Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 2025ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 07 Oct, 2025 | 10:40 AM 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன. உலக அளவில் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசு அடங்கியது. இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227086
  2. A Message From Dr. Jane Goodall | Famous Last Words Jane Goodall: An Inside Look (Full Documentary) | National Geographic
  3. அததெரண கருத்துப் படம்.
  4. புதிய பிரேரணையை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை வெளியிட்ட உறுப்புநாடுகள் 07 Oct, 2025 | 09:12 AM (நா.தனுஜா) இணையனுசரணை நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணையின் ஊடாக இலங்கை தொடர்பில் பேரவையும், உயர்ஸ்தானிகர் அலுவலகமும் கொண்டிருக்கும் ஆணை காலநீடிப்பு செய்யப்படுவது பற்றி உறுப்புநாடுகள் சில வரவேற்பு வெளியிட்ட அதேவேளை, மேலும் சில நாடுகள் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளித்து அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் பேரவை தலையிடக்கூடாது என வலியுறுத்தின. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட 60/L1/Rev.1 எனும் புதிய பிரேரணை, நேற்று திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்போது புதிய பிரேரணை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் வருமாறு: சீனா மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கையினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம். அதேவேளை சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலுக்கு விரோதமாக நிறைவேற்றப்படும் பிரேரணைகளை நாம் நிராகரிக்கின்றோம். இப்பிரேரணையின் பிரகாரம் இலங்கை தொடர்பான ஆணையை மேலும் காலநீடிப்பு செய்வதன் ஊடாக எந்தவொரு பெறுபேறும் கிட்டாது. எனவே இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவை செயற்படவேண்டும். கொரியா இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கின்றோம். இம்முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பவற்றுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுமாறு வலியுறுத்துகின்றோம். ஜப்பான் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இன்றியமையாதனவாகும். அதன்பிரகாரம் உயர்ஸ்தானிகரின் விஜயத்துக்கு அனுமதி அளித்தமையைப் பாராட்டுகின்றோம். எதியோப்பியா இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தல் என்ற இலக்கினை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளின்போது அந்நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் அதன் உள்ளக விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகிய கொள்கைகள் உரியவாறு பேணப்படவேண்டும். அதன்படி இலங்கையின் விருப்பத்துக்கு முரணான வகையில் வெளியகப்பொறிமுறை மேலும் காலநீடிப்பு செய்யப்படுவது குறித்து எமது கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/227077
  5. சாலையில் சென்ற வாகனங்களை துரத்திய யானைகள்
  6. கர்ப்பிணிக் கரடியை காப்பாற்றிய வனத்துறை தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவிய கண்டுபிடிப்பு - கார்பன் டேட்டிங் இராவணனிடம் அடிவாங்கும் குஜராத் மக்கள்
  7. 'தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?' - ம.பி.யை உலுக்கும் இருமல் மருந்து சர்ச்சை படக்குறிப்பு, கடந்த ஒரு மாதத்தில் மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் 11 குழந்தைகள் இறந்துள்ளனர், இறந்த அட்னன் எனும் குழந்தையின் பெற்றோர் கட்டுரை தகவல் விஷ்னுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர், போபால் 6 அக்டோபர் 2025, 07:59 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஒரு மாதத்தில் மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் 11 குழந்தைகளும் ராஜஸ்தானில் மூன்று குழந்தைகளும் இறந்தநிலையில், குழந்தைகளின் நலன் குறித்து இரு மாநிலங்களிலும் கேள்விகள் எழுந்துள்ளன. இருமல் மருந்தை குடித்த பிறகே குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றும் இக்குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) எனும் இருமல் மருந்தை மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறை சனிக்கிழமை தடை செய்தது. சனிக்கிழமை இரவு, அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இந்த இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது காவல் துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. பாரசியா (Parasia) பகுதி மருத்துவ அதிகாரி அங்கில் சஹ்லம் அளித்த புகார் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின்படி, இறந்த 11 குழந்தைகளில் 10 குழந்தைகள் பாரசியா பகுதியை சேர்ந்தவர்களாவர், இங்குதான் மருத்துவர் பிரவீன் சோனி அரசு குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த இறப்புகளை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு இதுகுறித்து அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது, அதில் இந்த மருந்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை மேற்கொண்ட நடவடிக்கையில் ஸ்ரீசன் மருந்து நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் "கலப்படம்" செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, கோல்ட்ரிஃப் மருந்தின் SR-13 எனும் தொகுதியில் (batch) 'கலப்படம்' இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்த மருந்தில் 48.6% டைஎத்திலீன் கிளைக்கால் (diethylene glyco) உள்ளது, இது உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல நச்சு ரசாயனமாகும். மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தன் எக்ஸ் பக்கத்தில், "சிந்த்வாரா பகுதியில் கோல்ட்ரிஃப் மருந்தால் குழந்தைகள் இறந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மத்திய பிரதேசம் முழுவதும் இந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மற்ற மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன" என பதிவிட்டுள்ளார். சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் பவன் நந்தர்கர். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெரும்பாலான குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் இறந்துள்ளனர். சிறுநீரக பயாப்ஸி (சிறுநீரகத்திலிருந்து சிறு திசுவை எடுத்து பரிசோதிப்பது) செய்து பரிசோதித்தபோது, ஒருவித நச்சு ரசாயனத்தால், சிறுநீரகம் பாதிப்படைந்து, செயலிழந்ததால் குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்கப்பட்டுள்ளதும் அவர்களின் முந்தைய மருத்துவப் பதிவுகளிலிருந்து தெரியவந்தது." என்றார். சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த யாசின் கானின் நான்கு வயது மகன் உசைத் இப்போது இந்த உலகத்தில் இல்லை. தொலைபேசி வாயிலாக அவர் பிபிசியிடம் பேசுகையில், "என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. ஆக. 25 அன்று என் மகனுக்கு முதலில் லேசான இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. செப். 13 அன்று என் மகன் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தான். எனக்கு எல்லாமுமாக இருந்த என் மகன் போய்விட்டான்." என்றார். மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 2 வரை 11 குழந்தைகள் உயிரிழந்தன. குறைந்தது 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுள் சிலரின் உடல்நிலை மோசமாக உள்ளது. படக்குறிப்பு, மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா ராஜஸ்தானிலும் குழந்தைகள் இறப்பு மத்திய பிரதேசத்திற்கு அருகில் உள்ள ராஜஸ்தானின் பாரத்பூர் மற்றும் ஜுஞ்சுனூ மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனையில் இருமல் மருந்து குடித்ததால் இரு குழந்தைகள் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது. சனிக்கிழமை சுரு மாவட்டத்திலும் மற்றொரு குழந்தை ஒன்று இறந்துள்ளது. இருமல் மருந்து குடித்ததாலேயே தங்கள் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர். சுரு மாவட்டத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன், ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் உயிரிழந்தார். அச்சிறுவனுக்கு நான்கு தினங்களுக்கு முன்பாக இருமல் மருந்து கொடுத்ததாகவும், அதையடுத்து உடல்நிலை மோசமானதால் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதேபோன்று, பாரத்பூரை சேர்ந்த இரண்டு வயது குழந்தையும் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மூன்று தினங்கள் கழித்து உயிரிழந்தது. ஜுஞ்சுனூ மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது குழந்தை, சிகாரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமார் மௌரியா பிபிசி இந்தியிடம் கூறுகையில், "மத்திய மருந்து பரிசோதனை முகமையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். 12 மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம், அதேபோன்று, மத்திய மருந்து பரிசோதனை முகமையும் ஆறு மாதிரிகளை பரிசோதித்துள்ளது. எங்களின் மூன்று மாதிரிகளிலும் மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தின் ஆறு மாதிரிகளிலும் இதுவரை டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை கண்டறியப்படவில்லை. மீதமுள்ள மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம்." என்றார். குழந்தைகள் இறப்பை தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பிரதேச சுகாதார துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா வெள்ளிக்கிழமை மதியம் கூறுகையில், "இதுவரை 12 மாதிரிகள் மாநில மருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதில், மூன்று பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன, அதன்படி எவ்வித ரசாயனமும் கண்டறியப்படவில்லை." என்றார். இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்தது குறித்து பேசிய ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்வ்சர், " நாங்கள் மருந்தை பரிசோதித்தோம், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எதுவும் அதில் கண்டறியப்படவில்லை. இந்த மருந்தால் எந்த இறப்பும் நிகழவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம்" என்றார். இதனிடையே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகளின் இறப்புகளை தொடர்ந்து மத்திய சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (DGHS) "ஆலோசனைப்படியே" இருமல் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. படக்குறிப்பு, குழந்தை விகாஸின் தந்தை பிரபுதயாள் யாதவ் தன் குழந்தையின் இறப்புக்கு நீதி கோருகிறார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? சிந்த்வாரா மாவட்ட நிர்வாகத்தின்படி, இதுதொடர்பான முதல் பாதிப்பு ஆகஸ்ட் 24 அன்று பதிவாகியுள்ளது, செப்டம்பர் 7 அன்று முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. யாசின் கூறுகையில், தன்னுடைய நான்கு வயது மகன் உசைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார். அவர் கூறுகையில் "ஆகஸ்ட் 25ஆம் தேதி என் மகனின் உடல்நிலை மோசமானதால், அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆக.31 வரை அவனுடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருந்தது, ஆனால் பின்னர் அவனுக்கு சிறுநீர் வெளியேறுவது நின்றுவிட்டது. இது இரு நாட்கள் தொடர்ந்தது, இதையடுத்து அவனை சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிந்த்வாராவிலிருந்து நாக்பூருக்கு சென்றோம், அங்கு 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் என் மகன் இறந்துவிட்டான்." என்றார். ஆட்டோ ஓட்டுநரான யாசினுக்கு இரு மகன்கள். மூத்த மகன் உசைத்தின் சிகிச்சைக்காக 4 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். இச்சமயத்தில், அவர் தன் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோவை விற்க நேர்ந்துள்ளது. யாசின் கூறுகையில், "பணத்தினால் என்ன நடக்கும்? என் குழந்தை பிழைத்திருந்தால் எல்லாம் நன்றாக நடந்திருக்கும். மீண்டும் என் ஆட்டோவை வாங்கியிருப்பேன். இப்போது என் வலியை இன்னொரு தந்தை அனுபவிக்கக் கூடாது என நினைக்கிறேன்." என்றார். படக்குறிப்பு, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ் 'தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?' மத்திய பிரதேசத்தில் இறந்த 11 குழந்தைகளும் சிந்த்வாராவின் பராசியா பகுதியை சேர்ந்தவர்கள். இப்பகுதியில் 2.8 லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றும், அவர்களுள் சுமார் 25,000 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் பாரசியா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ் (Sub Divisional Magistrate) தெரிவித்தார். அவர் கூறுகையில், "பலவித சாத்தியமான காரணங்கள் குறித்து விசாரித்துள்ளோம். அப்பகுதியிலிருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்துள்ளோம், கொசுக்கள் மற்றும் எலிகளிலிருந்து நோய் பரவியதா என்பதையும் பரிசோதித்தோம். அவற்றில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன" என்றார். அவர் மேலும் கூறுகையில், "சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையுடன் இறந்த குழந்தைகளின் முந்தைய மருத்துவப் பதிவுகள் ஆராயப்பட்டன, இதில்தான் அந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது" என்றார். அவர் கூறுகையில், பல்வேறு பகுதிகளிலிருந்து மருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்துள்ளதாகவும் கூறினார். அதன் அடிப்படையில், குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழந்தது எப்படி என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் காரணத்தைக் கண்டறியும் என்றார் அவர். பரிசோதனை முடியவில்லை என்று மத்திய பிரதேச அரசு 10 தினங்களாக கூறிவந்த நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தில், விதிமுறைகளை மீறி நச்சு ரசாயனமான டைஎத்திலீன் கிளைக்கால் இருப்பதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு நாளைக்குள்ளேயே உறுதிப்படுத்தியுள்ளது. சிந்த்வாராவை சேர்ந்த மற்றொரு குழந்தையின் உறவினர் கூறுகையில், "விஷத்தன்மை வாய்ந்த, ஆபத்தான மருந்து எப்படி சந்தையில் விற்கப்படுகிறது? இதை மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? ஒரு நாளைக்குள் தமிழ்நாடு அரசு இதைக் கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளை கொல்லும் மருந்துகளை விற்பனை செய்வது யார் என்பது மத்திய பிரதேச அரசு விசாரிக்கவில்லையா?" என்றார். படக்குறிப்பு, சிந்த்வாரா அரசு மருத்துவமனை முந்தைய எச்சரிக்கைகள் புறக்கணிப்பா? கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவின் சுகாதார சேவைகள் பொது இயக்குநர், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரபலமான இருமல் மருந்தை தயாரிப்பதற்கு தடை செய்தது. இந்த மருந்தின் தயாரிப்பில் உள்ள குளோர்ஃபெனிரமைன் மாலேட் (chlorpheniramine maleate) மற்றும் ஃபெனைல்ஃபெரின் (phenylephrine) ஆகியவற்றுக்கு 2015-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை இருமல் மற்றும் சளி மருந்துகளில் முக்கியமான மூலப்பொருட்களாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 2022-ஆம் ஆண்டில் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், இந்த மருந்துகளை தயாரிப்பவர்கள் தாங்கள் தவறிழைக்கவில்லை என மறுத்துள்ளனர், பரிந்துரைக்கப்பட்ட அளவில் வழங்கும் போது தங்களின் மருந்துகள் பாதுகாப்பானவை என்று கூறுகின்றனர். சிந்த்வாராவை சேர்ந்த சுகாதார துறை அதிகாரி, பெயர் தெரிவிக்க விரும்பாமல் பிபிசியிடம் கூறுகையில், "இறந்த குழந்தைகளுள் 6-7 பேர் 4 வயதுக்குட்பட்டவர்கள்." என்றார். இது முதல் முறையல்ல... மத்திய பிரதேசத்தில் மருந்துகளின் தரம் குறித்து முன்பு கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஊசிகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், மாநிலம் முழுவதும் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய பிரதேச பொது சுகாதார சேவைகள் கழகம், இந்த மருந்துகளை தரமற்றவை என வகைப்படுத்தியுள்ளது, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பல்வேறு தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. பொது சுகாதார நிபுணர் அமுல்யா நிதி இதுகுறித்து கூறுகையில், "மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே, சிந்த்வாராவில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, அந்த மருந்தின் தரம் குறித்து அல்ல, அதில் என்ன கலக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். விசாரித்து வருவதாக அரசு கூறுகிறது. விசாரணை இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?" என்றார். மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பேசிய அவர், "குழந்தைகளின் நலனில் அரசு தீவிரமாக இருப்பதாக தெரியவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாமதம் செய்யப்படுகின்றது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பச்சிளம் குழந்தைகள் இறப்பு, பிரசவத்தின் போது பெண்கள் இறப்பது ஆகியவை மோசமான விகிதத்தில் உள்ளன. இந்தூரில் குழந்தைகளை எலி கடித்ததும் பதிவாகியுள்ளது. இப்போது சிந்த்வாராவில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்துள்ளனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும். மருந்து கொள்முதல் கொள்கை மற்றும் மருந்து தரம் குறித்து சுயாதீனமாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். நாட்டிலேயே பச்சிளம் குழந்தைகள் இறப்பு மத்திய பிரதேசத்தில் அதிகமாக உள்ளது, அங்கு பிறக்கும் 1,000 குழந்தைகளில் 40 குழந்தைகள் இறக்கின்றன. 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுகாதார அமைச்சர் ராஜேந்திர ஷுக்லா சட்டமன்றத்தில் இந்த தகவலை எழுத்துபூர்வ பதிலாக வழங்கினார். சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பு தரவுகளின்படி (Sample Registration System (2022), தேசிய சராசரியைவிட மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகம் என்று அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நீதி கேட்கும் குடும்பங்கள் இருமல் மருந்தை குடித்து அதனால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பால் ஐந்து வயதான அட்னன் கான் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அட்னனின் தந்தை ஆமின் செல்போனில் பேசுவதற்கு தயாராக இல்லை. ஆமினின் மூத்த சகோதரர் சஜித் கான் பிபிசியிடம் கூறுகையில், "குழந்தைக்கு எவ்வித தீவிரமான உடல்நல பிரச்னையும் இல்லை. லேசான காய்ச்சல் ஏற்பட்டது, பின்னர் நிலைமை மோசமானது. எங்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை" என்றார். அட்னனின் தந்தை அங்கு சேவை மையம் ஒன்றை நடத்திவருகிறார், அதன்மூலம் மாதம் சுமார் ரூ. 10,000 வருமானம் ஈட்டிவருகிறார். சஜித் கூறுகையில், 15 நாட்களாக ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்தும் அட்னனை காப்பாற்ற முடியவில்லை என்றார். நான்கு வயதான விகாஸ் யாதவன்ஷியின் வீட்டிலும் அமைதி நிலவுகிறது. குழந்தையின் தந்தை பிரபுதயாள் யாதவ் கூறுகையில், "இருமல், சளி, காய்ச்சலால் 10 நாட்களில் சிறுநீரகம் செயலிழக்குமா? எதையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை" என்றார். விகாஸின் பெற்றோர் விவசாயிகள். தங்கள் மகனின் இறப்புக்கு நீதி வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். வீட்டின் மூலையில் அமர்ந்திருக்கும் பிரபுதயாள் கூறுகையில், "எங்கள் குழந்தை இறப்புக்கு நீதி வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. இருமல் மற்றும் காய்ச்சலால் எப்படி சிறுநீரகம் செயலிழக்கும்? இதற்கு யார், எப்போது பதிலளிப்பார்கள் என்பதை அரசு சொல்ல வேண்டும்" என்றார். இதனிடையே, சஜித் பிபிசியிடம் கூறுகையில், "மருந்தை தயாரித்தவர்கள் அல்லது விற்றவர்கள் என யார் தவறிழைத்தார்களோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். என் மகன் போய்விட்டான், குறைந்தபட்சம் வேறு யாரும் இந்த மோசமான மருந்துகளுக்கு தங்கள் குழந்தைகளை இழக்கக் கூடாது," என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்படக் கூடாது என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது நிபுணர்கள் கூறுவது என்ன? சாமானியர் ஒருவர் எப்படி இந்த மருந்துகள் நல்லதா அல்லது போலியானவையா என்பதை கண்டறிய முடியும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் ஆவேஷ் சயினி கூறினார். அவர் கூறுகையில், "அந்த மருந்து எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அது நுரையாகவோ அல்லது நிறம் மாறியோ அல்லது அதில் வேறு ஏதேனும் துகள்கள் இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும். மருந்தின் அடியில் ஏதேனும் துகள்கள் இருந்தாலோ அல்லது மருந்தின் பேட்ச் எண் குறிப்பிடாமல் அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ அந்த மருந்தும் நல்லதல்ல. அந்த மருந்தின் உரிம எண்ணும் அதில் இருப்பதும் அவசியம். அது எழுதப்படவில்லையென்றாலும் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது." என்றார். மருத்துவர் சயினி கூறுகையில், "இவையெல்லாம் ஏற்கெனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தான். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுகுறித்து ஆய்வு கிடையாது, எனவே இவற்றை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குதான் கொடுக்க வேண்டும்." என்றார். மருந்தை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், "மருத்துவர் பரிந்துரைக்கும் அளவே கொடுக்க வேண்டும். குழந்தையின் எடைக்கு ஏற்பவே மருந்து கொடுக்கப்பட வேண்டும்" என்றார். போலி மருந்துகளால் வேறு என்னென்ன பிரச்னைகள் வரும் என கேட்டதற்கு, "மூச்சு விடுவதில் சிரமம், வயிற்று வலி ஏற்படும். சிறுநீரகத்தை அது பாதிக்கும். பின்னர் மூளையை பாதிக்கும். இதனால் பின்னர் வலிப்பு ஏற்பட்டு, இதயத்துடிப்பு நின்றுவிடும்." என்றார். இதனிடையே, முன்பு போபாலில் பணியாற்றிய மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா கூறுகையில், "டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை இருமல் மருந்துகளில் குளிர்விப்பானாக (coolants) பயன்படுத்தப்பட்டன. இதனால் மருந்து இனிப்பு சுவையுடையதாகவும் குளிர்ச்சியானதாகவும் இருக்கும். இது சார்பிடாலை (sorbitol) ஒத்ததாக இருக்கும். எனினும், சார்பிடால் செலவு அதிகம் என்பதால், சில மருந்து நிறுவனங்கள் டைஎத்திலீன் கிளைகாலை மலிவான மாற்றாக பயன்படுத்துகின்றன. நாட்டு மதுபானங்களில் காணப்படும் மெத்தில் ஆல்கஹாலுடன் இவையும் ஒரே வகையின்கீழ் வருகின்றன. இரண்டும் உடல் நலனுக்கு தீங்கானவை" என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்த ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குழந்தைகளுக்கு நெஃப்ரோடாக்ஸிக், அதாவது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த ரசாயனங்கள் சிறுநீரகத்தால் கட்டுப்படுத்தப்படும் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நச்சு பிற பாகங்களுக்கும் பரவி மரணம் நிகழ்கிறது" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ye4z7vpnvo
  8. 06 Oct, 2025 | 04:50 PM அகில இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உச்ச மகாநாயக்கரான மதீஹே பன்னசீஹ மகாநாயக்க சுவாமிந்திரசாவின் தலைமையில் நிறுவப்பட்ட விபாசி பௌத்த மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி கொண்ட மருத்துவ உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தை புதுப்பிப்பதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 68 இலட்சம் ரூபாய். இதற்காக சுகாதார அமைச்சகம் 45 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை மருத்துவமனை சேவைகள் சபை செலவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு கடற்படை தனது பங்களிப்பையும் வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களிடமிருந்து உதவி கோரி, இந்த நாட்டு மக்களுக்கு நன்மைகளை வழங்குவதில் வணக்கத்திற்குரிய ராஜவெல்ல சுபூதி தேரர் மற்றும் அவரது குழுவினரின் வழிகாட்டுதலுக்கு சுகாதார அமைச்சர் என்ற முறையில் தனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இதன்போது தெரிவித்தார். அரசாங்கப் பணிகளை மேற்கொள்ளும்போது, நூறு மீட்டர் ஓடுவது போல மிக விரைவாகச் செய்ய முடியாது என்றும், மருந்துப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாகவும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்தச் சட்டங்களை மாற்றுவது ஒரு சிக்கலாக இருக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எழுந்துள்ள சில சிக்கல்கள் இன்று நேற்று எழுந்தவையல்ல. ஆனால் பிரிட்டிஷ் காலத்திலிருந்து இவை காணப்படுகின்றன என்று அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். அவற்றை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவை மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுகாதார அமைச்சகத்தின் சேவையின் மீது நம்பிக்கையை வளர்ப்பது தனக்கு ஒதுக்கப்பட்ட முதல் பணி என்று அமைச்சர் கூறினார். மேலும் அத்தகைய நன்கொடைகளை முறைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார். நாட்டில் தற்போதுள்ள சில சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் சில அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், நன்கொடையாளர்கள் அரசு இராஜதந்திரம் மூலம் உதவியைப் பெறவேண்டியதன் அவசியத்தையும் இங்கு குறிப்பிட்டார். வைத்தியசாலை செயற்பாடு மற்றும் அதற்குரிய அத்தியாவசிய உபகரணங்கள் வரை நன்கொடையாளர்கள் அளிக்கும் நன்கொடைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு வைத்தியசாலைக்கு தேவைப்படும் அத்தியாவசியமான உபகரணங்கள் சம்பந்தமான தரவுகளை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்புத் திட்டத்தை தயாரித்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். மஹரகம சிறி வஜிரநான தர்மயநாதிபதி தேரர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழுவைக் கொண்ட மருத்துவமனை சேவைகள் சபையின் நிர்வாக விவகாரங்கள், வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரரால் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வை மருத்துவமனை சேவைகள் சபையின் நிர்வாக இயக்குநர் வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரர் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வில் நுவரெலியாவின் பிரதம பீடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், அமரபுர ஸ்ரீக தம்மரக்ஷித மகா நிகாயவின் மகாநாயக்க தேரர், ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வணக்கத்திற்குரிய ஆனந்த மகாநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய அக்குரட்டிய நந்த தேரர் மற்றும் மகா சங்கத்தினர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க, இலங்கை தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் பிரஹதீப் விஜேசிங்க மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/227042
  9. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி சமீபத்தில் பேசியிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது, "நமது அண்டை நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு ஆக்கிரமிப்பு மேற்கொள்ள காரணங்களைத் தேடிவருகிறது" என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப் படை தளபதியின் கருத்துக்களை தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளது என பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது. அதில், "பாகிஸ்தானை வரைபடத்திலிருந்து துடைத்தெறியும்" நோக்கம் இருந்தால் இந்தியா ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழல் எழுந்தால் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் இருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி, பாகிஸ்தான் வரலாற்றிலும் வரைபடத்திலும் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அந்நாடு 'அரசு ஊக்குவிக்கும் பயங்கரவாதத்தை' நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சர் க்ரீக் விவகாரம் பற்றியும் விமானப் படை தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் பற்றியும் பேசியிருந்தனர். பிபிசி உருது செய்தியின் படி, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் தெரிவிக்கும், "யதார்த்தமற்ற, ஆத்திரமூட்டுகிற மற்றும் போரைத் தூண்டும் கருத்துக்கள்" ஆழ்ந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2025-ல் காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் மே 6-ஆம் தேதி இரவு பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்களைத் தாக்கியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராணுவ மோதல் நடைபெற்றது. இந்த மோதல் மே 10-ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடன் முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவ தளபதி என்ன கூறினார்? பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, குஜராத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி கடந்த வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் பகுதியின் அனுப்கருக்குச் சென்று ராணுவ ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு வீரர்கள் எந்நேரமும் தயார்நிலையில் இருக்கும்படி கூறினார். "ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன் போது இந்தியா கட்டுப்பாட்டுடன் இருந்தது. ஆனால் அதே போன்றதொரு சூழ்நிலை மீண்டு எழுந்தால் நாம் முழுவதும் தயாராக இருக்கிறோம். இந்த முறை இந்தியா முன்பு கடைப்பிடித்த கட்டுப்பாட்டுடன் இருக்காது." என்றும் தெரிவித்தார். மேலும் அவர், "இந்த முறை நாம் மேலும் நடவடிக்கை எடுப்போம். பாகிஸ்தான் தான் வரலாற்றிலும் வரைபடத்திலும் நிலைத்திருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டிய அளவிற்கு அந்த நடவடிக்கைகள் இருக்கும்." என்றார். வீரர்கள் தங்களின் ஏற்பாடுகளை முழுமையாக வைத்திருக்குமாறும் அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு எந்த நோக்கமும் இல்லை எனக் கூறிய அவர், "ராணுவம் ஒன்பது 'தீவிரவாத இலக்குகளை' அடையாளம் கண்டிருந்தது. எங்களுக்கு தீவிரவாத இலக்குகளை மட்டுமே அழிக்க வேண்டும். குறிப்பாக தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளிக்கும் இடங்களையும் அவர்களைக் கையாள்பவர்களையும் தான்." எனத் தெரிவித்தார். இந்த முறை ஒவ்வொரு இலக்கிலும் ஏற்பட்ட அழிவுக்கான ஆதாரத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் காண்பித்ததாகக் கூறும் உபேந்திர துவிவேதி, முன்னர் பாகிஸ்தான் இதனை மறைத்து வந்ததாகவும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவித்தார். 'வரலாறும் வரைபடமும் மாறும்' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். பாகிஸ்தான் சர் க்ரீக் அருகே ராணுவ உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக ராஜ்நாத் சிங் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தெரிவித்திருந்தார். குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராணுவ நிலையில் நடைபெற்ற ஆயுத பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வந்திருந்த ராஜ்நாத் சிங், சுதந்திரத்திற்கு 78 ஆண்டுகள் கழித்தும் சர் க்ரீக் பகுதியில் எல்லை தகராறு தூண்டப்படுகிறது எனத் தெரிவித்தார். "சர் கீர்க் பகுதியை ஒட்டிய இடங்களில் தனது ராணுவ உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் ராணுவம் விரிவுபடுத்திய விதமே அதன் நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் தவறான செயல்கள் செய்ய பாகிஸ்தான் ஏதாவது முயற்சி செய்தால் 'அதன் வரலாறும் வரைபடமும் மாறக்கூடிய அளவிலான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும்." என்றார். பாகிஸ்தானின் சிந்த் மாகாணம் மற்றும் இந்தியாவின் குஜராத் இடையே 96 கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள சதுப்பு நிலப்பரப்பு தான் சர் க்ரீக். இதனைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகாலமாக தகராறு இருந்து வருகிறது. இந்த இடம் முன்னர் பான் கங்கா என அழைக்கப்பட்டது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சர் க்ரீக் எனப் பெயரிடப்பட்டது. அப்போது இருந்தே இந்தப் பகுதி சர்ச்சைக்குள் சிக்கித் தவிக்கிறது. இந்த கடல்சார் எல்லையை இந்தியாவும் பாகிஸ்தானும் வேறு வேறாக பார்க்கின்றன. வளைகுடாவின் நடுப்பகுதியில் இருந்து எல்லை வகுக்கப்பட வேண்டும் என இந்தியா கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான் தனது கரையிலிருந்து எல்லை வகுக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு 1914-ல் இந்தப் பகுதி கடல் போக்குவரத்துக்கு உகந்தது அல்ல எனக் கூறி அவ்வாறு தீர்மானித்தது. பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் இந்திய விமானப்படை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய விமானப் படை தளபதி அமர் ப்ரீத் சிங் இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு நிகழ்வின்போது டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விமானப்படைத் தளபதிஅமர் ப்ரீத் சிங், ஆபரேஷன் சிந்தூரில் 4, 5 பாகிஸ்தான் போர் விமானங்கள், பெரும்பாலும் எஃப்-16 சுட்டு வீழ்த்தப்பட்டது." எனத் தெரிவித்தார். பாகிஸ்தானின் பல்வேறு விமான நிலைகளை இந்திய விமானப்படை தாக்கியதாக அவர் குறிப்பிட்டார். அதில் ரேடார்கள், கட்டளை மையங்கள், ஓடுதளங்கள், ஹேங்கர்கள் மற்றும் நிலத்திலிருந்து ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்புகள் பாதிப்படைந்தன என்றும் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூரில் எந்த வகை பாகிஸ்தான் போர் விமானம் அழிக்கப்பட்டது என்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமர் ப்ரீத் சிங், ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனாலும் அவை எந்த மாடல் என்பதை தெரிவிக்கவில்லை. "பாகிஸ்தான் இழப்புகளைப் பொருத்தவரை, நாங்கள் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்தோம். இந்தத் தாக்குதல்களில் நான்கு இடங்களில் ரேடார்களும், இரண்டு இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களும், இரண்டு ஓடுதளங்களும், மூன்று வெவ்வேறு நிலையங்களில் மூன்று ஹேங்கர்களும் சேதமடைந்தன. ஒரு சி-130 ரக விமானம் மற்றும் 4-5 போர் விமானங்கள், பெரும்பாலும் எஃப்-16 போன்றவற்றுக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அப்போது அங்கு எஃப்-16 இருந்தன மற்றும் அவை பழுதுபார்க்கப்பட்டு வந்தன." எனத் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படையின் நவீனமான நீண்ட தூர இலக்கு கொண்ட நிலத்திலிருந்து வான் நோக்கி ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்பு பாகிஸ்தானை அதன் சொந்த எல்லைக்கு உள்ளே சிறிது தூரம் வரை செயல்பட விடாமல் தடுத்தது என இந்திய விமானப்படைத் தளபதி கூறுகிறார். இந்தியா உடனான ராணுவ மோதலின்போது இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்துவந்தது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் பாகிஸ்தான் வழங்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images சர் க்ரீக் பற்றி ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்கு தனியாக எதுவும் பதில் தெரிவிக்காத பாகிஸ்தான், அதன் ராணுவத்தைக் குறிவைத்து பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப்படை தளபதி கூறிய விஷயங்களுக்கு, "இத்தகைய கருத்துகள் தெற்கு ஆசியாவின் அமைதி மற்றும் நிலைத்தன்மை மீது தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும்." எனத் தெரிவித்ததாக பிபிசி உருது வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிபிசி உருதுவின்படி, ராணுவத்தின் அறிக்கையில், "மே மாதம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு இரு அணு ஆயுத நாடுகளையும் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது. ஒருவேளை இந்தியா அதன் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மறந்திருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பிலிருந்து வெளிப்படுத்தப்படும் ஆத்திரமூட்டும் கருத்துகள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான அழிவிற்கு இட்டுச் செல்லும் என பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் பின்வாங்காது என்றும் தயக்கமின்றி பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. "எதிரிநாட்டின் அனைத்து மூலை வரை சண்டையிட பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளிடம் திறனும் உறுதிப்பாடும் உள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg9ypjjp9jo
  10. யாழில் கைதான சட்டத்தரணிக்கு பிணை Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 03:46 PM யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர், பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை, கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது. அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாகவும், பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சில சட்டத்தரணிகள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/227037
  11. விமானத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம் | ஆகாயத்தில் இருந்து என் நாடு | வானில் கொண்டாடிய 250 சிறுவர்கள்
  12. கிரிக்கெட்டில் ஆண்களுக்கு முன்பே பெண்கள் நிகழ்த்திய 10 சாதனைகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் ஆல்-ரவுண்டர் வீராங்கனை தீப்தி ஷர்மா கட்டுரை தகவல் ஜான்வி முலே பிபிசி மராத்தி 5 அக்டோபர் 2025 மகளிர் கிரிக்கெட் சமீபத்தில்தான் தொடங்கியது என்றும், அது ஆடவர் கிரிக்கெட்டை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் பலருக்கு ஒரு தவறான புரிதல் உள்ளது. ஆனால், பெண்கள் 18-ஆம் நூற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். பெண்களுக்கான முதல் போட்டி இங்கிலாந்தில் 1745 ஜூலையில் விளையாடப்பட்டது. இருப்பினும், மகளிர் கிரிக்கெட்டின் முதல் அதிகாரபூர்வ சர்வதேசப் போட்டி 1934-இல் நடைபெற்றது. மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி ஆடவர் கிரிக்கெட்டை விடச் சற்று மெதுவாக இருந்தபோதிலும், கிரிக்கெட்டில் பல விஷயங்கள் மகளிர் கிரிக்கெட்டில் இருந்தே தொடங்கியுள்ளன. குறிப்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், ஆண்களுக்கு முன்பே பெண்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். இவற்றில் சில சாதனைகள் இந்தியப் பெண்கள் படைத்துள்ளனர். முக்கியச் சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம். 1. ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டைச் சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் என்றாலே, பலர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் ஷர்மா ஆகியோரின் பெயர்களைச் சொல்வார்கள். ஆனால், முதல் இரட்டைச் சத சாதனை ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பெயரில் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடித்தார். சச்சின் டெண்டுல்கர் 2010-இல் குவாலியரில் இரட்டைச் சதம் அடித்தார். ஆனால், அவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1997-இல் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் சர்வதேசப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தார். 1997 மகளிர் உலகக் கோப்பையின்போது, டிசம்பர் 16 அன்று டென்மார்க்கிற்கு எதிரான போட்டியில் பெலிண்டா கிளார்க் 155 பந்துகளில் 229 ரன்கள் எடுத்தார், இதில் 22 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டி மும்பையின் எம்.ஐ.ஜி. கிளப் மைதானத்தில் நடைபெற்றது. 2. ஒருநாள் போட்டியில் 400 ரன்கள் 1997-இல் டென்மார்க்கிற்கு எதிரான அதே போட்டியில், பெலிண்டா கிளார்க்கின் இரட்டைச் சதத்தின் உதவியுடன், ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்தது. ஆடவர் அல்லது மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் 400 ரன்களைக் கடந்த முதல் அணி அவர்களின் அணியாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 412 ரன்கள் எடுத்தது. ஆடவர் அணி இந்தப் சாதனையை 9 ஆண்டுகளுக்குப் பிறகே எட்டியது. 2006-இல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆடவர் அணிகள் 400 ரன்களைக் கடந்தன. 3. ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சாதனையும் ஒரு பெண் வீராங்கனையின் பெயரிலேயே உள்ளது. 1973 மகளிர் உலகக் கோப்பையின்போது, ஆஸ்திரேலியாவின் டீனா மெக்பர்சன் (Tina Macpherson) இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 12 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். டீனாவின் இந்தச் சாதனைக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, 1975 உலகக் கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி ஆடவர் கிரிக்கெட்டில் இந்தச் சாதனையைப் படைத்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 19-ஆம் நூற்றாண்டிலும் இங்கிலாந்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாடினர். 4. ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்கள் ஆடவர் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்கள் செய்த சாதனை ஆடம் கில்கிறிஸ்ட் பெயரில் 2000-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அவர் ஆறு பேட்ஸ்மேன்களைக் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இருப்பினும், அவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டு மகளிர் விக்கெட் கீப்பர்கள் இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் இந்தியாவின் கல்பனா வெங்கடாச்சார் மற்றும் நியூசிலாந்தின் சாரா இலிங்வொர்த் (Sarah Illingworth). இருவரும் ஆறு டிஸ்மிசல்கள் என்ற சாதனையைப் படைத்தனர். கல்பனா டென்மார்க்கிற்கு எதிராக ஐந்து ஸ்டம்பிங் மற்றும் ஒரு கேட்ச் எடுத்தார், அதே நேரத்தில் சாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு கேட்ச்கள் மற்றும் இரண்டு ஸ்டம்பிங் எடுத்தார். 5. டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் பத்து விக்கெட்டுகள் ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்று இயான் போத்தம் (Ian Botham) மற்றும் ஆலன் டேவிட்சன் (Alan Davidson) அறியப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெட்டி வில்சன் (Betty Wilson) 1958-இலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். பட மூலாதாரம், Cricket Australia/Twitter படக்குறிப்பு, பெட்டி வில்சன் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெல்போர்ன் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அவர், முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன், ஒரு சதமும் அடித்தார். 6. சமனில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சமன் (Tie) ஆன போட்டி மகளிர் கிரிக்கெட்டில் தான் நடந்தது. இந்தப் போட்டி 1982-இல் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்றது, இதில் இரு அணிகளும் 147 ரன்கள் எடுத்தன. 7. மிகவும் இளம் வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் மிகக் குறைந்த வயதில் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்று வரும்போது, பெரும்பாலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஹசன் ரசாவின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இந்தச் சாதனை பாகிஸ்தானின் சாஜிதா ஷா பெயரில் உள்ளது. இவர் 2000-ஆம் ஆண்டில் 13 வயதிலேயே சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமானார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாஜிதா ஷா ஷஃபாலி வர்மா சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். 8. முதல் உலகக் கோப்பை மற்றும் டி20 போட்டி முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆண்களுக்கான உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1973-இல் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது பயிற்சி செய்யும் ஒரு வீராங்கனை. உலகின் முதல் சர்வதேச டி20 போட்டியும் மகளிர் கிரிக்கெட்டில் தான் விளையாடப்பட்டது. இந்தப் போட்டி 2004 ஆகஸ்ட் 5 அன்று இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடந்தது. ஆடவர்களின் டி20 சர்வதேசப் போட்டி 2005 பிப்ரவரியில் தொடங்கியது. 9. பிங்க் பந்து கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தை அதிகரிக்கப் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து (Pink Ball) பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. ஆனால், முதல் பிங்க் பந்துப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் அல்ல, மகளிர் கிரிக்கெட்டில் தான் விளையாடப்பட்டது. பட மூலாதாரம், Richard Heathcote/Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்தின் கேத்ரீன் ப்ரண்ட் 2008-இல், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு டி20 கண்காட்சிப் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்பட்டது. சர்வதேச அளவில், பிங்க் பந்து 2009-இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டது. ஆடவர் கிரிக்கெட்டில் பிங்க் பந்து 2015-இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பயன்படுத்தப்பட்டது. 10. ஓவர்ஆர்ம் பந்துவீச்சு (Overarm Bowling) ஓவர்ஆர்ம் பந்துவீச்சை (தோளுக்கு மேல் கையை உயர்த்திப் பந்து வீசுதல்) முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமையும் ஒரு பெண்ணையே சேரும். அவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான கிறிஸ்டியானா வில்ஸ் (Christiana Willes). 1805-இல், தனது பாவாடையால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, அவர் ஓவர்ஆர்ம் பந்துவீசத் தொடங்கினார், இது நவீன பந்துவீச்சு பாணியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஓவர்ஆர்ம் பந்துவீச்சு தொடங்கிய காலகட்டமே நவீன கிரிக்கெட்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c39reyn7k1do
  13. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 03:26 PM இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைத்த பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி இருந்தன. பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்து இருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்ற நிலையில் அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையையும் சர்வதேச தலையீட்டடையும் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதேவேளை, இந்தத் தீர்மானம் நிகழ்ச்சி நிரல் 2-இன் கீழ் இருப்பதால், தமிழ்த் தரப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஐ.நா.சபையிடமும், குறிப்பாக மையக் குழு நாடுகளிடமும் இலங்கைக்கு விசேட அறிக்கையாளரை (country specific spécial rapporteur) நியமிக்க அழுத்தம் கொடுக்கின்றன. https://www.virakesari.lk/article/227033
  14. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmgerbwo900uso29n0mni5jjs
  15. 06 Oct, 2025 | 12:37 PM யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227014
  16. ஆயிரம் பேரின் கதி என்ன? எவரெஸ்டில் பனிப்புயலின் தாக்கம் பற்றி மீண்டு வந்தவர் தகவல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எவரெஸ்ட் கட்டுரை தகவல் லாரா பிக்கர் சீன செய்தியாளர் 6 அக்டோபர் 2025, 02:37 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் சரிவில் கடுமையான பனிப் புயல் தாக்கியுள்ளது. மலையின் கிழக்குப் பகுதிகளில் இருந்த முகாம்களில் 1,000-க்கும் அதிகமானோர் இந்த பனிப்புயலில் சிக்கியுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடம் 4,900 மீட்டர் (16,000) அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு செல்வதற்கான பாதையை மறைத்திருக்கும் பனியை அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் ஊடகங்களின்படி, தற்போது வரை சுமார் 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பக்கத்து ஊரான குடாங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. உள்ளே சிக்கியுள்ள மேலும் 200 பேர் வரை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. "ஒரு மீட்டர் ஆழத்திற்கு பனி" படக்குறிப்பு, திபெத்தில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. கண் விழித்து பார்த்தபோது ஒரு மீட்டர் ஆழத்திற்குப் பனி இருந்ததாக கெசுவாங் சென் என்கிற மலையேற்ற வீரர் தெரிவித்தார். 29 வயதான கெசுவாங் சென் அக்டோபர் 4-ஆம் தேதி குடாங் நகரிலிருந்து கிளம்பி சோ ஓயு முகாமிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த மலையேற்ற பயணம் 5 நாட்கள் நீடிக்க இருந்தது. அக்டோபர் 11-ஆம் தேதி மேலிருந்து கீழறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தீவிரமான பனிப் புயல் தாக்கியதால் அனைத்து திட்டங்களும் மாறிப்போனது. சென் வானிலை முன்னறிவிப்பை பார்த்தபோது, அக்டோபர் 4-ஆம் தேதி பனிப்பொழிவு ஏற்பட்டு 5-ஆம் தேதி வானிலை தெளிவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகும் வானிலை தெளிவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவரின் குழுவைச் சேர்ந்த 10 பேர் தங்கிவிட திட்டமிட்டிருந்தனர். எனினும் இரவு நேரத்தில் புயல் மோசமடைந்து இடி மற்றும் பலத்த காற்று மற்றும் பனி வீசியதாக தெரிவிக்கின்றனர். கூடாரங்கள் இடிந்துவிடாமல் இருக்க அதன்மீது படர்ந்திருந்த பனியை விலக்க வழிகாட்டி உதவினார். "அடுத்த நாள் காலை நாங்கள் விழித்தபோது ஒரு மீட்டர் ஆழத்திற்கு பனி இருந்தது. அதனால் திரும்பிவிட முடிவெடுத்தோம்." எனத் தெரிவித்தார். அக்டோபர் 5-ஆம் தேதி கடும் பனிக்கு இடையே 6 மணி நேரம் பயணித்து இந்தக் குழுவினர் மலை இறங்கினர். கீழறங்கி வந்தபோது மீட்புப் பணிகளுக்காக பொருட்களை மேலே எடுத்துச் சென்ற உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்தனர். இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அவர்களுடன் இணைந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். "ஒவ்வொரு ஆண்டும் கோல்டன் வீக்கின் (சீன விடுமுறை) போது பலர் மலையேற இங்கு வந்தாலும் இந்த ஆண்டு பனி அளவுக்கு அதிகமாக இருந்தது" என்கிறார் சென். எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குச் சரிவில் இத்தகைய வானிலை அசாத்தியமானது என அவர்களின் வழிகாட்டி கூறியதாகவும் தெரிவிக்கிறார். தற்போது அபர் லாசா நகரை நோக்கிச் செல்கிறார். "நாங்கள் அனைவருமே அனுபவம் பெற்ற மலையேற்ற வீரர்கள். ஆனால் இந்த பனிப்புயலை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நான் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்துவிட்டேன்." என்றார். பட மூலாதாரம், CCTV வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய கடும் பனிப்பொழிவு திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சரிவுகளில் தீவிரமானது. இந்தப் பகுதி மலையேற்றத்திற்குப் பிரபலமானது. தற்போது சீனாவில் தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. கடும் பனிப் பொழிவால் கூடாரங்கள் சரிந்ததாகவும் சில மலையேற்ற வீரர்கள் கடுங்குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி திபெத்தின் ப்ளூ ஸ்கை ரெஸ்க்யூ குழுவிற்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராய்டர்ஸ் செய்திபடி, சனிக்கிழமையிலிருந்து எவரெஸ்ட் பகுதிக்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டு விற்பனையை டிங்ரி கவுண்டி சுற்றுலா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அக்டோபரில் எவரெஸ்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் குறைவாகவும் வானம் தெளிவாகவும் இருப்பதால், ஆண்டில் இந்த மாதத்தில் தான் மலையேற்றம் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிப்புயலில் மலையேற்ற வீரர்களும் வழிகாட்டிகளும் சிக்கியுள்ளனர். "மலைப்பகுதி மிக ஈரமாகவும் குளிராகவும் இருந்தது, தாழ்வெப்பநிலை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது" என மலையிலிருந்து மீட்கப்பட்டு தற்போது குடாங் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்தார். "இந்த ஆண்டு வானிலை இயல்பாக இல்லை. அக்டோபரில் இத்தகைய வானிலையை எதிர்கொண்டதில்லை என வழிகாட்டி தெரிவித்தார். அனைத்தும் மிக விரைவாக நடந்துவிட்டன." பட மூலாதாரம், CCTV இந்தப் பிராந்தியத்தில் கடுமையான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளங்கள் ஏற்பட்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கே, கனமழையால் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்மோ புயல் ஏற்படுத்திய பாதிப்பால் 1,50,000 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 8,849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் தான் உலகின் மிக உயரமான சிகரமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைய பலர் முயற்சித்தாலும் இது மிகவும் ஆபத்தான பயணமாகப் பார்க்கப்படுகிறது. சமீப ஆண்டுகளாக இங்கு அதிக கூட்ட நெரிசல், சுற்றுச்சூழல் பிரச்னைகள், தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. பட மூலாதாரம், Getty Images - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cge24jy7p1eo
  17. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆகாயத்தில் இருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' கடந்த முதலாம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நாட்டின் சிறுவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமான பயணத்தில் பங்கேற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 250 ஆகும். 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தற்போது டி.வி தெரணவில் காணலாம். https://adaderanatamil.lk/news/cmgemvr3e00upo29n4hy1mbv1
  18. அஞ்சலித் தாக்குதல் தமிழில் சுரணை உள்ள எழுத்தாளர்களின் ஒரே வேண்டுகோள் தாம் இறந்து ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதும் நிலை வரக்கூடாது என்பதே. ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலி அப்படியான மாபெரும் அவலம். அதில் ரமேஷின் படைப்பாற்றலைவிட உடல் நோய்மையைப் பற்றியே 99% எழுதியிருக்கிறார் - முழுக்க முழுக்க தன்னிடம் இரந்து பெற்ற ஒரு கலைஞனாகச் சித்தரிக்கிறார். தான் ஒருவருக்கு அளித்த தொண்டைக் கூட அவர் சொல்லலாம். அது அவரது தேர்வு. ஆனால் அந்த அஞ்சலிக் குறிப்பு முழுக்க ரமேஷ் ஜெயமோகனை விட ஒரு படி கீழாகவே வைக்கப்பட்டிருக்கிறார். ஒருவித படிநிலை முழுக்க உள்ளோடுகிறது. இது ஜெயமோகனுடைய மிகப்பெரிய ஆளுவை வழு - அவரால் பிறரை தனக்கு இணையாகக் காணவே முடிவதில்லை. அவர் ரமேஷுக்கு உதவியபின்னர் அவரிடம் "நான் உன் உடலுக்காக நிதியளிக்கவில்லை, உனக்குள் இருக்கும் கலைஞனுக்கே நிதியளிக்கிறேன்" என்றிருக்கிறார். அது ரமேஷை சீற்றமடைய வைக்கிறது. அதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. நீங்கள் ஒருவரை அப்படி உடலென்றும் கலைஞனென்றும் பிரிக்க இயலாது. அது ஒருவரைக் கடுமையாக அவமதிக்கும் செயல். என்னிடம் யாராவது வந்து "நான் உன் உடலுக்காக, உன் குடலுக்காக, உன் மொட்டைத் தலைக்காக நிதியளிக்கவில்லை, உன் படைப்பாற்றலுக்காகவே தருகிறேன்" என்றால் நான் அவரைச் செருப்பைக் கழற்றி அடிப்பேன். ஏனென்றால் படைப்பாக்கம் நமது உடலின், மனத்தின், ஆளுமையின் நீட்சி. ஒரு கலைஞனாக நாம் பெருமை கொள்கிறோம், ஆனால் வாழும் உடலாகவும் சுயமாகவுமே நாம் நம்மை அடையாளப்படுத்துகிறோம். பின்னது பொருட்படுத்தத்தகாதது என்பது ஒருவரை வாழ்த்துவது அல்ல, தாழ்த்துவது ஆகும். அது ஏனோ ஜெயமோகனுக்கு விளங்குவதில்லை - அவரிடம் ஏதோ தன் உடல், சுயம் குறித்து தாழ்வுணர்ச்சி அடியாழத்தில் இருக்கிறது என நினைக்கிறேன், அதை அமுக்கி வைத்துவிட்டு பிறரிடம் அதைக் காண்கிறார், தன்னைத் தானல்லாமல் ஒரு படைப்பாற்றலாகக் காண்பதைப் போல பிறரையும் பார்க்கிறார் என நினைக்கிறேன். அவர் உணர்ச்சிவயப்பட்டு ரமேஷுக்கு உதவ முடிவெடுத்தது, அதில் திடமாக இருந்தது நல்ல விசயம். ஆனால் அவர் ரமேஷைக் குறித்து தனக்குள் கொண்டுள்ள சித்திரம் அசமத்துவத்தின் மீது உருவானது. அது தொடர்ந்து ரமேஷைக் காயப்படுத்திக் கொண்டே இருந்திருந்திருக்கும் என நினைக்கிறேன். தானம் அளிப்பதை விட சிறப்பானது சமமாக நடத்துவது. கொடுக்கும் போது நாம் தாழ வேண்டும், உயரக் கூடாது. தாழ்வதே மகத்தானது. ஒருவருக்கு கொடுக்கும்போது அது தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என் நினைக்க வேண்டும். ஜெயமோகனுக்கு அது ஒருநாளாவது தன் வாழ்வில் சாத்தியப்பட வேண்டும். ராஜமார்த்தாண்டனுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் இப்படித்தான் இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்களை தன் "ஏழாம் உலகம்" நாவலில் வரும் குறைபட்ட உருப்படிகளாக அவர் கருதுவதும், அந்த உருப்படிகளை வைத்து வியாபாரம் செய்யும் பண்டாரமே தானெனெக் கருதுவதுமே அவரது பிரச்சினை. இதுவே பணமும் அரசியல் அல்லது சமூக அதிகாரமும் படைத்தவர்கள் இறந்தால் இவ்வாறு எழுத மாட்டார் - சட்டென கைகூப்பி வணங்கி எழுதுவார். இன்று நான் பார்க்கும் இளைஞர்களில் 90% பல்வேறு நோய்களைத் தாங்கியவர்களே - நடந்தால் மூச்சு வாங்குவோர், ஏகப்பட்ட ஒவ்வாமைகள் கொண்டவர்கள், கொஞ்சம் தூசு பட்டால் தாளாமல் இருமுகிறவர்கள், மூச்சிரைக்கிறவர்கள், சிறுசொல்லுக்கு பதற்றமாகி மயங்கிவிழுவோர். இவர்களையெல்லாம் ஜெயமோகன் பார்த்தால் என்ன சொல்வார் எனப் பயமாக இருக்கிறது. நோயென்பது இன்று இயல்பாகிவிட்டது. ஆரோக்கியம்தான் இன்று இயல்புமீறல். இவர்களிடம் போய் உங்கள் நோயைக் கடந்து வாருங்கள் என்று சொன்னால் கொலைவெறியாகிவிடுவார்கள். ஏனென்றால் தம் உடல் குறித்து அவர்களுக்கு எந்த தாழ்வுணர்ச்சியும் இல்லை. அதை ஒருவர் தம் மீது சுமத்துவதை ஏற்க மாட்டார்கள். ஜெயமோகனே தன்னிடம் வருகிறவர்களிடம் அதையே விதைத்து பெருஞ்ச் சொற்குவியலக்ளாக அறுவடை பண்ணுகிறார். இனிமேல் படைப்பாளிகள் இறப்பதாக முடிவெடுத்தால் ஏதாவது வேற்றுகிரகத்துக்குச் சென்று மறைந்துவிட வேண்டும். அங்கிருந்து இறந்தால் அது பூமிக்கு வர ஒளிக்காலத்தில் பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஜெயமோகனின் அஞ்சலியில் இருந்து தப்பித்து விட முடியும். அல்லாவிட்டால் நாம் சாகும் நிலை வரும்போது தலைமறைவாகிவிட வேண்டும். மற்றபடி ஜெயமோகனின் கொரில்லா அஞ்சலித் தாக்குதலில் இருந்து தப்பிக்க எழுத்தாளர்களுக்கு வேறுவழியே இல்லை. நான் ஜெயமோகனைப் படித்து எதிர்வினையாற்றக் கூடாது என்பதை ஒரு தீர்மானமாகவே கடைபிடித்து வந்தேன். ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலியைப் படித்து என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். Posted 14 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post.html
  19. Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 02:28 PM பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon) தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன. இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குறிப்பிட்டனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கத்தை விட சற்று அதிக அலை எழுச்சியை சந்திக்க நேரலாம். மேலும், இன்றிரவு பிரகாசமான முழு நிலவுக்கு அருகில் சனி கிரகம் நிலைநிறுத்தப்படுவதைக் காண வானியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும். பௌர்ணமி தினத்தைக் குறிக்கும் போது வானியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வைக் காண சூப்பர் மூன் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/227019
  20. பெண்கள் உலகக் கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பிரமாண்ட வெற்றி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு 5 அக்டோபர் 2025 ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்ட வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர். 100 ரன்களை கடந்த இந்தியா: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது. அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர். அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார். ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இடையில் நிறுத்தப்பட்ட போட்டி: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார். 35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர். இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 200 ரன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பரபரப்பான இறுதிகட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார். பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா. அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது. ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார். 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. 12 ஓவரில் 3 விக்கெட்டுகளை மலமலவென இழந்தது. 50 ஓவர்களில் 278 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன்பிறகு 17.3வது ஒவரில் சித்ரா அமின் சிக்ஸர் அடித்தார். 12 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அடித்த முதல் சிக்ஸர் இது என கிரிக்பஸ் குறிப்பிட்டுள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், அதன்பின் அதிக ரன்கள் சேர்க்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான். 2 விக்கெட்டுகளை இந்திய வீராங்கனை கிராந்தி கைப்பற்றினார். அதன்பிறகு சித்ரா, நடாலியா பாட்னர்ஷிப் நிதானமாக விளையாடி வந்தனர். அதற்குள் 27.1 ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் விழுந்தது. 33 ரன்கள் எடுத்திருந்த நடாலியா, கிராந்தி வீசிய பந்தில் அவுட்டானார். 30 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. அதே சமயம் இந்திய அணி 22 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்திருந்தது. இதற்கிடையில் மீண்டும் 30.5வது ஓவரில் மற்றொரு விக்கெட் பறிபோனது. தீப்தி சர்மா வீசிய பந்தில் ஃபாத்திமா சனா அவுட்டானார். சித்ரா அமின் 84 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அணிக்காக போராடி பவுண்டரிகளை விளாசினார். இதன் பின்னர் ஆட்டம் படிப்படியாக இந்திய அணி பக்கம் திரும்பியது. 43 ஓவர்களிலேயே 159 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. ப்ளேயிங் XI பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது. இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo
  21. ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017) கட்டுரை தகவல் தினேஷ்குமார் பிபிசி தமிழுக்காக 4 அக்டோபர் 2025 நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று. விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன. கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது. அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது. சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு 'அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது' என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன். 1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது. ஆண்களின் குறுகிய உலகம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (இடமிருந்து முதலில் இருப்பவர்) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது. கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க 'The Art and science of Cricket' புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். "இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது." இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது 'On Form' புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார். மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது. அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான். இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள 'Overarm' பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர். ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் 'Overarm பந்துவீச்சின் பிதாமகன்' என பொறிக்கப்பட்டது. ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டபிள்யூ.ஜி.கிரேஸ் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் 18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973இல் தான் The Women's Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் 'த அல்பீஸ் கிளப்'பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை. 70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji). குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women's Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கபில் தேவுடன் சாந்தா ரங்கஸ்வாமி (நடுவில்) ஒப்பீடு என்னும் இழிவு மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது. மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன். மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும். ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் "ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் WPL என்னும் கேம் சேஞ்சர் ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர். மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். "முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம். மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது. பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது" என்கிறார். முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை "2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர். 2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது. நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது" என்கிறார். சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார். "நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர் அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்? மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். "கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்." என்றார். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார். "நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்" என்றார். அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார். "70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது" என்றார். நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yqv93q634o
  22. Published By: Digital Desk 3 05 Oct, 2025 | 12:06 PM “வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்! (சரண்யா பிரதாப்) இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையம், இலங்கையின் விசேட தேவையுடைய சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த நிலையம் கம்பஹா மாவட்டத்தில், ராகமையில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குள் அமைந்துள்ளது. அயத்தி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சேவைகள் இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு விசேட தேவையுடையவராக உள்ளார். உரிய நேரத்தில் கண்டறியப்படாததால், இந்தச் சிறுவர்கள் கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் பின்தள்ளப்படுகிறார்கள். அயத்தி நிலையம் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு , பல்துறை பராமரிப்பை வழங்குவதோடு, இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அயத்தி நிலையத்தில், வைத்திய நிபுணர்களால் ஆரம்ப பரிசோதனைகள், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, ஒலியியல் (audiology), இயன்முறை மருத்துவம் (physiotherapy) மற்றும் தொழிற்பாட்டு சிகிச்சை (occupational Therapy) எனப் பல்துறை சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு இலங்கையின் முதலாவது உணர்திறன் அறை மற்றும் நவீன மறுவாழ்வு வசதிகள் உள்ளன. தலைமை நிறைவேற்று அதிகாரியன பிரபல வரத்தகர் தனஞ்சய் ராஜபக்ஷ கூறுகையில், இதுவரை 14,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். எனினும், மருத்துவர்களின் புலம்பெயர்வு, மருத்துவ உபகரணங்களின் அதிக செலவு போன்ற சவால்களை எதிர்கொள்வதாகவும், அவசர தேவைகளுக்கு 30 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோர்களின் மனமுருகும் அனுபவங்கள் அயத்தி நிலையம், விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். “எனது மகள் ஆன்யா, 33 வாரத்தில் பிறந்தாள். வைத்தியர்கள் அவளுக்கு மூளை வாதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அப்போது என் வாழ்க்கை முடிந்தது போல உணர்ந்தேன். கடும் மன அழுத்தத்துக்குள்ளானேன். குழந்தையைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடலாம் என நினைத்தேன்.” என தாயாரான டான்யா அரச குலசேகர கூறினார். ஆனால் 2019ல் ஆன்யாவை ‘அயத்தி’க்கு கொண்டு சென்றபின், அவள் ஓரளவு முன்னேற்றம் அடைந்தாள். இன்று ஆன்யா படுக்கையிலேயே இருப்பாள் என நினைத்த இடத்திலிருந்து, நிகழ்வுகள், திருமணங்களில் கலந்துகொள்கிறாள். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அவளது நிலையை புரிந்து ஆதரவு வழங்குகின்றனர்; அவளை ஒரு சாதாரணக் குழந்தையாகவே நடத்துவதாக தெரிவித்தார். ராகமையில் வசிக்கும் சானிக்கா ருவன்குமாரி, தனது மகள் நிஷாலி ஏஞ்சலி. அவளுக்கு தற்போது 8 வயது. அவள் விசேட தேவையுடைய குழந்தை தெரிந்து, அயத்தி நிலையத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள வைத்தியர்கள் அளித்த ஊக்கம் மிகுந்த உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார். சமூகத்தில் களங்கம் ஏற்படுத்துவது போன்று பேசுவது இன்னும் சவாலாக உள்ளன. “சில நேரங்களில் பலர் கேள்விகள் கேட்கிறார்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்கிறார்கள். அப்போது, அவளுக்கு சிறிய நோய் உள்ளது என நாங்கள் விளக்குகிறோம். அவள் சாதாரண வாழ்க்கையிலேயே வாழ்கிறாள்; அதைப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”தற்போது என் மகள் முன்பள்ளிக்குச் செல்கிறாள், அங்கே இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார். தனது மூன்றாவது மகள் செலோமி செமாயா, மனவளர்ச்சி குன்றி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது கவலை அடைந்ததாக வினிதா நில்மினி தெரிவித்தார். ஆனால், அயத்தியிலுள்ள வைத்தியர்கள் ஆறுதல் கூறியதாகவும், அது தனக்கு நம்பிக்கையை அளித்ததாகவும் தெரிவித்தார். “என் பிள்ளையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஒரு தந்தை அறிவுரை வழங்கினார். அப்போதுதான், பிள்ளைகளை வீட்டுக்குள் மட்டும் வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சமூகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார். ராகமையில் வசிக்கும் தரிந்து சேனாதித், தனது 5 வயது மகள் லிடியா யொஹானி, தனது ஆறாவது குழந்தை என்றும், ஏனைய ஐந்து குழந்தைகளும் பிறந்து இறந்ததாகவும் தெரிவித்தார். தனது மகள் மனவளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது மிகவும் மனமுடைந்ததாகவும், ஆனால் அயத்தியில் பெற்ற சிகிச்சைகள் மற்றும் மனதளவில் கிடைத்த ஆதரவு, அவளை தற்போது சுயமாகச் செயல்பட வைத்துள்ளது என்றும் தெரிவித்தார். “அயத்தியின் பணியாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நாங்கள் சந்திக்கும் மன அழுத்தங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிகிச்சையளிக்கும் நிபுணர்களுடன் உள்ள உறவு மிகவும் வலிமையானதும் முக்கியமானதுமாக உள்ளது. எங்களுக்கும் எங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அவர்கள் முழுமையாக பாடுபடுகிறார்கள் என்றார். இந்த உணர்வுபூர்வமான பகிர்வுகள், அயத்தி நிலையத்தின் தேவை, அதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம், சமூகத் தயக்கம், மற்றும் களங்கம் போன்ற சவால்களை இந்த மையம் பெற்றோர்களிடமிருந்து களைகிறது. இந்த முயற்சிகள், இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதோடு, உள்ளடங்கிய சமூகத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன. பலவகையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக அயத்தி நிலையம் திகழ்வதோடு, சுமார் 200 இளங்கலை மாணவர்கள் தற்போது மருத்துவப் பயிற்சியை பெறுகின்றனர். அயத்தி நிலையத்துக்கு தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகை தருபவர்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இதேவேளை, அயத்தி நிலையத்தை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக தற்போது 30 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில், அயத்தி நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது. மேலதிக தகவல்களுக்கு ; www.ayati.lk தொடர்புகளுக்கு ; +94 11 7878501 https://www.virakesari.lk/article/226933
  23. படக்குறிப்பு, அமீபா பாதிப்பால் உயிரிழந்த ராம்லா மற்றும் ஷாஜி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!'' அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று பாதிப்புக்கு 39 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் இறந்தநிலையில், இந்த ஆண்டில் 9 மாதங்களுக்குள் (செப்டெம்பர் 30 வரை) 80 பேர் பாதிப்புக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் உருவாகும் இந்த ஒற்றை அணு உயிரியான அமீபா, அசுத்தமான நீரைப்பயன்படுத்தும்போது மூக்கின் வழியாக உடலில் நுழைந்து, மூளையைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். இதுதொடர்பாக கேரளாவில் பிபிசி களஆய்வு செய்ததில், இந்த தொற்று பாதித்ததை உடனடியாக அறியாத காரணத்தால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. படக்குறிப்பு, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொற்று பாதிப்பைத் தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை வேகப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை சுமார் 400 வகையான அமீபாக்களை கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதில் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி மற்றும் எகாந்தாமீபா என்கிற இரண்டும் மூளைத்தொற்றை உண்டாக்கக் கூடியவை என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். மூளையை தின்னும் நேக்ளீரியா ஃபவ்லெரி அமீபா –ஒரு விளக்கம்! படக்குறிப்பு, நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை உலகளவில் 1962 முதல் இன்று வரை 488 நபர்களுக்கு மட்டுமே மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக சயின்ஸ் டிரைக்ட் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. அதிலும் அமெரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்தான் அதிகபட்சமாக இதில் 95 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, நேக்ளீரியா ஃபவ்லெரி (Naegleria fowleri), எகாந்தாமீபா (Acanthamoeba), சாப்பினியா (Sappinia), பாலமுத்தியா (Balamuthia), வெர்மீபா (Vermeeba) என 5 வகையான அமீபா பாதிப்புகள் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி எனப்படும் அமீபாதான், உயிரிழப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் கேரளாவில் 39 பேருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 9 பேர் இறந்தனர். உயிரிழப்பு விகிதம் 23 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் செப்டம்பர் 30 வரை, 80 பேர் இந்த தொற்று பாதிப்புக்குள்ளானதில் 21 பேர் இறந்துள்ளதாக பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை தகவல் தந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 25 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பினும், நீர்நிலைகள் சார்ந்த இந்த அமீபா தொற்று பாதிப்பும், அதனால் ஏற்படும் மரணங்களும் உலகளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு எகாந்தாமீபா பாதிப்பு தான் அதிகமாக உள்ள நிலையில் நேக்ளீரியா ஃபவ்லெரி தொற்று ஏற்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன? படக்குறிப்பு, மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா இந்நிலையில் கேரளாவில் இந்த தொற்று நோயின் பாதிப்பு குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இந்த தொற்று காரணமாக இறந்தவர்கள் மற்றும் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசியது. கேரளாவில் 14 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 17 பேர் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 5 பேர் மரணமடைந்திருப்பதாக மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா தெரிவித்தார். அவர்களில் ஒருவர்தான் மலப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வேங்கரா என்ற பகுதியைச் சேர்ந்த ரம்லா (வயது 52). பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் மகள் ரெஹானத், ''அம்மாவுக்கு தலைவலி, ஜலதோஷம் அதிகமாக இருந்தது. காய்ச்சலும் வந்தது. முதலில் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடமும், அதன்பின் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம். ஜலதோஷம் குறையாததால் கோழிக்கோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தனர்.'' என்றார். படக்குறிப்பு, ரம்லாவின் மகள் ரெஹானத் ''ஆகஸ்ட் 5 அன்று அங்கு சேர்த்தோம். தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என பல பரிசோதனைகள் எடுத்தனர். ஆனால் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்த பின்பே இது உறுதி செய்யப்பட்டது. தொற்று நீக்க மருந்தை உட்கொண்டதும் அவருக்கு வாந்தி, நடுக்கம் ஏற்பட்டதால் மருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்து, மருந்தைத் தொடர்ந்தனர். ஆனால் கடைசி பாட்டில் மருந்து ஏறும்போதே இதயத்துடிப்பு அதிகமாகி, ஆகஸ்ட் 30 அன்று இரவு உயிரிழந்து விட்டார்.'' என்றார். ரம்லாவுக்கு லேசான இதய பாதிப்பு இருந்ததையும், வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் குளிப்பது, துவைப்பது போன்ற செயல்களில் அன்றாடம் ஈடுபட்டு வந்ததையும் அவருடைய குடும்பத்தினர் உறுதி செய்தனர். காப்பில் குளம் என்ற அந்த குளத்தை பிபிசி தமிழ் நேரில் பார்த்தபோது, அங்கு கண்ணமங்கலம் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஓர் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில், ''மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அமீபா இக்குளத்தில் இருப்பதாக சுகாதாரக்குழு கண்டறிந்துள்ளது. அதனால் இங்கே குளிப்பது, முகம் கழுவுவது, மீன் பிடிப்பது, வாகனம் கழுவுவது, கால்நடைகளை குளிக்க வைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். அப்படிச் செய்தால் உடலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கநிலை போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும்.'' என்று கூறப்பட்டுள்ளது. ''அச்சமும் வேண்டாம்; அஜாக்கிரதையும் வேண்டாம்!'' படக்குறிப்பு, ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர் அச்சம் வேண்டாமென்றும் அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும் மக்களுக்கு அந்த அறிவிப்பு அறிவுறுத்தியுள்ளது. ரம்லாவுக்கு மூளை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பே, அந்த எச்சரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்த கிராமத்தினர், அதற்கு முன்பு வரையிலும் அதில்தான் எல்லோரும் குளித்து, துவைத்து வந்ததையும் வீடியோக்களுடன் பகிர்ந்தனர். பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர், ''நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் காலத்திலிருந்து இந்த குளத்து நீரைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வந்தோம். இரவு வரையிலும் அங்கே குழந்தைகள் குளிப்பார்கள். எனது மனைவி அந்த குளத்திலும், குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலிலும் துணி துவைப்பார். அவருக்கு மட்டும் இந்த அமீபா தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதை எங்களால் அறியமுடியவில்லை.'' என்றார். இந்த உயிரிழப்புகளால் கேரளா முழுவதும் நீர்நிலைகள் மீதான அரசின் கவனம் திரும்பியுள்ளது. அரபிக்கடலும், மேற்குத் தொடர்ச்சி மலையும் பின்னிப் பிணைந்துள்ள அழகான இயற்கை அமைப்பைக் கொண்டுள்ள கேரளாவிலுள்ள குளங்களும், கிணறுகளும் பெரும்பான்மையான கேரள மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகமுக்கிய அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள கேரளாவில் 55 ஆயிரம் குளங்களும், 55 லட்சம் கிணறுகளும் இருக்கின்றன. குளிப்பது, துவைப்பது, மீன் பிடிப்பது என லட்சக்கணக்கான மக்கள் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் பல இடங்களில் உள்ள நீர்நிலைகள் மாசடைந்திருப்பதால் இத்தகைய அமீபாக்கள் தோன்றுவதாகக் கூறப்பட்டாலும் இவையனைத்தையும் 'ஆபத்தான நீர்நிலைகள்' என்று தடை செய்வது சாத்தியமில்லை என்றனர் பிபிசியிடம் பேசிய கேரள உள்ளாட்சிப் பிரதிநிதிகள். படக்குறிப்பு, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவு இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் 27 லட்சம் கிணறுகள் குளோரின் மூலமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பொது சுகாதாரச் சட்டத்தின்படி நீச்சல் குளங்கள், வாட்டர் தீம் பார்க் மற்றும் மேல்நிலை நீர்த்தொட்டிகளை குளோரினேஷன் செய்வதற்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குளங்களில் மீன்கள் இருப்பதால் குளோரினேஷன் தவிர்க்கப்படுகிறது. கேரளாவில் 5 வகையான அமீபாக்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மண்ணிலும் இருக்கும் எகாந்தாமீபா தொற்று பாதிப்பே அதிகமிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ''தேங்கிய அசுத்தமான தண்ணீரில்தான் இந்த அமீபா உற்பத்தியாகிறது. அதில் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் இந்த அமீபா மூக்கின் வழியே மூளைக்குள் சென்று உயிருடன் இருந்து மூளையிலுள்ள திசுக்களை அழிக்கிறது. கிணற்றில் குளித்தவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிலருக்கு முகத்தில் வேகமாகத் தண்ணீரை அடித்துக்கழுவும் பழக்கம் உள்ளது. அதேபோன்று மாற்று மருத்துவமுறையில் மூக்கின் ஒருபுறத்தில் உப்புத்தண்ணீரை ஊற்றி மறுபுறத்தில் வெளியேற்றி சுத்தம் செய்வதும் வழக்கமாகவுள்ளது. இவையிரண்டுமே ஆபத்தானவை.'' என்றார் மாவட்ட மருத்துவ அலுவலர் ரேணுகா. மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகள்! படக்குறிப்பு, கேரள நீர் நிலைகள் பிபிசி தமிழிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அலுவலர்கள் பலரும், இதுவரை காதின் வழியாக இத்தகைய அமீபா உடலுக்குள் சென்றதாக எந்தத் தகவலும் இல்லை என்றனர். அதேபோன்று இந்த அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகளையும் அவர்கள் விளக்கினர். இந்த தொற்று பாதித்த 5லிருந்து 10 நாட்களுக்குள் இத்தகைய அறிகுறிகள் ஏற்படுமென்கின்றனர். கடுமையான தலைவலி ஏற்படும்; கழுத்தைத் திருப்பவே முடியாது. வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது. வாந்தி, காய்ச்சல் வரும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும். வலிப்பு, நடுக்கம் சிலருக்கு ஏற்படும். இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளால் சாப்பிடவே இயலாது. குளம், கிணறுகளில் மட்டுமின்றி அசுத்தமான நீர் எங்கிருந்தாலும் அது அமீபா ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார் தொற்றுநோய் நிபுணர் அனீஷ். மலப்புரம் மாவட்டம், சேலேம்பரா புள்ளிப்பரம்பாவைச் சேர்ந்த ஷாஜி (48) என்ற கூலித் தொழிலாளியும் இதே அமீபா தொற்று பாதிப்பால் கடந்த செப்டம்பர் 10 அன்று மரணமடைந்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய ஷாஜியின் மனைவி பிந்து, ''ஆகஸ்ட் 9 அன்று அவருக்கு வலிப்பு வந்தது. ஆம்புலன்ஸ் வந்தபோது, அவரே நடந்து சென்று ஏறினார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த பின் அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் சிஎஸ்எஃப் டெஸ்ட்டில் அமீபா தொற்று உறுதியானது. நினைவிழந்த நிலையில் ஆகஸ்ட் 14 அன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு இறுதிவரை நினைவு திரும்பவேயில்லை.'' என்றார். ஷாஜியின் தாயார் விஜயகுமாரி, தன் மகனுக்கு இந்த தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதே தெரியவில்லை என்கிறார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்தான் இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகள் அதிகமிருப்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அந்த மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அங்கு அமீபா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டு (எண்:43) செயல்படுவதை பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்தது. அந்த வார்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஷாஜியின் தாயார் விஜயகுமாரி அமீபா தொற்று பாதிப்பை கண்டறியும் சிஎஸ்எஃப் பரிசோதனை! மூளையை தின்னும் அமீபாவான நேக்ளீரியா ஃபவ்லெரியைக் கண்டறிவதற்கு, சிஎஸ்ஃஎப் எனப்படும் பரிசோதனை முறை ((CSF-Cerebrospinal fluid) கையாளப்படுகிறது. இதில் தண்டுவடத்திலுள்ள நீரை மாதிரியாக எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. திரூரில் உள்ள ஷிகாப்தங்கள் கூட்டுறவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அவசர மருந்துகள் பிரிவின் தலைவர் அல்தாப் கன்னத், இதைப்பற்றி பிபிசியிடம் விளக்கினார். ''தண்டுவடத்திலுள்ள நீர் மாதிரியை எடுத்து அதிலிருந்து பல்வேறு உடற்கூறு பாதிப்புகளை அறியமுடியும். இந்த தொற்று பாதித்தவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். குளுக்கோஸ் அளவு குறையும். சிலருக்கு புரோட்டீன் அளவு அதிகரிக்கும். இந்த பாதிப்பு வந்ததும் 5 நாட்களுக்குள் வந்து விட்டால் சிகிச்சையை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.'' என்றும் மேலும் விளக்கினார் மருத்துவர் அல்தாப் கன்னத். ''இந்த அமீபா, கேரளாவில் அதிகமாகவுள்ள குளங்கள், கிணறுகள், ஆறுகள் போன்ற இடங்களில் வெப்பம் நிறைந்த தேங்கிய நீரில்தான் உற்பத்தியாகிறது. குறிப்பாக குழந்தைகளையும், இளம் மற்றும் நடுத்தர வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. இந்த தொற்று பாதித்தால் 97 சதவீதம் மரணம் சம்பவிக்க வாய்ப்புள்ளதால் வருமுன் இதைத்தடுப்பதே சிறந்தது. தொற்று பாதிப்பில் 3 கட்டங்கள் உள்ளன. அதில் முதற்கட்டத்தில் கண்டறிந்து விட்டால் சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும்.'' என்றார் மருத்துவர் அல்தாப். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த 28 வயது சிவில் இன்ஜினியர் ஸ்ரீஹரிக்கு, இந்த தொற்று பாதிப்பு தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிஎஸ்எஃப் பரிசோதனையில் உடனே கண்டறியப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு உடனே இதற்கான சிகிச்சையைத் துவக்கியதால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். படக்குறிப்பு, ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், ''எனது தம்பிக்கு ஒரு நாள் கடுமையான தலைவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்குச் சென்று மாத்திரை சாப்பிட்டதும் வலி குறைந்தது. மறுநாளும் தலைவலித்தது. மறுநாளும் அதே மருந்து எடுக்கப்பட்டது. மூன்றாவது நாளில் தலைவலியுடன் வாந்தியும் வந்தது. உடனே வாணியம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே இந்த அமீபா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் கோழிக்கோடு மருத்துவமனையில் உடனே சேர்த்து சிகிச்சை அளித்ததில் அவர் தற்போது நலமாக இருக்கிறார்.'' என்றார் கோபாலகிருஷ்ணன். இதுவரை இந்த தொற்று பாதிப்பால் 21 பேர் இறந்திருந்தாலும், கேரளா மக்களிடம் பரவலாக இதுகுறித்த அச்சமும், விழிப்புணர்வும் இல்லை என்பது, பல்வேறு பகுதி மக்களிடமும் பேசியதில் தெரியவந்தது. கோழிக்கோடு ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மக்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரிவதுமில்லை, அச்சமும் இல்லை என்றனர். திரூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரியாஸ், ''டிவி செய்திகளில் பார்த்தே மக்கள் இதைப்பற்றித் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் மக்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு எதுவுமில்லை.'' என்றார். அமீபா தொற்று பாதிப்பும் கேரள அமைச்சரின் பதிலும்! மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பைக் கண்டறியும் வழிமுறை, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிகிச்சை நெறிமுறைகள், விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிவதில் உள்ள சவால்கள், அமீபா உற்பத்தியாகும் இடங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் சில கேள்விகளை பிபிசி முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், ''கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவில் 115 பேருக்கு அமீபா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டதில் 11 பேருக்கு மட்டுமே நேக்ளீரியா ஃபவ்லேரி அமீபா காரணமாக இருந்தது. மற்றவர்களுக்கு எக்காந்தாமீபாவே காரணமாயிருந்தது. நேக்ளீரீயா ஃபவ்லெரி ஊடுருவும் காலம் (incubation) 7லிருந்து 14 நாட்களுக்குள் என்பதால் இந்த பாதிப்பை விரைவாகக் கண்டறியமுடியும்.'' என்றார். ''கடந்த 2024 ஜூலை மாதம் கேரள அரசு வெளியிட்ட அமீபிக் மென்னிங்கோஎன்செப்லைடிஸ் (Amoebic meningoencephalitis) நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்ப வழிகாட்டுதலின் அடிப்படையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிந்து உடனே சிகிச்சையைத் துவங்குவதே இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கிய அம்சமாகவுள்ளது.'' என்றும் அவர் மேலும் விளக்கினார். கடந்த ஆண்டில் அரசுக்குக் கிடைத்த தரவுகளின்படி, அனைத்து அமீபா தொற்று நோயாளிகளுக்கும் குளம் போன்ற நீர்நிலைகளில் நீந்திய அனுபவமில்லை என்று தெரியவந்ததால், வழக்கமான ஆபத்து அறிகுறிகள் இல்லாவிடினும் அமீபா தொற்று பாதிப்பு சந்தேகத்துக்கிடமாகவுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் அமீபா பரிசோதனை கட்டாயமாக்கும் முறையில் மாநில வழிகாட்டுதல் நெறிமுறைகள் திருத்தப்பட்டதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மாநிலத்திலுள்ள சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் சிகிச்சைக் கண்காணிப்பு முறை (active surveillance) சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ''சிஎஸ்எஃப் பரிசோதனையில் மூளைச்சுரப்பியில் உயிருடன் ஒற்றை உயிரணு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், மூலக்கூறு பரிசோதனைகள் (molecular methods) மூலம் அதன் வகைத்தன்மை உறுதி செய்யப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை திட்டம் மாற்றப்படுகிறது.'' என்றார். கோவிட், நிஃபா, பறவைக்காய்ச்சல், அமீபா என அடுத்தடுத்து தாக்குதலுக்குள்ளாகும் கேரளா இவற்றை எப்படி எதிர்கொள்கிறது என்ற கேள்விக்கு, ''கேரளாவின் பலம், சுகாதாரத்துறையின் செயல்திட்டங்களில் உள்ள கண்காணிப்பும் (proactive surveillance) புதிய தொற்றுகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் திறனும் சுகாதாரக் கட்டமைப்பும்தான்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkjp6n6lk6o
  24. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்! Published By: Vishnu 05 Oct, 2025 | 06:40 PM யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, கைகளில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், பொதுமக்கள் மற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226977

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.