Everything posted by Kapithan
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நகைச்சுவையாளர் (Comedy piece) செலன்ஸ்கியை நிலைதான் கவலைக்கிடமாக இருக்கிறது. நாடு நாடாய் அலைந்து, என்னையும் கவனியுங்கள் எனக் கையேந்தினாலும் யாரும் கவனிப்பாரில்லை. ☹️ செலன்ஸ்கி பிச்சைக்காறன் லெவலுக்கு இறங்கினாலும் ஒருவரும் மனம் இரங்குவதாக இல்லை. ☹️
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஹாஸாவில் போர் நடப்பதையே எல்லோரும் மறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டனர். இதில் உக்ரேனை யார் மனதில் வைத்திருக்கப் போகின்றனர்?
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
100% ✅
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
யார் யாரெல்லாம்பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளலாம்? யார் யாரெல்லாம் பங்கெடுக்கக் கூடாது? ஏதாவது பரிந்துரை?
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
நானும் ரெளடிதான் 😁
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
ஆமாஞ்சாமி, பழைய அல்ல, அதரப் பழசு 😁
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
அது கிடக்கட்டும் ஒரு பக்கம், ""உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று.."" இதன் அர்த்தம் what what ?
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
கஞ்சாவை நான் பாவிப்பதில்ல.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
மீண்டும் வாசித்து மூளையைக் கசக்கிப் பார்க்கிறேன். (கசக்கிறதுக்கு மூளை என்ன கஞ்சாவோ என்று கேட்க வேண்டாம். 😁)
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
ஊரில் மதில் மேலிருந்து விசிலடித்துப் பட்டம் சூட்டும் கூட்டத்தில் தாங்கள் ஒருவர் இல்லை என்பது என் நம்பிக்கை. மேலும் தாங்கள் மேலும்கொஞ்சம் ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
1) பேச்சு வார்த்தை விற்பனைக்கான பொருளல்லவே....✅ 2) அதில் இதய சுத்தியும் ...ஆக்கபூர்வமன செயல்பாடும் வேண்டும்...✅ இதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? 3) இதனை விட பேசப்போகிற்வர்... தமிழரால் விடும்பப் படுபவராக இருக்கவேண்டும்...⁉️ சுரேந்திரனை தமிழர் விரும்பவில்லையா? 4) லண்டனில் இருக்கும் தழரின் எழுச்சியை இவரால் கட்டுப் படுத்தமுடியுமா?❌ ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? எழுச்சி கொள்வதற்கான தேவை தற்போது ஏன் வந்தது? இலங்கைத் தமிழர்தான் இறுதியில் எழுச்சி கொள்வதா என்று தீர்மானிக்க வேண்டும். நாம் அவர்களுக்கு துணையாக மட்டுமே இருக்க முடியும். 5) பெயர் மட்டும் இருந்தால் போதாது...❌ சுரேன் சுரேந்திரன் அல்லது உலக தமிழர் பேரவை என்கிற பெயரில் என்ன பிரச்சனை?
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
1) பேச்சுவார்த்தை நடத்துவது நன்மையானதா அல்லது தீமையானதா? 2) பேச்சுவார்த்தை நன்மையானது என்றால் யார், யாருடன் பேசலாம்? 3) பிரித்தானியாவில் இருந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களுக்கு மேற்குலகின் அனுசரணை இன்றி பேச்சுவார்த்தை நடாத்த முடியுமா? 4) பேச்சுவார்த்தை தீங்கானது என்றால், அங்குள்ள தமிழர்களுக்கு பயன்படுவகையில் உதவ எங்களுக்கு உள்ள மாற்று வழி என்ன? (இந்தக் கேள்விகள் உங்களுடன் முரண்படுவதற்காக அல்ல. )
-
துவாரகா உரையாற்றியதாக...
அந்தத் தேவை இலங்கைக்கு இல்லை. தமிழர் எல்லோரும் நம்பக்கூடிய, தமிழரை ஒன்று சேர்க்கக்கூடிய இந்திய சார்புத் தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய தேவை இந்தியாவிற்கு மட்டும்தான் உள்ளது. தலைமைத்துவ வெற்றிடத்தை இந்தியா தனது தேவைக்குப் பாவிக்கிறது.
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்த ஈனச் செயலைச் செய்தது இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்ல. ஆனால் ஏன் செய்தார்கள் என்பதுதான் முக்கியம். இன்று இலங்கையர் எல்லோருக்கும் பொதுவாக ஒத்துப்போகும் ஒரு விடயம் இந்திய வெறுப்பு. அதை நிவர்த்தி செய்து, எம்மிடையே உள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை இலங்கைத்த மிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒருவரை முன்னிறுத்தி தமிழர்கள் எல்லோரையும் மீண்டும் தனது பக்கம் கொண்டு வரும் அற்பத்தனமான ஒரு முயற்சியே இந்தியாவின் இந்த துவாரகா விளையாட்டு. இதில் நல்ல விடயம் என்னவென்றால், துவாரகா எனும் நாடகம் ஆரம்பமாகி 24 மணித்துளிகளிலேயே இழுத்து மூடப்பட்டதுதான். இதில் இன்னொரு நல்ல விடயமும் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால் இந்திய ஏஜன்ட்கள் பலரும் அம்பலப்பட்டுப் போயினர். இதை இந்தியாவே எதிர்பார்த்திருக்க மாட்டாது. இது தொடர்பாக புரட்சிகரத் தமிழ்த் தேசியனிடம் கேட்டால் அவர் நிறையவே சொல்லுவார். 😉
-
துவாரகா உரையாற்றியதாக...
இதற்காகத்தான் ஹிந்தியா துவாரகா என்கிற பெயரில், இலங்கையில் தோற்றுவிட்ட தனது வெளியுறவுக் கொள்கைக்கு புதிய (போலித்) தலைமையை உருவாக்க நினைக்கிறது. இலங்கைத் தமிழும் சிங்களமும் ஹிந்தியாவிக்கெதிராகத் திரும்பி வெகு நாளாச்சு கண்டியளோ,..... இனி மலையகத் தமிழரும் திரும்புவார்கள். அப்போது மெல்ல இந்தியா சாகும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இவர்களுடைய பேட்டிகளை நோக்குவீர்களானால் இவர்கள் அமெரிக்க அதிபரிலிருந்து சைபீரியாவின் கடைக்கோடிவரை தங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற வகையில் கூறுவார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக இவர்கள் எங்களுக்கே பாடம் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
""ஏர்போர்ட்மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்."" தடி எடுதவணெல்லாம் தண்டல்காறன் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்-உக்ரேன் அமைதி உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட ஆயத்தமாகிய வேளையல் UK யின் பொறிஸ் ஜோண்சன் தலையிட்டு எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கிவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.
-
துவாரகா உரையாற்றியதாக...
துவாரகா என்பவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையாஎனும் விவாதம் எமக்கு எள்ளளவும் பயன் தரப்போவதில்லை. தற்போதைய சூழலில், துவாரகா என்கிற ஒருவரை இலங்கைத் தமிழர்களுக்கு முன்னே கொண்டு சென்று அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்துவதன் ஊடாக அவர்கள் அடைய நினைப்பது என்ன? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்தி, அவரை ஈழத் தமிழர் ஏற்றுக்கொண்டால், அதனால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்? ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையா தீமையா? இவை தொடர்பான ஆய்வுகள்தான் தற்போதைய தேவை.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கலாம் ஆனால் தமிழகத்தவர் எல்லோரும் எமக்கு வேண்டியவர்கள் என்பது எனது நம்பிக்கை.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
அண்மைக்காலங்களில் வெளிவந்துகொண்டிடுக்கும் பல youtube channel களில் சீமானை நையாண்டி செய்வதாகக் கூறிக்கொண்டு எமது தலைவனையும் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் காணொளிகளை தொடர்ச்சியாக DMK ஆதரவாளர்கள் வெளியிட்டபடி இருக்கிறார்கள். இது ஈழத் தமிழர்களையும் தமிழகத்தவர்களையும் சிண்டு முடித்துவைக்கும் வேலை நடைபெறுகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாவிட்டாலும் DMK and ADMK வினருக்குத் தெரியாமல் எதுவும் நடைபெற வாய்ப்புகள் இல்லை.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
ஏன்? திரும்பவும் முதுகில் குத்துவதற்கா? நம்பிக்கைத் துரோகிகள் 😡
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க. இதன் அர்த்தம் மாந்தர் எல்லோரும் இன்புற்ரிருக்க வேண்டும். எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும் என்பதே. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகை அழித்திடுவோம்’ என்று பாரதி பாடியது இதனைத்தான். விளங்கிக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்குலகு தனது வளத்தையும் செல்வத்தையும் உலகின் நன்மைக்காகப் பாவித்திருந்தால் உலகும் மேன்மையானதாக மாறியிருக்கும் உலக மாந்தரும் மேற்கினைத் தொழுதிருப்பார்கள். 😏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பூகோள அரசியலை புரிந்து கொள்ளாமல் நீதி, நேர்மை என்று கூறி எமது போராட்டம் அழிந்துபோய்விட்டது. ஆனால் கிஸ்புல்லா, சிரியா, லெபனான், ஈரான் என்பன தற்போதைய யுத்தத்தில் ஈடுபடாமல் தங்களது பலத்தைத் தக்க வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் யுத்தத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளன. ஹமாஸின் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி, யுத்தத்தை விரிவுபடுத்தி ஹிஸ்புல்லாஹ், சிரியா மற்றும் ஈரானை அழிக்கும் வகையிலான பாரிய யுத்தத்தை ஆரம்பிக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது.