Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. Pakistan (1.6/20 ov, target 152)18/0 Pakistan need 134 runs in 108 balls. போற போக்கை பார்த்தால் இருவர் தவிர எல்லோரும் அம்போ தான்!
  2. West Indies 55 England (6/20 ov, target 56)39/3 England need 17 runs in 84 balls. துடுப்பாட முடியாத ஆடுகளமோ?! West Indies 55 England (6.2/20 ov, target 56)40/4 England need 16 runs in 82 balls.
  3. West Indies (8.5/20 ov)42/6 England England chose to field. இவங்கள் ஏன் இப்பிடி விளையாடுறாங்கள்?
  4. இந்த கருவியை பார்த்ததும் சிறுவயதில் வீட்டில் வந்து முடிவெட்டிவிடும் அப்புவைத் தான் ஞாபகம் வருது. எனக்கு சலூனில் போய் முடிவெட்டத் தான் விருப்பம். அப்பு வந்தால் அழுது கொண்டு போய் இருக்க அவர் அழாதையணை என்று சமாதனம் சொல்லி முடிவெட்டி விடுவார். அவரின் இந்த கையால் அழுத்தி செயற்படுத்தும் கருவி முடியை பிடித்து இழுக்கும், அப்ப கொஞ்சம் வலிக்கும்.
  5. அடுத்த போட்டி இருக்கெல்லோ! அப்ப உங்களை சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தி இருக்கிறன்.😀
  6. வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி. ஒரு நாளுக்காவது முதலாம் இடத்தில இருந்திட்டன். ஏராளன் (குமுதா ) ஹப்பி அண்ணாச்சி.
  7. அடங்கொக்கமக்கா நான் முதலாவதா வந்திட்டன்! போட்டியில் நான்காவதா கலந்து கொண்டதால இரிக்கும். வாழ்த்தலாமே பிரண்ட்ஸ். Sri Lanka (19.6/20 ov)171/7 Ireland
  8. Scotland 140/9 Bangladesh (10/20 ov, target 141)59/2 Bangladesh need 82 runs in 60 balls. அவசரப்படவேணாம்!
  9. 1) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் ஓமான் 2) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் பங்களாதேஷ் 3) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி அயர்லாந்து 4) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி சிறிலங்கா 5) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் ஸ்கொட்லாந்து 6) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட் பங்களாதேஷ் 7) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி நமீபியா 8 ) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி சிறிலங்கா 9) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் பங்களாதேஷ் 10) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் ஓமான் 11) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா அயர்லாந்து 12) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா சிறிலங்கா முதல் சுற்று பிரிவு A: 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) சிறிலங்கா அயர்லாந்து 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - சிறிலங்கா #A2 - அயர்லாந்து 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! நமீபியா முதல் சுற்று பிரிவு B: 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) பங்களாதேஷ் ஸ்கொட்லாந்து 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - பங்களாதேஷ் #B2 - ஸ்கொட்லாந்து 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! பபுவா நியூகினி சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை: 19) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி அவுஸ்திரேலியா 20) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய் இங்கிலாந்து 21) சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். சிறிலங்கா எதிர் ஸ்கொட்லாந்து சிறிலங்கா 22) சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் இந்தியா 23) சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று AFG எதிர் பங்களாதேஷ் 24 ) சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் தென்னாபிரிக்கா 25) சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா நியூஸிலாந்து 26) சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று ENG எதிர் ஸ்கொட்லாந்து 27) சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். பங்களாதேஷ் எதிர் அயர்லாந்து 28) சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AUS எதிர் சிறிலங்கா 29) சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று WI எதிர் ஸ்கொட்லாந்து 30) சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் பாகிஸ்தான் 31) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று RSA எதிர் சிறிலங்கா 32) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய் இங்கிலாந்து 33) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று AFG எதிர் அயர்லாந்து 34) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய் இந்தியா 35) சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று ENG எதிர் சிறிலங்கா 36) சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று RSA எதிர் ஸ்கொட்லாந்து 37) சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று PAK எதிர் அயர்லாந்து 38) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று NZL எதிர் பங்களாதேஷ் 39) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி IND எதிர் AFG 40) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AUS எதிர் ஸ்கொட்லாந்து 41) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று WI எதிர் சிறிலங்கா 42) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று NZL எதிர் அயர்லாந்து 43) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று IND எதிர் பங்களாதேஷ் 44) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி AUS எதிர் WI 45) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா ENG எதிர் RSA 46) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி NZL எதிர் AFG 47) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று PAK எதிர் பங்களாதேஷ் 48) சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று IND எதிர் அயர்லாந்து சுப்பர் 12 பிரிவு 1: 49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து - ENG அவுஸ்திரேலியா - AUS A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி 50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி A1 - இங்கிலாந்து (3 புள்ளிகள்) #அணி A2 - அவுஸ்திரேலியா (2 புள்ளிகள்) 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! மேற்கிந்தியத் தீவுகள் - WI சுப்பர் 12 பிரிவு 2: 52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா -IND பாகிஸ்தான் - PAK A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி 53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி B1 - இந்தியா (2 புள்ளிகள்) #அணி B2 - பாகிஸ்தான் (1 புள்ளிகள்) 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ஆப்கானிஸ்தான் - AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 7:30 PM இங்கிலாந்து 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM அவுஸ்திரேலியா இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM இங்கிலாந்து உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) இந்தியா 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) நமீபியா 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ராகுல் 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ஜஸ்பிரிற் பும்ரா 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) ரோகித் சர்மா 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ராகுல் 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) அக்சர் பட்டேல் 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ராகுல் 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா தடித்த எழுத்தில் இருப்பவை எனது பதில்கள்.
  10. தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டிற்கு வெளியில் வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. பாலூர், வேங்கி ஆகிய இடங்களின் குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்ட நிலையில், தலக்காடு, பட்டனம் ஆகிய இடங்களின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தின் தலக்காடு தலக்காடு, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் காவிரியின் இடது கரையில் அமைந்திருக்கிறது. தற்போது பாலைவனத்தைப் போலக் காட்சியளிக்கும் தலக்காட்டில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இவற்றில் பெரும்பகுதி தற்போது மணலில் மூழ்கிவிட்டன. தலக்காடு கங்க வம்ச மன்னர்களின் தலைநகரமாக இருந்த பிரதேசம். 11ஆம் நூற்றாண்டுவாக்கில் மேலைக் கங்கர்கள் சோழர்களிடம் தோற்றுப்போயினர். அப்போதிலிருந்து இந்தப் பகுதி ராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, ஹொய்சாள மன்னனான விஷ்ணுவர்தன சோழர்களை மைசூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தான். முந்தைய பகுதி:தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? இதற்குப் பிறகு தலக்காடு பகுதியில் ஏழு சிறு நகரங்களும் ஐந்து மடங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. காவிரியின் எதிர்ப்புறத்தில் மலிங்கி என்ற சிறு நகரம் இருந்தது. 14ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி ஹொய்சாளர்களிடம் இருந்தது. பிறகு விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசர்கள் வசம் வந்தது. மைசூரை ஆண்ட உடையார்கள் 1630ல் இதனை கைப்பற்றினர். இப்படி அந்தப் பகுதி மைசூர் மன்னர்களால் கைப்பற்றப்பட்டது குறித்தும் அதனால் ஏற்பட்ட சாபம் குறித்தும் ஒரு கதை இப்பகுதியில் பேசப்படுகிறது. தலக்காட்டின் சாபம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக திருமலை ராயன் என்ற மன்னன் ஆண்டுவந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படவே, தலக்காட்டில் இருந்த வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொள்ள சென்றார். அவருடைய இரண்டாவது மனைவியான அலமேலம்மாள் ஸ்ரீரங்கப் பட்டனத்தில் இருந்தபடி, நாட்டை நிர்வாகம் செய்துவந்தாள். ஆனால், சீக்கிரத்திலேயே கணவன் இறக்கப்போகிறான் என்பது தெரியவந்தது. இதனால், ஆட்சிப் பொறுப்பை மைசூரை ஆண்ட உடையார்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தலக்காட்டிற்குப் புறப்பட்டார் அலமேலம்மாள். கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின் கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது - வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள் ஆனால், ராணியிடம் இருந்த நகைகளைப் பறிக்க விரும்பிய மைசூர் மன்னன், அதனைப் பறிக்க ஒரு சிறிய படையை தலக்காட்டிற்கு அனுப்புகிறார். இதையடுத்து நகைகளோடு காவிரியாற்றிற்குள் இறங்கும் அலமேலம்மாள், நகைகளை நதிக்குள் தூக்கி எறிகிறார். தானும் அதில் மூழ்கி இறந்துபோகிறார். உயிர் பிரிவதற்கு முன்பாக ஒரு சாபமிடுகிறார். அந்த சாபம் இதுதான்: "தலக்காடு மண்ணோடு மண்ணாகட்டும், மலிங்கி சுழலில் மூழ்கட்டும், மைசூர் அரசர்களுக்கு பிள்ளையில்லாமல் போகட்டும்". இதற்குப் பிறகு இரண்டு விசித்திர சம்பவங்கள் உண்மையிலேயே நடந்தன. ஒன்று, பல நூற்றாண்டுகளாக துடிப்பு மிக்க நகரமாக இருந்த தலக்காட்டில் பல மீட்டர் உயரத்திற்கு மணல் சேர ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, உடையார் வம்ச அரசர்களுக்கு பட்டத்திற்கு வரும் வகையில் குழந்தைகளே பிறக்கவில்லை. சமீபத்தில் இறந்த ஸ்ரீ கந்ததத்த உடையார் வரை வாரிசு இல்லாமலேயே இறந்தார்கள் (ஆனால், இப்போதைய மகாராஜாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது). 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மணல் சேர்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 9-10 அடி உயரத்திற்கு மணல் சேர்ந்து வருவதால், மக்கள் இந்தப் பகுதியைவிட்டு தொடர்ந்து வெளியேற வேண்டியிருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் மணலுக்கடியில் மூழ்கியிருக்கும் நிலையில், கீர்த்தி நாராயணா கோயில் மட்டும் அகழாய்வு செய்து மீட்கப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆனந்தேஸ்வரா மற்றும் கௌரி சங்கரா கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டன. பாதாளேஸ்வரா கோயிலின் சுற்றுச் சுவர்களில் சில கல்வெட்டுகள் தென்பட்டன. இதில் ஒரு கல்வெட்டு கங்கர்கள் காலத்தைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டு. மற்ற கல்வெட்டுகள் தமிழில் இருந்தன. கௌரிசங்கரா கோயிலில் உள்ள கல்வெட்டு, அந்தக் கோயிலானது சிக்கதேவராய உடையார் காலத்தில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 "கங்கர்கள் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை ஆட்சிசெய்தார்கள். கங்கர்கள் கால கல்வெட்டுகள் கிருஷ்ணகிரியில்கூட கிடைக்கின்றன. ஒரு காலத்தில் மாண்டியா பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிதான். தலக்காட்டிற்கும் சோழர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக தொல்லியல் துறை விரும்புகிறது" என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து செயல்படுபவருமான பேராசிரியர் கே. ராஜன். பட்டனம் (முசிறி) பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் பட்டனம். இந்தப் பகுதியில் நீண்ட காலமாகவே, பல்வேறு பணிகளுக்காக நிலத்தைத் தொண்டும்போது மேலடுக்கிலேயே பெரிய அளவில் ஓடுகள் போன்றவை கிடைத்துவந்ததையடுத்து இந்தப் பகுதி ஒரு தொல்லியல் தளமாக அடையாளம் காணப்பட்டது. இந்த இடத்தில் வரலாற்று ஆய்வுக்கான கேரளா கவுன்சில் (கேசிஎச்ஆர்) 2007ல் இருந்து 2020வரை பத்து முறை தொல்லியல் ஆய்வுகளை நடத்தியுள்ளது. பதினொன்றாவது ஆய்வு இந்த மாதத் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கி.மு. ஆயிரமாவது ஆண்டிலிருந்து இந்த இடத்தில் மக்கள் வசித்ததற்கான தொல்லியல் பொருட்கள் இங்கிருந்து கிடைத்துள்ளது. கி.மு. 3 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி மிகவும் துடிப்பு மிக்க பகுதியாக இருந்திருக்கிறது. பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH பாமா என்ற தனியார் அமைப்பு 2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது. சுமார் பத்து ஓடுகளில் தமிழி எழுத்துகள் கிடைத்தன. ஒரு பானை ஓட்டில் ஊர் பா வே ஓ என்றும் ஒரு பானை ஓட்டில் அமண என்ற எழுத்துகளும் கிடைத்திருக்கின்றன. சங்ககால சேர நாட்டு துறைமுகமான முசிறயின் ஒரு பகுதியாகவே பட்டணம் இருக்குமென தமிழக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். "சங்க இலக்கியங்களில் வரும் பேரியாறு என்பது தற்போதைய பெரியாற்றைத்தான் குறிக்கிறது. ஆகவே இந்த இடம் தமிழ்நாட்டோடு தொடர்புடைய இடம்தான். தமிழர்களின் தொடர்புகள் எங்கெங்கு இருந்திருக்குமோ, அந்ததந்த இடங்களிலெல்லாம் அகழாய்வு செய்வது தமிழ்நாடு தொல்லியல் துறையின் நோக்கமாக இருக்கிறது" என்கிறார் கே. ராஜன். வேறு மாநிலங்களில் இருக்கும் தொல்லியல் களங்களில் அகழாய்வை மாநிலத் தொல்லியல் துறை நேரடியாக செய்யாது என்றே தெரிகிறது. அங்குள்ள தொல்லியல் சார்ந்த அமைப்புகள், பல்கலைக்கழக தொல்லியல் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்தே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகள் மாநிலத் தொல்லியல் துறையால் வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/india-58657621
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.