Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: Digital Desk 1 09 Oct, 2025 | 07:45 AM இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தங்கள் அமைதித் திட்டத்தின், முதற்கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்கமைய, அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கப்படுகிறது. "இது அனைத்துப் பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான சமாதானத்திற்கான முதல் படியாக இஸ்ரேல் தமது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் விலக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், அர்த்தப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம், காஸாவில் போரை நிறுத்துவதற்கும், குறைந்தது சில பணயக் கைதிகளையும், கைதிகளையும் விடுவிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இரு வருட காலப்போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/227268
  2. 09 Oct, 2025 | 11:52 AM யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணையா விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபியை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/227301
  3. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் சம்பவம் குறித்து விஜய் காணொளி ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் பலருடைய குடும்பத்தினரிடம் வீடியோ காலில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார். தங்களிடம் வீடியோ காலில் விஜய் பேசியபோது, இறந்தவர்களின் படங்களைப் பார்த்து கலங்கி கண்ணீர் விட்டதாகவும், ''உங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக நான் உங்களுடன் இருப்பேன். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்'' என்று கூறியதாகவும் பலர், பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். குழந்தையை இழந்தவர்களிடம் பேசும்போது, ''குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வராதீர்கள் என்று நானே சொல்லியிருந்தேனே'' என்றும் விஜய் சொன்னதாக சிலர் கூறினர். கரூரில் வேலுசாமிபுரம் என்ற பகுதியில், கடந்த செப்டெம்பர் 27 ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த அன்றிரவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூருக்கு நேரில் சென்று, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார். அவரைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கரூருக்கு சென்று சிகிச்சை பெற்றவர்களைச் சந்தித்தனர். சம்பவ இடத்திலும் சென்று பார்வையிட்டனர். பட மூலாதாரம், Getty Images கட்சி நிர்வாகிகளின் போனில் வீடியோ கால் பேசிய விஜய் ஆனால், தவெக தலைவர் விஜய் இதுவரை அங்கு செல்லவில்லை. அன்றிரவு அவர் சென்னை திரும்பும்போது, திருச்சி விமான நிலையத்தில் அவரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மறுநாள் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவும், அதன்பின் மூன்று தினங்கள் கழித்து காணொளியும் வெளியிட்ட விஜய், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தமிழ்நாடு முதலமைச்சரையும் விமர்சித்தார். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றில், "கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக கட்சியினர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். கட்சி சார்பில் எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த செயலை நீதிமன்றம் கண்டிக்கிறது" என நீதிமன்றம் கூறியிருந்தது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், "பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து விஜய் விரைவில் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றார். இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் விஜய் அங்கு வராதது குறித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அதேபோன்று சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், கடந்த 2 நாட்களாக விஜய் வீடியோ காலில் பேசி வருவது தெரியவந்துள்ளது. விஜய் வீடியோ காலில் பேசிய சிலருடன் பிபிசி தமிழ் பேசியது. படக்குறிப்பு, ஹேமலதா, மகள்கள் சாய் லெட்சணா, சாய்ஜீவா 'என் மனைவி, குழந்தைகளின் புகைப்படங்களுடன் ஒரு படமெடுக்க வேண்டும்' இந்த சம்பவத்தில் தனது குடும்பத்தில் 3 பேரை இழந்து நிற்கிறார், ஆனந்த்ஜோதி. இவருடைய மனைவி ஹேமலதா, மகள்கள் சாய் லெட்சணா, சாய்ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஆனந்த்ஜோதியிடம் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆனந்த்ஜோதி, ''கட்சி நிர்வாகிகள் வந்து அவர்களுடைய போனில் வீடியோ காலில் விஜய் பேசுவதாகக் கொடுத்தனர். அவர் என்னிடம் 2, 3 நிமிடங்கள் பேசியிருப்பார்.'' என்றார். ''உங்க குடும்பத்தில் ஒருவனாக உங்களின் அண்ணனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள் என விஜய் கூறினார். இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். தவெகவினர் இருப்பார்கள். எந்த உதவி வேண்டுமானாலும் செய்வோம் என்றார். அவரிடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.'' என்றார் ஆனந்த்ஜோதி. ''என்னுடைய மனைவி, மகள்கள் மூவரும் விஜய்யை நேரில் பார்க்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தி என்னை அழைத்துப் போகச்சொன்னார்கள். ஆனால் அவர்களால் பார்க்க முடியவில்லை. அதனால் நீங்கள் நேரில் வரும்போது, என் மனைவி, குழந்தைகளின் புகைப்படங்களுடன் நின்று ஒரு படமெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு போலீஸ் அனுமதி கிடைத்தவுடன் கண்டிப்பாக வருவேன். நிச்சயமாக வீட்டுக்கு வந்து நீங்கள் சொன்னது போல படமெடுக்கலாம் என்றார்.'' என்று ஆனந்த் ஜோதி தெரிவித்தார். தன்னிடம் விஜய் பேசும்போது, அதைப் படமெடுக்கவோ, வீடியோ எடுக்கவோ யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விஜய் பேசிய சிலரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் அனைவரிடமும் கட்சி நிர்வாகியின் போனிலிருந்தே வீடியோ காலில் விஜய் பேசியதும், வீட்டுக்குள் கதவைப் பூட்ட வைத்து, அந்த குடும்பத்தினரை மட்டும் அனுமதித்ததாகவும், எதையும் படமெடுக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறினர். 'நேரில் வரமுடியாததற்கு மன்னிப்பு கேட்ட விஜய்' கரூர் ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேலின் மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகா இருவரும் இந்த சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர். அவரிடமும் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். தன்னிடமும், தன் சொந்த அக்காவும் மனைவியின் தாயுமான மரகதம் ஆகிய இருவரிடமும் 2–3 நிமிடங்கள் விஜய் பேசியதாக அவர் கூறினார். ''இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள். இதுவரை நேரில் வரமுடியாததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். அவரிடம் என் மனைவி, மகள் இருவரின் படங்களையும் காண்பித்தேன். விரைவில் நேரில் சந்திக்கிறேன். நேரடியாக வரும்போது பேசிக்கொள்ளலாம். நல்லதே நடக்கும் என்று சொன்னார்.'' என்றார் சக்திவேல். படக்குறிப்பு, பிரியதர்ஷினி, தரணிகா கரூரில் இந்த சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் பகுதியிலேயே குடியிருக்கும் விமல் என்பவரின் சுமார் 2 வயது குழந்தை துருவிஷ்ணுவும் உயிரிழந்துள்ளது. வீட்டுக்கு அருகில் தெரு முனையில் விஜய்யைப் பார்ப்பதற்காக தனது 2 குழந்தைகளுடன், விமலின் குழந்தையையும் அவருடைய அக்கா லல்லி துாக்கிச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தை விமல், லல்லி இருவரிடமும், அக்டோபர் 7-ஆம் தேதியன்று விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். 5 நிமிடங்களுக்குள்ளாகவே தங்களிடம் விஜய் பேசியதாக பலரும் தெரிவித்த நிலையில், தங்களிடம் அரை மணிநேரம் விஜய் பேசியதாக விமல் தெரிவித்தார். ''குழந்தை இறந்தபோது நடந்ததை எனது அக்கா லல்லி விவரித்தார். அதை முழுமையாகக் கேட்டுக்கொண்ட அவர் மிகவும் கலங்கினார். குழந்தைகளை கூப்பிட்டுக்கொண்டு வராதீர்கள்...கர்ப்பிணிகள் வராதீர்கள் என்று நானே சொல்லியிருந்தேனே என்று சொன்னார். அதன்பின் கவலைப்படாதீர்கள், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கூறி ஆறுதல் கூறினார்.'' என்றார் விமல். படக்குறிப்பு, துருவிஷ்ணு வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த கோகிலா என்ற 14 வயது சிறுமியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர். அவருடைய குடும்பத்தினரிடமும் நேற்று இரவு 7 மணிக்கு மேல், தவெக கட்சி நிர்வாகிகளின் போன் மூலமாக வீடியோ காலில் விஜய் பேசியிருக்கிறார். கோகிலாவின் குடும்பத்தினர் பலரும் ஒரே நேரத்தில் அதில் பேசியதாக கோகிலாவின் தந்தை பெருமாள் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''என்னுடைய மகளின் போட்டோவைக் காண்பித்தோம். அதைப் பார்த்ததும் கலங்கி விட்டார். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது, எனக்கு என்ன பேசுவது எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை என்றார். கரூருக்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். முறையான அனுமதி கிடைத்ததும் நேரில் வந்து சந்திக்கிறேன் என்றார்.'' என்று கூறினார் பெருமாள். கரூர் வடக்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரும் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளார். கிஷோரின் தந்தை கணேஷிடம் அக்டோபர் ஏழாம் தேதியன்றே வீடியோ காலில் விஜய் பேசியிருக்கிறார். ''அன்றைக்கு விஜய்யைப் பார்த்து விட்டு உடனே வந்துவிடுவதாக என்னிடம் சொல்லிவிட்டுத்தான் என் மகன் சென்றான். பின் சடலமாகத்தான் அவனைப் பார்த்தேன். விஜய் என்னிடம் 5 நிமிடங்கள் பேசினார். அதைச் சொன்னதும் ஆறுதல் சொன்னார். சந்திக்க இப்போது நேரம் கைகூடி வரவில்லை. விரைவில் சந்திக்க நேரம் வரும் என்றார்.'' என்று கூறினார் கணேஷ். 'இன்னும் பேசவில்லை' விஜய் இன்றும் பலரிடம் பேசி வருவதும் தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33) இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி நிவேதிதாவிடம் இன்று மதியம் விஜய் பேசியுள்ளார். கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர், அவர்களுடைய போனில் வீடியோ காலில் விஜய்யைப் பேச வைத்துள்ளனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மணிகண்டனின் தம்பி சபரி, ''சற்று முன்புதான் அருண்ராஜ் வந்தார். அவருடைய போனிலேயே எங்கள் அண்ணியிடம் விஜய் கால் மணி நேரம் பேசினார். அன்று நடந்ததை அண்ணி விவரித்தார். எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று பேசினார். முறைப்படி அனுமதி கிடைத்ததும் நேரில் வரும்போது உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.'' என்றார். இதேபோன்று, இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜிதா என்ற பெண்ணின் தாய் மற்றும் தந்தையிடம் நேற்று முன் தினம் ஓரிரு நிமிடங்கள் விஜய் பேசியதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்தார். இதே விபத்தில் உயிரிழந்த ஆகாஷ் என்ற இளைஞரின் தந்தை இறந்துவிட்ட நிலையில், அவருடைய தாயாரிடம் தொடர்பு எண் இல்லை என்பதால், தன் மூலமாகவே ஆகாஷின் தாயாரிடம் எல்லோரும் பேசிவரும் நிலையில், விஜய் தரப்பிலிருந்து தன்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார், ஆகாஷின் நண்பர் சந்தோஷ். இவரைப் போலவே சில குடும்பத்தினரிடம் விஜய் இன்னும் பேசவில்லை என தெரிகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) வரையிலும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்கள் 33 பேருடைய குடும்பங்களுடன் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg9d75qpz0o
  4. நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும் பட மூலாதாரம், X/Ajithkumar Racing கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 8 அக்டோபர் 2025, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 8 அக்டோபர் 2025, 02:44 GMT தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது. நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார். தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நான் விமானத்தில் தான் உறங்குகிறேன். எனக்கு தூக்கம் சார்ந்த பிரச்னை இருக்கிறது. தூங்குவது எனக்கு கடினமாக உள்ளது." என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார். தூக்கம் வருவது எப்படி? இதுகுறித்து ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி பேசுகையில் "இது இன்சோம்னியா (Insomnia) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது, இதனை சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் தூக்கமின்மை என்பது பெரும்பாலும் நமது செயல்களினால் உருவாவதே." என்றார். தூக்கப் பற்றாக்குறை அல்லது தூக்கமின்மை என்பது நீண்ட கால நோக்கில் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்கிறார் குழந்தைசாமி. நம் உடல் சார்ந்த பல விஷயங்களை உயிரியல் கடிகாரம்தான் (circadian rhythm) தீர்மானிக்கிறது என்கிறார் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் புல்மனாலஜியின் இயக்குநரும் மூத்த நுரையீரல் நோய் மருத்துவருமான கௌசிக் முத்துராஜா. இதுகுறித்து விவரித்த அவர், "நம் கண்கள் வழியாக ஒளி மூளைக்குச் செல்கிறது. வெளிச்சமாக இருந்தால் நமது மூளை இது விழித்திருக்க வேண்டிய நேரம் என உணர்ந்து கொள்ளும். அதேவேளையில் இருட்டாக இருந்தால் இது தூங்குவதற்கான நேரம் என உணர்ந்து கொண்டு மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன் தான் தூக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார். "59% இந்தியர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 59% இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையற்ற தூக்கத்தை பெறுகின்றனர். 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 59% இந்தியர்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையில்லாத, நல்ல தூக்கம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. லோகல்சர்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் சுமார் 43,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. தூக்கப் பற்றாக்குறையை போக்க பவர் நேப்பிங் (குறுகிய நேர தூக்கம்), வார இறுதி நாட்களில் காலை தாமதமாக எழுந்திருப்பது, அல்லது மதியம் தூங்குவது போன்றவற்றை பலரும் கையாள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால் பாதிக்கப்பட்ட 38% இந்தியர்கள் விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் அதனை சரி செய்து கொள்ள முடிவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதில் 6 மணி நேரமாவது இடையூறு இல்லாத தூக்கம் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானது. மனிதன் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிட வேண்டும். அது ஒரே நாளில் தான் இருக்க வேண்டும். தவணை முறையில் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் கூடுதலாக தூங்குவது என்பது இதற்கு தீர்வாகாது." என்கிறார் குழந்தைசாமி. தூக்கமின்மைக்கான அறிகுறிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும் அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஹெச்) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால் தூக்கப் பற்றாக்குறை என்று வகைப்படுத்துகிறது. அவை போதிய தூக்கம் கிடைக்காமல் இருப்பது தவறான நேரத்தில் தூங்கச் செல்வது நன்றாக தூங்காதிருப்பது அல்லது உடலுக்குத் தேவையான தூக்கத்தின் அனைத்து கட்டங்களையும் அடையாமல் இருப்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூக்கம் வருவது போதிய நேரம் கிடைத்தாலும் ஆழ்ந்த தூக்கம் வராதிருப்பபது தூக்கமின்மையின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் இடையே வேறுபடுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என என்.ஐ.ஹெச். கூறுகிறது. "தூக்கம் என்பது நான்கு கட்டங்களாக நடக்கும். தூக்கத்தின் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட காலமாக இருப்பது இதய நோய், எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது," என லோகல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது. தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் என்.ஐ.ஹெச்-ன்படி தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை? வயது தூங்கும் முறை வளர்சிதை மாற்றம் இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக திரை(கணினி, செல்போன்) பயன்பாடு மது அருந்துவது தூக்கமின்மையுடன் தொடர்புடைய நோய்களையும் என்.ஐ.ஹெச் பட்டியலிட்டுள்ளது. அவை இதய நோய் சிறுநீரக நோய் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பக்கவாதம் உடல் பருமன் மன அழுத்தம் உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கம் சார்ந்த சிக்கல்களை வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு அதிகமான 43,935 பேர் கலந்து கொண்டனர். அதில் 16.6% பேர் தீவிரமான இரவு நேர தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதில், பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வயது வந்தவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது. உடல் செயல்பாடு குறைவது, மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு வலுவாக இருப்பதும் தூக்கமின்மைக்கு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது. தூக்கமின்மை யாரை, எவ்வாறு பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தூக்கமின்மையால் குழந்தைகளிடம் ஞாபக மறதி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஓட்டுநர்கள் அல்லது பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் குழந்தைசாமி. "தூக்கம் இல்லையென்றால் மூளை சிறிது நேரம் தானாக செயலிழந்துவிடும். அது சில வினாடிகள் தான் என்றாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்கும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கும் தூக்கமின்மை ஒரு முதன்மை காரணியாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார். வெவ்வேறு வயதினரை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது மருத்துவர் கௌசிக் முத்துராஜா பட்டியலிடுகிறார். குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள்? கற்றல் குறைபாடு ஞாபக மறதி கல்வியில் ஈடுபாடு குறைவது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு நடுத்தர வயதினரிடையே ஏற்படும் பாதிப்புகள்? மன அழுத்தம் மனச்சோர்வு ரத்த அழுத்தம் சிந்திக்கும் திறன் குறைவது வாகனம் ஓட்டுவதை சிரமமாக்குவது முதியவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள்? ஞாபக மறதி அதிகரிக்கும் இரவு நேர தடுமாற்றங்கள் ஏற்படும் இதயம் மற்றும் நரம்பியல் நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கும் தூக்கமின்மை பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? புகைப் பழக்கத்தை கைவிடுவது, மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி பருகுவதை தவிர்ப்பது மற்றும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாவது கணினி/செல்போன் திரைகளைப் பார்ப்பதை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை முன்வைக்கிறார் மருத்துவர் குழந்தைசாமி. தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சில வழிகளை முன்வைக்கிறார் கௌசிக் முத்துராஜா. தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும், வார இறுதி நாட்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும் தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும் தூங்க செல்லும் முன்பாக 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் காலை, மதிய வேளைகளில் தூங்கக்கூடாது 20 - 30 நிமிடங்கள் பவர் நாப் (குறுகிய நேர தூக்கம்) எடுக்கலாம். உடற்பயிற்சி தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு 2, 3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி கூடாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2knejj9p18o
  5. இணையத்தில் புயல் கிளப்பும் Perplexity-ன் 'Comet AI முகவர் உலவி' Perplexity நிறுவனத்தின் AI முகவர் உலவி (Agentic browser) ஆன Comet தற்போது இணைய உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இத்தனை நாட்களாக Perplexity Pro பயனர்களுக்கு, அதுவும் அழைப்பின் (invitation) அடிப்படையில் மட்டுமே கிடைத்துவந்த இந்த உலவி (browser), இப்போது அனைத்து இணையப் பயனர்களுக்கும் பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது. நான் கடந்த இரண்டு மாதங்களாக இந்த Comet AI முகவர் உலவி-ஐ எனது முன்மைக் உலவி (default browser) ஆகப் பயன்படுத்தி வருகிறேன். இந்த முற்றிலும் புதிய அனுபவத்தை நான் வெகுவாக ரசித்து வருகிறேன். செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் தானியக்கம் (AI-driven automation), சூழலுக்கேற்ற தேடல் (contextual search), மற்றும் அறிவார்ந்த பணிப்பாய்வுக் கருவிகள் (intelligent workflow tools) ஆகியவற்றின் உதவியுடன், வெவ்வேறு வகையான பயனர்களின் தேவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட பல்துறைத் திறன்களை (versatile capabilities) இந்த Comet AI முகவர் உலவி வழங்குகிறது. ஒவ்வொரு பிரிவினரும் இந்த Comet AI உலவி-ஐப் பயன்படுத்தக்கூடிய எளிமையான ஐந்து வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: 1. Common User: • முகவர் பணிப்பாய்வுகள் (agentic workflows)-ஐப் பயன்படுத்தி, கட்டணம் செலுத்துதல் (bill payments), பொருட்களை வாங்குதல் (shopping), அல்லது பதிவுகள் (bookings) போன்ற அன்றாட ஆன்லைன் வேலைகளை தானியங்குதல் (automating) செய்தல். • AI சக்தியூட்டப்பட்ட சுருக்கங்கள் மூலம், செய்திகள், பொழுதுபோக்கு, சமையல் குறிப்புகள், மற்றும் அன்றாடச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது போன்ற இணையத் தேடல்களை எளிமைப்படுத்துதல். • தனிப்பட்ட திட்ட அட்டவணைகள் (schedules), நினைவூட்டல்கள் (reminders), மற்றும் செய்ய வேண்டிய பட்டியல்களை (to-do lists) உலவிக்குள்ளேயே நிர்வகித்தல். • அறிவார்ந்த வகைப்படுத்தல் (smart categorization) மூலம் புக்மார்க்குகள், கட்டுரைகள் (articles), மற்றும் குறிப்புகள் (notes) ஆகியவற்றைத் தடையின்றி ஒழுங்கமைத்தல். • AI பரிந்துரைகள் வாயிலாக, திரைப்படங்கள், இசை, மற்றும் உள்ளூர் நிகழ்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளைப் பெறுதல். 2. தொழில் வல்லுநர்கள் (Professionals) • ஆராய்ச்சியைத் தானியங்குதல்: அலுவலக திட்டங்களுக்காகத் (projects) தேவையான பொருத்தமான அறிக்கைகள் (reports), கட்டுரைகள், தரவுகள் (data) அல்லது ஆவணங்கள் (documentation) போன்றவற்றைத் திறம்படச் சேகரித்தல். • உருவாக்கும் AI எழுத்து உதவியாளர்களின் (generative AI writing assistants) உதவியுடன் மின்னஞ்சல்கள், திட்ட முன்மொழிவுகள் (proposals), மற்றும் விளக்கவுரைகள் (presentations) ஆகியவற்றைத் தயாரித்தல். • உலவிப் பணிகளை அட்டவணைகள் (calendars), பணி மேலாண்மை மென்பொருட்கள் (task managers), மற்றும் திட்ட மேலாண்மைத் தளங்கள் (project management platforms) போன்ற கருவிகளுடன் ஒருங்கிணைத்தல் (integrating). • பல்வேறு மூலங்களில் இருந்து தொழில்சார் கற்றல் வளங்களையும், தொழில் துறைப் புதுப்பிப்புகளையும் ஒரே முகப்புப் பலகையில் (dashboard) தொகுத்து வைத்தல். • மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிர்வாகப் பணிகளை (admin duties) (எ.கா: தரவு உள்ளீடு, சந்திப்புத் திட்டமிடல்) நெறிப்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறனை (productivity) மேம்படுத்துதல். 3. வணிகர்கள் (Business People) • சந்தைப் புதுப்பிப்புகள் மற்றும் போட்டியாளர்களின் நகர்வுகளுக்காக இணையதளங்களைத் தானாகவே கண்காணிப்பதன் மூலம் போட்டி பகுப்பாய்வை (competitive analysis) நடத்துதல். • அறிவார்ந்த முகவர் பணிப்பாய்வுகள் வழியாக முன்னணிகளை உருவாக்குதல் (lead generation) மற்றும் வாடிக்கையாளர் ஆய்வு (client research) ஆகியவற்றைத் தானியங்குதல். • விற்பனை முயற்சிகளை (sales outreach) நெறிப்படுத்துதல்—தனிப்பயனாக்கப்பட்ட மின்னஞ்சல்கள் அல்லது தொடர்புகளைத் தயாரித்தல் மற்றும் அனுப்புதல். • தொழில் செய்திகள், போக்குகள், மற்றும் அரசாங்க விதிமுறைகளை உண்மையான நேரத்தில் (real-time) கண்காணித்தல். • AI-யால் இயக்கப்படும் அமைப்பு மற்றும் மாதிரி அடிப்படையிலான பரிந்துரைகள் (model-based recommendations) உதவியுடன் நிதிச் சுருக்கங்கள், ரசீதுகள் (invoices), மற்றும் ஒப்பந்தங்கள் (contracts) ஆகியவற்றை நிர்வகித்தல். 4. தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் (IT Industry Workers) • மென்பொருள் உருவாக்குநர்களுக்கான ஆதாரங்கள் (developer resources) அனைத்திலும் குறியீடு தேடல்கள் (code searches), ஆவணத் தேடல் (documentation lookup), மற்றும் பிழை கண்காணிப்பு (bug tracking) ஆகியவற்றைத் தானியங்குதல். • உலவியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முகவர் செயல்பாடுகளை (browser-integrated agentic actions)ப் பயன்படுத்தி சோதனை (testing) மற்றும் வெளியீட்டுப் படிகளை (deployment steps) நெறிப்படுத்துதல். • AI சக்தியூட்டப்பட்ட உரையாடிகள் (chatbots) மற்றும் பணிப்பாய்வுக் கருவிகளை மென்பொருள் உருவாக்கத் தளங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தொலைதூர ஒத்துழைப்பை (remote collaboration) நிர்வகித்தல். • அமைப்பின் இயக்க நேரம் (system uptime), பாதுகாப்பு எச்சரிக்கைகள், மற்றும் செயல்திறன் முகப்புப் பலகைகள் (performance dashboards) ஆகியவற்றை உலவிக்குள்ளேயே கண்காணித்தல். • தனிப்பட்ட அல்லது குழுவின் பொருத்தத்தின் அடிப்படையில் தொழில்நுட்பப் புதுப்பிப்புகள், திருத்தக் குறிப்புகள் (patch notes), மற்றும் பயிற்சிகளை (tutorials) தொகுத்தல். 5. மூத்த குடிமக்கள் (Senior Citizens) • தேடல்கள், கேள்விகள், அல்லது செய்திகள் ஆகியவற்றுக்கு, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முகவர் சுருக்கங்கள் மூலம் விளக்கங்களைப் பெறுதல். • ஆன்லைன் கட்டணங்கள் செலுத்துதல், பயன்பாட்டுச் சேவைகளைப் புதுப்பித்தல், அல்லது உடல்நலன், மருத்துவச் சந்திப்புகளைத் திட்டமிடுதல் ஆகியவற்றைத் தானியங்குதல். • மருந்து நினைவூட்டல்கள், பொருட்கள் வாங்க வேண்டிய பட்டியல்கள் (shopping lists), அல்லது நிகழ்வு அறிவிப்புகள் அமைப்பதன் மூலம் நினைவாற்றல் மற்றும் அமைப்புக்கு உதவுதல். • உடல்நலன் குறிப்புகள், பொழுதுபோக்கு, மற்றும் உள்ளூர் சமூக நிகழ்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளைப் பெறுதல். • ஒருங்கிணைந்த செய்திப் பரிமாற்றம் (integrated messaging) மற்றும் காணொளி அழைப்புக் கருவிகள் (video-calling tools) மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்புகொள்வதை எளிதாக்குதல். ஒவ்வொரு பிரிவினரும் Comet-ன் AI-யால் இயக்கப்படும் முகவர் பணிப்பாய்வுகள் மூலம் பலன் பெறுகிறார்கள். இது இந்த உலவியை பல்வேறு பயனர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு துடிப்பான உற்பத்தித்திறன் தளமாக (dynamic productivity platform) மாற்றுகிறது. https://www.facebook.com/story.php?story_fbid=10162956954806698&id=565071697&post_id=565071697_10162956954806698&rdid=XWSp9Jjwb5Yb1SX7#
  6. Published By: Digital Desk 3 08 Oct, 2025 | 03:59 PM மின்சார பொறியாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை (07) மாலை 4:15 மணி முதல் அனைத்து பணி விதிமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக தீர்மானம் செய்ததைத் தொடர்ந்து, நாட்டில் மின் தடையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித எச்சரித்துள்ளார். இந்த தீர்மானம் தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்துபூர்வமாக அறிவித்த பின்னரே எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். வேலை விதிமுறைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்கத்தின் தீர்மானத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களை கடிதங்கள் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். “அனைத்து பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளும் நிலையான எட்டு மணி நேர வேலை காலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதற்கு மேல், அவசரம் எதுவாக இருந்தாலும், எந்த பராமரிப்பு அல்லது பழுது நீக்கும் பணியும் நடைபெறாது,” என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227234
  7. படக்குறிப்பு, லண்டன் ஃபேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளமும், அதை நெய்தவரும் மேடை ஏற்றப்பட்டனர். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ''அந்த மேடையில் கையில் கைத்தறி இராட்டை மாதிரியுடன் என்னை நடக்க வைத்து, வார்த்தைகளின்றி சைகைகளால் இவர்தான் அவற்றை நெய்தவர் என்று என்னை அறிமுகம் செய்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். கரவொலி எழுப்பினர். அது எனக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற கைத்தறி நெசவாளர்களுக்கான ஓர் அங்கீகாரமாக இருந்தது!'' லண்டனில் செப்டெம்பர் 21-ஆம் தேதி டிவான்ஷைர் சதுக்கத்தில் (Devonshire Square) நடந்த ஃபேஷன் ஷோவில் ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜாவுடன், கைகளில் இரும்பு கைத்தறி இராட்டை மாதிரி வடிவத்துடன் வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரத்துடன் நடந்து வந்த 69 வயது கைத்தறி நெசவாளர் சக்திவேல் பெரியசாமியின் வார்த்தைகள் இவை. சக்திவேல் பெரியசாமி, ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள பெரியகோளபாளையத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர். அவருடைய கைத்தறித் துணியில் தயாரித்த கைப்பைகளுடன் வலம் வந்த மாடல் அழகிகளின் அணிவகுப்பு, அவர் தயாரித்த பவானி ஜமுக்காளத்தை வைத்து அதே மேடையில் நடந்த நடன நிகழ்ச்சி அனைத்தும் காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பலராலும் கொண்டாடப்படுகின்றன. பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு, பாரம்பரியம் மற்றும் தனித்துவத்தை போற்றும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வகையிலும் அந்த மேடையில் அவரை வலம் வரச் செய்ததாகச் சொல்கிறார், இதற்கு ஏற்பாடு செய்த ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா. 'இந்த அங்கீகாரத்தால் பவானி ஜமுக்காளத்திற்கு சிறியதொரு வர்த்தக வாய்ப்பு கிடைத்தாலும் அதுவே பெருமகிழ்ச்சியளிக்கும்' என்கிறார் சக்திவேல். படக்குறிப்பு, பவானி ஜமுக்காளத்தைக் கொண்டு கைப்பைகள், புதிய வடிவிலான ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. டெல்லி செங்கோட்டைக்குள் பவானி ஜமுக்காளத்தை நெய்தவர் இந்த கெளரவத்தைப் பெற்றுள்ள சக்திவேல் பெரியசாமி, பவானி அருகேயுள்ள பெரியகோளப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தனக்கென ஒரே ஒரு கைத்தறியை மட்டுமே வைத்துள்ள சக்திவேல், மற்றொரு தறியை நிறுவினாலும் அதில் பணி செய்வதற்கு ஆள் யாருமில்லை என்று கருதி, ஒரே ஒரு தறியில் பவானி ஜமுக்காளத்தை நெய்து வருகிறார். பிபிசி தமிழிடம் தன்னைப் பற்றி விரிவாக விளக்கினார் சக்திவேல். ''எங்களுடையது நெசவாளர் குடும்பம். வறுமையால் நான் ஆறாம் வகுப்பையே கடக்கவில்லை. ரேஷனில் போடும் செஞ்சோளத்தை வாங்கவே முடியாத நிலையில், 13–14 வயதிலேயே தறியில் உட்கார்ந்துவிட்டேன். சிறு வயதிலேயே பட்டுத்துணியில் பார்டர் போடக் கற்றுக்கொண்டேன். முதல் முதலாக ஜேசீஸ் அமைப்புக்கு, அவர்கள் தந்த சின்னத்தை ஜமுக்காளத்தில் நெய்து கொடுத்தேன். அதன்பின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் படத்தை அப்படியே நெய்தது பலருடைய கவனத்திற்கும் போனது. ஆனால் கூலிக்குப் போகுமிடத்தில் இதைச் செய்ய முடியாது என்று தனியாக ஒரு தறி போட்டு, இதுபோன்று புதுப்புது டிசைன்களைப் போட்டு, ஜமுக்காளங்களைத் தயாரித்தேன்!'' என்கிறார். படக்குறிப்பு, 69 வயதான சக்திவேல் பெரியசாமி, லண்டன் பேஷன் ஷோவில் கௌரவிக்கப்பட்டார். இவருடைய வடிவமைப்புகளைப் பற்றி அறிந்த கோவை குமரகுரு பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் பூங்கொடி, ராமகிருஷ்ணன் ஆகியோர் இவரை நேரில் வந்து பார்த்து, இவருடைய ஜமுக்காளம், வடிவமைப்புகள் குறித்த தரவுகளைச் சேகரித்து டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். அதனால் மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் துறை சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடந்த கைவினைக் கண்காட்சியில் ஒரு மாதம் தங்கி இவற்றைச் செய்து காண்பிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. ''அது கோவிட் பெருந்தொற்றுக்காலம். தொற்றுக்கு பயந்து வடிவமைப்பாளர்கள் வரவில்லை. அதனால் நானே வடிவமைத்து ஜமுக்காளத்தைத் தயாரித்துக் கொடுத்தேன். அதை இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் ஆடை வடிவமைப்புத் துறையினர் பார்த்துப் பாராட்டினர். டெல்லியில் இரு முறை இதைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்பை வழங்கினர்.'' என்று விளக்கினார் கைத்தறி நெசவாளர் சக்திவேல். படக்குறிப்பு, ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா மற்றும் நெசவாளர் சக்திவேல் பெரியசாமி. அதற்குப் பின்பே தன்னை ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா தேடி வந்ததாகக் கூறுகிறார் சக்திவேல் பெரியசாமி. தனக்கு துணிகளில் சாயம் போடத்தெரியாது என்று கூறியதால், அவரே துணிகளை சாயமிட்டு வாங்கி வந்து, அவற்றில் டிசைன்களைக் கொடுத்து நெய்வதற்கு தந்ததாகத் தெரிவித்த சக்திவேல், அப்படித்தான் தனக்கு லண்டன் ஃபேஷன் ஷோவில் பங்கேற்க அழைப்பு வந்ததாக விளக்கினார். தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த வினோ சுப்ரஜா, தற்போது துபாயில் வசிக்கிறார். தன்னை நீடித்த தன்மைக்குரிய ஆடை வடிவமைப்பாளர் (sustainable fashion designer) என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வினோ சுப்ரஜா, ஒரு சிறிய ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். துபாய் மற்றும் சிங்கப்பூரில் தங்கள் நிறுவனத்துக்கான சந்தை இருப்பதாகக் கூறும் வினோ, இதற்கான துணி வகைகளை சென்னிமலை நெசவாளர்களிடமிருந்தே கொள்முதல் செய்கிறார். இதுபற்றி பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய வினோ சுப்ரஜா, ''கடந்த 2024 ஆம் ஆண்டில் சென்னிமலைக்கு வந்திருந்தபோது, பவானி ஜமுக்காளம் செய்யும் கைத்தறி நெசவை நேரில் காண விரும்பி அங்கே சென்றேன். அங்கே தறியில் இருந்தவர்களில் எல்லோருமே 60 வயதுக்கு மேற்பட்டோராக இருந்தனர். பெரும்பாலான தறிகள் உடைந்திருந்தன. அவற்றைப் பயன்படுத்தியே வெகுநாளாகியிருந்தது தெரியவந்தது.'' என்றார். ''கைத்தறி நெசவாளர்களிடம் பேசிய போது, இதில் வருமானம் பெரிதாக இல்லாததால் வீட்டிலுள்ள இளைஞர்கள் வேறு வேலைக்குச் செல்கின்றனர் என்று கூறினர். அதனால் 5 ஆயிரம் கைத்தறிகள் இருந்த ஊரில் இப்போது ஐந்தில் ஒரு பங்குதான் தறிகள் இருந்ததை அறியமுடிந்தது. பவானி ஜமுக்காளத்தில் பந்தி விரித்துச் சாப்பிட்டு, வீட்டு விசேஷங்களில் கூட்டமாக விளையாடி, படுத்துத் துாங்கிய அனுபவம் எனக்கு இருப்பதால் அதன் நிலையை அறிந்து எனக்குப் பெரும் வருத்தமாக இருந்தது.'' என்றார் வினோ. பவானி ஜமுக்காளத்திலிருந்து விதவிதமாய் கைப்பை தயாரிப்பு! கடந்த 2021–2022 ஆம் ஆண்டிலிருந்து லண்டன் ஃபேஷன் ஷோவுக்காக, ஆக்ஸ்போர்டு பேஷன் ஸ்டூடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ள வினோ சுப்ரஜா, ''இப்போது பெரும்பாலும் மேஜை, நாற்காலிகளையே பயன்படுத்துவதால் தரையில் யாரும் அதிகம் அமர்வதில்லை. இதனால், பவானி ஜமுக்காளத்தின் தேவை குறைந்துவிட்டது. இதனால், ஜமுக்காளத்தின் வண்ணம், கோடு வடிவமைப்பு, துணியின் தன்மை ஆகியவற்றின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அதில் கைப்பைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.'' என்கிறார் வினோ சுப்ரஜா. அதை அரங்கேற்றம் செய்யும் மேடையாகவே லண்டன் ஃபேஷன் ஷோ இருந்ததாகச் சொல்கிறார் அவர். ''கடந்த ஜனவரியில் லண்டன் ஆக்ஸ்போர்டு ஃபேஷன் ஸ்டூடியோவிடமிருந்து அழைப்பு வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டில் தெருக்கூத்தை கருவாகக் கொண்டு ஷோவை வடிவமைத்ததுபோல இந்த முறையும் புதுமையான கருவை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது பவானி ஜமுக்காளத்தைப் பற்றியும் சக்திவேல் பற்றியும் அவர்களிடம் கூறினேன்" என்கிறார் வினோ. லண்டன் ஃபேஷன் ஷோ நிகழ்வைப் பற்றி விளக்கிய அவர், ''சக்திவேல் அய்யாவை மேடையேற்றும் போது, இந்தியாவை ஏழைத்தொழிலாளர்கள் உள்ள நாடாக யாரும் பார்த்துவிடக்கூடாது, அவரை ஒரு கலைஞராகவே அங்கீகரிக்க வேண்டுமென்பதிலும் நாங்கள் கவனமாக இருந்தோம். அதேநேரத்தில் ஃபேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளத்தை அறிமுகம் செய்ய நினைத்து, மாடல் பெண்களை அந்த கைப்பைகளை கொண்டு வரச் செய்தேன். சில ஆடைகளையும் ஜமுக்காள டிசைனில் வடிவமைத்தேன்.'' என்கிறார். பவானி ஜமுக்காளத்துடன் ஒன்றரை நிமிட நடனம்! சென்னையைச் சேர்ந்த நாட்டிய நாடகக் கலைஞர் வான்மதி ஜெகன், கையில் பவானி ஜமுக்காளத்தை வைத்தபடி ஆடும் ஒன்றரை நிமிட நடனமும் நிகழ்த்தப்பட்டது. இதற்கான நடன அசைவுகளை தெருக்கூத்து பழனி முருகன் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிகழ்வில் கையில் பவானி ஜமுக்காளத்துடன் நடனமாடியது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நாட்டிய நாடகக் கலைஞர் வான்மதி ஜெகன், ''பவானி ஜமுக்காளத்தை அதில் அறிமுகம் செய்யவேண்டுமென்று திட்டமிட்டே, அதற்குரிய இசை தயார் செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப நடன அசைவுகளை வடிவமைப்பது சவாலாயிருந்தது. முற்றிலும் நம்மூர் நாட்டுப்புற நடனமாகவும் இருக்கக் கூடாது. அதேநேரத்தில் அதில் சில அசைவுகள் இடம் பெற வேண்டுமென்று கருதி, தேவராட்டம், தப்பாட்டம் என எல்லாவற்றிலும் கலந்து சில நடன அசைவுகளை பழனி முருகன் அண்ணா சொல்லிக்கொடுத்தார். நான் பவானி சென்று கைத்தறியின் அசைவுகளை பார்த்துவந்து, அதன் அசைவிலிருந்து சிலவற்றை பயன்படுத்திக் கொண்டேன்" என்றார் வான்மதி. இவரது நடனத்துக்குப் பிறகு இறுதியில் நெசவாளர் சக்திவேல் கையில் ராட்டை மாதிரி வடிவத்துடன் வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து மேடையில் வலம் வந்தார். வழக்கமாக ஃபேஷன் ஷோக்களில் இசைக்கப்படும் மேற்கத்திய ராப் இசைக்குப் பதிலாக இவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இசைக்கோர்வை அவர் நடந்து வரும் போது இசைக்கப்பட்டது. அவரைப் பற்றி வேறு எந்த குறிப்புகளும் திரையில் இடம் பெறவில்லை. ஒலிபெருக்கியிலும் விளக்கம் தரப்படவில்லை. ஆனால் சக்திவேலுடன் வந்த ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா, அந்த ஜமுக்காளத்தை நெய்தவர் இவர்தான் என்பதைக் குறிக்கும் விதமாக தனது சைகைகளால் விளக்கியுள்ளார். ''வழக்கமாக ஃபேஷன் ஷோவில் பயன்படுத்தும் இசை வடிவம் தவிர்த்து, தாரை தப்பட்டை இசையைக் கேட்டதும் எல்லோரும் முதலில் 'வாவ்' என்றனர். அங்கே வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களையே அதிகம் பயன்படுத்துவர். ஆனால் இந்த ஷோவில் பவானி ஜமுக்காளத்தில் வருவது போன்று பல வண்ணங்களில் ஆடை, கைப்பைகள் இடம் பெற்றதைப் பார்த்து மீண்டும் 'வாவ்' என்றனர். நாங்கள் வெளியேறியபின் மேலும் அற்புதம் நிகழ்ந்தது.'' என்றார் வினோ சுப்ரஜா. அதைப் பற்றி விளக்கிய அவர், ''நிகழ்வு முடிந்தபின் என்னைச் சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நீங்களிருவரும் மேடையிலிருந்து வந்ததும் கைதட்டுவார்கள், விசில் அடிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் ஒரு நிமிடம் அரங்கம் அமைதியானது, எல்லோரும் எழுந்தனர். எல்லோர் முகத்திலும் புன்னகை, சிலர் கண்களில் கண்ணீர். அதன்பின் பலத்த கரவொலி. அரங்கமே நெகிழ்ந்த தருணம் அது என்றனர். அந்த வகையில் கைத்தறி நெசவாளருக்கு அங்கீகாரம் கிடைத்ததில் திருப்தி.'' என்றார். அந்த நிகழ்வை நினைவு கூர்ந்த கைத்தறி நெசவாளர் சக்திவேல், இதனால் எங்களுடைய பவானி ஜமுக்காளத்துக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கும் ஒரு வர்த்தக வாய்ப்பு கிடைத்தால் பெருமகிழ்ச்சி என்றார். பவானி சுற்றுவட்டாரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கைத்தறிகள் இப்போது ஆயிரத்துக்கும் குறைவாகி விட்டதாக வருந்திய அவர், இதைக் காப்பாற்றுவதற்கு ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கம், நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கிறார். பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு பவானி ஜமுக்காளத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்க தீவிர முயற்சி செய்தவர்களில் ஒருவர் தவமணி. சிந்தாமணி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர், பவானி ஜமுக்காளத்தின் பெயர்க்காரணத்தையும், சிறப்பையும் பிபிசி தமிழிடம் விவரித்தார். ''பவானி ஜமுக்காளம் என்பது, நுாறாண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த பாரம்பரியத் தயாரிப்பு ஆகும். கோரைப்பாய் உற்பத்தியிலிருந்து இது தோன்றியது. இதற்குப் பயன்படும் கைத்தறியை குழித்தறி என்பார்கள். இதிலுள்ள மூங்கில் பண்ணை, படி, பலகைக்குண்டு எல்லாமே மரத்தால் செய்யப்பட்டவை. இதில் வலது இடதுமாக நாடா மூலமாக நுாலைக் கோர்த்து, இரு புறமும் இருவர் இருந்து நெய்வர். தனியாகவும் சிலர் நெய்வார்கள்.'' என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், ''விசைத்தறி போலன்றி, இந்த நுாலைத் தள்ளும்போது 'வி' வடிவில் சென்று அந்த நுால் 'அடாப்ட்' ஆகும். இதுபோல கெட்டியான நுால் கோர்வையை வேறு எந்த துணியிலும் பார்க்க முடியாது. இதில் நெசவாளரின் கை, கால், கண், உடல் என எல்லா பாகங்களும் இணைந்து உழைக்க வேண்டியிருக்கும்.'' என்றார். ''லண்டன் ஃபேஷன் ஷோவில் சக்திவேல் அய்யாவை கெளரவித்ததிலும் பவானி ஜமுக்காளத்தை அறிமுகம் செய்ததிலும் பெருமகிழ்ச்சி. அதனால் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் வர்த்தக பலன்களை இனிமேல்தான் அறிய முடியும்.'' என்றும் தவமணி தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wdzg49727o
  8. நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்! Published By: Digital Desk 3 08 Oct, 2025 | 01:40 PM டெல்லி, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பும் (சீமான், விஜயலட்சுமி) பேசி முடிவுக்கு வர சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. ஆனால், சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டும் என்று விஜயலட்சுமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீமானை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது. இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமுகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறு பேசியதற்காக சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான். எனது சொல், செயல்களால் விஜயலட்சுமிக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறேன். விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாகவும் சீமான் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் நடிகை தரப்பிலும் மன்னிப்பு கோரப்பட்டது. சீமான் மற்றும் விஜயலட்சுமியின் பரஸ்பர மன்னிப்பை ஏற்று வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் எந்த ஒரு வழக்கையும் இதற்கு மேலாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை எனவும் சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227210
  9. 08 Oct, 2025 | 05:53 PM நமது நாட்டில் மனநலம் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை நிறுவுவதில் கடுமையான சிக்கல் மற்றும் சிரமம் காணப்படுகிறது. எனவே அவசர சிகிச்சை நடைமுறைகள் போலவே மனநலம் சார்ந்த சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார். உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி, சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் தஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்தன ஆகியோரின் தலைமையில் இலங்கை மன்றத்தின் (Srilanka Foundation) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நினைவுகூரப்படும் இந்த நாள், "அனைவருக்கும் மனநல சேவைகள்" என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்டது. மனநலத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இந்த சேவை இந்த நாட்டில் நிரந்தரமாக நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில், சுகாதாரத்துறையும் இந்த நாட்டு மக்களும் இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மற்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது போலவே மனநலம் சார்ந்த சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார். மனநல சேவைகள் பொதுமக்களைச் சென்றடைவது மிகவும் முக்கியம் என்றும், மனநல சேவைகளுக்கு இன்னும் முறையான திட்டங்கள் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மனநலம் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் துணை அமைச்சர் கூறினார். நாட்டின் மனநல சேவைகளை உலகிலேயே சிறந்ததாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 10% பேர் பல்வேறு மனநல நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 2% பேர் கடுமையான மனநல நிலைமைகளைக் கொண்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் சுமார் 37,000 நோயாளிகள் மனநல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். என்று கூறிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தற்கொலைக்கு மனநல நிலைமைகள் முக்கிய காரணம் என்று கூறினார். பலர் மனநலத்தில் ஆர்வம் காட்டுவதில்லை என்று சுட்டிக்காட்டிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதாரத் துறையில் உள்ள அனைவரும் ஒன்றாக இந்த சவாலை சமாளிக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். "அவசர சூழ்நிலையில் மனநலத்தை அணுகுதல்" என்ற தலைப்பில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிரு சந்திரமட சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார், அதே நேரத்தில் சுகாதார அமைச்சின் நிபுணரான டாக்டர் பனோவில் விஜேசேகர " அவசர சூழ்நிலையில் கூட்டுப் பொறுப்பு" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். மனநலத்திற்காக ஒரு நாளை அர்ப்பணிப்பதன் முக்கிய நோக்கம், உலகளவில் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மனநலத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதும் ஆகும். மனநல நிபுணர்கள் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும், உலகளவில் மனநலத்தை மேம்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை ஆராயவும் இந்த நாள் ஒரு முக்கியமான வாய்ப்பாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில், எட்டு பேரில் ஒருவர் மனநலப் பிரச்சினையுடன் வாழ்கிறார். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மற்றவர்களுடன் பழகும் விதத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் கூட பாதிக்கக்கூடும் என்றும், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதைக் காணலாம் என்றும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. மேலதிக செயலாளர் நிபுணர் டாக்டர் குமார விக்ரமசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, WHO நாட்டு பிரதிநிதி, சுகாதார அமைச்சக அதிகாரிகள், நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/227254
  10. திருமலை 5 மாணவர்கள் கொலைக்குநீதி கோரிய தந்தை ஒருவர் உயிரிழப்பு 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். பிறந்த தினத்தில் சோகம்.. ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும். மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/trinco-5-students-killed-father-also-died-1758711615
  11. பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. Trevor T McBride படக்குறிப்பு, எரிபொருள் நிரப்பிய பிறகு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம். இந்த புகைப்படம் அமெரிக்க விமானப்படை ஆவண காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. கட்டுரை தகவல் ரெஸா செஃபாரி பிபிசி பெர்ஷியன் சேவை 28 நிமிடங்களுக்கு முன்னர் அன்று ஏப்ரல் 13, 2024- இரவு நேரம். பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது. அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியிருந்தது. இதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். டமாஸ்கஸ் தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரல் 13-ஆம் தேதி இஸ்ரேல் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக இரான் தெரிவித்தது. இரான் இந்த நடவடிக்கைக்கு "உண்மையான வாக்குறுதி" என்று பெயரிட்டதுடன், 'இஸ்ரேல் மீதான அதன் தாக்குதல் மக்களைக் கொல்லும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக பதிலடி கொடுக்கும் தனது திறனை நிரூபிப்பதற்கான சான்று' என்று எச்சரித்தது. சில இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலில் உள்ள தங்கள் இலக்குகளைத் தாக்குவதில் வெற்றி பெற்றன, ஆனால் ராணுவக் கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக பார்க்கப்படவில்லை. இரானின் தாக்குதல்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மட்டுமே தடுக்கவில்லை. அன்றைய இரவில் அமெரிக்க விமானிகளும் இஸ்ரேலிய விமானிகளுடன் இணைந்து ஒரு முக்கிய பங்காற்றினர். அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகத்தின் (US Central command) கூற்றுப்படி, அமெரிக்கப் படைகள் அன்றிரவு 80 க்கும் மேற்பட்ட இரானிய டிரோன்களையும் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்தன. அமெரிக்க விமானப்படை அதன் யூடியூப் சேனலில் 'டேஞ்சரஸ் கேம்' (ஆபத்தான விளையாட்டு) என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இது எஃப் -15 இ ஸ்ட்ரைக் ஈகிள் விமானிகளின் கண்ணோட்டத்தில் அந்த இரவின் கதையைச் சொல்கிறது. அந்த ஆவணப்படம் அமெரிக்க ராணுவத்தின் கண்ணோட்டத்தில் அந்த இரவில் நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கிறது. 36 நிமிட படம் சில பிரசார அம்சங்களையும் கொண்டுள்ளது. எனினும், இந்த ஆவணப்படம் இரான் தாக்குதலின் ராணுவ மற்றும் உளவியல் விளைவுகள் மற்றும் அன்றிரவு அமெரிக்கப் படைகள் எதிர்கொண்ட அழுத்தங்களையும் சிரமங்களையும் விவரிக்கிறது. ஜோர்டானில் 'டவர் 22' மீது தாக்குதல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டவர் 22 தளத்தில் இரானுடன் தொடர்புடைய குழுக்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 13, 2024 அன்று இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் காஸாவில் ஒரு போரைத் தூண்டியதுடன், மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும் பதற்றங்களை அதிகரித்தது. ஹெஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது. யேமனின் ஹூத்திகளும் ஏவுகணைகளை வீசினர். பின்னர், ஏப்ரல் 1, 2024 அன்று, டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரி முகமது ரேசா ஜாஹிதி உட்பட பலர் கொல்லப்பட்டனர். இரான் இதை அதன் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கண்டித்ததுடன், உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. 2024 ஜனவரியில், ஜோர்டானில் உள்ள 'டவர் 22' மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். "டவர் 22 மீதான தாக்குதலுக்குப் பிறகு, எங்களுக்கு இது தனிப்பட்ட (விவகாரம்) ஆகிவிட்டது" என்று 494 வது ஃபைட்டர் ஸ்குவாட்ரனின் மேஜர் பெஞ்சமின் 'டேஞ்சரஸ் கேம்' ஆவணப்படத்தில் கூறுகிறார். "அமெரிக்க வீரர்களின் மரணம் எங்களுக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது." என்கிறார். "எங்கள் தோழர்களைப் பாதுகாக்க நாங்கள் அனைவரும் விரைவில் அழைக்கப்படுவோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்" என்றும் அவர் கூறினார். இரானிய டிரோன்கள் ஒரு 'பிரச்னையாக' மாறியபோது பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. William Rio Rosado படக்குறிப்பு, அமெரிக்காவின் F-15 E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்களால் வான் இலக்குகளையும் தரை இலக்குகளையும் தாக்க முடியும் இரானின் தாக்குதலில் ஷாஹித்-136 டிரோன் முக்கிய பங்கு வகித்தது. குறைந்த செலவில் தயாரித்து விடக் கூடிய அந்த டிரோன்கள் குறைவான உயரத்தில் பறக்கக் கூடியவை, மணிக்கு சுமார் 180 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியவை. அந்த ஆவணப்படத்தில், ஆயுத நிபுணர் என்று விவரிக்கப்படும் முன்னாள் கடற்படை வீரர் அலெக்ஸ் ஹோலிங்ஸ், "ஷாஹித் டிரோன்களின் மிகப்பெரிய சாதகமான அம்சம் என்னவென்றால், அவை மலிவானவை மற்றும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும்" என்று கூறுகிறார். இந்த டிரோன்களால் எதிரி பாதுகாப்பு அமைப்புகளின் கண்ணில் படாமல் செயல்பட முடியும் என்று கூறிய அலெக்ஸ் அவை எதிரிக்கு ஒரு 'பிரச்னையாக' மாறக்கூடும் என்றும் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த டிரோன்கள் எதிரி ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மின்னல் வேகத்தில் குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் உள்ள நேர்காணல்களின்படி, இதுபோன்ற நேரங்களில் ஆயுத கட்டமைப்பு அதிகாரியின் பங்கு முக்கியமானது. விமானங்களில் ஒன்றில் இருந்த கேப்டன் செனிக், இரானிய டிரோன்களை இனம் காண தரையில் இருந்த அமைப்பை திறம்பட பயன்படுத்தினார். இது ஓர் அசாதாரண செயல்முறை என்றாலும், இந்த சூழ்நிலையில் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் விமானிகள் மன அழுத்தத்தைக் குறைக்க தங்கள் வானொலி உரையாடல்களை மட்டுப்படுத்தினர். அந்த இரவு, ஒரே ஒரு வாக்கியம் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது: "அங்கு டிரோன் உள்ளது." பட மூலாதாரம், Reuters "டேஞ்சரஸ் கேம்" ஆவணப்படம் ஒரு சாதாரண இரவின் காட்சிகளுடன் தொடங்குகிறது. நேர்காணல் செய்யப்பட்டவர்களின் கூற்றுப்படி, ஏப்ரல் 13, 2024 இரவு மற்ற இரவுகளைப் போலவே இருந்தது. காலை பணி முடிந்து இரவு பணிக்கானவர்கள் தங்கள் பொறுப்புகளை ஏற்றனர். போர் விமானங்கள் தயார் நிலையில் இருந்தன. அது ஓர் அமைதியான சனிக்கிழமை இரவு. விமானிகள் இரவு உணவை முடித்துவிட்டு வராண்டாவில் அமர்ந்திருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய மோதலின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. 'மீண்டும் அப்படி செய்யாதே' - விமான தளபதி எச்சரிக்கை முதலில், "லைன் ஒன்று" என்று ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது, பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானிகளின் பெயர்கள் "லைன் இரண்டில்" அழைக்கப்பட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில், அமைதியான விமான தளம் அவசர நிலைக்கு சென்றது. ஒரு எஃப் -15 ( F-15) விமானியான மேஜர் பெஞ்சமின், அவரது முந்தைய மதிப்பீடுகள் தவறானவை என்று கூறுகிறார்: "நாங்கள் கற்பனை செய்த அச்சுறுத்தல் உண்மையான தாக்குதலில் 10 முதல் 20 சதவீதம் மட்டுமே." விரைவில் எஃப் -15 களின் முதல் தொகுதி இருளில் பறக்கத் தொடங்கியது. ரேடார் திரைகளில் விரைவில் இரானிய டிரோன்கள் அடுத்தடுத்து தென்பட்டன. இதற்குப் பிறகு, ஏவுகணைகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 'ஃபோகஸ் த்ரீ' (Focus Three) அறிவிக்கப்பட்டது, அதாவது ஏவுகணை ஏவும் ரேடார்கள் செயல்பாட்டில் இருந்தன. "நான் ஏவுகணையை இலக்கு நோக்கி செலுத்தினேன்" என்று மேஜர் பெஞ்சமின் கூறுகிறார். "அது வானத்தை ஒளிரச் செய்தது. எனது இரவு நேர கேமரா திடீரென்று ஒளிர்ந்தது." "அது ஓர் ஆச்சரியமான காட்சி, ஏனென்றால் நான் ஓர் உண்மையான சூழ்நிலையில் ஒரு AMRAAM (வான் இலக்குகளை தாக்கக் கூடியது) ஏவுகணையை பயன்படுத்தியது இதுவே முதல் முறை" என்கிறார் அவர். மற்றொரு விமானி , "இந்த பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. ஒரு கட்டத்தில், நான் தரையில் இருந்து 1,000 அடி உயரத்தில் மட்டுமே பறந்தேன். பறப்பதற்கான பாதுகாப்பான உயரம் 4,000 அடியாக இருந்தது" என்று ஆவணப்படத்தில் கூறுகிறார். ஏவுகணைகள் தீர்ந்த போது, தங்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் லேசர் வழிகாட்டப்பட்ட ஏவுகணையால் இரானிய ஷாஹித் டிரோன்களை குறிவைக்க முயன்றார் என்று இந்த விமானிகள் கூறுகின்றனர். "நாங்கள் இரானிய டிரோன் மீது ஒரு வெடிகுண்டை வீசி லேசர் மூலம் வழிநடத்த முயற்சித்தோம். முதலில், அது வேலை செய்தது போல் தோன்றியது; ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அடுத்த கணம், நாங்கள் மீண்டும் டிரோனைப் பார்த்தோம்." என்கின்றனர். "விமான தளபதி உடனடியாக எங்களுக்கு வானொலி மூலம் , 'மீண்டும் அதைச் செய்யாதீர்கள்' என்று எச்சரித்தார். 'என்னால் 13 வரை மட்டுமே எண்ண முடிந்தது' விமானிகள் தங்கள் கடைசி ஏவுகணைகளை ஏவியபோது, விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தளத்திற்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது, மோதலின் மற்றொரு அம்சத்தை விமானிகள் கண்டனர் - இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வானத்தில் பார்த்தனர். கிழக்கு திசையில், "வானம் ஆரஞ்சு நிற ஒளியில் பிரகாசித்தது. நான் உடனடியாக ஏவுகணைகளை எண்ணத் தொடங்கினேன். ஏவுகணைகள் மிக வேகமாக வந்து கொண்டிருந்ததால், 13 ஏவுகணைகளுக்கு பிறகு நான் எண்ணுவதை நிறுத்த வேண்டியிருந்தது." என்று ஒரு விமானி அந்த ஆவணப்படத்தில் விவரிக்கிறார். இந்த ஏவுகணைகள் வானிலேயே மிக உயரத்தில் அழிக்கப்பட்டன. அந்த காட்சிகள் விமானிகளுக்கு பயங்கரமானதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தன. வானத்தில் அழிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்கள் தரையில் விழுந்தன. 'ஃபார்முலா ஒன் பந்தயம் போன்ற சூழல்' பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் வீழ்த்தப்பட்ட இரானிய ஏவுகணையின் ஒரு பகுதி அந்த நேரத்தில், விமானிகளின் தளத்தில் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டது, அதாவது அனைவரும் பாதுகாப்பான இடத்தை அடைய வேண்டும் என்று அர்த்தம். ஆனால், 'வூடூ' என்ற விமான தளபதி வானொலி மூலம் "சிவப்பு எச்சரிக்கை என்பது விமானங்களில் ஏவுகணைகளை நிறுவி தயார் நிலையில் வைத்து, பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவது" என்று அறிவித்தார். ஆவணப்படத்தில், பைலட் இந்த சூழ்நிலையை 'ஃபார்முலா ஒன் பந்தயம்' போன்று இருந்தது என்று விவரிக்கிறார். அந்த நேரத்தில், தொழில்நுட்பக் குழு விமானத்திற்கு எரிபொருளை நிரப்பியது, ஏவுகணைகளை பொருத்தியது, அசாதாரண சூழலுக்கு நடுவே இயந்திரங்களை அக்குழு ஆய்வு செய்தது. "அந்த இரவு தான் நான் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை முதல் முறையாக பார்த்தேன்" என்று குழு அதிகாரி ஒருவர் கூறினார். "இந்த முழு செயல்முறையும் வெறும் 32 நிமிடங்களில் முடிக்கப்பட்டது, வழக்கமாக விமானத்திற்கு எரிபொருள் நிரப்பவே இவ்வளவு நேரம் ஆகும்" என்று அவர் கூறினார். இந்த ஆவணப்படம் விமானிகள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தளத்திற்குத் திரும்புவதை காட்டுகிறது. ஒரு விமானி "கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்த பதிலும் இல்லை, அவர்களை வழிநடத்த யாரும் இல்லை" என்று கூறினார். பின்னர் அவரும் அவரது சக விமானிகளும் அனுமதி பெறாமல் தங்கள் சொந்த பொறுப்பில் ஓடுபாதையில் தரையிறங்கினர். அந்த நேரத்தில், கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு குரல் , "தாக்குதலுக்கு இன்னும் ஒரு நிமிடம் உள்ளது. நாம் பேச முடியாது." என்று கூறியது. இதற்குப் பிறகு திடீரென்று அமைதி நிலவியது. அந்த விமானி, "இது நான் தயாராக இல்லாத ஒரு சூழல். நான் தாக்குதல் நடத்த தயாராக இருந்தேன், ஆனால் ஏற்கனவே தாக்குதலுக்குள்ளான ஒரு தளத்திற்கு, விமானத்தில் குறைவான எரிபொருளுடன் வர தயாராக இல்லை" என்றார். பின்னர் ஆபத்து தவிர்க்கப்பட்டு, விமானங்கள் தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கின. விமானிகள் வெளியே வந்தபோது, அவர்களின் மொபைல் போன்கள் குடும்பத்தினர் அனுப்பிய செய்திகளால் நிரப்பப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் "இரான் இஸ்ரேல் மீது மிகப்பெரிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது" என்று வெளிவந்தன. 'டேஞ்சரஸ் கேம்' -ன் இறுதியில், ஒரு விமானி , "எங்களிடம் இருந்த எட்டு ஏவுகணைகளில், ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதை ஏவ முடியவில்லை, அது எங்கள் தவறு அல்ல" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c24r0q77ldno
  12. 08 Oct, 2025 | 10:30 AM வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது. அதன் போதே ஆளுநர், தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/227182
  13. பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் எழுதிய படிக்க முடியாத மருந்துச் சீட்டு வைரலானது. கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், மருத்துவர் ஒருவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன. மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன. ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு வெளியிட்டது. அதில், "தெளிவான மருந்துச்சீட்டு என்பது ஒரு அடிப்படை உரிமை" என்றும் அது உயிரோடு இருப்பதற்கும், இறப்பதற்கும் காரணமாக அமையலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவு, கையெழுத்துடன் தொடர்பில்லாத ஒரு வழக்கில் வந்தது. அந்த வழக்கில், ஒருவர் தன்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பறித்ததாகவும், போலி நேர்காணல் நடத்தியதாகவும், பாலியல் சுரண்டல் செய்ததாகவும் அவருக்கு எதிராக ஒரு பெண் குற்றம் சாட்டினார். நீதிபதி ஜஸ்குர்பிரீத் சிங் பூரி, அந்த நபரின் ஜாமீன் மனுவை விசாரித்தார். குற்றம்சாட்டப்பட்டவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, தங்களுக்கு ஒருமித்த உறவு இருந்ததாகவும், பணத் தகராறு காரணமாக இந்த வழக்குத் தொடரப்பட்டது என்றும் கூறினார். ஆனால், அந்தப் பெண்ணைப் பரிசோதித்த அரசு மருத்துவரின் மருத்துவ அறிக்கையைப் பார்த்தபோது, நீதிபதி பூரியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. "ஒரு எழுத்து கூட தெளிவாக இல்லை. இது நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியது," என்று அவர் உத்தரவில் குறிப்பிட்டார். பிபிசி, தீர்ப்பு நகலையும், அந்த அறிக்கையையும், மருத்துவரின் படிக்க முடியாத இரண்டு பக்க மருந்துச்சீட்டையும் பார்த்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருந்தாளுநர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய மருத்துவர்களின் மோசமான கையெழுத்து பற்றிய நகைச்சுவைகள் உலகம் முழுவதும் காணப்படுகிறது. 'மருந்தாளுநர்கள் தவிர வேறு யாராலும் படிக்க முடியவில்லை' "இன்றைய காலத்தில் கணினிகளும் தொழில்நுட்பமும் எளிதாக அணுகக்கூடிய வகையில் இருக்கும்போது, அரசு மருத்துவர்கள் இன்னும் கையால் மருந்துச்சீட்டு எழுதுவது அதிர்ச்சியளிக்கிறது. இவற்றை மருந்தாளுநர்கள் தவிர வேறு யாராலும் படிக்க முடியவில்லை," என்று நீதிபதி பூரி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மருத்துவக் கல்லூரி பாடத்திட்டத்தில் கையெழுத்துப் பயிற்சியைச் சேர்க்கவும், இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் மருந்துச்சீட்டுகளை அறிமுகப்படுத்தவும் அரசை நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதுவரை, அனைத்து மருத்துவர்களும் பெரிய, தெளிவான எழுத்துகளில் மருந்துச்சீட்டு எழுத வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் திலீப் பானுஷாலி, 3,30,000 மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ள தங்கள் அமைப்பு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண உதவத் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். பெரிய நகரங்களில் மருத்துவர்கள் டிஜிட்டல் மருந்துச்சீட்டுக்கு மாறிவிட்டனர். ஆனால், கிராமங்களிலும் சிறு ஊர்களிலும் தெளிவான மருந்துச்சீட்டு பெறுவது கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.. மேலும், "பல மருத்துவர்களின் கையெழுத்து மோசமாக இருப்பது உண்மைதான். காரணம், அவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் அவர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்," என்ற அவர், "அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நோயாளிகளும் மருந்தாளர்களும் எளிதில் படிக்கக்கூடிய வகையில் மருந்துச்சீட்டு எழுத வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். ஒரு நாளைக்கு 7 நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவரால் இது முடியும். ஆனால் 70 பேரைப் பார்க்க வேண்டியிருந்தால் அந்த மருத்துவருக்கு இது சாத்தியமில்லை," என்றும் கூறினார். பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, தெளிவின்மை அல்லது தவறான விளக்கத்திற்கு இடமளிக்கும் ஒரு மருந்துச் சீட்டு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 'பிழைகளை 50% வரை குறைக்கலாம்' இந்திய நீதிமன்றங்கள் மருத்துவர்களின் சீரற்ற கையெழுத்தைக் கண்டிப்பது இதுவே முதல் முறை அல்ல. முன்பு, ஒடிசா உயர் நீதிமன்றம் மருத்துவர்களின் "ஜிக்ஜாக் எழுத்து" பற்றி எச்சரித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் "படிக்க முடியாத மோசமான கையெழுத்து அறிக்கைகள்" குறித்து வருத்தம் தெரிவித்தது. ஆனால், மருத்துவர்களின் கையெழுத்து மற்றவர்களை விட மோசமானது என்ற பொதுவான நம்பிக்கையை ஆய்வுகள் நிரூபிக்கவில்லை. அவர்களின் கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும் என கூறுவது அழகுக்காகவோ அல்லது வசதிக்காகவோ அல்ல. மாறாக தெளிவில்லாத மருந்துச் சீட்டுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால், அது பெரிய ஆபத்தை, சில நேரம் உயிரிழப்பையே ஏற்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 1999-ல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் (IoM) ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், அமெரிக்காவில் ஆண்டுக்கு 44,000 தடுக்கக்கூடிய மரணங்கள் மருத்துவப் பிழைகளால் ஏற்படுவதாகவும் , அதில் 7,000 மரணங்கள் மோசமான கையெழுத்தால் நிகழ்வதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில், ஸ்காட்லாந்தில் ஒரு பெண்ணுக்கு கண்ணில் ஏற்பட்ட வறட்சிக்கு மருந்து கொடுக்க வேண்டிய இடத்தில், தவறாக விறைப்புத் தளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் கிரீம் கொடுக்கப்பட்டதால், பாதிப்பு ஏற்பட்டது. பிரிட்டன் சுகாதார அதிகாரிகள், "மருந்துப் பிழைகள் பெரிய தீங்கையும் மரணங்களையும் ஏற்படுத்துகின்றன" என்று ஒப்புக்கொண்டதுடன், மருத்துவமனைகளில் கணினி மருந்துச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தினால், பிழைகளை 50% வரை குறைக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்தியாவில் மோசமான கையெழுத்தால் ஏற்பட்ட தீங்குகள் பற்றிய தெளிவான தரவுகள் இல்லை. ஆனால், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், மருந்துச்சீட்டுகளை தவறாகப் படித்ததால் உயிருக்கு ஆபத்தான சூழல்களும் பல மரணங்களும் ஏற்பட்டுள்ளன. பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, மோசமாக எழுதப்பட்ட மருந்துச் சீட்டுகள் தங்கள் கடைகளுக்கு தொடர்ந்து வந்து சேர்வதாக மருந்தாளுநர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய்க்கான மருந்து எடுத்தபின் வலிப்பு ஏற்பட்ட ஒரு பெண்ணின் சம்பவம் பரவலாகப் பேசப்பட்டது. அந்த மருந்தின் பெயர், அவருக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட வலிநிவாரணி மருந்தின் பெயரைப் போலவே இருந்தது. தெலங்கானாவின் நல்கொண்டாவில் மருந்தகம் நடத்தி வரும் சிலுகுரி பரமாத்தமா, 2014-ல் நொய்டாவில் மூன்று வயது குழந்தை காய்ச்சலுக்கு தவறான ஊசி போடப்பட்டு இறந்த செய்தியைப் படித்த பிறகு, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்ததாக பிபிசியிடம் குறிப்பிட்டார். கையால் எழுதப்பட்ட மருந்துச்சீட்டுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற அவரது முயற்சி 2016-ல் பலனளித்தது. அப்போது, இந்திய மருத்துவக் கவுன்சில், "மருத்துவர்கள் மருந்துகளை பொதுவான பெயர்களில், தெளிவாகவும், முடிந்தால் பெரிய எழுத்துகளிலும் எழுத வேண்டும்" என்று உத்தரவிட்டது. 2020-ல், இந்திய சுகாதார இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே நாடாளுமன்றத்தில், "இந்த உத்தரவை மீறும் மருத்துவர்கள் மீது மாநில அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்" என்று கூறினார். ஆனால், பத்து ஆண்டுகள் கடந்த பிறகும், மோசமாக எழுதப்பட்ட மருந்துச்சீட்டுகள் மருந்தகங்களுக்கு வருவதாக சிலுகுரியும் மற்ற மருந்தாளர்களும் சொல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் சிலுகுரி பெற்ற சில சீட்டுகளை அவரால் கூட படிக்க முடியவில்லை என்று பிபிசியிடம் காட்டினார். கொல்கத்தாவில் 28 கிளைகளுடன், தினமும் 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கையாளும் தன்வந்தரி மருந்தகத்தின் தலைமை நிர்வாகி ரவீந்திர கண்டேல்வால் இதுகுறித்துப் பேசினார். "சில மருந்துச்சீட்டுகள் படிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றன. நகரங்களில் அச்சிடப்பட்ட கணினி சீட்டுகள் அதிகமாகி விட்டன. ஆனால் புறநகர் மற்றும் கிராமங்களில் இன்னும் கையால் எழுதப்பட்ட மருந்துசீட்டுக்கள்தான் அதிகம் வருகின்றன," என்றார் ரவீந்திர கண்டேல்வால். மேலும், அவரது ஊழியர்கள் அனுபவமிக்கவர்கள் என்பதால், பெரும்பாலான சீட்டுகளைப் புரிந்து சரியான மருந்து கொடுக்க முடிகிறது என்றும், "ஆனாலும், சில நேரங்களில் மருத்துவர்களை அழைத்து உறுதி செய்ய வேண்டியிருக்கிறது, ஏனென்றால் சரியான மருந்தை கொடுப்பது மிக முக்கியம்" என்றும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9312wv2k9qo
  14. Published By: Vishnu 07 Oct, 2025 | 07:29 PM (நா.தனுஜா) மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படல் வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணை, திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளுக்குத் தீர்வுகாணுமாறு கடந்த காலங்களில் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்ததாகவும், அதனை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அத்தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மிகப்பாரதூரமானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று இப்புதிய தீர்மானத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வுகாணல், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்துள்ள அவர், இவ்விவகாரங்கள் குறித்துத் தீர்வு காண்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டிருப்பினும், அவற்றின் ஊடாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கரிசனை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய முறையிலும் அப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், இந்த வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/227160
  15. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, ஏ-9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று காலை, குறித்த பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் இருந்த வேளை, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி, தனது உடமையில் 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த குறித்த நபருக்கு, பொய் வழக்கு பதிவு செய்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயற்படுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த விடயங்களை ஆதாரப்படுத்தும் வகையில் அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, குறித்த பொலிஸ் அதிகாரி மீது உயரதிகாரிகள் உடனடியாக உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmggmqg2t00vwo29n8t9h7775
  16. Published By: Vishnu 07 Oct, 2025 | 04:49 AM ஆர்.ராம் 'காற்றாலைத்திட்டத்தினாலும், கனிய மணலுக்கான கேள்வியும் மன்னாரை சுற்றுச்சூழல் பாதிக்கவல்ல போராபத்துக்குள் தள்ளிவிடும் நிலையை தோற்றுவித்துள்ளது' மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம், இலங்கையின் வலுசக்தித்தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம், அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், மன்னார் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே 30 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்ட நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அபாயங்கள் குறித்த நிபுணர்களின் எச்சரிக்கைகளையும் வலுவாகவே பெற்றிருக்கின்றன. முன்னதாக, இந்தியாவின் அதானி நிறுவனம் இப்பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலைத் திட்டத்திலிருந்து விலகிய போதும், உள்ளுர் மக்களின் கவலைகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார் முதலீட்டாளர்களின் துணையுடன் இலங்கை மின்சார சபை அத்திட்டத்தை இடைநிறுத்தாமல் நகர்த்துவது, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் மக்களின் எதிர்ப்பானது, வெறும் மின் உற்பத்திக்கு எதிரானது அல்ல. அந்தப்போராட்டம் அந்த மக்கள் தங்கள் பூர்வீக நிலம், வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானவொரு பரந்துபட்ட போராட்டமாகும். மன்னார் பிராந்தியம் புவியியல் ரீதியாகவும், கனிம வளங்கள் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு இல்மனைட் உட்படப் பல்வேறு வகையான கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தக் கனிமங்கள் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா போன்ற நிபுணர்கள், மன்னாரில் இல்மனைட்டை மிகக் குறைந்த செலவில் அகழ்ந்தெடுக்க முடியும் என்ற நிலை, இங்கு கனிம மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். மன்னார் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் இருப்பதால், காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காகவோ அல்லது கனிமங்களை அகழ்வதற்காகவோ நிலத்தை ஆழமாகத் தோண்டுவது, நில மட்டத்தை மேலும் தாழ்த்தி, இப்பிராந்தியம் சில வருடங்களிலேயே கடல் நீருக்குள் மூழ்கும் பாரிய அபாயம் உள்ளதாகப் புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உதாரணமாக, ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பைகள் மண் அகழ்ந்து அகற்றப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுவது, இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. குhற்றாலைக் கோபுரங்களை நாட்டுவதற்காக 25அடி வரை தோண்டி, கொங்கிரீட் மற்றும் மண்ணைக் கொட்டி மூடுவது, கரையோரங்களில் கொங்கிரீட் போடுவதனால் மழை நீர் வெளியேறுவது தடுக்கப்படுவது போன்ற கட்டுமானச் செயற்பாடுகள், மன்னாரின் பூகோள சமநிலையைச் சீர்குலைத்து, எதிர்காலத்தில் பாரிய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. சுற்றுச்சூழல் ரீதியாக பார்க்கின்றபோது, மன்னார் வகிபாகம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப் பெறுமதியானது. யுனெஸ்கோவே அங்கீகாரத்தினையும் அளித்துள்ளது. இங்குள்ள சூழலியல் வளங்கள், இலங்கைக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு வலசைப் பறவைகளின் முக்கிய நுழைவாயிலாகவும், இனப்பெருக்க மையமாகவும் உள்ளன. வலசைப் பறவைகள் இலங்கையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து, மீண்டும் குஞ்சுகளுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் இந்த அரிய பறவைகளுக்கு, உயரமான காற்றாலை கோபுரங்களும் அவற்றின் சுழலும் இறக்கைகளும் நேரடியான அச்சுறுத்தலாக அமைகின்றன என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், காற்றாலைத் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான பனை மரங்கள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, உள்ளுர் இயற்கைக்குப் பேரிழப்பாக உள்ளது. இச்சூழலியல் பாதிப்புகளை முழுமையாக ஆராயும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பிலிருந்து வலுப்பெற்றுள்ளது. காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் சமூகப் பொருளாதார விளைவுகள் மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. இப்பகுதி மக்கள் பிரதானமாக மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்கின்றனர். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பின்னர், முன்னர் இருந்ததைக் காட்டிலும் மீன்களின் வரத்து மிகக் குறைவாகி, தங்கள் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதாகக் கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், தாழ்வுபாடு போன்ற கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருப்பது, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மேலும், நிலத்தில் நீர் தேங்கி நிற்கும் காலம் நீடித்துள்ளதால், மழைக்காலத்திற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கிராமப்புறங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மக்களின் எதிர்ப்பானது, திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்த தீவிரமான விமர்சனமாகவும் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை போன்ற அமைப்புகள், இத்தகைய பாரிய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம், மக்களின் உணர்வுகளையும் பாதிப்புகளையும் புறக்கணித்து, அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகத் தீர்மானங்களை எடுப்பது 'ஜனநாயக முறைமைக்கு உகந்ததல்ல' என்றும், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தம்முடன் கலந்துரையாடியிருக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். மக்களின் பங்கேற்பின்றித் திட்டங்களை முன்னெடுப்பது என்பது, கடந்தகால நிர்வாகங்களின் விலக்களிக்கப்பட்ட ஆட்சி வடிவத்தின் நீட்சியே என்றும், இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை, வெறும் காற்றாலைத் திட்டத்தை நிறுத்துவதல்ல. மாறாக, தங்கள் வாழ்வாதார உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, ஒரு சமநிலையான தீர்மானத்தை எட்டுவதே ஆகும். கனிம மண் அகழ்வுத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மக்களின் கோபமும் வலியும் நியாயமானது என்பதைப் புரிந்து கொள்ள அரசு தவறுவதாகவே இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை காற்றாலைத் திட்டத்தை முழுவதுமாக நிறுத்துவதல்ல் மாறாக தங்கள் வாழ்வையும், நிலத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் சமூக சமநீதி மற்றும் மக்கள் பங்கேற்புடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆனால் இந்தநிலைப்பாட்டுக்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக காற்றாலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த செயற்றிட்டத்தினை இடைநிறுத்துவதென்ற எண்ணமே இல்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்களை மீளப்பரிசீலிக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாக இருந்தாலும், அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முன்னதாக தாங்கள் பதவிக்கு வந்தவுடன் மன்னார் காற்றாலைத்திட்டத்தினை நிறுத்துவோம் என்ற வாக்குறுதியை முழுமையாக மறந்துவிட்டது. அப்படியென்றால் ஒரேவழி வெகுஜனப் போராட்டம் தீவிரமயப்படுத்துவது தான். https://www.virakesari.lk/article/227070
  17. அபிஷேக் ஷர்மாவுக்கு பரிசாக வந்த 30 லட்ச ரூபாய் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அபிஷேக் ஷர்மா ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார் கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போட்டிகள்: 7 ரன்கள்: 314 சராசரி: 44.85 ஸ்ட்ரைக் ரேட்: 200 அதிகபட்ச ஸ்கோர்: 75 பவுண்டரிகள்: 32 சிக்ஸர்கள்: 19 இது ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மாவின் சாதனையாகும். இறுதிப் போட்டியைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்குச் சிறந்த தொடக்கத்தை அளித்தார். இதன் காரணமாக, அவருக்கு 'தொடரின் சிறந்த வீரர்' விருது கிடைத்தது. ஆனால், இன்று நாம் அவரைப் பற்றிப் பேசாமல், அவரது காரைப் பற்றிப் பேசுவோம். பரிசாக அவருக்கு ஒரு விலையுயர்ந்த கார் கிடைத்தது. துபையில் அந்தக் காருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால், அவரால் அந்தக் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது. ஆனால் ஏன் ஓட்டமுடியாது? ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முன், அது என்ன எஸ்.யு.வி (SUV) கார் என்று தெரிந்து கொள்வோம். ஆசிய கோப்பையின் தொடர் நாயகனுக்குக் கிடைத்த கார், ஹவால் ஹெச்9 (Haval H9) ஆகும். இதைச் சீனாவின் கிரேட் வால் மோட்டார் கம்பெனி தயாரித்துள்ளது. சீனச் சந்தையில் இதன் விலை சுமார் 29,000 முதல் 33,000 டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய். ஆனால், அபிஷேக் ஷர்மாவால் இதை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம், இந்தக் கார் இடது கை டிரைவ் (Left Hand Drive) ஆக இருப்பதுதான். அதாவது, இந்தக் காரில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இது இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கான விதிமுறைகளுக்கு இணங்கவில்லை. சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இது வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடு (Right Hand Steering Control - RHD) என்று அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார் அபிஷேக் நாடு திரும்பியுள்ளார், ஆனால் பரிசு கார் இன்னும் வரவில்லை என்ற செய்தி வந்தபோது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர் என்கிறது நியூஸ் 24 செய்தி. இப்போது கேள்வி என்னவென்றால், ஏன் சில நாடுகளில் வாகனங்கள் வலது பக்கம் செல்கின்றன, சில நாடுகளில் இடது பக்கம் செல்கின்றன? மேலும், வாகனங்களில் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்குமா அல்லது இடது பக்கத்தில் இருக்குமா என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாலையில் வாகனம் ஓட்ட நீங்கள் பல விதிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் (சித்தரிப்புப் படம்) முதலில், இந்தச் சொற்கள் என்னவென்று புரிந்து கொள்வோம். இடது கை போக்குவரத்து (Left Hand Traffic - LHT) மற்றும் வலது கை போக்குவரத்து (Right Hand Traffic - RHT) ஆகியவை இரு திசை போக்குவரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள். அதாவது, இரண்டு திசைகளிலும் போக்குவரத்து ஓடும் சாலையில், இந்த இரண்டு விதிகளில் ஒன்று நிச்சயம் இருக்கும். இதில், வாகனங்கள் சாலையின் இடது அல்லது வலது பக்கத்தில் ஓடுகின்றன. இது போக்குவரத்து ஓட்டத்திற்கு மிகவும் அவசியம். இது 'சாலையின் விதி' (Rule of the Road) என்றும் அழைக்கப்படுகிறது. வலது மற்றும் இடது கை டிரைவ் என்பது வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டீயரிங் சக்கரம் இருக்கும் நிலையை (Position) குறிக்கிறது. உதாரணமாக, இந்தியாவைப் போல் இடது கை போக்குவரத்து (LHT) உள்ள நாடுகளில், வாகனங்கள் வலது பக்கத்தில் முந்திச் செல்கின்றன. மறுபுறம், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஓடும் கார்கள் வலது கை டிரைவ் (RHD) ஆகும். அதாவது, அங்குள்ள கார்களில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். இது இந்தியாவிற்கு நேர் எதிரானது. உலகில் ஒரே நேரத்தில் இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் கார்களை அனுமதிக்கக்கூடிய நாடு எதுவும் நிச்சயமாக இல்லை. ஒரு நாட்டில் அனைத்துக் கார்களும் வலது கை டிரைவில் ஓடும்போது, ஒரு இடது கை டிரைவ் கார் குழப்பத்தை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த விதி எங்கிருந்து வந்தது, எப்போது வந்தது? முதலில், இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் எப்போது தொடங்கியது என்று தெரிந்து கொள்வோம். இதற்காக நாம் ரிவர்ஸ் கியரை போட்டு வரலாற்றிற்குச் செல்ல வேண்டும். வெவ்வேறு நாடுகளில் ஓட்டுநர் விதிகள் தீர்மானிக்கப்பட்ட தேதிகள் வேறுபட்டாலும், இந்த வரலாற்றில் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆஸ்க்கார்குருவின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அமித் காரே, "பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது, அவர்களுடன் அவர்களது கார்கள் மட்டுமல்ல, கார் ஓட்டும் விதிகளும் பல்வேறு நாடுகளை அடைந்தன" என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார். "இதன் காரணமாக, பிரிட்டன் ஆட்சி செய்த பெரும்பாலான நாடுகளில் இன்றும் இடது கை போக்குவரத்து (LHT) உள்ளது. அதாவது, அங்கு வலது கை டிரைவ் (RHD) உள்ளது. இதன் பொருள், காரின் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இடதுபுறத்தில் இல்லை. ஹாங்காங், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தோனீசியா அல்லது பிரிட்டனில்கூட இதுதான் நிலை," என காரே தெரிவித்தார். "பிரிட்டிஷார் இருந்திராத உலகின் பல நாடுகளில் வலது கை போக்குவரத்து (RHT) உள்ளது. அதாவது, காரின் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். அதாவது, இந்தியாவில் ஓடும் கார்களுடன் ஒப்பிடும்போது, சரியாக நேர் எதிர்ப்புறத்தில்," என்று அவர் மேலும் கூறுகிறார். ஸ்டீயரிங் கட்டுப்பாடு குறித்து விதிகள் என்ன சொல்கின்றன? மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் அத்தியாயம் ஏழு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மோட்டார் வாகனமும் வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இதன் பிரிவு 120-இல், 'குறிப்பிட்ட தன்மை கொண்ட' இயந்திர அல்லது மின் சமிக்ஞை சாதனம் (Mechanical or Electrical Signalling Device) வேலை செய்யும் நிலையில் இருந்தால் தவிர, இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனத்தை பொது இடங்களில் இயக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனங்கள் ஓடவில்லையா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பல நாடுகளில் வாகனங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் ஓடுகின்றன. இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனம் தற்போது இந்தியச் சாலையில் ஓடவில்லை என்று கூறுவது தவறாக இருக்கலாம். ஏனெனில், இந்திய அரசு சில விதிவிலக்குகளுக்கு அனுமதி அளிக்கிறது. ஒரு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனம் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக (R&D) இடது கை டிரைவ் யூனிட்டை இந்தியாவிற்குக் கொண்டு வர விரும்பினால், அதுகுறித்து அரசிடம் அனுமதி கேட்கலாம், அதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது என்றுஇந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோவின் செய்தி தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்கள் ஓடுகின்றன. அமெரிக்க அதிபர் அல்லது வேறு எந்த உயர்நிலை தலைவரும் இந்தியாவிற்கு வரும்போது, அவர்களுடன் அவர்களது கார் பாதுகாப்பு வாகனங்களும் வருகின்றன. இந்தக் கார்கள் இடது கை டிரைவ் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், இந்தக் கார்கள் சாலைகளில் செல்லும் போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர, சில பழங்காலக் (Vintage) கார்களும் உள்ளன, அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில இடது கை டிரைவ் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. கடந்த காலத்தில், இத்தகைய பல கார்கள் இந்தியாவில் உள்ள பழைய அரச குடும்பத்தினரிடம் இருந்தன. "இந்தியாவில் நீங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டு வாகனத்தை ஓட்ட முடியாது என்று அர்த்தமல்ல. நீங்கள் ஓட்டலாம், ஆனால் அதற்காக நீங்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது, நிரந்தரமாக அல்ல," என்று காரே பிபிசி-யிடம் தெரிவித்தார். "இடது கை டிரைவ் கொண்ட சில பழைய கார்கள் இன்றும் இந்தியாவில் உள்ளன, ஆனால் அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் மட்டுமே வெளியே எடுக்கப்படுகின்றன அல்லது ஓட்டப்படுகின்றன," என்று அவர் கூறினார். காரேயின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) அல்லது மோரிஸ் (Morris) போன்ற கார்கள் அனைத்தும் வலது கை டிரைவ் ஆகும், இன்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்கள் அப்படித்தான் இருக்கின்றன. மறுபுறம், அமெரிக்கா அல்லது ஜெர்மனியிலிருந்து வந்த கார்களின் ஸ்டீயரிங் கட்டுப்பாடு இடதுபுறத்தில் இருந்தது. நிறுவனங்கள் ஒரே மாதிரியான கார்களைத் தயாரிக்கின்றனவா, இரண்டு வகைகளையும் தயாரிக்கின்றனவா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பல பயணிகள் இடது பக்கத்தில் ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்களில் வருகிறார்கள் சர்வதேசச் சந்தையில் தங்கள் தயாரிப்புகளை கொண்டு சேர்க்க, உலகின் அனைத்துப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இடது கை டிரைவ் (LHD) மற்றும் வலது கை டிரைவ் (RHD) ஆகிய இரண்டு வகைக் கட்டமைப்புகளுடன் கார்களைத் தயாரிக்கின்றன. போக்ஸ்வேகன் குழுமம், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களும், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற வட அமெரிக்க நிறுவனங்களும் இதில் அடங்கும். இப்போது ஹோண்டா, ஹூண்டாய், மாஸ்டா, டொயோட்டா, நிஸ்ஸான் போன்ற ஆசிய கார் நிறுவனங்களும் இரண்டு வகைகளில் கார்களைத் தயாரிக்கின்றன. இந்திய நிறுவனங்களும் இதைச் செய்கின்றன. "கார் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைக்காக ஒரு காரை வடிவமைக்கும்போது, இரண்டு வகையான சந்தைகளிலும் கவனம் செலுத்துகின்றன. இதனால், அவர்கள் தங்கள் கார்களை வலது கை டிரைவ் மற்றும் இடது கை டிரைவ் என இரண்டு வகையான சந்தைகளுக்கும் வழங்க முடியும்" என்று அவர் கூறினார். அடுத்த முறை கார் ஓட்ட அமரும்போது, ஸ்டீயரிங் இருக்கும் இடத்தில் இல்லாமல், அருகில் உள்ள இருக்கைக்கு முன்னால் இருந்தால் எப்படி உணருவீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்! இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxq08x58nyo
  18. Published By: Vishnu 07 Oct, 2025 | 09:35 PM இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 7, 2025) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தத் தாக்குதலில் 46 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்ட அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 254 பேரில், 12 அமெரிக்கர்களும் அடங்குவர். இன்றுவரை, அமெரிக்க குடிமக்களான இத்தாய் சென் மற்றும் ஓமர் நியூட்ரா ஆகியோரின் உடல்கள் உட்பட மொத்தம் 48 பணயக் கைதிகள் ஹமாஸின் பிடியில் உள்ளனர். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவு இந்தத் துயரமான ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளையில், இஸ்ரேலின் இருப்புக்கும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உள்ள உரிமையை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இதுபோன்ற தீய சக்திகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான தமது உறுதியை அமெரிக்கா புதுப்பித்துள்ளது. டிரம்ப்பின் 20 அம்சத் திட்டம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் தலைமையில், அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கும், காசாவில் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் தலைமுறை அமைதி மற்றும் செழுமையை உறுதிப்படுத்தும் நீடித்த அமைதியை முன்னெடுத்துச் செல்வதற்கும் அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதம் இல்லாத எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்ற தொலைநோக்குப் பார்வை, அதிபரின் 20 அம்சத் திட்டத்தின் மையமாக உள்ளது. (இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு இதனைப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.) யூத - எதிர்ப்புவாதத்திற்கு எதிரான கண்டனம் 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, உலகளவில் யூத சமூகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் யூத-எதிர்ப்புவாதம் (Antisemitism) troublingly அதிகரித்துள்ளது என்பதையும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. யூத-எதிர்ப்புவாதத்துடன் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து பயங்கரவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத நடவடிக்கைகளையும் அமெரிக்கா தொடர்ந்து கண்டிக்கிறது. இந்த வேதனையான ஆண்டு நிறைவின்போது இஸ்ரேலுடன் துணை நிற்க உலக சமூகம் முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/227164
  19. உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறுவதாகவும், தன்னை கடித்துக் கொல்ல பல முறை முயற்சித்ததாகவும் முறைப்பாடு அளித்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவரது முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், சமதான் திவாஸ், அதாவது பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, வழக்கமாக மின்சாரம், சாலைகள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீராஜ் என்பவர், "ஐயா, என் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி என்னைக் கடிக்க என் பின்னால் ஓடுகிறாள்" என்று கூறி முறைப்பாடு அளித்தார். தனது மனைவி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால், ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் தான் விழித்தெழுந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். "என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள், நான் தூங்கும்போது எந்த இரவில் வேண்டுமானாலும் என்னைக் கொல்லக்கூடும்" என்றும் அவர் புலம்பியுள்ளார். இந்நிலையில், அந்த முறைப்பாடு குறித்த விசாரணைக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். துணைப்பிரிவு நீதிபதி மற்றும் பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஒரு வேளை இது மனரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம் என்று கருதி, பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmggkdufl00vuo29n76dlza0z
  20. 07 Oct, 2025 | 01:59 PM உதவித் தொகை வழங்கும் அமைப்பாக அன்றி நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் ஒரு அமைப்பாக சமுர்த்தி அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்று சமுர்த்தியுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது சமுர்த்தி தொழிற் சங்க சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கீர்த்தி பண்டார கிவுல்தெனிய இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபையை வங்குரோத்து நிலைக்கு தள்ளினர். கடந்த ஆட்சி காலத்திலும் ஐ.எம்.எப் இன் நலனில் நாட்டம் காட்டிய அவர்கள் சமுர்த்தி அதிகார சபையை கலைக்கும் நிலைக்கு வழிகாட்டினர் என்றார். அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி முகாமையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் டப்ளியூ ஜோதிரத்ன தெரிவித்ததாவது, 1995ம் ஆண்டு பொது பெரமுன டே்சியின் பொது சமுர்த்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. உண்மையான சமுர்த்தி என்பது உதவித் தொகை அல்லது சகாய நிதி வழங்கும் ஒரு அறக்கட்டளை அல்ல. அது வருமையை ஒழிக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்குக் காலம் அது மாற்றங்களுக்கு உற்பட்டு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளன. இது வறுமையை ஒழிக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு வழி நடத்தும் ஒரு அமைப்பாக அதனை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்று சமுர்த்தி துறையானது பல துறைகளாக பிரிந்து கொண்டு போகிறது. குறிப்பாக ‘அஸ்வெஸும’ என்ற முறையற்ற ஒரு திட்டம் காரணமாக அது பல்வேறு நிர்பந்தங்களுக்கு ஆளாகி வந்தது என்றார். எனவே சமுர்த்தி அமைப்பை பாதுகாத்து நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் ஒரு அமைப்பாக அதனை புனரமைக்க அதிகாரிகளும் அரசும் முன்வர யவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். https://www.virakesari.lk/article/227114
  21. இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதுடன் கணிசமாக வறுமையும் உயர்ந்துள்ளதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீட்சியை வலுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை, அவசர கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொது செலவினம் தொடர்பான சிறந்த இலக்கு என்பன தேவைப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. இலங்கை பொருளாதாரமானது 2025 ஆம் ஆண்டில் தொழில்துறையின் வளர்ச்சியினால் 4.6 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக 2026 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதாரமானது 3.5 சதவீதமாக குறைவடையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இன்னும் 2018 அளவை விடக் குறைவாகவே உள்ளது. வறுமை குறைந்து வந்தாலும், 2019 ஐ விட இரு மடங்கு அதிகமாகவே உள்ளது. தொழிலாளர் சந்தை மீள்வது மெதுவாக உள்ளது மேலும் பல குடும்பங்கள் நெருக்கடியின் போது இழந்த வாழ்வாதாரங்களை இன்னும் மீட்டெடுக்கவில்லை. சனத்தொகையில் 10 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே வாழ்கின்றனர். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தீவிரமான பிரச்சினையாகவே உள்ளது. நீண்டகால வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், நிதிக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வறுமையைக் குறைப்பதற்கும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த சீர்திருத்தத்தை வலியுறுத்தியுள்ளது. முக்கிய முன்னுரிமைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான தடைகளைத் தளர்த்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் நிலம் மற்றும் தொழிலாளர் சந்தைகளை நிர்வகிக்கும் வரி நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறைகளை நவீனமயமாக்குவது என்பன அவற்றில் முக்கியமானதாகும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmggabvq600vgo29naafgfem0
  22. வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmgg8e8rn00uwqplp60eq8khr
  23. எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி ஒருவர் பலி ; 137 பேர் பத்திரமாக மீட்பு Published By: Digital Desk 3 07 Oct, 2025 | 02:40 PM உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் இந்த பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்புயலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்நிலையில் பனிப்புயலில் சிக்கி சீனாவை சேர்ந்த 41 வயது மலையேற்ற வீரர் உயிரிழந்தார். இதுவரை 137 பேர் மீட்கப்பட்டனர். எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. https://www.virakesari.lk/article/227120
  24. முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாத உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (7) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். சில முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திய வாகனங்களை தற்போது ஒப்படைத்துள்ளனர். எனினும் அது அந்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிற விடயங்கள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். https://adaderanatamil.lk/news/cmgg7ozar00utqplpzcgwqiha
  25. ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 60/L.1/Rev.1 தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (6) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் திருத்தப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. குறித்த புதுப்பிக்கப்பட்ட வரைவு கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்தின் முக்கிய அனுசரணையாளர்களாக பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு வருவதுடன், இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. மிகக் குறுகிய காலத்திற்குள், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்து அரசாங்கம் தொடர்ச்சியான உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, உள்நாட்டு செயல்முறைகள் மூலம் தனது சொந்த மக்களின் உரிமைகளை முன்னேற்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்திற்கு கடந்த 4 வருடங்களில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனால் இலங்கை மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்பதை உயர் ஸ்தானிகரின் அறிக்கையிலும் தௌிவாகின்றது. இதன் அதிகாரத்தை நீடிப்பதால் இலங்கையில் உள்ள சமூகங்கள் பிளவுபடுவதற்கும் சுயநலன்களுக்குமான வாய்ப்பை உருவாக்கும். அதேபோன்று ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmgg5ycm300uqqplp5ic43eti

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.