Everything posted by Kapithan
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
குறிப்பு; கரையூர் என்பதும் குருநகர் என்பதும் ஒரே ஊரையே குறிக்கும். அமலோற்பவம் என்பது கத்தோலிக்க ஆலயம் அல்ல. அது கத்தோலிக்க மதகுருக்கள், குறிப்பாக, வயது முதிர்ந்த-ஓய்வுபெற்ற கத்தோலிக்க குருக்கள் தங்கியிருக்கும் இடம். அதன் அமைவிடம், சுவாமியார் வீதி, கொழும்புத்துறை. தற்போது இவ்விடம் வளன்புரம் என அழைக்கப்படுகிறது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சொல்புத்தியும் அற்று, சுயபுத்தியுமற்று, இன்னொருவர் சொல்வதை அப்படியே உண்மையோ பொய்யோ, என்று ஆராயாமல் தனது சுய திருப்திக்காக, நலனுக்காக செய்வதைததான் காட்டிக்கொடுப்பு என்பது. இந்திய இராணுவத்தினருடன் இருந்தவர்கள்(😉) செய்தது இதைத்தான். காசுக்காக, பதவிக்காக, பாலியல் தேவைக்காக என பல தேவைகளுக்காக காட்டிக் கொடுத்தார்கள். அதுசரி, திண்ணையில் ஒருவர் காழ்ப்புணர்வால் வாந்தி எடுத்ததை எத்தனை நாள் காவித்திரிவதாக உத்தேசம்? 😉
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனது இயற் பெயரை அடையாளம் கண்டு பொதுவெளியில் கொண்டுவர வேண்டும் என்று ஏன் இவ்வளவு முக்குகிறீர்கள்? யாருக்கு என்னை அடையாளம் காட்ட? ஏன் அடையாளம் காட்ட வேண்டும் ? ஏதாவது காரணம் வேண்டுமல்லவா? 😀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரகு ஐயா, எனது பெயரைத் தேடுவார், ஊரை நோண்டுவார், சாதியை சீண்டுவார்..... எனக்கு எதற்குத் தேவையில்லாத பொல்லாப்பு 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன சொல்ல வருகிறார்கள் என்று உங்கள் மூளை கிரகித்தால் போதும். 🤣
-
PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
அரஜியலில் நிரந்தர நம்பனும் இல்லீங்கோ, நிரந்தர ப்பகைவனும் இல்லீங்கோ.
-
PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
நன்றி இரா வன்னியன், மிகவும் நேர்த்தியான பேட்டி. 🙏 PTR ஐ வளர விடாமல் பிரச்சனை எதிலும் மாட்டி, நாட்டைவிட்டு வெளியே அனுப்பி வைப்பார்களோ என்கிற நியாயமான பயம் எனக்குண்டு. அவரை வெளியேற்றுவது கரு நா குடும்பத்திற்கும் BJP க்கும் உவப்பானதாய் இருக்கும். ஒரே கல்லில் இரு மாங்காய்கள்.
-
பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
நீங்கள் உணவில் வல்லாரைக்.கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வீர்களோ? 🤣
-
குர்பாணி கொடுக்க முயன்று பிரியாணியானார்..!
தலையங்கம் அருமை 🤣
-
தாலி..வேலியா..? பாரமா..??
வெளிநாடுகளில் தாலி வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருப்பதால், தாலி ஒரு பாரம்தான். (BBC Tamil வலைப்பக்கம் மிக மிகச் சாதாரண தென்னிந்திய gossip வலைப்பக்கங்களின் நிலையை விடக் கீழிறங்கிVட்டது. )
-
'புள்ளீங்கோ' நிலைமை..?
இதை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். ✅
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
கட்டுரை ஆசிரியர் கவனத்திற்கு; உக்ரேன் என்கிற நாடே இல்லாமல் போகப்போவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன 😉
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
திரும்பவும் முட்ஞலில் இருந்தா ? உக்ரேனில் சண்டை முடிந்தாலும் இராணுவ மனிதாபிமான ஆய்வாளர்களின் ஆய்வுகள் முடியாது போலகிடக்கு ? 🤣
-
புட்டினும் புதுமாத்தளனும்
ரஸ்யாவை ஆதரிக்கும்படி யார் கேட்டார்கள் ? உண்மையான தகவல்களை / நம்பத்தகுந்த தகவல்களை, பக்கச் சார்பின்றி கூறும்படி கேட்பது ஒருபக்கத்திற்கு எதிரானதாகவோ அல்லது மறுபக்கத்திற்கு சார்பானதாகவோ கொள்ளவேண்டிய அவசியமில்லை.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம். ""சிலரின் சில்லறைத்தனங்களைப் பார்க்கும்போது சிரிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யத் தோன்றுவதில்லை."" கேள்வியின் அர்த்தத்தைக்கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு கோபம் கண்ணை மறைக்கக்கூடாது ரஞ்ஜித் ? நேர்மையுடன் கருத்தாடப் பழகுங்கள். உங்களிடம் கேட்ட கேள்வி ""இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன"" இதற்கும் நீங்கள் எழுதும் முள்ளிவாய்க்கல் ஒப்பீட்டிற்கும் என்ன சம்பந்தம்? இதற்குப் பதில் இருக்கிறதா உங்களிடம் ? முழு உலகமே கைவிட்ட முள்ளிவாய்க்காலும், முழு உலகுமே ஒன்று சேர்ந்து சண்டையிடும் மரியுபொலும் ஒன்றா ? இந்த இலட்சணத்தில்தான் உமது புரிதல் இருக்குமென்றால், நீங்கள் எழுதும் துரோகத்தின் நாட்காட்டியின் நிலையை நினைக்கத்தான் சிரிப்பு வருகிறது. ஏனென்றால் துரோகத்தின் நாட்காட்டியை சரி பிழை பார்க்கவோ அல்லது ஒப்பிட்டு நோக்கவோ அல்லது எதிர்த்து வாதாடவோ யாழ் களத்தில் ஒருவரும் இல்லையே. ஒருவரது எழுத்தின் நம்பகத்தன்மை அவரது எழுத்தில் உள்ள உண்மையின் அளவில் தங்கியிருக்கிறது. அதற்கு பக்கச்சார்பான கட்டுரைகள் பலம் சேர்க்காது. புரிந்துகொள்ளுங்கள்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இந்தக் கட்டுரை/மொழிபெயர்ப்பை வெளியிடும் ரஞ்சித் அவர்கள், இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைக் கூறுவீர்களா?
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
தரையிறங்குவார்கள் அது வடக்கு கிழக்கில். தென்பகுதியில் அல்ல.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
"மேலே ரஞ்சித் எழுதின கொலைகள் நடக்கவில்லை என்கிறீர்களா? இவ்வளவு எங்களுக்கு நடந்தும், படை எடுக்கும் ஒரு ராணுவம், அது எந்த ராணுவமா இருக்கட்டும், என்ன செய்யும் என்று எங்களுக்கே புரியாவிட்டால் வேறுயாருக்கு புரிய வைக்கலாம்?" கொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் அந்தக் கொலைகள் நடைபெற்றுள்ளனவா, நடைபெற்றிருந்தால் அது யார் செய்தது என்பது முக்கியமானது. அதனை பக்கச்சார்பான ஊடகங்களின் கட்டுரைகளை வைத்து நம்ப முடியாது. "இலங்கை ராணுவம் போகும்பொழுது, அதன் பரப்புரைகள் சர்வதேசத்தில் எப்படி வேலை செய்ததென்று எமக்கு நன்றாகவே தெரியும், அது ஒரு மீட்பு போராக வெளியில் நம்பவைக்கப்பட்டது, எவ்வளவு கொலைகள் நடந்தேதென்று உள்ளே இருந்த நம்மவர்களுத்தான் தெரியும்." நீங்கள் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். பக்கச்சார்பான ஊடகங்கள் உண்மையை கூறும் என்று எப்படி எதிர்பார்க்கலாம் ? ரஞ்சித் குறிப்பிட்ட ஊடகங்களின் கட்டுரைகளை அப்படியே google translation செய்து தானும் கொஞ்சம் கூடுதலாக ரஸ்யாவுக்கு சேறடிக்கிறார். சேறடிப்பதல்ல பிரச்சனை, அவரின் இந்த கட்டுரையின் ஊடாக எமக்கு என்ன கூற வருகிறார் ? கட்டுரை எப்போதும் உண்மையை/ கூறவேண்டும். இவரது பக்கச்சார்பான எழுத்துக்கள் இவரது துரோகத்தின் நாட்காட்டி மீதான நம்பகத்தன்மையை அடியோடு இல்லாமல் செய்கிறதே. இது அவருக்குப் புரியவில்லையா ? விடுதலைப்புலிகளையும் Tamil Net ஐயும் நாங்கள் இன்றளவும் நம்புவதற்குக் காரணம் அவர்களது தகவல்களில் இருந்த உண்மையே. போராட்ட காலத்தில், கொழும்பில் இருந்த மேற்கு நாட்டின் தூதர்களுக்கு தினமும் காலையில் Tamilnet ன் செய்திகளை print எடுத்துக் கொடுப்பது நடைமுறையாயிருந்ததாக அறிந்திருக்கிறேன். அந்த அளவு Tamil-net ல் நம்பிக்கையிருந்தது. அந்த நம்பிக்கையை மேற்கொண்டு தொடர முடியாதபோது tamilnet செயற்படுவதை நிறுத்திவிட்டது. "புடின் போன்ற தனி மனித ஆளுமையில் இருக்கும் ராணுவம், மனிதாபினாமமாக நடக்கிறது என்று நீங்கள் நம்புவதே ஆச்சரியமாக இருக்கிறது." இரணுவம் என்பதே கொல்வதற்கும் வெல்வதற்கும் தயார்படுத்தப்பட்ட இயந்திரம்தான். இதில் மனிதாபிமானம் எங்கே வருகிறது. "அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார நாடா மாற்றி, தமது சொத்துக்களைபெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?" புடின் மீதான தங்களின் குற்றச்சாட்டிற்கு என்ன அடிப்படை ? யூகம்தானே ? அந்த யூகம் எப்படி ஏற்பட்டது ? ஆனால் ராசபக்ச குடும்பத்தின் ஊழலுக்கு நாம் எல்லோரும் சாட்சிகள். முடிந்தால் இதற்குப் பதில் கூறுங்கள். ரஸ்ய ஊடகங்க்ளை ஏன் தடை செய்தார்கள்? ரஸ்யாவின் கருத்துக்களை நாம் அறியக்கூடாது என்பதற்காகத்தானே ? நாம் அறிந்துகொள்வதால் இவர்களுக்கு என்ன பிரச்சனை?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித் எழுதுவது உண்மையோ பொய்யோ, ஒரு பக்கச்சார்பான செய்திகளை அடிப்படையாக வைத்து விளையாடுகிறார. அவரின் நோக்கம் என்ன என்பதுதான் கேள்வி?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சொன்ன Weapons of Mass Distraction கதைகள் நினைவிற்கு வருகிறது. தற்போது மேற்குலகினரே தங்கள் அரசுகளையும், தங்கள் தகவல்தொடர்புச் சாதனங்களையும் ந்ம்பாதபோது, மேற்கின் லங்காபுவத் கயிறுகளை விழுங்க தற்போதும் எங்களில் ஆட்களிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. Empire of Lies என்று ரஸ்ய அதிபர் சொன்னது சரியான அளவீடுதான்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மேற்குலக ஊடகங்களில் அனேகமானவை அரை லங்காபுவத் தான். தங்கள் நலனுக்கு உகந்த செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன அல்லது திரித்துக் கூறுகின்றன. தமிழ்நெற்றையும் லங்காபுவத் தையும் ஒருங்கே வாசித்தபடியால்தான் எனக்கு லங்காபுவத்தின் உண்மைத்தன்மையின் அளவு புலப்பட்டது. மேற்குலகு ரஸ்ய ஊடகங்களைத் தடை செய்ததன் காரணம் தங்களால் வெளியிடப்படும் செய்திகளின் உண்மைத் தண்மையை ஒப்பிட்டு நோக்கக்கூடாது என்பதற்காகவே. ரஸ்ய ஊடகங்களைத் தடைசெய்த மேற்கு ஏன் இரஸ்ய எரிபொருள், எரிவாயு என்பவற்றைத் தடை செய்யவில்லை ? மேற்கின் சனநாயகம், பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை என்பவற்றின் சீழ்பிடித்த பக்கங்கள் இதுதான். இதைச் சொன்னா என்னைப் பைத்தியக்காறன் எங்குறாவுக.. 😉
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அட மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள். புரிந்துகொண்டேன்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அந்த செய்தி ஆய்வு எதுவென்று கூற முடியுமா, தயைகூர்ந்து 🙏
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
இன்னுமா மேற்கை நம்புகிறீர்கள்? நாங்கள் எப்படி வாய்கிழியக் கத்தினாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையென்றால் எங்களைப் பாவிப்பார்கள், தேவை இல்லையென்றால் தூக்கி எறிவார்கள். தேவைக்கு ஆட்கள் இல்லையென்றல் உருவாக்கிக்கொள்வார்கள். தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவார்கள். இப்போது உக்ரேனுக்கு என்ன நடந்ததோ/ நடக்கிறதோ அதைத்தான் இந்தியா எமக்குச் செய்தது. மேற்கும் செய்கிறது. சிங்களம்சீனாவிடம் போகாமல் மேற்கிடம் அல்லது இந்தியாவிடம் சரணடைந்தால் எங்கள் நிலை என்னாகும் ?