Everything posted by ஏராளன்
-
தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்
புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி 10 APR, 2024 | 05:09 PM புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது : புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வருடம் பிறத்தல், புதிய நாட்காட்டி, பருவத்துக்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக்கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன. புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன். புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுகூருவதோடு அனைவருக்கும் புத்தாண்டு பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/180920
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
LSG vs DC: லக்னௌ சாதனைக்கு முற்றுப்புள்ளி - டெல்லிக்கு யானை பலம் தந்த குல்தீப் செய்தது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 13 ஏப்ரல் 2024, 03:02 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சாதனைகள் என்றுமே சாதனைகளாகவே நீடித்திருப்பதில்லை. கால ஓட்டத்தில் அவை முறியடிக்கப்பட்டால்தான் புதிய சாதனை பிறக்கும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் லக்னௌ அணி வைத்திருந்த சாதனைக்கு நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்தது. லக்னௌவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 26வது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னௌ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிவரிசையில் கடைசி இடத்திலிருந்த டெல்லி கேபிடல்ஸ் 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 6 போட்டிகளில் 2 வெற்றிகள், 4 தோல்விகள் என 4 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டையும் மைனஸ் 0.975 ஆக உயர்த்திக் கொண்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த டெல்லிக்கு இந்த வெற்றி பெரிய உற்சாகத்தை அளிக்கும். பட மூலாதாரம்,SPORTZPICS அதேநேரம் லக்னௌ அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 4வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இந்தத் தோல்வியால் நிகர ரன்ரேட் 0.436 எனக் குறைந்ததால், 6 புள்ளிகளுடன் இருந்த சிஎஸ்கே அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் லக்னௌ அணி நீண்டகாலமாக ஒரு சாதனையைத் தக்க வைத்து வருகிறது. அதாவது லக்னௌ அணி இதுவரை 13 போட்டிகளில் முதலில் பேட் செய்து 160 ரன்களுக்கு மேல் கடந்துவிட்ட போட்டிகளில் தோற்றது இல்லை. 160 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட அனைத்து ஸ்கோரையும் டிபெண்ட் செய்து வெற்றி பெற்றுள்ளது என்ற சாதனையைத் தக்கவைத்திருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் லக்னௌ அணி 167 ரன்கள் அடித்த நிலையிலும், அந்த அணியை டிபெண்ட் செய்யவிடாமல் தடுத்து, டெல்லி கேபிடல்ஸ் வென்றுள்ளது. இதன் மூலம் 160 ரன்களுக்கு மேல் லக்னௌ சேர்த்தும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை டெல்லி கேபிடல்ஸ் பெற்றுள்ளது. டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் காயத்திலிருந்து மீண்டு வந்து, அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ‘சினாமேன்’ குல்தீப் யாதவின் பந்துவீச்சுதான். லக்னௌ அணியின் முக்கிய விக்கெட்டுகளான கேஎல் ராகுல்(39), ஸ்டாய்னிஷ்(8) நிகலோஸ் பூரன்(0) ஆகிய 3 பேட்டர்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதும் வென்றார். பட மூலாதாரம்,SPORTZPICS அது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர் மெக்ருக் என்ற பேட்டரை டெல்லி கேபிடல்ஸ் கண்டுபிடித்துள்ளது. அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே லக்னௌ பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொண்ட ஃப்ரேசர்(55) 31 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றியை எளிதாக்கினார். இதுதவிர தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா (32), கேப்டன் ரிஷப் பந்த்(41) ஆகியோரின் பங்களிப்பு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வெற்றியை எளிதாக்கியது. அதிலும் 3வது விக்கெட்டுக்கு ஃபேரசர், பந்த் கூட்டணி சேர்த்த 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு அருகே கொண்டு சென்றது. மிகவும் எளிய இலக்கு இந்தப் போட்டியில் வெல்லாவிட்டால் வாய்ப்பைத் தவற விட்டுவிடுவோம் என அறிந்து பேட்டர்கள் பொறுப்புடன் விளையாடியதால் டெல்லி அணி வெற்றியைப் பெற்றது. 'தோல்விகளுக்குப் பின் கிடைத்த வெற்றி' டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், “நிம்மதியாக இருக்கிறேன், தோல்விகளுக்குப் பின் கிடைத்த வெற்றி. சாம்பியன் போல் சிந்தியுங்கள், கடுமையாகப் போராடுவது அவசியம் என எங்கள் வீரர்களிடம் தெரிவித்தேன். ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பெடுத்து விளையாடினர். குழுவாகவும் சிறப்பாகச் செயல்பட்டோம். காயத்தால் பல வீரர்கள் விளையாடாமல் இருப்பது பெரிய பாதிப்பாக அமைந்துள்ளது. 10 அணிகள் விளையாடுவதால், வீரர்கள் கிடைப்பதும் கடினமாக இருக்கிறது. தோல்வியால் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். நீண்ட காலத்துக்குப் பின் எங்கள் அணியில் 3வது வீரராக ஃப்ரேசரை அடையாளம் கண்டோம். முதல் போட்டியிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்” எனத் தெரிவித்தார். சாதனை படைத்த 8வது பார்ட்னர்ஷிப் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னௌ அணியைப் பொருத்தவரை அந்த அணியின் பேட்டிங் தோல்விதான் போட்டியை இழக்கக் காரணம். டீகாக்(19), ராகுல்(39), நடுவரிசையில் ஸ்டாய்னிஷ், பூரன், படிக்கல், தீபக் ஹூடா, குர்னல் பாண்டியா என பேட்டர்கள் ஒருவர்கூட சோபிக்கவில்லை. 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. ஆனால், 8வது விக்கெட்டுக்கு அர்ஷத்கான், ஆயுஷ் பதோனி இருவரும் சேர்ந்து 73 ரன்கள் சேர்த்து லக்னௌ அணியை 160 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். அதிலும் பதோனி அதிரடியாக ஆடி 31 பந்துகளில் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். எட்டாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 73 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் வரலாற்றில் 8வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது. பதோனியும் சரியாக விளையாடமல் இருந்திருந்தால் லக்னௌ அணியின் கதை 120 ரன்களுக்குள் முடிந்திருக்கும். அது மட்டுமல்லாமல் லக்னௌ அணியின் புயல்வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தால் அவதிப்பட்டதால் கடந்த 2 போட்டிகளாக விளையாடவில்லை. அவர் அணியில் இருந்திருந்தால் நிச்சயம் ஏதேனும் திருப்பம் ஏற்பட்டிருக்கும். மயங்க் இல்லாதது லக்னௌ அணிக்கு சிறிய பின்னடைவுதான். மயங்க் ஏன் விளையாடவில்லை? பட மூலாதாரம்,SPORTZPICS மயங்க் உடல்நிலை குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “மயங்க் உடல்நலம் தேறிவிட்டார், நலமாக இருக்கிறார். நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் அவசரப்பட்டு அவரைக் களமிறக்க நாங்கள் விரும்பவில்லை. இளம் வீரர், குறைந்த வயது, அவரின் உடல்நிலைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும். மயங்க் களமிறங்க ஆவலோடு இருக்கிறார், நாங்கள்தான் தடுத்து வைத்துள்ளோம். இன்னும் இரு போட்டிகளுக்குப் பின் களமிறங்குவார்,” எனத் தெரிவித்தார். யார் இந்த ஃபேரசர் மெக்ருக்? ஆஸ்திரேலிய அணியின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 22 வயதான இளம் பேட்டர் ஃப்ரேசர் மெக்ருக். லுங்கி இங்கிடி காயத்தால் விலகவே அவருக்குப் பதிலாக ரூ.50 லட்சத்தில் ஃபரேசரை வாங்கியது. ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஃபரேசர் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 221 ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம்(51) அடித்தார். ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஃப்ரேசர் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த உள்நாட்டு டி20 போட்டிகளில் ஃப்ரேசர் 37 போட்டிகளில் விளையாடி 135 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். பட மூலாதாரம்,SPORTZPICS அது மட்டுமல்லாமல் “லிஸ்ட்-ஏ” ஒரு நாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து ஏபிடியின் சாதனையை முறியடித்து ஃப்ரேசர் உலக சாதனை படைத்துள்ளார். 2023, அக்டோபரில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய ஃப்ரேசர் 29 பந்துகளில் 13 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்து சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பிக்பாஷ் டி20 லீக்கிலும் ஃப்ரேசர் 257 ரன்கள் குவித்திருந்தார், 158 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதனால் டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கவனத்தை ஈர்த்து, ஃப்ரேசர் அணிக்குள் வந்தார். இந்த ஆட்டத்தில் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஃப்ரேசர் 157 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதிலும் ஃப்ரேசர் தான் சந்தித்த 3வது பந்திலேயே ப்ரண்ட் புட் அடித்து, டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார். ஃப்ரேசர் பேட்டிங்கை பார்த்து பயிற்சியாளர் பாண்டிங் ரசித்துக் கொண்டிருந்தார். குர்னல் பாண்டியா ஓவரில் மிட்விக்கெட், எக்ஸ்ட்ரா கவர் மற்றும் லாங்ஆஃப் திசையில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி ரன்களை குவித்தார். ஃப்ரேசர் தனது கணக்கில் 5 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் விளாசி 55 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 3வது பேட்டராக அருமையான கண்டுபிடிப்பாக ஃப்ரேசர் அமைந்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. பந்தின் கேப்டன் பொறுப்பு பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் இந்த சீசனில் கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஒவ்வொரு போட்டியிலும் பேட் செய்து வருகிறார். இந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பந்த் ஒவ்வொரு ரன்களையும் சேர்த்தார். வார்னர்(9), பிரித்வி ஷா(32) ரன்களில் ஆட்டமிழந்தபோது டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்து தடுமாற்றத்துடன் இருந்தது. ஆனால், 3வது விக்கெட்டுக்கு ஃப்ரேசருடன், பந்த் அமைத்த பார்ட்னர்ஷிப் டெல்லி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றது. இருவரும் சேர்ந்து லக்னௌ பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ஃப்ரேசர் ஒருபுறம் சிக்ஸர், பவுண்டரி விளாச, ரிஷப் பந்தும் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விரட்டி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். அரைசதம் நோக்கி நகர்ந்த பந்த் 41 ரன்னில் பிஸ்னோய் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். யானை பலம் தந்த குல்தீப் வருகை பட மூலாதாரம்,SPORTZPICS சினாமேன் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் காயத்தால் அவதிப்பட்டதால், டெல்லி கேபிடல்ஸ் அணி விரல் ஸ்பின்னர் அக்ஸர் படேலை மட்டும் வைத்து கடந்த சில போட்டிகளை எதிர்கொண்டு தோல்வியும் அடைந்தது. ஆனால், குல்தீப் யாதவ் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கியவுடன் போட்டியின் போக்கையே தனது பந்துவீச்சால் மாற்றினார். லக்னௌ அணியின் ரன்வேகத்தைக் கட்டுப்படுத்திய குல்தீப், விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொடுத்து, லக்னௌவை கடும் சிரமத்தில் தள்ளினார். குறிப்பாக ஸ்டாய்னிஷ், பூரன், கே.எல் ராகுல் ஆகிய 3 முக்கிய பேட்டர்களை வீழ்த்தி, டெல்லி அணியை 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்கச் செய்து தடுமாறச் செய்தார். அதிலும் குல்தீப் பந்துவீச்சைக் குறைத்து மதிப்பிட்டு அடிக்க முயன்றார். ஆனால் பந்து கூக்ளியாகவே, ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் அதிரடியாக பேட் செய்யக் கூடியவர், குல்தீப் பந்தை தவறாகக் கணித்து ஆட முற்படவே, க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். குல்தீப் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்திய கேப்டன் ராகுல், வைடாக வீசப்பட்ட பந்தை இறங்கி அடிக்க முற்பட்டு, ரிஷப் பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இந்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை குல்தீப் ஏற்படுத்தினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு குல்தீப் வருகை அந்த அணிக்கு யானை பலத்தை ஏற்படுத்தியது. தொடர் தோல்விகளுக்குப் பின் பெற்ற வெற்றியால், கேப்டன் ரிஷப் பந்த், பயிற்சியாளர் பாண்டிங், மென்டர் கங்குலி முகத்தில் நேற்றுதான் புன்னகை தவழ்ந்தது. தோனியாக மாறிய பதோனி பட மூலாதாரம்,SPORTZPICS தீபக் ஹூடா 10 ரன்னில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முகேஷ்குமார் பவுன்ஸர் பந்துவீச்சில் குர்னல் பாண்டியா 3 ரன்னில் விக்கெட் கீப்பர் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து லக்னௌ அணி தடுமாறியது. நடுவரிசை பேட்டர்கள் “கொலாப்ஸ்” ஆகியதால் 6 ஓவர்களாக லக்னௌ அணி ஒரு பவுண்டரிகூட அடிக்காததால் ஸ்கோர் படுத்துவிட்டது. 8வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனி, அர்ஷத் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது. பதோனியின் அதிரடிக்கு ஒத்துழைத்து அர்ஷத் ஸ்ட்ரைக்கை மாற்றி பேட் செய்தார். அதிரடியாக பேட் செய்த பதோனி ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அர்ஷத் கான் 20 ரன்கள் சேர்த்தார். இருவரும் 8வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் சாதனையும் படைத்தனர். கடைசி நேரத்தில் களமிறங்கி அருமையான ஃபினிஷ் செய்து, தோனியை போன்ற ஃபினிஷராக பதோனி மாறினார். பதோனி, அர்ஷத் இருவரும் நிலைத்து ஆடாமல் இருந்திருந்தால் லக்னௌ நிலை பரிதாபமாகியிருக்கும், டெல்லி அணியும் குறைந்த ஓவர்களில் வென்று, நிகர ரன்ரேட்டை உயர்த்தியிருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cle0g8g612po
-
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
-
இன்றைய வானிலை
இன்றைய வானிலை 13 APR, 2024 | 06:21 AM வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் குமுளமுனை, முறிகண்டி, கேந்திரமடு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும். மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/181041
-
பெங்களூரு உணவகத்தில் நடந்த வெடிப்பு - முதல்வர் சித்தராமையா சொன்னது என்ன?
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய இரு சந்தேக நபர்கள் கைது இந்தியாவில்(India) பெங்களூர்(Bengaluru) - ராமேஸ்வரம் கஃபே(Rameswaram Cafe) குண்டுவெடிப்பு சம்பவத்தின் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் 1ஆம் திகதி பெங்களூரில்(Bengaluru) உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில்(Rameswaram Cafe) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதுடன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர். குண்டு வைக்கப்பட்ட இடத்தில் குறைந்த கூட்டம் மற்றும் வெடிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்திய பெரிய தூண் அருகில் இருந்ததன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கை இந்த நிலையில், கடந்த மாதம் பெங்களூரில்(Bengaluru) உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில்(Rameswaram Cafe) குண்டு வைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று(12) அறிவித்துள்ளது. முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாஸெப்(Mussavir Hussain Shazeb) மற்றும் அப்துல் மத்தீன் தாஹா(Abdul Matheen Taha) ஆகியோர் கிழக்கு மித்னாபூர்(Midnapore) மாவட்டத்தின் Kanthi பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அவர்கள் மேற்கு வங்காளத்துக்குள் பிரவேசித்த இரண்டு மணி நேரத்துக்குள் மாநில பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமை, மத்திய உளவுத்துறை அமைப்புகள் மற்றும் மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. தேசிய புலனாய்வு முகமை (NIA)விசாரணையில், ஷாஸெப் தான் ராமேஸ்வரம் கஃபேவில் வெடிபொருளை வைத்ததாகவும், தாஹா தாக்குதலை திட்டமிட்டு தப்பி ஓடுவதற்கு உதவியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த வழக்கில் இது 2ஆவது மற்றும் மூன்றாவது கைது நடவடிக்கை ஆகும். கடந்த மாதம், இவர்களுக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் முஸம்மில் ஷரீப் (Muzammil Shareef) கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 18 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னரே ஷாஸெப்பையும், தாஹாவையும் மேற்கு வங்காளத்தில் (NIA) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தநிலையில் இன்று(12) கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://tamilwin.com/article/rameshwaram-cafe-blast-two-suspects-arrested-1712928306
-
இலங்கையில் அந்தரங்க உறுப்பின் ஒரு விதையை இழந்த இளைஞர் - காவல்துறை தாக்குதல் காரணமா?
படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட இளைஞர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு விதையொன்று அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த 7-ஆம் தேதி வாகனமொன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர். போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்திய நிலையில், போலீஸாரின் கட்டளை சமிக்ஞையை மீறி வாகனத்தை அந்த ஓட்டுநர் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, வாகனத்தைப் பின்தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள், வாகனத்தை இடைமறித்து, அதில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவத்தில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞர் மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் தனது ஆணுறுப்பு விதையொன்று அகற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகின்றார். தனக்கும் தனது நண்பனுக்கும் தாக்குதல் நடத்தியமைக்கான காரணத்தை போலீஸார் கூறவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார். ''ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி நானும் எனது நண்பனும் நகரத்திற்கு சென்று வரும் போது, போக்குவரத்து போலீஸார் இருப்பதை அவதானித்தோம். நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனங்களை கடந்து நாங்கள் எமது வாகனத்தை செலுத்தினோம். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பயணித்திருப்போம்,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காவல்துறை தாக்கியதில் இளைஞரின் ஆணுறுப்பு விதைப்பையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஏன் என்று சொல்லாமல் தாக்கினர்’ மேலும் பேசிய அவர், "அப்போது எம்மைப் பின்தொடர்ந்து வந்த போக்குவரத்து போலீஸார் வாகனத்திற்கு முன்பாக சென்று எம்மை இடைமறித்தனர். இவ்வாறு வந்த போலீஸ் அதிகாரிகள் என்னையும், எனது நண்பனையும் வாகனத்திலிருந்து வெளியில் இழுத்து தாக்கினார்கள். எனது கைகளை கட்டி தாக்கினார்கள்,” என்றார். "பின்னர் வாகனத்திற்குள் தள்ளி விட்டு கதவை மூடினார்கள். எம்மை கைது செய்தார்கள். அதன்பின்னர் முச்சக்கரவண்டியில் குழுவொன்று வந்தது. அவர்கள் என் நண்பன் மீது தாக்குதல் நடத்தினார்கள். கைது செய்த பின்னர் எனது உடல் நிலை சரியில்லை. என்னை மருத்துவரிடம் காண்பித்தனர். எனது நிலைமை மோசம் என மருத்துவர் கூறினார். அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்," என பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகின்றார். அதனை தொடர்ந்து, அந்த இளைஞர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது, அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ''அநுராதபுரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்தார்கள். எனது கீழ் பகுதி சேதமாகி, இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். சத்திர சிகிச்சையொன்று நடத்த வேண்டும் என கூறினார்கள். இப்போது அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது," எனவும் அவர் கூறினார். ''மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரும், முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த இருவரும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். காரணம் கூறவில்லை. வாகனங்களை முந்தி வந்தமைக்காக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன். எனது கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் கடுமையாக வலி இருக்கின்றது. சத்திர சிகிச்சையும் நடத்தப்பட்டுள்ளது," என அவர் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய் ‘என் மகன் வாழ்க்கையை இழந்துவிட்டார்’ தனது மகனின் ஆண் உறுப்பின் விதையொன்று அகற்றப்பட்டுள்ளதால், தனது மகன் வாழ்க்கையை இழந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய் கே.பீ.சந்திரிகா பிரியதர்ஷினி தெரிவிக்கின்றார். ''டிமோ பட்டா (Dimo Batta) வாகனத்தில் தனது நண்பனுடன் வேலை இருப்பதாக கூறிவிட்டு என் மகன் வெளியே சென்றார். திரும்பி வரும் போது போலீஸார் வாகனத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகின்றது. எனினும், அவர்கள் அதனை காணவில்லை. அதன்பின்னர் மதவாச்சி போலீஸ் நிலைய போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் பின்தொடர்ந்து வாகனத்தை இடைமறித்துள்ளனர்,” என்றார். "வாகனத்திலிருந்து என் மகனை இறக்கி, இரண்டு கைகளையும் பின்புறமாக கட்டி, கீழே தள்ளி, அடி வயிற்றில் மிதித்துள்ளனர். மகனின் நிலைமை கவலைக்கிடமானவுடன், மதவாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றி, அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இப்போது அவரது விதையொன்று அகற்றப்பட்டுள்ளது. இதை நான் யாரிடம் சென்று கூறுவது." என சந்திரிகா குறிப்பிடுகின்றார். தனது மகன் கொரியாவிற்கு வேலைக்குச் செல்ல தயாராகி வருவதாகவும் அவர் கூறுகின்றார். ''இப்போது அவரது எதிர்காலம் என்னவாகும். எதிர்காலமே இல்லாமல் போய்விட்டது," அவர் கூறுகிறார். இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பிரதி போலீஸ் மாஅதிபர் அலுவலகத்தில் முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக தாய் குறிப்பிடுகின்றார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என போலீஸார் உறுதி வழங்கியதாகவும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மன்னார் - மதவாச்சி பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் அத்துமீறி வாகனம் ஓட்டிய இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இருவர் கைது இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். மதவாச்சி போலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 16-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். போலீஸார் வெளியிட்ட ஊடக அறிக்கை மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் கடந்த 7-ஆம் தேதி மாலை இரண்டு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, டிமோ பட்டா ரக லாரியொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை பிறப்பிக்கப்பட்ட போதும், வாகனத்தை நிறுத்தாது செலுத்தியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. லாரியின் ஓட்டுநர் குறுக்கு வீதிகளில் செலுத்தியுள்ளதை அவதானித்த போலீஸார், லாரியை பின்தொடர்ந்ததுடன், இந்த பகுதியில் முச்சக்கரவண்டியில் கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளும் வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் லாரி நிறுத்தப்பட்டதுடன், அதை சோதனை செய்ய போலீஸ் அதிகாரியொருவர் முயற்சித்த சந்தர்ப்பத்தில், மீண்டும் லாரியை ஓட்டுநர் முன்னோக்கி செலுத்தியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இதன்போது போலீஸ் அதிகாரி லாரியின் இடது புற கதவில் தொங்கியுள்ளதுடன், போலீஸ் அதிகாரியை தள்ளி விட்டு மீண்டும் லாரியை செலுத்தியுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து, மீண்டும் லாரியைப் பின்தொடர்ந்த போலீஸார், துலாவெளிய பகுதியில் லாரியை மறித்து, சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களைக் கைது செய்யும் சந்தர்ப்பத்தில், லாரியிலிருந்த உதவியாளர் சட்டவிரோத மதுபானம் அடங்கிய 5 லீட்டர் பிளாஸ்டிக் போத்தலொன்றை வீசியுள்ளதாகவும், அந்த பிளாஸ்டிக் போத்தலுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். லாரியின் ஓட்டுநர், போலீஸாரின் கட்டளையை மீறி பயணித்தமை, மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை, வாகன ஓட்டுநர் அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியமை, பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தியமை போன்ற காரணங்களை முன்னிலைப்படுத்தி, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், ஆண் உறுப்பில் வலி ஏற்பட்டுள்ளதை தெரிவித்துள்ளதுடன், இதன்போது மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. மதவாச்சி போலீஸ் நிலைய அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் அநுராதபுரம் மருத்துவமனை போலீஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, மதவாச்சி போலீஸ் நிலைய அதிகாரிகளை கெபத்திகொல்லாவ போலீஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்படுகின்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cw4rlyge2xro
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
12 APR, 2024 | 09:41 PM யாழ். செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை அமைச்சர் நேரல் சென்று பார்வையிட்டுள்ளார். முன்பதாக குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு கள விஜயம் சென்ற அமைச்சர் நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலாள திட்டவரைபை தனக்கு தருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181040
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ் ஏவுகணைகள் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை ஈரான் இஸ்ரேலிற்கு எதிரான தாக்குதலிற்கு பயன்படுத்தலாம் - சிபிஎஸ் Published By: RAJEEBAN 12 APR, 2024 | 08:28 PM bbc ஈரானின் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் தனது யுத்தகால அமைச்சரவையை சந்திக்கவுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் இராணுவதளபதிகள் கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஈரான் எந்தவேளையிலும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கலாம் என வெளியாகும் தகவல்களால் மத்திய கிழக்கில் பதட்டநிலை காணப்படுகின்றது. எவ்வேளையிலும் இஸ்ரேல் மீதான தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர். ஈரான் 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இராணுவ கட்டமைப்புகளை ஈரான் இலக்குவைக்கலாம் அதனை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலிற்கு மிகவும் சவாலான விடயமாக காணப்படும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் ஈரான் தாக்குதலை கைவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று இந்த தாக்குதல் இடம்பெறலாம் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஈரான் 150 குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளன. ஈரான் தனது தாக்குதல் திட்டத்தை மிகப்பெரியதாக்கியுள்ளது. தனது ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவை இலக்குகளை அடையவேண்டும் என கருதும் ஈரான் அதற்காகவே மிகப்பெரிய எண்ணிக்கையில் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/181037
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இன்று அல்லது நாளை இஸ்ரேலின் தென்பகுதி அல்லது வடபகுதி மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளலாம் - வோல்ஸ்டீரீட் ஜேர்னல் Published By: RAJEEBAN 12 APR, 2024 | 04:50 PM the wall street journal ஈரான் இன்று அல்லது நாளை இஸ்ரேலின் தென்பகுதி மீது அல்லது வடபகுதி மீது நேரடி தாக்குதலை மேற்கொள்ளலாம் கருதும் இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்வதற்காக தயாராகிவருகின்றது என விடயம் குறித்து நன்கு அறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார் என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது அமெரிக்க ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது இதேவேளை ஈரானின் தலைமைத்துவத்திடமிருந்து தகவல்களை பெற்ற ஒருவர் ஈரான் தாக்குதல்களிற்கு திட்டமிடுகின்றது, ஆனால் இன்னமும் இறுதிமுடிவு எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார். கடந்தவாரம் சிரிய தலைநகரில் உள்ள துணை தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையணியின் தளபதிகள் உட்பட ஈரான் இராணுவத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்ப்பட்டனர். முன்னதாக ஈரான் அல்லது அதன் சார்பு குழுக்கள் இஸ்ரேலின் தூதரகம் அல்லது அதற்கு சொந்தமான கட்டிடம் மீது தாக்குதலை மேற்கொள்வது உறுதி என்பதை வெளிப்படுத்தும் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன. எனினும் தற்போது இந்த தாக்குதல் இஸ்ரேலின் எல்லைக்குள் இடம்பெறலாம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன அடுத்த சில நாட்களில் இஸ்ரேலிற்குள் ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடலாம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவிப்பதாக விடயங்கள் குறித்து நன்கறிந்த அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இஸ்ரேலின் தூதரகங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய பல கட்டிடங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து ஈரான் இராணுவம் ஈரானின் மததலைவர் ஆயத்தொல்லா அலி கமேனியுடன் ஆராய்ந்தது என இராணுவ ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிநவீன குறுந்தூர ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்தும் ஈரான் இராணுவம் ஆராய்ந்துள்ளது. இஸ்ரேலின் ஹைபா விமானநிலையம் டிமோனாவில் உள்ள அணுவாயுத பொருட்கள் தொழிற்சாலை போன்றவற்றின் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெறுவதை சித்தரிக்கும் வீடியோக்களை ஈரானின் புரட்சிகர காவல்படையின் சமூக ஊடகபக்கங்கள் வெளியிட்டுள்ளன. ஈரானின் மின்சக்தி மற்றும் உப்புநீக்கும் தொழிற்சாலைகள் தாக்கப்படலாம் என ஈரான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை நேரடி தாக்குதல்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இஸ்ரேல் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கலாம், பின்னர் ஈரானின் மூலோபாய உட்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என அவர் கருதுகின்றார். தாக்குதல் திட்டம் ஆன்மீகதலைவரின் முன்னிலையில் உள்ளது அவர் இன்னமும் உரிய பதிலை வழங்கவில்லை என ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிரியா ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை மேற்கொள்வது குறித்த திட்டமும் காணப்படுகின்றது. இந்த தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக ஈரான் சமீபத்தில் ஆளில்லா விமானங்களை வழங்கியுள்ளது என சிரிய அரசாங்கம் மற்றும் ஈரான் இராணுவத்தின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் தாக்குதலை நடத்துவதை தவிர்ப்பதற்காக 1981ம் ஆண்டு சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலான் குன்றின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டமும் காணப்படுகின்றது. காசாவிலும் தாக்குதல் இடம்பெறலாம். இஸ்ரேலுடனான உறவுகளிற்காக விலைசெலுத்தவேண்டியிருக்கும் என்பதை காண்பிப்பதற்காக அராபிய நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டமும் உள்ளதாக விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/181028
-
இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது!
Published By: DIGITAL DESK 5 12 APR, 2024 | 05:53 PM ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு படகுகளிலும் காணப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181032
-
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்
ஞானசாரருக்கு நாளை விடுதலை இல்லை! Published By: DIGITAL DESK 5 12 APR, 2024 | 08:55 PM புத்தாண்டையொட்டி நாளைய தினம் (13) விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படும் கைதிகளின் பட்டியலில், கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் பெயர் இல்லையென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரச மன்னிப்பின் கீழ் அவரை விடுவிக்க முடியாது என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181038
-
இலங்கையுடனான பாதுகாப்பு இராஜதந்திரத்தை தீவிரப்படுத்தும் இந்தியா மற்றும் அமெரிக்கா
12 APR, 2024 | 09:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நவீன பாதுகாப்பு தளவாடங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன், இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை முழுமையாக வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே மேற்கண்டவாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கான இலங்கை - இந்திய பாதுகாப்பு கருத்தரங்கு கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. பாதுகாப்பு உறவுகளில் இலங்கை - இந்திய இருதரப்பு ஒத்துழைப்பை பல்வகைப்படுத்துவதை டெல்லி ஆர்வமாக முன்னெடுத்து வருவதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன் போது அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் புவியியல் காரணமாக, இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் அதிகரித்து வரும் திறன்களை இலங்கைக்கு விரிவுபடுத்துவதற்கான வழிகள் ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மிக சமீபத்தில் இலங்கை ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்தும் வகையில் மிதக்கும் கப்பல்துறை, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் டோர்னியர் விமானங்களை வழங்கியமை உள்ளிட்ட பல விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். இது மாத்திரமன்றி இரு நாடுகளுக்கு இடையில் நில இணைப்புகள் குறித்தும் தீவிரமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், இந்திய பெருங்கடலை நோக்கிய அமெரிக்காவின் பார்வையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையுடனான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு உறவுகளை உருவாக்குவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளது. இதன் பிரகாரமே இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் என்ற உறுதிப்பாட்டை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் வழங்கியுள்ளார். இதேவேளை அமெரிக்க மத்திய உளவுத்துறை (சி.ஐ.ஏ) தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் தலைமையிலான குழுவினர் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். குறித்த விஜயமானது உயரிய இரகசிய விஜயத்திற்குறிய இராஜதந்திர மரபுகளுக்கு உட்பட்டிருந்தது. அமெரிக்க மத்திய உளவுத்துறை தலைவர் உள்ளிட்டவர்களின் இலங்கை விஜயத்தின் போது அரச உயர் மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்புகளில் முக்கிய திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. அதில் பிரதானமானதாக அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை ஸ்தாபிப்பதாகும். இந்த அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை அமெரிக்க அரசின் உதவி திட்டமாக வழங்க முடியும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இவ்வாறானதொரு அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டால், விமான நிலையத்தை பயன்படுத்தி இலங்கைக்குள் வரும் அல்லது வெளிச் செல்லும் எந்தவொரு நபர் குறித்த தகவல்களும் உடனுக்குடன் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனினால் பெற்றுக்கொள்ள முடியும். அதே போன்று மேலும் இரு திட்டங்களுக்கான யோசனைகளையும் அமெரிக்க மத்திய உளவுத்துறையினர் முன் வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. அதாவது, இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு கடல் வழியாக கொண்டுச் செல்லப்படுகின்ற கேபிள் இணைப்புகளுக்கு பதிலாக புதிய இணைப்பு கட்டமைப்பை வழங்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்பை உருவாக்குதல் என்பனவாகும். இந்த திட்டங்கள் அனைத்துமே அமெரிக்க உதவி திட்டங்களாக இலங்கைக்கு வழங்க விரும்புவதாக அமெரிக்க மத்திய உளவுத்துறையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181022
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: இந்திய மத்திய அரசு 12 APR, 2024 | 07:37 PM புதுடெல்லி: மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்தியவெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்தியவெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181036
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
அண்ணை வெள்ளையள் சட்டபூர்வமாக செய்வதை எங்கடையள் சட்டவிரோதமாக செய்கினம்! நான் கலியாணத்தைச் சொன்னேன்.
-
A/L பரீட்சை இன்று ஆரம்பம்
A/L பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு! உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 04ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன் 342,883 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/298890
-
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
இவங்களுக்கு மட்டும் தான் சர்க்கரை நோய் வராது! - Dr Sivaraman https://web.facebook.com/Vikatantv/videos/984767169730995/?mibextid=VI5BsZ&rdid=UGHevbLN68cPdOfT
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராகவே சுமந்திரன் செயற்படுகின்றார் என சுரேஷ் குற்றச்சாட்டு!
தமிழ் பொதுவேட்பாளரின் பின்னணியில் ராஜபக்ஷக்களா? - கட்சியாகக் கூடித் தீர்மானிப்போம் என்கிறார் சுமந்திரன் Published By: VISHNU 12 APR, 2024 | 06:40 AM ஆர்.ராம் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நடவடிக்கைகளின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடித்தீர்மானிப்போம் என்றும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் பரப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுவது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுகின்றபோது அந்த செயற்பாட்டை மையப்படுத்தி தென்னிலங்கை தீவிரவாத, இனவாத சக்திகள் ஒன்றுசேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டுமன்றி அவ்வாறு ஒன்று சேரும் தரப்புக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்ற நிகழ்வுகளும் அரங்கேறலாம். குறிப்பாக, தற்போதைய சூழலில் அரசியல் ரீதியாக தோற்றுப்போயிருக்கின்ற ராஜபக்ஷக்குளுக்கு கூட தமிழ் பொதுவேட்பாளர் விடயம் உயிரூட்டும் ஒரு செயலாகக்கூட மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ராஜபக்ஷக்கள் கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாகக் கையாண்டனர். அதற்காக தமிழர்கள் தரப்பிலிருந்தே ஒருவரை களமிறக்கியும் உள்ளார்கள். அவ்வாறு பொதுவேட்பாளரை நிறுத்தி விட்டு, புலிகள் வந்து விட்டார்கள் என்று புரளியைக் கிளப்புவார்கள். அதன் மூலமாக அரசியல் இலாபமீட்டுவார்கள். பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதால் தமிழர் ஒருவரை அவரது வெற்றிக்காக அங்கே கூட போட்டியிடச் செய்தார்கள். ஆகவே தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் பேசப்படுகின்ற நிலையில் அதற்குப் ராஜபக்ஷ இருக்கின்றார்களா? சிங்கள, இனவாத சக்திகள் இருக்கின்றனவா என்கிற சந்தேகம் எனக்கு இயல்பாகவே வருகின்றது. அதுமட்டுமன்றி தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் எமது மக்களின் அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு எந்தளவுக்கு பொருத்தமானது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. எனினும் குறித்த விடயம் சம்பந்தமாக நாம் கட்சியாக இன்னமும் கூடிப்பேசவில்லை. கட்சியாகவே அவ்விடயத்தினை ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தினை அறிவிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/181011
-
ஒரு சித்தர் பாடல்
தமிழ்நாட்டில் சித்தர்கள் - பிரமிக்கவைக்கும் வரலாறு - கனல்மைந்தன் https://web.facebook.com/FullyNewsy/videos/6521663491269257/?mibextid=VI5BsZ&rdid=cQbikKgeEdm7xg7G
-
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை நிரந்தரமாகப் பறிக்கும் நோய்
பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஏப்ரல் 2024, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் கால்பங்கு மக்கள்தொகை கண்சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் குணப்படுத்தக்கூடிய, சரியே செய்ய முடியாத, தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலான வெவ்வேறு விதமான கண் சார்ந்த பாதிப்புகள் உள்ளன. அதில் ஒன்றான கிளாக்கோமா சமீபத்தில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக மாறியுள்ளது. காரணம் இது பல நேரங்களில் எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் தொடங்கி, ஒரு நபர் தனது கண்பார்வையை குறிப்பிட்ட அளவு இழந்த பிறகே தெரிய வருகிறது. இதனால், இழந்த கண்பார்வையை மீட்க முடியாத நிலையும் உருவாகிறது. உண்மையில் இந்த நோயின் அறிகுறிகள் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே அதை எப்படி கண்டறிவது? அதற்கான சிகிச்சைகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். கிளாக்கோமா என்றால் என்ன? கிளாக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு நோய். கண்களை மூளையோடு இணைக்கும் நரம்புகளை இந்த நோய் பாதிக்கிறது. பிரிட்டிஷ் பொது சுகாதார சேவையின் (NHS) கூற்றுப்படி, கண்களில் குவியும் இயல்புக்கு மாறான திரவம் அதன் மீது அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி நரம்புகளை சேதப்படுத்துகிறது. கிளாக்கோமாவை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பு மற்றும் முழுமையான கண்பார்வை பறிபோவதற்கு வழிவகுக்கும். கிளாக்கோமா வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இதில் 70 முதல் 80 வயதுடையவர்களுக்கு அபாயம் அதிகம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிளாக்கோமா நோய் இரு கண்களையும் பாதித்தாலும், அவற்றில் ஒன்று கூடுதலாக பாதிக்கப்படலாம். கிளாக்கோமாவின் அறிகுறிகள் என்ன? கிளாக்கோமா ஏற்படுகிற ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் அதை பரிசோதனைகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். இது பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிக்கிறது. இதன் நீட்சியாக பார்வையையும் பாதிக்கிறது. இது மெதுவான விளைவுகளைக் கொண்டிருப்பதால், பலரும் தங்களது பார்வையில் எந்த விதமான மாற்றங்களையும் உணர்வதில்லை. இது படிப்படியாக முன்னேறி குறிப்பிட்ட அளவு பார்வை பாதிக்கப்படும் போது பாதிக்கபட்டவர்களால் தங்களை சுற்றி எதையும் பார்க்க முடியாது. உடனடியாக சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் முழுமையாக பார்வை பறிபோகவும் வாய்ப்புள்ளது. மங்கலான பார்வை மற்றும் பிரகாசமான விளக்குகளைச் சுற்றி வானவில் போன்ற வளையங்கள் தெரிவது போன்றவையும் கிளாக்கோமாவின் அறிகுறிகள் தான். இந்த நோய் இரு கண்களையும் பாதித்தாலும், அவற்றில் ஒன்று கூடுதலாக பாதிக்கப்படலாம். இதன் அறிகுறிகள் திடீரென்று தொடங்கும். அவற்றில் முக்கியமான மற்றும் பொதுவானவை.. கண்களில் கடுமையான வலி குமட்டல் மற்றும் வாந்தி கண்கள் சிவத்தல் தலைவலி கண்களைச் சுற்றி மென்மையாக மாறுதல் ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிவது மங்கலான தோற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிளாக்கோமாவின் ஆரம்ப நிலையிலேயே அதை கண்டறிந்து சிகிச்சை அளித்து விட வேண்டும். இல்லையென்றால் படிப்படியாக அதிகரித்து முழுமையாக பார்வை இழக்கும் அபாயம் உள்ளது. எப்போது சிகிச்சை பெற வேண்டும்? இந்த குறைபாடு என்றில்லாமல், உங்கள் பார்வையில் எந்த விதமான குறைபாடு இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் வந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகவும். கிளாக்கோமாவின் ஆரம்ப நிலையிலேயே அதை கண்டறிந்து சிகிச்சை அளித்து விட வேண்டும். இல்லையென்றால் படிப்படியாக அதிகரித்து முழுமையாக பார்வை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, மேற்காணும் ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தாலே உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். இது ஒரு மருத்துவ அவசரநிலை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கிளாக்கோமாவின் வகைகள் கிளாக்கோமாவில் பல வகைகள் உள்ளது. ஆனால், இவற்றில் மிகவும் பொதுவான வகை ஓப்பன் ஆங்கில் கிளாக்கோமா (open angle glaucoma) ஆகும். இது பல ஆண்டுகளாக கண்ணுக்குள் இருந்து பொறுமையாக வளர்ச்சியடைகிறது. அக்யூட் ஆங்கில் க்ளோஸர் கிளாக்கோமா (Acute Angle Closure Glaucoma) - இது மிகவும் அரிதானது. கண்ணுக்குள் திரவங்கள் பாயும் பாதை திடீரென தடைப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, கண்ணில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது கிளாக்கோமாவுக்கு வழிவகுக்கிறது. இரண்டாம் நிலை கிளாக்கோமா (Secondary Glaucoma) - கண் அழற்சி நோய் அல்லது யுவைடிஸ் போன்ற எந்த விதமான கண் நோய்களினாலும் இது ஏற்படலாம். கான்ஜெனிட்டல் கிளாக்கோமா(Congenital Glaucoma) - இந்த வகை மிகவும் அரிதாக இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இதில் கண்களை அமைப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு கிளாக்கோமா இருந்தால், உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கிளாக்கோமா ஏற்பட காரணம் என்ன? கிளாக்கோமா ஏற்பட பல காரணங்கள் உண்டு. கண்களில் காணப்படும் திரவம் அதன் பாதையில் சரியாக பயணிக்காத போது கிளாக்கோமா ஏற்படுகிறது. இது கண்ணில் எதிர்மறை அழுத்தத்தை உருவாக்குவதால், அது கண்களை மூளையுடன் இணைக்கும் பார்வை நரம்பை சேதப்படுத்துகிறது. கிளாக்கோமா உருவாகும் அபாயம் பல காரணங்களால் அதிகரிக்கிறது. வயது - வயது முதிர்வு கிளாக்கோமா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இனம் - ஆப்பிரிக்கர்கள், கரீபியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு கிளாக்கோமா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இவர்களில் 40 வயதை கடந்தவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படுகிறது. குடும்பம் - உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு கிளாக்கோமா இருந்தால், உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல்நலப் பிரச்சனைகள் - பார்வைக் குறைபாடுகள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு கிளாக்கோமா ஏற்படும் அபாயம் உள்ளது. கிளாக்கோமாவைத் தடுக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தொடர் கண் பரிசோதனைகள் மூலம், கிளாக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். கிளாக்கோமா பரிசோதனை வழக்கமான தொடர் கண் பரிசோதனைகள் மூலம், அறிகுறிகள் ஏதும் தென்படாதபோதும் கூட இதைக் கண்டறிய முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். கிளாக்கோமாவை மிக வேகமான மற்றும் வலியற்ற பரிசோதனை மூலம் கண்டறியலாம். பரிசோதனையில் கிளாக்கோமா இருப்பது தெரியவந்தால், தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுக வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிகிச்சைகளின் மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க முடியாது. மாறாக, மீதம் உள்ள பார்வை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம். கிளாக்கோமாவிற்கான சிகிச்சை என்ன? கிளாக்கோமாவால் ஒருவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டால், அவர்களின் பார்வையை மீண்டும் கொண்டு வர முடியாது. பார்வை இழப்பு லேசானதாக இருந்தால், உடனடி சிகிச்சையின் மூலம் மேலும் பார்வையிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கான சிகிச்சை அந்த நபரை பாதித்துள்ள கிளாக்கோமாவின் வகையைப் பொறுத்தது. அதனடிப்படையில் கீழ்காணும் சிகிச்சைகள் வழங்கப்படலாம். சொட்டு மருந்து (Drops) - கண்களில் அழுத்தத்தை குறைக்கும். லேசர் சிகிச்சை - இந்த சிகிச்சை மூலம் கண்களில் உள்ள திரவம் பயணிக்கும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்க முடியும். கண்களில் குறைந்த திரவ உற்பத்தியைக் கட்டுப்படுத்த லேசர் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. அறுவைசிகிச்சை - இதில் கண்ணில் உள்ள திரவம் வெளியேறும் பாதை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகளின் மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க முடியாது. மாறாக, மீதம் உள்ள பார்வை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சிகிச்சையின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் தெரிவிக்கவும். அனைவரும் வழக்கமான தொடர் கண்பரிசோதனைகள் மூலம் இந்த நோய் இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடலாம். அப்படி குடும்பத்தில் ஒருவருக்கு இருப்பது தெரிய வந்தாலும் கூட, பிற குடும்ப உறுப்பினர்களும் இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjr7dwlrkwqo
-
இன்றைய வானிலை
இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கும்! நாட்டின் சில இடங்களில் இன்று மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்த நிலையில், பதிவாகும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் வெப்பம் நிலவும் நேரத்தில், அதிகளவான நீராகாரங்களைப் பருகுமாறு கோரப்பட்டுள்ளனர். அத்துடன், வீட்டில் இருக்கும் நாட்பட்ட நோயாளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/298864
-
பொருத்தமான தருணம் : சஜித், அநுரவுடன் தமிழ்த் தரப்பு பேச வேண்டும் - தயான் ஜயதிலக்க
Published By: VISHNU 12 APR, 2024 | 06:38 AM ஆர்.ராம் உள்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் புரையோடிப்போயிருக்கின்ற சிங்கள, பௌத்த தேசிய இனவாதத்தினை களைவதற்கு பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் பிரதான போட்டியாளர்களான சஜித், அநுரவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர்களின் அரசியல் போக்கு அவரோணகத்தில் சென்றுகொண்டிருக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துகின்ற முயற்சியானது பொருத்தமான வியூகமாக அமையப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முஸ்தீபுகளை எடுத்துள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு உபாயங்களை முன்னெடுத்துள்ளனர். இருப்பினும் அந்த உபாயங்களால் தமிழ் மக்களுக்கு போதுமான அளவில் பிரதிபலங்கள் கிடைத்திருக்கவில்லை. அவ்வாறான பின்னணியில் தற்போது தமிழ் அரசியல் தரப்புக்கள் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள். அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் ஒருமித்து நின்று செயற்பட்டுவதற்கு முன்வருகின்ற பட்சத்தில் சாத்தியமானதொரு வியூகமாகும். ஆனால் கள யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வியடத்தில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையில் ஏகமனதான நிலைமைகள் வரப்போவதில்லை. இதன்காரணமாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற உறவுகள் தற்போதைய நிலைமையை விடவும் மோசமானதாகவே அடையப்போகின்றது. அவ்விதமான நிலைமையில், நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளரால் அதியுச்ச கோரிக்கையான சுயாட்சி உள்ளிட்டவற்றை முன்வைப்பது மிகக் கடினமானதாகவே அமையும். 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 1977இல் தேர்தலுக்கு முகங்கொடுத்த நிலைமைகள் தற்போது இல்லை. தமிழர்களின் அரசியல் போக்கு அவரோகணத்திலேயே உள்ளது. அவ்விதமானதொரு சூழலில் பொதுவேட்பாளர் முடிவானது பொருத்தமான நகர்வாக அமையாது. மேலும் தென்னிலங்கையில் அடுத்த ஜனாதிபதி தோதலில் பிரதான வேட்பாளராக இருக்கப்போகின்றவர்கள் சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திஸாநாயக்கவுமே. இவர்கள் இனவாதத்துக்கு எதிராக ஒன்றுதிரண்ட ‘அரகல’வின் சக்தியை அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் மீண்டும் சிங்கள, பௌத்த இனவாத விடயங்களை மையப்படுத்தி அரசியல் செய்வதற்கு விளைய மாட்டார்கள். அவ்விதமான சூழலில் நாட்டில் தற்போது, சிங்கள, பௌத்த இனவாதத்தினை அரசியலில் இருந்து துடைத்தெறிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை தமிழ்த் தரப்பினர் சரியாக பயன்படுத்த வேண்டும். ஆகவே, அவர் சஜித், அநுர ஆகியோருடன் நீண்டகாலமாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகள் சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுத்து தீர்வினை எட்ட வேண்டும். அதேநேரம், ஸ்பெயினின் கட்டலோனியாவில் நடைபெற்ற விடயத்தினையும், குர்திஸ்லாந்தில் ஏற்பட்ட நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, பிரித்தானிய பிரமர் தட்சருக்கு எதிராக போராடிய சின்பிங் அமைப்பின் வியூகத்தினையும் முன்னுதாரணமாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்கவும் முடியும். அதனடிப்படையில் தமிழ்த் தரப்பு பொருத்தமான தருணத்தினை பயன்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதே பொருத்தமானது என்றார். https://www.virakesari.lk/article/181012 அவங்களே நமக்கு ஆலோசனை சொல்லும் நிலைக்கு கொண்டுவந்து விட்டாயிற்று!
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
12 APR, 2024 | 10:10 AM கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் கள்ளக்காதலனும் பொலிஸாரால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த நபரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (11) அக்கரைப்பற்று வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்து. பிரேத பரிசோதனையில் கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயதுடைய மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/181024
-
தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில் இணங்குகிறேன் - சிறீதரன்
Published By: VISHNU 12 APR, 2024 | 06:41 AM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை. ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும். அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன். எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது. ஆகவே, குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றார். https://www.virakesari.lk/article/181010
- லௌ(வ்)கீகம் - T. கோபிசங்கர்
-
கண்களே இல்லாத, தங்கநிறமான இந்த அரிய விலங்கு எங்கு தென்பட்டது தெரியுமா?
யாருடைய நகத்தை அண்ணை?!