Everything posted by P.S.பிரபா
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
இது எல்லா கட்சிகளிலும் உள்ள ஒரு நிலைதான்.. யாரை விழுத்தி எப்படி உயர்வது எனத் தொடங்கி.. கட்சி மாறுவது வரை..
- மரச் சிற்பம் - ஷோபாசக்தி
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
அவர் இணைந்திருக்கும் கட்சிக்குள்ளும் நல்ல மதிப்பு உள்ளது என அறிய முடிந்தது. மாறாமல் இருப்பார் என நம்புவோமாக
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
சங்குப்பிட்டிப் பாலத்தில் அதிகாலை அழகு ஆனால் அதே பாலத்தில் ஆயிரங்கள் செலவழித்தும் மனிதர்களின் அடிப்படைக் குணம் மாறாதமையால் இருளில் இருக்கும் வீதி. முற்றம் தெரியும் முதலியார் வாசிகசாலை.. ஆர் கண்பட்டதோ தெரியவில்லை போன வருடம் போன பொழுது பற்றையாக(👇🏼) இருந்த வாசிகசாலை இன்று முற்றம் தெரிகிறது..
- IMG_2784.jpeg
- IMG_2785.jpeg
- IMG_2901.jpeg
-
யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
ஊழி திரைப்பட இயக்குனரின் பேட்டியில் கூறப்படும் விடயங்களை யாராலும் மறுக்கமுடியாது என்றுதான் கூறவேண்டும்.. சரியான கேள்விகளும் அதற்கான இயக்குனரின் பதில்களும் இந்தப் படத்தினை பார்க்கவேண்டும் என்ற நினைப்பை ஏற்படுத்துகிறது.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
உண்மைதான்.. அது மட்டுமல்ல 8 வருடங்களுக்கு முன் கொழும்பில் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.. நான் முதன்முதலாகப் போன மெஹெந்தி வைக்கும் சடங்கு அதுதான். அந்த திருமண நிகழ்ச்சியில் இன்னொரு புது விடயத்தையும் பார்க்க முடிந்தது. அது எனக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது என்பது உண்மை. தாலி கட்டி, மெட்டி எடுத்து etc சடங்குகள் முடிந்து மணமக்களை ஆசீர்வதிக்க ஆயத்தமாகும் நேரத்தில் மணமகளின் தாய் அவர்களது உறவுக்காரர் ஒருவரின் சிறு வயதுக்கு குழந்தையை வாங்கி மணமகளின் மடியில் வைத்தார்.. இன்னொருவரின் குழந்தையை எடுத்து மடியில் வைத்தவுடன் அவருடைய மகளுக்கும் குழந்தை கிடைத்துவிடுமா? தர்ம சங்கடமான நிலையைத் தானே மணமக்களுக்கு ஏற்படுத்தும்!! இது போன்ற செயல்களை செய்யும் பொழுது கொஞ்சமும் யோசிப்பது இல்லையா? இதனால்தான் இப்பொழுது தனியே இரு பக்க பெற்றோர்கள், சாட்சிக்கு இருவர் என பத்துப் பேருடன் நடக்கும் திருமணங்களை சிலர் விரும்புகிறார்களே தெரியவில்லை
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தமிழ் தேசியத்தை எங்களை விட தெளிவாக
இந்தப் பட்டிமன்ற காணெளியை YouTubeல் பார்த்துவிட்டு யாழில் ஏன் ஒருவரும் கொண்டு இணைக்கவில்லை என நினைத்திருந்தேன்.. ஆனால் வேறு பெயரில் இணைக்கப்பட்டுள்ளது.. இந்த மாணவர்கள் கேட்கும் கேள்விகள் எத்தனைப் பேரை சென்றடைந்துள்ளது??
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
வர்த்தகத்தில் நம்பிக்கை முக்கியமான ஒன்றுதானே.. அதனை ஒழுங்காக செய்யாமல் இப்படி திகதி காலாவதியான பாணையோ bunனையோ விற்பது சரியான செயலாக இல்லை. அதுவும் வாடிக்கையாளர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற துணிவில் செய்வது தவறு என நம்புகிறேன். இங்கே பொதுவாக விரைவில் திகதி காலாவதியாகப் போகிறது என்றால் குறைந்த விலைக்கு விற்பார்கள், அதிலும் இந்த மாதிரி பாண்/கேக் வகைகள் அடிக்கடி நடக்கும். வாடிக்கையாளரும் திகதி இன்றோ நாளையோ முடிந்துவிடும் என்று தெரிந்தே வேண்டிச் சொல்வார்கள். மற்றப்படி பக்கவிளைவுகள் வருமா வராதா எனக்குத் தெரியாது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இப்படியெல்லாம் பொதுவெளியில் எழுதினால் “பொது சுகாதார பரிசோதகர் நாளைக்கு வருவர்.. கவனமாக இருங்கோ” எனக் காட்டிக் கொடுக்கவும் ஆட்கள் இருப்பினம்.. தெரியும்தானே.. இதெல்லாம் இந்தக் கடைக்காரர்கள் மனம் வைத்து திருந்தாமல் மாற்றமுடியாது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
உண்மைதான்.. உள்ளூர்வாசிகளையே ஏமாற்றும் பொழுது வெளிநாட்டவர்களை விடுவார்களா? யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பேக்கரி ஆனால் திகதி காலாவதியான bun கூட விற்கிறார்கள். வாங்கும் பொழுது Packetல் திகதியை பார்த்து வாங்கினால் பிரச்சனையில்லை. இரண்டு தரம் இப்படி நடந்த பொழுது ஏன் இந்த மாதிரி செய்கிறீர்கள்? யாரும் புகார் கொடுக்கவில்லையா எனக் கேட்ட பொழுது உங்களைப் போல இப்படி பார்ப்பதில்லை என்றார்கள்.. இவர்களை நம்பித்தான் சனம் வாங்கிக் கொண்டு போகிறார்கள். சனத்தை இப்படி ஏமாற்றுவது பிழை என யோசிக்கவில்லை. அதே போலதான் எங்கட புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கே போகும்பொழுது நடக்கும் விதத்திலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
2009ற்கு பின் பல தடவைகள் போயிருந்தாலும் நானும் சில இடங்களுக்கு ஒரு தடவை மாத்திரமே போயிருக்கிறேன். போய் வந்தபின்பு மிகவும் கவலையாக இருக்கும். அதனால் ஒரு தரம் மட்டுமே போவதுண்டு. தனியாகப் போவதில்லை. எனது சித்தி வசிப்பது வன்னியில் அதனால் அவரோடு போவதுண்டு.
-
வாசிப்புக் குதிரைகளும் மறதி மலையும் - காந்தப் புலம் நாவலை முன்வைத்து
நல்லதொரு கதை போலவே உள்ளது. இணைத்தமைக்கு நன்றி.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மிக்க நன்றி.. எனக்கு ஊரில் ஒரு கடமை உள்ளது, சகோதரியின் மேல் முழுப் பொறுப்பையும் போட மனம் வரவில்லை, அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கே போகிறேன். அப்படி போகும் பொழுதெல்லாம் நான் பார்க்க நினைப்பதை பார்க்க முயற்சிக்கிறேன்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மிக்க நன்றி. இந்த ஊர்களின் தோற்றம் காலப்போக்கில் மாறலாம் ஆனால் மனதை விட்டு சம்பவங்கள் இலகுவில் மறையாது தானே. மிக்க நன்றி பகலோ, மம்மல் பொழுதோ இந்தப் பிரதேசமே ஒரு மனப்பயத்தைத் தருவதுதான் உண்மை.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மிக்க நன்றி சுண்டிக்குளம் பறவைகள் சரணலாயம் தொடுவாயிற்கு மற்றப்பக்கத்தில் தானே உண்டு. நான் போனது முல்லைத்தீவு பரந்தன் வீதியால் போய் சுண்டிக்குளம் வீதியூடாக.. அந்த இடமே வறண்டு போய், சரியான வீதி கூட இல்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தமையால் நீண்ட நேரம் இருக்க நினைக்கவில்லை. 👆🏽இப்படித்தான் அனேகமான பகுதி இருந்தது. மிக்க நன்றி சுவி அண்ணா
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
என்னில் இருந்துதான் மனிதர்களாகிய நீங்கள் வந்தீர்கள் என தன் செய்கைகள் மூலம் நினைவூட்டுகிறதா? அக்கராயன் வீதியில் சித்திரை வெயிலுக்கேற்ற நிழலும் வாகை மரங்களின் தென்றல் காற்றும் உண்டு.
- IMG_2798.jpeg
- IMG_2782.jpeg
- IMG_2791.jpeg
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
இதுதான் இவர்களது நோக்கம்.. எத்தனை காலத்திற்குத் தான் இவர்களை நம்பி ஏமாறவேண்டும் என நினைக்கிறார்கள்..
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
உங்களது பிள்ளைகள் ஒரு வயதுக்கு வந்தபின்புதானே இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் அவர்களது சிறு வயதில் அவர்களுடன் ஊரில் போய் இருக்க நினைத்திருப்பீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் எனக்கு தெரிந்த ஒருவர் தனது இரு சிறுவயது பிள்ளைகளுடன் ஊரில் போய் ஒரு வருடம் இருந்த பின் இங்கே திரும்பிவிட்டார் காரணம் பிள்ளைகளை அங்கே பாடசாலையில் bully செய்வதாலும் மொழிப் பிரச்சனையாலும். அவர் இப்பொழுது கூறுவது பிள்ளைகள் வளர்ந்த பின்பு போக நினைத்திருப்பதாக. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் ஊரில் போய் படிக்கும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் அவர்களைப் பாதிக்காதா? எனக்கும் ஊரில் போய் வாழ விருப்பம் ஆனால் முடியாது. நான் பார்த்த அளவில் அங்கே சமூகம் விதிக்கும் அல்லது எதிர்பார்க்கும் வரையறைக்குள் இருக்கவேண்டும் அது எனக்கு சாத்தியமாகத் தெரியவில்லை. அவுஸ் வராமல் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்திருந்தால் அதனை ஒட்டி வாழ்ந்திருக்கலாம் ஆனால் இப்பொழுது முடியாது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. ஆனாலும் பிறந்த இடம், சொந்த மண் என்பதால்தான் இன்று வரை அங்கே தேடித்தேடிப் போகிறேன்.