Everything posted by Kapithan
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அல்வாயன் யாரையும் முன்மொழியவில்ல. எங்களுக்கு என்ன தேவை என்பதையும் கூறவில்லை. தாங்கள் ஏன் சுரேன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாது என்பதையும், வேறு யாரை முன்மொழிவீர்கள் என்பதையும் கூறுங்கள்?
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு - பதில்கள் தங்களிடமிருந்து வருகிறது.
-
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் - பேராயர்
நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் என்பது எனது கரிசனைக்குட்பட்டது அல்ல.

போப்பாண்டவரின் எதைப் பின்பற்றுகிறீர்கள்? அவர் அணிந்திருக்கும் ஆடையையா? சும்மா போங்கள்,அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல். 😁
-
இயேசுவைப் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்ன? இரு சித்தரிப்புகளில் எது உண்மை?
குருடன் யானை பார்த்த கதை. 😉
-
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் - பேராயர்
சாத்தான் வேதம் ஓதுதல் என்பது இதுதானோ? (காடினல் மல்கம் ரஞ்சித் ) 🤣
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அல்வாயன், இலங்கை இனப்பிரச்சனையில் தமிழருக்கு ஆகக் குறைந்த அளவில்தானும் ஏதாவது நன்மை நடக்க வேண்டும் எனும் நோக்கோடு முன்னிற்பவர்களை தூற்றுவது மட்டுமே தாங்கள் இதுவரை செய்கிறீர்கள். அது ஏன் ?
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அதுக்கு(என் கேள்விக்கு)( இது பதில் இல்லையே?
-
மட்டக்களப்பில் நத்தாரன்று பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்க பணமில்லாததால் வாவியில் குதித்த தந்தை
"இந்த நபரை பொலிஸார் கைது செய்து தற்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்." கோவணமும் போச்சா?
-
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் - பேராயர்
இராசபக்ச ஆட்சியை வரவேற்கிறாறோ?
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உணர்வுகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது, கூடாது. அதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்கும் என நான் நம்பவில்லை. ஆனால் தான்தோன்றித்தனமாக எதிரியுடன் சல்லாபிப்பவர்கள் என தாங்கள் கூறுவது அண்மையில் இலங்கை அரசைச் சந்தித்த இமயமலைக் குழுவினரை என்பது புரிகிறது. அவர்கள் அரசிடம் பேசிய விடயங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால், தாங்கள் முன்வைக்கும் ஆகக் குறைந்தபட்ச முன்மொழிவு என்ன? அல்லது தாங்கள் இமயமலைக் குழுவினர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ?
-
மனைவி மீது கொண்ட ஆத்திரத்தில் வீட்டைக் கொளுத்திய கணவன்!
இதைத்தான் ""மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்துதல்" என்பது . சில வீடுகளில் மூட்டைப் பூச்சி வீட்டை விடவும் பெரிதாக இருந்தால் அதற்கு யாம் பொறுப்பல்ல. ( இந்தத் திரியை வாசித்துவிட்டு அமைதியாகக் கடந்து செல்லும் ஆண்கள் அனைவரும் நெருப்புப் பந்தத்துடன் அலைகிறார்கள் என்று பொருள் படும் ) 🤣
-
மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்ஷே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சியா? இலங்கையில் என்ன நடக்கிறது?
கோழி பட்சி வகைக்குள் அடங்குமா? 🤣
-
மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்ஷே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சியா? இலங்கையில் என்ன நடக்கிறது?
அடுத்த சனாதிபதி பசில் இராசபக்ச எண்டு பட்சி சொல்லுது...... 😉
-
துறவியாகும் டயானா கமகே?
வணக்கம் புத்தா, கண்டு கனநாள் என்று நினைக்கிறேன்.
-
துறவியாகும் டயானா கமகே?
“இலங்கை- இந்திய நட்புறவை மேம்படுத்தும் வகையில் .” நாம் சீனாவிடம் நட்பு பாராட்டினால் தமிழரையும் வைத்துப் படமெடுப்பார்கள்.
-
செக் குடியரசின் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் : 10 பேர் பலி
😁
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
200% ✅
-
இந்தியாவின் மாநிலமாகிறதா வடக்கு கிழக்கு?
இதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை. எப்போது நாம் சுயமாகச் சிந்திக்கத் தொடங்குகின்றோமோ அன்றுதான் எமக்கு விடிவு. இந்திய மனநிலையில் இருந்தால் வடக்கு கிழக்கு கூவமாக நாறும்.
-
ஜனாதிபதியை சந்திக்க வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு : சந்திக்கமாட்டேன் என்கிறார் சி.வி.
எசமான் கூப்பிட்டா வீறாப்புக் காட்ட முடியுமா? விழுந்தடித்து ஓடத்தான் வேண்டும்,. ....🤣 (குழப்புவதில் கஜேந்திரகுமாரின் இடத்தை நிரப்புவார் என்று நினைக்கிறேன் )
-
செக் குடியரசின் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் : 10 பேர் பலி
விதைத்ததை அறுக்கின்றார்கள். அம்புட்டுதே.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
என்னை வசிஸ்ரர் என்று தாங்களே கூறி வாழ்த்தியும் விட்டீர்கள். 1) ன்ஆதரிப்பதாக எங்குமே குறிப்பிடவில்லை. 2) அவசரம் வேண்டாம் என்பது என் கருத்து 3) என்னுடைய எசமான் யார் என்பதைக் கூறலாமே 4) என்ன விளங்கும்? நன்றி. 🤣
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
ரஸ்ய கணக்காளர்/வருமான வரி நிபுணர். ரஸ்ய அரசின் நிர்வாகத்திற்குள்ளிருக்கும் நிதி மோசடிகளை வெளிப்படுத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டவராக மேற்கால் கொண்டாடப்படுபவர். ஆனால், ரஸ்யாவோ இவர் மிகப்பெரிய நிதி மோசடியை செய்த கூட்டத்தில் ஒருவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும்போது இறந்ததாக அறிவிக்கப்பட்டவர். மேற்கிற்கு இவர் பெயர் ஒரு துருப்புச் சீட்டு. இவர் பெயரில் ஒரு சட்டத்தை US & UK கொண்டுவந்து தமக்குப் பிடித்தமில்லாத செல்வந்தர்களை குறிவைக்கிறது. ரஸ்யாவுக்கோ இவர் ஒரு மோசடிப் பேர்வழி. அம்புட்டுதே.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
உங்கள் கருத்துதுடன் 100% உடன்படுகிறேன். . எல்லோரையும் நாங்கள் தூற்றிக்கொண்டிருந்தால் நல்லது செய்ய ஒருவரும் முன்வரப்போவதில்லை. பயத்திலேயே ஒதுங்கிப் போய்விடுவார்கள். எங்கள் ஆயுதப் போராட்டாத்தின் மிகவும் பலவீனமான பக்கங்களில் இதுவும் ஒன்று. கல்விமான்கள், மாற்றுக் கருத்தாளர்களை ஒதுக்கி வைத்தது எம்மை அணுக விடாமல் செய்தது எமக்கு எதிராகவே முடிந்தது வரலாறு.