Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 12 Oct, 2025 | 04:32 PM கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227553
  2. பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்க்கும் திறன் தாலிபனுக்கு இருக்கிறதா? - மோதலுக்கு காரணம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளில் ஆப்கானிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. 58 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த தாக்குதலுக்கு இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல் ஆப்கன் தாலிபன் ராணுவம் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து சனிக்கிழமை இரவு பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. பாகிஸ்தான் படைகள் 21 ஆப்கன் எல்லைகளைக் கைப்பற்றியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத பயிற்சி தளங்கள் என்று அவர்கள் குறிப்பிட்ட இடங்களை அழித்ததாகவும் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். பதில் தாக்குதலில் "200-க்கும் மேற்பட்ட தாலிபன் மற்றும் கூட்டாளி வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறி வியாழக்கிழமை காபூலுக்கு அருகே உள்ள சந்தைப் பகுதியில் பாகிஸ்தான் குண்டுவீசியதாக அவர் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, வான்வழித் தாக்குதல்கள் குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் "பாகிஸ்தான் மக்களின் உயிரைப் பாதுகாக்க தேவையானவற்றை நாங்கள் செய்கிறோம். தொடர்ந்து செய்வோம்." எனக் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்திற்காக அவர்களின் எல்லை பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானிடம் அவர் வலியுறுத்தினார். தாலிபன் ஆட்சிக்கு பிறகான பயங்கர மோதல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்களுக்கு தாலிபன் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. 2021ஆம் ஆண்டு தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நடக்கும் மிகக் கடுமையான மோதல்களில் ஒன்று இந்த சமீபத்திய மோதல் ஆகும். பாகிஸ்தானுக்குள் தீவிர தாக்குதல்களை நடத்திய தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்களுக்கு, தாலிபன் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதால், இருநாட்டு உறவுகள் படிப்படியாக மோசமடைந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை தாலிபன் மறுக்கிறது. பிபிசியிடம் பேசிய ஆய்வாளர் அமீர் ஜியா, இந்த மோதலை தேவையற்ற மோதல் எனவும் இரு தரப்பின் ராஜதந்திரத்தின் தோல்வி என்றும் குறிப்பிடுகிறார். பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை தாலிபன் அரசு கவனிக்கவில்லை என்றார். ஆனால் பாகிஸ்தான் நீண்ட காலமாக ஒற்றை புள்ளி கோரிக்கையுடனே இருந்ததாகவும் அவர் வாதிடுகிறார். "பல தசாப்தங்களாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபன்களுக்கான ஆதரவை தேசிய நலன் சார்ந்த விஷயமாகக் கருதி வந்தது" என்று அவர் கூறினார். "கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, நாம் எங்கே தவறு செய்தோம் என்று பார்க்க வேண்டும். அவர்களை நன்றியற்றவர்கள் என்று அழைப்பது போன்ற கடுமையான மொழியைப் பயன்படுத்துவது பிளவை ஆழப்படுத்தும்." என்றார். ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் டுராண்ட் கோடு எனப்படும் 2,600 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துள்ளன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகிரும் டுராண்ட் கோடு. பல மாதங்களாக இருந்த ராஜதந்திர நெருக்கடிக்குப் பிறகு, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அமைதியற்ற உறவு மீண்டும் வெளிப்படையான மோதலின் விளிம்பில் வந்து நிற்கிறது என்பதை இந்த சமீபத்திய மோதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2021-ல் தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் அடிக்கடி வெடித்தன. தங்களின் மேற்கு எல்லையை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், TTPயின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும் பாகிஸ்தான், தாலிபன்களின் வருகையை முதலில் வரவேற்றது. TTP என்பது ஆப்கானிஸ்தான் தாலிபனுடன் சித்தாந்த ரீதியாக இணைந்த ஆனால் பாகிஸ்தான் அரசை வீழ்த்துவதில் கவனம் செலுத்தும் குழு ஆகும். மாறி மாறி குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images மாறாக வன்முறை அதிகரித்துள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட TTP தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆப்கன் அதிகாரிகள், தங்களுடைய நிலப்பரப்பில் இருந்து வீரர்கள் செயல்பட அனுமதி அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் சொல்லப்படுபவை என கூறுகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், டுராண்ட் கோட்டின் வேலி அமைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சாமன், குர்ரம் மற்றும் பஜௌர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய தூப்பாக்கிச் சூடுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் அவ்வப்போது முக்கிய வர்த்தகங்கள் மூடப்படுகின்றன. பரஸ்பர அவநம்பிக்கை, பொருளாதார நெருக்கடி மற்றும் உரிய பாதுகாப்பு நெறிமுறை இல்லாமை ஆகியவை ஒரு காலத்தில் செல்வாக்குக்கான ரகசியப் போராட்டமாக இருந்த ஒன்றை வெளிப்படையான விரோதமாக மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வாளர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன்களை விட செல்வாக்கு மிக்க நாடுகளிடம் பாகிஸ்தான் உதவியை நாடலாம் என்கிறார் ஜியா இஸ்லாமாபாத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளரான இம்தியாஸ் குல், இந்த வன்முறை மாதக் கணக்கில் நடந்த பதற்றத்தின் தர்க்கரீதியான விளைவு என்கிறார். "பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வரும் TTP-க்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க ஆப்கானிஸ்தான் ஆட்சி மறுப்பது, பாகிஸ்தானுக்கு குறைந்த வாய்ப்புகளையே அளிக்கிறது" என்று அவர் கூறினார். "தாலிபன்களை விட செல்வாக்கு மிக்க சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் ராஜதந்திர உதவியை நாட வேண்டும்" என்று ஜியா யோசனை கூறினார். பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் இரு நாடுகளில் எந்த நாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலும், இருநாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "இந்த நெருக்கடி, பிரச்னைக்கு சரியான காரணத்தை உருவாக்கியுள்ளது" வாஷிங்டன் டிசியில் உள்ள தெற்காசிய ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார். மேலும் "பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாக எதிர்த்துப் போராடும் திறன் தாலிபன்களுக்கு இல்லை" என்றார். "இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் பொதுமக்களின் கோபத்தைத் தணித்தவுடன் அவர்கள் பின்வாங்க வாய்ப்புள்ளது." என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9303v350qdo
  3. கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'புற்றுநோய்க்கான மருந்து' (Cancer Cure) குறித்து, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (SLCO) தமது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது புற்றுநோய் நோயாளிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கல்லூரி பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்கவுக்கு, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி தலைவர் வைத்தியர் சனத் வணிகசூரிய ஒரு கடிதம் எழுதியுள்ளார். கண்டனம் அக்கடிதத்தில், "இந்த உற்பத்தியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாதது குறித்து கல்லூரி மிகவும் கவலை கொள்கிறது" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவின் தயாரிப்பு 'ஊட்டச்சத்து உணவுப் பொருள்' என்று சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விளம்பர யுக்தி குறித்து வைத்தியர் சனத் வணிகசூரிய கண்டனம் தெரிவித்துள்ளார். நிதிச் சிக்கல் "இந்த விளம்பரம், புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உணர்ச்சிப்பூர்வ பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்களை மிகவும் தவறாக வழிநடத்துகிறது" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதாரமற்ற சிகிச்சைகள், உண்மையான உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைத் தாமதப்படுத்துவதுடன், நிதிச் சிக்கலை ஏற்படுத்தி, அறிவியல் மீதான நம்பிக்கையையும் சிதைக்கும் என்று கல்லூரி தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/university-of-colombo-cancer-medicine-1760241944#google_vignette
  4. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட சிறிய பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதிபடத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி, “ஒரு சில பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைய மாணவர் உட்சேர்க்கை நடவடிக்கையில் காணப்படும் குறைபாடுகளே காரணமாகும். எனவே அவற்றை சீரமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த பாடசாலை அதே போன்று குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பல பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க முடியாது. அதற்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்பதில்லை. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு சில பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்படக்கூடும். அவற்றை வேறொரு பாடசாலையுடன் ஒருங்கிணைந்த பாடசாலையாக செயற்படுத்தமுடியும். அதே நேரம் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு முன்னதாக அப்பிரதேசத்தின் இனத்துவப்பரம்பல், சனத்தொகை , சமூக மற்றும் பொருளாதார காரணிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/small-schools-are-certain-to-close-pm-harini-1759943765
  5. அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரம் Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 12:44 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கமைய புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் சனிக்கிழமை (11) பிரசுரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கமைய மூன்று புதிய அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். அதற்கமைய போக்குவரத்து,நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பணியாற்றிய பிமல் ரத்நாயக்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சராக அன்றைய தினம் நியமிக்கப்பட்டார். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, முன்னர் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அனுர கருணாதிலக்கவிடம் இருந்து நீக்கப்பட்ட வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சானது பிரதி அமைச்சராகப் பணியாற்றி வந்த கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர முன்னர் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்காத கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜெயவீர மற்றும் எம்.எம்.ஐ. அர்காம் ஆகியோரும் பிரதி அமைச்சர்களாக பதவியேற்றிருந்த நிலையில் அவர்களது பொறுப்புகள் தொடர்பிலும் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227535
  6. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 12 அக்டோபர் 2025, 01:34 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது. வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகமாகும். இந்தியர்கள் தங்கள் அன்றாட ஆற்றல் தேவைகளுக்காக உட்கொள்ளும் உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22% அதிகம் கார்போஹைட்ரேட்-க்கும் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு? குறைந்த கார்போஹைட்ரேட்டை உட்கொள்பவர்களை விட அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22 சதவீதமும், தொப்பை போடுவதற்கான வாய்ப்பு 15 சதவீதமும் அதிகமாக உள்ளது. மறுபுறம் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பதிலாக பதிலாக முழு கோதுமை அல்லது சிறுதானிய மாவை பயன்படுத்தினாலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையாது என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கார்போஹைட்ரேட் பயன்பாடு அதிகமாக இருப்பதை ஆய்வின் சான்றுகள் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "நாடு முழுவதும் உள்ள மக்களின் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் ஆற்றலில் 62.3 சதவீதம் பங்களிக்கின்றன. பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அரைக்கப்பட்ட முழு தானியங்களில் இருந்து கிடைப்பவை" என்று இந்த ஆய்வின் ஆராச்சியாளர் குறிப்பிடுகிறார். "சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் பங்கு 28.5 சதவீதமாகவும், முழு தானியங்களின் பங்கு 16.2 சதவீதமாகவும் உள்ளது. மொத்த கொழுப்பு 25.2 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே நேரம் புரதச் சத்து வெறும் 12 சதவீதம் மட்டுமே." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டின் மக்கள் தொகையில் 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வதை தடுப்பது எப்படி? மக்களின் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவைக் குறைப்பதும், பால் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பதும் வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 61 சதவீதம் பேர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை, அதாவது அவர்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்று ஐசிஎம்ஆர் குழு கண்டறிந்துள்ளது. இதில் 43 சதவீதம் பேர் அதிக உடல் எடையும், 26 சதவீதம் பேர் உடல் பருமனும் கொண்டுள்ளனர். உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதால், டைப் 2 வகை நீரிழிவு நோயை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள், அதாவது 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர் குறைந்தது ஒரு வளர்சிதை மாற்ற நோய்க்கான அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, ஒட்டு மொத்த நாட்டையும் விட கிழக்கு இந்திய மக்கள் நல்ல நிலையில் உள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தினசரி ஆற்றல் தேவையில் 62% கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து கிடைக்கிறது. நிபுணர்கள் சொல்வது என்ன? இந்திய உணவுப் பழக்கத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட்களை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிபுணர்களிடம் கேட்டது பிபிசி. "சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை) இரண்டும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உண்மை." என டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் கூட்டு அறிவியல் நிறுவனத்தின் மூத்த உணவியல் நிபுணர் மருத்துவர் விபுதி ரஸ்தோகி கூறினார். "ஆனால் குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது விரைவான பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார். "இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, அதனால்தான் இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன." என்றார். "நீரிழிவு போன்ற பிரச்னைகளை தடுக்க, உணவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். உடல் அசைவுகளை அதிகரிப்பதும் முக்கியம்" என்று அறிவுரை கூறுகிறார். நீங்கள் சோறு எடுத்துக்கொண்டாலும் சரி, சப்பாத்தி எடுத்துக்கொண்டாலும் சரி, இரண்டிலும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. பட மூலாதாரம், Getty Images சோற்றை விட சப்பாத்தி சிறந்ததா? சோற்றை விட சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதாகவும், அதனால் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது. "நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள சப்பாத்தியை சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிட்டால், அதுவும் அரிசியைப் போன்றதுதான். இதை சாப்பிட்ட பிறகும் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்," என 'டயட்டிக்ஸ் ஃபார் நியூட்ரிஃபை டுடே'வின் தலைவரும் மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணருமான நஸ்னீன் ஹுசைன் கூறினார். அதிகம் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஆனால் செறிவூட்டப்படாத சிறிய அரிசி இந்த விஷயத்தில் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார். நார்ச்சத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்கள் பெரும்பாலும் பழுப்பு நிற அரிசி அல்லது செறிவூட்டப்படாத அரிசியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். சோற்றை இறைச்சி, முட்டை, பருப்பு, தயிர், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மற்றொரு முக்கிய அறிவுரை ஆகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mxmejj58vo
  7. Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 10:11 AM பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பல பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன. எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் மீது தலிபான்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லையோர மாகாணங்களான குனர், ஹெல்மண்ட், பக்டியா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகள், சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/227520
  8. Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 12:27 PM உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நாட்டை வந்தடைந்தார். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கட்டார், டோஹாவிலிருந்து இன்றைய தினம் காலை 9:40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் ஓய்வறையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அவரை வரவேற்றார். கொழும்பில் நடைபெறும் 78வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார உச்சி மாநாட்டில் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிரதம விருந்தினராக பங்கேற்க உள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு 13 ஆம் திகதி முதல் 15 வரை கொழும்பில் நடைபெற உள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். https://www.virakesari.lk/article/227532
  9. Live 13th Match (D/N), Visakhapatnam, October 12, 2025, ICC Women's World Cup India Women 330 Australia Women (16/50 ov, T:331) 105/1 AUS Women need 226 runs from 34 overs. Current RR: 6.56 • Required RR: 6.64 • Last 5 ov (RR): 21/1 (4.20)
  10. காசா எல்லையை அடைந்துள்ள மனிதாபிமான உதவிப் பொருட்கள் எகிப்தின் ஊடாக தெற்கு காசாவின் ரஃபா எல்லையை கடக்கும் பகுதிக்கு இன்று காலை மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய லொறிகள் அடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வௌ்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையில் இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், நாளை (13) காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில் மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய பெரும்பாலான லொறிகள் அந்த எல்லைப் பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சில லொறிகள் மாத்திரமே காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய லொறிகள் எல்லையிலேயே தரித்து நிற்பதாக கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசியுடன் இணைந்து திங்கட்கிழமை எகிப்தில் நடைபெறும் சர்வதேச அமைதி உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார். "காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை முயற்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பனவற்றுக்கான புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்தார். அதேநேரம் நாளை நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmgnev0ua00yro29nckb3eii4
  11. 12 Oct, 2025 | 12:51 PM (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் குறித்த பேச்சுகள் தேசிய அரசியலில் சூடுப்பிடித்துள்ள நிலையில், ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் போதே ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியாது. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கு மாத்திரம் தான் தேர்தலை எப்படி நடத்தவது என்று தெரியும். ஏனெனில் மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நாட்டில் இல்லை. அவ்வாறிருக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழுவால் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும். குறிப்பாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இன்று கோஷமிடுபவர்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து தேர்தலை ஒத்திவைக்கவே நடவடிக்கை எடுத்திருந்தனர். எனவே ஆணைக்குழுவால் ஒன்று செய்ய இயலாது. தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பிரேரனை ஒன்றை நிறைவேற்றினால் போதுமானது. ஆனால் இலங்கையின் தேர்தல்களின் புதிய முன்னேற்றங்கள் குறித்து பேசி விட்டு மீண்டும் பழைமையான முறைமைக்கு செல்வது எதற்கு என்பதை சிந்திக்க வேண்டும். மாகாண சபை தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை குறித்து பேசுகின்றனர். அவ்வாறாயின் கலப்பு உறுப்பினர் விகிதாசார அல்லது புதிய தேர்தல் முறைமை குறித்து ஏன் பேச வேண்டும். எனவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என்றார். https://www.virakesari.lk/article/227534
  12. "2000 வீடுகள் அல்ல!, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு! மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம்! - ஜீவன் தொண்டமான்" Published By: Vishnu 12 Oct, 2025 | 06:38 PM அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் ஒரு விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவருடைய சமூக ஊடகப் பதிவின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.... "இன்று வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்) இந்நிகழ்வானது "2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல!", ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே" என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை, கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே என ஜீவன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வேதன அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/227561
  13. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, காஸா தெருக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் வீரர்கள் கட்டுரை தகவல் ருஷ்டி அபுவாலூஃப் காஸா நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலிய படைகள் பின்வாங்கும் இடங்களில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த தனது பாதுகாப்பு படைகளில் 7000 உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் அழைத்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ராணுவ பின்னணி கொண்ட மூன்று ஆளுநர்களையும் ஹமாஸ் நியமித்துள்ளது, இவர்களில் சிலர் ஹமாஸின் ராணுவ பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர். இந்த உத்தரவு தொலைப்பேசிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் வீரர்கள் பணிக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில் அதன் நோக்கம், "இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றுபவர்களையும், விரோதிகளையும் காசாவிலிருந்து சுத்தப்படுத்துதல்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய ஹமாஸின் பிரிவுகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக காஸாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் பொதுமக்கள் உடைகளிலும், மற்றவர்கள் காஸா காவல்துறையின் நீல சீருடையிலும் இருந்தனர். காஸா நகரின் சப்ரா பகுதியில் ஹமாஸ் சிறப்பு படைகளைச் சேர்ந்த இருவர் துக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் மூத்த தளபதியான இமாத் அகெலின் மகன் ஆவார். இமாத் தற்போது ஹமாஸின் ராணுவ உளவுப்பிரிவின் தலைவராக உள்ளார். பட மூலாதாரம், Getty Images தெருக்களில் விட்டுச் செல்லப்பட்ட அவர்களின் உடல்கள் ஹமாஸிடம் கோபத்தை அதிகரித்து பெரிய ராணுவ பதிலடிக்கான சாத்தியங்களை அதிகரித்தது. பின்னர் 300 ஆயுதமேந்திய துக்முஷ் குழுவைச் சேர்ந்தவர்கள் மெஷின் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இருந்ததாக நம்பப்பட்ட இடத்தை ஹமாஸ் உறுப்பினர்கள் சுற்றி வளைத்தனர். இன்று காலை துக்முஷ் குழு உறுப்பினர் ஒருவரைக் கொன்ற ஹமாஸ் மேலும் 30 பேர் சிறைபிடித்துள்ளது. இந்தக் குழுவின் ஆயுதங்கள் சில போரின்போது ஹமாஸின் கிடங்குகளிலிருந்து களவாடப்பட்டவை. மற்ற ஆயுதங்கள் பல வருடங்களாக இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தவை. போர் முடிந்த பிறகு காஸாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும் சூழலில் ஹமாஸின் அணிதிரட்டல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. டிரம்பின் அமைதி திட்டத்தில் இரண்டாவது கட்டத்தை சிக்கலாக்கக்கூடிய முக்கியமான பிரச்னை இது தான். ஹமாஸ் ஆயுதத்தை கைவிட வேண்டும் என டிரம்பின் அமைதி திட்டம் கூறுகிறது. பட மூலாதாரம், Getty Images வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் அதிகாரி ஒருவர் சமீபத்திய படை குவிப்பு பற்றி நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டு பிபிசியிடம் பேசுகையில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருக்கும் கொள்ளையர்கள் மற்றும் ஆயுதமேந்தியவர்களின் கருணையில் நாங்கள் காஸாவை விட்டுவிட முடியாது. எங்களின் ஆயுதங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான சட்டப்பூர்வமானவை. ஆக்கிரமிப்பு உள்ளவரை ஆயுதங்கள் எங்களிடம் இருக்கும்." எனத் தெரிவித்தார். காஸாவில் பாலத்தீன அதிகார சபைக்காக பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காஸா மீண்டுமொரு உள்நாட்டு சண்டையை நோக்கி நகர்வதாக அஞ்சுகிறேன் எனத் தெரிவித்தார். "ஹமாஸ் மாறவே இல்லை. தற்போதும் கூட ஆயுதமும் வன்முறையும் தான் அதன் இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழி என நம்புகிறது," என பிபிசியிடம் தெரிவித்தார். "காஸா ஆயுதங்களால் நிறைந்திருக்கிறது. போரின்போது திருடர்கள் ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும் குண்டுகளையும் ஹமாஸிடமிருந்து திருடிச் சென்றுள்ளனர். அதில் சில குழுக்களுக்கு இஸ்ரேலிடமிருந்து கூட ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது." "ஆயுதங்கள், கோபம், ஏமாற்றம், குழப்பம் மற்றும் பிளவுபட்ட மற்றும் நொந்து போயிருக்கும் மக்கள் திரள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த துடியாக இருக்கும் ஒரு இயக்கம் - உள்நாட்டு போருக்கான சிறந்த சூழல் இது தான்." எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுமா அல்லது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் காஸாவை மையமாக கொண்ட மனித உரிமைகள் வழக்கறிஞர் கலீல் அபு ஷம்மலா. "தற்போது உள்நாட்டு சண்டைக்கான அனைத்து சூழல்களும் இருப்பதால் காஸா மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் அச்சத்தில் உள்ளனர்." எனத் தெரிவிக்கிறார் கலீல். தீவிர அழுத்தத்தின் காரணமாக தான் ஹமாஸ் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், "பாதுகாப்பு விவகாரங்களில் தலையிடுவது உட்பட எந்த வழியிலாவது தனது செல்வாக்கை தக்க வைப்பதற்கான அதன் தொடர் முயற்சிகள் ஒப்பந்தத்தை சீர்குலைத்து காஸா மக்களை மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2j21x99dko
  14. @மோகன் அண்ணை, மேலுள்ளவாறு உள்நுழையும்போது காட்டுகிறது. உள்நுழைவதில் பிரச்சனை இல்லை.
  15. மகளிர் உலகக் கிண்ணம் : இலங்கையை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இங்கிலாந்து Published By: Vishnu 12 Oct, 2025 | 02:43 AM மகளிர் உலகக் கிண்ண தொடரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி இலங்கை அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்தது. அணியின் தலைவி நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் (Nat Sciver-Brunt) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 117 ஓட்டங்கள் சேர்த்தார். பின்னர், 254 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, எதிரணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் போராடியபோதும், 45.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் ஹசினி பெரேரா அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227504
  16. சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 01:56 PM சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்தார். பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின் (Cao Shumin) வரவேற்றார். இந்த விஜயத்தின் முதல் நாளில், பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்டார். யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களான தடைசெய்யப்பட்ட நகரம் (அரண்மனை அருங்காட்சியகம்), ஏகாதிபத்தியக் கட்டிடக்கலை ஆகியன தேசிய அளவில் பாதுகாக்கப்பட்டு வரும் தொகுப்பாகும். அத்தோடு, சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானக் கலையின் மகிமையை எடுத்துக்காட்டும் சீனப் பெருஞ்சுவரும், சீனாவின் முக்கியமாகப் பாதுகாக்கப்படும் சின்னங்களாகத் திகழ்கின்றன. எதிர்வரும் நாட்களில், பிரதமர் 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதுடன், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச சபைப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள இருக்கின்றார். https://www.virakesari.lk/article/227527
  17. வாட்ஸ்அப்-க்கு சவால் அளிக்குமா அரட்டை செயலி? - இந்திய செயலியின் சாதக பாதகங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை, மேலும் இந்தச் செயலி நாட்டில் கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது. கட்டுரை தகவல் செரிலான் மோலன் பிபிசி நியூஸ்,மும்பை நெயாஸ் ஃபாரூக்கி பிபிசி நியூஸ், டெல்லி 14 நிமிடங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் என்ற மாபெரும் போட்டியாளருடன் இந்தியத் தயாரிப்பு மெசேஜிங் செயலி ஒன்று போட்டியிட முடியுமா? கடந்த சில வாரங்களாக, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ (Zoho) உருவாக்கிய 'அரட்டை' (Arattai) என்ற மெசேஜிங் செயலி நாட்டில் திடீர் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் ஏழு நாட்களில் இந்தச் செயலி 70 லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், அதற்கான தேதிகளை அது குறிப்பிடவில்லை. சந்தை ஆய்வுகளை மேற்கொள்ளும் சென்சார் டவர் (Sensor Tower) நிறுவனத்தின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அரட்டையின் பதிவிறக்கங்கள் 10,000க்கும் குறைவாகவே இருந்தன. தமிழில் 'அரட்டை' என்று பொருள்படும் இந்தச் செயலி, 2021 இல் சாதாரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பலர் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அமெரிக்க வர்த்தக வரிகளால் இந்தியாவில் ஏற்படும் தாக்கத்தின் விளைவாக, மத்திய அரசு தற்சார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த செயலியின் பிரபலம் திடீரென அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் கடந்த சில வாரங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான்: இந்தியாவில் உருவாக்குங்கள், இந்தியாவில் செலவிடுங்கள். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டு வாரங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அரட்டை செயலி பற்றிப் பதிவிட்டு, மக்களை "தொடர்பில் இருக்க மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்னர், மேலும் பல அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அரட்டை குறித்துப் பதிவிட்டுள்ளனர். அரசின் இந்த முயற்சி "அரட்டை செயலியின் பதிவிறக்கங்கள் திடீரென அதிகரிக்க நிச்சயமாக உதவியது" என்று ஸோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது. "வெறும் மூன்று நாட்களில், ஒரு நாளைக்கான புதிய பதிவுகள் 3,000 இலிருந்து 3,50,000 ஆக அதிகரித்ததைக் கண்டோம். எங்கள் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது, அந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது," என்று ஸோஹோ தலைமைச் செயல் அதிகாரி மணி வேம்பு பிபிசியிடம் தெரிவித்தார். இது, பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டுத் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார். செயலியில் உள்ள பயனர்கள் பற்றிய விவரங்களை நிறுவனம் வழங்கவில்லை. இருப்பினும், இந்தியாவில் 50 கோடி மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பின் எண்ணிக்கையிலிருந்து அரட்டை செயலி இன்னும் வெகுதொலைவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை. மொத்தமாக குட் மார்னிங் வாழ்த்துகளை அனுப்புவது முதல் தங்கள் வணிகங்களை நடத்துவது வரை மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதால், இது கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாகவே நாட்டில் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சென்சார் டவர் சந்தை ஆய்வு நிறுவனத்தின்படி, செப்டம்பர் மாதம் அரட்டையின் மாதச் செயலில் உள்ள பயனர்களில் 95%க்கும் அதிகமானோர் இந்தியாவில் இருந்தனர். அரட்டை, வாட்ஸ்அப்பைப் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது பயனர்கள் செய்திகளை அனுப்பவும், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இரண்டு செயலிகளும் வணிகத்திற்கான ஒரு தொகுப்பு கருவிகளை வழங்குகின்றன. மேலும், வாட்ஸ்அப்பைப் போலவே, அரட்டையும் குறைந்த விலை போன்களிலும் ,மெதுவான இணைய வேகத்திலும் சீராகச் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறுகிறது. பல பயனர்கள் சமூக ஊடகங்களில் அரட்டையைப் பாராட்டி உள்ளனர். சிலர் அதன் இன்டர்பேஸ் மற்றும் வடிவமைப்பு பிடித்திருப்பதாகக் கூறினர். மற்றவர்கள் அது பயன்பாட்டில் வாட்ஸ்அப்பை ஒத்துள்ளது என்று உணர்ந்தனர். பலர் அது இந்தியத் தயாரிப்புச் செயலி என்பதில் பெருமிதம் கொள்வதுடன், மற்றவர்களையும் அதைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்தனர். அரட்டை, மிகப்பெரிய சர்வதேசப் போட்டியாளர்களை மாற்றீடு செய்யக் கனவு காணும் முதல் இந்தியச் செயலி அல்ல. கடந்த காலத்தில், கூ (Koo) மற்றும் மோஜ் (Moj) போன்ற இந்தியத் தயாரிப்புச் செயலிகள் முறையே எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் டிக்டாக்கிற்கு (2020 இல் இந்திய அரசு சீனச் செயலியைத் தடை செய்த பிறகு) மாற்றாகப் பேசப்பட்டன. ஆனால், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு அவை பெரிதாக வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் வாட்ஸ்அப்புக்கு மிகப்பெரிய போட்டியாளராகப் பேசப்பட்ட ஷேர்சாட்டும் (ShareChat) கூடத் தனது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப எழுத்தாளரும், ஆய்வாளருமான பிரசாந்தோ கே ராய் கூறுகையில், வாட்ஸ்அப்பின் பரந்த பயனர் தளத்தைப் பிளப்பது அரட்டை செயலிக்குக் கடினமானதாக இருக்கும். குறிப்பாக, மெட்டாவின் கீழ் உள்ள வாட்ஸ்அப் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் மற்றும் அரசாங்க சேவைகள் செயல்படுகின்றன. அரட்டையின் வெற்றி புதிய பயனர்களை ஈர்ப்பதில் மட்டுமல்ல, அவர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் தான் உள்ளது. இதை தேசிய உணர்வால் மட்டும் செலுத்த முடியாது என்று அவர் கூறுகிறார். "தயாரிப்பு நன்றாக இருக்க வேண்டும், ஆனால் அப்படி இருந்தாலும், உலகில் ஏற்கனவே கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ஒரு செயலியை இது மாற்றுவதற்குச் சாத்தியம் அதிகமில்லை," என்று ராய் மேலும் கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2020 இல் தொடங்கப்பட்ட கூ (Koo) செயலி X-க்கு மாற்றாகப் பேசப்பட்டது, ஆனால் அந்தச் செயலி கடந்த ஆண்டு மூடப்பட்டது. அரட்டையில் உள்ள தரவுப் தனியுரிமை (Data Privacy) குறித்தும் சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் செயலி வீடியோ மற்றும் குரல் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (E2EE) வழங்கினாலும், செய்திகளுக்கு இந்த அம்சத்தை தற்போது தரவில்லை. "பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, செய்திகளின் மூலத்தைக் கண்டறிய அரசாங்கம் விரும்புகிறது, இதை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இல்லாமல் எளிதாகச் செய்யலாம்," என்று இந்தியாவில் தொழில்நுட்பக் கொள்கை குறித்துப் பதிவிடும் இணையதளமான மீடியாநாமாவின் (MediaNama) நிர்வாக ஆசிரியர் சசிதர் கே.ஜே. கூறுகிறார். ஆனால், இது மக்களின் தனியுரிமையை அபாயத்திற்குள்ளாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார். அரட்டை செயலி, உரைச் செய்திகளுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குவதற்காக தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது. "நாங்கள் ஆரம்பத்தில் E2EE உடன் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டோம், இது இன்னும் இரண்டு மாதங்களில் நடந்திருக்கும்," என்று மணி வேம்பு கூறினார். "இருப்பினும், காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சில முக்கியமான அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை முடிந்தவரை விரைவாகக் கொண்டு வர முயற்சிக்கிறோம்." வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குகிறது. ஆனால், அதன் கொள்கையின்படி, சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் சூழ்நிலைகளில் அரசாங்கங்களுடன் மெட்டா தரவைப் (செய்தி அல்லது அழைப்புப் பதிவுகள் போன்றவை) பகிர முடியும். இந்தியாவின் இணையச் சட்டங்களின்படி, சமூக ஊடகத் தளங்கள் சில சூழ்நிலைகளில் மத்திய அரசுடன் பயனர் தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. ஆனால், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இந்தத் தரவைப் பெறுவது கடினமானது மற்றும் நேரம் எடுக்கும் செயல். மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற உலகளாவிய பெரு நிறுவனங்கள், நியாயமற்றவை என்று அவர்கள் கருதும் அரசாங்கக் கோரிக்கைகள் அல்லது விதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட மற்றும் நிதி ஆதாரங்களை கொண்டுள்ளன. 2021 இல், சமூக ஊடகம் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் இந்தியாவில் வழக்குத் தொடர்ந்தது. அவை வாட்ஸ்அப்பின் தனியுரிமைப் பாதுகாப்புகளை மீறுவதாகக் கூறியது. உள்ளடக்கத்தை முடக்குவதற்கான அல்லது நீக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு எதிராக எக்ஸும் சட்ட சவால்களை எழுப்பியுள்ளது. எனவே, பயனர்களின் தனியுரிமை உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அரசாங்கக் கோரிக்கைகளை இந்தியத் தயாரிப்பு அரட்டை செயலியால் தாங்கி நிற்க முடியுமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தொழில்நுட்பச் சட்டம் குறித்துச் சிறப்பு கவனம் செலுத்தும் ராகுல் மத்தன் கூறுகையில், அரட்டையின் தனியுரிமைக் கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பகிர்வது குறித்த ஸோஹோவின் நிலைப்பாடு பற்றி மேலும் தெளிவு வரும் வரை, பலர் அதைப் பயன்படுத்த தயக்கம் காட்டலாம். மத்திய அமைச்சர்கள் இந்தச் செயலியை விளம்பரப்படுத்துவதால், ஸோஹோ அரசுக்கு கடமைப்பட்ட்டிருப்பதாக அந்த நிறுவனம் உணருவதற்கு வாய்ப்புள்ளது என்று ராய் கூறுகிறார். மேலும், நாட்டின் சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கக் கோரிக்கைகளுக்கு இணங்கச் சொல்லும்போது, ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் அதை வலுவாக எதிர்ப்பது எளிதல்ல என்றும் அவர் கூறுகிறார். அத்தகைய கோரிக்கைகள் வந்தால் அரட்டை என்ன செய்யும் என்று கேட்டபோது, நிறுவனம் "நாட்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதோடு, தங்கள் தரவின் மீது பயனர்கள் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்று விரும்புவதாக மணி வேம்பு கூறுகிறார். "முழு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வெளியிடப்பட்டவுடன், பயனர் உரையாடல்களின் உள்ளடக்கத்தை நாங்கள் கூட அணுக முடியாது. எந்தவொரு சட்டப்பூர்வ கடமைகளைப் பற்றியும் நாங்கள் எங்கள் பயனர்களுடன் வெளிப்படையாக இருப்போம்," என்று அவர் கூறினார். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பழக்கத்தை ஏற்படுத்தும் பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் போது, நிலைமை இந்தியச் செயலிகளுக்கு எதிராகவே உள்ளது என்று அனுபவம் காட்டுகிறது. அரட்டை செயலியால் இதில் வெற்றி பெற முடியுமா - அல்லது அதற்கு முன் இருந்த பல செயலிகள் போல மங்கிவிடுமா - என்பதைக் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjr5rg8wz8vo
  18. படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிட உயர் நீதிமன்ற தடை விதித்துள்ளது. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிடுவது, சமைப்பது, அசைவ உணவை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அக்டோபர் 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவ்வாறு பலியிடுவது என்பது இந்திய அரசின் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்களின் விதிகளை மீறுவதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை' என அழைப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, சிக்கந்தர் தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? இந்திய தொல்லியல் கழகம் கூறியது என்ன? படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையின் மறுபுறத்தில்அமைந்துள்ள சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்கா. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர், தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளுடன் மலையேற முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், 'மலையில் ஆடு, கோழியை பலியிட அனுமதியில்லை' எனக் கூறினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இருந்த நவாஸ்கனி எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகள் மலையில் ஆய்வு நடத்தினர். அப்போது மலையின் படிக்கட்டில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் வேல் ஊர்வலம் நடத்தினர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்குமாறு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் மனுத்தாக்கல் செய்தார். மலையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு ராமலிங்கம் என்பவரும் கந்தர் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்குமாறு பரமசிவம் என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர். தர்கா தரப்பில் நிர்வாகிகள் ஒசிர்கான் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர், தர்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியும் பக்தர்களுக்கு சாலை, குடிநீர், கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்குமாறும் மனுக்களை தாக்கல் செய்தனர். மலையை, 'சமணர் குன்று' என அறிவிக்கக் கோரி சுவஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாச்சார்ய மகா சுவாமி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை கடந்த ஜூன் மாதம் நீதிபதிகள் ஜே.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளுடன் மலையேற முயன்றார். முரண்பட்ட நீதிபதிகள் அப்போது நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'மலையை, திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும். சிக்கந்தர் அல்லது சமணர் குன்று என அழைக்கக் கூடாது' என உத்தரவிட்டவர், 'ஆடு, கோழிகளை பலியிடவும் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தவும் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும்' எனவும் தெரிவித்தார். அதுவரை, மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டார். படக்குறிப்பு, இந்த வழக்கில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. 'கந்தர் மலையா.. சிக்கந்தர் மலையா?' வழக்கின் விசாரணையின்போது சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், "1923-ஆம் ஆண்டு வெளியான நீதிமன்ற உத்தரவு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த எந்தவொரு தீர்ப்பிலும் தர்காவின் சடங்குகளுக்கு கோவிலின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை' என வாதிட்டார். தர்காவின் சொத்து மற்றும் இறை நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான தன்னாட்சி உரிமைகளை நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "தர்கா அமைந்துள்ள பகுதி சிக்கந்தர் மலை என்று வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்படும் சான்றுகளும் 1886-ஆம் ஆண்டு சர்வே வரைபடங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. வருவாய், நீதிமன்ற உத்தரவுகளில் சிக்கந்தர் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளன" எனவும் ஐசக் மோகன்லால் கூறினார். இந்த வழக்கில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 'பல தர்காக்களில் விலங்குகளை பலியிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. நெல்லித்தோப்பு பகுதியில் பல ஆண்டுகளாக தொழுகை நடத்தப்படுகிறது' எனக் கூறினார். படக்குறிப்பு, தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்றதாக வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டது என்ன? வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன், "உள்ளூரில் நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சில அரசியல் அமைப்புகள் மட்டுமே நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கின்றன" எனக் கூறினார். "தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்கின்றனர். அப்படியிருக்கும்போது நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது" எனவும் அவர் வாதிட்டார். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சார்பாக ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தங்களின் சொத்துகளை எவ்வாறு அனுபவிப்பது என்பதை முடிவு செய்யும் முழு உரிமையும் தர்கா நிர்வாகிகளுக்கு உள்ளதாக வாதிட்டார். படக்குறிப்பு, ஆடு, கோழிகளை பலியிடுதல் என்பது இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள மத நடைமுறை என்றார் ரவீந்திரன் 'இந்து பக்தர்கள் எதிர்ப்பு காட்ட முடியாது' ஆடு, கோழிகளைப் பலியிடுதல் என்பது இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள மத நடைமுறையாக உள்ளதாக வாதிட்ட ரவீந்திரன், "தர்கா வளாகத்தில் பழங்காலத்தில் இருந்தே விலங்குகளை பலியிடுதல் என்பது நடைமுறையாக உள்ளதைக் காட்டும் பதிவுகள் உள்ளன" எனக் கூறினார். "நெல்லித்தோப்பு பகுதியானது இஸ்லாமியர்களின் சொத்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தொழுகை நடத்த வேண்டுமா... இல்லையா என்பதை இந்து பக்தர்கள் எதிர்ப்பு காட்ட முடியாது" எனவும் ரவீந்திரன் வாதிட்டார். தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்த அவர், "இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் நிர்வாக அலுவலர், கோவில் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் பற்றி மட்டும் விளக்கம் அளிக்க முடியும்" எனக் கூறினார். மலையில் உள்ள நெல்லித்தோப்பு மற்றும் மலை உச்சியில் உள்ள தர்கா ஆகியவை அவரது நிர்வாகத்தின்கீழ் இல்லை எனவும் ரவீந்திரன் தெரிவித்தார். படக்குறிப்பு, முழு மலைப் பகுதியும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என ASI வாதம். இந்திய தொல்லியல் கழகம் கூறியது என்ன? வழக்கில் இந்திய தொல்லியல் கழகத்தின் (ASI) வாதம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. "சிக்கந்தர் தர்காவில் பலியிடுவது நடைமுறையாக இருந்தால் அது இந்திய தொல்லியல் கழகத்தின் சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட வேண்டும்" என வாதிட்ட இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "முழு மலைப் பகுதியும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அவை நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்." எனக் கூறினார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, "மலையில் உள்ள சமண குகைகளை பச்சை வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி சேதப்படுத்தியது தொடர்பாக காவல்துறையில் தொல்லியல் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்." எனக் குறிப்பிட்டார். மலையில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கைகளைப் (Pancha Pandava beds) பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வக்ஃப் வாரியம், இந்திய தொல்லியல் கழகத்தின் சட்டப்பிரிவு 19, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை மட்டும் கையாள்வதாகவும் வழக்கின் நிலவரங்களுக்கு இது பொருந்தாது எனவும் வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.விஜயகுமார், இந்திய தொல்லியல் கழகத்தின் இரண்டு அறிவிப்புகளை மேற்கோள் காட்டினர். படக்குறிப்பு, சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என நீதிபதி தெரிவித்தார். தொல்லியல் கழகத்தின் 2 அறிவிப்புகள் 'இந்திய தொல்லியல் கழகம் கடந்த 29.7.1908 மற்றும் 7.2.1923 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட இரு அறிவிப்பில், மலையின் மேற்குச் சரிவில் பஞ்ச பாண்டவர் படுக்கைகள், சிக்கந்தர் மலையின் உச்சியில் மசூதிக்குப் பின்புறம் உள்ள குகை ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது' எனத் தெரிவித்தார். "சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு ஆதாரம் இல்லை" எனத் தெரிவித்துள்ள நீதிபதி, "தொல்லியல் கழகத்தின் அறிவிப்பில் திருப்பரங்குன்றம் மலை என்றும் அதில் சிக்கந்தர் மசூதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். லண்டன் ப்ரிவி கவுன்சில் அளித்துள்ள உத்தரவில், 170 ஏக்கர் பரப்பளவுள்ள திருப்பரங்குன்றம் மலையில் 33 சென்ட் அளவுள்ள நெல்லித்தோப்பு மற்றும் சிக்கந்தர் தர்கா தவிர மற்ற பகுதிகள் கோவிலுக்குச் சொந்தமானதாக கூறப்பட்டுள்ளதாக, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மலையின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த மலையையும் சிக்கந்தர் தர்கா பெயரில் அழைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' எனத் தீர்ப்பில் நீதிபதி ஆர்.விஜயகுமார் கூறியுள்ளார். முன்னதாக, தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பில் உடன்படுவதாகக் கூறியுள்ள நீதிபதி ஆர்.விஜயகுமார், "பழங்காலத்தில் இருந்து மலையில் ஆடு, கோழி பலியிடப்பட்டு வருவதாக தர்கா நிர்வாகம் கூறுகிறது. ஆனால், மனுதாரர்களும் கோவில் நிர்வாகமும் இந்த நடைமுறை இல்லை என்கின்றனர்" என்கிறார். படக்குறிப்பு, மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு விழா காலங்களில் முருகனின் வேல் எடுத்துச் செல்லப்படுகிறது. 'பலியிட அனுமதிக்க முடியாது' "திருப்பரங்குன்றம் மலையில் சுமார் 172.2 ஏக்கர் பரப்பளவை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்திய தொல்லியல் கழகம் அறிவித்துள்ளது. அங்கு விலங்குகளை எந்த நோக்கத்துக்காகவும் கொண்டு செல்லக் கூடாது" என, நீதிபதி ஆர்.விஜயகுமார் தெரிவித்துள்ளார். சிக்கந்தர் தக்கா மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளின் உரிமையாளர்களாக தர்கா நிர்வாகிகள் உள்ளனர். "ஆனால் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் விதிகள் 1959ன்படி (Ancient Monuments and Archaeological Sites and Remains Rules, 1959) துறையின் அனுமதியில்லாமல் விலங்குகளை பலியிட அனுமதிக்க முடியாது" என, நீதிபதி கூறியுள்ளார். "அதையும் மீறி அனுமதியை வழங்குவது என்பது தொல்லியல் சட்டத்துக்கு எதிரானது. அந்தவகையில் திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது" என, நீதிபதி ஆர்.விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். தர்கா அமைந்துள்ள பகுதிக்கு நெல்லித்தோப்பு வழியாக சென்றடைய வேண்டும். இப்பகுதி வழியாக மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு விழா காலங்களில் முருகனின் வேல் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, 'சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றுடன் இந்தப் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாரம்பரிய படிக்கட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம்" எனக் கூறியுள்ளார். 'நெல்லித்தோப்பில் பிரார்த்தனை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரிய மனுவை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்ததை மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் ஏற்றுக் கொண்டார். முடிவில், மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் மலையில் ஆடு, கோழிகளை பலியிடவும் சிக்கந்தர் மலை என அழைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள் மத்தியில் வரவேற்பும் இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன? "காலம்காலமாக நடைபெற்று வந்த வழிபாட்டு உரிமையைத் தடுப்பது என்பது வேதனையைத் தருகிறது" எனக் கூறுகிறார், சிக்கந்தர் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரு தரப்பிலும் பாரம்பரிய வழிபாட்டு உரிமை தொடர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், ஆடு, கோழியை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது" எனக் கூறுகிறார். "தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து தர்காவில் உள்ள கமிட்டி நிர்வாகம் முடிவு செய்யும்" எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறும் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், "திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என, கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசின் காவல்துறை தான் தடுத்து நிறுத்தியது" எனக் கூறுகிறார். "ஆனால், அதற்கு மாறாக நீதிமன்றத்தில் தர்கா நிர்வாகத்துக்கு சாதகமாக அரசுத் தரப்பு வாதிட்டது. மலையின் புனிதத்தைக் காக்கும் வகையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என வாதிட்டோம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது" எனக் கூறுகிறார், சோலைக்கண்ணன். காலம்காலமாக பலியிடும் வழக்கம் இருந்து வந்ததாக தர்கா நிர்வாகிகள் கூறுவது குறித்துக் கேட்டபோது, "தர்காவில் உள்ள சமாதி மட்டும் தான் அவர்களுக்கு சொந்தமானது. மலையின் மேல் விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் இருந்ததில்லை" எனக் கூறுகிறார், சோலைக்கண்ணன். படக்குறிப்பு, மேல்முறையீடு செய்யவுள்ளதாக எம்.பி நவாஸ்கனி கூறுகிறார். 'புதிய தடைகளை எதிர்பார்க்கவில்லை' - நவாஸ்கனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆடு, கோழியை பலியிடும் வழக்கம் உள்ளதால் அந்த உரிமையை வழங்குமாறு தான் நீதிமன்றத்தில் கேட்டோம். அங்கு இஸ்லாமியர்கள் மட்டும் நேர்த்திக்கடன் செலுத்தவில்லை. மாற்று சமூத்தினரும் நேர்த்திக் கடன் செலுத்தி வந்துள்ளனர்" என்கிறார். "மலையில் ஆய்வு செய்துவிட்டு நடைமுறை இருப்பதாக அறிந்ததால் அதனைத் தொடர்வதற்கு அனுமதிக்குமாறு கோரினோம். ஆனால், புதிய தடைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ள உள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4r4ev9ejlo
  19. 12 Oct, 2025 | 09:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், ஐந்தாவது ஆய்வை நிறைவு செய்து நிதியை விடுவிக்க இலங்கை இரண்டு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஐந்தாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு, அரசாங்கம் பின்வரும் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் அளவீடுகளுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன், கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, பலதரப்பு பங்காளிகளின் நிதி பங்களிப்புகள் பாதுகாக்கப்படுவதையும், நிதி உத்தரவாதங்களின் மதிப்பாய்வு நிறைவடைவதையும் இலங்கை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த இரு நிபந்தணைகளும் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறைவேற்றுகுழுவின் ஒப்புதலுக்காக இந்த மதிப்பாய்வு சமர்ப்பிக்கப்படும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, நிறைவேற்றுகுழுவின் ஒப்புதல் கிடைத்த பின்னர், இலங்கைக்கு 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பெறும் மொத்த நிதி உதவி சுமார் 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக உயரும். சர்வதேச நாணய நிதியத்தின் உடனான பேச்சுவார்த்தைகள் ஸ்திரமான பாதையில் செல்கின்றன என்பதைக் காட்டினாலும், 2026 வரவு செலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நிறைவேற்றுவது அரசாங்கத்திற்குள் சவால்களை ஏற்படுத்தலாம். அதே சமயம், கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து, நிதி உத்தரவாதங்களை உறுதிப்படுத்துவது என்பது பன்னாட்டுப் பங்காளிகளிடம் தங்கியுள்ள ஒரு கடினமான இராஜதந்திரப் பணியாகும். மறுபுறம் இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதே, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அடுத்த படிக்கு அத்தியாவசியமாகும்;. நவம்பர் 7 ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்பிக்க உள்ள நிலையில் இந்த இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227510
  20. Published By: Vishnu 12 Oct, 2025 | 12:24 AM அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாட்டில் முட்டை விலை குறைப்பதற்கான முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. சங்கத் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார் போல, உற்பத்தி செலவுகள் குறைந்ததையும் சந்தை நிலைமை சீராகி வருவதையும் கருத்தில் கொண்டு, முட்டையின் விலை ரூ.10 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி வெள்ளை முட்டை ஒன்றின் விலை ரூ.18 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும். மேலும், அரசு வரி கொள்கைகள் மற்றும் தீவன விலை சீரமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விலையை மேலும் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதற்கமைய விற்பனை நடைபெறும் எனவும் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/227500
  21. Published By: Vishnu 12 Oct, 2025 | 02:00 AM சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், "ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் – பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை சீன அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு (UN Women) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றுவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் உள்ளிட்ட உயர்மட்ட சீன தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார். பிரதமர் சனிக்கிழமை (11) இரவு சீனாவுக்கு புறப்படவுள்ளதாகவும், இவ்விழா இலங்கை மற்றும் சீனாவுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/227503
  22. Published By: Vishnu 12 Oct, 2025 | 12:32 AM ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதமடைந்து வருவதாகவும், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் பயணிப்பதாகவும், வேப்பங்குளம் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லையென தெரிவித்தும் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை (11.10.2025) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தினர். அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன் அப்பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உள்ளக மைதான கட்டடத்தொகுதி என்பன உள்ளதால் பெருமளவான மாணவர்கள் வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது. இதனையடுத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்களும் விஜயம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினர். இதன்போது தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கையளித்தனர். இதன்போது குறித்த விடயம் தொடர்பில், குறிப்பாக பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் உரிய துறைசார் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், ஏனைய விடயங்களை அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். இதனையடுத்து மக்களால் குறிப்பிடப்பட்ட கனரக வாகனங்கள் கல் ஏற்றிச்செல்லும் வேப்பங்குளம் பகுதியிலுள்ள கல்குவாரிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் குவாரியினை ஆய்வுசெய்ததுடன் அதன் உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். இதன்பிற்பாடு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர், குவாரி உரிமையாளர், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். தொடர்ந்து குறித்த பாதையை சீரமைத்துதர கல்குவாரி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் மேலதிக பங்களிப்பினை வழங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரும் உறுதியளித்தார் அத்துடன் புகையிரத திணைக்கள அனுமதியுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் புகையிரத கடவையை பாதுகாப்பான பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் இணக்கம் காணப்பட்டது. இதனையடுத்து சேதமடைந்துவரும் வீதியினை அனைவரும் இணைந்து பார்வையிட்டதுடன், மாற்றுப்பாதைகளுக்கான சாத்தியம் பற்றியும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227501
  23. தாலிபன் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு இல்லை - இந்திய அரசு கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images 11 அக்டோபர் 2025 புது தில்லியில் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி வெள்ளிக்கிழமையன்று (10 அக்டோபர் 2025) நடத்திய செய்தியாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வியாழக்கிழமை இந்தியா வந்த முத்தக்கி, வெள்ளிக்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஆப்கன் அரசை சேர்ந்தவர்களுடன் இந்தியாவில் நடைபெற்ற முதல் உயர்மட்ட சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை புதுதில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்றது. இதில் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பலர் பதிவிட்டுள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுத் தொடர்பு இயக்குநர் ஹபீஸ் ஜியா அகமது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது. ஆப்கானிஸ்தானை நிர்வகித்துவரும் தாலிபன் அரசாங்கம் மீது, மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களின் கல்வி மீதான கட்டுப்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளது. பெண்களுக்கு கல்வி மற்றும் உரிமைகளை கொடுப்பது இஸ்லாமியத்திற்கு எதிரானது என தாலிபன்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் இல்லாதது குறித்து இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி ப. சிதம்பரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டப் பதிவில், "தாலிபன்களுடன் இணைந்து நாம் செயல்படவேண்டிய புவிசார் அரசியல் நிர்பந்தங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் பாரபட்சமான மற்றும் பழமையான பழக்கவழக்கங்களை நாமும் ஏற்றுக்கொள்வது முற்றிலும் அபத்தமானது. தாலிபன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொள்ளாவிடாமல் பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது" என்று எழுதியுள்ளார். தனது பதிவில், கார்த்தி சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் டேக் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "பெண் பத்திரிகையாளர்களை செய்தியாளர் சந்திப்பில் இருந்து விலக்கும் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தக்கியின் முடிவை நம் அரசாங்கம் எப்படி அனுமதித்தது? இந்திய மண்ணில்,அவர்கள் விருப்பப்படி நடக்க எப்படி அனுமதிக்கலாம்? இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டார்? இந்த செய்தியாளர் சந்திப்பில் முதுகெலும்பில்லாத நமது ஆண் பத்திரிகையாளர்கள் எப்படி கலந்துக் கொண்டார்கள்?" என்று எழுதியுள்ளார். இந்நிலையில், "ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை" என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், @HafizZiaAhmad படக்குறிப்பு, ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு பெண் பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன? இதை, "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறும் பல பெண் பத்திரிகையாளர்கள், செய்தியாளர் சந்திப்பில் பாலின பாகுபாடு என்பது, நமது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். தாலிபன்கள் இந்தியாவில் பெண்களைப் புறக்கணிக்க முடியும் என்றால், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் குறித்த அவர்களின் சிந்தனையை தெள்ளத்தெளிவாக புரிந்துக் கொள்ளமுடியும் என்றும் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். வெளியுறவு விவகாரம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் பிரபலமான பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா சமூக ஊடக வலைத்தளமான X-இல், முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு எந்தப் பெண் பத்திரிகையாளரும் அழைக்கப்படவில்லை என்று பதிவிட்டார். "வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முத்தக்கிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண்களின் மோசமான நிலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை." "பெண்களின் சாதனைகள் மற்றும் தலைமைத்துவத்தில் பெருமை கொள்ளும் ஒரு நாட்டில், நாட்டின் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, முத்தக்கிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதான் இன்றைய உலகளாவிய அரசியல்..." ஸ்மிதா சர்மாவின் பதிவை மறுபதிவு செய்து பதிவிட்ட பத்திரிகையாளர் நிருபமா சுப்பிரமணியன், "சக பெண் ஊழியர்களைப் பிரித்துப் பார்ப்பது குறித்து ஆண்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார் . பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 'பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களைச் சேர்க்க முயற்சித்தேன்' "ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி, புதுதில்லி ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளர் கூட அனுமதிக்கப்படவில்லை. தூதரக வாயிலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன், ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை" என்று NDTV இன் மூத்த நிர்வாக ஆசிரியர் ஆதித்ய ராஜ் கெளல் பதிவிட்டுள்ளார். "பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று முயற்சித்த பத்திரிகையாளர்கள் இருவரில் ஆதித்ய ராஜ் கெளலும் ஒருவர். பெண்களை ஏன் அனுமதிக்க முடியாது என்று அவர் கேள்வி கேட்டார்! ஆடைக் குறியீட்டை மதித்து, அனைத்து பெண் பத்திரிகையாளர்களும் தங்களை முழுமையாக மூடிக்கொண்ட போதிலும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தாலிபன்களிடம் எதுவும் எடுபடவில்லை!" என்று கெளலுக்கு ஆதரவாக சுயாதீன பத்திரிகையாளர் அர்பண் எழுதினார். ஸ்மிதா சர்மாவின் பதிவை மறுபதிவு செய்த தி இந்து செய்தித்தாளின் ராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், "அதிகாரப்பூர்வ நெறிமுறைகளுடன் இந்திய அரசாங்கம் தாலிபன் தூதுக்குழுவை வரவேற்கிறது. இதிலும் மேலும் அபத்தமானது என்னவென்றால், பெண்களுக்கு எதிரான அவர்களின் வெறுக்கத்தக்க மற்றும் சட்டவிரோத பாகுபாட்டை இந்தியாவிற்கு கொண்டு வர தாலிபன் வெளியுறவு அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று எழுதினார். "ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது," என்று பத்திரிகையாளர் கீதா மோகன் எழுதினார். பட மூலாதாரம், Getty Images "நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு செய்தி நிறுவனமாக, பெண் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு நாம் செய்தி சேகரிக்க செல்லக் கூடாது. டெல்லியில் தாலிபன் வெளியுறவு அமைச்சரின் கூட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடவோ ஒளிபரப்பவோ கூடாது" என்று இந்து குழுவின் இயக்குனர் மாலினி பார்த்தசாரதி கூறினார் . "என் கருத்துப்படி, அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்," என்று தி இந்துவின் துணை ஆசிரியர் விஜேதா சிங் எழுதினார் . "காட்டுமிராண்டித்தனமான தாலிபன்களை நம் நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் முதலில் இந்திய மண்ணை அவமதித்தீர்கள், பின்னர் கற்காலத்திலிருந்தே இந்தியாவில் நடைமுறையில் உள்ள பெண்களுக்கு எதிரான பாலின-பாகுபாடு சட்டங்களை அவர்கள் செயல்படுத்த மகிழ்ச்சியுடன் அனுமதிக்கிறீர்கள். இது நம்பமுடியாதது! செய்தியாளர் சந்திப்புகளில் பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்வதைத் தடுப்பதற்குப் பதிலாக, பாலின சமத்துவம் குறித்த பாடங்களை நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். நமது ஜனநாயக விழுமியங்களுக்காக எழுந்து நிற்க உங்களுக்கு தைரியம் இல்லையா?" என கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்வாதி சதுர்வேதி எழுதியுள்ளார். வரலாற்றாசிரியர் ருச்சிகா சர்மா இவ்வாறு கேள்வி கேட்கிறார்: "இது ஆப்கானிஸ்தான் அல்ல, இந்தியா! இந்திய மண்ணில் தாலிபன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள பெண்களை அனுமதிக்காததற்கு அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்? இந்திய அரசாங்கத்திற்கு என்ன ஆயிற்று?" தாலிபன்கள் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய தாலிபான்கள் நாட்டை நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்துள்ளன. முன்னதாக, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கல்வி தடை விதிக்கப்பட்டதிலிருந்து, வெளி உலகத்துடன் இணைவதற்கான ஒரே வழிமுறையாக இணையம் மாறிவிட்டது என்று ஆப்கானிஸ்தான் பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு, பல்கலைக்கழகங்களிலிருந்து பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டன. பள்ளிக்குச் செல்வதற்கான தடை,"கல்வி கற்கும் உரிமையை அப்பட்டமாக மீறுவதாக" ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் மையம் விவரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjg158lezo
  24. 12 Oct, 2025 | 09:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது, தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்பு கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் இவர்கள் கூடுதலான உறவை வளர்க்க விரும்புகின்றனர். இந்த அணுகுமுறை காரணமாகவே அமெரிக்காவின் பக்கமிருந்து பெரும் ஆதரவுகள் அரசாங்கத்திற்கு கிடைத்தன. ஆனால் மார்க்சிசம் அல்லது சோசலிச சார்பு கொள்கையில் இருக்கும் ஆளும் கடசியின் மற்றொரு தரப்பான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் செல்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்தக் கடுமையான இழுபறி காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கியமான அம்பாந்தோட்டை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலப்பிட்டிய மற்றும் சப்புகஸ்கந்த போன்ற பல பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் முடங்கியுள்ளன. சமீபத்தில், அரசாங்கம் இந்த கொள்கை ரீதியான நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் சில திட்டங்களை முன்னெடுத்திருந்தது. கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பணிகள் மீண்டும் சீனாவுக்கு வழங்கியது. இதற்கான கடனை அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக சீன யுவானில் பெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. மேலும் அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கான சினோபெக் நிறுவனம் கேட்ட 40 வீத சந்தை வாய்ப்பை வழங்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. அரசாங்கத்தின் இந்த மாற்றத்தைக் கண்காணித்த அமெரிக்கா உடனடியாக எதிர்வினையாற்றியது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நியூயோர்க் விஜயத்தின் போது, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க தரப்புடன் கலந்துரையாடல்களில் இதன் போது ஈடுப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவுக்கு வழங்குவது குறித்து அமெரிக்காவின் கடுமையான கவலைகள் உள்ளதாக இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர் நேரடியாகக் கூறியிருந்ததாகவும், அதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இது முந்தைய அரசாங்கத்தின் முடிவு என்றும், மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கைக்கு முதலீடுகள் தேவைப்படும ;போது அமெரிக்கா இன்னும் எந்த முதலீட்டையும் செய்யவில்லை என்றும் அரசாங்கம் பதிலளித்துள்ளது. இதற்குப் பின்னரே, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அஞ்சுவதாகவும், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையில் ஒத்திசைவின்மை இருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவரான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, சீன முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 20 வீத வரியைக் குறைப்பது மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கையின் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு கரையோர பாதுகாப்பு கப்பல் மற்றும் கண்காணிப்பு சீ1-30 ஹெலிகொப்டர் வழங்க அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227509

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.