Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்! அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவயது ஞாபகங்கள்!! திரும்பி வரும் வழியில் தனங்கிளப்பில்(?) உள்ள காற்றாலைகளை அருகில் சென்று பார்த்தபொழுது!! எனக்கு எப்பொழுதும் பிடித்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வயல்வெளி!! சிறுவயதில்/இளவயதில் சைக்கிளில் இந்தவழியாக செல்வது வழமை.. மழையை ரசித்தபடி சில நாட்கள்.. தொடரும்..
  2. வணக்கம் இணையவன் அண்ணா!! இப்பொழுது பழையமாதிரி வந்துவிட்டது.. நன்றி..
  3. நிர்வாகத்தினருக்கு வணக்கம், இன்று காலை எனது பதிவை edit செய்ய முடிந்தது, இப்பொழுது “ share” option மட்டுமே உள்ளது.. 😵‍💫 முன்பு படங்களை விம்பகத்தின் மூலம் இணைத்தமையால் பிரச்சனைகள் இருக்கவில்லை.. ஒரு மாதத்திற்கு பிறகு வந்தமையால் இதன் அனுமதியையும் தானியங்கி தடைவிட்டதாக்கும்.. 😞😞 தனிமடலில் தொடர்பு கொள்ள முயலும் பொழுது “ you are only allowed to send 0 messages per day. Please try again later “ என வருகிறது🧐😔 எனக்கு பழையபடி edit மற்றும் விம்பக அனுமதியையும் தரமுடியுமா???🥺 நன்றி..
  4. உண்மை!!! அதனால்தான் சில இடங்களுக்கு எப்பொழுது போனாலும் போவதுண்டு, கட்டடங்கள் மாறி இருக்கலாம், காலங்களும் போகலாம் ஆனாலும் நடந்தவற்றை மறக்கமுடியாது!!!
  5. ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!! யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுதூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து உறங்கும் பூணை.. புதிதாக கட்டப்படும் யாழ்ப்பாணத்திற்கான Town Hall. புதிதுபுதிதாக, வித்தியாசமான வடிவமைப்புக்களுடன் கட்டடங்கள் இருந்தாலும் பழையகட்டடங்களின், வீடுகளின் அழகில் மனதை பறிகொடுத்து சில நிமிடங்கள்! தொடரும்…
  6. இந்த ஊர்கள்( மாவிட்டபுரம், மயிலிட்டி, ஊறனி etc) இப்ப கொஞ்ச காலங்களிற்கு முன்புதான் இரானுவத்தால் மக்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.. இன்னமும் பல பகுதிகள் விடுவிக்கப்படவில்லை அங்கிள். எங்கள் தோட்டத்தை செய்பவரின் காணி கூட பலாலி முகாம் உள்ள பகுதிகளில்தான் உள்ளது..வேதனையான விடயம்!! நான் இம்முறைதான் இந்தளவு உட்பகுதிகளுக்கு சென்றுள்ளேன்.. சிவந்த மண்.. இந்த மண்ணில் வெறுங்காலுடன் நடப்பது மிகவும் பிடித்த ஒன்று.. ஏனெனில் காலில் ஒட்டிய மண்ணின் நிறம் போக நீண்ட நாட்கள் எடுக்கும்.. சாதி தொடங்கி சமயம், சமூகம், மாதாந்த வருமானம், சொத்து எவ்வளவு?, துணையாக வரவேண்டியவர் இருக்கவேண்டிய பிறந்த திகதி🙄, அசைவம் உண்பவருடன் கூடி வாழ முடியுமா இல்லையா!!!🤦🏽‍♀️கிட்டதட்ட 50ற்கு😵‍💫😵‍💫😵‍💫 மேற்பட்ட கேள்விகள் அங்கிள்!!
  7. பஸ்தியன் சந்தியில் ஒரு காலைப்பொழுது!! மாவிட்டபுரத்தில் ஒரு மாலைப்பொழுது!! தலசிட்டி வைரவர் கோவில் - நந்தி இருக்கவேண்டிய இடத்தில் நாய் இருக்கும் ஒரு கோவில்!!. விலங்குகளை பலி கொடுப்படுதை தடுத்தாலும் பலிக்கொடுப்பதற்காக இருந்த சாதாரனமாக இருந்த கோவில் இன்று 4 பக்க கோபுரங்களுடன் கட்டப்படுகிறது!! மயிலிட்டி - மீன்களுடன் படகுகளும் தென்பகுதி மீன் வியாபாரிகளும் ஊறனி- கடந்து போக முடியாமல் பல கதைகள் கூறும்!!! தொடரும்…
  8. கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் எழுதப்படுமா என்பது சந்தேகமே!! ஆனாலும் கொழும்பின் சூட்டை தணித்தது இந்த மண்ணின் குளிர்மை.. கிட்டதட்ட 27/28 வருடங்களாக மனிதர்களின் காலடி படாமல் காடு போல கிடந்த இடத்தை மாற்றிபயனுள்ள தோட்டமாக்கியதைப் பார்த்து ஒரு சந்தோஷம்!! தொடரும்…
  9. எனது தனிப்பட்ட வேலை ஒன்று காலதாமதமாகிக்கொண்டே வருவதால் இந்த Bitcoinல் கவணம் செலுத்த முடியவில்லை.. ஆனால் செய்திகளை மேலோட்டமாக பார்க்கும் பொழுது நிதானித்து செயல்படுவது நல்லது போல தெரிகிறது.. https://www.news.com.au/finance/markets/world-markets/deadly-bitcoin-drops-to-nearly-45k-after-horror-five-weeks/news-story/46485589da3625574019ed5b7e9013fb?amp
  10. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுவி அண்ணா!! நீங்கள் இணைத்த சலாட் வகைகளில் இரண்டு செய்முறைகளை செய்து பார்த்தேன்(படங்கள் இணைத்திருந்தேன்).. மிகவும் சுவையானதும் சத்தானதுமான சலாட் வகைகள்..அதிலும் அந்த சிகப்பு கோவாவும் சிக்கன் சலாட்.. 👌 இதில் ஒரு பிரச்சனை உள்ளது.. என்னவென்றால் உருளைக்கிழங்கு.. பார்ப்போம் உருளைக்கிழங்கிற்கு மாற்றீடாக வேறு எதையாவது போட்டு செய்து பார்ப்போம்..
  11. @vaseeஇதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், இன்றுவரை அதிகம் ஆபத்தில்லாத முதலீடு என கருதுவது காணி,வீடு போன்றவற்றில் மட்டும், ஆனால் அதிலும் உடனடி இலாபம், அதிக இலாபம் தரும்செயல்களில் ஈடுபடுவதில்லை. இப்பொழுது கொஞ்ச காலமாகத்தான் இந்த பங்கு சந்தை பற்றியும் ஈடுபடுவதிலும் ஒரு ஆர்வம், என்பதால் இது தொடர்பான புதிய தகவல்கள் வரும் பொழுது அறியமுற்படுகிறேன்.. நீங்கள் இணைக்கும் தகவல்கள் மூலம் தெரியாத விடயங்களை அறிய முடிகிறது, மிக்க நன்றி..
  12. Momentum Investmentம் Momentum tradingம், இரண்டும் ஒன்றா இல்லை வேறுபாடுகள் உள்ளதா?
  13. எத்தனையாவது இடத்தில் வருவது என்பதை விட இந்த மாதிரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, எங்களது ஆரோக்கியத்தின் மீதான அக்கறை ஆர்வம் போன்றவைதான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று நிழலி அண்ணா.. இங்கே எழுதிய கருத்துக்கள் பார்க்கும் பொழுதுதான் விளங்கியது இந்த பதிவு எத்தனை பேரை ஊக்குவித்திருக்கிறது என்று.. எனக்கு ஓட்டப்பயிற்சியில் நாட்டமில்லை..ஆனால் இங்கே வந்த பொழுதில் நீச்சல் வகுப்பில் சேர்ந்து நீந்தக்கற்றுக்கொண்டேன்.. மிகவும் பிடித்த ஒன்று…COVIDனிலால் இடைநிறுத்தவேண்டியதாயிற்று.cycling 🚴‍♀️ செய்வதுண்டு(அவ்வப்பொழுது).. அதே நேரம் வாரத்தில் 3 நாட்கள் Zumba classes உள்ளது..இதற்கு மேல் முடியாது என்பதால் இதுதான் எனது உடற்பயிற்சி..
  14. @இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்.. 👏👏👏👏
  15. நீங்கள் Bitcoinல் போட்டிருந்தால் நட்டப்படமாட்டீர்கள் என நினைக்கிறேன்.. இப்பொழுது மறுபடியும் Bitcoin மதிப்பு ஏறத்தொடங்கிவிட்டது..
  16. இன்று நடந்த NBA Milwaukee Buksன் Championship Ring Ceremony.. களைத்த மனசு, 360 வைரக்கற்களை மோதிரத்தின் மேற்பகுதியிலும், இடது பக்கம் 16 மரகத வடிவ வைரங்களும், வலது பக்கத்தில் 16 மரகத வடிவ வைரகளும் கொண்ட இந்த மோதிரத்தை பார்க்கும் பொழுது களைத்த மனசு, சோர்ந்த மனசு எல்லாமே காணாமல் போய்விடும். NBA 🏆போட்டிகளும் ஆரம்பமாகிவிட்டன. 🤩..இந்த வருடமும் இவர்கள் வெற்றிக்கிண்ணத்தை பெறவேண்டும்🤞…
  17. Commonwealth bankம் Westpacம் owner occupiedற்கான வீட்டுகடனின் நிலையான வீதத்தை 0.1% அதிகரித்துள்ளார்கள்.. அதே நேரம் அவர்களின் பங்குகளின் பெறுமதியும் குறைந்துள்ளது.. இந்த மாதம் முடிவதற்கிடையில் வங்கிகள் தமது நிதியாண்டு அறிக்கையை வெளியிடும்.. அப்பொழுது பங்குகளின் நிலவரத்தில் மாற்றம் வருமா தெரியவில்லை.. https://www.google.com.au/amp/s/amp.9news.com.au/article/d9484124-5ac4-4103-a2b1-87b4d65e807b
  18. இந்த சலாட் செய்வதற்கு இலகுவானதும் சுவையானதும் மட்டுமல்ல மிகவும் இலேசான சலாட்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. இந்த YouTube channelலிருந்து நீங்கள் இணைத்தவற்றில் இரு சலாட் செய்முறைகளை செய்து பார்த்தேன்.. இரண்டுமே அருமையான சலாட்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
  19. நிர்வாகத்தினருக்கு வணக்கம், யாழ் இணையத்திற்கு கடந்த வாரங்களாக வரமுடியவில்லை.. எனக்கு மீண்டும் edit செய்யும் வசதியை தரமுடியுமா? நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.