Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார் தோனி! சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஏனைய வீரர்கள் விரைவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள் என அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/291104 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்ல 2024 சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2024 சீசனில் விளையாடும் புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது எதிஹாட் ஏர்வைஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளதை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது. வீரர்களின் ஜெர்சியின் பின்பக்த்தில் அவர்களுடைய நம்பர்களுக்கு மேல் இனிமேல் எதிஹாட் ஏர்வைஸ் இடம் பிடித்திருக்கும். https://thinakkural.lk/article/291168
  2. நாளை முதல் இலங்கையில் UPI கட்டணமுறை! இந்திய, இலங்கை மற்றும் மொரிஷியஸ் தலைவர்கள் இணைந்து ஆரம்பிப்பர் Published By: VISHNU 11 FEB, 2024 | 10:01 PM இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர். Unified Payment Interface (UPI) என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல வங்கிக் கணக்குகளை, ஒரே கைபேசி செயலி, ஊடாக இணைக்கும் அமைப்பாகும், இந்த கட்டண முறையானது கைபேசிகள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபின்டெக் (Fintech) கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னணியில் உள்ளது. அந்நாட்டின் வளர்ச்சி அனுபவங்கள் மற்றும் புதுமைகளை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்திய பிரதமர் முக்கியத்துவம் அளித்துள்ளார். இலங்கை மற்றும் மொரிஷியஸுடனான இந்தியாவின் வலுவான கலாச்சார மற்றும் மக்களிடையேயான தொடர்பைக் கருத்தில் கொண்டு, இந்த அறிமுகமானது வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தின் மூலம் பரந்த அளவிலான மக்களுக்கு பயனளிக்கும் என்பதுடன் நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும். Unified Payment Interface (UPI) அறிமுகமானது இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் பயன்படும் என்பதோடு இந்தியாவுக்கும் இது பயனளிக்கும். மொரிஷியஸ் பிரஜைகளுக்கும் UPI தீர்வுச் சேவைகளைப் பெறுவதற்கு உதவும். மொரீஷியஸில் RuPay கார்ட் சேவைகளை நீட்டிப்பதன் மூலம் மொரீஷியஸ் வங்கிகள் மொரீஷியஸில் RuPay பொறிமுறையின் அடிப்படையில் கார்ட்களை வழங்குவதற்கும், இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் RuPay கார்டைப் பயன்படுத்துவதற்கும் உதவும். https://www.virakesari.lk/article/176130
  3. காசாவில் ஐ.நா. அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைப்பு: வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் குற்றச்சாட்டு காசாவில் ஐ.நா அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைத்துள்ளது என வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், ” ஐ.நா.வின் பள்ளிக்கூடம் அருகே அமைந்த இந்த சுரங்கத்திற்குள் பெரிய மின்கலன்களும் வைக்கப்பட்டு உள்ளன. மின்சாரத்திற்காக தனி அறை அமைத்து, அதன் வழியே தேவையான இடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுவதும் தெரிந்தது. பயங்கரவாதிகள் இந்த கட்டமைப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். சுரங்க வாசல் மற்றொரு புறத்தில், ஐ.நா.வின் வளாக பகுதிக்குள்ளேயே முடிகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஐ.நா. பணியாளர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது. https://thinakkural.lk/article/291336
  4. Published By: VISHNU 11 FEB, 2024 | 06:17 PM வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்தகுருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது. வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து சென்றமை தற்போது ஆதாரமாக வெளிவந்துள்ளது. குருந்தூர் மலை உட்பட பல்வேறு இடங்களிலும் பௌத்த குருமார் இராணுவத்தினர் மூலமாக செயற்பட்டு வரும் நிலையில் வெடுக்குநாறி ஆலயத்திலும் இராணுவத்தினர் பின்புலத்தில் இருந்து பௌத்த மயமாக்கல் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176120
  5. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய செய்தி சேனலான WION க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “….இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நாடு அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார். WION நிருபர்: இந்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் ? ஜனாதிபதி ரணில்: நான் மீண்டும் வருவதற்கு நான் போட்டியிட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முதல் கடமையாகக் கொண்டுள்ளேன் . திவால்நிலையிலிருந்து மீள்வதில் கவனம் செலுத்துவதே இலக்காகும். நான் மீண்டும் ஜனாதிபதவிக்காக போட்டியிட எதிர்பார்த்துள்ளேன். WION நிருபர்: நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்களா? அதாவது, இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதன் அடிப்படையில் உங்கள் பதவிக்காலத்தில் பொருளாதாரம் பற்றிய உங்கள் பார்வை என்ன? ஜனாதிபதி ரணில்: சரி, நான் மிகவும் திருப்தியடைகிறேன், எங்களால் இதைச் செய்ய முடியும் என்று நான் உணர்கிறேன். https://thinakkural.lk/article/291322
  6. யாழில் மயிரிழையில் தப்பிய அக்குட்டி பிச்சுமணி | கலவர பூமியானது ஏன் ?? | Hariharan | Tamil comedy
  7. 11 FEB, 2024 | 09:35 PM மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் அவை தீர்மானம் உள்ளிட்ட பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டேன். இந்நிலையில் ஏற்கனவே நீர்வேலியில் தபாலகத்திற்கான கட்டிடத்தினை தனது கொடையாக அமைத்து வழங்குவதற்கான செயற்றிட்டத்தினை ஆரம்பித்திருந்த தொழிலதிபர் கிருபாகரன் அவர்கள் தமிழ் முற்றத்தினை அமைத்து அதில் பெரியார்களின் சிலைகளை நிறுவும் பொறுப்பினையும் தானே முன்வந்து ஏற்றுக் கொண்டு அதனை தற்போது அவர் முழுமையாகச் செயற்படுத்தியுள்ளார். அவரது முற்போக்கான கொடை எண்ணத்திற்கும் செயற்பாட்டுக்கும் பாராட்டுக்கள். இதற்காக அவருடன் உழைத்த ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன் தலைமையில் குழுவினர்க்கு நன்றிகள். இன்றைய கால கட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பல நிதி பற்றாக்குறை மற்றும் அவற்றை செயற்படுத்துவதில் உள்ள செலவீனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவற்றை நிர்வாக ரீதியில் சட்ட திட்டங்களுக்கு உள்ளாக அணுவதில் காணப்படும் தாமதங்கள் வாயிலாக விரைவாக ஈடேற்றுவதில் இழுபறிகள் உள்ளன. இந் நிலையில் மக்களுக்கு வேண்டிய எமது இனத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு போன்றவற்றினை நிலைநிறுத்தத் தக்க செயற்றிட்டங்களை கொடையாளர்களிடம் கையளித்து அவற்றை மக்கள் மயப்படுத்துவது சிறந்த உத்தியாகும். அரச நிறுவனம் மேற்கோள்ளும் அபிவிருத்தியில் பங்கேற்பு அபிவிருத்தி என்பதற்கு மேலாகச் சென்று மக்களின் பங்களிப்பாக அபிவிருதியை முன்கொண்டு செல்வதும் அவசியமாகவுள்ளது. அது தனவந்தர்கள் கொடையாளிகளை கிராம மட்டத்தில் இணைப்பதாக அமையும். இதேநேரம் இன்று பலர் அரச தாபனங்களுக்கு தமது சொத்துக்களை நன்கொடை அளிக்க முன்வருகையில், அவ்வாறான சூழ்நிலைகளில் மத்திய அரசாங்கம் சார்ந்த தாபனங்களுக்கு அன்பளிப்பது இன முரன்பாடும் பல்வேறு பட்ட ஆக்கிரமிப்பினையும் எதிர்கொள்ளும் இனம் நாம் என்ற வகையில் சரியான தீர்மானம் இல்லை. மேலும், மத்திய அரசின் தாபனங்கள் கொழும்பு மட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படலாம். ஆனால், உள்ளுராட்சி மன்றத்திற்கு நிலங்களை அன்பளித்தால் அதில் எமது மக்கள் பிரதிநிதிகளின் முடிவே செல்வாக்குச் செலுத்தும். மத்திய அரசு சார்ந்த தாபனங்களுக்கு காணித் தேவை காணப்படின் அவற்றை உள்ளுராட்சி மன்றங்களுக்கு கையளித்து குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் மத்திய அரசின் தாபனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். இதன் வாயிலாக எமது நிலம் சார்ந்த இன ரீதியிலான பாதுகாப்பினை நாம் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176117
  8. ஆறு வயது சிறுமியை கொன்றதா இஸ்ரேல் ராணுவம்? போனில் மன்றாடிய சிறுமிக்கு கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,RAJAB FAMILY படக்குறிப்பு, சிறுமி ஹிந்த் ரஜாப் கட்டுரை தகவல் எழுதியவர், லூசி வில்லியம்சன் பதவி, பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மாதம் காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமி ஹிந்த் ரஜாப் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்களின் உடல்கள் இருந்த காரில் சிறுமியின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை காப்பாற்ற முயன்ற இரண்டு செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களின் உடல்களும் அருகிலேயே கண்டெடுக்கப்பட்டன. இஸ்ரேலிய டாங்கிகள் தாக்கியதில் அச்சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹிந்த் ரஜாப் என்ற இந்த சிறுமி தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக காஸா நகரிலிருந்து தனது மாமா மற்றும் அத்தையுடன் காரில் தப்பித்து சென்று கொண்டிருந்தார். மேலும் அவரது மாமாவின் பிள்ளைகள் மூவர் அந்த காரில் இருந்தனர். ஹிந்த் ரஜாப் மற்றும் அவசர உதவிக்கு போன் செய்து பேசிய இறுதி உரையாடல் பதிவுகள் மூலம், அப்போது காரில் உயிர் பிழைத்திருந்தவர் ஹிந்த் ரஜாப் மட்டுமே என தெரியவந்தது. இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து தனது உயிரைக் காப்பாற்ற, இறந்த உறவினர்களின் உடல்களுக்கு இடையே அவர் மறைந்திருந்தார். யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவர் தொலைபேசியில் கெஞ்சினார், ஆனால் திடீரென்று பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்டது, பின்னர் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, அவசரகால ஊழியர்களால் ஹிந்த் ரஜாப் உடன் பேச முடியவில்லை. பல நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் போர் காரணமாக இந்தப் பகுதிக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டன. சனிக்கிழமையன்று, பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்ட் (PRCS) பணியாளர்களால் அந்தப் பகுதியை அடைய முடிந்தது. ஹிந்தின் குடும்பத்தினர் பயணம் செய்த கருப்பு கியா காரை அவர்கள் கண்டுபிடித்தனர். இதில் காரின் கண்ணாடி மற்றும் டேஷ்போர்டு கண்ணாடி உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தது. காரில் டஜன்கணக்கான புல்லட்கள் துளைத்ததற்கான அடையாளங்கள் தெளிவாகக் காணப்பட்டன. காருக்குள் ஹிந்த் ரஜாப் உட்பட ஆறு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ரெட் கிரெசன்ட் ஊழியர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அனைவரது உடலிலும் தோட்டாக் காயங்கள் காணப்பட்டன என்றார். இந்த காரில் இருந்து சிறிது தூரத்தில் மற்றொரு கார் எரிந்து நாசமாகி கிடந்தது. மேலும் இந்த காரின் இன்ஜின் வெடித்து சாலையில் சிதறிக் கிடந்தது. அது உண்மையில் ஹிந்த் ரஜாபைத் தேடி அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. இந்த ஆம்புலன்சில் யூசுப் அல்-சீனோ மற்றும் அகமது அல்-மதூன் ஆகியோர் பயணித்ததாகவும், அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தின் ஷெல் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு இஸ்ரேல் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ்களை குறிவைத்ததாக தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்ட். ஜனவரி 29 அன்று, ஹிந்தின் கார் இருந்த இடத்தை ஆம்புலன்ஸ் சென்றடைந்தவுடன், அதன் மீது குண்டுகள் வீசப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, "ஹிந்த் ரஜாபைக் காப்பாற்றுவதற்காக இந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ்களை அனுப்ப ரெட் கிரெசன்ட் குழு தேவையான அனுமதியைப் பெற்றிருந்தது. ஆனால் இந்தப் பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியப் படைகள் செஞ்சிலுவைச் சங்க அமைப்பினரை வேண்டுமென்றே குறிவைத்தன." ரெட் கிரெசன்ட் குழு பிபிசியிடம் கூறியதாவது, "ஹிந்த் ரஜாபுக்கு உதவுவதற்கு இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து பல மணிநேரம் போராடி அனுமதி பெற வேண்டியிருந்தது" அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிபால் ஃபர்சாக், ஒரு வாரத்திற்கு முன்பு பிபிசியிடம் பேசியபோது, "நாங்கள் ஒருங்கிணைந்து முயற்சி செய்து இதற்கான கிரீன் சிக்னல் பெற்றோம். அங்கு சென்றதும், ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்கள் ஹிந்த் ரஜாப் மறைந்திருந்த காரைக் கண்டுபிடித்ததை உறுதிப்படுத்தினர். அவர்களால் அந்த காரைப் பார்க்க முடிந்தது. நாங்கள் கடைசியாகக் கேட்டது துப்பாக்கிச் சத்தம் தான்" என்று கூறியிருந்தார். முடிவில்லாத காத்திருப்பு அவசர அழைப்பு ஆபரேட்டருடன் ஹிந்த் ரஜாப் பேசிய முழு தொலைபேசி உரையாடலையும் பொதுவில் வெளியிட்டது செஞ்சிலுவைச் சங்கம். மேலும், ஹிந்த் ரஜாப்புக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஒரு பிரசாரத்தைத் அது தொடங்கியுள்ளது. ஹிந்த் ரஜாப்பின் தாய் விஸ்ஸாம் பிபிசியிடம் கூறுகையில், "என் மகள் எந்த நேரத்திலும் என் முன்னால் வந்து நிற்பாள் என்ற நம்பிக்கையில், அவள் உடல் கிடைக்கும் வரை இரவும் பகலும் காத்திருந்தேன்." என்கிறார். ரஜாப்பின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். ஹிந்த் ரஜாப்பின் தாயார் பிபிசியிடம், "எனது குரலைக் கேட்டவர்கள், என் மகளின் உதவிக்காக கெஞ்சும் குரலைக் கேட்டவர்கள், ஆனால் அவளைக் காப்பாற்ற அவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் அனைவரையும் இறுதித்தீர்ப்பு நாளில் கடவுளின் முன் நிற்க வைத்து கேள்வி கேட்பேன்" என்று கூறினார். "காஸா மற்றும் அதன் மக்களைத் தாக்க, நெதன்யாகு, பைடன் மற்றும் அவர்களுடன் கைகோர்த்த அனைவருக்கும், நான் என் இதயத்திலிருந்து வணக்கம் செலுத்துகிறேன்." என்று அவர் கூறுகிறார். மருத்துவமனையில் தன் மகளைப் பற்றிய செய்திக்காக கையில் ஒரு சிறிய இளஞ்சிவப்பு நிற பையுடன் காத்திருந்தார் தாய் விஸ்ஸாம். அந்த பையை அவர் ஹிந்த் ரஜாப்புக்கு கொடுக்க வைத்திருந்தார். அதில் ஒரு நோட்புக் இருந்தது, அதைத் தான் கையெழுத்துப் பயிற்சிக்காக சிறுமி ஹிந்த் பயன்படுத்தி வந்தார். "இன்னும் எத்தனை தாய்மார்கள் இதுபோன்ற வலியை அனுபவிக்க வேண்டுமென காத்திருக்கிறீர்கள்? இன்னும் எத்தனை குழந்தைகள் இறக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேள்வியெழுப்புகிறார் விஸ்ஸாம். போரின் போது கடைப்பிடிக்கப்படும் விதிகள் அன்றைய இராணுவ நடவடிக்கை, ஹிந்த் காணாமல் போனது மற்றும் அவரைத் தேடச் சென்ற ஆம்புலன்ஸ் பற்றிய தகவல்களை பிபிசி இரண்டு முறை இராணுவத்திடம் கேட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துகொள்ளவும் சனிக்கிழமையன்று இஸ்ரேல் இராணுவத்தையும் பிபிசி தொடர்பு கொண்டது. போர் விதிகள் பற்றி பேசுகையில், "மருத்துவ ஊழியர்கள் போரின் போது களத்தில் குறிவைக்கப்படுவதில்லை, மாறாக அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி விரைவில் வழங்கப்படுகிறது." என்று இராணுவத் தரப்பு கூறுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காஸா நகரங்கள் மீது விரைவான தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுக்கத் தொடங்கியது இஸ்ரேல். மருத்துவமனைகள், நிவாரண முகாம்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அடியில் கட்டப்பட்ட சுரங்கப் பாதைகளில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் போராளிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் தங்கள் போராளிகளை ஏற்றிச் செல்வதாகவும் இஸ்ரேல் முன்பு கூறியிருந்தது. அவசர எண்ணில் கடைசியாக பேசிய ஹிந்த் ரஜாப் ரெட் கிரெசன்ட் குழுவின் ராணாவுடன் இறுதியாக தொலைபேசி மூலம் பேசியிருந்தார் ஹிந்த் ரஜாப். “எனக்கு எதிரே ஒரு டாங்கி இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து வருகிறது” என்று அந்த தொலைபேசி அழைப்பில் கூறியிருந்தார். “அது மிகவும் அருகில் இருக்கிறதா?” எனக் கேட்டார் ராணா. அதற்கு ஹிந்த், "மிகவும் அருகில் இருக்கிறது, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. என்னை வந்து காப்பாற்றுவீர்களா?” எனக் கேட்டிருந்தார். ஹிந்தின் குடும்பம் எங்கே போனது? ஜனவரி 29 அன்று, காஸா நகரின் மேற்கே வாழும் மக்களை கடல் எல்லையை ஒட்டிய சாலை வழியாக தெற்கே செல்லுமாறு கேட்டுக் கொண்டது இஸ்ரேலிய இராணுவம். ஹிந்தின் குடும்பம் காஸா நகரில் இருந்தது. அவரது குடும்பம் கிழக்கு நோக்கி சென்று அல்-அஹ்லி மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தது. இந்த இடம் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார்கள். அப்பகுதியில் கடும் ஷெல் தாக்குதல் நடந்ததாக விஸ்ஸாம் கூறுகிறார். "நாங்கள் மிகவும் பயந்தோம். எங்கள் உயிரைக் காப்பாற்ற, வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓடிக் கொண்டிருந்தோம்." விஸ்ஸாமும் அவரது மூத்த பிள்ளைகளும் மருத்துவமனையை நோக்கி நடந்து சென்றுள்ளனர். "அதிக குளிராக இருந்தது, மழையும் பெய்து கொண்டிருந்தது. மாமாவின் காரில் செல்லும்படி ஹிந்திடம் கேட்டுக் கொண்டேன். அவர் மழையில் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை." என்று கூறுகிறார் விஸ்ஸாம். மாமாவின் கியா பிகாண்டோ காரில் ஏறி அமர்ந்தாள் ஹிந்த். காசாவின் புகழ் பெற்ற அல்-அசார் பல்கலைக் கழகத்தை நோக்கி அந்த கார் சென்று கொண்டிருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த காருக்கு முன்னால் இஸ்ரேலிய டாங்கிகள் வந்தன. உதவிக்காக பரிதவித்த குடும்பம் காரில் இருந்தவர்கள் அங்கிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில், மேற்குக் கரையில் உள்ள பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்டின் அவசரகால தலைமையகத்தை உதவிக்கு தொடர்பு கொண்டனர். சிறிது நேரம் கழித்து, மதியம் 2.30 மணியளவில், ரெட் கிரெசன்ட் குழு ஹிந்தின் மாமாவை தொடர்பு கொண்டார். 15 வயது லயன் அப்போது பேசினார். தனது பெற்றோரும் உடன்பிறந்தோரும் கொல்லப்பட்டுவிட்டனர் என கூறினார் லயன். தனது காருக்கு அருகில் ஒரு டாங்கி இருப்பதாகவும், அது காரை நோக்கி தொடர்ந்து குண்டுகளை வீசுவதாகவும் கூறியிருந்தார். துப்பாக்கிச் சத்தத்திற்கு நடுவே, பலத்த அலறல் சத்தம் கேட்டது. பின்னர் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. ரெட் கிரெசன்ட் குழு மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, இம்முறை ஹிந்த் பதிலளித்தார். அவரது குரலில் அதிக பயம் தெரிந்தது. காரில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாகவும், தான் மட்டும் உயிருடன் இருப்பதாகவும் கூறினார் ஹிந்த். “இருக்கைக்கு கீழே ஒளிந்துகொள், யார் கண்ணிலும் பட்டுவிடாதே,” என்று குழுவினர் அவருக்குத் தொலைபேசியில் கூறினர். ஹிந்த் ரஜாப் உடன் சில மணிநேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் ராணா பகிஹ். அதேநேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தைத் தொடர்புகொண்ட ரெட் கிரெசன்ட் குழு, தங்களின் ஆம்புலன்ஸ்களை நகருக்குள் அனுமதிக்க கோரிக்கை வைத்தது. தோல்வியில் முடிந்த மீட்பு முயற்சி படக்குறிப்பு, சிறுமியின் தாத்தா பஹா ஹமாதா இந்தத் தொலைபேசி அழைப்பு துவங்கி மூன்று மணிநேரம் கழித்து ஹிந்த் இருந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. அதற்குள் ரெட் கிரெசன்ட் குழு, ஹிந்தின் தாய் விஸ்ஸாமைத் தொடர்பு கொண்டனர். அவரையும் அந்த அழைப்பில் இணைத்தனர். தனது தாயின் குரலைக் கேட்டதும் ஹிந்த் மேலும் அழத் துவங்கினார், என்கிறார் ராணா. “அவள் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள். நான் அவளிடம் எங்கு அடிபட்டிருக்கிறது என்று கேட்டேன். அவளோடு சேர்ந்து குர்ஆன் வாசித்து பிரார்த்தனை செய்யத் துவங்கினேன். அவள் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொன்னாள்,” என்கிறார் விஸ்ஸாம். மாலை இருட்டிய பின்பு ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்களான யூசுப் மற்றும் அகமது, அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் ஹிந்த் இருந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை இஸ்ரேலிய ராணுவம் சோதனை செய்ய போவதாகவும் தெரிவித்தனர். அதுதான் அவர்களிடமிருந்தும் ஹிந்திடமிருந்தும் கிடைத்த கடைசித் தகவல். இரண்டு இணைப்புகளும் அதன்பின் துண்டிக்கப்பட்டன. ஹிந்தின் தொலைபேசி இணைப்பு மேலும் சில நொடிகள் நீடித்திருந்தது எனவும், அப்போது அவரது தாய் விஸ்ஸாம் கார் கதவு திறக்கப்படும் சத்தத்தைக் கேட்டதாகவும், ஹிந்த் அவரிடம் தொலைவில் ஆம்புலன்ஸ் தென்படுவதாகவும் கூறியதாக சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா பிபிசியிடம் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/c1619we6326o
  9. 11 FEB, 2024 | 09:28 PM (எம்.மனோசித்ரா) முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காணி உறுதி வழங்கு 'உரித்து' (உருமய) வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் வினவிய போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். 'விவசாய நடவடிக்கைகளுக்காக நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட காணிகளுக்கான உரிமம் வழங்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இந்த வேலைத்திட்டத்தோடு தொடர்புடையதல்ல. இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு நிச்சயம் 7 பேர் காணி வழங்கப்படும். எவ்வாறிருப்பினும் விவசாய நடவடிக்கைகளுக்காக அரச காணிகளைப் பெற்றுக் கொண்ட சகலருக்கும் எவ்வித பேதமும் இன்றி உரிமம் வழங்கப்படும். வடக்கு, கிழக்கு மக்களும் இதில் உள்ளடங்குவர்.' என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 'உரித்து' திட்டத்தின் கீழ் 1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச காணிகளின் முழு உரிமையையும் விவசாயிகளுக்கு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனாளிகளாக இனங்காணப்பட்டுள்ள இந்த உரித்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் கீழ் 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தம்புள்ளையில் இடம்பெற்றது. எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி, உரிமத்துடன் வழங்கப்படும் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்பட்டதாகக் தெரியவில்லை. எனவே இதுகுறித்து வினவிய போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கையில், காணி உரிமம் வழங்கும் இந்த வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கதாகும். இந்த வேலைத்திட்டத்தை தேசிய மயப்படுத்தி 200 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்குரிய காணி உரிமமும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும், காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான ஆக்க பூர்மான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையத்தில் காணப்படும் 10 பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கிய வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/176106
  10. @மோகன் அண்ணா மற்றும் நிர்வாகிகள் கவனத்திற்கு, ஆதவன் செய்தி இணைப்புகள் உள்ள திரிகளில் எல்லாம் இந்த எச்சரிக்கைச் செய்திகள் வருகிறது.
  11. என்னய்யா திருப்பத்துக்கு மேல திருப்பமா திடுக்கிட வைக்கிறியள்?! தொடருங்கோ தொடர்கிறேன்.
  12. ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் அதிருப்தி 10 FEB, 2024 | 09:18 PM ஆர்.ராம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாதுள்ள நிலையில் அதனை இருட்டடிப்புச் செய்து பொருளாதாரப் பிரச்சினையொன்று தான் நாட்டில் தற்போது காணப்படுகின்றது என்பதை மையப்படுத்தியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை விளக்க உரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்ற தமிழ்த் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை கடந்த 7ஆம் திகதி ஆரம்பித்து வைத்து உரையாற்றியிருந்தார். அவருடைய நீண்ட உரையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் பதவியேற்ற காலத்திலிருந்து முன்னெடுத்த விடயங்களை மட்டுமே மீள நினைவு படுத்தியிருக்கின்றார். ஆனால் அவர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை. அதுமட்டுமன்றி, அவர் இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. வெறுமனே நாட்டில் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றது என்பதைதான் வெளிப்படுத்தியுள்ளார். பொருளதார நெருக்கடியால் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் முங்கொடுக்கும் நெருக்கடிகள் தொடர்பில் அவர் எவ்விதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பற்றிய சிந்தனை ஜனாதிபதிக்கு உள்ளதா என்பது கூட தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக அவர் அவருடைய கொள்கை விளக்க உரையானது, நாட்டில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் இல்லை. பிரச்சினைகள் இல்லை பொருளாதார ரீதியான மேம்பாடே அவசியமானது என்பதையே அடியொற்றியுள்ளது. இவ்விதமான உரையானது, தமிழர்களின் விடயங்களை உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் இருட்டடிப்புச் செய்யும் முயற்சியாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நீண்ட கொள்கை விளக்க உரையில் நுட்பமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தினை மேற்கொண்டுள்ளார். அவர், நெருக்கடியான சூழலில் இருந்து நாட்டிற்கு தலைமை வகித்தது முதல் தன்னுடைய கடந்தகாலச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பதற்கு அக்கிரசானத்தைப் பயன்படுத்தியுள்ளார் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக உள்ள தமிழ் மக்கள் பற்றி அவர் வாய்திறக்கவில்லை. இதன்மூலமாக தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய எந்தவிமான எதிர்ப்பார்ப்புக்களையும் வழங்கவில்லை. அதுமட்டுமன்றி, இனப்பிரச்சினை தீர்வு உட்பட அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மௌனம் காக்கின்றார். மேலும், விவசாய உற்பதிகளை அதிகரிப்பதற்காக அதிகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய சூழலில் உலர்வலயங்கள் தான் விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமானவையாக உள்ளதென்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அங்குள்ள நிலங்கள், அதிகமான சேதனைப்பசளையை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. விசேடமாக சிறுநீரகத் தாக்கம், உயர் குருதி அமுக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு விவசாயிகள் முகங்கொடுத்துள்ளனர். ஆகவே, பாதிக்கப்பட்ட உலர் வலய விவசாயிகள் தொடர்பில் கவனம் செலுத்தாது பொருளாதாரத்தினை மட்டும் கவனத்தில் கொண்டு அதியுச்சமாக சேதனைப்பசளை பயன்பாட்டை முன்னெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார முன்னேற்றத்துக்காக அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மாறாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படுவதற்கு ஒன்றிணையுமாறு அழைக்கப்படவில்லை. அவர்,இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாது எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற எமது தொடர்ச்சியான வலியுறுத்தலை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஏனென்றால், கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாது இருந்தமையால் தான் போர் நடைபெற்றது. அதனால் பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்பட்டன என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியமாகின்றது. மேலும் உள்நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வொன்றைக் காணாது நாட்டின் பொருளாதார ரீதியான அபிவிருத்தி, சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குதல் என்பது மிகக்கடினமாதொன்றும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. இதனால் நடைபெற்ற போருக்காக அரசாங்கம் 200பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்துள்ளதாக இந்திய ஆய்வறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது. அதேநேரம், போரின் பின்னரான நிலைமைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக போர்க்காலத்தைப் போன்றதொரு செலவீனம் செய்யப்பட்டிருக்காலம் என்பதும் கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாமையால் போரின் போதும், அதன் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட செலவீனம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயத்தினை ஜனாதிபதி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குறித்த விடயத்தினை புரிந்து கொண்டே அவர் தனதுகொள்கை விளக்கத்தினை வெளிப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, வெறுமனே தனது பிரசாரத்துக்கான ஆயுதமாக கொள்கை விளக்கத்தினைச் செய்வதால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதேபோன்று முதலீடுகளைச் செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றார். ஆனால் அவர்களுக்கான எந்தவொரு உறுதிப்பாடுகளும் அற்ற நிலைமைகளே உள்ளன. புலம்பெயர் தமிழர்களில் பலர் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வளிக்க வேண்டும் என்றே கோருகின்றார்கள். ஆனால் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்சட்டத்தினையே முழுமையாக அமுலாக்குவதற்கு தயாரில்லாத நிலையில் எவ்வாறு அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் அவரால் உறுதிப்பாடுகளை வழங்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. அத்துடன், அந்த விடயங்கள் சம்பந்தமாக எந்தக்கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கு தயாரில்லாதவரின் அழைப்பினை எவ்வாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், புலம்பெயர் முதலீட்டாளர்களும் ஏற்றுக்கொள்வது என்றார். https://www.virakesari.lk/article/176053
  13. Published By: RAJEEBAN 11 FEB, 2024 | 08:14 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியமில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார் சண்டே ஒப்சேவருக்கான பேட்டியொன்றின் போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என அவர் தெரிவித்துள்ளார். எங்களின் சிவில் சமூகத்தினர் சில சட்டங்களை மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளதால் நாங்கள் எங்கள் சமூகத்தினருடன் கலந்துரையாடுவோம் சர்வதேச நிபுணர்களுடன் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சில மாற்றங்களை மேற்கொள்ளப்போகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/176067
  14. இலங்கையின் மூன்று விமான நிலையங்களின் நிர்வாகம் அதானி குழுமத்திடம்? Published By: RAJEEBAN 11 FEB, 2024 | 09:52 AM கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட இலங்கையின் மூன்று விமான நிலையங்களை முகாமைத்துவம் செய்வது குறித்து அதானி குழுமத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு விமானநிலையம், ரத்மலானை விமானநிலையம், மத்தள விமானநிலையம் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்த விமானநிலையங்களின் நிர்வாகத்தில் முகாமையில் அதானி குழுமத்தை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி காண்கின்ற நிலையிலேயே விமானநிலையங்களின் நிர்வாகத்தை தனியாரிடம் வழங்குவது குறித்து இலங்கை ஆராய்ந்துவருகின்றது. ஒருவருடகாலத்தில் இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை 1.48 மில்லியனாக அதிகரித்துள்ளது. எனினும்; இதனை கையாளக்கூடிய நிலையில் இலங்கையின் விமானநிலையங்கள் இல்லை அவை அழுத்தங்களிற்குள்ளாகியுள்ளன. இதன் காரணமாக தனியார் துறையை உள்வாங்குவது வளங்களை விஸ்தரிப்பதற்கும் பயணிகளின் அனுபவங்களை சிறப்பானதாக மாற்றுவதற்கும் உதவும் என இலங்கை எதிர்பார்க்கின்றது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் அதானி குழுமம் வெளிநாட்டில் விமானநிலையங்களை நிர்வகிக்கும் முதலாவது வாய்ப்பை பெறும். அதானி குழுமம் ஏற்கனவே உலக நாடுகளில் துறைமுகம் மற்றும் மீள்சக்தி துறைகளில் காலடி பதித்துள்ளது. https://www.virakesari.lk/article/176073
  15. ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்துள்ளது கத்தார்.
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES 10 பிப்ரவரி 2024, 03:01 GMT இந்தியா - மாலத்தீவு உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை திரும்ப அழைத்த பிறகு அந்த இடத்திற்கு இந்தியாவில் இருந்து ஒரு தொழில்நுட்பக் குழு அனுப்பி வைக்கப்படும் என்று வியாழக்கிழமை தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இந்தியா ஒரு நடுநிலையான பாதையைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மாலத்தீவும் அதை ஏற்கத் தயாராகும் என்றும் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அங்கு இந்திய வீரர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியா தனது தொழில்நுட்பக் குழுவைக் கொண்டும் தனது பணிகளைச் செய்ய முடியும். மாலத்தீவின் பூகோள அமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மாலத்தீவு வழியாக மட்டுமே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அந்த நாடு செயல் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உறவுகள் ஒரு கட்டத்திற்கு மேலே மோசமடையாமல் இருக்க மாலத்தீவு அவ்வாறு செய்வது அவசியம் என்று புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வுகளுக்கான மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெலேரி கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு இந்தியா தனது துருப்புகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் மாலத்தீவு தொடக்கத்தில் பிடிவாதமாக இருந்த போதிலும், அங்கு பணியமர்த்தப்படுபவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் நேரடி தொடர்புடையவர்களாக இருக்கக்கூடாது என்று இப்போது ஒப்புக்கொண்டிருப்பது பெரிய விஷயம் என்று அரவிந்த் யெலேரி குறிப்பிட்டார். "பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரர் தனது நாட்டில் நிறுத்தப்பட்டிருப்பது ஒரு நாட்டிற்குக் கவலை அளிக்கும் விஷயம்தான். ஓய்வுபெற்ற அதிகாரிகள், கடலோர காவல்படை அல்லது பிற துணை ராணுவப் படைகளின் விஷயம் வேறு. இருப்பினும் இத்தகைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வது மாலத்தீவுடைய நெகிழ்வுத்தன்மையின் அடையாளம். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை முழுமையாகப் புறந்தள்ள முடியாது என்பதை அது ஒருவகையில் ஏற்றுக்கொண்டுள்ளது," என்று அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு கேட்டுக் கொண்டிருந்தது. "மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையின்படி, மூன்றில் ஒரு விமான தளங்களில் இருந்து துருப்புகள் 2024 மார்ச் 10ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படும். மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் துருப்புகள் 2024 மே 10ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படும்,” என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார். ஆனால் தற்போது இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இந்திய தொழில்நுட்பக் குழு நியமிக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முகமது முய்சு அதிபராகப் பதவியேற்றதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன. முய்சு சீன சார்புடையவர் என்று கருதப்படுகிறது. வெளியுறவு அமைச்சகம் சொன்னது என்ன? பட மூலாதாரம்,MEA டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் மாலத்தீவின் உயர்மட்ட மையக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்குப் பிறகு பிப்ரவரி 2ஆம் தேதி இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டது என்றும் அதன் மூன்றாவது கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை தெரிவித்தார். மேலும் “மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு அவர்களின் இடத்தில் இந்தியாவில் இருந்து தகுதியான தொழில்நுட்பக் குழு பணியமர்த்தப்படும்” என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் மாலத்தீவுக்கான நிதியுதவியை இந்தியா குறைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், ”இந்தத் தொகை உண்மையில் அதிகரித்துள்ளது. இறுதி புள்ளி விவரங்கள் வரும்போது, உதவி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறித்து இன்னும் தெளிவு ஏற்படும்,” என்றார். இந்தியா 2023 பட்ஜெட்டில் இந்தச் சிறிய தீவு நாட்டிற்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் பின்னர் இந்த உதவி 770 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த உதவி 600 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. "முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து எதிர்காலத்தில் தெளிவு ஏற்படும்போது புதிய புள்ளிவிவரங்களை மாற்றவும் முடியும். நாம் மாலத்தீவின் நட்பு நாடு. அதன் வளர்ச்சியில் உறுதியுடன் இருக்கிறோம்,” என்று இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்தது. மாலத்தீவில் இருந்து படைகளை அகற்றுவது குறித்த பேச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது முய்சு மாலத்தீவில் இருக்கும் தனது படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அதிபராகப் பதவியேற்ற பிறகு முய்சு கேட்டுக் கொண்டார். வேறு எந்த நாட்டு ராணுவ வீரர்களுக்கும் தனது நாட்டில் இடம் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். மாலத்தீவில் பொதுமக்களின் மருத்துவ தேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகச் செயல்படும் இந்திய விமான தளத்தின் பணிகள் நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நடைமுறை தீர்வு எட்டப்படவேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் பின்னர் தெரிவித்தது. மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஒரு தளத்தில் இருந்தும், மே 10ஆம் தேதிக்குள் மீதமுள்ள இரண்டு தளங்களில் இருந்தும் இந்திய துருப்புகள் திரும்பப் பெறப்படும் என்று இப்போது இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் அதன் பிறகு விமான தளங்களுக்கு மாலத்தீவு ராணுவம் பொறுப்பேற்கும் என்பது கிடையாது. இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இந்திய தொழில்நுட்பக் குழு அங்கு நியமிக்கப்படும். மாலத்தீவில் தற்போது 77 இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்கள் கடல் கண்காணிப்புக்காக ஒரு டார்னியர் 228 விமானத்தையும், மருத்துவ உதவிக்காக இரண்டு ஹெச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்களையும் இயக்குகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச நாணய நிதியம் சீனாவிடம் இருந்து பெரும் பொருளாதார உதவியை நாடப் போவதாக முய்சு அறிவித்ததைத் தொடர்ந்து மாலத்தீவு "கடுமையான கடனில் சிக்கும் அபாயத்தில்" இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் புதன்கிழமை எச்சரித்தது. மாலத்தீவு சீனாவிடம் இருந்து எவ்வளவு கடன் வாங்கப் போகிறது என்பது பற்றிய விரிவான தகவலை செலாவணி நிதியம் அளிக்கவில்லை. ஆனால் "மாலத்தீவு விரைவில் தன் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்" என்று அந்த நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பாய்வு செய்த பின்னர் ஐஎம்எஃப் கூறியது. "பெரிய கொள்கை மாற்றங்கள் இல்லையென்றால் மாலத்தீவின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசு கடன் ஆகிய இரண்டும் தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தீவிர வெளிநாட்டுக் கடனில் சிக்கும் ஆபத்தில் அது உள்ளது," என்று நாணய நிதியம் மேலும் தெரிவித்தது. "எரிபொருள் விலைகள் மற்றும் இறக்குமதிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் அதன் நிதிப் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர மாலத்தீவு காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியது. வெள்ளம் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகக் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படலாம்." பட மூலாதாரம்,ANI சீனாவிடம் கடன் வாங்கி பல தெற்காசிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பாகிஸ்தானும் இலங்கையும் சீனாவின் லட்சிய திட்டமான ’பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு கட்டுமானங்களுக்காக அந்த நாட்டிடமிருந்து பெரும் கடன் வாங்கி இப்போது கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இந்தோ பசிபிக் பகுதியில் உள்ள செயல் உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு நாடு மாலத்தீவு. எனவே சீனா இந்தத் திட்டம் தொடர்பாக ஆர்வம் காட்டுகிறது. உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான கிழக்கு-மேற்கு கடல் வழி, மாலத்தீவுகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய தீவுகள் வழியாகச் செல்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. முய்சுவுக்கு முன் அவரது கட்சியின் தலைவர் அப்துல்லா யாமீன் அதிபராக இருந்தபோது கட்டுமானத் திட்டங்களுக்காக சீனாவிடம் பெருமளவில் கடன் வாங்கினார். மாலத்தீவின் மீது மொத்தமாக மூன்று பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடன் உள்ளது. அதில் 42 சதவீதம் சீனாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. முய்சு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது முய்சு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் புள்ளி விவரங்கள்படி, நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் உள்ளது என்று ஐஎம்எஃப்பின் எச்சரிக்கைக்கு முன்பு முய்சு கூறியிருந்தார். மாலத்தீவின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தனது நிர்வாகம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். பொருளாதார சிக்கல்களைச் சமாளிக்க நிர்வாகம் வகுத்துள்ள உத்திகளை சமீபத்திய கூட்டங்களில் நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் முன் தாம் அளித்ததாகவும், அவை இரண்டு அமைப்புகளாலும் ஆதரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மாலத்தீவு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை இந்த வாரம் ஒப்புக்கொண்ட முய்சு, தடைபட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தொடங்க விரும்புவதாகக் கூறினார். நாட்டின் பொருளாதார நிலை பற்றிக் குறிப்பிட்ட அவர் பெரும் கடனுடன் தத்தளிக்கும் பொருளாதாரம் தனக்குக் கிடைத்துள்ளது என்றார். அரசு அதிகாரிகளைச் சந்தித்து தங்களின் வளர்ச்சித் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடுமாறும் இதனால் திட்டங்களுக்கான பணிகளை இந்த ஆண்டு தொடங்க முடியும் என்றும் இந்த வாரம் மாலத்தீவு குடிமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். முய்சு தனது இந்திய விரோத அணுகுமுறையால் அரசியல் மட்டத்திலும் சிரமங்களை எதிர்கொள்கிறார். மாலே நகரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மேயர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) வேட்பாளர் ஆதம் அசீம் பெரும் வெற்றி பெற்றார். இந்தியா சார்புடையவர் என்று கருதப்படும் முகமது இப்ராகிம் சோலியின் கைகளில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பு உள்ளது. சர்ச்சை என்ன? பட மூலாதாரம்,MATT HUNT/ANADOLU VIA GETTY IMAGES இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோதி லட்சத்தீவு சென்றார். அவரது பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டனர், அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே தூதாண்மை தகராறு தொடங்கியது. இருப்பினும் இதற்கு முன்பே பதற்றமான சூழலைப் பார்க்க முடிந்தது. மாலத்தீவு அதிபர் தேர்தலில் சீனாவின் பக்கம் சார்புடைய முய்சுவின் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தில் ‘இந்தியா அவுட்’ என்ற கோஷத்தை முன்வைத்தது. தான் அதிபரானால் இந்திய வீரர்களை இங்கிருந்து வெளியேறச் சொல்வேன் என்று முய்சு கூறியிருந்தார். தூதாண்மை தகராறு தொடங்கிய பின்னர் சுற்றுலாவுக்காக மாலத்தீவு செல்வதற்குப் பதில் லட்சத்திவு செல்லுமாறு மக்கள் சமூக ஊடகங்களில் முறையிடத் தொடங்கினர். இதனிடையில் முய்சு சீனாவுக்கு சென்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் சீனாவிடம் இருந்து பெரும் பொருளாதார உதவி பற்றியும் அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து மாலத்தீவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று தி இந்து நாளிதழின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியா மட்டுமின்றி அங்கு செல்லும் ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இருப்பினும் இதற்கு தூதாண்மை தகராறு மட்டுமே ஒரே காரணம் என்று சொல்ல முடியாது. இந்த முழு விஷயத்திலும் மாலத்தீவு மட்டுமே நஷ்டத்தை சந்திக்கும் எனச் சொல்ல முடியாது என்றும் தி இந்து நாளிதழ் கூறுகிறது. வெளிநாட்டில் சிகிச்சை பெறக்கூடிய அரசு காப்பீட்டுத் திட்டத்தின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து ஆகியவை சேர்க்கப்படும் என்று ஜனவரி மாதம் முய்சு கூறினார். இதன் பிறகு, மாலத்தீவில் இருந்து சிகிச்சைக்காக இந்தியா வருபவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். மாலத்தீவு இந்தியாவில் இருந்து கிரானைட், இரும்பு, ஸ்டீல், புல்டோசர்கள் போன்றவற்றோடு கூடவே அரிசி, முட்டை, இறைச்சி, வெங்காயம், தக்காளி போன்ற பொருட்களையும் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நிலவும் பதற்றம் இதன் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். https://www.bbc.com/tamil/articles/cv2vmpy0k54o
  17. ஐஸ்லாந்தில் 3வது முறையாக வெடித்து சிதறிய எரிமலை ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின. இது சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது. இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர். சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் தற்போது வரை 3-வது முறையாக ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291101 Iceland Volcano: எங்கு பார்த்தாலும் Ash - எரிமலை வெடிப்பால் உருக்குலைந்த Iceland எப்படி இருக்கு? வடக்கு ஐரோப்பியாவில் உள்ள ஐஸ்லாந்து அண்மையில் பலமுறை எரிமலை வெடிப்புக்குளுக்கு இலக்காகி வருகிறது. சமீபத்தில் ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேனஸ் தீபகற்பத்தில் மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்புகள் 'நதி' போல அங்கு வழிந்தோடின. இது டிசம்பர் முதல் அந்தப் பகுதியில் ஏற்பட்ட மூன்றாவது வெடிப்பு.
  18. கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 59 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனைச் செய்த பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சுமிட்டாயில் மட்டும்தான் ஆபத்தான செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? உணவுப் பொருளில் சேர்க்கப்படும் நிறமிகளின் அளவை கண்காணிப்பது யார்? உணவு பாதுகாப்புத்துறை நிறமிகள் விவகாரத்தில் கூறுவது என்ன? ஆய்வகத்தில் பஞ்சு மிட்டாய் பரிசோதனை புதுச்சேரி மாநிலத்தில் வடமாநில இளைஞர்களால் விற்பனை செய்யப்பட்டு வரும் பஞ்சு மிட்டாயின் நிறம் வித்தியாசமாக இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தேடுதல் பணியில் இறங்கி இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் புதுச்சேரியில் சைக்கிளில் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்த வட மாநில இளைஞரிடமிருந்து பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்து அதனை இந்திரா நகர் பகுதியில் இருக்கும் உணவு மற்றும் மருந்தாய்வுத்துறையில் வைத்து பரிசோதனை செய்து பார்த்து இருக்கிறார். அதில் அரசு தடை செய்த தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மனிதர்களுக்கு புற்றுநோயை வரவழைக்கக் கூடிய காரத்தன்மை கொண்ட வேதிப்பொருள் பஞ்சுமிட்டாயின் நிறத்தை கூட்டிக் காண்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சுமிட்டாய் வைத்திருந்த வட மாநில இளைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. குழந்தைகள் சாப்பிடக் கூடிய பஞ்சுமிட்டாயில் உடல் நலத்திற்கு கேடான வேதிப்பொருட்கள் கலப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 'ஊதுபத்தியில் சேர்க்கப்படும் நிறமி பஞ்சுமிட்டாயில் சேர்ப்பு' புதுச்சேரி மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி எம். ரவிச்சந்திரன் பிபிசியிடம் பேசிய போது, "கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி வட மாநில இளைஞர் ஒருவர் இந்திரா நகர் பகுதியில் விற்பனை செய்து கொண்டிருந்த பிங்க் கலர் பஞ்சுமிட்டாயைக் கைப்பற்றி அதனை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் உணவுப் பாதுகாப்புத்துறையால் தடை செய்யப்பட்ட ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சு நிறமி குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் கலந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உட்கொண்டால் கேன்சரை உருவாக்கும். இந்த நச்சு நிறமி தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நிறமியாகும். குறிப்பாக ஊதுபக்திகளில் பின் பகுதியில் பச்சை, மஞ்சள், பிங்க் ஆகிய நிறங்களில் இருக்கும். அதற்கு இந்த நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன.", என்றார் 'தமிழ்நாட்டில் எல்லையில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு' "புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் பஞ்சு மிட்டாய் வடமாநில இளைஞர்களால் தயார் செய்யப்பட்டு புதுச்சேரியில் சைக்கிளில் எடுத்து வந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட வட மாநில இளைஞர் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் 30 வடமாநில இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அரசு பரிந்துரை செய்த அளவிலான நிறமிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு அது கண்காணிக்கப்பட இருக்கிறது", என்றார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி. உணவு பாதுகாப்புத்துறை அனுமதித்த நிறமிகள் என்ன? "இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்( FSSAI- Food safety and Standards Authority of India) உணவு தரச் சான்றிதழ் பெற்ற நிறமிகளை மட்டுமே உணவுப் பொருளில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அமிலத்தன்மைகள் உள்ள டார்ட்ராசைன் மஞ்சள்( Tartrazine yellow), சன்செட் மஞ்சள்( sunset yellow), கார்மோசைன்(Carmoisine), எரித்ரோசின் (Erythrosine),பொன்சியோ 4 ஆர், இண்டிகோ கார்மைன் (Indigo carmine), ஃபாஸ்ட் கிரீன் ( fast green) ஆகிய நிறமிகளை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ரோடமின் பி என்ற நிறமி காரத்தன்மை கொண்டது. இது தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. இது பயன்படுத்துவது சட்ட விரோதமானது. மக்கள் உண்ணும் பஞ்சு மிட்டாய், லட்டு, கேசரி, சிக்கன், குளிர்பானம், பாட்டில் குடிநீர் ஆகியவற்றில் 100 பி.பி.எம் (100 PPM ( Parts per million அளவில் மட்டுமே நிறமிகள் சேர்க்க மட்டுமே அரசு அனுமதி அளித்து இருக்கிறது. குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி, ஜெம்ஸ் ஆகியவற்றில் 200 பி.பி.எம் நிறமிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஜெல்லியில் இருக்கும் வேதிப் பொருள் இதன் தாக்கத்தை குறைத்துவிடும் என்பதால் அரசு அனுமதி கொடுத்து இருக்கிறது", என்றார். 'பஞ்சுமிட்டாய் கொடுப்பதை தவிர்ப்பேன்' இதுகுறித்து பிபிசி இடம் பேசிய இராமநாதபுரத்தைச் சேர்ந்த 7 வயது குழந்தையின் தந்தையான ஜெ.ஆர். ஜோன்ஸ் அருண்ராஜ் கூறும்போது, "எனது 7 வயது மகளுக்குத் துவக்க காலத்தில் இருந்தே பஞ்சு மிட்டாய் கொடுப்பதை தவிர்த்து வந்து இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் அதில் அதிக அளவிலான சீனி, கலர் பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை. பொருட்காட்சிகள் அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது மட்டும் அதிக நிறமிகள் இல்லாத பஞ்சுமிட்டாய் தென்பட்டால் மட்டுமே வாங்கிக் கொடுப்பேன். அதுதான் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தாது", என்றார். மேலும் தொடர்ந்த அவர், "வெளிநாடுகளில் உணவு பாதுகாப்பில் அந்த அரசுகள் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றன. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய நிறமிகளை முற்றிலுமாக தடை செய்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாட்டில் அது மிக கடினமான வேலையாக இருக்கிறது. முன்பு கூட ஒரு பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் துரித உணவில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் அதில் எந்த தடை செய்யப்பட்டப் பொருளும் இல்லை என்று கூறி மீண்டும் சந்தையில் தனது பொருளை விற்கத் துவங்கியது. அரசு மக்கள் உண்ணும் உணவில் இருக்கும் கலப்படத்தை முற்றிலுமாக தடுத்தால் மட்டுமே நலமான வாழ்க்கை மக்களால் வாழ இயலும்" என்றார். ஐஸ் கிரீம், பஞ்சு மிட்டாய் குழந்தைகளுக்கு பிடிப்பது ஏன்? பிபிசியிடம் சுகாதாரத் துறை மதுரை இணை இயக்குநர் குமரகுருபரன் பேசிய போது, "உணவுப் பொருளை மக்களுக்கு பிடித்தவாறு காண்பிப்பதற்காக அதில் நிறமிகள் ( food additives), சேர்க்கப்படுகின்றன. இதன் வழியாக உணவு பார்க்கும் மக்களின் உணர்வைத் தூண்டி வாங்க வைக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் விரும்பி உண்ணும் பஞ்சு மிட்டாய், ஐஸ் கிரீம் போன்றவற்றில் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. பிங்க் கலர் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையது. எனவே, அதனை அரசு பரிந்துரை செய்த அளவைவிட அதிக அளவிலும், தடை செய்யப்பட்ட நிறமிகளைச் சேர்த்து குழந்தைகளை கவரும் விதமாக தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பொருட்கள் உண்பதற்கு மிக எளிதாக இருப்பதால் அதனை குழந்தைகள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகின்றனர்", என்றார். "இது தவிர பெரியவர்கள் உண்ணக்கூடியக் கேசரி, காரா சேவு, முறுக்கு, சாலையோரம் விற்கப்படும் சிக்கன் போன்றவற்றிலும் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்னைகள், அல்சர் உச்சக்கட்டமாக, புற்றுநோய் வரை கூட வரலாம். இது மாதிரியான நிறமிகள் சேர்க்கப்படும் உணவை முடிந்த அளவுக்கு மக்கள் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. அதேபோல் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நிறமிகள் அற்ற பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீமை கவனத்துடன் வழங்குவது அவர்களின் உடலுக்கு பெரிய அளவிலான தீங்கினைக் கொடுக்காது", என்கிறார். தமிழ்நாட்டு உணவு பாதுகாப்புத் துறை அந்தந்த மாவட்டங்களில் இருக்கக் கூடிய பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு வேண்டுமென கேட்டுக் கொண்டு இருக்கிறது. அதன்படி அதிகாரிகள் மாவட்டம் தோறும் ஆய்வினை செய்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3g09v3456po
  19. பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்களையும் விசாரணைக்குட்படுத்த முடிவு 10 FEB, 2024 | 08:39 PM (நமது நிருபர்) இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து விற்பனை மற்றும் கொள்வனவு நிறுவனங்களையும் விசாரிக்கும் பணியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் மருந்து கொள்வனவு செய்த நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தொடர்புடையவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மேற்படி கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, பொலிஸார் சமீபத்தில் சட்டமா அதிபருடன் தங்களது விசாரணையின்போது முன்னெடுக்கப்பட்ட சட்ட ரீதியான விடயங்கள் சம்பந்தமாகவும் பகிரப்பட்டது. ஹியுமன் இம்யூனோகுளோபுலின் கொள்வனவின் போது நடைபெற்ற முறையகேடான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் பலர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176060
  20. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய பிரபல பாடகர் ஹரிகரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட, ஆள் அடையாளத்தை உறுதி செய்துக்கொள்ள முடியாத ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதைத் தவிர, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பிரபல தென்னிந்திய நடிகையான ரம்பா, இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஐரோப்பாவில் வாழும் இந்திரன் குடும்பத்தினர், யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணத்தில் நோர்தன் யூனி என்ற பெயரில் பல்கலைக் கழகமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்தும் நோக்குடன் ஹரிகரன் தலைமையிலான இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய நடன கலைஞரான கலா மாஸ்டர் ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் யோகி பாபு, சிவா, ரெடிங்டன் கிங்ஸ்லி, டிடி எனப்படும் திவ்யதர்ஷினி, புகழ், சுவேதா மோகன், ஸ்ரீநிஷா உள்ளிட்ட பல கலைஞர்கள் வருகை தந்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத வகையில் நடைபெறும் நிகழ்வாக இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட போதிலும், கடும் மழை காரணமாக நிகழ்வு பிப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, இந்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் நகரில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன? பிரபல பாடகர் ஹரிகரன் தலைமையிலான பிரமாண்ட இசை நிகழ்ச்சி நேற்று மாலை ஆரம்பமாகியது. இந்த நிகழ்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசேட பிரமுகர்களுக்காக டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டன. ''இந்த இசை நிகழ்ச்சியில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்கள் மூலம் கிடைக்கும் பணம், கல்விக்காக ஒதுக்கப்படும்" என ரம்பாவின் கணவரும், முதலீட்டாளருமான இந்திரன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்தார். பல கோடி ரூபாய் செலவில் இந்த நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்த பின்னணியில், இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. விசேட பிரமுகர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டு, அதற்கு பின்புறத்தில் இலவசமாக நிகழ்ச்சியை பார்வையிட வருகைத் தந்தவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த தருணத்தில், இலவசமாக பார்வையிட வருகைத் தந்த இளைஞர்கள், விசேட பிரமுகர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பாதுகாப்பு தடுப்பு வேலிகளை கடந்து வர ஆரம்பித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த போலீஸார் முயற்சித்த போதிலும், போலீஸாரால் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. அத்துடன், வீடியோ பதிவுகளை மேற்கொள்வதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மேடைகளில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஏறியது,பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மேடையிலிருந்து கீழே இறங்குமாறு கோரிய போதிலும், ரசிகர்கள் அதனையும் பொருட்படுத்தவில்லை என போலீஸார் கூறுகின்றனர். இந்த நிலையில், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இளைஞர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போலீஸ் அதிகாரிகள் முயற்சித்த பின்னணியில், அங்கு அமைதியின்மை மேலும் வலுப்பெற்றது. நிகழ்ச்சியை நடாத்துவதற்காக வருகை தந்த கலா மாஸ்டர், டிடி, சிவா, ஹரிகரன் உள்ளிட்ட கலைஞர்கள், ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கோரிய போதிலும், ரசிகர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். ''உங்களை பார்ப்பதற்கு நாங்கள் ஆசையாக வந்திருக்கின்றோம். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் காலில் வீழ்ந்து நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எல்லாம் கொஞ்சம் அமைதியாக இருங்கள்." என நடன கலைஞர் கலா மாஸ்டர் மேடையில் அறிவித்த போதிலும், ரசிகர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. நிகழ்ச்சியை அமைதியாக நடத்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்த போதிலும், ரசிகர்கள் அதற்கு செவிமடுக்காததை தொடர்ந்து, இசை நிகழ்ச்சி முழுமையாக நிறுத்தப்பட்டது. சமூக வலைத்தள பதிவுகள் இசை நிகழ்ச்சியில் அமைதியின்மை ஏற்பட்டு, இசை நிகழ்ச்சி இடை நடுவில் நிறுத்தப்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது ''அறிவார்ந்த சமூகம் இன்று இப்படி ஆகிவிட்டதே என்று கவலையளிக்கின்றது" என இலங்கையின் பிரபல வானொலி ஒலிபரப்பாளர் ரஜீவ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,FB/RJ RAJIV பட மூலாதாரம்,FB/ CHANDRU KUMAR இதேவேளை, ''பொங்கும் தமிழர்... மங்கும் கலாசாரம்.... பேரினவாதிகள் எதையும் செய்ய தேவை இல்லை" என பிரபல சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான சந்திரகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் கலாசார சீர்கேட்டை நிறுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார். ''என்ன நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி நடந்ததோ தெரியாது. ஆனால், நாங்கள் இதை பொருளாதார ரீதியில் வாய்ப்பாக பயன்படுத்த தவறி விட்டோம். மற்றையது இவ்வளவு காலமும் போதைப்பொருள் கூடுகின்றது, பெண்கள் பிரச்னை, மதுபானம் கூடுகின்றது என்று எல்லோருக்கும் சந்தேகம் தான் இருந்தது. இப்போது அதனை உறுதிப்படுத்தி விட்டார்கள். போராட்டம் இடம்பெற்ற ஒரு இடத்திற்கு இழுக்காகும். தமிழர் பகுதிகளில் கலாசார சீர்கேடு அதிகரிப்பதாக கூறுவதை நிறுத்த வேண்டும். படம் பார்க்கின்றோம் தானே. அவ்வாறு என்றால், படம் போடக்கூடாது. திரையரங்கு மூடப்பட வேண்டும். படத்தில் வருகின்ற தமன்னா, நேரில் வந்தால் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள்?. யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒழுக்கம், பண்பாடு அவசியமானது. எங்களை பண்பாக நடத்திக் கொள்ளும் பண்பும் நடத்தையும் இவர்களிடம் இல்லை. எங்களுக்கு எங்களுடைய சுய கட்டுப்பாடு அவசியமானது. இது சுயக் கட்டுப்பாடு இல்லாத சமூகமாக மாறியுள்ளது. மற்றவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நாம் நம்மை சுய விமர்சனம் செய்து பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட பண்பை நாங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் பாரிய பிரச்னையை தோற்றுவிக்கும். இப்படியான சமூகத்தை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்ய போகின்றோம்." என சமூக செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். தமிழர் பகுதியில் கலாசார சீர்கேடா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்பில் காணப்பட்ட தவறே இந்த பிரச்னை எழுவதற்கான பிரதான காரணமாக இருந்திருக்க கூடும் என்பதே தவிர, கலாசார சீர்கேடு என இதனை கூற முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் பாரதி ராஜநாயகம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''கலாசார சீர்கேடு என சொல்ல முடியாது. நிகழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நடப்பது ஒன்று. இங்கு நடந்த நிகழ்ச்சியில் சரியான முறையில் ஒழுங்குப்படுத்துவதில் குறைபாடுகள் இருந்திருக்கின்றது. டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டவர்கள் நீண்ட இடைவெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால், அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம். அதனாலேயே தடைகளை உடைத்துக் கொண்டு முன்னோக்கி வந்திருக்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன். பிரபல நடிகர்கள், நடிகைகள் வருகின்றார்கள் என்பதனால், அவர்களை பார்வையிட அனைவருக்கும் ஆர்வம் இருந்திருக்கும். ஓரளவிற்கேனும், அவர்களை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். டிக்கெட்களை பெற்றுக்கொண்டவர்களுக்கும், இலவசமாக பார்வையிட வந்தவர்களும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளை பார்வையிட முடியாது போனமை தொடர்பில் எழுந்த விரக்தியே இந்த பிரச்னைக்கு காரணம் என நினைக்கின்றேன். அதைதவிர, கலாசார சீர்கேடு என கூற முடியாது." என அவர் கூறுகின்றார். ''நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது - கலைஞர்கள் திருப்தியாக நாடு திரும்பினார்கள்" "நிகழ்சசி ஏற்பாட்டாளர்களின் குறை என இதனை கூற முடியாது. மக்களின் உணர்வின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்" என ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''அருமையான நிகழ்ச்சி. மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டினார்கள். இப்படியான ஒரு நிகழ்ச்சி கொழும்பில் கூட நடாத்தப்படவில்லை. இவ்வளவு நட்சத்திரங்களையும் பார்த்ததன் பிறகு அவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்படவில்லை. முழுமையாக நடாத்தப்பட்டது. இடையில் மாத்திரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. யாருக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அறிவிப்பொன்று மாத்திரம் விடுக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியை முழுமையாக நடாத்தினோம். ஏற்பாட்டாளர்களின் குறை என்று சொல்ல முடியாது. எதிர்பார்க்க முடியாத கூட்டம் வந்தது. இவ்வளவு பெரிய ரசிகர்கள் ஒன்று கூடினால், எந்தவொரு ஏற்பாட்டாளராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏற்பாட்டாளர்களின் பிழை என்று சொல்வதற்கு எதுவும் நடக்கவில்லை. ரசிகர்கள் முன்னோக்கி நகர்ந்தார்கள். அவ்வளவு தான். அதுவொரு பெரிய பிரச்னை கிடையாது. அது மக்களின் உணர்வு வெளிப்பாடு. வெளிப்படுத்தி விதம் வித்தியாசமாக இருந்தது. அனைத்து கலைஞர்களும் திருப்தியாக நாடு திரும்பினார்கள். இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய ரசிகர்களை நாங்கள் பார்வையிடவில்லை என கலைஞர்கள் கூறினார்கள். மக்கள் இவ்வளவு அன்பு கொடுத்ததை தாங்கள் பார்த்ததில்லை என அவர்கள் கூறினார்கள்" என இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cd1jrv1118no
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் காபி மற்றும் தேநீரை இனிமையாக்கும் சர்க்கரையின் இனிப்புச் சுவை, அமெரிக்காவின் கடைசிப் பிரதேசங்களில் பல தசாப்தங்களாக அடிமைத் தனத்தை நீடித்தது. ஸ்பெயின் அரசு 1820ஆம் ஆண்டில் அடிமை வர்த்தக முறையை நிறுத்த வேண்டும் என்பதை அங்கீகரித்தாலும், 1870ஆம் ஆண்டு வரையிலும் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாக மக்கள் கடத்தப்படுவது நிறுத்தப்படவில்லை. அந்த 50 ஆண்டுகளில், வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் சர்க்கரை உற்பத்தி முக்கியப் பங்கு வகித்தது. சர்க்கரை உற்பத்தி பெரும் வணிகமானதன் காரணமாக, ஐரோப்பாவில் அடிமை முறையைக் கைவிட்ட கடைசி நாடாக ஸ்பெயின் இருந்தது. அந்த வணிகமும் அதைக் கட்டுப்படுத்திய குடும்பங்களும் சாக்கரோக்ராசி (saccharocracy) என அழைக்கப்படுவதாக 32 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜெசஸ் சன்ஜூர்ஜோ, தான் எழுதிய ‘வித் தி ப்லெட் ஆப் அவர் ப்ரதர்ஸ்’ (With the Blood of our brothers) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பாடப்பரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கரும்பு சாகுபடியைக் கட்டுப்படுத்திய குடும்பங்கள், அட்லாண்டிக் பகுதியில் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறினர். அவர்கள், அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தாமதப்படுத்தினர். அவர்களின் செல்வம் பெருகியது. இதனால், கியூபா, ஸ்பெயின் அடிமைத்தனத்தின் கடைசிக் கோட்டையாக இருந்தது. பிபிசி சார்பில் அந்த நூலின் எழுத்தாளர் முனைவர் ஜெசஸ் சன்ஜூர்ஜோவிடம் பேசினோம். அவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளையும், அவர் அதற்கு அளித்த பதில்களையும் இந்தக் கட்டுரையில் காண்போம். ஐரோப்பாவில் கடைசிவரை அடிமை முறையை ஸ்பெயின் கடைப்பிடித்தது ஏன்? பட மூலாதாரம்,SAMUEL CRITCHELL ஸ்பானிய ஏகாதிபத்திய சூழலில் கியூபாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு சர்க்கரையின் பங்கு முக்கியமாக இருந்தது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தின் வடக்கில் உள்ள புதிய கனரக தொழிற்சாலை மற்றும் ஜவுளித் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களில் அதிகம் பேர் காபி மற்றும் தேநீர் அருந்தத் தொடங்கினார்கள். அதனால், அவற்றை இனிமையாக்க வேண்டிய அவசியம் எழுந்தது. தேநீர் அல்லது காபியில் இனிப்பு சேர்ப்பதற்கான பாரம்பரிய வழிகளான தேன் அல்லது இயற்கை சர்க்கரை (பீட் செடிகளில் இருந்து தயாரிக்கப்படுவது) மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. ஆனால், கரீபியன் மற்றும் வடக்கு பிரேசிலின் வெப்பமான காலநிலையில் உற்பத்தி செய்யப்படும் கரும்பு சர்க்கரை, தேன் மற்றும் இயற்கை சர்க்கரைக்கு மலிவான மாற்றாகத் தோன்றியது. இந்தச் சூழலில்தான், இந்தப் புதிய பொருளாதாரத் தேவைகளுக்கு ஆப்பிரிக்க மக்கள் அடிமைத் தொழிலாளர்களாக இறக்குமதியாகும் சம்பவங்கள் நடைபெறத் தொடங்கின. சாக்கரோக்ராசி என்றால் என்ன? அப்படி அழைப்பது சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES சாக்கரோக்ராசி, ஒரு பொருளாதார மற்றும் அரசியல் உயர் வர்க்கமாகப் பார்க்கப்படுகிறது. இது கியூபாவில் சர்க்கரை உற்பத்தியுடன் இணைக்கப்பட்டது. அந்தக் குடும்பத்தினர்தான் அடிமைகளுக்கும் உரிமையாளர்கள், தோட்டங்களுக்கும் உரிமையாளர்கள். அடிமைத் தொழிலாளர்களை கடத்துவது, அவர்களை இடம் மாற்றுவது, அவர்களுக்கு செலவு செய்வது என அனைத்தையும் அந்தக் குடும்பத்தினரே பார்த்துக்கொள்வார்கள். முழு அட்லாண்டிக் பகுதியிலும் அவர்கள்தான் பணக்காரர்களாக இருந்தனர். 1820ஆம் ஆண்டு முதல் அடிமைமுறை சட்டவிரோத செயல் என்றாலும், அந்த முறை தொடர்ந்தது மட்டுமல்லாமல், அந்த முறை மிக வேகமாகவும் வளர்ந்தது. இந்த அடிமை முறையை ஊக்குவிப்பது, அரசியல், நிர்வாக, ராணுவ, மத மற்றும் பொருளாதார சக்திகளுக்கு இடையே ஒரு கச்சிதமாகப் பிணைக்கப்பட்ட வலையமைப்பாக இருந்தது. இது மிகக் குறைந்த நபர்கள் தங்களின் செல்வத்தைப் பெருக்கி, குவிப்பதற்கான ஏற்பாடாக இருந்தது. இவை அனைத்தையும் செய்த அந்த நபர்களும், அந்தக் குடும்பங்களுமே சாக்கரோக்ராசி என்று அழைக்கப்படுகின்றனர். கடத்தப்பட்ட அடிமைகள் என்ன ஆனார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES தோட்டங்கள் மற்றும் அடிமைகளின் உரிமையாளர்களாக ஒரு சில குடும்பங்களே இருந்தாலும், 19ஆம் நூற்றாண்டில் கியூபா எப்படி இருந்தது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வதில், அடிமைத்தனம் முக்கியப் பங்கு வகித்தது. ஒரு பிரிட்டிஷ் தூதரக அதிகாரி தனது துணிகளைத் துவைக்க அடிமைத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தியதற்காக சக ஊழியரால் கண்டிக்கப்பட்டதைப் பற்றிய ஒரு கதை உள்ளது. பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளருடனான ஒரு கடிதப் பரிமாற்றத்தில், அந்த வேலையைச் செய்ய விரும்பும் ஒரு பெண்ணை ஹவானாவில் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று கூறி தன்னை நியாயப்படுத்தினார் அந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி. ஆனால் அது மட்டுமல்ல. ஒரு நவீன நிறுவனத்தைப் போன்று, தொழிலாளர்களை ஏலத்தில் எடுக்கும் முறையும் பயன்படுத்தப்பட்டது. இதனால், பல முறை ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாகக் கடத்தப்பட்டபோது, அவர்கள் பல்வேறு வழிகளில் தப்பித்துள்ளனர். ஆப்பிரிக்க மக்கள், கப்பலில் கடத்தப்பட்டபோது, அவர்கள் சண்டையிட்டுத் தப்பித்துள்ளனர், சில முறை, பிரிட்டிஷ் ராணுவம், அடிமைகளாகக் கடத்தப்படும் மக்கள் பயணிக்கும் கப்பலைக் கைப்பற்றி, அவர்களை விடுவித்துள்ளது. கியூபாவில் மக்கள் அடிமைகளாக ஏலம் விடப்படுவது வெற்றிகரமாக நடந்தது. ஆனால், அவர்கள் பெரிய கடத்தல்காரர்களோ அல்லது அடிமைகளை வைத்திருக்கும் உரிமையாளர்களோ இல்லை. அவர்கள் பணம் மற்றும் கடன் வசதி இல்லாத மக்கள். அவர்களுக்கு மனிதர்களை அடிமைகளாக ஏலம் எடுப்பது ஒரு லாபகரமான வணிகமாக இருந்தது. ஸ்பெயினில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பிரிட்டிஷ் அரசு ஆர்வமாக இருந்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருபுறம், 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டனில் தோன்றிய குவாக்கர் உலகம் - அடிமை வர்த்தகத்திற்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு எதிராகவும், நெறிமுறை, மனிதநேயம் மற்றும் கிட்டத்தட்ட கோட்பாடு சார்ந்த மத நிலைப்பாடுகளில் இருந்து முற்றிலும் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள் “எங்கள் காலனிகளான ஜமைக்கா மற்றும் பார்படாஸில் அடிமை வர்த்தகத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்தால், எங்கள் ராணுவ மற்றும் அரசியல் கூட்டாளிகளும் அவ்வாறே செய்ய வேண்டும்," எனக் கூறி வந்தனர். ஆனால் ஸ்பெயினுக்கு வேறு விதமான சிக்கல்கள் இருந்தன. ஸ்பெயினில் நெப்போலியன் படைகளுக்கு எதிரான போரில், ஆங்கிலேயர்கள், ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசியர்களுடன் போரிட்டனர். அந்த நேரத்தில் மிக நெருக்கமான அரசியல் மற்றும் ராணுவ உறவு உருவானது. இதனால், ஸ்பெயினின் நிதி நெருக்கடியை பிரிட்டன் அறிந்திருந்தது. கடன்பட்டிருந்தால், ஸ்பெயினின் உள்நாட்டுக் கொள்கையை அமைப்பதில் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கும் என பிரிட்டன் கருதியது. எடுத்துக்காட்டாக, 1817இல் ஆங்கிலேயருடன் அடிமை வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் சர்வதேச ஒப்பந்தத்தில், மன்னர் ஏழாவது ஃபெர்டினாண்ட், அது ஒரு சமூகவிரோத செயல் என்றும், அது கிறிஸ்தவ மதத்திற்கு முரணானது என்றும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டார். ஆனால், அடிமைமுறை அதுவரையில் ஒரு சட்டபூர்வமான வணிகமாக இருந்ததையும், அதை ஸ்பெயின் அரசு ஆதரித்ததையும் அவர் புரிந்துகொண்டார். அதனால்தான், பிரிட்டிஷ் அரசு கியூபாவின் பொருளாதாரத்திற்கும், அடிமைகளாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நான்கு லட்சம் பவுண்டுகள் வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், பணம் வந்தவுடன், மெக்சிகோவை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன், ரஷ்யாவின் முதலாம் ஜார் அலெக்சாண்டரிடம் இருந்து போர்க் கப்பல்களை வாங்கப் பயன்படுத்துகிறார். அடிமைகள் கடத்தப்பட்ட கப்பல்களை தாக்கிய ஆங்கிலேயர்கள், ஸ்பானிய கப்பல்களைத் தாக்காதது ஏன்? பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தின் பார்வையில், பிரேசில் அதன் பேரரசுடன் ஒப்பிடக்கூடிய தேசம் அல்ல. 19ஆம் நூற்றாண்டில் இருந்த காலனித்துவ, இனவாத மற்றும் ஏகாதிபத்திய தர்க்கத்தில், அது(பிரேசில்) "பெரியவர்களின்" மேசையில் உட்கார அனுமதிக்கும் தார்மீக நியாயத்தன்மை, ராணுவ சக்தி மற்றும் வரலாற்று கௌரவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES மறுபுறம், பிரிட்டிஷ் அதிகாரிகள் ஸ்பானிய சாம்ராஜ்யத்திற்கு மரியாதை அளித்தனர். ஆனால், அதே மரியாதை ஸ்பானிய அதிகாரிகளுக்கு இல்லை. ஸ்பானிய அதிகாரிகளைக் குறிப்பிட்டுப் பேசும் இனவெறிப் பேச்சும் இருந்தது. ஆனால், அதை லத்தீன் அமெரிக்க அரசுகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் தொனியோடு ஒப்பிட முடியாது. சர்வதேச உடன்படிக்கைகளின் வெளிப்படையான மீறல் காரணமாக ஸ்பானிய பேரரசுடன் போரை அறிவிக்கும் அபாயம் இருந்தது. ஆனால், அது பிரிட்டிஷ் எடுக்கத் தயாராக இல்லாத ஒரு நடவடிக்கை. அமெரிக்காவிற்கு மிக அருகில் உள்ள கியூபாவின் புவியியல் அமைவு இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வட அமெரிக்க தலையீடு பற்றிய யோசனை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்தது. அடிமை வர்த்தகம் இறுதியாக எப்படி முடிவுக்கு வந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES அடிமை வர்த்தகம் 1870இல் முடிவடைந்தது என்று தீர்மானிக்கும் அளவிற்குப் பெரிய வரலாற்றுச் சான்று எதுவும் இல்லை. முடிவை அடைய, ஒருபுறம், அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் தெற்கிற்கும், வடக்கிற்கும் நடந்த சண்டையில், வடக்கு வெற்றி பெற்றது. அங்கு, ஒரு சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது. அது பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் இடையிலான கூட்டு ராணுவ நடவடிக்கைகள் தொடர்பானது. அந்த ஒப்பந்தம், வட அமெரிக்காவில் அடிமைகளைக் கடத்தும் கடத்தல்காரர்களைத் தடுக்கவும், கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இயங்கும் கடத்தல் சம்பவங்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது. மறுபுறம், ஸ்பெயினில் அடிமை ஒழிப்பு இயக்கம் ஒன்று உருவானது. பின்னர் 1865ஆம் ஆண்டுக்குப் பிறகு அதில் பலரும் தங்களை இணைத்துக் கொண்டனர். ஸ்பானிய காலனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளரான ஜூலியோ விஸ்காரோண்டோ இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். இதற்குப் பிறகு, இந்த இயக்கம், முதலில் அடிமை வர்த்தகத்திற்கும் பின்னர் அடிமைத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க ஸ்பெயின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. https://www.bbc.com/tamil/articles/cy6ep3xwqpzo
  22. இந்தியாதான் காப்பாற்றியது - நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம்- இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ரணில் Published By: RAJEEBAN 10 FEB, 2024 | 04:43 PM இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை இந்தியா வழங்கிய உதவிகள் ஆதரவிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமான wion ற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு நன்றி இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்கமாட்டோம், இதன் காரணமாகவே இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கேள்வி – எனது முதல் கேள்வி இந்திய இலங்கை உறவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள் இந்த உறவுகள் குறித்த உங்கள் தொலைநோக்கு பார்வை என்ன ? பதில் - உண்மையில் இந்திய இலங்கை உறவுகள் முன்னேற்றமடைகின்றன. நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த முயல்கின்றோம், இரு நாடுகளிற்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க முயல்கின்றோம். இதுவே சரியான வழி என நான் கருதுகின்றேன். கேள்வி- இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த வேளை 4 பில்லியன் டொலர் உதவியுடன் முன்வந்த நாடு இலங்கை உங்கள் நாட்டிற்கான இந்தியாவின் உதவியை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்-நாங்கள் இந்தியாவிற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம் இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பிபிழைத்திருக்கமாட்டோம். இதன் காரணமாகவே நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையிலான நெருங்கிய உறவு குறித்து கவனம் செலுத்துகின்றோம் குறிப்பாக வர்த்தக பொருளாதார வெற்றிகள் குறித்து முன்னோக்கி செல்வதற்கு இதுவே வழி. கேள்வி- உங்கள் நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது எவ்வாறு உள்ளது? பதில்- நாங்கள் கடன் மறுசீரமைப்பை முன்னெடுத்தோம் அதனை பூர்த்தி செய்துள்ளோம். நாங்கள் ஓசிசியுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளவேண்டும். எங்களின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், ஆரம்ப கட்ட நடவடிக்கைள் தற்போது இடம்பெறுகின்றன உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான உடன்படிக்கைக்கு பின்னர் நாங்கள் ஏனைய அனைத்து கடன்வழங்கிய நாடுகளுடனும் நிதியமைப்புகளுடனும் உடன்படிக்கையை செய்துகொள்ளவேண்டும். கேள்வி – அது எப்போது சாத்தியமாகும்? பதில்- ஜூன் மாதமளவில் அது சாத்தியமாகும் என நினைக்கின்றேன். கேள்வி – பிராந்திய பாதுகாப்பு என்ற விடயம் குறித்து பேசும்போது சீன கப்பல்களின் விஜயம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. சீன கப்பல்களிற்கு அனுமதி வழங்குவது இல்லை என்பது குறித்து இலங்கை ஆராய்ந்து வருவதாக அறிகின்றேன். சீன கப்பல்களின் விஜயங்கள் குறித்தும் அவற்றிற்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானம் குறித்தும் கருத்துகூற முடியுமா? பதில்- நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைளிற்கு அனுமதியளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளளோம். இலங்கைக்கு வந்த சென்ற சீன கப்பல்கள் கடல் ஆராய்ச்சியுடன் தொடர்புபட்டவை. அதன் காரணமாக அவற்றிற்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம். ஏனைய நாடுகளின் ஏனைய கப்பல்களுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளதா? இந்த ஆண்டு இலங்கையின் திறனை கட்டியெழுப்புவது என நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஏனையவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இலங்கை தனது சொந்ததிறனை கட்டியெழுப்பவேண்டும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன்காரணமாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நீரியல் விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு கப்பல்கள் வரமுடியாது என நாங்கள் தெரிவித்துள்ளோம். ஆனால் வழமையான விஜயத்தினை மேற்கொள்ளும் கடற்படை கப்பல்களாகயிருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்குவோம். கேள்வி – உங்களிற்கு சீனா கப்பல்களின் வருகை குறித்து தெரியவருமா? பதில் - சீன கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன, இந்திய கப்பல்கள் வருகின்றன, ஜப்பான் கப்பல்கள் வருகின்றன அனைத்து கப்பல்களும் வருகின்றன – அமெரிக்க கப்பல்கள் வருகின்றன. கேள்வி- இந்தியா இந்த விஜயங்கள் குறித்து கவலையடைந்துள்ளது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்துவரும் பிரசன்னம் குறித்து கவலையடைந்துள்ளது என்பதால் சீனா இந்தியாவிற்கும் உங்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றது என கருதுகின்றீர்களா? பதில் - சீனகப்பல்கள் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகின்றன. சீனா இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயலவில்லை, நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் கரிசனை கொள்ளவேண்டிய விடயம் என்று எதுவுமில்லை, இலங்கைக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இல்லை, குறையவுமில்லை, மேலும் இலங்கைக்கு வருகை தராத நாடுகளின் கப்பல்களை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கின்றோம். கேள்வி – கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனாவின் பங்களிப்பு – சீனா உரிய பதில்கள் இல்லாமல் இழுத்துச்செல்கின்றதே? பதில் - கடன் மறுசீரமைப்பு குறித்து சீனாவிடம் நோக்கம் உள்ளது. அவர்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவில் இல்லை. ஆனால் அவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். இதற்கான அவர்களின் கட்டமைப்பு ஏனைய நாடுகளிடமிருந்து வித்தியாசமானது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயற்படவேண்டும். அந்த நாட்டின் எக்சிம் வங்கியுடனும் இணைந்து செயற்படவேண்டும். கேள்வி – மற்றுமொரு முக்கியமான விடயம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது. இது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றது – முன்னோக்கி செல்வதற்கான வழி என்ன? பதில் - அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம். அதன் காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும்.இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டித்தன்மை மிகுந்ததாக காணப்படும். மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும். இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம். சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன. என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம். ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன. https://www.virakesari.lk/article/176049
  23. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது. கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. https://thinakkural.lk/article/291294
  24. 07 FEB, 2024 | 10:29 PM அமரர் என். சண்முகதாசனின் 31ஆவது நினைவு தினம் (பெப்ரவரி 08) (சமுத்திரன்) 'பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு 1939 - 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அதன் பின்னர், நான் அதனின்று வழுவவேயில்லை' இந்த வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் சண்முகதாசன். தனது அரசியல் நினைவுகள் பற்றிய நூலை அரசியலில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில் 'Political Memoirs of an Unrepentant Communist' எனும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் 1989 ஜூலையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. இன்று அந்த நூலையும் அவருடைய மற்றைய அரசியல் எழுத்துக்களையும் வாசிப்பவர்கள் சண்முகதாசனின் அரசியல் வாழ்க்கை இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றுடன் மிகவும் பின்னிப் பிணைந்திருப்பதை உணர்வர். அவர் கொண்டிருந்த சர்வதேச அரசியல் தொடர்புகள் பற்றியும் பல தகவல்களை அந்த நூல் தருகிறது. பத்தொன்பது வயது பல்கலைக்கழக மாணவனான சண்முகதாசன் கம்யூனிஸ்டானபோது இலங்கையின் இடதுசாரி இயக்கம், நம்பிக்கை தரும் எழுச்சி மிகுந்த ஆரம்பகட்டத்தில் இருந்தது. ஆனால், அவர் 1993ஆம் ஆண்டு தனது 73 வயதில் மரணிக்கும்போது அவருடைய தலைமையில் உருவான கட்சியும் இயக்கமும் தொடர்ச்சியான பல உடைவுகளுக்குள்ளாகிச் சிதறுண்ட நிலையில் இருந்தது. அதைப்‍ போலவே நாட்டின் முழு இடதுசாரி இயக்கமும் சிதறுண்டு செல்வாக்கு இழந்த வண்ணமிருந்தது. அது ஒரு துன்பியல்கரமான நிலைவரம். இந்த வரலாற்றுக் காலவெளியில்தான் 'சண்' (Shan) என்று பிரபல்யமடைந்த சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இடம்பெறுகிறது. அதை முழுமையாக ஆராய்வது எனது நோக்கமல்ல. ஆனால், அது நிச்சயமாக ஆராயப்படவேண்டிய ஒரு வரலாறுதான். சண்முகதாசன் மறைந்து 31 ஆண்டுகளாகின்றன என்று நண்பர் தனபாலசிங்கம் நினைவூட்டியபோது அவருடைய நூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு 2020ஆம் ஆண்டில் நான் பங்குபற்றிய இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அப்போது நான் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும் எழுப்பிய கேள்விகளும் அத்துடன் கூடவே மனதுக்கு வந்தன. ஒரு நீண்ட கட்டுரையை எழுதவேண்டும் போலிருக்கிறது. ஆனால் இப்போதைக்கு சில குறிப்புகளை மட்டுமே பதிவிட முடிகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் மானிப்பாயில் ஜூலை 3, 1920 பிறந்த நாகலிங்கம் சண்முகதாசன் 1993 பெப்ரவரி 8ஆம் திகதி பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் நகரில் காலமானார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் தனது மகளின் குடும்பத்துடன் தங்கியிருந்தார். சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த சண்முகதாசன் மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்று 1938 - 39இல் கொழும்பில் இருந்த பல்கலைக்கழக கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் வரலாற்றுத் துறையில் விசேட பட்டப்படிப்பை 1943ஆம் ஆண்டில் முடித்துக்கொண்டபோது அது இலங்கை பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் பெற்றிருந்தது. பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் இருந்து சண்முகதாசன் இடதுசாரி அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். விசேடமாக, பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அவர் பங்குபற்றினார். பல்கலைக்கழகத்தின் நூல் நிலையத்தில் மார்க்சிய லெனினிச நூல்களை நிறைய வாசித்தார். அந்த நாட்களில் அவருடைய அரசியல் வளர்ச்சி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுத் திரும்பிய மூன்று இளம் கம்யூனிஸ்டுகளுடன் கிடைத்த உறவினால் துரிதப்படுத்தப்பட்டது. பீட்டர் கெனமன், பொன்.கந்தையா, வைத்தியலிங்கம் ஆகியோரே அந்த மூவருமாவர். அவர்கள் இங்கிலாந்தில் மாணவர்களாக இருந்தபோது அந்த நாட்டில் எழுச்சி பெற்றுவந்த பாசிச எதிர்ப்பு மற்றும் சோசலிச அரசியலினால் ஆகர்சிக்கப்பட்டார்கள். பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியில் அவர்கள் இணைந்தார்கள். பல்கலைக்கழகத்தில் சண்முகதாசன் மாணவர் சங்கத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டு மேலும் பிரபலமானார். இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜ கட்சி 1935ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவந்தது. 1939 இறுதி - 1940 ஆரம்பத்தில் சமசமாஜ கட்சி பிளவடைந்தது. இதன் விளைவாக, 1943 ஜூலை 3 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. ஒரு தற்செயல் நிகழ்வாக அன்றைய தினமே சண்முகதாசனின் பிறந்ததினமாகவும் இருந்தது. அதே ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பரீட்சையை எழுதி முடித்ததும் உடனடியாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். அவர் சேர்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க தலைமையில் கட்சி உருவாக்கப்பட்டது. வைத்தியலிங்கம் கட்சியின் கோட்பாட்டாளரானார். பீட்டர் கெனமன், கந்தையா, கார்த்திகேசன் மற்றும் பல அறிவாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கட்சியின் முழுநேர ஊழியராவதற்கு முடிவெடுத்தது பற்றிய சண்முகதாசனின் பதிவு அவருடைய இளமைக்கால இலட்சியக் கனவையும் சோசலிசம் மீதான திடமான நம்பிக்கையையும் அறிந்துகொள்ள உதவுகிறது. பல்கலைக்கழக இறுதியாண்டுப் பரீட்சைக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக ஏற்கெனவே பட்டப்படிப்பை முடித்த ஒரு தோழரை சண்முகதாசன் சந்தித்தார். பல்கலைக்கழகத்துக்கு பின்னர் என்ன செய்வதாக உத்தேசம் என்று தனது தோழரிடம் சண்முகதாசன் கேட்டார். அதற்கு சண்முகதாசன் அரசியல் வேலை செய்யும் நோக்கம் இருப்பதால் ஒரு ஆசிரியத் தொழிலைச் செய்யப்போவதாக பதிலளிக்கிறார். அப்போது அந்த தோழர், "அப்படியானால் கட்சியின் முழுநேர ஊழியரானால் என்ன" என்று கேட்டார். வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று சண்முகதாசன் கேட்டார். வாழ்க்கைச் செலவுக்கு கட்சி மாதம் அறுபது ரூபா வழங்கும் என்றார் தோழர். அதையடுத்து அவர் கட்சியின் முழுநேர ஊழியராகும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவருடைய பெற்றோருக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது. பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களுக்கூடாக மகன் பல்கலைக்கழக பட்டதாரியாவதற்கு உதவிய பெற்றோர் அவர் நிருவாக சேவையில் அல்லது வேறொரு உயர்மட்ட அரச சேவையில் இணைந்து தன்னையும் குடும்பத்தையும் மேனிலைப்படுத்துவார் எனும் எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தனர். ஆனால் பட்டதாரி மகனோ அறுபது ரூபா ஊதியத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேவை செய்வதற்கு முடிவெடுத்துவிட்டார். ஏமாற்றமடைந்த தாயார் மகனைப் பார்த்து 'உனது பிற்காலத்தில் நீ என்ன செய்வாய்? சுகவீனமுற்றால் என்ன செய்வாய்?' என்று கேட்டார். அதற்கு சண்முகதாசன் 'அப்போது நாம் சோசலிசத்தை அடைந்துவிடுவோம். ஆகவே, அது பிரச்சினை இல்லை' என்று தன்னம்பிக்கை ததும்ப பதிலளிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி உதயமாகி இரு வாரங்கள் மாத்திரமே கடந்த நிலையில், இறுதியாண்டு பரீட்சை எழுதியதும் கட்சியின் சேவையாளனாக மாறிய சண்முகதாசன் அன்று ஆரம்பித்த அந்த நீண்ட அரசியல் வாழ்க்கை கட்சியினதும் இலங்கை இடதுசாரி இயக்கத்தினதும் வரலாற்றுடன் அதன் எழுச்சியுடனும் வீழ்ச்சியுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. அதில் சில முக்கிய அம்சங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 1943 -1963 காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் சண்முகதாசன் பங்காற்றினார். பிரதானமாக இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தை கட்டிவளர்த்ததுடன் திறன்மிக்க தொழிற்சங்க அமைப்பாளராகவும் தலைவராகவும் அவர் தன்னை வளர்த்துக்கொண்டார். அதேபோல் தொழிலாளர்களுக்கும் இளம் சந்ததியினருக்கும் கோட்பாட்டு ரீதியான அரசியல் அறிவூட்டும் செயற்பாடுகளிலும் முக்கிய பங்காற்றினார். 1947 பொது வேலைநிறுத்தம், 1953 ஹர்த்தால் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் அவர் தலைமைத்துவப் பங்களிப்பு செய்த தொழிற்சங்க அமைப்பு ஒரு முக்கிய சக்தியாக விளங்கியது. 1963ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் சார்பு என்றும் சீனச்சார்பு என்று இரண்டாக பிரிகிறது. நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்து மறைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு எதிராக அவருக்குப் பின் வந்த குருஷேவ் 1956ஆம் ஆண்டு முன்வைத்த 'தனிநபர் வழிபாடு' விமர்சனத்தை தொடர்ந்து உலக கம்யூனிஸ்ட் கட்சிகளில் இடம்பெற்ற உட்கட்சி விவாதங்கள் 1963ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் பகிரங்கமான பிளவாக உருவெடுத்தன. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பு நிலைப்பாட்டை எடுத்து போராடிய சண்முகதாசன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, கட்சி இரண்டாக பிளவடைந்தது. விக்கிரமசிங்க, கெனமன், வைத்தியலிங்கம் மற்றும் ஆரம்பகாலத் தலைவர்கள் சோவியத் சார்புக் கட்சியின் முக்கிய தூண்களானார்கள். சண்முகதாசன் தலைமையில் மார்க்சிய -- லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. பாராளுமன்றப் பாதையூடாக சோசலிசம் எனும் கருத்தியலை நிராகரித்து மாவோயிச புரட்சிகரக் கட்சியாக அது அறியப்பட்டது. பிளவின்போது கட்சியின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பெரும் பகுதி சண்முகதாசனைப் பின்பற்றி புரட்சிகர அணியுடன் இணைந்தது. புதிய ஜனநாயகப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சி பற்றிய கதையாடல்கள் மீளுயிர் பெற்றன. சண்முகதாசன் தீவிரமாக செயற்பட்டார். வேறு பல வேலைகளுக்கு மத்தியிலும் அரசியல் வகுப்புகளை நடத்தினார். 1960களில் கட்சி மேற்கொண்ட பல முன்னெடுப்புகளில் இரண்டினை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி அரசியல்மயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த செங்கொடிச் சங்கத்தின் செயற்பாடுகள். மற்றையது, யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிராக நடத்தப்பட்ட அணிதிரட்டலும் போராட்டமும். இவை சந்தர்ப்பவாத பாராளுமன்ற தேர்தல் அரசியலின் ஆதிக்கத்துக்கு உள்ளாகிவிட்ட இலங்கையின் இடதுசாரி அரசியலுக்கு மாற்றாக ஒரு அணிதிரட்டல் போராட்ட மரபை மீளக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை தரும் முன்னெடுப்புகளாக அமைந்தன. ஆனால், குறுகிய காலத்தில் கட்சிக்குள் பிரச்சினைகள் வலுவடைவதற்கான அறிகுறிகள் பகிரங்கமாகின. ஒன்றுக்குப் பின் ஒன்றாக பிளவுகள் இடம்பெற்றன. புதிய கட்சிகளும் குழுக்களும் தோன்றின. இவற்றிடமிருந்து சண்முகதாசனின் தலைமை பற்றிய விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த பிளவுகளை பற்றி அவர் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். ஆனால், உண்மை என்னவெனில், அவர் தலைமை தாங்கிய கட்சி தொடர்ந்து பலவீனமடைந்தது. 1990களின் முற்பகுதியில் சண்முகதாசனின் நூல் பற்றி நான் எழுதிய விமர்சனத்தை லண்டனில் இருந்து வெளிவரும் 'Race and Class' சஞ்சிகை பிரசுரித்தது. அதில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாக அவர் பற்றிய எனது விமர்சனத்தை முன்வைத்திருந்தேன். தமிழ் விடுதலைப் போராட்டம் பற்றி அவர் எழுதிய விமர்சனம் சரியானதே. ஆனால், அவருடைய கட்சி ஏன் போராடத் தவறியது என்ற கேள்வியை நான் எழுப்பியிருந்தேன். 1976ஆம் ஆண்டில் மாவோவின் மரணத்துக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள் சண்முகதாசனுக்கும் சீனக்கட்சிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிய உறவின் முடிவுக்கு காரணமாயின. ஆயினும், அவர் மாவோயிசத்தின் மீதான நம்பிக்கையில் இருந்து வழுவவில்லை. 1980களில் சர்வதேச மாவோயிச அமைப்புகளின் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அந்த அமைப்புகள் அவரை ஒரு தலைவராக மதித்தன. ஆனால், இலங்கையில் தனது கட்சியின் தேய்வை அவரால் தடுக்க முடியவில்லை. நீண்ட காலமாக உலகின் பல்வேறு மட்டங்களில் மார்க்சியவாதிகள் மத்தியில் இருபதாம் நூற்றாண்டின் சோசலிசம் மற்றும் அதை அடைவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றிய விமர்சனங்களும் மீள்மதிப்பீடுகளும் இடம்பெற்று வருகின்றன. 21ஆம் நூற்றாண்டில் ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிசம் பற்றிய மீள்கற்பிதங்களை நோக்காகக் கொண்டே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விமர்சனப் பார்வையில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் மதிப்பீடு செய்யப்படும்போது சண்முகதாசனின் வகிபாகமும் மீள்மதிப்பீட்டுக்கு உள்ளாகும். அவருடைய பங்களிப்புகள் பற்றிய பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், தவிர்க்கமுடியாத ஒரு முடிவை முன்கூட்டியே சொல்லிவிடலாம். அதாவது சண்முகதாசன் இறுதி வரை சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியாக இருந்தார். https://www.virakesari.lk/article/175823

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.