Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Live 13th Match (D/N), Visakhapatnam, October 12, 2025, ICC Women's World Cup India Women 330 Australia Women (16/50 ov, T:331) 105/1 AUS Women need 226 runs from 34 overs. Current RR: 6.56 • Required RR: 6.64 • Last 5 ov (RR): 21/1 (4.20)
  2. காசா எல்லையை அடைந்துள்ள மனிதாபிமான உதவிப் பொருட்கள் எகிப்தின் ஊடாக தெற்கு காசாவின் ரஃபா எல்லையை கடக்கும் பகுதிக்கு இன்று காலை மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய லொறிகள் அடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வௌ்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையில் இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், நாளை (13) காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில் மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய பெரும்பாலான லொறிகள் அந்த எல்லைப் பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சில லொறிகள் மாத்திரமே காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய லொறிகள் எல்லையிலேயே தரித்து நிற்பதாக கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசியுடன் இணைந்து திங்கட்கிழமை எகிப்தில் நடைபெறும் சர்வதேச அமைதி உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார். "காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை முயற்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பனவற்றுக்கான புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்தார். அதேநேரம் நாளை நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmgnev0ua00yro29nckb3eii4
  3. 12 Oct, 2025 | 12:51 PM (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் குறித்த பேச்சுகள் தேசிய அரசியலில் சூடுப்பிடித்துள்ள நிலையில், ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் போதே ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியாது. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கு மாத்திரம் தான் தேர்தலை எப்படி நடத்தவது என்று தெரியும். ஏனெனில் மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நாட்டில் இல்லை. அவ்வாறிருக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழுவால் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும். குறிப்பாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இன்று கோஷமிடுபவர்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து தேர்தலை ஒத்திவைக்கவே நடவடிக்கை எடுத்திருந்தனர். எனவே ஆணைக்குழுவால் ஒன்று செய்ய இயலாது. தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பிரேரனை ஒன்றை நிறைவேற்றினால் போதுமானது. ஆனால் இலங்கையின் தேர்தல்களின் புதிய முன்னேற்றங்கள் குறித்து பேசி விட்டு மீண்டும் பழைமையான முறைமைக்கு செல்வது எதற்கு என்பதை சிந்திக்க வேண்டும். மாகாண சபை தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை குறித்து பேசுகின்றனர். அவ்வாறாயின் கலப்பு உறுப்பினர் விகிதாசார அல்லது புதிய தேர்தல் முறைமை குறித்து ஏன் பேச வேண்டும். எனவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என்றார். https://www.virakesari.lk/article/227534
  4. "2000 வீடுகள் அல்ல!, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு! மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம்! - ஜீவன் தொண்டமான்" Published By: Vishnu 12 Oct, 2025 | 06:38 PM அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் ஒரு விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவருடைய சமூக ஊடகப் பதிவின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.... "இன்று வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்) இந்நிகழ்வானது "2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல!", ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே" என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை, கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே என ஜீவன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வேதன அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/227561
  5. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, காஸா தெருக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் வீரர்கள் கட்டுரை தகவல் ருஷ்டி அபுவாலூஃப் காஸா நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலிய படைகள் பின்வாங்கும் இடங்களில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த தனது பாதுகாப்பு படைகளில் 7000 உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் அழைத்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ராணுவ பின்னணி கொண்ட மூன்று ஆளுநர்களையும் ஹமாஸ் நியமித்துள்ளது, இவர்களில் சிலர் ஹமாஸின் ராணுவ பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர். இந்த உத்தரவு தொலைப்பேசிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் வீரர்கள் பணிக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில் அதன் நோக்கம், "இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றுபவர்களையும், விரோதிகளையும் காசாவிலிருந்து சுத்தப்படுத்துதல்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய ஹமாஸின் பிரிவுகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக காஸாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் பொதுமக்கள் உடைகளிலும், மற்றவர்கள் காஸா காவல்துறையின் நீல சீருடையிலும் இருந்தனர். காஸா நகரின் சப்ரா பகுதியில் ஹமாஸ் சிறப்பு படைகளைச் சேர்ந்த இருவர் துக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் மூத்த தளபதியான இமாத் அகெலின் மகன் ஆவார். இமாத் தற்போது ஹமாஸின் ராணுவ உளவுப்பிரிவின் தலைவராக உள்ளார். பட மூலாதாரம், Getty Images தெருக்களில் விட்டுச் செல்லப்பட்ட அவர்களின் உடல்கள் ஹமாஸிடம் கோபத்தை அதிகரித்து பெரிய ராணுவ பதிலடிக்கான சாத்தியங்களை அதிகரித்தது. பின்னர் 300 ஆயுதமேந்திய துக்முஷ் குழுவைச் சேர்ந்தவர்கள் மெஷின் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இருந்ததாக நம்பப்பட்ட இடத்தை ஹமாஸ் உறுப்பினர்கள் சுற்றி வளைத்தனர். இன்று காலை துக்முஷ் குழு உறுப்பினர் ஒருவரைக் கொன்ற ஹமாஸ் மேலும் 30 பேர் சிறைபிடித்துள்ளது. இந்தக் குழுவின் ஆயுதங்கள் சில போரின்போது ஹமாஸின் கிடங்குகளிலிருந்து களவாடப்பட்டவை. மற்ற ஆயுதங்கள் பல வருடங்களாக இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தவை. போர் முடிந்த பிறகு காஸாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும் சூழலில் ஹமாஸின் அணிதிரட்டல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. டிரம்பின் அமைதி திட்டத்தில் இரண்டாவது கட்டத்தை சிக்கலாக்கக்கூடிய முக்கியமான பிரச்னை இது தான். ஹமாஸ் ஆயுதத்தை கைவிட வேண்டும் என டிரம்பின் அமைதி திட்டம் கூறுகிறது. பட மூலாதாரம், Getty Images வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் அதிகாரி ஒருவர் சமீபத்திய படை குவிப்பு பற்றி நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டு பிபிசியிடம் பேசுகையில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருக்கும் கொள்ளையர்கள் மற்றும் ஆயுதமேந்தியவர்களின் கருணையில் நாங்கள் காஸாவை விட்டுவிட முடியாது. எங்களின் ஆயுதங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான சட்டப்பூர்வமானவை. ஆக்கிரமிப்பு உள்ளவரை ஆயுதங்கள் எங்களிடம் இருக்கும்." எனத் தெரிவித்தார். காஸாவில் பாலத்தீன அதிகார சபைக்காக பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காஸா மீண்டுமொரு உள்நாட்டு சண்டையை நோக்கி நகர்வதாக அஞ்சுகிறேன் எனத் தெரிவித்தார். "ஹமாஸ் மாறவே இல்லை. தற்போதும் கூட ஆயுதமும் வன்முறையும் தான் அதன் இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழி என நம்புகிறது," என பிபிசியிடம் தெரிவித்தார். "காஸா ஆயுதங்களால் நிறைந்திருக்கிறது. போரின்போது திருடர்கள் ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும் குண்டுகளையும் ஹமாஸிடமிருந்து திருடிச் சென்றுள்ளனர். அதில் சில குழுக்களுக்கு இஸ்ரேலிடமிருந்து கூட ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது." "ஆயுதங்கள், கோபம், ஏமாற்றம், குழப்பம் மற்றும் பிளவுபட்ட மற்றும் நொந்து போயிருக்கும் மக்கள் திரள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த துடியாக இருக்கும் ஒரு இயக்கம் - உள்நாட்டு போருக்கான சிறந்த சூழல் இது தான்." எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுமா அல்லது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் காஸாவை மையமாக கொண்ட மனித உரிமைகள் வழக்கறிஞர் கலீல் அபு ஷம்மலா. "தற்போது உள்நாட்டு சண்டைக்கான அனைத்து சூழல்களும் இருப்பதால் காஸா மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் அச்சத்தில் உள்ளனர்." எனத் தெரிவிக்கிறார் கலீல். தீவிர அழுத்தத்தின் காரணமாக தான் ஹமாஸ் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், "பாதுகாப்பு விவகாரங்களில் தலையிடுவது உட்பட எந்த வழியிலாவது தனது செல்வாக்கை தக்க வைப்பதற்கான அதன் தொடர் முயற்சிகள் ஒப்பந்தத்தை சீர்குலைத்து காஸா மக்களை மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2j21x99dko
  6. @மோகன் அண்ணை, மேலுள்ளவாறு உள்நுழையும்போது காட்டுகிறது. உள்நுழைவதில் பிரச்சனை இல்லை.
  7. மகளிர் உலகக் கிண்ணம் : இலங்கையை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இங்கிலாந்து Published By: Vishnu 12 Oct, 2025 | 02:43 AM மகளிர் உலகக் கிண்ண தொடரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி இலங்கை அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்தது. அணியின் தலைவி நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் (Nat Sciver-Brunt) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 117 ஓட்டங்கள் சேர்த்தார். பின்னர், 254 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, எதிரணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் போராடியபோதும், 45.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் ஹசினி பெரேரா அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227504
  8. சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 01:56 PM சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்தார். பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின் (Cao Shumin) வரவேற்றார். இந்த விஜயத்தின் முதல் நாளில், பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்டார். யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களான தடைசெய்யப்பட்ட நகரம் (அரண்மனை அருங்காட்சியகம்), ஏகாதிபத்தியக் கட்டிடக்கலை ஆகியன தேசிய அளவில் பாதுகாக்கப்பட்டு வரும் தொகுப்பாகும். அத்தோடு, சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானக் கலையின் மகிமையை எடுத்துக்காட்டும் சீனப் பெருஞ்சுவரும், சீனாவின் முக்கியமாகப் பாதுகாக்கப்படும் சின்னங்களாகத் திகழ்கின்றன. எதிர்வரும் நாட்களில், பிரதமர் 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதுடன், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச சபைப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள இருக்கின்றார். https://www.virakesari.lk/article/227527
  9. வாட்ஸ்அப்-க்கு சவால் அளிக்குமா அரட்டை செயலி? - இந்திய செயலியின் சாதக பாதகங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை, மேலும் இந்தச் செயலி நாட்டில் கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது. கட்டுரை தகவல் செரிலான் மோலன் பிபிசி நியூஸ்,மும்பை நெயாஸ் ஃபாரூக்கி பிபிசி நியூஸ், டெல்லி 14 நிமிடங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் என்ற மாபெரும் போட்டியாளருடன் இந்தியத் தயாரிப்பு மெசேஜிங் செயலி ஒன்று போட்டியிட முடியுமா? கடந்த சில வாரங்களாக, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ (Zoho) உருவாக்கிய 'அரட்டை' (Arattai) என்ற மெசேஜிங் செயலி நாட்டில் திடீர் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் ஏழு நாட்களில் இந்தச் செயலி 70 லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், அதற்கான தேதிகளை அது குறிப்பிடவில்லை. சந்தை ஆய்வுகளை மேற்கொள்ளும் சென்சார் டவர் (Sensor Tower) நிறுவனத்தின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அரட்டையின் பதிவிறக்கங்கள் 10,000க்கும் குறைவாகவே இருந்தன. தமிழில் 'அரட்டை' என்று பொருள்படும் இந்தச் செயலி, 2021 இல் சாதாரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பலர் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அமெரிக்க வர்த்தக வரிகளால் இந்தியாவில் ஏற்படும் தாக்கத்தின் விளைவாக, மத்திய அரசு தற்சார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த செயலியின் பிரபலம் திடீரென அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் கடந்த சில வாரங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான்: இந்தியாவில் உருவாக்குங்கள், இந்தியாவில் செலவிடுங்கள். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டு வாரங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அரட்டை செயலி பற்றிப் பதிவிட்டு, மக்களை "தொடர்பில் இருக்க மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்னர், மேலும் பல அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அரட்டை குறித்துப் பதிவிட்டுள்ளனர். அரசின் இந்த முயற்சி "அரட்டை செயலியின் பதிவிறக்கங்கள் திடீரென அதிகரிக்க நிச்சயமாக உதவியது" என்று ஸோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது. "வெறும் மூன்று நாட்களில், ஒரு நாளைக்கான புதிய பதிவுகள் 3,000 இலிருந்து 3,50,000 ஆக அதிகரித்ததைக் கண்டோம். எங்கள் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது, அந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது," என்று ஸோஹோ தலைமைச் செயல் அதிகாரி மணி வேம்பு பிபிசியிடம் தெரிவித்தார். இது, பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டுத் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார். செயலியில் உள்ள பயனர்கள் பற்றிய விவரங்களை நிறுவனம் வழங்கவில்லை. இருப்பினும், இந்தியாவில் 50 கோடி மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பின் எண்ணிக்கையிலிருந்து அரட்டை செயலி இன்னும் வெகுதொலைவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை. மொத்தமாக குட் மார்னிங் வாழ்த்துகளை அனுப்புவது முதல் தங்கள் வணிகங்களை நடத்துவது வரை மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதால், இது கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாகவே நாட்டில் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சென்சார் டவர் சந்தை ஆய்வு நிறுவனத்தின்படி, செப்டம்பர் மாதம் அரட்டையின் மாதச் செயலில் உள்ள பயனர்களில் 95%க்கும் அதிகமானோர் இந்தியாவில் இருந்தனர். அரட்டை, வாட்ஸ்அப்பைப் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது பயனர்கள் செய்திகளை அனுப்பவும், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இரண்டு செயலிகளும் வணிகத்திற்கான ஒரு தொகுப்பு கருவிகளை வழங்குகின்றன. மேலும், வாட்ஸ்அப்பைப் போலவே, அரட்டையும் குறைந்த விலை போன்களிலும் ,மெதுவான இணைய வேகத்திலும் சீராகச் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறுகிறது. பல பயனர்கள் சமூக ஊடகங்களில் அரட்டையைப் பாராட்டி உள்ளனர். சிலர் அதன் இன்டர்பேஸ் மற்றும் வடிவமைப்பு பிடித்திருப்பதாகக் கூறினர். மற்றவர்கள் அது பயன்பாட்டில் வாட்ஸ்அப்பை ஒத்துள்ளது என்று உணர்ந்தனர். பலர் அது இந்தியத் தயாரிப்புச் செயலி என்பதில் பெருமிதம் கொள்வதுடன், மற்றவர்களையும் அதைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்தனர். அரட்டை, மிகப்பெரிய சர்வதேசப் போட்டியாளர்களை மாற்றீடு செய்யக் கனவு காணும் முதல் இந்தியச் செயலி அல்ல. கடந்த காலத்தில், கூ (Koo) மற்றும் மோஜ் (Moj) போன்ற இந்தியத் தயாரிப்புச் செயலிகள் முறையே எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் டிக்டாக்கிற்கு (2020 இல் இந்திய அரசு சீனச் செயலியைத் தடை செய்த பிறகு) மாற்றாகப் பேசப்பட்டன. ஆனால், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு அவை பெரிதாக வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் வாட்ஸ்அப்புக்கு மிகப்பெரிய போட்டியாளராகப் பேசப்பட்ட ஷேர்சாட்டும் (ShareChat) கூடத் தனது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப எழுத்தாளரும், ஆய்வாளருமான பிரசாந்தோ கே ராய் கூறுகையில், வாட்ஸ்அப்பின் பரந்த பயனர் தளத்தைப் பிளப்பது அரட்டை செயலிக்குக் கடினமானதாக இருக்கும். குறிப்பாக, மெட்டாவின் கீழ் உள்ள வாட்ஸ்அப் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் மற்றும் அரசாங்க சேவைகள் செயல்படுகின்றன. அரட்டையின் வெற்றி புதிய பயனர்களை ஈர்ப்பதில் மட்டுமல்ல, அவர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் தான் உள்ளது. இதை தேசிய உணர்வால் மட்டும் செலுத்த முடியாது என்று அவர் கூறுகிறார். "தயாரிப்பு நன்றாக இருக்க வேண்டும், ஆனால் அப்படி இருந்தாலும், உலகில் ஏற்கனவே கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ஒரு செயலியை இது மாற்றுவதற்குச் சாத்தியம் அதிகமில்லை," என்று ராய் மேலும் கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2020 இல் தொடங்கப்பட்ட கூ (Koo) செயலி X-க்கு மாற்றாகப் பேசப்பட்டது, ஆனால் அந்தச் செயலி கடந்த ஆண்டு மூடப்பட்டது. அரட்டையில் உள்ள தரவுப் தனியுரிமை (Data Privacy) குறித்தும் சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் செயலி வீடியோ மற்றும் குரல் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (E2EE) வழங்கினாலும், செய்திகளுக்கு இந்த அம்சத்தை தற்போது தரவில்லை. "பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, செய்திகளின் மூலத்தைக் கண்டறிய அரசாங்கம் விரும்புகிறது, இதை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இல்லாமல் எளிதாகச் செய்யலாம்," என்று இந்தியாவில் தொழில்நுட்பக் கொள்கை குறித்துப் பதிவிடும் இணையதளமான மீடியாநாமாவின் (MediaNama) நிர்வாக ஆசிரியர் சசிதர் கே.ஜே. கூறுகிறார். ஆனால், இது மக்களின் தனியுரிமையை அபாயத்திற்குள்ளாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார். அரட்டை செயலி, உரைச் செய்திகளுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குவதற்காக தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது. "நாங்கள் ஆரம்பத்தில் E2EE உடன் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டோம், இது இன்னும் இரண்டு மாதங்களில் நடந்திருக்கும்," என்று மணி வேம்பு கூறினார். "இருப்பினும், காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சில முக்கியமான அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை முடிந்தவரை விரைவாகக் கொண்டு வர முயற்சிக்கிறோம்." வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குகிறது. ஆனால், அதன் கொள்கையின்படி, சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் சூழ்நிலைகளில் அரசாங்கங்களுடன் மெட்டா தரவைப் (செய்தி அல்லது அழைப்புப் பதிவுகள் போன்றவை) பகிர முடியும். இந்தியாவின் இணையச் சட்டங்களின்படி, சமூக ஊடகத் தளங்கள் சில சூழ்நிலைகளில் மத்திய அரசுடன் பயனர் தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. ஆனால், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இந்தத் தரவைப் பெறுவது கடினமானது மற்றும் நேரம் எடுக்கும் செயல். மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற உலகளாவிய பெரு நிறுவனங்கள், நியாயமற்றவை என்று அவர்கள் கருதும் அரசாங்கக் கோரிக்கைகள் அல்லது விதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட மற்றும் நிதி ஆதாரங்களை கொண்டுள்ளன. 2021 இல், சமூக ஊடகம் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் இந்தியாவில் வழக்குத் தொடர்ந்தது. அவை வாட்ஸ்அப்பின் தனியுரிமைப் பாதுகாப்புகளை மீறுவதாகக் கூறியது. உள்ளடக்கத்தை முடக்குவதற்கான அல்லது நீக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு எதிராக எக்ஸும் சட்ட சவால்களை எழுப்பியுள்ளது. எனவே, பயனர்களின் தனியுரிமை உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அரசாங்கக் கோரிக்கைகளை இந்தியத் தயாரிப்பு அரட்டை செயலியால் தாங்கி நிற்க முடியுமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தொழில்நுட்பச் சட்டம் குறித்துச் சிறப்பு கவனம் செலுத்தும் ராகுல் மத்தன் கூறுகையில், அரட்டையின் தனியுரிமைக் கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பகிர்வது குறித்த ஸோஹோவின் நிலைப்பாடு பற்றி மேலும் தெளிவு வரும் வரை, பலர் அதைப் பயன்படுத்த தயக்கம் காட்டலாம். மத்திய அமைச்சர்கள் இந்தச் செயலியை விளம்பரப்படுத்துவதால், ஸோஹோ அரசுக்கு கடமைப்பட்ட்டிருப்பதாக அந்த நிறுவனம் உணருவதற்கு வாய்ப்புள்ளது என்று ராய் கூறுகிறார். மேலும், நாட்டின் சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கக் கோரிக்கைகளுக்கு இணங்கச் சொல்லும்போது, ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் அதை வலுவாக எதிர்ப்பது எளிதல்ல என்றும் அவர் கூறுகிறார். அத்தகைய கோரிக்கைகள் வந்தால் அரட்டை என்ன செய்யும் என்று கேட்டபோது, நிறுவனம் "நாட்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதோடு, தங்கள் தரவின் மீது பயனர்கள் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்று விரும்புவதாக மணி வேம்பு கூறுகிறார். "முழு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வெளியிடப்பட்டவுடன், பயனர் உரையாடல்களின் உள்ளடக்கத்தை நாங்கள் கூட அணுக முடியாது. எந்தவொரு சட்டப்பூர்வ கடமைகளைப் பற்றியும் நாங்கள் எங்கள் பயனர்களுடன் வெளிப்படையாக இருப்போம்," என்று அவர் கூறினார். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பழக்கத்தை ஏற்படுத்தும் பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் போது, நிலைமை இந்தியச் செயலிகளுக்கு எதிராகவே உள்ளது என்று அனுபவம் காட்டுகிறது. அரட்டை செயலியால் இதில் வெற்றி பெற முடியுமா - அல்லது அதற்கு முன் இருந்த பல செயலிகள் போல மங்கிவிடுமா - என்பதைக் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjr5rg8wz8vo
  10. படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிட உயர் நீதிமன்ற தடை விதித்துள்ளது. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிடுவது, சமைப்பது, அசைவ உணவை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அக்டோபர் 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவ்வாறு பலியிடுவது என்பது இந்திய அரசின் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்களின் விதிகளை மீறுவதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை' என அழைப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, சிக்கந்தர் தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? இந்திய தொல்லியல் கழகம் கூறியது என்ன? படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையின் மறுபுறத்தில்அமைந்துள்ள சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்கா. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர், தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளுடன் மலையேற முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், 'மலையில் ஆடு, கோழியை பலியிட அனுமதியில்லை' எனக் கூறினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இருந்த நவாஸ்கனி எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகள் மலையில் ஆய்வு நடத்தினர். அப்போது மலையின் படிக்கட்டில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் வேல் ஊர்வலம் நடத்தினர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்குமாறு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் மனுத்தாக்கல் செய்தார். மலையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு ராமலிங்கம் என்பவரும் கந்தர் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்குமாறு பரமசிவம் என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர். தர்கா தரப்பில் நிர்வாகிகள் ஒசிர்கான் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர், தர்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியும் பக்தர்களுக்கு சாலை, குடிநீர், கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்குமாறும் மனுக்களை தாக்கல் செய்தனர். மலையை, 'சமணர் குன்று' என அறிவிக்கக் கோரி சுவஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாச்சார்ய மகா சுவாமி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை கடந்த ஜூன் மாதம் நீதிபதிகள் ஜே.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளுடன் மலையேற முயன்றார். முரண்பட்ட நீதிபதிகள் அப்போது நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'மலையை, திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும். சிக்கந்தர் அல்லது சமணர் குன்று என அழைக்கக் கூடாது' என உத்தரவிட்டவர், 'ஆடு, கோழிகளை பலியிடவும் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தவும் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும்' எனவும் தெரிவித்தார். அதுவரை, மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டார். படக்குறிப்பு, இந்த வழக்கில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. 'கந்தர் மலையா.. சிக்கந்தர் மலையா?' வழக்கின் விசாரணையின்போது சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், "1923-ஆம் ஆண்டு வெளியான நீதிமன்ற உத்தரவு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த எந்தவொரு தீர்ப்பிலும் தர்காவின் சடங்குகளுக்கு கோவிலின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை' என வாதிட்டார். தர்காவின் சொத்து மற்றும் இறை நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான தன்னாட்சி உரிமைகளை நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "தர்கா அமைந்துள்ள பகுதி சிக்கந்தர் மலை என்று வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்படும் சான்றுகளும் 1886-ஆம் ஆண்டு சர்வே வரைபடங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. வருவாய், நீதிமன்ற உத்தரவுகளில் சிக்கந்தர் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளன" எனவும் ஐசக் மோகன்லால் கூறினார். இந்த வழக்கில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 'பல தர்காக்களில் விலங்குகளை பலியிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. நெல்லித்தோப்பு பகுதியில் பல ஆண்டுகளாக தொழுகை நடத்தப்படுகிறது' எனக் கூறினார். படக்குறிப்பு, தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்றதாக வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டது என்ன? வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன், "உள்ளூரில் நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சில அரசியல் அமைப்புகள் மட்டுமே நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கின்றன" எனக் கூறினார். "தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்கின்றனர். அப்படியிருக்கும்போது நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது" எனவும் அவர் வாதிட்டார். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சார்பாக ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தங்களின் சொத்துகளை எவ்வாறு அனுபவிப்பது என்பதை முடிவு செய்யும் முழு உரிமையும் தர்கா நிர்வாகிகளுக்கு உள்ளதாக வாதிட்டார். படக்குறிப்பு, ஆடு, கோழிகளை பலியிடுதல் என்பது இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள மத நடைமுறை என்றார் ரவீந்திரன் 'இந்து பக்தர்கள் எதிர்ப்பு காட்ட முடியாது' ஆடு, கோழிகளைப் பலியிடுதல் என்பது இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள மத நடைமுறையாக உள்ளதாக வாதிட்ட ரவீந்திரன், "தர்கா வளாகத்தில் பழங்காலத்தில் இருந்தே விலங்குகளை பலியிடுதல் என்பது நடைமுறையாக உள்ளதைக் காட்டும் பதிவுகள் உள்ளன" எனக் கூறினார். "நெல்லித்தோப்பு பகுதியானது இஸ்லாமியர்களின் சொத்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தொழுகை நடத்த வேண்டுமா... இல்லையா என்பதை இந்து பக்தர்கள் எதிர்ப்பு காட்ட முடியாது" எனவும் ரவீந்திரன் வாதிட்டார். தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்த அவர், "இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் நிர்வாக அலுவலர், கோவில் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் பற்றி மட்டும் விளக்கம் அளிக்க முடியும்" எனக் கூறினார். மலையில் உள்ள நெல்லித்தோப்பு மற்றும் மலை உச்சியில் உள்ள தர்கா ஆகியவை அவரது நிர்வாகத்தின்கீழ் இல்லை எனவும் ரவீந்திரன் தெரிவித்தார். படக்குறிப்பு, முழு மலைப் பகுதியும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என ASI வாதம். இந்திய தொல்லியல் கழகம் கூறியது என்ன? வழக்கில் இந்திய தொல்லியல் கழகத்தின் (ASI) வாதம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. "சிக்கந்தர் தர்காவில் பலியிடுவது நடைமுறையாக இருந்தால் அது இந்திய தொல்லியல் கழகத்தின் சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட வேண்டும்" என வாதிட்ட இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "முழு மலைப் பகுதியும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அவை நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்." எனக் கூறினார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, "மலையில் உள்ள சமண குகைகளை பச்சை வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி சேதப்படுத்தியது தொடர்பாக காவல்துறையில் தொல்லியல் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்." எனக் குறிப்பிட்டார். மலையில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கைகளைப் (Pancha Pandava beds) பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வக்ஃப் வாரியம், இந்திய தொல்லியல் கழகத்தின் சட்டப்பிரிவு 19, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை மட்டும் கையாள்வதாகவும் வழக்கின் நிலவரங்களுக்கு இது பொருந்தாது எனவும் வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.விஜயகுமார், இந்திய தொல்லியல் கழகத்தின் இரண்டு அறிவிப்புகளை மேற்கோள் காட்டினர். படக்குறிப்பு, சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என நீதிபதி தெரிவித்தார். தொல்லியல் கழகத்தின் 2 அறிவிப்புகள் 'இந்திய தொல்லியல் கழகம் கடந்த 29.7.1908 மற்றும் 7.2.1923 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட இரு அறிவிப்பில், மலையின் மேற்குச் சரிவில் பஞ்ச பாண்டவர் படுக்கைகள், சிக்கந்தர் மலையின் உச்சியில் மசூதிக்குப் பின்புறம் உள்ள குகை ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது' எனத் தெரிவித்தார். "சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு ஆதாரம் இல்லை" எனத் தெரிவித்துள்ள நீதிபதி, "தொல்லியல் கழகத்தின் அறிவிப்பில் திருப்பரங்குன்றம் மலை என்றும் அதில் சிக்கந்தர் மசூதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். லண்டன் ப்ரிவி கவுன்சில் அளித்துள்ள உத்தரவில், 170 ஏக்கர் பரப்பளவுள்ள திருப்பரங்குன்றம் மலையில் 33 சென்ட் அளவுள்ள நெல்லித்தோப்பு மற்றும் சிக்கந்தர் தர்கா தவிர மற்ற பகுதிகள் கோவிலுக்குச் சொந்தமானதாக கூறப்பட்டுள்ளதாக, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மலையின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த மலையையும் சிக்கந்தர் தர்கா பெயரில் அழைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' எனத் தீர்ப்பில் நீதிபதி ஆர்.விஜயகுமார் கூறியுள்ளார். முன்னதாக, தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பில் உடன்படுவதாகக் கூறியுள்ள நீதிபதி ஆர்.விஜயகுமார், "பழங்காலத்தில் இருந்து மலையில் ஆடு, கோழி பலியிடப்பட்டு வருவதாக தர்கா நிர்வாகம் கூறுகிறது. ஆனால், மனுதாரர்களும் கோவில் நிர்வாகமும் இந்த நடைமுறை இல்லை என்கின்றனர்" என்கிறார். படக்குறிப்பு, மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு விழா காலங்களில் முருகனின் வேல் எடுத்துச் செல்லப்படுகிறது. 'பலியிட அனுமதிக்க முடியாது' "திருப்பரங்குன்றம் மலையில் சுமார் 172.2 ஏக்கர் பரப்பளவை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்திய தொல்லியல் கழகம் அறிவித்துள்ளது. அங்கு விலங்குகளை எந்த நோக்கத்துக்காகவும் கொண்டு செல்லக் கூடாது" என, நீதிபதி ஆர்.விஜயகுமார் தெரிவித்துள்ளார். சிக்கந்தர் தக்கா மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளின் உரிமையாளர்களாக தர்கா நிர்வாகிகள் உள்ளனர். "ஆனால் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் விதிகள் 1959ன்படி (Ancient Monuments and Archaeological Sites and Remains Rules, 1959) துறையின் அனுமதியில்லாமல் விலங்குகளை பலியிட அனுமதிக்க முடியாது" என, நீதிபதி கூறியுள்ளார். "அதையும் மீறி அனுமதியை வழங்குவது என்பது தொல்லியல் சட்டத்துக்கு எதிரானது. அந்தவகையில் திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது" என, நீதிபதி ஆர்.விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். தர்கா அமைந்துள்ள பகுதிக்கு நெல்லித்தோப்பு வழியாக சென்றடைய வேண்டும். இப்பகுதி வழியாக மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு விழா காலங்களில் முருகனின் வேல் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, 'சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றுடன் இந்தப் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாரம்பரிய படிக்கட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம்" எனக் கூறியுள்ளார். 'நெல்லித்தோப்பில் பிரார்த்தனை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரிய மனுவை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்ததை மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் ஏற்றுக் கொண்டார். முடிவில், மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் மலையில் ஆடு, கோழிகளை பலியிடவும் சிக்கந்தர் மலை என அழைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள் மத்தியில் வரவேற்பும் இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன? "காலம்காலமாக நடைபெற்று வந்த வழிபாட்டு உரிமையைத் தடுப்பது என்பது வேதனையைத் தருகிறது" எனக் கூறுகிறார், சிக்கந்தர் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரு தரப்பிலும் பாரம்பரிய வழிபாட்டு உரிமை தொடர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், ஆடு, கோழியை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது" எனக் கூறுகிறார். "தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து தர்காவில் உள்ள கமிட்டி நிர்வாகம் முடிவு செய்யும்" எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறும் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், "திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என, கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசின் காவல்துறை தான் தடுத்து நிறுத்தியது" எனக் கூறுகிறார். "ஆனால், அதற்கு மாறாக நீதிமன்றத்தில் தர்கா நிர்வாகத்துக்கு சாதகமாக அரசுத் தரப்பு வாதிட்டது. மலையின் புனிதத்தைக் காக்கும் வகையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என வாதிட்டோம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது" எனக் கூறுகிறார், சோலைக்கண்ணன். காலம்காலமாக பலியிடும் வழக்கம் இருந்து வந்ததாக தர்கா நிர்வாகிகள் கூறுவது குறித்துக் கேட்டபோது, "தர்காவில் உள்ள சமாதி மட்டும் தான் அவர்களுக்கு சொந்தமானது. மலையின் மேல் விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் இருந்ததில்லை" எனக் கூறுகிறார், சோலைக்கண்ணன். படக்குறிப்பு, மேல்முறையீடு செய்யவுள்ளதாக எம்.பி நவாஸ்கனி கூறுகிறார். 'புதிய தடைகளை எதிர்பார்க்கவில்லை' - நவாஸ்கனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆடு, கோழியை பலியிடும் வழக்கம் உள்ளதால் அந்த உரிமையை வழங்குமாறு தான் நீதிமன்றத்தில் கேட்டோம். அங்கு இஸ்லாமியர்கள் மட்டும் நேர்த்திக்கடன் செலுத்தவில்லை. மாற்று சமூத்தினரும் நேர்த்திக் கடன் செலுத்தி வந்துள்ளனர்" என்கிறார். "மலையில் ஆய்வு செய்துவிட்டு நடைமுறை இருப்பதாக அறிந்ததால் அதனைத் தொடர்வதற்கு அனுமதிக்குமாறு கோரினோம். ஆனால், புதிய தடைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ள உள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4r4ev9ejlo
  11. 12 Oct, 2025 | 09:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், ஐந்தாவது ஆய்வை நிறைவு செய்து நிதியை விடுவிக்க இலங்கை இரண்டு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஐந்தாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு, அரசாங்கம் பின்வரும் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் அளவீடுகளுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன், கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, பலதரப்பு பங்காளிகளின் நிதி பங்களிப்புகள் பாதுகாக்கப்படுவதையும், நிதி உத்தரவாதங்களின் மதிப்பாய்வு நிறைவடைவதையும் இலங்கை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த இரு நிபந்தணைகளும் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறைவேற்றுகுழுவின் ஒப்புதலுக்காக இந்த மதிப்பாய்வு சமர்ப்பிக்கப்படும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, நிறைவேற்றுகுழுவின் ஒப்புதல் கிடைத்த பின்னர், இலங்கைக்கு 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பெறும் மொத்த நிதி உதவி சுமார் 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக உயரும். சர்வதேச நாணய நிதியத்தின் உடனான பேச்சுவார்த்தைகள் ஸ்திரமான பாதையில் செல்கின்றன என்பதைக் காட்டினாலும், 2026 வரவு செலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நிறைவேற்றுவது அரசாங்கத்திற்குள் சவால்களை ஏற்படுத்தலாம். அதே சமயம், கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து, நிதி உத்தரவாதங்களை உறுதிப்படுத்துவது என்பது பன்னாட்டுப் பங்காளிகளிடம் தங்கியுள்ள ஒரு கடினமான இராஜதந்திரப் பணியாகும். மறுபுறம் இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதே, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அடுத்த படிக்கு அத்தியாவசியமாகும்;. நவம்பர் 7 ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்பிக்க உள்ள நிலையில் இந்த இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227510
  12. Published By: Vishnu 12 Oct, 2025 | 12:24 AM அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாட்டில் முட்டை விலை குறைப்பதற்கான முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. சங்கத் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார் போல, உற்பத்தி செலவுகள் குறைந்ததையும் சந்தை நிலைமை சீராகி வருவதையும் கருத்தில் கொண்டு, முட்டையின் விலை ரூ.10 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி வெள்ளை முட்டை ஒன்றின் விலை ரூ.18 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும். மேலும், அரசு வரி கொள்கைகள் மற்றும் தீவன விலை சீரமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விலையை மேலும் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதற்கமைய விற்பனை நடைபெறும் எனவும் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/227500
  13. Published By: Vishnu 12 Oct, 2025 | 02:00 AM சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், "ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் – பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை சீன அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு (UN Women) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றுவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் உள்ளிட்ட உயர்மட்ட சீன தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார். பிரதமர் சனிக்கிழமை (11) இரவு சீனாவுக்கு புறப்படவுள்ளதாகவும், இவ்விழா இலங்கை மற்றும் சீனாவுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/227503
  14. Published By: Vishnu 12 Oct, 2025 | 12:32 AM ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதமடைந்து வருவதாகவும், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் பயணிப்பதாகவும், வேப்பங்குளம் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லையென தெரிவித்தும் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை (11.10.2025) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தினர். அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன் அப்பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உள்ளக மைதான கட்டடத்தொகுதி என்பன உள்ளதால் பெருமளவான மாணவர்கள் வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது. இதனையடுத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்களும் விஜயம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினர். இதன்போது தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கையளித்தனர். இதன்போது குறித்த விடயம் தொடர்பில், குறிப்பாக பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் உரிய துறைசார் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், ஏனைய விடயங்களை அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். இதனையடுத்து மக்களால் குறிப்பிடப்பட்ட கனரக வாகனங்கள் கல் ஏற்றிச்செல்லும் வேப்பங்குளம் பகுதியிலுள்ள கல்குவாரிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் குவாரியினை ஆய்வுசெய்ததுடன் அதன் உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். இதன்பிற்பாடு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர், குவாரி உரிமையாளர், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். தொடர்ந்து குறித்த பாதையை சீரமைத்துதர கல்குவாரி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் மேலதிக பங்களிப்பினை வழங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரும் உறுதியளித்தார் அத்துடன் புகையிரத திணைக்கள அனுமதியுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் புகையிரத கடவையை பாதுகாப்பான பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் இணக்கம் காணப்பட்டது. இதனையடுத்து சேதமடைந்துவரும் வீதியினை அனைவரும் இணைந்து பார்வையிட்டதுடன், மாற்றுப்பாதைகளுக்கான சாத்தியம் பற்றியும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227501
  15. தாலிபன் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு இல்லை - இந்திய அரசு கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images 11 அக்டோபர் 2025 புது தில்லியில் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி வெள்ளிக்கிழமையன்று (10 அக்டோபர் 2025) நடத்திய செய்தியாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வியாழக்கிழமை இந்தியா வந்த முத்தக்கி, வெள்ளிக்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஆப்கன் அரசை சேர்ந்தவர்களுடன் இந்தியாவில் நடைபெற்ற முதல் உயர்மட்ட சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை புதுதில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்றது. இதில் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பலர் பதிவிட்டுள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுத் தொடர்பு இயக்குநர் ஹபீஸ் ஜியா அகமது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது. ஆப்கானிஸ்தானை நிர்வகித்துவரும் தாலிபன் அரசாங்கம் மீது, மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களின் கல்வி மீதான கட்டுப்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளது. பெண்களுக்கு கல்வி மற்றும் உரிமைகளை கொடுப்பது இஸ்லாமியத்திற்கு எதிரானது என தாலிபன்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் இல்லாதது குறித்து இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி ப. சிதம்பரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டப் பதிவில், "தாலிபன்களுடன் இணைந்து நாம் செயல்படவேண்டிய புவிசார் அரசியல் நிர்பந்தங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் பாரபட்சமான மற்றும் பழமையான பழக்கவழக்கங்களை நாமும் ஏற்றுக்கொள்வது முற்றிலும் அபத்தமானது. தாலிபன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொள்ளாவிடாமல் பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது" என்று எழுதியுள்ளார். தனது பதிவில், கார்த்தி சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் டேக் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "பெண் பத்திரிகையாளர்களை செய்தியாளர் சந்திப்பில் இருந்து விலக்கும் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தக்கியின் முடிவை நம் அரசாங்கம் எப்படி அனுமதித்தது? இந்திய மண்ணில்,அவர்கள் விருப்பப்படி நடக்க எப்படி அனுமதிக்கலாம்? இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டார்? இந்த செய்தியாளர் சந்திப்பில் முதுகெலும்பில்லாத நமது ஆண் பத்திரிகையாளர்கள் எப்படி கலந்துக் கொண்டார்கள்?" என்று எழுதியுள்ளார். இந்நிலையில், "ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை" என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், @HafizZiaAhmad படக்குறிப்பு, ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு பெண் பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன? இதை, "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறும் பல பெண் பத்திரிகையாளர்கள், செய்தியாளர் சந்திப்பில் பாலின பாகுபாடு என்பது, நமது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். தாலிபன்கள் இந்தியாவில் பெண்களைப் புறக்கணிக்க முடியும் என்றால், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் குறித்த அவர்களின் சிந்தனையை தெள்ளத்தெளிவாக புரிந்துக் கொள்ளமுடியும் என்றும் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். வெளியுறவு விவகாரம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் பிரபலமான பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா சமூக ஊடக வலைத்தளமான X-இல், முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு எந்தப் பெண் பத்திரிகையாளரும் அழைக்கப்படவில்லை என்று பதிவிட்டார். "வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முத்தக்கிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண்களின் மோசமான நிலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை." "பெண்களின் சாதனைகள் மற்றும் தலைமைத்துவத்தில் பெருமை கொள்ளும் ஒரு நாட்டில், நாட்டின் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, முத்தக்கிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதான் இன்றைய உலகளாவிய அரசியல்..." ஸ்மிதா சர்மாவின் பதிவை மறுபதிவு செய்து பதிவிட்ட பத்திரிகையாளர் நிருபமா சுப்பிரமணியன், "சக பெண் ஊழியர்களைப் பிரித்துப் பார்ப்பது குறித்து ஆண்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார் . பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 'பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களைச் சேர்க்க முயற்சித்தேன்' "ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி, புதுதில்லி ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளர் கூட அனுமதிக்கப்படவில்லை. தூதரக வாயிலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன், ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை" என்று NDTV இன் மூத்த நிர்வாக ஆசிரியர் ஆதித்ய ராஜ் கெளல் பதிவிட்டுள்ளார். "பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று முயற்சித்த பத்திரிகையாளர்கள் இருவரில் ஆதித்ய ராஜ் கெளலும் ஒருவர். பெண்களை ஏன் அனுமதிக்க முடியாது என்று அவர் கேள்வி கேட்டார்! ஆடைக் குறியீட்டை மதித்து, அனைத்து பெண் பத்திரிகையாளர்களும் தங்களை முழுமையாக மூடிக்கொண்ட போதிலும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தாலிபன்களிடம் எதுவும் எடுபடவில்லை!" என்று கெளலுக்கு ஆதரவாக சுயாதீன பத்திரிகையாளர் அர்பண் எழுதினார். ஸ்மிதா சர்மாவின் பதிவை மறுபதிவு செய்த தி இந்து செய்தித்தாளின் ராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், "அதிகாரப்பூர்வ நெறிமுறைகளுடன் இந்திய அரசாங்கம் தாலிபன் தூதுக்குழுவை வரவேற்கிறது. இதிலும் மேலும் அபத்தமானது என்னவென்றால், பெண்களுக்கு எதிரான அவர்களின் வெறுக்கத்தக்க மற்றும் சட்டவிரோத பாகுபாட்டை இந்தியாவிற்கு கொண்டு வர தாலிபன் வெளியுறவு அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று எழுதினார். "ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது," என்று பத்திரிகையாளர் கீதா மோகன் எழுதினார். பட மூலாதாரம், Getty Images "நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு செய்தி நிறுவனமாக, பெண் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு நாம் செய்தி சேகரிக்க செல்லக் கூடாது. டெல்லியில் தாலிபன் வெளியுறவு அமைச்சரின் கூட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடவோ ஒளிபரப்பவோ கூடாது" என்று இந்து குழுவின் இயக்குனர் மாலினி பார்த்தசாரதி கூறினார் . "என் கருத்துப்படி, அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்," என்று தி இந்துவின் துணை ஆசிரியர் விஜேதா சிங் எழுதினார் . "காட்டுமிராண்டித்தனமான தாலிபன்களை நம் நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் முதலில் இந்திய மண்ணை அவமதித்தீர்கள், பின்னர் கற்காலத்திலிருந்தே இந்தியாவில் நடைமுறையில் உள்ள பெண்களுக்கு எதிரான பாலின-பாகுபாடு சட்டங்களை அவர்கள் செயல்படுத்த மகிழ்ச்சியுடன் அனுமதிக்கிறீர்கள். இது நம்பமுடியாதது! செய்தியாளர் சந்திப்புகளில் பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்வதைத் தடுப்பதற்குப் பதிலாக, பாலின சமத்துவம் குறித்த பாடங்களை நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். நமது ஜனநாயக விழுமியங்களுக்காக எழுந்து நிற்க உங்களுக்கு தைரியம் இல்லையா?" என கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்வாதி சதுர்வேதி எழுதியுள்ளார். வரலாற்றாசிரியர் ருச்சிகா சர்மா இவ்வாறு கேள்வி கேட்கிறார்: "இது ஆப்கானிஸ்தான் அல்ல, இந்தியா! இந்திய மண்ணில் தாலிபன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள பெண்களை அனுமதிக்காததற்கு அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்? இந்திய அரசாங்கத்திற்கு என்ன ஆயிற்று?" தாலிபன்கள் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய தாலிபான்கள் நாட்டை நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்துள்ளன. முன்னதாக, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கல்வி தடை விதிக்கப்பட்டதிலிருந்து, வெளி உலகத்துடன் இணைவதற்கான ஒரே வழிமுறையாக இணையம் மாறிவிட்டது என்று ஆப்கானிஸ்தான் பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு, பல்கலைக்கழகங்களிலிருந்து பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டன. பள்ளிக்குச் செல்வதற்கான தடை,"கல்வி கற்கும் உரிமையை அப்பட்டமாக மீறுவதாக" ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் மையம் விவரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjg158lezo
  16. 12 Oct, 2025 | 09:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது, தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்பு கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் இவர்கள் கூடுதலான உறவை வளர்க்க விரும்புகின்றனர். இந்த அணுகுமுறை காரணமாகவே அமெரிக்காவின் பக்கமிருந்து பெரும் ஆதரவுகள் அரசாங்கத்திற்கு கிடைத்தன. ஆனால் மார்க்சிசம் அல்லது சோசலிச சார்பு கொள்கையில் இருக்கும் ஆளும் கடசியின் மற்றொரு தரப்பான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் செல்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்தக் கடுமையான இழுபறி காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கியமான அம்பாந்தோட்டை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலப்பிட்டிய மற்றும் சப்புகஸ்கந்த போன்ற பல பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் முடங்கியுள்ளன. சமீபத்தில், அரசாங்கம் இந்த கொள்கை ரீதியான நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் சில திட்டங்களை முன்னெடுத்திருந்தது. கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பணிகள் மீண்டும் சீனாவுக்கு வழங்கியது. இதற்கான கடனை அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக சீன யுவானில் பெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. மேலும் அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கான சினோபெக் நிறுவனம் கேட்ட 40 வீத சந்தை வாய்ப்பை வழங்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. அரசாங்கத்தின் இந்த மாற்றத்தைக் கண்காணித்த அமெரிக்கா உடனடியாக எதிர்வினையாற்றியது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நியூயோர்க் விஜயத்தின் போது, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க தரப்புடன் கலந்துரையாடல்களில் இதன் போது ஈடுப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவுக்கு வழங்குவது குறித்து அமெரிக்காவின் கடுமையான கவலைகள் உள்ளதாக இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர் நேரடியாகக் கூறியிருந்ததாகவும், அதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இது முந்தைய அரசாங்கத்தின் முடிவு என்றும், மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கைக்கு முதலீடுகள் தேவைப்படும ;போது அமெரிக்கா இன்னும் எந்த முதலீட்டையும் செய்யவில்லை என்றும் அரசாங்கம் பதிலளித்துள்ளது. இதற்குப் பின்னரே, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அஞ்சுவதாகவும், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையில் ஒத்திசைவின்மை இருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவரான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, சீன முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 20 வீத வரியைக் குறைப்பது மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கையின் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு கரையோர பாதுகாப்பு கப்பல் மற்றும் கண்காணிப்பு சீ1-30 ஹெலிகொப்டர் வழங்க அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227509
  17. கிளிநொச்சியில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளில் 2ஆம் லெப்டினன்ட் மாலதி நினைவேந்தல் நிகழ்வு Published By: Vishnu 11 Oct, 2025 | 04:10 AM தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், பாரதிபுரம் வட்டாரத்துக்குட்பட்ட சூசைப்பிள்ளை கடைச் சந்தியில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் தியாகமும் வீரமும் நிறைந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து உரையாற்றினார். தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/227448
  18. 11 Oct, 2025 | 10:54 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு வெள்ளிக்கிழமை (10) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. சகோதரர்களான இவர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றின் பொருள்களையும் பாடல்களாக வழங்கியுள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், அதாவது லிடியன் நாதஸ்வரத்துக்கு 9 வயதும், அமிர்தவர்ஷினிக்கு 12 வயதும் இருக்கும்போது இந்த பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 10 வருடங்கள் கடந்த பின்னர் அவர்களது படைப்பு வெளியிடப்பட்ட நிலையில் பலரும் அதற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடகர்கள் இதில் பாடியுள்ளனர். குறிப்பாக தேனிசை தென்றல் தேவா, உன்னிமேனன் உட்பட பலர் பாடியுள்ளதுடன் இலங்கையில் இருந்தும் 25இற்கு மேற்பட்ட பாடகர்கள் இதில் பாடியுள்ளனர். இதன் முதல் வெளியீடு தமிழகத்தில் இடம்பெற்ற நிலையில் இரண்டாவது வெளியீடு யாழில் இடம்பெற்றது. இந்த படைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான், வைகோ, திருமாவளவன் உட்பட பலர் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர். நேற்றைய பாகம் 02 வெளியீட்டின் முதல் இறுவட்டினை யாழ். இந்திய துணை தூதுவர் சிறீமான் சாய் முரளி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஏனைய இறுவட்டுகளை தமிழ்த்துறை பேராசிரியர் சிவலிங்கராஜா, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ். தமிழ்ச்சங்க செயலாளர் லலீசன், பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். லிடியன் நாதஸ்வரம் தனது கல்வியை தரம் 02 வரையிலும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி தனது கல்வியை தரம் 07 வரையிலும் கற்றிருந்த நிலையில் உலகம் போற்றும் இந்த சாதனையை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227459
  19. இந்தியா - ஆப்கானிஸ்தானின் நெருக்கத்தால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல் அன்ஷுல் சிங் பிபிசி நிருபர் 11 அக்டோபர் 2025, 08:56 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டுடன் சீனா தனது தொடர்புகளை அதிகப்படுத்த தொடங்கியது. தற்போது இந்தியாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தாலிபனுடனான தொடர்புகளை இந்தியா அதிகரித்து வருகிறது, ஆனால் முதல் முறையாக தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி டெல்லிக்கு வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் முத்தக்கியும் உள்ளார். வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனான உயர்மட்ட கூட்டத்தில் முத்தக்கி கலந்து கொண்டார். அதே நேரத்தில் காபூலில் உள்ள இந்தியாவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மிஷனை தூதரகமாக மாற்றுவதாக ஜெய்சங்கர் அறிவித்தார். 2021 ஆகஸ்டில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு காபூலில் இருந்த தூதரகத்தை மூடியது இந்தியா. தற்போது வரை இந்தியாவும் மற்ற நாடுகளைப் போல தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ரஷ்யா மட்டுமே தாலிபன்களை அங்கீகரித்துள்ள ஒரே நாடாக உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளை "பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வலிமையை நோக்கியது" என ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை "நெருங்கிய நண்பர்" என அழைத்துள்ள முத்தக்கி இந்திய நிறுவனங்களை ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா-ஆப்கானிஸ்தான் பரஸ்பர நலன்கள் 1990களில் தாலிபன்கள் முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தபோது இந்தியா அவர்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. ஆனால் 2021-இல் தாலிபன் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து ஆப்கானிஸ்தானின் நிலைமை முற்றிலுமாக மாறிய பிறகு இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு அளவான தொடர்பை மேற்கொண்டது. இன்று இந்தியா மற்றும் தாலிபன் நலன்கள் இணையும் பல்வேறு இடங்கள் உள்ளன. இரு தரப்பும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் குறியாக இருப்பதாக இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களுடைய கூட்டறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, பிராந்தியம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்லாமிய அரசு கோரசான் (ISIS-K) அமைப்பை தாலிபன்கள் கருதுகின்றனர். பல்வேறு சர்வதேச மன்றங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா குரல் கொடுத்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது. இதற்கிடையில், தாலிபன்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த ஐஎஸ்ஐஎஸ்-கே போன்ற அமைப்புகளை பலவீனப்படுத்த விரும்புகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் ஓய்வு பெற்ற பேராசிரியரும் தலைவருமான அனுராதா சினோய், முத்தக்கியின் வருகையை இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளின் எதிர்காலத்திற்கு நேர்மறையான நகர்வாகப் பார்க்கிறார். பிபிசியிடம் ஹிந்தியிடம் பேசுகையில், "அமீர் கான் முத்தக்கியை வரவேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நல்ல நகர்வை மேற்கொண்டுள்ளதாக நினைக்கிறேன். தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லையென்றால் இந்தப் பிராந்தியத்தில் (தெற்கு ஆசியா) நிலையற்றத்தன்மை அதிகரிக்கும், ஏனென்றால் பக்ரம் விமானப்படை தளத்தை திருப்பி எடுத்துக் கொள்ளப்போவதாக டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானும் இந்தியாவை ஆதரித்தது. எனவே இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பின் நலன்களும் உள்ளன." என்று தெரிவித்தார் அனுராதா சினோய். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2021-இல் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தாலிபன் கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார் அதன் வெளியுறவு அமைச்சர். இருப்பினும், இந்தியாவிற்கும் தாலிபன்களுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதில் ஆப்கானிஸ்தானில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். தனது அதிருப்தியை எக்ஸ் ஊடகத்தில் பதிவு செய்த ஆப்கானிய பத்திரிகையாளர் ஹபீப் கான், "ஆப்கானிஸ்தான் குடிமகனாக, இந்தியாவை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் இந்தியா இங்கு நிறைய பணிகளைச் செய்துள்ளது. சல்மா அணை, பாராளுமன்றம் மற்றும் சாலைகளை இந்தியா கட்டியது. ஆனால், தாலிபன்களுடனான உறவை இயல்பாக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் எனக்கு ஏமாற்றம் அளிக்கின்றன. தாலிபன்கள் எங்கள் நாட்டை சட்டவிரோதமாக கைப்பற்றி ஆட்சி செய்துவருகின்றனர். அவர்கள் அதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மற்றுமொரு பதிவில், இந்தியர்கள் பாகிஸ்தானை வெறுக்கிறார்கள், ஆனால் இந்தியர்களைவிட ஆப்கானியர்கள் அதிகமாக பாகிஸ்தானை வெறுக்கிறார்கள். பாகிஸ்தானின் பினாமியாக செயல்பட்ட தாலிபன்கள், தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, பெண்களின் கல்வியைத் தடை செய்தவர்கள். தாலிபனை நண்பனாக இந்தியா நினைப்பது தவறான புரிதலைக் கொடுக்கிறது, இது வரலாற்றில் இந்தியாவை தவறான பக்கத்தில் நிறுத்துகிறது," என்று ஹபீப் கான் என்று தெரிவித்துள்ளார். தாலிபன்கள் நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வருகின்றனர். உலகளாவிய நிலையற்றத்தன்மையால் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பொருளாதார சவால்களைச் சந்தித்து வருகிறது. 2021-க்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அணைகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் போன்ற திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. அந்த கட்டமைப்புகளை பராமரிக்க தாலிபானுக்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுகிறது. இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான 'ஆழமான கலாசார உறவுகள்' அதிகார மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று முன்னாள் இந்திய தூதர் அனில் திரிகுணாயத் நம்புகிறார். "இந்தியாவிற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. தாலிபனைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் மாறியிருக்கலாம், ஆனால் பொது மக்களிடையே இந்தியா-ஆப்கானிஸ்தான் பிணைப்பு எப்போதும் வலுவாகவே இருந்து வருகிறது, இதுவே இந்தியாவின் உண்மையான பலம்" என்று அனில் திரிகுணாயத் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தற்போது தாலிபன்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளதாக அந்தப் பேட்டியில் குறிப்பிடும் அணில், "இந்தியாவின் முக்கியமான கவலை தாலிபன்கள் அல்ல, பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்கள் தான். அவர்கள் தரப்பிலிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்கிற தெளிவான உத்திரவாதத்தை தாலிபன் அரசு வழங்கியுள்ளது. முன்பு இது போன்றதோரு சூழ்நிலை இல்லை. ஆனால் இப்போது அவர்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. புல்வாமா தாக்குதலையும் அவர்கள் கண்டித்துள்ளனர், மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்." சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஆப்கானிஸ்தானில் தனது எல்லையை விரிவுபடுத்துகிறது. சீனா அல்லது பாகிஸ்தானின் ஆதிக்கத்திற்குள் ஆப்கானிஸ்தான் முழுமையாக சென்றுவிடுவதை இந்தியா விரும்பவில்லை. தாலிபன்களும், ஒரு நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரிப்பதை விரும்பவில்லை, எனவே அதுவும் இந்தியா போன்ற மாற்று நட்பு நாடுகளைத் தேடுகிறது. பட மூலாதாரம், Getty Images 'பாகிஸ்தானுக்கு அடி' இந்தப் பயணம் 'பாகிஸ்தானுக்கு அடி' மற்றும் தாலிபன் அரசை மறைமுகமாக அங்கீகரிப்பதை நோக்கிய முக்கியமான படி என்று உத்தி சார்ந்த விவகாரங்கள் வல்லுநரான பிரம்மா செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "இது இந்தியா-தாலிபன் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக உள்ளது. இதில் ஒவ்வொரு தரப்பும் தங்களின் உத்தி சார்ந்த நலன்களை மேம்படுத்த நடைமுறை ஒத்துழைப்பை வலியுறுத்துகின்றன." என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் ஆப்கானிஸ்தானில் பிராந்திய அதிகார சமநிலையில் சாத்தியமான மாற்றத்தை குறிப்பதாகவும் செலானி தெரிவிக்கிறார். இந்தப் பயணம், இந்தியா-பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்-தாலிபன் இடையேயான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது. பிபிசி ஹிந்தி நிகழ்வில் பேசிய அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஹர்ஷ் வி.பந்த், "பாகிஸ்தானுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவு, தாலிபன்களுக்கு தங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்துள்ளது. அவர்கள் இனிமேலும் பாகிஸ்தானைச் சார்ந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பாகிஸ்தானை அதிகமாகச் சார்ந்திருப்பதிலிருந்து விடுபட்டு, ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது" என்று அவர் கூறினார். தாலிபன்கள் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் "உத்தி சார்ந்த கூட்டாளிகள்" எனக் கருதப்பட்டனர், ஆனால் சமீப ஆண்டுங்களில் இரு தரப்புக்கும் இடைய உறவு இறுக்கமாகிவிட்டது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு தாலிபன்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தெற்கு ஆசிய விவகாரங்களைக் கவனித்து வரும் வல்லுநர் மைக்கேல் கூகல்மேன் முத்தக்கியின் பயணத்தை இந்தியாவிற்கான வாய்ப்பாகப் பார்க்கிறார். "இந்தியா-தாலிபன் உறவுகள் சுமூகமாகி வருவது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் நடைமுறை சார்ந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட அணுகுமுறை இருப்பதை பிரதிபலிக்கிறது. இது ஆப்கானிஸ்தானில் தனது நலன்களை மேலும் சிறப்பாக முன்னிறுத்த இந்தியாவை அனுமதிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் தாலிபன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை ராஜாங்க ரீதியாக பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கிறது." என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார் மைக்கேல் கூகல்மேன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தற்போது வரை ரஷ்யா மட்டுமே தாலிபனை அங்கீகரித்துள்ளது. சவால்கள் என்ன? சமீப ஆண்டுகளில் இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு தாலிபன் அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது, ஆனால் இந்த உறவுகளை வலுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. இந்தியாவிற்கு அரசியல், பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சர்வதேச அளவில் பிரச்னைகள் உருவாக்கக்கூடிய பல பெரிய சவால்கள் உள்ளன. இந்தியா தற்போது வரை தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இந்தியா பேச்சுவார்த்தையை தொடர விரும்புகிறது. ஆனால் சர்வதேச அரங்கில் அதன் பிம்பம் பாதிக்கப்படாமல் இருக்க அங்கீகாரம் வழங்குவதை தவிர்த்து வருகிறது. தாலிபன் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள், பெண்களின் கல்வி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் என்பது கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெண்களின் உரிமைகளை மதிப்பதாகக் கூறும் தாலிபன் அரசு, அது ஆப்கன் கலாசாரம் மற்றும் இஸ்லாமிய சட்டம் பற்றிய தனது சொந்த புரிதலுக்கு உட்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கிறது. மேற்கத்திய நாடுகளும் தாலிபன் அரசை எச்சரிக்கையுடனே பார்க்கின்றன. தாலிபன் உடன் இந்தியா மிகவும் நெருக்கமானால் சர்வதேச விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தாலிபன்களை இந்தியா உடனடியாக அங்கீகரிக்காது எனக் கூறும் அனுராதா சினோய் பேச்சுவார்த்தைகளை நிறுத்த முடியாது என்கிறார். மேலும் அவர், "பெண்களின் உரிமைகளை தாலிபன்கள் மொத்தமாக பறித்துவிட்டார்கள் என்பது உண்மை தான். மேற்குலக நாடுகள் தொடர்ந்து தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன, ஆனால் அழுத்தம் கொடுப்பதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது என இந்தியாவிற்கு தெரியும். பெண்களின் சுதந்திரம் தொடர்பான கேள்விகளும் தற்போதும் உள்ளன. இந்த விவகாரங்கள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்பட முடியும் என்பது தெளிவாகிறது." என்றார். தி இந்து நாளிதழின் ராஜாங்க விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைதர் தனது எக்ஸ் பதிவில், "தற்போது உள்ள மிகப்பெரிய கேள்வி, காபூலில் இந்தியா தூதரகத்தை திறந்தால், இந்தியாவிற்கு தாலிபன்கள் நியமித்த தூதரை அழைக்குமா? என்பது தான். ஆப்கன் குடியரசு கொடி இருந்த இடத்தில் தாலிபன்களின் கொடி பறக்குமா? தூதரக்த்தில் தாலிபன் அதிகாரிகள் வேலை செய்வார்களா? ரஷ்யாவைப் போல இந்தியாவும் தாலிபன் அரசை அங்கீகரிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5j5d4j19vo
  20. 10 Oct, 2025 | 11:29 AM இன்று (ஒக்டோபர் 10) உலக மனநல தினம்! உலக மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் உடல் நலனுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றது மன நலம் / உள நலம் (Mental Health). ஒரு சமூகத்தின் நிலையான வளர்ச்சியும் ஒற்றுமையும் பொருளாதார முன்னேற்றமும் கல்வித் தரமும் குடும்ப பிணைப்பும் – இவை அனைத்தும் மனநலத்துடன் ஆழமாக பிணைந்திருக்கின்றன. ஆனால், நீண்ட காலமாக உலக மக்கள் மனநல பிரச்சினைகளை புறக்கணித்து வந்தனர். இதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 10ஆம் திகதி “உலக மனநல தினம் (World Mental Health Day)” அனுஷ்டிக்கப்படுகிறது. இது, World Federation for Mental Health (WFMH) என்ற அமைப்பினால் 1992ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அதன் பின்பு, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இதனை பரவலாக்கின. இன்று உலகெங்கும் 150க்கும் மேற்பட்ட நாடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள், அரசு மற்றும் சமூக அமைப்புகள் இந்நாளை மனநல விழிப்புணர்வுக்கான தளமாகக் கொண்டாடுகின்றன. மனநலத்தின் உளவியல் (Psychological Significance) மனநலத்தை உளவியல் (Psychology) அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். மனநலம் என்பது வெறும் மனநோய் இல்லாமையை மட்டும் குறிக்கவில்லை. அது ஒருவரின் அமைதி, சிந்தனை தெளிவு, உணர்ச்சி கட்டுப்பாடு, சமூக உறவுகளை பராமரிக்கும் திறன், சவால்களை எதிர்கொள்ளும் வலிமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்குகிறது. Sigmund Freud தனது உளவியல் கோட்பாட்டில், மனம் மூன்று அடுக்குகளால் ஆனது. Id, Ego, Superego. இவற்றின் சமநிலையே மனநலத்தை தீர்மானிக்கிறது. Carl Rogers “Person-Centered Therapy” மூலம் மனிதர்களின் உள்ளார்ந்த திறன்களை வளர்க்கும் சூழல் மனநலத்தை உறுதி செய்கிறது என்றார். Aaron Beck உருவாக்கிய Cognitive Behavioral Therapy (CBT), மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்கும் முக்கிய சிகிச்சை முறையாக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உளவியல் துறையில் மனநலத்தின் முக்கியத்துவம் சிகிச்சை மட்டுமல்ல, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அறிவியல் என்பதும் தெளிவாகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) வழங்கிய தரவுகளின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 1 பில்லியன் பேர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மனச்சோர்வு (Depression) மற்றும் பதட்டக் கோளாறு (Anxiety Disorders) அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்கிறார் என்பதே WHOவின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம். கொவிட்-19 பேரழிவுக்குப் பின், மனநல பிரச்சினைகள் 25% வரை அதிகரித்துள்ளன. குறிப்பாக, இளம் வயதினரின் தற்கொலை விகிதம் உலகின் பல நாடுகளில் கவலைக்குரிய அளவில் உயர்ந்துள்ளது. நமது நாட்டைப் பொருத்தமட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்கொலைகளில் 50% மன நோய்களால் ஏற்படுத்துவதாக தெரிய வருகிறது. உலகளாவிய ரீதியிலும் பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பாரியமான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பிரதான காரணங்களாக தொலைபேசி அடிமை மற்றும் இணைய அடிமைத்தனம், போதை அடிமை காணப்படுகின்றன. இதனால், மனநல பிரச்சினைகள் ஒரு உலகளாவிய சவால் எனக் கருதப்படுகின்றன. அதே சமயம், மனநல சிகிச்சைக்கு செலவிடப்படும் நிதி உலகளவில் மருத்துவ செலவினங்களில் 2%க்கும் குறைவுதான். இது மிகப்பெரிய சமநிலையின்மையை காட்டுகிறது. இலங்கையில் மனநலத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், இன்னும் பல சவால்கள் உள்ளன. சமூகக் களங்கம் ஸ்ரிக்மா (Stigma): மனநோயாளிகளைக் குறைத்து மதிக்கும் பார்வை இன்னும் நீங்கவில்லை. போர் மற்றும் இயற்கை பேரழிவுகள்: உள்நாட்டுப் போர், 2004 சுனாமி, கொவிட் தொற்று மற்றும் அண்மைக்கால பொருளாதார நெருக்கடி ஆகியவை பல ஆயிரக்கணக்கான மக்களின் மனநலத்தை பாதித்துள்ளன. சிறுவர் மற்றும் இளைஞர்கள்: கல்விச் சுமை, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, சமூக அழுத்தங்கள், போதைப்பொருள் அடிமை காரணமாக இளைஞர்களிடையே மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்துள்ளன. சுகாதார வசதிகள்: இலங்கையில் 10 இலட்ச மக்களுக்கு சுமார் 0.3 %மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். WHO பரிந்துரைத்த அளவுக்கு இது மிகக் குறைவு. ஆனால், நேர்மறை மாற்றங்களும் உள்ளன. இலங்கையில் National Mental Health Policy (2005–2015, தொடர்ந்து 2016–2025) நடைமுறையில் உள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் உளவியல் படிப்புகளை வழங்குகின்றன. சமூக மட்டத்தில் NGOகளும் Red Cross போன்ற அமைப்புகளும் மனநல விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டிருக்கின்றன. ஆய்வுகள் மற்றும் தரவுகள் (Research & Statistics) மனநல பிரச்சினைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Lancet Psychiatry (2021) வெளியிட்ட ஆய்வின் படி, மனச்சோர்வு மற்றும் பதட்டம் உலகளவில் பெண்களிடம் ஆண்களை விட அதிகமாக உள்ளது. Sri Lanka Journal of Psychiatry யில் வெளியான கட்டுரைகள், போருக்குப் பின் வடக்கிலும் கிழக்கிலும் PTSD (Post-Traumatic Stress Disorder) விகிதம் மிக உயர்ந்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. University of Colombo மேற்கொண்ட ஆராய்ச்சியில், இலங்கை மாணவர்களில் 20% பேர் மனநல சவால்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. இந்த தரவுகள், மனநலம் என்பது தனிநபர் பிரச்சினை அல்ல; சமூக, பொருளாதார, கலாச்சார சவால் என்பதைக் காட்டுகின்றன. சமூக விளைவுகள் (Social Impact) மனநல குறைபாடு ஏற்படுத்தும் சமூக விளைவுகள் மிகப் பரவலானவை: 1. குடும்ப உறவுகள் – மன அழுத்தம், வன்முறை, புரிதல் பற்றாக்குறை காரணமாக குடும்பங்கள் சிதறுகின்றன. 2. பொருளாதாரம் – உலகளவில் மனநல பிரச்சினைகளால் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உற்பத்தித் திறன் இழப்பாகும். 3. சமூக வன்முறை – மன அழுத்தம் மற்றும் போதைப்பழக்கம் சமூக குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கின்றன. 4. இளைஞர் எதிர்காலம் – கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்குவதை மனநல குறைபாடுகள் அதிகரிக்கின்றன. படைப்பாற்றல் மற்றும் விழிப்புணர்வு (Creativity & Awareness) மனநலத்தை மேம்படுத்துவதற்கான படைப்பாற்றல் முயற்சிகள் மிகவும் முக்கியம். கலை மற்றும் இசை சிகிச்சை (Art & Music Therapy) மன அழுத்தத்தை குறைத்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது. சமூக நாடகங்கள்,வீதி நாடகங்கள், குறும்படங்கள், கவிதைகள் - பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாற்றல் முயற்சிகளாக் காணப்படுகின்றது. சமூக ஊடகங்கள் – இன்றைய தலைமுறைக்கு மனநல செய்திகள், சுய பராமரிப்பு குறிப்புகள், ஆன்லைன் ஆலோசனைகள் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சேர்க்கை நம் முன்னோர்கள் கூட மனநலத்தை மேம்படுத்துவதில் பங்களிக்கின்றவையும் குறிப்பிடத்தக்கது. தீர்வுகள் மற்றும் முன்னேற்ற வழிகள் மனநல பிரச்சினைகளை சமாளிக்க தனிநபர், குடும்பம், சமூகம், அரசு, உலகளாவிய நிலை என அனைத்திலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. 1. விழிப்புணர்வு – மனநோய்கள் குறித்து சமூகத்தில் உள்ள தவறான நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும். இதற்கான உலர் கல்வி மற்றும் கழிவுபடுத்தல்கள் அவசியமாகின்றன. 2. ஆலோசனை சேவைகள் – பள்ளிகள், கல்லூரிகள், வேலைத்தளங்களில் மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும். எங்க கருத்தரங்குகள் விழிப்புணர்வு செயற்பாடுகளை நடாத்தல் வேண்டும். 3. சட்ட, கொள்கைகள் – மனநல பாதுகாப்பு சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். 4. சமூக ஆதரவு – குடும்ப பாசம், நண்பர்களின் புரிதல், சமூகத்தின் ஒத்துழைப்பு – இவை மனநல சிகிச்சையை எளிதாக்கும். 5. ஆராய்ச்சி – இலங்கையிலும் உலகளாவிய அளவிலும் மனநல ஆராய்ச்சிகளுக்கான நிதி மற்றும் கல்வி வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். உலக மனநல தினம் என்பது ஒரு நாளைய விழிப்புணர்வு மட்டுமல்ல. அது, ஒவ்வொரு நாளும் நம்மை நாமே பராமரிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் ஒரு உலகளாவிய இயக்கம். மனநலத்தை புறக்கணிப்பது மனித முன்னேற்றத்தையே புறக்கணிப்பதாகும். “உடல் நலம் போல் மன நலமும் – வாழ்வின் அடிப்படை உரிமை” என்பதைக் கொண்டே நாம் சிந்திக்க வேண்டும். இலங்கை முதல் உலகம் வரை, ஒவ்வொரு சமுதாயமும் மனநலத்தை முன்னுரிமைப்படுத்தும் நாள் தூரத்தில் இல்லை. மனித குலம் மன அமைதியுடன் வாழும் உலகம் தான் உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம். - நடராசா கோபிராம், உளவியல் சிறப்புக் கலை மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். https://www.virakesari.lk/article/227388
  21. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முகப்பேரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பர் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நண்பர்கள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகுந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கி வரும் சூழலில் மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்த சம்பவத்தை ஒட்டி மின்னல் நேரங்களில் செய்ய வேண்டியது என்ன, மின்னனு சாதனங்களைப் பயன்படுத்தலாமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் ஆகஸ்ட் 23: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சகோதரிகளான அஸ்பியா பானு (13 வயது) மற்றும் சபிக்கா பானு (9 வயது) விடுமுறை தினத்தன்று வெளிவே சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்யவே மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் தாக்கி இருவரும் சம்பவம் இடத்திலே உயிரிழந்தனர். செப்டம்பர் 18: ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ரமேஷ் மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். செப்டம்பர் 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் கொளஞ்சியம்மாள். விவசாயியான இவர் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கவனிக்கச் சென்றபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். மின்னல் தாக்கினால் மிகக் கடுமையான காயங்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் மின்னல் தாக்கியதில் 2,560 பேர் உயிரிழந்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம், Getty Images கடலை ஒட்டிய பகுதிகளில் தான் மின்னல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான ரமணன். மின்னல்கள் 7000 டிகிரி வரை வெப்பத்தை உருவாக்கக்கூடும் என்று கூறும் அவர் திறந்தவெளிகளில் தான் மின்னல் தாக்குதவதற்கான ஆபத்துகள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். "மின்னல் மற்றும் மழை பெய்கிறபோது திறந்தவெளிகளில் இருக்கக்கூடாது. குறிப்பாக ஒற்றை மரத்தின் கீழ் நிற்கக்கூடாது. நிறைய மரங்கள் இருக்கும் இடங்களில் உயரமான மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. அதே போல ஈரமான சுவர்களின் மீது சாய்ந்து நிற்கக்கூடாது. ஈரம் மூலமாகவும் மின்சாரம் கடத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு." என்று தெரிவித்தார் ரமணன். அதே வேளையில் வீடுகளில் இருக்கிறபோதும் மின்னல் தாக்கும் வாய்ப்பு இருப்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மலைப்பகுதிகளில் நேரடி மின்னல் தாக்குதல் நிகழும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார் பொது மருத்துவரும் எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த ஆலோசகருமான ஆர்.நந்தகுமார். பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மின்னல்கள் தாக்குவது நான்கு விதங்களில் நடக்கும் என்று விவரிக்கிறார். நேரடியாக ஒருவர் மீது மின்னல் தாக்குவது மரம் அல்லது ஒரு சுவர் மீது மின்னல்பட்டு அருகில் இருப்பவரை தாக்குவது மின்னல் தாக்கிய இடத்திலிருந்து நிலத்தின் வழியாக அருகில் இருப்பவர்களை பாதிப்பது. மின்னல் தாக்கிய இடத்தில் உலோகங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பாதிப்பது மின்னணு சாதனங்களை மின்னல் தாக்குமா? செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இடி, மின்னல் சமயங்களில் பயன்படுத்தலாமா என்பது தொடர்பான கேள்விகளும் இதனையொட்டி எழுகின்றன. இதற்கான விளக்கத்தை பிபிசியிடம் முன்வைத்தார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் முதுநிலை விஞ்ஞானியும் தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றும் த.வி. வெங்கடேஸ்வரன். "உராய்வினால் மின்னல் ஏற்படுகிறபோது நிலையான மின்சாரம் (static electricity) இறங்குவதற்கான ஒரு தளம் தேவைப்படுகிறது. அவை ஒன்று நிலத்தில் இறங்கும் அல்லது துருதுருத்திக் கொண்டிருக்கும் கம்பி போன்ற உலோகங்களில் இறங்கும். நாம் தரையில் நிற்கிறபோது நமது காலுக்கு அடியில் ஈரம் இருந்தாலும் அங்கு இறங்கும். அதனால் தான் பொதுவெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது." "மின்னல் என்பது மின்னணு சாதனங்களில் இறங்காது. அதனால் மின்னல் தாக்குதலால் நமது கைகளில் அல்லது பயன்பாட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வீடுகளில் இருக்கின்றபோது சார்ஜிங்கில் உள்ள செல்போனை பயன்படுத்தக்கூடாது. வெளியிலும் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் செல்போன் பயன்படுத்துவதில் எந்த ஆபத்தும் இல்லை." எனத் தெரிவித்தார். எனவே மின்னணு சாதனங்களை பயன்படுத்தவது பிரச்னை இல்லை. அவற்றை எங்கிருந்து எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே மின்னல் ஆபத்து உள்ளது. இடி, மின்னல் சமயத்தில் என்ன செய்ய வேண்டும்? இடி மற்றும் மின்னல் ஏற்படுகிறபோது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களையும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.எம்.டி.ஏ) வழங்கியுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? மொட்டை மாடி மற்றும் பால்கனிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் குழாய்களில் மின்சாரம் கடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும் குளிக்கவோ, கை கழுவவோ, பாத்திரங்களை சுத்தம் செய்யவோ கூடாது லேண்ட்லைன் அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது. சார்ஜிங்கில் இல்லாத திறன்பேசி, டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை வீடுகளில் பயன்படுத்தலாம். வெளியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? முழுவதுமாக மூடப்பட்ட கட்டடங்கள் அல்லது காருக்குள் செல்ல வேண்டும் திறந்தவெளி வாகனங்களில் இருக்கக்கூடாது தகரத்தால் ஆன கூடாரங்கள், திறந்தவெளி வாகன நிறுத்தம், கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடங்கள் ஆகிய இடங்களை தவிர்க்க வேண்டும் மறைவான இடங்களில் எங்கும் ஒதுங்க முடியவில்லையென்றால் நிலத்தில் கால்கள் இரண்டையும் அருகருகே வைத்து காதுகளை அடைத்துக் கொண்டு குனிய வேண்டும் நிலத்தில் படுப்பதை தவிர்க்க வேண்டும் நீர்நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். பட மூலாதாரம், Getty Images மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? உயிரிழப்பைத் தாண்டி மின்னல் தாக்குவதால் நீண்ட கால காயங்கள் மற்றும் குறைபாடு ஏற்படலாம் எனவும் என்.டி.எம்.ஏ தெரிவிக்கிறது. மின்னல் தாக்குதலில் வெளிப்புற காயங்கள், உட்புற காயங்கள் இரண்டு வகைகளாகவும் பாதிப்புகள் இருக்கும் என்கிறார் நந்தகுமார் "தோல், தசை தொடங்கி அனைத்து உறுப்புகளையும் மின்னல் தாக்குதல் பாதிக்கும். ஒரு தீக்காயம் ஏற்பட்டால் என்ன பாதிப்புகள் எல்லாம் நிகழுமோ அவை அனைத்தும் உருவாகும். தசைகளை கடுமையாக பாதிக்கும்." என்றார். "பார்வை மற்றும் செவித் திறன் குறைபாடு, மூச்சுத் திணறல், சீரற்ற இதய துடிப்பு, நெஞ்சு வலி, தலைவலி, தூங்குவதில் பிரச்னை, தலைசுற்றல், தசை பிடிப்பு மற்றும் உடல் சோர்வு ஏற்படும்." என்றும் குறிப்பிட்டார். மின்னல் தாக்குவதில் மூளை மற்றும் இதயம் சார்ந்த பாதிப்புகள் தான் அதிகம் நிகழ்வதாகக் குறிப்பிடுகிறார் நந்தகுமார். "மிக தீவிரமாக தாக்கினால் மூளைச் சாவு அடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. காயமடைபவர்களுக்கு மறதி போன்ற நீண்டகால சிக்கல்கள் ஏற்படும்." "இதயத்தில் ரத்த அழுத்தம் கடுமையாகப் பாதிக்கப்படும். உடனடியாக மாரடைப்பு ஏற்படுவதற்கும் ரத்த குழாய்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் தான் மின்னல் தாக்குதலில் உயிர் பிழைப்பவர்கள் விகிதம் மிக குறைவாக இருக்கிறது." என்றார். மின்னல் தாக்கியவர்களுக்கு வழங்க வேண்டிய முதலுதவிகளையும் என்.டி.எம்.ஏ பட்டியலிட்டுள்ளது. அவை, மின்னல் தாக்கியவருக்கு மூச்சு இல்லையென்றால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் அவசர உதவி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவருக்கு சி.பி.ஆர் வழங்க வேண்டும். மின்னல் தாக்கியவருக்கு நினைவிருந்தால், அவரை தரையில் படுக்க வைத்து காலை உயரமான இடத்தில் வைக்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qyq1l4q0o
  22. 11 Oct, 2025 | 03:45 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றபோதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி, கால்நடை கடத்தல், கோஷ்டி போதல் போன்றவை அதிகரித்துள்ளன. இவை தொடர்பாக முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்கள் பொலி சாருக்கு வழங்கப்பட்டாலும் சில வேளைகளில் அசமந்த போக்குடன் பொலிசார் நடந்துகொள்கின்றமையால் இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுட்டி காட்டியுள்ளார்கள். யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவிக்கும்போது, போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாகவும் கால்நடைகள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு மண்டைத்தீவு சந்தி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி ஆகிய இடங்களில் பொலிஸ் காவலரணங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஒலிபெருக்கி பாவனைக்கான கட்டணம் பொலிஸார் அறவிடுகின்றமையால் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளது என தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில், பெண் பொலிஸாரின் பற்றாக்குறை, சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி தொடர்பான பிணக்குகளில் பிரதேச செயலர்களுடன் இணைந்து செயற்பட பொலிஸார் தவறுகின்றமை ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு விற்பனை மிகப் பிரதான பிரச்சினையாக உள்ளதாகவும் அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பங்கள் தொடர்பான விவரங்களை திரட்டியுள்ளபோதிலும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல் என்பனவும் நடைபெறுவதாகச் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும் கல்லாறை அண்மித்து காட்டை அழித்து மணல் அகழ்வு நடைபெறுகின்றது எனத் தெரிவித்தார். அங்கு அகழப்படும் மண்ணை விற்பனைக்காக சேகரித்து வைக்கும் இடத்துக்கு கொண்டு வரப்படும் பாதையில் பொலிஸ் காவலரண் அமைப்பதன் ஊடாக இதனைத் தடுக்கலாம் கௌதாரிமுனை கடற்கரைக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு இளையோர் வருவதாகவும் அங்கு மதுபானம் அருந்தி விட்டு முரண்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டதுடன் பொலிஸ் காவலரண் அங்கு அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதேநேரம், பாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார். இவ்வாறாக மாடவட்ட ரிதியாக குற்ரச்சாட்டுகள் முன்வைத்தனர். https://www.virakesari.lk/article/227481
  23. பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்துக்கு அவசியமான வெற்றி Published By: Vishnu 11 Oct, 2025 | 03:36 AM (நெவில் அன்தனி) குவாட்டி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக இலகுவாக 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. பங்களாதேஷுக்கு கடினமான 228 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூஸிலாந்தின் பந்துவீச்சு இலக்கை நோக்கியதாக இருக்கவில்லை. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் 16 வைட்கள் மூலம் 21 ஓட்டங்களை இனாமாகக் கொடுத்தனர். எனினும், அணித் தலைவி சொஃபி டிவைன், ப்றூக் ஹாலிடே ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஜெஸ் கேர், லீ தஹுஹு ஆகியோர் பதிவு செய்த தலா 3 விக்கெட் குவியல்களும் நியூஸிலாந்தை வெற்றி அடையச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ப்றூக் ஹாலிடே 69 ஓட்டங்களையும் சொஃபி டிவைன் 63 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 112 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களைவிட சுசி பேட்ஸ் 29 ஓட்டங்களையும் மெடி க்றீன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரபியா கான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. 15 ஓவர்கள் நிறைவடைவதற்கு முன்னர் பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. ஆனால் மத்திய வரிசை விராங்கனைகள் பாஹிமா காத்துன் (34), நஹிடா அக்தர் (17), ரபியா கான் (25) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி பங்களாதேஷுக்கு 125 ஓட்டங்களைக் கடக்க உதவினர். உதிரிகளாக 30 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு கிடைத்தது. பந்துவீச்சில் ஜெஸ் கேர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லி தஹுஹு 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/227445
  24. காசா போர் நிறுத்தம்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிறுமி Published By: Digital Desk 3 10 Oct, 2025 | 04:15 PM காசா முனையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, அங்கு வசிக்கும் பனியாஸ் என்ற சிறுமி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை (10) காசா பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டது. இதன் மூலம், இரண்டு ஆண்டுகளாக நீடித்துவரும் காசா மோதல் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது. போர் முடிவடைந்ததை அறிந்த பனியாஸ், காணொளி ஒன்றில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். “அனைவருக்கும் வணக்கம். இன்று காலை மிகவும் வித்தியாசமானதும் சிறப்பானதும் ஆகிறது. போர் முடிவடைந்தது! நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நாங்கள் காசாவுக்கு திரும்பிச் செல்லவிருக்கிறோம். இன்று வீட்டில் அமர்ந்து இருந்தபோது, அம்மா வந்து ‘ஒரு நல்ல செய்தி உண்டு’ என்றார். அது போர் முடிவடைந்துவிட்டது என்பதுதான்! அந்த நிமிஷத்தில் நான் குதித்து மகிழ்ந்தேன். இது எனது வாழ்வில் மறக்க முடியாத காலை. சந்தோசத்தில் அழுதேன்.” அதேபோல், பனியாஸ் மேலும், “எனது முதல் நம்பிக்கை — போர் முடிவடையும் என்பதுதான். இரண்டாவது நம்பிக்கை — எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். மூன்றாவது நம்பிக்கை — காசா விரைவில் மீண்டு எழ வேண்டும். இப்படி ஒரு போரை மீண்டும் நாம் சந்திக்க வேண்டாம்.” இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காசா மக்களுக்கு இது ஒரு நம்பிக்கை தருணமாக மாறியுள்ளது. பனியாஸ் தனது காணொளி செய்தியின் இறுதியில், “காசா மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/227416

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.