Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9094
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by Kapithan

  1. இந்தியர் மட்டும்தானா ? கறுப்பர்களுக்கு அங்கே என்ன நடக்கிறதாம் ? இன்று இரண்டு வீடியோக்கள் பார்த்தேன், மனம் கல்லாகிப்போனது. அவற்றை இங்கே இணைத்தால் யாழில் என்னைத் தடை செய்வார்கள். 😔
  2. 😀 நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தை இங்கே எழுதுகிறீர்கள் என்பது என்க்கு மட்டுமல்ல, வாசிப்பவர்கள் எல்லோருக்குமே புரியும். ஆனால் அந்த சொந்தக் கருத்தை எங்கிருந்து பெற்றீர்கள், ஏன் பக்கச் சார்பாக இருக்கிறது, தவறான தகவல்களை எங்கிருந்து பெற்றிருக்கிறீர்கள் என்பது யூகிப்பது கடினமேயல்ல. Mகவும் முக்கியமாக கிழக்கு உக்ரேனில் இடம்பெறும் அநீதி தொடர்பாக ஒன்றுமே பேசாதிருப்பதும், இனச் சிறுபான்மையினருக்கு நடைபெறும் அநீதி தொடர்பாகவும், நாசித் தத்துவத்தை வரிந்து கட்டிக்கொண்டுள்ள Azov Battalion தொடர்பாக நீங்கள் வாயே திறக்காது மெளனம் காப்பதும் ஏன் என்று புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒன்று அல்ல. நீங்கள் உளச்சுத்தியுடன்தான் இதனை பக்கச்சார்பின்றி எழுத முனைகிறீர்களென்று எடுத்துக்கொண்டால், உங்களுக்கு இரு பக்கங்களிலும் இருந்து உண்மையான தகவல்கள் அல்லது செய்திகளை தாங்கிவரும் ஊடகங்களைதெரியாது என்று பொருள்படும். முக்கியமாக, உங்கள் எழுத்தில் உள்ள தவறு/பிழையான தகவல்களை மறுக்க அல்லது பிழைதிருத்த முற்படுகிறேனே தவிர உங்களுக்கு எழுதுவதற்கு உள்ள உரிமையில் தலையிடவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலை இதற்குள் செருகினீர்கள் பாருங்கள், அங்கேதான் உங்கள் நோக்கம் கேள்விக்கு உள்ளாகிறது. முள்ளிவாய்க்காலை இந்த யுத்தத்துடன் இணைத்து எழுதியது த்வறென்று உணர்ந்தீர்களென்றால் தலைப்பை மாற்றிவிடுங்கள். புண்ணியமாகப் போகும். சனநாயகம், பன்முகத்தன்மை, கருத்துச் சுதந்திரம் போன்ற கருத்துருவாக்கங்கள் தேவைக்குத் த்குந்தாற்போல மாறுபடும் என்பது இவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஆனால் இந்தக் கேள்வியை இலகுவாகவே கடந்து செல்வர். 😌
  3. ரஞ்சித்தின் கட்டுரை, ரஸ்யாவையும் புட்டினையும் தூற்றுவதற்காக எழுதப்படுகின்றது என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி. ஆனால் tamilwin ஐயும் lankasri ஐயும் நம்பி கட்டுரை எழுதினால் இப்படுத்தான் இறுதியில் முடியும். ☹️
  4. வெள்ளைக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க ந்ன்றி 👍
  5. ""மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோகஅடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்."" இதை சீரணிக்கிறது கஸ்ரம்தான்.
  6. ரஞ்சித் இதுவரை உக்ரேன் பொது மக்களின் துன்பங்களைக் க்ண்டு அதன் காரணமாகத்தான் ரஸ்யா MIது கோபம் கொள்கிறீர்கள் என்றிருந்தேன்.வ் ஆனால் இப்போதுதான் புரிகிறது உங்கள் நோக்கம் அது அல்ல என்று. ☹️
  7. “You are either with us or against us”நினைவிற்கு வந்து தொலைக்கிறது. நீங்கள் புடினுக்கும் இரஸ்யாவுக்கும் ஏன் எதிராக இருக்கிறீர்கள் ? நீங்கள் மேற்குலகுக்கு ஏன் ஆதரவாக இருக்கிறீர்கள் ? விளக்கமாகக் கூற முடியுமா ?
  8. இப்படியொரு பக்கம் இருப்பது பலருக்குத் தெரியவே வாய்ப்பில்லை. ஏனென்றால் நாங்கள் எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே செய்திகளையும் வாசிப்போம்.
  9. எல்லோரும் சேர்ந்துதான் எங்களை வேரோடு அறுத்தவர்கள். இதில் விசுவாசமாக இருக்க எந்தக் காரணமும் இல்லை.
  10. என்னால் கொடுக்கப்பட்டுள்ள தகவல் UNHCR ன் March 23ம் திகதி அறிக்கை. இதில் எனது விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. அழிவுகளை யாருமே நியாயப்படுத்த முடியாது. அதற்காக 150,000 ஆயிரம்பேர் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலை மொத்தமாக ஆயிரத்திற்கும் குறைவான மககள் கொல்லப்பட்டுள்ள யுக்க்ரேனுடன் ஒப்பிடுவது எமது அழிவை/இனப்படுகொலையை சிறுமைப்படுத்தும் செயல் என்பது எனது நிலைப்பாடு.
  11. வணக்கம் கோசான் நீண்டகாலத்தின் பின்னர். 🙏
  12. உங்கள் கருத்தை தயவுசெய்து திரும்பவும் நிதானமாக வாசியுங்கள். அவர் பொதுமக்களின் இழப்பையிட்டு சற்று உணர்ச்சிவசப்படுகிறார். அவ்வளவே. சற்று நிதனமாக யோசிப்பாராகில் அவரது கருத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.
  13. ஒரு மாதமாக நடைபெற்றுவரும் ரஸ்ய உக்ரேனியப் போரில் இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டவில்லை . இதனை ஐநா உறுதிப்படுத்தியுள்ளது. Ukraine: civilian casualty update 23 March 2022 By UNHCR Date: 23 March 2022 From 4 a.m. on 24 February 2022, when the Russian Federation’s armed attack against Ukraine started, to 24:00 midnight on 22 March 2022 (local time), the Office of the UN High Commissioner for Human Rights (OHCHR) recorded 2,571 civilian casualties in the country: 977 killed and 1,594 injured. This included: a total of 977 killed (196 men, 144 women, 12 girls, and 27 boys, as well as 42 children and 556 adults whose sex is yet unknown) a total of 1,594 injured (174 men, 136 women, 24 girls, and 20 boys, as well as 64 children and 1,176 adults whose sex is yet unknown) In Donetsk and Luhansk regions: 1,102 casualties (279 killed and 823 injured) On Government-controlled territory: 845 casualties (224 killed and 621 injured) On territory controlled by the self-proclaimed ‘republics’: 257 casualties (55 killed and 202 injured) ( யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த எண்ணிக்கை மாறலாம்,) இந்த் நிலையில் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட த்மிழர்கள்கொல்லப்பட்ட இன அழிப்பையும் மரியுபோல் சண்டையையும் ஒப்பிடுவது அபத்தமானதும் ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயலாகும். கட்டுரையாளர் யுத்தத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களையிட்டு வெளிப்படுத்தும் கரிசனையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஆனால் அது தவறான புரிதலுக்கு வழிவகுக்கக் கூடாது. இல்லாதுபோனால் கட்டுரையின் நோக்கம் திசைதிரும்பும் அபாயம் இருக்கிறது
  14. இதனைப் பார்த்தவுடன் Colombo Port City தான் நினைவுக்கு வருகின்றது.
  15. எனக்க்கும் எனது குடும்பத்தாருக்கும் கோவிற்-19 Varient 2(?) வந்தது. பிள்ளைகள் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை. நானும் மனைவியும் பாதிக்கப்பட்டோம். மனைவி பிள்ளைகளைப்பார்க்க வேண்டும் என சொல்லிக் கொண்டு முதலில் எழும்பிவிட்டா (தாய்🙏). நான் மோசமாகப் பாதிக்கப்பட்டேன். பாதிப்பின் அளவு கோவிற்றிலிருந்து மீண்டபின்னர்தான் புரிந்தது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இப்போது நான்காம் அலை தொடர்பாக கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். (கோவிற் பரப்பப்பட்டதின் நோக்கத்தை இன்னமும் அடையவில்லை போல தோன்றுகிறது ?🙄) இந்த நோய் எதிரிக்குக் கூட வரக் கூடாது.
  16. யாழ்களத்திலுள்ள உறுப்பினர்கள் மீதான தனி மனித தாக்குதல்களை மட்டும்தான் தவிர்க்க வேண்டுமா அல்லது எல்லோர் மீதான தனிமனித தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டுமா..? எல்லோர் மீதான தனிமனித தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் / தவிர்க்கப்பட்டால் கருத்துப் பரிமாற்றங்கள் ஆரோக்கியமாக அமையும். உ+ம் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை விமர்சிக்காது சீமானை விமர்சித்தல். விடுதலைப் போராட்டத்தில் விடப்பட்ட தவறுகளை ஆய்வுக்குட்படுத்தும் போது போராளிகளை(சகல) தியாகங்களை கொச்சைப்படுத்துதல். தனிப்பட்ட குரோதங்களை வெளிப்படுத்தும்போது எதிர்க்கருத்துக்கள் தவிர்க்க முடியாதவை. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. 👍 ஒருவிதத்தில் இதுவும் உண்மைதான் 😂
  17. ஏனுங்கோ.. ஏனுங்கோ வேலைக்குப் போறனீங்களே.. இல்லச் சும்மா கேட்டனான். ஏனெண்டா உங்கட எழுத்தில இயலாமை தெரியுதுங்கோ... அதுதான்....சும்மாமாமா..
  18. பிறர் கவலையில் உள்ளனரோ இல்லையோ, இதனை எழுதும் நீங்கள் மகிழ்வாக உள்ளீர்கள் என்பது நிச்சயம். 😀
  19. மாற்றிப் போடுவோம்.. அன்று அறிவற்றவன் கண்டுபிடித்தது ராகுகாலம், இன்று அறிவுள்ளவன் கண்டுபிடித்தது கடிகாரம்.. 😂😂
  20. அக்கா எனக்கொரு கேள்வி. உங்களின் அபிப்பிராயத்தைத் (opinion) கூறுங்கள். எனது தாயாருக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. ஏறக்குறைய 8/9 மாதங்களின் முன்னர் வைத்தியர் அவரது சிறுநீரகங்கள் இரண்டும் ஏறக்குறைய செயலிழந்துவிட்டதாகக்(20%) கூறிவிட்டார்கள். அதன் பின்னர் எனதி தாயாரிடம் இஞ்சி ஒத்தடம் பிடிக்கும்படி(சிறுநீரகங்கள் இருக்குமிடத்தில் -முதுகில்) கூறினேன்(எங்கோ வாசித்த நினைவு). சிறிது காலத்தின் பின்னர் அவரின் செயற்பாட்டில் நல்ல மாறுதல் தெரிந்தது. தற்போது அவரின் நாளாந்தச் செயற்பாடுகளில் மிகவும் ஆரோக்கியமான மாறுதல்களை காணமுடிகிறது (ஆறு மாதங்களின் பின்னர்). ஆனால் அண்மையில் எடிக்கப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீரகங்களின் செயற்றிறன் மேலும் குறைந்து விட்டதாக வைத்தியர் கூறியுள்ளார். ஆனால் அம்மா மிகவும் உற்சாகமாக உள்ளார். அவரின் செயற்பாடுகள் மிகவும் நல்ல நிலையில் உள்ளன. உண்மையில் என்ன நடக்கிறதென புரியவில்லை. உங்கள் opinion கருத்து என்ன ?
  21. அக்கா வணக்கம். என்ன இந்தப் பக்கம் கன நாளா ஆளக் காண முடியவில்லை.. 🤔 புது வருடம் தங்கள் குடும்பத்தினருக்கு தேகாரோக்கிகியத்தையும், மன அமைதியையும், செல்வத்தையும் வழங்கட்டும். வாழ்த்துக்கள்... 🌞🌞🌞
  22. ""வாலி பாய்"" ஆகியிருப்பீர்கள். அருந்தப்பு. (Narrowly escaped)🤣🤣
  23. பாடல் இடம்பெற்ற திரைப்படம்; நாடகமே உலகம்
  24. வாலியின் பாமாலைத் தெரிவிற்கு ஒரு பூ.. 😉 பாடல் இடம்பெற்ற திரைப்படம்; தேன்சிந்துதே வானம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.