Everything posted by ஏராளன்
-
காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்
15 FEB, 2024 | 11:41 AM அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தனது நான்குவருடக கால தோழியுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். காதலர் தினத்தன்று தனது நான்குவருடகால தோழிக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை வழங்கி தான் அவரை திருமணம் செய்ய விரும்புவதை தெரிவித்துள்ளார். பதவியிலிருக்கும் போது திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட முதலாவது அவுஸ்திரேலியபிரதமர் அன்டனிஅல்பெனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவள் ஆம் என தெரிவித்தாள் என்ற பதிவுடன் இந்த விடயத்தை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை பகிர்ந்து கொள்வது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். வாழ்க்கையின் ஏனைய பகுதி முழுவதும் ஒன்றாகயிருப்பது என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒருவரையொருவர் சந்திக்க முடிந்ததால் நாங்கள் அதிஸ்டசாலிகள் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். அல்பெனிசிற்கு 60 வயது அவருடைய வாழ்க்கை துணையான ஹெய்டனிற்கு 40 வயது என்து குறிப்பிடத்தக்கது. இருவரும் நான்கு வருடங்களிற்கு முன்னர் சந்தித்தனர். அவுஸ்திரேலிய நாடாளுமன்ற சகாக்களும் நியுசிலாந்து பிரதமர் உட்பட பலரும் வாழ்த்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/176428
-
மரணத்திலும் பிரியாத காதல்: கருணை கொலை மூலம் அன்பு மனைவியுடன் கைகோர்த்தபடி மரணித்த நெதர்லாந்து முன்னாள் பிரதமர்
தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது. இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவருமான டிரைஸ்-வான்-ஆகட் ( 94 வயது), இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி (93 வயது) இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு டிரைஸ்வான் ஆகட்டிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனை பார்த்து மனவேதனை அடைந்த இகுனி, நெதர்லாந்து சட்டப்படி தங்களை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கைவிடுத்தார். இதனை ஏற்று அரசு சட்டவிதிகளின் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும் விஷ ஊசி செலுத்தப்பட்டது. அப்போது இருவரும் கை கோர்த்தபடி மரணித்தனர். இருவரும் இணைந்தபடி மரணித்திருப்பது பார்ப்போரை நெகிழ செய்தது. https://thinakkural.lk/article/291964
-
டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு
கண்ணீர் புகை குண்டு ட்ரோன்களுக்கு ‘பதிலடி’யாக பட்டம் பறக்கவிட்ட பஞ்சாப் விவசாயிகள்! 15 FEB, 2024 | 11:01 AM புதுடெல்லி: இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ள அதேவேளையில், போராட்டக் களம் புதன்கிழமை விவசாயிகளின் நூதன யுக்தி ஒன்றுக்குச் சாட்சியானது. அரசு தங்களுக்கு எதிராக ஏவி விடும் கண்ணீர் புகை குண்டுகளை சுமந்து வரும் ட்ரோன்களுக்கு பதிலடியாக பட்டங்களைப் பறக்க விட்டு விவசாயிகள் செயலிழக்கச் செய்தனர். அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குவது, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி போவதில் பஞ்சாப் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதற்காக டெல்லி நோக்கி பேரணி தொடங்கினர். அவர்களின் பேரணியை பஞ்சாப் - ஹரியாணா எல்லையின் ஹரியாணா போலீஸார் தடுத்தனர். இதற்காக சிமென்ட் தடுப்புகள், முள் வேலிகள், அமைத்து, போலீஸார், துணை ராணுவத்தினரை நிலை நிறுத்தியிருந்தனர். தங்களின் கொள்கையில் உறுதியாக இருந்த விவசாயிகள் தடைகளை மீறி முன்னேற முயன்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீச்சி அடித்தும், தடியடியும் நடத்தினர். இதனால் அங்குள்ள ஆம்லாவின் ஷம்பு பகுதியில் பதற்றம் நிலவியது. இரவு இடைநிறுத்தம் செய்யப்பட்ட போராட்டம் காலையில் மீண்டும் தொடங்கியது. விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் இருக்க ஹரியாணா போலீஸார் மீண்டும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கூட்டத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீச போலீஸார் ட்ரோன்களை பயன்படுத்தினர். இந்த நிலையில், தங்கள் மீது அரசு ஏவி விடும் ட்ரோன்களை எதிர்கொள்ள விவசாயிகள் ஒரு நூதன யுக்தியைக் கையாண்டனர். ட்ரோன்களுக்கு எதிராக பட்டங்களை பறக்க விட்டு அவற்றை செயலிழக்கச் செய்தனர். ட்ரோன்களின் காத்தாடிகளில், பட்டங்களின் மாஞ்சா நூலைச் சிக்க வைத்து அவற்றை செயலிழக்கச் செய்வதுதான் இந்த புத்திசாலித்தனான நடவடிக்கைகளின் செயல் திட்டம். இதனிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமாறு விவசாயிகள் நடந்து கொள்ளக் கூடாது. விவசாய சங்கங்களுடன் நேர்மறையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்களின் முயற்சிகள் தொடரும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல், தற்போது பேசப்பட்டு வரும் சட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார். இன்றைய இரண்டாவது நாளில் ஷம்பு எல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர், "விவசாயிகளின் போராட்டம், அரசியல் சாராமல், அமைதியான முறையில் நடந்து வரும் நிலையில், அரசு அவர்களை இழிவுபடுத்துகிறது. முதன் முறையாக விவசாயிகளுக்கு எதிராக துணை ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவே விரும்புகிறோம். நாங்கள் அரசாங்கத்துடன் மோத விரும்பவில்லை. நாங்கள் நேற்றும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம். இன்றும் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். தங்கள் முயற்சியில் மனம் தளராத இளம் விவசாயிகள் டிராக்டரின் உதவியுடன் தடைகளை உடைக்க முயன்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் பாட்டில் ஈர உடைகள், கண்ணீர் புகை குண்டின் தாக்கத்தை குறைக்கும் உபகரணங்களுடன் களத்தில் நின்றனர். https://www.virakesari.lk/article/176416
-
நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்
கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம் ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில், அந்த எந்திரனின் தவறான செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமெரிக்காவில் பரிதாபமாக இறந்திருக்கிறார். எந்திரன்களின் அனுகூலங்கள் மருத்துவத்துறையிலும் அதிகரித்துள்ளன. மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு வாய்த்திராத துல்லியம், ஓர்மை ஆகியவற்றுடன், ஓய்வின்றி அறுவை சிகிச்சைகளை நடத்தி முடிப்பதில் எந்திரன்கள் சிறப்பானவை. மேலும் ரிமோட் சிஸ்டம் அடிப்படையில் தொலைவில் இருந்து இந்த எந்திரனை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழி நடத்துவது எளிது. இப்படி நேர்மறை சாதகங்களை கொண்டிருந்தபோதும் இந்த எந்திரன்கள், மனித நுணுக்கம் மற்றும் ஆய்ந்தறியும் அறிவு இல்லாததன் காரணமாக விபரீதத்துக்கு வழி செய்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார். அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது. பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், ’டா வின்சி’ எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது. ஆனால் அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாரா விதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணி வந்த சாண்ட்ராவை, முந்திக்கொண்டு சாகடித்திருக்கிறது ’டா வின்சி’ ரோபோவின் தவறான அறுவை சிகிச்சை. ஹார்வி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கில், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும், அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் அதனை விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கி இருக்கிறார். மேலும் டா வின்சி இதற்கு முன்னதாக நடத்திய அறுவை சிகிச்சைகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விசாரணையும் கோரியிருக்கிறார். https://thinakkural.lk/article/291961
-
அமெரிக்க கன்சாஸ்சிற்றியில் Football Parade இல் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 20 பேர்வரை காயம்.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி 22 பேர் காயம் Published By: RAJEEBAN 15 FEB, 2024 | 07:37 AM அமெரிக்காவின் கன்சாஸ் நகரில்இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். கன்சாஸ் நகரத்தில் இடம்பெற்ற அணிவகுப்பின் இறுதியிலேயே superbowl parade துப்பாக்கி சூட்டுசம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வில் இறுதியில் இடம்பெற்ற வன்முறையை தொடர்ந்து மக்கள் அச்சத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து 22 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் பல சிறுவர்கள் உள்ளனர். எட்டுப்பேர்ஆபத்தான நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவரை கைது செய்துள்ள அதிகாரிகள் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்த பெண் ஒரு டிஜே என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/176410
-
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யும் இலங்கையின் முயற்சி தோல்வியடைந்தது
பெரிய வெங்காய ஏற்றுமதி மீதான தடையில் இருந்து இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை, இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக விலையில் வாங்குவதற்கு ஏனைய சந்தைகளை நாடுகிறார்கள். வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், இலங்கை போன்ற நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை இருமடங்காக உயர்ந்ததை அடுத்து, டிசம்பர் 8, 2023 அன்று ஏற்றுமதியைத் தடை செய்தது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கை முடிவை இந்தியா எடுத்துள்ளது. எவ்வாறாயினும், தடை செய்யப்பட்ட போதிலும் விசேட ஏற்பாடுகளின் கீழ் இந்தியாவில் இருந்து 100,000 தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கை விலக்கு கோரியது. இந்த முயற்சி பலனளிக்கவில்லை, எனவே உள்ளூர் சந்தையில் விலைகள் அதிகமாகவே காணப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை .350-375 ரூபாவாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பெரிய வெங்காயம் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஒரு தொன் 1200 அமெரிக்க டொலர்கள் விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. சாதாரண சூழ்நிலையில், இலங்கை ஒரு மாதத்திற்கு சுமார் 20,000 தொன்களை இறக்குமதி செய்கிறது. “விலை மிக அதிகமாக இருப்பதால், இப்போது 12,000-15,000 தொன்னாகக் குறைந்துள்ளது. பாகிஸ்தான் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை விதித்துள்ளது,” என்றார். இதற்கிடையில், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒரு ஆதாரம், தடை இன்னும் நீக்கப்படவில்லை, எனவே இந்தியா இலங்கைக்கு ‘பெங்களூர் ரோஸ் ஒனியன்’ எனப்படும் மற்றொரு வகை வெங்காயத்தை வழங்கியுள்ளது. https://thinakkural.lk/article/291987
-
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் திறப்பு!
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 02:50 PM அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜெய்கா (JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் ,அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , JICA தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் சற்றுமுன்னர் திறந்துவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/176443
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று மீண்டும் நீதிமன்றுக்கு.. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அவரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர் இதனையடுத்து அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். https://thinakkural.lk/article/291929
-
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ஒருமித்த முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானதாக தேர்தல் பத்திர திட்டம் இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முழுக்க முழுக்க "பதில் உதவியை எதிர்பார்க்கும்" நோக்கங்களுக்காக மட்டுமே இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நன்கொடைகள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவு தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏப்ரல் 12, 2019 முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தகவலை மார்ச் 13, 2024க்குள் தனது இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும், அரசியல் கட்சிகளால் எடுக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் வாங்குபவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது என மத்திய அரசு வாதிட்டது தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம். இந்திய அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை. இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம். தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும். மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திர திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது தேர்தல் பத்திரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்ன? இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பப்படுகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவை மீறுவதாக வாதிடப்பட்டது உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட ஒரு பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. நிறுவனங்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்க தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து இந்த மனு கேள்வியெழுப்பியிருக்கிறது. இது அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் குறைக்கும் என்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்க அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர். தேர்தல் பத்திரத் திட்டம் பட்ஜெட்டில் உள்ளது. பட்ஜெட் என்பது ஒரு பண மசோதா என்பதால் மாநிலங்களவை அந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதாக நிறைவேற்றும் வகையில், பண மசோதாவில் தேர்தல் பத்திரத் திட்டம் சேர்க்கப்பட்டது என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன இந்தத் திட்டத்தில் எந்தக் கட்சி அதிகம் பயன்பெற்றிருக்கிறது? 2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. இந்த ரூ.9,188 கோடியில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது. அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது. Association for Democratic Reforms (ADR) அமைப்பின் அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டுக்கும் 2021-22 நிதியாண்டுக்கும் இடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 743 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகள் 48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன. இந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் (இது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு), தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.3,439 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக ADR தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் (11 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன), அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடை பெற்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது? 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ADRன் மனுவின்படி, கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது. தேர்தல் பத்திரங்களை 'நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை' என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி, இந்த பத்திரங்கள் நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/cn0ng6q06lno
-
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு LED தொலைக்காட்சிகளும் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் சாதனைகள் நிகழ்த்திய தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/291896
-
கசிப்பு அருந்திய மாணவன் பாடசாலையில் சுகயீனமுற்றதால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்!
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 04:19 PM பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மாணவன் ஒருவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (14) இந்த மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இதுகுறித்து ஆசிரியர்கள் அவரிடம் கேட்டபோது, பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான வீதியில் வைத்து தான் கசிப்பு அருந்தியதாக கூறினார். இதனையடுத்து அந்த மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தான் கசிப்பு அருந்தியதனை குறித்த மாணவன் வைத்தியசாலையில் கூறியதன் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பசறை ஆதார வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.virakesari.lk/article/176459
-
யாழில் விற்கப்பட்ட ஐஸ்கிறீமில் தவளை!
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த குளிர்பான விற்பனை நிலையத்தில் நேற்று (14) ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தநிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. https://thinakkural.lk/article/291932
-
யாழ். வட்டுக்கோட்டையில் விபத்து ; இருவர் காயம்
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 03:28 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/176451
-
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடி : இருவர் கைது
கம்பஹாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் பல்வேறு தரப்பினரிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் கம்பஹா – வேபட பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்த தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி என்பன குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291973
-
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023இல் 10 ஆயிரம் முறைப்பாடுகள்!
Published By: NANTHINI 15 FEB, 2024 | 11:14 AM சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு 10 ஆயிரம் முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவிக்கையில், 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலத்தில் 9,434 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன. அவற்றில் குறிப்பாக, 2,242 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 472 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 404 முறைப்பாடுகள் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 51 முறைப்பாடுகள் சிறுமிகள் மீதான வன்முறைகள் தொடர்பானவை. 6 முறைப்பாடுகள் சிறுவர்களை ஆபாசத்துக்கு பயன்படுத்தியமை தொடர்பானவை. இவை தவிர, சிறுவர்களை போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துதல், தொழில்களுக்கு அமர்த்துதல், குடும்ப வன்முறையை பிரயோகித்து துன்புறுத்தல், புறக்கணித்தல், கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வியை பெற்றுத் தராதிருத்தல் போன்றவை தொடர்பிலும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேவேளை, கடந்த 2022இல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 7,466 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உரிய திணைக்களங்களுக்கு இந்த முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க தற்போது காணப்படும் சில சட்டங்களில் திருத்தம் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176420
-
அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 11:12 AM சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காதலர் தினத்தன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மனைவி அல்லது குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொடர்பான 37, 514 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய தொகையாக கருதப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176415
-
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில்
நிறைவுக்கு வந்தது இரு தினங்களாக தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு! Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 10:33 AM கடந்த இரு தினங்களாக தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று வியாழக்கிழமை (15) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவான DAT ஐ தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தன. இந்நிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததையடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இதேவேளை, வைத்தியசாலை சேவைகளை தடங்கலின்றி முன்னெடுக்க 1,400க்கும் அதிகமான இராணுவத்தினர் களமிறக்கப்பட்டிருந்தனர். அத்துடன் சுகாதாரத்துடன் தொடர்புடைய சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176417
-
பெருந்தோட்ட மக்களை தொழில்முனைவோராக வலுவூட்ட விசேட சமூக உடன்படிக்கை கைச்சாத்து - சஜித்
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனேயே சஜித்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் - வேலுசாமி இராதாகிருஷ்ணன் Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 09:01 AM (எம்.மனோசித்ரா) பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது நோக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (14) ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்களின் எதிர்பார்ப்பு என்பவை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எடுத்துரைக்கப்பட்டு அதன் மூலமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அவர்கள் காணி உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு விசேட செயலணியை உருவாக்குவதற்கு சஜித் பிரேமதாச இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றினால் குறித்த ஜனாதிபதி செயலணியின் ஊடாக அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்திருக்கின்றார். அதன் அடிப்படையிலேயே நாமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/176411
-
அதிகரிக்கப்பட்ட வற் வரியை விரைவில் குறைப்போம் - ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு
Published By: VISHNU 15 FEB, 2024 | 01:43 AM (எம்.ஆர்.எம்.வசீம்) மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அதிகரிக்கப்பட்ட வற்வரி இன்னும் சில மாதங்களில் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அத்துடன் தற்போதுள்ள ஆட்சி முறையில் செல்வதா மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பதே மக்களுக்கு இருக்கும் சவாலாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (14) இ்டம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும்போது சில கடுமையான தீர்மானங்களை எடுப்பது தவிர்க்க முடியாத விடயமாகும். இதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக 2022இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்கும்போது திறைசேரியில் 852 பில்லியன் ரூபா மறை பெருமானத்திலேயே இருந்தது. ஆனால் 2023 நிறைவடையும்போது எமது அடிப்படை செலவுகளுக்கு ஒதுக்கிய பின்னர் திறைசேரியில் 52 பில்லியன் ரூபா மீதமாகி இருந்தது. அனைவரின் அர்ப்பணிப்பின் மூலமே இதனை செய்ய முடியுமாகியது. விசேடமாக நிதி அமைச்சின் அதிகாரிகள் திறைசேரியின் அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட சேவையின் மூலமே இந்த இலகக்கை எமக்கு எட்ட முடிந்தது. மேலும் இந்த பொருளாதார அபிவிருத்திக்கு வற் வரி அதிகரிக்கப்பட்டதுடன் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய வருமானங்களை முறையாகச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்களைப் பெற்றுக்கொள்ள முறையான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக தற்போது அரசாங்கம் எதிர்பார்த்த வருமானங்கள் கிடைக்கப்பெற்று வருவதால், இறுதியாக அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் வற்வரியை நூற்றுக்கு 15வீம் வரை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறோம். மேலும் நாடு ஸ்திர நிலையை அடைந்துவரும் நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, தற்போது முன்னெடுத்துச்செல்லப்படும் ஆட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதா அல்லது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அமைக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டத்தை அவ்வாறே தொடர்ந்து முன்னுக்குக் கொண்டு செல்வதா என்பதே மக்கள் முன்னால் இருக்கும் சவாலாகும். அதனால் மனங்களை மாற்றும் வார்த்தைகளுக்கு ஏமாந்துவிடாமல் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/176408
-
இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
பெத்தும் மீண்டும் அபார சதம், தொடரில் 346 ஓட்டங்கள்; ஆப்கானுடனான தொடரை இலங்கை முழுமையாக சுவீகரித்தது Published By: VISHNU 14 FEB, 2024 | 10:40 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (14) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முழுமையாக சுவீகரித்தது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதம், அவிஷ்க பெர்னாண்டோவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின. இந்தத் தொடரில் அபாராமாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க தனது 52ஆவது போட்டியில் 44ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை வீரர்களில் குறைந்த போட்டிகளில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனைக்கு உரித்தானார். இன்றைய கடைசிப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவும் அவிஷ்க பெர்னாண்டோவும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 173 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் இந்தத் தொடரில் பகிர்ந்த இரண்டாவது சத இணைப்பாட்டம் இதுவாகும். முதலாவது போட்டியில் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவிஷ்க பெர்னாண்டோ 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கவனக்குறைவான அடி தெரிவினால் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 66 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களை விளாசினார். அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டம் இழந்த பின்னர் குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 78 ஓட்டங்களை பெத்தும் நிஸ்ஸன்க பகிர்ந்தார். குசல் மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்றார்.. மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தம் நிஸ்ஸன்க 101 பந்துகளில் 16 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைக் குவித்தார். அணியின் வெற்றிக்கு மேலும் 14 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்தார். சதீர சமரவிக்ரம 8 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் வெற்றி இலக்கை அடைய உதவினர்.. பந்துவீச்சில் கய்ஸ் அஹ்மத் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது. ரஹ்மத்துல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸமத்துல்லா ஓமர்ஸாய் ஆகியோரின் திறமையான துடுப்பாட்ட உதவியுடன் ஆப்கானிஸ்தான் 40ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அதன் பின்னர் மோசமாகத் துடுப்பெடுத்தாடி கடைசி 6 விக்கெட்களை வெறும் 43 ஓட்டங்களுக்கு இழந்தது. மொத்த எண்ணிக்கை 39 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 13 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் மற்றைய ஆரம்ப வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குர்பாஸ் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார். குர்பாஸைத் தொடர்ந்து சொற்ப நேரத்தில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிடி 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (108 - 3 விக்.) இந் நிலையில் ரஹ்மத் ஷாவும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயும் 4 ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ரஹ்மத் ஷா திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், இக்ரம் அலிகில் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 223 ஓட்டங்களாக இருந்தபோது இக்ரம் அலி 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவர் உட்பட கடைசி 6 விக்கெட்கள் 43 ஓட்டங்களுக்கு சரிந்தன. அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 54 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டு வெளியேறினார். இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி 9 விக்கெட்களை 25 ஓட்டங்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சுருட்டியமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அணிக்கு மீளழைக்கப்பட்ட துனித் வெல்லாலகே 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் 3 வருடங்களுக்குப் பின்னர் விளையாடும் அக்கில தனஞ்சய 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பெத்தும் நிஸ்ஸன்க தனதாக்கிக்கொண்டார். அவர் மூன்று போட்டிகளில் ஒரு இரட்டைச் சதம், ஒரு சதம் உட்பட 173.00 என்ற சராசரியுடன் 346 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையாகவும் இது அமைந்தது. முதல் போட்டியில் சாதனைமிகு 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன் அடுத்த இரண்டு போட்டிகளில் 18 ஓட்டங்களையும் 118 ஓட்டங்களையும் பெற்றார். https://www.virakesari.lk/article/176402
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
விசா சர்ச்சையினால் விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹமத் Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 12:41 PM (ஆர்.சேதுராமன்) இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான ரெஹான் அஹமத், விசா பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். இந்தியாவிலிருந்து அபுதாபிக்கு சென்று மீண்டும் அவர் இந்தியாவுக்கு சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வென்றது. கடந்த 5 ஆம் திகதி முடிவடைந்த 2 ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ஓட்டங்களால் வென்றது. 3 ஆவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ளது. 2 ஆவது போட்டிக்கும் 3 ஆவது போட்டிக்கும் இடையில் 10 நாட்கள் இடைவெளி இரந்த நிலையில், இங்கிலாந்து குழாத்தினர் ஓய்வுக்காக அபுதாபிக்கு சுற்றுலா மேற்கொண்டனர். அதன்பின் அவர்கள் நேற்றுமுன்தினம் ராஜ்கோட் நகரிலுள்ள ஹிராசார் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, ரெஹான் அஹமத்தை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ரெஹான் அஹ்மத்துக்கு ஒற்றை நுழைவு விசாவே வழங்கப்பட்டிருந்தது. அதனால் இந்தியாவிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் அந்த விசா மூலம் மீண்டும் இந்தியாவுக்கு வர முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், நிலைமையைக் கருத்திற்கொண்டு 2 நாட்களுக்கு மாத்திரம் உள்ளுர் அதிகாரிகள் விசா வழங்கியதுடன், விசா பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு இங்கிலாந்து குழாமை அறிறுத்தினர். இங்கிலாந்து குழாத்தில் 31 பேர் பயணித்தனர் எனவும் அவர்களில் ரெஹான் அஹ்மத் மாத்திரமே விசா பிரச்சினையை எதிர்கொண்டார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து அணியினர் இந்தியாவுக்கு வரும்போது அவ்வணியின் மற்றொரு வீரரான ஷொயீப் பஷீருக்கு உரிய நேரத்தில் விசா வழங்கப்படவில்லை. இதனால் ஏனைய வீரர்கள் இந்தியாவுக்கு சென்ற பின்னரும் பஷீர் சில தினங்கள் அபுதாபியில் காத்திருக்க நேரிட்டது. அப்போ ரெஹான் அஹ்மத் பிரச்சினையை எதிர்நோக்கவில்லை. 19 வயதான ரெஹான் அஹ்மத், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். https://www.virakesari.lk/article/176349
-
எஸ்தோனிய பிரதமரை தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைத்தது ரஸ்யா
Published By: RAJEEBAN 14 FEB, 2024 | 03:09 PM உக்ரைனின் தீவிரஆதரவாளரான எஸ்தோனியாவின் பிரதமர் காஜா காலசினை ரஸ்யா தேடப்படும் நபர் எனஅறிவித்துள்ளது. குற்றவியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை ரஸ்யா தேடப்படும் நபராக அறிவித்துள்ளது. எஸ்தோனியாவின் கலாச்சார அமைச்சர் உட்பட வேறு சில முக்கிய அதிகாரிகளையும் ரஸ்யா தேடப்படுபவர்களின் பட்டியலில் இணைத்துள்ளது. வரலாற்று நினைவுகளை அவமதித்தமைக்காகவே இவர்களை தேடப்படுபவர்கள் பட்டியிலில் இணைத்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. சோவியத்யூனியனின் போர்வீரர்களின் நினைவுச் சின்னங்களை அழித்தமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை ரஸ்யா சுமத்தியுள்ளது என ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை ஆச்சரியமளிக்கவில்லை என எஸ்தோனிய பிரதமர் தெரிவித்துள்ளார். நான் சரியான விடயங்களை செய்கின்றேன் என்பதை இது இன்னமும் வலுவாக நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் உக்ரைனிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெரும்வெற்றி பெற்றுள்ளது. இது ரஸ்யாவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது எனவும்தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை என்னை மௌனமாக்கும் என கிரெம்ளின் கருதுகின்றது. ஆனால் அது நடைபெறாது மாறாக இது உக்ரைனிற்கான எனது ஆதரவைமேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176369
-
டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு
“அவர்கள் விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல” - இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்குவேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் ஆதரவு 14 FEB, 2024 | 02:20 PM டெல்லியை நோக்கி பேரணி செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும் பொருளாதார நிபுணருமான மதுரா ஸ்வாமிநாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும் அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர்கள் விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். நாம் நம்முடைய ‘அன்னதாதா’க்களிடம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது. இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். எனது தந்தையும் வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனை நாம் தொடர்ந்து கவுரவிக்க எண்ணினால் எதிர்காலத்துக்காக நாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து உத்திகளிலும் விவசாயிகளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176362
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சுரங்கப் பாதைக்குள் ஹமாஸ்தலைவர் - வீடியோவொன்றை வெளியிட்டது இஸ்ரேல் Published By: RAJEEBAN 14 FEB, 2024 | 12:42 PM ஹமாஸ்அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கான்யூனிசில் சுரங்கப் பாதையொன்றிற்குள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ என தெரிவித்து இஸ்ரேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் தனது குடும்பத்தினருடன் காணப்படும் வீடியோ ஒன்றையே இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் பத்தாம் திகதி ஹமாஸ் அமைப்பின் சிசிடிவியில் பதியப்பட்ட இந்த வீடியோ சமீபத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதை ஊடாக அவர் இவ்வாறே தனது குடும்பத்தினருடன் தப்பி ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த பாதுகாப்பான தங்குமிடத்திற்கு சென்றார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில் காணப்படுபவர் ஹமாஸ் அமைப்பின் தலைவரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள சிஎன்என் அவர் உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றப்படும்வரை தேடுதல் வேட்டை முடிவடையாது. நாங்கள் அவரை கைதுசெய்வது குறித்து உறுதியாக உள்ளோம் நிச்சயம் கைதுசெய்வோம் என தெரிவித்துள்ளார். இதேவேளை ஹமாஸ் தலைவர் மறைந்திருந்த சுரங்கப் பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் காணப்படும் வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. சின்வரின் முக்கிய பதுங்குமிடம் அது அவர் அங்கு சமீபநாட்களில் காணப்பட்டார் என இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றார், படுக்கையறைகள் சமையலறைகள் போன்றவற்றையும் அந்த வீடியோ காண்பிக்கின்றது. மில்லியன் கணக்கில் டொலர்களையும் அங்கு காணமுடிந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர். நாங்கள் வருவது தெரிந்ததும் அவர்கள் தப்பிவிட்டனர் என இஸ்ரேலிய படைவீரர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176351
-
முருகன், ராபர்ட்பயஸ் கால வரையறையற்ற உண்ணாவிரதம்?!
திருச்சி சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டடார் முருகன் 14 FEB, 2024 | 11:50 AM முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டணை வழங்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் அங்கு தான் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் தன்னை முகாமிலிருந்து விடுவித்துஇ லண்டன் அனுப்ப வலியுறுத்தி கடந்த ஜன.29-ம் தேதிமுதல் உண்ணாவிரதம் இருந்துவந்தார். முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் தனது கணவரின் உடல்நிலை மோசமாகி வருவதால் அவரைக் காப்பாற்ற நடவடிக்கைஎடுக்கக் கோரி தலைமைச் செயலர் திருச்சி ஆட்சியர் காவல் ஆணையருக்கு முருகனின் மனைவி நளினி கடிதம் எழுதினார். இந்நிலையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித் துணை ஆட்சியர் நஸிமுநிஷா முருகனிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் லண்டன் செல்வதற்கான பாஸ்போர்ட் எடுக்க சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததையடுத்து முருகன் 14 நாட்கள் உண்ணாவிரதத்தை நேற்று முன்தினம் கைவிட்டார். https://www.virakesari.lk/article/176341