Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நைஜீரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் - ஐஎஸ் இலக்குகள் குறி வைக்கப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,US Department of Defense படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட காணொளியில், ஒரு ராணுவக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண முடிகிறது. கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 26 டிசம்பர் 2025, 01:58 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதலை' நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், ஐஎஸ் குழுவை 'பயங்கரவாதக் கழிவுகள்' என்று விவரித்தார், 'முக்கியமாக அவர்கள் அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொல்வதாகவும்' குற்றம் சாட்டினார். அமெரிக்க ராணுவம் "பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியதாக" டிரம்ப் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், "நைஜீரிய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி. மெர்ரி கிறிஸ்மஸ்!" என்று கூறியுள்ளார். அதே சமயம், யூஎஸ்-ஆப்ரிக்கா கமாண்ட் (Africom), இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை (டிசம்பர் 25) அன்று சொகோட்டோ மாநிலத்தில் நைஜீரியாவுடன் இணைந்து நடத்தப்பட்டதாக அறிவித்தது. நைஜீரிய வெளியுறவு அமைச்சர் யூசுப் மைதாமா துகர் பிபிசியிடம், "இது பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கை" என்றும், "இதற்கு ஒரு குறிப்பிட்ட மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை" என்றும் கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images நைஜீரிய கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுகிறார்களா? டிரம்ப் வியாழக்கிழமை இரவு (டிசம்பர் 25) வெளியிட்ட தனது பதிவில், "எனது தலைமையிலான அமெரிக்கா, இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது" என்று கூறினார். நவம்பரில் விடுத்த எச்சரிக்கையில், எந்தக் கொலைகளைக் குறிப்பிடுகிறார் என்பதை டிரம்ப் கூறவில்லை. ஆனால் நைஜீரிய கிறிஸ்தவர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகச் சில அமெரிக்க வலதுசாரி வட்டாரங்களில் கடந்த சில மாதங்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன. வன்முறையைக் கண்காணிக்கும் குழுக்கள், நைஜீரியாவில் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகின்றன. நைஜீரியாவில் இந்த இரு மதங்களைப் பின்பற்றுபவர்களும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையில் உள்ளனர். நைஜீரிய அதிபர் போலா டினுபுவின் ஆலோசகர் ஒருவர் அப்போது பிபிசியிடம் பேசுகையில், "ஜிஹாதி குழுக்களுக்கு எதிரான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறினார். "இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களைக் கையாள்வதில் அமெரிக்காவின் உதவியை நைஜீரியா வரவேற்கும்" என்று டேனியல் பவாலா கூறினார், அதேசமயம் "நைஜீரியா 'இறையாண்மை' கொண்ட ஒரு நாடு" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஜிஹாதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிவைக்கவில்லை என்றும், அவர்கள் அனைத்து மதங்களையும் அல்லது எந்த மதத்தையும் சாராத மக்களையும் கொன்றுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் மத சகிப்புத்தன்மை இருப்பதாக அதிபர் டினுபு வலியுறுத்தியுள்ளார். "பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மதங்கள் மற்றும் பிராந்தியங்களைக் கடந்து மக்களைப் பாதிப்பதாக" அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் முன்னதாக, "நைஜீரியாவில் கிறிஸ்தவ மக்களின் 'இருப்புக்கே ஆபத்து' இருப்பதாகக்" கூறிய டிரம்ப், நைஜீரியாவை 'சிறப்பு கவனம் அளிக்கப்பட வேண்டிய கவலைக்குரிய நாடு' என்று அறிவித்தார். எந்த ஆதாரமும் வழங்காமல், "ஆயிரக்கணக்கானோர் அங்கு கொல்லப்பட்டதாகவும்" அவர் கூறினார். இது அமெரிக்க வெளியுறவுத் துறையால் பயன்படுத்தப்படும் ஒரு வகைப்படுத்தல் முறை. 'மத சுதந்திரத்தை கடுமையாக மீறும்' நாடுகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க இது வழிவகை செய்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து மதச் சமூகங்களையும் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படத் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக டினுபு கூறினார். நைஜீரியாவில் தொடரும் மோதல்கள் போகோ ஹராம் மற்றும் 'இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்' போன்ற குழுக்கள் வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளன - இருப்பினும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வன்முறைகளை ஆய்வு செய்யும் குழுவான அக்லெட் (Acled) தெரிவிக்கிறது. மத்திய நைஜீரியாவில், நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக முஸ்லிம் மேய்ப்பர்களுக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் - ஆனால் இரு தரப்பினரும் குற்றங்களைச் செய்துள்ளனர். 'கிறிஸ்தவர்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. கடந்த வாரம், சிரியாவில் ஐஎஸ் குழுவுக்கு எதிராக அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகக் கூறியிருந்தது. அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom), "போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் 'மத்திய சிரியா முழுவதும் பல இடங்களில் 70-க்கும் மேற்பட்ட இலக்குகளைத்' தாக்கின" என்று தெரிவித்தது. இதில் ஜோர்டானின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvdgjn98n7o
  2. தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர் Published By: Vishnu 26 Dec, 2025 | 01:18 AM ‘ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிடாவிட்டால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை யுத்தத்தின் மூலம் கையகப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை, உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நாகதீப புராண ரஜமகா விகாராதிபதியும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க தேரருமான நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் கூறுகிறார். “உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலியான திஸ்ஸ விகாரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அந்த திஸ்ஸ விகாரை நாகதீப விகாரைக்குச் சொந்தமானது. அதன் உரிமை நாகதீப விகாரையிடமே உள்ளது. ஆனால், இப்போது திஸ்ஸ விகாரை என அழைக்கப்படும் பகுதி காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்குச் சொந்தமானது. யுத்த காலத்தில் குடிமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு இடத்தையே திஸ்ஸ விகாரை என்ற பெயரில் போலியான திஸ்ஸ விகாரையாக ஆரம்பித்துள்ளனர்.” ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் தன்னைப்போன்று வேறு எந்த பௌத்தரும் இவ்விடயம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் என பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் ஒரு காணொளி உரையின் மூலம் தெரிவித்துள்ளார். இராணுவப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ ராஜமகா விகாரையின் விகாராதிபதி சத்தர்மகீர்த்தி சங்கைக்குரிய கிந்தோட்டை நந்தாராம தேரருக்கு, அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான ‘ஸ்ரீ சன்னஸ் பத்ர’ மற்றும் ‘விஜினி பத’ ஆகியவை புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டதன் பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “53 வருடங்களாக நான் இந்த நாகதீப விகாரையில் இப்பிரதேசத்தின் தமிழ் மக்களுடனேயே வாழ்ந்து வருகிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள எமது சகோதர மக்கள் அனைவரும் நாகதீப விகாரையின் தேரர் யார் என்பதை அறிவார்கள். நாம் இதுவரை காலமும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வந்தோம்.” தற்போது வடபுலத்துக்கு வெளியே இருந்து வரும் தேரர்கள் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகளை நிர்மாணித்து வருவதை ஏற்றுக்கொண்ட வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர், அந்த ‘செய்யத்தகாத வேலை’ தொடர்பில் பதற்றமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். “தற்போது உண்மையில் தேரர்கள் வந்து தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகளை நிர்மாணித்து வருகின்றனர். எனவே, அதனை உண்மையில் செய்யத்தகாத ஒரு வேலையாகவே நாம் பார்க்கிறோம். அதனால் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இந்த இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் நிதானமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அரசாங்கம் இதில் தலையிட்டுச் செயற்பட்டால் நல்லது என்பதுதான் எனது கருத்தாகும்.” உண்மையைக் கண்டறிந்து, திஸ்ஸ விகாரையின் காணிப் பிரச்சினையை சுமூகமான முறையில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தேரரோ அல்லது அரசாங்கமோ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாகதீப புராண ராஜமகா விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். “அதேபோன்றுதான், நாகதீப விகாரையின் தேரராகிய என்னுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடினால், ஒரு முடிவுக்கு வந்து இது ஒரு போலியான இடமா? அல்லது உண்மையான இடமா என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். அரசாங்கமோ அல்லது எமது தேரர்களோ ஒருபோதும் அவ்வாறு என்னுடன் தொடர்பு கொண்டு செயற்படவில்லை. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு ஒரு தீர்வை காண்பதே எனது அடிப்படை நோக்கமாக உள்ளது. அப்போதுதான் எமது மக்களுடனும், இங்கு வாழும் சகோதர தமிழ் மக்களுடனும் எம்மால் இலகுவாக வாழ முடியும்.” திஸ்ஸ விகாரையின் காணிப் பிரச்சினையை துரிதமாகத் தீர்க்காவிட்டால், அது அப்பிரதேசத்திலுள்ள ஏனைய பௌத்த விகாரைகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் தேரர் எச்சரிக்கிறார். “இப்படியே போனால் இந்த விகாரையை முன்னிலைப்படுத்தி இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய தேரர்களுக்கும், அதேபோல் இப்பகுதியில் உள்ள விகாரைகளுக்கும் ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்தப் பிரச்சினையை நாம் சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு அரசாங்கத் தரப்பினரையும்— எமது ஜனாதிபதி அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது, ஜனாதிபதி அவர்கள் இதில் முன்னின்று நாகதீப விகாரையின் தேரரையும், அதேபோன்று தையிட்டி பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களையும், காணி உரிமையாளர்களையும் அவர்களது உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அழைத்து வரச் செய்ய வேண்டும். அவர்களால் அதனை நிரூபிக்க முடியும், எனக்கும் உண்மையான திஸ்ஸ விகாரை எங்குள்ளது என்பதை நிரூபிக்க முடியும்.” இந்தக் காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேரர் இதன்போது மீண்டும் மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியிருந்தார். “குறிப்பாக நான் ஜனாதிபதியிடம் மீண்டும் வேண்டிக்கொள்வது என்னவென்றால், இது குறித்து கலந்துரையாடித் தீர்வு காணுங்கள். இல்லையென்றால் எதிர்காலத்தில் இதைவிடப் பெரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.” திஸ்ஸ விகாரையில் தமிழ் மக்கள் உரிமை கோரும் காணியை அவர்களுக்கு விடுவித்துக் கொடுப்பதே விகாராதிபதிக்கு ஒரு உண்மையான கௌரவமாக அமையுமென, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான பட்டயப்பத்திரம் மற்றும் கைவிசிறி ஆகியவற்றை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சங்கைக்குரிய பலபிட்டியே சிறி சீவலி தேரர் பௌத்த அலுவல்கள் அமைச்சரும் பங்கேற்ற அந்த நிகழ்வில் (2025 டிசம்பர் 21) உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார். “மீண்டும் மாதத்துக்கொரு தடவை அதுபோன்ற காணொளிகள் வெளிவராத வகையில், திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை— எமது அமைச்சரும் இங்கே இருக்கிறார்— எம்மால் தீர்க்க முடிந்தால் மிகவும் நல்லது. எந்தவொரு பிரச்சினைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. எனவே, எம்மால் அந்த இரு தரப்பினருடனும் பேசி, எமது விகாரைக்குத் தேவையான போதுமான காணியை வைத்துக்கொண்டு ஏனையவற்றை விட்டுக்கொடுக்கலாம். தானம் வழங்கல் என்பது எமது பௌத்த தத்துவத்தில் உள்ள ஒரு விடயமாகும். அவ்வாறு எம்மால் விட்டுக்கொடுக்கக்கூடிய பகுதி ஏதேனும் இருந்தால், அதைக் கோரும் அந்தத் தமிழ் மக்களுக்கு ஒப்படைத்துவிட்டு, இந்தப் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடிந்தால், தேரர் நாயக்க பதவியை ஏற்ற நாளில் அது ஒரு பெரிய கௌரவமாக அமையும்.” திஸ்ஸ ராஜமகா விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள், சுமார் 14 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 100 பரப்பு (6.2 ஏக்கர்) நிலத்தை இராணுவம் பலவந்தமாகக் கையகப்படுத்தி திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர். “கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பிய திஸ்ஸ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது” என இராணுவம் தெரிவிக்கிறது. “காங்கேசன்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையின் புனரமைக்கப்பட்ட விகாரையின் தூபியை வைக்கும் புண்ணிய உற்சவம்” 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றதாக, 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி இலங்கை இராணுவம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234424
  3. ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கேடி ஜோன்ஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீப ஆண்டுகளில் மது அல்லாத பானங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வைன், ஸ்பிரிட்ஸ், பியர் மற்றும் சிடர் எனப் பல வகையான பானங்கள் சந்தையில் உள்ளன. யூகவ் நடத்திய ஆய்வில் பிரிட்டனில் மது அருந்துபவர்களில் 38% பேர் குறைவான மது அளவு அல்லது மது இல்லாத பானங்களை விரும்புவதாக தெரியவந்துள்ளது. 2022-இல் இது 29% ஆக இருந்தது. மது அல்லாத பானங்கள் பிரபலமடைவது பலருக்கும் அதன் சுவை மீதான ஆர்வத்தினால் தானே தவிர மது அருந்த வேண்டும் என்கிற ஆசையால் அல்ல. அதில் பலரும் மது பானங்களை விட மது அல்லாத பானங்கள் ஆரோக்கியமானது எனக் கருதுவதாலும் வாங்குகின்றனர். மின்டெல் மேற்கோண்ட ஆய்வில் மது நுகர்வோரில் 15 முதல் 20% பேர் மது அல்லாத பானங்களை வாங்குவதில் கூடுதல் சுகாதாரப் பலன்கள் இருப்பதாக கருதுகின்றனர். மது அல்லாத பானங்கள் அதிகாலை தலைவலியிலிருந்து உங்களை காப்பதோடு கூடுதல் சுகாதார நன்மைகளுடன் வருகிறதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மது அல்லாத பானங்கள் பிரபலமடைவதற்கான காரணம் என்ன? அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உணவியல் துறையில் மூத்த விரிவுரையாளரான மருத்துவர் காம்ஹியான் லோக், மது இல்லாமல் இரவைக் கழிப்பது தொடர்பான அணுகுமுறையில் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்புகிறார். "மதுபான நுகர்வு மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் பற்றிய அதிக தகவல்கள் கிடைப்பதால் மக்கள் மது அல்லாத பானங்களை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். இதனால் எழுந்துள்ள தேவைகளை மதுபான நிறுவனங்கள் மூலதனமாக்குகின்றன," என்றார். எப்போதுமே சமூகத்தில் பழக விரும்புபவர்களுக்கு ஆல்கஹால் இல்லாத பானத்திற்கான தேவை இருந்ததாகக் கூறுகிறார் உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் டயடிக் அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான டுவெய்ன் மெல்லோர். "முன்னர் அத்தகைய பானங்கள் சிறப்பானதாக இல்லை என்பது தான் பிரச்னையாக இருந்தது. ஆனால் மதுவிற்கு பின்பற்றப்படும் அதே குறைவான அழுத்தம் கொண்ட தயாரிக்கும் முறைகளால் தற்போது சிறந்த பியர் அல்லது வைன் தயாரிக்க முடியும்." என்று கூறுகிறார் டுவெய்ன். மது அல்லாத பானங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் பற்றிய கட்டுக்கதைகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மது அல்லாத பானங்களில் முற்றிலும் மது இருக்காதா? பட மூலாதாரம்,Getty Images "ஆல்கஹால் அல்லாத பானங்கள் என விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் அனைத்திலும் ஆல்கஹால் இல்லை என நாம் அனுமானிக்கக்கூடாது. ஏனெனில் அரசாங்கத்தின் பரிந்துரைகள் அவற்றை அனுமதிக்கின்றன," எனக் குறிப்பிடுகிறார் லோக். 'ஆல்கஹால் அல்லாத' பானம் எனக் குறிப்பிடப்படும் பானங்களில் 0.5% வரை ஆல்கஹால் இருக்கலாம் என ட்ரிங்க்அவேர் தெரிவிக்கிறது. அதே வேளையில் குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட பானங்களில் 1.2% வரை ஆல்கஹால் இருக்கலாம். மது அல்லாத பானங்களில் கலோரிகள் குறைவாக உள்ளனவா? "ஆல்கஹாலில் கலோரிகள் உள்ளன, எனவே மதுபானத்தோடு ஒப்பிடுகையில் மது அல்லாத பானங்களில் குறைந்த அளவிலே கலோரிகள் உள்ளன," என்கிறார் பிரிட்டிஷ் நியூட்ரிஷன் ஃபவுண்டேஷனின் ஊட்டச்சத்து விஞ்ஞானியான ப்ரட்ஜெட் பெனலெம். "ஆல்கஹாலில் ஒவ்வொரு கிராமில் ஏழு கலோரிக்கள்" இருப்பதாக மெல்லோர் குறிப்பிடுகிறார். எனினும் மது அல்லாத பானங்களில் கலோரிக்கள் இல்லாமல் இல்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம் என்கிறார் பெனலெம். "அவற்றில் கலோரிக்கள் உள்ளன, அவை எந்த வகை பானம் என்பதைப் பொருத்து சர்க்கரை நிறைந்ததாகவும் உள்ளன. அந்த பானங்களை இனிப்பானதாக ஆக்க தேவையான அளவு சக்கரை அதில் இருக்கும்," என விளக்கினார். மது அல்லாத பானங்கள் கல்லீரலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,Getty Images "நீண்ட கால நோக்கில் அதிக அளவில் மது எடுத்துக் கொள்வது கல்லீரலை பாதிக்கும்," எனக் குறிப்பிடுகிறார் லோக். "இதிலிருந்து மதுவை நீக்கினால் அந்த தாக்கம் இருக்காது." என்றும் தெரிவித்தார். அதே வேளையில் சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு மீது கவனம் செலுத்துகிறார் லோக். இது உணவு அல்லது பானங்கள், சிரப்களில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரை, தேன், பழச்சாறு, காய்கறி சாறு மற்றும் ஸ்மூத்திகளில் உள்ள சர்க்கரைகளை உள்ளடக்கும். மது அல்லாத பானங்கள் மூலம் கூடுதல் அளவிலான சர்க்கரை நுகரப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். "அவற்றை கூடுதலாக எடுத்துக் கொண்டால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படலாம்." என்றார். மது அல்லாத பானங்கள் நமது பொது ஆரோக்கியத்திற்கு நல்லதா? ரெட் வைன் போன்ற ஆல்கஹால் குறைக்கப்பட்ட பானங்கள் இதய நோய் ஆபத்து போன்ற பிரச்னைகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்கிறார் லோக். சில மது அல்லாத பியர்களில் பி வைட்டமின்கள் இருக்கலாம் எனக் பெனலெம் கூறுகிறார். "பியர் போன்ற தயாரிப்புகளில் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில உள்ளீடுகள் இருக்கலாம்," என மெல்லோர் குறிப்பிடுகிறார். எனினும் ஆல்கஹால் அல்லாத பானங்கள் ஊட்டச்சத்துக்களின் முதன்மை ஆதாரமாக கருதப்படாது என்கிறார் பெனலெம். "உணவில் ஊட்டச்சத்து என நாம் பார்க்கிறபோது அவை ஆரோக்கியமான மற்றும் சமநிலைப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தான் குறிக்கும்." என்று அவர் தெரிவித்தார். அதிகப்படியான திரவம், சர்க்கரை மற்றும் அசிடிக் பானங்களால் பல் எனாமல்களில் ஏற்படும் ஆபத்துகளையும் மெல்லோர் சுட்டிக்காட்டுகிறார். சொந்தமாக தயாரிக்க முடியுமா? பட மூலாதாரம்,Getty Images சந்தைகளில் கிடைக்கும் மது அல்லாத பானங்கள் உங்களை கவரவில்லை என்றால் நீங்கள் சொந்தமாகவே ஒன்றை தயாரிக்கலாம். "மது பானங்களில் காட்டும் அக்கறை மற்றும் கவனத்தை மது அல்லாத பானங்களின் மீதும் காட்ட வேண்டும்," என்கிறார் காக்டெய்ல் நிபுணரான ப்ரிதேஷ் மோடி. "ஆப்பிள் சாறு, எலுமிச்சை மற்றும் இஞ்சி பியர் ஒரு சுவையான பானம் ஆகும்" என்கிறார் ப்ரிதேஷ். மேலும் அவர் கொம்புசா மற்றும் விர்ஜின் எஸ்ப்ரெஸோ மார்டினியைக் குறிப்பிடுகிறார். சைடர் வினிகர், ஆப்பிள் சாறு மற்றும் சோடாவை ஒரு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz685wqv821o
  4. சுனாமி ஆழிப்பேரலை நினைவுகூரல் இன்று நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு Published By: Vishnu 26 Dec, 2025 | 01:15 AM (இராஜதுரை ஹஷான்) சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த நிகழ்வை 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன. 2005 முதல், டிசம்பர் 26 ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பாதுகாப்பு தினம்' என்று அறிவிக்கப்பட்டு, அன்றிலிருந்து நாட்டில் சுனாமி பேரழிவிலும் பல்வேறு பேரழிவுகளிலும் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தின நினைவு நாள் பொதுமக்களின் பங்களிப்புடன் அனுஸ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 'தேசிய பாதுகாப்பு' தின நிகழ்ச்சிக்காக, தித்வா சூறாவளி காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் அனைத்து மத நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று டிசம்பர் 26 'தேசிய பாதுகாப்பு தினத்தின்' முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த நிகழ்வை 11 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'தேசிய பாதுகாப்பு தினத்தை' முன்னிட்டு, சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தீவு முழுவதும் காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். எனவே, தேசிய பாதுகாப்பு தினமான 2025 டிசம்பர் 26 ஆம் தேதி காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை, தீவு முழுவதும் சுனாமி பேரழிவு மற்றும் பல்வேறு பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துமாறும், அன்றைய தினம் நடைபெறும் முக்கிய நினைவு விழா மற்றும் மாவட்ட செயலகங்களால் நடத்தப்படும். https://www.virakesari.lk/article/234423
  5. ஆழிப்பேரலையின் நினைவலைகள்: 2004 சுனாமி தாக்கத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனாமி காரணமாக மெரீனா கடற்கரையிலிருந்து பல மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்த காட்சி. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 26 டிசம்பர் 2004 அன்று இந்தோனீசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. 'சுனாமி' - 2004ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட உள்ளூர ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்தும், குறிப்பாக கடலோர பகுதிகளில் வசித்தவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும். சுனாமி தாக்கி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் சுனாமி தாக்கிய போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களையும் விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,26 டிசம்பர் 2004, தாய்லாந்தில் சுனாமி அலைகள் கரையை நோக்கி வருவதைக் கண்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க உதவும் சிறிய படகுகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் கடுமையாக சேதமடைந்திருந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தமிழகத்தை பொறுத்தவரையில் சுனாமி காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,MCT / Contributor படக்குறிப்பு,சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணி பட மூலாதாரம்,PRAKASH SINGH / Stringer படக்குறிப்பு,2004 சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்து தவித்த அக்கரப்பட்டி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை பட மூலாதாரம்,Paula Bronstein / Staff படக்குறிப்பு,இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனது மூன்று சகோதரர்களைப் பறிகொடுத்த 12 வயது பாத்திமா நுஸ்ரத் பட மூலாதாரம்,Paula Bronstein / Staff படக்குறிப்பு,26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் தனது வீட்டையும் குடும்பத்தையும் இழந்த இலங்கை பெண்மணி பட மூலாதாரம்,U.S. Navy / Handout படக்குறிப்பு,இந்தோனீசியாவில் சுனாமியில் சேதமடைந்த பகுதிகளை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பட மூலாதாரம்,STR / Stringer படக்குறிப்பு,தங்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியேறும் இந்தோனீசிய கிராம மக்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண்டு தோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்தோரை அவர்களுடைய உறவினர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrjwlv2n4wo
  6. தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன் 26 Dec, 2025 | 10:41 AM தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் குறித்த பிரச்சினையை நீடிக்காமல் முடிறுத்தவே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக் கேற்ற அவர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சனையை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது. ஆகவே அரசாங்கம் திடமான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே என்றார். https://www.virakesari.lk/article/234447
  7. மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்; நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் Published By: Vishnu 25 Dec, 2025 | 07:48 PM மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்பாட்டம் இடம்பெற்றது. இதில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை முதல்வர் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுடனர். https://www.virakesari.lk/article/234418
  8. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் தேவராசா - மட்டக்களப்பில் நினைவேந்தல்! 25 Dec, 2025 | 04:43 PM இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை தேவராசாவின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று (25) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் திருவுருவப் படத்துக்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணனால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. பின்னர், அன்னாரது உறவினரான அக்கரைப் பாக்கியன் பேருரை ஆற்றினார். 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளராக கணபதிப்பிள்ளை தேவராசா கருதப்படுகிறார். https://www.virakesari.lk/article/234405
  9. மிக்க நன்றி பிரியன் அண்ணை. மிக்க நன்றி புங்கை அண்ணை. மிக்க நன்றி சிறி அண்ணை. மிக்க நன்றி கிருபன் அண்ணை. மிக்க நன்றி உடையார் அண்ணை. மிக்க நன்றி யாயினி அக்கா. மிக்க நன்றி நந்தன் அண்ணை. மிக்க நன்றி ரசோ அண்ணை. நேற்று 24/12 எனது பிறந்தநாள், எதிர்பாரத விதமாக உறவுகள் நண்பர்கள் சிலர் வீடு வந்து வாழ்த்தினார்கள்.
  10. பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும் கட்டுரை தகவல் பெர்னாண்டோ டூர்டே பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட. கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம். இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ணிக்கை - வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், புதிய நட்சத்திரங்களின் உற்பத்தி வேகம் குறைந்து வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நட்சத்திரங்களின் பிறப்பும் இறப்பும் தற்போதைய ஒருமித்த அறிவியல் கருத்தியலின்படி, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்த சிறிது காலத்திலேயே முதல் நட்சத்திரங்கள் உருவாகத் தொடங்கின. உண்மையில், கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நமது பால்வெளி அண்டத்திலேயே 13 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மூன்று நட்சத்திரங்களைக் கண்டறிந்தது. நட்சத்திரங்கள் அடிப்படையில் சூடான வாயுக்களால் ஆன ராட்சதப் பந்துகள். அவை அனைத்தும் ஒரே மாதிரியாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. விண்வெளித் தூசு மற்றும் வாயுக்கள் நிறைந்த நெபுலா எனப்படும் பிரமாண்ட மேகக்கூட்டங்களில் இவை உருவாகின்றன. ஈர்ப்பு விசை வாயுத் திரட்சிகளை ஒன்றாக இழுக்கிறது; இது இறுதியில் வெப்பமடைந்து ஒரு 'குழந்தை நட்சத்திரமாக' அல்லது புரோட்டோஸ்டாராக மாறுகிறது. பட மூலாதாரம்,Nasa/Esa/CSA/STScI; Processing: J DePasquale/A Pagan/A Koekemoer (STScI) படக்குறிப்பு,குழந்தை நட்சத்திரங்கள் (புரோட்டோஸ்டார்கள்) அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களைத் தரும் மேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன நட்சத்திரத்தின் மையக்கரு கோடிக்கணக்கான டிகிரி அளவுக்கு வெப்பமடையும்போது, அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக அழுத்தப்பட்டு ஹீலியமாக மாறுகின்ற, 'அணுக்கரு இணைவு' என்ற செயல்முறை நடைபெறுகிறது. இது ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடுகிறது. இப்போது நட்சத்திரம் ஒரு நிலையான 'முதன்மை வரிசை' கட்டத்தில் இருக்கும். நமது சூரியன் உள்பட முதன்மை வரிசை கட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களே பிரபஞ்சத்தின் மொத்த நட்சத்திரங்களில் 90% உள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இவை சூரியனின் நிறையைப் போல பத்தில் ஒரு பங்கு முதல் 200 மடங்கு வரை இருக்கின்றன. இறுதியில் இந்த நட்சத்திரங்கள் எரியூட்டும் எரிபொருளை இழக்கின்றன. பின்னர் அவை மரணத்தை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கக்கூடும். நமது சூரியனை போன்ற குறைந்த நிறை கொண்ட நட்சத்திரங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளில் மெல்ல மங்கி மறையும் செயல்முறைக்கு உள்ளாகின்றன. சூரியனைவிட குறைந்தது எட்டு மடங்கு நிறை கொண்ட பிரமாண்ட நட்சத்திரங்களின் முடிவு மிகவும் வியத்தகு முறையில் இருக்கும்: அவை சூப்பர்நோவா எனப்படும் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுக்கு உள்ளாகி வெடித்துச் சிதறுகின்றன. பட மூலாதாரம்,Anadolu via Getty Images பழைய நட்சத்திரங்களின் ஆதிக்கம் கடந்த 2013ஆம் ஆண்டு, நட்சத்திர உருவாக்கப் போக்குகளை ஆய்வு செய்த சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் குழு ஒன்று, இனி உருவாகப் போகும் மொத்த நட்சத்திரங்களில் 95% ஏற்கெனவே பிறந்துவிட்டன என்று கூறியது. "தெளிவாகப் பழைய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டேவிட் சோப்ரல் அந்தக் காலகட்டத்தில் சுபாரு தொலைநோக்கி இணையதளக் கட்டுரையில் கூறியிருந்தார். பிரபஞ்சத்தின் காலவரிசையில், 'காஸ்மிக் நூன்' என்று அழைக்கப்படும் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதியில்தான் நட்சத்திர உருவாக்கம் உச்சத்தில் இருந்ததாகத் தெரிகிறது. "அண்டங்கள் வாயுவை நட்சத்திரங்களாக மாற்றுகின்றன, ஆனால் இப்போது குறைவான விகிதத்திலேயே அதைச் செய்கின்றன," என்கிறார் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்டவியல் பேராசிரியரான டக்ளஸ் ஸ்காட். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் யூக்ளிட் மற்றும் ஹெர்ஷல் தொலைநோக்கிகளின் தரவுகளை ஆய்வு செய்த ஒரு புதிய ஆய்வின் இணை ஆசிரியராக பேராசிரியர் ஸ்காட் உள்ளார். பிரபஞ்சத்தின் பிரமாண்டமான 3D வரைபடத்தை உருவாக்கும் யூக்ளிட் திட்டத்தின் மூலம், அவரும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவும் ஒரே நேரத்தில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான அண்டங்களை ஆய்வு செய்ய முடிந்தது. பட மூலாதாரம்,Esa/Euclid/Euclid Consortium/Nasa; Processing: JC Cuillandre (CEA Paris-Saclay)/G Anselmi படக்குறிப்பு,யூக்ளிட் விண்வெளித் திட்டம், விண்வெளியில் புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் பகுதியின் விவரங்களைப் படம் பிடித்துள்ளது குறிப்பாக விண்வெளித் தூசுகள் வெளியிடும் வெப்பத்தின் மீது ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினர். அதிக நட்சத்திர உருவாக்க விகிதத்தைக் கொண்ட அண்டங்கள், பெரிய மற்றும் வெப்பமான நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதால் அதிக வெப்பமான தூசுகளைக் கொண்டிருக்கும். பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக அண்டங்களின் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருவதை ஆய்வுக் குழு கண்டறிந்ததாக பேராசிரியர் ஸ்காட் கூறுகிறார். "நாம் ஏற்கெனவே நட்சத்திர உருவாக்கத்தின் உச்சகட்டத்தைத் தாண்டிவிட்டோம், ஒவ்வொரு தலைமுறை நட்சத்திர உருவாக்கத்திலும் புதிய நட்சத்திரங்கள் குறைவாகவே பிறக்கும்," என்று அவர் கூறுகிறார். பிரபஞ்சம் எப்போது முடிவுக்கு வரும்? பழைய நட்சத்திரங்களின் மரணம் அதே பொருட்களைப் பயன்படுத்திப் புதிய நட்சத்திரங்கள் உருவாக வழிவகுக்கும் என்பது உண்மைதான், ஆனால் இது அவ்வளவு எளிமையானதல்ல. நமக்கு ஒரு குவியல் கட்டுமானப் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி ஒரு வீட்டைக் கட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். நாம் புதிய வீடு ஒன்றைக் கட்ட விரும்பினால், பழைய கட்டடத்தை மறுசுழற்சி செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் அதிலுள்ள அனைத்துமே பயனுள்ளதாக இருக்காது. "அதாவது நாம் ஒரு சிறிய வீட்டையே கட்ட முடியும். ஒவ்வொரு முறை அதை இடிக்கும்போதும் கிடைக்கும் பயனுள்ள பொருட்கள் என்னால் ஒரு வீட்டைக்கூட கட்ட முடியாத நிலை வரும் அளவுக்குக் குறைந்து கொண்டே இருக்கும்," என்று பேராசிரியர் ஸ்காட் விளக்குகிறார். நட்சத்திரங்களுக்கும் இதுதான் நடக்கிறது. "ஒவ்வொரு தலைமுறை நட்சத்திரங்களுக்கும் எரியூட்டக் குறைந்த எரிபொருளே இருக்கும். இறுதியில் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கக்கூடப் போதுமான எரிபொருள் இருக்காது" என்று அந்த அண்டவியலாளர் கூறுகிறார். பட மூலாதாரம்,Nasa/SDO படக்குறிப்பு,நமது சூரியன் இறுதியாக மங்கி மறைவதற்கு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர் "பிரபஞ்சத்தில் பெரிய நிறை கொண்ட நட்சத்திரங்களைவிடக் குறைவான நிறை கொண்ட நட்சத்திரங்களே மிகவும் அதிகம் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும்." பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாகத் தத்துவங்களை முன்வைத்து வருகின்றனர். அது எப்படி, எப்போது என்பது குறித்து அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாது. தற்போது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று 'வெப்ப மரணம்' (heat death). 'பிக் ஃப்ரீஸ்' (Big Freeze - மகா உறைநிலை) என்றும் அழைக்கப்படும் இது, பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையும்போது, ஆற்றல் பரவி, இறுதியில் உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு குளிர்ச்சியடையும் என்று கணிக்கிறது. நட்சத்திரங்கள் ஒன்றையொன்று விட்டு விலகி தூரமாகச் செல்லும், அவற்றின் எரிபொருள் தீர்ந்துவிடும் மற்றும் புதிய நட்சத்திரங்கள் உருவாகாது. பேராசிரியர் ஸ்காட் அளிக்கும் விளக்கத்தின்படி, "பிரபஞ்சத்தில் கிடைக்கும் ஆற்றலின் அளவு வரையறுக்கப்பட்டது." பட மூலாதாரம்,Esa/Webb/Nasa/CSA/J Lee/PHANGS-JWST Team படக்குறிப்பு,பல அண்டங்களில் நட்சத்திர உருவாக்கம் இன்னும் மிக நீண்ட காலத்திற்குத் தொடரும் நிறைய பூஜ்ஜியங்கள் ஆனால் நீங்கள் வானத்தை ஏக்கமாகப் பார்ப்பதற்கு முன்பாக, நட்சத்திரங்களின் அழிவு நிகழ மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதை அறிய வேண்டும். நமது சூரியன் மறைந்த பிறகும், அடுத்த 10 முதல் 100 டிரில்லியன் ஆண்டுகளுக்குப் புதிய நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும் என்று பேராசிரியர் ஸ்காட் மதிப்பிடுகிறார். 'பிக் ஃப்ரீஸ்' நிலையைப் பொறுத்தவரை, அது இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபஞ்சத்தின் இறுதி முடிவு சுமார் ஒரு 'குவின்விஜிண்டில்லியன்' ஆண்டுகளில் வரும் என்று மதிப்பிட்டனர். அதாவது, ஒன்றுக்குப் பின்னால் 78 பூஜ்ஜியங்களை கொண்ட ஆண்டு எண்ணிக்கை அது. எனவே, நீங்கள் தெளிவான இரவு வானத்தைப் பார்த்து, நட்சத்திரங்களை ரசிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lvqjd9lxno
  11. சுனாமி, டித்வா புயலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் ; நாளை 2 நிமிட மௌன அஞ்சலி ; பொதுமக்களிடம் வேண்டுகோள்! Published By: Digital Desk 1 25 Dec, 2025 | 02:04 PM சுனாமி மற்றும் டித்வா புயல் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 2025ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி பேரழிவிலும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற டித்வா புயல் தாக்கத்தின் பேரனர்த்தங்களிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வானது காலியில் உள்ள பெரலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக நாளை காலை 8.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலகத்தினை மையமாகக் கொண்டு சர்வமத பிரார்த்தனை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இரு நிமிட நிசப்தத்தை கடைபிடித்து, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருமாறும் நாட்டு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/234391
  12. வாசித்தேன், ரசித்தேன். தவிர்த்தலும் நிம்மதிக்கு ஒரு வழி!
  13. 2025 ஆம் ஆண்டில் யானைகளின் இறப்பு வீதம் அதிகரிப்பு Published By: Digital Desk 2 25 Dec, 2025 | 11:33 AM கடந்த ஆண்டை (2024) விட இந்த ஆண்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 18 வரை 409 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் பிரதிப் பணிப்பாளர் யு.எல். தௌஃபிக் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு (2024) பதிவான யானைகளின் இறப்பு எண்ணிக்கை 388 என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 71 யானைகள் இறந்துள்ளதாகவும், மின்சாரம் தாக்கி 56 யானைகள் இறந்துள்ளதாகவும், ரயில் மோதி 20 யானைகள் இறந்துள்ளதாகவும், வேட்டையாடியதால் 48 யானைகள் இறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234378
  14. பேரழிவுக்கு உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது - புபுது ஜயகொட Published By: Vishnu 25 Dec, 2025 | 05:16 AM தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இந்நாட்டின் உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது. ஏகாதிபத்திய நிதி மூலதனமும் முதலாளித்துவ வர்க்கமுமே இந்த அழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டு மென முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். கொழும்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் 'தித்வா சூறாவளியின் துயரத்துடன் முன்னோக்கி' எனும் தொனிப்பொருளில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலகின் மொத்த கார்பன் வெளியேற்றத்தில் 37 சதவீதத்திற்கு பெரும் சொத்துடையவர்களே பொறுப்பு கூற வேண்டும். இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நாடுகளின் செயற்பாட்டால் ஏற்பட்ட 7 பில்லியன் டொலர் அனர்த்த சேதத்திற்கு வளர்ந்த நாடுகளிடம் இழப்பீடு கோர வேண்டும். இலங்கையில் 1996 ஆம் ஆண்டு மண் பாதுகாப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததும் முறையற்ற மணல் அகழ்வு மற்றும் காடழிப்புமே பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கக் காரணம். அனர்த்தத்தின் பெயரால் நவதாராளவாத அடக்குமுறைகளை அரசு திணிக்கக் கூடாது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாட்டின் மீதான வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என அரசு அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் மீதான வெட் வரியை நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி மற்றும் நுண்கடன் ஆகியவற்றை மீள் செலுத்தும் தவணை காலத்தை ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்த அரசு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/234362
  15. இங்கிலாந்து அணியின் மரியாதையை மீட்டெடுப்பதா, வீரர்களைப் பாதுகாப்பதா? - குழப்பத்தில் ஸ்டோக்ஸ் ஆர்.முத்துக்குமார் ஆஷஸ் தொடரை இழந்தது, வீரர்களின் மோசமான ஆட்டம் அதற்கும் மேலாக குடிபோதை பிரச்சினை என்று பென் ஸ்டோக்ஸிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். இந்நிலையில் நாளை மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் தொடங்குகிறது. அணி வீரர்களைப் பாதுகாப்பதா, அல்லது இங்கிலாந்து அணியின் மானத்தை மீட்டெடுப்பதா என்கிற குழப்பத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். களத்தில் இங்கிலாந்து அணியின் ஆட்டம் ஒரு பெருங்கவலை என்றால் களத்திற்கு வெளியே நடத்தை ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வீரர்களின் நூசா கடற்கரை குடிவெறியாட்டமும் இப்போது மக்கள் மத்தியில் இங்கிலாந்து அணியின் மரியாதையை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. மெல்போர்னின் ஒரு லட்சம் ரசிகர்களும் நூஸா குடிபோதை குறித்து இங்கிலாந்து வீரர்களை நிச்சயம் வறுத்தெடுக்கப் போகிறார்கள். இந்தக் கவலைகளிடையே 5-0 ஒயிட்வாஷ் வாங்காமல் குறைந்தது 4-1 என்றாவது தொடரை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் இவையெல்லாம் பற்றி என்ன கூறுகிறார் என்று கேட்போம்: “இப்போது இந்தச் சூழ்நிலையை நான் எப்படிக் கையாளப்போகிறேன் என்பதுதான் என் வாழ்க்கையில் முக்கியமானது. அனைவரது நலமும் முக்கியம் குறிப்பாக கெட்ட பெயர் எடுத்த சில தனிநபர்களையும் காக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்து கேப்டனாக எனக்கு இப்போது பெரிய கடமை காத்திருக்கிறது. இப்போதுதான் முதல் முறையாக இவ்வாறான பிரச்சனைகள் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை உணர்கிறேன். இங்கிலாந்து கேப்டனாக என் வீரர்களைக் காக்க வேண்டும் என்பது முதற்கடமையாக உள்ளது. இந்த பயணத்தில் இன்னும் சாதிக்க வேண்டிய இலக்கு உள்ளது. திட்டமிட்டபடி எதுவும் செல்லவில்லை. இன்னும் 2 போட்டிகள் உள்ளன, எங்களிடம் இன்னும் நிறைய முயற்சிகள் ஆற்றல்கள் உள்ளன. என் வீரர்களை நான் பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் மீதமுள்ள இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது செய்ய முடியும். இந்த 2 போட்டிகளை வென்றாக வேண்டும். என் வீரர்களை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்னால் இயன்ற வரையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இப்போது என்னவெனில் வீரர்கள் நான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உணரவைத்தால்தான் இந்த நாட்டுக்காக இந்த 2 போட்டிகளில் செயல்திறனைக் காட்ட முடியும்.” என்றார். நிருபர்கள் ஸ்டோக்சிடம் திரும்பத் திரும்ப நூஸா குடிபோதை விவகாரத்தைக் கிளற, ஸ்டோக்ஸ் ஒரே பதிலைத் திரும்பத் திரும்ப அளித்தார், ‘நான் தான் ஏற்கெனவே சொன்னேனே, என் வீரர்களை நான் பாதுகாக்க வேண்டும்’ என்றார். “களத்தில் அணியை ஒன்று திரட்டி போட்டியை வெற்றி பெறும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதே வேளையில் இது போன்ற தருணங்களில் வீரர்களைக் காப்பதும் என் பொறுப்புதான். அவர்களை இதிலிருந்து விடுவித்து நல்ல மனவெளியை உருவாக்கினால்தான் களத்தில் அவர்களைச் செயல்பட வைக்க முடியும். இப்போதைக்கு 3-0 என்று பின் தங்கிய பிறகே நாம் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அது துருவி ஆராயப்படும் என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவை விட்டு கிளம்பும்போது திரும்பிப் பார்க்கையில் பாசிட்டிவ் ஆக நினைத்துப் பார்க்க ஏதாவது செய்ய வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். https://www.hindutamil.in/news/sports/restoring-the-respect-of-the-england-team-ben-stokes-in-confusion
  16. இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்; பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவிப்பு Published By: Vishnu 25 Dec, 2025 | 05:14 AM (நா.தனுஜா) பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்ட ம் கடந்த வாரம் இம்பெற்றிருந்த நிலையில் அங்கு கருத்துரைத்த உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார். 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் விசாரணைகளோ அல்லது சிறப்பு நீதிமன்ற விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை' என அவர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார். அதேபோன்று, 'பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர், தப்பிப்பிழைத்தோர் என யாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?' எனவும் உமா குமாரன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் சார்ந்து நிலவும் கரிசனைக்குரிய விடயங்களுக்குத் தீர்வுகாணுமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் இதுசார்ந்த நிலையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். 'மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன' என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/234361
  17. நத்தார் திருநாள் அன்பு, சமாதானம், தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 25 Dec, 2025 | 12:50 AM கிறிஸ்மஸ் திருநாள் அன்பு, சமாதானம், கருணை மற்றும் நம்பிக்கையின் உலகளாவிய செய்தியுடன் மனித குலத்தின் இதயங்களை ஒன்றிணைக்கும் புனிதமான நாளாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது நத்தார் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மனித சமூகத்திற்கு அன்பு, தியாகம், மன்னிப்பு மற்றும் ஒற்றுமையின் உயரிய பண்புகளை எடுத்துக்காட்டியதாக அமைச்சர் குறிப்பிட்டார். அந்த தெய்வீகப் பிறப்பு, மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழவும், வேறுபாடுகளை மதித்து சமாதானமாக இணைந்து செயல்படவும் வழிகாட்டும் ஒரு நிரந்தர ஒளிவிளக்காகத் திகழ்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மகத்தான திருநாளை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் தனது இதயம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், கிறிஸ்மஸ் திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை விதைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்றைய சமூக மற்றும் பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலில், கிறிஸ்மஸ் எடுத்துச் சொல்லும் மனிதநேய மதிப்புகள் மிகவும் அவசியமானவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். பரஸ்பர புரிதல், சகோதரத்துவ உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை வலுப்பெறும்போது மட்டுமே நிலையான தேசிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இலங்கை மக்களும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே கிறிஸ்மஸ் திருநாள் வழங்கும் பிரதான செய்தி எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த ஒற்றுமை உணர்வே நாட்டின் அமைதி, அபிவிருத்தி மற்றும் எதிர்கால வளத்திற்கான அடித்தளமாக அமையும் என்றும் தெரிவித்தார். இந்த கிறிஸ்மஸ் பண்டிகை, புதிய நம்பிக்கையுடனும், புதுப்பித்த உற்சாகத்துடனும் அனைவரையும் ஒன்றிணைத்து, சமூகத்தில் மனிதநேயமும் கருணையும் வேரூன்ற உதவ வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்த அமைச்சர், ஒற்றுமை, சமாதானம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய மதிப்புகளுடன் புதிய ஆண்டை எதிர்கொள்ள அனைவரையும் அழைத்துள்ளார். https://www.virakesari.lk/article/234348
  18. இந்தியா-சீனா உறவு பற்றி அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் சீனாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துவருவது குறித்தும் சில கருத்துகள் வெளியாகியுள்ளது. 'சீனக் குடியரசு தொடர்பான ராணுவம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள்' என பெயரிடப்பட்டுள்ள ஆண்டு ஆய்வறிக்கை, அமெரிக்க செனட் அவையிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது. மேலும், சீனா புதிதாக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளுடன் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சேர்த்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு சீன வெளியுறவு அமைச்சக கண்டனம் தெரிவித்துள்ளது. "அமெரிக்கர்களிடமிருந்து இதே போன்ற கதையை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறோம்," என சீனா தெரிவித்துள்ளது. மற்றொருபுறம், தென் சீன கடல் , சென்காகு தீவுகள் மற்றும் அருணாச்சல பிரதேசம் தொடர்பாக, சீனா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா மற்றும் பாகிஸ்தானின் உறவு தொடர்ந்து ஆழமாகி வருவதாகவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பல்வேறு விதமான போர் விமானங்களை சீனா வழங்கியுள்ளது. இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, ஷி ஜின்பிங்குக்கும் பிரதமர் மோதிக்கும் இடையே நடந்த சந்திப்பு குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக சீனாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க செனட் அவை தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் ராணுவ திறன்கள் மற்றும் உத்தி ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும் அதன் அண்டை நாடுகள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் இந்த அறிக்கை அலசுகிறது. உதாரணமாக, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக நிலையற்றதாக உள்ளது என்றும் ஆனால் சமீபமாக உறவு மேம்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறையின் அறிக்கை உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது. அதில், "2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையேயான சந்திப்புக்கு இரு தினங்களுக்கு முன்பாக, இந்திய நிர்வாகம் எல்ஏசி பகுதியில் சீனாவுடனான சிக்கலை தீர்ப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை அறிவித்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "ஷி ஜின்பிங் - மோதி இருவரின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான மாதாந்திர உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது, இதில் இரு தரப்பினரும் எல்லை நிர்வாகம் குறித்தும் நேரடி விமானங்கள், விசா வசதிகள், கல்வி மற்றும் பத்திரிகையாளர்கள் ரீதியான பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருநாட்டு உறவுகள் குறித்தும் ஆலோசிப்பார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், "எல்ஏசி பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது. மேலும், அமெரிக்கா - இந்தியா உறவுகள் மேலும் வலுவடைவதை தடுக்கவும் சீனா விரும்புகிறது. எனினும், சீனாவின் நோக்கங்கள் குறித்து இந்தியாவுக்கு சந்தேகம் நீடிக்கிறது. தொடர்ச்சியான பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் மற்ற கவலைக்குரிய பிரச்னைகள் ஆகியவை இருநாட்டு உறவுகளை கட்டுப்படுத்துகின்றன." என தெரிவிக்கப்பட்டுள்ளது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த அறிக்கையின்படி, சீனா 2020 முதல் பாகிஸ்தானுக்கு 36 ஜே-10சி விமானங்களை வழங்கியுள்ளது. எகிப்து, உஸ்பெகிஸ்தான், இந்தோனீசியா, இரான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்த விமானங்களின் மீது ஆர்வம் தெரிவித்துள்ளன. (கோப்புப் படம்) அருணாச்சல பிரதேசம் குறித்து குறிப்பிட்டுள்ளது என்ன? சீனா சமரசம் செய்துகொள்ளாத அதன் "முக்கியமான விருப்பங்கள்" என, அந்த அறிக்கை மூன்று விஷயங்களை குறிப்பிடுகிறது. முதலாவது, சீன கம்யூனிச கட்சியின் கட்டுப்பாடு, இரண்டாவதாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய பகுதிகளுக்கு உரிமை கோருவதை விரிவாக்கம் செய்தல் ஆகியவை. "சீனாவின் தலைமைத்துவம் 'முக்கிய நலன்கள்' என்ற சொல்லின் வரையறையை தைவான் மீதான சீனாவின் இறையாண்மை உரிமைகோரல்கள் மற்றும் தென் சீனக் கடல், சென்காகு தீவுகள், மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள பிராந்தியப் பிணக்குகளையும் அதில் சேர்த்துள்ளது." என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2049-ஆம் ஆண்டுக்குள் 'சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை' அடைவதே சீனாவின் தேசிய உத்தி என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையின்படி, "ஒரு 'புதிய சீனா' தனது செல்வாக்கு, மற்றும் நிகழ்வுகளை வடிவமைக்கும் திறனை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும்", மேலும், 'போரிட்டு வெற்றிபெறக்கூடிய' மற்றும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை 'உறுதியுடன் பாதுகாக்கக்கூடிய' ஒரு 'உலகத் தரம் வாய்ந்த' ராணுவத்தை அது உருவாக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. டிரம்பின் தலைமையின் கீழ், அமெரிக்கா-சீனா உறவுகள் "பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவாக உள்ளன" என்றும், இந்த முன்னேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஆதரவளிக்கும் என்றும் அது குறிப்பிடுகிறது. "மக்கள் விடுதலை ராணுவத்துடன் (PLA) ராணுவ ரீதியான ஒத்துழைப்பின் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலமும், மூலோபாய நிலைத்தன்மை, மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் பதற்றத்தைக் குறைப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலமும், நாங்கள் இதைச் செய்வோம். எங்களின் அமைதியான நோக்கங்களைத் தெளிவுபடுத்துவதற்கான பிற வழிகளையும் நாங்கள் ஆராய்வோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் குறித்து கூறப்பட்டுள்ளது என்ன? சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நன்றாக அறியப்பட்டதே, அதுவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனா எந்தெந்த நாடுகளுக்கு உதவி செய்துவருகிறது, என்ன மாதிரியான ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளன என்பது குறித்தும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், அந்த அறிக்கையில், தன்னுடைய மூன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளில் சீனாவிடம் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாகவும் இது இது சீனாவின் 'முன்கூட்டியே எச்சரித்து பதிலடி கொடுக்கும்' திறனை மேம்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், "அமெரிக்கர்களிடமிருந்து இதே கதையை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுவருகிறோம். அமெரிக்க அணு சக்தியை வேகமாக மேம்படுத்தி வருவதை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். உலகளாவிய மூலோபாய நிலைத்தன்மையில் தாக்கத்தை செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சர்வதேச சமூகம் இதுகுறித்து கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்காவும் அணுசக்தி வல்லரசாக விளங்குகிறது. அணு ஆயுதங்களை நீக்குவதற்கான தன்னுடைய கடமையை அமெரிக்கா பூர்த்தி செய்ய வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளதாகவும் அதில் நான்கு போர்க்கப்பல்கள் கடந்த தசாப்தத்தில் வழங்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சீனா ஏற்றுமதிக்காக மூன்று முக்கிய போர் விமானங்களை வழங்குகிறது: ஐந்தாம் தலைமுறை FC-31, நான்காம் தலைமுறை J-10C பல்நோக்கு போர் விமானம், மற்றும் சீனா மற்றும் பாகிஸ்தானால் கூட்டாக உருவாக்கப்படும் JF-17 இலகுரக போர் விமானம் ஆகியவை ஆகும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2025ம் ஆண்டு மே மாதத்தின்படி, எந்தவொரு FC-31 விமானமும் எந்தவொரு நாட்டுக்கும் விற்கப்படவில்லை என்றும் ஆனால் எகிப்து, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அதனை பெறுவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை, தஜிகிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மற்ற சில நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பது குறித்து சீனா அநேகமாக பரிசீலித்துவருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலாக்கா நீரிணை, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற கடல் தொடர்பு வழிகளை அணுகுவதற்கும் சீன ராணுவம் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2k4we7k8jgo
  19. கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! Published By: Digital Desk 3 25 Dec, 2025 | 01:45 PM கடவத்தையில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வு (Float Operated Valves) தொகையை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது. லேபிள் விதிமுறைகளை மீறி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கத்தை குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்த பின்னர், அந்த வால்வுகளை அழிக்க நீதிமன்றம் 15ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சுமார் ரூ. 500,000 மதிப்புள்ள வால்வுகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் லேபிளிங் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்த பின்னர், மஹர நீதவான் நீதிமன்றம் அவற்றை அழிக்க உத்தரவிட்டது. அதன்படி, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கம் குறிப்பிடாமல் மிதக்கும் பந்து வால்வுகளை விற்பனை செய்தமைக்காக கடவத்தை எல்தெனிய பகுதியில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. தரக்கட்டளை நிறுவனத்தின் பதிவு இலக்கம் குறிப்பிடப்படாத வால்வுகளை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹார்ட்வேர் நிறுவனம் ஒன்றுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் (ITI) உத்தியோகபூர்வ இலச்சினையை அனுமதியின்றி பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு நிறுவனம் ஒரு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டது. நிறுவனம் மீதான வழக்கு மீண்டும் 2026 ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், தரம் குறைந்த உதிரிபாகங்கள் விரைவில் பழுதடைவதால் நீர் கசிவு (Water Leaks) ஏற்பட்டு உங்கள் நீர் கட்டணம் அதிகரிக்கலாம். எனவே சந்தையில் உரிய லேபிள்கள் அல்லது விபரங்கள் இல்லாத தரம் குறைந்த வால்வுகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அதிக செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிப்போவது முழு நாட்டுக்கும் ஏற்படும் ஒரு தேசிய குற்றமாகும். தரம் குறைந்த பொருட்களுக்கு ஏமாற வேண்டாம், எப்போதும் தரம் குறித்து விழிப்புடன் இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234393
  20. அது நடக்க வாய்ப்பு இல்லை தானே அண்ணை! அப்ப நீங்க கேள்விக் கொத்தை தயாரிக்க தொடங்கலாம்!!
  21. பேரிடரின்போது மதம், இனம், கட்சியை பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களும் வெளிப்படுத்திய அன்பும் தியாகமுமே நத்தாரின் உண்மையான அர்த்தம்! - சபாநாயகர் 25 Dec, 2025 | 11:27 AM “இந்த ஆண்டு முழு தேசமும் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். இந்தப் பேரழிவு, ‘ஒரே நாட்டு மக்கள்’ என்ற வகையில் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன்” என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு சபாநாயகர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது: "தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பியதால் தேவன் நம் மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. அதன்படி, அன்பு, தியாகம் மற்றும் கருணை ஆகியவற்றின் அர்த்தங்களை அடையாளப்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நத்தார் காலம், இலங்கை கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு அழகான சந்தர்ப்பமாகும். நத்தாரின் உண்மையான அர்த்தம் மனிதநேயம் மற்றும் அன்பான தியாகத்தை வலியுறுத்துவதும், அத்தகைய வாழ்க்கைக்குத் தேவையான ஆன்மிக பாதைகளைத் திறப்பதுமாகும். இருப்பினும், இந்த ஆண்டு முழு தேசமும் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். இந்தப் பேரழிவு, ‘ஒரே நாட்டு மக்கள்’ என்ற வகையில் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன். அதன்படி, உங்கள் அனைவருக்கும் இந்த நத்தார் காலம் அனைத்து சவால்களையும் கடந்து, ஒரு நாடாகவும் தேசமாகவும் மீண்டும் எழுச்சி பெற, இயேசு கிறிஸ்துவால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட மனிதகுல அன்பை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவும், அமைதியை அடையவும் குறிக்கோளாகக் கொண்ட மகிழ்ச்சியான, வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் நல்வாழ்த்துக்கள்!” என்றுள்ளது. https://www.virakesari.lk/article/233874
  22. விண்வெளியில் ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா ; பத்து ஆண்டுகளில் நிலவில் அணுமின் நிலையம் Published By: Digital Desk 2 25 Dec, 2025 | 10:32 AM விண்வெளி ஆய்வில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா, 2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் ஒன்றை அமைக்க முடிவெடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து நிலவில் நிறுவவுள்ள கூட்டு ஆய்வு மையத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வரலாற்று ரீதியாக, ரஷ்யா விண்வெளியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில் அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யா உள்ளது. ஆளில்லா லூனா-25 என்ற விண்கலத்தைரஷ்யா ஒகஸ்ட் 2023 இல் ஏவியது. இருப்பினும் குறித்த விண்கலம் இலக்கை அடைவதற்கு முன்பே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ரஷ்யாவின் விண்வெளி முயற்சியில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஷ்யாவின் அரச விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos), 2036 ஆம் ஆண்டுக்குள் சந்திர மின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதைச் செய்ய லாவோச்ச்கின் அசோசியேஷன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்த ஆலையின் நோக்கம் ரஷ்யாவின் சந்திர திட்டத்திற்கு சக்தி அளிப்பதாகும், இதில் ரோவர்கள், ஒரு ஆய்வகம் மற்றும் கூட்டு ரஷ்ய-சீன சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி போட்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உலக நாடுகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234375
  23. நள்ளிரவு கூட்டுத்திருப்பலி! Dec 25, 2025 - 09:17 AM உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான நத்தார் பண்டிகை நேற்று (24) நள்ளிரவு மலர்ந்தது. உலகெங்கிலும் உள்ளது போலவே, இலங்கையிலும் கிறிஸ்தவ பக்தர்கள் நத்தார் பிறப்பை மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு கூட்டுத்திருப்பலி வரலாற்று சிறப்பு மிக்க யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/top-picture/cmjkwj9yb033io29nb2d6v3jh
  24. இருளான யுகத்தை விலக்கி, நம்பிக்கையின் விளக்கால் உலகை ஒளிமயமாக்குவோம்! - நத்தார் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 25 Dec, 2025 | 12:49 AM 2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான். அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல், நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகியவற்றையாகும். அந்த விசுவாசத்துடன், இலங்கையினால் மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உலக முழுவதும் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையை கடுமையாக பாதித்த டித்வா புயலுக்குப் பின் நம் தேசம் எதிர்கொண்ட வலி மிகுந்த அனுபவங்களை நினைவில் கொண்டு 2025 நத்தார் பண்டிகையை நாம் எதிர்நோக்குகின்றோம். அந்தப் புயலின் காரணமாக நமது சொந்த நாட்டில் நமது சொந்த மக்களின் உயிர்கள், சொத்துக்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்ற பலவற்றை இழந்தோம். அவை எல்லாவற்றையும் விட, தங்களது அனைத்தையும் இழந்த மக்களின் கண்ணீரும் வேதனையும் நமது இதயங்களில் பதிந்துள்ளன. கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நத்தார் பண்டிகை என்பது அழிவுகளுக்கிடையே நம்பிக்கை பிறக்கும் காலமாக குறிப்பிடப்படலாம். தீமையை விலக்கி நன்மை ஆட்சி செய்யும் யுகத்தின் விடியலாகும். இருளான இரவுகளில் கூட ஓர் ஒளி பிறக்கிறது. அது நம்பிக்கையின் ஒளி. டித்வா புயலுக்குப் பின் நாம் அனுபவித்த, நாம் கண்ட இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி உயர்ந்து கைகோர்த்த இலங்கையர்களின் ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான இதயத்தின் வழியாக நாம் ஒரு நாடாக மீண்டும் ஒரு முறை எழுந்து நிற்கவேண்டும். அந்த ஒற்றுமையை நமது வலிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நமக்கு தேவையானது பிளவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அல்ல, மக்களின் வேதனைக்கு பதிலளிக்கும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும், நீதியான மற்றும் கருணை நிறைந்த நாட்டை உருவாக்குவதாகும். எதிர்காலத்தில் நாம் ஒரு நாடாக பெரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே இந்த அழிவிலிருந்து பாடங்களை கற்று, உதவியற்றவர்களை பாதுகாக்கும், பேரழிவுகளின் முன்னால் மக்களை தனிமைப்படுத்தாத அரசை உருவாக்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். 2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான். அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல் மற்றும் நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகும். அந்த விசுவாசத்துடன், இலங்கை மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, இந்த நத்தார் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இலங்கை கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் புதிய நம்பிக்கை நிறைந்த நத்தார் பண்டிகையாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்! https://www.virakesari.lk/article/234333
  25. பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்! Dec 24, 2025 - 11:31 PM யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று இரவு 8.15 மணியளவில் நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினைத் துரத்தி வந்த நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வீதியோரத்தில் இருந்த தையல் கடை மற்றும் மற்றுமொரு கடைக்குள் புகுந்து மோதியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் தையல் கடையின் முன்னால் நின்றுகொண்டிருந்த மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு கடைகளும், மூன்று தையல் இயந்திரங்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் துரத்தி வந்தமையாலேயே கார் மிக வேகமாக வந்து விபத்துக்குள்ளானதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தணிக்க, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjkblp7j033bo29nt9655fwz

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.