Everything posted by ஏராளன்
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
நவால்னியின் மரணத்திற்கு புட்டினே காரணம் - பைடன் Published By: RAJEEBAN 17 FEB, 2024 | 12:26 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின் மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். புட்டினே இதற்கு முழுக்காரணம் என தெரிவித்துள்ள அவர் நான் கடவுளை நம்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எந்த தவறுகளையும் இழைக்கவேண்டாம் புட்டினே காரணம் என அவா தெரிவித்துள்ளார். நவால்னியின் துணிச்சலையும் மீண்டும் ரஸ்யாவிற்கு திரும்பும் முடிவையும் பைடன் பாராட்டியுள்ளார். புட்டின் அரசாங்கத்தின் ஊழல் வன்முறைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் அவர் துணிச்சலாக எதிர்த்தார் என தெரிவித்துள்ள பைடன் இதற்கு பதில் புட்டின் நவோல்னிக்கு நஞ்சூட்டினார், கைதுசெய்தார், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குதாக்கல் செய்தார், சிறையில் அடைத்தார் அங்கும் அவர் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார் என பைடன் தெரிவித்துள்ளார். சிறையிலும் அவர் உண்மையின் குரலாக ஒலித்தார் என பைடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176606
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களில் 20 பேர் விடுதலை நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு வருட கால சிறைத் தண்டனை மேலும் இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் ஒரு கடற்றொழிலாளர் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுற்ற பின்னர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். https://tamilwin.com/article/bail-for-20-indian-fisherman-1708067147
-
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்
ராமர் சேது பாலப் பகுதிக்கு இந்திய தூதர் விஜயம் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா நேற்றைய தினம் (16.02.2024) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் இந்தியா - இலங்கை இடையிலான வலுவான கலாசாரப் பிணைப்பு மற்றும் பொதுவான மரபுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் ராமர் சேது பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய இலங்கை உறவு இதன்போது இந்திய இலங்கை மக்களின் நல்வாழ்வு மற்றும் இந்திய இலங்கை உறவுகளுக்காகவும் அவர் பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டிருந்தார். அத்துடன் ராமர் சேது பகுதியை அடுத்து இந்திய தூதுவர் வேறு சில இடங்களுக்கும் நேற்று (16) விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/the-indian-ambassador-who-visit-rama-palam-1708117500
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
17 FEB, 2024 | 09:56 AM வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் பாரிய அளவில் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. பலர் வீதி விபத்துக்களில் சிக்கி பரிதாபமான முறையில் உயிரிழக்கின்றனர். இவ்வாறு வீதியில் நெல் உலரவிடுவதனால் வீதி விபத்தையும் தாண்டி பாரிய ஆபத்தொன்று காணப்படுகின்றது. வாகன டயர்கள் வீதியில் உராய்வதனால் 'கற்ட்மியம்' எனும் மூலகம் வீதியில் படிந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான வீதியிலேயே விவசாயிகள் நெல்லினை உலரவைக்கின்றனர். இவ்வாறு நெல்லினை உலரவிடும்போது குறித்த 'கற்மியம்' எனும் மூலகம் நெல்லோடு கலந்துவிடுகின்றது. இவ்வாறு இந்த 'கற்மியம்' எனும் மூலகம் கலந்த நெல் அரிசியை தொடர்ந்து பத்துத் தொடக்கம் பதினைந்து வருடங்கள் உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வய்ப்பிருக்கின்றது. எனவே, வீதியில் நெல் உலரவிடுவதை விவசாயிகள் தவிர்ப்பதே சிறந்தது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். https://tamilwin.com/article/indian-ambassador-to-sri-lanka-visited-jaffna-1708079393
-
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றைய தினம் (16.02.2024) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் அவர் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் அவர் காங்கேசன்துறை துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர். மேலும், நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்துள்ளார். மேலதிக தகவல் - தீபன் அத்தோடு, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன், யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/indian-ambassador-to-sri-lanka-visited-jaffna-1708079393
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது. அத்துடன், மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி, டெண்டர் சபை ஒரு முதலீட்டாளரை தெரிவு செய்துள்ளது. தனியார் கூட்டுத் திட்டம் குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படலாம். அதன் மூலம் அந்த விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும். அத்தோடு, இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/flight-service-to-india-from-jaffna-palali-airport-1708070599
-
செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது ; சாள்ஸ் எம்.பி கடும் எதிர்ப்பு
Published By: DIGITAL DESK 3 17 FEB, 2024 | 09:53 AM முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அழகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி கோரப்பட்ட நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கடுமையான எதிர்ப்பையடுத்து குறித்த அனுமதியை அபிவிருத்திக்குழு நிராகரிப்பதாகத் தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றபோதே குறித்த இல்மனைட் அகழ்விற்கான அனுமதி கோரப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த அனுமதி இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையில் இல்மனைட் அகழ்ந்தால் அருகே உள்ள வயல் நிலங்களும் பாதிக்கப்படுமெனவும், செம்மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர்த் தடுப்பணையும் சேதப்படுத்தப்படுமெனவும், பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இதன்போது சாள்ஸ் நிர்மலநாதனால் சுட்டிக்காட்டப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்காத விடயத்தை, மத்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும், செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இந்த அனுமதிக் கோரிக்கையை நிராகரிப்பதாக முடிவெடுத்ததுடன், இல்மனைட் அகழ்வால் ஏற்படும் பாதிப்பு நிலையைச் சுட்டிக்காட்டி உரியவர்களுக்கு அறிக்கை அனுப்புவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/176590
-
சோரா ; எழுத்துரு ஆவணத்தை கொண்டு காணொளி
Published By: DIGITAL DESK 3 16 FEB, 2024 | 04:05 PM எழுத்துரு ஆவணத்தை கொண்டு காணொளியை உருவாக்கும் கருவியை சட் ஜிபிடியை (ChatGPT) உருவாக்கி ஓபன் ஏஐ நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு சோரா என யெரிடப்பட்டுள்ளது. சோரா என்ற ஜப்பானிய சொல்லுக்கு வானம் என அர்த்தம். இதன்மூலம், எழுத்துரு ஆவணத்தில் வழங்கப்படும் விடயம் மற்றும் வடிவம் தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஒரு நிமிடத்தில் யதார்த்தபூர்வமான காட்சிகளை உருவாக்க முடியும். மனதிலுள்ள ஒரு படத்தின் அடிப்படையில் ஒரு காணொளியை உருவாக்கலாம் அல்லது புதிய உள்ளடக்கத்துடன் இருக்கும் காட்சிகளை நீடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. சோராவை ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காணொளி படைப்பாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஓபன் ஏஐ சேவை விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளை சோராவின் பின்புலத்தில் இருந்து "சிவப்பு குழு" வல்லுநர்கள் சோதனை செய்வார்கள். அதாவது, "தீவிர வன்முறை, பாலியல் உள்ளடக்கம், வெறுக்கத்தக்க படங்கள், பிரபலங்களின் தோற்றம் அல்லது மற்றவர்களின் ஐபி" போன்றவற்றை தடைசெய்யும். சோராவை ஆராய்ச்சியாளர்கள், காட்சி கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். காணொளிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்பதைக் உறுதிப்படுத்த ஒரு வாட்டர்மார்க் உள்ளது என நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176542
-
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விபத்து : எருமை மாடுகளுடன் மோதிய பேருந்து
போதிய அகலமற்ற வீதிகளில் எருமைகளை(வீதியும் கறுப்பு எருமையும் கறுப்பு எச்சரிக்கை துணிகள் எதுவுமில்லை) கொண்டு செல்வதும் பிழை என நினைக்கிறேன். அல்லது முன் பின்னாக எச்சரிக்கைத் துணிகள் கட்டியபடி இருவர் செல்லவேண்டும்.
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
அலக்ஸே நவால்னி: ரஷ்ய அதிபர் புதினை அச்சுறுத்திய இவர் யார்? எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரசாரகரான அலக்ஸே நவால்னி, அதிபர் விளாதிமிர் புதினுக்கு எதிரான முக்கிய முகமாகக் கருதப்படுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் தற்போது உடல்நலம் மோசமாகி உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகார மட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஊழலை வெளிப்படுத்தி இவர் வெளியிட்ட ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இன்று வரையிலும் இவர் கிரெம்ளினுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார். புதினுக்கு எதிராக தேர்தலில் நிற்க முயற்சி செய்து அது முடியாமல் போனாலும், தனது தொடர் இயக்கத்தின் மூலமாகப் பல லட்சம் ரஷ்ய மக்கள் விரும்பும் நபராக அவர் உருவெடுத்துள்ளார். யார் இந்த அலெக்ஸே நவால்னி? பட மூலாதாரம்,GETTY IMAGES அலெக்ஸே நவால்னி ரஷ்ய தலைநகரான மாஸ்கோவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள பியுடன் எனும் கிராமத்தில் 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர். இவர் தனது சட்டபடிப்பை 1998இல் மாஸ்கோவில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்தில் முடித்தார். கடந்த 2010இல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைகழகத்தில் ஆய்வு உதவியுடன் கூடிய Yale World Fellow திட்டத்தில் மாணவராக ஓராண்டு் ககாலம் கழித்தார். நவால்னிக்கு யூலியா என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நவால்னி எப்படி பிரபலமானார்? ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் தீவிர எதிர்ப்பாளராக அறியப்படும் 47 வயது நவால்னி ரஷ்யாவின் அதிகார மையத்தில் நிலவும் ஊழலை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காகவே மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதுவே அவருக்குப் பல இன்னல்களையும் ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அலக்ஸே நவால்னி ஓவியம் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடவும் அவர் முயற்சி செய்தார். அதற்கான பிரசாரப் பணிகளைத் தொடங்கி, பிராந்திய அளவிலான குழுக்களையும் அமைத்தார். ஆனால், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதால், அவரால் அந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனாலும், பல ரஷ்யர்களிடையே அவரது குரல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரஷ்ய அரசுக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தார். அவரது ஊழலுக்கு எதிரான குழுவினர் மேற்கொண்ட பிரசாரங்கள், ரஷ்ய அரசின் ஒவ்வொரு மட்டத்திலும் இருந்த ஊழல்களை அம்பலப்படுத்தின. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் உலகம் முழுவதும் உள்ள பல லட்சம் பேரிடம் பிரபலமானார். நவால்னி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், யுக்ரேன் போருக்கு எதிராக உள்நாட்டில் எழுந்த குரல்களில் முக்கியமானவராக இருந்தார். 2022ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், யுக்ரேன் போர் குறித்துப் பேசிய இவர், “புதின் ஒரு முட்டாள்தனமான போரை ஆரம்பித்து வைத்திருப்பதாக” கூறினார். புதின் மற்றும் ரஷ்ய அரசை நோக்கித் தொடர் விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES நவால்னி 2008ஆம் ஆண்டுதான் ரஷ்ய அரசியலில் பெரிய சக்தியாக வளரத் தொடங்கினார். ஏனெனில் ரஷ்யாவின் ஒரு சில பெரிய மாகாணங்களில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்தது குறித்து அவர் தனது இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். அவருடைய ஓர் உத்தி என்னவெனில், பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒரு சிறு பங்குதாரராக இணைந்துகொள்வார். பின்னர் மேலதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்விக்கு உள்ளாக்குவார். இவர் ரஷ்யாவில் 2011இல் நடந்த போராட்டங்கள் மூலம் பிரபரலமானார். அப்போது தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அதனால் ரஷ்யா கடந்த சில தசாப்தங்களில் சந்திக்காத மிகப்பெரிய போராட்டங்களைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து நவால்னி கைது செய்யப்பட்டபோது அது இன்னும் அவரை பிரபலமாக்கியது. மோசடி வழக்கு என்ற பெயரில் அவர் 2013 ஜுலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாவே பார்க்கப்பட்டது. ஆனால், அதே ஆண்டில் அவர் மாஸ்கோ மேயர் தேர்தலில் பிரசாரம் செய்ய அனுமத்திக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் புதின் கூட்டாளி செர்கே சோபியானியிடம் தோற்றார். அதற்குக் காரணாமாக இவருக்கு தொலைக்காட்சி ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது கூறப்பட்டது. வெறும் இணையதளம் மற்றும் வாய்வழிப் பிரசாரமே அவர் செய்ய முடிந்தது. எனவே இவரது ஆதரவாளர்கள் எதிரணியின் வெற்றி ஒரு நாடகம் என்று கூறினார்கள். புதின் மீது கடுமையான விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES நவால்னி தொடர்ந்து புதின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். ரஷ்யாவின் ரத்தத்தை உறிஞ்சி எடுப்பவர் என்று அதிபரை குற்றம் சாட்டினார். இவர் எளிமையான ரஷ்ய மொழியில் பேசியதால், வேகமாக ரஷ்ய இளைஞர்களின் குரலாக உருவெடுத்தார். சமூக ஊடகங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ரஷ்யாவின் செல்வாக்கான பிரபலங்களின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரது யூட்யூப் சேனலில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டது. அதில் குறிப்பாக இவரது ஊழலுக்கு எதிரான குழு, புதினின் அரண்மனை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. அதில், புதினின் பணக்கார நண்பர்கள் அவருக்கு அரண்மனை ஒன்றைப் பரிசளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வீடியோ மட்டும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. ஆனால் அதை ஒரு போலி விசாரணை வீடியோ என்றும், அந்த வீடியோ போரடிப்பதாகவும் புதின் கூறினார். மேலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார். அதைத் தொடர்ந்து யுக்ரேன் போர், ரஷ்ய அதிகார மட்டத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் அதனோடு அதிபர் புதினுக்கு உள்ள தொடர்பு என அரசு என அதிபரை தீவிரமாக விமர்சிப்பவராகப் பார்க்கப்பட்டார் நவால்னி. இந்த நிலையில் பலமுறை அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்படி 2020ஆம் ஆண்டு அவர் மீது நடத்தப்பட்ட நச்சுத்தாக்குதலில் அவர் கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தொடர் தாக்குதல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனைவியுடன் அலக்ஸே நவால்னி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி, சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் வந்தபோது திடீரென நவால்னி மயங்கி விழுந்தார். ஓம்ஸ்க் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டு அவசர உதவி விமானத்தில் ஜெர்மனி அழைத்து வரப்பட்ட நவால்னிக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் நச்சு ரசாயன தாக்கத்துக்கு ஆளானதாகக் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பின்னர் ஜெர்மானிய இதழான டெர் ஸ்பீகலுக்கு நவால்னி அளித்த பேட்டியில், நோவிசோக் எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய ரசாயன தாக்குதலுக்குத் தாம் ஆளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இவரது கூற்றானது பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES நோவிசோக் நச்சு ரசாயனத்தைப் பயன்படுத்துவதற்கான உத்தரவை ரஷ்யாவின் மூன்று உளவு அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே பிறப்பிக்க முடியுமென்றும், அவர்கள் அனைவருமே புதினுக்கு கீழே பணிபுரிபவர்கள் என்றும் அவர் கூறினார். ஆனால், நவால்னியின் நேரடி குற்றச்சாட்டு குறித்துப் பதிலளித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர், நோவிசோக் நச்சு ரசாயன தாக்குதலுக்கு நவால்னி உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று தெரிவித்தார். ரஷ்யாவில் அவர் எந்நேரமும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற நிலையிலேயே இருந்தார். அவர் மீது நடத்தப்பட்ட நோவிசோக் நச்சுத் தாக்குதலுக்கு முன்பாகவே, பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். அடிக்கடி கைதும் செய்யப்பட்டார். அவர் மீது பலமுறை ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒருமுறை அவர் மீது கிரீன் டை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் கண்களில் கடும் எரிச்சலை அனுபவித்தார் நவால்னி. சிறைவாசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீதிமன்றத்தில் அலக்ஸே நவால்னி கடந்த 2013ஆம் ஆண்டே மோசடி வழக்கு ஒன்றில் இவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலில் பங்கேற்பதற்காக அவர் சிறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். இந்தத் தண்டனை நிறுத்தத்திற்கான வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அதன் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டது. அதாவது 2020 காலகட்டத்தில் வழக்கமான காவல்நிலைய வருகையை அவர் கடைபிடிக்கவில்லை எனக் கூறி மீண்டும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்வாதமாக நவால்னியின் வழக்கறிஞர்கள், அவர் அந்த நேரத்தில்தான் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருந்தார் என்பதை முன்வைத்தனர். ஆனாலும், 2021ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாஸ்கோ திரும்பிய உடனேயே அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நவால்னி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நவால்னிக்கு சிறைத் தண்டனையை 9 ஆண்டுகளாக அதிகரித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு நவால்னிக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இறுதி சிறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அலக்ஸே நவால்னியை விடுவிக்குமாறு நடத்தப்பட்ட போராட்டம் கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி, இறுதியாக ஆர்க்டிக் வட்டத்திலுள்ள ஆர்டிக் பீனல் காலனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறையிலேயே இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து யமலோ-நெனெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள சிறைத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சிக்குச் சென்று வந்த நவால்னி உடல் நலமற்றுக் காணப்பட்டதாகவும், திடீரென்று சுயநினைவற்று விழுந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சை மருத்துவர்கள் வந்து உடனே சிகிச்சையளித்தும், பலனின்றி அவர் இறந்துவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள் என சிறைத்துறை கூறியுள்ளதாக, டாஸ்(Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நவால்னியின் மனைவி யூலியா, “இந்தச் செய்தியை நம்புவதா என்று தெரியவில்லை. இதுவரை அரசுத் தரப்பில் இருந்து மட்டுமே செய்திகள் வந்துள்ளன. புதின் அரசை நம்மால் நம்ப முடியாது. இந்தச் செய்தி மட்டும் உண்மை என்றால் இதற்கும், ரஷ்யாவிற்கு செய்தவற்றுக்கும் புதின் மற்றும் அவரது கூட்டாளிகளே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cqqx7071k05o
-
அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு
Published By: VISHNU 16 FEB, 2024 | 10:55 PM கண்டி மாவட்டத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷான் மசாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கண்டி தேசிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வைத்தியர் தற்போது அது 5வது இடத்திற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்தமையே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையின்படி, கண்டியிலிருந்து 10 பிரிவுகள் நாட்டின் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தற்போது அந்த எண்ணிக்கை 02 ஆக குறைந்துள்ளது எனவும் அதன் பிரகாரம் கடந்த வருடம் 20% டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அது 12% ஆக குறைந்துள்ளது. இந்த அறிக்கைகளின்படி நாட்டின் அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார். இதன்போது கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, மத்திய மாகாண ஆளுநர் லலித் வூ கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/176581
-
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்
Published By: VISHNU 16 FEB, 2024 | 10:28 PM இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்தார். தொடர்ந்து காங்கேசன் துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். https://www.virakesari.lk/article/176580
-
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம்!
Published By: VISHNU 16 FEB, 2024 | 08:22 PM கிழக்குப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தால் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் புதிய விடுதி வளாகத்தை உடனே தாருங்கள்...!, தனித்தனியாக மானியங்கள், ஆய்வகப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குங்கள், அனைத்து மாணவர்களுக்கும் WI-FI வசதிகளை செய்து கொடுங்கள்...!, தாமதமான மகாபொல மாணவர் உதவித் தவணைகள் உடனே வழங்க ஆவண செய்யுங்கள்...! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கண்டன பேரணியிலும் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/176575
-
யாழில் இனிமேல் நடைபெறும் இசை நிகழ்வுகளுக்கு தமது நெறிப்படுத்தல் இருக்கும் - டக்ளஸ் தேவானந்தா
Published By: VISHNU 16 FEB, 2024 | 06:04 PM யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லாமையும் ஒரு காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு எங்களுடைய இளைஞர்களைப் பலரும் குறை கூறுகின்றனர். நிகழ்வில் இளைஞர்கள் சிலர் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் அறிந்து கொண்டேன். நிகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நானும் அதனை பார்த்து இருக்க வேண்டும். நானும் அது தொடர்பில் கரிசனை இல்லாமல் இருந்து விட்டேன். இனிவரும் காலங்களில் இப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுமாக இருந்தால், மக்கள் பிரச்சனைகள் இன்றி சந்தோசமாக நிகழ்வுகளைக் கண்டு களிக்க கூடியவாறான ஏற்பாடுகளைச் செய்வோம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176569
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
தலைமன்னார் கிராமத்தில் காணாமல்போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - சந்தேகநபர் கைது 16 FEB, 2024 | 05:07 PM மன்னார்- தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு காணாமல்போன நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த சிறுமி உள்ளடங்களாக சிறுமியின் சகோதரர்கள் 4 பேர் தலைமன்னார் கிராமத்தில் உள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்து வருகின்றனர். குறித்த சிறுமியின் பெற்றோர் புத்தளம் மாவட்டம் பூங்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (16) இரவு குறித்த 10 வயதுடைய இயான்சி என்ற சிறுமி அம்மம்மாவின் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, குறித்த சிறுமியை தேடி வந்துள்ளனர். மேலும் குறித்த தென்னை தோட்டத்தில் சென்று குறித்த சந்தேக நபரிடம் வினவிய போது தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த நிலையில் மீண்டும் தேடியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது குறித்த சிறுமியின் பின்னால் குறித்த நபர் செல்வது தெரியவந்தது. இந்த நிலையில் குறித்த நபரை பிடித்து விசாரணைகளுக்கு உட்படுத்தி இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்றைய தினம் (16) அதிகாலை சிறுமியின் உடல் குறித்த தனியார் தென்னந் தோட்டத்தின் பின் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடல பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதன் போது சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் குற்றவாளியை உடனடியாக தூக்கில் போடுமாறும் கோஷங்களை எழுப்பினர். அத்துடன் கொலையாளிக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்குமாறு கோரி விசாரணைக்காக வருகை தந்த பதில் நீதவானிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். https://www.virakesari.lk/article/176554
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் நுணாவிலான் அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விபத்து : எருமை மாடுகளுடன் மோதிய பேருந்து
Published By: VISHNU 16 FEB, 2024 | 08:25 PM முல்லைத்தீவு - பரந்தன் ஏ -35 வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதிய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது 02 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ள நிலையிலும் இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளன. இதே வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதிய எருமை மாட்டுடன் மோதியதால் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/176574
-
மரணம்
நன்றி ரஞ்சித் அண்ணை. இயற்கையின் விடை காணமுடியாத கேள்விகளில் மனம் தொலைகிறது. உங்கள் பதிவும் ஒவ்வொருவருக்கும் பாடமாகிறது.
-
தென் ஆபிரிக்காவுடனான 92 வருட டெஸ்ட் வரலாற்றில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி
16 FEB, 2024 | 03:22 PM (நெவில் அன்தனி) ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி 1932இல் நடைபெற்று 92 வருடங்கள் கடந்த நிலையில் தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடர் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1932இலிருந்து இதுவரை 17 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளதுடன் அவற்றில் 14 தொடர்களில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. 4 தொடர்கள் சமநிலையில் முடிவடைந்தன. நியூஸிலாந்தின் ஒரே ஒரு தொடர் வெற்றி இன்றைய தினம் பதிவானது. ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் அதிகூடிய வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அந்த இலக்கை அடைந்து வரலாறு படைத்தது. 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் நிதானத்துடன் குவித்த சதத்தின் உதவியுடன் வெற்றியை இலகுவாக்கிக்கொண்டது. தனது 98ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் குவித்த 32ஆவது சதம் இதுவாகும். 172ஆவது இன்னிங்ஸில் 32ஆவது சதத்தைக் குவித்ததன் மூலம் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அடைந்த வீரர் என்ற பெருமையை வில்லியம்சன் பெற்றார். 32 டெஸ்ட் சதங்களை ரிக்கி பொன்டிங் 172 இன்னிங்ஸ்களிலும் ரிக்கி பொன்டிங் 176 இன்னிங்ஸ்களிலும் சச்சின் டெண்டுல்கர் 179 இன்னிங்ஸ்களிலும் பெற்றிருந்தனர். கேன் வில்லியம்சனுக்கு பக்க பலமாகத் துடுப்பெடுத்தாடிய வில் யங் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 157 ஓட்டங்களைப் பகிர்ந்தார். குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்டதாக அமைந்த இந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து பெற்ற 269 ஓட்டங்களே அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களைப் பெற நியூஸிலாந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 235 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்காவின் 2ஆவது இன்னிங்ஸில் திறமையாக துடுப்பெடுத்தாடிய டேவிட் பெடிங்ஹாம் தனது கன்னிச் சதத்தை பெற்றார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வில்லியம் ஓ'ரூக் 93 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களைக் கைபற்றியதன் மூலம் நியூஸிலாந்து சார்பாக அறிமுக வீரராக அதிசிறந்த பந்துவிச்சுப் பெறுதியைப் பதிவுசெய்த வீரரானார். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் போட்டியாகவும் இது அமைந்ததால் நியூஸிலாந்தின் 2 வெற்றிகளுக்கு 24 புள்ளிகள் வழங்கப்பட்டது. முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து, 261 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. 2ஆவது போட்டி எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 242 (ருவான் டி ஸ்வாட் 64, டேவிட் பெடிங்ஹாம் 39, ஷோன் வொன் பேர்க் 38, வில்லியம் ஓ'ரூக் 59 - 4 விக்., ரச்சின் ரவிந்த்ரா 33 - 3 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (கேன் வில்லியம்சன் 43, டொம் லெதம் 40, வில் யங் 36, டேன் பீட் 89 - 5 விக்., டேன் பீட்டர்சன் 39 - 3 விக்.) தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (டேவிட் பெடிங்ஹாம் 110, கீகன் பீட்டர்சன் 43, நீல் ப்ராண்ட் 34, வில்லியம் ஓ'ரூக் 34 - 5 விக்., க்லென் பிலிப்ஸ் 50 - 2 விக்.) நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 267) 2ஆவது இன்: 269 - 3 விக். (கேன் வில்லியம்சன் 133 ஆ.இ., வில் யங் 60 ஆ.இ., டொம் லெதம் 30, டேன் பீட் 93 - 3 விக்.) ஆட்டநாயகன்: வில்லியம் ஓ'ரூக், தொடர் நாயகன்: கேன் வில்லியம்சன். https://www.virakesari.lk/article/176538
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட நிதியில் தரம் குறைந்த மருந்துகள் கொள்வனவு - நீதிமன்றில் தகவல் Published By: RAJEEBAN 16 FEB, 2024 | 03:00 PM ஒக்சிசன் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்து கொள்வனவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட 14.5 மில்லியன் ரூபாயினை தரம்குறைந்த இம்யுனோகுளோபுலின் ஊசியை கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட விநியோகஸ்தரிடம் சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக பிரதிசொலிசிட்ட ஜெனரல் லக்மினி கிரிஹாகம மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சராக பணியாற்றியவேளை 8வது சந்தேகநபர் மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் சுகாதாரதுறை வீழ்ச்சியடையும் என தெரிவித்து அவசர அவசரமாக மருந்துகளை கொண்டுவருவதற்காக சில கட்டுப்பாடுகளை ஏன் தளர்த்தினார் என்பது குறித்து விசாரணைகளை சிஐடியினர் முன்னெடுத்துள்ளனர் எனவும் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்துக்களுடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் கையெழுத்துக்கள் பொருந்துகின்றனவா என ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/176540
-
11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று(15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதற்கமைய அனுராதபுரம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலக பிரிவின் அம்பகஸ்வெவ புராதன விகாரை, புத்தளம் தங்கொட்டுவ பிரதேச செயலக பிரிவின் பொதுவடன புராதன விகாரை, அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை, கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான மெத்தேகம விகாரை, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர விகாரை, திருகோணமலை குச்சவௌி பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம், குருணாகல் நாரம்மல பிரதேச செயலகத்தின் தம்பதெனிய விஜய சுந்தராராம விகாரை, குச்சவௌி பிரதேச செயலகத்தின் சாந்தி விகாரை, குருணாகல் குளியாபிட்டிய மேற்கு பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சுதர்மாராம புராதன விகாரை, கம்பஹா சித்த கபலே மல் சூனியம் தேவாலய, குச்சவௌி பிரதேச செயலகத்தின் யான் ஓயா விகாரை, சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம் உள்ளிட்ட தலங்களே புனித பூமிகளாக பெயரிடப்பட்டிருக்கின்றன. அதற்கமைய தற்போது வரையில் நாட்டின் 142 வழிபாட்டுத் தலங்கள் புனித பூமிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/292099
-
45 ஆண்டு சாதனையை உடைத்த அஸ்வின்; காத்திருக்கும் புதிய சாதனைகள்
அஸ்வின் 500வது டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி சாதனை: காத்திருக்கும் புதிய சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 45 ஆண்டுகளுக்குப் பின் இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தினார். அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லைத் தொட்டு புதிய சாதனையைப் படைத்துள்ளார் அஸ்வின். சென்னையைச் சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமானார். இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்தப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டாப்-5 பந்துவீச்சாளர்களில் இடம்பிடித்த அஸ்வின் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சென்னை தெருக்களில் டென்னிஸ் பந்து வைத்து கிரிக்கெட் விளையாடி அதன் மூலம் சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களையும், திறமைகளையும் கற்றுக் கொண்டவர் அஸ்வின். குறிப்பாக அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளார். அஸ்வினின் புத்திக்கூர்மை, அவரின் நுணுக்கமான ‘கேரம் பந்துவீச்சு’, ‘ஆர்ம் பந்துவீச்சு’, ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் ‘லைன் லென்த்தில்’ வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள். அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதைப் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராகத் தனி ராஜ்ஜியமே நடத்துவார். அணிக்கு நெருக்கடியான காலத்தில் அறிமுகமான அஸ்வின் இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தாற்போல் நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனை தவிர வேறு யாரும் அடையாளம் காணப்படாத காலம். பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார். அஸ்வின் 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று வியப்பில் ஆழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். அதிவேக சாதனைகளை நிகழ்த்திய அஸ்வின் அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதிவேகமாக 250 முதல் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 விக்கெட்டுகளையும், இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளையும், ஓர் ஆண்டுக்கு 50 விக்கெட்டுகள் என 4 முறை வீழ்த்தியுள்ளார். கடந்த 2016-17ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 28 விக்கெட்டுகளையும், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் ஒரே ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். 500 விக்கெட் எடுத்து சாதனை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும்போது, அஸ்வின் 96 டெஸ்ட் போட்டிகளில் 496 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால், முதலிரு டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், விசாகப்பட்டினத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து 499 விக்கெட்டுகளுடன் நின்றுவிட்டார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கார்வ்லேவை வீழ்த்தி தனது 500வது விக்கெட்டை பதிவு செய்தார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். தனது 98வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ள அஸ்வின் இந்திய அளவில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச அளவில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இங்கிலாந்துக்கு எதிராக ‘செஞ்சுரி விக்கெட்’ அது மட்டுமல்லாமல் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் முறியடித்து 100 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக பகவத் சந்திரசேகர் 95 விக்கெட்டுகள், அதைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகள், பிஷன் சிங் பேடி, கபில் தேவ் தலா 85 விக்கெட்டுகள், இசாந்த் சர்மா 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையை அஸ்வின் எட்டுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் எட்டினால், உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அஸ்வினின் எகனாமி ரேட் 2.78 ரன்கள்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார் அஸ்வினின் பந்துவீச்சு சாதனைகள் அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச அளவில் 9வது இடத்தில் இருக்கிறார். அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 34 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தி 5-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 13-வது வயதான வீரர் (36 வயது, 298 நாட்கள்) சாதனையையும் அஸ்வின் வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பேட்டர்களை போல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்து 9-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். 250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார். 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும், 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 77 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகவேகமாக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை வைத்துள்ள அஸ்வின், 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியும் 2-வது பந்துவீச்சாளராக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 10 முறை தொடர் நாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjk6ljnmv05o
-
சிவில் பரப்பை மூடுவதற்கான திட்டம் துரிதமாகத் தொடர்கிறது
14 FEB, 2024 | 05:30 PM கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் இவ்வருடம் நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிக்காட்டிவருகிறார். கடந்தவாரம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த வேளையிலும் அதை அவர் வெளிக்காட்டியதாக செய்திகள் கூறின. மக்களின் ஆணையுடன் அரசாங்கம் ஒன்று பதவிக்கு வருவதை உறுதிசெய்யக்கூடிய தேர்தல்களுக்காக காத்திருப்பவர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்களை நேர்மறையாக நோக்குவார்கள். ஜனாதிபதி பதவி நாட்டின் மிகவும் பலம்பொருந்திய பதவி. சர்வதேச வங்குரோத்து நிலைக்குள் நாடு மூழ்கிக்கிடக்கும் மிகவும் தீர்க்கமான இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி நாட்டுக்கு தலைமைதாங்குகின்ற போதிலும், அவருக்கு மக்களின் ஆணை கிடையாது. அரசாங்கத்தின் அடுத்த இரு மட்டங்களான மாகாணசபைகளும் உள்ளூராட்சி சபைகளும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதவையாக இருக்கின்றன. மக்களின் ஆணையின்றி ஆட்சிசெய்வது தீர்மானங்களை எடுப்பவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதாக இருக்கலாம். ஆனால், அதனால், பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள் நாளடைவில் கிளர்ச்சியில் இறங்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் குறித்து உட்கிடையான ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் பல தசாப்தகாலமாக நீடித்த மூன்று அரசாங்கங்களில் உறுப்பினராக இருந்தவர் இன்றைய ஜனாதிபதி. ஆறு வருடங்களுக்கு பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு 1982 ஆம் ஆண்டில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியபோது ஜனாதிபதி கல்வியமைச்சராக பதவி வகித்தார். 1917 ஆம் ஆண்டில் தேர்தல் சீர்திருத்தங்களை செய்வதில் இறங்கிய அரசாங்கத்தில் அவர் பிரதமராக இருந்தார். அந்த சீர்திருத்த முயற்சி மாகாணசபைகளை தொடர்ந்து முடக்கநிலையில் வைத்திருக்கிறது. மீண்டும், 2022 ஆம் ஆண்டில் பணம் இல்லை என்று காரணம் கூறி உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்த அரசாங்கத்தில் ஜனாதிபதியாக விங்கிரமசிங்க இருக்கிறார். சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன "ஒரு நிதியாண்டில் வருவாயையும் செலவினத்தையும் சமநிலைப்படுத்துவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை, மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. நீண்டகால பட்ஜெட் பற்றாக்குறைகளை கையாளுவதற்கு பொறிமுறைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. அதற்கு மத்தியிலும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார். 1,000 கோடி என்பது 2022 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அன்று கேட்ட தொகையாகும். இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருந்த நிலையில் அதே தொகை இரு தேசிய தேர்தல்களையும் நடத்துவதற்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. பொருளாதாரம் மீட்சி பெற்றவரும் நிலையில் 2022 ஆம் ஆண்டில் 1,000 கோடி ரூபாவை தேடுவதை விடவும் இன்று 2,000 கோடி ரூபாவை தேடுவது சுலபமானதாக இருக்கவேண்டும். சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துதல் தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நீண்டகாலமாக மக்களுக்கு நிராகரிக்கப்பட்டுவந்த பொருளாதாரப் பயன்களை வழங்குவதற்கு அரசாங்கம் முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு பல தசாப்தங்களாக இருபது இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவந்த நிலங்களை அவர்களுக்கு சொந்தமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. பெருந்தோட்டத் துறையில் தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் பல தசாப்தங்களாக கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு ( இதுகாலவரையில் இவர்கள் நிலமற்றவர்களாக இருந்துவருகிறார்கள் ) வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கும் வீட்டுத் தோட்டங்களைச் செய்வதற்கும் சொந்தமாக நிலங்கள் வழங்கப்படும். மக்களுக்கு சொந்தமாக நிலங்கள் வழங்கப்படுவதால் அதில் அவர்கள் முதலீடுகளைச் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லது பெரியளவில் விவசாயத் தொழில்துறையை முன்னெடுப்பதில் நாட்டம் கொண்டிருக்கும் பல்தேசியக் கம்பனிகளுக்கு நிலங்களை அவர்கள் விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால், தற்போதைய வறுமைக்கு மத்தியில் அந்த நிலங்களை அவர்கள் மலிவான விலைக்கு விற்றுவிடக்கூடாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நிலங்களை விற்பனை செய்வதற்கு கட்டுபாடுகளை விதிக்கவேண்டிய தேவை ஏற்படலாம். பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது என்று பெரும்பாக பொருளாதாரத் தரவுகள் காண்பிக்கும் நிலையில், வரிகளைக் குறைப்பதற்கான சாத்தியம் குறித்தும் ஜனாதிபதி பேசிவருகிறார். சனத்தொகையில் வறிய மக்களுக்கு இந்த வரிகள் தாங்கமுடியாத சுமையாக இருக்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரங்களில் மேம்பாட்டை ஏற்படுத்துவது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய நிச்சயமான வழியாகும். கடந்த வாரம் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க ( வரைபடத்தின் பிரகாரம் ) V வடிவிலான பொருளாதார மீட்சி பற்றி குறிப்பிட்டார். வறுமை அதிகரிப்பு, மந்தபோசாக்கு, பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுதல் பற்றி செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வருகின்ற எதிர்மறையான தகவல்களை பெற இது உதவும். "முன்னென்றும் இல்லாத வேகத்தில் கீழ் நோக்கிச் சென்ற பொருளாதாரம் ரொக்கட் வேகத்தில் மீட்சிபெற்றுவருகிறது.V வடிவிலான இந்த மீட்சி நம்பிக்கையைத் தருகிறது" என்று ஜனாதிபதி தனது உரையில் கூறினார். மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு புறம்பாக அரசாங்கம் மாற்றுக் கருத்துக்களை குறிப்பாக எதிரணிக் கட்சிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதன் அல்லது ஒடுக்குவதன் மூலமாக பொது விவாதத்தில் தனது கருத்துக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் நாட்டம் காட்டுகிறது. எதிர்க்கருத்துக்களை சட்டவிரோதமாக்குவதற்கும் குற்றமாக்குவதற்கும் புதிய சட்டங்களை அரசாங்கம் கொண்டுவருகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் விமர்சனக் குரல்களை மௌனமாக்குவதன் மூலமாக பொது விவாதத்தை அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் மாற்றுவதற்கு அதன் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இணையவெளி பாதுகாப்பு சட்டம் அமைந்திருக்கிறது. இந்த சட்டம் சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இரு கொடூரமான சட்டமூலங்களையும் அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் பிரதான ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலான ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமுலமுமே அவையாகும்.நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த அதே அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைப்பதும், மாற்று யோசனைகளை கூறுகின்றதுமான குரல்களை நசுக்க உறுதி பூண்டிருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளமுடியாத சட்டம் 1980 ஆண்டின் தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புக்கள் சட்டத்தை சிவில் சமூக அமைப்புக்கள் அவை செய்கின்ற பணிகளுக்கு சட்டரீதியான அந்தஸ்தைப் பெறுவதற்கு பயன்படுத்திவருகின்றன. அந்த சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பதிவு மற்றும் மேற்பார்வை சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது. அதன் வரைவு இப்போது வெளிவந்து இருக்கிறது. அது சிவில் பரப்புக்கு (Civil Space ) பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்துவரும் பொதுச்சட்ட பாரம்பரியத்தின் பிரகாரம் அமைப்புக்கள் தங்களைப் பதிவுசெய்வதற்கு பலவகையான தெரிவுகள் இருந்தன. சட்ட அந்தஸ்தைப் பெறவேண்டுமானால் அமைப்புக்கள் கம்பனிச் சட்டத்தின் கீழும் தங்களைப் பதிவுசெய்துகொள்ளமுடியும் அல்லது உள்ளூர் மட்டத்தில் அரசாங்கத்தின் மாவட்ட செயலகங்களில் அல்லது பிரதேச செயலகங்களில் பதிவுசெய்து கொள்ளலாம். தற்போது கூட அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு வரும் நிதி மத்திய வங்கியின் உகந்த கவனிப்புடன் கூடிய வங்கிகளின் ஊடாகவே வருகிறது. வழங்குநர்களின் கணக்காய்வுக்கும் அந்த நிதி உட்படுத்தப்படுகிறது. தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் பதவுசெய்துகொள்ளாத அமைப்புக்கள் ஏனைய அரச நிறுவனங்களினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. உத்தேச புதிய சட்டம் வித்தியாசமானதாக இருக்கிறது. சிவில் அமைப்புக்களை (அவை பெரும்பாக நிதி அமைப்புக்களாக இருந்தாலென்ன நம்பிக்கை நிதியங்களாக இருப்பதாலென்ன அல்லது பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டவையாக இருந்தாலென்ன) ஒரே இடத்தில் பதிவுசெய்ய அது நிர்ப்பந்திக்கிறது. புதிய சட்டத்தின் பிரகாரம் சிவில் அமைப்புக்கள் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் தங்களைப் பதிவுசெய்யவேண்டும். இந்த செயலகம் தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கிறது. பதிவு மற்றும் மேற்பார்வைச் செயன்முறை ஊடாக சிவில் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சித்து வந்திருக்கிறது. சந்தேகத்துக்குரிய சூழ்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பொலிஸ் முற்றுகைகளுக்கும் கைதுகளுக்கும் வழிவகுத்திருக்கும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தற்போது தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பெரும் கவனத்துக்குள்ளாகியிருக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழேயே பொலிஸ் இருக்கிறது. பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகம் அமைந்திருக்கும் இடம் சிவில் அமைப்புக்களை சட்டம் ஒழுங்கு கட்டமைப்புக்குள் வைத்து அரசாங்கம் நோக்குகிறது என்ற எதிர்மறையான செய்தியையே கொடுக்கிறது. கொடூரமான புதிய சடடம் சிவில் அமைப்புக்கள் குற்றவியல் வழக்கு தொடுப்புக்களுக்கும் தண்டனைக்கும் உள்ளாகக்கூடிய ஆபத்தைத் தோற்றுவிக்கும்." அடிப்படை கலாசார விழுமியங்களுக்கு " எதிராகச் செயற்படுவதாகக் கூறி சிவில் அமைப்புக்களை இடைநிறுத்தவும் மூடிவிடவும் முடியும். இந்த கட்டுபாட்டின் பிரகாரம் மதசார்பற்ற அரசுக்கு கோரிக்கை விடுவதையோ, தன்பாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையோ அல்லது கருக்கலைப்புக்கான உரிமைக்காக வாதிடுவதையோ அடிப்படைக் கலாசார விழுமியங்களுக்கு எதிரான செயல்கள் என கருதமுடியும். தங்களை எதிர்ப்பவர்களுக்கு அல்லது தங்களது வழிக்கு வராதவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு அரசாங்கங்கள் சட்டங்களைப் பயன்படுத்திவந்திருக்கின்ற பாணியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது உத்தேச சட்டம் மிகவும் ஆபத்தானதாகும். தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்து முன்னைய அரசாங்கம் இதே போன்ற சட்டம் ஒன்றை 2018 ஆம் ஆண்டில் கொண்டுவந்தது. அந்த நேரத்தில் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுனங்கள் செயலகம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் இருந்தது. அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அலட்சியம் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட சிவில் சமூகத் தலைவர்கள் குழுவொன்று அன்றைய பிரதமர் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தங்களது வேண்டுகோளை முன்வைத்தனர். சில நாட்களுக்குள்ளாகவே அந்த சட்டவரைவு வாபஸ்பெறப்பட்டது. சிவில் சமூகத்துக்கான கட்டமைப்பு ஒன்று தொடர்பில் சொந்த யோசனைகளின் அடிப்படையிலான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தன்னைச் சந்தித்த சிவில் சமூகத் தலைவர்களிடமே விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார். பரந்தளவில் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளுடன் இரு வருட கலந்தாலோசனைகளுக்கு பிறகு தன்னார்வத் துறையினருக்கான சட்டக் கட்டமைப்புை ஒன்று தொடர்பில் வழிகாட்டல்கள் வகுக்கப்பட்டன. அவை ஒரு வருடத்துக்கு முன்னர் அரசாங்கத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் அவற்றின் உள்ளடக்கமோ அல்லது உணர்வோ தற்போதைய சட்டவரைவில் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது சந்தித்துப் பேசக்கூடியதாக இருந்ததைப் போன்று தற்போதும் ஜனாதிபதியாக அவரைச் சந்தித்து அதே விடயத்தை பேசுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அன்று வெளிப்படுத்திய நல்லெண்ண அணுகுமுறையையே அவர் தற்போதும் சமூகத்தினதும் நாட்டினதும் மேம்பாட்டுக்காக கடைப்பிடிக்கவேண்டும். https://www.virakesari.lk/article/176379
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
Published By: DIGITAL DESK 3 16 FEB, 2024 | 10:45 AM மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) இரவு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் அருகில் இருக்கும் வயோதிப பெண் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் வயோதிப பெண்ணின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது. இந்நிலையில் அருகில் இருந்த சிசிரிவி கமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/176510
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சரியான விடயம் - நான் ஏற்கனவே அதனை அனுபவித்துவிட்டேன் – மகிந்த
Published By: RAJEEBAN 16 FEB, 2024 | 06:33 AM நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அனுபவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது நல்லது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதால் அதனை நீக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயல்வது எதிர்கட்சியினருக்கான பொறியாக அமையலாம் எங்களிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்து நன்கு தெரியும் என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். எந்த தேர்தல் என்றாலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் சரியான தருணத்தில் அவர்கள் மேடைக்கு வருவார்கள் அதுவரை பொறுத்திருங்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச இந்தியா போன்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜேவிபி இறுதியாக உணர தலைப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176500