Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9094
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by Kapithan

  1. “”மேலும், இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை அண்டை நாடுகளிடம் இருந்து வாங்கி வரும் பணியில் அவரை உக்ரைன் அமர்த்தியுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து உக்ரைன் நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை வாங்கி கொடுத்து வருகின்றார். அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டுதான் ஆயுதங்களை எடுத்து வருகிறேன்”” 👆உத 😀
  2. இலங்கையில் எப்படி மக்களைத் திரட்டினார்களோ அப்படியே பிரேசிலிலும் திரட்டினார்கள்.
  3. தமிழர்களுக்கு ஆப்பு ரெடி. தேவையான நேரத்தில் காலை வாருவதுதான் தமிழ் அரசியலாளர்களின் வழமை. ராசபக்ச சகோதரர்களுக்கு கனடாவால் விதிக்கப்பட்ட பயணத்தடை என்பது தமிழ்த் தரப்பிற்கான எச்சரிக்கை. இந்தியாவின் சேலைத் தலைப்பில் தொங்கிக்கொண்டிருக்கும்வரை எமக்கு எந்த விடிவும் இல்லை.
  4. இலங்கை அரசியல்வாதிகளின் கறுப்புப்பணத்தில் அரப்பங்கிற்கும் மேல் கனடாவில்தான் உள்ளது. இதில் முஸ்லிம் +சில தமிழ் அரசியல் ஆயுததாரிகளின் பணமும் உள்ளடக்கம்.
  5. தமிழ்க் கட்சிகளுக்கும் ஏதாவது ஒரு தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு கடுமையான அழுத்தங்கள் வரலாம்.
  6. மானே மானே மானே, உன்னைத்தானே என்று மாறி மாறிப் பாட வேண்டியதுதான. 😉
  7. இந்திய இராணுவக் காலகட்ட ஆயுதங்களாக இருக்குமோ ? 🤣
  8. தாங்கள் கலந்துகொண்டால் மட்டும் மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டுவிடுமா? 😏
  9. இந்தக் கட்டுரையில் ஆய்வாளர் பிரச்சனைக்கன தீர்வாக எதனை முன்வைக்கிறார் என்பது முக்கியம். சந்தேகத்தை மட்டும் விதைத்தால் போதுமா ? சிங்களம் தொடர்பாக எங்களில் எவருக்குமே நம்பிக்கை இல்லை என்பது உண்மைதான். அதற்காக இறந்த காலத்தை வைத்து எதிர்காலத்தை முற்றுமுழுதாக எடைபோடுதல் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது(தற்போதைய சூழலில் ) என்பது எனது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக, தற்போதைய ஈழத்துச் சூழலில் மக்களிடையே நம்பிக்கையை விதைக்காவிட்டாலும் அவநம்பிக்கையை ஆய்வாளர்கள் விதைப்பது தமிழ் மக்களிடையே பிரச்சனையை மேலும் தீவிரமாக்குவதிலேயே முடியும். இந்த அணுகுமுறை தற்போதை, சூழலில் ஈழத்தில் வாழும் தமிழருக்கு ஒருபோதும் சாதகமாக அமையாது. ரணில் நரியாயிருப்பதுக் பரியாயிருப்பதும் அவர்களின் உரிமை. இவ்வாறு இருந்தபடியால்தான் சிங்களம் 2500 வருடங்களாக இலங்கையில் தனது தனித்துவத்தைப் பாதுகாக்க முடிந்தது. நாங்கள் ஏமாந்த சோணகிரிகளாக இருப்பது எமது தவறுதானே தவிர சிங்களத்தின் தவறு அல்ல. எமது அணுகுமுறையை நாம்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  10. அந்த மனுசன் நடக்கவே ஏலாமல் கிடக்க, இதில நீங்க வே..🤣
  11. தீவிர Sun வாசகர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரப்போகிறது 🤣
  12. Canada விலும் காச்சலும் தொற்றும் அதிகரித்துச் செல்கிறது. ஆனால் அந்தக் காச்சலுக்கு கொரொனா என்று பெயரைச்வ்சொல்ல மாட்டார்கள். சீனாவில் வருவது மட்டுமே கொரொனா 😀
  13. நான் ஏற்கனவே வாசிக்காமலேயே கருத்துக்கூறுவார்கள் எனக் கூறியபடிதான் தற்போது நடைபெறுகிறது. கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை வாசிக்காமல் தலைப்பை வைத்து football விலையாடுவதில் நாங்கள் வல்லவரெல்லோ 🤣
  14. இந்தியாவின் பாவாடைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு தொங்கும்வரை ஒன்றுமே நடவாது. ☹️
  15. இர்ராசதந்திரமாய் இருக்குமோ 🤣 நீட்டப்படும் கையைப் பிடிப்பதுதான் இராசதந்திரம். தேவையென்றால், இறுக்கிப்பிடிக்கலாம், முறுக்கலாம், இழுதது விழுத்தலாம், தேவையில்லையென்றால் பிடித்த கையையும் விட்டுவிடலாம். எங்கள் அரசியல்வாதிகளோ இந்தியாவைத் திருப்திப்படுத்த, இந்தியாவோ சிங்களத்தைத் திருப்திப்படுத்த, சிங்களமோ எங்கள் இருவரினது தலையிலும் மிளகாய் அரைக்கிறது. ☹️
  16. இந்தக் கட்டுரைத் தலைப்பைப் பார்த்தவுடன், இந்தக் கட்டுரையை வாசிக்காமலேயே பலர் நுணாவிலான் மீது பாய்ந்து கடித்துக் குதறப் போகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. தற்போதைய உலக அரசியல் பொருளாதார நிலவரத்தை புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் எனும் நோக்கத்தில் இந்தக் கட்டுரையை நுணாவிலான் இணைத்ததாக நம்புகிறேன். பலருக்கு சோசலிசம் எனும் சொல்லும் பிடிக்காது, அதனால் இந்தக் கட்டுரையை வாசிக்கவும் பிடிக்காது. 🤣
  17. விபச்சாரத்தையும் சட்டபூர்வமாக்கினால் இதைவிட அதிகம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியுமே 😏 🤣
  18. 🤣 அமெரிக்காவும் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து உடைத்து தன்னை தனி நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டதுதான். மக்கள் குழுக்கள், இனங்களுக்கிடையில் அதிகரித்துச் செல்லும் வேறுபாடும், சமமின்மையும், தங்கள் தனித்விதுவத்தைப் பேணும் அவாவும் பிரிவினையைஊக்குவித்துக்கொண்டே செல்லும். இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே பொதுவானது. எல்லாமே மாற்றத்திற்கு உட்படும் என்பதுதான் நியதி. அமெரிக்காவின் உடைவு என்பது நம் கண்களின்வ்முன்னால் நடக்காமல் இருக்கலாம். ஆனால் அசாத்தியமானது அல்ல. ரோம சாம்ராஜ்ஜியமும் உடைந்துதான் போனது. கிரேக்க சாம்ராஜியமும் காணாமல் போனதும் வரலாறு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.