Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா...? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம். * மேகம்+ நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும். * இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல் கீற்று மேகத்திற்கும் நிலத்திற்கும் இடையே உள்ள காற்றை படுவேகமாக கிழிக்கும். இப்படி கிழித்து பிரிக்கும்போது, காற்று அதே வேகத்துடன் பின்னோக்கி விரிவடையும். * இப்படி வேகமாக விரிவடையும்போது ஏற்படும் பயங்கரமான ஒலி தான் இடி. * சிலர் நினைப்பது போல் மேகங்கள் மோதிக்கொள்ளும் போது தான் இடி உருவாகும் என்பது தவறான கருத்து. மின்னல் காற்றை கிழித்துக் கொண்டு பயணிக்கும்போது காற்று உருவாக்கும் ஒலி தான் இடி. உதாரணமாக... * ஒரு பட்டாசில் தீ வைக்கிறோம். திரி மருந்தை அடைந்ததும் அது ஒலியுடன் வெடிக்கும். சரி தானே...? * ஆனால், ஒரு பலூனை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஒரு ஊசியால் குத்தினால் அது எப்படி பலத்த ஓசையுடன் வெடிக்கிறது...? உள்ளே மருந்து என எதுவும் இல்லையே...? எப்படி ஒலி உண்டானது...? * காரணம், நாம் காற்றை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஊசியால் குத்தும் போது, அடைத்து வைக்கப்பட்ட காற்று அதீத வேகத்தில் வெளிப்பட்டு வெளிக்காற்றுடன் சேர்ந்து விரிவடையும்போது தான் இந்த ஒலி உண்டாகும். * இதே பலூனை நீங்கள் நிலாவில் வெடித்தால், அங்கே ஒலி கேட்காது. ஏனெனில், அங்கு காற்று இல்லை. அது விரிவடைய முடியாது. * இதே போல் தான்... ஒரு அணுகுண்டை வெடிக்க வைக்கும்போது அந்த வெடிப்பில் உண்டாகும் ஆற்றல் காற்றை கிழித்து வேகமாக விரிவடைய செய்யும்போது தான் அந்த 'பூம்ம்ம்' ஒலி நமக்கு கேட்கும். * இதே அணுகுண்டை நிலாவில் வெடித்தால் நமக்கு ஒளி மட்டுமே தெரியும். ஒலி கேட்காது. * ஆக, மின்னல் உருவாகும்போது அது காற்றை கிழித்து பாதையை உருவாக்கும்போது காற்று வேகமாக விரிவாகும் நிலையில் கேட்கும் ஒலி தான் இடி. சரி இப்போது மின்னலை பார்ப்போம். * மழையை உருவாக்கும் குமுலோநிம்பஸ் மேகங்கள் அடர்த்தியாக திரண்ட பின்னர் அதே வேகமாக சுமார் 10-15 கிமீ வரை மலை போல் வளரும். * இந்த மேகத்திற்குள் சிறிய ஐஸ் துகள்கள்(ice crystals) மற்றும் பெரிய ஆலங்கட்டிகள்(hails) பல பில்லியன் எண்ணிக்கையில் காணப்படும். * சிறிய ஐஸ் துகள்கள் positive charge-வுடன் மேகத்தின் மேற்பரப்பிற்கு சென்று விடும். பெரிய ஆலங்கட்டிகள் negative charge-வுடன் மேகத்தின் அடிப்பாகத்தில் தங்கிவிடும். * பின்னர் இவை பலமாக மோதிக்கொள்ளும்போது ஒரு electric current உருவாகும். இந்த கரண்ட் மேகத்திலிருந்து வெளிப்பட்டு சுமார் 50 மீட்டர் வரை மட்டுமே கீழே பூமியை நோக்கி நீளும். * இதற்கு அடுத்த நிலையில், பூமியில் உள்ள மனிதர்கள் உள்பட அனைத்து பொருட்களும் இந்த மழை, புயல் நேரங்களில் ஒருவித மின்னழுத்த பாதையை வெளியிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Streamer எனக் கூறுவார்கள். * மனிதர்கள், மரங்கள், வீடுகள், கம்பங்கள் என செங்குத்தாக நிற்கும் அனைத்தும் இந்த Streamer- களை வெளியிடுவார்கள். இவை மேல்நோக்கி செல்லும். * இப்போது மேலே 50 மீட்டர் தொலைவு வரை வந்த electric current-ஐ இந்த Streamer தொட்டு இணைந்து விட்டால், கீழே எதன் மூலம் இந்த Streamer வெளியானதோ அது மீண்டும் ஒரு பலமான return stroke கொடுக்கும். இதுவும் electric current-ம் சேர்ந்து தான் ஒரு பயங்கரமான மின்னல் வெட்டை உருவாக்கும். * பலரும் நினைப்பது போல் மின்னல் மேகத்திலிருந்து தோன்றி அப்படியே பூமியில் உள்ளவைகளை நேரடியாக தாக்காது. மின்னல் என்பது கிட்டத்தட்ட பூமியில் உருவாகி மேலே செல்கிறது. உதாரணமாக.... * மின்னல், இடி அடிக்கும்போது நாம் வெளியே செல்கிறோம். நாம் எப்போதும் செங்குதாகவே நடப்போம்/நிற்போம். * அதே சமயம், நாம் இருக்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம், கம்பம், வீடு என எதுவும் இல்லை. * இப்போது மேலே அந்த electric current 50 மீட்டர் தொலைவில் (மேகத்திலிருந்து) ஒரு பாதையை உருவாக்க Streamer-காக காத்துக் கொண்டு இருக்கும். * கீழே நடக்கும் நம் தலை மற்றும் உடலில் இருந்து Streamer வெளியாகி மேல் நோக்கி செல்லும். * இரண்டும் இணையும்.... return stroke ஏற்படும். இப்போது electric current-க்கு பாதை கிடைத்ததும் அந்த பாதையின் எல்லை வரை அது பயணம் செய்யும். அந்த பாதையின் எல்லை எது..? நம் தலை தான்... * இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்... பூமியும் Streamer-களை வெளியிடும். * ஆனால், flat-ஆன பூமி வெளியிடும் Streamer மேலே செல்வதற்குள் செங்குத்தாக நிற்கும் நாம் வெளியிடும் Streamer விரைவாக மேலே சென்று இணைந்து விடும். * ஆக, எலக்ட்ரிக் கரண்டின் டார்க்கெட் நம் தலை தான். * சரி, நாம் நிற்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம் உள்ளது. யாரை எலக்ட்ரிக் கரண்ட் தேர்வு செய்யும்...? * அஃப்கோர்ஸ், உயரமான மரம் தான் பிரைமரி டார்க்கெட்..ஆனால், நாமும் ஆபத்தில் தான் இருப்போம். * ஏனெனில், மரம் வெளியிடும் Streamer மேலே இணைந்தவுடன் பாதை ஏற்படும் மரத்தின் உச்சி வரை எலக்ட்ரிக் கரண்ட் வந்துவிடும். அருகில் வேறு ஏதாவது உயரமாக இருந்து அது Streamer-ஐ வெளிப்படுத்தும்போது அந்த எலக்ட்ரிக் கரண்ட் அசுர வேகத்தில் அங்கே Jump செய்துவிடும். * இதனால் தான் உயரமான மரத்திற்கு அருக நிற்க கூடாது என்கிறார்கள். * சரி, மேலே எலக்ட்ரிக் கரண்ட் தயார் நிலையில் உள்ளது... கீழே நாம் நடக்கிறோம்... நம்மை விட உயரமானது எதுவும் அருகில் இல்லை. நம்மை இன்னும் சில வினாடிகளில் மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர முடியுமா..?முடியும். * வெளியே நீங்கள் நிற்கும்போது/நடக்கும்போது உங்கள் உடல் Streamer-களை வெளியிடும். அப்போது... * உங்கள் தலைமுடிகள் நேராக நிற்கும்.. * உங்கள் தோலை யாரோ வருடி விடுவதுபோல் தோன்றும்... * உங்களிடம் இரும்பு சாவி, செயின், மோதிரம், டூல்ஸ் என ஏதாவது இருந்தால் அவை vibrate ஆகும். * இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு இருப்பிடத்திற்குள் படுவேகமாக நுழைந்து விட வேண்டும். * இருப்பிடம் இல்லையெனில், அப்படியே கீழே அமர்ந்து இரண்டு கால்களுக்கு இடையில் தலையை கீழ்புறமாக தொங்கவிட்டு இரண்டு காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும். (போட்டோ பார்க்கவும்) * அதாவது, ஒரு செங்குத்தான நிலையை மேலே உள்ளவனுக்கு கொடுக்க கூடாது. * ஆக, மின்னல் என்பது தானாக, எதேச்சையாக உங்களை தாக்கவில்லை. அதாவது, அது தாக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவில்லை. * மாறாக, நீங்கள் அங்கே சென்று அந்த மின்னலை வா வா என அழைத்ததால்(Streamers) அது உங்களை குறிவைத்து தாக்கியது. ஒருவேளை, நீங்கள் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், அங்கே மின்னல் தாக்குவதும் தவிர்க்கப்பட்டிருக்கும். * ஏனெனில், மேகங்கள் நகரும்போது காத்திருக்கும் அந்த எலக்ட்ரிக் கரண்ட் வேறு ஒரு இடத்தில் உயரமான பொருள் மீது தாக்கியிருக்கும். * ஆக, இடியை மேகங்கள் உருவாக்கவில்லை. அது காற்றிலிருந்து வெளியாகிறது... மின்னல் மேகத்திலிருந்து நேராக நம்மை தாக்கவில்லை. நாம் அதனை கீழே இருந்து வரவழைக்கும் ஒரு 'இணைப்பு புள்ளியாக' இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம்! https://www.facebook.com/groups/2491490137808049/permalink/3937668153190233/?rdid=pv2TT2MBU0rdWgaO&share_url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2Fp%2F18gSHQJZRQ%2F#
  2. 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: அதிசிறந்த மெய்வல்லுநர்கள் அயோமல், ஜித்மா; மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் Published By: Vishnu 14 Oct, 2025 | 09:24 PM (நெவில் அன்தனி) தியமக, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நிறைவுக்கு வந்த 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் அயோமல் அக்கலன்க அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராகவும் ஜித்மா விஜேதுங்க அதிசிறந்த பெண் மெய்வல்லுநராகவும் தெரிவாகினர். ஐந்து தினங்களாக நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மேல் மாகாண பாடசாலைகள் முதல் மூன்று இடங்ளைப் பெற்றன. நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 148 புள்ளிகளைப் பெற்று சம்பியனானதுடன் வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரி 99 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் திம்பிரிகஸ்கட்டுவ மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 77 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும் பெற்றன. பெண்கள் பிரிவில் மேல் மாகாணத்தின் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 213 புள்ளிகளைப் பெற்று சம்பியனானது. மத்திய மாகாணத்தின் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி 93 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் மேல் மாகாணத்தின் பன்னிப்பிட்டி தர்மபால கல்லூரி 61 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. அகில இலங்கை விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் மொத்தமாக 38 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. ஆண்கள் பிரிவில் 21 சாதனைகளும் பெண்கள் பிரிவில் 17 சாதனைகளும் பதிவாகின. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 49.90 செக்கன்களில் ஓடி முடித்து புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கம் சுவீகரித்த அம்பகமுவ மத்திய மகா வித்தியாலய வீரர் அயோமல் அக்கலன்க, 1135 சர்வதேச மெய்வல்லுநர் சங்க புள்ளிகளுடன் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநரானார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 54.09 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் சுவீகரித்த வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை ஜித்மா விஜேதுங்க, 1047 சர்வதேச மெய்வல்லுநர் சங்க புள்ளிகளுடன் அதிசிறந்த பெண் மெய்வல்லுநரானார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் 1277 புள்ளிகளைப் பெற்ற மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானதுடன் 414 புள்ளிகளைப் பெற்ற மத்திய மாகாணம் ஒட்டுமொத்த நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. வட மாகாணம் 138 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தையும் கிழக்கு மாகாணம் 67 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தையும் பெற்றன. https://www.virakesari.lk/article/227740
  3. 15 Oct, 2025 | 01:25 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) உலக உணவு தினம் 2025 ஐ “ சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம் ” என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சிறந்த போசாக்கையும் உறுதிப்படுத்த, நிறுவன வரம்புகள், துறைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்ற செய்தி தெளிவாகிறது. இந்நிலையில், ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO ) பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ( IFAD ) பணிப்பாளர் ஷெரீனா தபஸ்ஸூம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கான இலங்கை பிரதிநிதி மற்றும் பணிப்பாளர் பிலிப் வார்ட் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் சவால்கள் மற்றும் நிலை: இலங்கை தற்போது பட்டினி மற்றும் போசாக்குக் குறைபாட்டைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், பொருளாதார ஸ்திரமின்மை, காலநிலை மாற்றங்கள் மற்றும் சந்தைச் சீர்குலைவுகளின் கூட்டு விளைவுகளால் குடும்பங்களும் சமூகங்களும் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கின்றன. கிராமப்புற சமூகங்கள், குறிப்பாக சிறு பரிமாண விவசாயிகள், உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சந்தைகள், நிதி வசதிகள் மற்றும் காலநிலைக்கு உகந்த தொழில்நுட்பங்களை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது என்பது உலகளாவிய கடமைகளை நிறைவேற்றுவதுடன், நாட்டினுள் மக்களின் வாழ்வாதாரம், கண்ணியம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் குறிக்கிறது. ஐ.நா.வின் ரோமைத் தளமாகக்கொண்ட நிறுவனங்களின் பங்களிப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் ரோம் நகரத்தை தளமாகக் கொண்ட உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD), மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன இலங்கையின் முயற்சிக்கு தனித்துவமான பலத்தை வழங்குகின்றன: FAO: விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் தொடர்பான கொள்கை வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குகிறது. IFAD: கிராமப்புற வளர்ச்சியில் முதலீடு செய்து, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துகிறது, அத்துடன் சிறு பரிமாண விவசாயிகளுக்கு நிதி அணுகலை மேம்படுத்துகிறது. WFP: உடனடி உணவு மற்றும் போசனைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், மீண்டெழும் திறனையுடைய உணவு கட்டமைப்புகளை உருவாக்க பாடசாலை உணவுத் திட்டங்கள், அவசரகாலத் தயார்நிலை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துகிறது. இந்த முயற்சிகளை ஒன்றிணைத்து, தேசிய முன்னுரிமைகளுடன் இணைத்து, அரச நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள், தனியார் துறையின் புத்தாக்கம், சிவில் சமூக ஈடுபாடு மற்றும் சமூகப் பங்கேற்பு மூலம் வலுப்படுத்தப்படும்போது மட்டுமே சாதகமான விளைவுகளை எட்ட முடியும். நம்பிக்கைக்குரிய வழிமுறைகள் (இலங்கையில் உள்ள உதாரணங்கள்): இலங்கையில் உணவுப் பாதுகாப்பை நோக்கிய நம்பிக்கைக்குரிய பல வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன: நவீன தொழில்நுட்பம்: சந்தை அணுகலுக்கான டிஜிட்டல் தளங்கள், காலநிலைக்கு உகந்த திட்டமிடலுக்கான தொலை உணர்வு (ரிமோட் சென்சிங்) தொழில்நுட்பம் போன்றவை விவசாயத்தை மறுவடிவமைக்கின்றன. நீர்வள முகாமைத்துவம் : குளங்களின் அடிப்படையிலான நீர்ப்பாசன முறைகளை மீட்டெடுப்பது, சிறு பரிமாண விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது. இளைஞர் புத்தாக்கம்: இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் வேளாண் தொழில்நுட்பத் தீர்வுகள், உற்பத்தியாளர்களை நேரடியாக நுகர்வோருடன் இணைக்கின்றன. போசணை மேம்பாடு: செறிவூட்டப்பட்ட அரிசியை பாடசாலை உணவில் சேர்ப்பது இளம் பாடசாலைப் பிள்ளைகளின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. பால்நிலை சமத்துவம்: பெண் உற்பத்தியாளர் குழுக்கள் வருமான ஆதாரங்களை விரிவுபடுத்துவதிலும், பால்நிலை சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முன்னோக்கிச் செல்லும் வழி - ஐந்து முன்னுரிமைகள்: உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய இலங்கையின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த, பின்வரும் ஐந்து முன்னுரிமை விடயங்கள் அவசியமாகும்: டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம்: விவசாயத்தில் வேகத்தை அதிகரித்து, சிறு விவசாயிகள் (குறிப்பாக பெண்கள், இளைஞர்கள்) காலநிலைத் தகவல், நிதிச் சேவைகள் மற்றும் சந்தை இணைப்புகளின் நன்மையை அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் இளைஞர் தலைமை:மீண்டெழும் தன்மை கொண்ட வேளாண் உணவு கட்டமைப்புகளை உருவாக்குவதில் பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினரைத் தலைவர்களாகவும் புத்தாக்கவியலாளர்களாகவும் பார்க்க வேண்டும். காலநிலைக்கு இயைபாக்கம்: குளங்களை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புதுப்பித்தல், காலநிலைக்கு பொருத்தமான நடைமுறைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மூலம் மீண்டெழும் திறனை வலுப்படுத்தல். ஒருங்கிணைந்த தேசியத் தளம்: கூட்டாண்மைகள், தரவுகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒருங்கிணைந்த தேசியத் தளத்தை அரசு, தனியார் துறை, கல்வித்துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும். போசணை உணர்திறன் கொண்ட சமூகப் பாதுகாப்பு: பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை (குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை) சென்றடையக்கூடிய சமூகப் பாதுகாப்புச் செயற்திட்டங்களை உறுதி செய்வதன் மூலம் சத்தான உணவுக்கான அணுகலை உறுதி செய்தல். இவ்வருட உலக உணவு தினத்தன்று, அனைவரும் ஒன்றாகக் கைகோர்ப்பதன் மூலம் நிகழ்காலத் தலைமுறைகளுக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் சிறந்த உணவையும் சிறந்த எதிர்காலத்தையும் இலங்கை உறுதி செய்ய முடியும். https://www.virakesari.lk/article/227787
  4. சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா. மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள குறைந்தது 3 மாதம் பயிற்சி தேவை என்கிறார் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த நரம்பியல் மருத்துவரான வி சதீஷ் குமார். மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களால் முடிந்த தூரம் மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார் சதிஷ் குமார். "பெரும்பாலான மாரத்தான் போட்டிகளில் கட்டணம் செலுத்தி தான் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறுபவர்கள் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று கருதி அவர்கள் உடல் ஒத்துழைக்கும் தூரத்தையும் தாண்டி செல்வது தான் சிக்கல்களுக்கு காரணம்," என்கிறார் சுஜாதா. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இதய துடிப்பின் முக்கியத்துவம் மாரத்தான், மலையேற்றம் போன்ற தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதற்கான முன் தயாரிப்பின்றி செல்லக்கூடாது என்றும் கூறுகிறார். "தசை, எலும்பு ஆரோக்கியம் இதில் முக்கியமானது. மாரத்தான் போட்டிக்கு முன்பாக நம்முடைய உடல் தகுதியை தீர்மானிக்க சில வழிகள் உள்ளன. இதயம் மற்றும் சுவாசம் சீராக இருப்பது முதன்மையானது. இதய துடிப்பின் அளவை கணிக்க வேண்டும்." என்கிறார் சுஜாதா. இதில் ரெஸ்ட்டிங் ரேட் (resting rate), ரிக்கவரி ரேட் (recovery rate) என்கிற இரண்டு அம்சங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ரெஸ்ட்டிங் ரேட் என்பது நாம் தூங்கி எழுந்த உடன் உள்ள நமது இதயத் துடிப்பின் அளவைக் குறிப்பதாகக் கூறும் அவர், அது 60 - 80 என்கிற அளவில் இருக்க வேண்டும். மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? "முன் அனுபவம் இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் படிப்படியாகத் தான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்கு பின்பு இதய துடிப்பு அதிகரிப்பது இயல்பானது. ரிக்கவரி ரேட் என்பது நாம் உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கால அளவை தான் இது குறிக்கிறது. இந்த அளவை நாம் கண்காணிக்க வேண்டும். 1 நிமிடத்திற்குள் நமது இதய துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்." என்றார். பல்வேறு அம்சங்கள் நாம் இயல்புநிலைக்கு திரும்புவதை பாதிப்பதாகக் கூறும் அவர், "அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தீவிர பணிச் சுமை இருப்பவர்கள் மாரத்தானில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்." என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இரு கட்ட பரிசோதனை மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை அவசியம் என்கிறார் சுஜாதா. "நம்முடைய உடலில் அறியப்படாமல் நோய்கள் அல்லது அறிகுறிகள் ஏதேனும் இருக்கின்றவா என்பதை உறுதி செய்து முழுமையான சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். மலையேற்றம் செல்வதற்கு உள்ளதைப் போலவே மாரத்தான் போட்டிகளுக்கும் உடல்தகுதி சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார். மாரத்தான் ஒடுவதற்கு இதயமும் தசைகளும் பழக வேண்டும் என்கிறார் மருத்துவர் சதீஷ்குமார். "மாரத்தான் போட்டிகளில் அட்ரினலின் அதிக அளவில் வெளியேறும் என்பதால் ஜோன் 2 (Zone 2) என்கிற பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய அதிகபட்ச இதய துடிப்பிலிருந்து ஒரு சீரான அளவில் பயிற்சி மேற்கொள்வதை அது குறிக்கிறது." என்றார். முன் பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் மாரத்தான் சென்றால் இதயத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்று குறிப்பிடுகிறார். அதனை மேலும் விவரித்த அவர், "குறைந்தது ஆறு வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டால் தான் அதிகரித்த இதய துடிப்புக்கு நம் உடல் தகவமைத்துக் கொள்ளும். இதயத்தின் மீது சுமை அதிகரிக்கும் போது சமநிலை பாதிக்கப்பட்டு ரத்த சுழற்சி நின்றுவிடும். இதனால் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகின்றது." என்றார். மாரத்தான் போட்டி அல்லது பயிற்சியில் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக நிற்க வேண்டும் என்றும் கூறுகிறார். "நம்மால் தொடர முடியாதபோது நம் உடல் அதனை வெளிப்படுத்தும். அதனை புறந்தள்ளிவிட்டு தொடர்வது தவறு." என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி? முதலில் நாம் ஓட நினைக்கும் தூரத்தை தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார் சதீஷ்குமார். "நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 4 மாதம் பயிற்சி அவசியம். உதாரணத்திற்கு 40 கிமீ மாரத்தான் என்றால் 10 கிலோமீட்டரிலிருந்து தொடங்க வேண்டும், வாரத்திற்கு மூன்று நாட்களாவது ஓடி பயிற்சி எடுக்க வேண்டும். அதனை பகுதியாக மேற்கொள்ளலாம். வாரத்தில் ஒருநாள் இடைவெளி இல்லாமல் நீண்ட தூர பயிற்சியில் ஈடுபட வேண்டும். தூரத்தை ஒவ்வொரு வாரமும் சீராக அதிகரிக்க வேண்டும். அதிகரித்த இதய துடிப்பை சமாளிக்க இதயம் பழக வேண்டும், அதற்கான கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crklddknello
  5. இஷாரா செவ்வந்தி; பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணம்! 15 Oct, 2025 | 01:44 PM இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி புதன்கிழமை (15) பயணித்துள்ளனர். இஷாரா செவ்வந்தி இன்று இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/227791 பிள்ளை படத்துக்கு போஸ் கொடுப்பதைப் பார்த்து பல விசிறிகள் வரப்போகினம்!!🤪
  6. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஷ்லே டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் (கோப்புப் படம்) 4 மணி நேரங்களுக்கு முன்னர் வெர்ஜீனியாவின் வியன்னாவைச் சேர்ந்த 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாகத் சேகரித்ததாக கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டு வார இறுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வெர்ஜீனியாவின் கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க அட்டர்னி லிண்ட்சே ஹாலிகன் கூறியுள்ளார். வெர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட அமெரிக்க அட்டர்னி அலுவலகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. லிண்ட்சே ஹாலிகன், "நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நமது குடிமக்களின் பாதுகாப்புக்கு (Safety and Security) ஒரு தீவிரமான அச்சுறுத்தலாகத் தெரிகிறது," என்று கூறினார். "இந்த வழக்கில் உண்மைகளும் சட்டமும் தெளிவாக உள்ளன. நாங்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவோம்." இந்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் இரண்டரை லட்சம் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டெல்லிஸின் வீட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 64 வயதான டெல்லிஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பதவிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (National Security Council) உறுப்பினராக இருந்துள்ளார். பட மூலாதாரம், Getty Images ராய்ட்டர்ஸ் செய்திப்படி, எஃப்.பி.ஐ உறுதிமொழிப் பத்திரத்தில் (Affidavit), அவர் வெளியுறவுத் துறையின் ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் (பென்டகன்) ஒப்பந்ததாரராகவும் பட்டியலிடப்பட்டுள்ளார். ஆவணங்களின்படி, அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை அவர் மீது முறையாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. டெல்லிஸ் வாஷிங்டனைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான (Think Tank) கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் (Carnegie Endowment for International Peace) என்ற அமைப்பில் ஒரு மூத்த ஆய்வாளராகவும் உள்ளார். டெல்லிஸ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்துத் தாங்கள் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. வீட்டில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு எஃப்.பி.ஐ உறுதிமொழிப் பத்திரத்தின்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், டெல்லிஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை கட்டடங்களுக்குச் சென்று, ரகசிய ஆவணங்களை அச்சிட்டுப் பைகளில் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. சனிக்கிழமை, வெர்ஜீனியாவில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்ட போது, "டாப் சீக்ரெட்" மற்றும் "சீக்ரெட்" என்று முத்திரையிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் மீட்கப்பட்டன. நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ சமர்ப்பித்த ஆவணங்களின்படி, "டெல்லிஸ் கடந்த சில ஆண்டுகளில் பலமுறை சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். இவற்றில் ஒரு சந்திப்பு செப்டம்பர் 15-ஆம் தேதி வெர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் நடைபெற்றது. அங்கு அவர் ஒரு உறையை கொண்டு சென்றார், ஆனால் திரும்பி வரும்போது அவரிடம் அது இல்லை." வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் தனது பங்கு காரணமாக டெல்லிஸ் "டாப் சீக்ரெட்" பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருந்தார். இதன் கீழ் அவருக்கு முக்கியமான தகவல்களை அணுகும் உரிமை இருந்தது என்று உறுதிமொழிப் பத்திரம் கூறியது. சீன அதிகாரிகளுடனான சந்திப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இந்த விவகாரத்தில் தற்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை (சித்தரிப்புப் படம்) ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க வெளியுறவுத் துறை ஊழியர் 2023 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பான இடங்களிலிருந்து ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித் துறையின்படி, டெல்லிஸ் வெளியுறவுத் துறையின் ஊதியம் பெறாத மூத்த ஆலோசகராகவும், மற்றும் பாதுகாப்புத் துறையின் ஆஃபீஸ் ஆஃப் நெட் அசெஸ்மென்ட்டின் (இப்போது "டிபார்ட்மென்ட் ஆஃப் வார்") ஒப்பந்தத்தாரராகவும் இருந்தார். அவர் இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணராகக் கருதப்படுகிறார். நீதிமன்ற ஆவணங்களில், டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது வீட்டில் "டாப் சீக்ரெட்" மற்றும் "சீக்ரெட்" என்று முத்திரையிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் மீட்கப்பட்டன. செப்டம்பர் 12 அன்று, அவர் அரசாங்க அலுவலகத்தில் தனது சகா ஒருவர் மூலம் பல ரகசிய ஆவணங்களை அச்சிட்டு பெற்றார். செப்டம்பர் 25 அன்று, அவர் அமெரிக்க விமானப்படையின் திறன் தொடர்பான ஆவணங்களை அச்சிட்டார். குற்றச்சாட்டுகளின்படி, அவர் கடந்த பல ஆண்டுகளாகச் சீன அரசாங்க அதிகாரிகளைப் பலமுறை சந்தித்துள்ளார். செப்டம்பர் 2022 இல் ஒரு உணவகத்தில் சீன அதிகாரிகளைச் சந்தித்தார். அதே சமயம், ஏப்ரல் 2023 இல் நடந்த ஒரு கூட்டத்தில், இரான்-சீனா உறவுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அவர் விவாதித்தது தெரியவந்தது. ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்த மற்றொரு கூட்டத்தில், அவர் சீன அதிகாரிகளிடமிருந்து ஒரு பரிசுப் பையைப் பெற்றார். ஆஷ்லே டெல்லிஸ் யார்? ஆஷ்லே ஜே. டெல்லிஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர். அவர் அதே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். ஆஷ்லே ஜே. டெல்லிஸ் பி.ஏ. மற்றும் எம்.ஏ. (பொருளாதாரம்) பட்டங்களை பம்பாய் பல்கலைக்கழகத்தில் படித்தார். டெல்லிஸ், கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் உத்தி ரீதியான விவகாரங்களுக்கான டாடா சேரில் (Tata Chair for Strategic Affairs) மூத்த ஆய்வாளராக உள்ளார். அவர் குறிப்பாக ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் தொடர்பான சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றில் நிபுணர். அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரின் (Under Secretary for Political Affairs) மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் இந்தியாவுடனான சிவிலியன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றினார். அவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (NSC) அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றினார். அரசு சேவைக்கு முன், அவர் RAND கார்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும், RAND பட்டதாரி பள்ளியில் கொள்கை பகுப்பாய்வுப் பேராசிரியராகவும் இருந்தார். அவர் ஆசிய ஆராய்ச்சி தேசிய பணியகத்தில் (National Bureau of Asian Research) ஆலோசகராகவும், அதன் மூலோபாய ஆசியா திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குநராகவும் உள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74j9d2m3nno
  7. இ.கா.மாஅதிபர், கனம் ஐயா கனடாவிலும் ஒருவர் பதுங்கி இருப்பதாக தெரிகிறது! தயவு செய்து ஆளணியை வீணடிக்க வேண்டாம், அவர் தானாகவே பிணை எடுக்க கொழும்பு வருவார் என தெரிய வருகிறது! இப்படிக்கு தங்கை இ.செ எதிர்ப்புச் சங்க தலைவர்(பெண் பிள்ளைகள் வீட்டிற்குள் ரகளை செய்யலாம் ஆண்கள் தாங்குவினம் நாடு தாங்குமா?!)
  8. பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதமிருக்க பரபரப்பான வெற்றியை ஈட்டியது Published By: Vishnu 14 Oct, 2025 | 01:46 AM (நெவில் அன்தனி) விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. மாரிஸ்ஆன் கெப், க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்கள் தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. முதல் 23 ஓவர்களில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களிடம் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 5 விக்கெட்ளை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக பங்களாதேஷ் தலைகீழ் வெற்றியை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துடுப்பாட்டத்தில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய மாரிஸ்ஆன் கெப் (56 ஓட்டங்கள்), க்ளோ ட்ரையொன் (62), நாடின் டி க்ளார்க் (37 ஆ.இ.) ஆகியோர் தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். அவர்களைவிட அணித் தலைவி லோரா வுல்வார்ட் (31), ஆன்எக் பொஷ் (28) ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். பந்துவீச்சில் நஹிதா அக்தர் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷொர்னா அக்தர் (51 ஆ.இ.), ஷர்மின் அக்தர் (50), அணித் தலைவி நிகார் சுல்தானா (32), பர்கானா ஹொக் (30) ஆகியோர் திறமைமையை வெளிப்படுத்தினர். பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஆட்டநாயகி: க்ளோ ட்ரையொன் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13ஆவது அத்தியாயத்தில் கிடடத்ட்ட அரைவாசி போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா ஆகியன தலா 6 புள்ளிகளுடன் முறையே 2ஆம், 3ஆம் இடங்களிலும் இருக்கின்றன. https://www.virakesari.lk/article/227649
  9. 'கரூரில் ஒரே நாளில் 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி?' சட்டமன்றத்தில் ஸ்டாலின் பதில் பட மூலாதாரம், Tamilnadu Assembly கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விளக்கமளித்தார். ஆனால், தாங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதில் சொல்வதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். பிறகு, அ.தி.மு.க. வெளிநடப்புச் செய்தது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானமும் கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொண்டுவந்திருந்தன. இந்நிலையில், அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதிலளிக்கக்கூடாது என அவர்கள் கூறினர். இதற்கிடையில் முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பேச ஆரம்பித்தார். கரூர் நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்திருக்கவில்லையென அவர் குற்றம்சாட்டினார். "கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27.09.2025 அன்று தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் பல்வேறு இடங்களைக் குறிப்பிட்டு அனுமதியைக் கோரினார். அவர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கப்படவில்லை. 25.09.2025ஆம் தேதியன்று காலையில் லைட் ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. பிறகு செப்டம்பர் 26ஆம் தேதியன்று வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் அனுமதி கோரினார். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது'' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார் பட மூலாதாரம், DIPR 'கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்' இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 517 காவலர்கள் கரூர் மாவட்டத்திலிருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என ஸ்டாலின் கூறினார். '' வெளி மாவட்டங்களிலிருந்து 1 காவல் துணை கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவுப்படை காவலர்கள் என 99 பேர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறையைப் பொறுத்தவரை, வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10 ஆயிரம் பேர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்டம் நடத்த அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சித் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.'' என்றார் ஸ்டாலின். பட மூலாதாரம், DIPR 'பிடிவாதமாக முன்னேறிச் சென்றனர்' மேலும், ''செப்டம்பர் 27ஆம் தேதியன்று, அக்கட்சியின் தலைவர் சென்னையிலிருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு, 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது அறிவிக்கப்பட்ட 12.00யை மணியைக் கடந்து, 7 மணி நேரம் கழித்துத்தான் வந்தார். இந்தக் காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்குப் போதிய குடிநீர் வழங்கவில்லை; உணவு வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. சம்பவம் நடந்த அதே வேலுசாமிபுரத்தில் இதற்கு இரு தினங்களுக்கு முன்பாக அதாவது செப்டம்பர் 25-ஆம் தேதியன்று எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அக்கூட்டம் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அந்தப் பரப்புரைக் கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்களும், 30 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தக் கட்சியின் நிகழ்ச்சி நடந்துள்ளது.'' என ஸ்டாலின் கூறினார் கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனத்தைப் பின்தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும், கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர் என்றார் ஸ்டாலின் ''நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரசார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் , பிரசார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தினர். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என்று பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறிச் சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணைச் செயலாளரிடம் பலமுறை தொடர்புகொண்டு பிரசார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும், அவர் த.வெ.கவின் தலைவரிடம் உரையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். வாகனம் அக்ஷயா மருத்துவமனையிலிருந்து, 30-35 மீட்டர் தூரம் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினரை இது நிலைகுலைய செய்தது. இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் பீதி, மூச்சுத் திணறல், மயக்கம், நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கிறார்கள்.'' என்றார் ஸ்டாலின். பட மூலாதாரம், Getty Images 'நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை' ''கூட்டத்தின் ஒருபகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து, தகரக் கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க, ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும், சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து, காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். இவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவர்களைக் காப்பற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை. காவல் துறை, தீயணைப்பு - மீட்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.'' என்றார் ஸ்டாலின் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, த.வெ.கவினர் இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள் என ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார் ''இதனால் மீட்புப் பணிகள் தடைபட்டன. இது தொடர்பாக, கரூர் நகர காவல் நிலையத்தில், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கரூர் நீதித் துறை நடுவர் முன்பு சரணடைந்திருக்கிறார். மற்றொரு நபர், கைது செய்யப்பட்டிருக்கிறார். கரூரில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த உடனேயே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதன்மைச் செயலர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டார்கள். மேலும், அன்றிரவே நானும் கரூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7.47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்கள். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டார்கள். பொது சுகாதார இயக்குநர் தலைமையில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.'' என்றார் ஸ்டாலின் பட மூலாதாரம், Getty Images 'ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்' கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 700 படுக்கைகளோடு எந்த அவசர நிலையையும் சமாளிக்க ஏதுவாக, கூடுதல் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ''24 மணி நேர அவசர சிகிச்சை மையம், சிடி ஸ்கேன், ஆய்வகங்கள் செயல்பட்டன. பணிகளை விரைவுபடுத்திட திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அம்மாவட்ட மருத்துவக் குழுவினர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து "Help Desk" அமைத்து, இறந்தவர்களின் உடல்களை காவல் துறை உதவியோடு அடையாளம் கண்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அலுவலர்களின் உதவியோடு உடற்கூறாய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். கரூருக்கு அருகில் உள்ள சேலம், நாமக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தங்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்களுடன் 27ஆம் தேதியன்று இரவு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இதுதவிர, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரியில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக வல்லுநர்கள், பிரேத பரிசோதனை உதவியாளர்கள் என மொத்தம் 152 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் மட்டும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலே இருக்கிறார்.'' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார் '' உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 18 பேர், குழந்தைகள் 10 பேர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அன்று இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக, உடற்கூராய்வு நடைமுறையை முடித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் மரு.சங்கர் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 28.09.2025 அன்று அதிகாலை 1.45 மணிக்கு, முதல் உடற்கூராய்வு தொடங்கப்பட்டு, 28.09.2025 அன்று மதியம்1.10 மணியளவில் 39வது உடற்கூராய்வு முடிவுற்றது'' என்றார் ஸ்டாலின் பட மூலாதாரம், Tamilnadu Assembly ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி? இதற்குப் பிறகு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டார். "கரூரில் மக்கள் சந்திப்பு நடத்துவதற்கு முன்பாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்திருக்கிறார். அங்கு கூடிய கூட்டத்தை வைத்தே கரூரில் விஜய் பிரசாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தாலே, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். மேலும், ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி, உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பிறகு பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், குஜராத் விமான விபத்தின்போது இரவிலும் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். "அதிகாலை 1.45 மணிக்கு பிரேதப் பரிசோதனை துவங்கியது. மொத்தம் ஐந்து மேசைகளில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. மொத்தம் 14 மணி நேரத்திற்கு உடற்கூராய்வு நடைபெற்றது. உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதில் சந்தேகம் எழுப்ப வேண்டியதில்லை" என்று தெரிவித்தார். பட மூலாதாரம், X/EDAPPADI PALANISAMY 'எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டத்தில் நெரிசல் ஏற்படவில்லை' இதற்குப் பிறகு அமைச்சர் எ.வ. வேலு பேசினார். அவர் பேசும்போது, "அங்கு நடந்த எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டத்திற்கும் கூட்டம் வந்தது. ஆனால், நெரிசல் ஏற்படவில்லை. அங்கு வந்தவர்கள் அவர் பேசுவதைக் கேட்க வந்தார்கள். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்காங்கே தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. ஆனால் விஜய் வாகனத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தார். இதனால், கூட்டம் வாகனத்தைப் பின்தொடர்ந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தது. இதனால் நெரிசல் ஏற்பட்டது. கரூரில் அ.தி.மு.க. கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த அதே காவலர்கள்தான் த.வெ.க.வின் கூட்டத்திற்கும் பாதுகாப்பு அளித்தனர்" என்றார் எ.வ. வேலு. மீண்டும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, "நாங்கள் மக்களுக்காகப் பேசுகிறேன். இந்த கூட்டத்தில் எப்படி விபத்து ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர் என்பதைச் சொல்லுங்கள். அம்புலன்ஸ்களில் தி.மு.க. ஸ்டிக்கர் வந்தது எப்படி?" என அவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பிறகு பேசப்பட்ட சில விஷயங்களை சட்டப்பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென அ.தி.மு.கவினர் கோரினர். இதற்குப் பிறகு அமளியிலும் ஈடுபட்டனர். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென சபாநாயகர் கோரினார். இதற்குப் பிறகு அ.தி.மு.கவினர் வெளிநடப்புச் செய்தனர். வெளிநடப்புச் செய்த அ.தி.மு.கவினர் பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். "பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. கரூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி கருத்தைத் தெரிவித்த பிறகு முதல்வர் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்றேன். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் முதல்வரை அழைத்து பேச அனுமதித்தார். இது முக்கியப் பிரச்சனை என்ற காரணத்தால், 41 பேர் உயிரிழந்த நிகழ்வு என்பதால் அமைதிகாத்தோம். முதல்வர் சொல்வதைக் கேட்போம் என அங்கேயே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் தி.மு.க. அரசு கரூர் நிகழ்வு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவித்தார். அதற்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பேச ஆரம்பித்தேன். அதில் செப்டம்பர் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் மக்கள் சந்திப்புக்கூட்டத்தில் பேசியபோது, ஒரு செருப்பு வந்து விழுந்தது. அதைப் பற்றி அரசு கருத்து எதையும் சொல்லவில்லை. அதற்குப் பிறகு கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த உயிர் பலிகளைத் தவிர்த்திருக்கலாம். '' என எடப்பாடி கே. பழனிசாமி கூறினார் ''இந்த அரசு ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றுதான் நடத்துகிறது. இந்த அரசின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டேன். ஏற்கனவே த.வெ.க. தலைவர் நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஏற்கனவே நடந்த கூட்டங்களை வைத்து எவ்வளவு பேர் இந்தக் கூட்டங்களில் பங்கு பெற்றார்கள் என்பது அரசுக்குத் தெரியும். அவர்கள் கேட்ட இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கவேண்டும். அதை செய்யவில்லை. காவல்துறை அதிகாரிகள் ஒரு பேட்டியில் பேசும்போது 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், அவ்வளவு பேர் அந்த இடத்தில் இல்லை. மேலும் இன்று முதல்வர் பாதுகாப்புப் பணியில் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக முரண்பட்ட தகவலைச் சொல்கிறார். அதனால்தான் சந்தேகம் வருகிறது.'' என்றார் எடப்பாடி கே. பழனிசாமி. ''வேலுச்சாமிபுரம் த.வெ.க. கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவுக்குக் கேட்டோம். அந்தக் கூட்டம் அந்த இடத்தில் நடைபெற அனுமதிக்கவில்லை. போக்குவரத்து மிகுந்த இடம் என்பதால் அனுமதி மறுத்தார்கள். கரூரில் எழுச்சிப் பயணத்திற்கு இடம் கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. வேறு வழியில்லாமல் இந்த இடத்தை அவர்கள் கொடுத்தார்கள். அதே இடத்தைத்தான் மக்கள் சந்திப்பு இடத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நிராகரித்த இடத்தை எப்படிக் கொடுத்தார்கள்? முதலமைச்சர் முப்பெரும் விழா நடத்திய இடத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அசம்பாவிதம் நடக்க வேண்டுமென்பதற்காகவே இந்த இடத்தைக் கொடுத்தார்கள். ஆகவே, அரசின் அலட்சியத்தாலும் காவல்துறை பாதுகாப்பு அளிக்காததாலும்தான் இந்த நிகழ்வு ஏற்பட்டது.'' என்றார் அவர் ''இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே இரவில் ஒன்றே முக்கால் மணிக்கே பிரேதப் பரிசோதனை துவங்கினார்கள். மூன்று மேசைகளில் எப்படி 39 பேருக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி? வெளியிலிருந்து மருத்துவர்கள் வந்தாலும்கூட, நான் செல்வதற்கு முன்பாகவே எல்லோருக்கும் உடற்கூராய்வு செய்துவிட்டார்கள். ஒரு உடலுக்கு செய்ய ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். அதற்கு எப்படி உடற்கூறு செய்ய முடியும். இந்த நிகழ்வு குறித்து அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர். அவர்கள் அரசின் திட்டங்கள் குறித்துப் பேச நியமிக்கப்பட்டனர். அப்படியிருக்கும்போது, ஒரு நபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக செயல்படும்? சிறுநீரக முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென நீதிமன்றம் கூறிய பிறகும் அதைச் செய்யவில்லை. ஆனால், இந்த விவகாரத்திற்கு அமைக்கப்பட்டது. அதேபோல, கள்ளக்குறிச்சி விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவற்றுக்கும் சி.பி.ஐ. விசாரணை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். இப்போது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கரூர் நிகழ்வைப் பொறுத்தவரை அரசின் அலட்சியம், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கப்படாததுதான் காரணம்" என்று குற்றம்சாட்டினார் எடப்பாடி கே. பழனிசாமி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn8vyvp3j9ko
  10. Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 02:41 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதையொட்டி, எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்," என்று தெரிவித்தார். மேலும், இதைத் தொடர்ந்து டிரம்ப் கிண்டலாக, "இதே வார்த்தையை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்" என்றும் கூறினார். ட்ரம்பின் இந்தப் பேச்சு, அரசியல் அரங்கில் ஒரு தலைவரை அவரது பணியின் அடிப்படையில் அல்லாமல், தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடுவதாகக் கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த மாநாட்டில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227706
  11. பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே கட்டுரை தகவல் பென்னி லு பிபிசி சைனீஸ் விபெக் வெனிமா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் 37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. சிறுவயதில், மற்ற குழந்தைகளைப் போலப் பள்ளிச் சீருடையுடன் செல்வதே லீயின் கனவாக இருந்தது. ஆனால், அவர் நிறைய ஏளனத்தைச் சந்தித்தார். சில குழந்தைகள் அவரை "வீணானவர்" என்றும், அவரால் "சாப்பிட மட்டுமே முடியும், வேறு எந்தப் பயனும் இல்லை" என்றும் கூறினர். "இது என்னை மிகவும் காயப்படுத்தியது," என்று லீ கூறுகிறார். லீக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவரால் நடக்க முடியும் என்று அவரது பெற்றோர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மேலும் கடன் வாங்கி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அந்த அறுவை சிகிச்சை மீது லீ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். "நான் வார்டில் குணமடைந்து வந்தபோது, மற்ற குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னால் விரைவில் ஒரு சாதாரண மனிதரைப் போல நடக்க முடியும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார். ஆனால், அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது. லீயின் நடக்கும் நம்பிக்கை சிதைந்ததுடன், அவர் ஆழமான மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதைப் போல உணர்ந்த அவர், தன் தாயிடம் தான் இறந்துவிட விரும்புவதாகக் கூறினார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருதுவர் லீ சீனாவின் ஐந்து புனித மலைகள் மற்றும் ஹுவாங்ஷன் மலை, அத்துடன் சீனப் பெருஞ்சுவர் அனைத்திலும் ஏறியுள்ளார். ஆனால், அவருடைய தாயார் அவரிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறினார். "நாங்கள் வயதான காலத்தில் பேசுவதற்கு ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக உன்னை வளர்க்கிறோம். ஒரு பூனையோ நாயோ பேச முடியாது, ஆனால் உன்னால் பேச முடியும்," என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. "எனக்காக என் பெற்றோரும் குடும்பத்தினரும் எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்று நான் நினைத்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். நான் எனக்காக மட்டுமல்ல, அவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்," என்கிறார் லீ. அதன்பிறகு சிறிது காலத்திலேயே, வெளியூர் நபர் ஒருவர் கிராமத்திற்கு வந்து, கோவில்களில் ஊதுபத்தி விற்க மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தேடினார். அந்த நபர், லீ அந்த நேரத்தில் அவரது தந்தையின் மாதச் சம்பளத்திற்குச் சமமான தொகையை வீட்டிற்கு அனுப்புவார் என்று உறுதியளித்தார். "என் பெற்றோர் அதை உறுதியாக எதிர்த்தனர். ஆனால், பணம் சம்பாதிக்கவும், என் குடும்பத்தின் சுமையைக் குறைக்கவும் எனக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது," என்று லீ கூறுகிறார். அவர் அந்த நபருடன் செல்ல ஒப்புக்கொண்டார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே தெருவில் பிச்சை எடுக்க நேரிட்ட துயரம் ஆனால், வேலை குறித்த வாக்குறுதி ஒரு ஏமாற்றுவேலை என்று லீ விரைவில் அறிந்தார். அந்த வெளியூர் நபர் ஒரு பிச்சை எடுக்கும் கும்பலை நடத்தி வந்ததாக மருத்துவர் லீ கூறுகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, அவர் மற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது புதிய "முதலாளியுடன்" கழித்த முதல் நாள் இரவில், மற்ற குழந்தைகளில் ஒருவர், கடினமாக உழைக்கவில்லை என்றால் அடிக்கப்படுவீர்கள் என்று லீயை எச்சரித்தார். இது உண்மையாகவும் ஆனது. அடுத்த நாள் காலையில், லீ சட்டை இல்லாமல், நாணயங்களுக்கான ஒரு கிண்ணத்துடன், அதிக அனுதாபத்தைத் தூண்டும் வகையில் அவரது கால்கள் முதுகுப்புறமாக முறுக்கப்பட்ட நிலையில் நடைபாதையில் விடப்பட்டார். மக்கள் தன் கிண்ணத்தில் பணம் போடுவது ஏன் என்று லீக்கு முதலில் புரியவில்லை. அப்போது, பாதசாரிகள் அவரிடம், பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. "என் சொந்த ஊரில், பிச்சை எடுப்பது அவமானகரமானது. நான் அதையே செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்திருக்கவில்லை. உண்மை தெரிந்தபோது நொறுங்கிப் போனேன்," என்று லீ கூறுகிறார். லீ ஒரு நாளைக்குச் சில நூறு யுவான்களைச் சம்பாதிக்க முடிந்தது – இது 1990களில் ஒரு பெரிய தொகையாகும் – ஆனால் அது அனைத்தும் அவரது முதலாளியிடம் சென்றது. "நான் மற்ற குழந்தைகளை விடக் குறைவாகச் சம்பாதித்தால், அவர் நான் சோம்பேறித்தனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி, சில சமயங்களில் என்னைத் தாக்குவார். அதனால் அந்த ஆண்டுகள் மிகவும் வேதனையாக இருந்தன." என்று அவர் கூறுகிறார். அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற குழந்தைகள் ஓடிவிட்டனர் அல்லது காவல்துறையால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன் லீ அங்கேயே தங்கினார். காவல்துறை உதவி வழங்கிய போது, அவர் மறுத்துவிட்டார். ஏழு ஆண்டுகளாக கோடை மற்றும் குளிர்காலத்தில், லீ நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்தார். "அது நரகத்தில் வாழ்வது போல் இருந்தது. நான் வெட்கப்பட்டேன், கண் தொடர்பைத் தவிர்த்தேன். பரிதாபத்தைத் தூண்டுவதற்காக என் காலை வலி நிறைந்த நிலையில் பின்புறமாக முறுக்கிக் கொள்வேன். பிச்சை எடுப்பதைத் தவிர்க்க மழை அல்லது இருளுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்," என்று அவர் பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் கூறினார். ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய தினம் அவர் வீட்டிற்கு அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தன் பெற்றோரை ஆசுவாசப்படுத்துவார். "ஆனால், அழைப்புக்குப் பிறகு, நான் என் அறையில் அழுது கொண்டிருப்பேன். நான் தெருவில் பிச்சை எடுக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்ல முடியவில்லை." என்று அவர் கூறுகிறார். இப்போதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வேதனை நீங்கவில்லை எனக் கூறும் அவர், "பிச்சை எடுத்தது ஆழமான உளவியல் காயங்களை விட்டுச் சென்றது - நான் இன்னும் அதைப் பற்றி கொடிய கனவு காண்கிறேன். அது ஒரு கனவு மட்டுமே என்று அறிந்து நிம்மதியுடன் எழுந்திருக்கிறேன்." என்கிறார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மலையேறுவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக மருத்துவர் லீ கூறுகிறார். கல்வி மூலம் ஒரு புதிய பாதை லீ தெருவில் ஒரு செய்தித்தாளைக் கண்டெடுத்து, அதில் தனது பெயரில் உள்ள எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடிந்ததை உணர்ந்தபோது எல்லாம் மாறியது. அப்போது 16 வயதான அவர், வீட்டிற்குத் திரும்பி இறுதியாகப் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தார். "என்னால் படிக்கவோ எழுதவோ முடியாது, கல்வி மூலம் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும்," என்று அவர் நினைத்தார். அந்த நேரத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது குற்றமாக ஆக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் லீ கேள்விப்பட்டார். அவர் தனது முதலாளியிடம் தான் தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார். தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்த போது, அவர் உண்மையில் எப்படி வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரைச் சுரண்டியவர் உறுதியளித்ததை விட மிகக் குறைவான பணத்தை அவர்களுக்கு அனுப்பியிருந்ததைக் கண்டு லீ கோபமடைந்தார். தனது பெற்றோரின் ஆதரவுடன், லீ ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் சேர்ந்தார். அங்குப் படிக்கும் மாணவர்கள் அவரை விட 10 வயது இளையவர்கள். அவர் முதல் நாள் பள்ளிக்குச் சென்றபோது, குழந்தைகள் அவரது மேசையைச் சுற்றி மொய்த்தனர் – ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. "நான் வருத்தப்படவில்லை - அதற்கு முன்பு நான் நிறைய ஏளனங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருந்தேன். இப்போது, ஒரு மாணவனாக, நான் கற்றலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். லீ மிகவும் அர்ப்பணிப்புள்ள மாணவராக ஆனார், இருப்பினும் அவரது உடல்நிலை கழிப்பறைக்குச் செல்வது போன்ற வேலைகளைக் கூடச் சிரமமாக்கியது. "கழிப்பறைக்குச் செல்ல நிறைய முயற்சி தேவைப்படும். அதனால் நான் பெரும்பாலும் பள்ளியில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்," என்று அவர் கூறுகிறார். தளர்வில்லாத உறுதியுடன், லீ ஒன்பது ஆண்டுகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். அவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளை விளையாட அழைத்து, பின்னர் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்பார். கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவரது உடல்நிலை அவருக்கு இருந்த வாய்ப்புகளை குறைத்தது. ஆனால், அவர் மருத்துவத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். "தான் ஒரு மருத்துவரானால், என் சொந்த நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம், என் குடும்பத்திற்கு உதவலாம், உயிர்களைக் காப்பாற்றலாம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கலாம்," என்று அவர் நினைத்தார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, கல்லூரிக்குச் செல்ல, லீ தனது மொபிலிட்டி ஸ்கூட்டரில் பல மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. 25 வயதில் லீ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குள்ள வசதிகள் அவருக்கு மிகவும் அணுகக்கூடியதாக இருந்தன. ஆனால், செய்முறை வகுப்புகள் மிகவும் கடினமானதாக இருந்ததை அவர் கண்டார். "சக மாணவர்கள் ஆசிரியரைப் பின்தொடர்ந்து நோயாளிகளைப் பார்க்கச் செல்ல அல்லது இன்டர்ன்ஷிப்பின் போது வார்டுகளுக்கு இடையில் ஓட முடிந்தாலும், எனது நடமாடும் பிரச்னைகள் அதைக் கடினமாக்கின. மற்றவர்கள் ஒரு நாளில் கற்றுக்கொண்டதை நான் கற்றுக்கொள்ள அதிக நேரம் ஆகும்." என் றார். லீ தான் பலமடைய வேண்டும் என்று உணர்ந்தார். மலை ஏறுதலைத் தொடங்க முடிவு செய்தார். தனது முதல் மலையேற்றத்தில், தைய் மலையின் உச்சியை அடைய அவருக்கு ஐந்து பகலும் இரவும் ஆனது. அவரது கைகளும் கால்களும் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டபோதும், அவர் கைவிடவில்லை. ஒவ்வொரு கல் படியையும் தனது பிட்டத்தைப் பயன்படுத்தி நகர்ந்து ஏறினார். மருத்துவர் லீ தனது மலை ஏறும் காணொளிகளைப் பகிர்ந்தபோது, அது இந்த கோடையில் வைரலாக மாறியது. மலை ஏறுவது அவருக்கு இப்போதும் ஒரு விருப்பமான விஷயமாக உள்ளது. இப்போது மருத்துவர் லீ, ஜின்ஜியாங்கில் ஒரு சிறிய கிராமப்புற கிளினிக்கை நடத்தி வருகிறார். அவர் இரவு பகலாகப் பணி செய்ய தயாராக உள்ளார். அவரது நோயாளிகள் அவரைத் தங்களின் "அற்புத மருத்துவர்" என்று அழைக்கிறார்கள். "என் சொந்தக் கைகளால் நோயாளிகளைக் கவனிப்பது, என் அண்டை வீட்டாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது – இது எனக்கு எல்லாவற்றையும் விட அதிக திருப்தியை அளிக்கிறது," என்று அவர் கூறுகிறார். உலகம் முழுவதும் சீன சமூகத்திடம் முழுவதும் அவரது கதை சென்றடைந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், இது மக்களின் மனப்பான்மையை மாற்ற உதவும் என்று நம்புகிறார். "சிலர் மாற்றுத்திறனாளிகளைப் பயனற்றவர்களாகப் பார்க்கிறார்கள். உணவகங்களில் நான் அமர்ந்திருக்கும்போது பிச்சைக்காரன் என்று தவறாகப் புரிந்துகொண்டு, உணவு இல்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். நான் சிரித்துவிட்டு வெளியேறுவேன் - பெரும்பாலான மக்கள் கனிவானவர்கள்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, ஒரு கிராமப்புற கிளினிக்கை நடத்துவதை மருத்துவர் லீ விரும்புகிறார். நம்பிக்கை மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கை லீயைச் சுரண்டியவர் குறித்து ஏன் புகார் அளிக்கவில்லை என்று பலர் அவரிடம் கேட்டுள்ளனர். "நான் கடந்த காலத்தைக் கடந்த காலத்திலேயே விட்டுவிட முடிவு செய்தேன்," என்று அவர் கூறுகிறார். "அந்த ஏழு ஆண்டுகள் ஒரு வேதனையான அனுபவம், ஆனால் அவை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன." லீயின் பயணம் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. "பள்ளிக்குச் செல்ல முடிந்த பிறகு, மற்றவர்களின் கருத்துகள் அல்லது மதிப்பீடுகள் பற்றி நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். அந்த விஷயங்கள் அர்த்தமற்றவை என்று நான் உணர்ந்தேன். எனது நேரத்தையும் ஆற்றலையும் படிப்பதிலும், என் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதிலும் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். பல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்கள் தங்களை மதிப்பிடுவார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்று பயப்படுவதால் "முன்னோக்கிச் செல்ல அஞ்சுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார். "ஆனால், என்னைப் பொறுத்தவரை, அது முக்கியமில்லை. நான் வளாகத்திலும் நகரங்களிலும் வகுப்புகளுக்காகவோ, பட்டறைகளுக்காகவோ, அல்லது எனது வேலை மூலம் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ குந்திக் கொண்டும், தவழ்ந்தும் செல்கிறேன். அதைச் செய்யும்போது நான் நம்பிக்கையுடன் இருப்பதாக நினைக்கிறேன். நான் மற்றவர்களின் பார்வையைப் பற்றி இப்போது கவலைப்படுவதில்லை." என்கிறார். பொதுமக்களுக்கு அவர் இந்த அறிவுரையையும் கூறுகிறார்: "நம் வாழ்க்கை மலைகளைப் போன்றது - நாம் ஒன்றில் ஏறுகிறோம், அதற்கு முன்னால் இன்னொன்று உள்ளது. நாம் தொடர்ந்து பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்." "ஒருவர் எப்போதும் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும், தங்கள் கனவுகளை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்." மருத்துவர் லீ சுவாங்யே பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் பேசினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crexdg0lnx0o
  12. கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது Published By: Vishnu 14 Oct, 2025 | 09:54 PM கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது. அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது. S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது. செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227743
  13. அததெரண கருத்துப் படம்
  14. மடகஸ்காரில் அரசியல் குழப்பம் : ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோட்டம்! Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 01:04 PM கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஜனாதிபதி ரஜோலினா தலைமையிலான அரசுக்கு எதிராகத் திரும்பியது. பொதுமக்கள் ஊழல், வறுமை, மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, அந்நாட்டு இராணுவத்தின் முக்கியமான படைப்பிரிவான கெப்செட் (CAPSAT), ஜனாதிபதியின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராகத் திரும்பியது. இது அந்நாட்டு ஜனாதிபதிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி ரஜோலினா பிரான்ஸ் நாட்டின் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி, தப்பியோடியதைத் தொடர்ந்து, இராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்கார் முன்னர் பிரான்ஸின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னரும், பிரான்ஸ் தனது படைவீரர்களை அங்கு நிலைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227697
  15. Published By: Vishnu 14 Oct, 2025 | 09:24 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அம்மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனவும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் திங்கட்கிழமை (13) குறித்த பகுதிக்குக் களவிஜயம் மேற்கொண்டனர். இதன்போது செம்மணி மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற பகுதிகள் உரியவாறு மூடப்பட்டு, பாதுகாக்கப்படாததால் தற்போது பெய்துவரும் மழையினால் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி இருந்தமை அவதானிக்கப்பட்டது. செம்மணி சதுத்து நிலத்தையும், களிமண் தரையையும் கொண்ட பகுதியாக இருப்பதனால் தொடர்ச்சியாக மழை பெய்தல், அப்பகுதி முழுவதும் வெள்ளநீரில் மூழ்கிவிடும். ஆகையினால் இன்னும் ஒருசில மாதங்களுக்கு அப்பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்வர் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று அடுத்தகட்ட அகழ்வுப்பணிகளுக்காக 19,106,000 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு நீதியமைச்சு ஒப்புதல் அளித்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தற்போதைய காலநிலை மற்றும் ஏனைய மனிதப்புதைகுழி வழக்குகள் உள்ளிட்ட தொடர் பணிகள் போன்றவற்றின் காரணமாக விசாரணை அதிகாரிகள் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைக் கட்டம் கட்டமாகப் பிரித்திருப்பதாக விளக்கமளித்துள்ளது. https://www.virakesari.lk/article/227739
  16. Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 04:28 PM இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் 'புளூடூத்திங்' (Bluetoothing) அல்லது'ஹொட்ஸ்போட்டிங்' (Hotspotting) என்ற புதிய பழக்கத்தால், தென் பசிபிக் நாடான பிஜியில் (Fiji) எச்ஐவி (HIV) தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 'புளூடூத்திங்' என்றால் என்ன? இது கையடக்கத்தொலைபேசிகளிலோ அல்லது இலத்திரனியல் கருவிகளில் காணப்படும் தொழில்நுட்பம் அல்ல. மாறாக இது போதைப்பொருள் பாவனையாளர்கள், ஊசியைப் பயன்படுத்தி போதை மருந்து கலந்த இரத்தத்தை ஒருவர் மற்றவருடன் பரிமாறிக்கொள்ளும் ஆபத்தான நடைமுறையாகும். போதைப் பொருள் விலை மற்றும் ஊசி தட்டுப்பாடு போன்ற காரணங்களால், ஒருவர் போதைப்பொருளை உடலில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அவரது இரத்தத்தை எடுத்து மற்றவர் தமது உடலில் ஏற்றுவதையே 'புளூடூத்திங்' எனக் குறிப்பிடுகின்றனர். இந்த அபாயகரமான பழக்கம் பிஜியில் வெகுவாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 500க்கும் குறைவாக இருந்த எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு உயர்ந்து தற்போது 5,900 ஆக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 1,093 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 223 பேர் நரம்புவழி போதை மருந்து பயன்பாட்டால் நோய் தொற்றுக்கு உள்ளானதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. புதிய தொற்றாளர்களில், 10 வயது சிறுவன் உட்பட, 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலர் இந்த 'புளூடூத்திங்' முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 3,000 பேருக்கு எச்ஐவி ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிஜியின் சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். தென்னாப்பிரிக்கா, தன்சானியா, லெசோதோ மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருப்பதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதனைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/227723
  17. யாழில் இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம் 14 Oct, 2025 | 04:59 PM ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் திங்கட்கிழமை (13) முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (14) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆசிரியர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டனர். ஆசிரியர்களால் முன் வைக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து தாம் வடமாகாண ஆளுநருடன் பேசி தீர்வுகளை பெற்று தருவதாக ஆசிரியர்களுக்கு உறுதி அளித்தனர். https://www.virakesari.lk/article/227722
  18. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 05:05 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று செவ்வாய்க்கிழமை (14) பீஜிங்கில் அமைந்திருக்கும் மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கையின் சீனாவுடனான ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துதல் ஆகியன குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே பிரதமர் சீன விஜயத்தினை மேற்கொண்டு இருக்கின்றார். பீஜிங்கில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்கள், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்ட அரச விஜயத்தின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டன. இக் கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவைப் பற்றி நினைவு கூர்ந்த பிரதமர், ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சீனாவின் நவீனமயமாக்கல் குறித்த தொலைநோக்குப் பார்வை, சீனாவிற்கு மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் பரந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஏனைய நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார். இலங்கையின் முக்கியமான அபிவிருத்திப் பங்காளி நாடுகளில் ஒன்றாகச் சீனா இருப்பதால், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய திட்டங்களில் அடைந்துள்ள உறுதியான முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், உயர் தரமான ‘பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின்’ (Belt and Road Initiative) கீழ் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான உதவியை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி அமரசூரிய எடுத்துரைத்தார். சமீபத்திய பொருளாதார மீட்சியில் இலங்கை அடைந்த வெற்றிகளுக்காக ஜனாதிபதி அவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சீன ஜனாதிபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அத்துடன், வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியத் துறைகளில் இலங்கைக்குத் தொடர்ச்சியான ஆதரவை அளிப்பதாகவும் சீன ஜனாதிபதி அவர்கள் உறுதி அளித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் வேகத்தைத் தொடர்ந்தும் பேணுவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சமகால உலகளாவிய நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் உலகளாவிய நிர்வாக முன்முயற்சிக்கு இலங்கையின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுத் தருவதாகப் பிரதமர் மீண்டும் உறுதி அளித்தார். https://www.virakesari.lk/article/227700
  19. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியா வெற்றி, ஆனால் தவறவிட்ட முக்கிய வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, ஷுப்மன் கில் தலைமையில் முதல் தொடர் வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது இந்த இளம் அணி. ஆனால், இந்த இரு போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த பல முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நன்றாக அமைந்த விஷயமெனில் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக சாய் சுதர்ஷனின் செயல்பாடு. இங்கிலாந்தில் தடுமாறிய அவர், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 87, 39 என்று ஸ்கோர் எடுத்தார். ஸ்கோரைத் தாண்டி களத்தில் இருந்த 281 நிமிடங்களும் உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் விளையாடினார். இந்தியாவின் நம்பர் 3 இடத்தை அவரால் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையை இந்த இன்னிங்ஸ் மூலம் கொடுத்திருக்கிறார். அதேபோல் ரிஷப் பந்த் இடத்தில் ஆடிய துருவ் ஜுரெல் பேட்டிங், கீப்பிங் இரண்டிலுமே அசத்தினார். பந்த் வந்த பிறகு இவரை பேட்டராக மட்டுமே கூடப் பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தது அவர் செயல்பாடு. ஆனால், பல்வேறு விஷயங்களை அடைவதற்கான வாய்ப்புகள் இருந்தும் இந்தியா தவற விட்டிருக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நடந்திருக்கும் சாதகமான விஷயமெனில் சாய் சுதர்ஷனின் செயல்பாடு நித்திஷ் எதற்காக ஆடினார்? பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் 6 இடத்தில் நித்திஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரை ஒரு முக்கிய டெஸ்ட் பிளேயராக உருவாக்க இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்பட்டது. 2 முழுநேர வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பிளேயிங் லெவனில் இருப்பதால், அவரது வேகப்பந்துவீச்சை நன்கு பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இந்தியா மொத்தம் 290 ஓவர்கள் பந்துவீசியது. அதில் நித்திஷ் வீசியது வெறும் நான்கே ஓவர்கள். வெறும் 1.4 சதவிகித ஓவர்களுக்கே அவர் பயன்படுத்தப்பட்டார். அதுவும் அந்த 4 ஓவர்களையும் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலேயே வீசியிருந்தார். அடுத்த 3 இன்னிங்ஸிலும் ஒரு பந்துகூட வீசவில்லை. அதுவும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 200.4 ஓவர்கள் பந்துவீசியபோது கூட நித்திஷ் குமார் ரெட்டியின் கையில் பந்தைக் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் "வெளிநாட்டு போட்டிகளில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவை என்பதால் நித்திஷ் குமார் ரெட்டியை ஆடவைத்தோம்" என்று தொடர் முடிந்த பிறகு கில்லே கூறியிருந்தார். பந்துவீச்சில் தான் இப்படியே என்றால், பேட்டிங்கிலும் அதே நிலை தான். இந்தத் தொடரில் அவர் ஒரேயொரு இன்னிங்ஸ் தான் பேட்டிங் செய்தார். அஹமதாபாத் டெஸ்ட்டில் ஜடேஜா, வாஷிங்டன் இருவரையும் அவருக்கு முன் களமிறக்கினார்கள். மேலும், இரண்டாவது நாள் ஸ்கோருடனேயே (448/5) இன்னிங்ஸை டிக்ளேரும் செய்தார்கள். நித்திஷ் போன்ற வீரர் அதிக நேரம் களத்தில் இருக்க வழிவகை செய்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நித்திஷ் போன்ற வீரர் அதிக நேரம் களத்தில் இருக்க வழிவகை செய்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. பரிசோதனை முயற்சிகள் எங்கே? இந்தத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கேள்விகளும் குழப்பங்களும் எழுந்துகொண்டேதான் இருந்தன. பல வீரர்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டிய இந்தத் தொடரை, கம்பீரின் குழு அணுகிய விதம் ஆரம்பத்தில் இருந்தே கேள்விக்குறியாகத்தான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் - ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 8வது இடத்தில் இருக்கும் அணி. சர்வதேச அரங்கில் ஒட்டுமொத்தமாகவே வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் ரொம்பவே தடுமாறுகிறார்கள். அப்படியிருக்கும் ஒரு அணிக்கெதிராக சொந்த மண்ணில் விளையாடும்போது எந்த அணியுமே சில பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும். அதுவும் இந்தியா போல் சொந்த மண்ணில் பேராதிக்கம் செலுத்தும் ஒரு அணி, நிச்சயம் இதுபோன்ற ஒரு தொடரை புதிய விஷயங்களைப் பரிசோதித்துப் பார்க்க நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். பட மூலாதாரம், Getty Images முன்பெல்லாம் இந்திய அணியே இதைப் பலமுறை செய்திருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் அறிமுக வாய்ப்பு கொடுத்தார்கள். அதே தொடரில் தான் ஷுப்மன் கில்லை நம்பர் 3 இடத்தில் இறக்கி பரிசோதித்துப் பார்த்தார்கள். ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வும் கொடுத்தார்கள். இத்தனைக்கும் இந்தத் தொடர் நடந்தது இந்தியாவில் கூட இல்லை. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் என்பதால் எந்த யோசனையும் இல்லாமல், அனைத்து முயற்சிகளையும் துணிந்து எடுத்தது இந்தியா. இதற்கு முன் 2018ல் கூட வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் பிரித்வி ஷாவையும் அறிமுகப்படுத்தினார்கள். இது மட்டுமல்ல, மொஹம்மது ஷமி, முகேஷ் குமார் போன்றவர்கள் அறிமுகம் ஆனதும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத்தான். ஜெய்ஸ்வால் அறிமுகமான போட்டியை வென்றதும், அடுத்த போட்டியில் முகேஷுக்கும் அறிமுக வாய்ப்புகள் கொடுத்தார்கள். குல்தீப் யாதவை ஒருநாள் அரங்கில் பரிசோதித்துப் பார்த்ததும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவே. இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்களின் சோதனைகளுக்கான ஒரு களமாகவே இந்திய அணி பயன்படுத்தி வந்திருக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் அறிமுக வாய்ப்பு கொடுத்தார்கள். ராகுல், பும்ராவுக்கு ஓய்வு? அப்படியொரு அணி பல முன்னணி வீரர்கள் இல்லாமல் இன்னும் பலவீனமாக வரும்போது எவ்வித யோசனையும் இல்லாமல் சிலபல வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். முதல்தர கிரிக்கெட்டில் சுமார் 8,000 ரன்கள் விளாசி தேசிய அணிக்காக ஆடும் வாய்ப்புக்காக காத்திருக்கும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு இந்தத் தொடரில் ஒரு அறிமுகம் கொடுத்திருக்கலாம். எப்படியும் கே.எல்.ராகுல் 19ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கப்போகிறார். அப்படியிருக்கும்போது இரண்டாவது டெஸ்ட்டில் அவருக்கு ஓய்வு கொடுத்து அவருக்குப் பதில் ஈஸ்வரனைக் களமிறக்கியிருக்கலாம். வேலைப்பளுவைக் காரணம் காட்டி பும்ராவுக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் ஆடவைத்ததும் தவறாக அமைந்தது. அப்படி ஆடியிருந்தாலும் ராகுலுக்குச் சொன்னதுபோல் ஒரு போட்டியில் ஆடவைத்து இரண்டாவது போட்டியில் ஓய்வு கொடுத்திருக்கலாம். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை விட இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருடைய தேவை அதிகமாக இருந்துவிடப் போகிறதா? இதை பும்ராவின் பக்கமிருந்து மட்டும் பார்க்க வேண்டியதில்லை. பும்ராவுக்கு இந்த டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால், பிரசித் கிருஷ்ணாவுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுத்து பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். இதுவரை அவர் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதே இல்லை. இந்திய ஆடுகளங்களில் அவரால் அதே பௌன்ஸை உருவாகக் முடியுமா என்று பார்த்திருக்கலாம். இதைவிட முக்கியமாக அர்ஷ்தீப்பை களமிறக்கி, ஒரு இடது கை பௌலருக்கான தேடலில் ஒரு பரிசோதனை முயற்சி செய்திருக்கலாம். ஆனால், தேர்வுக்குழு அர்ஷ்தீப்பை ஸ்குவாடில் கூட சேர்க்கவில்லை. பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கௌதம் கம்பீர் புரியாத புதிர்! ஒரு அணி பரிசோதனை முயற்சிகள் செய்துபார்க்க வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால், கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் இந்த அணிக்கு எதிராக இவ்வளவு கேள்விகள் எழுப்பப்படுவதற்குக் காரணம், ஒருநாள், டி20 போட்டிகளில் எக்கச்சக்க பரிசோதனை முயற்சிகளை கம்பீரின் அணி செய்வதுதான். ஒருநாள் சூர்ய குமார் 11வது வீரராகக் களமிறங்குகிறார், இன்னொரு நாள் ஷிவம் தூபே முதல் ஓவர் பந்துவீசுகிறார். இப்போது தைரியாமாக கில்லை ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஆக்கியிருக்கிறார். இப்படி வெள்ளைப் பந்து போட்டிகளில் பல விஷயங்களை முயற்சி செய்பவர், டெஸ்ட் போட்டிகளில் அதற்குத் தயங்குவது தெரிகிறது. முன்பு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வைட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது. அதற்காகத்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முழு பலம் பொருந்திய இந்திய அணியைக் களமிறக்கியிருக்கிறார்கள் என சில விமர்சகர்கள் கூறுகிறார்கள் ஆனால், கம்பீர் அணியின் அடையாளமே தைரியமான கிரிக்கெட் என்று கூறப்படுவதுண்டு. பட மூலாதாரம், Getty Images கம்பீரின் அணி இப்படி பின்வாங்குவதற்கு இன்னொரு உதாரணம், இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ். 121 என்ற இலக்கை சேஸ் செய்ய நான்காவது நாள் முடிவில் குறைவான ஓவர்களே இருந்தது. அன்றே போட்டியை முடிக்கும் நோக்கில் முதல் பந்தில் இருந்தே பேட்டை சுழற்றினார் ஜெய்ஸ்வால். ஆனால், அவர் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனதும், இந்திய அணி முழுக்க டிஃபன்ஸிவ் அணுகுமுறைக்கு மாறியது. ஐந்தாவது நாளே ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அரை மணி நேர நீட்டிப்பைக் கூட வேண்டாம் என்றார்கள். இதுபற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட்டர் ஶ்ரீதரன் ஶ்ரீராம், "ஒரு விக்கெட் போனவுடனேயே ஏன் இந்தியா அணுகுமுறையை மாற்ற வேண்டும்? ஒரு அணுகுமுறையைக் கையில் எடுத்ததும் குறைந்தது 15 ஓவர்களாவது அதற்கு அவகாசம் தர வேண்டும். இதன்மூலம் அணியில் இருக்கும் வீரர்களுக்கு என்ன செய்தியை உணர்த்துகிறீர்கள்? இல்லை பொறுமை காப்பதுதான் அணுகுமுறையெனில் அது ஏன் ஜெய்ஸ்வாலிடம் அறிவுறுத்தப்படாமல் போனது?" என்று கேள்விகள் எழுப்பினார். இவ்வளவு விமர்சனங்கள் வைக்கும், கேள்விகள் கேட்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஆர்வலர்களும் இந்தியாவின் இந்த சிறப்பான வெற்றியை பாராட்டாமலும் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9dz94dej5o
  20. இலங்கை - நியூஸிலாந்து உலகக் கிண்ணப் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது; நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு சந்தேகம்? Published By: Vishnu 14 Oct, 2025 | 10:12 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடும் மழையினால் இடையில் கைவிடப்பட்டது. அப் போட்டியில் 259 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து தயாராகிக்கொண்டிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 9.30 மணிக்கு ஐசிசி போட்டி தீர்ப்பாளர் அறிவித்தார். இதற்கு அமைய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போயுள்ள நிலையில் நியூஸிலாந்தின் வாய்ப்பும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன முதல் தடவையாக இன்று ஆரம்ப வீராங்கனையாக களம் இறங்கி அணித் தலைவி சமரி அத்தப்பத்துவுடன் 139 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார். சமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும் எனினும் மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை சார்பாக உலகக் கிண்ணத்தில் குவித்த அதிவேக அரைச் சதமே அவரது அணியை சிறந்த நிலையில் இட்டது. அவர் 26 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் பெற்ற 55 ஓட்டங்களே இலங்கையை நல்ல நிலையில் இட்டது. முன்னதாக சமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும் விஷ்மி குணரட்ன 42 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 44 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 26 ஓட்டங்களையும் பெற்றனர். இப் போட்டியில் நியூஸிலாந்தின் களத்தடுப்பு அவ்வளவு சிறப்பாக அமையாதது இலங்கைக்கு கைகொடுப்பதாக அமைந்தது. பந்துவீச்சில் சொஃபி டிவைன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றீ இல்லிங் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/227744
  21. 14 Oct, 2025 | 02:06 PM அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை (Data Center) நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. 15 பில்லியன் டொலர் முதலீட்டில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இந்த தரவு மையத்தை நிறுவவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் அமைக்கவிருக்கும் மிகப் பெரிய, ஒரு ஜிகாவோட் (Gigawatt) திறன்கொண்ட முதல் தரவு மையம் இதுவாகும். இந்தியாவில் பெருகிவரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், செயற்கை அறிவு (AI) உள்கட்டமைப்பு அதாவது ஏஐ பயன்பாடுகளை ஆதரிப்பதற்கான அதிநவீன கட்டமைப்புகள் மற்றும் பெரியளவிலான எரிசக்தி ஆதாரங்கள் அதாவது தரவு மையத்தை இயக்குவதற்குத் தேவையான பிரம்மாண்டமான எரிசக்தி ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தத் தரவு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவுப் பயன்பாடு (Artificial Intelligence - AI) அதிகரித்து வரும் சூழலில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் இந்த பாரிய முதலீடு, தொழில்நுட்ப ஆராய்ச்சியில் தனது கவனத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த முதலீடு இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227703
  22. Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 05:05 PM இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகள், 2018-ல் முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம், 1999 இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் (அத்துடன் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளும்) இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்கலாம். இந்தக் கடன் வழங்குதல் எல்லை தாண்டிய வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காக (cross-border trade transactions) அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இலங்கையில் உள்ள வணிகங்களுக்குக் கடன் பெறுதலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடன்கள் இந்திய ரூபாயில் வழங்கப்படுவதால், இலங்கை வணிகங்கள் அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் குறைத்துக்கொள்ள முடியும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவும். https://www.virakesari.lk/article/227631
  23. Live 14th Match (D/N), Visakhapatnam, October 13, 2025, ICC Women's World Cup Bangladesh Women 232/6 South Africa Women (43.6/50 ov, T:233) 196/6 SA Women need 37 runs in 36 balls. Current RR: 4.45 • Required RR: 6.16 • Last 5 ov (RR): 46/1 (9.20)
  24. போர்க்களமாகும் விண்வெளி? satellite war-ஆல் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது? | Ulagin Kathai செயற்கைக்கோள் போர் முறையால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது என்பதை விளக்குகிறது இந்த காணொளி.
  25. சி.பி.ஐ. விசாரணையில் கரூர் சம்பவம்: திமுகவுக்கு பின்னடைவா? படக்குறிப்பு, கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் கரூர் நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஆளும் தி.மு.க. அரசுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், இந்த விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் குழு கண்காணிக்குமென்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இது தவிர, இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துவந்தது. இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடந்தபோது, மிகப் பெரிய நெரிசல் ஏற்பட்டு 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர நிகழ்வு விரைவிலேயே ஒரு அரசியல் புயலாக உருவெடுத்தது. இந்த மக்கள் சந்திப்பில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த தகவல் வெளியாகிவந்த நிலையிலும் த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் இருந்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து தனி விமானத்தின் மூலம் சென்னைக்குச் சென்றதும் பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்ததும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டவுடன் தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் உடனடியாக அங்கே வந்தது எப்படி என த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் கேள்வியெழுப்பினர். அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் வெவ்வேறு பரிமாணங்களை எடுத்தது. இந்த நெரிசல் சம்பவமே ஒரு சதி என்று த.வெ.கவினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதுசெய்யப்பட்டார். வருவாய்த் துறை செயலர் பி. அமுதா தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விவகாரம் நடந்த விதம் குறித்து விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதற்கிடையில் அரசியல் கட்சிகள் சாலைகளில் ரோட் ஷோக்களை நடத்துவதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பதால், இதுபோன்ற கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டுமென தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அவர்கள் தலைமறைவாக இருந்தனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவும் டெல்லி சென்றுவிட்டார். இதன் காரணமாக, இந்த சம்பவத்தை ஒட்டி விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்றைத் தவிர, த.வெ.க. தரப்பின் சார்பில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துகளை வலுவாக முன்வைக்க ஆட்களே இல்லாத நிலை உருவானது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. தரப்பின் கோரிக்கையையும் உள்ளடக்கி வெளியாகியிருக்கும் தீர்ப்பு, அக்கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், CONSTANDINE RAVINDRAN படக்குறிப்பு,"அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம்" - கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன் ஆனால், இந்த தீர்ப்பினால் எந்தவிதத்திலும் தமிழ்நாடு அரசுக்கோ, தி.மு.கவிற்கோ பின்னடைவு இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன். "இந்தத் தீர்ப்பை ஒரு அரசியல் பின்னடைவாக பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் துவக்கத்திலிருந்தே இந்த விவகாரத்தை நாங்கள் அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. அப்படி அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம். கட்சியே முடங்கிப்போயிருக்கும். மாறாக நாங்கள் இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்தே அணுகினோம். 41 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு அந்த அரசியல் கட்சியின் பொறுப்பின்மை காரணமாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்தோம். ஒரு விசாரணை அமைப்பிடமிருந்து இன்னொரு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்ற வேண்டுமென்றால் அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். காலதாமதம், வழக்கு தடம்புரள்வது, அரசியல் ஆதாயத்திற்காக துணை போவதாக வழக்கு கொண்டுசெல்லப்படுவது போன்ற காரணங்கள் இருந்தால்தான் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்படும். ஆனால், இந்த வழக்கில் அப்படிக் காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. மேலும், கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இருக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், எல்லா தமிழ் அதிகாரிகளும் அறம் இல்லாதவர்களா? இதில் எந்த வகையிலும் தி.மு.கவுக்கு பின்னடைவு இல்லை" என்கிறார் கான்ஸ்டைன்டீன். ஆனால், அரசியல் கருத்துருவாக்கத்தில் இந்தத் தீர்ப்பு தி.மு.கவுக்கு ஒரு பின்னடைவாக அமையாதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக இல்லை. இந்த விவகாரத்தின் எந்தத் தருணத்திலும் முதலமைச்சர் துவங்கி, யாருமே இந்த வழக்கை அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. ஒரு தருணத்திலும் தனிப்பட்ட முறையில் விஜய்யையோ, அந்தக் கட்சியையோ விமர்சித்துப் பேசியதில்லை. எங்களைப் பொறுத்தவரை நீதிமன்றங்கள் நீதி வழங்கும் மன்றங்களாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் மன்றங்களாக இருக்கக்கூடாது என்பதைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு என்கிறார் விஜயன். மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவசரப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு என்கிறார். "இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்றோ, விஜய் தரப்பு தவறு செய்துவிட்டது என்றோ சொல்லவரவில்லை. ஆனால், ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு. விசாரணையில் பாரபட்சமிருந்தால், வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். காரணம், சட்டம் - ஒழுங்கு என்பது மாநிலங்களின் வசம் உள்ள ஒரு விவகாரம். ஆகவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது மிக அரிதாகத்தான் நடக்கும். தவிர, சி.பி.ஐயைப் பொறுத்தவரை நிதி மோசடி போன்ற விவகாரங்களில்தான் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதுபோன்ற விவகாரங்களில் அவர்களுக்கு போதிய ஆள் பலமும் கிடையாது, பெரிய வெற்றிகளையும் பெற்றது கிடையாது. நான் தாக்கப்பட்ட வழக்கிலேயே சி.பி.ஐயால் வழக்கை நிரூபிக்க முடியவில்லை. ஒரு விசாரணை அமைப்பு விசாரணையைத் துவங்குவதற்கு முன்பே இப்படி வழக்கை மாற்றுவது அவசரமான செயல்பாடு" என்கிறார் கே.எம். விஜயன். பட மூலாதாரம், Vijayan படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆனால், இந்த விவகாரம் தி.மு.கவுக்கு பின்னடைவாக இல்லாவிட்டாலும் சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். "இந்த வழக்கில் பல கேள்விகள் இருக்கின்றன. யாரும் கேட்காமலேயே அருணா ஜெகதீசன் ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது நீதிமன்றம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சி.பி.ஐ. ஒரு பக்கம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே, அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றொரு பக்கம் விசாரணைகளை நடத்தியது. காரணம், சி.பி.ஐயின் நோக்கமும் ஆணையத்தின் நோக்கமும் வெவ்வேறு. அப்படியிருக்கையில் ஏதற்காக இந்த உத்தரவு எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்கு சிக்கல் ஏற்படலாம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென செந்தில் பாலாஜியை அழைக்கலாம். தவிர, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சதியால்தான் நெரிசல் நடந்தது என ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு உதவும்" என்கிறார் ப்ரியன். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார் தவெக கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை இதில் அரசியல் ரீதியாக இதில் எதையும் சொல்லவிரும்பவில்லை. வழக்கின் தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இதில் எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார். "கரூர் சம்பவத்தில் நிறைய மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. ஆகவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு நீதி விசாரணை வேண்டுமெனக் கேட்டோம். வேறு சிலர் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமெனக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் இரு கோரிக்கைகளையும் இணைத்து ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தால் எங்களுக்கு அரசியல் ரீதியாக சாதகம் ஏற்பட்டிருக்கிறதா என்பதெல்லாம் நாங்கள் பேச விரும்பவில்லை. இதை வைத்து எந்த அரசியல் ஆதாயமும் நாங்கள் தேட விரும்பவில்லை" என்கிறார் அவர். ஆனால், தமிழ்நாடு அரசும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவைத்தானே அமைத்தது, அதனை எதிர்த்தது என்? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண் ராஜ், "அரசியல் கூட்டங்களை நடத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த நெரிசல் விவகாரம் தொடர்பாக வருவாய்த் துறைச் செயலர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்த பிறகு, பணியில் உள்ள ஒரு அதிகாரி அதனைத் தாண்டிச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. அதனால்தான் அந்த விசாரணைக் குழுவை ஏற்க முடியவில்லை" என்கிறார் அருண்ராஜ். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பா.ஜ.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றுள்ளன. ஆனால், நாம் தமிழர் கட்சி இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. "சிபிஐ விசாரணை என்பது ஏற்புடையதல்ல. அது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாடு காவல் துறை விசாரணையில் என்ன குறை இருக்கிறது?" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2emdj8gx9vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.