொலைநோக்கியின் கண்ணாடிகள் மற்றும் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. "இந்த விண்மீன் 10 மடங்கு மங்கலாக இருந்தாலும் கூட நம்மால் கண்டறிந்திருக்க முடியும். உதாரணமாக, பெருவெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் தோன்றி முதல் 200 ஆண்டுகளில் உருவான விண்மீன் மண்டலங்களைக் கூட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் கண்டுபிடிக்க முடியும்," என்று சாண்டா குரூஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிராண்ட் ராபர்ட்சன் கூறினார். JADES கண்டுபிடிப்பு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து arXiv ப்ரீபிரிண்ட் சர்வீசில் வெளியிடப்பட்ட பல அறிவுசார் ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c144r8vng8vo
  6. ரி - 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி: இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தது நெதர்லாந்து 29 MAY, 2024 | 01:08 PM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக புளோரிடாவில் நேற்று (28) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பயிற்சிப் போட்டியில் இலங்கையை 20 ஓட்டங்களால் நெதர்லாந்து வெற்றிகொண்டது. இந்தத் தோல்வி இலங்கை அணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை பவர் ப்ளே நிறைவில் 4 விக்கெட்களை இழந்து வெறும் 30 ஓட்டங்களையே பெற்றிருந்தது. மத்திய வரிசையில் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க (15 பந்துகளில் 5 தொடர்ச்சியான சிக்ஸ்களுடன் 43), தசுன் ஷானக்க (35 ஆ.இ.), தனஞ்சய டி சில்வா (31), ஏஞ்சலோ மெத்யூஸ் (15) திறமையாகத் துடுப்பெடுத்தாடியிராவிட்டால் இலங்கை இதனை விட மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். நெதர்லாந்து பந்துவீச்சில் ஆரியன் தட் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைல் க்லெய்ன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைக் குவித்தது. முன்வரிசை வீரர்களின் திறமையான துடுப்பாட்டங்கள் நெதர்லாந்து அணியை வலுவான நிலையில் இட்டது. மைக்கல் லெவிட் 55 ஓட்டங்களையும் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் துஷார, ஏஞ்சலோ மெத்யூஸ், துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். களத்தடுப்பின்போது வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண, துஷ்மந்த சமீர ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இலங்கை தனது இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அயர்லாந்தை எதிர்வரும் 31ஆம் திகதி எதிர்த்தாடும். அப் போட்டி லௌடர்ஹில் மைதானத்தில் நடைபெறும். https://www.virakesari.lk/article/184770
  7. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் பிரதமர் மோதி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 30 மே 2024 கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். அவரது வருகைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அது தேர்தல் விதிமீறல் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி, நடக்கவிருப்பதால், அதற்கான தேர்தல் பிரசாரம் மே 30ஆம் தேதி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தை பிரதமர் வந்தடைந்திருக்கிறார். அங்கு அவர் தியானம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, வியாழக்கிழமையன்று பிற்பகலில் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள ஹெலிபேடிற்கு வந்தார். அங்கிருந்து பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த அவர், தியானம் மேற்கொள்வதற்காக விவேகானந்தர் நினைவிடத்தைச் சென்றடைந்தார். இரண்டு நாட்கள் தியானத்திற்குப் பிறகு ஜூன் 1ஆம் தேதி பிற்பகலில் பிரதமர் டெல்லி திரும்புகிறார். எதிர்க்கட்சிகளின் கண்டனம் பட மூலாதாரம்,ANI ஆனால், அவரது இந்தப் பயணத்திற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோதியின் கன்னியாகுமரி தியானத்தை ரத்துசெய்ய வேண்டுமென குமரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. வாக்காளர்களைக் கவர்வதற்காக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்து, விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டனர். மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பிரதமரின் வருகையைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் சில இடங்களில், #Gobackmodi என்ற ஹாஷ்டாகுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், ட்விட்டரிலும் #Gobackmodi ட்ரெண்ட் செய்யப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி புதன்கிழமையன்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்குப் பதிவிற்கு முந்தைய 48 மணிநேரத்தில் யாரையுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பிரசாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது எனத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். மௌன விரதமாகவோ, வேறு எதுவாகவோ இருந்தாலும் சரி, அது மறைமுகப் பிரசாரமாக இருக்கக்கூடாது." "மே 30ஆம் தேதி 7 மணியில் இருந்து ஜூன் 1ஆம் தேதிவரை இருக்கிறது. மே 30ஆம் தேதி மாலை மௌன விரதத்தைத் துவங்குவதாக பிரதமர் மோதி அறிவித்திருக்கிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். அவர் அப்படிச் செய்தால், அதை அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது," என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் இதுபோலத் தெரிவித்தாலும், மோதியின் வருகை தமிழக ஊடகங்களால் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டதோடு, அவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது போன்ற காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டன. பிரதமரின் செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறதா? பட மூலாதாரம்,X/BJP4INDIA படக்குறிப்பு,கடந்த 2019ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மலைக் கோவிலில் தியானம் செய்யும் பிரதமர் நரேந்திர மோதி "கடந்த 2019ஆம் ஆண்டிலும் இதேபோல பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேதர்நாத்தில் தியானம் செய்தார் பிரதமர். அப்போது யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? அந்த நேரத்தில் தியானம் செய்தது தவறில்லையென்றால், இப்போது மட்டும் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?" "வாக்குப் பதிவிற்கு முந்தைய 48 மணிநேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டால் அது தவறு. ஒரு தனி மனிதராக தியானம் செய்வதில் என்ன தவறு?" என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான என். கோபால்சுவாமி. அவருடைய தியானக் காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என உத்தரவிட எதிர்க்கட்சிகள் கோருவது குறித்துக் கேட்டபோது, "அதை தேர்தல் ஆணையத்திடம் ஏன் கோர வேண்டும்? ஊடகங்களிடம் அல்லவா கேட்க வேண்டும்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் ஆனால், இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்தான் என்கிறார் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஹரி பரந்தாமன். "இந்த முறை தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் எந்த விதிமீறலையும் கண்டுகொள்ளவில்லை. ஒரு மாநிலத்தில் ரம்ஜானுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை. ஆனால், ராமநவமிக்குத் துண்டிக்கப்படுகிறது என இரு மதத்தினரை பிளவுபடுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் பேசினார். தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அப்படித்தான் இதிலும் நடக்கிறது," என்கிறார் அவர். பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு வருகை தந்திருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாட்டின் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். ஏற்கெனவே ஏப்ரல் 12ஆம் தேதி அமித் ஷா திருமயத்திற்கு வருவதாக இருந்தது. அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று அந்தக் கோவிலுக்கு உள்துறை அமைச்சர் வருகை தந்தார். https://www.bbc.com/tamil/articles/c1een3dkgk5o
  8. வித்தியாசமான சிந்தனைகள் அதிலிருந்து பிறக்கும் வித்தியாசமான கருத்துகள், நன்றி கருத்தாளர்களே.
  9. 31 MAY, 2024 | 05:49 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட அதிகமான சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் போசாக்கு குறைபாடான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினரின் கண்டாவளை பிரதேச கள விஜயத்தின் மூலம் 160க்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கு குறைபாடுகளுடன் இனங்காணப்பட்டுள்ளனர். அப்பிரதேசங்களில் வசிப்பவர்களின் வறுமை, தொழிலற்ற நிலை என்பனவே போசாக்கு குறைபாடுகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. அத்துடன், இப்பிரதேசத்தில் இவ்வாண்டில் சுமார் 6 இள வயது கர்ப்பங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/184985
  10. பட மூலாதாரம்,FIDE 28 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 30 மே 2024 நார்வே நாட்டில் நடந்து வரும் செஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை நேற்று நடந்த போட்டியில் வீழ்த்தினார். இதற்கு முன்பாக கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், ’கிளாசிக்கல் கேம்’ என்று செஸ் விளையாட்டில் அழைக்கப்படும் முறையில் முதல் முறையாக கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். செஸ் விளையாட்டில் கிளாசிக்கல் கேம் என்பது மற்ற விளையாட்டு முறைகளை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டு விளையாடுவது. இதற்கு முன்பாக ரேபிட், பிளிட்ஸ் போன்ற சதுரங்க ஆட்ட முறையில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, வெற்றியை தன் வசமாக்கி, நார்வே செஸ் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். தோல்வியடைந்த கார்ல்சன், புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். யார் இந்த ‘பிரக்’ பட மூலாதாரம்,FIDE சதுரங்கம் என்றாலே, இது வரை நம் எல்லார் நினைவுக்கும் வரும் பெயர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தாக இருந்தது. தற்போது நினைவுக்கு வரும் பெயர் பிரக் என்றழைக்கப்படும் பிரக்ஞானந்தா. 18 வயதான பிரக்ஞானந்தா, சமீபத்தில் அசர்பைஜானில் நடைபெற்ற சதுரங்க உலக கோப்பை போட்டியில் பங்கேற்றதன் மூலம், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் உலகின் இளம் வீரரானார். 2002ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உலக கோப்பையை வென்ற பிறகு, இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பெற்ற இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். பிரக்ஞானந்தா தனது ஏழாவது வயதில் ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார். தனது பத்தாவது வயதில் சதுரங்க வரலாற்றில், இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீரரானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டில், உலகின் அப்போதைய இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார். கனடாவில் இந்தாண்டு நடைபெற்ற கேண்டிடேட்ஸ் டோர்னமண்ட் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் பிரக்ஞானந்தா. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,தனது பத்தாவது வயதில் சதுரங்க வரலாற்றில், இண்டர்நேஷ்னல் மாஸ்டர் பட்டம் இளம் வீரரானார். எளிமையான குடும்ப பின்னணி சென்னை பாடி பகுதியில் வசிப்பவர் பிரக்ஞானந்தா. மிக எளிமையான குடும்ப பின்னணி கொண்டவர். அவர் பத்து வயதில் இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெறும் வரை, அவரது பெற்றோர்கள் கடன் வாங்கியே போட்டிகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. வீட்டில் சதுரங்கம் சொல்லிக் கொடுக்க சதுரங்க வீரர்கள் யாரும் கிடையாது. சிறு வயதில் அவரது மூத்த சகோதரி வைஷாலி சதுரங்கம் விளையாட தொடங்கினார். அதை பார்த்து ஆர்வம் கொண்ட பிரக்ஞானந்தா, தானும் சதுரங்கம் ஆட தொடங்கினார். சதுரங்கத்தின் மேல் கொண்ட ஆர்வமும், அவரது திறமையும் அவர் இளம் வயதிலேயே பல உயரங்களை தொட காரணமாக இருந்துள்ளன. பட மூலாதாரம்,RAMESH BABU படக்குறிப்பு,பிரக்ஞானந்தா தனது ஏழாவது வயதில் ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார். ஆன்லைனில் துரிதமாக விளையாடும் ஏர்திங்க்ஸ் என்ற போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை கடந்த ஆண்டு வென்றார். இதன் மூலம் நார்வே கிராண்ட் மாஸ்டரான 32 வயதான கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஆனார். உலக கோப்பை போட்டியில் அவர் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினாலும், அவரது அசாத்திய ஆட்டத்தால் பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் சதுரங்கம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கத்தில் வெற்றி பெற்ற போது, சதுரங்கம் குறித்த பேச்சும் முக்கியத்துவமும் எப்படி அதிகரித்ததோ அதேபோன்ற நிலை தற்போது உள்ளது. பிரக்ஞானந்தாவும் விஸ்வநாதன் ஆனந்தை முன்மாதிரியாக கொண்டே சதுரங்கம் விளையாட தொடங்கினார். விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார் என்கிறார் பிரக்ஞானந்தாவின் பயிற்றுநர் ஆர் பி ரமேஷ். “அவர்கள் இருவரும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவுக்கு தொடர்ந்து ஊக்கமளித்தும் வழிகாட்டியும் வருகிறார்” என்கிறார் அவர். பட மூலாதாரம்,FIDE படக்குறிப்பு,மேக்னஸ் கார்ல்சனை ஆன்லைன் துரித சதுரங்கப் போட்டியில் வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா. ரமேஷ் இந்திய சதுரங்க அணியின் பயிற்றுநராக 12 ஆண்டுகள் இருந்துள்ளார். காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர். அரசு நிறுவனத்தில் வேலை பார்த்த அவர், அந்த பணியை விட்டுவிட்டு, 2008ம் ஆண்டு சதுரங்கப் பயிற்சி பள்ளியை தொடங்கினார். பிரக்ஞானந்தாவின் தந்தை கூட்டுறவு வங்கி மேலாளர், அவரது தாய் வீட்டையும் குடும்பத்தையும் பராமரித்து வருகிறார். பிரக்ஞானந்தாவுடன் ஒவ்வொரு போட்டிக்கும் உடன் சென்று அவருக்கு பிடித்தமான தமிழ்நாட்டு உணவுகளை சமைத்து தருகிறார். உலக கோப்பையில் பங்கேற்றதுடன் அடுத்ததாக சீனாவில் நடைபெறும் ஆசிய செஸ் போட்டிகளில் பத்து பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக சதுரங்கத்தில் தங்கம் வென்று கொடுக்கும் முனைப்பில் பிரக்ஞானந்தா இருக்கிறார். பிரக்ஞானந்தா சதுரங்கத்தில் தீவிர கவனம் செலுத்துவதால் பொதுவாக இந்த வயதில் இருக்கும் இளைஞர்களுக்கான சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை என்கிறார் அவரது பயிற்றுநர் ரமேஷ். “இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்காது. பிரக்ஞானந்தாவுக்கு சதுரங்கம் தான் முக்கியம். எனவே அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்” என்றார். பட மூலாதாரம்,FIDE படக்குறிப்பு,போட்டிகளுக்காக வெளிநாடுகள் செல்லும் போது பிரக்ஞானந்தாவுக்கு பிடித்த தமிழ்நாட்டு உணவுகளை அவரது தாயார் சமைத்து தருகிறார். சதுரங்கம் தான் பிரக்ஞானந்தாவின் உயிர் என்றாலும் நண்பர்களுடன் அவ்வப்போது டேபிள் டென்னில் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதும் உண்டு. பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சிப் பக்கம் திரும்பாத பிரக்ஞானந்தா, எப்போதாவது தொலைக்காட்சி பார்த்தால், அதில் தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக மாதத்தில் 15 நாட்கள் வெளிநாடுகளில் போட்டிகளுக்காக சென்று வந்தார் பிரக்ஞானந்தா. பள்ளியில் வழக்கமான வகுப்புகளிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளை மட்டும் நேரடியாக எழுதினார். பட மூலாதாரம்,FIDE படக்குறிப்பு,அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காண்டிடேட்ஸ் டோர்னமண்ட் போட்டியில் பங்கேற்கும் மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் பிரக்ஞானந்தா. கடந்த பத்து ஆண்டுகளாக பிரக்ஞானந்தாவுக்கு பயிற்சி அளித்து வரும் ரமேஷ், இத்தனை ஆண்டுகளில் பிரக்ஞானந்தா அபார வளர்ச்சி அடைந்துள்ளார் என்கிறார். “கடுமையாக உழைக்கும் பிரக்ஞானந்தா, மிகவும் மேம்பட்டுள்ளார். அவரது திறமைகளை காணும் போது இது ஆச்சர்யமான விசயமே இல்லை” என்கிறார். உலகக்கோப்பையில் தோல்வியுற்றாலும் பிரக்ஞானந்தா உற்சாகத்துடனே இருந்து வருகிறார். இந்த போட்டியில் உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்களை தோற்கடித்து விட்டு இந்த வயதில் இறுதிச் சுற்றில் இடம் பெற்றதே மிகப்பெரிய மைல்கல் என்கிறார் பயிற்றுநர் ரமேஷ். “அவருக்கு, வெற்றி, புகழ், பணம் இவற்றை விட சதுரங்க ஆட்டமே மிகவும் பிடித்தமானது. அவர் இப்போது தான் ஆட்டத்தை தொடங்கியுள்ளார். அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது” என்கிறார் பயிற்றுநர் ரமேஷ். https://www.bbc.com/tamil/articles/c0j3jlk72v7o
  11. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தலும், சர்வதேச விசாரணை கோரிய ஆர்ப்பாட்டமும் மட்டக்களப்பில் முன்னெடுப்பு 31 MAY, 2024 | 05:27 PM படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடேசனின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச விசாரணை கோரி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அங்கு படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக மட்டக்களப்பு ஊடக அமையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது : மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த இருபது வருடங்களாக அவரின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 35 தமிழ் ஊடகவியலாளர்கள், 05 சிங்கள ஊடகவியலாளர்கள், 03 முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அடங்குகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் ஒரு ஊடகவியலாளரும், ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளர்களும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர் படுகொலைகள் 2010ஆம் ஆண்டு வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த படுகொலை ஆட்சியை ஊடகத்துறையின் பெரும்பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தபோதும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அத்தோடு, நாட்டில் பெருந்தொகையாக படுகொலை கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் இன்று வரை விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை. இலங்கையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்ட வேண்டும். இலங்கையில் இன்று வரை சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்களின் பெயர், விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவேண்டும். இலங்கையில் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கவேண்டும் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/184974
  12. மறைந்த பிரான்ஸ் தூதுவருக்கு கொழும்பில் அஞ்சலி நிகழ்வு Published By: DIGITAL DESK 3 31 MAY, 2024 | 06:22 PM இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிராங்கோயிஸ் பேக்டெட் (Jean-Francois Pactet) மறைவையொட்டி கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சென்.மேரிஸ் தேவாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இலங்கையின் அப்போஸ்தலிக்க தூதுவர் பேரருட்திரு பிரையன் உதய்க்வே ஆண்டகை இந்த அஞ்சலி நிகழ்வுக்கு தலைமைதாங்கினார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/184984
  13. Published By: VISHNU 27 MAY, 2024 | 07:58 PM (நெவில் அன்தனி) டெக்சாஸில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்iகை பங்களாதேஷைவிட அமெரிக்க அணிக்கு இருந்ததாக அணியின் தலைமைப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தெரிவித்துள்ளார். முதல் தடவையாக ஐசிசி முழு உறுப்பு நாடொன்றின் அணிக்கு எதிராக இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷை வெற்றிகொண்டு தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா முறையே 5 விக்கெட்களாலும் 6 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது. எனினும் கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அபாரமாக விளையாடி 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது. எனினும் தொடரை 2 - 1 ஆட்டக் கணக்கில் ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக்கொண்டது. கடைசிப் போட்டிக்குப் பின்னர் கருத்து வெளியிட்டு ஸ்டுவர்ட் லோ, 'முதல் இரண்டு போட்டிகளில் எங்களுக்கு அதிக வைராக்கியமும் ஆர்வமும் இருந்தது. எதிரணியை விட நாங்கள் சற்று அதிகமாக திறமையை வெளிப்படுத்த விரும்பினோம். ஆனால், கடைசிப் போட்டி எங்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. நாங்கள் ஆசுவாசமாக விளையாடினோம் போலும். பங்களாதேஷ் திறமையாக விளையாடியதுடன் இந்த உற்சாகத்துடன் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்ளும்' என்றார். 'பங்களாதேஷுடனான இந்தத் தொடர் எமது அணியை உலகக் கிண்ணத்திற்கு தயார்படுத்த பெரிதும் உதவியது. வெறுமனே வலைகளில் பயிற்சி பெறுவதைவிட இவ்வாறான போட்டிகளில் விளையாடுவது மிகவும் நல்லது. ஒற்றைப் போட்டிகளில் எதுவும் நிகழலாம். அப்படித்தான் உலகக் கிண்ணப் போட்டியும் அமையும். யாரும் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக போட்டியில் பங்குபற்ற முடியாது' என அவர் மேலும் குறி;ப்பிட்டார். முதல் இரண்டு போட்டிகளிலும் அதி சிறந்த வீரர்களுடன் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, கடைசிப் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. அணித் தலைவர் மொனாங்க் படேல், ஆரம்ப வீரர் ஸ்டீவன் டெய்லர், சகலதுறை வீரர் ஹர்மீத் சிங், வேகப்பந்து வீச்சாளர் அலி கான் ஆகிய பிரதான வீரர்களுக்கு ஓய்வு அளித்ததன் மூலம் மற்றைய வீரர்களின் திறமையை அமெரிக்கா பரீட்சித்துப் பார்த்தது. ஆனால், கடைசிப் போட்டியில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் மிகத் திறமையாக பந்துவீசி 6 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பங்களாதேஷுக்கு உற்சாகம் கொடுக்கும் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். எவ்வாறாயினும் பங்களாதேஷை எந்த வகையிலும் ஸ்டுவர்ட் லோ குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக, உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் மீண்டுவரக்கூடிய அணி என அவர் கூறினார். இதேவேளை, மத்திய வரிசையில் ஏற்பட்ட சரிவே மூன்றாவது போட்டியில் பங்களாதேஷிடம் அமெரிக்கா தோல்வி அடைய காரணம் என மொனாங்க் பட்டேலுக்கு பதிலாக அமெரிக்க அணித் தலைவராக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்தார். 'எமது அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், ஆரம்ப வீரர்கள் ஆட்டம் இழந்ததும் எல்லாம் எமக்கு பாதகமாக அமைந்துவிட்டது' என்றார் ஆரோன் ஜோன்ஸ். 'எமது அணி சிறந்ததாகும். அதனை உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான பங்களாதேஷுக்கு எதிராக வெளிப்படுத்தினோம். பாகிஸ்தானையோ அல்லது இந்தியாவையோ நாங்கள் வெற்றிகொண்டால் அதனை தலைகீழ் முடிவு என நான் கூறமாட்டேன். குறிப்பிட்ட நாளில் நாங்கள் திறமையாக விளையாடினோம் என்றே கூறுவேன். இது கிரிக்கெட்டில் நிகழக்கூடியது. ஏனெனில் பெரிய அணிகளும் தோல்வி அடையலாம்' என அவர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/184646
  14. ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி: அவுஸ்திரேலிய அணியில் வீரர்களுக்கு பற்றாக்குறை Published By: VISHNU 27 MAY, 2024 | 06:36 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியில் வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இண்டியன் பிறீமியர் லீக்கின் கடைசிக் கட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சில நாட்களை சொந்த நாட்டில் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமிபியாவுடன் 28ஆம் திகதியும் மேற்கிந்தியத் தீவுகளுடன் 30ஆம் திகதியும் பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா விளையாடவுள்ளது. இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடியபோது உபாதைக்குள்ளான அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஈடுபட தெரியாதவராக இருக்கிறார். அவர் பூரண குணமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே பயிற்சிப் போட்டிகளில் அவர் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடவுள்ளார். இதேவேளை, இண்டியன் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக விளையாடிய அணித் தலைவர் பெட் கமின்ஸ், ட்ரவிஸ் ஹெட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பாக விளையாடிய மிச்செல் ஸ்டார்க், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு சார்பாக நீக்கல் போட்டியில் விளையாடிய க்ளென் மெக்ஸ்வெல், கெமரன் க்றீன் ஆகியோர் சொந்த நாட்டில் சில தினங்களைக் கழிக்கச் சென்றுள்ளனர். மார்க்கஸ் ஸ்டொய்னிஸும் இன்னும் அவுஸ்திரேலியாவிலிருந்து கரிபியன் தீவுகளுக்கு செல்லவில்லை. இவர்கள் ஆறு பேரும் ஓமானுக்கு எதிராக பார்படோசில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக கரிபியன் தீவுகளை சென்றடையவுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத டேவிட் வோர்னர் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றுவருகிறார். இந்த உலகக் கிண்ணம் அவரது பிரியாவிடை உலகக் கிண்ணமாக அமையவுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் மற்றொரு உதவிப் பயிற்றுநரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமைப் பயிற்றுநருமான டெனியல் வெட்டோரியும் இன்னும் அவுஸ்திரேலிய அணியுடன் இணையவில்லை. அடம் ஸம்ப்பா, ஜொஷ் இங்லிஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ஏஷ்டன் அகார், மெத்யூ வேட், நேதன் எலிஸ் ஆகியோர் அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெறும் மற்றைய வீரர்களாவர். இந்த வீரர்களுடன் பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலிய பயிற்சிக் குழாத்திலுள்ள தலைமைப் பயிற்றுநர் அண்ட்றூ மெக்டொனல்ட், ப்றட் ஹொஜ், தேசிய தெரிவாளர் ஜோர்ஜ் பெய்லி, உதவிப் பயற்றுநர் அண்ட்றூ போரோவெக் ஆகியோர் விளையாட அழைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/184643
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 37 நிமிடங்களுக்கு முன்னர் “நான் வாழ விரும்பவில்லை, என்னைக் கொன்றுவிடுங்கள்” என்று, தான் சிகிச்சை பெற்று வந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களிடம் கூறினார் 21 வயது வெங்கடேஷ். 2018-ஆம் ஆண்டு ஒரு தீ விபத்தில் சேதமடைந்த தனது இரு கைகளையும் அகற்ற வேண்டும் என்ற முடிவை மருத்துவர்கள் தெரிவித்த போது இதுதான் வெங்கடேஷின் பதில். நான்கு ஆண்டுகள் கழித்து வெங்கடேஷ் தற்போது இரு கைகளுடன் இயல்பு வாழ்க்கைக்குப் படிப்படியாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கான வாழ்க்கைத் துணையும் கிடைத்து விட்டார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கைமாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தின் மூலம் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு இந்த மறுவாழ்வு கிடைத்தது. ஆனால் கைகளை தானமாகப் பெறுவதற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் இப்படி ஒரு புதிய வாழ்வு கிடைப்பதில்லை. பட மூலாதாரம்,வெங்கடேஷ், வேலூர் படக்குறிப்பு,வெங்கடேஷ் தமிழ்நாட்டில் உறுப்பு தானம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் தமிழ்நாட்டில் 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிர் காக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு உறுப்பு தானம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. எனினும் கரங்களை தானமாகப் பெறுவதில் சுணக்கம் நிலவுகிறது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் தரவுகளின்படி 2023-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நான்கு கரங்கள் மட்டுமே தானமாகப் பெறப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையில் 2 கரங்கள் தானமாகப் பெறப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ் நாட்டின் முதல் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் 2 கரங்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை, குளோபல் மற்றும் சிம்ஸ் ஆகிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அனுமதி பெற்றவை. பட மூலாதாரம்,வெங்கடேஷ், வேலூர் படக்குறிப்பு,வெங்கடேஷ் - அறுவை சிகிச்சைக்கு முன்பு உணர்வுப்பூர்பமான தருணம் 2022-ஆம் ஆண்டு கை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட வேலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், தனக்கு கரங்கள் தானமாகக் கிடைக்க 2 ஆண்டுகள் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறும்போது, “குஜராத்தை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் மூளைச் சாவு அடைந்த பின்னர் அவரது கைகள் எனக்கு தானமாகக் கிடைத்தன. என்னுடைய புகைப்படம், வீடியோ ஆகியவற்றைக் காட்டி என்னுடைய நிலைமையைப் பற்றி விளக்கிய பிறகுதான் அவர்கள் தானம் கொடுக்கச் சம்மதித்தார்கள். சிகிச்சைக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் என்னை நேரில் பார்க்க வந்திருந்தனர்,” என்றார். "தானம் பெற்ற கைகளில் வலது புறம் இலை வடிவிலும், இடது புறம் பட்டாம்பூச்சி வடிவிலும் டாட்டூ குத்தப்பட்டிருந்தது. கொடையாளியின் அக்கா என்னிடம் டாட்டூவை அழிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எனது தங்கைக்கு பதில் ஒரு தம்பி கிடைத்திருப்பதாக உணர்கிறேன் என்றார்,” என குறிப்பிட்டார். பட மூலாதாரம்,வெங்கடேஷ், வேலூர் படக்குறிப்பு,தானம் பெற்ற கைகளில் வலது புறம் இலை வடிவிலும், இடது புறம் பட்டாம்பூச்சி வடிவிலும் டாட்டூ குத்தப்பட்டிருந்தது வாழ்வை மாற்றிய தருணம் “2018-ஆம் ஆண்டு, அக்டோபர் 9-ஆம் தேதி எனது நண்பரின் வீட்டு மாடியில் ஒரு இரும்புக் குழாயைப் பொருத்துவதற்காக உதவிக்குச் சென்றேன். அவர் கீழே இருந்து குழாயை கொடுக்க, நான் மாடியிலிருந்து அதை பெற்றுக் கொண்டிருந்தேன். என் தலைக்கு மேலே உயர் அழுத்த மின்கம்பி இருந்ததை கவனிக்கவில்லை. குழாய் அதில் பட்டு மின்சாரம் என் மீது பாய்ந்தது, எனது இரு கைகளும் கருப்பானதைப் பார்த்தேன். எனது காலணிகள் உருகி கால்களில் ஒட்டிக் கொண்டன. நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன்,” என்றார். "சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தேன். முதலில் எனது வலது கையை எடுத்துவிட்டார்கள். 45 நாட்கள் கழித்து, இடது கையையும் எடுக்க வேண்டும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்று கூறினர்,” என தனக்கு நேர்ந்ததை நினைவுகூர்ந்தார். 21 வயதில் தனது கைகளை இழந்த வெங்கடேஷ் தனது தாயாரின் உதவியுடனே குளித்து, உணவு உண்டு நாட்களைக் கழித்து வந்தார். “கை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கண் விழித்துப் பார்த்த போது கிடைத்த மகிழ்ச்சியை விவரிக்கவே முடியாது. ஒரு பொருளை தொலைத்து விட்டு, மீண்டும் கிடைத்தால், எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது. தற்போது என்னால் பல் துலக்க முடியும், ஃபோன் பேச முடியும், கார் ஓட்டுவேன், ஸ்பூனில் உணவை எடுத்துச் சாப்பிட முடியும்,” என்றார். கைகளை இழந்திருந்த சமயத்தில் தன்னிடம் காதலுற்ற துணையோடு தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. “வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த போது, அவரது அன்பு பெரும் ஊக்கமாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எங்கள் திருமணம் நடந்தது,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் வெங்கடேஷ். பட மூலாதாரம்,குளோபல் மருத்துவமனை இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இது வரை கரங்களை தானமாக பெற்ற 2 பேரில் ஒருவரான தஞ்சாவூரை சேர்ந்த எம்.புவன், பிபிசி தமிழிடம் பேசும் போது, “கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, பகுதி நேரமாக அருகில் உள்ள சிறு டைல்ஸ் கம்பெனியில் வேலைக்கு சென்றேன். அங்கு இயந்திரத்தில் தவறுதலாக கைமாட்டிக் கொண்டதில் எனது வலது கையை இழந்து விட்டேன்,” என்றார். "அதே கையை மீண்டும் உடலில் ஒட்ட வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு இடது கையிலேயே எழுத, வரைய, சாப்பிட அனைத்தையும் பழகிக் கொண்டேன். பிறகு சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் பதிவு செய்து கடந்த மாதம் எனக்கு கை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது கைகளை லேசாக அசைக்க முடிகிறது,” என்கிறார். கை மாற்று அறுவை சிகிச்சை எப்படி நடக்கிறது? கை மாற்று அறுவை சிகிச்சை மூலம் தனது கரங்களை மீளப்பெரும் ஒருவருக்கு வாழ்க்கையில் அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதுதான் இந்த சிகிச்சையின் வெற்றி என்று, புவனுக்கு கைமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செல்வ சீதாராமன் கூறுகிறார். “கை மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சவாலானது. ஏனென்றால், கைகளில் பல நரம்புகள், ரத்தக் குழாய்கள் உள்ளன. அவற்றை எல்லாம் சரியாக இணைக்க வேண்டும். அப்போது தான் ரத்த ஓட்டம் சீராகும்,” என்ற அவர், அறுவை சிகிச்சைக்குத் தயாராவது பற்றி விவரித்தார். புவன் மட்டுமல்லாமல் சென்னையைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவருக்கும் கடந்த மாதம் கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரியல் எஸ்டேட் முகவரான அவர், சென்னையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தனது இரு கைகளையும் இழந்தார். கிளென் ஈகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் செல்வ சீதாராமன், “31 வயது நோயாளிக்கு இரண்டு கைகள் தானம் கிடைக்கிறது என்று தெரிந்தவுடன், எங்கள் மருத்துவக் குழுவிலிருந்து இரண்டு பேர் திருச்சிக்குச் சென்றனர். கைகள் வெகு நேரம் ரத்த ஓட்டம் இல்லாமல் இருக்க முடியாது. எனவே விமானத்தில் புறப்படுவதற்குச் சரியாக 45 நிமிடங்கள் முன்பு கைகளை கொடையாளரிடமிருந்து எடுத்தோம்,” என்றார். "கிரீன் காரிடர் மூலம் (அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் பச்சை விளக்கு இருப்பது), விமான நிலையத்துக்குச் சென்று, அங்கு எங்கள் குழுவினர் தேவையான ஆவணங்களைக் காண்பித்து ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். நாம் எடுத்து வரும் உறுப்புக்குத் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும். அதன் பின் சென்னையில் தரையிறங்கிய பிறகு கைகள் மீண்டும் கிரீன் காரிடர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில் தானம் பெறுபவரை அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்து வைத்திருந்தோம். கிட்டத்தட்ட 16 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது,” என்றார். பட மூலாதாரம்,மருத்துவர் செல்வ சீதாராமன் படக்குறிப்பு,மருத்துவர் செல்வ சீதாராமன் கைகளை தானமாக கொடுப்பதில் சுணக்கம் ஏன்? கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உடல் உறுப்புகளை தானம் தருவது அதிகரித்துள்ள போதிலும் கரங்களை தானமாக கொடுப்பது மட்டும் குறைவாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் 2018-ஆம் ஆண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல் முறையாக 2 கைகள் தானம் பெற்று கை மாற்று சிகிச்சை நடந்தது. அதே ஆண்டில் 239 சிறுநீரகங்கள், 201 கண் விழிகள், 117 கல்லீரல்கள் தானம் செய்யப்பட்டன. அடுத்த 3 ஆண்டுகளில் கொரோனா நோய் தொற்று இருந்த போதிலும் உறுப்பு தானம் தொடர்ந்தது. ஆனால் கைகளை தானமாகத் தருவது உயரவில்லை. “உள் உறுப்புகளை தானமாக வழங்கப்படும் போது, கொடையாளரின் உடல் உருவில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால் கரங்களை அகற்றி எடுப்பது வெளியில் தெரியும். ஒரு அங்கத்தை வெட்டி எடுத்துக் கொள்ள இறந்தவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வது எளிதல்ல. ஆனால் ஒருவர் இறந்த உறவினரின் கைகளைக் கொடையாக அளிக்க முன்வந்தால் இறந்தவருக்குச் செயற்கைக் கைகள் பொருத்தப்படும்,” என்று தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முன்னெடுத்தவரான மருத்துவர் அமலோற்பாவநாதன் விளக்கினார். மேலும் அவர், “இது உயிர் காக்கும் அறுவை சிகிச்சை கிடையாது. கைகள் இல்லாமலும் ஒருவர் உயிருடன் இருக்கலாம். ஆனால் இரண்டு கைகளையும் இழந்தவருக்கு, தொடு உணர்வு இல்லாமல் வாழ்வது மிகுந்த மன உளைச்சலை தரும். செயற்கைக் கைகள் பொருத்தினால் கூட தொடும் உணர்வு கிடைக்காது. எனவேதான் உறுப்பு தானம் அவசியமாகிறது," என்று கூறினார். மேலும், “இரண்டு கைகளும் இழந்தவர்களைப் பார்ப்பது அரிதானது. மேலும், கரங்களைத் தானமாகப் பெறும்போது ரத்தம் மட்டுமல்லாமல், உறுப்பின் நிறம், தன்மையும் பொருந்த வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பின் வெகு நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புச் சக்தியை மட்டுப்படுத்தும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்பதையும் குறிப்பிட்டார். கரங்களை இழந்தவர்களுக்கு இந்தச் சிகிச்சையை மேற்கொள்வதற்கு அரசே காப்பீட்டுத் திட்டம் மூலம் வழி ஏற்படுத்தினால் பொருளாதாரச் சுமையைக் குறைத்து இன்னும் பலருக்குக் கைகொடுக்க முடியும் என்கிறார் கரங்களை தானமாகப் பெற்ற புவன். https://www.bbc.com/tamil/articles/c9774jyep8qo
  16. புகைத்தல், மது பாவனைக்கு எதிராக நெடுந்தீவில் விழிப்புணர்வு நிகழ்வு 31 MAY, 2024 | 04:28 PM "நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் மே 31ஆம் திகதி முதல் ஜூன் 14ஆம் திகதி வரையில் புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதன் ஓர் அம்சமாக, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி கிளையின் ஏற்பாட்டில் புகைத்தல் மற்றும் மது பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வொன்று பிரதேச செயலக முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/184958
  17. Published By: DIGITAL DESK 3 31 MAY, 2024 | 02:58 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட 04 பிரதிவாதிகளை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கையளிக்க முடியாது மற்றும் பராமரிக்க முடியாது என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர். அதற்கமைய, முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிகளை விடுதலை செய்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184945
  18. Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 02:59 PM இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் கிறிஸ்டபர் மக்லெனனை சந்தித்தவேளை இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜயவர்த்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கை வருவாய் ஈட்டல் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இலங்கை பொருளாதார இராஜதந்திரத்திற்கு கொடுத்துள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து வெளிவிவகார செயலாளர் எடுத்துரைத்துள்ளார். நல்லிணக்கத்தை அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளிற்கு சமாந்திரமாக இது இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் இனப்படுகொலை தொடர்பான தவறான கதைகளை வெளியிடும் விதத்தில் கனடாவில் அண்மைய ஆண்டுகளில் உயர்மட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் தொடர்பில் இலங்கையின் ஆழ்ந்த கவலையை வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார். கனடா இலங்கையுடன் ஆக்கபூர்வமான விதத்தில் ஈடுபாட்டை வெளிப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை நல்லிணக்கத்திற்கான முயற்சிகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/184957
  19. Published By: DIGITAL DESK 7 31 MAY, 2024 | 02:54 PM யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது, கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு, நெடுந்தீவு, எழுவை தீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்தன. பொருளாதார நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே குறித்த சேவையினை நிறுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. படகு சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில், யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே பிரஸ்தாபிக்கப்பட்டு , இந்த விடயம் தொடர்பில் பேச்சுகளை மேற்கொள்ளுமாறும், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மாவட்ட பதில் செயலருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட இணை தலைவர்களை அறிவுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/184954
  20. Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 12:36 PM கொழும்பில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்ட்டமை தொடர்பில் டிரையல் அட்பார் விசாரணையிலிருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொடவை விடுவிப்பதற்கான முயற்சிகளிற்கு எதிராக காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் கடற்படை தளபதியால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவின் மீதான விசாரணை எதிர்வரும் மூன்றாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2008-2009 இல் 11 இளைஞர்களை கடத்தியமை கப்பம் கோரியமை மற்றும் கொலைசதி தொடர்பில் 2019ம் ஆண்டு சட்டமாஅதிபர் வசந்த கரணாகொட உட்பட 14 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார். இந்த குற்றங்களின் பாரதூரதன்மை காரணமாக உயர்நீதிமன்ற நீதிபதிகனை உள்ளடக்கிய டிரையல் பார் விசாரணைக்காக நியமிக்கப்பட்டது. மார்ச் 2020 இல் முன்னாள் கடற்படை தளபதி ரிட்மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மனுமீதான விசாரணைகள் இடம்பெறும்வரை தனக்கும் ஏனையவர்களிற்கும் எதிரான டிரையல் அட்பார் விசாரணைகளை இடைநிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்த அவர் இடைக்கால தடையை கோரியிருந்தார் இதேவேளை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர் சட்டமா அதிபர் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள முயல்கின்றார் என குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் விலக்கிக்கொள்வதை தடுப்பதற்காக நாங்கள் எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என முன்னாள் கடற்படை தளபதி விடுத்த வேண்டுகோளை கடந்த ஒன்றரை வருடங்களாக கடுமையாக எதிர்த்துவந்துள்ளது எனவும் பிரிட்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது முன்னாள் கடற்படை தளபதியை விடுதலை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அவரின் அரசியல் செல்வாக்கே காரணம் எனவும் தெரிவித்துள்ள பிரிட்டோ பெர்ணாண்டோ எங்கள் பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் நடத்திய விதத்திலேயே அவர்களையும் நடத்தவேண்டும் என வேண்டுகோள் வி;டுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் சட்டமா அதிபரின் செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இடமானவையாக காணப்படுகின்றன தற்போதைய சட்டமுறையில் எங்களிற்கு உள்ள உரிமைகளிற்கு எதிராக அவரே காணப்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார் ஜூன் மூன்றாம் திகதியும் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184944
  21. சங்கானையில் புகைத்தல், போதைப்பொருள் பாவனையை எதிர்த்து போராட்டம் 31 MAY, 2024 | 12:41 PM சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான போராட்டம் இன்று (31) சங்கானை பேருந்து நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அழகான இளைஞர்களின் உடல் அழகையும் முகத்தின் வசீகரத்தையும் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு ஏமாறமாட்டோம்', 'எமது பிள்ளைகளை புகையிலைக் கம்பனிகளிடமிருந்து பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம்', 'புகைப்பதால் உன் அழகு புன்னகை இழக்கும்', 'உடலை உருக்கும் சிகரெட் பாவனை எதற்கு?', 'சினிமாவில் புகைப்பதை பார்த்து உன் கல்வியை அழிக்காதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர். வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிர்வாகத்தினர், அங்கத்தவர்கள், சங்கானை பிரதேச செயலக பிரதேச செயலர் கவிதா உதயகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/184939
  22. தேர்தல் ஆணைக்குழுவிற்கு அமெரிக்க தூதுவர் விஜயம் - கரிசனைக்குரிய விடயமல்ல - தேர்தல் ஆணையாளர் Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 03:52 PM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆணையாளர்களை சந்தித்துள்ளமை குறித்து பொதுமக்கள் கவலையடைய தேவையில்லை என தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுயாதீன ஆணைக்குழுவின் உயர் அதிகாரியை அமெரிக்க தூதுவர் சந்திப்பது குறித்து பொதுமக்கள் கவலையடையதேவையில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். அது இரகசிய விஜயமாகயிருந்தால் அமெரிக்க தூதுவர் தான் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட படங்களை பகிர்ந்து கொண்டிருக்கமாட்டார் என சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் செப்டம்பர் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிற்கான ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தூதுவர் கேட்டறிந்தார் என தெரிவித்துள்ள சமன்ஸ்ரீரத்நாயக்க தேர்தல்கள் ஆணையகத்திற்கு மேலும் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான எங்களின் ஏற்பாடுகள் குறித்தும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கேட்டறிந்துள்ளனர் எனவும் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவரின் விஜயத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் எங்களை சந்திக்க வந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் உள்நோக்கம் கொண்ட பல தரப்பினர் வெளியிடும் பொய்களிற்கு பொதுமக்கள் பலியாககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/184967
  23. 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302863
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 30 மே 2024 நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் வருகின்ற ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வானில் தெரியும் என்றும், அவற்றை யார் வேண்டுமானாலும் நேரடியாகப் பார்க்க முடியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் இந்த பூமி எவ்வளவு ஆச்சரியங்களையும், அதிசயத்தையும் வைத்திருக்கிறதோ, அதே அளவு விண்வெளியும் பெரும் ரகசியங்களைத் தன்னுள்ளே வைத்துள்ளது. அந்த ஆச்சரியமூட்டும் அதிசயங்களை, அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் நமக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது. அப்படி வருகின்ற ஜூன் 3, 4 ஆகிய இரண்டு நாட்களில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பு நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புதன், வியாழன், சனி, நெப்டியூன், செவ்வாய், யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் வானத்தில் தோன்றும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு சில கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம் எனவும், ஒரு சில கோள்களைப் பெரிய தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுற்றுப்பாதையில் சுற்றி வரும் 8 கோள்களும் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் சுழற்சியின் ஒரு கட்டத்தில் அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வே இது. எதனால் இந்த நிகழ்வு நடக்கிறது, இது ஒரு அரிய நிகழ்வா என்ற கேள்விகளை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தின் இயக்குநர் லெனின் தமிழ்க்கோவனிடம் முன்வைத்தோம். இந்நிகழ்வு குறித்து விளக்கிய அவர், “இது அவ்வப்போது நடக்கும் ஒரு நிகழ்வுதான். சுற்றுப்பாதையில் சுற்றி வரும் 8 கோள்களும் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் சுழற்சியின் ஒரு கட்டத்தில் அனைத்துக் கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வே இது," என்றார். “இப்படியான நிகழ்வின்போது குறிப்பிட்ட எல்லா கோள்களையும் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு அமையும்.” விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், “ஒரு மைதானத்தில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தை நடுவில் இருந்து நீங்கள் பார்க்கும்போது ஓட்டப்பந்தய வீரர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் ஓடிவரும் வேகத்திற்கு ஏற்ப வெவ்வேறு திசைகளில் பார்க்க முடியும். ஆனால் ஏதோவொரு புள்ளியில் ஒரு சிலர் மட்டும் ஒரே நேர்க்கோட்டில் தெரிவார்கள். அதுபோன்ற நிகழ்வுதான் இதுவும்,” என்று விளக்குகிறார். எப்போது இந்த நிகழ்வு நடைபெறுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜூன் 3, 4 ஆகிய இரண்டு தேதிகளில் இந்தக் கோள்கள் கண்ணுக்குத் தெரியலாம் என தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதி நடக்கவுள்ள இந்த நிகழ்வின்போது, நிலா உள்பட மேற்கூறிய 6 கோள்களும் சூரிய உதயத்திற்கு முன்பு வானில் தெரிய உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. மேலும், “இவை ஜூன் 1ஆம் தேதியில் தொடங்கி 4ஆம் தேதி வரை, வானில் கிழக்கு திசையில், சூரியன் உதிப்பதற்கு முன்பு உலகில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் கண்களுக்கும் தெரியும்” என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன். மக்கள் எந்தெந்த கோள்களைப் பார்க்க முடியும்? என்னதான் நிலா மற்றும் 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வந்து காட்சியளித்தாலும், எல்லா கோள்களையும் மனிதர்களால் நேரடியாகப் பார்த்துவிட முடியாது. சூரிய உதயத்தைப் பொறுத்தே அது சாத்தியப்படும் என்கிறார் லெனின் தமிழ்க்கோவன். “அடிவானத்தில் தோன்றும் இந்தக் கோள்களை மேடான இடத்தில் நின்று பார்க்கலாம். ஆனால், தற்போது பருவகாலம் என்பதாலும் இவற்றைப் பார்ப்பதில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக” கூறுகிறார் அவர். சூரிய ஒளியின் வெளிச்சம் வந்துவிட்டாலும் இந்தக் கோள்கள் தெரியாமல் போக வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் அவர். மேலும், இவற்றில் “புதன் கோள் சூரியனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் 300 கோடி கி.மீ. தொலைவில் இருப்பதால், அவற்றை மிகப்பெரிய தொலைநோக்கிகள் கொண்டு மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்ணுக்கோ அல்லது பைனாகுலருக்கோ தெரியாது” என்கிறார் அவர். இதே கருத்தை முன்வைத்த வெங்கடேஸ்வரன், “வியாழன், புதன், செவ்வாய், சனி ஆகிய கோள்களை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்” என்கிறார். எங்கிருந்து இந்த கோள்களைப் பார்க்கலாம்? படக்குறிப்பு,“வியாழன், புதன், செவ்வாய், சனி ஆகிய கோள்களை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்” என்கிறார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன். மேற்கூறிய கோள்கள் கண்ணுக்குத் தெரிவது சூரிய வெளிச்சம் மற்றும் மேகங்களின் நிலையைப் பொறுத்து மாறலாம். இருப்பினும், இவற்றைப் பார்க்க விரும்புபவர்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்துகொண்டு இவற்றைப் பார்ப்பது கடினம். மாறாக கடற்கரை, உயரமான மலைகள் அல்லது எந்த கட்டடமும் அருகில் இல்லாத பெரிய கட்டடங்களில் இருந்து இவற்றை நேரடியாகப் பார்க்கலாம் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன். இது ஒரு அரிய நிகழ்வா? இந்த நிகழ்வை அரிதாக நிகழும் ஒன்று எனக் கூற முடியாது என்றாலும், ஒரே வரிசையில் 6 கோள்களை நேரடியாகப் பார்க்க முடிகிற நிகழ்வு என்பதால் இது கவனம் பெறுகிறது என்று கூறுகிறார் த.வி. வெங்கடேஸ்வரன். மேலும் இது அடிக்கடி நிகழ்வதுதான் என்கிறார் லெனின் தமிழ்க்கோவன். அவர் கூறுகையில், “இதற்கடுத்து வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இதே போன்ற நிகழ்வு நடைபெறும். அதற்கடுத்து 2025ஆம் ஆண்டும் இதே போன்ற நிகழ்வு ஏற்படும். அப்படியே வருகின்ற காலத்தில் அடிக்கடி இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கலாம்” என்கிறார் அவர். அறிவியல் மையத்தின் ஏற்பாடுகள் உண்டா? பட மூலாதாரம்,TAMILNADU SCIENCE & TECHNOLOGY CENTRE படக்குறிப்பு,இந்த நிகழ்வைப் பார்க்க எந்தவிதமான நிகழ்ச்சிகளையும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்யவில்லை. பொதுவாகவே இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் நடைபெறும்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் இதர அறிவியல் அமைப்புகள் அந்த நிகழ்வைப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆனால், இந்த நிகழ்விற்கு அப்படி எதுவும் ஏற்பாடு இல்லை என்று தெரிவித்தார் லெனின் தமிழ்க்கோவன். அதற்குக் காரணம், “இது மிகக் குறுகிய நேரமே நடக்கும் நிகழ்வு என்பதாலும், சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே இந்தக் கோள்களைப் பார்க்க இயலும் என்பதாலும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஆனால், மக்கள் தாங்களே நேரடியாக இதைப் பார்த்துக் கொள்ளலாம்,” என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/c4nn2gdeyy8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.