Everything posted by ஏராளன்
-
மின் கட்டண குறைப்பு தொடர்பான பிரேரணை மீளாய்வு!
மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் மின் கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் அவர்கள் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/292545
-
க.பொ.த உயர்தர பரீட்சை சம்பந்தமான செய்திகள்
உயர்தர செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம் 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று(20) முதல் ஆரம்பமாகுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டியம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இவ்வாறு ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த பாடங்களுக்கான பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிப்பத்திரங்கள், விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தவிர பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும். இதனிடையே, நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நாளை மறுதினம்(22) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அண்மையில் நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். https://thinakkural.lk/article/292493
-
கற்பிட்டியில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நீர்ச் சறுக்கல் விளையாட்டு
Published By: DIGITAL DESK 3 20 FEB, 2024 | 10:49 AM கற்பிட்டி கண்டகுழி கலப்பில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கற்பிட்டிக்கு வருகைத் தந்துள்ள அதிகளவிலான சுற்றுலா பயணிகள் கண்டக்குழி பகுதியில் “kite Surfing” எனப்படும் நீர்ச்சருக்கள் விளைட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே நீர்ச்சருக்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சருக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்கு கற்பிட்டி கண்டகுழி கலப்பு ஆழமற்று காணப்படுவதினால் விளையாற்றில் ஈடுபடுபவர்களுக்கு மிக இலகுவாக காணப்படுவதாகவும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த இடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பலத்த காற்று வீசுவதுடன், தினமும் மதியம் 12 மணி முதல் 4.30 மணி வரை காற்று அதிகமாக வீசுவது இந்த விளையாட்டுக்கு மிகவும் சிறந்தது என அந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினர் குறிப்பிடுகின்றனர். ஜேர்மன், பிரான்ஸ், ஆஸ்திரியா, இந்தியா, கனடா, சுவிஸர்லாந்து மற்றும் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். நீர்ச்சருக்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையர்களே பயிற்சிகளை வழங்குகின்றதாக இலங்கைப் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், இரண்டு அல்லது மூன்று வாரங்கள் என்ற குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் தினமும் குறித்த விளையாட்டில் ஈடுபட்டு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதாக இலங்கை பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது. தற்பொழுது மீண்டும் சுற்றுலா துறையினர் வருகைத் தருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையிலுள்ள இவ்வாறான சுற்றுலா மையங்களை மேம்படுத்துவதனூடாக தொழில் வாய்ப்பை அதிகரித்து அந்நியச் செலாவனியை ஈட்டமுடியும். https://www.virakesari.lk/article/176830
-
இலங்கை ஜனாதிபதியின் பொறுப்புக்கூறல் முயற்சி - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கவலை
இலங்கை ஜனாதிபதியின் புதிய பொறுப்புக்கூறல் முயற்சி குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கவலை - கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஜனாதிபதியின் இணையத்தளத்தில் வெளியிட கோரிக்கை Published By: RAJEEBAN 20 FEB, 2024 | 10:44 AM இலங்கை அரசாங்கம் புதிய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு முன்னர் முன்னைய ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத அளவிற்கு தாண்டியுள்ளது எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழுவை அரசாங்கம் உருவாக்கவுள்ளது உண்மை மற்றும் ஐக்கியம் நல்லிணக்கம் ஆணைக்குழு எனப்படும் இந்த புதிய ஆணைக்குழு உண்மையை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 36 ஆணைக்குழுக்களின் வரிசையில் இணைந்துகொண்டுள்ளது எனவும் உண்மை நீதிக்கான சர்வதேச திட்டம் தெரிவித்துள்ளது. எனினும் நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னமும் சாத்தியமாகத விடயங்களாவே காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நீதிகோரி காணாமல்போனவர்களின் உறவுகள் துணிச்சலுடன் வீதிக்கு இறங்கி இன்றுடன் 8 வருடங்களாகின்றன என தெரிவித்துள்ள ஐடிஜேபி இதன் பின்னர் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறியாமலே 240 முதிய உறவினர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் உத்தேச நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரித்து 37 சிவில்சமூக அமைப்புகளும் 19 சிவில்சமூக செயற்பாட்டாளர்களும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் அவர்கள் கடந்தகால ஆணைக்குழுக்களின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள் வெளியிட்ட ஆவணங்களை அரசாங்கங்ம் பகிரங்கப்படுத்த தவறியதை சுட்டிக்காட்டுகின்றனர் புதிய ஆணைக்குழுவிற்கு போதிய அதிகாரங்கள் இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர் பொருத்தமான நீதிப்பொறிமுறை இன்மை கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியமையையும் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் அமைத்து, நாம் அடையாளம் கண்ட 36 ஆணைக்குழுக்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில் ஒரு, அதாவது 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உண்மையில், கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்கமுடிந்தது.எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது மேலும், கடந்த காலங்களில், என்ன நடந்தன என்பதை நிறுவுவதற்கான விசாரணை வடிவங்களே மேற்கொள்ளப்பட்டன, மாறாக, குற்றத்திற்குக் காரணமானவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதற்காக அல்ல. இதனால், அதே நபர்களால் திரும்பத்திரும்ப பெரும் அநீதிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தது. சிறிலங்கா ஜனாதிபதி அண்மையில் பரிந்துரைத்துள்ள பொறுப்புக்கூறல் முயற்சி தொடர்பான கடுமையான கவலைகளை இது எழுப்புகின்றது. ஜனாதிபதியின் இணையத்தளத்தில் கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலமாக அவற்றின் உள்ளடக்கங்களை அங்கீகரிப்பதே எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. உண்மையை நோக்கிய முதலாவது படியாக அமையும். நேர்மைத்தன்மையுடன் செயற்படுவதற்கு, பட்லந்த சித்திரவதைக்கூடத்தில் நடந்த சித்திரவதைகளும் தடுத்து வைப்புக்களும் ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தெரியாமல் நடந்திருப்பது சாத்தியமில்லை என்று கூறும் பத்தலந்த ஆணைக்குழுவின் அறிக்கை போன்ற, ஜனாதிபதியின் பெயரையும் உள்ளடக்கும் அறிக்கைகளையும் இதில் உள்ளடக்கவேண்டும். இதுவரை வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடும்படியும், கடந்த கால அறிக்கைகள் அனைத்தையும் பின்வரும் ஜனாதிபதி இணையத்தளத்தில் வெளியிடும்படியும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176832
-
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் விடுதலைப் புலிகளின் தங்கங்களைத் தேடி வேட்டை! 20 FEB, 2024 | 10:38 AM முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒரு இடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தர்மபுரம் பொலிஸார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை ( 19) குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காத நிலையில் மேலும் பல பகுதிகளை தோண்டி பார்ப்பதற்கு இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (20) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வு முன்னெடுப்பதற்காக வீதிகள் மற்றும் குறித்த காணியினை சூழ அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் பொலீசார், சிறப்பு அதிரடிப்படையினர் தடயவியல் பொலீசார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், கிராம அலுவலகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் கூடிநின்ற நிலையில் உள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் குறித்த இடத்தில் பிரசன்னமாகி இருந்தார்கள். குறித்த பகுதியில் அமையப்பெற்ற வீட்டின் உட்பகுதியில் விடுதலைப்புலிகளால் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் தற்போது அரைக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் ஒரு அறையின் ஒருபகுதியில் நிலத்தில் சுமார் 4 அடிவரை நேற்று தோண்டப்பட்டுள்ளது. எனினும் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று இரண்டாவது நாளாக கனரக இயந்திரம்கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/176829
-
யாழில் போதைப்பொருளை நுகரத் தயாராகவிருந்த 4 இளைஞர்கள் கைது
20 FEB, 2024 | 10:33 AM யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்வதற்கு தயார் நிலையில் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை (19) கைது செய்துள்ளனர். கோண்டாவில் - இருபாலை வீதியில் உள்ள இரகசிய இடமொன்றை இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்துவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்து சென்றனர். அங்கு நான்கு இளைஞர்கள் போதைப்பொருளை நுகர்வதற்கு தயாராக போதைப்பொருட்களுடன் காணப்பட்ட நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , ஊசியும் (சிறிஞ்) மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குருநகர் பகுதியை சேர்ந்தவரிடம் இருந்து தான் இந்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதாக தெரிவித்துள்ளனர். போதைப்பொருளை விற்பனை செய்தவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/176828
-
யாழ்.கோப்பாயில் பெண் மீது வாள் வெட்டு; பல்வேறு குற்றங்களுடன் தொடர்ப்புடையவர் கைது
Published By: DIGITAL DESK 3 20 FEB, 2024 | 10:17 AM யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் மத்தி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் மீது நேற்று திங்கட்கிழமை (19) வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/176827
-
வீதியில் பள்ளம் – $48 மில்லியன் அபராதம் விதித்த நீதிபதி
உலகிலேயே பரப்பளவில் 5 ஆவது இடத்தில் உள்ள பெரிய நாடு, பிரேசில் (Brazil). இதன் தலைநகரம் பிரெசிலியா (Brasilia). 2007 ஜனவரி மாத காலகட்டத்தில் பிரேசில் நாட்டின் சா பாலோ (Sao Paulo) நகரின் பின்ஹெரோ (Pinheiros) பகுதியின் சுற்றுப்புறத்தில், மெட்ரோ அமைப்பை விரிவுபடுத்துவதற்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பூமி உள்வாங்கி அங்கு மிக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த பெரும் பள்ளத்தில் விழுந்தனர். 23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளம், ஒரு மினி பஸ், 7 வீடுகள் மற்றும் பொதுமக்களில் சுமார் 200 பேர் என உள்ளே இழுத்து கொண்டது. பல லொரிகள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்தன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்திற்கு காரணமானவர்கள் என கட்டுமான நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்கோஸ் டி லிமா போர்டா (Marcos de Lima Porta) தீர்ப்பை அறிவித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: இவ்வளவு பாரிய கட்டுமானத்தில் தாங்கி பிடிக்கும் தூண்கள் உருவாக்க வேண்டும் என வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், செயலை விரைவாக முடித்தாக வேண்டும் என்கிற ஒரே நோக்கில் அவசரகதியில் கட்டுமானத்தை மேற்கொண்டவர்கள் பணியாற்றி உள்ளார்கள். அதனால் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்திற்கும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கும் அவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். தனது தீர்ப்பில் ரூ.4,00,96,84,875.00 ($48.3 மில்லியன்) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, மெட்ரோ நிறுவன அதிபர், ஒரு பொறியாளர், கட்டிட ஆய்வாளர் உட்பட 6 பேரும், 6 நிறுவனமும் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 2018 இல் உயிரிழந்து விட்டார். ஆனாலும், அவரது வாரிசுகள் அபராதத்தை செலுத்த வேண்டும் என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/292425
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
சர்ஃபராஸ் கான் தனித்துவமான பேட்டிங் பாணியை வளர்த்தது எப்படி? ஒருநாள் போட்டிகளிலும் சாதிப்பாரா? பட மூலாதாரம்,PUNIT PARANJPE/AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விமல் குமார் பதவி, மூத்த பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தனது முதல் டெஸ்டிலேயே 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 130 ரன்கள் எடுத்துள்ளார் சர்ஃபராஸ் கான். ராஜ்கோட் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதம் அடிக்காமல் ஒரே இன்னிங்சில் ஒரு சதம் மூலம் சர்பராஸ் கான் இந்த சாதனையை செய்திருந்தால், சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த அதே கைதட்டல் இவருக்கும் கிடைத்திருக்கும். 26 வயதான இந்த மும்பை பேட்ஸ்மேன், தனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்ததை வேறு எந்த கிரிக்கெட் வீரரின் பயணத்தோடும் ஒப்பிட முடியாது. ராஜ்கோட் டெஸ்டின் முதல் நாளில் சர்ஃபராஸ் கானின் வேகம் மற்றும் அவரது பேட்டிங் பாணி இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போல அமைந்திருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பல பகுதிகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் தனது மகன் கலந்து கொள்ள, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் சர்ஃபராஸ் கானை அழைத்துக் கொண்டு காரில் பயணித்திருக்கிறார் தந்தை நெளஷத் கான். அவர் பார்க்க, இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் விளையாடியது தந்தையின் பல ஆண்டு கால தவத்தைப் பூர்த்தி செய்வது போல அமைந்தது. தந்தையின் தவம் பட மூலாதாரம்,PUNIT PARANJPE/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, சர்ஃபராஸ் கான் தனது தந்தையுடன் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் விஜய் யாதவின் ஃபரிதாபாத் அபிமன்யு கிரிக்கெட் அகாடமி, முகமது ஷமியின் சொந்த அகாடமி, டேராடூன் கிரிக்கெட் அகாடமி, கான்பூரில் குல்தீப் யாதவின் பயிற்சியாளர் நடத்தும் அகாடமி, காசியாபாத்தில் உள்ள டிஎன்எம் கிரிக்கெட் அகாடமி, மதுராவின் அச்சீவர்ஸ் அகாடமி, மீரட்டில் புவனேஷ்வர் குமாரின் பயிற்சியாளர் சஞ்சய் ரஸ்தோகியின் கிரிக்கெட் அகாடமி, டெல்லி பாரத் நகரில் உள்ள கவுதம் கம்பீரின் கிரிக்கெட் அகாடமி, லக்னோவில் விஸ்வஜித் சின்ஹாவின் கிரிக்கெட் அகாடமி அல்லது ஆக்ரா, லக்னோ, கோரக்பூர் என எத்தனையோ நகரங்கள்.... சர்ஃபராஸின் தந்தை சளைக்காமல் அவரை அழைத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் பயணித்தார். தந்தை நெளஷத் கான் தான் சர்ஃபராஸ் கானின் முதல் பயிற்சியாளர். நெளஷத் கானின் அர்ப்பணிப்பு குறித்து பல கதைகளை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பல்வேறு கிரிக்கெட் அகாடமிகளின் பயிற்சியாளர்கள் கூறுவார்கள். சர்ஃபராஸ் கானின் பல ஆண்டுகால போராட்டத்தைப் பார்த்த எல்லோரும், "உங்கள் மகன் நிச்சயமாக இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார்" என தந்தை நெளஷத்திற்கு ஆறுதல் கூறினார்கள். கடவுள் கொடுத்தால் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பார் என்று சொல்வார்கள். நெளஷத்துக்கும் அப்படித்தான் நடந்தது. இந்த மாதம், தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவரது இளைய மகன் முஷீர் கான் சதம் அடித்ததை அனைவரும் பார்த்தனர். மறுபுறம் மூத்த மகன் சர்ஃபராஸுக்கும் இறுதியாக அவர் எதிர்பார்த்த டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்தது. தனித்துவமான பேட்டிங் பாணியை வளர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES சுனில் கவாஸ்கரைத் தவிர்த்து, இந்திய கிரிக்கெட்டில் திலாவர் ஹுசைன் (1964) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (2021) ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே தங்கள் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தனர். இப்போது அதையே செய்ததன் மூலம், மும்பையின் புகழ் பெற்ற பேட்டிங் குடும்பத்தின் மூன்றாவது உறுப்பினராக மாறியிருக்கிறார் சர்ஃபராஸ். ஆனால், சர்ஃபராஸின் பேட்டிங்கில் அந்த வழக்கமான மும்பை ஸ்டைல் இல்லை. சிறிய நகரங்களில் இருந்து வந்து ஆடக் கூடிய ஒரு வீரரின் கவலையற்ற, மகிழ்ச்சியான பேட்டிங் பாணி தென்பட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்ஃபராஸ் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து இந்த இடத்தை அடைந்துள்ளார். இரண்டாவது காரணம், சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கைப் பார்த்து வளர்ந்தது மட்டுமல்லாது ரோகித் சர்மாவின் அதிரடி பேட்டிங் ஸ்டைலையும் ரசிப்பவர் சர்ஃபராஸ். சர்ஃபராஸின் இந்த தனித்துவமான பேட்டிங் பாணியைப் பார்த்த கவாஸ்கர், வர்ணனை செய்யும் போது ஒரு புதிய அடைமொழியை உருவாக்கினார். ஜெய்ஸ்வால்-சர்ஃபராஸ் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஏதோ பள்ளி அல்லது கிளப் பந்துவீச்சாளர்களை போல கையாண்டு, திணறடித்த போது, "இது நவி மும்பை ஸ்கூல் ஆஃப் பேட்டிங் ஸ்டைல்" என்றார் கவாஸ்கர். இதுகுறித்து ஆங்கில வர்ணனையாளர் கிரேம் ஸ்வானிடம் விளக்கம் அளித்த கவாஸ்கர், "கடந்த சில ஆண்டுகளில் மும்பை நகரம் எப்படி நவி மும்பை வரை விரிவடைந்ததோ அதேபோல, பிரபல மும்பை குடும்பத்தின் ஸ்கூல் ஆஃப் பேட்டிங்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்றார். ஒருநாள் போட்டியிலும் சாதிப்பாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ஃபராஸின் தந்தைக்கு கவிதைகள் மிகவும் பிடிக்கும். தன் காரில் கிரிக்கெட் போட்டிகளுக்காக இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு போகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கவிதைகள் சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சர்ஃபராஸ் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். பல வல்லுநர்கள் அவரது ஆட்டத்தில் 1990களின் மற்றொரு திறமையான மும்பை பேட்ஸ்மேனான வினோத் காம்ப்ளியின் ஒரு சாயலைப் பார்க்கிறார்கள். காம்ப்ளி ஒரு இடது கை பேட்ஸ்மேன். டெண்டுல்கர் போன்ற சமகால ஜாம்பவான்களுக்கு முன்னால் கூட அவர் தனக்கென ஒரு தனி பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு ஆடிய விதத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இன்று, சர்ஃபராஸின் முன்னால் இருப்பவர் ஜெய்ஸ்வால். இவர் மும்பையைச் சேர்ந்தவர், நான்கு ஆண்டுகள் இளையவர். இப்போது சர்ஃபராஸ், ஜெய்ஸ்வாலுடன் ஒப்பிடப்படுவார். ஜெய்ஸ்வால் இந்த கிரிக்கெட் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் அவர் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு சிறப்பான தொடக்கம் கண்டுள்ளார். சர்ஃபராஸ் இந்தியாவுக்காக கிரிக்கெட்டின் குறுகிய வடிவமான டி20-யில் விளையாட முடியாமல் போகலாம். ஆனால், ஒருநாள் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் மிகவும் பயனுள்ளவராக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் நம்புகிறார். சர்ஃபராஸ் எந்தளவு திறமையானவர்? பட மூலாதாரம்,INSTAGRAM/SARFARAZKHAN ஆரம்ப கால வெற்றிக்குப் பிறகு, தனக்கு கிடைத்த புகழ் போதையில் இருந்தும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தும் காம்ப்ளியைக் காப்பாற்ற யாரும் இல்லை. ஆனால், 26 வயதான சர்ஃபராஸ், இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்பே கிரிக்கெட் களத்தில் பல பின்னடைவுகளைச் சந்தித்து, மனதளவில் வலிமையானவராக மாறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சி, தர்மசாலாவில் நடக்கவுள்ள போட்டிகளிலும் சர்ஃபராஸின் அதிரடி பேட்டிங் தொடர்ந்தால், இந்திய அணிக்காக விளையாட பல நாடுகளுக்கு பல லட்சம் கிலோமீட்டர்கள் கடந்து விமானத்தில் பயணிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம். சர்ஃபராஸின் கிரிக்கெட்டுக்காகவே இதுவரை 1.5 லட்சம் கிலோமீட்டரில் 90 சதவீத தூரத்தை தனது காரில் பயணித்துள்ள அவரது தந்தைக்கு இதுவே மிகப்பெரிய குருதட்சணையாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c6p914n4y3eo
-
மறைக்கப்பட்ட சந்திப்பு
Published By: VISHNU 19 FEB, 2024 | 01:12 AM ஹரிகரன் அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தா பவர், கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். இது தொடர்பாக உடனடியாகவே யு.எஸ்.எய்ட் இனால் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம், (யு.எஸ்.எய்ட்), இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற ஒரு அமைப்பு. 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருப்பதாக 2022 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் யு.எஸ்.எய்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. யு.எஸ்.எய்ட் நிர்வாகியான சமந்தா பவர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில், தேசிய பாதுகாப்பு சபையில் அவரது ஆலோசகராக பணியாற்றியவர். மனித உரிமை விவகாரங்களில் அக்கறையும் இறுக்கமான போக்கையும் கொண்டவர். ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவராகவும், சமந்தா பவர் பணியாற்றியிருந்தார். ஜோ பைடன், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவரை யு.எஸ்.எய்ட் நிர்வாகியாக நியமித்திருக்கிறார். இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களுக்குப் பின்னால், முக்கிய பங்காற்றியவர் இவர். பல முறை இலங்கைக்கும் வந்து சென்றிருக்கிறார். மக்கள் போராட்டங்களினால், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், கடந்த செம்டெம்பர் நடுப்பகுதியில் சமந்தா பவர் இலங்கைக்கு வந்திருந்தார். பொருளாதார நெருக்கடியின் உச்ச கட்டத்தில் இருந்த இலங்கைக்கு அவர் வருவதற்கு முன்னரே 60 மில்லியன் டொலர்கள் உதவித் திட்டத்தை அறிவித்திருந்தார். இலங்கைக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பேச்சுக்களை நடத்திய பின்னர் - அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 65 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கும் அவர் முன் வந்தார். இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் அமெரிக்கா அதிக அக்கறையுடன் செயற்படுகிறது. அவ்வாறான நோக்கத்தை அடைவதற்கான ஒரு கருவியாக, சமந்தா பவர் செயற்பட்டு வருகிறார். அவருக்கும் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட அவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறார். இவ்வாறான ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், அதுகுறித்து அவரது அலுவலகத்தினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் இருந்து, இதுவரையில் அந்த உரையாடல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு நாளும் பலருடன் பேசுவார், தொடர்பு கொள்வார். எல்லா உரையாடல்களும் செய்திக் குறிப்புகளாக வெளியிடப்படுவதில்லை. சமந்தா பவருடனான உரையாடலும் அவ்வாறு உதறித் தள்ளக் கூடிய ஒன்றா? நிச்சயமாக இல்லை. சமந்தா பவர் உலகின் மிக வலிமையான நாட்டின், சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. இலங்கை விவகாரத்தில் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்துபவர். இலங்கைத் தலைவர்கள் பலரை தனிப்பட்ட முறையில் நன்றாக அறிந்தவர் தொடர்புகளை பேணி வருபவர். அவ்வாறான ஒருவருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய மெய்நிகர் சந்திப்பை புறக்கணித்து ஒதுக்க முடியாது. ஆனால், ஜனாதிபதி செயலகம் இது பற்றி மூச்சு கூட விடவில்லை. அதற்குக் காரணம், இல்லாமல் இல்லை. ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவிடம், சுக நலம் விசாரிப்பதற்காக சமந்தா பவர் அந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை போன்றவற்றின் மீதான, அமெரிக்க அரசாங்கத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் தான், இந்த மெய் நிகர் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்த சந்திப்பின் போது சமந்தா பவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு உவப்பானவை. அதனால்தான் இவ்வாறான ஒரு சந்திப்பு இடம் பெற்றதாகவே ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. யு.எஸ்.எய்ட் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இன்று (13) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், நிர்வாகி சமந்தா பவர் உரையாடினார். அவர்கள் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடினர். மேலும் கடினமான பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு யு.எஸ்.எய்ட் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சமந்தா பவர் வெளிப்படுத்தினார். சமந்தா பவர் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும் சட்டமியற்றும் செயல்முறை குறித்து கலந்துரையாடினர். இதன்போது, கருத்து மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார். கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் துடிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு போன்றவற்றில், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் சாத்தியமான தாக்கம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினார்.” என்று கூறப்பட்டிருந்தது. மேன்போக்காக பார்த்தால், இந்த அறிக்கையில் பெரிதாக எந்த விடயமும் இருப்பதாக கண்டறிய முடியாது. ஆனால் இது முக்கியமானது. இதற்குள் இரண்டு விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒன்று - வெளிப்படையாகவே கூறப்பட்டிருக்கின்ற, நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கரிசனை. இன்னொன்று - ஜனநாயக ஆட்சி முறை மற்றும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பான அமெரிக்காவின் கவலை. நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்னரே, அதிலுள்ள சில விடயங்கள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக அமெரிக்க தூதுவரும் பகிரங்கமாக பதிவுகளை இட்டிருந்தார். அரசாங்க தரப்பினருடனான சந்திப்புகளின் போதும், கூறியிருந்தார். ஆனாலும் அரசாங்கம் அந்தச் சட்டத்தை விடாப்பிடியாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இது, கருத்து சுதந்திரத்தை பாதிக்க கூடிய விடயங்களை உள்ளடக்கி இருப்பதாகவும், வளர்ந்து வரும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார். அப்போது, அரசாங்கம் அது பற்றி கண்டு கொள்ளவில்லை. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தினால், பெரும்பாலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதார முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களின் முதலீடுகளை தவிர்க்கின்ற நிலை உருவாகும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. சமந்தா பவரும் கூட இந்த எச்சரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வெளியிட்டு இருக்கிறார். அறிக்கையில் இந்த விடயம் மிக நாசூக்காக கையாளப்பட்டிருக்கிறது. அதுதான் இராஜதந்திர அணுகுமுறை. இறுக்கமான விடயங்களை கூட, இராஜதந்திர மொழிநடையில், இலகுவானதாக, நாசுக்காக எடுத்துக் கூறலாம். அதனை சரியாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம். சமந்தா பவரின் பணியகம் வெளியிட்ட அறிக்கையும் அவ்வாறான ஒன்று தான். உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அவ்வாறான ஒரு பொருளாதார முதலீட்டு வாய்ப்பை இலங்கை இழக்கின்ற நிலைக்கு இந்த சட்டம் காரணமாகப் போகிறது என்பதே அமெரிக்காவின் எச்சரிக்கை. அடுத்து, இந்த சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிய முறையையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக உயர்நீதிமன்றத்தினால் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கையாளப்பட வேண்டிய மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் பலவும், இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை. இது ஒரு சட்டத்தை உருவாக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு ஆலோசனை கூறுகின்ற உயர்நீதிமன்றத்தின் வகிபாகத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இது குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இதனை முன்னிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையில் பேணப்பட வேண்டிய சமநிலையில் குழப்பத்தை உருவாக்கும் - தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு கையாண்ட வழிமுறை போல, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணிப்பதற்கும் இவ்வாறான ஒரு உத்தியை கையாளுகிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான், ஜனநாயக ஆட்சி முறை தொடர்பாகவும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பாகவும் கலந்துரையாட வேண்டிய சூழல் சமந்தா பவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோன்று, சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கிறார் என்றும், அதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கின்ற முயற்சியில் இறங்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தலைப் போன்று. ஜனாதிபதி தேர்தலையும் தடுப்பதற்கு அவர் எந்த வழிமுறைகளையும் கையாளக் கூடும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. என்னதான், ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க சார்பாளராக இருந்தாலும், குறுக்கு வழியில் அவர் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு, பதவியில் நீடித்திருப்பதை அமெரிக்கா விரும்பாது. இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்றவற்றை அமெரிக்கா வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே, அவற்றின் சமநிலையில் ஏற்படும் தாக்கம் - இலங்கையினதும், பிராந்தியத்தினதும் பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் என்பதற்காகத் தான். எனவே, ரணில் விக்கிரமசிங்கவை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா முயற்சிக்கிறது. அந்த வேலையே அனுபவசாலியான சமந்தா பவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பு தொடர்பாக அரச தரப்பு காட்டுகின்ற மௌனம், கொடுக்கப்பட்ட அந்த வேலையை சமந்தா பவர் சரியாகச் செய்திருக்கிறார் என்பதைத் தான் உணர்த்துகிறது. https://www.virakesari.lk/article/176710
-
முன்னாள் மனைவியைக் கொன்ற நபருக்கு 45 ஆண்டுக்குப் பிறகு தண்டனை - எப்படி தெரியுமா?
முன்னாள் மனைவியை கொன்ற நபரை 45 ஆண்டுக்குப் பிறகு காட்டிக் கொடுத்த விந்தணு - எப்படி தெரியுமா? பட மூலாதாரம்,NEWSLINE MEDIA படக்குறிப்பு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரெண்டா பேஜ், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒரு வருடத்தில் கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா கர்ரான், கென் பேங்க்ஸ் பதவி, பிபிசி ஸ்காட்லாந்து 19 பிப்ரவரி 2024, 06:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை கைது செய்த துப்பறியும் நபர் ஒருவரின் வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், கைது செய்யப்பட்ட நபர் தன்னைத் தானே புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்துள்ளார். ஸ்காட்லாந்தின் வட-கிழக்கு மாநிலமான அபெர்டீனைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஹாரிசன். இவர், 32 வயதான தனது மனைவி பிரெண்டா பேஜிடம் இருந்து விவாகரத்து பெற்று ஒரு ஆண்டுக்கு பிறகு, 1978 ஆம் ஆண்டு தன் மனைவியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் காலண்டர், பிரெண்டா பேஜின் கொலை குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கினார். “அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துகொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், விசாரணையில், அவரையே அறியாமல், அவர் அதனை ஒப்புக்கொண்டார்,” என்றார் ஜேம்ஸ். பிரெண்டா பேஜ் இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படக்குறிப்பு, பிரெண்டா பேஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ஜேம்ஸ் காலண்டர், குற்றவாளி தன்னை ஒரு புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்ததாகக் கூறினார். கொலை நடந்து 30 ஆண்டுகளுக்கு பின் மறு விசாரணை இந்தக் கொலைக் குற்றத்தை மையமாகக் கொண்டு, பிபிசியின் ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தி கில்லிங் ஆஃப் டாக்டர் பிரெண்டா பேஜ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், 2020இல் ஹாரிசன் கைது செய்யப்படும் காட்சிகளுடன் தொடங்குகிறது. ஆவணப்படத்தை தயாரித்தது. 2020 இல் ஹாரிசன் கைது செய்யப்பட்ட காட்சிகளுடன் ஆவணப்படம் தொடங்குகிறது. ஆரம்பக்காட்சியில், ஹாரிசனை போலீஸ் தேடி வரும்போது, ‘அவர் இங்கே கொல்லப்படவில்லை,’ எனக் கூறுவது கேட்கிறது. மரபியல் நிபுணரான டாக்டர் பிரெண்டா பேஜ், ஜூலை 14, 1978 அன்று தனது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை அவரது முன்னாள் கணவர் ஹாரிசன் கொலை செய்திருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அவரை போலீசாரும் கைது செய்தனர். ஆனால், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்தபோதும், அவர் தான் கொலை செய்தார் என்பதற்கான எந்த ஆதரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்தக் கொலைக்கான ஆதரங்களை, ஸ்காட்லாந்து போலீசாரும், ஊடகங்களும் தொடர்ந்து தேடி வந்தன. ஆனால், நீண்ட காலத்திற்கு கொலை தொடர்பாக எந்த ஆதரமும் கிடைக்கவில்லை. அதன் பிறகு இந்த வழக்கை, கிடப்பில் போட்டனர். பின், 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவு வந்தது. பட மூலாதாரம்,PAGE FAMILY படக்குறிப்பு, பிரெண்ட பேஜ் கொலை வழக்கில், எந்த ஆதரமும் கிடைக்காத நிலையில், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மறுவிசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம் வழக்கை மீண்டும் விசாரித்த போலீசார், பிரெண்டா பேஜின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தடயங்களை சேகரித்திருந்தனர். அப்போது, ஒரு போர்வையில் விந்துக் கறை காணப்பட்டது. அந்த விந்து, ஹாரிசனின் டிஎன்ஏ,வுடன் ஒப்பிடப்பட்டது. ஆய்வின் முடிவில், போர்வையில் காணப்பட்ட விந்துவும், ஹாரிசனின் டிஎன்ஏ,வும் ஒத்துப்போனது. ஆனால், அதற்கு முன் நடந்த விசாரணையில், தான் பிரெண்டாவுடன் உடலுறவு கொள்ளவில்லை என ஹாரிசன் கூறியிருந்தார். ஆனால், அந்த விந்து அவருடையது தான் என்பதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். அதேபோல, பிரெண்டாவின் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட சில உடைந்த ஓவியங்களும், ஹாரிசனின் காரில் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்த மூன்று தசாப்தத்திற்கு பிறகு, மார்ச் 27, 2020 அன்று ஹாரிசனை மீண்டும் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், ஹாரிசன், தொடர்ந்து தனக்கும் தனது முன்னாள் மனைவின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வாதிட்டு வந்தார். ஆனால், ஆதாரங்கள் வலுவாக இருந்ததால், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியாக, மார்ச் 2023 இல், 10 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கு பின், ஹாரிசன் தான் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜை கொலை செய்தார் என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரிவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட ஹாரிசன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி காலண்டர், வழக்கு குறித்து பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், ஹாரிசன் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜ் கொலை வழக்கில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை. “அவரத அதீத புத்திசாலித்தனமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கைது செய்வார்கள் என அவர் நினைக்கவில்லை,”என்றார் காலண்டர். மேலும், வழக்கு விசாரணையின்போது, அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரே வழக்கில் சிக்கிக்கொண்டதாகவும் காலண்டர் பிபிசியிடம் கூறினார். "வீடியோ கேமராக்களுக்கு முன்னால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய விதத்தை நீங்கள் பார்த்தால், அவரே குற்றத்தை ஒப்புக்கொள்வது உங்களுக்கு புரியும். அவரேதான் இந்த வழக்கில் சிக்கினார்,”என்றார். தான் எல்லோரையும் விட புத்திசாலி என்றும், வழக்கில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என்றும் அவர் தன்னை நம்பியிருந்ததாக காலண்டர் கூறினார். படக்குறிப்பு, திருமணம் நடந்த மூன்று ஆண்டுகளில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஹாரிசன், விவாகரத்து நடந்த ஒரே ஆண்டில் அவரை கொலையும் செய்துள்ளார். ஹாரிசன் மற்றும் பிரெண்டாவின் வாழ்க்கை ஹாரிசன் மற்றும் பிரெண்டா பேஜ், 1972 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பிரெண்டா தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வந்தார். தன்னுடைய கணவனைக் கண்டால், பயமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர். பிரெண்டா பேஜ், அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார். விவாகரத்துக்குப் பிறகும் ஹாரிசன், பிரெண்டாவை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக பிரெண்டா பேஜின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர் மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஹாரிசன் சந்தேகிப்பதாக பிரெண்டா தங்களிடம் கூறியதாக பிரெண்டாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பிரெண்டாவின் 59 வயதான மருமகன் கிறிஸ் லிங், வழக்கு விசாரணையின்போது, தினமும் நீதிமன்றத்தில் ஆஜரானார். "நீதிமன்றத்திற்கு வருவது மிகவும் விசித்திரமான உணர்வு. எனது அத்தையைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக எங்களுடனே இருந்தார். அவர் எங்கள் கண் முன்னே தான் இருந்தார்," என லிங் பிபிசியிடம் கூறினார். டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களை தற்போது அடையாளம் காண முடிந்ததற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக, 40 ஆண்டுகளில் 4 ஆயிரம் சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மூன்று ஆயிரம் பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு சுமார் 500 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cq57pn33q4xo
-
2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் உள்பட 10 முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,TN GOVT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 19 பிப்ரவரி 2024, 09:46 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் இதற்கு முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முதல் நிதி நிலை அறிக்கை இது. இந்த நிதிநிலை அறிக்கையை காலை பத்து மணியளவில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. அறிக்கையின் துவக்கப் பகுதியில், இதற்கு முன்பாக இருந்த அரசுகள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பட்டியலிட்டார். நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன்காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய 10 அம்சங்கள் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட , தமிழ் புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதில் 3,00,000 மாணவர்கள் பயனடையாவர்கள். இதற்கு ரூ. 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிப்பவர்களின் விகிதம் 2.2 சதவீதமாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைந்து வழங்கி, அவர்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவார்கள். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என இது அழைக்கப்படும். காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-5ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களின் இலவசப் பயணத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் 25 இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல்களை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். பட மூலாதாரம்,TN GOVT 6. 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 24-25 ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். சொந்த மனைகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்படும். கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 7. உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். வரும் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8. மதுரையில் 26,500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மதுரை, திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், சேலம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை விளாங்குறிச்சியில் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,00,000 சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. பார்க்) அமைக்கப்படும். 9. 2024-25ல் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர் உள்ளிடட் எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். மஸ்தி, பாலூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த அகழாய்வுப் பணிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி அகழாய்வு பணிகளில் வெளிவந்த செங்கல்கட்டுமானம், கிணறு, பிற கட்டுமானங்களை அனைவரும் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 10. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களைத் தொடங்குவதற்கான விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சென்னை பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். பட மூலாதாரம்,TN GOVT இவை தவிர இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழ் மொழி மற்றும் தமிழர் மரபு சார்ந்த முக்கிய அம்சங்கள் : தமிழின் அரிய நூல்களை மின்நூலாக மாற்றும் பணிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர்களின் மரபணுத் தொன்மை, வேளாண்மை, இடப்பெயர்வு ஆகியவற்றை ஆய்ந்தறிய காமராசர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மரபியல் துறையில் தொல்மரபணுவியல் ஆய்வகத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சிந்துவெளி நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும். சென்னை நகருக்கான சில புதிய கட்டமைப்பு திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தீவுத்திடலில் நகர்ப்புற பொதுச் சதுக்கம் உருவாக்கப்படும். இங்கே திறந்தவெளி அரங்குகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். கடற்கரையோரப் பகுதிகளை ஒட்டிய சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீன திரைப்பட நகரம் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். 500 கோடி ரூபாய் செலவில் இந்த நகரம் உருவாக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் மரபுசார் வடிவமைப்புடன் பத்து லட்சம் சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தில் பன்முக வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையமும் அலுவலக வளாகமும் உருவாக்கப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். புதிய புற்றுநோய் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை உயர்நிலை புற்றுநோய் கருவிகள் வழங்கப்பட்டு உயர்திறன் மையமாக தரம் உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகளைச் சீரமைக்கவும் பூங்காக்கள் அமைக்கவும் நதிகள் சீரமைப்புக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஐந்து கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வியில் தமிழ் புதல்வன் திட்டம் மட்டுமல்லாமல் வேறு சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்படும். 370 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பெயரில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும். பட மூலாதாரம்,TN GOVT மேலும் தொழில்துறை சார்ந்து இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள்: தஞ்சை மண்டலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ. 120 கோடி செலவில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு 500 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும். தமிழ்நாட்டில் அமையும் புதிய உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் உயர்திறன் மிக்க வேலைகளுக்கு முதலாம் ஆண்டு 30 சதவீதமும் இரண்டாம் ஆண்டு 20 சதவீதமும் மூன்றாம் ஆண்டு 10 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் Global Startup Summit 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும். பெரியார் சமூக நீதி புத்தொழில் மையம் - Periyar Social Justice Venture Lab - உருவாக்கப்படும். விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின, பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும். விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்காவை டிட்கோ அமைக்கும். தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கையை வகுக்க தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும். இவை மட்டுமல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கையின் வேறு சில முக்கிய அம்சங்களும் உள்ளன. 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க திட்டம் வகுக்கப்படும். லண்டன் க்யூ கார்டன் நிறுவனத்தின் உதவியோடு 345 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் மாபெரும் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும். சிற்றுந்துத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தொல்குடி என்ற புதிய திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகள் அளிக்கப்படும். பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க, பழுதுபார்க்க பத்து கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படும். பழமையான தேவாலயங்கள் புதுப்பிக்கப்படும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தெரு நாய்கள் பெருகியிருப்பதால், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்யும் மையங்களை உருவாக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சர்வதேச கண்காட்சிகள், மாநாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், கலைஞர் மாநாட்டு அரங்கம் (Kalaignar Convention Centre) கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு என அறிவிக்கப்பட்ட 3,510 வீடுகளில் 1,591 வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த அறிவிப்புகள் தவிர, மாநில நிதிநிலை குறித்த சில தகவல்களையும் நிதியமைச்சர் வெளியிட்டார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் இருப்பதால் முழுச் செலவையும் மாநில அரசே செய்கிறது. இதனால், 9,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதால், 20,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தபோதும் மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியையும் தரவில்லை. 2023-24ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பீடு 3,08,056 கோடி ரூபாயாக இருந்தது. திருத்த மதிப்பீட்டில் 3,37,484 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,81,182 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் வரி வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 1,70,147 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்காண பட்ஜெட்டில் 37,540 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 44,907 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையைப் பொறுத்தவரை 92,075 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 94,060 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் வருவாய் பற்றாக்குறை 36,017 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது 27,790 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாக இருக்கும். தமிழ்நாட்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/ce4epq0v3p5o
-
ரஷ்யாவுக்கு எதிராக, இங்கிலாந்துக்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை நகர்த்துகிறதா அமெரிக்கா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாட் பிரேசி பதவி, பிபிசி நியூஸ், சஃபோல்க் 30 நிமிடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது அமெரிக்கா. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வசதிகள் சஃபோல்க்கின் ஆர்ஏஎப் லேகன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அமெரிக்காவின் திட்டங்கள் பட மூலாதாரம்,GOOGLE EARTH படக்குறிப்பு, அமெரிக்க விமானப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படும் லேகன்ஹீத் தளம் மீண்டும் அணு ஆயுதங்களை சேமிக்க தயாராகி வருவதாக அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்தில் தற்போது 48வது ஃபைட்டர் விங் எனும் அமெரிக்க விமானப்படைப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு லிபர்ட்டி விங் என்றும் அழைக்கப்படுகிறது. F-35A லைட்னிங் II எனும் அதிநவீன போர் விமானங்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க விமானப்படை (United States Air Force- யுஎஸ்ஏஎப்) அறிக்கைப்படி, போர்க்களத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயுதமான B61-12 தெர்மோநியூக்ளியர் குண்டை இந்த போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல வெற்றிகரமாக சோதனைகள் செய்யப்பட்டன. ஆர்ஏஎப் லேகன்ஹீத்தின் 'எதிர்கால அணுசக்தி திட்டத்திற்கு' தேவையான பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் குறித்து விவரிக்கும் ஆவணங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டன. பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன . இந்த விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கான தங்குமிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் அவை. கூடுதலாக, அமெரிக்க இராணுவத் துறை பட்ஜெட் ஆவணத்தின்படி , இந்த சஃபோல்க் தளத்தின் அடித்தளத்தில் 'ஷுரிட்டி டார்மிட்டரி' (surety dormitory) எனப்படும் வசதியை உருவாக்க லட்சக்கணக்கான டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதிகள் என கூறப்படுகிறது. ஆர்ஏஎப் தளம் 1941இல் லேகன்ஹீத்தில் திறக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது செயல்பட்டது. நேட்டோவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்ததால், அமெரிக்க விமானப்படை 1951இல் தளத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது . தளத்தில் 4,000 அமெரிக்க இராணுவ வீரர்களும் மேலும் 1,500 பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சிவிலியன் ஊழியர்களும் உள்ளனர். ஆயுதங்கள் சஃபோல்க்கிற்கு கொண்டு வரப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேராசிரியர் சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் பேராசிரியரான சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன், "இந்த திட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கலாம்" என கூறினார். "ஒருவேளை ஐரோப்பாவில் உள்ள தளங்களில் இருந்து மற்ற ஆயுதங்கள் அகற்றப்பட்டால், தங்குமிடங்கள் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கலாம்" என்கிறார் அவர். "சேமிப்பு வசதியை உருவாக்குவது ஒரு விஷயம் என்றால், அமெரிக்க ஆயுதங்கள் பிரிட்டனில் இருக்கப் போகிறது என்ற உண்மையை மறைப்பது மற்றொரு விஷயம். எனவே இந்த நடவடிக்கை என்பது நாடுகளுக்கிடையேயான ஆயுதப் போட்டியில் ஏதோ ஒரு பெரிய மாற்றமாக இல்லாமல், ஒரு சாதாரணமான நடவடிக்கையாகவும் கூட இருக்கலாம்" என அவர் கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக இங்கிலாந்து மற்றும் நேட்டோ கடைபிடித்து வருகிறது. ரஷ்யாவுக்கு பதிலடியாக அமெரிக்கா நடவடிக்கையா? பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு, B61-12 தெர்மோநியூக்ளியர் வெடிகுண்டு மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தின் விமானத்தில் ஏற்றப்படுகிறது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் F-35A லைட்னிங் II எனும் அதிநவீன விமானம் "இந்த திட்டங்கள் யுக்ரேனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையவை என்று நான் நினைக்கவில்லை" என்கிறார் சர் லாரன்ஸ். "ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக இது இருக்கலாம்," என்று அவர் கூறினார். ஆனால் நேட்டோவின் முன்னாள் மூத்த அதிகாரியான வில்லியம் அல்பர்கி கூறுகையில், "ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் ஆபத்தான அச்சுறுத்தல் சூழலுக்கு இது ஒரு பதிலடி" என்கிறார். இவர் இப்போது சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பெலாரஸில் ரஷ்ய அணுசக்தி படைகள் நிலைநிறுத்தப்பட்டது, உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரித்தது போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார். பட மூலாதாரம்,WILLIAM ALBERQUE படக்குறிப்பு, முன்னாள் மூத்த நேட்டோ அதிகாரி வில்லியம் அல்பர்கியின் கூற்றுப்படி, ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளம் ஏற்கனவே ரஷ்ய இலக்காக மாறிவுள்ளது 'இந்த தளம் ரஷ்யாவின் இலக்காக மாறும்' பட மூலாதாரம்,HANS KRISTENSEN படக்குறிப்பு, அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டென்சன் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கான அமெரிக்க பாதுகாப்புத் துறையின் திட்டங்களைக் கண்காணித்து வருகிறார். அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன். அணு ஆயுதங்கள் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து குரல் எழுப்பிய முதல் நபர்களில் இவரும ஒருவர். "ஒரு தளத்தில் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்த தளம் ரஷ்யாவுடனான அணுசக்தி மோதலில் இலக்காகக் கூடும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறினார். "ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருந்தால், பின் அது ஒரு வித்தியாசமான போர் விளையாட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை" என்றும் கிறிஸ்டென்சன் கூறுகிறார். ஆனால், "இந்த தளம் இப்போதே ரஷ்யாவின் இலக்காக மாறியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று அல்பர்கி கூறினார். "நான் ஒரு ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த திட்டமிடும் நிபுணராக இருந்தால், இந்த தளத்தை தாக்க முன்பே முடிவு செய்திருப்பேன். நீங்கள் ரஷ்ய தொலைக்காட்சிகளைப் பார்த்தால், இங்கிலாந்தைப் பற்றியும் இங்கிலாந்தைத் தாக்குவது பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்" என்கிறார் அவர். இங்கிலாந்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகாரம் அளிப்பார் என்று அல்பர்கி நம்புகிறார். மேலும், "அவர் திறமையானவர் என்று சொல்வது மிகையாக இருக்கும். பிரச்னைக்கான தீர்வு இல்லை என்றோ அல்லது பின்விளைவுகள் வராது என நினைத்தாலோ, அவர் இதைச் செய்வார் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,JOHN FAIRHALL/BBC படக்குறிப்பு, அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த கேட் ஹட்சன், சஃபோல்க்கில் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படக்கூடாது என விரும்புகிறார் அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பு (Campaign for Nuclear Disarmament- சிஎன்டி) ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது. சிஎன்டி பொதுச் செயலாளர் கேட் ஹட்சன் பேசுகையில், "இங்கே அணு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டால், நாங்கள் அதை அகற்ற வலியுறுத்துவோம்." என்றார். 'ஷுரிட்டி டார்மிட்டரி' தங்குமிடத்தை கட்டுவது சட்டப்பூர்வமானதா என்பதை ஆராய சட்ட நிறுவனமான லீ டேக்கு (Leigh Day) இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. வழக்கறிஞர் ரிக்கார்டோ காமா இதுகுறித்து பேசுகையில், "லேகன்ஹீத் தளத்தில் அணுகுண்டுகளை சேமிப்பது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் விமானப்படை தளத்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதன் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை அவர்கள் புறக்கணித்ததாக வாதிடுகின்றனர் சிஎன்டி அமைப்பினர். அணுசக்தி விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உட்பட" என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cw540x9nkl5o
-
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூடு; விவசாயி மயிரிழையில் உயிர் தப்பினார்
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூடு ; மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 04:29 PM மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (19) நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒரு ரி-56 ரக துப்பாக்கி மூலம் அந்த விவசாயி மீது சுட்ட போதும் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடந்த சில காலமாக இந்த கிராமத்து மக்களின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி இது வரை மூவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப்பட்டும் அதையும் மீறி குறித்த சம்பவம் தொடர்வதாகவும், இன்று இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பதாதைகளில் 'கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?', 'எங்களை பாதுகாப்பது அரசின் கடமை', 'எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்', எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா?', 'யார் தருவது' போன்ற வாசகங்கள் காணப்பட்டன. இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும்,பொலிஸாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176780
-
கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை விரைவில் திறப்பு
ஏப்ரல் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை திறப்பு Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 04:45 PM எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கையில் முதல் முறையாக தீர்வையற்ற கடை கொழும்பு துறைமுக நகரத்தில் (Colombo Port City) திறக்கப்பட உள்ளது. இதனை, இலங்கையின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் அமைப்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. அதில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை திறக்கப்படும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176778
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
மன்னாரில் 10 வயது சிறுமி கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 03:49 PM மன்னார், தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தினர். இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (19) பொலிஸாரினால் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் இதன்போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர். விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/176772
-
மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - லங்காலோகய தீர்மானம்
மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேண்டுகோள் விடுக்க லங்காலோகய தீர்மானம் Published By: RAJEEBAN 19 FEB, 2024 | 03:40 PM மாகாணசபைமுறையை நீக்கவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் முன்வைக்கவுள்ளதாக லங்காலோகய என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தென்மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனவின் மகன் பசன்ட யாப்பா அபயவர்த்தன தலைமையிலான அமைப்பொன்றே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. லங்காலோகய என்ற அமைப்பு மாகாண சபை முறையை நீக்கிவிட்டு மாவட்ட சபைகளை ஏற்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளது. பிரதேச சபைகளை வலுப்படுத்தும் யோசனையையும் இந்த அமைப்பு முன்வைத்துள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கவுள்ளோம் என தெரிவித்துள்ள பசன்ட யாப்பா அபயவர்த்தன மாவட்ட சபைகளை உருவாக்குங்கள் பிரதேசசபைகளை வலுப்படுத்துங்கள் என கோரிக்கை விடுக்க இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட அமைச்சர்களை நியமிக்கவேண்டும் இதன் காரணமாக மாவட்டங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைகள் வெள்ளை யானைகள் அவற்றினால் 1988 முதல் 7000பில்லியனை வீணடித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளை தொடரவேண்டிய தேவையில்லை அவசியமில்லை வடக்கில் எவரும் மாகாணசபைகளுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தலை நடத்துமாறு இந்தியா கூட அழுத்தம் கொடுக்கவில்லை இவ்வாறான சூழ்நிலையில் மாகாணசபைகளை தொடரவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176771
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐ.பி.எல். கனவு அணிக்கு டோனி கெப்டன் - முன்னாள் வீரர்கள் தேர்வு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு டோனி கெப்டனாக தேர்வாகி இருக்கிறார். அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வருமாறு:- டோனி (கெப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரெய்னா, டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா, பும்ரா. https://thinakkural.lk/article/292421
-
போட்டி நிறுவனத்தில் சேருவதை தடுக்க ஊழியருக்கு “இன்ப அதிர்ச்சி” தந்த கூகுள்
இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் “கூகுள் தேடல் இயந்திரம். கடந்த 2022 இறுதியில் தோன்றிய “ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்” (Artificial Intelligence) எனும் “செயற்கை நுண்ணறிவு” தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022இல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், “பெர்ப்லெக்சிடி ஏஐ” (Perplexity AI). பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன “தேடல்” (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது இராஜினாமாவை சமர்ப்பித்தார். ஆனால், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது. ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து கொண்டது. இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. பணிநீக்கங்களை பொறுத்த வரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது. இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார். கடந்த 2023 ஜனவரி மாதம் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களையும், சில தினங்களுக்கு முன் 1000 ஊழியர்களையும் கூகுள் நீக்க போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்ட செய்தியை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர். https://thinakkural.lk/article/292417
-
அரச மருத்துவமனைகளில் மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு - தொழிற்சங்கம்
Published By: RAJEEBAN 19 FEB, 2024 | 01:12 PM அரசாங்க மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சை உபகரணங்கள் உட்பட மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களிற்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. உணவுக்குழாய் ஸ்டென்ட் போன்றவற்றிற்கும் பற்றாக்குறை நிலவுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளிற்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மிகவும் அவசியமான சத்திரகிசிச்சை உபகரணங்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது 3800 முதல் 5800 வரையிலான உபகரணங்கள் முற்றாக முடிவடைந்துவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவசர சேவைகளிற்கு தேவையான மருத்துவஉபகரணங்களும் பற்றாக்குறையாக உள்ளன என மேலும் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக கடும் கரிசனை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு அதிகாரியொருவர் உபகரணங்கள் இன்மையால்சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டதாக உத்தியோகபூர்வமான தகவல்கள்எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176749
-
இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்புக்கு விசேட விமானம்!
இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விசேட விமானமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்து – பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இதனை அறிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கையின் கரையோரக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்த வருடம் அமெரிக்க அரசாங்கம் பீச்கிராப்ட் கிங் ஏர் விமானத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க உதவுவது அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்குத் தேவையாகவுள்ளதாகவும் டொனால்ட் லூ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரம் இலங்கையானது ஒரு வரலாற்று பொருளாதார மீட்சியை பெற்றுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சிறிய உதவியால் இலங்கையினால் இந்த தடையை தாண்டுவதற்கு முடிந்ததாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/292334
-
திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சிபிஆர் சிகிச்சை கொடுப்பது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிபிஆர் முதலுதவி சிகிச்சை கட்டுரை தகவல் எழுதியவர், பைசல் டிட்டுமீர் பதவி, பிபிசி நியூஸ், பங்களா, டாக்கா 6 மணி நேரங்களுக்கு முன்னர் சமீப காலமாகவே சிறு வயதுக்காரர்கள் கூட மாரடைப்பால் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அடிக்கடி கேட்கிறோம். பலரும் இதய நோயால் பாதிக்க பட்டவர்களாக இருப்பதை கூட நம்மால் பார்க்க முடிகிறது. இது போன்ற சூழலில் பல நேரங்களில் மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு முதலுதவி கிடைக்காமல் போவதும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. உலக அளவில் சிபிஆர் என்று அழைக்கப்படும் முதலுதவி சிகிச்சை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் உயிர் பிழைத்தவர்கள் பலர் என்றும் நிரூபணமாகியுள்ளது. அப்படி ஆபத்து நேரத்தில் உயிர்காக்கும் இந்த சிபிஆர் என்றால் என்ன? யாருக்கெல்லாம் அதை கொடுக்கலாம்? அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக சிபிஆர் சிகிச்சை வழங்கப்படுகிறது சிபிஆர் என்றால் என்ன? சிபிஆர் என்பது விரிவாக கார்டியோபல்மனரி ரீசசிடேஷன் (Cardiopulmonary Resuscitation) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக இது வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையை ஒரு நபர் மயக்கமடையும்போது அல்லது மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சு நின்று போகும் போது கொடுக்கலாம். ஒருவருக்கு இந்த சிகிச்சையை கொடுப்பதன் மூலம் அவரது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லும். அந்த ஆக்சிஜன் ரத்தம் மூலம் ஒட்டுமொத்த உடலுக்கும் பயணிக்கும். இது தற்காலிகமாக அந்த நபருக்கு சுவாசிப்பதற்கு உதவலாம். உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும் எப்போது இந்த சிகிச்சை வழங்க வேண்டும்? பெரும்பாலும் சினிமாக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாரடைப்பு ஏற்பட்ட நபரின் மார்பில் ஒருவர் கை வைத்து அழுத்துவதையும், வாயோடு வாய் வைத்து மூச்சு வழங்குவதையும் பார்த்திருப்போம். இதன் மூலம் குறிப்பிட்ட நபர் சுயநினைவுக்கு வருவது போல் அதில் காட்டியிருப்பார்கள். திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் இந்த சிகிச்சை பலரது உயிர்காப்பானாக பயன்படுகிறது. ஆனால், முறையான பயிற்சியோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லாமல் இதை செய்யக்கூடாது. பிரிட்டிஷ் இதய அமைப்பின் இணையதளத்தின்படி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, ஒரு நபர் மயக்கமடைந்து அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலைக்கு செல்லும் போது, உடனடியாக அவசர ஊர்திக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சிபிஆர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்கிறது. இதற்கான பயிற்சியை செஞ்சிலுவைச் சங்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களுக்கு அளித்து வருகிறது. மேலும் சுகாதார துறையை சேர்ந்த அனைவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. மாரடைப்பு ஏற்படும் போது என்ன ஆகிறது? மாரடைப்பு ஏற்பட்டு இதயம் வேலை செய்வதை நிறுத்தும் போது அல்லது இதயத் துடிப்பு சீரற்றதாக ஆகும் போது, மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் இயல்பாக பாய்வதில்லை. இதனால் மூளை செயல்பாடு பாதிக்கிறது. இது சில நேரங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கிறது. ஆனால், சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. வங்கதேசத்தின் தேசிய இருதய நிறுவனத்தின் நிபுணரான மருத்துவர். அஷ்ரஃப் உர் ரஹ்மான் தமால் இதுகுறித்து கூறுகையில், "இதய நோயாளிகள் மட்டுமின்றி இதய நோய் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படலாம். ஒருவர் பலத்த காயம் அடைந்து அவருக்கு இதயம் நின்று போனால், அப்போது அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுப்பதன் மூலம், அவர் பிழைப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்தலாம்” என்கிறார். மேலும், இதயம் நின்று போகும் போது நமக்கு குறுகிய நேரமே இருக்கும். அதாவது 5 முதல் 7 நிமிடங்களே இருக்கும். எனவே உடனே சிபிஆர் சிகிச்சையை தொடங்குவது அவசியம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட நபருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும் சிபிஆர் கொடுப்பதற்கான 7 படிநிலைகள் செஞ்சிலுவை சங்கம் சிபிஆர் சிகிச்சையை ஏழு படிநிலைகளாக வடிவமைத்துள்ளது. முதலில் நீங்கள் இருக்கும் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சில சமயம் வெள்ளம் அல்லது நெருப்பு சூழ்ந்த பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதியில் இருந்து சம்மந்தப்பட்ட நபரை வெளியே கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் பிபிஇ கிட் (PPE kit) அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இரண்டாவது கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை தொடுதல் அல்லது பேரை சொல்லி அழைத்தல் மூலம் அவரது நிலை என்ன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அவருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது கட்டத்தில், அந்த நபர் சுயநினைவற்று பதில் ஏதும் இல்லாமல் இருந்தால் அல்லது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனடியாக அவசர ஊர்திக்கு அழைக்கவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும். நான்காவது கட்டத்தில் , அந்த நபரை கைகள் தோள்பட்டைக்கு முன்னுள்ளவாறு தரை அல்லது படுக்கையில் கிடத்தி, அவருக்கு அருகில் அமர வேண்டும். ஐந்தாவது கட்டத்தில், சிபிஆர் சிகிச்சையை தொடங்க வேண்டும். அதற்கு முதலில் உங்களது இரண்டு கைகளையும் அவரது மார்பில் வைக்க வேண்டும். ஒரு கையை மற்றொரு கையின் மீது வைத்து விரல்கள் உள்ளங்கையை அழுத்தியவாறு வைத்திருக்க வேண்டும். அழுத்தம் குறைந்தது 2 அங்குலமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கையை முழுவதுமாக மேலே உயர்த்தி அழுத்த வேண்டும். அந்த சமயத்தில் மார்பு இயல்பு நிலைக்கு திரும்பும். நிமிடத்திற்கு 100 அல்லது 120 அழுத்தம் என்ற வேகத்தில் அழுத்த வேண்டும். ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும். ஆறாவதுக கட்டத்தில், அவரது வாயோடு வாய்வைத்து சுவாசத்தை உள்ளே செலுத்த வேண்டும். இதற்கு, அந்த நபரின் தலையை நேராக வைக்கவும். அவரது மூக்கை பிடித்து கொண்டு உங்களது மூச்சை நன்றாக உள்ளிழுத்து அவரது வாய்வழியாக உள்ளே முழுமையாக செலுத்த வேண்டும். இது ஒரு வினாடிக்கு நடக்கும். பின் மார்பு விரிகிறதா என்று பார்க்க வேண்டும். அடுத்து சுவாசத்தை உள்ளிழுப்பதற்கு முன்பு, நன்கு வெளியே விட்டுக்கொள்ளவும். அதே சமயம் முதல் முறையிலேயே மார்பு விரியவில்லை அல்லது மேலே எழும்பவில்லை என்றால், அவரது கண்கள் மற்றும் வாயை திறந்து பார்த்து ஏதாவது அடைப்பு உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும். ஏழாவது கட்டத்தில், மார்பில் ஒரு சுற்றில் 30 முறை அழுத்தம் , இரண்டு முறை சுவாசம் கொடுத்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். ஆனால் மார்பை ஒவ்வொருமுறை அழுத்தும்போதும் அது 10 நொடிகளுக்கு மேல் தொடராமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அவசர ஊர்தியோ அல்லது உதவியோ வரும்வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கப்படும். குழந்தைகளுக்கான சிபிஆர் சிகிச்சை சில நேரங்களில் குழந்தைகளுக்கும் சிபிஆர் சிகிச்சை தேவைப்படும். இது இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும். குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கும்போது சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது. முதலில் ஒரு கையை குழந்தையின் தலையில் வைத்து பின்னாலிருந்து உயர்த்தவும். வாய் மற்றும் மூக்கிற்குள் ஏதாவது சிக்கிக்கொண்டிருந்தால் வெளியே எடுக்க வேண்டும். அதன் பிறகு குழந்தையின் மூக்கை பிடித்துக் கொண்டு அதன் வாய் வழியாக சுவாசம் கொடுக்க வேண்டும். அதே சமயம் மார்பு மேல் எழும்புகிறதா இல்லையா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு உள்ளங்கையை குழந்தையின் மார்பில் வைத்து இரண்டு அங்குல அளவில் அழுத்தம் தரவேண்டும். உங்களால் ஒரு கையால் செய்யமுடியவில்லை என்றால், இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவே குழந்தை ஒரு வயதுக்கும் குறைவாக இருந்தால் இரண்டு கைகளுக்கு பதில், இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதில் ஒன்றரை அங்குலம் என்ற அளவில் மட்டுமே அழுத்தம் தரப்பட வேண்டும். மேலும், 30-30 சுவாசம் என்ற கணக்கில் இருமுறை வாய்வழியாக ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 வாசம் என்ற அளவில் சிகிச்சை கொடுக்கலாம். அவசர ஊர்தி வரும் வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cgl4p8epx8mo
-
பாரத் – லங்கா வீட்டுத்திட்டம் ஒருங்கிணைப்பின் கீழ் ஆரம்பம்
பாரத் லங்கா 10,000 வீடுகள் திட்டம்; நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் 30 வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 01:46 PM பாரத் லங்கா 10,000 வீடுகள் திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் 30 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19) காலை இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் பாரத் லங்கா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள முப்பது குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இணைச் செயலாளர்கள் மற்றும் இணைப்பாளர்களும் ஆன வினோத் ஜி மற்றும் சட்டத்தரணி சிவன் ஜோதி யோகராஜா ஆகியோரின் தலைமையில் இன்றைய தினம் காலை ஸ்க்ரப் தோட்டத்தில் நடைபெற்றது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முழு வழிகாட்டுதலின் கீழ், இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வினால் இந்த வீடமைப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/176744
-
வங்கிக் கடன் பெறவுள்ளவர்களுக்கான செய்தி!
நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் கடந்த வாரத்தில் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாகக் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 25.35% ஆக இருந்த, உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதம் (AWPR) தற்போது 11.61 ஆக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மக்கள் வங்கி கடந்த வாரத்தில் ஏனைய வணிக வங்கிகளை விட முதன்மை கடன் வட்டி வீதத்தை 10.87 ஆக குறைத்திருந்தது. இது தவிர, ஹட்டன் நெஷனல் வங்கி (11.47%), கொமர்ஷல் வங்கி (11.59%), யூனியன் வங்கி (11.55%), ஃபேன் ஏசியா வங்கி (11.85%), நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (11.74%), NDB வங்கி (11.94%) மற்றும் அமானா வங்கி (11.10%) ஆகியவை சராசரி முதன்மை கடன் வட்டி வீதத்தை 12%க்கும் குறைவாகப் பராமரித்த உள்நாட்டு வணிக வங்கிகளாகும். https://thinakkural.lk/article/292407
-
டியாகோகார்சீயாவில் 20 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் - 12 பேர் தற்கொலைக்கு முயற்சி
பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள், தற்கொலைகள்!; பரிதாப நிலையில் டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் - ஐ.நா. தகவல் Published By: RAJEEBAN 19 FEB, 2024 | 12:34 PM டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் தங்கள் பாதுகாப்பாக இல்லை மறக்கபட்டுள்ளோம் என ஐநாவின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். பாலியல் வன்முறைகள், சிறுவர்கள் துன்புறுத்தப்படுதல் குறித்தும் தெரிவித்துள்ள அவர்கள் தற்கொலைகளும் தங்களிற்கு தாங்களே காயங்களை ஏற்படுத்திக் கொள்ளுதலும் அங்கு சிக்குண்டுள்ள குடியேற்றவாசிகள் மத்தியில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் அமைப்பின் அதிகாரிகள் அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக டியாகோ கார்சியாவிற்கு சென்றுள்ளனர். அங்கு காணப்படும் நிலைமை கட்டாயமாக தடுத்துவைத்தல் போன்று காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பரில் ஐக்கியநாடுகளின் அகதிகளிற்கான அமைப்பின் பிரதிநிதிகள் டியோகோ கார்சியாவிற்கு விஜயம் சென்றுள்ளனர். டியோகோர் கார்சியாவில் இலங்கையை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சிக்குண்ட பின்னர் அவர்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்காக வெளிதரப்பு உள்ளே சென்றது இதுவே முதல் தடவை. ஐநா அமைப்பின் விஜயத்தின் பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை நீதிமன்றம் பிபிசிக்கு வழங்கியுள்ளது. ஐநாவின் அகதிகளிற்காக அமைப்பின் பிரதிநிதிகள் டியோகார்சியாவில் உள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சந்தித்தவேளை அவர்கள் பாலியல் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ளனர். சிறுவர்களும் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். டியாகோர் கார்சியாவில் சிக்குண்டுள்ள ஏனைய இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அவமானம் சமூகத்தின் பார்வை குறித்த கவலைகள் காரணமாக பாலியல்வன்முறைகள் குறித்து முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை என குடியேற்றவாசிகள் கருதுகின்றனர். வலுவான பதில் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கப்போகவில்லை என கருதுவதாலும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குகின்றனர் என தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கருதுகின்றனர். புகலிடக்கோரிக்கையாளர்களுடன் பேசியவேளை அவர்கள் பாலியல் வன்முறைகள் துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்ததால் எந்த பயனும் இல்லை என கருதுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா முறைப்பாடு செய்வதால் பாதுகாப்பு நீதி போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என அவர்கள் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரே முகாமில் வசிப்பதாலும் முறைப்பாடுகள் செய்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என புகலிடக்கோரிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் குடும்பங்களிற்கு ஒரு கூடாரம் திருமணமாகத ஆண்களிற்கு ஒரு கூடாரம் என பிரித்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் இதன் பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான போதுமான பொறிமுறையாக இது காணப்படவில்லை என தெரிவித்துள்ள ஐநா ஏனைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையை காணமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது. உரிய வேலிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் குடியேற்றவாசிகள் தாங்கள் எலிக்கடிக்குள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர் என ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடற்கரைக்கு செல்லவிரும்பினால் கூட பாதுகாப்பு தரப்பினருடனேயே செல்லவேண்டியுள்ளது என டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள தமிழ் குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர். இது அந்த மக்கள் விரக்தியால் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது மேலும் தற்கொலைகள் தங்களுக்குதாங்களே தீங்கிழைத்தல் போன்றவை இடம்பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. 16 சிறுவர்களை உள்ளடக்கிய தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் குழுவினர் தாங்கள் சலிப்படைந்துள்ளதாகவும் மனச்சோர்வுடனும் நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் . நாங்கள் மறக்கப்பட்டவர்களாகிவிட்டோம் என ஒருவர் தெரிவித்துள்ளனர் - எங்கள் வாழ்க்கைய முடித்துக்கொள்வது குறித்து எங்களில் அனேகமானவர்கள் கருதுகின்றோம் என பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார் என ஐநா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176742