Everything posted by ஏராளன்
-
2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்
10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடியா? தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் பற்றி விவசாயிகள் கருத்து பட மூலாதாரம்,MKSTALIN/X கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகளும் பொருளாதார நிபுணர்களும். தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டில் ரூ. 38,904 கோடி ரூபாய்க்கு வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு, 42,281 கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், குறிப்பிடத்தக்க திட்டமாக மண் வளத்தைக் காப்பதற்கான "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தவிர, 100 உழவர் அங்காடிகள் அமைப்பதற்கான அறிவிப்பு, எண்ணெய் வித்துகள், துவரம் பருப்பு பயிரிடும் பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அளித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையைவிட கூடுதலாக ஒரு டன்னுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் 2,235 கி.மீ. தூரத்திற்கு சி, டி பிரிவு கால்வாய்கள் தூர்வாரப்படும் என்றும் 5,338 கி.மீ. தூரத்திற்கு ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் வேளாண் பொருளாதார நிபுணர்களும் விவசாயிகளும். "விவசாயத்திற்கு தனியான நிதிநிலை அறிக்கை என்றவுடன் பலர் இதனை விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட மரியாதையைப் போல பார்க்கிறார்கள். அப்படியல்ல, விவசாயத்தில் பிரச்னைகள் என்பவை இடம் சார்ந்து இருக்கும். அதைத் தனித்தனியாக விவாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என்று கோரப்பட்டது. அப்படி விவாதிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் என்று பார்த்தால், இந்த நிதிநிலை அறிக்கை மண்வளம், பயிர்களின் வளம், அதிக சத்துகள் கிடைப்பது என மூன்றையுமே பேசியிருப்பது முக்கியமானது. இதற்காக 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. அதேபோல, ரசாயனமற்ற விவசாயம் குறித்துப் பேசும்போது, அதற்கான இடுபொருள் தேவை என்பது மிக முக்கியமானது. அதை இந்த நிதிநிலை அறிக்கையில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது" என்கிறார், வேளாண் பொருளாதார நிபுணரான ஆர். கோபிநாத். வேப்பங்கன்று வளர்க்க ரூ.2 கோடி எதற்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் திரூவாரூர் மாவட்டச் செயலாளருமான அழகர்ராஜ், கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்கிறார். "கடந்த நிதிநிலை அறிக்கையில் பருத்தி உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். திருவாரூர் மாவட்டத்தில்தான் அதிகம் பருத்தி விளைகிறது. பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை உருவாக்க 2 கோடி ரூபாய் செலவிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். வேப்பங்கன்றுகள் சாதாரணமாக வளரக் கூடியவை. அதற்காக 2 கோடி ரூபாய் நிதியைச் செலவழிப்பது தேவையற்றது" என்கிறார். அதேபோல, பல அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்கிறார் அவர். "நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் ரகங்களைக் காப்பாற்ற 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அது சுத்தமாகப் போதாது. ஏதோ பெயருக்குச் செய்ததைப் போல இருக்கிறது. அதேபோல, காவிரி டெல்டா பகுதியில் தூர்வார ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியும் போதாது" என்கிறார் அவர். 16,500 கோடி ரூபாய் விவசாயிகளின் கடன்களுக்காக ஒதுக்கியிருந்தாலும் அந்தக் கடன்கள் சிறிய விவசாயிகளுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்கிறார் அவர். ”10 உலர்த்திகள் போதாது” பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் விவசாய இயந்திரங்கள், ஆய்வகங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்றும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிறார் ஆர். கோபிநாத். "மண்வளத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் ஒன்று மயிலாடுதுறையில் அமைக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். மண் வள ஆய்வகங்களைப் பொருத்தவரை அவை பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுகின்றன. என்னதான் நடமாடும் ஆய்வகங்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை. இந்த நடமாடும் ஆய்வகங்களில் செய்யப்படும் ஆய்வுகளில் நுண்ணூட்டச் சத்துகள் குறித்து அறிய முடிவதில்லை. விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் ஐம்பது கிலோ மீட்டருக்கு ஒன்று என மண் வள ஆய்வகங்களை அமைக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் 35 சதவீத்திற்கு மேல் நெல்தான் பயிரிடப்படுகிறது. இந்த நெல்லை விவசாயிகள் விற்கும்போது, ஈரப்பதம் குறித்த பிரச்னை வருகிறது. இதை எதிர்கொள்ள 'ட்ரையர்' எனப்படும் உலர்த்திகள் தேவைப்படுகின்றன. எல்லோருமே இதனைக் கேட்கிறார்கள். இப்போது அரசு 10 உலர்த்திகளை வாங்கப்போவதாகச் சொல்கிறது. பத்து உலர்த்திகள் போதாது, நிறைய வாங்க வேண்டும்" என்கிறார் ஆர். கோபிநாத். இயற்கைப் பேரிடர்கள் வரும்போது இழப்பீடு வழங்குவது என்பது பெரும் சிக்கலான விஷயமாக இருப்பதால், அதனை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிறார் அவர். "கடந்த ஆண்டு சில மாவட்டங்களில் மழை பெய்து குறுவை சாகுபடி பயிர்கள் சேதமடைந்த போது, அரசு நிவாரணம் அளித்தது. அப்படி அரசு நிவாரணம் அளிக்கும்போது அதில் பல பிரச்னைகள் வருகின்றன. இந்த நிவாரணத்தை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம், அந்த இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனமே கொடுத்துவிடும். அதனைச் செய்ய வேண்டும்" என்கிறார் கோபிநாத். இந்தியாவில் விளைபொருட்களுக்கான ஆதார விலை என்பது எப்போதுமே சிக்கலான ஒன்றாக இருக்கிறது. நெல், கோதுமை உள்ளிட்ட பல பயிர்களுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் இந்தியா முழுவதுமே இருந்து வருகின்றன. "தமிழ்நாடு அரசின் இந்த நிதிநிலை அறிக்கையில் கரும்புக்கு மத்திய அரசின் ஆதார விலையைவிட ஒரு டன்னுக்கு கூடுதலாக 215 ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நெல்லுக்கு அப்படி ஏதும் சொல்லவில்லை" என்கிறார் கோபிநாத். ”கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்” பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் அவற்றுக்கு நிதி ஒதுக்குவதில்லை எனக் குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன். "குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயும் தருவதாகச் சொன்னார்கள். இப்போதுவரை அதைப் பற்றி பேச்சே இல்லை" என்கிறார் பி.ஆர். பாண்டியன். இதே விஷயத்தையே சுட்டிக்காட்டுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம். "நெல்லுக்கு 2,500 ரூபாயும் கரும்புக்கு 4,000 ரூபாயும் தருவதாகச் சொன்னது திமுகதான். ஆனால், நான்கு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்த பிறகும் அதைப் பற்றி பேசாதது வருத்தமளிக்கிறது. இப்போது நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,085 ரூபாய் அல்லது 2,107 ரூபாய் தரப்படுகிறது. கேரளாவில் 2,860 ரூபாய் தருகிறார்கள். சத்தீஸ்கரில் 2,750 ரூபாய் தருகிறார்கள். தமிழ்நாடு அரசு ஏன் அதைச் செய்யத் தயங்குகிறது? அதேபோல, கரும்புக்கான ஊக்கத் தொகையாக கடந்த ஆண்டு வரை டன்னுக்கு 195 ரூபாய் தந்தார்கள். இந்த ஆண்டு 215 ரூபாய் தருகிறார்கள். 100 கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்திருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் சண்முகம். ”காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும்” பட மூலாதாரம்,GETTY IMAGES எல்லா வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் இதனை வலியுறுத்தினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் அவர். பி.ஆர். பாண்டியன் வேறு சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார். பொது விநியோகத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விநியோகித்தால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். இது குறித்து பல முறை அரசிடம் சொல்லியும் அது பற்றிய அறிவிப்புகள் இல்லை என்கிறார் அவர். பயிர் காப்பீட்டைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தைத் துவக்க வேண்டும் என்கிறார் சண்முகம். "பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள். தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு காப்பீட்டுத் தொகையாக 2,400 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் 1600 கோடி ரூபாய்தான் விவசாயிகளுக்கு அளித்தன. இது அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே தமிழ்நாடு அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும்" என்கிறார் பெ. சண்முகம். இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது, பயிர் கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 16,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பது கன்னியாகுமரியில் தேனீக்களுக்கான முனையம் அமைப்பது ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புகள் என்கிறார் அவர். https://www.virakesari.lk/article/176806
-
இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
இலங்கைக்கு இலகு வெற்றி: ரி20இல் ஹசரங்க 100 விக்கெட்கள், சகலதுறைகளில் மெத்யூஸ் பிரகாசிப்பு Published By: VISHNU 19 FEB, 2024 | 11:18 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்த இலங்கை 72 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த முதுலாவது ரி20 கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்து தொடரைக் தனதாக்கிக்கொண்டது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஸத்ரானின் விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்த வனிந்து ஹசரங்க தனது 63ஆவது போட்டியில் 100ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார். மேலும் ஒரு விக்கெட்டை இந்தப் போட்டியில் கைப்பற்றிய அவர் 101 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார். ஆப்கன் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ரஷீத் கானுக்கு அடுத்ததாக அதிவேகமாக (குறைந்த போட்டிகள்) 100 விக்கெட்களை வீழ்த்தியவர் ஹசரங்க ஆவார். ரஷீத் கான் 53 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் லசித் மாலிங்கவுக்கு அடுத்ததாக 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்த இரண்டாவது இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க ஆவார். சர்வதேச ரி20 அரங்கில் 100 விக்கெட்களைக் கைப்பற்றிய 11ஆவது வீரராவார். இன்றைய போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸின் சகலதுறை ஆட்டம், சதீர சமரவிக்ரம நிதானமாக குவித்த அரைச் சதம், பினுர பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரண ஆகியோரின் துல்லியமான பந்துவீச்ச என்பன இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின. இன்றைய போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றிய மதீஷ பத்திரண இதுவரை மொத்தமாக 6 விக்கெட்களைக் கைப்பற்றி இந்தத் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைக் குவித்தது. சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் கடைசி ஓவர்களில் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டங்களே இலங்கைக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்தன. பெத்தும் நிஸ்ஸன்க (25), குசல் மெண்டிஸ் (23) ஆகிய இருவரும் 23 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வாவும் சதீர சமரவிக்ரமவும் 3ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தனஞ்சய 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். முதலாவது போட்டியில் அதிரடியாக அரைச் சதம் குவித்த வனிந்து ஹசரங்க இந்தப் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 பந்துகளில் 22 ஓட்டங்களை விளாசி ஆட்டம் இழந்தார். (110 - 4 விக்.) அடுத்து களம் புகுந்த சரித் அசலன்க (4) நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. இந் நிலையில் சதீர சமரவிக்ரமவுடன் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ் நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தார். முதல் 12 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்ற அவர் அதன் பின்னர் 10 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசி 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 4 சிக்ஸ்களையும் 2 பவுண்டறிகளை அடித்தார். மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 42 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் மொஹமத் நய்ப் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 188 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 17 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தவறான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரை வார்த்தனர். கரிம் ஜனாத் (28), மொஹமத் நபி (27) ஆகிய இருவரே ஆப்கானிஸ்தான் சார்பாக 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ஏஞ்சலோ மெத்யூஸ் தனது முதல் இரண்டு ஓவர்களை மிகவும் துல்லியமாக வீசி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைப் கைப்ற்றி ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுத்தார். அவரை விட பினுர பெர்னாண்டோ 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஏஞ்சலோ மெத்யூஸ் https://www.virakesari.lk/article/176806
-
இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
எதிர்கொள்வதற்கு கடினமான பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண - ஏஞ்சலோ மெத்யூஸ் 20 FEB, 2024 | 07:58 PM (நெவில் அன்தனி) வலைப் பயிற்சியின் போது எதிர்கொள்ளும் கடினமான பந்து வீச்சாளர்களில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவும் ஒருவர் என இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர். முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றியீட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். 'வலைப் பயிற்சியின்போது மதீஷ பத்திரனவை எதிர்கொள்வதே எமக்கு உள்ள மிகப்பெரிய சவால் என நான் கருதுகிறேன். அவரது வித்தியாசமான பந்துவீச்சுப் பாணி காரணமாக பல துடுப்பாட்டவீரர்களுக்கு பந்து தெரிவதில்லை. மற்றைய விடயம் தான் பந்து வரும் வேகம். மணித்தியாலத்திற்கு 152 கிலோ மீற்றர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வரும்போது பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று நினைக்கிறேன். கையை நேராக்கி 150 (கிலோ மீற்றர்) வேகத்தில் பந்துவீசுவது கடினமான காரியம். எனவே அவரது பந்துவீச்சு பாணிக்கு ஏற்ப அவர் பக்கவாட்டில் பந்துவீசும்போது அவரை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை யாருக்கும் நினைத்துப்பார்க்கக் கூடியதாக இருக்கும். 'அவர் தொழில்முறை கிரிக்கெட் விளையாடி நிறைய அனுபவம் பெற்றுள்ளார். எனவே கடைசி ஓவரில் 12 ஓட்டங்களைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு அவரை கோரினால், அவர் 10 போட்டிகளில் 9இல் அல்லது 8இல் வெற்றியை ஈட்டிக்கொடுப்பார். ஏனெனில் அவ்வளவுக்கு கடினமான பந்துவீச்சாளர் என்பதால் அவரை எதிர்கொள்வது கடினமாகும். எனவே அவரை நாம் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவரை பாதுகாக்க வேண்டும். அவர் தனது உடல் தகுதியையும் ஒழுக்கத்தையும் மிகவும் சிறப்பாக வைத்திருக்கும் வீரர்' என மேத்யூஸ் குறிப்பிட்டார். இரண்டாவது போட்டியில் மதீஷ பத்திரண 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை இலகுவாக்கி இருந்தார். https://www.virakesari.lk/article/176904 ஆப்கானிஸ்தானுடனான பரபரப்பான முதலாவது ரி20யில் இலங்கை 4 ஓட்டங்களால் வெற்றி Published By: VISHNU 17 FEB, 2024 | 11:14 PM (நெவில் அன்தனி) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (17) நடைபெற்ற இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்று முக்கியம் வாய்ந்த முதலாவது இருதரப்பு ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 161 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவின் அதிரடி அரைச் சதம், மதீஷ பத்திரணவின் 4 விக்கெட் குவியல், பினுர பெர்னாண்டோவின் கட்டுப்பாடான கடைசி ஓவர் என்பன இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. ஆப்கானிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையின் முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் அசத்திய போதிலும் இந்தப் போட்டியில் அவர்களது ஜம்பம் பலிக்கவில்லை. போட்டியின் 8ஆவது ஓவரில் இலங்கை 4 முன்னணி வீரர்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் சாதனை நாயகன் பெத்தும் நிஸ்ஸன்க (6), குசல் மெண்டிஸ் (10), தனஞ்சய டி சில்வா (24), சரித் அசலன்க (3) ஆகிய நால்வரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் துடுப்பாட்ட வரிசையில் துணிச்சலுடன் தன்னை உயர்த்திக்கொண்டு களம் இறங்கிய வனிந்து ஹசரங்க ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அதிரடியில் இறங்கினார். அவரும் சதீர சமரவிக்ரமவும் 5ஆவது விக்கெட்டில் 41 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் வனிந்து ஹசரங்க ஆட்டம் இழந்தார். 32 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட வனிந்து ஹசரங்க 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 67 ஓட்டங்களைக் குவித்தார். மத்திய மற்றும் பின்வரசையில் எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை. பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் வெற்றி இலக்கை 5 ஓட்டங்களால் அடையத் தவறியது. அணித் தலைவரும் ஆரம்ப வீரருமான இப்ராஹிம் ஸத்ரான் கடைசிவரை தனி ஒருவராக போராடி 55 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அது பலன் தராமல் போனது. குல்பாதின் நய்புடன் 2ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களையும் கரிம் ஜனாத்துடன் 6ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் ஸத்ரான் பகிர்ந்தார். ஆனால் ஏனைய துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து போதிய பங்களிப்பு கிடைக்காததால் ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது. ஸத்ரானைவிட கரிம் ஜனாத் 20 ஓட்டங்களையும் குல்பாதின் நய்ப் 16 ஓட்டங்களையும் பெற்றனர். ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி ஓவரை கட்டுப்பாட்டுடன் ஸத்ரானுக்கு வீசிய பினுர பெர்னாண்டோ முதல் 4 பந்துகளில் ஓட்டம் கொடுக்காமல் கடைசி 2 பந்தகளில் மாத்திரம் 6 ஓட்டங்களைக் கொடுத்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில் மதீஷ பத்திரண 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையம் தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மதீஷ பத்திரண. https://www.virakesari.lk/article/176645
-
இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
இருநாட்டு மீனவர்களையும் மோதவிடாது அத்துமீறலை தடுத்து நிறுத்துங்கள் - மாவட்ட மீனவர்கள் கோரிக்கை 20 FEB, 2024 | 04:21 PM (எம்.நியூட்டன்) இந்திய மீனவர்களின் அத்துமீறலை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை இந்திய அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் எமது போராட்டம் தொடர்போராட்டமாகி கடலிலும் தரையிலும் போராட்டமாக மாறும் என யாழ் மாவட்ட மீனவர்கள் தெரிவித்தார்கள். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் இந்திய துணை துதரக்கத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டபோதே இதனை தெரிவித்தார்கள் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் நீண்டகாலமாக இந்திய மீனவர்களின். அத்து மீறலை கண்டித்து போராடிவருகிறோம். நாம் இனி என்ன தான் செய்வது ஒருதடவை இந்திய மீனவர்கள் அத்து மீறிவருகின்ற போது எமது சேத மதிப்பானது பல இலட்சங்களை தாண்டுகின்றது. இதனை ஈடுசெய்ய முடியாத நிலை உள்ளது இவை தெடர்பில் பல தரப்பட்ட முறைப்பாடுகளை செய்தும் உள்ளோம் எனினும் எந்த பயனும் இல்லை ஒரு நாட்டு மீனவர்கள் தமது நாட்டின் எல்லையை மீறி மற்ருமோருநாட்டின் எல்லகயை தாண்டி வந்து அத்து மீறி தொழில் செய்கிறார்கள் என்றால் இரண்டு நாட்டு கடற்படையினலும் அனுமதி வழங்குகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு வருகிறது எமது வளத்தை பாதுகாக்க வேண்டியவர்களே அதனை அளிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துமீறி வருபவர்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கப்படுமாயின் இந்த அத்து மீறலை தடுக்கலாம் கண்துடைப்பிற்காக இந்திய மீனவர்களை கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும் ஏமாற்ர நாடகமாகவே உள்ளது இந்திய மீனவர்கள் தொப்பிள் கொடி உறவு என கூறிக் கொண்டு எமது வாழ்வாதாரத்தை இல்லாது செய்கிறார்கள். இதனை எவ்வாறு ஏற்பதுஇந்திய மீனவர்களது அத்து மீறல்களை தடுத்து நிறுத்துங்கள் நாங்கள் கடலையே நம்பிள்ளோம் எமது வாழ்வாதாரத்தை நிம்மதியாக இருக்க விடுங்கள் இலங்கை இந்திய அரசாங்கங்கள் இருநாட்டு மீனவர்களையும் மோதவிட்டு பார்க்காது அத்துமீறலை தடுத்துமாறு கோருகிறோம் என்றார்கள். https://www.virakesari.lk/article/176879
-
இலங்கை மன்னாரில் அதானி நிறுவன திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர முயற்சியா? புதிய சர்ச்சை
இலங்கையில் அதானி நிறுவன திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர முயற்சியா? புதிய சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷெர்லி உபுல் குமார் பதவி, பிபிசி சிங்கள சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் மன்னார் பகுதியில் அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர அந்நாட்டு அரசு அமைப்புகள் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளிட்ட ஆய்வுகள் அனைத்தும் அதானி நிறுவனத்திற்கு சாதகமாக நடத்தப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டிருப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. இலங்கையில் அதானி நிறுவனத்தின் திட்டம் என்ன? ராமர் பாலம் உள்பட பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ள அந்த இடத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்? இந்த திட்டத்திற்கு அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? மன்னார் பகுதியின் அமைவிட சிறப்புகள் உலகிலேயே பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும் முக்கிய எட்டு இடங்களில், தெற்கு ஆசிய மார்க்கத்தின் சொர்க்கமாக இலங்கை விளங்குகின்றது. பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்து, சுமார் 30 நாடுகளில் இடம்பெயர்ந்து இந்த பறவைகள் இலங்கைக்கு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி பறவைகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கைக்குள் பறவைகள் பிரவேசிக்கும் பிரதான மார்க்கமாக மன்னார் உள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தின் ஒரு அங்கமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் கடல் தொழிலாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். அதற்கேற்ற விசேஷமான ஒரு சூழல் கட்டமைப்பை இந்த மாவட்டம் கொண்டுள்ளது. இலங்கை வரலாற்றில் இணைந்ததான பூகோள ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்த இடம் காணப்படுகின்றது. அதனால், மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் ஊடாக எழுகின்ற பிரச்னை, பறவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையாது. ஆனால், அந்த மதிப்பீடுகளை பொருட்படுத்தாமல், புலம்பெயர் பறவைகள் இலங்கைக்குள் வராத காலப் பகுதியில், அரச நிறுவனங்கள் அறிவியல்பூர்வமற்ற சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து, அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு, உத்தேச மன்னார் கற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை வழங்குவதற்கு தயாராகி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ''மன்னாரில் 10 லட்சம் பறவைகள் தங்குகின்றன" பட மூலாதாரம்,GETTY IMAGES காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான அனுமதியை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக மக்கள் கருத்துக் கேட்பு மார்ச் மாதம் 6-ம் தேதி வரை இடம்பெறுகின்றது. எனினும், இவ்வாறு எழுகின்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த நிபுணர் குழு ஆகியன நிராகரித்துள்ளன. ''இலங்கைக்கு வருகைத் தரும் புலம்பெயர் பறவைகளில் 10 லட்சம் வரை பறவைகள் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் மன்னாரில் தங்கிவிடும். எனினும், புலம்பெயர் பறவைகள் இல்லாத காலப் பகுதியில் ஆய்வுகளை நடாத்தி, அதில் புலம்பெயர் பறவைகளுக்கு பிரச்னை கிடையாது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் தொழில்நுட்ப தவறாகும். இரண்டாவது விஷயம் என்னவென்றால், இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான பகல் பொழுதில் நடந்து சென்று தயாரித்துள்ளனர். எனினும், ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் இரவு நேரத்திலேயே பறப்பதாக செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டியுள்ளோம். இவ்வாறு பறந்து வரும் பறவை கூட்டத்தில், சில வேளைகளில் இரண்டரை முதல் நான்கு லட்சம் வரையான பறவைகள் காணப்படுகின்றன. அப்படியென்றால், பகல் பொழுதில் வனப் பகுதிகளில் தங்கியிருந்து, இரவு வேளைகளில் பறக்கும் பறவைகள் தொடர்பில் எவ்வாறு கூற முடியும்? என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் சம்பத் சேனவிரத்ன, பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ENVIRONMENTAL IMPACT ASSESSMENT REPORT / CEA படக்குறிப்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை: பறவைகளுக்கான தாழ்வாரங்கள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. ''பறவைகளுக்கு செல்ல பாதையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நகைச்சுவையொன்று இதில் கூறப்பட்டுள்ளது. அதனூடாக செல்ல வேண்டும் என்றால், திருப்புமுனைகளில் பெயர் பலகைகள் இருக்க வேண்டும். அதானியின் வரைபடத்தையும், சுற்றாடல் அதிகார சபையின் வரைபடத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, அந்த பாதைக்கு இடையிலும் காற்றாலைகள் காணப்படுகின்றன. அதானியின் பாதையில் செல்வதற்கு பறவைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எப்படியாவது காற்றாலை திட்டத்தைக் கொண்டு வரும் வகையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது" என அவர் மேலும் கூறுகின்றார். பறவைகளின் சொர்க்கமாக காணப்படுகின்ற மன்னார் தீவும், அதனை அண்மித்துள்ள பகுதிகளும் விஞ்ஞான ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகின்றது. ராமர் பாலம் (ஆதாம் பாலம்) தேசிய பூங்காவாகவும், விடத்தல் தீவு இயற்கை வனப் பகுதியாகவும், வங்காலை புனித பூமியாகவும் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், ராமர் பாலத்தை (ஆதாம் பாலம்) தேசிய பூங்கா பட்டியலிலிருந்து நீக்குவதற்கும், விடத்தல் தீவை இயற்கை வனப் பகுதியிலிருந்து விடுவிப்பதற்கும் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, இந்த காற்றாலை திட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது. பட மூலாதாரம்,ORNITHOLOGY STUDY CIRCLE / UNIVERSITY OF COLOMBO படக்குறிப்பு, செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மன்னாரில் பறவைகளின் இடம்பெயர்வு பாதையை அவதானிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதானியின் இந்த திட்டம் என்ன? உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், புதிதாக 52 காற்று விசையாழிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தம்பவாணி காற்றாலை திட்டத்திற்கு இணையாக மன்னார் தீவில் பெரும்பாலான பகுதிகளில் புதிய காற்றாலை விசையாழிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அறிக்கையினூடாக அறிய முடிகின்றது. ஆண்டொன்றில் 1048 மணித்தியாலங்களுக்கான ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக ஆண்டொன்றில் 8 லட்சம் டன் கரியமில வாயு உமிழ்வை குறைக்கும் என கூறப்படுகின்றது. இதற்காக ஆண்டொன்றிற்கு 1.8 கோடி ரூபாய் எரிபொருளுக்காக செலவிடப்படவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி வெளியிடப்பட்ட 1852/2 என இலக்கமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிக்கையின் பிரகாரம், மின்உற்பத்தி அபிவிருத்தி பிரதேசத்திற்குள் 202 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மன்னார் மற்றும் புனரீனில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை தொடங்க இலங்கை அரசுடன் அதானி ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு ஒழுங்குபடுத்தல் நிறுவனம் திட்ட ஆதரவாளரானது எப்படி? "இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை இந்த திட்டத்தின் திட்ட முன்மொழிவாளராக செயற்பட்டு வருகின்றது. இது சட்டவிரோதமானது" என கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார். ''இதில் மூன்று விதமான தவறுகள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு அறிக்கையை சுற்றாடல் அதிகார சபை தயார் செய்து, அதற்கேற்ற சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும். ஆனால் மாற்று இடத்தை தேர்வு செய்வதனை தவிர்த்து, சுற்றாடல் அதிகார சபை முதலில் தெரிவு செய்ய மன்னாரையே பொய்யான முறையில் பெயரிடுகின்றது. சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம், மாற்று இடம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இரண்டாவது, அதானி நிறுவனத்திற்காக இந்த திட்டத்தை அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தல் நிறுவனமான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையே நிர்வகித்து வருகின்றது. எப்படி அது நடக்க முடியும். மூன்றாவது, இந்த இடத்தை முன்மொழிந்தவராக எடுத்துக்கொண்டு, மூன்றாவது நபருக்கு வழங்கினால், அதற்கான முறை என்ன? அப்படியொன்றால், விலை மனு கோரப்பட்டு, தகுதியானவர் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், அதானி முன்னராகவே தெரிவு செய்யப்பட்டு, அதனை அவருக்கு வழங்க முயற்சிப்பார்களாயினும், அது பாரிய முறைகேடாகும்" என கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவிக்கின்றார். ''சட்டத்தை எப்படி விளக்குவது என தெரியவில்லை" ஒழுங்குப்படுத்தல் நிறுவனமாக செயற்படுகின்ற அரச நிறுவனமொன்று, திட்டத்தின் முன்மொழிவாளராக செயற்படுகின்றமையின் சட்ட பின்னணி என்னவென்றது தொடர்பில் நாம், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் ரஞ்ஜித் சேபாலவிடம் வினவினோம். எனினும், அவர் சட்டத்தின் பின்னணி குறித்து தெளிவூட்டுவதற்கு பதிலாக, முதலீட்டாளருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்தும் தொடர்பில் கருத்து வெளியிட்டார். ''சட்டத்தை எப்படி விளக்குவது என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. நாங்கள் திட்ட முன்மொழிவாளர்கள் என விண்ணப்பமொன்றை முன்வைத்தோம். இந்த திட்டம் எங்களுடைய அதிகாரத்தினால் செயற்படுத்தப்படுகின்றது என இதனூடாக குறிப்பிடப்படவில்லை. இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து அங்கீகாரங்களையும் பெற்றுக்கொடுப்பதையே நாம் செய்கின்றோம். முதலீட்டாளர்கள் வந்து இதனை செய்வதற்கு இரண்டு மூன்று வருடங்கள் சென்றுவிடும். அப்படியென்றால், முதலீட்டாளர்கள் வருகை தர மாட்டார்கள். முதலீடு செய்ய தயார் என்ற அடிப்படையிலேயே நாம் இதனை செய்கின்றோம். அதில் எமக்கு ஏதேனும் செலவீனங்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை நாம் அறவிட்டுக் கொள்வோம். இதுவே எமது கொள்கையாகும்" என அவர் பதிலளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “அந்தச் சூழலை தேவையில்லாமல் மாற்றினால் மன்னாரில் வசிக்கும் சுமார் 70,000 மக்கள் தண்ணீரை இழக்க நேரிடும்" ''காற்றாலைகளில் பறவைகள் மோதுகின்றன" இந்த திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் அறிக்கையை ரமணி எல்லேபொல தலைமையிலான புத்திஜீவிகள் குழு தயாரித்துள்ளது. பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் தேவக்க வீரகோன், மூலிகைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக கலாநிதி ஹிமேஷ் ஜயசிங்க, நீர்நிலைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து டி.ஏ.ஜே.ரண்வல ஆகியோர் ஆராய்ந்துள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்காக பேரை கொண்ட குழுவொன்று ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. இந்த ஆய்வு குழுவின் பிரதானியாக செயற்பட்ட ரமணி எல்லேபொல, பிபிசி சிங்கள சேவைக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். ''அதானிக்கு தேவையான திட்டத்திற்கு நாம் அனுமதி வழங்கியதாக கூற முடியாது. சுற்றுச்சூழல் நிலைமைகளை ஆராய்ந்து சில காற்றாலை விசையாழிகளை அகற்றியுள்ளோம். சில விசையாழிகள் நிர்மாணிக்கப்பட்ட இடங்களை மாற்றியுள்ளோம்." இதேவேளை, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை புலம்பெயர் பறவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடாத்தினோம். எனினும், இரவு வேளைகளில் பறவைகள் தொடர்பாக ஆராயவில்லை என, கலாநிதி தேவக்க வீரக்கோன் தெரிவித்துள்ளார். ''இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளமையினால், பறவைகள் வருவது குறைவாக இருக்கும். நாங்கள் பெரியளவிலான தாக்கத்தை இதற்கு செலுத்தவில்லை. நாம் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலும், மாதிரி அறிக்கையின் அடிப்படையிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காற்றாலை விசையாழிகளில் பறவைகள் மோதுகின்றன. அதனை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர முடியாது. பறவைகள் மோதுவதை குறைக்கும் வகையிலேயே நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்" என கலாநிதி தேவக்க வீரகோன் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏற்கனவே மன்னாரில் இயங்கி வரும் தம்பவானி மின் உற்பத்தி நிலையத்தினால் பறவைகள் இறப்பது முந்தைய மதிப்பீடுகளை விட அதிகமாகும். ''மன்னாரில் நீர் பிரச்னையை போன்றே, வெள்ள அபாயம் அதிகரிப்பு" தம்பவாணி என்ற பெயரில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காற்றாலை மின்உற்பத்தி நிலையம் மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தை நிர்மாணிக்கும் போது, சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற பறவைகளின் மரணங்களின் எண்ணிக்கை, ஆய்வுகளின் ஊடாக மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக காணப்படுகின்றது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் விசையாழிகள், கரையோர பகுதியொன்றை அண்மித்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும், அதானி நிறுவனத்தின் திட்டத்தினால் மன்னார் தீவு பகுதியில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விசையாழிகள் இயங்கவுள்ளன. அதனால், அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது" என சுற்றாடல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். உத்தேச காற்றாலை திட்டத்தின் ஒரு விசையாழியை ஸ்தாபிப்பதற்காக 27 மீட்டர் விட்டத்தை கொண்ட நிலப் பரப்பு தேவைப்படுகின்றது. அத்துடன், ஒவ்வொரு காற்றாலை விசையாழியை சூழவும் 17 மீட்டர் நீளமான பிரவேச மார்க்கம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வீதிகள் நிர்மாணிக்கப்படுவதால், இயற்கை நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, மன்னார் பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலைமை ஏற்படக் கூடும் என, சுற்றாடல் நீதிக்காக நிலையத்தின் மூத்த ஆலோசகர் ஹேமந்த விதானகே தெரிவிக்கின்றார். ''நாங்கள் முன்னர் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிக்கும் போது, மன்னாரில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என அறிந்திருக்கவில்லை. எனினும், வீதிகள் அமைக்கப்பட்டதன் பின்னர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய 7 அல்லது 8 இடங்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடையாளம் கண்டுள்ளது. மன்னாரின் பல பகுதிகளில் வறட்சியான இடங்கள் காணப்படுகின்றன. நீர் இருக்கும் இடத்திலிருந்தே மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்கின்றார்கள். எமக்கு தேவையான விதத்தில் சூழலை மாற்றியமைக்க முயற்சித்தால், மன்னாரில் வாழ்கின்ற சுமார் 70,000 பேருக்கு நீர் இல்லாது போகும். அதற்கு மேலதிகமாக காற்று காணப்படுகின்ற இடங்களில் நிழல் காணப்படுவதை உணர முடியும்" என அவர் கூறுகின்றார். சுற்றாடல் பாதிப்புகளை மதிப்பீடு செய்த அறிக்கையின் ஊடாக அடையாளம் கண்டுள்ள பிரச்னைகளை குறைத்துக்கொள்வதற்கு, அவர்கள் தயாரித்த அறிக்கையிலேயே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அவற்றை பதிவிறக்க முடியும். இதுதொடர்பான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றால், மார்ச் மாதம் 06ம் தேதிக்கு முன்னர் dg@cea.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக கருத்து களை பகிர்ந்து கொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/cl5l0eqw91qo
-
இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்
Published By: DIGITAL DESK 3 20 FEB, 2024 | 05:07 PM (எம்.மனோசித்ரா) இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல, இறையாண்மையுடைய சுயாதீனமான எமது நாட்டின் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே, சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமையும் காணப்படுகிறது என அரசாங்கம் அமெரிக்க தூதுவருக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் தொடர்பில் கவலை வெளியிடுவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஊடகப் பிரதானிகள், ஊடகவியலாளர் மற்றும் சிவில் சமூக அமைப்பினருடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை என்பது அமெரிக்காவின் பிராந்தியமல்ல. எமது நாடு இறையாண்மையுடைய சுயாதீன நாடாகும். எனவே எமது நாட்டுக்குள் அரசியலமைப்பு சபையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமை சட்டத்தை தயாரிக்கும் நிறுவனமான பாராளுமன்றத்துக்கே உரியது. அதற்கமைய இது தொடர்பான திருத்தங்கள் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அவை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தை நாட முடியும். நீதிமன்றம் அவை தொடர்பில் பரிசீலனை செய்து, திருத்தங்களை பரிந்துரைக்கும். சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது. எவ்வாறிருப்பினும் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் ஏற்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான தேவை அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. தனிநபர் பாதிப்பு உள்ளிட்டவற்றை தவிர்ப்பதே இந்த சட்ட மூலத்தின் நோக்கமாகும். எனவே எந்தவொரு பிரஜைக்கும் சமூக வலைத்தளத்தின் ஊடாக தத்தமது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/176891
-
அமெரிக்காவில் ரூ.2,500 கோடி ஜாக்பாட் 'வென்ற' நபருக்கு பரிசு தர மறுத்த லாட்டரி நிறுவனம் - என்ன காரணம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவில் ஒருவருக்கு 2,500 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை லாட்டரியில் வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்களைக் கொண்ட லாட்டரியை வைத்திருந்த நபருக்கு பரிசைக் கொடுக்க அந்த லாட்டரி நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், லாட்டரியில் ‘வென்ற’ நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அந்த லாட்டரி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 2023 இல், ஜான் சீக்ஸ் என்பவர் பவர்பால் லாட்டரியை வாங்கி வைத்திருந்தார். அந்த லாட்டரி தொகுப்பின் வெற்றி பெற்ற எண்கள் அந்த நிறுவனத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்தத் தருணம் குறித்து விவரித்த ஜான் சீக்ஸ்,“பவர்பாலின் வெற்றி எண்களுடன் நான் வைத்திருந்த டிக்கெட் எண்கள் பொருந்தியதை முதன் முதலில் பார்த்த போது நான் உணர்ச்சியற்றுப் போனேன்,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES லாட்டரி நிறுவன முகவர் என்ன சொன்னார்? ஆனால், அவர் அந்த லாட்டரியை அமெரிக்காவில் லாட்டரி மற்றும் கேமிங் அலுவலகத்தில் கொடுத்தபோது, அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. “பணத்தைப் பெற்றுத் தரும் முகவர்களில் ஒருவர், என்னுடைய லாட்டரியால் எந்த நன்மையும் இல்லை என்றும், அதனை குப்பையில் வீசுமாறும் என்னிடம் சொன்னார்” என்றார் ஜான் சீக்ஸ். ஆனால், ஜான் சீக்ஸ் அந்த லாட்டரியை பத்திரமாக வைத்துக்கொண்டு, ஒரு வழக்கறிஞரை நாடியுள்ளார். ஆம், அவர் தற்போது தனக்கு ஏற்பட்ட பாதிப்புற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கில் தான் வெற்றி பெற்ற 2,500 கோடி ரூபாயுடன், அதனை தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டியுடன் தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். நீதிமன்றத்தில் லாட்டரி நிறுவனம் என்ன சொன்னது? பட மூலாதாரம்,GETTY IMAGES நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின்படி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பவர்பால் மற்றும் லாட்டரி ஒப்பந்ததாரரான டெளடி என்டர்பிரைஸஸ்(Taoti Enterprises), தொழில்நுட்ப பிழையால் இந்தக் குழப்பம் நடந்ததாக் கூறியுள்ளனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணம் ஒன்றில், டெளடி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ஜான் லாட்டரி வாங்கிய தினமான ஜனவரி 6. 2023 அன்று, தங்களின் நிறுவனத்தின் இணையதள தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்து கொண்டிருந்ததாக அந்த ஆவணத்தில் கூறியுள்ளனர். அன்று, ஜான் வாங்கிய லாட்டரி எண்களுடன் பொருந்திய எண்கள், நீதிமன்றத்தின் ஆவணத்தின்படி, பவர்பால் எண்களின் தொகுப்பில் இருந்து பரிசோதனைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட எண்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எண்கள் ஜனவரி 9 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் இருந்தன. பவர்பால் நிறுவனமோ அந்த நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அந்த நிறுவனத்தின் ஊழியர் தாவோட்டியோ, பிபிசியின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. ஒப்பந்த மீறல், அலட்சியம், மன உளைச்சலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட எட்டு தனித்தனி பிரிவுகளில் ஜான் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஜானின் வழக்கறிஞர் ரிச்சர்ட் எவன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், வெற்றி பெற்ற எண்கள் ஜான் எண்களுடன் பொருந்தியதால், அவருக்கு முழு பரிசுத் தொகையும் பெறுவதற்கான உரிமை உண்டு என்று கூறினார். இல்லையெனில், தவறான லாட்டரி எண்களை வெளியிட்டதற்காக லாட்டரி நிறுவனத்தின் அலட்சியத்தால், ஜான் பாதிக்கப்பட்டுள்ளார். "இந்த வழக்கு லாட்டரி நடவடிக்கைகளின் நேர்மை மற்றும் பொறுப்பின்மை பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது." என எவன்ஸ் பிபிசியிடம் கூறினார். "இது ஒரு வலைத்தளத்தில் உள்ள எண்களைப் பற்றியது அல்ல; இது வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளை உறுதியளிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையைப் பற்றியது. அதேநேரத்தில் இந்த நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டுகின்றன," என்று அவர் கூறினார். இதுகுறித்து பிபிசியிடம் பேசுகையில், “நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. லாட்டரியில் வெற்றி பெற்றதால், பரிசுத் தொகை கிடைத்திருந்தால், அது என் வாழ்கையையும், எனது குடும்பத்தின் வாழ்கையையும் மாற்றியிருக்கும்,”என்றார். வெற்றி பெற்ற பிறகு, ஒரு ஹோம் டிரஸ்ட் வங்கியைத் திறக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறினார் ஜான். ஜான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது மின்னல் தாக்கும் வாய்ப்புள்ளவர்களை விட குறைவு. அதாவது, ஒரு ஆண்டுக்கு 1.22 மில்லியன் மக்களில் ஒருவர் மீது மின்னல் தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் கூறியுள்ளது. ஆனால், சுமார் 292.2 மில்லியன் பேரில் தான் ஜான் சீக்ஸோ அல்லது வேறு யாரோ ஒருவருக்கோ இப்படியான ஜாக்பாட் பரிசை வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c6px1vl6370o
-
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
தமிழீழ வைப்பகத்தில் இருந்து இலங்கை கைப்பற்றிய பெருந்தொகை தங்கம்! சபையில் அம்பலம் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை கைப்பற்றி கொண்டு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், எங்களது இனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இன அழிப்பை மேற்கொண்டது, இதற்கு எதிராக எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன் ஆயுத போராட்டம் ஒன்றை நடத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒரு நடைமுறை அரசாங்கத்தை வடக்கு - கிழக்கில் நிறுவியிருந்தார். நாங்களும் யுத்தம் செய்தோம், நீங்களும் யுத்தம் செய்தீர்கள். ஆனால் நீங்கள் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் விழுந்து விட்டீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், https://tamilwin.com/article/tamil-ealam-and-sri-lanka-government-war-1708423695
-
புதுக்குடியிருப்பில் இரண்டு முதியோர் பகல் பராமரிப்பு இல்லங்கள் திறந்து வைப்பு
புதுக்குடியிருப்பில் இரண்டு முதியோர் இல்லங்கள் திறந்தவைப்பு Courtesy: Rukshy முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டு முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த முதியோர் இல்லம் நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள் வாழ்ந்து வரும் புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தின் முதியவர்களின் தேவைக்காக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் 3.5 மில்லியன் ஒதுக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு நேற்று (19.02.2024) முதியோர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. . நிதி ஒதுக்கீடு இந்த முதியோர் இல்லங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதலாவது முதியோர் இல்லம் கடந்த மாதம் உடையார் கட்டு வடக்கு கிராமத்திலும், இரண்டாவது முதியோர் இல்லமாக புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்திலும் தலா 3.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மேற்கு முதியோர் சங்க தலைவர் வெ.கணேஷ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந்த், உதவி பிரதேச செயலாளர் செல்வி.ம.சர்மிலி, பிரதேச செயலக கணக்காளர் கடம்பசோதி மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் கிராம அலுவலர்கள் ஆகியோரின் முன்னிலையில் பிரதேச செயலாளரால் திறந்து வைக்கப்பட்டு முதியோர் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/opening-of-two-old-age-homes-in-pudukudiyiruppu-1708418018?itm_source=parsely-api
-
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
விடுதலைப்புலிகளின் தங்கத்தினை இரண்டு நாட்களாக தோண்டியும் ஏமாற்றம் 20 FEB, 2024 | 05:28 PM முல்லைத்தீவு, கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டாவது நாளாக இன்றும் (20) தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குறித்த காணியில் ஏற்கனவே சிலர் சட்டவிரோதமான முறையில் தோண்ட முற்பட்டு தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த காணியில் பரல் கணக்கில் விடுதலைப்புலிகள் தங்கத்தினை புதைத்து வைத்துள்ளதாக நம்பத்தகுத்த நபர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு அமைய தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு தோண்டும் நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்ந்த இடங்களை மூட பணிக்கப்பட்டுள்ளது. அரைக்கும் ஆலையின் கட்டடத்திற்குள் ஒருபகுதி சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை இதனை விட காணியின் பின்பக்கத்தில் இரு இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தில் சுமார் 10 அடிவரை தோண்டப்பட்ட போதும் எதுவும் காணாத நிலையில் குறித்த பகுதிகளை மூட பணிக்கப்பட்டுள்ளது. இந்த தோண்டும் நடவடிக்கைக்காக காணியினை சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176896 இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி.. தண்ணியும் வந்திட்டுது! அப்பிடியே கிணறு கட்டலாம்.
-
குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
தமிழ் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம் 20 FEB, 2024 | 08:36 PM தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் பௌத்தமயமாக்கலுக்குள்ளாகி வரும் நான்கு இடங்கள் இலங்கையில் தேசிய புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் கடந்த (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து விகாரைகளை அமைத்துவரும் புல்மோட்டை அரிசி மலை பௌத்த பிக்குவான பனாமுரே திலகவன்ஸ என்ற பௌத்த பிக்குவிடம் இந்த இடங்களுக்கான பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி குச்சவெளி பிரதேச செயலகத்தின் புல்மோட்டை பகுதியில் உள்ள சாந்தி விகாரை, யான் ஓயா விகாரை, புடைவைக்கட்டு சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம், புல்மோட்டை ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம் ஆகிய நான்கு பௌத்த இடங்களும் இவற்றோடு அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை, ஆகிய விகாரைகள் கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பௌத்த புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176901
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
புதினம் தெரியுமோ (உதயன் 20/02/2024) யாழ்ப்பாணத்தில நித்தியமா உள்ள ஒரு கல்லூரியில நேற்று ஆர்ப்பாட்டம். விசயம் என்னெண்டால், 208 வருசமா தொட்டுத் தொடரும் பட்டுப்பாரம்பரியம் கொண்ட 'தனியப் பெடியள் மட்டும் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு பெண் அதிபரைப் போடக் கூடாதாம். கொஞ்சக்காலமா அந்தப் பள்ளிக்கூடம் பிரின் சிப்பல் இல்லாமல் தான் இயங்கிக்கொண்டு வருகுது. இலங்கைக் கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஒருத்தர்தான் பதில் அதிபரா இருக்கிறார். அவர் ஏற்கனவே இன்னொரு பள்ளிக்கூடத்தில இருக்கேக்க, இந்தக் கல்லூரிக்கு வந்தால் அதிபராக்கலாம் எண்டு அமைச்சர் வாசிச்ச வீணைக்கு மயங்கித்தான் இஞ்ச வந்தவர். ஆனால் வீணை வாசிப்பெல்லாம் வீணாப் போன கதையா அவருக்குப் பதிலா அந்தப் பள்ளிக் கூடத்தில பிரதி அதிபரா இருந்தவாக்குத்தான் நியமனம் குடுபட்டிருக்கு. அதுக்கும் ஒரு காரணம் இருக்குது. உந்தப் பள்ளிக்கூடம் தேசிய பாடசாலை எண்டதால தேசிய பொதுச்சேவை ஆணைக்குழுதான் அந்தப் பள்ளிக் கூடத்துக்கான அதிபரின்ர தரம் பற்றி தீர்மானிக் கோணும். அதின்படி அதிபர் தரம் 1 ஐச் சேர்ந்தவைதான் உந்தக் கல்லூரிக்கு அதிபரா இருக்கலாமாம். ஆனால் அதிபர் பதவியை எதிர்பார்த்து வேற பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர் அதிபர் தரத்தை விட கூடின இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். ஓவர் தகுதியும் பதவிக்கு ஆகாது கண்டியளோ. பள்ளிக்கூடத்துக்கு அதிபரைத் தெரிவு செய்யிறதுக்கு நடந்த இன்ரர்வியூவுக்கு அதிபர் தரம் 1 ஐச் சேர்ந்தவையைத் தான் கூப்பிடலாம். அதின்படி தான் இவ்வளவு காலமும் பிரதி அதிபரா இருந்தவாக்கு தகுதி இருந்ததால, அவாவையே அதிபராத் தெரிவு செய்திருக்கினம். ஆனால் இது வீணைக்கார அமைச்சருக்குப் பிடிக்கேலை. 'நான் கொண்டு வந்த ஆளுக்கு குடுக்காமல், அவரை விடதகுதி குறைஞ்ச ஓராளுக்கு குடுத்திட்டினம். ஆனால் உதை நான் சும்மா விடமாட்டன். நான் சொன்னதைச் செய்வன்.செய்யிறதைத்தான் சொல்லுவன்' எண்டு 'பஞ்ச்' வசனமெல்லாம் பேசி, வேட்டியை மடிச்சு கொண்டு தன்ர ஆக்களை போராடச் சொல்லிக் களத்தில் இறக்கி விட்டிட்டார். ஏற்கனவே பள்ளிக்கூட பழையமாணவர் சங்கமும் இந்த விசயத்தில ரண்டாத்தான் பிரிஞ்சு நிக்குது. அதில தனக்குச் சாதகமான ரீமை, இப்ப அதிபரா வரப்போறவாக்கு எதிரா ஏதும் காரணம் சொல்லிப் போராடுங்கோ எண்டு தியேட்டரில இருந்து ஓர்டர் போயிருக்குதாம். ஆனால் அவைக்கு என்ன காரணத்தைச் சொல்லிப் போராடுறது எண்டு ஒண்டும் பிடிபடேலை. அதுக்குப் பிறகுதான் 'இது ஆம்பிளைப் பிள்ளையள் படிக்கிற பள்ளிக்கூடம். பெண் அதிபர் வேண்டாம்' எண்டு பிரிசில் போர்ட்டை பிடிச்சுக்கொண்டு நிண்டிருக்கினம். ஒரு கதைக்கு ஆம்பிளைப் பிள்ளையள் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு பெண் அதிபர் வேண்டாம் எண்டால், அந்தப் பள்ளிக்கூடத்தில் பொம்பிளை ரீச்சர் மாருமெல்லோ படிப்பிக்கக் கூடாது. அதைவிடப் பகிடி என்னெண்டால், இப்ப அதிபரா தெரிவு செய்யப்பட்டிருக்கிறவா, அதே பள்ளிக்கூடத்தில இவ்வளவு நாளும் பிரதிஅதிபரா இருந்தவா. அப்ப 'பெண் பிரதி அதிபர் இருக்கக் கூடாது' எண்டு என் போர்க்கொடி தூக்கேலை. சரி, இவை சொல்றபடி அதிபர் சேவை தரம் 1 இல் இருக்கிற ஒரு ஆண் அதிபரை உதே பள்ளிக்கூடத்துக்கு போட்டால், போராட்டத்தை கைவிட்டிடுவினமோ? இல்லைத்தானே. எல்லாமே அரசியலா மாறினா இப்பிடி தொட்டதுக்கும் போராடிப் போராடியே எங்கட சனம் மாய வேண்டியது தான். இதுக்குள்ள அந்த பதில் அதிபர் தான் பாவம். திறமை. தகுதி எல்லாம் கூடவா இருந்தும் அமைச்சரின்ர சொல்லைக் கேட்டு, சேராத இடம் சேர்ந்ததால வஞ்சத்தில வீழ்ந்து நெஞ்சாரத் துயர்ப்படுறார்.
-
யாழில் தயாரிக்கப்பட்ட கப்பல் வெள்ளோட்டம்!
200 பேர் பயணிக்கும் வகையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட கப்பல் வெள்ளோட்டம்! 20 FEB, 2024 | 07:55 PM இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியது. 80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 தொன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்ட, சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவுள்ளது. அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சோலர் பனல் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது. தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான நிறுவனம் ஒன்றிற்காக மகாசென் மரைன் இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளது. உள்ளூர் பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த தீர்வாக இந்த உற்பத்தித் திட்டத்தைத் தொடர்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும். நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத் துறையின் பன்முகத்தன்மை மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்த அறிமுகம் மிகவும் முக்கியமானது என மஹாசென் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அவந்த அதபத்து தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176908 படகா? கப்பலா?!
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
புதினம் தெரியுமோ........ (பட்சி) முந்தி ஆரும் ஒப்பீஸ் வழியில பிழை விட்டாலோ, வேலையை ஒழுங்காச் செய்யாட்டிக்கோ ' உன்னைத் தண்ணியில்லாக் காட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிப்போடுவன்' எண்டு மேலதிகாரிமார் வெருட்டுறவை. ஆனால் உண்மையிலேயே தண்ணியில்லாத இடமெண்டால் இலங்கையில அது கச்சதீவாத்தான் இருக்க முடியும். அங்க அந்தோனியார் கோயிலும், நேவிக்காம்பும், மரஞ்செடி கொடியளும் தான் இருக்கு. நேவிக்காரருக்கு கூட அங்க வேற இடத்தில இருந்து தான் தண்ணி போறது. இப்பிடி தண்ணியோ, குடிமனையோ இல்லாத ஒரு தீவுக்கு சனங்கள் அந்தோனியாரைக் கும்பிடப் போகேக்க அவைக்கு அதுக்குரிய ஒழுங்குகளைச் செய்து குடுக்க வேண்டியது அரசாங்கத்தின்ர கடமை. வழக்கமா அந்தோனியாருக்குப் போற இலங்கை ஆக்களுக்கும், இந்தியாவில இருந்து வாறவைக்கும் நேவிக்காரர் தான் சாப்பாடு, தண்ணி குடுக்கிறவை. அதுக்கெண்டு அவைக்குத் தனியா ஒதுக்கீடெல்லாம் இருக்கு. ஆனால் போனமுறை தங்களுக்கு அந்தோனியார் திருவிழாவுக்காக நேவிக்காரருக்கு அரசாங்கத்தால காசு ஒதுக்குப்படேலை. அதால அவை போன வருசம் நடந்த திருவிழாவில ஏனோ தானோ எண்டு தான் சாப்பாடும். தண்ணியும் குடுத்தவை. அதுவும் ஒழுங்கான சாப்பாடில்லை எண்டும், எல்லாருக்கும் கிடைக்கேலை எண்டும் எக்கச்சக்கம் முறைப்பாடு வேற. அதால இந்தமுறை தாங்கள் தண்ணியோ, சாப்பாடோ தரமாட்டம் எண்டு நேவிக்காரர் கைவிரிச்சுப் போட்டினம். அந்தோனியார் திருவிழா ஒண்டும் நேவிக்காரரின் உபயம் இல்லை தானே. அவை சாப்பாடு, தண்ணி தரமாட்டம் எண்டால், கச்சேரிக்காரரோ. இல்லாட்டி நெடுந்தீவுப் பிரதேச செயலகமோ அதுக்கான ஏற்பாட்டைச் செய்திருக்க வேணுமெல்லோ. ஆனால் அவையும் நெடுந்தீவு ஏற்பாட்டுக் கூட்டம் எண்ட பேரில என்னென்னவோ எல்லாம் கதைச்சுப் போட்டு கடைசியில 'அங்க போற எல்லாரும் தங்களுக்கு சாப்பாடு, தண்ணி கொண்டு வரோணும், அங்க வந்து சமைக்கவும் அனுமதி இல்லை' எண்டு அறிக்கை விட்டிருக்கினம் உதோ பொறுப்பான அதிகாரிமார் செய்யிற வேலை? அங்க நல்லதண்ணிக் கிணறு இருந்தாலாவது பரவாயில்லை. அதில தண்ணியைக் கிள்ளி சனம் குடிக்கும் எண்டு சொல்லலாம். அப்பிடியுமில்லை. கடல் பயணம் செய்து போட்டு. சுத்திவர உப்புக்காத்து அடிக்கிற இடத்தில ஒருநாள் முழுக்க நிண்டால் வழக்கத்தை விட தண்ணி கூடத்தான் இழுக்கும். அதைவிட கச்சதீவுக்குப் போற படகுகளும், யாழ்ப்பாணத்து மினிபஸ்ஸுகள் மாதிரி ஆக்களை அடைஞ்சு கொண்டுதான் போறதுகள். அதுக்க உந்தச் சாப்பாட்டுச் சாமான்களையும், தண்ணி பரல்களையும் எப்பிடிக் கொண்டு போக ஏலும்? அதைவிட நெடுந்தீவில ஒரு சாப்பாட்டுக் கடைதான் வழக்கமா போட அனுமதிக்கிறவை. நேவி சாப்பாடு குடுக்கேக்கையே. அங்க நிக்கிற சனம் அந்த ஒற்றைக்கடையில தள்ளுமுள்ளுப்பட்டுத்தான் சாப்பாட்டை வாங்க முடியும். இப்ப நேவியின்ர சாப்பாடும் இல்லையெண்டதால எல்லாச் சனமும் அந்தக் கடையைத்தான் மொய்க்கப்போகுதுகள். சிலவேளை சாப்பாடு வாங்கப்போய் அந்த நெரிசலில சிக்கி, ஆக்களுக்கு பாதிப்பும் வரக்கூடும். இப்பிடி அகதி முகாம் மாதிரி அடிபட்டுச் சாப்பாடு வாங்கித்தானோ அந்தோனியாரைக் கும்பிட வேணும்? கச்சேரிக்காரரிட்டையோ, நெடுந்தீவுப் பிரதேச செயலகத்திட்டையோ அந்தோனியாரிட்ட வாறவைக்கு சாப்பாடு தண்ணி குடுக்கக் காசில்லாட்டி தனியாரிட்ட யாழ்ப்பாணம் கச்சேரிக்காரர் உதவி கேட்டிருந்தால், அள்ளிக்குடுக்க ஆயிரம் பேர் இருப்பினம். இல்லாட்டி ஆயர் இல்லமாவது ஏதும் செய்திருக்கும். அதை விட்டிட்டு இப்பிடி சனத்திட்ட 'தண்ணியைக் கொண்டுவா. சாப்பாட்டைக் கொண்டு வா எண்டு ஆய்க்கினைப்படுத்திறது அந்தோனியாருக்கே பொறுக்காது கண்டியளோ........ (17.02.2024 உதயன் பத்திரிகை) https://newuthayan.com/article/புதினம்_தெரியுமோ........
-
ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு கோர்ட் உத்தரவு
ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க ரூ.5 கோடி: தமிழக அரசுக்கு பெங்களூரு கோர்ட் உத்தரவு 20 FEB, 2024 | 03:18 PM பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மார்ச் 6-ம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991 - 1996ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட என ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, ஜெயலிதா உயிரிழந்தார். சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும். அந்த தொகையில் இவ்வழக்கிற்காக கர்நாடக அரசு செலவு செய்த பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள பணத்தை மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரினார். இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கூடாது. அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜெயலலிதா தொடர்புடைய தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வருகிற மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினம் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி, புகைப்படக்காரர், வீடியோகிராபர் ஆகியோர் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும். நகைகளை கொண்டு செல்ல 6 இரும்பு பெட்டிகளைக் கொண்டு வர வேண்டும். இவ்வழக்கை நடத்துவதற்கு கர்நாடக அரசு செலவழித்த ரூ.5 கோடியை தமிழக அரசு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/176873
-
குட்டிக் கதைகள்.
அழைப்பில் அலாதி ஆனந்தம் கதையாசிரியர்: வளர்கவி கதை வகை: ஒரு பக்கக் கதை கதைத்தொகுப்பு: குடும்பம் கதைப்பதிவு: February 19, 2024 பார்வையிட்டோர்: 448 நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று. கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக இருந்தது அவர் அழைத்த விதம். என்வீட்டிற்கு வந்தவர் ‘கல்யாணத்துக்குக் கண்டிப்பா குடும்பத்தோட வந்திடணும்., குறிப்பா உங்க அம்மாவையும் கூட்டிக்கிட்டுத்தான் வரணும்’ என்றார் உண்மை அன்போடு. ‘அம்மா எதுக்குங்க? அவங்களுக்கு எண்பது வயதாச்சு முடியாதே!’ என்றேன். ‘என்ன அப்படிச் சொல்றீங்க?! நாளை நமக்கும் வயசாகாதா என்ன? வயதில் மூத்தவங்க வாழ்த்தே தனிதான்! கிடைக்க என் குடும்பத்துக்கு கொடுத்து வச்சிருக்கணும்! உங்களுக்குச் சிரமம்னா… வேணா ‘கேஃப்’ புக் பண்ணி அனுப்பி வைக்கிறேன்!’ என்று சொல்லி நெகிழ்ந்தார். ஆயிரம் ரூபாய் மொய் வந்தால் கிடைக்காத ஆனந்தம் அம்மாவை அழைத்து வரச் சொல்லி அவர் பத்திரிக்கை வைத்ததில் எனக்குக் கிடைத்தது. சொன்னபடி அழைத்துப் போனேன். அம்மாவை அவரே வந்து கைத் தாங்கலாக அழைத்துப் போய் முன் வரிசையில் உட்கார வைத்தும், மாங்கல்யத்தை கொடுத்து வாழ்த்தச் சொல்லி வாங்கீட்டதும், பந்திவரை பவ்யமாய் போலி இல்லாமல் இருந்து உபசரித்ததும் அந்த இளம் தம்பதியினருக்கு அவர் கற்றுத் தந்த கலாச்சாரப் பதிவாய் அமைந்தது. எவ்வளவு சொல்லியும் மொய்கவரை திருப்பித்தந்து எங்களை அனுப்பிவிட்டார். நிஜங்கள் இன்னமும் உலகில் நடமாடத்தான் செய்கின்றன. நாம்தான் உலகை ஒழுங்காய் புரிந்து கொள்வதில்லை. காரணம்… அழைப்பிதழே இப்போ தெல்லாம் வாட்ஸிப்பில் தானே வருகிறது?! வாட்ஸிப்பால் வடுக்கள் பதிகின்றன. நேரில் அழைப்பதே நேசத்தை மெய்ப்பிக்கிறது. https://www.sirukathaigal.com/ஒரு-பக்கக்-கதை/அழைப்பில்-அலாதி-ஆனந்தம்/
-
வடகொரிய அதிபருக்கு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை பரிசளித்த அதிபர் புதின்
ரஷியாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷிய அதிபர் புதின், தான் பயன்படுத்தும் ரஷிய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார். இந்நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷிய அதிபர் புதின் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பரிசளிக்கப்பட்டுள்ளது. பரிசளிக்கப்பட்ட கார் எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, கார் பரிசளித்த ரஷிய அதிபருக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யொ ஜாங் நன்றி தெரிவித்தார். https://thinakkural.lk/article/292500
-
இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!
இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துள்ள இந்த மாணவர்கள் அரசாங்க வேலை கிடைப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களது ஆவணங்களை Offer அமைப்பின் உதவியுடன் ஒழுங்குபடுத்த ஆலோசனைகளை ஆளுநர் வழங்கியுள்ளதுடன், திருப்பி அனுப்பப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தலா 50000ரூபா ஒதுக்கீடும் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார். https://thinakkural.lk/article/292586
-
நல்லிணக்கபுர மீள் குடியேற்ற வீட்டுத்திட்ட கிராம மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கையா?!
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்ட நல்லிணக்கபுர மீள் குடியேற்ற வீட்டுத்திட்ட கிராம மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கையா? - மாவட்ட செயலருக்கு மக்கள் கடிதம் Published By: DIGITAL DESK 3 20 FEB, 2024 | 04:09 PM (எம்.நியூட்டன்) நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட கிராமத்தில் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் முன்பள்ளிகள், பொது நோக்கு மண்டபம், விளையாட்டு மைதானம், இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் கொண்ட கிராமமாக உருவாக்க முடியுமா அல்லது நாம் வேறு இடங்களுக்கு எம்மை நகர்தப்படபோறோமா என்பதை உறுதிப்படுத்துமாறு கோரி வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகபிரிவின் கீழ் நல்லாட்சி காலத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்ட நல்லிணக்கபுர வீட்டுத்திட்ட மக்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிராமத்திலுள்ள அமைப்புக்கள் பொது மக்கள் கையெழுத்திட்டு அதன் பிரதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித்பிரேம தாஸ, புத்த சாஸன கலாச்சார அமைச்சு, வடக்கு மாகாண ஆளுநர், தெல்லிப்பளை பிரதேச செயலகம், தெல்லிப்பளை பிரதேச சபை, யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மற்றும் சமயத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இக் கடித்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்த நிலையில் 33 வருடங்களாக சொந்த இடங்கள் இன்றி இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அனுமதியிடன் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் 150 குடும்பங்கள் நல்லிணக்கபுரத்தில் குடியேற்றப்பட்டார்கள். அன்று யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த மகேஷ் சேனநாயக்க நேரடி வழிநடத்தலில் கட்டப்பட்ட நல்லிணக்கபுர குடியேற்றத்திட்டக் கிராமம் உதயமானது அவருடைய காலத்தில் தான் இந்து, கிறிஸ்தவ ஆலயங்களை கட்டித்தருவதாக உறுதி அளித்திருந்தார். எனினும் அவருடைய காலம் முடிவடைந்தமையினால் அதைத் கட்டித்தர இயலவில்லை. கிறிஸ்தவ ஆலயம் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குடியேற்றத்திட்ட வீடு கையளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக வருகை தந்த அன்றைய ஜனாதிபதி தனது உரையில் குடியிருப்புக்குத் தேவையான விளையாட்டு மைதானம், முன்பள்ளி, படகுத் துறை மற்றும் ஆன்மீகத்துக்காக இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதிபடக்கூறியிருந்தார். எங்களை இவ்விடத்தில் குடியேற்றவுள்ளோம் எனக் கூறிய நிலையில் நாம் அனைவரும் முன்பள்ளி, இறங்குதுறை, இந்துக் கிறிஸ்தவ ஆலயங்கள் அமைப்பது போன்றன எம்மால் முன்வைக்கப்பட்டு இவற்றை நிறைவேற்றித்தருவோம் என்று வாக்குறுதி அளித்ததற்கு அமையவே இவ்விடத்தில் நாம் குடியேறியுள்ளோம். இவ்வாறான சூழலில் கத்தோலிக்க ஆலயம் ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறிதாக கட்டப்பட்டு ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வேளையில், குறிப்பாக இந்த ஆலயமானது இங்குள்ள இந்து மக்கள் மற்றும் கத்தோலிக்க மக்களது தமது அன்றாட வேலைகளை முடித்து இரவிலேயே தமது உடல் உழைப்பினாலேயே இவ் ஆலயமானது கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இத்தகைய கட்டமைப்பு வேலைகள் இடம்பெறுகின் வேளையிலேயே பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தில் எமக்கான உரிமத்தை தாருங்கள் என கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைத்தேவந்தோம். இத்தகைய சூழலில் இந்த குடியேற்றத் திட்டத்தில் ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்து பிரதேச சபையினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும் குறித்த வழக்கானது வழிபாட்டு இடத்தை அகற்றமுடியாது என்றே கூறப்பட்டது. இந்து ஆலயமும் இந்த குடியேற்றக் கிராமத்தில் கட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் யாரும் உதவிசெய்யாத நிலையே காணப்படுகின்றது. எமது பிரச்சினைகள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக அரசியல்வாதிகள் அனைத்துத் திணைக்களங்களுக்கும் கடிதங்கள் மூலம் பல கோரிக்கைகள் வழங்கியும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இறுதியாக மாவட்ட செயலாளராகிய உங்களிடமும் உங்கள் மூலம் ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் திணைக்கள அமைச்சுகளுக்கு கடிதம் மூலம் எமது கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம். ஏமக்கு இந்தக் குடியேற்ற கிராமத்தில் நிரந்தரமான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்து எமது எதிர்கால சந்ததி நின்மதியாக வாழ்வற்கு துணைபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/176867
-
அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன் வெளிப்படைத் தன்மையான ஆட்சிக்கு கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தினார்!
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் வெளிப்படைத் தன்மையான ஆட்சிக்கு கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தினார்! Published By: PRIYATHARSHAN 20 FEB, 2024 | 02:21 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான லிஸ் அலன் கொழும்புக்கான தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் விஜயத்தை (பெப்ரவரி 17 தொடக்கம் 19 வரை) நிறைவுசெய்தார். அவர் தமது இந்த விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சுபீட்சத்துக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில், இளம் தலைவர்கள், தொழில்முனைவோர், பொருளடக்க படைப்பாளிகள் (content creators), சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டார். இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான சந்திப்பொன்றின் போது, துணை இராஜாங்க செயலாளர் அலனும் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பங்காண்மை தொடர்பில் கலந்துரையாடியதுடன், துடிப்பான தகவல் பரப்பொன்றுக்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் இடையலான பிணைப்பையும் கோடிட்டுக் காட்டினர். அத்துடன், அனைவரையும் உள்வாங்கிய ஆட்சிமுறைமைக்கான பிராந்திய மாதிரியொன்றாக உருவெடுப்பதற்கான பாதையொன்றை வகுப்பதற்கான இலங்கைக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்றுக்கொண்டனர். ஜனநாயக சமூகங்களில் ஊடகங்களின் இன்றியமையாத வகிபாகம் தொடர்பில் அவதானம் செலுத்தி கொழும்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் உள்ளிட்டோர் துணை இராஜாங்க செயலாளர் அலனின் உரையை செவிமடுத்தனர். பல தலைமுறைகளாக அரசாங்கங்களும் ஊடகங்களும் சிக்கலானதொரு, சில சமயங்களில் எதிர்வாதங்களுடன் கூடிய உறவை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன. இந்த செயற்பாடு எந்தவொரு நாட்டிற்கும் தனித்துவமானது கிடையாது. உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், இரு பிரதான அரசியல் கட்சிகளில் இருந்துமான ஜனாதிபதிகள் ஊடகங்களுடனான முரண்பாட்டின் அவரவரது பங்கை அனுபவித்துள்ளனர். ஜனநாயக சமூகங்களின் அடையாளமொன்றான இந்த பதற்றமானது வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதிலும் பயனுறுதிமிக்க நிர்வாகத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியமான வகிபாகமொன்றை வகிக்கின்றது என்று துணை இராஜாங்க செயலாளர் அலன் தமது உரையில் குறிப்பிட்டார். ஐடியாஹெல் ஸ்டூடியோவில் (IdeaHell studio) அமெரிக்க தூதரகத்தின் உதவியுடன் நடைபெற்ற கிரியேட்டர் எக்ஸ் (Creator X) செயலமர்வின் போது, துணை இராஜாங்க செயலாளர் டிஜிட்டல் டர்ட்டல்ஸின் (Digital Turtles) படைப்பாளர் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், கருத்துச் சுதந்திரம் தான் எந்தவொரு ஜனாநாயகத்தினதும் முக்கிய அடிப்படை அம்சமாகும். இன்றைய தினத்தின் ஒன்றுகூடல்கள் போன்றவை அதன் நீடித்த விழுமியத்திற்கான சான்றொன்றாகும். பல்வேறு மொழி மற்றும் கலாசார பின்னணியில் இருந்தான படைப்பாளிகளை முதன்முறையாக ஒன்றுசேர்த்திருப்பது இந்த சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. ஜனநாயக விழுமியங்களை ஆதரிக்கும் மற்றும் வலுப்படுத்தும் விவரணங்களை செதுக்குவதில் உங்களது பணி முக்கியமானதாகும். பொருளடக்க படைப்பாளிகள் என்ற வகையில், நீங்கள் ஜனநாயக சமூகங்களை வடிவமைக்கும் உரையாடலை கட்டமைக்கின்றீர்கள் என்று அவர் இதன்போது தெரிவித்தார். கங்காராமய விகாரை தொடக்கம் புனித அந்தோனியார் தேவாலயம், ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் மற்றும் சம்மாங்கோடு பள்ளிவாசல் வரை என கொழும்பிலுள்ள பல்வேறு மத சமூங்கள் தொடர்பான கற்றல் பயணமொன்றை மேற்கொண்டு துணை இராஜாங்க செயலாளர் இலங்கையின் வரலாறு மற்றும் பன்முகத்தன்மை பற்றி அறிந்துக் கொள்வதில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார். வேகா இன்னோவேஷன்ஸ் (VEGA Innovations) மின்சார முச்சக்கரவண்டியில் கொழும்பின் வீதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் நிலையான போக்குவரத்தில் புதுமையான முன்னேற்றங்களை அவர் கண்டார். அமெரிக்கா வேகா மற்றும் முக்கியமான தனியார்துறை நிறுவனங்களுடன் பங்காண்மையில் ஈடுபட்டு இலங்கையின் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் புத்தாக்கத்தையும் வளர்ச்சி தூண்டலையும் அதிகரிப்பதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (யுஎஸ்எயிட்) ஊடாக தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்றத்தினருடனும் துணை இராஜாங்க செயலாளர் கலந்துரையாடினார். எதிர்கால சந்ததியினரில் முதலீடு செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடானது செழிப்பான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இலங்கையை வடிவமைப்பதில் இளையோரின் முக்கியமான வகிபாகத்தை அங்கீகரிப்பதில் இருந்து உருவாகிறது என்று அவர் இதன்போது வலியுறுத்தினார். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள அமெரிக்க தூதரகத்தின் வருடாந்த இளைஞர் தலைமைத்துவ மாநாடானது, புத்தாக்கத்தை தூண்டும் மற்றும் நேர்மறை மாற்றத்தை உண்டாக்கும் உரையாடல்களை போசிக்கும் மற்றும் திறன்களை வளர்க்கும் நிமித்தம் இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் நிலவும் காலநிலை மாற்றம் பேன்ற அழுத்தமான விவகாரங்களின் பின்னணியில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் அயல் நாடுகளில் இருந்தான இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஒரு பிராந்திய முன்மாதிரியாக செயல்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். பொது இராஜதந்திரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன், அமெரிக்க மக்களுக்கும் மற்றும் ஏனைய நாடுகளின் குடிமக்களுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தவும் மற்றும் வலுப்படுத்தவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார். ஊடகங்கள், கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் வெளிநாட்டு அவையோர் / பார்வையாளர்களுடனான இராஜாங்க திணைக்களத்தின் ஈடுபாடுகளை மேற்பார்வை செய்வதற்கு அவர் பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன் கொழும்பில் மேற்கொண்ட பல்-மத சுற்றுப்பணயத்தின் அங்கமொன்றாக கொழும்பிலுள்ள கங்காராமய விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார். துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன் கொழும்பில் மேற்கொண்ட பல்-மத சுற்றுப்பணயத்தின் அங்கமொன்றாக ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார். துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன் கொழும்பில் மேற்கொண்ட பல்-மத சுற்றுப்பணயத்தின் அங்கமொன்றாக சம்மாங்கோடு பள்ளிவாசலில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார். துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன் கொழும்பில் மேற்கொண்ட பல்-மத சுற்றுப்பணயத்தின் அங்கமொன்றாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஐடியாஹெல்லில் (IdeaHell) டிஜிட்டல் டர்ட்டல்ஸ் கிரியேட்டர் எக்ஸ் நிகழ்ச்சித்திட்டத்தின் (Digital Turtles Creator X program) இளம் பொருளடக்க படைப்பாளிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங். உலகளாவிய ஊடக பரப்பும் ஜனநாயகம் மீதான அதன் தாக்கமும் எனும் தலைப்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பத்திரிகையாளர் மன்றம் (Press Club) நிகழ்வில் உரையாற்றும் போது... கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில் துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலனுடன் கலந்துரையாடும் அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்ற உறுப்பினர்கள். இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் சந்தித்த துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங். https://www.virakesari.lk/article/176864
-
யாழ்., தொல்புரத்தில் சிறுமி கடத்தல் சிறுவன் கைது
யாழில் சிறுமியை கடத்திய சிறுவன் கைது - சிறுமி வைத்தியசாலையில் Published By: DIGITAL DESK 4 20 FEB, 2024 | 02:04 PM யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை (18) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு விரைந்த பொலிஸார், சிறுமியை மீட்டதுடன், சிறுவனை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/176863
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேரரும் பங்கெடுப்பு!
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் ஆரம்பம்; தேரரும் பங்கெடுப்பு! Published By: DIGITAL DESK 3 20 FEB, 2024 | 03:38 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் ஆரம்பமானது. குறித்த போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது. தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்க ஆரம்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/176877
-
கழுதைகளை சீனா வாங்குவது ஏன்?
ஆப்ரிக்கா, பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான கழுதைகளை சீனா வாங்குவது ஏன்? பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY படக்குறிப்பு, வேலை செய்யும் கழுதைகள் குவாரியில் வண்டியை இழுக்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் மற்றும் கேட் ஸ்டீபன்ஸ் பதவி, அறிவியல் குழு, பிபிசி செய்திகள் 18 பிப்ரவரி 2024 இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம் தேவைப்படுகிறது. இதற்காகச் சீனாவுக்கு ஏறுமதி செய்ய, ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகளில் கழுதைகள் தோலுக்காகக் கொல்லப்படுகின்றன. இது ஒரு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. தண்ணீர் விற்று தனது வாழ்க்கையை நடத்துபவர் ஸ்டீவ். அதறகாக அவர் தனது கழுதைகளையே முழுமையாக நம்பியிருந்தார். 20 தண்ணீர் கேன்களுடன் அவரது வண்டியை அவைதான் வியாபாரத்துக்கு இழுத்துச் செல்லும். இந்நிலையில், ஸ்டீவின் கழுதைகள் தோலுக்காக திருடப்பட்டபோது, அவர் மனமுடைந்துபோனார். அவரால் வேலை செய்ய முடியவில்லை. அந்த நாளும் சாதாரணமாகத்தான் தொடங்கியது. காலையில், அவர் நைரோபியின் புறநகரில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி தனது கழுதைகளை அழைத்து வர வயலுக்குச் சென்றார். "ஆனால் என் கழுதைகளைக் காணவில்லை. இரவு பகலாக அவற்றைத் தேடினேன். மறுநாளும் தேடினேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவற்றின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்ததாக ஒரு நண்பர் அவரிடம் சொன்னார். "அவை கொல்லப்பட்டிருந்தன. அவற்றின் தோல் எடுக்கப்பட்டிருந்தது," என்றார். ஆப்பிரிக்காவிலும், மற்றும் கழுதைகள் அதிகம் உள்ள உலகின் பிற பகுதிகளிலும் இப்படியான கழுதைத் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. கழுதைத் தோலைக் கொண்டு நடைபெறும் ஒரு உலகலாவிய சர்ச்சைக்குரிய வர்த்தகத்தில், ஸ்டீவ் மற்றும் அவரது கழுதைகளும் பாதிக்கப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும். பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY படக்குறிப்பு, ஆப்பிரிக்கா முழுவதும் கழுதை தோல்களை அறுப்பது மற்றும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்படலாம் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும் 56 லட்சம் கழுதைகள் இந்த வர்த்தகம், கென்யாவில் உள்ள அந்த வயலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் துவங்கப்பட்டது. சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக தேவை உள்ளது. இது எஜியாவோ (Ejiao) என்று அழைக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இளமையை நீட்டிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஜெலட்டின் பிரித்தெடுக்க கழுதை தோல்கள் வேகவைக்கப்படுகின்றன. பிறகு தூள், மாத்திரைகள் அல்லது திரவமாக மாற்றப்படுகின்றன. சில சமயங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது. இந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள், ஸ்டீவ் போன்றவர்கள் - மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் கழுதைகள் - எஜியாவோவின் பாரம்பரிய மூலப்பொருளுக்கான நீடித்த தேவையால் தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஒரு புதிய அறிக்கையில், 2017 முதல் இந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் கழுதை சரணாலயம், உலகளவில் குறைந்தபட்சம் 59 லட்சம் கழுதைகள் ஒவ்வொரு ஆண்டும் படுகொலை செய்யப்படுவதாக மதிப்பிடுகிறது. பிபிசியால் அந்த புள்ளிவிவரங்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என்றாலும், கழுதைகளின் தேவை அதிகரித்து வருவதாக தொண்டு நிறுவனம் கூறுகிறது. எஜியாவோ தொழிற்துறைக்கு வழங்குவதற்காக எத்தனை கழுதைகள் கொல்லப்படுகின்றன என்ற துல்லியமாக தெரிந்துகொள்வது மிகவும் கடினம். பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY படக்குறிப்பு, எஜியாவோ என்பது உணவு, திரவம் அல்லது மாத்திரைகள் வடிவில் வரும் ஒரு பழங்கால தீர்வாகும் உலகம் முழுதும் குறைந்து வரும் கழுதைகள் உலகில் வாழும் 5.3 கோடி கழுதைகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. ஆனால் அந்நாட்டின் விதிகளில் சில சிக்கல்கள் உள்ளன. கழுதை தோல்களை ஏற்றுமதி செய்வது சில நாடுகளில் சட்டப்பூர்வமாகவும், சில நாடுகளில் சட்டவிரோதமாகவும் உள்ளது. ஆனால் அதிக தேவை மற்றும் தோலுக்கான அதிக விலை கழுதைகளின் திருட்டை தூண்டுகிறது. மேலும் வர்த்தகம் சட்டப்பூர்வமாக இருக்கும் இடங்களுக்குச் செல்ல விலங்குகள் சர்வதேச எல்லைகள் வழியாக கடத்தப்படுவதை கண்டுபிடித்துள்ளதாக கழுதை சரணாலயம் கூறுகிறது. ஆனால், கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவை கொல்லப்படுவதைத் தடை செய்ய ஒவ்வொரு ஆப்பிரிக்க மாநில அரசாங்கமும், பிரேசில் அரசாங்கமும், தயாராக இருக்கின்றன. இதனால் விரைவில் இவ்விவகாரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படலாம். நைரோபியில் உள்ள கழுதை சரணாலயத்தில் பணிபுரியும் சாலமன் ஒன்யாங்கோ, “2016 மற்றும் 2019-க்கு இடையில், கென்யாவின் கழுதைகளில் பாதி (தோல் வர்த்தகத்திற்காக ) படுகொலை செய்யப்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்," என்றார். மக்கள், பொருட்கள், தண்ணீர் மற்றும் உணவை சுமந்து செல்லும் அதே விலங்குகள் - ஏழை, கிராமப்புற சமூகங்களின் முதுகெலும்பாக உள்ளன. எனவே தோல் வர்த்தகத்தின் அளவு மற்றும் விரைவான வளர்ச்சி பிரச்சாரகர்களையும் நிபுணர்களையும் கவலையடையச் செய்துள்ளது. மேலும், கென்யாவில் பலரை தோல் வர்த்தக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தூண்டியுள்ளது. பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் ஆப்பிரிக்காவின் அனைத்து மாநிலத் தலைவர்களும் சந்தித்த ஆப்பிரிக்க யூனியன் உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்கா முழுவதும் கழுதைத் தோல் வர்த்தகத்துக்கான காலவரையற்ற தடையை கொண்டுவரும் முன்மொழிவு நிகழ்ச்சி நிரலில் இருந்தது. பட மூலாதாரம்,FAITH BURDEN படக்குறிப்பு, ஒரு கழுதை சில குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கும் வறுமைக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன கழுதை இறைச்சிக் கூடங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் தடை செய்யப்படுவதைப் பற்றி ஸ்டீவ் பேசுகையில், இது விலங்குகளைப் பாதுகாக்க உதவும் என நம்புகிறார், "இல்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு கழுதைகள் இருக்காது," என்கிறார். ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உள்ள தடைகள் வர்த்தகத்தை வேறு இடத்திற்கு மாற்றுமா? எஜியாவோ தயாரிப்பாளர்கள் சீனாவில் இருந்து பெறப்படும் கழுதைகளின் தோல்களைப் பயன்படுத்தினர். ஆனால், அங்குள்ள வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை 1990 இல் 1.1 கோடியில் இருந்து 2021-இல் 20 லட்சத்திற்கும் கீழே குறைந்தது. அதே நேரத்தில், எஜியாவோ பிரபலமானது. சீன நிறுவனங்கள் தங்கள் தோல் பொருட்களை வெளிநாடுகளில் தேடத் தொடங்கின. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் கழுதை இறைச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன. ஆப்பிரிக்காவில், இது வர்த்தகத்தில் கடுமையான இழுபறிக்கு வழிவகுத்தது. பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY படக்குறிப்பு, ஒரு கழுதை என்பது ஏழை, கிராமப்புற சமூகங்களில் உள்ள பலருக்கு வாழ்வாதாரத்திற்கும் ஏழ்மைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிக்கும் பாகிஸ்தானுக்கு மாறிய கழுதை வர்த்தகம் எத்தியோப்பியாவில், கழுதை இறைச்சி சாப்பிடுவது தடைசெய்யப்பட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்ப்புகள் மற்றும் சமூக ஊடகங்களின் கூக்குரலுக்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் இரண்டு கழுதை இறைச்சிக் கூடங்களில் ஒன்று 2017-இல் மூடப்பட்டது. தான்சானியா மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகள் 2022-ஆம் ஆண்டில் கழுதை தோல்களை அறுப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதித்தன, அதனால், இந்த வர்த்தகம் பாகிஸ்தானுக்கு மாறியது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், 'சில சிறந்த கழுதை இனங்களை' வளர்ப்பதற்காக அந்நாடு 'அதிகாரப்பூர்வ கழுதை வளர்ப்பு பண்ணை' ஆகிவிட்டதாக என அங்குள்ள ஊடகங்கள் விமர்சித்தன. சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனா-ஆப்பிரிக்கா உறவுகள் அறிஞர் பேராசிரியர் லாரன் ஜான்ஸ்டன் கருத்துப்படி, சீனாவின் எஜியாவோ சந்தையின் மதிப்பு 2013-இல் சுமார் 320 கோடி டாலராக இருந்தது, 2020இல் 780 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது பொது சுகாதார அதிகாரிகள், விலங்கு நல பிரசாரகர்கள் மற்றும் சர்வதேச குற்ற புலனாய்வாளர்களுக்கு கூட கவலையாக உள்ளது. மற்ற சட்டவிரோத வனவிலங்கு பொருட்களை கடத்துவதற்கு கழுதை தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY படக்குறிப்பு, தோல் வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சாரகர்கள் இது மனிதாபிமானமற்றது மற்றும் நீடித்து நிலைக்க முடியாதது என்று கூறுகிறார்கள் 'எங்கள் கழுதைகள் படுகொலைக்காக அல்ல' "எனது சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் அவர்கள் தங்கள் பொருட்களை விற்க கழுதைகளைப் பயன்படுத்துகிறார்கள்," என்கிறார் ஸ்டீவ். மருத்துவம் படிக்க பள்ளிக் கட்டணம் செலுத்த தண்ணீர் விற்று பணத்தை சேமித்து வந்தார், ஸ்டீவ். கழுதை சரணாலயத்தில் கால்நடை மருத்துவராக இருக்கும் ஃபெயித் பர்டன், உலகின் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற வாழ்க்கைக்கு விலங்குகள் 'முற்றிலும் அவசியமானவை' என்று கூறுகிறார். இவை வலிமையான, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய விலங்குகள். "ஒரு கழுதை 24 மணிநேரம் தண்ணீர் குடிக்காமல் நடக்கும். எந்த பிரச்சனையும் இல்லாமல் மிக விரைவாக நீரேற்றம் செய்ய முடியும்." என்றார் அவர். கழுதைகள் எளிதில் அல்லது விரைவாக இனப்பெருக்கம் செய்யாது. எனவே வர்த்தகம் குறைக்கப்படாவிட்டால், கழுதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சுருங்கி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் துணையையும் இழக்க நேரிடும் என்று பிரச்சாரகர்கள் அஞ்சுகின்றனர். "நாங்கள் எங்கள் கழுதைகளை படுகொலைக்காக வளர்க்கவில்லை," என்கிறார் ஒன்யாங்கோ. பேராசிரியர் ஜான்ஸ்டன் கூறுகையில், “கழுதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏழைகளைச் சுமந்துள்ளன. அவை குழந்தைகளை, பெண்களை சுமக்கின்றன," என்றார் அவர். பட மூலாதாரம்,THE BROOKE படக்குறிப்பு, Some worry that, if the trade is not curbed, the next generation will not have access to a donkey பெண்களும் சிறுமிகளும், ஒரு கழுதை திருடப்படும்போதுஏற்படும் இழப்பின் சுமைகளைத் தாங்குவதாக அவர் கூறுகிறார். "கழுதை போய்விட்டால், பெண்கள் மீண்டும் கழுதையாக மாறுகிறார்கள்," என்று அவர் விளக்குகிறார். அதில் ஒரு கசப்பான முரண் உள்ளது, ஏனெனில் எஜியாவோ, முதன்மையாக பணக்கார சீனப் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு தீர்வாகும், இது இரத்தத்தை வலுப்படுத்துவதில் இருந்து தூக்கத்திற்கு உதவுவதற்கு, கருவுறுதலை அதிகரிப்பதற்கு என பல நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், 2011-ஆம் ஆண்டு சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'எம்பிரஸ் இன் தி பேலஸ்' - ஒரு ஏகாதிபத்திய நீதிமன்றத்தின் கற்பனைக் கதை - இது மருந்தின் மதிப்பை உயர்த்தியது. "நிகழ்ச்சியில் உள்ள பெண்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஒவ்வொரு நாளும் எஜியாவோ-ஐ உட்கொண்டனர். அது உயரடுக்கு பெண்மையின் தயாரிப்பாக மாறியது. முரண்பாடாக, அது இப்போது பல ஆப்பிரிக்க பெண்களின் வாழ்க்கையை அழித்து வருகிறது," என்றார் பேராசிரியர். 24 வயதான ஸ்டீவ், தனது கழுதைகளை இழந்தபோது, தனது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கவலைப்பட்டார். "நான் இப்போது வழியின்றித் தவிக்கிறேன்," என்கிறார் அவர். கழுதைகள் சரணாலயத்தைச் சேர்ந்த ஜன்னெக் மெர்க்ஸ், கழுதைகளைப் பாதுகாக்க எத்தனை நாடுகள் சட்டம் இயற்றுகிறதோ, கழுதைத் தோல் வர்த்தகம் அவ்வளவு கடினமாக மாறும் என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,VICTORIA GILL/BBC படக்குறிப்பு, டெவோனில் உள்ள சரணாலயத்தில் கழுதை ஒன்றுடன் ஜன்னெக் மெர்க்ஸ் "நாங்கள் பார்க்க விரும்புவது என்னவென்றால், எஜியாவோ நிறுவனங்கள் கழுதை தோல்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு நிலையான மாற்று வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் - செல்லுலார் விவசாயம் (ஆய்வகங்களில் உற்பத்தி செய்தல்) போன்றவற்றில் ஏற்கனவே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன," என்கிறார் அவர். கழுதை சரணாலயத்தின் துணை தலைமை நிர்வாகியான ஃபெயித் பர்டன், கழுதை தோல் வர்த்தகம் 'நிலையற்றது மற்றும் மனிதாபிமானமற்றது' என்று கூறுகிறார். "அவை திருடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான மைல்கள் நடக்கக்கூடும், நெரிசலான இடத்தில் வைக்கப்பட்டு பின்னர் மற்ற கழுதைகளின் பார்வையில் படுகொலை செய்யப்படுகின்றன. இதற்கு எதிராக நாம் பேச வேண்டும்," என்றார் அவர். பட மூலாதாரம்,BROOKE படக்குறிப்பு, ஸ்டீவ் இப்போது ஒரு புதிய கழுதையை வைத்திருக்கிறார், அது அவருடைய கனவுகளை அடைய உதவும் என்று அவர் நம்புகிறார் ப்ரூக் இப்போது ஸ்டீவ்விற்கு ஒரு புதிய கழுதையைக் கொடுத்துள்ளார், அதற்கு அவர் ஜாய் லக்கி என்று பெயரிட்டார், ஏனெனில் அவர் அதை பெற்றதற்கு அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறார். "என் கனவுகளை அடைய அவள் எனக்கு உதவுவாள் என்று எனக்குத் தெரியும். அவள் பாதுகாக்கப்பாக இறுப்பதை நான் உறுதி செய்வேன்,” என்கிறார் ஸ்டீவ். https://www.bbc.com/tamil/articles/cldqx7nw4qlo
-
சர்வதேச சமூக நீதி தினம்
சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம் செ.திவாகரன் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 20 திகதி “உலக சமூக நீதி தினமாக” அனுசரிப்பது என தீர்மானிக்கப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழர்களின் உரிமைகளை உள்ளடக்கிய சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று(20) நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம், சமூக அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம், கண்டி சமூக நிர்வாகத்தின் ஒன்றியங்கள் இணைந்து நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என இன மத கட்சி பேதமின்றி நுவரெலியாவில் ஒன்று கூடியவர்கள் சர்வதேச நீதி தினத்தில் தமது கோரிக்கை அடங்கிய வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுவாக தமிழர்களை இந்திய தமிழர்கள் எனக் கூறுகின்றனர். நாட்டில் மலையகம் 200 என பல இடங்களில் பல கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இருந்தும் இன்று வரை இலங்கைத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என யாரும் கூறுவதில்லை. எனவே இன்று முதலாவது தமிழர்களாகிய எங்களை இலங்கைத் தமிழர்கள் மலையக தமிழர்கள் என அடையாளப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர். அத்துடன், ஒரே தடவையில் 1300 புதிய வீடுகள் அமைப்பதற்கான “பாரத் – லங்கா வீடமைப்பு ” திட்டம் இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது இதிலும் மலையகம் மக்களுக்கும் எவ்விதமான பாரபட்சமின்றி வீடுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன் போது முன்வைத்தனர். அத்துடன் மலையக மக்கள் குடியேறி 200 வருடங்ளாகிவிட்டது. எங்களுக்கு உரிமை இல்லையென்று ஒப்பாரி வைக்கமாட்டோம். எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் பல வழிகளில் போராடுவோம் என கூறினர். https://thinakkural.lk/article/292574
-
இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடவுள்ளதாக முன்னதாக அறிவிப்பு விடுத்திருந்தமையினால் தூதரகத்துக்கு முன்பாக பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று துணைத் தூதரகத்தை முற்றுகையிட முற்பட்டபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 8 பேர் மாத்திரம் தூதரகத்துக்கு சென்று துணைத் தூதுவரைச் சந்தித்து மனுவொன்றை கையளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/292599