Everything posted by ஏராளன்
-
சாலையோரத்தில் கல்லை நட்டு சுவாமி என கூறும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுகிறது: இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை
06 FEB, 2024 | 10:40 AM சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும் எனவே அந்தக் கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தபோது இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது எனக்கூறி போலீஸார் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது. சாலையில் நடப்பட்டுள்ள அந்த கல் சிலையா இல்லையா என்பதை உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுப்பது என்பது சாத்தியமற்றது. மேலும் இதற்காக இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதுஎன்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல். எனவே மனுதாரரின் புகாரின் அடிப்படையில் அவருடைய நிலத்துக்கு அருகில் சாலையோரத்தில் நடப்பட்டுள்ள கல்லை போலீஸார் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். https://www.virakesari.lk/article/175684
-
நெஞ்செரிச்சல் காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள்
HeartBurn | AcidReflux | GERD - Causes, Symptoms & Prevention - Dr.P.Sivakumar (In Tamil)
-
தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை ஏற்படுத்தினார் கெஹெலிய – பிரதி சொலிசிட்டர் ஜெனரல்
கெஹெலியவிற்கு எதிராக பொதுஜனபெரமுன நடவடிக்கை எடுக்குமா? சாகர தெரிவிப்பது என்ன? Published By: RAJEEBAN 06 FEB, 2024 | 11:07 AM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார். தரம்குறைந்த இம்யுனோகுளோபிளின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் இன்னமும் இறுதி தீர்ப்புகள் வெளியாகததால் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எந்த நடவடிக்கையையும் எடுக்காது என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளதால் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கெஹெலிய ரம்புக்வெல குற்றவாளியா இல்லை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் அது இடம்பெறும்வரை கட்சி எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு முடிவிற்கு வரும்வரை நாங்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175685
-
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடர்ச்சியாக இறந்து கரையொதுங்கும் ஆமைகள்!
Published By: VISHNU 06 FEB, 2024 | 06:15 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் சில கரையொதுங்கிவருகின்றன. இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் திங்கட்கிழமை (5) இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/175669
-
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - அழுத்தங்கள் - திருத்தங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் தீவிரம்
Published By: RAJEEBAN 06 FEB, 2024 | 10:33 AM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் கடும் கரிசனைகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்ற சூழ்நிலையில்; புதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சபாநாயகர் மகிந்தயாப்பா அபயவர்த்தன சமீபத்தில் அந்த சட்டமூலத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். புதிய சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது எதிர்காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்துறை வல்லுனர்கள் உட்பட பல தரப்பினர் கரிசனைகளை வெளியிட்டுள்ள போதிலும் அரசாங்கம் புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. புதிய சட்டம் தடைசெய்யப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டவர்கள் அல்லது அந்த அறிக்கைகளை வெளியிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட தளத்தின் உரிமையாளர்கள் இணையசேவைவழங்குநர்கள் போன்றவர்களிற்கு எதிராக உத்தரவுகளை வழங்கக்கூடிய அதிகாரம் படைத்த ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது. இலங்கையில் தடைசெய்யப்பட்ட அறிக்கை வெளியான பகுதிக்கான இணையசேவையை நிறுத்துமாறு இணையசேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடைஅமைப்புகளிற்கு உத்தரவிடும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவிற்குள்ளது. இதேவேளை அரசாங்கத்தின் புதிய சட்டம் குறித்த கரிசனைகளும் விமர்சனங்களும் கண்டனங்களும் தொடர்ந்து வெளியாகும் நிலையில் புதிய திருத்தங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் இரண்டுவாரங்களில் இவற்றை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கூகுள் டுவிட்டர் யாகு மெட்டா அமேசன் போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்துரையாடலை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் புதிய திருத்தங்களை உள்வாங்கும் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175683
-
சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 112 போ் உயிாிழப்பு
Chile Wildfire: 'நரகமாக' மாறிய நகரம். 43,000 Hectares எரிந்துநாசம்; எகிறும் உயிர்பலி...
-
குடவோலை முறை: சோழர்களுக்கு முன்பே தேர்தல் நடத்திய பாண்டியர்கள் - எப்படி தெரியுமா?
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 5 பிப்ரவரி 2024, 06:29 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்னும் சில மாதங்களில் இந்தியப் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேர்தல் குறித்த பேச்சுகள் அடிபடத் துவங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும், பொதுவாக அனைவரும் உத்திரமேரூர் சோழர் காலக் கோவிலில் இருக்கும் குடவோலை முறை குறித்த கல்வெட்டினைப் பற்றிப் பரவலாகப் பேசுவார்கள். பிரதமர் மோதியும் தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டார். இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்தியும் உத்திரமேரூர் கல்வெட்டையே சித்தரித்தது. ஆனால் உத்திரமேரூர் சோழர் காலக் கல்வெட்டுக்கு 123 ஆண்டுகள் முன்னரே, பாண்டியர் காலத்தில் திருநெல்வேலியில் இந்த தேர்தல் முறை நடந்திருப்பற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிகம் அறியப்படாத அந்தக் கல்வெட்டு என்ன சொல்கிறது? சோழர்களுக்கு முந்தைய பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தேர்தல் எப்படி நடந்தது? வேட்பாளர்களுக்கான தகுதிகள் என்ன? எந்த அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? "சோழர்களை முந்திய பாண்டியர்கள்" தமிழ்நாட்டில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடந்துள்ளது. அதிலும் பாண்டியர்கள் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது என்ற ஆச்சரியமளிக்கும் தகவல்களுடன் பிபிசி தமிழுடன் உரையாடினார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் முருகன். "தேர்தல் தொடர்பான வரலாறு என்றாலே பெரும்பான்மையான பெரும்பான்மையானவர்கள் உத்திரமேரூர் கல்வெட்டை மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர்." "ஆனால் அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே (கி.பி. 8-ஆம் நூற்றாண்டு) திருநெல்வேலி மாவட்டம் மானூர் கிராமத்தில் உள்ள பாண்டிய மன்னன் மாறன் சடையனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த முக்கியமான கல்வெட்டு ஒன்று உள்ளது. மன்னர் ஆட்சியிலும் மக்களாட்சி நடைபெற்றது என்பதை விளக்கும் கல்வெட்டு இது" என்று முருகன் விவரித்தார். படக்குறிப்பு, திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ தொலைவில் மானூர் என்ற சிற்றூர் உள்ளது. அந்த ஊரில் அம்பலவாணசுவாமி கோவிலில் மானூர் வட்டெழுத்து கல்வெட்டு திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ தொலைவில் மானூர் என்ற சிற்றூர் உள்ளது. அந்த ஊரில் அம்பலவாணசுவாமி கோவிலில் உள்ள மண்டபத் தூண் ஒன்றில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. "அது அக்காலத்தில் நடந்த தேர்தலைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிவிக்கின்றது" என்று முருகன் தொடர்ந்து பேசினார் இந்தக் கல்வெட்டு பாண்டிய மன்னன் மாறன் சடையனின் (கி.பி. 768-815) 35-ஆம் ஆட்சியாண்டில் நிறுவப்பட்டது. இந்த மன்னன் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் எனவும் அழைக்கப்படுகிறான். படக்குறிப்பு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் முருகன் "மானூரில் உள்ள இந்தக் கல்வெட்டை ஒரு பொக்கிஷம் எனலாம்" என்கிறார் முருகன். "காரணம் கிராம சபையில் எப்படி உறுப்பினர்களை தேர்வு செய்வது என இந்தக் கல்வெட்டு தெளிவாக விளக்குகிறது. அந்த கிராம சபையை ‘மானநிலை நல்லூர் மகாசபை’ என அழைக்கின்றனர். (மானூர் என்று தற்பொழுது அழைக்கப்படும் இந்த ஊர் அக்காலத்தில் மான நிலைநல்லூர் என்று அழைக்கப்பட்டது.)" இந்தச் சபைக்கு உறுப்பினராவதற்குக் கீழ்க்கண்ட தகுதிகள் அவசியம். எனக் கூறிய முருகன், 'ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறஞ்ச டையருக்கு யாண்டு முப்பதஞ்சு' எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டை படித்து காண்பித்தார். படக்குறிப்பு, மானூர் வட்டெழுத்து கல்வெட்டு அங்குள்ள சிவாலயத்தில் உள்ள ஒரு தூணில் காணப்படுகிறது அந்த காலத்தின் வேட்பாளரின் தகுதிகள் என்ன? அந்த வட்டெழுத்து கல்வெட்டில் உள்ள விதிமுறைகள், அதாவது வேட்பாளரின் தகுதிகள், இதுதான் என்று முருகன் விளக்கினார். வேட்பாளர்கள் 35 முதல், 70 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். கல்வி மட்டுமல்ல, வருமானம் ஈட்டி, அரசுக்கு, வரி கட்டுபவராகவும் இருக்க வேண்டும். அவர்களிடம் அரை வேலி நிலமாவது இருக்க வேண்டும். அத்துடன் திட்டங்களைச் செய்து முடிக்கும் திறமைசாலிகளாகவும் இருக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் வேட்பாளர்கள் நல்ல குணம் படைத்தவராகவும் இருத்தல் அவசியம். கடந்த ஐந்தாண்டுகளில் எந்த பொதுநல (அரசு) பணியிலும் இருந்திருக் கூடாது. தொடர்ந்து அவர் யாரெல்லாம் தகுதி இல்லாதவர்கள் என்பதையும் பதிவு செய்துள்ளதை விளக்கினார். பொது நலப்பணியைச் செய்து முடித்து கணக்குக் காட்டாதவர்கள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் திருடிய வழக்கில் தண்டனை பெற்றவர்கள் லஞ்சம் வாங்கியவர்கள் மேற்கண்ட குற்றங்களைச் செய்து பின்னாளில் நல்லவர்களாக வாழ்பவர்கள் மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களின் தாய் மற்றும் தந்தை வழி சொந்தங்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியாது என விதிமுறைகளை படித்துக் காட்டி விளக்கி கூறினார் தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிட்ட பாண்டிய மன்னன் பாண்டியர் காலத்தில் நடந்த இந்தத் தேர்தலில் ஒருவருக்கு ஒரு முறை மட்டும் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் ஐந்தாண்டுகள் மட்டும்தான் அவர் அந்த பணியை செய்ய முடியும் என்பதை இந்த கல்வெட்டு விதிமுறைகள் தெளிவாக விளக்குகின்றன என்று கூறினார் முருகன். தொடர்ந்து அவர் பேசுகையில், “மேற்கண்ட சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மிகச் சிறந்தவராகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே அந்த பணியில் இருக்க முடியும்." "பின்னர் புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதற்குக் காரணம் இளைஞர்கள், மற்றும் திறமையானவர்களை அடையாளம் காண்பது அவசியம், சமூக அக்கறையுடன் மக்கள் பணியில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்பதை பாண்டிய மன்னன் அப்போதே சிந்தித்திருப்பார் என இந்த கல்வெட்டு உணர்த்துகின்றது,” என்று கூறினார். படக்குறிப்பு, உத்திரமேரூர் தமிழ் எழுத்து கல்வெட்டு திருமால் கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது பாண்டியர் - சோழர் கல்வெட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பாண்டியர்கள் போலவே அவர்களுக்கு பின் வந்த சோழர்களும் தேர்தல் விதிமுறைகளை மிகத் தெளிவாக கட்டமைத்திருந்தனர் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பத் துறை மற்றும் தொல்லியல் துறை (பொறுப்பு) பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவர் சுதாகர் சிவசுப்பிரமணியம் பிபிசி தமிழிடம் விவரித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் புகழ் பெற்ற ஒரு கல்வெட்டு உள்ளது. அங்குள்ள திருமால் கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள அக்கல்வெட்டு அந்தக் காலத்துத் தேர்தல் முறையைப் பற்றிப் பேசுகிறது. இது முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-955) காலத்தில் நிறுவப்பட்டது. அதாவது இந்த கல்வெட்டு 1,105 ஆண்டுகள் பழமையானது. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தின் மானூரில் உள்ள ஊர் சபை உறுப்பினர் தேர்வு பற்றிய கல்வெட்டை நிறுவி 1,228 ஆண்டுகள் ஆகின்றன, என்றார் சுதாகர். படக்குறிப்பு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பத் துறை மற்றும் தொல்லியல் துறை (பொறுப்பு) பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மேலும், இந்தக் கல்வெட்டு உத்திரமேரூர் குடவோலை தேர்வு தகவல் அடங்கிய கல்வெட்டை விட 123 ஆண்டுகள் பழமையானதாகும். “இந்த 123- ஆண்டுக் கால இடைவெளியில் தமிழ் எழுத்து வடிவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக மானூர் கல்வெட்டு வட்டெழுத்திலும், உத்திரமேரூர் கல்வெட்டு தமிழ் எழுத்திலும் காணப்படுகின்றன. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுக்கும் தற்கால தமிழ் எழுத்து வடிவத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எனவே தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வட்டெழுத்தைப் படிக்க முடியும். அதனால் பொதுமக்கள் மானூர் கல்வெட்டைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது,” என்றார் சுதாகர். படக்குறிப்பு, உத்திரமேரூர் கல்வெட்டு தமிழ் எழுத்து கல்வெட்டாகும். இதனைச் சற்று முயற்சி செய்தால் எளிதில் படித்துவிடலாம் "மாறாக, உத்திரமேரூர் கல்வெட்டு தமிழ் எழுத்து கல்வெட்டாகும். இதனைச் சற்று முயற்சி செய்தால் எளிதில் படித்துவிடலாம். காரணம் இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களும் தற்கால தமிழ் எழுத்துக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவைதான்." "எனவே இவ்விரு கல்வெட்டுக்களும் வேட்பாளர்கள் தேர்வு முறைகளை விளக்கினாலும் மானூர் கல்வெட்டு பழமையானது என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. இருப்பினும் இவ்விரு கல்வெட்டுகளிலும் வேட்பாளர்கள் தேர்வு சட்ட திட்டங்கள் கிட்ட தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. அதாவது தமிழகத்தின் வடபகுதியிலிருந்து தென்பகுதிவரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சட்டதிட்டங்கள் இருந்திருக்கிறது எனவும் இந்த இரு கல்வெட்டுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்" என்றார் அவர். "மேலும் பண்டைய தமிழகத்தில் அரியணையில் அமரும் மன்னர்கள் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், கிராமங்களை ஆளும் முக்கிய பதவிகளுக்குத் தேர்தல் முறையிலேயே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என இந்த கல்வெட்டுக்கள் விளக்குகிறன" என்றார். பாண்டியர் கல்வெட்டு பிரபலமாகாதது ஏன்? "மானூர் வட்டெழுத்து கல்வெட்டு அங்குள்ள சிவாலயத்தில் உள்ள ஒரு தூணில் காணப்படுகிறது. ஆனால் உத்திரமேரூர் தமிழ் எழுத்து கல்வெட்டு திருமால் கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டில் உத்திரமேரூர் தமிழ் எழுத்து கல்வெட்டு 1898-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது." "அதற்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் துறை 1906-ஆம் ஆண்டு மானூர் கல்வெட்டைக் கண்டுபிடித்தது. இவ்வாறாக இவ்விரு கல்வெட்டுகளும் 8 ஆண்டுகள் இடைவெளியில் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன." "உத்திரமேரூர் கல்வெட்டு செய்திகள் பல கல்வெட்டு ஆய்வாளர்களின் மூலமாகவும், பல புத்தகங்களின் வாயிலாகவும், நிறைய கருத்தரங்க கட்டுரைகள் மூலமாகவும் பிரபலமடைந்துவிட்டது. உத்திரமேரூர் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகே அமைந்திருப்பதாலும், இது கிட்டத்தட்ட தற்கால தமிழில் இருப்பதாலும் இந்த கல்வெட்டு விரைவில் பெயர்பெற்றுவிட்டது எனலாம்" என்றார் சுதாகர். "மாறாக உத்திரமேரூர் கல்வெட்டிற்கு 123 ஆண்டுகள் மூத்த மானூர் கல்வெட்டு பற்றிய உண்மை மக்களைச் சென்றடையவில்லை என்றே சொல்லலாம். மானூர் வட்டெழுத்து கல்வெட்டை மக்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாததாலும், அதிக புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் இந்தக் கல்வெட்டைப் பற்றி வெளிவரவில்லை என்பதாலும், இது தென்தமிழகத்தில் ஒரு சிற்றூரில் இருப்பதாலும் இந்த கல்வெட்டின் பெருமை வெளியுலகிற்குத் தெரியாமல் போனது" "அதனால்தான் தேர்தல் குடவோலை முறை என்றால் மக்களுக்கு உத்திரமேரூர் கல்வெட்டுதான் நினைவுக்கு வருகிறது" என்று தெரிவித்தார். 1,000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஆகம எதிர்ப்பாளர்கள் "உத்திரமேரூர் கல்வெட்டு ஆகமங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் தேர்தலில் பங்கேற்க முடியாது என்கிறது. இதிலிருந்து 1,100 வருடங்களுக்கு முன்பே ஆகமங்களை எதிர்ப்பவர்களும் தமிழகத்திலிருந்துள்ளனர் எனவும் புரிந்து கொள்ளலாம். ஆனால் மானூர் கல்வெட்டில் இந்த ஆகம விதிமுறை இல்லை." "மேலும் உத்திரமேரூர் கல்வெட்டுகழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் தேர்தலில் நிற்க முடியாது என்கிறது. இந்த இரு விதிமுறைகளும் மானூர் கல்வெட்டில் இல்லை" என்று இரண்டு கல்வெட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களையும் தொடர்புகளையும் விவரித்தார் சுதாகர். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் நடந்த அணிவகுப்பில் கூட உத்திரமேரூர் கல்வெட்டின் மாதிரிதான் இடம்பெற்றது. இது இந்திய அளவில் மூன்றாம் பரிசையும் வென்றது. "1,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பிற நாடுகளில் அபூர்வமாகவே தேர்தல்கள் நடத்தப் பட்டுள்ளன. எனவே வாக்காளர்களின் தகுதியைத் தன்னகத்தே தாங்கியுள்ள மானூர் மற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறன." "சோழர்களுக்கு முன்னரே பாண்டியர்கள் மிக நேர்த்தியாக தேர்தல் நடத்தி ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு மானூர் கல்வெட்டு மிகப்பெரிய சான்றளிக்கின்றது," என்று கூறினார் சுதாகர். https://www.bbc.com/tamil/articles/c4nk8059zpqo
-
கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் 'ஹெச்பிவி' தடுப்பூசி - யாருக்கெல்லாம் அவசியம்?
பெண்களை கொல்லும் அபாயகர நோய்; இதப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? | Cervical Cancer கருப்பைவாய் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது? Explained
-
இது Ice-ஆ? இல்ல, Glass-ஆ?’உறைந்துபோன ஏரியில் ஸ்கேட்டிங்
அலாஸ்காவில் ஏரி ஒன்று உறைந்து காணப்படும் காட்சி இது. ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் உறைந்து சுமார் 3 மீட்டர் அளவுக்கு தண்ணீரில் உள்ளது அப்படியே தெரிகிறது. ஏரி தண்ணீர் கண்ணாடி போன்று காட்சியளிக்கும் இந்த நிகழ்வு அரிதினும் அரிதாக பார்க்கப்படுகிறது.
-
நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட்
ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்! நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 511 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் கடந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 366 பந்துகளை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா 26 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரச்சின் ரவீந்திரா தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/290568
-
யாழில் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம்
மக்களுக்கான சேவையை உரியமுறையில் நிறைவேற்றுவதே அரச உத்தியோகத்தர்களின் கடமை - வடக்கு ஆளுநர் Published By: VISHNU 05 FEB, 2024 | 09:12 PM வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் திங்கட்கிழமை (05) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலேயே திங்கட்கிழமை (05) கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அந்தவகையில், கடந்த ஐந்து வருடங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள், தரம் ஐந்து, சாதாரண மற்றும் உயர் தரங்களில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன விடயங்களை தெளிவுப்படுத்தினார். அதிபர்கள் நியமனத்தில் எழுந்த சிக்கல்கள், ஆசிரியர் இடமாற்றங்களில் காணப்படும் சிக்கல்கள், தளபாட வசதிகள் இன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது அவர் தெளிவுப்படுத்தினார். அரச சேவையில் இணைந்துக்கொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும் என இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகஸ்தர்கள், மக்களுக்காகவே சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன் மாகாணத்தில் ஆசிரியர், அதிபர்களின் வெற்றிடங்கள் காணப்படும் பகுதிகளுக்கு சென்று சேவை செய்ய வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இந்த விடயங்களை கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களில் அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/175645
-
சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 112 போ் உயிாிழப்பு
பயங்கர காட்டுத்தீ – 112 பேர் பலி! சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி மடிந்தன. அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியது. இதில் அங்குள்ள 1,200 வீடுகள் எரிந்து நாசமாகின. இந்தநிலையில் சிலியில் எரியும் காட்டுத் தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. வேகமாக பரவி வரும் இந்த தீயை அணைப்பது சவாலாக உள்ளது. எனவே தீயை அணைக்கும் பணியில் மீட்பு படையினருக்கு உதவும்படி பொதுமக்களை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் கேட்டுக்கொண்டார். இந்த காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில் வெப்பநிலை 104 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். https://thinakkural.lk/article/290555
-
உயிரை பறிக்கும் பூஞ்சை நோய் மீண்டும் பரவல்
அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது அமெரிக்காவின் வொஷிங்டனில் கடந்த மாதம் ஒருவருக்கு ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதே சியாட்டில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ‛கேண்டிடா ஆரிஸ் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் கூட மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு அந்த பூஞ்சை தொற்றின் வீரியம் தான் காரணமாகும். அதாவது ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது. மேலும் அதிக இறப்பு சதவீதத்தை கொண்டுள்ளதோடு, எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதாம். இதனால் தான் சுகாதார நிபுணர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.மேலும் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதலில் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும். மேலும் உணவு குழாய், சுவாச குழாய்களை தாக்கும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் பாதிப்பதோடு, காது உள்பட பிற உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தும். மேலும் பாக்டீரியா தொற்று ஏற்படுவம் பிற அறிகுறிகளும் ஏற்படாலம். நோயின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அறிகுறியின் தாக்கமும் அதிகரிக்கும். மேலும் இந்த ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று கிருமி மனிதரின் தோலில் இருந்து கொண்டே இன்னொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது. இதன்மூலம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகாமலே மற்றவருக்கு நோய் கிருமியை அனுப்ப முடியும். மேலும் இந்த தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அவர்கள் இருக்கும் அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். அவரை சந்திக்க செல்வோர் கவசஉடை அணிய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் அறைக்கு சென்று வந்தால் கிருமிநாசினியிட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். https://thinakkural.lk/article/290551
-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது தொடர்வது ஏன்? - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
05 FEB, 2024 | 05:35 PM சென்னை: கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா "கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்" என வாதிட்டார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் "கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் “இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?” என கேள்வி எழுப்பினர். பின்னர்இ இந்த வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்இ விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். https://www.virakesari.lk/article/175649
-
உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலுடன் கூடிய புதிய கிரகமான “சூப்பர் எர்த்” பற்றிய ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு “TOI-715 b” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும், இதனை ஒருமுறை சுற்றிவருவதற்கு சுமார் 19 நாட்கள் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிதான இந்த கிரகம் குறித்து நாசா மேலும் ஆய்வுகளை நடத்தி வருகிறது. https://thinakkural.lk/article/290535
-
தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 5 பிப்ரவரி 2024, 03:01 GMT தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஐபோன் உற்பத்தி ஆலையான பாக்ஸ்கான் அமைந்துள்ளதை மையமாக வைத்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி குறித்து புகழாரம் சூட்டியுள்ளது. தமிழ்நாடு தொழில்துறையில் வெற்றியாளராக பயணித்து வருவதாகவும், நாட்டிலேயே அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ஒவ்வொரு விதமான தொழில்களையும் குறிப்பிட்டு தமிழக தொழில்துறையை பாராட்டியுள்ளது அந்த பத்திரிகை. ஆனால், தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களை விட வளர்ச்சியில் தனித்து நிற்பது ஏன்? இதற்கான விதை எங்கு போடப்பட்டது? ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பாதையில் செல்லும்போது தமிழகம் தனக்கான பாதையை அமைத்து முன்னேற தொடங்கியது எப்போது? அதன் பலன் என்ன? உண்மையில் தமிழகம் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1960 களில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த கொள்கை மற்றும் அரசியல் மாற்றங்கள் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம். தமிழ்நாட்டின் தனித்துவம் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை கணக்கிட சுகாதாரம், கல்வி, தனிநபர் வருமானம் ஆகிய கூறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் சிசு மரண விகிதம் (IMR) 1000 பேருக்கு 8.2, தனிநபர் வருமானம் ரூ.1,66,727, உயர்கல்வி சேர்க்கை (GER) விகிதம் 47% என அனைத்திலும் இந்தியாவின் டாப் இடங்களை பிடித்துள்ளது தமிழ்நாடு. இந்த வளர்ச்சிக்கு காரணமாக 1960 களில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த கொள்கை மற்றும் அரசியல் மாற்றங்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக பேராசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் அவர்களிடம் பேசினோம். பட மூலாதாரம்,LINKEDIN படக்குறிப்பு, பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் தமிழ்நாடு vs மத்திய அரசு தமிழ்நாடு அரசின் வளர்ச்சியை, மற்றுமொரு மாடலோடு ஒப்பிட்டு பார்த்தால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று தொடங்கிய அவர் மத்திய அரசோடு ஒப்பிட்டு பேசினார். “மத்திய அரசு தங்களது வளர்ச்சி பாதையை 50, 60 களில் தான் முன்னெடுக்க தொடங்கினார்கள். அவர்கள் எடுத்த வளர்ச்சி பாதைக்கு நேர்மாறான பாதையை நாம் எடுத்ததின் விளைவு தான் தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு காரணம்” என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம். இதற்கு உதாரணமாக “மத்திய அரசு வளர்ச்சி பகிர்வு(Growth With Distribution) என்ற பாதையை கையில் எடுத்தார்கள். அதன்படி முதலில் வளர்ச்சியடைதல், பின்னர் அதை பகிர்ந்து கொடுத்தல் என்ற வழியில் சென்றார்கள். முதலில் இந்த திட்டம் வளர்ச்சியை தந்தாலும், அது மக்களை சென்றடையவில்லை” என்கிறார். ஆனால், தமிழகமோ 1960களுக்கு பிறகு வேறு விதமான கொள்கையை பின்பற்ற தொடங்கியது. தமிழகத்தில் காங்கிரஸ் அரசு மாறி திமுக ஆட்சியை பிடித்த போது, சாமானிய மக்களுக்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்தினார்கள். யாசகர்கள் மறுவாழ்வு திட்டம், குடிசைமாற்று வாரியம், கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி, சாலை திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம். மேலும் பேசிய அவர், “திமுக வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதன் மீது அதிகம் கவனம் செலுத்தினார்கள். அதற்கு முன்பெல்லாம் அரசு செலவு செய்ததெல்லாம் அணை கட்டுவது போன்ற மூலதனம் சார்ந்ததாக இருந்தது. ஆனால், இவர்கள் தான் கல்வி, சுகாதாரம் என மக்கள் வளர்ச்சிக்கு தேவையான செலவுகளை செய்தார்கள்” என்று குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,SALEM DHARANIDHARAN படக்குறிப்பு, திமுக செய்தி தொடர்பாளர் சேலம் தரணிதரன் இதே கருத்தை முன்வைக்கிறார் திமுகவின் செய்தி தொடர்பாளர் சேலம் தரணிதரன், “1960களில் உத்தரபிரதேசத்தின் தனிநபர் வருமானமும், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானமும் ஒன்றுதான். ஆனால், 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் உத்தரப்பிரதேசத்தை விட மூன்று மடங்கு அதிகம். மேலும் தொழிற்துறை வளர்ச்சியிலும் கூட இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்று..” “அதற்கு முக்கிய காரணம் திமுக மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்தியது. இடஒதுக்கீடு, கல்விக்கான ஏராளமான திட்டங்கள், எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு இலவச கல்வி, பெண்களுக்கான கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொருளாதாரம் வளர மூலதனமும், மனிதவளமும் மிக அவசியம். மனிதவளத்தை வளர்க்க கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு மிக முக்கியமென கருதி பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக” அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES சேவைத்துறை மீது கவனம் செலுத்திய மத்திய அரசு மத்திய அரசு சேவைத்துறை சார்ந்து முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்த காலத்தில், தமிழக அரசு வறுமை ஒழிப்பு, கல்வியை மேம்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறுகிறார் ஜோதி சிவஞானம். வளர்ச்சியை மட்டுமே மையமாக வைத்திருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் மத்திய அரசு மக்களுக்கு வளர்ச்சியை பகிர்தல் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குதலில் தேக்கமடைந்து விட்டதாக குறிப்பிடுகிறார் அவர். ஆனால், மனிதவளத்தை மேம்படுத்துவதில் குறிக்கோளாக இருந்த தமிழக அரசு அதற்காக கல்வியை ஜனநாயக படுத்தியது, கிராமங்களில் இருந்த மக்களை நகரங்களை நோக்கி அழைத்து வந்தது, சாலை வசதி, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது. இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திவிட்டு அமைதியாக இல்லாமல் அதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கு வேலை வழங்கியது உள்ளிட்ட பல காரணிகளை அடுக்குகிறார் ஜோதி சிவஞானம். பட மூலாதாரம்,DMK / AIADMK படக்குறிப்பு, முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் கட்சி பேதமற்ற வளர்ச்சி கொள்கைகள் மக்கள்நலன் சார்ந்த கொள்கைகள் தமிழ்நாட்டில் மட்டுமே கட்சிபேதமின்றி தொடர்ந்து வந்துள்ளதாக கூறுகிறார் ஜோதி சிவஞானம். உதாரணமாக, “காமராஜர் பள்ளிகளை கட்டினார். மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றில் திமுக அதிமுக என இரண்டு ஆட்சி காலத்திலும் புதிய புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டன. ஆக எப்படியாவது மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என்பதில் தமிழக கட்சிகள் ஒத்த கருத்தோடு இருந்தன” என்கிறார் அவர். குறிப்பாக திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை எம்ஜிஆரும் அப்படியே தொடர்ந்தார். திமுக கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கியது. எம்ஜிஆர் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார். இதில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்குள்ளது. இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலில் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் கற்பிக்கப்பட்டன. அதன் விளைவாக 90களுக்கு பிறகு வந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இங்கு படித்தவர்கள் நேரடியாக வேலைக்கு சேர முடிந்தது” என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்த திட்டங்களின் விளைவாக 1990களில் தாராளமயமாக்கலுக்கு பிறகு இந்தியாவில் முதலீடு செய்ய வந்த பல நிறுவனங்களும் டெல்லி, மும்பைக்கு அடுத்து தமிழ்நாட்டை நோக்கி வந்ததாக கூறுகிறார் ஜோதி சிவஞானம். அதற்கு காரணம் மனிதவள மேம்பாட்டில் அதற்கு முந்தைய 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட வேலையின் காரணமாக திறன்மிக்க தொழில் நிபுணர்கள் தமிழ்நாட்டில் இருந்தனர் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியை பகிர்தல் எனும் பாணியில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்ட மன்மோகன் சிங் 2004க்கு பிறகு உரிமை சார் அணுகுமுறையை கொண்டுவந்தார். "வளர்ச்சி கிடைத்தும் பகிர்தல் நடக்கவில்லை என்றபோது வேலைக்கான உரிமை, உணவுக்கான உரிமை, ஆரோக்கியத்திற்கான உரிமை உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்தார். இந்த பிரச்னைகளை அரசே இனி நேரடியாக அணுகும் என்றும் அறிவித்தார்" என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம். "ஆனால், 2014க்கு பிறகான ஆட்சியில் அந்த முழக்கங்களையே விட்டுவிட்டார்கள். பகிர்தல் என்பதை விட்டுவிட்டு வளர்ச்சியே பெரிய விஷயம் என்ற பாதையில் எடுத்து செல்கிறார்கள்" என்றும் கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,TIDEL PARK படக்குறிப்பு, சென்னை டைடல் பார்க் உலக மாற்றத்திற்கு ஏற்ப ஏற்பாடுகள் தமிழகம் எப்போதும் உலக அளவில் நடைபெறும் மாற்றங்கள், ட்ரெண்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்படி தமிழகத்தில் இதற்கு முன்னாலும் உலகளவில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்பவும் தயக்கமே இல்லாமல் முன் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கூறுகிறார் பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம். அப்படித்தான் டைடல் பார்க் உள்ளிட்ட ஐடி நிறுவன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆட்டோமொபைல் துறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்கிறார் அவர். இதுகுறித்து பேசிய சேலம் தரணிதரன், "இந்தியாவின் முதல் ஐடி கொள்கையே தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது" என்று கூறுகிறார். மேலும், சிப்காட் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளை உருவாக்கியதையும் குறிப்பிடுகிறார். "அதே சமயம் தற்போதைய ஆட்சியில் ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை, முதலீடுகளை ஈர்த்தல், பட்டியலின மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு ஒதுக்கீடுகளையும்” மேற்கோள் காட்டுகிறார் அவர். பட மூலாதாரம்,D JAYAKUMAR / TWITTER படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இதேபோல் பல திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அதிமுக ஆட்சியில் தான் தொழில்துறை நிறுவனங்களின் அனுமதிக்கான ஒற்றை சாளர முறை கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடும் அவர், “நான் ஐடி அமைச்சராக இருந்தபோது பல நிறுவனங்களுக்கும் எளிய வழியில் அனுமதி வழங்கப்பட்டது. சிறுசேரியில் நிறுவனம் தொடங்க ஹெச்சிஎல் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு அரசு விலையில் நிலம் வழங்கப்பட்டது” என்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் தொழில்துறை வளர்ச்சிக்காக ஐடி காரிடார் அமைப்பு, சரக்கு பெட்டகம் செல்வதற்கான எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார் அவர். பெண்களுக்கான முன்னேற்றம் ஒட்டுமொத்த இந்தியாவின் பெண் தொழிலாளர்களில் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். பெண்களின் கல்விக்கு இன்னும் தடை போடும் சமூக கட்டமைப்பில் இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை கேட்டபோது, “பெண்களுக்கு சொத்துரிமை என்ற சட்டத்தை சமீபத்தில் தான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 1960 களிலேயே தமிழக பெண்கள் அதற்காக போராடியுள்ளனர். பெண்களுக்கெதிரான பல அநீதிகளுக்கு எதிராக அன்று பெண்களே போராடினர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்த ஆட்சிகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களும் பெண்கள் வளர முக்கிய காரணம். அதன் விளைவே இன்று பொதுத்துறை பணிகளில் 100க்கு 65 பெண்கள் இருக்கின்றனர்” என்கிறார் ஜோதி சிவஞானம். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தன்னுடைய புத்தகமான Uncertain Glory-இல் கூறியுள்ள சில விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம். அந்த புத்தகத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் பின்தங்கியுள்ள போதிலும், தமிழ்நாடு எப்படி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார் அமர்த்தியா சென். அதில், "குஜராத் உற்பத்தி துறையில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் வளர்ச்சியை பகிர்தல் மற்றும் மனிதவள மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது. கேரளா மனிதவள மேம்பாட்டில் உச்சத்தில் உள்ளது. ஆனால் உயர்கல்வி, உற்பத்தி துறை, ஐடி துறையில் பின்தங்கியுள்ளது. ஆனால், இது இரண்டையும் ஒன்றாக இணைத்து வளர்ந்து வந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதற்கு காரணம் தமிழ்நாட்டின் அரசியல் சித்தாந்தம்" என்று அவர் குறிப்பிட்டு தமிழக வளர்ச்சியை பாராட்டி எழுதியுள்ளதை குறிப்பிடுகிறார் ஜோதி சிவஞானம். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முதன்மையாக தெரிந்தாலும், தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமானதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதுகுறித்து பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம் கூறுகையில், “நாம் இன்னமும் முன்னேற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது நாம் மிக மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இது இரண்டுமே தேவை. இது இரண்டிலும் தமிழ்நாடு மட்டுமே சுட்டிக்காட்ட கூடிய ஒரே மாநிலம்” என்று அவர் குறிப்பிடுகிறார். https://www.bbc.com/tamil/articles/c4nk8wrq48ko
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
இங்கிலாந்தின் 'பேஸ்பால்' சவாலை முறியடித்த இந்தியா - ஆட்டத்தை புரட்டிப் போட்ட அந்த 'ரன் அவுட்' பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் 'இன்னும் 180 ஓவர்கள் மீதமிருக்கின்றன. ஆனால், நாங்கள் ஆட்டத்தை 60 முதல் 70 ஓவர்களில் முடித்துவிட முயற்சிப்போம்' - இது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் நேற்றைய பேட்டி. இன்றைய ஆட்டமும் அவரது கூற்றை அப்படியே மெய்ப்பித்திருக்கிறது. ஆனால், முடிவு அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இங்கிலாந்துக்கு பாதகமாக கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தை 69.2 ஓவர்களில் ஆல் அவுட் செய்து இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் கைகொடுக்க, பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகிய இருவரும் மிரட்டினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நூலிழையில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை தவறவிட்டார். விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி இரண்டாம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி இரட்டை சதத்தின் உதவியுடன் 396 ரன்களை சேர்த்தது. 290 பந்துகளில் 209 ரன்களை குவித்த அவர் 19 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசினார். சதத்தை சிக்சர் அடித்தும், இரட்டை சதத்தை பவுண்டரி விளாசியும் அவர் கடந்தது சிறப்பம்சம். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களை சேர்த்தது. தொடக்க வீரர் கிராவ்லி மட்டுமே அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் ஏமாற்ற, மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் சதம் கடந்து இந்திய அணியை கரை சேர்த்தார். வேறு யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்களை சேர்த்த இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரு அணிகளுக்குமே வெற்றிவாய்ப்பு இருந்த நிலையில், 2 நாள் ஆட்டம் எஞ்சியிருந்தாலும் இங்கிலாந்து அணியோ அதிரடியாகவே இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாவது நாள் முடிவில் தொடக்க வீரர் பென் டுக்கெட் விக்கெட்டை மட்டும் இழந்து இங்கிலாந்து அணி 67 ரன்களை எடுத்தது. இதனால், அடுத்த 2 நாட்களில், அதாவது 180 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 332 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு அளித்த பேட்டியில்தான் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இக்கட்டுரையின் முதலில் இடம் பெற்ற வார்த்தைகளை உதிர்த்தார். அதாவது, 180 ஓவர்கள் இருந்தாலும் கூட தங்களது பிரத்யேகமான 'பேஸ்பால்' உத்தி மூலம் 332 ரன்களை 60 அல்லது 70 ஓவர்களில் ஆட்டத்தை முடித்துவிட முயற்சிப்போம் என்பதே அவரது கூற்றாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பரபரப்பான 4-வது நாள் ஆட்டம் ஜேம்ஸ் ஆண்டர்சன் குறிப்பிட்டது போலவே, இங்கிலாந்து வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் தொடக்கம் முதலே அதிரடியை தொடர்ந்தனர். இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களுக்கும் மேலாக எடுப்பது என்பதே அரிதான நிகழ்வு என்று புள்ளிவிவரம் கூறினாலும், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இங்கிலாந்து வீரர்கள் அடித்தாடினர். இதனால், ஒருநாள் போட்டிகளைப் போலவே இங்கிலாந்து அணியின் ஸ்கோர் போர்டு எகிறியது. ஆனால், இங்கிலாந்து அணியின் வேகத்திற்கு இந்தியாவின் அஸ்வின் - குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சு கூட்டணி அணை போட முயன்றது. இருவருமே அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் கூட இங்கிலாந்து வீரர்கள் அச்சமின்றி அதிரடியைத் தொடர்ந்தனர். ஆலி போப், ஜோ ரூட் ஆகிய இருவரின் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினர். மறுபுறம் நிலைத்து ஆடி இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை குல்தீப் யாதவ் சாய்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 500 விக்கெட் மைல்கல்லை தவறவிட்ட அஸ்வின் 9 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் என்று அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஜோ ரூட்டை அஸ்வின் காலி செய்தார். அது டெஸ்ட் போட்டிகளில் அவரது 499-வது விக்கெட்டாக அமைந்தது. ஜோ ரூட் நான்காவது விக்கெட்டாக வீழ்ந்தார். இங்கிலாந்து அணிக்கு மேலும் 6 விக்கெட்டுகள் எஞ்சியிருந்ததால் அஸ்வின் 500 விக்கெட் என்ற மைல்கல்லை இந்த போட்டியில் எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஒரு கட்டத்தில் அந்த மைல்கல்லை எட்டிவிட்டதாகவே ரசிகர்கள் கருதினர். அஸ்வின் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் டாம் ஹாட்லி ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயல, பந்து அவர் மீது பட்டு விக்கெட் கீப்பர் பரத் கைகளில் தஞ்சம் புகுந்தது. இந்திய வீரர்கள் அவுட் கேட்டு அப்பீல் செய்ய நடுவரும் கையை உயர்த்திவிட்டார். ஆனால், இங்கிலாந்து அணி ரிவியூ செய்த போது பந்து ஹாட்லியின் மணிக்கட்டுக்கு மேலே உரசியபடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நடுவர் தனது முடிவை திரும்பப் பெற்றுவிட்டார். இதனால், இந்திய வீரர்கள் அதிருப்தியடைந்ததால், கேப்டன் ரோகித், பவுலர் அஸ்வின் மற்றும் பீல்டர்களிடம் தனது முடிவு குறித்து நடுவர் விளக்கம் அளித்தார். அதாவது, கேட்ச் என்று கருதியே அவுட் கொடுத்ததாகவும், பந்து கையுறையில் படாமல் மணிக்கட்டுக்கு மேலே பட்டதால் தனது முடிவை திரும்பப் பெற்றதாகவும், எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுக்கவே இல்லை என்றும் நடுவர் கூறினார். இதனால், 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அஸ்வின் ஏமாற்றம் அடைந்தார். அதனை எட்டும் அவரது முயற்சி இந்த போட்டி முடியும் வரை கைகூடவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை புரட்டிப் போட்ட அந்த 'ரன் அவுட்' இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 52 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்சும் களத்தில் இருந்தனர். 53-வது ஓவரில் ஃபொக்ஸ் செய்த தவறு அந்த அணியையே ஒட்டுமொத்தமாக தடம்புரளச் செய்துவிட்டது. நான்காவது பந்திதை ஷாட் மிட்விக்கெட் திசையில் தட்டிவிட்டு, விரைவாக ஒரு ரன்னை எடுத்துவிட அவர், கேப்டன் பென் ஸ்டோக்சை அழைத்தார். பென் ஸ்டோக்சும் ஒரு ரன்னுக்காக விரைந்து செல்ல, அங்கே பந்தை விரைவாக பீல்டிங் செய்த ஸ்ரேயாஸ் குறி தவறாமல் எறிந்து ஸ்டம்புகளை தகர்க்க, ஸ்டோக்ஸ் ரன் அவுட்டானார். அவரது பேட்டிற்கும் கிரீசுக்கும் இடையே வெறும் 3 இன்ச் இடைவெளியே இருந்தது. இதனால், 399 ரன் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக நடைபோட்ட இங்கிலாந்து அணியின் நம்பிக்கை அத்துடன் குலைந்து போனது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்களும் துரிதமாக ரன்களை சேர்த்தாலும் வெற்றிக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. கடைசி விக்கெட்டாக டாம் ஹாட்லியை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கிளீன் போல்டு செய்தார். இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் 292 ரன்களை எடுத்து ஆல்அவுட்டானது. இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் டெஸ்டில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் 'பேஸ்பால்' அதிரடிக்கு அணை போட்டது பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும், அவரது ரிவர்ஸ் ஸ்விங்கும் தான் என்றால் மிகையாகாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட உதவிய இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. https://www.bbc.com/tamil/articles/c4n68mmp8d5o
-
இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பாக, கண்டறியப்பட்ட புற்றுநோயாளர்களிடையே மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் தொடர்பான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஆண்டில் புதிதாக 20 மில்லியன் புற்றுநோயாளர்களும், 9.7 மில்லியன் உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/290585
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
அனுர இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (05) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரை சந்தித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது X கணக்கில், நமது இருதரப்பு உறவைப் பற்றியும், அது மேலும் ஆழமடைவதால் ஏற்படும் பரஸ்பர நன்மைகள் பற்றியும், இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி பற்றியும் இருவருக்கிடையில் கருத்து பரிமாற்றம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று காலை இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/290609
- கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!
-
காவல்துறையால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்;
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரினால் யாழ்.பல்கலை மாணவன் சித்திரவதை - மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு Published By: DIGITAL DESK 3 05 FEB, 2024 | 04:43 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில், பல்கலைக்கழக மாணவனான கருணாகரன் நிதர்சன் எனும் மாணவன் இன்று திங்கட்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை வழிமறித்து, தான் மறிக்கும் போது ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என என்னுடன் முரண்பட்டார். அதற்கு நான் நீங்கள் மறித்ததை கவனிக்கவில்லை என கூறி, ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன, என அவற்றை எடுத்து கொடுத்த போது, அதனை வாங்காது மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைத்தார். அதன் போது, சிவில் உடையில் வந்த 7க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் , எவ்வித விசாரணைகளும் இன்றி, என்னை வீதியில் வைத்து, மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கடுமையாக தாக்கினார்கள். என்னை தாக்கும் சம்பவம் அருகில் உள்ள கடையில் கண்காணிப்பு கமராக்களில் கூட பதிவாகியுள்ளது. அத்துடன் நானும் எனது கைபேசியில் என்னை தாக்குவதனை காணொளி எடுத்தேன். பின்னர் என்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்று, பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறைக்குள் என்னை அழைத்து சென்று என்னுடைய ஆவணங்கள், மற்றும் கைபேசி என்பவற்றை பறித்தார்கள். கைபேசியின் இரகசிய குறியீட்டை கேட்ட போது, அதனை தர முடியாது என மறுத்த போது, என் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி கடுமையாக தாக்கினார்கள். என் ஆணுறுப்பை குறிவைத்தும் கடுமையாக தாக்கினார்கள். இதனால் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வியர்க்க தொடங்கியது. அதனை அடுத்து என்னை அறையில் இருந்து, வெளியே அழைத்து வந்து, கதிரையில் அமர வைத்து விட்டு சென்று விட்டார்கள். பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி வந்தேன். என்னை பொலிஸாரின் இரகசிய அறைக்குள் அழைத்து சென்றதனை, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் நேற்றைய தினம் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவர் கண்டார்கள். அறைக்குள் வைத்து, அடிக்கும் போது, நான் எழுப்பிய அவலக்குரல் அவர்களுக்கும் கேட்டு இருக்கும். அடித்த பின்னர் என்னை கைத்தாங்கலாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அழைத்து வந்து கதிரையில் அமர வைத்ததையும் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவரும் நேரில் கண்டார்கள். எவ்வித குற்றமும் இழைக்காத என்னை சிவில் உடை தரித்த பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். என்னை கொலை செய்யும் நோக்குடன் என் ஆணுறுப்பை குறித்து வைத்தும் தாக்கினார்கள். இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளமையால் இன்றைய தினம் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார். இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாரினால், கடுமையான சித்திரவதைக்கு உள்ளான நகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். குறித்த உயிரிழப்பானது ஆட்கொலையே என யாழ்.நீதவான் நீதிமன்றம் மரண விசாரணை கட்டளையில் குறிப்பிட்டுள்ளது. இளைஞனின் கொலை தொடர்பில் நேரடி சாட்சியான, இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு தம்மை உள்ளாக்கியவர்கள் ஐவர் என அடையாளம் கூறிய போதிலும், பொலிஸார் நால்வரையே கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த வாரம், சுன்னாகம் பொலிஸாரினால் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாகிய நிலையில், கைதான இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார். அச்சுவேலி பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, விசாரணைக்கு செல்லாத இளைஞனை அச்சுவேலி பொலிஸார் வீதியில் வழிமறித்து கடுமையாக தாக்கியமையால், இளைஞன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணியில் பொலிஸார் மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175635
-
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா பணம் மோசடி: சந்தேக நபர் கைது!
500 கோடி மோசடியில் இருவரும் விளக்கமறியலில் அநுராதபுரம் – கலென்பிந்துனுவௌ பகுதியில் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பிரமிட் வர்த்தகத்தின் ஊடாக பொது மக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/290619
-
அமைச்சர் டக்ளஸை சந்தித்தார் சாந்தனின் தாயார்
சாந்தன் விவகாரம் அமைச்சரவையிலும் பேச்சு Published By: DIGITAL DESK 3 05 FEB, 2024 | 04:48 PM முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்த நிலையிலேயே ஜனாதிபதியினால் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/175639
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் : வியாழனன்று அறிமுகமாகிறது 05 FEB, 2024 | 10:26 AM (ஆர்.சேதுராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான மற்றொரு தொகுதி ரிக்கெற் விற்பனையும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. 2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளது. 32 வகையான விளையாட்டுகளில் 329 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான ரிக்கெற் விற்பனை கடந்த வருடம் ஆரம்பமாகியது. ஏற்கெனவே 7 மில்லியன்களுக்கும் அதிகமான ரிக்கெற்றுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மற்றொரு தொகுதி டிக்கெட் விற்பனை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://tickets.paris2024.org எனும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் ரிக்கெற் விற்பனைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ரிக்கெற்றுகளை கொள்வனவு செய்யலாம். எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான ரிக்கெற்றுகளும் மேற்படி இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாரிஸ்2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான 45 சதவீதமான ரிக்கெற்றுகளின் விலை தலா 100 யூரோவுக்கு குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தியோகபூர்வ இணையத்தளம் தவிர்ந்த வேறு மூலங்கள் ஊடாக ரிக்கெற் கொள்வனவு செய்யமுற்படும்போது, ரிக்கெற் விநியோகிக்கப்படாமை, அத்தகைய ரிக்கெற்றுகளை வாங்கியவர்கள் பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களால் விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்படாமை போன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடலாம் என ஏற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், உத்தியோகபூர்வ தளங்களுக்கு வெளியில் ரிக்கெற்றுகளை வாங்குவதும் மீள் விற்பனை செய்வதும் பிரெஞ்சு சட்டப்படி குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிக்கெற்றுகளை வாங்கியோர் அவற்றை மீள்விற்பனை செய்வதற்கான உத்தியோகபூர்வ தளமொன்று இளவேனிற் காலத்தில் (மார்ச் இறுதியில்) திறக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/175582
-
சீனாவை உளவு பார்த்த குற்றச்சாட்டு - அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு மரணதண்டனையை அறிவித்தது சீனா
Published By: RAJEEBAN 05 FEB, 2024 | 11:18 AM சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூனிற்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளது. மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். சீனா விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வந்த யாங் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். சீனாவின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து அவுஸ்திரேலியர்களும் அவர் யாங் தனது குடும்பத்துடன் இணைவதை விரும்புகின்றனர் அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பரப்புரையை நாங்கள் நிறுத்தப்போவதில்லை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். முன்னர் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய யங் ஜனநாயக கடத்தல்காரர் என அழைக்கப்பட்டார். அவரது எழுத்துக்கள் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்துள்ளன. 2019 ஆம் ஆண்டு குவாங்சோ விமான நிலையத்தில் சீனாவை உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர் தடுத்துநிறுத்தப்பட்டார். அதன் பின்னர் இவர் குறித்த விசாரணைகள் மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றுள்ளன - 2021இல் இரகசிய விசாரணையும் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/175590