Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பித்தப்பை புற்றுநோய்: எந்தெந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது? யாருக்கு வரும் வாய்ப்பு அதிகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பித்தப்பை புற்றுநோய் அரிதானது. ஆரம்பக் கட்டத்தில் பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெரும்பாலான பித்தப்பை புற்றுநோய்கள் தாமதமான கட்டத்தில் கண்டறியப்படுகின்றன, அப்போது நோயை சமாளிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்ன? பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்த தகவல்களை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பேராசிரியர் மருத்துவர் டி.சுரேஷ்குமார் மற்றும் ஐஐடி மெட்ராஸ் பகுதிநேர பேராசிரியரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருமான டி.ராஜ்குமார் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? பித்தப்பை புற்றுநோய் என்பது பித்தைப்பையில் உருவாகும் செல்களின் வழக்கத்துக்கு மாறான வளர்ச்சியாகும். “எல்லாருக்கும் இல்லை என்றாலும், சிலருக்கு வயிற்று பகுதியில் வலி இருக்கும். வயிறு உப்பசம், போதிய செரிமானம் இருக்காது. சிலருக்கு, பித்தநீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் ஏற்படும் obstructive jaundice ஏற்படலாம். இந்த வகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டால், பித்தப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படும்” என்று பித்தப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறைகளை விளக்குகிறார் புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார். பித்தப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் வயிற்று வலி, குறிப்பாக வயிற்றின் மேல் வலது பகுதியில் வயிற்று உப்பசம் எடை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமலே எடை குறைவது மஞ்சள் காமாலை: தோல் மற்றும் கண்களின் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES பித்தப்பையின் செயல்பாடுகள் என்ன? பித்தப்பை என்பது நமது வயிற்றின் வலது பக்கத்தில், கல்லீரலுக்குக் கீழே உள்ள ஒரு சிறிய, பேரிக்காய் வடிவ உறுப்பு ஆகும். இது சுமார் 3 அங்குல நீளமுடையது. பித்தப்பை கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் செரிமான திரவமான பித்தத்தை சேமிக்கிறது. பித்தம் என்பது கல்லீரல் உற்பத்தி செய்யும் திரவமாகும். பித்தநீர் முக்கியமாக கொழுப்பு, பிலிரூபின் மற்றும் பித்த உப்புகளின் கலவையாகும். உணவில் உள்ள கொழுப்புகளை செரிமானம் செய்ய இந்த திரவம் உதவுகிறது. பித்தப்பை சுமார் 50 மில்லி லிட்டர் பித்தத்தை சேமித்து வைக்கிறது. நமது சிறுகுடலில் கொழுப்புள்ள உணவு இருக்கும்போது, பித்தப்பை பித்தத்தை வெளியிடுகிறது. பித்த கொழுப்பை உடைத்து சிறிய துண்டுகளாக மாற்றுகிறது, இது சிறு குடலில் உள்ள கொழுப்பைக் கொண்ட உணவை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. நாம் சாப்பிட்ட பிறகு, சுருங்கிய பலூன் போல, நமது பித்தப்பை காலியாக இருக்கும். அது மீண்டும் நிரப்பப்படுவதற்காக காத்திருக்கும். பித்தப்பை மற்ற செரிமான உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பித்த நாளங்கள் கல்லீரலில் இருந்து சிறுகுடலுக்கு பித்தத்தை கொண்டு செல்லும் குழாய் அமைப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES பித்தப்பை புற்றுநோயை எளிதில் கண்டறிய முடியாததற்கு என்ன காரணம்? பித்தப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள், இந்த நோய்க்கு மட்டுமல்லாமல், மற்ற செரிமான பிரச்சனைகளுக்கும் ஏற்படும் பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், இந்த அறிகுறிகள் நீடித்து நிலைத்திருந்தால் அல்லது மோசமடைந்தால், அவை புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு. “பித்தைப்பை புற்றுநோயை பொதுவாக முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது. ஏனென்றால், ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் இருக்காது. அறிகுறிகள் தென்படும் போது, அது அருகில் உள்ள கல்லீரல், பித்தநீர் குழாய், நெரிகட்டு ஆகியவற்றில் பரவியிருக்கும். அப்போது தான் வயிற்று வலி அல்லது மஞ்சள் காமாலை ஏற்படும். வட மாநிலங்களில் மஞ்சள் காமாலை என்றாலே பித்தப்பை புற்றுநோய் என்று கருதப்படும்” என்கிறார் மருத்துவர் சுரேஷ் குமார். பட மூலாதாரம்,புற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமார் பித்தப்பை புற்றுநோய் ஏன் இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகமாக உள்ளது? பித்தப்பை புற்றுநோய் இந்தியாவின் தென் மற்றும் மேற்கு மாநிலங்களில் அரிதானதாக இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வுகளின் படி, வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பித்தப்பை புற்றுநோய் ஏற்படும் விகிதம் 10 மடங்கு குறைவாக உள்ளது. உதாரணமாக சென்னையில் ஒரு லட்சத்தில் 0.8 பெண்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால் டெல்லியில், ஒரு லட்சத்தில், 8.9 பெண்கள் பித்தப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. இது ஏன் என்று விளக்குகிறார் புற்றுநோய் மருத்துவர் டி ராஜ்குமார். “ சிந்து, கங்கை சமவெளி பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. இதற்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. அங்குள்ள நீர் மாசுபாடு காரணமா என்று ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தரமான குடிநீர் இல்லாத பகுதிகளில் டைஃபாய்டு நோய் ஏற்படும். அந்த நோய்க்கு காரணமான பாக்டீரியா, சில நேரம் உடலில் தங்கி பித்தப்பைக்குள் நுழையவும் வாய்ப்பு இருக்கிறது” என்கின்றார். உலகில் தென் அமெரிக்காவில் சிலி நாட்டுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் பித்தப்பை புற்றுநோய் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் பேரில் 10-12 பேருக்கு பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்று மேலும் கூறுகிறார். பட மூலாதாரம்,புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார் பித்தப்பை புற்றுநோய் யாருக்கெல்லாம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு? எடை கூடுதலாக இருப்பவர்கள், புகைப்பிடிப்பவர்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செரிமான பிரச்னைகள் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக நார்சத்து குறைவாக எடுத்துக் கொள்பவர்கள், மலச்சிக்கல் கொண்டவர்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்பவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். பித்தப்பை கற்களுக்கும் பித்தப்பை புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதா? பித்தப்பையில் கல் இருப்பவர்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்கிறார் புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார். “ஆனால், இந்தியாவில் பித்தப்பை கல் உருவாகும் நபர்களின் எண்ணிக்கை, பித்தப்பை புற்றுநோய் ஏற்படுபவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். எனவே பித்தப்பை கல் இருப்பவர்கள் அனைவருக்கும் பித்தப்பை புற்றுநோய் ஏற்படும் என்று கூற முடியாது. எனினும், கல் இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், ஆண்களை விட பெண்களுக்கே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது.” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களுக்கே பித்தப்பை புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பது ஏன்? “ஏனெனில் பெண்களுக்கு தான் பித்தப்பை கற்கள் அதிகமாக ஏற்படுகின்றன. எனவே பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. பெண்களுக்கு ஏன் பித்தப்பை கற்கள் அதிகம் ஏற்படுகின்றன என்று உறுதியாக கூற முடியாது. எனினும் மாதவிடாய் முடிந்த காலத்தில் எடை கூடுதல், உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று விளக்குகிறார் மருத்துவர் சுரேஷ்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES பித்தப்பை புற்றுநோயை எப்படி கண்டறியலாம்? “அல்ட்ரா சவுண்ட், எம் ஆர் ஐ மூலமே இதை கண்டறிய முடியும். அல்ட்ரா சவுண்ட் மூலம் பித்தப்பையில் ஏதோ மாற்றம் இருக்கிறது என தெரியும். எம் ஆர் ஐ செய்தால் என்ன பாதிப்பு என்பது தெரியும். அதை விட பெட் ஸ்கேன் செய்து மிக துல்லியமாக பாதிப்பின் தன்மை மற்றும் வீரியம் தெரியும்” என்கிறார் மருத்துவர் ராஜ்குமார். பித்தப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை என்ன? பித்தப்பை புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைய ஒரே தீர்வு பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது தான். ஆனால் அது எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சாத்தியம் இல்லை என்கிறார் மருத்துவர் சுரேஷ் குமார். “ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியும். புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது புற்றுநோய் கண்டறியப்பட்ட இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சிலவற்றையும் முழுவதுமாக நீக்கிட வேண்டும். பித்தப்பையில் ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிப்பட்டால், பித்தப்பை முழுவதுமாகவும் அதை சுற்றியுள்ள 2 செ.மீ அளவில் இருக்கும் திசுக்கள் எல்லாவற்றையும் நீக்கிட வேண்டும். எனவே பித்தப்பையை அகற்றும் போது அருகில் உள்ள கல்லீரலின் ஒரு பகுதியும் அகற்றப்படும்” என்கிறார். பித்தப்பை கல் இருப்பவர்கள் சிலருக்கு வலி இருக்கும், சிலருக்கு இருக்காது. அப்படி வலி இருந்தால், பித்தப்பையை முழுவதுமாக நீக்குவது புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பிக்க வழி வகுக்கும் என்றும் கூறுகிறார். பித்தப்பை இல்லாமல் வாழ முடியுமா? பித்தப்பை இல்லாமல் வாழ முடியும், ஆனால் அது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். “பித்தப்பை நீக்கம் செய்யப்பட்டால், கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தம், பித்தப்பையில் சேமிக்கப்படாமல் நேரடியாக சிறுகுடலில் வெளியிடப்படுகிறது. இதன் விளைவாக, கொழுப்பை செரிமானம் செய்வதில் சில பிரச்னைகள் இருக்கலாம். எனினும் சில எளிய உணவு கட்டுப்பாடுகள் மூலம் சமாளிக்கக் கூடியது ஆகும். பித்தப்பையை நீக்கும் போது, கல்லீரலின் ஒரு பகுதியும் வெட்டி எடுக்கப்படும். அதன் காரணமாகவும் தினசரி வாழ்க்கையை மேற்கொள்ள எந்த தடையும் கிடையாது.” என்கிறார் மருத்துவர் சுரேஷ்குமார். https://www.bbc.com/tamil/articles/c0d71yd31k2o
  2. நிகழ்நிலை காப்புச்சட்ட மூலத்தால் சீனாவைப் போன்ற நிலைமையே ஏற்படும் - ஹிருணிகா Published By: VISHNU 29 JAN, 2024 | 08:39 PM (எம்.மனோசித்ரா) நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் சீனாவைப் போன்ற நிலைமையே எமக்கும் ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீனாவைப் போன்ற நிலைமையே இலங்கையிலும் ஏற்படவுள்ளது. எனவே இளைஞர்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்வர வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் இதனால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஏற்கனவே நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டமே போதுமானது. எனவே புதிதாக எந்த சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையில்லை. விஷ்வ புத்த உட்பட மதங்களை நிந்தித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் பைத்தியக்காரர்களாவர். எனவே அவர்களுக்கு பிரதான ஊடகங்கள் முக்கியத்துவமளித்தமை தேவைற்ற ஒரு விடயமாகும். இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய அரங்கேற்றப்படும் நாடகமாகும். அண்மையில் நிமல் லன்சா உள்ளிட்ட குழுவினர் ரணிலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் விரைவில் இடம்பெறும் என இதனை அடிப்படையாகக் கொண்டு ஊகிக்க முடியும். இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பழைய அங்கத்துவ நாடாகும். அவ்வாறிருக்கையில் யுக்திய சுற்றி வளைப்புக்களை நிறுத்துமாறு ஐ.நா. விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் டிரான் அலஸ் கூறுகின்றார். இவ்வாறு முட்டாள்தனமாக பேசும் இவர்களை தும்புத்தடியால் அடித்து துரத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/175098
  3. சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம் - சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டுகோள் Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 08:55 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைத்தண்டனையின் பின்னர் கடந்த 2022-11-11 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்களின் தாயாரால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உருக்கம் நிறைந்த கோரிக்கை கடிதம் மீதான தங்களின் கரிசனையையும் கவனத்தையும் கோரிநிற்கின்றேன். 32 வருடகால சிறைத்தண்டனையின் பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில் அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கை பிரஜைகளான சாந்தன் முருகன் ரொபேர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை கரிசனையோடு தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன். இந்நிலையில் தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து முதுமைக்காலம் முழுவதையும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரக கல்லீரல் பாதிப்பினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 33 ஆண்டுகளாக தனது மகனை காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார் தனது 77 வயதில் மகனை ஒருதடவையாவது நேரில் பார்வையிடவேண்டும் எனவும் அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவண செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டுவரும் நீங்கள் இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும் அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்குஅனுப்பிவைக்க ஆவண செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/175107
  4. அமெரிக்க படைத்தளம் மீது ட்ரோன் தாக்குதல் - பாதுகாப்பை மீறி தந்திரமாக தாக்கியது எப்படி? பட மூலாதாரம்,PLANET LABS/AP படக்குறிப்பு, தாக்குதலுக்குள்ளான அமெரிக்க படைத்தளம் கட்டுரை தகவல் எழுதியவர், எமிலி மெக்கார்வே பதவி, பிபிசி நியூஸ் 29 ஜனவரி 2024 சிரியாவுடனான ஜோர்டான் எல்லையில் அமெரிக்க ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என இரான் மறுத்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க படையை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த தாக்குதலுக்கு, “இரானிய ஆதரவு பெற்ற தீவிர ஆயுதக் குழுக்கள்” மீது அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. “நாங்கள் இதற்கு பதிலடி கொடுப்போம்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து இந்த பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புகள் தாக்குதலில் கொல்லப்படுவது இதுவே முதன்முறை. இந்த பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு (ஜன. 28) முந்தைய தாக்குதல்கள் வரை உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்ததில்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இராக்கை சேர்ந்த அமைப்பு பொறுப்பேற்பு இராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் எனும் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இராக்கில் செயல்பட்டு வரும் சில இரானிய ஆயுதக்குழுக்களை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு, 2023-ம் ஆண்டின் இறுதியில் உருவானது. சமீப வாரங்களாக அமெரிக்க படைகளின் மீது நடத்தப்பட்ட மற்ற தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் உள்ள மூன்று அமெரிக்க ராணுவ முகாம்களை தாங்கள் குறி வைத்ததாக தெரிவித்துள்ளது. அவை, ஷடாடி, டன்ஃப், ரக்பன் ஆகியவை ஆகும். ரக்பன் சிரியாவின் எல்லையில் ஜோர்டான் பகுதியில் உள்ளது. மத்திய தரைக்கடலில் இஸ்ரேலிய எண்ணெய் நிறுவனத்தையும் தாங்கள் குறி வைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பை மீறி தந்திரமாக தாக்கியது எப்படி? அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சிபிஎஸ் ஊடகம், அமெரிக்க முகாமின் டவர் 22-ல் காலை வேளையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அமெரிக்க படையினர் உறங்குவதற்கான குடியிருப்புப் பகுதியில் இருந்ததாக தெரிவித்துள்ளது. அமெரிக்க ட்ரோன் ஒன்று ராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில், "மிகவும் தாழ்வாகவும் மிக மெதுவாகவும்" அந்த ட்ரோன் வந்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தாமல் இருக்க வான் பாதுகாப்பு அமைப்பின் தானாக எச்சரிக்கும் சாதனங்கள் அணைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். இதனால், அந்த ராணுவ முகாமில் ட்ரோன் தாக்குதல் குறித்து துருப்புகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள இராக் அரசாங்கம், மத்திய கிழக்கில் இத்தகைய "வன்முறை சுழற்சியை நிறுத்த" அழைப்பு விடுத்துள்ளது. இராக் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாஸ்ஸெம் அல்-அவாடி, "பிராந்தியத்தில் மேலும் பின்விளைவுகளைத் தடுக்கவும் மோதல் அதிகரிப்பதைத் தடுக்கவும் அடிப்படை விதிகளை நிறுவுவதில் ஒத்துழைக்க" தயாராக இருப்பதாகக் கூறினார். ”இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். திங்களன்று (ஜன. 29) வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இத்தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க விரும்பினாலும், ஆனால் இரான் அல்லது பிராந்தியத்துடன் ஒரு பரந்த போரை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். ஜோர்டானில் அமெரிக்க துருப்புகளை குறிவைக்க ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தங்கள் நிர்வாகம் நம்புவதாக கிர்பி கூறினார். தாக்குதலுக்குக் காரணமான ஆயுதக் குழுக்களை ஆதரிப்பதாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை இரான் மறுத்தது. இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, "பாலத்தீனர்களையோ அல்லது அவர்களின் சொந்த நாடுகளையோ பாதுகாக்க எதிர்ப்பு குழுக்கள் முடிவெடுப்பதில் தாங்கள் பங்கேற்கவில்லை" என்றார். இரானுடன் இணைந்த பிராந்திய ஆயுதக் குழுக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி அமெரிக்காவுக்கு பதிலளிப்பதாக இரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கூறினார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் பிற அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தாக்குதல் குறித்து ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "இந்த வெறுக்கத்தக்க மற்றும் முற்றிலும் அநியாயமான தாக்குதலில் போர் வீரர்களை இழந்ததற்காக துக்கப்படுவதில், ஜில் பைடனும் (அமெரிக்காவின் முதல் பெண்மணி) நானும் நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்களுடன் இணைந்து கொள்கிறோம்" என்று ஜோ பைடன் அறிக்கையில் தெரிவித்துள்ளார் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக், இந்த பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் பணிகளை இரான் தொடர வேண்டும்” என்று வலியுறுத்தினார். ”பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைக் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் உறுதியாக நிற்கிறோம்," என்று அவர் கூறினார். "இந்த தாக்குதல் சிரியா மற்றும் இராக்கில் இயங்கும் தீவிர இரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்டது" என்று நம்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது. குறைந்தது 34 ராணுவ வீரர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், காயமடைந்த சில வீரர்கள் மேல் சிகிச்சையில் உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரக்பனில் உள்ள தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அதற்கு அமெரிக்க அதிகாரிகள் சூட்டிய பெயர் டவர் 22 என்பதாகும். இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் அக்டோபர் 17 முதல் குறைந்தது 97 முறை தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தனர். கடந்த மாதம், வடக்கு இராக்கில் இரானுடன் இணைந்த குழுக்களுக்கு எதிராக, அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. முன்னதாக ஜனவரியில், பாக்தாத்தில் அமெரிக்க பதிலடித் தாக்குதல் ஒன்றில், அமெரிக்க படையினர் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒரு ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டார். ஏபிசி ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒளிபரப்பப்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில், பாதுகாப்புப் படை உயரதிகாரி சி.க்யூ. பிரௌன் இப்பகுதியில் "மோதலை விரிவுபடுத்தக்கூடாது" என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cq579n1ynero
  5. Published By: DIGITAL DESK 3 30 JAN, 2024 | 09:46 AM வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது, வவுனியா காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் 29 வயதுடைய ஜெனிற்றா என்ற இளம் குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் இந்நிலையில் கணவருடைய குடும்பத்தினருடன் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த பெண் கடந்த வாரமும் தனது மகனுடன் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் சத்தம் கேட்டு அயலவர்கள் மீட்டெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பான மரணவிசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேந்திர சேகரன் மேற்கொண்டு வருவதுடன் வவுனியா பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/175112
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES 29 ஜனவரி 2024 கடனில் சிக்கித் தவிக்கும் சீன நிறுவனமான எவர்கிராண்டே நிறுவனத்தை கலைக்க ஹாங்காங்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிக்கலில் உள்ள இந்த கட்டுமான நிறுவனம் அதன் கடன்களை அடைப்பதற்கான திட்டத்தை உருவாக்க பலமுறை தவறியதை அடுத்து, நீதிபதி லிண்டா சான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்நிறுவனம் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் ($325bn - £256bn) அளவுக்கு கடன் உள்ளிட்ட நிதி சார்ந்த நெருக்கடியில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வந்தது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் அதன் பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை ஏறத்தாழ 25 சதவிகிதத்தை பிடித்துள்ளது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எவர்கிராண்டே கடனில் மூழ்கிய போது அது உலக நிதிச் சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. எவர்கிராண்டே நிறுவனம் என்ன தொழில் செய்கிறது? தொழிலதிபர் ஹுய் கா யான் 1996 இல் தெற்கு சீனாவின் குவாங்சோவில் ஹெங்டா குழுமம் என்று அழைக்கப்பட்ட எவர்கிராண்டே நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் இணையதளத்தில், எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் குழுமம், சீனா முழுவதும் 280க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300க்கும் மேற்பட்ட திட்டங்களை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்த அளவில் செயல்படும் எவர்கிராண்டே, ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொள்கிறது என்றில்லாமல் பிற தொழில்களையும் செய்துவந்தது. ரியல் எஸ்டேட் தொழிலைத் தவிர, மின்சார கார் உற்பத்தி முதல் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு வரை பல தொழில்களை இந்நிறுவனம் செய்துவந்தது. நாட்டின் மிகப்பெரிய கால்பந்து அணிகளில் ஒன்றான குவாங்சோ எஃப்சியில் கூட இந்நிறுவனம் குறிப்பிடும்படியான ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஹுய் ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ($42.5bn -£34.8bn) ரூபாயாக இருந்தது என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. ஆனால் அதன்பின்னர் எவர்கிராண்டேவின் பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பு சரிந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் நான்ஜிங் நகரில் எவர்கிராண்டே நிறுவனத்தால் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம். எவர்கிராண்டே ஏன் சிக்கலில் சிக்கியது? எவர்கிராண்டே சுமார் 25 லட்சம் கோடி ($300bn) ரூபாய்க்கும் அதிகமான கடன் வாங்குவதன் மூலம் சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கு தீவிரமாக முயற்சித்தது. இதற்கிடையே, 2020 ஆம் ஆண்டில், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடன் பெறுவதைக் கட்டுப்படுத்த சீனா புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய விதிகளின் காரணமாக எவர்கிராண்டே தனது சொத்துகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே அந்நிறுவனம் கடன் வாங்கத் திட்டமிட்டிருந்த தொகைகளைப் பெறமுடியாத சூழ்நிலையில், மிகவும் குறைந்த விலைக்கு சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அந்த நிறுவனம் இயங்கத் தொடங்கியது. இப்போது கடன்களுக்கான வட்டியை அடைக்க முடியாமல் இந்நிறுவனம் திணறி வருகிறது. இந்த நிச்சயமற்ற தன்மையால் கடந்த மூன்று ஆண்டுகளில் எவர்கிராண்டேயின் பங்குகள் 99% அளவுக்கு மதிப்பை இழந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் நியூயார்க்கில் திவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்தது. கடனாளர்களுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் வேலை செய்ததால், அதன் அமெரிக்க சொத்துகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில், கட்டுமானத் துறை ஏறத்தாழ 25 சதவிகிதம் இடம்பெற்றுள்ளது. எவர்கிராண்டே வீழ்ச்சியால் சீன பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்பு? எவர்கிராண்டேவின் பிரச்னைகள் தீவிரமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கட்டுமானப் பணிகளைத் தெடங்குவதற்கு முன்பே பலர் அந்நிறுவனத்திடம் இருந்து சொத்துகளை வாங்குவதற்காக முன்பதிவு செய்து பெரும் தொகைகளைச் செலுத்தினர். தற்போது இந்நிறுவனம் சிதைந்துவிட்டால், அவர்கள் செலுத்திய வைப்புத்தொகையை இழக்க நேரிடும். எவர்கிராண்டேவுடன் வணிகம் செய்யும் நிறுவனங்களும் உள்ளன. எவர்கிராண்டேவின் வீழ்ந்தால், கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் வழங்குபவர்கள் என பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன. இது அந்நிறுவனங்களை திவால் நிலைக்கு தள்ளும். மூன்றாவதாக, சீனாவின் நிதி அமைப்பில் ஏற்படக் கூடிய பாதிப்பு: எவர்கிராண்டே சரிந்தால், வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் குறைவாகக் கடன் கொடுக்க நிர்பந்திக்கப்படும் அபாயம் உள்ளது. குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போராடும் போது, இது கடன் நெருக்கடியாக மாறும். கடன் நெருக்கடி என்பது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு மிகவும் மோசமான செய்தியாக இருக்கும். ஏனெனில் கடன் வாங்க முடியாத நிறுவனங்கள் வளர்ச்சியடைவது மிகவும் கடினம். மேலும் சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யத் தகுந்த நாடு சீனா இல்லை என்று கருதும் நிலைக்குத் தள்ளலாம். https://www.bbc.com/tamil/articles/c29k38jr64yo
  7. 29 JAN, 2024 | 08:48 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் தரம்மிக்க குழுவினருடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க கலந்துரையாடி வருகிறோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த குழுவில் உள்ள பொருத்தமான ஒருவரையே வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசியல் ரீதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் அரசியல் புரட்சி ஒன்றை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனெனில் நாட்டை வங்குராேத்து அடையச் செய்த குழுவினரை ஜனநாயக ரீதியில் வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயாராகி உள்ளனர். அதனால் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தகுதிவாய்ந்தவர்களுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க தற்போது நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அத்துடன் எமது பரந்துபட்ட கூட்டணியை பாராளுமன்றத்தில் இருப்பவர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி ஒன்றை எதிர்வரும் காலத்தில் கட்டியெழுப்புவோம். இந்த கூட்டணியில் இருக்கும் மிகவும் பொருத்தமான வேட்பாளரை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அதேபோன்று பாெருத்தமான வேட்பாளர் குழுவொன்றை பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முன்வைப்போம். அத்துடன் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகின்றனர். அரசாங்கம் பாரியளவிலான வரி சுமையை மக்கள் மீது சுமத்தி இருக்கிறது. எந்தவித தேடிப்பார்ப்பும் இல்லாமலும் முறையான திட்டமிடல் இல்லாமலும் டின் இலக்கம் ஒன்றின் ஊடாக மக்களை வரி முறைமைக்கு உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கம் கடந்த வாரம் நிகழ்சிலை காப்புச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அதிக சந்தர்ப்பம் இருப்பது இணையவழி சேவை எனும் டிஜிடல் சேவை மூலமாகும். சமூவலைத்தளங்களை ஒழுங்குபடுத்தப்போவதாக தெரிவித்து, அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மரண அடியை வழங்கி இருக்கிறது. சமூகவலைத்தளம் ஊடாக சேறுபூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவது உண்மை என்றாலும் அதனை மேற்கொள்ள வழிவகுத்த பிரிவினரே சட்ட திட்டங்களை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இணையவழி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் அரசாங்கம் நினைத்த பிரகாரம் சட்ட திட்டங்களை கொண்டுவந்துள்ளதால் இணையவழி நேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். முழு உலகிலும் இணையவழி சேவைகளில் வரி அறவிடப்படுவது 6 நாடுகளிலாகும். அதில் இலங்கையும் ஒன்றாகும். அத்துடன் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கு அரசியல் குண்டர்கள் செயற்பட்ட நிலையில், எதிர்வரும் காலத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டு, அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாக இருப்பது அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களை அடக்குவதாகும் என்றார். https://www.virakesari.lk/article/175083
  8. இன்னொரு வகையில் சிந்தித்தால் ஐ.பி.எல் லில் விளையாடுவதன் ஊடாக அவரின் பொருளாதார நிலை உயர்வடையும்.
  9. Published By: VISHNU 29 JAN, 2024 | 08:33 PM (எம்.மனோசித்ரா) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் குறித்த புலமைப்பரிசில் திட்டங்களில் மருத்துவம், சட்டத்துறை, துணை மருத்துவம் (Paramedical), ஆடை வடிவமைப்பு (Fashion Design) ஆகிய கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய 2024 - 2025 காலப்பகுதியில் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பாடநெறிகளுக்கு நேரு நினைவு உதவித்தொகை திட்டத்தின் மூலமும், பொறியியல், அறிவியல் மற்றும் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மௌலானா ஆசாத் திட்டத்தின் ஊடாகவும் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175100
  10. 29 JAN, 2024 | 08:47 PM நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ் குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷ்ர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நட்பு வட்டார செல்வந்தர்களை பாதுகாக்கும், கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் ராஜபக்ஷ் பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து மக்களை இந்த நெருக்கடியில் இருந்து மீட்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஹேவாஹெட்ட நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். மாற்றுத் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் குழு திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தைக் கேட்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இல்லாமலயே திருடர்களைப் பிடித்தது. நாட்டிற்கு மாற்று அணி என்று கூறும் சில குழுக்கள் ஆவணப் கோப்புகளைக் காட்டி திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும், நீதித்துறையின் ஊடாக நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்கள் யார் என்பதை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ராஜபக்ஷ் மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார். இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து,விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி,குற்றம் சாட்டப்பட்டவர்களது குடியியல் உரிமைகளை இல்லாதொழிக்காதது ஏன் என ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார். ராஜபக்ஷ் மொட்டு மாபியா மூலம் தற்போதைய ஜனாதிபதியை நியமித்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ராஜபக்ஷ் மொட்டு மாபியாவைச் சேர்ந்த 134 பேர் தமது கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளமையினாலயே நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார். இது தொடர்பில் வினவிய போது மொட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார்.இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்ஷ்ர்களின் கைகளிலயே உள்ளன. இந்த திருடர்களுடன் ஜனாதிபதிக்கு டீல் இருந்த போதிலும்,இவ்வாறான டீல் தன்னிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடும் திருடர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும். நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175082
  11. சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது! 29 JAN, 2024 | 08:50 PM சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (29) கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/175106
  12. 27 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி: கண்ணீர் சிந்திய லாரா - வைரலாகும் வீடியோ வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 1997 ஆம் ஆண்டில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அருகில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார். கண் கலங்கியபடி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு லாரா வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/289746 கில்லி முகத்திலும் புன்னகை!!
  13. இங்கிலாந்துக்கு எதிராக வெளிப்பட்ட பலவீனம் - 'பேஸ்பால்' நுட்பத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லையா? பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், விமல் குமார் பதவி, மூத்த விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய அணி சொந்த மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் எளிதில் தோல்வியடையாது. எட்டு ஆண்டுகளாக விராட் கோலியின் தலைமையில், இந்திய மண்ணில் இந்தியா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது, ஆனால் ரோகித் சர்மாவின் தலைமையில், ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்திய அணி இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இப்போது ஹைதராபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தோல்வியடையாத சாதனையை இந்திய அணி எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். இங்கிலாந்து அணிக்கு எதிரான பேஸ்பால் வியூகம், இந்திய அணிக்கு அதிர்ச்சி தந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தின் காலகட்டத்தை கடந்து செல்லும் தற்போதைய அணிக்கு வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சவால்கள் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி இதில் விளையாடாவிட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இஷாந்த் சர்மா, விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறினர். அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா மற்றும் கோலி கூட டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் 'பேஸ்பால்' நுட்பத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லையா? பட மூலாதாரம்,REUTERS இந்த வீரர்கள் இல்லாத பட்சத்தில், ஹைதராபாத் போட்டியில் நடந்த தோல்வியைப் போன்ற ஒரு தோல்விக்கு இந்திய அணி ரசிகர்கள் வேதனைப்பட மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தும், இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல்முறை. 690 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் மிக்க பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை விளையாடும் பதினொன்று பேரில் இருந்து வெளியேற்றியது இங்கிலாந்து அணி. போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதாக இங்கிலாந்து அணி அறிவித்தது. இதில், இரண்டு வீரர்கள் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்தைத்தான் பெற்றிருந்தார்கள். உண்மையில், பந்து மற்றும் மட்டைக்கு பதிலாக ஆக்ரோஷமான சிந்தனையால் இங்கிலாந்து அணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இதுவே பேஸ்பால் விளையாட்டின் அடிப்படைத் தத்துவம். சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், தோல்வியைப் பொருட்படுத்தாமல் வெற்றி பெற விளையாடுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த வார்த்தைகள் காகிதத்தில் படிக்கும் போதும் காதுகளால் கேட்கும் போதும் நன்றாகத் தோன்றலாம், ஆனால், ஆடுகளத்தில் இந்த சிந்தனையை செயல்படுத்துவது மிகவும் கடினம். பட மூலாதாரம்,REUTERS இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்த வகை கிரிக்கெட்டை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு, அதுவும் இவ்வளவு நெருக்கமான வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள இந்திய அணியை அதிகம் விமர்சிக்க முடியாது. இந்த தோல்விக்குப் பிறகு அணி நிர்வாகம் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. நான்காவது இன்னிங்ஸில் 230 ரன்களை சேஸ் செய்வது அவ்வளவு கடினம் அல்ல என்று கேப்டன் ரோகித் சர்மா உணர்ந்தார். ஆனால், அவரது பேட்ஸ்மேன்கள் தைரியத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் என்ற இலக்கை பேட்ஸ்மேன்கள் எட்டியிருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பினார். ஏனெனில், இந்தியாவில் கடைசி இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது சவாலானது. ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் எப்படி இருக்கு? பட மூலாதாரம்,REUTERS போட்டி முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஷுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்பாக பயிற்சியாளர் டிராவிட்டிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த வீரர்கள் ஹைதராபத்தில் நடைபெற்ற இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களிலியே அவுட் ஆகி வெளியேறினர். அதேபோல, சமீபத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இந்த இரண்டு வீர்களின் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளி விவரங்களைப் பார்த்தால், அவர்களே அதிர்ச்சியடைவார்கள். விசாகப்பட்டினத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அணியில் மாற்றம் செய்து, இந்த இரண்டு வீரர்களில் ஒருவரை உட்கார வைத்து, ரஜத் பட்டிதாரை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறைாக களமிறக்கினால், அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி சொல்லும் செய்தி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியதன் மூலம், எப்போதும் எதிர் அணியினரை இலகுவாகப் பார்ப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்ற செய்தியை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு கூறியுள்ளது. இங்கிலாந்து தனது வலிமையான எதிரியை தோற்கடித்த விதம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியதை நினைவுபடுத்தியது. ரஹானே அணி முதலில் காபாவில் நடந்த டெஸ்டில் எளிமையாக வெற்றி பெற்றது. பின்னர் தொடரையும் வென்றது. இங்கிலாந்து 2012ல் செய்த அதே சாதனையை மீண்டும் செய்ய முடியுமா? இந்திய மண்ணில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமா? இது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஏனென்றால் 2017-ல் இதேபோல் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்லும் கனவு தகர்ந்துவிட்டது. இந்த தொடரில் இந்தியாவின் சாதனையை எப்படியும் தக்க வைக்க ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு அழுத்தங்கள் இருக்கும். இந்தியா மீண்டும் களமிறங்கி இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வெற்றி பெற்றால், இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற மற்ற அணிகளின் ஆசை இன்னும் சில ஆண்டுகளுக்கு நிறைவேறாது என்று அர்த்தம். https://www.bbc.com/tamil/articles/c51w6wxxwndo
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருக்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோஸ் கார்லோஸ் கியூட்டோ பதவி, பிபிசி உலக செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், காஸா போர், மறுபுறம் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் என ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டிருக்கும்போது, ஜோர்டான் எல்லை அருகே சிரியாவில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர். இப்படி பதற்றம் அதிகரித்து வருவது மத்திய கிழக்கு என்று அழைக்கப்படும் மேற்கு ஆசியாவில் பெரிய போருக்கு வழிவகுக்குமோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. இதில் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்கான தொடக்க அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதைத் தவிர இந்த பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெவ்வேறு மோதல்கள் காரணமாக இப்பிராந்தியமே ஆட்டம் கண்டுள்ளது. அதில், இஸ்ரேல் - லெபனானின் ஹெஸ்புலா குழு மோதல்,மேற்குலகத்திற்கு எதிரான யேமனின் ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல், இராக்,சிரியா, பாகிஸ்தானுக்கு எதிரான இரானின் தாக்குதல், மற்றும் இதர இரான் ஆதரவு குழுக்களால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பட மூலாதாரம்,PLANET LABS/AP படக்குறிப்பு, தங்களது படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தரப்போவதாக அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். இப்படியொரு சூழலில் அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல், "இரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களால் நடத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் பதிலடி கொடுப்போம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த வன்முறை போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் எழுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் இப்பிராந்தியத்தில் பாரம்பரியமாக அதிகாரம் செலுத்தி வரும் கூட்டணிகளும் மாறலாம் என்ற நிலை எழுந்துள்ளது. தற்போது மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் பிரச்னைகளை இரண்டாக பிரித்து சொல்ல வேண்டுமெனில், ஒன்று இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் மோதல்போக்கு. மற்றொன்று இப்பிராந்தியத்தில் தன்னை முன்னணி சக்தியாக கருதிக்கொள்ளும் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சன்னி மற்றும் இரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவினருக்கு இடையே நிலவும் மோதல் ஆகும். அதே சமயம் இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள், சமீப காலமாக மதநம்பிக்கை சார்ந்த மோதல்கள் குறைந்துள்ளதாகவும், தற்காலிக அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி சார்ந்த காரணங்களே மோதல்போக்குக்கு அதிக காரணமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எதிர்ப்பின் அச்சு குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று" இரான் மற்றும் நாடற்ற ஆயுத குழுக்கள் ஜனவரி மாதம் 15 முதல் 17 ஆகிய மூன்றே நாட்களில் சிரியா, பாகிஸ்தான் மற்றும் இராக் ஆகிய மூன்று நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் இராக்கில் உள்ள இஸ்ரேலிய உளவு அமைப்பின் தளம் மற்றும் பாகிஸ்தான், சிரியாவில் உள்ள எதிர் இஸ்லாமிய குழுக்கள் ஆகியவற்றின் தளங்கள் என குறிப்பிட்ட தளங்களை குறி வைத்து நடத்தப்பட்டது என்றாலும், தற்போதைய கொந்தளிப்பான சூழலில் தங்களின் பலத்தை காட்டுவதே இரானின் விருப்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து தாங்கள் புதிய மோதல்கள் எதிலும் ஈடுபட விரும்பவில்லை என்று தெஹ்ரான் சொல்லிக்கொண்டாலும், அதன் ஆதரவு பெற்றதாக அறியப்படும் குழுவான “எதிர்ப்பின் அச்சு” (axis of resistance) சமீப வாரங்களாகவே மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழுவானது லெபனானின் ஹெஸ்புலா, இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஷியா போராளிகள், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இதர போராளி குழுக்கள் மற்றும் யேமனின் ஹூதி குழுக்கள் என அனைவராலும் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகும். இந்த குழுவின் சித்தாந்தம் “குறிப்பிடத்தகுந்த அமெரிக்க எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு” என்று விவரிக்கிறது பிபிசியின் பெர்சிய சேவை. இவர்கள் அனைவருமே அக்டோபர் மாதத்தில் காஸாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் விவரித்துள்ள எல்கானோ ராயல் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த மத்திய கிழக்கு நிபுணர் ஹைசம் அமிரா-ஃபெர்னாண்டஸ், “இந்த 'எதிர்ப்பின் அச்சு' குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று என்று” குறிப்பிடுகிறார். “1979இல் நடந்த இரான் புரட்சியின் விளைவாக உருவான இந்த கூட்டணி, அதன் அரசியல் கொள்கைகளையும், வடிவத்தையும் பிற நாடுகளுக்கும் பரப்புவதற்காக இயங்கி வருகிறது” என்கிறார் லினா கதீப். இவர் லண்டனை தளமாக கொண்டு இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனராக உள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தன்னை ஒரு நடுநிலை மத்தியஸ்தராக நிலைநிறுத்திக் கொள்ள தெளிவான உத்தியை பின்பற்றி வருகிறது கத்தாரின் அல் தானி அரசு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த குழுக்கள் தத்தமது நாடுகளில் நிலவி வந்த அரசியல் சூழலினால் உருவானவை. அதை இரான் தனது பிராந்திய செல்வாக்கை விரிவுபடுத்த பயன்படுத்தி கொண்டது. பிபிசி பெர்சிய சேவையின் செய்தியாளர் கெய்வான் ஹொசைனி, இந்த குழுக்கள் இரானிடமிருந்து “தளவாடம், பொருளாதாரம் மற்றும் சித்தாந்த ரீதியான உதவிகளை” பெற்று வருவதாக, 2020ஆம் ஆண்டு பிபிசி முண்டோவில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதே போல் இந்த பிரச்னையில் மதரீதியான காரணங்கள் இருப்பதையும் ஒதுக்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார் தெற்காசியாவில் இருக்கும் வில்சன் மையத்தின் இயக்குநரான மைக்கேல் ககுல்மேன். இதற்கு உதாரணமாக ஷியா குழுக்களுடன் இரானின் நெருக்கத்தையும், அதற்கு எதிரில் சௌதியின் சன்னி ஆதரவையும் சுட்டுகிறார் அவர். ஆனால், அதே சமயம் தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருப்பதையும் குறிப்பிடுகிறார் அவர். ஹமாஸ் இயக்கம் இஸ்லாத்தின் சன்னி பிரிவை சேர்ந்ததாக இருந்தாலும் அந்த இயக்கத்துக்கு இரானிய ராணும் ஆதரவளிப்பதை வைத்து இந்த கூற்றை புரிந்து கொள்ளலாம், அல்லது குறிப்பிட்ட மோதலில் ஒரே கூட்டணியை சேர்ந்த குழுக்கள் அந்த பிரச்னையை பொறுத்து இரண்டு பக்கங்களுக்கு ஆதரவளித்ததை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக , சிரிய போரின்போது ஹமாஸ் மற்றும் ஹெஸ்புலா ஆகிய குழுக்கள் எதிர் எதிர் நிலையை எடுத்தன. ஆனால் இஸ்ரேலுக்கு முடிவு கட்டுவதில் இரண்டும் இணைந்து விட்டன. சிரியாவின் பஷார் அல் அசாத் ஆட்சியைத் தவிர மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் இரான் வலுவான கூட்டணியில் இல்லாததற்கு இரண்டு முக்கிய காரணிகளை முன் வைக்கின்றனர் நிபுணர்கள். இதுகுறித்து நிபுணர் அமிரா- பெர்னாண்டஸ் கூறுகையில், முதல் காரணம் “இஸ்லாமிய புரட்சி வடிவத்தை மற்ற நாடுகளுக்கும் பரப்ப நினைப்பது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகள் மற்றும் இந்த பிராந்தியத்தின் இதர நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது” என்கிறார். இரண்டாவது, வரலாற்று ரீதியாகவே தனது நாடு, தங்களது வளங்கள், மக்கள் தொகை மற்றும் பெர்சிய பேரரசின் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் இரான் தன்னை இந்த பிராந்தியத்தின் மேலாதிக்க சக்தியாக கருதி வருகிறது என்கிறார் அவர். “இந்த காரணங்களே இதர நாடுகளின், குறிப்பாக சௌதி அரேபியாவின் நோக்கங்களோடு முரண்படுவதாக” அவர் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது. சௌதி அரேபியா தலைமையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு அரபு உலகின் தலைமையாக தன்னை நிறுவ சமீப ஆண்டுகளில் சௌதி அரேபியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் இந்த பிராந்தியத்தின் வலிமையான மக்கள்தொகை, அரசியல், கலாச்சாரத்தை கொண்டிருந்த எகிப்து தான் சில தசாப்தங்களுக்கு முன்பு அரபு நாடுகளின் மையமாக பார்க்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது. இந்த நாடுகளில் இருந்த அதிகளவிலான ஆற்றல் வளங்கள் செல்வமாக மாற்றப்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் செல்வாக்காக மாறியது. சிறிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் அல்லது கத்தார் போன்ற நாடுகள் முதலில் தனித்து நின்றன. ஆனால் பின்னர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதவிக்கு வந்தவுடன், "சௌதி அரேபியா உள்நாட்டளவிலும், உலகளவிலும் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்தது." பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். நிபுணர் அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இதன் வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அதன் செழிப்பான ஹைட்ரோகார்பன் பொருளாதாரம். மற்றொன்றுஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த சமயத்தில் இரானுக்கு எதிரான நடவடிக்கையாக சௌதிக்கு வழங்கிய ஆதரவு.” பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். “பொதுவாகவே ஒவ்வொரு நாடுகளுக்கும் தனிப்பட்ட லட்சியங்கள் இருந்தாலும் கூட, எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் தங்களை நிலைநிறுத்தி கொண்டும், சௌதி அரேபியா உருவாக்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றியும் வருகின்றன” என்கிறார் கதீப். சில நிபுணர்கள் விவரிப்பது போல் “புதிய மத்திய கிழக்கு பனிப்போர்” என்ற மோதல்போக்கை கடந்த 40 ஆண்டுகளாகவே சௌதி அரேபியாவும் இரானும் வெளிப்படையாகவே கடைபிடித்து வந்தன. ஆனால், இது தற்போது இந்த பிராந்தியத்தை சேர்ந்த பலரும் ஈடுபட்டுள்ள மோதலாக மாறி மோசமடைந்து விட்டது. 2015ஆம் ஆண்டிலிருந்தே ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக் குழுவுக்கு எதிரான உள்நாட்டுப்போரில் அரசு படைகளுக்கு ஆதரவளித்து வருகிறது சௌதி அரேபியா. அதே சமயம் சௌதி மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் இந்த குழுவிற்கு இரான் ஆயுதம் மற்றும் ஆதரவு வழங்குவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது இரான். ஷியா கிளர்ச்சியாளர்கள் அதிக அரசியல் மற்றும் ராணுவ பலம் கொண்டுள்ள லெபனான் மற்றும் இராக்கிலும் இரான் தலையிடுவதாக சௌதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. இதில் சில குழுக்கள் சௌதி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மார்ச் 2023 இல், சீனாவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலமாக இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குதல், பாதுகாப்பை புதுப்பித்தல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை புதுப்பித்தல் என சௌதி-இரானிய உறவு ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்தது. பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள் எச்சரித்தபடியே, மத்திய கிழக்கில் உள்ள அதிகார உறவுகளில் நிலவும் நிலையில்லா தன்மை மற்றும் சிக்கலுக்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர். மத்தியஸ்தம் செய்வதன் மூலம் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் கத்தார் கத்தாரை சௌதி அரேபியாவின் தலைமையிலான குழுவின் பக்கம் உள்ள நாடாக கருதுவதை கதீப் மற்றும் அமிரா-பெர்னாண்டஸ் ஆகிய இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். அதே சமயம் அதை இந்த பிராந்தியத்தில் தனித்துவமாக காட்டும் அதன் மத்தியஸ்தர் பாத்திரத்தையும் குறிப்பிடுகிறார்கள். தற்போதைய சூழலில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர். பணக்கார வளைகுடா நாடான கத்தார் பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் அல்லது இரான் போன்ற நாடுகளுடன் நல்லுறவை பேணி வருகிறது. மேலும், அதன் அரசியல் குழுக்களுக்கான ஆதரவு , அதன் அண்டை நாடுகளை விட முற்றிலும் மாறானதாக இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலும் சௌதியின் பழைய எதிராளிகளான ஹமாஸ் அல்லது சன்னி ஆதரவு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு(muslim brotherhood) உள்ளிட்ட இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது கத்தார். கத்தாரின் இது போன்ற அணுகுமுறைகள் அதன் அண்டை நாடுகளால் வரவேற்கப்படவில்லை. இதுகுறித்து நினைவுகூர்ந்த கதீப், "2017இல் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதாக கூறி சௌதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஏமன், லிபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தால் கத்தார் தடை செய்யப்பட்டதாக” தெரிவிக்கிறார். கத்தார் ஒரு மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்தாலும் கூட, அது சிறிய நாடாகும். எனவே அந்நாட்டை அபாய நிலைக்கு தள்ளும் காரணியாக அதுவே அமைந்துள்ளது. 'கத்தார் : சிறிய நாடு, பெரிய அரசியல்' என்ற தனது புத்தகத்தில் அரசியல் ஆய்வாளர் மெஹ்ரான் கம்ரவா கூறியுள்ளது போல், தனது "பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர அந்தஸ்தை உயர்த்தி கொள்ள” அந்நாடு பல மற்றும் மாறுபட்ட கூட்டணிகளை அடைய வேண்டும். 2021இல் கத்தார் மீதான தடைகள் நீக்கப்பட்டன. அதன் பிறகு அண்டை நாடுகள், குறிப்பாக சௌதி அரேபியாவுடன் அதன் உறவுநிலை நட்பு அடிப்படையில் நீடித்து வருகிறது. கண்டிப்பாக கத்தார் “இன்னமும் தன்னை மேலும் சிறந்த மத்தியஸ்தம் மற்றும் சமரசம் செய்யும் நாடாக” நிலைநிறுத்த விரும்புவதாக அழுத்தி கூறுகிறார் கதீப். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது. மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன? இஸ்ரேலின் பிரச்னையை இந்த பிராந்தியத்தின் கூட்டணியில் “அசாதரணமான” ஒன்றாக வரையறுக்கிறார் அமிரா-பெர்னாண்டஸ். மேலும் கதீப்போ, இஸ்ரேல் எந்த நாட்டின் கூட்டணியையும் சேராதது போல் நடந்து கொள்வதாக கூறுகிறார். இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது இஸ்ரேல், அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது. அங்கெல்லாம் மோதல் வெளிப்படையான அல்லது முழுமையான நிலையை எட்டாமல் சிறிய அளவிலான புகைச்சல் நீடித்து கொண்டே இருக்கிறது. மேலும் இஸ்ரேலுக்கு அரபு அண்டை நாடுகளுடனும் நல்லுறவு இல்லை. ஒரு நாடாக மிகக் குறைந்த அங்கீகாரமே பெற்றுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், துருக்கி மற்றும் இரான் மட்டுமே அரபு அல்லாத நாடுகளாகும். அரபு நாடுகளில் 1979லிருந்து எகிப்தும், 1994லிருந்து ஜோர்டானும், 2020லிருந்து ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலை நாடாக அங்கீகரித்து வருகின்றனர். அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இஸ்ரேலின் அரபு-முஸ்லீம் அண்டை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, பாலத்தீனத்துடனான மோதல் போக்கால் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக தெரிவதே” இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த அக்டோபர் 7 இல் போர் ஆரம்பிப்பதற்கு சிறிது காலம் முன்பு கூட, சௌதி அரேபியாவுடனான உறவை இயல்பாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது இஸ்ரேல். அது வெற்றியடைந்திருந்தால் யூத அரசிற்கு பெரும் முன்னேற்றமாக இருந்திருக்கும். ஆனால், தாக்குதல் குறித்த தகவல் வந்த உடனேயே இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்காவிடம் சொல்லி விட்டனர் சௌதி அதிகாரிகள். பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, பாலத்தீனத்துடனான மோதல் போக்கை கைவிடும் வரை, இஸ்ரேலுடனான கூட்டணி நாடுகள் மற்றும் உறவுகளில் நிலவும் அசாதாரணத்தன்மை முடிவுக்கு வர வாய்ப்பில்லை. https://www.bbc.com/tamil/articles/c6pq69vgn9do
  15. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வை பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள போதிலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இதற்கு 30 வருட குத்தகைக்கு புதிய காணியை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 30 வருடத்துக்கான குத்தகை தொகையையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். கிழக்கு ஆளுநரின் இந்த செயற்பாட்டை வரவேற்றுள்ள பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பாடசாலைக்கு காணி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்த பாடசாலையில் நீண்டகாலமாக காணிப்பிரசினை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை எனவும், பாடசாலைகளுக்கான காணியை உடனடியாக பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழரசு கட்சியின் செயலாளர் குகதாசன் ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்து இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்வினை வழங்கினேன் என செந்தில் தொண்டமான் தனது உரையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289770
  16. திகட்ட வைத்துவிடுமோ அண்ணை?! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எல்லோ...
  17. மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவதளம் மீது ஆளில்லா விமான தாக்குதல் - மூன்று படையினர் பலி Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 07:47 AM சிரியா ஜோர்தான் எல்லையிலுள்ள அமெரிக்க இராணுவதளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர். ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பிராந்தியத்தில் அமெரிக்க படையினர் கொல்லப்படுவது இதுவே முதல்தடவையாகும். ஈரான் ஆதரவு குழுக்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நாங்க்ள பதிலடிகொடுப்போம் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களை நாங்கள் தகுந்த தருணத்தில் உரிய விதத்தில் பொறுப்புக் கூறச்செய்வோம் என பைடன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாங்கள் மத்தியகிழக்கில் மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டோம் மூன்று துணிச்சல் மிக்க ஆன்மாக்களை இழந்துள்ளோம் எனஅவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடாத அதிகாரிகள் குடும்பத்தவர்களிற்கு தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மூளை காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் 34 படையினரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் காயமடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படையினர் தங்கியிருக்கும் பகுதிகளை இலக்குவைத்தே ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் வடகிழக்கு ஜோர்தானிலேயே இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியும் மத்தியகட்டளை பீடம் தெரிவித்துள்ள அதேவேளை சிரியாவிற்குள்ளேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எங்கள் பகுதிக்குள் இந்த தாக்குதல் இடம்பெறவில்லை என ஜோர்தான் தெரிவித்துள்ளது. டவர் 22 என்ற தளத்தின் மீதே தாக்குதல் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/175023
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுஷிலா சிங், ஆதர்ஷ் ரத்தோர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 28 ஜனவரி 2024 நீங்கள் ரயில் பயணம் அல்லது சாலை வழியாக நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால், பயணத்தின் நடுவில் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட தோன்றும். சில நேரம் பசிக்கிறது என்பதற்காக சாப்பிடலாம். சில நேரம் பொழுது போக வேண்டும் என்பதற்காகவும் சாப்பிடலாம். அப்போது, நாம் காய்கறி, சாதம் அல்லது சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட விரும்பமாட்டோம். சிப்ஸ், பிஸ்கட் மற்றும் குளிர் பானங்கள் போன்ற உணவுப் பொருட்களையே விரும்புவோம். பாரம்பரிய உணவு மற்றும் பானங்களுக்கு பதிலாக உண்ணப்படும் இந்த சுவையான உணவுகள் 'மிக பதப்படுத்தப்பட்ட உணவு' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை அதிகபடியாக உட்கொண்டால், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மட்டுமல்லாமல், அவை சாப்பிட தூண்டும் வகையில், தயாரிக்கப்படுகின்றன. எனவே நாம் அவற்றுக்கு அடிமையாகி விடுகிறோம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கை , இந்தியாவில் மிக பதப்படுத்தப்பட்ட உணவுக்கான சந்தை கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது என்று கூறுகிறது. மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்றால் என்ன? மருத்துவர் குப்தா ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் பொது நலனுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு மற்றும் முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்கும் NAPI என்ற சிந்தனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். மிக பதப்படுத்தப்பட்ட உணவின் அர்த்தம், “எளிமையான வார்த்தைகளில், மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்பது உங்கள் சமையலறையில் நீங்கள் வழக்கமாக தயாரிக்க முடியாத உணவுப் பொருள். உதாரணமாக பாக்கெட்டில் வரும் சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட், ரொட்டி, பன் போன்றவை.” என்று விளக்குகிறார். "ஒவ்வொரு சமூகமும் அதன் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உணவைத் தயாரிக்கின்றன. இதை உணவு பதப்படுத்துதல் என்றும் கூறலாம். பாலில் இருந்து தயிர் தயாரித்தால், அது பதப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு பெரிய தொழிற்சாலையில் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்பட்டு, நிறம், சுவை, சர்க்கரை அல்லது சோள சிரப் சேர்த்து சுவையாக இருந்தால், அது மிக பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கும். மிக பதப்படுத்தப்பட்ட உணவில் சேர்க்கப்படும் இந்த பொருட்கள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்காது. நீங்கள் அவற்றை தொடர்ந்து சாப்பிடலாம், தொடர்ந்து விற்பனை செய்யலாம் மற்றும் அதிக லாபம் ஈட்டலாம். இத்தகைய சூழ்நிலையில், பெரிய தொழிற்சாலைகள் மட்டுமே அவற்றை தயார் செய்ய முடியும். பட மூலாதாரம்,மருத்துவர் அருண் குப்தா இயற்கை பதப்படுத்திகள் தீங்கு விளைவிக்காது மிக பதப்படுத்தப்பட்ட உணவு ‘காஸ்மெடிக்’ உணவு என்றும் அழைக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொழில்துறை நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளுடன் தயாரிக்கப்படுகின்ற மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்- கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள் இனிப்பு, கொழுப்பு அல்லது உப்பு தின்பண்டங்கள், மிட்டாய் மொத்தமாக தயாரிக்கப்பட்ட ரொட்டிகள், பிஸ்கட், பேஸ்ட்ரிகள், கேக்குகள் இறைச்சி, சீஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர், ஹாட் டாக் இன்ஸ்டன்ட் சூப், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பேபி ஃபார்முலா நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த உணவு பொருட்கள் அனைத்தும் தொழில்துறை செயல்முறையின் கீழ் சர்க்கரை, உப்பு, கொழுப்புகள் திரவ ரசாயனங்கள், கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவை பொதுவாக நம் சமையலறையில் பயன்படுத்துவதில்லை. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானியும், ஹைதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் விஞ்ஞானியுமான மருத்துவர் வி சுதர்ஷன் ராவ் கூறுகையில், நாகரிகம் தொடங்கிய போது பதப்படுத்தும் செயல்முறை தொடங்கியது என்கிறார். மேலும், “நீண்ட கால பயன்பாட்டிற்காக பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் உணவை கெட்டுப் போகாமல் பாதுகாப்பதே இதன் முக்கிய செயல்பாடாகும். உணவில் இருந்து ஈரப்பதத்தை அகற்றினால், அதை பாதுகாக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் கற்றுக்கொண்டனர். எனவே வெயிலில் உலர்ந்த உணவுகளை நீண்ட நேரம் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.” என்று அவர் விளக்கினார். மருத்துவர் வி சுதர்ஷன் ராவ், “உப்பு, சர்க்கரை ஆகியவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டன, அவற்றை நீங்கள் பதப்படுத்திகள் என்று அழைக்கலாம். ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால், இந்த செயல்முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்றும் சுட்டிக்காட்டுகிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாநகராட்சி சுகாதாரத் துறை பேராசிரியர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன், "ஊறுகாயை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது அதிக உப்பு, சர்க்கரை, வினிகர் மற்றும் சிட்ரிக் அமிலத்தை கொண்டது. அவை இயற்கை பாதுகாப்புகளாக செயல்படுகின்றன. செயற்கை பாதுகாப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரத்தின்படி பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES பல வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆக்ஸிஜனேற்றிகள், அமிலங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பதப்படுத்தும் தன்மையை ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பயன்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுகளில் பாக்டீரியாவைத் தடுக்க ஆண்டிமைக்ரோபியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருட்களில் மட்டுமல்ல, கிரீம்கள், ஷாம்புகள், சன்ஸ்கிரீன்கள் போன்ற அழகுசாதனப் பொருட்களிலும் அவை நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்கான செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை தீங்கு விளைவிக்குமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் மருத்துவர் ஜெயேஷ் வகானி, "எந்தவொரு உணவுப் பொருளிலும் ப்ரிசர்வேடிஸ் எனும் பதப்படுத்திகள், பாதுகாப்பு தரங்களை மனதில் வைத்து பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை குறைந்த அளவு மட்டுமே தேவைப்படுகிறது, ஏனெனில் அதிகப்படியான பயன்பாட்டால் எந்த நன்மையும் இல்லை." மருத்துவர் வி சுதர்ஷன் ராவ் கூறுகையில், “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஐ) உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத்திகள் சோதித்து, அவற்றை 60-70 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகும், அவை உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்று கண்டறியப்பட்டுள்ளது.” என்கிறார். நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பான ‘நுகர்வோர் குரல்’ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிம் சன்யால் கூறுகையில், “உணவு மற்றும் பானங்கள் நீண்ட காலமாக கெட்டுப்போகாமல் தடுக்க வண்ணங்களைச் சேர்ப்பதன் மூலம் சுவையை அதிகரிக்கவும், உணவை கவர்ச்சிகரமானதாக மாற்றவும் பதப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன” என்கிறார். இந்த பதப்படுத்திகள் பொதுவாக குறைந்த அளவிலேயே சேர்க்கப்படுகின்றன. ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெட்டுப்போகாமல் தடுக்க பின்பற்றப்படும் முறைகள் அவற்றை மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளாக மாற்றுகின்றன. உணவுப் பொருட்களில் பதப்படுத்திகளின் பயன்பாட்டை தனிமையில் பார்க்க முடியாது. ஆனால் இது மிக பதப்படுத்தப்பட்ட உணவுடன் தொடர்புடையதாக பார்க்க வேண்டும் என்று மருத்துவர் ஆஷிம் சன்யால் விளக்குகிறார். இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையின் மதிப்பு 500 பில்லியன் டாலர். காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றை தயாரிப்பதும் பதப்படுத்தப்பட்ட உணவு என்று அழைக்கப்படுகிறது, ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்பது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஆய்வகத்தில் புதிய வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது என்று ஆஷிம் சன்யால் விளக்குகிறார். இதில் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் போன்றவற்றுடன் கூடுதலாக நிறைய பதப்படுத்திகள் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES "மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பதப்படுத்திகள் மற்றும் ரசாயனங்கள் நிறைந்துள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அவற்றில் பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன, இதனால் அவை நீண்ட காலம் பயன்படுத்தப்படலாம். அவற்றைப் பழக்கப்படுத்த சில சேர்க்கைகளும் சேர்க்கப்படுகின்றன. உதாரணமாக, சிப்ஸ், குளிர் பானங்கள் அல்லது பிற உணவுப் பொருட்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பழகிவிட்டன, மேலும் இந்த பழக்கத்தை வளர்ப்பதற்காக இது போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன” என்று ஆஷிம் சன்யால் கூறுகிறார். மேலும், "மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் பல நோய்களுக்கு வேராக மாறியுள்ளன என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விசாரித்தபோது, மிக பதப்படுத்தப்பட்ட உணவில் நிறைய பதப்படுத்திகள் மற்றும் பிற ரசாயனங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்” என்கிறார். அதிக பிராசசிங்கில் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. இந்த உணவில் தரம் இல்லை. புகையிலை அல்லது சிகரெட்டுகளுக்கு அடிமையாவதைப் போலவே, அத்தகைய உணவுக்கு அடிமையாவதும் ஏற்படுகிறது. மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சிக்கல் என்னவென்றால், அவற்றை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நமக்குத் தெரியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் போதும் என்று ஏன் தோன்றுவதில்லை? மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், "உணவு உண்ணும் போது, நமது மூளை இப்போது வயிறு நிரம்பியுள்ளது என்ற சமிக்ஞையை நமக்கு வழங்குகிறது. ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீங்கள் அவற்றை விரும்பி சாப்பிடும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. நீங்கள் அதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பிவிட்டது என்பதற்கான எந்த சமிக்ஞையும் மூளையில் இருந்து வராது, நீங்கள் அதை சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்” என்கிறார். செயற்கை பதப்படுத்திகளை குறிப்பிட்ட அளவை விட அதிகமாகவும், நீண்ட காலமாகவும் பயன்படுத்தினால், உடலில் புற்றுநோயும் உருவாகலாம் என்று மருத்துவர் ஜெயேஷ் வகானி கூறுகிறார். தீங்கு விளைவிக்கும் உணவுகளின் ஆயுளை அதிகரிக்க பல முறை பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன என்றும் மருத்துவர் அருண் குப்தா குறிப்பிடுகிறார். "அவற்றில் பதப்படுத்திகள் மற்றும் வண்ணமேற்றிகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன, அவை உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அல்லது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இது உடனடியாக தெரியாவிட்டாலும், நீண்ட காலத்தில் இது ஆபத்தானது” என்று எச்சரிக்கிறார். உலகளாவிய பட்டினி குறியீட்டின் 2023 அறிக்கையின்படி, 125 நாடுகளில் பசியைப் பொறுத்தவரை இந்தியா 111 வது இடத்தில் உள்ளது மற்றும் பசியுடன் போராடும் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு. நாடு ஊட்டச்சத்து குறைபாட்டின் சவாலை எதிர்கொண்டுள்ள அதே வேளையில், வளர்ந்து வரும் உடல் பருமன் பிரச்சினையையும் எதிர்கொள்கிறது பட மூலாதாரம்,GETTY IMAGES மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளும் உடல் பருமனை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்றன. மருத்துவர் அருண் குப்தா , "சில நேரங்களில் அவற்றை சாப்பிடலாம், ஆனால் நம் உணவில் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உட்கொள்ளத் தொடங்கும் போது, முதலில், எடை அதிகரிக்க தொடங்கும், பின்பு பல நோய்களுக்கு இதுவே காரணமாகும். இது நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக பதப்படுத்தப்பட்ட உணவின் பயன்பாடு மனச்சோர்வு மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இது ஏன் என்ற , ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருப்பதாக மருத்துவர் அருண் குப்தா கூறுகிறார். பொதுவாக, எல்லா வயதினரும் வகுப்பினரும் மிக பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதைக் காணலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை , குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில் குழந்தைகள் பொதுவாக இனிப்பான உணவுகளை விரும்புகிறார்கள். அவர்கள் சிப்ஸ், மிட்டாய், சாக்லேட், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள் சாப்பிட விரும்புகிறார்கள். இது தொடர்பான பெரும்பாலான ஆராய்ச்சிகள் பெரியவர்கள் மீது செய்யப்பட்டிருந்தாலும், 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 50% குழந்தைகள் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பாதிக்கப்படுவதாகவும், அது அவர்களை உடல் பருமனை நோக்கித் தள்ளுகிறது என்றும் கூறுகிறது. பட மூலாதாரம்,மருத்துவர் ஆஷிம் சன்யால் உணவு லேபிளிங்கின் முக்கியத்துவம் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற உணவு அல்லது உணவுகளை வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டால், படிப்படியாக அதன் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும் என்று ஆஷிம் சன்யால் விளக்குகிறார். அதேசமயம், உணவு பொருட்களின் மீது உள்ள உணவு லேபிள்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார். இது தவிர, இதுபோன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் குறித்த தகவல்களையும் வழங்க வேண்டும். “உணவு பொருட்களின் பாக்கெட்டில் முன் பக்கமாக இருக்கும் ஊட்டச்சத்து லேபிளிங்கை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் சர்க்கரை அதிகம், அதிக உப்பு அல்லது கொழுப்பு அதிகமாக உள்ளதா என்பதை லேபிள் காட்டுகிறது. இந்த முக்கிய விஷயங்களை கவனித்தால், 80% பிரச்னை நிறுத்தப்படும். இப்போது இந்த தகவல்கள் அனைத்தும் லேபிளின் பின்புறத்தில் எழுதப்பட்டுள்ளன மற்றும் வாடிக்கையாளர்கள் கவனிக்காத அளவுக்கு சிறியதாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் முன் பக்கம் லேபிள் ஒட்ட தொடங்கியுள்ளன, இது மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியுள்ளது” என்பதை ஆஷிம் சன்யால் உதாரணமாகக் கூறுகிறார். அதே நேரத்தில், லேபிளிங்கில் தகவல் கொடுத்தால், அது விற்பனையை பாதிக்கும் என்ற விவாதமும் உள்ளது. இதற்குப் பதிலளித்த ஆஷிம் சன்யால், சிகரெட் மற்றும் புகையிலை மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அத்தகைய பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES அரசின் பங்கு என்ன? இந்த விஷயத்தில் மிகப்பெரிய பங்கு அரசுக்கே உள்ளது என சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் அருண் குப்தா கூறுகிறார். அவர் கூறுகையில், "அரசாங்கத்தின் பொறுப்பு மிகப்பெரியது. மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது தவிர, இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஊடகங்கள், சமூகம் மற்றும் நிறுவனங்களின் கடமையாகும். பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி தேர்வு செய்கிறார்கள். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குழந்தை உணவு விளம்பரங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதைப் போலவே, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பொருட்கள் குறித்து தவறான விளம்பரங்களும் தடை செய்யப்பட வேண்டும்” என்று மருத்துவர் அருண் குப்தா வேண்டுகோள் விடுக்கிறார். தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் அறிய வேண்டும். ஒருவேளை மக்கள் இன்னும் சாப்பிடலாம், ஆனால் இந்த விஷயங்களை குறைவாக சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். மருத்துவர் அருண் குப்தா, "இத்தகைய கொள்கைகள் தொழில்துறைக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன, அவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவை தயாரித்து லாபம் ஈட்டினாலும், அதில் தவறில்லை. ஆனால் லாபம் சம்பாதிப்பதும், மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதும் சரியல்ல.” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். https://www.bbc.com/tamil/articles/c72g41we0d5o
  19. கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தை விட்டுக் கொடுக்கலாம் – சித்தார்த்தன் யோசனை Published By: VISHNU 29 JAN, 2024 | 12:37 PM தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும் என தெரிவித்த புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம் என்றார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி இரண்டு மூன்று பிளவாக உடைந்து இருக்கிறது என்றும் அவர்கள் ஒற்றுமையாகிய பின்னரே கூட்டமைப்பு ஒற்றுமை பற்றி பார்க்கலாம் என்றார். கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் இன்னும் பதவியேற்கவில்லை. அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சிகள் இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவை மற்றொரு குழு எதிர்க்கும். ஆகவே தமிழ் அரசுக் கட்சி ஒற்றுமையாக வேண்டும். அதன் பின்னரே ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை பற்றி பார்க்கலாம். கடந்த காலத்தில் சம்பந்தனின் தலைமையின் கீழ் நாம் இணைந்திருந்தாலும் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்பட்ட வேண்டும் என வலியுறுத்தினோம். இதனால் சிலர் கூட்டமைப்பை விட்டுச் சென்றனர். இப்போது கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும். பொதுவான சின்னம் இருக்கலாம். அது வீடாகவும் இருக்கலாம். தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம். இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டாலே கூட்டமைப்பு அர்த்தபுஷ்டியானதாக இருக்கும். நான் மட்டுமல்ல ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். என்றார். https://www.virakesari.lk/article/175046
  20. வரிப் பதிவு தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை – சியம்பலாபிட்டிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உபகரணங்கள் மற்றும் மனித வளங்கள் இல்லாமை இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த வாரம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆட்களை நியமிக்கவும் பல்கலைக்கழக பட்டதாரிகளை நியாயமான சம்பளத்துடன் பயிலுனர்களாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரி பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஆட்கள் பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289703
  21. 29 JAN, 2024 | 01:13 PM அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலணி வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி பாடசாலை மாணவர்களின் காலணி வவுச்சர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அனைத்து காலணி விற்பனை நிலையங்களிலும் செல்லுபடியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175056
  22. Published By: VISHNU 29 JAN, 2024 | 11:16 AM முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (28) மாலை சிறப்புற இடம்பெற்றது. வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (28) பட்டத்திருவிழா முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர். குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம், கார்த்திகை பூவின் பட அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார். இதனை தாம், அவதானித்தாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/175036
  23. Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 11:11 AM போர்க்கால மனித உரிமைமீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளை பிரதிபலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை புறக்கணிப்பதாகவும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றாததாகவும் காணப்படுகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆயுதமோதல்கள் முடிவிற்கு வந்த 15 வருடங்களின் பின்னரும் இலங்கை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை மௌனமாக்கும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2023 ம் ஆண்டு இடம்பெற்ற குறைந்தளவு கலந்தாலோசனைகளின் பின்னர் உண்மை ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் 2024 ஜனவரி 1ம் திகதி வெளியானது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் 1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்த குற்றங்களை விசாரணை செய்வதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது எனவும் தெரிவித்துள்ளது. 1988-89ம் ஆண்டுகால பகுதியில் இடதுசாரி ஜேவிபியின் கிளர்ச்சியின் போது இடம்பெற்ற பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை அரசாங்கம் தவிர்த்திருந்தது எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உண்மை நீதி பரிகாரம் போன்றவற்றை வழங்குவதற்கு பதில் உத்தேச சட்டமூலம் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை மற்றும் அநீதிகுற்றங்கள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆராய்வதை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கத்துடனும் இலங்கை இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளது எனவும் சர்வதேசமனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175038
  24. பட மூலாதாரம்,NARAYANAMOORTHY படக்குறிப்பு, 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பழனி அருகே கிராம மக்கள் விளக்கேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த குழிகள் மனித இனத்துக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வடிவங்கள் என்பதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் நேரில் வந்து ஆய்வு செய்து உறுதி செய்து இருக்கிறார். இவற்றின் சிறப்பு என்ன? 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் மூதாதை இனத்தவர் பழனியில் என்ன செய்து கொண்டிருந்தனர்? இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? பட மூலாதாரம்,NARAYANAMOORTHY படக்குறிப்பு, கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஆய்வாளர்கள் கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் அருகே உள்ளது குரும்பப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பவளக்கொடி அம்மன் கோவிலின் கல்வெட்டுகளை படித்து கோவிலின் வரலாற்றை கூறும்படி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பழனியில் வசிக்கும் தொல்லியல் ஆய்வாளரான நாராயணமூர்த்தியை கடந்த 2017 ஆம் ஆண்டு அழைத்து இருக்கின்றனர். இதனையடுத்து அங்கு சென்ற அவர் கோவிலைச் சுற்றியுள்ளப் பகுதியில் ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது அருகில் வயல் வெளியில் பாறையின் மீது இருந்த குழிகளில் என்னவென்று கிராம வாசிகளிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற மக்களால் பயன்படுத்தப்பட்ட இடம் என கூறி இருக்கின்றனர். அதன் அருகே சென்று தூய்மை செய்து அந்த குழிகளை பார்த்த போதுதான் அவை பழங்காலக் கல்லாங்குழிகள் என தெரியவந்தது. பாறையின் மீது இருப்பது கல்லாங்குழிகள் அவற்றின் வரலாறு பற்றி மக்களுக்கு கூறிவிட்டு பாதுகாக்கும் படி கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,ROMAIN SIMENEL படக்குறிப்பு, மானுடவியல் ஆய்வாளர் ரொமன் சைமனஸ் கல்லாங்குழியை வேலி அமைத்து பாதுகாத்த கிராம மக்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, உலகம் முழுவதும் பழங்குடி மக்கள் ,கல்லாங்குழிகள் பற்றி ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளரான ரொமைன் சைமனஸ் என்பவரை அழைத்து வந்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கல்லாங்குழிகள் பற்றி ஆய்வு செய்ய சென்றபோது வயல்வெளியின் அருகே கல்லாங்குழிகள் இருந்தப் பகுதியை மக்கள் வேலி அமைத்து மண் போட்டு மூடி பாதுகாத்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வேலிகளை அகற்றி மண்ணைத் தோண்டி கல்லாங்குழிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த கல்லாங்குழிகள் ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் (தற்போது வாழும் மனிதர்களை ஹோமோ சேப்பியன்ஸ் என்றும் நமக்கு முன்பு முதன் முதலில் நிமிர்ந்து நடந்த தொடங்கிய மனித இனத்தை ஹோமோ எரக்டஸ் என கூறுவார்கள்) உருவாக்கப்பட்டது என தெரிந்தது. கல்லாங்குழிகளை தகவல் பறிமாற்ற ஹோமோ எரக்டஸ் மனிதர்கள் உருவாக்கியதாக கூறுகிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் ரொமன் சைமனஸ். "இந்தப் பாறைகளில் கிடைத்த வடிவங்களில் எந்த ஒரு மிருகங்களின் உருவமும் இல்லை. ஒரு பெரிய வட்டத்தை சுற்றி சிறு சிறு வட்ட வடிவிலான அமைப்பை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்." "கல்லாங்குழிகளை தொடர்ச்சியாக உருவாக்கிய ஹோமோ எரக்டஸ் இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கதை வழியாகக் கடத்த முயற்சி செய்து இருக்கிறார்கள் என்பதை நாம் இதன் உணர முடிகிறது." "தென்னிந்தியாவில் இது போல கல்லாங்குழிகள் கோயில்களின் அருகிலேயே கிடைக்கின்றன. தற்போது கூட மாரியம்மன் கோயிலுக்கு அருகே தான் இந்த கல்லாங்குழிகள் கிடைத்துள்ளது. இவை, 2லட்சம் ஆண்டுகள் முதல் 4 லட்சம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது", என்றார் சைமனஸ். பட மூலாதாரம்,NARAYANAMOORTHY படக்குறிப்பு, ஒப்பீட்டு முறையில் 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் என கணக்கிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கல்லாங்குழிகளின் வயதை அறிந்தது எப்படி? தொடர்ந்து பேசிய அவர் "கல்லாங்குழிகளின் வயதை நேரடியாக கணக்கிட இயலாது. அதன் அருகே இருந்து கிடைக்கக்கூடிய மனித எலும்புகள், எரிந்த நிலையில் உள்ள விறகு கட்டை, சாம்பல்களை ஆய்வு செய்து அது உருவாக்கப்பட்ட காலத்தை கண்டறியலாம். அந்த முறையில்தான் தென்ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட கல்லாங்குழிகளுக்கு 4 லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகள் வயது என கணக்கிடப்பட்டது. பழனியில் கிடைத்த கல்லாங்குழிகள் கிட்டத்தட்ட அதே வடிவத்திலும், அளவிலும் ஒத்துப் போய் இருக்கிறது. எனவே, இதனை ஒப்பீட்டு முறையில் 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் என நாம் கணக்கிடுகிறோம்", என்றார் பழனியில் கிடைத்தது உலகின் மூன்றாவது பழமையான கல்லாங்குழிகள் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி. "பழனி குரும்பப்பட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்ட கல்லாங்குழிகளில் 191குழிகள் இருந்தன. இதில் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான குழிகள் உள்ளது. சிறிய குழிகள் 4 செ.மீ விட்டமும் 1 செ.மீ ஆழம், பெரிய குழிகள் 15 செ.மீ விட்டமும் 13 செ.மீ ஆழமும் உடையதாக இருந்தன", என கூறுகிறார் நாராயணமூர்த்தி. பட மூலாதாரம்,NARAYANAMOORTHY படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்காவின் கலகாரி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லாங்குழிகள் குழிகள் அமைப்பு சொல்வது என்ன? தொடர்ந்து பேசிய அவர் கூறும் போது " இந்த குழிகள் சமமற்ற முறையில் உள்ளன. ஒரு பெரிய குழியைச் சுற்றி பல சிறிய குழிகள் உள்ளன. அதே போல் பெரிய குழிகள் வரிசையில் தொடர்ச்சியான குழிகளாக பாறையின் சரிவில் ஒழுங்கற்று இருக்கின்றன. இந்த வடிவங்கள் கீழ்த்தொல் பழங்காலத்தைச் (lower Paleolithic) சேர்ந்தவையாக இருக்கும்" என்கிறார். மேலும் கூறிய அவர் "இதற்கு முன்பாக மத்தியபிரதேச மாநிலம் பீம் பேட்காவில் 7 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவே உலகின் மிக பழமையான பல்லாங்குழிகள். அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவின் கலகாரி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லாங்குழிகள் 4 லட்சம் ஆண்டுகள் பழமையானது. "தமிழ்நாட்டில் திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பல மாவட்டங்களில் கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் புதைகுழிகள் அருகில் கண்டறியப்பட்டவையே அது முன்னோர்கள் நினைவாக உருவாக்கப்பட்டு இருக்கலாம்." "அதேபோல் பழனியில் எடுக்கப்பட்ட கல்லாங்குழிகள் உருவாக்கப்பட்ட பாறை ஆர்க்கியன் புரட்டரோசோயிக் காலத்தைச் சேர்ந்தது, இவையும் முன்னோர்களின் நினைவாக உருவாக்கப்பட்டு இருக்கலாம்", என்கிறார். பட மூலாதாரம்,MANIKANDAN BARATH படக்குறிப்பு, புவியியல் ஆய்வாளர் மணிகண்ட பாரத் ஆற்றங்கரை நாகரிக மனிதன் உருவாக்கிய வடிவமே அந்த கல்லாங்குழியாக இருக்கும் என புவியியல் ஆய்வாளர் மணிகண்ட பாரத் கூறுகிறார். "பழனி அருகே கல்லாங்குழிகள் எடுக்கப்பட்ட பாறையின் புகைப்படத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் அனுப்பினார்கள். அதனை (static graphic Mapping) புவியியல் அமைப்பை ஆய்வு செய்தால் முன்பு அந்த பகுதியில் இருக்கும் புவியியல் அமைப்பின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்." பட மூலாதாரம்,MANIKANDAN BARATH படக்குறிப்பு, காவிரியின் கிளை ஆறுகளாக இரண்டு ஆறுகள் குறுக்கே பாய்ந்தது அழிந்து போய் இருப்பது தெரிகிறது "இந்த கல்லாங்குழிகள் பாறையை ஜியோமார்பாலஜி( geomorphology), ஸ்டாட்டிக் கிராபிக் மேப்பிங் முறையில் குரும்பப்பட்டி பகுதியில் காவிரியின் கிளை ஆறுகளாக இரண்டு ஆறுகள் குறுக்கே பாய்ந்தது அழிந்து போய் இருப்பது தெரிகிறது. மேலும், அந்தப் பாறைகள் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என கண்டறிய முடிந்தது." தொடர்ந்து பேசிய அவர் "அந்தக் குழிகள் எரிமலை வெடிப்பினால் உருவாகவில்லை. ஏனென்றால் அந்தப் பகுதியைச் சுற்றியும் பழனி, கொடைக்கானல் மலைகள் மட்டுமே உள்ளன. எனவே இந்த வட்ட வடிவிலான அமைப்பு கற்களை கொண்டு ஆற்றங்கரையில் வாழ்ந்த மனிதர்கள்தான் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை நம்மால் உறுதி செய்ய முடிகிறது", என்றார். https://www.bbc.com/tamil/articles/c9w4mk04yn1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.