Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. 2023 ம் ஆண்டின் மிகச் சிறப்பான விடயம் என்னவென்றால் உந்த உலகத்தில் மனித உரிமை பேசுவோர் எல்லோரும் அதனை தங்களுக்குத் தேவையான ஒரு கருவியாக மனித உரிமையைப் பாவிக்கிறார்களே தவிர அவர்களின் உண்மையான நோக்கம் மனித உரிமை அல்ல. தங்களின் சுயநலனுக்கான ஒரு கருவியே மனித உரிமை. இது அப்பட்டமாக வெளிப்பட்ட இடம் 👇 ரஸ்ய - உக்ரேன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம். உலக நிலைமை இப்படி இருக்கும்போது, ஈழத் தமிழரின் மீதான இனவழிப்பு யுத்தத்தில் மனித உரிமை பற்றி இவர்களது அக்கறையில் நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்வது? 😏
  2. உண்மையில் அந்தப் பிள்ளையை நினைக்கப் பாவமாக இருக்கிறது. வாசகர்சாலை, ஊர்ச் சங்கங்கள், அந்தப் பிள்ளையின் பாடசாலை போன்றவற்றில் பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்திருந்தால் அது பலருக்கும் முன்மாதிரியான செயற்பாடாக இருந்திருக்கும். இந்தக் கொண்டாட்டங்கள் பிள்ளையைப் பப்பாளி மரத்தில் ஏற்றிவிடும் செயற்பாடாக இருக்கப்போகிறது. ☹️
  3. இரண்டுமே பிரச்சனைதான். தனித்துவமாக வாழ விரும்புவோருக்கு நிச்சயம் இது பிரச்சனைதான்.
  4. செண்டை இங்கே வாசிக்கப்பட்டிருக்குமானால், இந்த மேள தாளத்தின் பின்னணியில் இந்தியன் தூதுவராலயத்தின் கரங்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம். 🤨
  5. இதுவும் கொஞ்சம் அதிகமாகத் தோன்றுகிறது. ☹️
  6. ஒப்பிட தாங்கள் விரும்பவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து இறந்த மனிதனை இங்கே கொண்டுவருவதைத் தவிர்த்திருக்கலாம்.
  7. அப்படியானால் உங்கள் பதிலைத் தனிநபர் மடலின் ஊடாகத் தெரிவியுங்கள். பப்ளிக்குட்டி செய்ய வேண்டாம். முக்கியமாக, தலைவர் ஒன்றும் உங்கள் தனிச் சொத்து அல்ல. அவர் உலகத் தமிழர் எல்லோருக்கும் பொதுவானவர். அவரைக் கோமாளியுடன் ஒப்பிடும்போது, ஒப்பிடுபவரின் துகிலை யாரும் உரியலாம் என்பது என் நிலைப்பாடு. 🙏
  8. எனது எழுத்துக்கள் கோபத்தை ஏற்படுத்துமானால் கோபப்படுபவர்கள் மனநல மருத்துவரைத்தான் நாட வேண்டும். எனது கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால் என்னிடம் இருந்து பதில் வரும் என யாரும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். தமிழர்களின் தீர்வுக்காக நான் உழைப்பதாக தாங்கள் கற்பிதம் செய்துகொள்வதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. எந்த ஒரு இடத்திலும் தமிழருக்கு இதுதாண்டா தீர்வு என்று நான் எழுதவில்லை. மாறாக, தீர்வு முன்மொழிவுகள், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போரின் முயற்சிகளுக்கு சேற்றை வாரி இறைப்போருக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். கற்பனை உலகில் வாழும் இவர்கள் வைக்கோற் பட்டடை நாய்களைப் போன்றவர்கள். தாங்களும் ஏதும் செய்யார், மற்றவனையும் செய்ய அனுமதிக்கப்போவதில்லை. (இங்கு யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை ) வெளிநாடுகளில் உள்ளவர்கள் கற்பனை உலகில் வாழலாம், ஆனால் இலங்கையில் உள்ள மக்கள் யதார்த்த உலகில் வாழ்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர் தங்களுக்கென ஒரு தலைமையையே ஒன்றுபட்டு உருவாக்க முடியவில்லை அதற்குள் வானம் ஏறி வைகுண்டம் போகப்போகினம் என்று சொன்னால் அதக் கேனயன்களால் மட்டுமே நம்ப முடியும். இலங்கையில் அமைதி திரும்புமானால் இங்கே கொடி பிடித்து குழப்பும் முந்திரிக் கொட்டைகள்தான் முதல் ஆட்களாக ticket booking செய்வார்கள். இதுதான் அனுபவம். 😏
  9. தலைவரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? நிர்வாணமாக ஓடித்திரிந்து கோமாளிக் கூத்தாடிய செலன்ஸ்க்கியை அண்ணனுடன் ஒப்பிடும் நிலையிலா தாங்கள் இருக்கிறீர்கள்? 2024ல் செலன்ஸ்கி பணப் பெட்டிகளுடன் விமானத்தில் தப்பியோடுவார் அல்லது சொந்த ஆட்களாலேயே அவர் கொல்லப்படுவார. அப்போது அவரின்/அவர்களின் உண்மையான முகம் வெளியே தெரிய வரும்.
  10. 1) அல்வாயனின் எழுத்துக்களில் தனிநபர் தாக்குதல் மோசமாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் தாங்கள் அதனை நியாயப்படுத்துகிறீர்கள். (தனிநபர் தாக்குதலை ஊக்குவிப்பவருக்கு தங்களின் பதில் என்ன?) 2) என்னுடைய கருத்துகள் ஈழத்தில் உள்ள எமது மக்களின் இன்றைய யதார்த்த நிலையை சிந்தித்து எழுதப்படுபவை.. இது பலருக்கு கோபத்தை உண்டாக்குமானால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. அப்படிக் கோபப்படுபவர்களின் கோபம் உண்மையானதாக இருக்குமாயின் அவர்களும் அவர்களைத் தடவிக்கொடுத்து உசுப்பேற்றி வேடிக்கை பார்ப்போரும் வெளிநாடுகளிற்கு வராமல் இலங்கையில் இருந்து ஆயுதம் தூக்கியிருக்க வேண்டும். 😏
  11. இது ஆதரவு திரட்டும் நடவடிக்கை அல்ல. இருவரின் மீது அவர் கொண்ட அக்கறைக்கு ஒரு மரியாதையாக அவருக்கு உங்கள் எழுத்தில் உள்ள வழுக்களைக் காட்டினேன். இது தங்களுக்குப் புரியும் என்கிற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. 👋
  12. அவருடைய வெற்றி யின் பின்னால் உள்ள அவரது கடும் உழைப்பும் + இந்திய அரசின் அரசியல் நகர்வும் (ஈழத் தமிழரை தனது வட்டத்திற்குள் கொண்டுவரும்) இருக்கிறதாக பார்க்கிறேன். அவரது வெற்றியை நிதானமாகக் கொண்டாடலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் நடப்பவற்றைப் பார்க்கையில் வெறுப்பூட்டும் அளவிற்கு போய்விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தேரில் வைத்து இழுக்கவில்லை. அது மட்டும்தான் மிச்சமாக இருக்கிறது. அதனையும் செய்துவிட்டால் அவரைக் கடவுழுக்கு இணையாக்கிவிடுவார்கள்.
  13. கில்மிஸாவை ஒருவரும் கிண்டல் செய்யவில்லை. அவரின் கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியை எல்லோரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவருக்கு வழங்கப்படும் அளவுக்கு மீறிய தட புடல் வரவேற்பும் அலங்காரமும்தான் விமர்சிக்கப்படுகிறது.
  14. தனிப்பட்ட ரீதியில் என்னைத் தாக்காதவரை நான் ஒருவரையும் தனிநபர் தாக்குதலைச் செய்யப்போவதில்லை. மேலே ஒருவர் ஏற்கனவே சிண்டு முடியும் வேலையை செய்திருக்கிறார் கவனியுங்கள்.
  15. எனது எழுத்துக்களை கவனமாக பார்ப்பீர்களானால் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை இயன்ற அளவிலும் தவிர்க்க முனைந்தே கருத்துரைத்து வந்திருக்கிறேன்…. ஆனால் தொடர்ச்சியாக , முட்டாள்தனமாக தனிப்பட்ட ரீதியில் தாக்கப்படும்போது பொறுமை இழக்க நேரிடுகிறது. தனிநபர் தாக்குதலை தடவிக் கொடுத்து, கொம்பு சீவிவிடவும் ஒரு சில இருக்கின்றன என்பதையும் கவனியுங்கள். எதற்கும் ஒரு அளவிருக்கிறதல்லவா? புதிய நகர்வுகள் எதனையும் ஊக்குவிக்கக் கூடாது, மாறாக அவற்றை எப்பாடுபட்டாவது முடக்க வேண்டும் என்பதில் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது தெளிவாகப் பார்க்க முடிகிறது.
  16. 1) சிறீதரனின் நிலைதான் நகைப்பிற்குரியது. எல்லோருக்கும் பொதுவானவராக வந்திருக்க வேண்டிய சிறீதரன் தற்போது கிளிநொச்சிக்கு மட்டுமே உரியவராகிவிட்டார். 2) யாழ்ப்பாணத்தால் புறக்கணிக்கப்பட்ட மன்னார் மாவட்டம்தான் யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தை குழப்புவதற்கு இடமளிக்கக் கூடாது.
  17. எந்தத் தீர்வு முன்மொழிவும் மக்கள் முன் கொண்டு செல்லப்பட வேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்லை. ஆனால் மறு தரப்பைச் சந்தித்ததற்காக சேற்றை வாரியிறைக்கும் செயல் மக்கள் விரோதச் செயலே. 👇 இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம். கனடிய தமிழர் பேரவையின் முழுமையான ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------- கனடிய தமிழர் பேரவை ஊடக வெளியீடு 21/12/2023 கனடியத் தமிழர் பேரவை (CTC) இமாலயப் பிரகடனத்தைக் கையளிப்பதற்காக மகிந்த ராஜபக்சாவை சந்தித்தமையால் எமது மக்களுக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்துஆழமாக வருந்துகிறது. இந்த ஆண்டு 2023 ஏப்ரலில் உலகத் தமிழர் பேரவையின் (GTF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு பௌத்த உயர் மதபீடங்களின் மூத்த பௌத்த பிக்குகள் நேபாளத்தின் நாகர்கோட்டில் உரையாடல்களை மேற்கொண்டு இமாலயப் பிரகடனத்தை உருவாக்கினார்கள். (பிரகடனத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது). இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, இரு தரப்பினரையும் உள்ளடக்கிய தூதுக்குழு இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிஸ் மற்றும் கனடா நாட்டு இராஜதந்திரிகள் உட்பட இலங்கையின் முக்கியமான அனைத்து மதத் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், இலங்கைஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பெரும்பாலான தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள்ஜனாதிபதிகள், முன்னாள், இன்னாள் சபாநாயகர்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும்தூதுக்குழுவினர் சந்தித்து உரையாடியிருந்தார்கள். இமாலயப் பிரகடனத்தைக் கையளித்து, தேசிய உரையாடலை ஆரம்பிக்க நாடுமுழுவதும் உள்ள மக்களிடம் இந்த முன்னெடுப்பு எடுத்துச் செல்லப்படும் என்பதைத் தெரிவிப்பதே இந்தச் சந்திப்புகளின் பிரதான நோக்கமாகும்.இமாலயப் பிரகடனத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் இந்த முன்னெடுப்புக்குத் தமது முழு ஆதரவைத் தருவதாக கூறியதோடு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்கள் தலைமையில் இலங்கையில் நிரந்தர சமாதானத்துக்கான அரசியல் முன்னெடுப்புகள் நடைபெறக்கூடிய சூழலை உருவாக்க இத் தேசிய உரையாடல் உபயோகமாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார்கள். இமாலயப் பிரகடனத்தின் பன்மைத்துவ ஈடுபாட்டிற்கான ஆணையின் ஒரு பகுதியாக, தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவையும் தூதுக்குழுவினர் சந்தித்திருந்தனர். இமாலயப் பிரகடனம் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலுக்கான முக்கியத்துவத்தைப் பற்றி இலங்கையில் செல்வாக்குள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பு மற்றும் சந்திப்பின் படங்கள், புலம்பெயர் தமிழர்களிடமும், கனடியத்தமிழர்களிடமும் வேதனை தரும் வகையில் தீவிரமாக உணர்வுகளைத் தூண்டியுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கனடியத் தமிழர் பேரவை உண்மையிலேயே இது குறித்து ஆழமாக வருந்துகிறது. இவ்வாறான வேதனை உணர்வினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதைக் கனடியத் தமிழர் பேரவை தனது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இமாலயப் பிரகடனத்தின் முதன்மையான நோக்கமும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்துச் சந்திப்புகளும், ஈழத்தமிழர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிப்பதாகும். அத்துடன் தீவில் உள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்துவதாகும். நாங்கள் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. அவ்வாறான வேலைத்திட்டம் இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களைச் சார்ந்த விடயமாகும். கனடிய தமிழர் பேரவை 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பங்கேற்பது உட்பட உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காகக் கடுமையாக முன்னின்று உழைத்து வருகின்றது. இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம். தூரதிர்ஷ்டவசமாக, இமாலயப் பிரகடனத்தின் உண்மையான நன்நோக்கம் குறித்துத் தவறான விளக்கங்கள் பரப்பப்பட்டுக் கனடியத் தமிழர் பேரவை அலுவலகர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராகத் தேவையற்ற தாக்குதல்கள் நடந்துவருகின்றன. நீண்டகாலமாக கனடியதமிழர் பேரவையின் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் சமாதானத்துக்கான பணியையும் முன்னேற்றத்தையும் இழிவுபடுத்தும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலதிக தகவல்கள் மற்றும் ஊடக விவரங்களுக்கு, கீழுள்ள மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்: info@canadiantamilcongress.ca உபயம்: நுணாவிலான்
  18. உக்ரேனின் அழிவையும் NATO வின் தோல்வியையும் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுப்பது ஆச்சரியமாக உள்ளது.
  19. 1) இது NATO வின் Proxy War என்று உலகமே ஒத்துக்கொண்டுவிட்டது. 2) கண்ணாடிக்கு முன்பு நின்றுகொண்டு ஏசக்கூடாது.
  20. அல்வாயன், உங்கள் விருப்பம்போல என்னை அரசின் ஏவலாளாகவே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும் ஒன்று நந்தி போல குறுக்கே நிற்கிறீர்கள் அல்லது வைக்கோல் பட்டடை ......போல தாங்களும் ஒன்றும் செய்வதில்லை ஏதாவது செய்ய விரும்பும் மற்றவர்களைய் விடுவதில்லை. அது ஏன்? 1) Anton Balasingam அவர்களுக்கு ஈடாக என்னை ஒப்பிடுவது கொஞ்சம் ஓவர் பில்டப். உது உங்கள் குருஜீக்கு கோபத்தை உண்டாக்கும் செயல். 🤣 2) விபு க்களுக்காகச் சேர்த்த காசு தன்னிடம் இருப்பதை எப்படி இலகுவாக ஒத்துக்கொள்கிறார் பாருங்கள்,....🤣 😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.