Everything posted by பசுவூர்க்கோபி
-
தற்போது தண்டனையே தரமுயர்த்தும் நாட்டை!
நீங்கள்சொல்வதுபோல் இறுதிச் சந்தர்ப்பம் இதுதான் பொறுத்திருந்து பார்ப்போம். உளமார்ந்த நன்றிகள் தமிழ் சிறி அவர்களே.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
வருங்கால விடிவுக்காக வருக! வருகவென வரவேற்கிறோம்.
-
தற்போது தண்டனையே தரமுயர்த்தும் நாட்டை!
நன்றிகள்🙏
-
தற்போது தண்டனையே தரமுயர்த்தும் நாட்டை!
தண்டனையே! தரமுயர்த்தும் நாட்டை! ********************************************* அன்று.. பசியில் பாண் திருடி தம்பி தங்கைக்கும் பசியாற்றிய பாலகிக்கு திருடியெனும் பட்டம் கொடுத்து மரத்தில் கட்டிவைத்த செய்தி…. இலங்கையின் இரக்கமற்ற நீதி இன்றோ.. மக்கள் பணத்தை கோடி கோடியாக திருடி கொள்ளையடித்த வெள்ளை வேட்டி கள்ளர்களை விட்டுவைத்த-பழய அரசர்களையும் திருடர்களையும் அதியுச்சத் தண்டனை கொடுப்பதே! நாட்டு மக்களுக்கான இன்றைய மனுநீதியாகும். அன்புடன் -பசுவூர்க்கோபி.
- IMG_5690.jpg
-
வரும்"காலத்தை"வரவேற்போம்!
சிவப்பு பீற்றூட்டில் பச்சை இலைகளும் வரும் என கனவுகாண்கிறேன் அன்பு இசைப்பிரியன் அவர்களே! உளமார்ந்த நன்றிகள்.
-
வரும்"காலத்தை"வரவேற்போம்!
அன்புடன் நன்றி நிலாமதி அக்கா
-
வரும்"காலத்தை"வரவேற்போம்!
வரும் “காலத்தை” வரவேற்போம்! **************************** எழுபது ஆண்டுகளாக இருள் மூடிக்கிடந்த எம் தேசத்தில்-ஒரு சிவப்புச் சூரியனின் வெண்மைக் கதிர்களின் வருகையின் வேகம். இது.. பழமைகள் பொசுக்கி புதுமைகளின் பொற்கால விடிவின் ஆரம்பக்காலம். விலை மதிப்பில்லாத உயிகளை விழுங்கிய இராட்சத முதளைகளின் முடிவுக்காலம். மக்களின் உதிரத்தை உறிஞ்சி அவர்களின் வரி பணத்தில் கோட்டை கட்டி கொடி உயர்த்திய கோமான்கள் குடிசை வாழ்வுக்கு திரும்பப் போகும் எதிர் காலம். பழய.. ஆட்சியாளர்களின் வயல்கள் எல்லாம் மறைத்து விதைக்கப்பட்ட தங்க மூட்டைகளும் கறுப்பு பணப் பெட்டிகளும் அறுவடை செய்யப்போகும் காலல போகம். இதுவரையும் புற்றுநோயாக.. புரையோடிக் கிடந்த லஞ்சம் ஊளலெனும் அரக்கர்களை கொழுத்தி அழிக்கும் கோடை காலம். இனத்துவேஷமென்னும் கொடிய நோயை பரப்பிய பழய பா.உ ஜந்துக்களை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றும் இலையுதிர் காலம். தமிழினம் முள்ளி வாய்க்கால் தொட்டு முழு உலகமும் வரை இரத்த. கண்ணீராயோடிய மாரிகாலம். எல்லாவற்றுக்கும்-விரைவில் ஒரு வசந்த காலம் வருமென நம்புவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
அருமையான கதை வாழ்த்துகள்.
-
யாரைத்தான் நம்புவதோ?
நீங்கள் கூறும் ஏக்கம்தான் சமகாலத்தின் தேடுதலாக இருக்கிறது. கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 உண்மையே நீங்கள் சொல்வது. உளமார்ந்த நன்றிகள்🙏
-
யாரைத்தான் நம்புவதோ?
கவிதை பார்த்து அன்பான கருத்து சொன்ன suvy அவர்களுக்கு! என் உளமார்ந்த நன்றிகள்🙏
-
யாரைத்தான் நம்புவதோ?
பொறுமையுடன் கவிதை பார்த்து உங்கள் பொன்மொழியால் ஊக்கம்தந்த எங்கள் தமிழ்சிறி அவர்களுக்கு! என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
பொல்லுக்கொடுத்து அடி வாங்கபோறார்களென நினைக்கிறேன்.
-
யாரைத்தான் நம்புவதோ?
யாரைத்தான் நம்புவதோ? **************************** எழுபது ஆண்டுகளாக எம்மேல் ஏறி உழக்கியவர்களும் எம்மில் சவாரி செய்தவர்களும் எம்மினத்தை கொத்துக் கொத்தாக கொண்றழித்தவர்களும் எம்மை பயங்கர வாதிகளாக காட்டி வாக்கு பறித்தவர்களும் எம் தேசமெங்கும்-புத்தர் சிலை விதைத்தவர்களும் ஊழல் லஞ்சமென பெருக்கி உயிர் வாழ்ந்த அந்த அரசியல் தலைமைகளை.. சிங்களமக்களே! ஓடவெருட்டி ஒன்றுசேரும் இந்நேரம் இங்கோ. அனைத்துத் தரப்பும் மேடையில் ஏறி தமிழ் உரிமை தமிழ் விடிவு தமிழ் சுதந்திரம் தமிழ் ஈழத்துக்கான சம உரிமை. தமிழ்! தமிழ்! தமிழ்! எனக் கத்திவிட்டு-பின் தமிழை அழித்த இனவாதிகளுடன் இணைந்து தன் வயிறு தன்சொத்து தன் குடும்பமென தம் வாழ்வை உயர்த்தும் எங்கள் தலைமைகளை எப்படித் தான் நம்புவதோ! ஒன்றாக ஒரு திரட்சியாக ஒரு கொத்தாக ஒரு கொள்கையாக நின்று உரிமைக்கு பாடுபட முடியாதவர்கள் ஒட்டுமொத்த தமிழுக்கும் உரிமையை வெண்றுதருவதாக சொல்வது வேடிக்கையே! இவர்களை எப்படித்தான் நம்புவதோ! அப்பளுக்கில்லாத -எங்கள் தலைவர்களென அனுப்பிவைத்த மக்களுக்கு சொற்ப சலுகைக்காக சொன்ன வாக்குறிதிகள் தவறி சொகுசுக் காருக்கும், வீட்டுக்கும் மதுக் கடைக்கும் விலை போன இவர்களை இனியும் எப்படித் தான் நம்புவதோ? மூலை மூலையாக நின்று குட்டையை குழப்புங்கள் அங்கிருந்து வருபவர்கள்-மீன் அள்ளிச் செல்வார்கள். அதன்பின் அதையும். மக்கள்தலையில் பொறித்துவிட்டு தப்பிக்க எண்ணாதீர்கள். நீங்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? உங்களுக்குத்தான் தெரியும் நீங்களே முடிவெடுத்து படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் அரசியல் ஞானமுள்ள-அந்த இளையோரை அரவணைத்து உரிமைக்காகவும் ஊழலற்ற சமூகத்துக் காகவும் போட்டியிடுங்கள் அப்போது விடியும் எம் தேசமும். இல்லையேல். ???????? அன்புடன் -பசுவூர்க்கோபி.
- IMG_5623.PNG
-
உருவப்படுமா?
பட்டவலிகளும், இழக்கவேறில்லியென்பதும். எனி என்னநடக்குமோ? என்ற ஏக்கமும் வரிகளில் தந்து எமதுணர்வ்வ உருகவைத்த கவிக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.நொச்சியரே!
-
கனவு பலிக்குமா?
நீங்கள் சொல்வது உண்மையே. மிக்க நன்றிகள்.
-
கனவு பலிக்குமா?
கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வழிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும்.. வந்து வணங்கி வழிபட்டு போனார்களே தவிர.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ் இணைந்த வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் பகுதி பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் பூட்டனார் கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது இனவாத.. அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் கொள்ளையடித்து தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழும்பி விட்டேன். விடியும் போது (21.09.2024) புதிய ஜனாதிபதியின் பொறுமையான வரவு பார்த்தேன். எனியாவது இந்த கனவு பலிக்குமென்ற மகிழ்வோடு.. மனம் நடக்கிறது. . அன்புடன் -பசுவூர்க்கோபி-
- IMG_5530.jpg
- Unknown-6.jpeg
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
போற போக்கை பார்த்தால் சுணாமியோ சூறாவளியோ வரத்தான் போகிறதோ?
-
பஸ் பயணம்!
மிக்க நன்றிகள்.🙏
-
பஸ் பயணம்!
நெஞ்சார்ந்த நன்றிகள். விழிப்பாக இருக்கிறீர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
-
பஸ் பயணம்!
எனது கவி வரிக்கு உங்களின் இனிமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றிகள். உளமார்ந்த நன்றிகள் ஏராளன்
-
பஸ் பயணம்!
பயம் வந்துவிட்டது பஸ்சில் உங்கள்கருத்திற்கு உளமார்ந்த நன்றிகள்.